Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, April 4, 2009

கதை




ஒரு பஸ் ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பேருந்தை இயக்க ஆரம்பித்தார். அவரது வழித்தடம் வழியாக பேருந்து சென்றுகொண்டிருந்தது. முதல் ஐந்து நிறுத்தங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆறாவது நிறுத்தத்தில் ஒரு பெரிய ஜாம்பவான் ஒருவன் பேருந்துக்குள்ளே நுழைந்தான். ஆரடி உயரமும் அகலமாக விரிந்த உடல்வாகையும், நீளமான கைகளையும் கொண்டவன் அவன்.

டிரைவரை எகத்தாளமாய் பார்த்து - "நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை", சொல்லிவிட்டு டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தான்.

அவனது தோற்றத்தைப் பார்த்த வண்டியின் ஓட்டுநருக்கோ இருப்புக் கொள்ளவில்லை. டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செஞ்சாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டார். எந்த வாக்குவாதத்துக்கும் அவர் தயாராக இல்லை. காரணம் - பெரியசாமியின் தோற்றம்.

அடுத்த நாளும் அதே நிகழ்ச்சி நடந்தேறியது. "குத்துச்சண்டை வீரனைப்போன்ற தோற்றம் கொண்ட பெரியசாமி வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகு - நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை" என்றான். டிரைவருக்கும், நடத்துநருக்கும் மனதுக்குள் பெரிய குற்ற உணர்ச்சி.

தொடர்ந்து 15 நாட்களாக இதே நிகழ்ச்சி தொடர்ந்தது.

"இந்த பெரியசாமியின் கொட்டத்தை அடக்கவேண்டும்" என இருவரும் திட்டம் போட்டனர்.

ஒட்டுநருக்கும், நடத்துநருக்கும் இரவுகளில் உறக்கமே இல்லாமல் போனது. எல்லாம் பெரியசாமியின் நினைவுதான். பெரியசாமியின் தொந்தரவில் இருந்து தப்பிப்பது பற்றியே எண்ணிக்கொண்டு தூக்கத்தைத் தொலைத்தனர்.

"தொடர்ந்து 15 நாட்களாக பணமே கொடுக்காமல் - டிக்கெட் எடுக்காமல் - நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லைனு ஒருத்தன் போக்குக்காமிச்சுக்கிட்டு இருக்கான். அவனை ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது", ஓட்டுநர்.

நடத்துநர் "அண்ணே! ஒரு ஐடியா. நாம ரெண்டு பேரும் ஜிம்முக்குப் போகி உடம்பத் தேத்தி, கராத்தே, ஜுடோ இதெல்லாம் கத்துக்குட்டு அவனைவிட பெரிய வீரர்களா ஆகிடுவோம். அப்புறம் அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம்" எனக் கூறினார்.

வெயில்காலம் முடிவடைவதற்குள் அவர்கள் இருவரும் சிறப்பு அனுமதி பெற்று ஜிம், கராத்தே, ஜுடோ எனப் பல பயிற்சிகளையும் பெற்று உடலைத் தேற்றி ஆஜானுபாகுவாக ஆயினர்.

அவர்களுக்குள் மகிழ்ச்சி கரை புரண்டது. "நாளைக்கு திங்கள் கிழமை. பெரியசாமியை உண்டு இல்லைன்னு ஆக்கிருவோம்" - முன் கூட்டியே திட்டமிட்டனர்.

திங்கள் அன்று வழக்கம் போல குத்துச்சண்டை வீரன் பெரியசாமி வந்தான். பேருந்தில் ஏறினான். வழமை போல குரல் கொடுத்தான் - "நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லை".

ஓட்டுநரும், நடத்துனரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்து பெரியசாமிக்கு எதிராகப் பயங்கரப் பார்வையுடன் "ஏன்? ஏன் பணம் கொடுக்க மாட்டாய்? என்ன தைரியம்" என முதல் முறையாக எதிர்த்துக் கேட்டனர்.

ஒரு ஆச்சரியமான முகபாவத்துடன் "எங்கிட்டே பஸ் பாஸ் இருக்கு. அதனால நான் பணம் தரத் தேவையில்லை" எனக் கூறி பஸ் பாஸை இருவரின் முன்னால் நீட்டினான்.

நீதி : பிரச்சினையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிறகுதான் தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் கற்பனை செய்யக் கூடாது








[ இந்த மின்னஞ்சல் www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]







Thanks!




ஆதிசிவம், சென்னை. நன்றி!...







No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!