தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, May 15, 2009

தெருத் தெருவாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

ஆயிரத்திற்கு அதிகமானோர் பலி! தெருத் தெருவாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் - திலீபன்http://www.youtube.com/watch?v=sYRwF05pq28


வன்னியில் இன்று நடப்பது இறுதித் தாக்குதல்--இதுவரை பல ஆயிரம் மக்கள் பலி

வன்னிக் களமுனையில் இன்று அதிகாலை முதல் மூண்டுள்ள மோதல்களால் வன்னிப்பகுதி பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அதிகாலை முதல் படைநடவடிக்கைகளை படைத்தரப்பு ஆரம்பித்துள்ளது. 6க்கும் அதிகமான முனைகளில் விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையே தற்சமயம் வரை கடும் மோதல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகக்குறைந்தது இதுவரை பல ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், பல மடங்குகளால் மக்கள் படுகாயமடைந்திருப்பதாகவும் எமக்கு தெரியவந்துள்ளது.
அதிகாலை முதல் மக்கள் பதுங்குகுழிக்குள்ளேயே பதுங்கியுள்ளனர். வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு மோசமான எறிகணை விமானத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொஸ்பரஸ் வகையினைச் சேர்ந்த ரசாயன ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் பல பகுதிகளும் தீப்பற்றி எரிந்த வண்ணம் இருப்பதாகவும் செய்தியார் தெரிவிக்கிறார்.

யுத்த களத்தில் இரு தரப்புகளுக்கிடையேயும் மோதல்கள் இடம்பெறுவதாகவும் இரு தரப்புகளுக்கும் இடைப்பட்ட ஆகக் கூடிய தூரம் 300 மீற்றருக்கும் குறைவாகவே இருப்பதாகவும் களமுனைத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே இலங்கை ராணுவத்தின் 58 மற்றும் 59வது படைப்பிரிவுகள் இணைந்து கொள்வதற்கு சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரமே இருப்பதாக கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையை இறுதிக் காலக்கெடுவாக விதித்திருப்பதுடன் பொதுமக்களை தாங்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் மீட்க முடியும் எனவும் படைத்தரப்பு தெரிவித்திருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் வழமைக்கு மாறாக கடும் சமர் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவே தெரிய வருகின்றது. 6க்கும் அதிகமான முனைகளில் படையினரின் முன்னேற்ற முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் எனினும் படைத்தரப்பு உச்ச ஆயுத பிரயோகத்தினை மேற்கொண்டு முன்னேற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியிலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் விடுதலைப் புலிகளும் சிக்குண்டுள்ள நிலையில் உரிழப்புப் பேரவலம் நினைத்துப் பார்;க்க முடியாத அளவுக்கு எல்லைத் தாண்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள், உயிரிழந்தவர் எவர் எஞ்சியிருப்பவர் எவர் என கண்டறிய முடியாத வகையில் இப்பகுதியில் விமானத் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பொஸ்பரஸ் ரக வெடி பொருட்களால் அப்பகுதியின் பல பகுதிகள் எரியுண்ட வண்ணமே இருப்பதாகவும் பெரும் புகார் மண்டலமே அந்தப் பகுதிகளில் நிலவுவதாகவும் அங்கிருந்து எமக்கு கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன.

எனினும் விடுதலைப் புலிகள் எதிர்ச்சமர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் தினங்களில் பாரியளவில் சொல்லிக் கொள்ளத்தக்க அளவில் எந்தவொரு செய்தியும் வெளிவரலாம் எனவே இருதரப்பும் எதிர்பார்க்கின்றன.

பிரித்தானியா கடும் எச்சரிக்கை:சிறிலங்கா மீது போர்க் குற்ற வழக்கு தொடர்வோம்


போர்க் குற்ற வழக்கு தொடர்வோம்: சிறிலங்கா அரசுக்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை


இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதை மகிந்த ராஜபக்ச அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்நாட்டின் மீது போர்க் குற்ற வழக்குத் தொடரப்படும் என்று பிரித்தானிய அரசு எச்சரித்திருக்கிறது.

கடந்த 4 மாதங்களில் 6 ஆயிரத்து 500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பாக கடந்த 39 நாட்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் உணர்வை மதித்து இலங்கையில் போரை நிறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரித்தானிய நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடி விவாதித்தது.

