Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, April 4, 2009

புலியின் கதை




முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி









விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.


ணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?



நான் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன்.



போராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?



போராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன்.



விடுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?



விடுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன்.



விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?



விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள். இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.



ர்வதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு சிறிது ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?



ர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும்.



டேல் - ஹிலாரி சந்திப்பு உண்மையா? அதுபற்றி தகவல்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?



டேல்-ஹிலாரி சந்தித்தது உண்மையல்ல என்று புலிகள் அமைப்பே தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



மிழகத் தமிழரின் தற்போதைய ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான திசையில் போகிறதா? அல்லது சரியான தலைமை இன்றி தத்தளிக்கிறதா?



மிழகம் தற்போது மட்டுமல்ல ஈழத்தமிழர்களிற்காக எப்பொழுதுமே ஆதரவாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் சில அரசியல் தலைவர்களினது சர்வாதிகாரப்போக்குகளினாலும், சுயநலஅரசியல் விளையாட்டுக்களினாலும், அதற்கு துணைபோன அதிகாரிகளினாலும், அவை இருட்டடிப்பு செய்யப்பட்டும், அடக்கியும் வைக்கப்பட்டிருந்ததுதான் உண்மை. நீறு பூத்த நெருப்பாயிருந்த அந்த ஆதரவு மீண்டும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.ஆனாலும் அதிலும் அரசியல்வாதிகளே குளிர்காயத்தொடங்கியுள்ளனர். ஈழத்திலும் 70களில் இதேபோன்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் ஈழத்து இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாமல் சரியானதொரு சுயநலமில்லாத விலைபோகாத ஒரு தலைமையை தெரிவு செய்து அதன்கீழ் அணிதிரண்டனர். அது போல தமிழகமும் சரியானதொரு தலைமையை அடையாளம் கண்டு அணிதிரளவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இத்தனை எழுச்சிகளும் குடும்ப அரசியல் நடத்துபவர்களினதும் தமிழனையும் தமிழையும் மிதிப்பவர்களினதும் வாக்கு வங்கியை நிரப்பி விட்டு தமிழனின் உணர்வுகள் அனைத்துமே வீணாகி மரத்துப்போகும் நிலைதான் வரும்.



மிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்



றிய குட்டைகள்தான் வேறு வேறே தவிர எல்லாமே மட்டைகள்தான்.





கோதர படுகொலைகள் என்று ஒருசாரர் கூவிக்கொண்டிருக்கிறார்களே அப்படி என்னதான் புலிகள் செய்தார்கள்? அவர்களின் நியாயம் என்ன?



டுத்ததற்கெல்லாம் மகாபாரதப்போரையும் கீதையையும் உதாரணத்திற்கு இழுத்துவைத்து கதைகதையாய் சொல்லி சிலாகிப்பவர்களிற்கு புலிகளின் யுத்தம் மட்டும் தர்மயுத்தமாய் தெரியாமல் சகோதரப்படுகொலையாய் தெரிகின்றது.சகோதரர்களிற்குள் பகையை வளர்ந்து மோதவிட்டதே இந்திய ஆட்சியாளர்களும்.உளவுத்துறையும்தானென்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். தமிழரின் போராட்டம் சிதைந்து போகாமல் தடுப்பதற்காக மற்றைய இயக்கங்களை தடை செய்வதைத் தவிர வேறு வழி புலிகளிற்கு இருந்திருக்கவில்லை.
(சகோதர படுகொலைகள் பற்றி சாத்திரி எழுதிய பதிவு.)



ராஜீவ் கொலையை புலிகள் ஏன் வெளிப்படையாக மறுக்கவில்லை?



ராஜீவ் கொலையில் அவிழக்கப்படாத பல மர்மமுடிச்சுக்கள் ஏராளம் உள்ளது. அவைகள் அவிழ்க்கப்படுவதை இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே விரும்பமாட்டார்கள். அதனால்தான் புலிகளின் அழித்துவிடுவதன் மூலம் அத்தனை ஆயிரம் கேள்விகளிற்கும் ஒரே வரியில் பதிலை சொல்ல முனைகிறார்கள்.



ழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா?



ண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள்.



