தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, June 25, 2009

தமிழ் பாப் பாடகி சீ.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டிக்கு வெட்டு

தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியதுஇன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ)  வழங்கிய பேட்டியை  சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆனால் உலகப் பிரசித்தி பெற்ற பொப் பாடகி. ஒஸ்கார் விருதுக்காக இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடததக்கது.

இவர் அண்மையில் சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஒரு மணித்தியால நேரம் நீடித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார்.

ஆனால் ஒரு நிமிடப் பேட்டியை மட்டுமே சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாக எம்.ஐ.ஏ கூறியுள்ளார். தணிக்கைக்கான காரணம் அவர் பயன்படுத்திய 'இன அழிப்பு' என்ற பதம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேட்டியின்போது, கிட்டத்தட்ட 20,000 தமிழர்கள் அரச படைகளால் கடைசிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதை இவர் விபரித்திருந்தார்.

பயங்கரவாதிகள் என்று கூறி தமிழ் மக்களையே அரசு கொல்கிறது என்றும் இறுதியில் புலிகள் எல்லோரையும் அழித்து விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த பொய்யர்களை அழைத்துக் காண்பித்தாலும் அவை எல்லாம் அரசாங்கத்தையே ஈடுசெய்யப்போகிறது, எங்கள் தமிழ் மக்களை அல்ல என்று அப்பேட்டியில் கூறியிருந்தார்.

அவை எல்லாம் சி.என்.என் ஆல் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.


http://eeladhesam.com/

♥ யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை தீ வைப்பு ♥

யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை தீ வைப்பு
 
 http://mathimaran.files.wordpress.com/2009/02/burning-hand.jpg
யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படும் 4 நாளேடுகள் இன்று இனந்தெரியாத சில ஆயுததாரிகளால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரப்பகுதியான கன்னாதிட்டி சந்தி, ஆனைப்பந்தி சந்தி ஆகிய பகுதிகளில் நின்று நாளேடுகளை விநியோகிக்கும் பணியாளர்களை வழிமறித்து, நாளேடுகளின் பிரதிகள் அனைத்தையும் தீ மூட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட 'நாட்டை காக்கும் தமிழர் கூட்டணி" என்ற பெயரில் வெளியான துண்டு பிரசுரத்தை, இன்றைய நாளேட்டில் பிரசுரிக்குமாறு நேற்று நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

எனினும், ஆதாரமற்ற அந்த துண்டு பிரசுரத்தினை இன்றைய நாளேடுகளில் பிரசுரிக்க அதன் ஆசிரியர்கள் இணங்கவில்லை.

இந்த நிலையில், இன்று இடம்பெற்றுள்ள தீ மூட்டல் சம்பவத்தின் பின்னணியில் இந்த துண்டு பிரசுரம் தொடர்பான நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம் என நாளேடுகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

http://eeladhesam.com/
http://www.firewebdesigns.com/images/fire_02.jpg

♥ "பத்து வருடத்தில் நான் போராளி ஆவேன்" கோவையில் சிறுவன் முழக்கம். ♥


"பத்து வருடத்தில் நான் போராளி ஆவேன்" கோவையில் சிறுவன் முழக்கம்.
http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/tamil-tigers-460_981150c.jpg    http://lh5.ggpht.com/_YpskrslrWe4/SY1ro_rA_UI/AAAAAAAAAWw/b1bQKsGM5qg/29_31_02_09_010%5B1%5D_thumb%5B4%5D.jpg
கோவையில் தமிழர் ஆதரவு முன்னணி சார்பாக ஈழ ஆதரவாளர் விடுதலை இயக்க மாநாடு 21.6.09 அன்று நடந்தது. புதுகோட்டை பாவாணன், இயக்குனர் சீமான், ராம், கொளத்தூர் மணி, வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்க ஐய்யாயிரதிர்க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடு சிறபாக நடந்தது. Image and video hosting by TinyPicமாநாடு நடந்துகொண்டு இருக்கும் வேளையில் திடீரென மேடை ஏறிய ஆத்தூரில் பயிலும் எட்டு வயது சிறுவன் நக்கீரனும், அவரின் மூன்று வயது தங்கை இனியாவும் மைக் பிடித்து, "நமது தொப்புள் கொடி உறவுகளை அங்கு கொத்து கொத்தாக கொன்று ஒழித்தனர் நாம் கண்டுகொள்ளவில்லை இனி அப்படி இருந்துவிட கூடாது நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் தான் எதிரி இடைகாலமாக வெற்றி பெற்று உள்ளான். ஆனாலும் நாம் சோர்ந்துவிடக்கூடாது.