விவாதத்தில் பேசிய கிங்ஸ்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான எட்வர்ட் டேவி, அப்பாவி தமிழர்களை இரக்கமின்றி கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் பில் ராம்மேல், இலங்கையில் இனப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசு உறுதியாக உள்ளது. போரை நிறுத்தாவிட்டால் அங்கு நடைபெறும் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். இதற்கு பிரித்தானிய அரசு முழு ஆதரவு அளிக்கும். பிரித்தானிய அரசின் இந்த நிலைப்பாட்டை சிறிலங்கா அரசிடம் ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டோம் என்றார்.

இலங்கையில் மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதி மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது மனித உயிரிழப்பை ஏற்படுத்தும்.

போரின்போது மனித உயிரிழப்புகளை இயன்றவரை குறைக்க வேண்டும் என்ற அனைத்துலக போர் விதிகளுக்கு எதிரான வகையிலேயே இத்தாக்குதல் அமைந்திருக்கிறது.

இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை உறுதி செய்வதற்காக அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை, மருத்துவமனைகள் தகர்ப்பு போன்றவை குறித்து உடனடியாக விசாரணை நடத்துவதை பிரித்தானிய அரசு முழுமையாக ஆதரிக்கிறது.

சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனைத்துலக விதிகளைப் பின்பற்றி அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

தூதரக உறவை முறிக்க வேண்டும்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய உறுப்பினர்களில் பலர் சிறிலங்கா அரசுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குறுகிய நிலப்பரப்புக்குள் உள்ள தமிழ் மக்கள் மீது நாள்தோறும் குண்டுமழை பொழியப்படுகிறது. இது மிகவும் பயங்கரமானது. கொசோவா நாட்டில் இனப்படுகொலை நடந்தபோது நாம் தலையிட்டோம். ஈராக்கில் தலையிட்டோம். இலங்கை இனப்படுகொலையை மட்டும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான கெயித் வாஸ் வலியுறுத்தினார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுத் தலைவரும், தொழிற் கட்சியின் உறுப்பினருமான அன்ட்ரு டிஸ்மோர், இனப்படுகொலையைக் கைவிட மறுக்கும் சிறிலங்கா அரசுடனான அனைத்து உறவுகளையும் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக முறித்துக்கொண்டு அந்நாட்டை தனிமைப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு அந்நாட்டு அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தும்படி சீனாவை வலியுறுத்த வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கோரினர். விவாதத்தில் கலந்துகொண்ட அனைவரும் சிறிலங்கா மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்தனர்.

http://www.puthinam.com/full.php?2b1Qs1e0dkk6l0ecEF8X3b4n8DY4d3c2i3cc2IuZ2d43aRX3b035Ot4e


கொளத்தூர் மணி:"ஜெயலலிதா நடிப்புக்காக தமிழீழத்தை உச்சரிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு கூட கருணாநிதி உச்சரிக்கவில்லையே":

"ஜெயலலிதா நடிப்புக்காக தமிழீழத்தை உச்சரிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு கூட கருணாநிதி உச்சரிக்கவில்லையே": கொளத்தூர் மணி


"ஜெயலலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அதே நடிப்புக்காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே! எனவேதான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம்" என்று பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்தவிகடன்' வார இதழுக்கு கொளத்தூர் மணி வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

''தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசியதால் தானே நீங்கள் கைதானீர்கள்?''

'' 'தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. ஆதரவாகச் செயல்படுவதுதான் குற்றம்' என்று முன்பு வைகோ, நெடுமாறன் ஆகியோர் பொடாவில் கைது செய்யப்பட்டபோதே உச்சநீதிமன்றம் தெளிவாகத் தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், மறுபடியும் மறுபடியும் வெறும் பேச்சுக்காகக் கைது செய்யப்படுகிறோம். வைகோவின் பொடா வழக்கு விடுதலைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்த, செயலாற்றிய அதே கலைஞர்தான் இப்போது மூன்று பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறார். ஒரே சட்டத்தை ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியாக மாறினால் வேறு மாதிரியும் கையாள்கிறார் கலைஞர்!''

