Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, October 14, 2009

♥ திருமாவளனை போட்டுத் தள்ளு ....! ♥





அதிர்வுகள் கண்டு அஞ்சாது நக்கீரன்


-கோவி.லெனின்

ன் இந்த கொலைவெறி? என்றுதான் சில இணையதளங்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. ஈழத்தமிழர்களின் அவல நிலைமையைத் தமிழகத்து ஊடகங்கள் சரிவர எடுத்துச் சொல்வதில்லை என்று இணைய இதழ்கள் வருத்தப்படுவதில் நியாயமிருக்கிறது.



ஆனால், ஈழத்தமிழர்களின் அவலத்தையும் அந்த அவலத்திற்குக் காரணமான ராஜபக்சே அரசின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி எழுதினால், இதெல்லாம் வியாபாரம் என்று விமர்சிப்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.



சில இணையதளங்கள் இத்தகைய (அ) நியாய விமர்சனத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. அதில் குறிப்பாக, அதிர்வு என்கிற இணையதளம் நக்கீரன் வெளியிடும் ஈழச் செய்திகள் அனைத்தையும் வியாபாரம் என்ற ஒரே வார்த்தையால் அளந்து கொண்டிருக்கிறது.



அதிர்வு போன்ற அறிவுஜீவிகள் தங்கள் கையில் ரெடிமேடாக வைத்திருக்கும் விமர்சன அளவுகோலினால் நக்கீரனை ஒருபோதும் அளக்க முடியாது. ஏனெனில் நக்கீரன் என்பது, தமிழகத் தமிழர்களாலும் உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் இதயத்தால் அளக்கப்படும் தன்மான இதழ். தமிழர்களின் குரல்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் தனது செயல்களைத் தொடர்ந்த காலத்திலிருந்து, இறுதியுத்தம் எனப்படும் கொடுங்கோலன் ராஜபக்சேவின் இன அழிப்புப் போருக்குப் பிறகும் ஈழத்தமிழர்களின் நிலையினை எழுதி வரும் ஒரே இதழ் நக்கீரன்தான் என்பதை நேற்றைய தொலைத் தொடர்பு வளர்ச்சியில் முளைத்த அதிர்வுகள் அறியுமோ இல்லையோ, சற்றொப்ப கடந்த கால் நூற்றாண்டாய் உலகத் தமிழர்கள் அறிவார்கள்.



தமிழகத்தில் நிலவும் அக்கிரமங்களை-அநியாயங்களை தோலுரிப்பதுபோலவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உரிமைகளுக்கான ஆதரவுக் குரலையும் தொடர்ந்து எழுப்பி வருகிறது நக்கீரன். தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வலியையும், அந்த வலியைத் தாங்கிக்கொண்டு போராடும் அவர்களின் வலிமையையும் இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளைவிடவும் விரிவாகவும் உண்மையாகவும் வெளியிடுவது நக்கீரன்தான் என்பது புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் உறவுகளின் நற்சான்றிதழ்.



ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும் அதன் வலிமையையும் அங்குள்ள செய்தித்தொடர்புகளின் வாயிலாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததுடன், சிங்கள அரசின் பாசிசத்தையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தியது நக்கீரன்.

ஈழத்தின் உண்மை நிலவரம் வெளியாகாதபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் தனது வலையில் விழவைப்பதில் ஏறத்தாழ முழு வெற்றி பெற்ற இலங்கைத் துணைத்தூதர் அம்சாவின் எச்சில் விஸ்கிக்கும் விருந்துக்கும் மொய்ப் பணத்திற்கும் நாக்கைத் தொங்கப்போடாத பத்திரிகை நக்கீரன் என்பதை ஊரறியும் நாடறியும் உலகறியும்.


தன் வலையில் சிக்கவைக்க முடியாத ஆத்திரத்தின் வெளிப்பாடாகத்தான் நக்கீரனுக்கு மிரட்டல் நோட்டீஸ் அனு/ப்பினார் அம்சா. அதை கசச்கி குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு, வழக்கைத் தொடுத்துப்பார் அம்சா என சவால் விட்டது நக்கீரன். அம்சா அதன்பிறகு வாலாட்டவில்லை.

ஈழப்பிரச்சினையில் நக்கீரன் இதய சுத்தியோடு விளங்குவதை அம்சாவுக்கே புரியவைத்தாலும் அதிர்வுகள் போன்ற அறிவுஜீவிகளுக்குப் புரிய வைக்கமுடியாது. ஏனென்றால், அறிவுஜீவிகள் என்ற அடையாளத்துடன் முன்முடிவுகளை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப எழுதும் சுயமோகிகளை திருத்தமுடியாது. அது நக்கீரனின் வேலையும் அல்ல. மக்களின் உணர்வினை வெளிப்படுத்துவதே நக்கீரனின் பணி. (தமிழகத்திலிருந்த அம்சா வெளிநாட்டுக்கு மாற்றலாகிப் போய்விட்டார். அம்சாவின் பணியைத் தொடர அதிர்வுகள் முயற்சிக்கிறது போலும்.)