இதுவரை ஈழத்தமிழர்களுக்காக நடந்த போராட்டம் இனி உலக தமிழர்களுக்கான போராட்டமாக அமைந்துவிட்டது. நம் உறவுகளை காக்க, நமகென நாடு அமைய ஒவ்வொரு தமிழக தமிழர்களும் தங்கள் வருமானத்தில் இருந்து பத்து விழுக்காடு நிதியை ஒதுக்கி விடுதலை போராட்டத்திற்கு உதவ வேண்டும்.

என் பங்காகவும், நான் என் நண்பர்களிடம் பெற்ற வகையிலும் ஆராயிரதி இருநூற்றி பத்து ரூபாயை வழங்குகிறேன்  'தமிழரின் தாயகம் தமிழ் ஈழ தாயகம்'" என முழங்கி நிதியை கொளத்தூர் மணியிடமும், சீமானிடமும் கொடுக்க பலத்த கரகோசம்.

வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று உணர்வாளர்கள் மத்தியில் இருந்து வீர விடுதலை முழக்கங்கள் முழங்கப்பட்டு அரங்கையே அதிர வைத்தது.

மேலும் சிறுவன் நக்கீரன் "இன்னும் பத்து வருடம் கழித்து நானும் என் தங்கையும் போராளியாக மாறபோகிறோம்" என உணர்வோடு கூறியது தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவு உணர்வு இன்னும் உயிரோடும், உயிர்போடும் உள்ளது என்பதை நிரூபித்தது. கோவையில் ஒலித்த ஒழி தேசம் கடந்த தமிழர்களை உசுப்பி உள்ளது
 
http://eeladhesam.com/

http://www.viyapu.com/news/wp-content/uploads/2008/06/01032.jpg   http://www.envazhi.com/wp-content/uploads/2009/03/heavy-battle-at-puthukudiyiruppu-19-march-436x600.jpg

♥ வேங்கைகள் விளையாடிய மண்ணில் பிணம் தின்னும் கூட்டம்! ♥

வேங்கைகள் விளையாடிய மண்ணில் இன்று பிணம் தின்னும் வெறி நாய் கூட்டம்!

http://vizhippu.com/wp-content/uploads/2009/04/photo149.jpg

உலக வல்லாதிக்க சக்திகள் எம்மை ஒருமித்து தாக்கி அழித்த போதும், எமது படை பலம் குன்றி நாட்திசையிலும் நாம் சுற்றி வளைக்கப்பட்ட போதும், எதிரியின் படை வளம் எல்லாம் திரட்டி எம் மீது குண்டு மாரி பொழிந்த போதும், தளரவில்லை தமிழர் படை. சிங்கள இராணுவத்திற்கு இறுதிவரை பெரும் இழப்புகளை ஏற்படுத்திகொண்டுதான் இருந்தது. ஆனால் தாய்கோழி தன் சிறகுக்குள் குஞ்சுகளை காப்பதுபோல் காத்துவந்த தமிழ் மக்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு ஒட்டுமொத்தமாய் சிங்களவன் அழிக்க முற்பட்ட போதுதான் கலங்கி நின்றது புலிகள் சேனை. மரணத்தை கண்டே அஞ்சாத மாவீரர்கள் பிஞ்சு குழந்தைகள் தம் கண்முன்னே துடி துடித்து இறப்பது கண்டு தவித்தார்கள், மரணம் நிச்சயம் எனத்தெரிந்தும் தம் ஆயுதங்களை மௌனிகத் துணிந்தார்கள்.

குட்ட குட்ட குனிந்திருந்து, கூனியின் சந்ததிபோல் மாறியிருந்த தமிழினத்தை தலைநிமிர வைத்தது எம் புலிப்படை. யாருமில்லையா எமைகாக்க என ஒரு தேசிய இனம் பதறித் தவித்தபோது, நாங்கள் இருக்கிறோம் என வந்து, உயிரையே ஆயுதமாய் கொண்டு, எமக்கு அரணாய் நின்று, 35 வருடங்களாய் எமை காத்திட்டது எங்கள் புலிப்படை. அப்படை இன்று சந்தித்து இருக்கும் பாரிய இராணுவ பின்னடைவால் தமிழினமே கதிகலங்கி நிற்கிறது. ஈழக்கனவு பலிக்காது என கொக்கரிக்கிறான் சிங்களவன். மாங்குளத்துக்கும், முல்லைத்தீவுக்கும் சிங்களப் பெயரிடத் துடிக்கின்றான். வெள்ளவத்தை முதல் பதுளை வரை தமிழர் வாழும் பகுதியெங்கும் ஏலனச்சிரிப்போடு வெடிகொளுத்தி மகிழ்கிறான். தமிழினத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட திட்டங்கள் போட்டுவிட்டான் சிங்களவன். உதவக் காத்திருக்கிறார்கள் எட்டப்பர்கள்!