''நீங்கள் தேர்தலில் பங்கேற்காத அமைப்பாக இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியைக் காயப்படுத்தும் சிடியை வெளியிட்டதால்தானே உங்கள் மீது கோபம் வந்தது?''

''நாங்கள் தேர்தலில் பங்கேற்பது இல்லை. ஆனால், அரசியலைப் புறந்தள்ள முடியாது. நீங்கள் சொல்வது மாதிரி அது காங்கிரசுக்கு எதிரான சிடி என்பதைவிட ஈழத் தமிழனுக்கு ஆதரவான சிடி. ஒரு திட்டமிட்ட இன அழித்தொழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்படுகிறது. சிங்கள இராணுவம் தமிழர்களை விதவிதமான குண்டுகளால் கொலை செய்கிறது. பட்டினி போடுகிறது. கொட்டாங்குச்சிகளைக் கையில் ஏந்திய படி ஒரு கவளம் சோற்றுக்காகவும், ஒரு குவளைத் தண்ணீருக்காகவும் தமிழர்கள் கையேந்தி முண்டியடிக்கிறார்கள். இந்த உண்மைகளை எடுத்துச் சொல்வதில் என்ன பிழை? அதுவும் நாங்கள் தயாரித்திருந்த சிடி-யில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளைத்தான் தொகுத்திருந்தோம். அதையே கூடாது என்கிறார்கள். ஒரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது எப்படி ஜனநாயக உரிமையோ, அதுபோல இன்ன கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதும் ஜனநாயக உரிமைதான். ஆனால், கலைஞர் அரசு இந்த ஜனநாயகத்தை அடியோடு மறுக்கிறது.''

''அதற்காக, கோவையில் இராணுவ லொறிகளைத் தாக்கியதையும், ஆயுதங்களை எரித்ததையும் எப்படி நியாயப்படுத்துவீர்கள்?''

''கோவைச் சம்பவத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது. அது ஒட்டுமொத்த தமிழர் கொந்தளிப்பின் ஒரு துளி வெளிப்பாடு. உண்மையில், கோவையில் அன்று எங்கள் இயக்கத் தோழர்களின் எண்ணிக்கை 30 பேரோ, 40 பேரோதான். விஷயத்தைக் கேள்விப்பட்டு சாலையில் நின்றிருந்தவர்களும், பேருந்துகளில் அமர்ந்திருந்தவர்களும், கிராமத்து மக்களும் தோழர்களுடன் இணைந்துகொண்டனர். அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது தமிழர்களுக்குக் கோபம் இருக்கிறது.''

''திராவிடர் கழகம் ஜெயலலிதாவை ஆதரிக்கிறது என்ற காரணத்தைச் சொல்லித்தான் பெரியார் திராவிடர் கழகமே உதய மானது. ஆனால், இப்போது ஈழப் பிரச்னையில் கருணாநிதியை விமர்சிப்பது என்ற நிலையோடு சேர்ந்து நீங்களே ஜெயலலிதாவை ஆதரிப்பது சரியா..?''

''தேர்தல் அரசியல் வழியாக அமைகிற எந்த அரசும் உழைக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தராது என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். ஆனால், நடப்பில் தேர்தல் அரசியல் என்ற சீரழிந்த வடிவம் மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. இதில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. ஒப்பீட்டு அளவில் குறைந்த கேடுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அப்படி ஈழப் பிரச்னையில் கருணாநிதியை விடக் குறைந்த கேடுள்ளவராக ஜெயலலிதாவை நினைக்கிறோம். ஜெயலலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அதே நடிப்புக்காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே! எனவேதான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம். செயல் உத்தியை மட்டுமே மாற்றிக்கொண்டு இருக்கிறோம். போர் உத்தி அப்படியேதான் இருக்கிறது.''http://www.puthinam.com/full.php?2b1SmYe0dkd7l0ecAI4V3b4n4HT4d3d1h2cc2FrV2d43dXT3b037Lo3e

விஜய், ரஜினி கால் தூசுக்கு சமம்...


விஜய் ரசிகர்களுக்கும், வெறியர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்...

ரஜினி தளபதி என்பதால், இளைய தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் விஜய் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது, ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசங்கள் கீழே..

* ரஜினி தன் ஸ்டைல், திறமையால் நடிக்க வந்தார்..
* விஜய் அவரது அப்பாவின் மூலம் பின் வாசல் வழியாக வந்தவர்..


