இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்,ஒரு முறை ரஷ்ய பிரதமர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தார்.அப்போது இந்து மதம்,பிற மதங்களின் மேன்மைகளை பற்றியும் அவரிடம் எடுத்துச் சொன்னார்.அதைக் கேட்ட ஸ்டாலின் சொன்னார்
"என் தந்தையார் கூட என்னை மதப் போதகராக,பாதிரியாராக, உருவாக்கவே பயிற்றுவித்தார்.ஆனால் என்னால் அப்படி ப் போக முடியவில்லை.
நான் பாதிரியாராகப் போயிருந்தால்,இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா ஹிட்லரிடம் சரணடைந்திருக்கும்.நான் கம்யூனிஸ்ட்டாக இருந்த காரணத்தினால் தான் சர்வாதிகாரியான ஹிட்லரை தோற்கடித்து ரஷ்யாவை மட்டுமல்ல,உலகப் போரையே முடிவுக்கு கொண்டு வந்து, உலக மக்களையும் காப்பாற்ற முடிந்தது..."
தீக்கதிர், 25.11.09.
ச்சீ... விடுங்கோ, வெக்கமா இருக்கு...!
சின்ன வயசிலிருந்தே பிள்ளையாண்டானின் நடத்தை சரியில்ல...
தன்னோட பாட புஸ்தகத்தில கிளுப்பான லேடீஸ் படங்களை ஒளிச்சு வச்சி,ரசிண்டு இருப்பான்.வயசுப் பையனா வளர்ந்ததும் ஏகக் கெட்ட பேரை சம்பாதிச்சான்.
யாரும் பெண் தர முன் வரல. அப்பா, அம்மா இல்லாத அப்பாவிப் பொண்ணு கங்கா, தலையில் இவன கட்டி வச்சாங்க.
2008 இல் மச்சேஸ்வரர் கோவில் கருவறை சில்மிஷம் பற்றி அறிந்த வடிவேல், ராஜகோபல் முதலியார்கள் கண்டிக்க...
நான் உயர் குலத்தில் பிறந்தவன்.என் விவகாரத்தில் தலையிட்டால்... அழிச்சிடுவேன் அழிச்சி! என்று மிரட்டியிருக்கிறான்.
சாதிப் பிரச்சினை தூண்டுதல்,கொலை மிரட்டல் போன்ற குற்றங்களுக்காக கோயில் நிர்வாக தரப்பினரும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இது குறித்து விசாரிக்கப் போன போலீஸ் தரப்பினர்களிடம் அரை மண்டையன் தேவநாதனின் அப்பா சுப்ரமணிய குருக்கள்,அவனது சகலை ரமணி குருக்கள் இருவரும் பணி செய்ய விடாமல் தகராறு செய்யததால், இருவரையும், கைது செய்து உள்ளே தள்ளியது காவல் துறை.
இதற்கிடையே மனம் வெறுத்துப் போய், தற்கொலைக்கு முயன்ற தேவநாதனின் மனைவி கங்காவைக் காப்பாற்றி, அவரது உறவினர் மணி குருக்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதை கேள்விட்டு...
போலீஸ் கங்காவை மடக்க...பிராமண சங்கத்தினர் உதவியுடன் காஞ்சியில் சரணடைந்திருக்கிறான், செக்ஸ் அர்ச்சகன்.
ஒரு இளம் குடும்பத் தலைவி சொன்னது.
உன் குடும்ப கஷ்டம் தீர, உன்னைக் கருவறைக்குள் தரிசனம் பண்ண வைக்கிறேன்னு, மதிய நேரத்தில் கருவறைக்குள் கூட்டிப் போனார்.
அப்ப சிவலிங்கத்தைக் காட்டி இந்த சிம்பல் என்ன தெரியுமா? என்று கேட்டு என்ன வெக்கப் பட வச்சார்.
அப்புறம் யாரும் இல்லாதப்ப அவர் என்னக் கட்டிப் பிடிச்சார்... நானும் என்ன விடுங்கோன்னு சத்தம் போட்டேன்.விடல.தொட்டுப்பிட்டார்!
