தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, June 9, 2009

♥ எங்களுக்கு ஆணையிட இந்தியா யார்?: சிறிலங்கா ♥

எங்களுக்கு ஆணையிட இந்தியா யார்?: சிறிலங்கா


sri-lanka-flag1இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருப்பதற்கு அக்கட்டுரையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கிருஸ்ணாவிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான சிறிலங்காவுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள்.

இல்லாவிட்டால் சிறிலங்காவுக்கு எதிராக பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு மேலும் சில விடயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரம் வழங்க மாட்டோம். ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.

அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம்.

இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு மென்மையாக பேசும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் புத்திசாலித்தனம் தான் காரணம்.

இந்தியாவில் உள்ள பலர் எங்களுக்கு எதிராக வாக்களிப்பதை விரும்பியிருப்பார்கள். அவ்வாறு இந்தியா வாக்களித்திருந்தால் ஆசியாவில் அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் நிலப் பகுதியில் அண்டை நாடுகளுடன் சேர்ந்து இருப்பது இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.

அத்தகைய சூழலில் இந்தியா அமெரிக்காவிற்கு அருகில் இடம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். அப்போது அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.

இதையெல்லாம் அறிந்துதான் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த ஜப்பான் நாடு கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தள கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

♥ பெங்களூரில் சீமானின் உறுமல் வீடியோ ♥

பாகம் 1

http://www.youtube.com/watch?v=GAH3FT4HlQs


பாகம் 2

http://www.youtube.com/watch?v=nvJPI8Z-hdk
பாகம் 3

http://www.youtube.com/watch?v=OzIabBSTIzo
(ஒலி வடிவம்) தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தோழர் தியாகு அவர்களின் நேர்காணல்

http://www.nerudal.com/nerudal.8050.html

thiyagu1


தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளாரும், சமூகநீதி தமிழ்தேசம் இதழின் ஆசிரியரும், தமிழீழ விடுதலைப்போராட்டங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான தோழர் தியாகு அவர்களுடன் தமிழீழப் போராட்டங்கள் பற்றியும், ஈழப்பிரச்சினையில் இன்றைய தமிழக அரசியல் கட்சிகளின் பங்குகள் பற்றியுமான ஒரு தொலைபேசி கலந்துரையாடல்.


http://uk.video.yahoo.com/watch/5264403/13887691

♥ கூகுளின் புதிய வசதி: எந்த தமிழ் பாண்ட டையும் டவுன்லோட் செய்யாமல் தமிழில் தட்டச்சு செய்ய... ♥


கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம்

நீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில்
தட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate
அல்லது
வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டு
பயன்படுத்துவீர்கள். இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ்
மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,

1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.
2. Google Search இல் தேடலாம்.
3. தமிழில் உரையாடலாம் (chat )
4. பிற சமுக வலைத்தளங்களிலும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
5. இது எந்த வலைப்பக்கத்திலும் இயங்கக்கூடியது.
6. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபிக் போன்ற
மொழிகளிலும்
செய்யல்படுகிறது.
7. ஆனால் இதை ஏற்கனவே தமிழ் மொழி வசதி உள்ள Orkut, Gmail,
Blogger மற்றும் Knol போன்றவற்றில் பயன்படுத்த தேவையில்லை.

இதை நீங்கள் பயன்படுத்த ஒரு புக்மார்க் செய்ய வேண்டும்.

Internet Explorer பயனர்களுக்கு :

1. [ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Add to Favorites
என்பதை சொடுக்கவும்.


2. பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வரும். அதை yes கொடுக்கவும்.
3. பின்னர் Add கொடுத்தால் உங்கள் உலவியின் கருவிப்பட்டைக்கு
கீழே அமர்ந்து விடும்.


இவ்வாறு உட்கார்ந்து இருக்கும்.
Firfox பயனர்களுக்கு :

1. [ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Bookmark this link
என்பதை சொடுக்கவும்.


2. Bookmarks Toolbar இல் சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை :

உங்கள் உலவியில் உள்ள [ Type in தமிழ் ] இணைப்பை
சொடுக்கினால்
கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும்.
வலைப்பக்கத்தில்
உள்ள எந்த உரைப்பெட்டியிலும் என்ற குறியீடு இருக்கும்.நீங்கள் Ctrl+G அழுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மாறிக்கொள்ளலாம்.மீண்டும் வேண்டாம் என்றால் கருவிப்பட்டையில் உள்ள அதே
இணைப்பை
சொடுக்கினால் வசதி மறைந்துவிடும்.

