தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, May 17, 2009

மக்களைக் காப்பாற்ற எதையும் செய்ய தயார் - விடுதலைப் புலிகள்

மக்களைக் காப்பாற்ற நாம் எதையும் செய்ய தயார் - அமெரிக்காவிற்கு விடுதலைப் புலிகள் அழைப்பு


ltteவன்னியின் நிலமையானது மிகப்பெரிய ஒரு மனிதப் பேரவலம் என்றும், இக்கட்டத்தில் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ் இரக்கமில்லாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் எதையும் செய்ய தயார் எனவும், விடுதலைப் புலிகளின் வெளிவிகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளார்.

தாம் ஓபாமாவின் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து எமது மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுளார்.

இரக்கமும் கண்ணியமும் இல்லாமல் குறிவைக்கப்படும் அப்பாவி மக்களைக் காப்பாற்றும் முழுப்பொறுப்பை சரவதேசச் சமுதாயமானது நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இப்பொழுது எடுக்க வேண்டும் என்றும் பத்மநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஓபாமாவின் நம்பிக்கைச் சொற்கள் தமக்கு ஊக்கமளிப்பதால் இவ் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுடைய ஒரு தீர்வு காணுவதற்கு, நடுநிலையான சர்வதேசக் கட்சிகள் முன்னெடுக்கக்கூடிய ஒரு அரசியல் நடைமுறைக்குள் நுழையும் நிலையில் தாம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஓபாமா கேட்டுக்கொண்டதுபோல் சமாதானத் தீர்வுக்காக தாம் ஒத்துழைக்கவும் சேர்ந்து வேலை செய்யவும் தயார் என்றும் பத்மநாதன் மேலும் குறிப்பிட்டுளார்.


http://www.meenagam.org/?p=3594


உறவுகளே விரைந்து செயற்பட இறுதி அழைப்பு

உறவுகளே விரைந்து செயற்பட இறுதி அழைப்பு


சிறீலங்கா படையினர் வன்னியில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி எஞ்சியுள்ள மக்களை சாட்சியின்றி துடைத்தழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சற்று முன்னர் வன்னியில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

இதனைத் தடுப்புதற்கு அனைத்துலக சமூகம் எந்தவித கால தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி அனைத்துலகுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இறுதியாகக் கேட்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பரப்புரை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு, அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கான தாக்குதல்கள் நாலாபுறமும் இருந்து மேற்கொள்ளப்படு வருகின்றன.

இதனைத் தடுப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் கால தாமதம் அடைந்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சாட்சியின்றி இனப் படுகொலை செய்யப்படலாம் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


http://www.meenagam.org/?p=3655


தடயமின்றி வன்னி மக்கள் அனைவரையும் கொன்றொழிக்க முயலும் சிறிலங்கா

தடயமின்றி வன்னி மக்கள் அனைவரையும் கொன்றொழிக்க முயலும் சிறிலங்கா


சிறிலங்கா அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள 150,000 மேற்பட்ட பொதுமக்களை வெளியேற விடாது மிகக்கடுமையான தாக்குதலினை தொடர்ந்து சிறிலங்கா படைகள் மேற்கொண்டுவருகின்றன.

இது இவ்வாறு இருக்கையில், பாதுகாப்பு வலயத்தில் தற்போது பொதுமக்கள் இல்லை என்றும், அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாக சிறிலங்கா அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதனை வைத்துப்பார்க்கும் போது அங்கு தங்கியிருக்கும் மக்கள் அனைவரையும் கொன்றெழிப்பதுதான் சிறிலங்கா அரசின் நோக்கமாக உள்ளது.

தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் ஆனால் தங்களால் சிறிலங்கா அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு எந்த வசதியினையும் அல்லது எந்த வாய்ப்புக்களையும் வழங்காது சிறிலங்கா அரசு மிகக்கடுமையான தாக்குதலினை தொடர்ந்து நடாத்திக்கொண்டு இருப்பதாக தெரியவருகின்றது.