இறுதி யுத்தத்திற்குப்பிறகு, கடவுளும் தங்களை கைவிட்டுவிட்டாரோ எனக் கலங்கி நின்ற தமிழினத்திற்கு நம்பிக்கை மருந்தாக இருந்ததும் இருப்பதும் நக்கீரன் செய்திகள்தான். தமிழர்களின் உணர்வை ஒருங்கிணைக்கும் ஓர் இயக்கமாகவே நக்கீரனின் செய்திகளும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. இன்றும் தாய்த்தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலிப்பதற்கு உந்து சக்தியாக இருக்கிறது நக்கீரன் என்பதை உண்மையான உணர்வாளர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். அந்த உந்து சக்தியின் உச்சபட்சம்தான், அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் மறக்கமுடியுமா தொடர் கட்டுரை.

ஈழச்சிக்கலின் ஆணிவேரைத் தொட்டு, அதன் போராட்ட வரலாற்றையும், ஈழமக்களின் தியாகத்தையும் தன் சொந்த அனுபவத்தின் துணைகொண்டும், தொடர்ச்சியான தேடல்களின் வாயிலாகவும் தொடர்ந்து எழுதி வருகிறார். விடுதலைப் போராட்டத்திற்கான நியாயத்தையும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த விடுதலை உணர்வைப் புரிந்துகொள்ளாவிட்டாலும் யூதர்களைப்போல் ஆண்டுகள் கடந்தேனும் ஈழத்தமிழர்களின் விடுதலை இலட்சியம் நிறைவேறியே தீரும் என்பதையும் உரக்கச் சொல்கிறார் கஸ்பர். இந்த உண்மையும் உள்ளார்ந்த உணர்வும் அதிர்வுகளுக்கு பரபரப்பாகத் தெரிகிறது.

உலகத் தமிழர்கள் இன்று உன்னிப்பாகப் படிக்கும் தொடர்களில் முதலிடத்தில் இருப்பது ஜெகத் கஸ்பரின் மறக்க முடியுமா என்பதால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமையினால் அதிர்ந்துபோய் தொடர் தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை ஆயுதம்தான், பரபரப்பு-வியாபாரம்.

நக்கீரன் இலவச இதழ் அல்ல. அடித்தட்டு -நடுத்தர மக்கள் தங்கள் உழைப்பில் கிடைத்த காசில் வாங்கிப் படிக்கும் பத்திரிகை. அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் செய்திகளை அச்சமின்றித் தருகின்ற ஒரே இதழாக நக்கீரன் இருப்பதால்தான் தொடர்ந்து ஆதரவு தந்துவருகிறார்கள்.

தங்கள் உணர்வையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கும் செய்திகளை வெளியிடும் நக்கீரனை விரும்பி வாங்குகிறார்கள் தமிழர்கள். இதை வியாபாரம் எனச் சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், ஈழப்பிரச்சினையை வெகுஜனங்களிடம் கொண்டு செல்லக்கூடாது என நினைக்கும் மனஅழுத்தம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அல்லது, இந்தப் பிரச்சினையை வைத்து உலகளவில் தாங்கள் செய்து வரும் வியாபாரத்திற்கு பாதகம் வந்துவிடுமோ என்கிற பதற்ற மனநிலை கொண்ட பெரும்வியாபாரிகளாக இருக்க வேண்டும்.

ஈழப்பிரச்சனை தொடர்பான செய்திகள் நக்கீரன் இணையதளத்தில் கட்டணமின்றி வெளியிடப்படுகிறது. அதை மற்ற இணையதளங்களில் எடுத்து வெளியிடுகின்றன. மக்களுக்குச் செய்திகள் போய்ச் சேரட்டும் என்பதால் நக்கீரன் இதனை வரவேற்கவே செய்கிறது. நக்கீரனின் செய்திகளை எடுத்துப் போட்டு விளம்பரம் தேடிக் கொள்பவர்கள்தான் நக்கீரன் மீது வியாபாரப் பழி சுமத்துகிறார்கள்.

மன அரிப்பின் வெளிப்பாடாக வரும் விமர்சனங்களால் நக்கீரன் தன் கடமையிலிருந்து விலகாது. நக்கீரனுக்கு போலி அறிவுஜீவிகளின் மதிப்பீடு இரண்டாம்பட்சம்தான். பொதுமக்களின் நம்பிக்கையே முதன்மையானது. அவர்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும். அதிர்பவர்கள் அதிர்ந்துகொண்டே இருக்கட்டும்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18325


சஞ்சனாதேவிஎனக்கு முதற் கடிதம் எழுதியது 1996 ஜனவரி மாதத்தில் என்று நினைக் கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து சந்திரிகா குமாரதுங்கே ஏவிய சிங்களப் படைகளால் அடித்து விரட்டப்பட்டு வன்னி அக்கராயன் குளம் பகுதியில் அகதி யாகிய நாட்களில் அவர் எழுதிய கடிதம் அது. ""எல்லோரது வாழ்விலும் மரணம் வரும், ஆனால் ஈழத்தில் இன்று தமிழ் மக்க ளாகிய நாங்கள் மரணத்திற்குள் வாழ்க்கை யை தேடிக்கொண்டிருக்கிறோம்'' -என்ற மறக்க முடியாத வரலாற்று வரிகளைப் பதித்தது இவரது அந்த முதற்கடிதம்தான். ""காடுகளைச் சீர் செய்து நாடுகளையும் நாகரிகங்களையும் ஆக்கினான் அக்கால மனிதன். இங்கே நாங் களோ வாழ்வின் கடைசி மிச்சங்களைப் பாது காக்கவேண்டி நாட்டைவிட்டு காட்டுக்குள் ஓடி வந்திருக்கிறோம். இங்கே ராணுவ குண்டுவீச்சு, ஆயு தங்களின் தாக்குதல் மட்டுமல்ல- பாம்பு, பூரான், நுளம்பு, அனோபிலிஸ்கர் என அத்தனையும் சேர்ந்து எம்மீது யுத்தம் நடத்துகின்றன'' என்றும் எழுதியிருந்தார் அவர்.

