தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, April 28, 2009

பேசும் காதல் - குறும்படம்

SIGNS - மொழியில்லாத் தருணங்கள் - குறும்படம்
மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்கள் தருகின்ற அனுபவத்தைவிட மிகச்சிறந்த அனுபவங்களை/உணர்வுகளை மூன்று நிமிட குறும்படங்கள் தந்துவிடும்.குறும்படங்களில் மிக முக்கிய அம்சமாக திகழ்வது இசை(சில படங்கள் விதிவிலக்கு)
சொல்லாத சொல்லையும் உணர்த்திவிடும் இசை.காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று மாதிரி.

இன்று பார்த்த குறும்படம் SIGNS.

12 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற அனுபவம் அலாதியானது.தனித்து வாழும் ஒரு இளைஞன்.
காலை எழுந்து அலுவலகம் செல்கிறான்.உணவு இடைவேளையில் அலுவலகம் அருகே ஒரு யுவதியை காண்கிறான்.தன்னை நோக்கி வருபவள் தன்னிடம் பேசப்போகிறாள் என்கிற மகிழ்ச்சியில் பேச எத்தனிக்கும்போது தன்னை கடந்து சென்று அருகிலிருக்கும் குப்பைதொட்டியில் எதையோ வீசிவிட்டு போய்விடுகிறாள். மனம் குன்றிப்போகிறான்.அவள் நினைவில் வீடு வருகிறவனுக்கு தனிமை சுடுகிறது.
மறுநாள் அலுவலகம் செல்லும்போது ரயிலில் இருவர் முத்தமிடுவதை காண்கிறான்.பரிமாற அன்பில்லாத உலகை எண்ணியபடி அலுவலகம் சென்று தன் இருக்கையில் அமர்கிறான்.

அவனது சன்னல் வழியே அருகிலிருக்கும் அலுவலகம் தெரிகிறது. அங்கே நேற்று அவன் பார்த்த அதே பெண் இருக்கிறாள். வேலையில் மும்முரமாக இருப்பவளை ரசித்துக்கொண்டே இருக்கிறான்.இவன் ரசிப்பதை அவள் கண்டுகொள்கிறாள். ஒரு அட்டையில் "புகைப்படம் எடுத்துக்கொள்" என்று எழுதி காண்பிக்கிறாள்.அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உடனே அவள் "சும்மா விளையாடினேன்" என்கிறாள். இவன் முகம் மலர்கிறது. தன் பெயரை எழுதி காண்பிக்கிறாள். இவனும் தன்னுடைய பெயரை எழுதி காண்பிக்கிறான். மெல்ல மெல்ல வளர்கிறது நட்பு. இருவரும் எழுத்தால் பேசிக்கொள்கிறார்கள். இந்த அற்புதமான,விசித்திரமான நேசத்தால் சுழல்கிறது அவனது உலகம். ஒருநாள் "சந்திக்க விரும்புகிறாயா" என்று எழுதி சன்னல் வழியே காண்பிக்கிறான். அவள் இருக்கை காலியாக இருக்கிறது. எங்கு சென்றாள் என்கிற கவலையால் துடிதுடிக்கிறான்.மறுநாள் சோர்வுடன் அலுவலகம் வந்தமர்கிறான். அவனது முகத்தில் திடீரென்று வெயிலடிக்கிறது.என்னவென்று சன்னல்வழியே எட்டிப்பார்க்கிறான். அங்கே அவள் நிற்கிறாள்.
"தான் பதவி உயர்வு பெற்ற செய்தியை எழுதிக்காண்பிக்கிறாள். இதை நாம் கொண்டாட வேண்டுமென்கிறான் இவன். அவளும் சரி என்க,தயக்கத்தோடு "சந்திக்க விரும்புகிறாயா" என்கிறான்.சந்தோஷத்தோடு அவளும் சரி என்கிறாள். இருவரும் சந்திக்கும் ஆவலில் ஓடோடி வருகிறார்கள்.

எதிரெதிரே இருவரும் நிற்கிறார்கள்.அவன் பேச முற்படும்போது,பேசாதே என்று சைகை செய்கிறாள் அவள்.
கண்களில் குழப்பத்தோடு அவன் பரிதவித்து நிற்கும்போது தான் கொண்டு வந்திருக்கும் அட்டையை காண்பிக்கிறாள்,அதில் ஒரு இதயத்தின் படம் வரையப்பட்டு "Hi"
என்று எழுதப்பட்டிருக்கிறது. இருவரும் புன்னகைக்கிறார்கள். மனதை வருடும் இசையோடு முடிகிறது படம்.

