தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, June 30, 2009

"கசக்கும் கச்சத் தீவு..! "தினமணி கட்டுரை

கச்சத்தீவைச் சூழ்ந்து வரும் கடும் புயல்!

இரா. செழியன்
http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/njjzizi//mywebdunia/UserData/DataE/eelam/images/tiger_1.gif
http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/kachcha-new.jpg


தமிழில் "கச்சம்' என்றால் "ஆமை' என்று பொருள். ஒருவகை ஆமைகள் நிறைந்திருந்த காரணத்தினால் கச்சத்தீவு என்ற பெயர் ஏற்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமும், இரண்டரை கிலோ மீட்டர் அகலமுமாக மொத்தம் 255 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு உள்ளது. சிறியதொரு கடல் திட்டு என்றாலும், கடுமையான புயல் அதனைச் சூழ்ந்து கிளம்பியுள்ளது. கடல் பரப்பில் காற்று அழுத்தம் குறைந்தால் கடும் சூறாவளி எழும். அதைப்போல், இந்திய அரசின் அழுத்தம் குறைந்த, பலவீனம் அடைந்த நிலையில் புயலின் வேகம் பலமாகக் கூடுகிறது.

கச்சத்தீவில் இலங்கை ராணுவத் தளம் ஒன்றை அமைக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து, கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். ""எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க முன்வந்தால் கச்சத்தீவை மீட்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரத் தயார்!'' என்று தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி அதற்கு ஒருவகையான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

கச்சத்தீவில் இலங்கை அரசாங்கம் ராணுவத் தளம் அமைக்கப்போவதாக தற்பொழுது வந்திருப்பதைப்போன்ற செய்திகள் கடந்த 40 ஆண்டுகளில் பல தடவைகள் வந்துள்ளன.

1968 பிப்ரவரி 29-ஆம் தேதியில் தில்லி பத்திரிகைகளில், ""இலங்கை ஆதிக்கத்தில் கச்சத்தீவு முழுமையாக அடங்கியிருப்பதால், தனது முழு நிர்வாகத்தையும் அங்கு செயல்படுத்த இலங்கை அரசாங்கம் முற்பட்டிருக்கிறது'' என்ற செய்தி வந்தது. அதனையொட்டி, ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நான் நாடாளுமன்ற மக்களவை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன்.

என்னைப்போலவே மற்றும் பலரும் அத்தகைய தீர்மானங்களைக் கொடுத்திருந்ததால் குலுக்குச் சீட்டு முறையில் உறுப்பினர் மது லிமாயிக்கு முதலிடம் கிடைத்து, 1968 மார்ச் 1 மக்களவையில் தமது தீர்மானத்தை மது லிமாயி முன்மொழிந்தார். அவருக்குப் பிறகு, என் போன்றவர்களுக்கு அவையில் பேச வாய்ப்புத் தரப்படும் நிலைமை இருந்தது.

எழுப்பிய பிரச்னைக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பி.ஆர். பகத் பதில் அளித்தார்: ""பத்திரிகை செய்தி குறித்து, இலங்கை அரசுடன் கலந்து விவரம் தெரிவிக்குமாறு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தைக் கேட்டுள்ளோம். உண்மை விவரங்கள் கிடைத்ததும் தெரிவிக்கிறோம்.''

அன்றைய விவாதத்தில் இந்திய ஆதிக்கத்திலுள்ள தீவுகள் பற்றி மற்ற நாடுகளிலும் அதிரடிச் செய்திகள் அடிக்கடி வருவதாக உறுப்பினர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினார்கள். கச்சத்தீவு பிரச்னையை மட்டும் விவாதிக்குமாறு அவைத்தலைவர் கூறினார்.

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் பேராசிரியர் சி.ஜி. ஸ்வெல் கேட்டார்: ""1956-ல் இருந்தே கச்சத்தீவு பற்றி இந்தியாவுக்குள்ள உரிமைக்குப் போட்டியாக இலங்கை அரசாங்கம் பிரச்னை எழுப்புவதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால், தனது உரிமையை நிலைநிறுத்திக் கொள்ள இந்தியா ஏன் இதுவரை தக்க முயற்சி எடுக்கவில்லை?''

அதற்கு இணை அமைச்சர் பகத் பதில் அளித்தார்: ""இதற்கு முன்னதாகவே, 1921-ல் இருந்தே கச்சத்தீவு பற்றிய பிரச்னை இருந்து வருகிறது. கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்று கவனித்துப் பார்த்தால், அந்தத் தீவில் யாரும் குடியிருக்கவில்லை. மனித சஞ்சாரமே கிடையாது. குடிக்கத் தண்ணீர்கூட அங்கு கிடைக்காது. ஆகையால் அது யாருக்குச் சொந்தம் என்று கூற முடியாது.''

பத்திரிகைச் செய்திகள் கிளப்பிய அதிர்ச்சியைவிட அதிகமான அதிர்ச்சியை அமைச்சரின் பதில் அவையில் உண்டாக்கியது. வழக்கமாக, எத்தகைய கடினமான கேள்வியைப் போட்டாலும், அதற்கு குழப்பமான, எதிர்பாராத திருப்பங்களை உடைய விவரங்களைத் தேடிப்பிடித்துத் தந்து, கேள்வி கேட்பவர் மறுகேள்வி கேட்க முடியாதபடி திக்குமுக்காடச் செய்யும் வகையில் பதில்களைத் தயாரிப்பதில் திறமை படைத்த அதிகாரிகள் இந்திய நிர்வாகத்தில் இருக்கிறார்கள். இப்படி ""கச்சத்தீவு எந்த நாட்டு ஆதிக்கத்திலும் இல்லை'' என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதும், எதிர்க்கட்சியினர் ஆவேசமாகக் கிளம்பினார்கள். என்ன செய்வது என்று புரியாமல் ஆளுக்கட்சியினர் திகைத்து உட்கார்ந்திருந்தார்கள்.

திகைப்பு, கூச்சல். ஒரே சமயத்தில் பல குரல்கள்! ஒன்றையொன்று மிஞ்சும் வகையில். விவாதத்தில் கலந்துகொள்ள இருந்த மற்றவர்களைப் பேச யாரும் விடவில்லை. இவ்வளவுக்கும் இடையில் பேராசிரியர் ஸ்வெல் தமது குரலை உயர்த்தி மீண்டும் கேட்டார்: ""நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை! அந்தத் தீவில் தண்ணீர் இல்லையென்று ஏதோ ஒரு பதிலைத் தந்து நான் கேட்ட கேள்வியை அமைச்சர் திசை திருப்புகிறார். நான் கேட்டது எந்த அரசின் ஆதிக்கத்தில் கச்சத்தீவு இருக்கிறது என்பதுதான்!''

இந்தத் துணைக் கேள்விக்கு இணை அமைச்சர் ஆங்கிலத்தில் தந்த பதில் அப்படியே இங்கு தரப்படுகிறது:

Shri B.R. Bhagat: I said that it is neither under the possession of India nor of Ceylon... (Interruptions).

அமைச்சர் கூறியதன் தமிழாக்கம்: பி.ஆர். பகத்: ""நான் கூறியது, அந்தத் தீவு இந்தியாவின் ஆதிக்கத்திலும் இல்லை, இலங்கை ஆதிக்கத்திலும் இல்லை என்பதுதான்!'' (அவையில் அமளி).

அவையில் எழுந்த கூக்குரல் மேலும் அதிகமானது. யார் சொல்வதும் யாருக்கும் கேட்கவில்லை! அவைத் தலைவர் டாக்டர் ஜி.எஸ். தில்லான் அமைதிப்படுத்த முயன்றார். முடியவில்லை. கடைசியாக பிரதமர் இந்திரா காந்தியைப் பார்த்து, ""நீங்கள் ஏதாவது விளக்கம் தர முடியுமா?'' என்று கேட்டார். இதற்கிடையில் அரசாங்க அதிகாரிகள் சில குறிப்புகளை எழுதிப் பிரதமருக்கு அனுப்பியது எங்களுக்குத் தெரிந்தது.

பிரதமர் இந்திரா காந்தி எழுந்து, அமைச்சர் கூறியதுபோல் எழுப்பப்பட்ட பிரச்னை குறித்து முழு விவரங்கள் இல்லை என்றும், இலங்கை அரசுடன் நல்ல நட்புறவுடன் இந்தியா இருக்கிறது என்றும், விவரங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், மேற்கொண்டு ஏதாவது கூறுவது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும், விவரங்கள் கிடைத்ததும் மேற்கொண்டு அரசாங்கம் அவைக்கு விரிவான அறிக்கையைத் தரும் என்றும் சொன்னார்.

அரசாங்க அதிகாரத்துக்கு நீண்டகாலமாக உட்பட்டுள்ள பகுதிகள் பற்றிய விவரங்களைக்கூட உடனடியாகத் தர முடியாமல், விவரங்களை இனிமேல்தான் திரட்டுவதாக அரசாங்கம் கூறுவதை எதிர்க்கட்சியினர் கண்டித்தார்கள். விவரங்கள் கிடைத்ததும் மீண்டும் அவை அவற்றை ஆராயலாம் என்று அவைத் தலைவர் ஒருவாறு விவாதத்தை முடிவு செய்தார்.

நிலைமையைச் சமாளிக்க 1968 மார்ச் 4-ல், கச்சத்தீவு பற்றிய இந்தியாவின் உரிமையில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் எதிர் நடவடிக்கைகளை எதையும் எடுக்கவில்லை என்றும் பிரதமர் இந்திரா காந்தி ஓர் அறிக்கையை அவை முன்வைத்தார்.

இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் ஒரு செய்தியில் அரசாங்கம் கோமாளித்தனமான பதிலை முன்வைத்தது பலமான கண்டனத்தையும், அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. மக்கள் அவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் எதைப்பற்றியும் ஆளுங்கட்சியினர் கவலைப்படுவது இல்லை என்றாலும், அரசாங்கத்தைப் பற்றி நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கையும், உலக அரங்கில் இருந்த மதிப்பும் குறைந்துவிட்டன.

மீண்டும் கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் அவ்வப்பொழுது கேள்விகள் கேட்கப்பட்டாலும், ""இலங்கை அரசுடன் நட்புமுறையில் நிலைமைகளைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். நல்ல முறையில் இருநாடுகளிடையே அமைதியையும் நட்பையும் வலுப்படுத்தும் வகையில் விரைவில் முடிவுகளை எடுப்பது பற்றி அரசாங்கம் கவனித்து வருகிறது'' என்று மத்திய அரசு சார்பில் திரும்பத் திரும்ப பதில்களும், சமாதானங்களும் தரப்பட்டன. அரசாங்க அறிவிப்பில், "விரைவில்' என்பதற்கும், "கவனத்தில் இருக்கிறது' என்பதற்கும், வரையறுக்கப்பட்ட கால அளவு கிடையாது. இந்தியா ஏதோ ஒரு சிக்கலில் அகப்பட்டுள்ளது என்பது மட்டும் வெளிப்பட்டது.

1967 மே மாதத்தில் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற டாக்டர் ஜாகீர் ஹுசைன் 1969 மே மாதத்தில் இறந்ததும், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில், காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஏற்பட்ட போட்டியில், காங்கிரஸ் வேட்பாளர் என். சஞ்சீவ ரெட்டி தோற்கடிக்கப்பட்டு, இந்திரா காந்தி ஆதரித்த வி.வி.கிரி வெற்றி பெற்றார். அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு பிரிவுகளாகப் பிளவுபட்டது. தமிழ்நாட்டில் பழைய காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலோர் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இருந்தனர்.

1970 பொதுத் தேர்தலில், "கரிபி ஹட்டாவ்' (ஏழ்மையை ஒழிப்போம்) என்ற முழக்கத்துடன் இந்திரா காந்தி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அதனை அடுத்து கிழக்கு வங்காளப் பகுதியில் ஏற்பட்ட மோதலில், பாகிஸ்தான் தோல்வி அடைந்து, இந்திய உதவியுடன் முஜிபுர் ரகுமான் தலைமையில் பங்களாதேஷ் தனிநாடாக அமைந்ததும், இந்திரா காந்தியின் செல்வாக்கும், எதையும் செய்யலாம் என அவர் அரசாங்கம் எடுத்த முயற்சிகளும் வலிவடைந்தன.

பங்களாதேஷ், பர்மா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன், எல்லைக் கோடுகளையும், கடல் ஆதிக்கத்துக்கான வரையறைகளையும் நிர்ணயிக்கும் உடன்பாடுகளை இந்திய அரசாங்கம் செய்தது. அதில் ஒன்றாக இந்தியா - இலங்கை இடையிலுள்ள பாக் ஜலசந்தியில் புதிய எல்லைக் கோடுகளை மாற்றி அமைக்க இந்தியா முற்பட்டது.

அதன் விளைவாக எழுதப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் 1974 ஜூன் 26 - 28 தேதிகளில், இந்தியாவின் சார்பாக இந்திரா காந்தியும், இலங்கை சார்பாக சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்திட்டனர். அப்பொழுது 1974 பிப்ரவரி - மே மாதங்களில் வரவு - செலவுத் தொடர் கூட்டத்தை முடித்து நாடாளுமன்றம் விடுமுறையில் இருந்தது. அடுத்த தொடர்கூட்டம் ஜூலை 22-ல் தொடங்கியது. இந்திய - இலங்கை உடன்படிக்கை ஜூலை 23 நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியவந்தது.

