தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ ஒரு பாட்டு mp3
ஏதோ ஒரு பாட்டு mp3 | ||
Found at bee mp3 search engine |
Pages
Sunday, August 30, 2009
♥ இனவெறி கொல்....! குறும்படம் ♥
strangers- short பிலிம்
ஸ்டிரேஞ்சர்ஸ் (2004) இயக்கம்-எரேஸ் டாட்மோர் , கை நாட்டிவ்
____________________________________________________
படத்தின் மொத்த நீளம் -7.11 நிமிடங்கள்
படத்தின் காட்சிகள் நீளம் - 6.15 நிமிடங்கள்.
ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத சக்திவாய்ந்த விடயத்தை இந்த 6.15 நிமிட
இஸ்ரேலிய குறும்படம் சொல்லிவிடும் என்பதில் ஐயமில்லை.
பெர்லினில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பாலஸ்தீனிய அரபு இனத்தவனும் , ஒரு இஸ்ரேலிய யூத இனத்தவனும் மெட்ரோ ரயிலில் பயணிக்க நேரிடுகிறது.
தங்கள் நாட்டில் நடக்கும் அரசியல் கொலைகளால் ஒருவர் மேல் மற்றொருவர் துவேஷம் கொண்டிருந்தாலும்.
அடுத்த ஸ்டேஷனில் ரயிலில் ஏறிய உள்ளூர்வாசிகளான "skinheads" என்னும்
இனவெறியர்களிடமிருந்து தப்பிக்க அரசியல்,இனம்,மதம் மறந்து மனிதம் மட்டுமே குறிக்கோள். என ஒருவருக்கொருவர் எப்படி உதவுகின்றனர்?
உயிர் பயம் எப்படி ஒற்றுமையை தோற்றுவிக்கின்றது?
என்பதே படம் சொல்லும் பாடம்.
கண்டிப்பாய் பாருங்கள் :-
நண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்
_______________________________________________________________
strangers (2004)
This is a short film, Strangers (2004), about the racial divide between Arabs and Jews and what brings them together. Like in the short film, i look forward to a new day when we all can transcend from the unfortunate divide to face a common enemy.
This is an interesting short movie. Its an ideal opportunity for a Arab and a Jews guy to unite. It really makes a sense. This should be and example for Arabs and Jews to identify their differences.
* Colour, 35 mm
* Israel, USA, 2003, 7 min
* Section: Forum of Independents
* Director: Guy Nattiv,Erez Tadmor
* Screenplay: Guy Native, Erez Tadmor
* Dir. of Photography: Rami Agami
* Music: Eyal Glazner, Eyal Kazav
* Designer: Jerry Shay
* Editor: Yuval Orr
* Producer: Guy Native, Erez Tadmor
* Production: Fox Searchlight Pictures
Cast
Guy Eliayahoo, Ooky Etinger, Guy Loel, Gil Rimer, Sami Samir
Synopsis
Night. Paris. Two strangers in the underground. One is Jewish, the other Moslem. The only thing that connects them is their mutual fear.
About the director
Erez Tadmor and Guy Nattiv are young writers and directors from Israel. They both graduated from film school in Tel Aviv. Strangers was entered in the short film competition at the 2004 Sundance festival and in the Panorama section at the 2004 Berlinale.
http://geethappriyan.blogspot.com/2009/08/blog-post_25.html#links
♥ பிரசுரிக்கப்படாத படக்கள் , புலிகளின் புகைப்படங்கள் ♥
http://www.muthalmanithan.com/2009/08/blog-post_1128.html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ நானும் அரசியல்வாதி தான்...! ♥
ஒரே கிளிக்கில் கணினியை க்ளீன் செய்வது எப்படி?
கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க
http://tamilbazaar.blogspot.com/2009/08/blog-post_28.html
நடிகர் விஜய் காங்கிரசில் சேர்ந்தால் அவரது படங்களைப் புறக்கணிப்போம்: தமிழ் படைப்பாளிகள் கழகம்
நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். என கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அப்படியொரு முடிவு எடுத்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.
மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு சிறீலங்காவின் தற்காப்புக்கு உலங்குவானூர்திகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார். உலங்குவானூர்திகள் எப்படி தற்பாதுகாப்புக்குப் பயன்படுத்தலாம் என்பது எமக்கு விளங்கவில்லை.
சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) "பீஷ்மா' ரக டாங்கிகளை இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளபாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 2007 யூன் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி இந்தியா புலிகளை அழிக்க சிங்கள பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதாகச் சொன்னார்.
இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி 17 லட்சம் ரூபாவுக்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார்.
இந்தியா இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய காங்கிரஸ் திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.
இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைலை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத்தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் இராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட் படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
http://tamilan24.blogspot.com/2009/08/blog-post_7543.html
ஏ.. பாத்துக்க… பாத்துக்க… நானும் அரசியல்வாதியாகிட்டேன்!
அருமையான கணினி Morphing
http://suryakannan.blogspot.com/2009/08/morphing.html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும் வல்லரசுகள் ♥
புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும் வல்லரசுகள்
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்-பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது.
இதுகுறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்களையோ வாங்கி, போரில் வெற்றி பெறவில்லை- இது அந்த நாட்டு எம்.பிக்களுக்குத் தெரியாது போல இருக்கிறதென்று கிண்டலடித்திருந்தனர் அவர்கள்.
1996ம் ஆண்டு பிரித்தானியா பத்து 30மி.மீ பீரங்கிகளையும், அதற்கான 6,000 ரவைகளையும் வழங்கியிருந்தது. இவை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்தப்படுவதற்காக வாங்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை அரசு வெளிப்படையாக ஆயுதங்களை வாங்கவில்லை. ஆனால் பின்னர் 30மி.மீ பீரங்கிகளுக்கான ரவைகளைக் வாங்க முற்பட்டபோது- அவற்றை விற்க பிரித்தானியா மறுத்து விட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பிரித்தானிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினாலும், அரசபடைத் தளபதிகளாலும் நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஏளனப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேவேளை, இப்படிப்பட்டதொரு சூழலில் பிரித்தானியாவிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அதாவது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக அமைந்த- கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணியின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு பிரித்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு இப்படியொரு தகவலை வெளியிட்ட காலகட்டமானது- இது உண்மையா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆயுத உதவியின்றியே போரை நடத்தி வெற்றி பெற்றதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில் தான் இந்தத் தகவலும் வெளியாகியிருக்கிறது.
பிரித்தானியா தம்மிடம் அனுபவங்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று பெருமைப்படும் விதத்தில் இலங்கையின் கருத்துகள் அமையவில்லை. புலிகளுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைத் தர மறுத்த பிரித்தானியா, இன்று போரின் அனுபவங்களை பெறுவதற்குத் தம்மிடம் கெஞ்சுகிறதென்று- அந்த நாட்டைக் கொச்சைப்படுத்தும் விதத்திலேயே இலங்கைப் படையதிகாரிகளின் கருத்துகள் அமைந்துள்ளன.
இலங்கைப் படைகள் புலிகளுக்கெதிரான போரில் பெற்ற வெற்றி முக்கியமானதொன்று தான். அதற்காக அந்த வெற்றிக்கு இலங்கை மட்டும் உரிமைகொண்டாட முடியாது. அத்தோடு இது உலகத்தில் நிகழ்ந்திராத ஒன்றெனக் கூறிப் பெருமை கொள்ளவும் முடியாது. உலகில் எங்குமே- வல்லரசுகளால் கூட, நிகழ்த்த முடியாத அற்புதத்தை நிகழ்த்தியிருப்பதாக இலங்கைப் படைகள் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், 1950 இல் மலேசியாவில் விடுதலை கோரிய ஆயுதப்போராட்டத்தை பிரித்தானியா முழுமையாக நசுக்கியிருந்தது. பஞ்சாபில் சிக்கியர்களும், காஷ்மீரில் முஸ்லிம்களும், கிழக்கு மாநிலங்களில் இடதுசாரி மாவோயிஸ்டுகளும் தனிநாடு அமைப்பதற்கு ஆயுதப் போராட்டங்களை நடத்தியபோதும் இந்திய அரசு அவற்றை தோற்கடித்திருந்தது. இப்படிப் பல உதாரணங்கள் இப்போது வந்து விட்டன.