னிஈழம் தவிர்த்த ஏதேனும் ஒன்று தமிழர் விடுதலையை தரக்கூடுமா? சமாதான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் புலிகள் ஏற்றுக்கொண்டது தனிஈழம் தவிர்த்த ஏதோ ஒன்று தானே?



மிழனிற்காக சிங்களம் ஒரு மயிரையேனும் தரத்தயாராய் இல்லையென்பதே உண்மை. எனவே தனித்தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. ஆனால் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் தரப்பில் புற சுய நிர்ணய உரிமை (சமஸ்டி) அதாவது சமஸ்டி அரசாங்கம் அமைந்தபின்னர் ஒரு வாக்கெடுப்பில் தமிழர்தரப்பின் 90 வீதமான வாக்குகள் விழுந்தால் தனியாகப்பிரிந்து போகும் உரிமையுடனான தீர்வையே கேட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், புலிகள் பேச்சு வார்த்தையை விரும்புவதில்லை சண்டையையே விரும்புகின்றனர் என்கிற சிறீலங்காவின் பரப்புரையை புலிகள் சர்வதேச சமூகத்தின் முன்னால் தகர்த்திருந்தாலும். சண்டையை மட்டுமே விரும்புகின்ற சிறீலங்காவை இந்தியா தாங்கிப்பிடித்துள்ளது மட்டுமல்ல அதுவே சர்வதேசத்தின் வாயையும் அடைத்துள்ளது.



னிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்.



1905 ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு காலத்தில் இருந்தே தமிழன் ஒவ்வொருவடிவங்களிலும் ஒவ்வொரு சட்டங்களிற்கமையவும் தனக்குரிய உரிமைகளை வன்முறையற்ற அனைத்து வடிவங்களிலும் கேட்டு கேட்டு களைத்து போனது மட்டுமல்ல எமது அத்தனை போராட்டங்களையும் ஆட்சியாளர்கள் வன்முறையை மட்டுமே கொண்டு அடக்கியதால்தான் தமிழனும் தானும் இனி எதிரியின் ஆயுதத்தையே பயன்படுத்தலாமென நினைத்து தனித்தமிழீழத்தில் மட்டுமே தமிழனால் சுதந்திரமாக வாழமுடியும் என்று முடிவெடுத்தும் வன்முறையை 70களில் கைகளில் எடுத்தான். இன்று தமிழகத்து நிலைமைகளும் ஈழத்தின் 70களின் காலத்தைத்தான் நினைவு படுத்துகின்றது



முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!



முஸ்லீம்களை புலிகள் அரவணைக்கவில்லையென்று ஒரேவரியில் மறுத்துவிட முடியாது.ஏனெனில் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழின அழிப்பினை தாராளமாகவே மேற்கொண்டனர்.ஜிகாத் அமைப்பினரால் பல கிராமங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். வந்தாறு மூலை படுகொலைகள். கிழக்குப்பல் கலைக்களகப்படுகொலைகள். கொக்கட்டிச்சோலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரம் யாழ்குடாவிலும் இலங்கையரசுடன் சேர்ந்து முஸ்லீம்களின் ஜிகாத் அமைப்பு புலிகள் மீதான தாக்குதலை நடாத்துவதற்கு பலசதித் திடட்டங்களைத்தீட்டியது அதில் பல முஸ்லீம்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.அனாலும் அவர்களது பள்ளிவாசல் உலாமாக்களின் தலையீட்டினால் இனியொருதடைவை இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாமென அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டுவினால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பொதுஎதிரி சிங்களப்பேரினவாதம். அது முஸ்லீம்களை தமிழர்களுடன் மோதவிட்டு வேடிக்ககை பார்க்கின்றது.எனவே அதற்கு பலியாக வேண்டாமென தொடர்ச்சியாக பலபொதுக்கூட்டங்கள் வைத்தும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் புலிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தனர். ஆனாலும் அவர்கள் தொர்ந்தும் இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்தும் சேர்ந்து இயங்கியது மட்டு மல்ல புலிகளை தாக்குவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களும் பிடிபட்ட நிலையில் தான் புலிகளின் நிருவாகப் பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் செய்கைகளினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ்மக்களிற்கும் மேதல் ஏற்பட்டு முஸ்லீம்களிற்கு பாதகமானதாகவே முடிந்திருக்கும். அடுத்ததாய் தமிழரை சிங்களவர்கள் வெறுப்பதற்கு காரணம் சிறீலங்கா அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தாங்கள் சுலபமாய் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களின் பொருளாதாரம் பற்றியோ நாட்டை வளம் படுத்துவது பற்றியோ பேசியதில்லை. இனவாதத்தினையே பேசி சுலபமாய் ஆட்சியை பிடித்துவந்துள்ளதே வரலாறாகும். அவர்கள் பேசிய இனவாதம் இன்று ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விட்டது. இன்று தங்களிற்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தமிழனிற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைக்கு சிங்கள மக்ளை ஆட்சியாளர்கள் கொண்டுவந்து விட்டனர். ஆனால் அதன் மோசமான விழைவுகளை ஆட்சியளர்களை விட சாதாரண சிங்கள மக்களே அனுபவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.