இனி என்ன? என்ற கேள்வியோடும், சிரிப்பு மறந்த முகங்களோடும்,வரப்போகும் இருண்ட காலங்களை எண்ணி இலங்கை தீவெங்கும், உலகெங்கும் எம் தமிழ் உறவுகள். திறந்த வெளி சிறைகளில் உள்ள எம் சொந்தங்களை நினைக்கவே நெஞ்சு பதறுகிறது. இனி அவர்களின் எதிர்காலம் முட்கம்பி வேலிகளுக்கு உள்ளேதானா?? அங்குள்ள எம் குழந்தைகள் நிலை? எம் இளம் பெண்கள் நிலை? வந்தாரை வாழவைக்கும் தமிழினம் இன்று ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் நிலை.

என் வீரத் தமிழினமே!!!
எல்லா அழிவையும் எமக்கு தந்துவிட்டு சிங்களவன் மட்டும் நிம்மதியாய், உல்லாசமாய்!!! தீ தீண்டாமலே எம் உடலும் மனமும் பற்றி எரிகிறதே!!! எம் வலியை அவன் உணர வேண்டாமா? இழப்புகளை அவனும் அறிய வேண்டாமா? அவன் செய்திருக்கும் மாபாதகத்தின் பலனை அவனும் அனுபவிக்க வேண்டாமா? எம் காவல் தெய்வங்களை இழந்துவிட்டு பரிதவித்து நிற்கிறோமே, அந்த தவிப்பின் வலியை நிச்சயம் அவனுக்கு காட்ட வேண்டும், இவ்வளவு காலம் புலிகள் எவ்வளவு பொறுமை காத்தார்கள், எவ்வளவு தர்ம நியாயப்படி யுத்தம் செய்தார்கள், கொழும்பும் சிங்கள மக்களும் ஏன் பேரழிவுகளை சந்திக்கவில்லை என்று இனி அவர்கள் அனுபவித்து உணர வேண்டும். எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாய் உள்ள சர்வதேசமும் அறிய வேண்டும்.

எம்மில் சிலருக்கு சிங்களவர்கள் பற்றி இன்னும் கூட கொஞ்சம் நல்லபிப்ராயம் இருக்கலாம், சிங்களவர்கள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்ற நம்பிக்கையும் இருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அவ்வாறான எதிர்பார்ப்பு மிக மிக தவறானதே. நெல்வயலில் களைகளுக்கு நடுவே துளசியும் தூதுவளையும் இருந்தால் அவையும் களைகளே! அகற்றப்படவேண்டியவையே! சிங்களவர்கள் மத்தியில் வாழும் நேரடி அனுபவத்தில் சொல்கிறேன், சிங்கள இனவாத நச்சு விதை பரவலாக தூவப்பட்டு, இனவெறி அரசுகளால் போஷிக்கப்பட்டு, இன்று விருட்சமாய் சிங்கள தேசமெங்கும் வியாபித்து நிற்கிறது. எம் குழந்தைகள் பசியால் வாடி அழுவதை, காயம் பட்டு கதறுவதை, உயிரற்ற சடலங்களாய் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை சிங்கள மக்களும் தான் தினம் தினம் பார்த்தார்கள். தமிழ் கர்ப்பிணி தாய்மார் சிதறுண்டு கிடப்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். ஆனால் ஐயோ பாவம் என்று சொல்ல கூட அவர்களுக்கு மனம் இல்லை என்பதே தற்காலத்தின் கசப்பான யதார்த்தம். அழிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும், கருவிலேயே கருகிப்போன ஒவ்வொரு சிசுவும் நாளைய புலியே, ஆகவே இப்போதே அழித்துவிடுவதில் தவறில்லை என்பதே சிங்களவரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. எம் அழிவில் சுகம் கண்டே பழகிவிட்டார்கள்.