இந்த வரிசையில் மற்றொன்றாகவே இலங்கைப் படைகளின் வெற்றியும் அமைந்திருக்கிறதே தவிர- எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர்- முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- இந்தப் போரில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்ள, உலகமே தம்மிடம் வரிசையாக வந்து நிற்கப் போவதாகக் கூறியிருந்தார்.
புலிகள் இயக்கம் உலகில் மிகவும் வல்லமை பெற்றதொரு இராணுவ அமைப்பாக- முப்படைகளையும், மரபுசார் படையணிகளையும் கொண்டதாக இருந்தது உண்மை. அப்படிப்பட்டதொரு இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது இலங்கைப் படைகளுக்கு முக்கியமானதொரு வெற்றி தான். அதுபோலவே இந்தப் போரின் மூலம் சிறந்த அனுபவங்களை அவர்கள் பெற்றிருப்பதும் மறுக்க முடியாதது.
சில நாட்களுக்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மோதறையில் உள்ள கவசப் படையணியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்- இலங்கை இராணுவத்தின் கிளர்ச்சி முறியடிப்பு போருபாயங்களை அறிந்து கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
எனவே வெளிநாடுகள் இராணுவங்களுக்கு கிளிர்ச்சி முறியடிப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு, முல்லைத்தீவில் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இங்கு பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், முல்லைத்தீவில் பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவரே, பின்னர் அதை மறுத்தார். முல்லைத்தீவில் பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கப்படாது தென்பகுதியில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.
புலிகளைத் தோற்கடித்தது பற்றி அனுபவங்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் படைகள் ஆசைப்படுவது முக்கியமானதொரு விடயமே. ஆனால் இந்தப் பெருமை இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமே புலிகள் தான்.
ஒருவரின் குணத்தை அவரது நண்பன் யார் என்பதைக் கொண்டு முடிவு செய்யலாம். அதுபோன்றே ஒரு படையின் பலத்தை அறிய அந்தப் படையின் எதிரியைக் கொண்டே மதிப்பிடலாம் என்பார்கள்.
இந்த வகையில் புலிகளின் பலம்- திறன்- ஆற்றல் ஆகியனவே, இந்த முறியடிப்புப் போருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் போரியல் வளர்ச்சி பற்றி, அவர்களின் திறன் பற்றி சர்வதேச இராணுவ விற்பன்னர்கள் பலரும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று நேரில் அறிந்திருந்தனர்.
இப்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்ட விதம் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர். அதேவேளை, இலங்கைப் படைகளின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றி அறிந்து கொள்ள பிரித்தானியா ஆசைப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருப்பது தான் ஆச்சரியம்.
புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் தான் என்பதை மறைக்கவே இலங்கை அரசு இப்படியான தகவல்களை வெளியிடுவது போலத் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் புலிகளைத் தோற்கடிக்க சர்வதேசம் உதவ முன்வரவில்லை என்று கூறியது அரசாங்கம்.
பின்னர் சில ஆசிய நாடுகளைத் தவிர வேறு மேற்குநாடுகள் உதவவில்லை என்றும் கூறியது.
இப்போது பிரித்தானிய ஆயுதங்களின் மூலம் புலிகளைத் தோற்கடிக்கவில்லை என்கிறது.
இந்தியாவின் உதவியைப் பெறவில்லை என்கிறது.
இப்படிப் பல உண்மைகளை மறைத்து தமது இராணுவ வல்லமையை- வெற்றியை மிகைப்படுத்திக் கொள்வதில் இலங்கை அரசும், படைகளும் முயற்சி செய்து வருகின்றன.