உடன்பாடு பற்றிச் சில குறிப்புகள் பத்திரிகைகளில் வெளிவந்தாலும் நாடாளுமன்றத்தில் உடன்படிக்கை அதிகாரபூர்வமாக வைக்கப்பட்ட பிறகுதான் முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையில் இந்திய - இலங்கை உடன்படிக்கையில், குறிப்பாக, கச்சத்தீவு பற்றிய எந்த விவரங்களையும் தமிழக முதல்வர் கருணாநிதியிடமோ, மாநில அரசாங்கத்துடனோ, மத்திய அரசு எந்த வகையிலும் கலந்து ஆலோசனை செய்யவில்லை என்பது நாடாளுமன்றத்திலுள்ள திமுகழக உறுப்பினர்களாகிய எங்களுக்குத் தெரியவந்தது.

1974 ஜூலை 23 அன்று இந்திய - இலங்கை உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுவரன் சிங் முன்வந்தபொழுது, நாடாளுமன்ற தி.மு. கழகத் தலைவரான நான் அதனை எதிர்த்துப் பேசியதாவது: ""இந்த உடன்படிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னதாக இந்த நாடாளுமன்றத்தையும், சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். இந்தியாவில் ஒரு பகுதியை மற்றொரு நாட்டிடம் ஒப்படைப்பது என்பது மிகக் கீழ்த்தரமான செயலாகும். அண்டை நாடான இலங்கைத் தீவுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், இறையாண்மை உரிமைகளையும் உதறித் தள்ளுவது சரியல்ல. இது, எந்த அரசாங்கத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத கேவலமான, படுமோசமான பாதகச் செயலாகும். இந்தக் கீழ்த்தரமான உடன்படிக்கையைச் சிறுதுளியும் ஏற்றுக்கொள்ளாத நாங்கள் அவையின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் வெளியேறுகிறோம்.''

அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்த கி. மனோகரன் பார்வர்டு கட்சியின் பி.கே. மூக்கையா தேவர், இந்திய முஸ்லிம் லீகின் முகமது ஷெரீப், சுதந்திரா கட்சியின் பி.கே. தேவ், சோஷியலிஸ்ட் கட்சி மது லிமாயி, பாரதீய ஜன் சங் தலைவர் வாஜ்பாய் ஆகியோர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வெளியேறினார்கள்.

உடன்படிக்கை வைக்கப்பட்டதற்கு மறுநாள், ஜூலை 24, 1974 அன்று அரசாங்கத்தின்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் கச்சத்தீவை இலங்கையிடம் சரணடையச் செய்த இந்தியாவின் போக்கை தி.மு. கழகம் உள்பட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்தன.

1975 ஜூன் 25-ம் தேதி நெருக்கடிகால பிரகடனத்தின்கீழ் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் கச்சத்தீவு உள்பட்ட பல சீர்கேடுகளையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. 1974 உடன்படிக்கை போதாதென்று 1976 மார்ச் 23-ம் தேதி மற்றொரு உடன்படிக்கையின் மூலம் மன்னார் வளைகுடாவில் உள்ள வட்கே பாங்க் பகுதியில் மூன்றாண்டு காலத்துக்கு மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை மீனவருக்கு வழங்கியதுடன், மூன்றாண்டு காலத்துக்குப் பிறகு ஆண்டுக்கு 2000 டன் அளவுக்கு உயர்தர மீன்களை இலங்கைக்கு உடன்பாடான விலையில் விற்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இரண்டாவது உடன்படிக்கையைப் போட்டபொழுது தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சியின்கீழ் மத்திய அரசு நேரடியாக மாநில நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தியது. ஆக, தன்போக்கில் மத்திய அரசு இலங்கை அரசுக்கு இந்திய - தமிழ்நாட்டு உரிமைகளை அடிமைப்படுத்துவது தொடர்ந்தது.

பல நூற்றாண்டுகளாக, தமிழகத்துக்கு உள்பட்ட ஒரு பகுதியாக, 1947-ல் ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்தில்கூட, ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உள்பட்டு கச்சத்தீவு இருந்தது.

மேலும், 1974 ஜூலை 24-ல் நாடாளுமன்றத்தில் பேசிய வந்தவாசி உறுப்பினர் ஜி. விஸ்வநாதன், 1824-ன் ராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவு பற்றிய ஆவணங்களின் நகல்களை அவை முன் வைத்தார். 1880-ல் இலங்கை அரசாங்கம் தயாரித்த நில வரைபடத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறு சிறு தீவுகள் பலவற்றின் விவரங்கள் தரப்பட்டபொழுது, இலங்கையின் வட மாநிலங்களுக்கு உள்பட்டதாக கச்சத்தீவு காட்டப்படவில்லை. இதுபற்றி அப்பொழுது இலங்கை அமைச்சரவை செயலாளராக இருந்த பி.பி. பியரிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி பின்வரும் குறிப்பை எழுதி வைத்துள்ளார்: ""இலங்கை வட மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் கோப்புகளை நான் பார்வையிட்டபொழுது, இலங்கை ஆதிக்கத்துக்கு அப்பாற்பட்டு கச்சத்தீவு இருந்ததுடன், அது ராமநாதபுரம் ராஜாவுக்குச் சொந்தமானது என்பது தெளிவாகத் தெரிகிறது.''

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க. அரசின் கோரிக்கை 2001, மார்ச் 25-ல் ஆளுநர் உரையில் குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி எழுந்த பிரச்னைக்கு எதிர்ப்பாக மே 2-ல் இலங்கை அமைச்சர் ஒருவர் கூறிய ஆங்கில அறிவிப்பு கீழே தரப்படுகிறது:

‘‘It is impossible to give it (Katchatheevu) back to them as it has been recognised by the international community as an integral part of our country since it was handed over by late Indira Gandhi.’’

இந்த அறிவிப்பை வெளியிட்டவர் யார் தெரியுமா? இலங்கையின் அப்போதைய மீன்வள மற்றும் கடல்துறை அமைச்சராக இருந்த மகிந்த ராஜபட்ச என்பவர். அவர்தான் இலங்கையின் தற்போதைய குடியரசுத் தலைவராக இருக்கிறார். எந்த ஆதாரத்துடனும் கச்சத்தீவை இலங்கை பெறவில்லை என்பதுடன், இந்திரா காந்தி பார்த்து இலங்கைக்குக் கொடுத்ததுதான் கச்சத்தீவு என்பதை இலங்கையின் குடியரசுத் தலைவரே நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார்!

தொடக்கத்திலிருந்து இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கும்பொழுது, சட்டத்தை மீறி, நாட்டின் இறையாண்மையை மீறி, நாட்டு மக்களின் விருப்பத்துக்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களின் - மீனவர்களின் வேண்டுகோள்களை மீறி எவ்வித அடிப்படையும் இல்லாமல் கச்சத்தீவை இந்திய அரசாங்கம் இலங்கையிடம் ஒப்படைத்தது முற்றிலும் தவறான ஒன்று என்பது தெரிகிறது.

1947-ல் விடுதலைக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் தனிநாடுகளாகப் பிரிந்தபொழுது, எல்லையோரத்தில் இருந்த சில பகுதிகளைப் பரிமாற்றம் செய்யத் தலைப்பட்டதில், மேற்கு வங்காளத்தில் இருந்த பெருபாரி பகுதியின் ஒரு பாதியை இந்தியா 1958 உடன்படிக்கை மூலம் பாகிஸ்தானுக்குத் தந்தது. இதனை மேற்கு வங்காள மக்களும், மாநில அரசாங்கமும் எதிர்த்தன. கடைசியில் சட்ட நிலைமையைக் கவனித்திட, உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒரு பார்வைக் குறிப்பை அனுப்பினார். அதன்மீது நடைபெற்ற வழக்கில், நாட்டின் ஒரு பகுதியை நீக்கி வெளிநாட்டுக்குத் தருவதை அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெருபாரி வழக்கின் முடிவுபோல, கச்சத்தீவை இலங்கைக்குத் தருவதில் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாகத்தான் இந்தியா செயல்பட்டிருக்க வேண்டுமே தவிர, இந்தியப் பிரதமர் மட்டுமே கையெழுத்திட்ட உடன்படிக்கைக்கு எத்தகைய மதிப்பும் சட்டபூர்வமாகக் கிடையாது. அவ்வாறு முறைப்படி செய்யாதவரை, கச்சத்தீவு, இன்றளவும், என்றளவும், தொடர்ந்து இந்திய ஆதிக்கத்தில் அதன் இறையாண்மைக்குட்பட்டுதான் இருந்து வருகிறது.

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=80867&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D!

♥ "இரு வெளிநாட்டவர்கள் என்னைக் கொள்ளப் பார்த்தார்கள்" -ராஜபக்சே அலறல் ♥

மகிந்தவைக் கொல்லும் சதித்திட்டதில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளடக்கமாம்
http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/SfG4yo0bP0I/AAAAAAAAAJY/sCvFNKYZCq8/s320/_41032792_xi203raj-ap.jpghttp://swisstamil.files.wordpress.com/2009/06/makintha.jpg   இலங்கை அதிபரைக் கொல்லுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்புத் திட்டத்தில் இரு வெளிநாட்டவர்களும் ஈடுபட்டதாக அரசு அறிக்கை கூறுகிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேயைக் கொல்வதற்காக தற்கொலைக் குண்டுதாரியை ஏற்பாடு செய்ததில் சர்வதேச நிறுவனத்தின் வாகன ஓட்டிகள் மூவருடன் 2 வெளிநாட்டவருக்கும் தொடர்பு உள்ளதாக இலங்கை வாராந்தப் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது. மேலும் இரு அரசியல்வாதிகளும் இந்தத் திட்டத்தில் தொடர்பு பட்டுள்ளனர் என்றும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கைக் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேல் மாகாண புலனாய்வுப் பிரிவானது ஜனாதிபதியின் பாதுகாப்பு பற்றி எச்சரிக்கை கொடுத்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுள்ளது.

இச்சதித் திட்டத்தில் தொடர்புள்ளவர்கள் என்று சந்தேகிக்கும் அமெரிக்கர் ஒருவர், சுவீடன் நாட்டவர் ஒருவரும் 3 உயர் பதவி புலி உறுப்பினர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த வாராந்த பத்திரிகை மேலும் கூறியுள்ளது. இதற்கான வெடிமருந்துகள் யு.என்.ஓ.பி.எஸ், யு.என்.கெச்.சி.ஆர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றில் பணியாற்றிய வாகன ஓட்டிகளால் எரிபொருள் தாங்கிகளினுள் மறைத்து வைக்கப்பட்டு கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்குக் கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

http://athirvu.com/target_news.php?subaction=showfull&id=1246258260&archive=&start_from=&ucat=2&


"புழுதி வாரும் வழுதிக்கு...."--நக்கீரன் கட்டுரை

"புழுதி வாரும் வழுதிக்கு ஒரு கடிதம்"--நக்கீரன்

[Untitled-1+copy.jpg]

திரு. வழுதி,நாலு சுவர்களுக்க உள்ளே பேசப்பட வேண்டிய விமர்சனங்களை இப்படி புதினத்தில் எழுதி எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. உமது புலம்பலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் புதினத்தின் நோக்கம் என்னவென்பதும் எனக்கு விளங்கவில்லை.

இதே புதினம்தான் லெனின்கிராட் போர் பற்றியும், சிங்கள இராணுவம் அகலக் கால் வைக்கிறது, வன்னி சிங்கள இராணுவத்தின் புதைகுழியாக மாறப் போகிறது என மனம் போன போக்கில் எழுதிய பரபரப்புக்

கட்டுரைகள், அரசியல் களங்கள் முதலியவற்றையும் வெளியிட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

உம்மை ஒரு அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு அந்த மிதப்பில் இப்படியான கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என நான் எண்ணுகிறேன். நிகழ்வுகள் நடந்த பின்னர் அதன் பிழை சரி பற்றி எந்தப் பேயனும் விமர்சனம் செய்யலாம். அதைத்தான் நீர் செய்கிறீர். மறைந்த தேசத்தின் குரல் பாலசிங்கம் பற்றி எனக்கும் அவ்வப்போது சில கருத்து வேற்றுமைகள் எழுந்ததுண்டு.

அதற்காக அவரை விழுந்தடித்துக் கொண்டு விமர்சனம் செய்ய நான் நினைக்கவில்லை. அவர் தமிழீழ விடுதலைக்கு ஆற்றிய தொண்டு, அதற்காக அவர் கொடுத்த விலைதான் எனக்கு மேலாகப்பட்டது. இப்போது அவர் மறைந்துவிட்டார். மறைந்தவர் திரும்பி வரமாட்டார் என்ற துணிச்சலில் யாரும் அவர் சொன்னதாக எழுத முடியும். அதில் நீரும் ஒருவர்.

(1) "உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்" என எழுதியுள்ளீர்கள்.

நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர் எனத் தெரியவில்லை. மக்கள் "நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்" என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? யாரால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனச் சொல்லமுடியுமா? மக்கள் மடையர்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்? உண்மை என்னவென்றால் மக்கள் அந்தச் செய்தியை நம்ப மறுத்தார்கள். அதனை அவசர அவசரமாக வெளியிட்டுத் தலைவருக்கு "வீரமரணக்கம்" செலுத்த பத்மநாதன் எத்தனித்த போது மக்ககள்தான் அதனை நிராகரித்தார்கள்.

மக்களின் உணர்வுகளை வீரமரணச் செய்தியைக் காவிச் சென்றவர்கள், வானொலி, தொலைக்காட்சி மக்களால் துரத்தப்பட்டார்கள். கனடாவில் இதுதான் நடந்தது. பத்மநாதனை உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். ஆனால் அவருக்கு மக்களது உணர்வுகள் தெரிந்திருக்கவில்லை. அதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்க மாட்டேன். இப்போது கூட யார் யார் இறந்துபட்டார்கள் என்பதை அவர் பட்டியல் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

சிறிலங்கா அரசு செய்யாத அல்லது செய்யநினைக்காத திருப்பணியை பத்மநாதன் செய்கிறார் என்பதுதான் எனது கவலை. கோபம். மற்றப்படி அவர் தலைவரின் வலது கையாக இருந்தார் என்பதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை. இந்திய இராணுவத்துக்கு எதிராக போராட முடியாது என்று கூறி பலர் இயக்கத்தில் இருந்து விலக முன்வந்த போது "போகிறவர்கள் போகலாம் . எனக்கு கே.பி. இருந்தால் போதும்" என்று தலைவர் சொன்னார்.

"ஆக, இப்போதிருக்கும் சூழலில் அந்த மனிதர் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு - கட்டுக்கோப்புடனும், ஒருங்கிணைவுடனும், கூட்டுச்சிந்தனையுடனும் உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் எல்லோருக்கும் நல்லது" என எழுதியுள்ளீர். மெத்த நல்லது.

ஆனால் இந்த சேறு பூசும் திருப்பணியை நீர்தான் முதலில் தொடக்கி வைத்தீர் என்பது நினைவிருக்கட்டும்.

"மக்கள் தமது ஊர்களில் வசிக்க வேண்டும்; வசித்தாலும், போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருந்தாலும், ஒரு கெரில்லாப் போராளிக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும். தமிழீழத்தின் தற்போதைய களப் புறநிலையில் இவை எதுவுமே இல்லை" என அடித்துச் சொல்கிறீர்.

எந்த அடிப்படையில்? நீர்தான் களத்தில் இல்லையே? அந்த நிலைமை இப்போது இல்லாமல் இருக்கலாம் அது எப்போதும் அப்படி இருக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது.

(2) "மன்னிப்புக் கேட்டல்" என்ற நிலைக்குப் போகாமலும், அதற்கு ஒரு நூலிழை அளவு கீழே வரை சென்றும் - மிகவும் சாதுரியத்துடன் அவர் அன்று அந்தக் கேள்வியைக் கையாண்டார்" என்பது சரியாக இருக்கலாம். ஆனால் பாலசிங்கம் அதனை தன்னிச்சையாகவே செய்தார். அதுதான் அவர்விட்ட பிழை. அதுதான் தமிழ்ச்செல்வனை அப்படிச் சொல்லவைத்தது.

(3) "கர்வத்துடனும், கெளரவத்தடனும் வாழ்ந்த எமது மக்கள் கம்பி வேலிகளுக்குப் பின்னால் கண்ணீரோடு நிற்கின்றார்கள்; அவர்களைப் பக்குவமாக மீட்டெடுத்து அவர்களது பழைய கம்பீர வாழ்வை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். இத்தனை ஆண்டு காலம் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் பலர் சிங்களத்தின் சிறை முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்; அவர்களையும் மெதுவாக மீட்டெடுத்து அவர்களது சகவாழ்வுக்கு நாம் வழிசெய்ய வேண்டும்.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் பணிகள் நிமித்தம் அனுப்பப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த எமது போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்." என எழுதுகிறீர்கள். என்னைக் கேட்டால் மக்கள் இன்னும் 6 மாதங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். அதற்கான அழுத்தத்தை எம்மால் அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்த முடியும். ஏற்பட்டு வருகிறது.

அது சரி "போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்" என்பது சரிதான். அந்த "நுட்பம்" என்ன என்பதை சொல்லவில்லையே? போரில் தோற்றவர்களை போர்க் கைதிகளாக கருதி அவர்கள் பன்னாட்டு சட்டங்கள் மரபுகளுக்கு இசைவாக நடத்தப் படவேண்டும். ஆனால் சிங்களக் காட்டுமிராண்டிகளிடம் அதனை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். வெள்ளைக் கொடியோடு போனவர்களுக்கு என்ன நடந்தது?

(4) "ஆயுதப் போராட்டத்தைப் பின்புலமாக வைத்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் காலம் - உண்மையில் செப்ரெம்பர் 11, 2001 அன்றுடன் இந்த உலகத்தை விட்டும், கடந்த மே 18, 2009 அன்றுடன் தமிழர்களை விட்டும் போய்விட்டது" என்பது முழுதும் சரியில்லை. செப்தெம்பர் 11, 2001 க்குப் பின்னர்தான் சொசோவோ சுதந்திரநாடாக முகிழ்ந்துள்ளது. அதனை உருவாக்கியவர்கள் இதே மேற்குல நாட்டுத் தலைவர்கள்தான்.

கொசோவோ விடுதலை இராணுவத்துக்கும் வி.புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்கும் கொசோவோ நாட்டுக்கும் தமிழீழத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. 1984 இல் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதிகளால் சுடப்படாது இருந்திருந்தால் எமது போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். வட - கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஒரு தன்னாட்சியை உருவாக்குவதில் இந்திரா காந்தி உறுதியாக இருந்தார். இராசீவ் காந்தியின் முட்டாள்த்தனத்தால்தான் எல்லாம் கெட்டது.

இந்தியாவைப் பகைக்கக் கூடாது என்ற கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். ஆனால் அதனை சேரடியாகச் செய்ய முடியாது. தமிழகத்தின் ஊடாகத்தான் செய்ய முடியும். சென்ற தேர்தலில் அந்த முயற்சி தோற்றாலும் அது முழுத் தோல்வி அல்ல. சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தமிழ் உணர்வாணர்களின் கடுமையான உழைப்பால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழீழ போராட்டத்தின் நான்காவது கட்டம் பற்றி அதன் நன்மை தின்மை சாதக பாதகம் வெற்றி தோல்வி பற்றிய விமர்சனத்தை வரலாற்று ஆசிரியர்களிடம் விட்டுவிடுவோம். நாம் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை எந்த வடிவத்தில் எந்தப் பாதையில் நகர்த்துவது என்பதுபற்றி மட்டும் எல்லோரும் சிந்தித்துச் செயல்படுவோம்.

ஊத்தைத் துணிகளை தெருவில் வைத்துத் துவைப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் யாழ்ப்பாண மாநகரசபை வவுனியா நகரசபைக்குத் தேர்தல் வருகிறது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.

இது நாம் எல்லோரும் செய்யக் கூடிய உடனடிப் பணி. தமிழீழ மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுதலை செய்து விட்டோம் என ஆளுவோர் கொக்கரிக்கிறார்கள். ஆளும் கட்சி வெற்றி பெற்றால் அது உண்மையாகி விடும்.

- நக்கீரன்

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=193:q----q-&catid=35:2009-06-20-00-24-54&Itemid=54

♥ அமெரிக்கர்கள் இலங்கை செல்ல வேண்டாம்: ஒபாமா ♥


அமெரிக்கர்கள் இலங்கை செல்ல வேண்டாம்: ஒபாமா


http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/sri_lanka_ceasefire_0701_a_aap_1199653626.jpg

அமெரிக்க அரசு இலங்கை செல்லும் அமெரிக்கருக்கான ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டிருப்பதாக இலங்கை அரசு அறிவித்து இருந்தாலும் அங்கு விடுதலைப்புலிகளின் குழுக்கள் தொடர்ந்து இருக்கிறது. அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன.
 
எனவே அமெரிக்கர்கள் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே அங்கு இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல கூடாது. இங்கு கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கின்றன. ஆயுத குழுக்களும் திடீர் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளது.
 
பொதுமக்கள் பெருமளவு கூடுமிடம், அரசியல் பேரணிகள், படை முகாம்கள், அரசு அதிகாரிகள், ராணு வத்தினர் வாகன அணி வகுப்பு, உயர் பாதுகாப்பு பகுதி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
 
பொதுபோக்கு வரத்து வாகனங்களில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். இலங்கையில் குடியிருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11147


♥ இளமையை தொலைத்து… இன விடுதலை நோக்கி... பெண் புலிகள் ! ♥

இளமையை தொலைத்து… இன விடுதலை தேடி… பெருமிதம் கொள்ளச் செய்யும் பெண் புலிகள்.

http://www.virakesari.lk/cinema/news/admin/news_img/uploaded/prabakaran.jpg
p83a
'அபிதா'…
- இது இலங்கை அரசுக்குச் சொந்தமான கப்பல். காங்கேசன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த இந்தக் கப்பலைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது புலிகளின் திட்டம். ஏற்கெனவே ஒருமுறை புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிய கப்பல்தான் இது.
"நான் கப்பலை அடிக்கறப்ப… நல்லூர் முருகனுக்கு திருவிழா நடக்கும் காலமாய் இருக்கவேணும். ஏனெண்டால், அப்பத்தான் கடலை வித்து காசு வைச்சிருப்பா அம்மா. நீங்க என் சாவு செய்தியை அவகிட்ட சொல்லும்போது அவாளால ஒழுங்கா சோறு சமைச்சு சாப்பாடு போட முடியும்…"
- 'கேப்டன் அங்கயற்கண்ணி' என்றழைக்கப்படும் புஷ்பகலா துரைசிங்கம், தன் தோழிகளிடம் இப்படி சொல்லிக்கொண்டே இருப்பாள். சொன்னது போலவே 94-ம் வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் உடல் முழுக்க வெடிகுண்டுகளோடு நெடுந்தூரம் கடலில் நீந்திச்சென்று, அந்தக் கப்பலை மோதித் தகர்த்தாள். அவள்தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதல் பெண் கடற்கரும்புலி!
1985 ஆவணி 18… விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி அதிகாரப்பூர்வமாக கொடியேற்றித் தொடங்கப்பட்ட நாள். அதற்கு முன்பு புலிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்வது, இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்க நாடகங்கள் போடுவது என்ற அளவில் மட்டும் உதவிக் கொண்டிருந்தனர் பெண்கள்.
அன்றிலிருந்துதான் ஆயுதம் ஏந்தி நேரடியாக களத்துக்கு வந்தனர். வாழ்வைக் கொண்டாட வேண்டிய பதினெட்டு, இருபது வயது பருவத்தில், இளமையை தொலைத்து 'எம் இனத்துக்கு ஒரு தேசம் வேண்டும்' என்று தாயகக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, கையில் ஆயுதம் ஏந்திய பெண்கள் அவர்கள்.
இந்தப் பெண்களின் பெருமுயற்சியால் மட்டுமே விடுதலைப் புலிகள் வென்ற போர்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது 'ஜெயசிக்குறு' என்று அழைக்கப்படும் போர். நிலப்பகுதியை இரண்டாகப் பிரிக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரும், ஆயிரக்கணக்கான புலிகளும் ஈடுபட்டனர். அதில் ஏராளமானனோர் பெண் புலிகள்.
அது ஓரிரு நாளில் முடிந்த போரல்ல… ஒன்றரை வருடங்களைத் தாண்டியும் நீண்ட போர். மழைக் காலங்களில் பதுங்கு குழிகளுக்குள் தண்ணீர் நிறையும். கழுத்தளவு தண்ணீரில் நாள் கணக்கில் நின்று எதிரிக்கு குறி வைக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான பதுங்குக்குழிகளை பெண்களே வெட்ட வேண்டும். இறுதியில் ஏ-9 நெடுஞ்சாலை புலிகளின் வசமானது. அந்த வெற்றியின் முழுப் பெருமையும் பெண் புலிகளையே சேரும்.
p83b
இவை, பெண் புலிகளின் தரைப்படை தாக்குதல்கள். இதுதவிர… பெண் கடற்புலிகள், பெண் வான்புலிகள் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சகல பலங்களிலும் பெண்கள் சம பங்குடன் இருந்தார்கள்.
இன்றைக்கு விடுதலைப் புலிகள் பெருமளவில் சிதறடிக்கப்பட்டிருக்கும் நிலையில், புலிப்பெண்களின் உடல்கள், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியிலும் நந்திக்கடல் பகுதியிலும் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கின்றன – கனவு ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு!

http://seithy.com/admin/upload/eelam212.jpg

http://www.eelavarkural.com/wp-content/uploads/2008/09/eelam-nature.jpg

http://www.tamilkathir.com/uploads/images/aaivu/vanni%2020122008%2031.jpg  Army.jpg  