மேலும் மற்ற உலவிகளில் சேர்ப்பதைப் பற்றியும் மற்ற
மொழிகளின்
இணைப்பு வேண்டுமெனில் இதைப்பார்க்க. நன்றி.

http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.htmlநன்றி

http://ponmalars.blogspot.com/2009/05/blog-post_29.html

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 2 -"தினத்தந்தி" தொடர் ♥


2வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-
"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்

விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.


அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி

விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')
குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.பாண்டிய இளவரசி


விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.


இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை

1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது.

http://dailythanthi.com/FlashNews/Histroy/Eelam_Story/history02.html

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 9 -"தினமணி" தொடர் ♥

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-9:
ஐரோப்பியர் ஏற்படுத்திய விளைவுகள்


ஆனந்த குமாரசாமிபோர்த்துக்கீசியரின் வருகையால் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இலங்கையில் தலையெடுத்தது. அடுத்து அவர்களின் மொழியும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் திணிக்கப்பட்டன. இவர்களின் 150 ஆண்டு ஆட்சிக் காலத்தில்தான் நிலங்களைப் பதிவு செய்யும் முறை அமலாகிறது.

ஒல்லாந்தர்கள் காலத்திலே இலங்கையில் வாழ்வோருக்கு முற்றிலும் புதியதானதொரு நீதித்துறை மாற்றங்கள் சட்டமாகின்றன. மதச் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டார்கள்.

ஒல்லாந்தர்கள் ஆட்சியைப் பிடிக்கும் முன்னர் வரை இந்து மதத்தவருக்கோ, முஸ்லிம் மதத்தினருக்கோ தனியாகச் சட்டங்கள் எதுவுமில்லை. ஒல்லாந்தர் காலத்தில்தான் இந்துச் சட்டம் என்றும், முஸ்லிம் சட்டமென்றும் புதிய சட்டங்கள் அவர்களது சமூகப் பழக்க வழக்கங்களையொட்டி வரையறுக்கப்படுகின்றன. புதிதாகச் சிங்களப் பகுதிகளில் இஸ்லாமும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

ஆங்கிலேயர் காலத்தில் பைபிள் சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. கிறிஸ்தவம் வேகமாக வேரூன்றி வருவது கண்டு கொதித்த ஆறுமுகநாவலர் இந்துமதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் சைவசமய நூல்களை வெளியிட முனைந்தார். ""கிறிஸ்தவ மதமும் இந்துமதமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சேவையில் ஈடுபட மதகுருமாரான அநகாரீக தர்மபாலா புத்த மதத்தை வளர்க்க இயக்கம் நடத்தினார். அதற்கெனச் "சிங்கள பெüத்தயா' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தினார். முஸ்லிம்களின் கடைகளைப் பகிஷ்கரிக்கும்படி தனது பத்திரிகைகளிலும், வெளியீடுகளிலும் அவர் எழுதினார்.

தர்மபாலாவின் தந்தை டொன் கறோலிஸ் தளவாடக் கடை ஒன்று வைத்திருந்தார். இவருக்குத் தர்மபாலாவைத் தவிர்த்து இரு மகன்கள் உண்டு. சிங்கள வர்த்தகர்களின் பண உதவியால் இயங்கி வந்த புத்த மறுமலர்ச்சி இயக்கம் அவர்களின் வியாபார வேலைகளுக்கு ஆதரவு வழங்கியது. இவர்களை தேசபக்தர்கள் என்றும் நியாயமான வழியில் பணம் சம்பாதிப்போர் என்றும் புகழ்ந்தது. அதே தர்மபாலா இந்தியா போன்ற இடங்களில் இருந்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்தவர்களை அநியாயமாகப் பணம் சம்பாதிப்போர் என்று சாடினார்.

சிங்கள நாவலின் தந்தை எனக் கூறப்படும் பியதாசசிரிசேன தனது "சிங்கள ஜாதிய' என்ற பத்திரிகையில் மேலைக் கலாசாரத்திற்கு எதிராக எழுதிய அதே வேளையில், சிங்களவர் அல்லாதோரையும் தாக்கியும் எழுதினார்.