அப்போதெல்லாம் ஈழத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சராசரி நூறு கடிதங்களேனும் வரும். மல்லாவியில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த மனிதஉரிமைப் போராளி அருட்தந்தை கருண ரட்ணம் அவர்கள் வன்னிப்பகுதியின் கடிதங்களையெல்லாம் வாங்கிச் சேர்த்து தனது தொடர்புகளூடாக கொழும்பு நகருக்குக் கொண்டுவந்து அங்கிருந்து எமக்கு அஞ்சல் செய்வார். தமிழீழ மனித உரிமை ஆணையத்தை நிறுவி அரும்பணி செய்த என் மனதின் தேவதூதன் இந்த அருட்தந்தை கருணரட்ணம் அவர்களை ராஜபக்சே- கோத்தபய்யா கொலைகாரக் கூட்டம் மூன்றாண்டுகளுக்கு முன் படுகொலை செய்தது. தமிழர் இன அழித்தலை பதிவு செய்ய எவருமே இருந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் ராஜபக்சே கொலைக் கூட்டம் அறிவு நுட்பத்துடன் இயங்கியுள்ளது புலனாகிறது.

1995 முதல் 2001-ம் ஆண்டுவரை அதிபர் சந்திரிகா குமாரதுங்கே வன்னிப்பகுதியின் பத்து லட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து, அடிப்படை வாழ்வாதாரப் பொருட்களை தடைசெய்து கொடுமையானதோர் பொருளாதார யுத்தம் நடத்திய காலத்தில் அருட்தந்தை கருணரட்ணம், எமது வேரித்தாஸ் வானொலி, புலம்பெயர் தமிழர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், ரி.ஆர்.ரி வானொலி, கனடிய தமிழ் வானொலிகள் யாவும் இணைந்து இயக்கமொன்று வளர்த்து வன்னியில் 25,000-ற்கும் மேலான குழந்தைகளை, சிறு பிள்ளைகளை பட்டினிச் சாவினின்று காத்த காலம் எனது வாழ்வின் மிகவும் அர்த்தமுள்ள காலம்.

காலையில் ஓர் நகரம், மாலையில் பிறிதொரு நாடு என நாள் மறந்து, கண்ணுறக்கக் கவலை யின்றி வாரம் சராசரி பத்தாயிரம் கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்து பட்டினிச்சாவு எதிர்சமர் நடத்திய நாட்கள் உண்மையிலேயே கடவுள் அருகிருந்த, கடவுளுக்கு அருகிலிருந்த நாட்கள்.

அருட்தந்தை கருணரட்ணம் அவர்களுக்கு அப்போது வன்னியில் பக்கபலமாயும் உற்ற துணையாவும் இருந்தவர் ம.செ.பேதுருப்பிள்ளை. கல்வெட்டுப் போன்ற கையெழுத்துடன் வாரம் தவறாது ஒரு கடிதமேனும் இவரிடமிருந்து எனக்கு வந்துவிடும். பிந்தைய நாட்களில் ""அன்பு மகன் ஜெகத்...'' என்றே வாஞ்சையுடன் எழுதுவார். அதற்கும் பின்னர் ஜெகத் என உரிமையுடன் தொடங்கியிருப்பார். அவ்வாறு விளித்து அவர் எழுதிய முதற் கடிதத்தில் அதற்கான காரணத்தை யும் குறிப்பிட்டிருந்தார். ""எனது ஒரே மகன் 22-ம் வயதில் இறக்கும்வரை எனக்குத் தோழனாகவே இருந்தார். மூளாதீ போல் என்னுள் கனன்று கொண்டிருக்கும் என் மகனது நினைப்பும் அன் பெனும் நெருப்பும் உங்கள் கடிதங்களைப் படிக்கும் போதும் குரலை கேட்கும்போதும் பற்றிக்கொள்கிறது. பயப்படவேண்டாம், எனது துன்பியலை உங்கள் மீது சுமத்தமாட்டேன்'' என்ற அவரது வரிகள் அந்நாட்களில் என்னை நெகிழச் செய்தவை.

ம.செ.பேதுருப்பிள்ளையின் சொந்த ஊர் யாழ்ப்பாணம் பருத்தித் துறை. வன்னிக்கு அகதியாய் இடம் பெயர்ந்து, ""காட்டு வாழ்க்கை கடின மாகத்தான் இருக்கிறது. ஆயினும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நான் கொடுக்க வேண்டிய விலை இதுவென் றால் நான் காட்டுவாசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்'' என எழுதி தன் ஆத்ம பலம் காட்டி என்னை சிலிர்க்கச் செய்த தூரத்து மனிதர் இந்த ம.செ. பேதுருப்பிள்ளை.