மகாவம்ச மூடச்சித்தந்தத்தில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள தேசம் இதுநாள்வரை என்றுமே தீவிரவாதத்தை பார்த்ததில்லை, வாழ்வா சாவா என்ற உயிர்பயத்தை உணர்ந்ததில்லை. பார்க்க வேண்டிய, உணரவேண்டிய வேளை இப்போது வந்து விட்டது. விடுதலை இயக்கம் என்றால் என்ன? தீவிரவாத இயக்கம் என்றால் என்ன? விடுதலை போர் வீரர்கள் செயல்படும் விதம், தீவிரவாதிகள் செயல்படும் விதம்… இவற்றை சிங்களவனுக்கு தெரியப்படுத்தும் காலம் வந்து விட்டது. மக்களை மொத்தமாய் அழிக்கும் பாதகத்தை சிங்களவனிடமே நாம் கற்றுகொண்டாகி விட்டது. இனி நாம் சர்வதேசத்திடம் நற்பெயர் பெற வேண்டிய அவசியமில்லை, யார் என்ன சொல்வார்களோ , யார் என்ன செய்வார்களோ என்று எண்ணி தயங்கத் தேவை இல்லை. அறப்போர், போர் விதிமுறைகள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் என இனி எதுவுமே இல்லை. ஏற்கனவே சிங்களவன் இந்நீதிகளை செல்லகாசாக்கி விட்டான் . எவருடைய அங்கிகாரத்திட்கும் நாம் காத்திருக்க தேவை இல்லை, சிங்கள தேசத்தின் மேல் அடி மேல் அடி விழுகையில், அங்கிகாரத்தோடு எம்மை தேடி உலகம் வரட்டும். என் மக்கள் கூட்டம் கூட்டமாய், குழந்தைகளும், பெண்களும், முதியோருமாய் செத்து விழுகையில் வாய்மூடி வேடிக்கை பார்த்த சர்வதேசம் சிங்களவன் அழுகுரல் கேட்டு ஓடிவருகிறதா பார்போம்.

உலக நாடுகளில் உள்ள இளம் தமிழ் தலைமுறையினரிடம் எமது தாயக விடுதலைக்கான அடுத்தகட்ட பணி ஒப்படைகப்பட்டுள்ளது. அதை அவர்கள் செவ்வனே செய்வார்கள். அடிமேல் அடி அடிக்க அம்மியும் நகர்வதுபோல், சர்வதேசமும் எமக்கு செவிசாய்க்கவும், எமக்காய் குரல் கொடுக்கவும் வைப்பார்கள் எம் இளையோர். ஆனால்!! அதேநேரம் ஈழத்தில் எம் ஆயுத படையை மீளக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பும் எம்முன்னே உள்ளது. என்ன வழியிலாவது அது நடந்தே தீரவேண்டும். தலைமை பற்றிய விவாதங்களுக்கு களத்தில் உள்ள புலிகளே தக்க நேரத்தில் விளக்கமளிகட்டும். ஆனால் ஈனச்சிங்களவனுக்கு ( சிங்கள படைக்கு மட்டும் அல்ல) பேரழிவைக் கொடுக்க, முள்ளிவாய்கால், புதுமாத்தளன், இரட்டைவாய்கால் அனுபவங்களை அவனும் அறியவைக்க, சாம்பலில் இருந்து புறப்படும் பீனிக்ஸ் பறவை போல, எம் தமிழ் படையும் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். அதற்கான எல்லாவித முயற்சிகளும் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். எப்படி, எங்கே, எப்போது என்று எம் புலிகளே எமக்கு கூறட்டும். இப்பெரும்பணியில் அவர்களுக்கு எவ்வாறு தோள் கொடுப்பது என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம். கொன்றோழிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ் உயிருக்கும் சிங்களவன் பதில் சொல்லியே தீரவேண்டும். தமிழரின் முதுகெலும்பை முறித்துவிட்டோம் என இறுமாந்து நிற்கும் சிங்கள தேசத்திற்கு எவ்வாறான வழிகளில் அழிவுகளையும், இழப்புகளையும் இனி வரப்போகும் காலங்களில் ஏற்படுத்தலாம் என நாம் ஒவ்வுருவரும் தீவிரமாய் சிந்திக்க வேண்டும்.

அரசியல் ரீதியான தீர்வுகள், தமிழ் ஈழத்தின் பிறப்பு இவை எல்லாம் காலத்தின் கட்டாயம். அவை நடந்தே தீரும். ஆனால்! பாதுகாப்பு பகுதி, யுத்த சூனிய பிரதேசம் என்றெல்லாம் கூறி எம்மக்களை ஓரிடத்தில் கூட வைத்து, மொத்தமாய் கொன்று குவித்து, கடற்கரை மண்ணோடு மண்ணாய் தடயமின்றி புதைத்தும் விட்டானே சிங்களவன், அதற்கு பதில்???? உலகமே அவர்களை கைவிட்ட சோகத்தில், நெஞ்சு நிறைந்த வலியோடு அல்லவா எம் உறவுகள் கண்மூடி இருக்கும??? இறுதி நிமிடத்திலாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, சர்வதேசம் கண்திறந்து இந்த அழிவு நின்றுவிடாதா என்று ஏங்கித்தவித்து இருக்குமே…. நினைக்க நினைக்க நெஞ்சு கனக்கிறது நமக்கு! எந்த உலக நாடும், எந்த சர்வதேச நீதிமன்றமும் அவர்களை எதுவும் செய்யபோவதில்லை. பதிக்கப்பட்ட நாமே தண்டனை கொடுப்பவர்களாயும் மாறவேண்டும். அதுவொன்றே தீர்வு ! நியாயமும் அதுவே !