இலங்கைக் கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றிய அறிந்து கொள்ள பிரித்தானியா விருப்பம் வெளியிட்டது உண்மையானால்- அதற்கான பெருமையும் புலிகளுக்கேயுரியது.
கடற்புலிகளின் கடல் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது- நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படை அறிமுகப்படுத்திய விசேட படகுப் படையணி (Special Boat Squadron-SBS) மற்றும் துரித நடவடிக்கைப் படகு அணி (Rapid Action Boat Squadron -RABS) ஆகியனவாகும். இலங்கைக் கடற்படையில் விசேட படகுப் படையணி 1993இல் அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஈழப்போர் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போதும் இது செயற்பட்டது. அதேவேளை துரித நடவடிக்கைப் படகு அணி தான் நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
இந்தப் படையணிகளின் உருவாக்கமே புலிகளின் தோல்விக்குக் காரணம் என்று கூற முடியாது. இந்தப் படையணிகளுக்கு வழங்கப்பட்ட படகுகள், ஆயுதங்கள் தான் முக்கிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.
கடற்படையின் சுடுபல சக்தியை அதிகரிக்கும் வகையிலும், கடற்கரும்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு ஏற்ற வகையிலுமே இந்தத் தந்திரோபாயத்தைக் கடற்படை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போது கடற்படை அழிவுகளை சந்தித்ததற்கான காரணங்களை ஆராய்ந்த போது- ஒற்றை இயந்திரம் கொண்ட சண்டைப் படகுகளும், குறைந்த சூட்டு வலுவும் தான் தமது பலவீனம் என்று கண்டறிந்தது.
புலிகள் தமது பாரிய சண்டைப்படகுகளில் 250 குதிரைவலு கொண்ட நான்கு இயந்திரங்களைப் பொருத்தியிருப்பர். சிறிய சண்டைப் படகுளில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு இயந்திரம் பழுதானால் கூட மற்றதைப் பயன்படுத்தித் தப்புவதற்கு இது வாய்ப்பானது. இதன் அடிப்படையில் தான் கடற்படை தமது தந்திரோபாயத்தை மாற்றியமைத்தது.
இதற்கான ஆய்வுகளின் போது புலிகளின் தாக்குதல் படகுகளே முன்மாதிரிகளாக எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்று வகையான படகுகள் உருவாக்கப்பட்டன. இதில் பெரியது- 17 மீற்றர் நீளமானது. இது கட்டளை மற்றும் சண்டைப் படகுக்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. இரண்டரை மீற்றருக்கு எழும்பும் அலைகளையும் சமாளித்துப் பயணம் செய்யக் கூடியது இந்தப் படகு. இரண்டாவது வகைப் படகு 14மீற்றர் நீளம் கொண்டது.
அடுத்தது- 23அடி நீளத்தை கொண்டது. இதற்குப் பெயர் அரோ (Arrow) இது 1.25 மீற்றர் உயருமான அலைகளிலும் லாவகமாகப் பயணம் செய்யக் கூடியது. 14மீற்றர் மற்றும் 17மீற்றர் நீளமான கரையோர ரோந்துப் படகுகளில் 250 குதிரை வலுக்கொண்ட நான்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 37 நொட்ஸ் வேகத்தில் இவை பயணம் செய்யும் இந்தப் படகுகளில் 23மி.மீ இரட்டைக்குழல் பீரங்கி (23 mm Double-barrel gun) ஒன்று, சிங்கப்பூர் தயாரிப்பான 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் (CIS 40 mm Automatic Grenade Launcher) ஒன்று, 12.7மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டன.