அப்புறம் அது பழக்கமாத் தொடர ஆரமபிச்சிது.எந்த நேரமும் செல்போன் வச்சிருப்பார்.அதில கேமராவெல்லாம் இருக்கும்ன்னு எனக்குத் தெரியாமப் போச்சு...
அந்த கோயில் மண்டப பூக்காரப் பெண்ணின் வாக்கு மூலம்...
ஒரு நாள் மதியம் என்னை அழைத்த குருக்கள்...இன்னைக்கு உன் கையாலேயே மூலவருக்கு பூச்சாத்துன்னார்.
நமக்கு இப்படி ஒரு வாய்ப்பான் சந்தோஷமாப் போனேன்.
திடீர்ன்னு கட்டிப் பிடிச்சார்.நான் திமிறி... விடுங்க சாமின்னு சத்தம் போட...
கருவறையில் சல்லாபிச்சா ஆண்டவனின் அனுக்கிரகம் முழுசா கெடைக்குனும்னு சொல்லிச்சொல்லியே... நினைச்சதை சாதிச்சிக்கிட்டார்.அழுத என் கையில 300 ரூபாயைக் கொடுத்தார். இதன் பிறகு அடிக்கடி இதே போல வளைச்சி... பணம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார்.ஆனா இப்படி அசிங்கப்படுவோம்னு நான் நெனச்சிக்கூடப் பார்க்கல.
இன்னொரு குடும்பத் தலைவியின் வாக்குமூலம்
என் வீட்டுக்காருக்கு பக்தி அதிகம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து பரிகார பூஜை பண்ணிட்டு மறக்காம தட்ணை வாங்கிப் போவார்.
ஒரு நாள் மதியநேரத்தில்,தனியா கோயிலுக்கு வா... பரிகார பூஜை பண்ணணும்னு கூப்பிட்டார்.
என்னையே பூஜை பண்ணச்சொன்னார்.
அந்த சந்தோஷத்தில இருந்த என்னை... அங்கங்கே தொட்டு சில்மிஷம் பண்ணி ...அசிங்கப் படுத்திட்டார்.
நியாயம் கேட்டதுக்கு என்னை மன்னிச்சிடு என் வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லை.அவளால சந்தோஷம் தர முடியலை. அதனால் தான் இப்படி நடந்துக்கிட்டேன்.மன்னிச்சிடுன்னார்...
காஞ்சிபுரவாசிகளோ, அந்த மச்சேஸ்வரர் கோயிலுக்கு தன் கையால் கும்பாபிஷேகத்தைச் செய்தது...சங்கரச்சாரியார்.அப்படியிருக்க... அந்தக் கோயிலைப்பத்தி எப்படி நல்ல விஷயங்கள் வர முடியும் என்கிறார்கள்,நக்கலாய்...
ஆண்களின்
கொடுமைகளுக்குப் பயந்து
ஆண்டவனிடம்
முறையிடச் சென்றால்
அங்கே ஓர் அர்ச்சகர்!
நக்கீரன், 25.11.09.
பெண் ஆண்டுக்கு சராசரியாக 28 முதல் 30 தடவை அழுகிறாள்.
ஆண் ஆண்டுக்கு சரசாரியாக 15 முதல் 16 தடவை அழுகிறான்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு விஷேத் திறமை இருக்கிறது. அது அவள் நினைத்த போது அழ முடியும்!
ஆண் ஆண்டுக்கு சரசாரியாக 15 முதல் 16 தடவை அழுகிறான்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு விஷேத் திறமை இருக்கிறது. அது அவள் நினைத்த போது அழ முடியும்!
நாமே பெற்றோர்களாக மாறும் வரையில் பெற்றோர்களின் பாசத்தைப் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
காலாவதியான எரிவாயு சிலிண்டர்கள்
நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
எரிவாயு சிலிண்டர்கள் காலாவதி ஆவது என்பது பற்றி எப்போதாவது நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆனால், அது உண்மைதான்.