நடந்ததை எண்ணி துயர் பகிர்ந்து, அழிவைத் தடுக்க ஒன்றும் செய்யமுடியாமல் போன சோகத்தோடு மீதமுள்ள வாழ்நாளை கடத்தப்போகிறோமா அல்லது எதிரிக்கு பாடம் புகட்டி, எம் தமிழீழ கனவை நனவாக்கி, வரலாறாகப் போகிறோமா என்பது எம் கைகளிலேயே உள்ளது.

புலிகள் சேனை மீண்டும் வீறுகொண்டு எழுகின்ற நாளுக்காய் உலகிலுள்ள ஒவ்வொரு உண்மை தமிழனும் உதிரம் கசியும் இதயத்துடன் காத்திருப்போம். விடிவு தொலைவில் இல்லை என உறுதியாய் நம்புவோம்.

"அக்கினி குஞ்சு பல கண்டோம், அவை வன்னியில் காட்டிடை சமராடக் கண்டோம், வெந்து தணிந்தது காடு, புலி வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!"

"விழுகையில் இடியென விழுந்தோம் இனி எழுகையில் மலையென எழுவோம்"

இராவணன்.
தமிழீழமே எம் தாகம்.

ravanan.eelam@gmail.com


http://www.nerudal.com/nerudal.8738.html

http://www.orunews.com/wp-content/uploads/2009/03/ltte.jpg  http://www.sankathi.com/uploads/images/news/2009/Fev/news%20060209/001.jpg

♥ இந்திய அடிமைகளே! விழித்தெழுங்கள்! ! ♥

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்! – க.அருணபாரதி
நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் "புலி"யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? "எமக்காக பேசுங்களேன்" என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

"இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்" என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது "உடன் பிறந்தோர்"தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி" என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட "இந்திய" அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். "நான் இந்தியன்" என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், "அவர்களை காப்பாற்றுங்கள்" என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. "இந்தியர்கள்" என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், "தமிழர்கள்" இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் "இந்தியா", கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், "இந்தியன்" என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?

http://www.nerudal.com/nerudal.8760.html


♥ "இணையதளங்களுக்கு அவசர வேண்டுகோள்!"-இளந்தமிழர் இயக்கம் ♥

இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கம் விடுக்கும் அவசர வேண்டுகோள்!

http://www.nmf-online.org/images/mn-pic.jpg


24.06.2009, சென்னை, தமிழ்நாடு. - இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன.

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு

விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

 மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், "போராளிகள்" என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய "றோ" உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற செய்தி "அதிர்வு", "நெருடல்" இணையதளங்களால் எழுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நெருடல் இணையதளத்தில் வெளியான "இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற" என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,

· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,

· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,

· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,

· கட்டாய ஆள் சேர்ப்பு  உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

ஏனெனில் இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட "வணங்காமண்" கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

ஏசியன் ட்ரைபியுன்" இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக "ஏசியன் ட்ரைபியுன்" குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

இந்தப் பின்னணியில் நெருடல் இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தோழமையுடன்,

க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழர் இயக்கம்


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=126:2009-06-25-12-12-46&catid=36:2009-06-20-00-25-22&Itemid=55

ஈழம் , அவசியம், அவசரம்! --- ஆனந்த விகடன்

ஈழம் அவசியம்... அவசரம்! ---விகடன்


டல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

'30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு.

'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள்.

 இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.

அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்....

 1. 'கூடாரங்களைப் பிரியுங்கள்!'

ஈழத் தமிழரின் இன்றைய பெயர், 'கூடார மக்கள்'. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், 'இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்' என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள். கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது

சிங்கள அரசு. 'கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். 'பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு' என்று சொல்லிவிட்டார்கள். 'இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்' என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!

2. காணவில்லை... காணவில்லை!

ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன. இதில் பெண்களும் சிறுவர் களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார் கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!

3. வெள்ளை அறிக்கை

நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்த வர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேத மானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?

முதல்கட்டமாக... பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!

4. பொதுமன்னிப்பு

"படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!" - இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. "வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்" என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!

5. ஏதாவது ஒரு நிவாரணம்

போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளைகொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள். ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக் கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!

6. பயமற்ற சூழ்நிலை

'இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை', 'பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்' என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணு வத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட் டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்க ளுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!