23அடி நீளம் கொண்ட 'அரோ' தாக்குதல் படகுகளில் 250 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 35 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இதில் 23மி.மீ பீரங்கி அல்லது 12.7மி.மீ துப்பாக்கி மற்றும் 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் என்பன பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கடற்புலிகளின் செறிவான சுடுபல சக்தி கடற்படையால் தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தந்திரோபாயம் கடற்புலிகளிடம் இருந்து கடற்படை கற்றுக் கொண்டது தான். அரோ வகைப் படகுகள் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் கடற்படைகளின் பாவனையில் உள்ளது. ஆனால் அவற்றில் ஆகக் கூடியது 12.7மி.மீ துப்பாக்கியைத் தான் பொருத்தியிருக்கிறார்கள். இந்தப் படகுகளில் 20மி.மீ, 23மி.மீ பீரங்கிகளையும ;பொருத்தி கடற்சமர்களை நடத்த முடியும் என்று இலங்கைக் கடற்படைக்குக் காட்டிக் கொடுத்ததே புலிகள் தான். இப்போது அந்த உத்தியைத் தான் பிரித்தானியா கேட்பதாகக் கூறிப் பெருமைப்படுகிறது இலங்கை அரசு.
அதைவிடக் கடற்படை வடிவமைத்த அரோ வகைப் படகுகள் கூடக் கடற்புலிகளின் படகுகளை மாதிரியாக்கக் கொண்டே வடிவமைக்கப்பட்டவை.
கடற்புலிகளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைக் கடற்படையின் படகுகள், தந்திரோபாயங்களைப் பற்றி அறிந்துகொள்ள பிரித்தானியா விரும்புகிறதென்றால் அது இலங்கைக் கடற்படைக்குரிய பெருமையல்ல.
புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் போரியல் நுட்பங்களை, தந்திரோபாயங்களை- கற்றுக் கொள்ள வெளிநாடுகள் விரும்புகின்றன என்றால்- அதற்காக பெருமைப்படக் கூடியது இலங்கை அரசு அல்ல. புலிகள் இயக்கமே.
நன்றி, Mayura
http://vannionline.blogspot.com/2009/08/blog-post_29.html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ புலிகள் அழிப்பின் பின்னணி.....! ♥
புலிகள் அழிப்பின் பின்னணியில்
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகப் பெரும் பின்னடைவுக்குள் தள்ளி, அவர்களை இலங்கைப் படை கள் ஒடுக்கியமை என்பது இப்போது நடந்து முடிந்துவிட்ட விடயம்.
அந்தப் பின்புலத்தில் சூத்திரதாரியாகச் செயற்பட்ட தரப்புகள் பற்றிய உண்மைகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசுப் படைகளின் யுத்த தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாண்டின் முதல் நாலரை மாத காலப்பகுதியில் அரசுப் படைகளுடன் யுத்தமுனையை அண்டிய பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து இரா ணுவ நடவடிக்கைகளின் வெற்றி பற்றிய தீரச் செய்திகளை சர்வதேச மயப்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் நிதின் எ.கோகுலே.
என்.டி. ரி.வி. சார்பில் தொலைக்காட்சிச் செய்தியாளராக இலங் கையின் விமானப்படை ஹெலிகளிலும், இராணுவ டாங்கிகளிலும் அடிக்கடிப் பயணம் செய்து, இலங்கை இராணுவ வெற்றிகள் பற்றிய செய்திகளை இந்தியப் பக் கத்தில் பரபரப்பாகப் பரப்பிய பெருமை அவருக்கு உண்டு.
இந்த வகையில் இலங்கை இந்தியப் படை அதிகாரி கள், இராஜதந்திரிகள் போன்ற தரப்பினருடன் அண்மைக் காலத்தில் மிக நெருக்கமாக மனம்விட்டுப் பழகும் வாய்ப் புக் கிடைத்த ஒரு சில ஊடகவியலாளர்களுள் அவரும் ஒருவர் என்பது மறுக்கப்பட முடியாததாகும்.
அதேசமயம், இந்த யுத்த காலத்தை ஒட்டிய தமது அனுபவங்கள் குறித்து, அந்த யுத்தம் முடிந்த கையோடு சூட்டோடு சூடாக அவர் எழுதி வெளியிடும் புத்தகத் தில் உள்ள தகவல்கள், கருத்துக்கள் என்பவையும் இலகு வில் புறந்தள்ளி, ஒதுக்கப்பட்டு, மறுக்கப்படக்கூடி யவை அல்ல என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
இலங்கை இராணுவத்தின் இந்த யுத்த வெற்றியின் பிரதான சூத்திரதாரியாக இவ்விடயத்தில் அமசடக்காகச் செயற்பட்ட இந்தியாவை அடையாளம் காட்டுகின்றார் கோகுலே.