இலங்கையின் வரலாற்றிலேயே இரு இலங்கைச் சமூகங்களிடையே ஏற்பட்ட முதலாவது கலவரம் 1915-ஆம் ஆண்டின் சிங்கள-முஸ்லிம் கலவரமாகும். சிங்களவர்கள் அல்லாதவர்கள் என்ற காரணத்தினால் முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்பட்டன. அவர்களின் சொத்துக்களும் பறிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரங்களின் பின்னால் சிங்கள வியாபாரிகள் பலர் இருந்தனர்.

இந்த கலவரத்தின்போது சிங்களத் தலைவர்களாக மலர்ந்து கொண்டிருந்த எஃப்.ஆர்.சேனாநாயக்க, டி.எஸ்.சேனா நாயக்க போன்றோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை அரசியல் கைதிகளாக்கியது அரசு. அரசுக்கெதிராகச் சதி செய்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் 1915-ஆம் ஆண்டின் கலவரங்கள் சிங்களவர்களின் உள்நாட்டு இனவாதத்தின் ஒரு பயங்கரமான வெளிப்பாடு ஆகும். இதுவே சிங்கள இனவாதத்தின் முதலாவது (ஆங்கில ஆட்சியில்) வெளிப்பாடும் ஆகும்.

கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி குறிப்பிடத்தக்க தமிழர் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் பிரிட்டிஷ் அரசிடம் வாதிட்டு வெற்றியும் பெற்றார். அவர் லண்டனிலிருந்து திரும்பியபோது சிங்களவர்கள் சாரட்டு வண்டி ஒன்றில் பொன்னம்பலம் இராமநாதனை அமரவைத்து, வடம்பிடித்து இழுத்து வந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்'' என்று சமுத்திரன் எழுதிய "இலங்கைத் தேசிய இனப்பிரச்னை' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனமூர் கமிஷன் சிபாரிசு செய்த ஷரத்துக்களின்படி பார்த்தால் "டொனமூர் மீன்ஸ் டமிள்ஸ் நோ மோர்' என்று கூறியதுடன் மேற்கண்ட நிகழ்ச்சிக்காக பொன்னம்பலம் இராமநாதன் பின்னாளில் வருத்தமும் பட்டார்.

போர்த்துகீசிய, ஒல்லாந்துச் சட்டங்கள் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளன. இவர்களின் கலாசாரத் தாக்கத்தைவிட ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் நிகழ்ந்த தாக்கங்களே அதிகம். இலங்கையில் இன்று கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் (7சதவிகிதம்) இருப்பதற்கு காரணம் ஆங்கிலேயரே. தமிழர்-ஆங்கிலேயர், சிங்களர்-ஆங்கிலேயர் கலப்புத் திருமணங்கள் வெகுவாக ஊக்கப்படுத்தப்பட்டன. பிரபல தத்துவ ஞானியான ஆனந்த குமாரசாமியின் தாயார் ஓர் ஆங்கில மாது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்ததும் சர்ச்சுகளும், ஆங்கிலப் பள்ளிகளும் மளமளவென்று எழுந்தன. நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்து அலுவலர் பிரிவு என ஒரு புதிய வர்க்கத்தையே ஏற்படுத்தினர்.

ஆங்கிலமொழித் திணிப்பு என்றளவோடு நின்றுவிடாது, அதைப் படித்தால் வேலை, அதற்கேற்ற ஊதியம் என்றும் கவர்ச்சியூட்டினர். இதனால் பெரும்பாலோர் ஆங்கிலம் கற்கவும், புதிய வேலைகள் பெறவும் ஆர்வம் காட்டினர். இதிலும் குறிப்பாகத் தமிழர்களுக்கு ஆங்கிலமொழி சிங்களவரைக் காட்டிலும் சிறப்பாக வந்தது. அதனால் அலுவலகங்களில் தமிழர்களே அதிக இடம் பிடித்தனர்.

