டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும், இதன் பின்னூட்டங்களும் 21 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்புடையதாய் இல்லாமலிருக்கலாம். எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
எதற்காக... அல்லது எப்படி... அல்லது எப்பொழுதில் இருந்து 'சாமி' கும்பிட ஆரம்பித்தோம் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? நிச்சயமாக... எந்த கடவுளும் உங்கள் முன் வந்து என்னை வெள்ளிக்கிழமையோ ஞாயற்றுக்கிழமையோ கும்பிடு என சொன்னதில்லை. அப்படி சொல்லியிருந்தால்... அது நிச்சயம்.. ராத்திரி 'மப்பின்' மிச்சம்! பின்....? சிறுவயதிலிருந்து நம் தாத்தாவோ.. அம்மாவோ... 'கன்னத்துல போட்டுக்கோ இல்லீன்னா கண்ண குத்தும்' என்றோ... 'ஞாயத்துக்கிழமை சர்ச்சுக்கு போகலைன்னா அது மிகப்பெரிய பாவம்' என்றோ.. ஆரம்பித்து வைத்த பழக்கம்..., பச்சையாக சொன்னால்.. பயமுறுத்தல்! நாம் கொஞ்சம் கொஞ்சமாக... மூளைச்சலவை செய்யப்பட்டு, நாளாக நாளாக.... 'டைரக்டரே யோசிக்காத விசயங்களை விமர்சனத்தில் கண்டுபிடிப்பதை' போல புதிது புதிதாக... 'அறிவோமா ஆன்மீகம்' என ஆரம்பித்துவிடுகிறோம். மூளைச்சலவையை தொடங்கி வைப்பது... நம் குடும்பத்தவர் என்றால்.... அதை தொடர்பவர்கள்.... அதன் ஆணிவேர்?
நிற்க...! படம் பேசுவது... கடவுள் நம்பிக்கை பற்றியல்ல!!! ஆர்கனைஸ்ட் கம்பெனி..., ஆர்கனைஸ்ட் க்ரைம் போல... ஆனால் அவர்களை விட மட்டமான, கொடூரமான, கேவலமான ஆர்கனைஸ்ட் ரிலீஜியன் பற்றி. நம் நிஜமான கடவுள் நம்பிக்கையை... மத நம்பிக்கையாக மாற்றி..., இன்று கடவுளுக்கும்-மதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நம்மை வளர்த்துவிட்டவர்கள். நிஜ ஆணிவேர்! ரியல் பாஸ்டர்ட்ஸ்!
Fahrenheit 9/11, This Film is Not Yet Rated போல நம்மூரில் செய்ய முடியாத, ஆனால் அமெரிக்காவில் சாத்தியமாகும் இன்னொரு விசயம் 'மதத்தை' பற்றி படம் எடுப்பது. அதைவிட முக்கியம்.. அதை வெற்றிப்படமாக்குவது. பேசப்போகும் விசயம்... நிச்சயம் வெடிகுண்டுதான். பின்னூட்டத்தில் எத்தனை பேர் திட்ட ரெடி ஆகறீங்கன்னு தெரியலை. நான் ரெடியா இருந்துக்கறேன். :-))
இந்தியாவின் HBO- நிகழ்ச்சிகளை பற்றி தெரியவில்லை. ஆனால் அமெரிக்க HBO-வில் பில் மஹெர் மிகப்பிரபலம். ஸ்டேண்டப் காமெடி ஷோக்களை நடத்தியவர். இப்பொழுது உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். இந்நாட்டின் 'பேச்சுரிமை'யை முழு வீச்சில் பயன்படுத்துபவர்கள், ஸ்டேண்டப் காமெடியன்கள் மட்டுமே என்ற எண்ணம் எனக்குண்டு. பில் மஹெர் அதில் ஒன்று! (அட.. டி.ஆர் மாதிரி எல்லாம் பேசறேனே)
மஹெரின் அம்மா ஒரு யூதர், அப்பா கிறித்துவர்! பில்... நாதிக்கர்! மிகத்திறமையாக வாதிடக்கூடியவர்! 'மதத்தை' பற்றி பேச... அமெரிக்க நகரங்கள், லண்டன், வாடிகன், ஜெருசலேம், ஆம்ஸ்டர்டாம் என பல நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து, அங்கு செயல்படும் 'கடவுளின் பிரதிநிதி'களிடம் பேட்டி எடுத்து..., எதிரே உட்கார்ந்தவர்கள் தங்களின் அனைத்து துளைகளையும் 'தாழ்' போட்டுகொண்டு நிற்க வைக்கிறார்.
அமெரிக்காவில் ஒரு சிறிய சர்ச்சில் ஆரம்பிக்கும் பயணம், வாடிகனில் காவலர்களால் வெளியே துரத்தப்படுவதில் சூடுபிடிக்கிறது. அதன் பிறகு நான்-ஸ்டாப் திண்டாட்டம்தான், மதத்தை பரிந்து பேசுபவர்களுக்கு! எவ்வளவு வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான வழிபாட்டுத்தளங்கள், கடவுளை மதத்தால் வியாபாரம் செய்யும் வே.......ள், தன்னையே கடவுள் என சொல்லிக்கொள்ளும் ஒரு ஆண் விபச்சாரி, அவனையும் நம்பும் ஒரு லட்சம் மக்கள்!