தாழ்த்தப் பட்டவர்களின் நிலைமை தமிழகத்தை விட ஈழத்தில் மோசம் என்பது உண்மையா?



80களிற்கு முன்னர் இரட்டை குவளை முறை. கோயில்களின் உள்ளே அனுமதி மறுப்பு, பொது இடங்களில் அவமதிப்பு என்று தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேசமானதாகவே இருந்ததை மறுக்கமுடியாது.புலிகள் ஆயுதப்போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தினார்களோ அதேபோல சாதிய விடயங்களையும் இரும்புக்கரம் கொண்டே அடக்கினார்கள். அவர்களது நிருவாகம் நடந்த பகுதிகளில் சாதியம் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட்டிருந்ததுஎன்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நிருவாகம் நடாத்திய காலங்களில் ஒரு சாதிய சண்டையுமே நடைபெறவில்லையென்பதும் சாதியின் பெயரால் எவரும் ஒதக்கப்படவில்லையென்பதுமே அதற்கு உதாரணமாகும்.



க்கள் இல்லாத பகுதிகளை கைவிட்டு மக்களடர்ந்த பகுதியில் புலிகள் போரிடவேண்டிய நிலைமை / காரணம் என்ன?



தாவது மக்களை புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதானே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் அல்லது காணொளிகளில், படங்களில் மக்களுடன் சேர்த்து புலிகளும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாம். அதுமட்டுமல்ல யுத்த களத்தில் நிற்கும் செஞ்சிலுவை சங்கமே அப்படியானதொரு செய்தியையோ ஆதாரங்களையோ வெளியிடவில்லை. இவை தமிழர்கள் மீதான கொலையை இலங்கையரசு நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமேதான்.



லைவுலகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருக்கும் ஈழ ஆதரவு போதுமானதாக உள்ளதா? தமிழகத்தில் இன்னும் ஈழ விழிப்புணர்வு அற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!



மிழகத்தினை பொறுத்தவரை வலையுலகத்தில் அக்கறையாக ஈழம்பற்றி அறிந்துகொள்பவர்கள் எத்தனைவீதம் எனத்தெரியாது. ஆனால் அச்சு ஊடகம் என்று பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பிடியிலேயே உள்ளது. தமிழனை தமிழில் சிந்திக்கவிடக்கூடாதென்பதே அவர்களது முதல் நோக்கம்.இல்லா விட்டால் தமிழன் தமிழில் வழிபாடு செய்வதற்கும். தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் கல்வி கற்பதற்காகவும் போராடவேண்டிய நிலை வந்திருக்குமா? இந்த உலகத்தில் எந்த ஒரு சுதந்திர நாட்டிலாவது ஒரு இனம் தன்னுடைய மொழியில் வழிபாடு செய்யவும் தன்னுடைய மொழியில் கல்வி கற்கவும் பேராட்டம் நடாத்தியிருக்கின்றதா? இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?



நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.



நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அந்த துரோகப் பக்கங்கள் அவர்களது பெயர்களையும் பதிவுசெய்துகொண்டு போய் நாளைய எமது சந்ததிகளின் கைகளில் படிக்கக் கொடுக்கும்.



ங்கள் முழுப்பெயர், சொந்த ஊர், வாழிடம், குடும்பம் மற்றும் முக்கிய பணி கூறுங்கள்.



நான் சாத்திரி என்கிற புனைபெயரில் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் எழுதிவந்தாலும் சொந்தப் பெயர் சிறி ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன். தற்சமயம் பிரான்சில் வசித்து வருகிறேன்.




No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!