ஆங்கிலேயர் செய்த மிகப் பெரிய செயல் இலங்கையின் பொருளாதார அமைப்பையே மாற்றியது. இங்கிலாந்தில் எந்தப் பொருளுக்கு கிராக்கியுண்டோ, எந்தப் பொருளைப் பயிர் செய்ய வாய்ப்பு அதிகமில்லையோ-அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வகையில் இந்தப் பொருளாதாரக் கொள்கை அமைந்தது. இதன் மூலம் விவசாயப் பொருளாதாரம் அழிந்து தோட்டப் பயிர் பொருளாதாரம் இலங்கையில் உருவாயிற்று.

இலங்கையின் அன்றாட மக்களின் உணவுக்கு மூலாதாரமான அரிசி, பருப்பு முதலியவைகளை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமளவு நெல் உற்பத்தி குறைந்தது. பணப்பயிர்களான தேயிலை, காபி, ரப்பர் முதலியவற்றை விளைவிக்கும் வகையில் இவர்களது செயல் இருந்தது. இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆங்கிலேயர் புதிதாகச் சில நிலச்சட்டங்களை வகுத்தனர். அதில் ஒன்று மன்னர் நிலச்சட்டம் (1840). இதன் மூலம் விவசாய நிலங்கள், காடு வளர்ச்சி என்ற பெயரில் பிடுங்கப்பட்டது.

இப்படிப் பிடுங்கப்பட்ட நிலங்களில் தோட்டப் பணப் பயிர்களான தேயிலை, ரப்பர், காபி, தென்னை முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். இச்சட்டத்தின் மூலம் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த சிங்களவர்களும், தமிழர்களுமாவர். இவர்கள் காட்டையும், மலையையும் சார்ந்து வாழ்ந்தவர்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் இத்திட்டத்தில் பாதிப்பு எதையும் அடையவில்லை. காரணம், அந்தப் பகுதியில் மலைகளோ, காடுகளோ இல்லை. அப்பகுதி அனைத்துமே பாசன வசதி கொண்ட நிலங்கள் ஆகும்.

வியாபாரம், நிதி மூலதனம், மேல்நிலை ஆதிக்கம் யாவுமே ஆங்கிலேயர் வசமிருந்தது. இதனால் சிங்களவர்களாலும், தமிழர்களாலும் பெரிய அளவில் வியாபாரத்துறையில் ஈடுபடவோ, தொழில் துறையைத் துவங்கவோ இயலவில்லை. இதனாலும் சிங்களவர்கள் இந்தக் காடு ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். தங்களது எதிர்ப்பை தோட்டங்களில் வேலை செய்ய மறுப்பதன் மூலம் வெளிப்படுத்தினர். ஆங்கிலேயர்களோ இதை எப்படியும் சமாளித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார்கள்.சர்.பொன்னம்பலம் இராமநாதன், இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபை பிரதிநிதி என்றிருந்தபோது இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை இருமுறையும் எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர்கள் சிங்களவர்களே! "இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும். தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம்மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும். இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா? இவ்விதம் மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு வயசு 78. (பக்கம்.1791 சட்டமன்றப்பதிவேடு மூன்று-1928)


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=71481&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 8 -"தினமணி" தொடர் ♥


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 8  

ஐக்கிய இலங்கை எனும் அரசியல் தவறு!


வன்னியில் பண்டார வன்னியன் ஆட்சி தொடர்ந்தது போல தமிழர் பகுதிகள் ஆங்கிலேயர் வசமான போதிலும் அவற்றைத் தனித்தனி நிர்வாகத்திலேயே வைத்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த இலங்கையின் வரைபடம்தான் (ஆரோஸ்மித் தயாரித்தது, படங்கள் பகுதியில் காண்க) இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.

1797-இல் இலங்கையின் தமிழர் பகுதியில் கலகம் ஒன்று நிகழ்கிறது. இதை அடக்க அல்லது மாற்று ஏற்பாடுக்கு உத்தரவிட யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி சென்னை மாகாணத்தின் அதிகாரியை நாடவேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் கலகத்தை ஊக்குவிப்பதாக அமைந்தது.

எனவே, சென்னை மாகாணத்தில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலுமாக வைத்துக்கொண்டு நீதி~ நிர்வாகம் செய்வதன் சாதக பாதகங்களை உத்தேசித்து, இலங்கையின் பகுதிகளை~இலங்கை மண்ணிலிருந்தே நிர்வகிப்பது என முடிவெடுக்கப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் இலங்கை, இங்கிலாந்தின் காலனி நாடுகளில் ஒன்று என்ற அந்தஸ்தினைப் பெறுகிறது. முதல் ஆளுநராக 1798-இல் ஃப்ரெடரிக் நார்த் என்பவர் நியமிக்கப்படுகிறார்.