♥ " தமிழர்கள்தான் நண்பர்கள் இந்தியா உணரும் காலம் ஒருநாள் வரும்"- நக்கீரன் கட்டுரை ♥

காங்கிரஸ்காரர்களே...! -ஜெகத் கஸ்பர்.
ஜூன் 21, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்க்டிக் பனிக்கண்டத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசியல் நிகழ்வொன்று நடந்தது. 300 ஆண்டுகளாய் டென்மார்க் நாட்டின் காலனியாதிக் கத்திலிருந்து விடுதலைபெறப் போராடி வரும் கிரீன்லாந்து தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. வெகுவிரைவில் முழு விடுதலை சாத்தியப்படும் என்பதும் தெரிகிறது. 22 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரீன்லாந்து நாட்டின் மொத்த மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 57,000 பேர். ஒரு லட்சம் குடிமக்கள் கூட இல்லாத கிரீன்லாந்து தனிநாடாக மாறமுடியுமென்றால் தமிழ் ஈழம் எப்படி மலராமல் போய்விடும்?! நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
நாடிழந்து நாடோடிகளாய் ஆன யூதர்கள் 1948-ல் தமக்கென ஓர் தாயகம் அமைக்க ஈராயிரம் ஆண்டுகள் ஆயிற்று. தன்னுரிமை இழந்த அயர்லாந்து இனத்தவர் மீண்டும் தமக்கான குடியரசை 1920-ல் அமைக்க 700 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. தென் அமெரிக்கா வின் அனைத்து நாடுகளுமே தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டு உருவான நாடுகள்தான். பின்லாந்து, எஸ்தோனியா, இந்தோனேஷியா என தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்து உருவான நாடுகள் உலக வரைபடத்தில் பல உண்டு.
உலக வரைபடம் அடித்தல், திருத்தல், புதிய உரு வாக்கல்களுக்கு உள்ளாக்கப்பட முடியாத இறுக்கம் கொண்டதல்ல. கடந்த 50 ஆண்டுகளில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான புதிய நாடுகள் இப் பூமிப் பந்தில் உருவாகியுள்ளன. தேசிய இனங்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைபெற்று நிற்கும் அரசியல் ஒழுங்கு, தேசிய இனமாக இருக்கத் தகுதியுடையோர் யார்? ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், நீண்ட காலம் பொதுமொழி, பொதுப் பண்பாடு, பொது வாழ்க்கை முறை, பொது வரலாறு ஆகியவற்றைக் கொண்டு வாழும் எந்த ஒரு இனமும் "அரசியல் சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம்' என்பதே கோட்பாடு. அந்த அடிப்படையில் தான் ஈழத்தமிழ் மக்களும் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என வாதிடுகிறோம்.
தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டால் இந்தியா பல் வேறு நாடுகளாக சிதறுண்டு போகாதா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். உண்மை என்ன வென்றால் ஓர் ஜனநாயகக் கூட்டாட்சியாக, எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பயணம் நாம் பெருமை கொள்ளத் தக்கதாவே இருந்து வருகிறது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அழகிரி, ஆ.ராசா இவர்களெல் லாம் வேஷ்டி கட்டிக் கெண்டு கேபினட் அமைச் சர்களாக பாராளுமன்றத்திற்குள் வரும்போது தமிழகமும் இந்திய ஆட்சி அமைப்பில் பங்கேற்கிறது என்ற உணர்வு உண்மையாகவே ஏற்படுகிறது. பணம் படைத்தவர்கள், சில ஜாதிகள், சில மொழி பேசுகிறவர்களின் மேலாதிக்கம் பல்துறைகளிலும் நிலவுகிற போதும் கூட சமூக நீதிக்கான அரசியற் சக்திகள் உறுதியாக இயங்குகின்ற சமூக அரசியற் களத்தினை இந்திய ஜனநாயகம் உறுதி செய்துள் ளது. மாநில சுயாட்சி என்ற கோரிக்கையினை முன்வைக்கிற உரிமையினையும், அதனை அடைவதற்கான வன்முறையற்ற ஜனநாயக வழியிலான நடைமுறைகளையும் இந்திய ஆட்சி அமைப்பு அனுமதித்துள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா அவ்வாறானது அல்ல. அது ஒற்றையாட்சி அமைப்பு. தேசிய இனங் களின் கூட்டாட்சிக்கான ஏற்பாடு அரசியல் சட்ட அடிப்படையில் இல்லை. அந்நாட்டின் அரசு மதம் பௌத்தம். இந்து, கிறிஸ்தவ, இஸ் லாமிய மதங்களுக்கு இரண்டாம், மூன்றாம் இடங்கள்தான். அந்நாட்டின் அரசு மொழி சிங்களம். இன்று அந்நாட்டின் ராணுவத்தில் 100% பேர் சிங்களர்கள். தமிழ் மக்களை பல் லாயிரக்கணக்கில் கொன்றழித்து, தமிழீழ தாயக நிலப்பரப் பினை ஆக்கிரமித்து நிற்பது பெயருக்கு ஸ்ரீலங்கா ராணு வம் என்றாலும் உண் மையில் அது சிங்கள ராணுவம். ஸ்ரீலங்கா காவல்துறையில் 96% பேர் சிங்களர்கள். அப்படியானதொரு நாட்டை எப்படி எல்லா மக்களுக்குமான நாடு என்று நாம் கருதமுடியும்?
யாவிற்கும் மேலாய் கடந்த ஜனவரி முதல் மே-18 வரை ஸ்ரீலங்கா சுமார் 4 லட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் விரட்டிக் கூட்டி முற்றுகையிட்டு நடத்திய கொலைவெறி தாக்குதலும், கடைசி மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 30,000 தமிழர்களை கொன்றழித்த கொடுமையும், இன்று மூன்று லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை மரண முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் அராஜகமும்- தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமையை அனைத்துலக சட்டங்கள், அரசியற் தார்மீகம், மானுட ஒழுக்கம் என சகல அடிப்படைகளில் நின்றும் உறுதி செய்கிறது.
வவுனியாவிலிருந்து வந்திருக்கிற செய்தி களின்படி அகதி முகாம்களில் இருக்கும் சுமார் 24,000 பேருக்கு அம்மை நோய் கண்டிருக்கிறதாம், 4,000 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார்களாம். அடையாளம் தெரியாமல் வாரத்திற்கு சராசரி 60 பிணங்கள் முகாம்களுக்கு வெளியே அழுகிக் கிடக்க நாய்களால் இழுக்கப்படுகிறதாம். மாதத்திற்கு சராசரி நூறு இளம் தமிழ் பெண்கள் அனுராதபுர ராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகிறார் களாம். நாம் இப்போதும் நம்ப வேண்டுமாம்- விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்மக்களை விடுவித்து சுபிட்சம் தருவதற்குத்தான் இந்த யுத்தத்தை ஸ்ரீலங்கா நடத்தியதென்று.
இன அழித்தல் யுத்தத்துக்கு ஸ்ரீலங்கா கொடுத்த முழக்கம்: அதாவது மனித குல வரலாற்றி லேயே மிகப்பெரும் எண்ணிக்கையில் கடத்தி வைக்கப்பட்டி ருந்த மக்களை மீட் கும் நடவடிக்கை. இந்தியாவின் சஉபய, பஒஙஊநசஞர, ஈசசலிஒஇச உள்ளிட்ட அத்தனை ஆங்கில ஊடகங்களும் இந்த மோசடி முழக்கத்தை இரவு பகலாய் இந்திய மக்களுக்கு கூவிக் கூவி விற்றன. இவர்கள் மீட்டு வந்த மக்கள் இன்று வதை முகாம் களில் என்ன பாடுபடுகிறார்களென்பதை சென்று எட்டிப் பார்த்து வரச் சொல்லுவோம். ஆனால் அவர்கள் இதனை தெரியாமலொன்றும் செய்யவில்லை என்பதே உண்மை. தெரிந்தே செய்தார்கள். மேற்குறிப்பிட்ட ஆங்கில ஊடகங்கள் இந்தியாவில் எழுந்து வரும் புதியதொரு மேலாதிக்க பாசிசத்தின் முகங்களாகவே பார்க்கப்பட வேண் டும். பர்காதத், ராஜ்தீப், அர்னாப் எல்லோரும் அழகாக ஆங் கிலம் பேசலாம்- ஆனால் அவர்கள் ஆபத்தான அரசியல் வியா பாரிகளும் கூட என்பதை தமிழ் மக்களின் தேசிய உரிமைச் சிக்கலை பயங்கரவாதமாய் விற்ற யுக்திகளில் கண்டோம்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் சஉபய நடத்திய இண்ஞ் எண்ஞ்ட்ற் நிகழ்ச்சி பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். அந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன். விவாதத்தின் ஊடே ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் அவர் மீதான என் தனிப்பட்ட மதிப்பை உயர்த்தியது. நிகழ்ச்சியை நெறி செய்த விக்ரம், ""ஸ்ரீலங்காவில் நடப்பது தமிழ் இன அழித்தல் என்ற குற்றச்சாட்டினை ஒத்துக் கொள் கிறீர்களா?'' என்று கேட்டபோது, ""ஆம், அங்கு நடப் பது இன அழித்தல்தான்'' என்று ஒத்துக் கொண்டார்.
இரு வாரங்களுக்கு முன் கூடிய நடப்பு பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றிய போது கூட ஜெயந்தி நடராஜன் அவர்கள் அகதி முகாம்களில் வாடும் தமிழ்மக்கள் மீள் குடியமர்வு செய்யப்பட வேண்டிய அவசரத்தையும், நீதியான அரசியற்தீர்வுக்கான தேவையையும் வலியுறுத்தினார். இதனை இங்கு குறிப்பிடக் காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலின் இரத்தப் பழியிலிருந்து காங்கிரஸ் கட்சி தப்பித்துவிட முடியாது. அதேவேளை ஒட்டுமொத்த அழிவி னின்று எஞ்சியிருக்கிற மக்களையேனும் காப்பாற்றி, அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து, விரும்பினால் அவர்களுக்கு தனிஈழம் அமைத்து தரும் வல்லமையோடு இன்று இருக்கிற ஒரே கட்சியும் காங்கிரஸ் கட்சிதான்.
நாம் யாவரும் நேசித்த ஒரு முன்னாள் பிரதம ரின் இழப்பிற்குப் பழிதீர்க்க வேண்டி இத்துணை கொடுமையான இன அழித்தலுக்குத் துணை நின்றது நியாயமா என்ற தீர்ப்பினை வரலாறு எழுதி விட்டுப் போகட்டும். அதே வேளை எனது அனுபவத்தில் தமி ழகத்தின் காங்கிரஸ் கட்சியினர் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அடிமட்ட தொண்டர்கள் தனி ஈழம் அமைவதையே விரும்புகின்றார்கள். யுத்த நிறுத்தம் கேட்டு தீக்குளித்த தமிழர்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவரும் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் யுத்த நிறுத்தம் கொணர வேண்டுமென தமிழக காங்கிரஸ் பெரியவர் ஒருவர் எடுத்த நேர்மையான முயற்சிகளையும், அம்முயற்சி வெற்றிபெறாமல் தடுத்த உணர்வாளர்களையும் அறி வேன். வேண்டுதல் என்ன வெனில் இன்றிருக்கும் நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சில கோரிக்கைகளை தமிழக காங்கிரஸ் வலுவாக தமது தலைமைக்கு வைக்க வேண்டும் என்பதுதான். இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 கோடி நிதி உதவியை செயற்படுத்த 20 பேர் கொண்ட குழுவினை ராஜபக்சே அமைத்துள்ளார். அதில் 19 பேர் சிங்களர்கள்- ஒருவர் இஸ்லாமியர். குறைந்தபட்சம் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக் கூடவா சேர்த்துக் கொள்ளக் கூடாது? இப்படியான குறைந்தபட்ச கேள்விகளைக் கூட நாம் எழுப்பவில்லை யே என்றுதான் அங்கலாய்ப்பாக இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 7-ம் நாள் இலங்கை ராணு வத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பரான ஜெயசூரியா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
""அதிகாரப் பகிர்வின் மூலம் இனப் பிரச்சனை உருவாக காரணமாக இருந்த அம்சங்களை இலங்கை அகற்ற வேண்டுமென எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். நான் கேட்கிறேன், எஸ்.எம்.கிருஷ்ணாவே... இறை யாண்மை கொண்ட ஒரு தேசமாகிய எங்களுக்கு அறிவுரை சொல்ல நீ யார்? உனது வேலையை மட்டும் நீ பார். அல்லது ஐ.நா. மனித உரிமை குழுவில் நவிபிள்ளை சூடு பட்டது போல் நீயும் சுருக்கிக் கொள்ள வேண்டிவரும். இந்தியாவே நன்றாகக் கேட்டுக்கொள். எவ்விதமான அதிகாரப் பரவலும் தமிழர்களுக்கு நாங்கள் தரப் போவ தில்லை. அதுமட்டுமல்ல இந்திய மேலாதிக்கத்தின் கடைசி எச்சமான இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத் தையும் தூக்கித் தூர வீசி எங்கள் தேசத்தை உங்கள் மேலாதிக்கத்திலிருந்து தூய்மை செய்வதுதான் எங்கள் இலக்கு. எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைக்க வேண்டித்தான் விடுதலைப்புலிகளை நீங்கள் உருவாக்கி னீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அகற்றினோம். எங்கள் நாட்டை கைப்பற்றுவதை விட சந்திரனை உங்கள் நாட்டோடு இணைப்பது எளிதாக இருக்கும்''.
இக்கட்டுரை வெளிவந்தது இலங்கை ராணுவத் தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியது ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பர். இவை யெல்லாம் ஏன் அதிகாரத்தில் இருப்போரின் கண்களுக் குப் படவில்லை. இத்துணை கொடுமைகளுக்குப் பின்ன ரும் கூட என்றானாலும் தமிழர்கள்தான் இந்தியா வின் நண்பர்கள் என்பதை இந்தியா உணரும் காலம் ஒருநாள் வரும்.
(நினைவுகள் சுழலும்)
நக்கீரன்