7. யாழ்ப்பாணம்

ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டு களாக இருக்கும் யாழ்ப்பாணம், 'எமர்ஜென்ஸி' பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப் பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!

8. கொழும்பு

எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக் கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!

9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்

புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்

இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப் பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேர டியாகப் பார்க்க யாரையும் அனும திக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக் கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்கவைத் தால் மட்டுமே அங்கு உள்ளவர் களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.

"20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்" என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=128:2009-06-25-15-01-28&catid=35:2009-06-20-00-24-54&Itemid=54


http://www.pathivu.com/uploads/images/2009/kepapulavu_attack_29_31_02_09_01_29_31_02_09_02.jpg

♥ "எப்படி தப்பினார் மதிவதனி?"--பிரபாகரன் போட்ட உருக்கமான கட்டளை... ♥

எப்படி தப்பினார் மதிவதனி?--பிரபாகரன் போட்ட உருக்கமான கட்டளை...

[Untitled-1+copy.jpg]

இந்திய 'ரா' உளவு அமைப்பினர், லேட்டஸ்டாக வேறொரு தகவலையும் டீல் செய்துகொண்டிருக்கிறார்கள். 'சுற்றி வளைக்கப்பட்டோம்.

 நடப்பது இறுதித் தாக்குதல்...' என்று பிரபாகரன் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அவருடைய மனைவி மதிவதனி எவ்வாறு திட்டமிட்டபடி கொல்கத்தா வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதே அவர்களுக்குக் கிடைத்த அந்தத்தகவல்.  இந்தியாவின் உள்துறை உளவு அமைப்பான ஐ.பி-யில் பணியாற்றி, தற்போது 'ரா'வின் தெற்காசிய விவகாரங்களை கவனிக்கும் முக்கிய அதிகாரி ஒருவரிடம் இதுபற்றிப் பேசினோம்.

 நம்முடைய நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு மெள்ள வாய் திறந்தார் அவர்.

''நமது 'ரா' அமைப்பின் உலகளாவிய ரகசிய பிரதிநிதிகள் கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவிலுள்ள சில முக்கிய புலித் தலைகளின் ஆதரவாளர்களையும், நிதி சேகரிப்பாளர்களையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 'பிரபாகரனின் மனைவி மதிவதனி, பிள்ளைகள் துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோர் பத்திரமாக இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார்கள்' என்ற தகவல், இந்தோனேஷியாவிலுள்ள ஒரு நபர் மூலமாக 'ரா'-வுக்குக் கிடைத்தது.

வாரகாவும், பாலச்சந்திரனும் இறுதிக் கட்டப் போருக்கு முன்பாக, கடந்த 2008 அக்டோபர் மாத இறுதியிலேயே கடல் வழியாக இந்தோனேஷியா சென்றிருக்கிறார்கள். பின்பு அங்கிருந்து அயர்லாந்துக்கு சென்று விட்டார் கள். மனைவி மதிவதனியையும் அவர்களுக்குத் துணையாக அயர்லாந்துக்கு செல்லும்படி பிரபாகரன் கட்டளை யிட்டும் மதிவதனி, பிரபாகரனை விட்டுப் பிரிய மறுத்திருக்கிறார். ஆனால், 'ஈழப் போராட்டத்துக்கு வீட்டுக்கு ஒருவரை அனுப்ப வேண்டும் என்பது நான் வகுத்த விதி. ந

மது குடும்பத்திலோ நான், நமது மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி என ஒருவருக்கு இருவராகக் களத்தில் இருக்கிறோம். அதனால் மற்ற இரு குழந்தைகளின் நலனுக்காக வன்னியை விட்டு நீ வெளியேறத்தான் வேண்டும்!' என மதிவதனியை நிர்ப்பந்தப்படுத்தினாராம் பிரபாகரன். மதிவதனி ஒரு வழியாக இதற்கு சம்மதித்தபோது... கடல் பகுதியில் பாதுகாப்பை இறுக்கிவிட்டது இலங்கை ராணுவம். அந்தக் கட்டுக்காவலையும் மீறித்தான் மதிவதனியை இந்தியா வழியாகத் தப்ப வைத்திருக்கிறார் பிரபாகரன்!'' என்றார் அந்த அதிகாரி.