வேரித்தாஸ் வானொலி முன் னெடுப்பில் உலகத் தமிழர் இணைந்து நடத்திய அந்த வன்னி பட்டினிச் சாவு தடுப்பு இயக்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து ""பசித்த வயிற்றில் பற்றி யெரிந்த தீ, பாசமுடன் அணைத்தீரே, நன்றி'' எனத் தலைப்பிட்டு உலகத் தமிழ் உறவுகளுக்கு ம.செ.பேதுருப் பிள்ளை எழுதிய நன்றிக் கடிதம் மறக்க முடியாதது. அக்கடிதமும் அவரது வேறுசில கடிதங்களும் நக்கீரனில் நிச்சயம் பதிவாகும்.

அருட்தந்தை கருணரட்ணம் அவர்கள் படுகொலை செய்யப்படுவ தற்கு சில நாட்களுக்கு முன் அவ ருடன் தொலைபேசியபோது யதார்த்த மாகவும் நகைச்சுவையாகவும் அவ ரிடம் கேட்டேன். ""வன்னியில் என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது...? நிரந்தர சமாதானத்திற்குத் தயாராகி றீர்களா? இல்லை சண்டைக்குத் தயாராகி றீர்களா?'' என்று.

மிகவும் இயல்பாக அதற்கு அவர் தந்த பதில், ""உண்மையில் நாங்கள் தமிழ் ஈழத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்''.

அருட்தந்தை கருணரட்ணம், ம.செ.பேதுருப் பிள்ளை இவர்களையெல்லாம் இங்கு நினைவுகூரக் காரணம் சஞ்சனாதேவி அவர்களை எதிர்பாராத விதமாய் சென்னையில் சந்தித்ததும், அச்சந்திப்பு எழுப்பிய பழைய என் வேரித்தாஸ் வானொலி நினைவுகளும்தான். இவர்களைப்போல் ஆனைவிழுந்தான் சதா, தனபாலசிங்கம், அங்கயற்கண்ணி, அகிலா பசுபதி, சிவசங்கரி, கீதாஞ்சலி ஆகிய உறவுகளையும் நெஞ்சில் நீர் பனிக்க நினைத்துக்கொள்கிறேன்.

அந்நாட்களில் வாரம்தோறும் எமக்குக் கடிதமெழுதும் சஞ்சனாதேவி அவர்களுக்கு 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரே ஒரு பதிற்கடிதம் மட்டும் கைப்பட நான் எழுதியிருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாய் அக்கடிதத்தை பத்திரமாய் பாதுகாத்து சென்னைக்கும் நினைவாக அவர் எடுத்து வந்துள்ளார். முல்லைத்தீவு இறுதி அழிவில் சகலத்தையும் இழந்த அந்நாளில் கூட இந்த வெறும் பத்து வரிக் கடிதத்தை இழப்பிற்குக் கொடுக்காமல் கொண்டு வந்த நேசம் உள்ளபடியே என்னை நெகிழச் செய்தது. இத்துணைக்கும் எனது அந்தக் கடிதத்தின் மொத்தமே இவ்வளவுதான்: ""அன்பினிய உழ்.சஞ்சனாதேவி அவர்களுக்கு, வணக்கம். மூன்றரை ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய முதற்கடிதம் தொட்டு, சமீபத் தில் எழுதிய நெஞ்சைப் பிழியும் அனுபவப் பதிவுவரை யாவற்றையும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இத்துணை துன்பங்களி னூடேயும் உடைந்து நொறுங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் நின்று பணிபுரிகிறீர்களென்பதை நினைக்க பிரமிப்பாய் இருக்கிறது.

அழிவுகளினூடேயும் வாழ்வின் மகத் துவங்களை இழக்காதிருப்பதே அழிவைத் தருகிறவர்களுக்கு நாம் திருப்பித் தருகிற உண்மையான பதிலடி. உங்களை வாழ்த்துகிறேன்'' என்பதாக அக்கடிதத்தை நான் நிறைவு செய்திருந்தேன்.

சஞ்சனாதேவி போன்றவர்களெல்லாம் கடிதம் எழுதிய அந்நாட்களில் அவர்களுக்கும் எனக்கு மான இடைவெளி சுமார் 4000 கிலோமீட்டர்கள். இவர்களை நேரிலும் பார்த்ததில்லை, நிழற் படங்களிலும் பார்த்ததில்லை. நரைத்த தலையா, நாரிழந்த தேகமா, கறுத்த நிறமா, கழுத்து தனித்த உயரமா... எதுவுமே தெரியாது. ஆயினும் ஒருவருக்கொருவர் ஆழமாக அறிந்திருந்தோம். உணர்ந்திருந்தோம். ஆத்மாவின் விகாசத்திற்குள் ஒன்றறக் கலந்திருந்தோம். வேதங்கள் உச்ச ரிக்கப்படுமுன்னரே, ஆண்டவன் இவ்வுலகில் உயிர்களை ஆக்கியபோது நிறுவப்பட்ட உயிர் மொழியில் இணைந்திருந்தோம். காகங்கள் ஒரு பருக்கைச் சோற்றுக்காய் நோக்குவதையும், கருங்குருவி சோகத்தில் பாடுவதையும், நாய்க்குட்டி நன்றியால் குழை வதையும், வாய்பேசா மழலை களின் வதனத்து நுண்கோடு களையும் உணர்ந்து கொள்ள இயற்கை இன்றும் நமக்கு அருள் பாலிக் கிறதல்லவா... அதே உணர்வில்தான்.

