தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, May 7, 2009

நல்லா சொன்னாங்க


இலங்கை அதிபர் ராஜபக்சே வெறும் நடிகர் மட்டுந்தான்.
இங்கு இருந்து தான் அவரை(சோனியா காந்தி) டைரக் ஷன் செய்கிறார்கள்.

பிரபாகரனை அண்ணன் என்று சொன்னதால், என்னை சிறையில் அடைத்தார்கள்.வெளிநாட்டுக்காரரான சோனியா காந்தியை அன்னை என்று சொல்லும்போது, பிரபாகரனை அண்ணன் என்று சொல்வது தவறா என்று கேட்டேன்.அது சரி என்று வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்தார்கள்.

இயக்குனர் சீமான்


சினிமாவில் கதாநாயகன்,வில்லனை அடையாளம் காட்டும் நாங்கள், இப்போது தேர்தலில் வில்லனை அடையாளம் காட்டுகிறோம்.கதாநாயகனை நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

இயக்குனர் பாரதிராஜா.
http://www.newsinlive.com/article-uploads/2008/04/bharathraja-ap11-2008.jpg

தடுப்பு முகாம்களில் கொடும் காட்சிகள்! வீடியோ படம்

தடுப்பு முகாம்களில் கொடும் காட்சிகள்!


vanni_20090427004பிரித்தானியாவின் ‘சனல் - 4′ காணொளிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுகின்றது.

வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள ‘வதைத் தடுப்பு முகாம்’களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள். பக்கச்சார்பற்ற முறையில் - சுதந்திரமாகப் - படமாக்கப்பட்ட காட்சிகளும் தடுப்பு முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டு நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் கொடுமைக் கதைகளைச் சொல்லுகின்றன.

http://www.link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=22197914001


எச்சில் இலையில் உருளும்....தந்தை பெரியார் எழுதிய
"திராவிடர் - ஆரியர் உண்மை" என்னும் இச்சிறு புத்தகம்
தமிழச்சியின் பெரியார் இணையதளத்தில் முழுவதுமாக தரவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
திராவிடர் ஆரியர்களைப் பற்றி மிக எளிமையாக விளக்குகிறது தந்தை பெரியாரின் எழுத்துக்கள்.
வாசித்துப்பாருங்கள்.

http://tamizachiyin-periyar.com/index.php?article=1048
எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் பக்தி வேடம்

கரூரை அடுத்துள்ள நெரூர் சிறீசதாசிவ பிரம்மேந்திராள் தபோவனத்தில், எச்சில் இலைகள் மீது பக்தர்கள் உருளும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை வைசாக சுத்த தசமி தினம், சிறீசதாசிவ பிரம்மேந்திரசாமிகள் ஆராதனை உற்சவம் நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை, சந்தர்ப்பணை, பஜனை, சமபந்தி போஜனமும் நடக்கும்.

நேற்று நடந்த சமபந்தி போஜனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர், எச்சில் இலைகள் மீது பக்தர்கள், வரிசையாக உருண்டனர். 16 பெண்கள் உள்பட 44 பேர் உருள் நேர்ச்சையில் பங்கேற்றனர். கடவுளை வணங்குபவர்கள் இப்படிப்பட்ட சடங்குகளை அநாகரிகமான முறையில் செய்யும் போது கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதில் என்ன தவறு?

------------------"விடுதலை" 5-4-200


http://thamizhoviya.blogspot.com/2009/05/blog-post_114.htmlகடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதில் என்ன தவறு?

செஞ்சிலுவைச் சங்க கப்பல் செல்ல முடியாதவாறு படையினர் எறிகணைத் தாக்குதல்

செஞ்சிலுவைச் சங்க கப்பல் செல்ல முடியாதவாறு படையினர் எறிகணைத் தாக்குதல்


icrcஅனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதல் காரணமாக வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இந்தக் கப்பல் வன்னியில் ஒரு இலட்சத்து 65 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள பிரதேசத்தின் கரைக்கு செல்ல முற்பட்டபோது சிறீலங்கா படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட கப்பல் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல முற்பட்ட நிலையில், செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் சிறீலங்கா அரசுடன் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் இன்று பிற்பகல் மீண்டும் முல்லைத்தீவுக்குச் சென்று படுகாயமடைந்த நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சிறீலங்கா படையினருக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு வன்னிக்கு கப்பலை அனுப்பிய போதிலும், சிறீலங்கா படையினர் அதனைக் குறிவைத்து தாக்குதலை நடத்தியிருப்பதாக நம்பப்படுகின்றது.

வன்னிக்கான உணவைத் தடுத்து, அதனை ஆயுதமாகப் பயன்படுத்திவரும் சிறீலங்கா படையினர், படுகாயமடைந்த மக்களை வெளியேற விடாதும் தடுத்தும் வருவதையே இந்த செயற்பாடு புலப்படுத்துகின்றது.

வன்னியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க தாம் தயாராக இருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனால் அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாக, செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனீவா அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது

image widget


http://www.meenagam.org/?p=2717


தவிட்டை உண்ணும் எம் மக்கள்


வன்னியில் தற்பொழுது மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், கடற்கரை மணலில் பதுங்ககழிகளில் தஞ்சம் கோர முடியாத நிலை அந்த மக்களுக்கு ஏற்பட்டிருப்பதுடன், அவ்வாறு தண்ணீருக்குள் தஞ்சம் கோருபவர்களும் மருந்துகள் அற்ற நிலையில் தொற்றுநோய் அபாயங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை நாட்களும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்து தம் உயிர்வாழ்வை காப்பாற்றி வந்த மக்கள் தற்பொழுது அதுகூட இல்லாது தவிட்டில் தண்ணீரை ஊற்றிக் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆலைகளில் உள்ள உமியை எடுத்து, அதில் உள்ள குறுனி அரிசியையும், தவிட்டையும் தவர்த்தி எடுத்து அதனை உணவாகவும், தென்னை, பனை குருத்துக்களை எடுத்து அதனை உணவாகவும் உட்கொள்ளும் நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இந்த உணவுகூட இல்லாது போகும் அபாயம் காணப்படுவதால், அந்த மக்களை பட்டினி அவலத்தில் இருந்து காப்பாற்ற புலம்பெயர்ந்த மக்கள் தமது போராட்டங்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என, வன்னி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.http://www.meenagam.org/?p=2709

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!