யுத்தத்தில் வென்றதான அறிவிப்பை விடுத்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்னர், "இந்தியாவின் யுத்தத்தையே நாம் முன்னெடுத்து வெற்றியீட்டி னோம்!'' எனக் கூறிய தகவலை இப்போது கோகுலே வெளி யிடும் தகவலோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால் உண்மைகளை நாமாகவே புரிந்துகொள்ள முடியும்.
"இலங்கைக்குத் தாக்குதல் ஆயுதம் எதனையும் வழங்கவில்லை'' என்று இந்திய அரசு வெளியில் சாட்டுக்குக் கூறிக்கொண்டே, இலங்கைக்கு அம்சடக்கமாக உதவி, புலிகளை அழிப்பதைத் தந்திரோபாயமாக உறுதிசெய்துகொண்டது என்பதை கோகுலே தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தி நிற்கின்றார்.
ஆயுதங்களை ஏற்றிவந்த புலிகளின் கப்பல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களையும், அக்கப்பல்கள் தங்கிநின்ற அமைவிடங்களையும், ஏனைய துல்லியமான விவரங்களையும் இந்திய அரசு சத்தம் சந்தடியின்றி வழங்கியது.
இத்தகவல்கள் மூலம் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கைக் கடற்படை அழிப்பதை இந்தியா உறுதிசெய்து கொண்டது.
இதுவே, புலிகளின் அழிவுக்குப் பிரதான காரணம் என்பதை கோகுலே அம்பலப்படுத்துகின்றார்.
தவிரவும்,
புலிகளுடனான யுத்தத்துக்குப் பயன்படுத்த வென எம்.ஐ.17 ரக ஹெலிக்கொப்டர்கள் ஐந்தை, இந்தியா இலங்கைக்குக் கொடுத்து உதவியது. தன்னுடைய பங்களிப்பை மறைப்பதற்காக இந்த ஹெலிக்கொப்டர்கள் இலங்கை விமானப்படையின் குறியீட்டுடனேயே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இந்தியா வழங்கியது என்ற உண்மையையும் கோகுலே பகிரங்கப்படுத்துகின்றார்.
ஆக, இந்தியா புதுடில்லி வெளிப்படையாகத் தன்னைப் பார்வையாளராகக் காட்டிக்கொண்டே புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீவிர பங்காளியாகச் செயற்பட்டு தனது இலக்கை அடைந்திருக்கின்றது என்ற உண்மை இப்போது மெல்ல மெல்ல வெளிப்பட்டுக் கசியத் தொடங்கிவிட்டது.
யுத்தம் தீவிரம் பெற்றிருந்த சமயத்திலேயே ஈழத் தமிழர் தரப்புக்கு எதிரான புதுடில்லியின் இந்த சதித் திட்டம் பற்றிய தகவல்கள் பகிரங்கமாகின.
எனினும்,
புதுடில்லி அரசுத் தலைமையும், அதற்குக் காவடி தூக்கிய தமிழகத் தலைமைகளும் அப்போது அதனை அடியோடு மறுத்து வந்தன. ஆனால் இப்போது உண்மைகள் மெல்ல அம்பலமாகி வருகின்றன.
தமது பதவிக் கதிரைகளைத் தக்கவைக்கும் சுயநலத் துக்காகப் புதுடில்லியின் பாதரட்சைகளை அபிஷேகம் செய்து பூஜித்து வந்த வருகின்ற தமிழகத் தலைமைகள் இனி என்ன செய்யப் போகின்றன?
இனி என்ன சமாதானம் கூறப்போகின்றன?
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி களில் தமது பேரம் பேசும் வலுவை இழந்து, தென்னிலங்கை தூக்கிப் போடும் பிச்சையை இரந்து அளிக்கும் சலுகையை தலைவணங்கி, சிரம் தாழ்த்தித் தாங்கிப் பிடிக்கும் கேவலத்துக்கு பற்றுக்கோடற்ற நிலைக்கு ஈழத் தமிழினம் இன்று தள்ளப்பட்டு நிற்கின்றது.