தற்போது வன்னிப்பகுதியில் மிகவும் வேதனை தரும் அளவுக்கு மனிதப்பேரவலம் ஒன்று நிகழ்ந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன.


http://www.meenagam.org/?p=3638#more-3638


கொழும்பில் வெற்றி விழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் பெரும் வெற்றி விழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை முழுமையாக மீட்டெடுத்ததை பெரும் விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது சிறிலங்கா அரசு. இந்த வெற்றி விழாவை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன், விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும், கிண்டலும் செய்கின்றனர். அத்துடன், சிறிலங்காவின் தேசிய கொடியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்கவிட்டு வெற்றியைக் கொண்டாட வேண்டும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்குடாவில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினரும், கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் துணை இராணுவக் குழுவினரும் இந்த வெற்றி விழாவினை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கொண்டாடதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக கூறியுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்பவுள்ளதாக ஜோர்தானில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

எனினும், படையினர் எஞ்சியிருக்கும் பகுதிகளை முழுமையாக நாளை கைப்பற்றாது போனால் தனது பயணத்தை ஓரிரு தினங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டு படையினர் குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றியதாக அறிவித்ததன் பின்னர் நாடு திரும்புவதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சிறிலங்காவின் நிலைமை இவ்வாறிருக்க, பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களைக் கீழே வைப்பதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கும் பிரித்தானியப் பிரதமர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மோசமான போரின் இடையில் அகப்பட்டுள்ள மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்காக மனிதாபிமான அமைப்புக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் கோர்டன் பிறவுண், இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

"சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் பிரித்தானியப் பிரதமர் கடுமையாக எச்சரித்தார்.

http://www.meenagam.org/?p=3604


இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் சூறை

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் சூறை


சென்னை, மே.17-
 
சென்னை தேனாம்பேட்டை பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் டைரக்டர் பாரதிராஜாவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் தளத்தில் சினிமா எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள் நடைபெறும். முதல் தளத்தில் பாரதிராஜாவின் அலுவலகம் உள்ளது. முழுக்க முழுக்க ஏர்கண்டிசன் வசதி செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளுக்கான நவீன வசதி இங்கு உள்ளது.
 
நேற்று இரவு 8 மணியளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலினர் பாரதிராஜாவின் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் முதலில் கீழ்தளத்தில் டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகள் நடக்கும் 5 அறைகளை அடித்து நொறுக்கினார்கள்.
 
கீழ்தளத்தில் யாரும் இல்லை. சத்தம் கேட்டு மேல் தளத்தில் இருந்த பாரதிராஜாவின் உதவியாளர் மகேஷ், ஆபீஸ் பையன் ராம்கி ஆகியோர் ஓடிவந்தனர்.
 
அவர்களை தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மிரட்டியது. ஒதுங்கி நின்று கொண்டு உயிர் தப்பிக்கொள்ளுங்கள் என்று பயமுறுத்தினார்கள். இதனால் அவர்கள் ஒதுங்கி நின்றுகொண்டனர்.
 
பின்னர் மேல்தளத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினார்கள். அதன்பிறகு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
 
இந்த சம்பவம் பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
 
இந்த சம்பவம் தொடர்பாக பாரதிராஜாவின் உதவியாளர் மகேஷ், போலீசாரிடம் புகார் மனு எழுதி கொடுத்தார்.இதற்கிடையில், இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்து டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் விரைந்து வந்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
சோனியாகாந்தி சென்னை வரும்போது டைரக்டர் பாரதிராஜாவும், நானும் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோம். இதையொட்டிதான் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டிருக்கிறது. அடுத்து என் வீடும், சீமான் வீடும், ஆர்.கே.செல்வமணி வீடும் தாக்கப்படலாம் என்று நினைக்கிறேன். போலீசார் எங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு டைரக்டர் ஆர்.சுந்தரராஜன் தெரிவித்தார்.
 
தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் டி-சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தனர். வாட்டசாட்டமாக இருந்தனர். அவர்கள் காரில் வந்துள்ளனர். 10 நிமிடத்தில் தாக்குதலை முடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். தாக்குதல் சம்பவத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள எடிட்டிங் மற்றும் டப்பிங் சம்பந்தப்பட்ட நவீன கருவிகள் சேதம் அடைந்துள்ளன.
 