''கடந்த ஜனவரி மாத இறுதியில் மதிவதனியின் புகைப் படத்தை ஒட்டி வசந்தி, க/பெ. மாரிமுத்து, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயரில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய மூன்று ஆவணங்களை இணைத்து, திருச்சியிலுள்ள ஒரு புரோக்கர்தான் அதற்கு விண்ணப்பித்திருக்கிறார். இதை ஓ.எஸ்.ஆர். (originel, scene, return) முறையில் செக் செய்து பாஸ்போர்ட் அதிகாரி 'அக்செப்டட்' என சீல் குத்தியிருக்கிறார். ஜனவரி இறுதியில் தயாரான இந்த பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டுதான் மதிவதனி இந்தியா வழியாகத் தப்பி யிருக்கிறார்.

போர் இறுதிக் கட்டத்தை எட்டிய மே முதல் வாரம், வேதாரண் யம் வழியாக இந்தியா வந்திருக்கிறார் மதிவதனி. தமிழகம் முழுவதும் தேர்தல் டென்ஷனில் மூழ்கியிருந்த அந்த சமயத்தில், போலீஸாரின் கண்களிலிருந்து தப்பி கொல்கத்தாவுக்குப் போயிருக்கிறார். அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் மூலமாக கடந்த மே 10-ம் தேதி ஹாங்காங் சென்றிருக்கிறார் மதிவதனி. ஹாங்காங்கிலிருந்து கனடா சென்று, பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினியின் ஏற்பாட்டில் மிகப் பாதுகாப்பான ஓரிடத்தில் இருக்கிறார்.

இதற்கிடையில் வசந்தி என்ற பெயரில் எடுக்கப்பட்ட பாஸ் போர்ட் தவிர, ஜானகி என்ற பெயரிலும் ஒரு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. அது யாருக்காக எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை!

இதெல்லாம் எங்கள் கவனத்துக்கு வந்ததுமே, கடந்த வாரம் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் சென்று, சம்பந்தப்பட்ட அந்த இரு பாஸ்போர்ட் ஃபைல்களையும் கைப்பற்றி விட்டோம். ஆன்லைனில் இருந்த அந்த பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களையும் முடக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரி களை எங்களின் டெல்லி அலுவலகத்துக்கே அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறோம். மேலும், இதே பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து ரவி மற்றும் பாஸ்கர் ஆகிய இலங்கைத் தமிழர்களுக்கும் 'தத்கல்' முறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை ஆவணங்களும் போலி என தெரிய வந்திருக்கிறது. இந்த பாஸ்போர்ட் மூலமாக, புலிகள் இயக்கத்தின் வேறு முக்கிய தளபதிகள் யாரும் தப்பினார்களா என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

எப்படியிருந்தாலும்... உலகின் பவர்ஃபுல் உளவு அமைப்புகளில் ஒன்றான ரா-வின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மதிவதனி தப்பியிருப்பது, அதிர்ச்சிக்குரிய ஒன்றுதான். உலகம் முழுவதும் புலிகளுக்கு உள்ள சொத்து விவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் புலிகள் அமைப்பு செயல்பட வேண்டிய தளம், திசை குறித்த சில திட்டங்களையும் மதிவதனியிடம்தான் பிரபாகரன் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மதிவதனியை நாங்கள் சந்திக்க முடிந்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது!'' என்று நீளமாகப் பேசி நிறுத்தினார் அந்த அதிகாரி.

----ஆனந்த விகடன்---

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=110:2009-06-24-05-50-14&catid=35:2009-06-20-00-24-54&Itemid=54♥ வணங்காமண் கப்பலுக்கு சிங்கள அரசு அனுமதி ♥

வணங்காமண் கப்பல் வன்னியை நோக்கி பயணம் – இந்திய நடவடிக்கையால் இலங்கை அரசு அனுமதி

mv_captain_aliவணங்காமண் – யாருக்கும் அடங்காமண். தனது மனித நேய உதவிப் பொருட்களுடன் 48 நாட்கள் கடலில் தத்தளித்து, இன்னும் சில தினங்களில் வன்னியில் உள்ள தமிழ் உறவுகளை நோக்கி பயணிக்கப் போகிறது.

வணங்காமண், உலகத் தமிழர்களின், குறிப்பாய் ஐரோப்பிய தமிழர்களின் கொடை மூலம் 884 மெட்ரிக் டன் எடை கொண்ட உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை சுமந்து கொழும்பு நோக்கி சென்றது. கொழும்பில் இலங்கைக் கப்பற்படை நான்கு நாட்கள் சோதனையிட்டு, உணவு மற்றும் மருந்து பொருட்கள் மட்டுமே உள்ளதாய் அறிக்கையையும் வெளியிட்டது. பின்னர் அற்ப காரணங்களை கூறி பொருட்களை இறக்க தடை விதித்து கப்பலையும் வெளியேறுமாறு கட்டளையிட்டது. இதனால் அதிர்ச்சியுற்ற லண்டனில் உள்ள மெர்ஸி மெசின் அமைப்பு, குறைந்தபட்சம் அக்கப்பலில் உள்ள பொருட்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பயன்படுத்தட்டும் என எண்ணினர். தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் மனிதம் – மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்ரமணியத்திடம் இப்பணியை ஏற்றுக் கொண்டு முறையாக விநியோகிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