* ரஜினியின் ஆரம்ப கால படங்களான அபூர்வ ராகங்கள், பைரவி, மூன்றுமுடுச்சுஉள்பட பல படங்களில் ரஜினியின் அபார நடிப்பை உலகறியும்..(இத்தனைக்கும்அப்பொ
ழுது அவருக்கு சரியாக தமிழ் பேச வராது)..
* விஜயின் ஆரம்ப கால படங்களான நாளைய தீர்ப்பு, விஸ்ணு, ரசிகன் போன்ற படங்களில் நாம் பார்த்தது மாமியாருக்கு சோப்பு போடும் மிட் நைட் மசாலாக்களை தான்.. (சங்கவியே சாட்சி)


* ரஜினி பாலசந்தர், மகேந்திரன், பாரதி ராஜா போன்ற அபார இயக்குனர்களிடம் பாடம் கற்றவர்..
* விஜய்க்கு பாடம் கற்பித்தவர் அவரது தந்தை, அது என்ன பாடம் என்பதை சொல்ல தேவையில்லை..


* 1980 களில் பில்லாவை தொடர்ந்து, முரட்டு காளை, போக்கிரி ராஜா , தனிகாட்டு ராஜா , நான் மஹான் அல்ல , புதுக்கவிதை , மூன்று முகம் , படிக்காதவன், தீ , வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், Mr. பரத் , மாவீரன் போன்ற ஹிட் களை கொடுத்துதான் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்..
* பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி தவிர வேறு எந்த ஹிட் படங்களையும் விஜய் கொடுக்கவில்லை.. மற்ற சில, ஹிட் ஆக்கப் பட்டனவே தவிர, உண்மையான ஹிட் அல்ல என்பது அப்படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்..


* ரஜினி அப்போதைய சூப்பர் ஸ்டார் ஆனா புரட்சித் தலைவரை காப்பி அடிக்கவில்லை, (அவர் வழி தனி வழி)
* விஜய் முதலில் சங்கவி ரசிகர்களை குறி வைத்தார், பின் ரஜினி ரசிகர்களை இப்பொழுது புரட்சித் தலைவரை..


* ரஜினியோ, ரஜினியின் ஆட்களோ மீடியாவை மிரட்டியதாகவும், அவர் சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு மீடியா மன்னிப்பு கேட்டதாகவோ ஒரு செய்தியும் இல்லை.
* ஆனால் குமுதம், விஜய் டிவி யின் லொள்ளு சபா, மாலை மலர், தின மணி போன்றவை விஜய் மற்றும் அவரது தந்தையாரால் மிரட்டப்பட்டது உலகறியும்..* ரஜினி அமைதியானவர்
* விஜய் அப்படி நடிப்பவர்..


* எப்பொழுதும் ஊர்க் 'குருவி' - 'கழுகு' ஆக முடியாது..

உண்மையாய்சொல்லுங்கள் நடனத்தை தவிர விஜய் நடிப்பிலும், J.K. ரித்திஸ் நடிப்பிலும்என்ன பெரிய வித்தியாசம்???

ரஜினி கால் தூசுக்கு சமம்...

விஜய் முதலில் சங்கவி ரசிகர்களை குறி வைத்தார்..

பின் சென்தூரபான்டியில் விஜயகாந்த் புகழ் பாடினார்.....

பின்னர் பகவதியில் ரஜினி ரசிகர்களை குறி வைத்தார்....
அழகிய தமிழ் மகனில் அவன் தான் BOSS என்று சொன்னான்...

ஆனால் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயின் உண்மை சுரூபம் அறிந்து நேர்மையான நம்ம தல அஜித்க்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சார்....

இதனால் tension ஆன விஜய் இப்ப வில்லுவில் புரட்சித் தலைவர் M.G.R புகழ் பாடுகிறார், அடுத்த படத்துக்கு வேட்டைக்காரன் பேர் வச்சி இருக்கான்...

நேரத்துக்கு நேரம் தன் சுயலாபத்துக்காக ஆட்கள் மாற்றும் இந்த பச்சோந்தி எல்லாம் ஒரு மனுசனா....
Jaisham

gme.jaisham@gmail.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!