♥ உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் சிங்களப் படைகளுக்குப் பயிற்சி அளித்த கொடுமை-வீடியோ இணைப்பு ♥

SAS உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் இலங்கை படைகளுக்குப் பயிற்ச்சி அதிர்ச்சித் தகவல்--காணொளி இணைப்பு


(Chris Ryan)கிருஸ் ரையனை இராணுவ மற்றும் போலீஸ் மட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உலகப் புகழ்பெற்ற மற்றும் பரபரப்பாகப் பேசப்படும் இவரது இராணுவப்
பயிற்சிகள் மற்றும் நூல்கள் என்பன உலகப்பிரசித்தி வாய்ந்தவை. தற்போது இவர் தாமாகவே முன்வந்து, இலங்கை அதிரடிப்படையினருக்கு தாமே பயிற்சிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார்.
காணொளிகளுடன் கூடிய இராணுவ பயிற்றுவிப்புகளை படமாக்கி, தான் எவ்வாறு இலங்கை இராணுவத்தையும், அதிரடிப்படையினரையும் போருக்கு தயார்செய்தார் என்பதை விளக்கும் காட்சிகளாக பிரசுரித்துள்ளார் கிருஸ்.விடுதலைப் புலிகளுடனான போரின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவிபுரிந்தது யாவரும் அறிந்த உண்மை இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் தனியார் நிறுவனம் போலச் செயல்படும் கிருஸ் ரையன்இ இலங்கை சென்று இராணுவத்தினருக்கு அளித்த பயிற்சிகள் குறித்து இதுவரை காலமும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
எமது இணையம் எமது வாசகர்களுக்காக இதனை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறது. இலங்கை சென்று பலமாதகாலமாக அதிரடிப்படையினரை கடும் பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் கிருஸ், இவர் பார்வையில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இருப்பினும் அவர்களின் வலிமை போரிடும் திறமை, ஒரு இலக்கை அடைய உயிர்த்தியாகம் செய்தல், கொரில்லாத்தாக்குதல் என்பன தம்மை பிரமிக்கவைத்ததாகக் கூறுகிறார் கிருஸ்.
புலிகளின் தாக்குதலில் பல அதிரடிப்படையினர் கொல்லபட்டதும்,  சிறப்பு அதிரடிப்படையினர் பலர் காயமடைந்ததும் அவரை மிகவும் வியப்பில் ஆள்த்தியுள்ளதாம். விடுதலைப் புலிகள் போன்ற கடும் தாக்க்குதல் நடத்தக்கூடிய ஆயுதக் குழுக்களுடன் எவ்வாறு போர்புரிவது என இவர் இலங்கை அதிரடிப்படைகளுக்கு மாதக்கணக்காக பயிற்சிகளை வழங்கியிருக்கிறார். வன்னியில் போர் நடைபெற்ற காலங்களில் சிறப்பு அதிரடிப்படையினர், மற்றும் டாஸ்க் போர்ஸ் 7 என்ற அதிரடிப் படையினருமே பல முன் நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/watch?v=s4RIlg0UFBQ

கூட்டம் கூட்டமாக ஆட்டுமந்தைகள் போல முன்னேறிவந்த இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை சந்தித்திருந்தவேளை, சிறு குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்துமாறு உக்திகளை வகுத்துக்கொடுத்தவரும் இவரே ஆவார்.மொத்தத்தில் உலகில் கிடைக்கக்கூடிய அனைத்து வழங்களையும் ஒன்றுதிரட்டி, இலங்கை அரசு போர் புரிந்துள்ளது, பாமர சிங்கள மக்கள் முதல் முகாம்களில் பணிபுரிந்த சிங்கள வேலைக்காரவரை, கிருஸ் ரையனைப் பற்றி வாய்திறக்கவில்லை.
ஒற்றுமை காக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இவ்விடையத்தை அறிந்திருந்தும் வாய்திறக்கவில்லை, அங்கும் சிங்கள ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது, போர் முடிவுக்கு வந்த பின்பும் கூட சிங்கள் ஒற்றுமை காக்கப்படுகிறது, ஆனால் தமிழர்கள் இடையே என்ன காணப்படுகிறது? சற்றே சிந்தியுங்கள், சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு இருக்கிறது, சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் எமது இனம் பிளவுபட்டு நின்றது காரணமாக இருக்கிறது, சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் தமிழர்களின் ஒற்றுமையின்மை, பொறாமை இருக்கிறது.


http://www.youtube.com/watch?v=s4RIlg0UFBQஇதுதான் சிங்களவன் வெற்றிக்கு காரணம்.எம் தமிழினமே இனியாவது விழித்தெழுவோம், இன்னும் நேரம் கடந்துவிடவில்லை, ஒற்றுமையாக ஒன்றுபட்டு தமிழீழம் அமைப்போம். சிங்கள அரக்கர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம். கொல்லப்பட்ட மக்களுக்கும், சிறையில் வாடும் எம் உறவுகளுக்காகவும் குரல்கொடுப்போம், இனியாவது ஒன்றுபடுவோம்.. ஓரினமாக !

இவரின் பிரபல புத்தகங்கள்
http://www.fantasticfiction.co.uk/images/n32/n162734.jpg
http://www.fantasticfiction.co.uk/images/x0/x4425.jpg

 நன்றி;அதிர்வு.காம்

Sunday, June 28, 2009

♥ இந்தோனேசிய தீவில் பிரபாகரன்.... ♥

இந்தோனேசிய தீவில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்

[Untitled-1+copy.jpg]


பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே உலாவரும் மில்லியன் டாலர் கேள்வி.

பத்து நாட்களுக்கு முன் நார்வே நாட்டில் உள்ள தமிழர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். காரணம், நார்வே நாட்டில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது தான். புலித் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த சிலரிடம் கேட்டபோது,

"இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பெரும் தீவுகள் 26 மட்டும்-தான். சில குட்டி, குட்டித் தீவுகளில் தீவிரவாத அமைப்புகள்

காலூன்றி உள்ளன. அவர்களிடம் நல்ல நட்புறவில் இருந்த பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் அந்தத் தீவுகளில் ஒன்றில் பத்திரமாக இருக்கிறார்கள்" என்கிறார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் இதைவிட இன்னும் சற்று சந்தோஷிக்கும் விதமாக ஒரு செய்தி உலா வருகிறது, "இலங்கையிலிருந்து மிக எளிதில் தப்பிக்க வாய்ப்பு உள்ள ஒரே இடம் தமிழ்நாடுதான். எனவே, அதிராம்பட்டினம் கடற்கரை வழியாக வந்த பிரபாகரன், தற்போது திருச்சி மையப்பகுதியில் ரகசியமான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்" என்ற செய்தியும் சமீப சில நாட்களாக உலா வரத் தொடங்கியிருக்கிறது.

"இல்லை, இல்லை மாசற்ற மாவீரன் பிரபாகரன் கோழையைப்போல் தப்பித்துச் செல்ல வாய்ப்பே இல்லை. லட்சக்கணக்கான தமிழ் ரத்த சொந்தங்களையும் ஆயிரக்-கணக்கான போராளிகளையும், மட்டுமல்ல தனது வீரமைந்தன் சார்லஸ் அந்தோணியையும் சிங்கள கொலைவெறிக்குப் பலி கொடுத்த பின்பு, தாய் மண்ணைவிட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. இன்னமும் வன்னிகாட்டில் மக்களுடன் மக்களாக, மீண்டும் அவர்களை பாதுகாக்கும் உத்திகளுடன் பலத்த பாதுகாப்பு அரணுக்குள்தான் பிரபாகரன் இருக்கிறார்" என்றும் பேசுகிறார்கள்.

இச்சூழ்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு விடைதேடி புறப்பட்டோம். விடுதலைப்-புலிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் எப்போதுமே மிக நெருக்கமான தொடர்-புள்ள இடம் வேதா-ரண்யத்தை அடுத்த கோடியக்கரைதான்! பிரபாகரனும், மற்ற ஈழ விடுதலை அமைப்புகளும், ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டதும் இங்குதான். மேலும் விடுதலைப்-புலிகளின் அதி நவீன விசைப்படகு இலங்கை-யிலிருந்து கோடியக்-கரைக்கு வந்து சேர வெறும் பன்னிரென்டு நிமிடங்கள்தான் ஆகும் என்பது ஆச்சர்ய-மான விஷயம். இத்தகைய அதிவேகப்-படகு இந்தியா, இலங்கை ராணுவத்திடம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் கள்ளக் கடத்தல் தொழிலாக இருந்து பிறகு, புலிகளுக்குத் தேவையான பொருள்களை சப்ளை செய்யும் தொழிலாக மாறி, அதனை செய்தவர்கள் வசிக்கும் பகுதியும், கோடியக்கரைதான். அத்தகைய தொழிலில் இருந்தவரும், இன்று-வரை புலிகளின் அசைவை அறிந்தவருமான முக்கியப் புள்ளி ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் நாம் பேசியபோது, 'நான் அறிந்த வரையில் தம்பி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவரைத் தெரிந்தோ, தெரியா-மலோ இலங்கை அரசு இறந்ததாக அறிவித்து ஓர் உடலையும் காட்டி நாடகத்தை முடித்துவிட்டது.

ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜியைப்போல, இலங்கையின் இனவெறியை எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்குப் போராடிய உண்மையான போராளியை சர்வதேச அளவில் கோழை மரணமாகச் சித்திரித்து அவமானப்படுத்தி-விட்டார்கள்.

இதுவும் போர்த் தந்திரத்தில் தம்பிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. படை-களை கலைத்து, ஆயுதங்களை மறைத்து மக்களுடன் மக்களாக புலிகள் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள் இலங்கை ராணுவத்தினர்.

தமிழகத்தில் ஒரு பழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதாவது மரணப்படுக்கையில் உள்ளவர்-களுக்கு 'உயிர் பால்' ஊட்டுவார்கள். அதுபோல், இலங்கைத் தமிழர்களை கொல்ல எல்லாவித உதவி-களையும் செய்துவிட்டு, இன்று அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் 'உயிர் பால்' ஊட்ட முயற்சி செய்கிறது இந்திய அரசு. அதனை 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்று மேடைக்கு மேடை முழங்கிய தமிழக தலைவர்களும் வேடிக்கை பார்ப்பதுதான் வெட்கக்-கேடாக இருக்கிறது.

தமிழன் எரிவதையும், காடு அழிவதை-யும் காட்டுகின்ற இலங்கை ராணுவம், புலிகளின் நவீன ரக டாங்கிகளையோ, போர் விமானத்தையோ அல்லது பெருமளவில் ஆயுதங்களையோ காட்டவில்லை. ஏனென்றால் அவற்றை இன்னமும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை. உடைமைகள், உறவுகள், உறுப்புகள் என சகலத்தையும் இழந்து கையேந்தி வாழும் அவலத்திற்கு வந்துவிட்ட எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் வந்து சேரட்டும் என்பதற்காகவே, தம்பி தலைமறைவில் இருக்கிறார் என்றே எனக்குக் கிட்டும் செய்திகள் சொல்லுகின்றன" என்று கண்கள் மின்னச் சொல்கிறார் அந்தப் புள்ளி.

அடுத்து ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராம நாட்டாரான சேதுபதியைச் சந்தித்துப் பேசினோம். இவர் இலங்கைத் தமிழர்கள் பலரிடமும் நல்ல தொடர்பில் இருப்பவர். உணர்வுபூர்வமாகவே பேச ஆரம்பித்தார்.