ஃபிரெடரிக் நார்த் ஆளுநராக வரும் வரையிலும், வந்த பின்னும் சில ஆண்டுகள் வரை யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி ராஜ்ஜியங்கள் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. இப்படித் தனித்தனியான நீதி நிர்வாகத்தை ஒன்றாக்கினால் செலவு குறையும் என்ற கருத்துப் பரவலாக எழுகிறது. வெவ்வேறான கலாசாரங்களைக் கொண்ட இலங்கையர்களை, செலவைப் பாராது, தனித்தனியாக ஆட்சி புரிவதே நல்லது என்ற எதிர்க் கருத்து ஒன்றும் அதே நேரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

இதைத் தீர்மானிக்க, ஆணையம் ஒன்று (1931-இல்) அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்துக்கு கோல்புரூக் தலைவராக அமைகிறார். இவர் தெரிவித்த கருத்துகள்:

1. மூன்று வெவ்வேறு ஆட்சிக்குப்பட்ட பகுதிகளின் நில வருமானத்தைப் பாதிக்காத வகையில் சில சீர்திருத்தங்கள் காண்பது.

2. இந்தச் சீர்திருத்தங்கள் வெவ்வேறு கலாசாரங்களைக் கடைப்பிடிக்கும் மக்களின் தனித் தன்மையைப் பாதிக்காத அளவில் அமைய வேண்டும்.

-என்று குறிப்பிட்ட கோல்புரூக், ஆங்கிலேய அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும் வைக்கிறார். சிங்களவர்~ தமிழர் இருவரிடையே நிறைய வித்தியாசமிருக்கிறது; இருவரது கலாசாரமும் வெவ்வேறானவை. காலம் காலமாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை, புதிய சட்ட திட்டங்களின் மூலம் சீர்திருத்துவது என்பது ஒழுக்கமற்ற செயலாகவே இருக்கும். இதன் மூலம் உருவாகும் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் அவர் அடித்துக் கூறுகிறார். இலங்கை வரைபடம் ஒன்றையும் அத்துடன் இணைக்கிறார் (பட உதவி: தமிழ் ஈழ நாட்டு எல்லைகள்-காந்தளகம்).

கோல்புரூக்கின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாகச் சிக்கனத்திற்கான விஷயங்களை மட்டும் லண்டனில் உள்ள அரசுச் செயலாளர் எடுத்துக் கொள்கின்றார். நிர்வாகம் ஒருமைப்படுத்தப்பட்டு இருந்த போதிலும் 1833 வரை மேற்கே சிலாபத்தில் இருந்து தென் கிழக்கே வளவை கங்கை வரையுள்ள இலங்கைத் தீவின் வடக்கு, வடமேற்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் தமிழரின் வாழ்விடங்களாக அப்போதே ஆங்கிலேயரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் தேசிய இனத்தையும், சிங்கள தேசிய இனத்தையும் ஓராட்சியின் கீழ் நீதி-நிர்வாகம் செய்வதில் அவ்வப்போது தோன்றும் சில சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை; ஓய்ந்தபாடில்லை. ஆங்கிலேயருக்குத் தீராத தலைவலியாக இந்தச் சிக்கல்கள் அமைந்தது கண்டு 1882-இல் மேலும் ஓர் ஆணைக்குழு அமைக்கப்படுகிறது.

இலங்கையின் வடமேற்குப் பகுதியின் ஆட்சியரான ஜே.எப். டிக்சன் இந்தக் கமிட்டியில் ஓர் உறுப்பினர். இவர் தனது கருத்துகளை ஆணையரிடம் கொடுக்காது, அப்போதைய இலங்கை ஆளுநரான சர். ஜேம்ஸ் ராபர்ட் லாங்டனிடம் 6-ஆம் தேதி செப்டம்பர் 1833-இல் சிறப்பு மனுவாகத் தருகிறார்.