ஈழத் தமிழினத்தை இத்தகைய இழிநிலைக்குத் தள்ளும் இராணுவச் செயற்பாடுகளுக்குத் துணைபோன புதுடில்லியும், அந்தப் புதுடில்லி அரசுத் தலைமைக்கு கூஜா தூக்கி அதனைப் பலப்படுத்திய தமிழகக் கேவலங்களும் இன்று பரிதாப நிலையில் பரிகசிக்கப்படும் கட்டத்தில் அவலப்படும் தமிழினத்துக்குக் கூறப்போகும் பதில் என்ன?
ஈழத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட கலைஞரும் அவரது ஆட்சி சகாக்களான உடன் பிறப்புக்களும், இலங்கையில் வாழும் தமது உடன்பிறவா சகோதரங்களான ஈழத் தமிழினத்துக்குக் கூறப்போகும் விடை என்ன ?
உதயன்
http://tamilthesiyam.blogspot.com/2009/08/blog-post_25.html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர் ♥
புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர் |
விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது. தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது. கடைசி நேரத் தாக்குதலில் இவ்விரு விமானங்களும் சிங்கள இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை பொட்டுஅம்மான், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் தீபன் ஆகியோர் முறையே பார்வையிடுகின்றனர், மற்றும் பொட்டுஅம்மானையும், தமிழ்ச்செல்வன் அவர்களையும் விமானிகள் ஏற்றி பறப்பில் ஈடுபட்டுள்ளதையும் காணலாம். |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ ‘பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்!’ - சிவாஜிலிங்கம் எம்பி ♥
'பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்!' - சிவாஜிலிங்கம் எம்பி
கோவை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, 'இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்… சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!" என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார்.
இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம்,
எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்.
அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம்.
பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.
நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான்.
மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.
பிரபாகரன் குறித்து உண்மைகளைக் கண்டறிய இந்திய புலனாய்வுக் குழு இலங்கை செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் பல்வேறு விமர்சனங்களுக்கிடையிலும், தமிழுணர்வாளர்கள் நெடுமாறன், வைகோ, தொல் திருமாவளவன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இறுதிக் கட்டப் போரை அவரே தலைமையேற்று நடத்துவார் என்றும் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.
http://www.envazhi.com/?p=11069
புலிகளின் புதிய முழக்கம் வன்னியிலிருந்து தமிழ்மக்களுக்காக ஒலிவடிவம்
ஓர் குறுகிய இடைவெளிக்குப் பின்பு உங்களை ஓர் ஒலிப்பேழயின் வழியாக சந்திப்பதையிட்டு எமது தலைவனின் வழியில் உருவான தமிழன் என்ற ரீதியில் சற்று ஆறுதல் அடைகின்றேன்.
http://www.youtube.com/watch?v=h_qEcatVxBI
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள் ♥
ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்
இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.
இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15398
ராஜபக்சேவின் ராஜா வேஷம்
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை ஒரு மன்னனாக சித்தரித்துத் திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் அரசு தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆரியரட்ண ஆதுகல ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிங்கள மன்னனான இரண்டாம் இராஜசிங்க மன்னனின் கதா பாத்திரதை மையப்படுத்தியே இத்திரைப்படம் உருவாக்கப்படவுள்ளதாம்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புத்தி கீர்த்தி சோ இத்திரைப்படத்தின் தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,இத்திரைப்படம் 90 கோடியில் தயாரிக்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15396
இலங்கையில் பத்திரிக்கையாளர்கள் காணாமல் போகிறார்கள்:மர்மம் என்ன?