"சிங்களவன் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் நம் நாட்டில் உள்ள மேற்கு வங்களாத்திலிருந்து சென்றவர்கள்தான். அந்த இன உணர்வில், அதே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான், தலைமைக்குப் புலிகளைப் பற்றிய தவறான தகவலை தந்து, புலிகளை அழிப்பதாக எண்ணி, அப்பாவித் தமிழர்களை அழித்து-விட்டார்கள். போரில் வீரமரணம் அடைவது இயற்கைதான். அந்த வகையில் சார்லஸ் அந்தோணி, புலித்தேவன், நடேசன், குணா போன்றோர் இறந்திருக்கிறார்கள். ஆனால் பொட்டு அம்மான், சூசை போன்ற முக்கியத் தளபதிகளுடன் பிரபாகரன் நலமுடன், பாதுகாப்பாக இருக்கிறார் என்றே எனக்கு வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகையிலிருந்து கன்னியாகுமரி வரை மீனவக் கிராமங்களில் பிரபாகரன்தான் அவர்களின் மனம் நிறைந்த தலைவர். அவர் இறந்திருப்பது உண்மையென்றால் எங்காவது ஓரிடத்திலாவது ஒரு படம் வைத்து மாலை போட்டு அஞ்சலி செலுத்தியிருக்க மாட்டார்களா? இலங்கை ராணுவத்தால் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் நானூறுக்கும் மேற்பட்-டோர் பலியாகி, அவர்களது குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. இந்தியக் கப்பற் படையால் நமது மீனவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எனவே, விரைவில் இங்கு முகாமிட்டுள்ள நேவியை எதிர்த்து பெரிய அளவில் கண்டன பேரணி நடத்தப் போகிறோம்" என்று முடித்தார்.

இறுதியாக இலங்கையில் நாற்பதாண்டு காலம் வசித்தவரும், பிரபாகரனிடம் 1980லிருந்து நல்ல அறிமுகத்தில் உள்ளவருமான சீத்தாராமனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

"எம்.ஜி.ஆர். டைரியில் என் பெயர் இருக்கும். அதுபோல் தம்பி மனதில் எனக்கு இடமிருக்கும். பதினெட்டு வயது தம்பியாக பிரபாகரனை சந்தித்தேன். அப்போதே அதிகம் பேசமாட்டார். வார்த்தைகளை தேவைக்கேற்பவே பயன்படுத்துவார். ஒப்பற்ற, ஈடு இணையற்ற மாவீரன் பிரபாகரன். வீரனுக்கு எப்போதுமே அழிவில்லை என்பது வேறு விஷயம். இதற்கு முன்பு இரண்டுமுறை 'பிரபாகரன் கொல்லப்-பட்டார். உடல் வந்து கொண்டிருக்கிறது' என்று அறிவித்தார்-கள். நானும்கூட அதனை நம்பி, கண்ணீர்விட்டு, போட்டோவிற்கு மாலை போட்டு அஞ்சலியும் செலுத்தி-யிருக்கிறேன்.

ஆனால் அந்த மாவீரன் ஒவ்வொரு முறையும் மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதியன்று வெளிப்பட்டிருக்கிறார். அதுபோலவே இப்போதும் வருவார் என்றே உறுதியாக நம்புகிறேன். கடந்த-வாரம் இலங்கை கவிஞர் காசி ஆனந்தனி-டம் பேசினேன். தம்பி நலமாக இருக்-கிறார் என்றே எனக்கும் எனது மனைவிக்-கும் நல்ல செய்தியைச் சொன்னார். அதையே தான் உங்களுக்கும் சொல்-கிறேன். நல்லதை நம்புங்களேன்" என்று முடித்த-போது, அவருடைய வயதை மீறிய உற்சாகத்தைக் காண முடிந்தது.

--தமிழக அரசியல்--

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=137:2009-06-26-11-45-55&catid=35:2009-06-20-00-24-54&Itemid=54
♥ ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழன் தமிழனா இல்லை-சீமான் ♥

http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpgஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழ்நாட்டில் தமிழனாக இல்லாமல்
இருப்பதுதான் காரணம்: சீமான்


ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழ்நாட்டில் தமிழனாக இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று தமிழின ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார்.

திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின் முன்னதாக மகளிர் அணியினர் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.

பேரணியினை தொடக்கி வைத்து சீமான் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச போர்க் குற்றம் செய்து இருக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்போகும் போது அந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் பொருட்டு இந்தியா கையெழுத்திட்டதே, இதனை விட இலங்கை தமிழர்களுக்கு என்ன துரோகம் செய்யப்போகிறார்கள். இதை கேட்டால் நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள்.

இலங்கையில் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம் தமிழன் இந்த மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. இனியாவது எனது தாய் தமிழ் உறவுகள் எல்லாம் தமிழன் என்ற ஒற்றை குடையின் கீழ் அணிதிரளாது போனால், இந்த இனத்தை காக்க யாராலும் முடியாது. மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நம் இனம் காக்க போராட வேண்டும் என்றார் அவர்.


http://puthinam.com/full.php?2bZRvSe0dLh1L0ecMHc33a4waJl4d3kZc3cc2InX3d439UX3b024Rn3e

"பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்! இனி..." கொளத்தூர் மணி

பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!-- -மத்திய அரசை எச்சரிக்கை கொளத்தூர் மணி[Untitled-1+copy.jpg]    http://www.sankathi.com/uploads/images/news/India/Kolaththur%20mani1.jpgவிடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும்

இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்-துறை, இதுவரை 75 பேரை கைது செய்துள்ளது. மற்றவர்களையும் தேடி வருகிறது. அது-மட்டுமல்லாமல் கையில் சிக்குபவர்-களையெல்லாம் கைது செய்து, இந்த வழக்கில் சேர்த்து வருவதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோவை மத்திய சிறையில் ராமகிருஷ்ணனைச் சந்தித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், இன்னும் போலீஸிடம் சிக்காமல் இருப்பவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாகவும் தகவல்கள் உள்ளன. ஈழத்திற்காகப் போராடி வந்தவர்கள், தற்போது ஈழ ஆதரவாளர்களுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அதுவும் தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 'ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு' கோவையில் நடந்தது. மாநாட்டில் கொளத்தூர் மணி, சீமான், 'கற்றது தமிழ்' ராம், பாவாணன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கொளத்தூர் மணி பேசுகையில், "ஈழத்தில் சிங்கள அரசு இனவெறித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே நாம் இங்கே பொங்கியெழ ஆரம்பித்துவிட்டோம். ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்திய அரசே துணை நிற்பதைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் முத்துக்குமார் தொடங்கி பதினைந்திற்கும் மேற்பட்ட ஈழ ஆதரவாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

ஈழம் அழிந்து வருவதைப் பொறுக்க முடியாமல் நாம் எல்லோரும் கொதித்துக் கொண்டிருந்த வேளையில், போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, எதற்கும் அஞ்சாமல் மத்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்பியது. கோவை வழியாக ராணுவ வாகனங்கள் சென்றபோது, மானமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி அந்த வாகனங்களை வழிமறித்தனர். 'எங்கள் வரிப்பணத்தில் எங்கள் இனத்தையே அழிப்பதா!' என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் ஆற்ற வேண்டிய கடமையை அவர்கள் செய்யாததால், மக்களே செய்தனர். கடமையைச் சரியாகச் செய்த எங்களுக்குக் கிடைத்த பரிசு தேசிய பாதுகாப்புச் சட்டமா? இந்த அநீதியை இனியும் அனுமதிக்கக் கூடாது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பெரியார் திராவிட கழகத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. அறிவிக்கட்டுமே! பெயரை மட்டும்தானே அவர்களால் தடை செய்யமுடியும்? அப்படி மத்திய அரசு தடை விதித்தால் பெரியார் திராவிட கழகம், பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும்" என்றார் அதிரடியாக.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் மைக்கைப் பிடித்தார் சீமான். "இதுவரை ஈழ விடுதலைக்காகப் போராடினோம். ஆனால் இன்று ஈழ ஆதரவாளர்கள் விடுதலைக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நான் என்ன பேசினேன் என்பதற்காக தமிழக அரசு என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பேசியது புதுவையில். ஆனால் வழக்கு பதிவு செய்யப்-பட்டது பாளையங்-கோட்டையில். பிரபாகரனை அண்ணன் என்று கூறியது குற்றமா? இத்தாலியில் பிறந்த சோனியாவை அன்னை என்று கூறும்போது, என் மண்ணில் பிறந்த பிரபாகரனை அண்ணன் என்று கூறுவது குற்றமாகத் தெரிகிறதா நம் தமிழக அரசுக்கு?

இலங்கையில் நடக்கும் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. அதனால்தான் தமிழகத்தில் நாங்கள் போராடுகிறோம். இந்திய ராணுவமே எங்களுக்கு எதிராக வந்தாலும் வெறும் கையோடு அவர்களை விரட்டி அடிப்போம். தற்போது ஆஸ்திரேலியா, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டின் பாராளுமன்றங்களின் முன் ஈழ விடுதலைக்காக ஆர்ப்பாட்டங்-களை நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதைப் பற்றிப் பேசக்கூட அனுமதி இல்லை. அது ஜனநாயக நாடா அல்லது இந்தியா ஜனநாயக நாடா?

ஈழத்திற்காகக் கதறினோம், கத்தினோம், புலம்பினோம். இது பிழையா? இதற்குக்கூட அனுமதி இல்லாத நாடு, என்ன நாடு? தமிழனாகப் பிறந்தது தப்பா? தமிழா இனி உனக்கு நாடில்லை. மத-மில்லை. ஜாதியும் இல்லை. இனி உனக்கென்று எதுவும் இல்லை. இனி தமிழனின் பொதுச் சொத்து சிறை மட்டும்தான். வேண்டுமென்றால் இனம் மாறிப்போய்விடு.

இந்திய தேசமே அழிந்துபோனாலும் பரவாயில்லை, ஒரு விடுதலைப் புலிகூட இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மத்திய அரசே, ஈழத்தை அழித்துவிட்டு இந்தியாவை-யும் அழிக்க வருவான் சிங்களன்.

ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழனுக்குச் சம உரிமை கிடைக்க வழி வகுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறுகிறது. பசிக்குச் சோறு தராத சிங்களனா, என் மக்களுக்குச் சம உரிமை தரப் போகிறான்.

பசியால் துடித்துக்கொண்டிருக்கும் என் மக்களுக்கு உணவு வழங்க 'வணங்காமண்' என்ற கப்பலை அனுப்பி வைத்தது சில நல்ல உள்ளங்கள். அதைக்கூட ஏற்க மறுக்கிறது ராஜபக்ஷே அரசு. சென்னை துறைமுகத்தில் நிற்கும் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசும், மத்திய அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் குண்டடி பட்டு செத்தது பத்தாதா, பசியிலும் சாக வேண்டும் என்று ஆசைப் படுகிறதா இந்த அரசுகள்?

ஐ.நா.சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில் இருந்தே தெரியவில்லையா, தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்பது? ஒரு மனிதனின் மரணத்திற்கு ஆயிரம் திரைக்கதை எழுதுகிறது, இலங்கை அரசு. நம் இனத்தின் சூரியன் அழியாது. தமிழ் ஈழ தேசக் கொடியை ஏற்றாமல் பிரபாகரன் தலை சாயாது" என்று ஆவேசம் குறையாமலேயே பேசி முடித்தார் சீமான்.

நன்றி:தமிழக அரசியல்

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=150:2009-06-27-05-39-12&catid=36:2009-06-20-00-25-22&Itemid=55

http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg   

♥ உலகத்திற்கு தமிழனைக் காட்டி பிச்சை கேட்கிறான்,சிங்களன் ♥

உலகிற்கு தமிழரை காட்டி பிச்சையெடுக்கும் சிறிலங்கா

http://www.athirvu.com/ca1.jpg  http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009016.jpgதமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று விடுத்துள்ள அறிக்கையில் சிறிலங்காஅரசு நிதி நெருக்கடியில் திணறுவதாகவும் அதனை சரிக்கட்டும் முகமாக முகாங்களில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை உலகிலுள்ள நாடுகளில் காட்டி அவர்களை பராமரிக்க வேண்டும் என்று கூறி உலக நாடுகளிடம் பிச்சையெடுப்பதாக கூறினார். மகிந்த ராஜபக்சவும் நேற்று முன்தினம்  வெளியிட்ட அறிக்கையில் உலக நாடுகள் தமிழரை பராமரிப்பதிற்கு நிதியினை நேரடியாக அரசிடம் தரும்படியும் உலக நாடுகள் தொண்டு நிறுவனங்களிடம் பணத்தைகொடுப்பதைநிறுத்துமாறும்  கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஜரேப்பிய யூனியன் 840 மில்லியன் ரூபாவை  தொண்டு
நிறுவனங்கள் ஊடாகவே வழங்க உள்ளதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

http://eeladhesam.com/


http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/3577976220_6551920c3f_o.jpg

♥ விதைக்க அல்ல புதைக்க-சீமான் ♥

மீதமுள்ள தமிழனையும் கொல்ல துணைபோகும் எம்.எஸ் சுவாமிநாதன்: சீமான்http://4.bp.blogspot.com/_gWe9zl8M1xw/SamLhE-Y4bI/AAAAAAAAAGw/X2oywfwog5s/S300/vanni_20090222009.jpghttp://1.bp.blogspot.com/_66r2YGdc6aI/SLU_07qWg2I/AAAAAAAAARg/HdKvqs9BuvM/S724/untitled.bmp


சிறீலங்கா அரசின் இன அழிப்பு சதிக்கு இந்திய வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் துணை போகிறார் என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை இதழில் அவர் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை:

"ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!" மகிந்த ராஜபக்சவிடம், ஜூன் 9 ஆம் நாளன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகளாம் இவை.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளை நிலங்களை எதற்கும் உதவாத தரிசு நிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை இலட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளியவர் என்ற விமர்சனங்களுக்கு உள்ளான எம்.எஸ்.சுவாமிநாதன் இப்படிச் சொல்லி இருந்தால் அது மிகப் பெரிய அவலம்!

சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமேயானால், ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கண்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டது உண்டு. அந்த 'அறிவார்த்தமான' வாக்கியத்தை முதன் முதலில் கூறியவர் டொக்டர் ஜோசப் மெங்கெல் [Joseph Mengele] என்ற ஜெர்மானியர்.

பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை மேதைமை படிப்புக்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர்.

ஹிட்லரின் நாஜி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார். 1943 ஆம் ஆண்டு, மே 24 ஆம் நாளன்று ஆஸ்விட்ச் - பிர்கானாவ் சித்ரவதைக் கொட்டடியில் இருந்த 'நாடோடிகளுக்கான முகாமில்' [Gypsy Camp] மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டைப் பிறப்புக்களின் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவருடைய பரிசோதனைகளுக்கு உவப்பான 'எலிகளாக'வே கணிக்கப்பட்டார்கள். அவருடைய ஆய்வுக்காக சுமார் 1,500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர். தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார்.

இதனைப் பல மாதங்கள் தொடர்வார்..  'மெங்கெல் மாமா... மெங்கெல் மாமா...!' என்று குழந்தைகள் அவரை வளைய வரும்.  திடீரென ஒரு நாளில், அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார்.  மயக்கம் ஏற்படுத்தும் சாக்லெட்டைக் கொடுப்பார். மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இதயத்தில், அவர்களை உடனே கொல்லும் விஷத்தை ஊசி மூலம் செலுத்துவார்.

குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் அவயவங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார். இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற 'மகத்தான' ஆய்வையும் அவர் மேற்கொண்டார்.

குழந்தைகளின் கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற ஆராய்ச்சிக்காக பல்வேறு இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் அவர்களின் கண்களுக்குள் செலுத்திப் பார்த்தார். இப்படிப்பட்ட கொடூர ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்ரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில், அவருடைய உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்தான்... 'ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!' என்பது.

எம்.எஸ்.சுவாமிநாதன் துணையுடன் சிறீலங்கா அரசாங்கம் நடத்தவுள்ள 'பரிசோதனை'யும் யூத இனத்துக்கு மெங்கெல் செய்த கைங்கரியம் போன்றதுதானா... புதிய விவசாயப் பரிசோதனையில் வன்னிப் பெருநில மக்கள் எலிகளாகப் பயன்படப் போகிறார்களா என்ற அச்சம் எழுகிறது!

வட ஈழ மக்களும் அவர்களின் அவலமும்...

சிறீலங்கா இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப் போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த - அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டு விடுகிறது. 2007 இறுதியில் வட ஈழத்தின் மீது இலங்கை அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது.

அப்போது வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்து 3 ஆயிரம் ஆகும். போர் முடிந்த இன்றைய நாளில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 லட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது.

35 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை. மே 27 ஆம் நாளன்று அளிக்கப்பட்ட ஐ.நா. சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி, அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30 ஆம் நாளன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 லட்சத்து 77 ஆயிரம் ஆகக் குறைந்திருந்தது.

ஜூன் 15 ஆம் நாளன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 என மேலும் குறைந்திருந்தது. மே 27-க்கும் ஜூன் 15-க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27 ஆயிரத்து 498 பேர் காணாமல் போயுள்ளனர் என்பதுதானே பொருள்? மே 23 ஆம் நாளன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா. சபையின் தலைவர் பான் கீ மூன் சந்தித்தபோது, 'என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை!' என்று பெரிதும் வருந்தினார்.

சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா, 'இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்!' என்றார்.

'வடக்கின் வசந்தம்' என்ற வஞ்சகத் திட்டம்! இந்த நிலையில்...

மே 7 ஆம் நாளன்று இலங்கை அரசு வன்னிப் பெருநிலத்தினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது. 19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவுக்கு இலங்கை அதிபரின் ஆலோசகரும் சகோதரரும் இனவாத கருத்துகளை அள்ளி வீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்ச தலைவராக நியமிக்கப்பட்டார்.

மீதமுள்ள 18 பேரில் அதிபரின் மற்றொரு சகோதரரும், 'மருத்துவமனைகளின் மீது குண்டு வீசுவது சரியான செயலே' என்று திருவாய் மலர்ந்தருளிய இலங்கை இராணுவத்தின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவும் ஒருவராவார். உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவர்களாகவும் (இதில் இலங்கை ராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம்) 10 பேர் இலங்கை அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர்.

இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார். வன்னிப் பெரு நிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்துக்கு இவர்கள் இட்டிருக்கும் பெயர்தான் 'வடக்கின் வசந்தம்'. ஒரு இஸ்லாமியரைத் தவிர்த்து, வேறு தமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் 'வசந்தம்' எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

'போல்போட்' திட்டம்...'

அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்' என்று ஜூன் மாதத் தொடக்கத்தில் இலங்கை அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க... நம்மூர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இலங்கை அதிபரின் கண்ணுக்குத் தெரிந்தார்.

ஜூன் 9 ஆம் நாளன்று ராஜபக்சவை சந்தித்து ஆலோசித்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போது, 'வேளாண் மீட்டுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்' என ராஜபக்ச, சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, 'வடக்கின் வசந்தம்' திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆண்களே இல்லாத ஈழத் தமிழினத்தை உருவாக்க சதி...

'போரில் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பட்ட சேதம் காரணமாக, வேலை செய்யக் கூடிய வலுவுடைய ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. வேளாண் தொழிலுக்குப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே, வேளாண் ஆராய்ச்சியும் கல்வியும், அவற்றின் திட்டங்களும், பயிற்சி முறைகளும் பெண்களை மனதில் கொண்டே கட்டமைக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் சுவாமிநாதன்.

ஆண்கள் இல்லாத தமிழினத்தை ராஜபக்ச உருவாக்கியுள்ளார் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரத் தகவல் வேண்டும்? 'வவுனியாவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவன வளாகத்திலிருந்து இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் இலங்கையின் வேளான் விஞ்ஞானிகளுடனும், விவசாயிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் முகாம்களில் உள்ளவர்களும் கலந்துகொள்ளவேண்டும்.

அக்டோபர் மாதம் விதைப்புக் காலமாகும். எனவே வேளாண் பயிற்சி, திறன் மேம்படுத்துதலுக்கான செயல்களை ஆகஸ்டில் தொடங்கியாக வேண்டும். மண் பரிசோதனை ஊர்திகள், விதைகள், ஊட்டச் சத்துக்கள், கருவிகள் ஆகியவை அனைத்து ஊர்களுக்கும் செப்டம்பருக்குள் சென்றடைய வேண்டும்' என்றும் கூறியுள்ளார் சுவாமிநாதன்.

வேளாண் விஞ்ஞானியின் ஆர்வமும், அதன் பின்னாலிருக்கிற இலங்கை அரசின் அவசரமும் கம்போடியாவை ஆண்ட கொடுங்கோலன் போல்போட் காலம், இலங்கையில் மீண்டும் திரும்பிவிடுமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.

கம்போடிய கண்ணீர்!

1975 ஆம் ஆண்டு ஏப்ரலில் கம்போடிய நாட்டின் அதிகாரத்தை போல்போட் (சலோத் சார்) தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. நகரங்களில் இருந்த அனைவரும் கிராமப்புறங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பொதுமையாக்கப்பட்ட பண்ணைகளில் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாட்டின் வளர்ச்சிக்காக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தப் பணிகளின்போது மட்டுமே சுமார் 17 லட்சம் மக்கள் மடிந்து போனார்கள். அதாவது, கம்போடியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21% இல்லாமல் போய் விட்டார்கள்.

வன்னிப் பெருநில மக்களின் துன்பமோ இதை விடப் பெரிது. ஏற்கெனவே கடந்த 13 மாதங்களில் அவர்களில் 35% காணாமல் போயிருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் முகாம்களில் உள்ள பெண்களையும், சிறுவர்களையும், வயோதிகர்களையும் கிராமப்புறங்களில் குடியமர்த்தி... எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரால் கடுமையாக வேலை வாங்குவதற்கு ராஜபக்ச திட்டம் வகுக்கிறார்.

உறவுகளை இழந்து பட்டினியாலும் நோயாலும் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்தப் பெண்களால், ஆகஸ்ட் மாதம் வேளாண் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு செயல்களில் எப்படிக் கலந்து கொள்ள முடியும்? இழப்புகள், மன உளைச்சல்கள், இடப்பெயர்வுகளால் ஏறத்தாழ நடைபிணங்கள் ஆகிவிட்டிருக்கும், பெண்களின் எஞ்சிய உயிரையும் பறிப்பதற்கான மாற்று ஏற்பாடாக இதை ஏன் கருதக் கூடாது?

போருக்கு உதவி செய்து தமிழினத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்த இந்தியா... இன்று மிச்சமிருக்கும் தமிழர்களையும் தந்திரமான ஒரு திட்டத்தின் மூலம் கொன்று குவிக்க முயலும் இலங்கைக்கு 500 கோடி ரூபாயை அளிக்கப் போகிறதா?  'வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் நோக்கம் ஈழத்தில் பயிர் பண்ணுவது அல்ல... இன்னும் மிச்சம் இருக்கும் தமிழர்களின் உயிர்களை மெள்ள மெள்ளக் கொல்வதுதான்' என்ற அச்சத்தைப் போக்குவதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் என்ன உத்தரவாதம் வைத்திருக்கிறார்? என கேள்வி எழுப்பினார் சீமான்.

                                                                       Www.eeladhesam.com

http://1.bp.blogspot.com/_qsdSxWwgNcY/SZzgrwHLW-I/AAAAAAAAAGc/SFkjm-THw6A/s400/untitled.bmp

♥ "விடுதலைப் புலிகள் கடும் பயிற்சியின் போது நிஜமாகவே சுட்டு சாவது உண்டு"-நக்கீரன் கட்டுரை ♥

உறங்காத கண்மணிகள் உருக்கமான கட்டுரைhttp://www.tamilkathir.com/uploads/images/aaivu/2009/01/100108%2011.jpg        http://i39.tinypic.com/jghbh1.jpghttp://eelamvision.com/admin/gallery/news/5.jpg
 


உறங்காத கண்மணி களை அறிவீர்களா? இவர் களின்றி 2000-ம்ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் போ ராட்டம் சாதித்த மிகப்பெரும் ராணுவவெற்றிகள் ஒன்றுகூட சாத்தியப் பட்டிருக்காது.

விடுதலைப்புலிகளின் முன்னணிராணுவ புலனாய்வுப் பிரிவின் பிள்ளைகளுக்குப் பெயர்தான் "உறங்காதகண்மணிகள்'. நிலவு காயும் நாட்கள்தான் இவர்களது தீபாவளி. கனத்த இரவுகளில்
இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் திறக்கும். காற்றோடு காற்றாய்ப் போவார்கள். கணப்பொழுதில் வெட்டி மறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி உட்புகுவார்கள்.

புலிகள் படைத்த ராணுவ வெற்றிகளுக் கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது
துல்லியமான திட்டமிடல். பிசிரற்ற திட்டமிடலுக்கு ஆதாரத் துணையாய் இருப்பது "உறங்காத கண்மணிகள்' கொண்டுவரும் உளவுத் தரவுகள். எழுத எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை நாம் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அதிசயங்களில் ஒன்று.

ஒரு ராணுவ முகாமை தாக்கி அழிக்கும் முடிவினை தலைமை எடுத்த பின்னர்
முதலில் புறப்படுவது உறங்காத கண்மணிகள். தாக்குதல் தொடங்குவதற்கு
ஓராண்டு, ஆறேழு மாதங்களுக்கு முன்னரே அவர்களது பயணம் தொடங்கும். பெரிய
முகாமென்றால் ஆயிரத்திலிருந்து, ஐந்தாயிரம் ராணுவத்தினர் வரை இருப்பார்கள்.. முட்கம்பி வேலிகள், கண்ணிவெடி வெளிகள், கண்காணிப்புகோபுரங்கள், ஐம்பது மீட்டருக்கு ஒரு காவல் அரண் இவை அனைத் தையும்கடந்துதான் ஓர் இரவுப்பொழுதில் ஊடுருவி உள் நுழைவார்கள்.

உள் நுழைந்தபின் அந்த முகாம் குறித்த முழு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுவார்கள். எங்கெல்லாம் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன, பீரங்கித் தளம் எந்த இடத்தில் இருக்கிறது, மின் இணைப்புகளுக்கான தலைமையிடம் எங்கிருக்கிறது, முன் அரணில் எத்தனை ராணுவத்தினர் நிற்கின்றனர், அவர்கள் என்ன ரக துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என அத்தனை தகவல்களையும் சேகரித்து முடிக்க பல வாரங்கள் ஆகும். எதிரியின் கண்களில் படாமல் அவர்களது நரம்பு மண்டலத்திலேயே குடியிருந்து இத்தனை நாட்கள் எப்படி அவர்களால் இயங்க முடிந்ததென்பதை அறிந்தால் நீங்கள் உங்களையுமறியாமல் வியந்து தலைபணிவீர்கள்.