இவ்வாறு மகேஷ் தெரிவித்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று துணை கமிஷனர் மவுரியா தெரிவித்தார்.
http://maalaimalar.com/2009/05/17091850/CNI060170509.html

தமிழீழம் அமையும் வரை புலிகளின் ஓயப்போவதில்லை: பினான்சியல் ரைம்ஸ் இதழ்


தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படும் வரை புலிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை: பினான்சியல் ரைம்ஸ் இதழ்


பழிக்குப்பழி வாங்கும் வகையில் புலிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள் எனவும், அது அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயலுக்கு சமமாக இருக்குமெனவும் பினான்சியல் ரைம்ஸ் இதழ் தனது தலையங்கத்தில் எச்சரித்துள்ளது.

சிங்களப் பெரும்பான்மையானது பெருந்தன்மையைக் காட்டி தமிழ் மக்கள் தமது வாழ்வை தாமே நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்காத வரை எரியும் தணல் போன்ற இந்த யுத்தம் அத்தகைய நிலையைத் தோற்றுவிக்க காரணமாக அமையும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள பினான்சியல் ரைம்ஸின் தலையங்கத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யுத்தம் புத்திசாதுரியமிக்க புலிகளின் சம்பிரதாயமான திறமைகளையே தோற்கடித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை குரல் எழுப்பியுள்ளது. எல்லா வருடங்களிலும் எத்தகைய துயரமான சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை அது புரிந்துகொண்டுள்ளது. இலங்கையின் வடகிழக்கில் தமிழ் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரத்த ஆறு ஓடுகிறது.

உண்மைதான.இந்த நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் முடிவும் விளைவும் அறியப்பட முடியாதவாறு மேகங்களால் சூழப்பட்டது போன்று இருதரப்பினரின் அறிக்கைகளும் உள்ளன.

மேலும் ஐ.நா.வின் செய்மதிப்படங்கள் மற்றும் நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் மூலம் பெண்கள், அனேக சிறுவர்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் அரச விமானத்தாக்குதல்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் கொல்லப்படுவது நிச்சயமாகத் தெரிகிறது.

ஒருகாலத்தில் அதிபயங்கரமான சட்டபூர்வமற்ற இராணுவமாகத் திகழ்ந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு குறுகிய நிலப்பரப்பின் காட்டுப்பகுதியில் தள்ளப்பட்டுள்ளதுடன் குண்டுத்தாக்குதல்களால் சிதறடிக்கப்படுகிறது.அவர்களுக்கு மத்தியில் 50 ஆயிரம் பேருக்கு மேலான பொதுமக்கள் சிக்குண்டுள்ளார்கள்.

ஐ.நா.வின் அறிக்கையின் படி 6400 பொதுமக்கள் ஜனவரி இறுதிவரை கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்த நெருக்கடிகள் பேரழிவினை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இதேவேளை கடந்த புதன்கிழமை ஐ.நா.பாதுகாப்புச் சபை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு இலங்கை இராணுவத்தையும், ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளையும் இறுதியாக கோரியுள்ளதுடன் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு கேட்டுள்ளது.

இது வெறும் அறிக்கை. பலவீனமானதும் கூட. சட்டத்திற்கு கட்டுப்பட்டதான தீர்மானம் அதற்குப் பதிலாக மேற்கொள்ளப்பட வேண்டும். யுத்தக் குற்றச் செயல்களுக்காக வழக்குத் தொடுப்பதாக ஐ.நா.அச்சுறுத்த வேண்டும்.

புலிகள் தற்கொலைத் தாக்குதலில் கை தேர்ந்தவர்கள். அவர்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள். வெளிநாட்டில் விரிவு பெறுவார்கள். பழிவாங்கும் எண்ணமுடைய அரசாங்கத்திற்கு இணையாக பழிக்குப் பழிவாங்க அவர்கள் முற்படலாம்.