இலங்கையில் ஊடகவியலாளர்கள் அடிக்கடி காணாமல் போகின்றார்கள் என்று எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
காணாமல் போன ஊடகவியலாளர்களைத் தேடும் பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முக்கிய பணியாகக் கொண்டு காணாமல்போன ஊடகவியலாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கு அவர்கள் கொடூரமான எந்த வழிமுறைகளையும் கையாளத் தயங்காதவர்கள் என்றும் அமைப்பு கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அனைத்துலக ஊடக சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்காவில் காணாமல் போன ஊடகவியலார்கள் தொடர்பில் நீதி கிடைக்காத தன்மையும் வேறுபாடு காட்டப்படும் நிலையும் நீடிப்பதாகத் தெரிவித்திருந்தது என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
'தினக்குரல்', 'வலம்புரி' நாளேடுகளின் செய்தியாளரான சுப்பிரமணியன் இராமச்சந்திரன் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து காணாமல் போனமை குறித்தும் 'உதயன்' நாளேட்டின் துணை ஆசிரியர் வடிவேல் நிமலராஜா 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து காணாமல் போனமை குறித்தும் தனது அறிக்கையில் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, காணாமல் போனவர்களின் விதி குறித்த கவலையையும் அவர்களுக்காக காத்திருக்கும் வலியையும் உறவுகளுடன் சேர்ந்து தாமும் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15395
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நன்றி....!
Locate IP Address on Map
http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
சற்று முன்...!
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- "தினத்தந்தி " தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)
- "தினமணி" (1)
- "தினமணி" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)
- chat (2)
- firefox (2)
- shortcuts" (1)
- sms (2)
- video (2)
- அரசியல் (12)
- ஆனந்த விகடன் (1)
- இணைய நூல் (3)
- இணைய முகவரிகள் (2)
- இமெயில் (2)
- இமெயில் குழு (2)
- இலங்கை (21)
- ஈழ வரலாறு புத்தகம் (1)
- எல்லாம் (1)
- என் பக்கம் (9)
- கணினி தொழில் நுட்பம் (32)
- கதை (6)
- கலக்கல் டான்ஸ் வீடியோ (1)
- கவிதை (10)
- குர்து இனத்தவர் கடிதம் (1)
- குறும் படம் (2)
- சிரிப்பு (10)
- சினிமா (9)
- சீமான் (11)
- சு.பொ. அகத்தியலிங்கம் (3)
- தமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)
- தமிழச்சி (5)
- தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)
- தமிழீழ வீடியோ பாடல் (2)
- தமிழீழம் (53)
- தமிழ் 99 (2)
- தமிழ் ஈழம் (11)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- தலைவர் பிரபாகரன் தொடர் (12)
- தன்னம்பிக்கை (1)
- தாமரை (4)
- தியாகு (4)
- திருமாவளவன் (1)
- தினத்தந்தி (2)
- தினமணி (55)
- நகைச்சுவை (13)
- நக்கீரன் (2)
- படங்கள் (18)
- பாரதிராஜா (2)
- பிரபாகரன் (15)
- பெரியார் (9)
- பேச்சு (1)
- பேட்டி (4)
- பொதுவுடைமை (5)
- மனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)
- மூட நம்பிக்கை (8)
- மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)
- ராஜபக்சே (1)
- விடுதலைப் புலிகள் (14)
- விஜய் (5)
- வீடியோ (14)
- வீடியோ படம் (85)
- வைரமுத்து (1)
- ஜி இமெயில் (2)
- ஜி மெயில் (2)
- ஜெகத் கஸ்பார் (1)
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
-
▼
2009
(874)
-
▼
August
(110)
-
▼
Aug 30
(8)
- ♥ இனவெறி கொல்....! குறும்படம் ♥
- ♥ பிரசுரிக்கப்படாத படக்கள் , புலிகளின் புகைப்படங்க...
- ♥ நானும் அரசியல்வாதி தான்...! ♥
- ♥ புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும்...
- ♥ புலிகள் அழிப்பின் பின்னணி.....! ♥
- ♥ புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும்...
- ♥ ‘பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்!’ - சிவாஜிலிங்கம...
- ♥ சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்க...
-
▼
Aug 30
(8)
-
▼
August
(110)