இரவுகளில்தான் இவர்கள் இயங்குவார்கள். இயங்கவும் முடியும். பகலெல்லாம்
இவர்கள் எங்கு பதுங்கியிருப்பார்கள் தெரியுமா? இலங்கை ராணுவத்தினர்
பயன்படுத்தும் கக்கூஸ் கழிவுகள் வந்திறங்கும் மலக் கிணறுகளில், ஆயிரம்,
ஐந்தாயிரம் ராணுவத்தினர் இருக்கும் மலக்கிணறு பற்றி எழுதவே நாற்றம்,
அசிங்கமாக அருவருக்கிறது. நினைக்க குமட்டு கிறது. அக்கிணறுகளுக்குள்
நாட்கணக்கில், வாரக் கணக்கில் தங்கியிருப்பதென்றால் எந்தளவுக்கு இலட்சிய
உறுதியும், சுயம் அறுத்த அர்ப்பணமும் வேண்டுமென எண்ணிப்பாருங்கள். இதனை
எழுதுகின்றபோதே அந்தக் கண்மணிகள் காவி யங்கள் படைத்த தமிழீழத் திசைநோக்கி
விழுந்து தொழவேண்டும்போல் உணர்வெழுகிறது.

எதிரியின் பாசறைகளது கழிவுக் கிணறுகளில் பகல் முழுதும் நின்று
சாய்ந்துறங்கி இரவெலாம் கண்விழித்துப் படம்பிடிக்கும் இவர்கள், ஊடுருவி
உள்ளிருக்கும் நாட்களில் வாழ்வது வைட்டமின் மாத்திரைகளில். குடல்வற்றி
சுருங்கி ஒட்டிப் போகாதிருக்கவேண்டி பிஸ்கட்டுகளும் ரஸ்க்கும் கணக்கு
பார்த்துச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சிங்களம் பேசும் லாவகமும், கூடவே
சுட்டித்தனமும் கொண்ட கண்மணிகளென்றால் நள்ளிரவுவரை வேவுத் தகவல்கள்
சேகரித்துவிட்டு சிலமணிநேரம் ராணுவத்தினரின் கூடாரங் களிலேயே
படுத்துறங்கி வேடிக்கை செய்வதும் உண்டாம். இயக்கம் இட்ட பணி முழுமையாய்
முடிந்தபின் உள்துழைந்ததுபோல் ஓர் இறுக்கமான இரவில் வெளியேறுவார்கள்.
பிடிபட்டு கொடும் சித்ரவதைகளுக்குப்பின் கொல்லப்படும் துயரங்களும்
நடப்பதுண்டு.

உறங்காத கண்மணிகள் கொண்டுவரும் தரவுகளின் அடிப்படையில் எதிரியின் முகாம்
போலவே ஒன்றை கட்டியெழுப்பி உருவாக்கு வார்கள் புலிகளின் பயிற்சிப்
பிரிவினர். முன்பொரு கட்டுரையில் தமிழீழ வரலாறு தந்த ஈடு இணையற்ற
பயிற்றுவிப்பாளர் கடாஃபி அவர்களை கெஞ்சி மன்றாடி பயிற்சி முகாம் ஒன்றினைப் பார்வையிட்டது பற்றிக் குறிப்பிட்டி ருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். எந்த இடத்தில் என்ற விபரக் குறிப்பை இங்கு தவிர்க்க விரும்புகிறேன்.

பயிற்சி முகாம் நுழைவாயிலில் அவர்கள் பொறித்து வைத்திருந்த இரு வசனங்கள்
மறக்க முடியாதவை.. வாயில் முகப்பில் அவர்கள் எழுதியிருந்தது: ""கடுமையான
பயிற்சி, இலகுவான சண்டை.'' எத்துணை பெரிய உண்மையை மின்னிடும் சொல்லாடல்.
கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை. காட்டுவெளி போன்ற புதர் பரப்பில் துண்டோ, பாயோ இன்றி தரையில் படுத்துறங்க வேண் டும். பாம்பு வரலாம், தேள் கடிக்கலாம், எதுவேண்டுமானாலும் தங்கள் மீது ஊரலாம். நள் ளிரவு 12 மணிக்குத் தான் படுத்திருப் பார்கள். மூன்று மணிக்கு விசில் ஊதப்படும். மின்னல் வேகத்தில் துடித்தெழுந்து ஆயுதத்துடன் முடை நாற்றமெடுக்கும் இடுப்பளவு சாக்கடைக்குள் குதித்து நிலை யெடுக்க வேண்டும். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு அசையாது அப்படியே நிற்கவேண்டும். உடலைவிட மன
உறுதிக்குத்தான் இங்கு பயிற்சி. பயமும், பணிந்து போகும் குணமும், தாழ்வு மனமும் இயல்பிலேயே கொண்டதொரு இனத்தினது மரபணுவில் போர்க் குணம் ஏற்றிப் புடமிடும் பாசறை!

பயிற்சி முகாம் நுழைவாயிலில் பொறித்து வைத்திருந்த பிறிதொரு வசனம்.
""ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.''
உபயம் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார்கள்..

""இந்த என் கையாலேயே எங்கள் செல்வங்களை ஏழு போராளிகளை நான்
கொன்றிருக்கிறேன்'' என்று கடாஃபி சொல்லும்போதே அவரது உடல் அதிர்ந்து
கண்கள் ஒருகணம் துயரத்தில் ஆழ்ந்ததை கவனித் தேன். "உறங்காத கண்மணிகள்'
கொண்டுவரும் தகவல்களின் அடிப்படையில் எதிரி முகாமையே "டம்மி' உருவாக்குவார்களென்று சொன்னே னல்லவா? ஆனால் பயிற்சியோ நிஜ சண்டையாக
இருக்கும்.. புலிகளே இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் சிங்கள
ராணுவம்போல் நிலையெடுப்பார்கள்.

உதாரணமாக, உறங்காத கண்மணிகள் தந்த தகவலின் படி எதிரி முகாமின் முன்
அரங்கில் மூன்று அரண் நிலை களும் அவற்றின் பின் முப்பது ராணுவத்தினர் ஏ.கே.47 துப்பாக்கிகளோடும் நிற்கிறார்களென்றால் அவ்வாறே இங்கும் புலிகள் அதே ஆயுதங்களோடு நின்று சுடுவார் கள். நிஜமாகச் சுடுவார்கள். அதனை எதிர்கொண்டு எப்படி அந்த அரண் நிலைகளை தாக்கி கைப்பற்றுவதென்பது தான் பயிற்சி. மின்னல் மழைபோல் பீறிப் பறந்து வரும் துப்பாக்கி ரவைகளின் தூரம்- வேகம் இவற்றை கணநேரத் தில் கணித்து தலையை தாழ்த்தியும் வலது இடது புறங்களில் வெட்டிச் சரிந்தும் தரையில் பொத்தென விழுந்து படுத்தும் அவர்கள்களமாடும் காட்சியினை இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்குகிற வலு உங்களதும்
எனதும் இதயங்களின் ரத்தக்குழாய்களுக்கு நிச்சயம் இல்லை.

கடாஃபி சொன்னார் : ""என்ட கையாலெ ஏழு போ ராளிகள் செத்தது தாங்கஏலா வேதனைதான். ஆனா அத்தகைய பயிற்சியாலெ நிஜ சண்டையில் எழுநூறு போராளிகளின் உயிரை நாங்கள் பாதுகாக்கிறோம்'' ஆம் கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.

இதுவரை எழுதிவிட்டு இரவு 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலைவரை உறக்கம் வரவில்லை. குவார்ட்டர், பிரியாணி, கைப்பணம் இல்லாமல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக்கூட தொண்டர்கள் இல்லை என்ற அரசியல் களப்பணி காட்சியை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கண்ட எனக்கு உறங்காத கண்மணிகளின் நினைவு உயிரைப் பிழிந்தது. முன்பொருமுறை நான் குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களுக்குச் சென்றவர்களுக்கும், ஜிகாத் போருக்குப் போனவர்களுக்கும் மரணத்திற்குப் பின் பரலோகப் பரிசு இருந்தது.

ஆனால் தமது தமிழ் தலைமுறைகள் ஒருநாள் விடுதலைபெற்று சுயமரியாதையுடன் தமது
தாயகத்தில் வாழ்வார்கள் என்பதைத் தவிர இந்த உறங்காத கண்மணிகளுக்கு வேறென்ன இருந்தது? இத்துணை அர்ப்பணமும், தியாக உணர்வும் கொண்டு வரலாற்றுப் பேரதிசயமாய் எழுந்த ஒரு விடுதலை இயக்கத்தை உலகின் அத்தனைபேரும் சேர்ந்து முற்றுகையிட்டு, வதைத்து தகர்த் திட தமிழ் இனம் என்னபாவம் செய்தது... நாமெல் லாம் கையாலாகாத வர்களாய் பார்த் திருக்கவல்லவா இக் கொடுமை நடந்தேறி யது... என்றெல்லாம் எண்ண மனம் உண்மையிலேயே ஆற்றுப் பெற முடியாமல் தவிக்கிறது.

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பில் இருந்தபோது போராளி ஒருவர் பகிர்ந்து கொண்ட பிறிதொரு பதிவு இதனை படிக்கிற உங்களால் மரணம்வரை மறக்க முடியாத
ஒன்றாய் இருக்கும். பெருமழை பெய்த ஒரு நாள். இடத்தின் பெயர் சரியாக ஞாபகம் இல்லை. கஞ்சிக்குடிச்சி ஆறு என்று நினைக்கிறேன். சிறியதோர் ராணுவ முகாம் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டு திரும்புகிறார்கள் 17 போராளிகள். திரும்பி வரும்வேளை அக்காட்டாற்றில் பெருவெள்ளம். கடக்க முடியாதென்ற நிலை. ஆற்றின் அப்பக்கமாய் இருந்த தம் தளத்திற்கு "வாக்கி-டாக்கி'யில் பேசி கயிறு கொண்டு வரச்செய்து எப்படியோ இருபுறமும்
இழுத்துக் கட்டி அதைப் பிடித்துக்கொண்டே ஆற்றைக் கடக்கிறார்கள். இவர்கள் நட்டாற்றை கடக்கையில் பிற முகாம்களிலிருந்து திரண்டு வந்த சிங்கள ராணுவத்தினர் கயிறை அறுத்துவிட 17 பேரையும் பெருவெள்ளம் அடித்துச் செல்கிறது. ஆற்றங்கரைகளை அறிந்தவர்களுக்குத் தெரியும், கரையோரங்களில் மரமும் இல்லை- செடியும் இல்லை என்பது போன்ற ஒருவகை புதர்கொடி இருப்பது. அப்படியொரு புதர்கொடியை ஒரு போராளி பற்றிப் பிடித்துக்கொள்கிறார். அடுத்த நிமிடம் வெள்ளம் அடித்துவரும் இன்னொரு போராளியும் அதே புதர்கொடியை பிடிக்க எத்தனிக்கிறார். முதலில் அக்கொடியை பிடித்து நின்ற போராளிக்குத்
தெரிகிறது இரண்டு பேரையும் தாங்கும் வலு அந்த புதர்கொடிக்கு நிச்சயம்
இல்லையென்பது. இரண்டாவது வந்த போராளி கொடியைப் பிடிக்க கையை நீட்டவும்
முதற்போராளி, ""நீ பத்திரமா போய் சேர்ந்திடப்பா'' என்று சொல்லிக்கொண்டே
தன் கையை எடுத்து பெருவெள்ளத்தோடு போகிறார். எங்கோ கடலுக்குள் போன அவரது
உடல்கூட கிடைக்கவில்லையாம்.

தமிழர்களே, நண்பர்களே! கேளுங்கள், உரத்துச் சொல்கிறேன். அருட்குருவாகிய நான் அந்த புதர்கொடியினை முதலில் பிடித்தவனாய் நின்றிருந்தால் நிச்சயம் இன்னொருவருக்காய் என் கைகளை எடுத்திருக்கமாட்டேன். நம்மில் பைபிள், குர்ரான், நாயன்மார்கள், ஆழ்வார் களையெல்லாம் படிக்கிற எத்தனைபேர்  இத்தகைய தியாகத்திற்குத் தயாராகியிருப் போம் என ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். கண்கண்ட எங்கள் தெய்வீகச் செல்வங்களே நீர் வாழ்ந்த திசை நோக்கி கரம் கூப்பினோம்.

ஜெகத் கஸ்பாரின் மறக்கமுடியுமா? நக்கீரன் வார இதழிலிருந்து
                                                                       Www.eeladhesam.coM

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/02/pooralikal.jpg          http://www.defence.lk/presentation/Elephant/content/bin/images/large/Body_of_a_LTTE_terrorists_found_in_a_marshy_land.jpg


http://www.thedailyindian.com/wp-content/uploads/2009/03/ltte.jpg               http://www.instablogsimages.com/images/2009/04/06/ltte_forces_web_H4Dvp_3868.jpg
நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!