இவ்வாறு பினான்சியல் ரைம்ஸ் தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3416:2009-05-17-05-16-34&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56

மே-17, குண்டு மழையில் மரண பூமி

இடைவிடாது குண்டு மழை பொழியும் சிறிலங்கா படையினர்: மரண பூமியாக மாறியுள்ள முள்ளிவாய்க்கால்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாத குண்டு மழையினாலும், தொடர்ச்சியாக உணவோ குடிதண்ணீரோ இல்லாமல் பதுங்குகுழிகளுக்குள் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இருப்பதாலும் பெருமளவு தமிழர்கள் உயிரிழக்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனைவிட நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், உடல் உறுப்புக்களை இழந்து மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் இரத்தம் பெருகிய நிலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டுமிருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் நான்கு புறங்களிலும் இருந்தும் மேற்கொள்ளும் கனரக தாக்குதல்களை சில நிமிட நேரம் கூட இடைநிறுத்தவில்லை எனவும், கடுமையான காயங்களுக்குள்ளாக ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்கான வசதிகள் எதுவும் இல்லாமல் மரணிக்கும் தறுவாயில் இருப்பதாகவும் அப்பகுதியில் இருந்து மரண ஓலங்களே கேட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்று காலை கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் உடலங்களும், படுகாயமடைந்த நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களையும்தான் அந்தப் பகுதி எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது. தாக்குதல்கள் தொடர்வதால் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு உடனடி உதவிகளைக் கூட செய்ய முடியாத நிலையில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் கூட இருக்கின்றனர்.

முள்ளிவாய்காலின் அனைத்துப் பகுதிகளிலும் மிகவும் நெருக்கமாக நேருக்கு நேரான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.puthinam.com/full.php?2b1VoUe0dycYe0ecAA4e3b4g6DL4d3f1e3cc2AmS3d434OO3a030Mt3e


அமைதி விருதுக்கு ஐ.நா பரிந்துரை,போர்ப்பகுதி மருத்துவர்களுக்கு

போர்ப்பகுதி மருத்துவர்களுக்கு அமைதி விருதுக்கு ஐ.நா பரிந்துரை

 
இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்து வரும் போர் ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எட்டியிருப்பது போல் தோன்றும் நிலையில் , அந்தப்பகுதியில் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றிவந்த வரதராஜா, சத்யமூர்த்தி போன்ற மருத்துவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்று ஐ.நா மன்ற இலங்கை அதிகாரி கோர்டன் வெயிஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய வெயிஸ், இந்த மருத்துவர்கள் இந்த கடினமான மாதங்களில் அப்பகுதியில் மருத்துவ சேவைகளை தன்னந்தனியாக நடத்தும் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை நிலவிய சூழலிலும், பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டு காயமடைந்த சூழலிலும் அவர்கள் தங்கள் பணியை தங்களால் முடிந்த மட்டில் செய்தார்கள். எனவே ஐ.நா மன்றம் அவர்களுக்கு அமைதி பரிசு தர சிபாரிசு செய்திருக்கிறது. அவர்களை பிப்ரவரியிலேயெ இந்த பரிசுக்கு சிபாரிசு செய்துள்ளோம். என்றார் கார்டன் வெயிஸ்.

http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dvj0q0ecGG7h3b4j9EC4d3g2h3cc2DpY3d436QV3b02ZLu2e

நிஜங்கள் மறைக்கப்படுவதாக மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதுநிஜங்கள் மறைக்கப்படுவதாக மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

இலங்கையில் நிஜங்கள் மறைக்கப்படுவதாக லண்டனில் இருந்து வெளியாகும் மிரர் பத்திரிகை இன்று (17.5.2009) செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டு ஊடக்கவியலாளர் ஒருவரும் இல்லாத பகுதியில் கடும் எறிகணைத் தாக்குதல் இடம்பெறுவதாகவும், இதனை இலங்கை அரசாங்கம் இருட்டடிப்புச் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சிறிய தீவான இலங்கையில் ஒரு மணிதப் படுகொலை நடப்பதாக விவரித்துள்ள மிரர் பத்திரிகை, அங்கு கொத்துக் கொத்தாக மக்கள் இறப்பதாக கூறியுள்ளது.

செய்தி ஆதாரம்:

http://www.mirror.co.uk/news/

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!