கோமிய (மூத்திர) குளிர்பானம் விரைவில் அறிமுகம்
எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு?
சோற்றுக் கற்றாழை, சுவையான பழங்கள், மற்றும் பசு கோமியம் (சிறுநீர்) சேர்க்கப்பட்ட குளிர் பானம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
பசு கோமியம் (மாட்டின் மூத்திரம்) தெய்வீகமானதாக இந்துக்களால் கருதப்படுகிறதாம். கிருமிகளைக் கொல்லும் சக்தி உள்ளதாம். கோமியத்துடன் மூலிகைகள், பழங்களைக் கலந்து அதை குளிர்பானமாக விற்பனை செய்யும் முயற்சியில் ஒரு நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக கான்பூரில் பசு கோமிய குளிர்பான ஆலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் ராமனுஜ் மிஸ்ரா கூறியதாவது.
பசு கோமிய குளிர் பானம் தயாரிக்கும் முறை உறுதியாகிவிட்டது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் சோற்றுக் கற்றாழை உட் பட பல மூலிகைகளும், பழங்களும் இதில் சேர்க் கப்படஉள்ளன.. உடலுக்குக் கேடு விளைவிக்கும் பல்வேறு ரசாயனப் பொருள்கள் மேல்நாட்டு பானங்களில் இருக்கும்; ஆனால் அவை இதில் இருக்காது. 2 முதல் 3 மாதங்கள் வரை ஆய்வு நடத்தப் பட்டு அதன்பின் குளிர் பானம் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கூறினார்.
---------------- நன்றி: "விடுதலை" 8-3-2009
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com