அவ்வாறு காலாவதியான சிலிண்டர்களைப் பயன்படுத்தும்போது விபத்துகள் நேரலாம் என்பதால் அவை பாதுகாப்பானவை அல்ல.
எரிவாயு முகவர் நிறுவனத்திலிருந்து உங்களுக்கு சிலிண்டர் வரும்போது A, B, C, D என்ற ஆங்கில எழுத்துக்-களு-டன் இணைந்து காலாவதி ஆகும் ஆண்டு சிலிண்டரின் மூன்று பக்கங்-களில் ஏதேனும் ஒன்றில் குறிக்கப்பட்-டிருக்கும்.
A என்றால் மார்ச் மாதத்துடன் முடியும் முதல் காலாண்டு,
B என்றால் ஜூனுடன் முடியும் இரண்டாம் காலாண்டு,
C என்றால் செப்டம்பருடன் முடியும் மூன்றாம் காலாண்டு,
D என்றால் டிசம்பருடன் முடியும் நான்காம் காலாண்டு.
D 13 என்றால் 2013 ஆம் ஆண்டு டிசம்பருடன் காலாவதி ஆகிறது என்று பொருள்.
D 6 என்றால் 2006 ஆம் ஆண்டு டிசம்பருடன் காலாவதி ஆகிறது என்று பொருள்.
அதில் எரிவாயு கசிவு ஏற்பட்டு, விபத்து நேரக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அத்தகைய காலாவதி ஆன சிலிண்டர்களை உங்களுக்குக் கொடுத்-தால் வாங்காதீர்கள்; திருப்பி அனுப்புங்கள்
http://files.periyar.org.in/viduthalai/20091121/news14.html
யார் இ மெயிலையும் போலீஸ் பார்க்கலாம்: சட்டத்தில் திருத்தம்
புதுடெல்லி : சைபர் கிரைம் எனப்படும் இணையதளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பல வழக்குகளில் புலன் விசாரணைக்கு இணைய தள பயன்பாடு, இமெயில் கடிதங்கள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. இந்நிலையில், விசாரணையின்போது ஒருவரது இமெயிலை பின்தொடரவும், திறந்து படிக்கவும் மத்திய உள்துறையிடம் போலீசார் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனால், விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான அனுமதியை நாடாளுமன்றம் சமீபத்தில் அளித்தது. சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததும், வழக்குக்குத் தொடர்புடைய யாருடைய இமெயிலையும் மாநில உள்துறை அனுமதி பெற்று படிக்கும் அதிகாரம் போலீஸ் ஐஜிக்கு கிடைத்து விடும்.
எனினும், யாருடைய இமெயில் கண்காணிக்க வேண்டியுள்ளது என்பதை பணி தொடங்கிய 3 நாட்களுக்குள் மாநில உள்துறையின் செயலருக்கு போலீஸ் ஐஜி தெரிவிக்க வேண்டும். மாநில உள்துறை செயலரே அதற்கான அனுமதியை அளிக்க முடியும். அனுமதியை போலீசார் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
http://www.dinakaran.com/businessdetail.aspx?id=982
சிங்களப் புலி யும் விடுதலைப்புலியும்
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!'' என்கிறார்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!
மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும்வேளையில், 'பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்'என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியாஉள்ளிட்ட நாடுகளில் ரகசியமாக வலம்வருகிறதாம். ''இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.
''இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்லஸ் ஆன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். 'உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!' என சார்லஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்'' என்று கூறும் குறுந்தகடு 'விநியோகஸ்தர்'கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -
''போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆப்ரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய... ராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.
இருந்தாலும், ராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்'' என்று கூறுகிறார்கள் இவர்கள்.
இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ''பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்'' என முடிகிறதாம் அந்த ரகசிய சர்க்குலேஷன் சி.டி!
தாய் ஆணையிட புறப்பட்டான் தற்கொலைப் புலி மகன்...!
தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம்.
அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி.
அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது. தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள்.
கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய். அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21280
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...