அந்த உணர்வுதான் அங்கே தூரத்தில் நம் உறவுகளின் அழிவுக்காய் இன்றும் நம்மை அழ வைக்கிறது. எதுவும் எதிர்நோக்காமல் செயல்பட வைக்கிறது. கடந்த வாரம் நான் சந்தித்த உயர் அதிகாரி ஒருவர்,

""மே-17 முதல் புலால் உணவு, மது, கடவுளைத் தொழுவது மூன்றையும் நிறுத்திவிட்டேன். ஈழம் கிடைக்கிறவரை இம் மூன்றும் என் வாழ் வில் இனி இல்லை'' என்றார். இதே உணர்வுகளை இது வரை குறைந்தபட்சம் இருபது உயர் அதி காரிகளேனும் உரை யாடல்களின்போது வெளிப்படுத்தியிருக் கிறார்கள். அப்போ தெல்லாம் வியப்பாக இருக்கும். பரவா யில்லை, நாம் தனித்தவர்களாய் இல்லை. நம்மைப்போல் உணர்கிறவர்கள் பெரிய இடங்களிலெல்லாம் இருக்கி றார்கள் என்பதை நினைக்க ஆறுதலாயும், தெம்பாயும் இருக்கும். அழிவின் நாட்களிலும் இன்னும் நம்பிக்கை மிச்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் சஞ்சனா தேவி குறிப்பிட்ட ஒரு விஷயம்தான் மனதிற்கு மிகவும் வலி தந்தது.

(நினைவுகள் சுழலும்)

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18402



வாழ்வில்நான் மறக்க முடியா மனிதர் ம.செ.பேதுருப்பிள்ளை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தேன். பதிவு என்ப தற்கும் அப்பால் அவரை எழுதியமைக்கு காரணம் உண்டு.

ம.செ.பேதுருப்பிள்ளை ஆங்கில ஆசிரியர். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நீண்ட காலம் பணி செய்தவர். தமிழுக்கு இணையாக ஆங்கிலம், சிங்களம் பேசவும் எழுதவும் தெரிந்தவர்.

வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையிலிருந்த காலத்தில் மட்டுமே சுமார் 500 கடிதங்கள் எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பதிவாக இருக்கும். தமிழீழ விடுதலை விருப்பு என்னுள் மன எழுச்சியாக மாறிட இவரது கடிதங்களும் காரணமாய் இருந்தன.

வெள்ளிகள் வருவது விடியலின் அறிகுறி

ஞாயிறு வருவதற்கே, ஞாயிறு வருவதற்கே

சிலுவைகள் சுமப்பதும் செம்புனல் உகுப்பதும்

சீவியம் பெறுவதற்கே -விடுதலை

சீவியம் பெறுவதற்கே! - என்ற தமிழீழ

வானம்பாடி சிட்டு அவர்களின் பாடலை ஒரு கடிதத்தில் அறிமுகம் செய்து என்னை சிலிர்க்கச் செய்தவரும் ம.செ.பேதுருப்பிள்ளை அவர்கள்தான்.

2002-ம் ஆண்டு வன்னிக்கு சென்றிருந்தபோது அருட்தந்தை கருணரட்ணம் அவர்களுடன் என்னை வரவேற்க ஓமந்தைக்கு அன்புமிகுதியால் வாழைத்தண்டும் பேழைக்குள் பூமாலை பூட்டி வந்து, ஓமந்தை வீதியில் எனக்கு அதை அணிவித்து கூச்சமுறச் செய்தவர். அன்பு செய்ய மட்டுமே தெரிந்தவர், கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறவர்.

கிளிநொச்சியில் இருந்த தனது குடிலுக்கு என்னை கூட்டிச் சென்று அம்மா- அவரது வாழ்க்கைத் துணை சுட்டுத் தந்த பருத்தித்துறை வடையின் சுவை இப்போதும் என்னால் இனிதே நினைக்க முடிகிறது.