வணங்காமண் சென்னை கடல் பகுதியை நோக்கி கடந்த 12ம் தேதி கொண்டுவரப்பட்டது. ஆனால் வந்தது பல சோதனைகள் என்ற பெயரில் இந்திய அதிகாரிகளும் காவல் துறையினரும் மேற்கொண்டனர். மனிதம்- மனித உரிமை அமைப்பின் அங்கத்தினர்களை விசாரணை என்ற பெயரில் 9 மணி நேரத்திற்கு மேல் மனித வதை செய்தனர். அச்சுறுத்தல்களால் பயப்படுத்தினர். சென்னையில் உள்ள கப்பலின் பொருட்களை இறக்குமதி செய்யும் முகைமையாளரான இம்பிரியல் ஷிப்பிங் முகவரையும் காவல்துறை விசாரித்தது.

இதற்கிடையே தமிழக முதல்வர் கருணாநிதி அதிரடியாய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு கடிதம் மூலம், கப்பலில் உள்ள பொருட்களை வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என எழுதினார். கால அவசரம் கருதி, இக்கடிதத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதத்தை எடுத்து டெல்லி சென்று, இந்திய மத்திய அமைச்சர் இராசா உடன் கிருஷ்ணாவை சந்தித்து கையளித்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க செய்வேன் என உறுதியாளித்திருந்தார்.

ஆனால் இங்கு தமிழர்கிடையே உள்ள சிலர் 24 மணி நேரமும் கப்பலில் உள்ள பொருட்கள் இங்கு இறக்குமதியோ அல்லது வன்னிக்கோ செல்ல விடாமல் தடுக்க பல முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். இதற்காக பல சிரத்தைகளை எடுத்துக் கொண்டு புரளிகளை பல வகைகளில் கிளப்பி விட்டனர். இதனால் அச்சமடைந்த இந்திய கப்பற்படை அதிகாரிகள் கப்பலை சோதனையிடமலேயே, கப்பல் சந்தேகத்திற்குரியது என சென்னை துறைமுக காப்பரேசனுக்கு அறிவித்தனர். இதற்கு பயந்த துறைமுக காப்பரேச அதிகாரிகள் கப்பலை சில கடல் மைல் கப்பலை நகர்த்தி வைக்க கட்டளை பிறப்பித்தனர்.

கப்பலில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேல் ஆனதால், கப்பலில் குடிநீர் பற்றக்குறை ஏற்பட்டது. அத்தோடு சிலருக்கு உடல் நலக்குறைவும் எற்பட்டது. இச்செய்திகளை ஊடகங்களுடன் மனிதம் அமைப்பினர் பகிந்து கொண்டு ஊடகங்களில் வெளி வந்ததால், உடனடியாய் சென்னை துறைமுக காப்பரேசன் குடிதண்ணீர் ஏற்பாடு செய்தது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணா இன்று இலங்கையின் மேல் மட்ட அதிகாரிகளுடன் வணங்காமண் குறித்து கலந்து கொள்ளப்படும் என அறிவித்தார்.

இன்று காலை முதலே, இந்திய ஊடகங்களில் வணங்காமண் குறித்து செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து மேல் மட்ட அதிகாரிகளாக அந்நாட்டின் அதிபர் ராசபக்சேவின் இரண்டு சகோதரர்களான கோதபைய ராசபக்சே மற்றும் பசில் ராசபக்சே ஆகியோர் தலைமையில் மதியம் டெல்லி வந்து சேர்ந்தனர். இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பாதுகாப்புச் செயலர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, திமுகவின் மத்திய அமைச்சர் ராசா தலைமையில் இன்று மதியம் மற்ற திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து வணங்காமண் திரும்பவும் வன்னி மக்களுக்கு சேர வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்.

இரு நாட்டு அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். கூட்டத்தின் முதலிலேயே வணங்காமண் கப்பல் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சேர்ப்பது குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு இலங்கை எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உடனடியாய் சம்மதம் தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து இந்திய செஞ்சிழுவை சங்கம் மூலம் பொருட்களை எடுத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருட்களை தற்போது சென்னையிலோ அல்லது தூத்துக்குடி துறைமுகத்திலோ இறக்கப்பட்டு, சில தினங்களில் வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு சென்று சேர உள்ளது.

http://www.nerudal.com/nerudal.8740.html

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!