1831-இல் கோல்புரூக் ஆணைக்குழு என்ன கருத்தைச் சொன்னதோ, அதே கருத்தைத்தான் ஜே.எப். டிக்சனும் தெரிவிக்கிறார். மனுவில் டிக்சன் கூறியிருப்பதாவது:

"மூன்று வெவ்வேறான ஆட்சிப் பகுதியிலுள்ள மக்களின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படி ஆட்சிபுரிய ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்தனி ஆட்சிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆட்சிக்குழுக்கள் தனித்தனியாக மூன்று ஆட்சி ஆணையர்களை நியமிக்கலாம்' என்கிறார்.

"மனுவை அதற்கென ஆராயும் ஆணையத்திடம் தராது தனியாய் தருவதின் நோக்கம் என்னவெனில், ஆணையத்திடம், மூன்று ஆட்சிப் பகுதிகளில் உள்ள மக்களின் நலன்களைப் பேணுவதில் அலட்சியப்படுத்தும் போக்குக் காணப்படுகிறது' என்றும் அதில் டிக்சன் தெரிவிக்கிறார். டிக்சன் மேலும் ஒரு தகவலைத் தீர்க்கமாகக் குறிப்பிடுவதாவது:

"அரசு அமைப்பை மாற்றி ஒற்றை ஆட்சி அரசு ஒன்றை அமைப்பது தற்காலத்திற்கும் ஏன் எதிர்காலத்திற்கும் கூட உகந்ததாக இருக்காது. ஏனெனில் மூன்று மக்களும் மதத்தால், கலாசாரத்தால் மிகப்பெரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளனர். இந்த வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாது ஒற்றை ஆட்சி அரசு அமைத்தால் ஆட்சியாளரின் (ஆங்கிலேயரின்) குணாம்சத்தில் மக்கள் அவநம்பிக்கை கொள்வது நிச்சயம்'~ என்றும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்.

மனுவைப் படித்துப் பார்த்த ஆளுநர் சர் ஜேம்ஸ் ராபர்ட் லாங்டன், "இந்த மனுவில் குறிப்பிடும் விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை' என்னும் குறிப்புடன் இங்கிலாந்தில் உள்ள காலனியாதிக்கச் செயலாளருக்கு அனுப்பி விடுகிறார்.

ஆளுநர் "கவனத்தில்' கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டார். "கவனம்' காகிதத்தோடு நின்று போனது. டிக்சனின் கருத்துக்கு நேர் எதிரிடையாக தனது சொந்த எண்ணத்தை செயல்படுத்த ஆளுநர் தீவிரமாக முனைந்தார்.

மூன்று வெவ்வேறான ஆட்சிப் பகுதிகளை அரசின் ஒப்புதலோடு ஒன்றாக்கி உருவாக்கினார். இலங்கை முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் ஏற்கெனவே வந்து விட்டபோதிலும் அதுநாள் வரை தனித்தனியான நீதி நிர்வாகம் நடந்து வந்தது. அதை அவர் ஒழித்தார். இந்தச் செயல் மூலம் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் செய்ய முடியாத செயலைச் செய்தவர் என்ற பெருமையினையும் பெற்றார்.

ஆனால் அப்போது இலங்கையில் வசித்த நடுநிலையான ஆங்கிலப் பத்திரிகையாளர்களில், குறிப்பாக ஈ.ஜே. யங் இந்த அணுகுமுறையை "மிகப் பெரிய அரசியல் தவறு' என்று வர்ணித்தார்.

ஆக, நூற்றாண்டு கணக்கில் மூன்று பகுதிகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்ட இலங்கை -ஆங்கிலேயர் ஆட்சியில் நேர்மையாக இருந்த ஒரு சில ஆங்கிலேயராலேயே ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், வலிந்து திணிக்கப்பட்ட ஒரு செயலாக, நிர்பந்தமாக ஒரே இலங்கை என்ற "ஐக்கிய இலங்கை' உருவாக்கப்பட்டது. ஒரு டி.வி. பேட்டியில் ஜெயவர்த்தனே ""250 ஆண்டுகளாக இலங்கை ஐக்கியப்பட்டிருந்தது'' எனக் கூறியது உண்மை வரலாற்றைத் திரித்துக் கூறும் எவ்வளவு பெரிய பொய் என்பது மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.

நாளை: ஐரோப்பியர் ஏற்படுத்திய விளைவுகள்
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=70921&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81:+8+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81!

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!