சிங்களமும், ஆங்கிலமும் நன்றாக அறிந்த காரணத்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு பொறுப்பாளராயிருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மொழிபெயர்ப்புத் துணையாளராக அமர்த்தப்பட்டார். அவர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அல்ல என்றபோதும் மிக முக்கியமான கடமைக்கு அவர் நியமிக்கப்பட்ட காரணத்தால் ம.செ.பேதுருப்பிள்ளை என்ற பெயர் மாற்றப்பட்டு ஜார்ஜ் என்ற பெயர் தரப்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தை களின்போது சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பல்வேறு நாடு களுக்கும் சென்று வந்த ஜார்ஜ் மாஸ்டர்தான் வேரித்தாஸ் வானொலியில் என் நிறைவு நாட்களில் ""தந்தை போல் ஆனவருக்கு...'' என விளித்து நான் கடிதங்கள் எழுதிய ம.செ. பேதுருப்பிள்ளை. மனைவி மாசறு பொன், வலம்புரி முத்து, எப்போதும் புன்சிரிக்கும் இறையருள் வசந்தம், கட்டுக்கோப்பான சிவபக்தை. இவரோ கத்தோலிக்க கிறித்தவர். அன்றில் பறவைகள் போல் ஆண்டாண்டு காலம் அன்பில் ஒன்றி வாழ்ந்த இவர்களின் இல்லற ஒழுக்கம் ஒளி நிறைந்தது.

முல்லைத்தீவு இறுதி யுத்தத்தின் தொடக்க நாட்களில் இலங்கை ராணுவம் தங்களிடம் புலிகளின் முக்கிய இரு அரசியற் தலைவர்கள் வந்து சரணடைந்ததாக உலகிற்குப் பிரச்சாரக் கடை விரித்ததை நீங்கள் பின்னோக்கிப் பார்த்தீர்களென்றால் நினைவுபடுத்த முடியும் -பலவீனமுற்ற நிலையில் இரு வயோதிக மனிதர்கள் -வதனத்தில் வியாகுலம் பதிந்தவர்களாய் உலக ஒளி ஊடகங்களில் உலாவரப்படுத்தப்பட்டார்கள். ஒருவர் தயா மாஸ்டர், இன்னொருவர் ஜார்ஜ் மாஸ்டர் என்ற என் ம.செ. பேதுருப்பிள்ளை.

தொலைக்காட்சியில் அவரது முகம் கண்ட அந்நாளில் என் மனம் பட்ட வேதனையை நான் மட்டுமே அறிவேன். புலிகள் இயக்கத்திற்குள் பிளவு வந்துவிட்டது. தலைமையின் மேல் மூத்த தலைவர்கள், தளபதிகள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதாக இந்த இருவரையும் காட்டி இலங்கை ராணுவம் பரப்புரை செய்தது. தமிழுலகமும் இவர்களை "கோழைகள்' "துரோகிகள்' என்பதாகப் பார்த்து முத்திரை பதிக்க முற்பட்டது.

என் மனமோ ஒத்துக்கொள்ள மறுத்தது. என்றேனும் மெய்ப்பொருள் அறிந்தே தீர வேண்டுமென உறுதி கொண்டது. வாழ்வில் என் ஆதார நம்பிக்கைகளில் ஒன்று இது. முன்பே கூட எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுது கிறேன்: ""பொய்மையின் பயணம் வேகமானது. உண்மையின் பயணமோ மெதுவானது, காயங்கள் நிறைந்தது. ஆனால் உறுதியானது. என்றேனும் ஒருநாள் பொய்மையின் குப்பைமேடுகளினின்று உண்மை உயிர்த்தெழும்''.

தயா மாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டர் என்ற என் பேதுருப்பிள்ளையும் இலங்கை ராணுவம் காட்ட விரும்பியது போல் கோழைகளாகவோ, துரோகிகளாகவோ நிச்சயம் இருக்க மாட்டார்கள் என நம்பியவனாய் இறுதி யுத்தத்தைப் பார்த்தவர்கள், களத்தின் நம்பகமான செய்திகளுக் குரியவர்கள் என என் தொடர்புக்கு வந்தோர் எல்லோரிடத்தும் உண்மையில் தயா மாஸ்டருக்கும், ஜார்ஜ் மாஸ்ட ருக்கும் என்ன நடந்ததென்று விசாரித்து வந் தேன். விடாத, விட விரும்பாத, விடாப்பிடியான என் ஐந்து மாத கால தேடலுக்கு விடை கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கிடைத்தது.

அதுவும் முதுமலை கார்குடி காட்டுப் பகுதியில் வாரணங்களும் மான் கூட்டங்களும் இரு நண்பர்களோடு கண்டு பாரதியின் வியனுலகை அமுதென நுகரும் அனுபவம் வாங்கி நின்ற பனிவிழும் நள்ளிரவொன்றில் அந்த உண்மை கிடைத்தது. காடுகளுக்குள் அச்சம் அறுத்து விட்டேத்தியாய் சுற்றித் திரிவதுபோலொரு விடுதலைச் சுகம் உலகில் வேறில்லை.

தயா மாஸ்டரும் ஜார்ஜ் மாஸ்டரும் சரண டைந்துவிட்டதாக உலகிற்குச் சொல்லப்பட்ட அந்நாளில் உண்மையில் நடந்தது இதுதான்:

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நிலப் பகுதியை அறிந்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத் தீவுக்குச் செல்வதானால் மாத்தளன், பொக்கணை, வலையர்மடம், கள்ளப்பாடு, முள்ளிவாய்க்கால் பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். இருமுறை இவ்வழி யில் நானும் பயணப்பட்டிருக்கிறேன். மொத்தம் சுமார் இரண்டு கி.மீ. தூரம் இருக்கலாம் என நினைக்கிறேன். ஆடு, மாடுகளைப்போல் நான்கு லட்சம் தமிழர்களும் அடித்து விரட்டிக் கூட்டப்பட்டது இப்பகுதிகளில்தான்.