இந்த குறும்படத்தின் மிக முக்கிய ஜீவனாக திகழ்வது இசை.அவளைக்காணாமல் அவன் தவிக்கின்ற நேரத்தில் சோகமாகும் இசை,அவளுக்காக அவன் ஓடுகின்ற போது வேகமெடுக்கிறது.குறிப்பாக 8ம் நிமிடத்திற்கு பிறகு இசையோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.அடுத்து, கதாநாயகனின் முகபாவங்கள்.ஒவ்வொரு காட்சியிலும் மனதை அள்ளிப்போகிற‌து.க‌ண்க‌ளாலே இருவ‌ரும் பேசிக்கொள்வ‌து க‌விதை.
மொழியில்லா தருணங்களை மிக அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.

மூன்று ம‌ணிநேர‌ம் செல‌விட்டு நான்கு குத்துபாட‌ல்க‌ள்,நாற்ப‌து ச‌ண்டைக‌ள்,நாலாயிர‌ம் "ப‌ஞ்ச்" ட‌ய‌லாக்குக‌ள் பார்ப்ப‌த‌ற்கு ப‌தில் இதைப்போல் நான்கு ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌லாம் :)

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.youtube.com/watch?v=uy0HNWto0UYநன்றி
http://www.nilaraseeganonline.com/

கவிஞர் தாமரை அவர்களின் அனல் பேச்சு,வீடியோ படம்

http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/11/tamarai.jpg

சீமானுக்குப் பிறகு, நெஞ்சுரமும், நேர்மையோடும் தமிழர்களை அணிதிரட்டப் பேசுகிறார் கவிஞர் தாமரை... அவசியம் காண வேண்டிய காணொளி.

பாகம் 1 - http://www.youtube.com/watch?v=NVs2QMcJX6k&feature=related


பாகம் 2 - http://www.youtube.com/watch?v=Y2MsBOH0iE8&feature=related


பாகம் 3 - http://www.youtube.com/watch?v=RPNLU7HGqZs&feature=related'இறுதி யுத்தம்' இவ் ஒளி நாடாவானது ஸ்ரீலிலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினை கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும்; பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்து தமிழ் நாட்டிலில் இருந்து துரத்தியடிக்கும் நோக்கத்தினை பிரச்சாரப்படுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பு வெளியிட்ட ஒளி நாடா ஆகும் இதனை இங்கு காணலாம்!.


youtube

இவன்தான் தமிழன் ...!

http://1.bp.blogspot.com/_IxvmHD8N-OM/Ry9H3PjzqkI/AAAAAAAAAtc/mQORRkPgkoI/S240/15.jpgபிரபாகரனுக்கு இன்னும் 20 வருடம் போராடக்கூடிய சக்தி இருக்கிறது: - பிரசார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ்.

பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. சைதாப்பேட்டை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் இராஜேந்திரன், மத்திய சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முகமது அலி ஜின்னா, வட சென்னையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தா.பாண்டியன் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்சென்னையில் அடங்கிய சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

அப்போது அவர், தெர்ர்ந்து பேசியதாவது:-

"இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு சவப்பெட்டிகளை செய்து அனுப்புகிறது. அங்கே கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இலங்கை தமிழர்களை கொல்கிறார்கள்.

தமிழர்களை வேகமாக கொல்லுங்கள் என்று சொல்வதற்காக தான் இந்திய மந்திரியும், அதிகாரிகளும் இலங்கைக்கு சென்றிருக்கின்றனர். ஏழைகளை ஒழித்து விட்டால் வறுமை இருக்காது என்று சொல்லும் கூட்டத்தை போல தமிழர்களை ஒழித்து விட்டால் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறார்கள்.

அமெரிக்கா கூட இன்றும், போரை நிறுத்து என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் இனவெறி ஆட்சியை நடத்தி வரும் ராஜபக்சே யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லை.

பிரபாகரனை பிடித்து விடுவார்கள், பிரபாகரனை கொன்று விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது போல் பல முறை சொல்லி பிரபாகரனை சாகடித்து இருக்கின்றனர்.

பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது.

பிரபாகரனை தீவிரவாதி என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். பகத்சிங்கை கூட அப்படித்தான் சொன்னார்கள்.

சுபாஸ் சந்திரபோசை அப்படித்தான் சொன்னார்கள். விடுதலைக்காக போராடக்கூடியவர்களை அப்படித்தான் சொல்வார்கள்" என்று பேசினார்.


http://www.seithy.com/breifNews.php?newsID=13972&category=TamilNews


http://1.bp.blogspot.com/_hktMDmQ5JI4/SY1s_VaQpPI/AAAAAAAAAPk/zBTG3j5GQK8/s400/anpucholai_6.jpg

பட்டினி ஒரு போர் ஆயுதம்http://3.bp.blogspot.com/_H1qlq_5efE4/SKvsk8Ned8I/AAAAAAAAAA0/DWdfq9nencE/S600/537977306_small.jpg
வன்னியில் உள்ள மக்களை மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரசிடம் முன்வைப்பதற்கு அனைத்துலக சமூகம் தவறிவிட்டது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கும் விடுதலைப் புலிகள், பட்டினி போடுதலை தமிழர்களுக்கு எதிரான ஒரு போர் ஆயுதமாக அரசாங்கம் பயன்படுத்துவதாகவும், இது ஜெனீவா உடன்படிக்கையை மீறும் ஒரு செயற்பாடு எனவும் தெரிவித்திருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்னர் வன்னியைச் சென்றடைந்திருக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளைத் தாங்கிய கப்பலை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துள்ளது. சிறிலங்கா அதிகாரிகளின் அனுமதிக்காக இந்தக் கப்பல் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள 12 சதுர கிலோ மீட்டர் பகுதியில் சுமார் 1,25,000 மக்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 2 ஆம் நாளுக்குப் பின்னர் இவர்களுக்கான உணவு விநியோகங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பட்டினிச் சாவைத் தவிர்ப்பதற்காக உடனடியாக உலர் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என ஏப்ரல் 11 ஆம் நாள் உள்ளுர் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை இதுவரையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

வன்னியில் உள்ள மக்கள் நாளாந்தம் ஒருவேளை உணவை மட்டுமே கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாக உண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளையில், பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதலை சிறிலங்கா படையினர் தொடங்கிய பின்னர் ஒருவேளை உணவைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே வன்னியில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் உள்ளனர்.--

காசே தான் கடவுளடா

சென்னை: சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதால் இம்முறை மருத்துவப் படிப்பில் சேர மாணவ, மாணவியர் இடையே கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

கடந்த பல வருடங்களாகவே பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இடையே பிஇ, பிடெக் ஆகிய படிப்புகளுக்கு, அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் சேரவே கடும் போட்டி நிலவி வந்தது.

மருத்துவம், பொறியியல் இரண்டும் கிடைத்தால் மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு ஐடி கல்வி பயிலவே மாணவர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால், இப்போது ஐடி துறையில் இருக்கும் வேலைகளுக்கே உத்தரவாதம் இல்லாத நிலை. புதிய வேலைவாய்ப்புகள் குதிரைக் கொம்பாகிவிட்டன. சம்பளக் குறைப்புகள் வேறு.

இந் நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு 1.5 லட்சம் விண்ணப்பங்களை வினியோகிக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால், பொறியியல் படிப்பில் சேருவதை விட மருத்துவப் படிப்புக்கே இம்முறை அதிக மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவர் என்று தெரிகிறது.

தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கும், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் தரப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி சிறுபான்மை கல்லூரியாகும். அதில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீடும், 50 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் இடங்கள் நிரப்பப்படும்.

மற்ற தனியார் மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீடும், 35 சதவீதம் தனியார் ஒதுக்கீட்டின் கீழும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் ஏதும் திறக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு இருந்த அதே அளவு சீட்கள் தான் இந்த ஆண்டும் உள்ளன.

கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு 12,000 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இம்முறை மாணவர்கள் அதிகமாக விண்ணப்பிப்பர் என்று தெரியவந்துள்ளதால் 16,000 வரை விண்ணப்பங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டதால் பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவுள்ளது.

நன்றி: http://thatstamil.oneindia.in/news/2009/04/25/tn-more-students-will-opt-for-mbbs-than.html

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!