பில் யாரையும் விட்டு வைக்கவில்லை. கையில் கிடைத்தவனை எல்லாம் துவைத்து தொங்க விடுகிறார். நல்லவேளை பில்.. இந்தியா வரவில்லை! வந்தால்.. எத்தனை 'சாமிங்களை' (ஆர்யா உட்பட) பேட்டியெடுக்க முடியும் என விட்டுவிட்டாரோ தெரியவில்லை! படத்தில் பேசப்படும் மூன்று மதங்கள் 'கிறித்துவம்', 'யூதம்' & 'இஸ்லாம்'. மூன்றுக்கும் உள்ள வழிதோன்றல் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
'யேசு'வின் கதையாக நாம் கூற கேட்டதற்கும், அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லப்பட்ட 'கிருஷ்ணரின்' கதைக்கும்(!) உள்ள ஒற்றுமைகள், அதற்கும் முன்பாக 1600 முன்னிருந்த 'ஹோரஸ்' என்ற எகிப்து கடவுளின் கதை (மிக அதிகமான)ஒற்றுமைகள், வாடிகனின் ஆடம்பர செல்வச்செழிப்பு என... இங்கு போட்டுத்தாக்க....,
வெள்ளி, சனியில் விரதமிருக்கும் போது, எந்த வேலையும் செய்யக்கூடாது என யூத மதம் சொல்லியிருக்க, அதை சாக்காக வைத்து, அதற்கேற்ற பொருட்களை தயாரித்து விற்கும் ஒரு வியாபாரியின் தந்திரத்தை தோலுறிக்க..., (ஐப்பன் சாமி, ஸ்பெஷல் டம்ளர், டாஸ்மாக், கோழிக்கறி, எல்லாம் ஃப்ளாஷ் அடிச்சா நான் பொறுப்பில்லீங்க)
'சல்மான் ருஷ்டி'க்கு ஒரு நியாயம்.. தனக்கொரு நியாயம் என, 'குரானை' துணைக்கு வைத்து பேசும் இன்னொருவனை பெண்டு கழட்டி..., நான் சொன்னதெல்லாம் கொஞ்சம்தான் சாமி! டாகுமெண்ட்ரிய பாருங்க! சிரிச்சி சிரிச்சி... வயறு வலிக்குது.
நிஜமாதாங்க...., டாகுமெண்ட்ரி ஃபுல்லா.. ஒரே சிரிப்புதான். Fahrenheit 9/11-ஐ விட மிக சீரியஸான தீமை..., ஒரு காமெடிப்படம் போல பில் கையாண்டுள்ளார். அதுவே.. பலம்.. அதுவே பலவீனம். Taken படத்தை விட 15 நிமிடம் அதிகம். ஆனால் அதைவிட சீக்கிரம் முடிந்தது போன்ற ஒரு ஃபீலிங்.
உண்மையை ஒப்புக்கொள்ளும் தைரியம் இருப்பவர்கள் மட்டும் பாருங்கள். 'பூனை கண்ணை மூடிகிட்ட' கதையை நம்புவர்கள்... மேல்யுள்ள எந்த குரங்கு பொம்மை உங்களோடு ஒத்துப்போகிறது என்று பார்த்துவிட்டு, இதோ... பின்னூட்டம் மாடரேட் செய்யப்படாமல் இருக்கிறது. அடிச்சி தூள் கிளப்புங்கண்ணா..!!! கெட்ட வார்த்தை மட்டும் பேசாதீங்கோ!!! :-))
என்னுடைய இந்த பதிவின் எண்ணம் எந்த மதத்தை பின்பற்றுவர்களையும் காயப்படுத்துவது அல்ல! நான் அந்தளவுக்கு பக்குவப்படாதவனும் அல்ல! (என் பர்சனல் கதை தெரிந்தவர்களுக்கு மட்டும் இது புரியும் ;-0)! மதத்தையும், அதை தவறாக போதிப்பவர்களையும் பற்றி மட்டுமே!!! அதையும் மீறி.. நண்பர்கள் யாராவது காயப்பட்டிருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன்!!!!
ஆனாலும் என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்குதானே...! மதம்... பிரச்சனைக்கு ஆணிவேரா... இல்லை கடவுளா? கடவுள் நிச்சயமாக இல்லை (இரண்டு அர்த்தத்திலும்)! அப்படி ஒன்று இருந்து, அதுதான் மதம் என்பது உருவாக்க காரணம் என்றால், இந்தியாவிலும், இலங்கையிலும், பாலஸ்தீனத்திலும் இன்னும் எங்கெங்கெல்லாமோ, சாமியை சாக்காக வைத்து சாகும்/சாகடிக்கப்படும் நம் சகோதர்ர்களுக்கு இந்த கடவுளும்.. அந்த மதமும்... அதை போதிப்பவர்களும்தான் காரணமென்றால்.... ஆணிவேர்.....
சாமி.... நீ எனக்கு மயிரா போச்சி போ..!
Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com