ஜார்ஜ், தயா மாஸ்டர்கள் ஆயுதம் தரித்த களப்போராளிகள் அல்ல, அரசியல் பிரிவில் இருந்தவர்கள். வேறு பணிகள் செய்கிற உடல் வலுவும் இல்லாதவர்கள். மக்களோடு மக்களாய் மாத்தளன் அடைக்கலமாதா ஆலயம் பகுதியில் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் முல்லைத் தீவு சாலை கடற்கரை பரப்பிலிருந்து நகர்ந்த இலங்கை ராணுவம் மாத்தளன் பகுதியை ஊடறுத்து அச்சிறு நிலப்பரப்பையும் மக்களையும் இரு பிரிவுகளாய் துண்டாட இவர்களும் சுமார் 300 பொதுமக்களும் தீவுபோல் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மாத்தளன் பகுதியில் நின்றிருந்த போராளிகள் உறுதியுடன் களமாடி வீரமரணம் தழுவ, கழுத்தில் சயனைடு குப்பி அணியாத அரசியல் பிரிவின் தயா மாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டரும் மக்களோடு மக்களாய் நின்று ராணுவ கட்டுப்பாட்டு நிலைக்கு தங்களை ஒப்படைத் திருக்கிறார்கள். கோழைத்தனம் என்ப திலும் ஓர் தந்திரோபாயமான முடிவு என்ற மன நிலையில்தான் அவர்கள் அம்முடிவை எடுத்ததாக அருகிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனில் தொலைக்காட்சிகளில் விடுதலைப் போராட் டத்தின்மேல் நம்பிக்கையிழந்த தொனியில் அவர்கள் பேசிட காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். குரூர வெறியோடு ரத்தக்குளியல் நடத்திக்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் கையில் பிடிபட்ட இரண்டு வயோதிபத் தமிழர்களின் நிலையை நாம் உள்ளார்ந்த, நேசம் தோய்ந்த புரிந்துணர்வோடே பார்க்கவேண்டுமென நினைக்கிறேன்.

விரிவாக இதனை இங்கு நான் எழுதத் தலைப்படு வதற்குக் காரணம் உண்மையை, உண்மையானவர்களை வரலாறு நிச்சயம் ஒருநாள் விடுவிக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கவும், போலிகள்-பொய்யானவர்கள் ஒன்றேல் வெளிப்படுத்தப்படுவார்கள் அல்லது அற்பப் பதர்கள்போல் காலவீதியில் பரிதாபமாக விழுந்து கிடப்பார்கள் என்பதை வலியுறுத்திப் பதிவு செய்யவுமே.

போர்க்களத்தில் தமிழர்களை தோற்கடித்தவர்கள் களத்தில் சிந்தப்பட்ட தூய குருதியையும் களங்கப்படுத்தப் பார்க்கிறார்கள். உணர்வாளர்கள் என பிடரி சிலிர்த்துத் திரிகிறவர்களைச் சுற்றியே பல ஊடுருவல்கள் நிகழ்கின்றன. நீதிக்கான தேடலிலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பி சலிப்புறச் செய்யும் திட்டத்தோடு தவறான செய்திகளை பரபபுகின்றார்கள். அவற்றுள் ஒன்று, கடற்புலித் தளபதி சூசை என்ன ஆனார்? பிடிபட்ட அவரது குடும்பத்தாரை இலங்கை அரசு நன்றாகப் பராமரிக்கிறது. அவர் துரோகியாக இருக்கக்கூடும்'' என்பது போன்ற கேவலமான ஓர் பிரச்சாரத்தை உளவு அமைப்புகள் உலவ விட்டன. உண்மைக்கான தேடலுக்கு இறையருளே பதில் தந்ததால் கடந்த புதன் கடிதமொன்று வந்தது. பெயர் இல்லை இலங்கை திரிகோணமலையிலிருந்து தபால் செய்யப்பட்டிருந்தது.

கொண்ட இலட்சியம்

குன்றிடாத தங்களின்

கொள்கை வீரரின்

காலடி மண்ணிலே

நின்று கொண்டொரு

போர்க்கொடி தூக்குவோம்

நிச்சயம் தமிழீழம் காணுவோம்!

-என்ற வரிகளோடு நிறைவு செய்யப்பட்டிருந்த அந்த ஏழு பக்கக் கடிதத்தை எழுதியிருந்தவர் கடைசிவரை களத்தில் நின்ற ஓர் போராளி. கடற்தளபதி மாவீரன் சூசை அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மை விபரங்கள் சுமந்த அக்கடிதம் வரும் இதழில்.

(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18595

ராஜபக்சேவின் நகைச்சுவை: திருமாவளவன்


இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் பார்வையிடுவதற்காக முதல் வர் கருணாநிதி ஏற்பாட்டின்படி, தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் அடங்கிய குழு கடந்த சனிக்கிழமை இலங்கை சென்றது.

இலங்கை சென்ற அவர்கள் கடந்த 13ஆம் தேதி மாலை கொழும்பில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தனர். அப்போது ராஜபக்சே கனிமொழி எம்பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டி,

இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர், ஆதரவாளர், நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார். திருமாவளவனை நான் இப்போது சந்திக்க முடியாமல் போயிருக்கலாம் என்று கூறியதாகவும், அதை சிரித்தப்படியே திருமாவளவன் கேட்டுக்கொண்டிருந்தார் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுபற்றி திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "என்னை அறிமுகம் செய்த போது இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18582

தமிழீழ மக்களை கொன்று குவிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை அணிவித்து இந்திய தூதுக்குழு மதிப்பளிப்பு

rajapakse_dmkmp[படங்கள்] தமிழீழ மக்களை வகைதொகையின்றி கொன்றுகுவித்து வரும் மகிந்த ராஜபக்சவிற்கு இந்திய ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அலரி மாளிகைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.
இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்.
Mahinda Indian MPs
Mahinda Indian MPs1
Mahinda Indian MPs2

http://www.meenagam.org/?p=13331

பெண்ணைக் கடத்திச் செல்ல முயன்ற கருணா குழு உறுப்பினர் கைது

karuna0001அம்பாறை பொத்துவில் நகரில் பெண்ணொருவரை கடத்திச் செல்ல முயன்ற அமைச்சர் கருணா குழுவைச் சேரந்த உறுப்பினர்கள் மூவர் காவற்துறையினரால் 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் எத்தம பிரதேசத்தில் உள்ள கருணாவின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுந்தரலிங்கம் தர்மலிங்கம், ஆன்டி ரனிஸ்குமார், மகிந்த குமார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொத்துவில்லைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தகுமாரி என்ற 19வது யுவதியை சந்தேக நபர்கள் கடத்திச் செல்ல முயன்றதாக பொத்துவில் காவற்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை பொத்துவில்லில் உள்ள கருணா குழுவின் அலுவலகத்திற்கு கடத்திச் சென்ற போது, தான் அங்கிருந்து தப்பிச் வந்தாகவும் தான் ஒரு காலத்தில் ரிஎம்.வீ.பீ கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்தாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார். பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கருணா குழுவின் அலுவலகத்தில் உள்ளவர்களினால் தாம் பெரும் இன்னல்களை அனுபவித்து வருவதாக பிரதேச மக்கள் தெரரிவித்துள்ளனர். கருணா ஆதரவாளர்கள் தமக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.meenagam.org/?p=13335
தமிழச்சிகளின் கற்பு:ரஜினி,விஜயகாந்த்திற்கு கண்டனம்


முகசாயம் பூசிய நடிகைகளின் கற்பை விட தமிழ்ச்சிகளின் கற்பு எந்தவிதத்தில் குறைந்து போய்விட்டது என நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.


இதுகுறித்து வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு நடிகை சில நடிகைகளின் கற்பு குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக ஒட்டு மொத்த தமிழ் நடிகர்களும் கலந்து கொண்டு கண்டன கூட்டம் நடத்தியுள்ளனர். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகைகள் கற்போடு வாழவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதை நாம் மறுக்கவும் இல்லை.

அதே வேளையில் வெளி மாநிலத்தில் பிறந்து தமிழ்நாட்டிற்கு நடிப்பதற்காக வந்த நடிகை குஷ்பு 'தமிழ் நாட்டில் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்ளாத பெண்கள் எத்தனை பேர் உள்ளார்கள்' என்று கால்மேல் கால்போட்டு சவால் விட்டார். அதனை இந்தியா டுடே என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது.

அப்போது இந்த நடிகர்கள், நடிகைகள் எங்கே போனார்கள். தமிழ் உணர்வு, தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் எந்த நடிகராவது அப்போது அதைக் கண்டிக்க முன்வந்தார்களா?

போராட்டம் நடத்தினார்களா? நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்களா? அல்லது செய்தி வெளியிட்ட இந்தியா டுடே ஆசிரியர் கைது செய்யப்பட்டாரா? நடிகை குஷ்பு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது தமிழ் பெண்கள் மட்டுமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

பல அவதூறு வழக்குகள் தாக்கல் செய்தார்கள். நடிகை குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தது சரிதான் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நடிகைகளின் கற்பை விட தமிழ் பெண்களின் கற்பு எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது. நடிகர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள் என்பதற்காக ஒரு அப்பாவி ''செய்தி ஆசிரியர்'' கைது செய்யப்பட்டுள்ளார். தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட நடிகைகள் அவதூறு வழக்கு போடட்டும்.


காவல்துறை ஏன் இதில் இத்தனை அக்கறை காட்டுகிறது. பத்திரிக்கைகள் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடக்கூடாது என்ற கருத்துக்கு எதிரானவர்கள் அல்லர் நாங்கள்.

தமிழ் பெண்களின் கற்பை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட இந்தியா டுடே ஆசிரியர் அப்போது கைது செய்யப்படவில்லையே?

முகசாயம் பூசிய நடிகைகளின் கற்பை விட தமிழ்ச்சிகளின் கற்பு எந்தவிதத்தில் குறைந்து போய்விட்டது என நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ் போன்ற முன்னணி நடிகர்களை கேட்க விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழருக்கு இல்லையே. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!