கோப்புகளை ஆன்லைனில் சேமிக்க
கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு பகிரவென பல சேவைகள் இருந்தாலும் அவை அளந்து அளந்தே ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களை கொடுக்கின்றன. ஆனால் நான் சமீபத்தில் அறிய வந்த தளம் www.mybloop.com இது Unlimited space கொடுப்பதுடன் ஏற்றம் செய்யப்படும் ஒரு கோப்பின் அளவு அதிக பட்சமாக 1Gig வரைக்கும் இருக்கலாமென சுதந்திரம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஒரு முழு திரைப்படத்தையே நீங்கள் ஏற்றம் செய்யலாம். Images can be hotlinked. இப்போதைக்கு சில நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கத்தினராக முடிகின்றது. எப்படி காசு பண்ணுகிறார்களோ தெரியவில்லை.
இன்றைய இணைய உலகில் மின்னஞ்சலும், அரட்டையும் - நூற்றாண்டின் மிகச்சிறந்த ஊடகங்களாகும்.
ஒலி,ஒளி,புகைப்படம்,ஆவணங்கள் போன்றவற்றை தினமும் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இவை பயன்படுகின்றன.
ஆனால் மின்னஞ்சல் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவுக்கு மேல் இணைப்புகளை ஏற்பதில்லை.
மின்னஞ்சலுடன் இணைக்கப்படும் இணைப்புகளின் கொள்ளளவுக்கு வரையறை விதித்திருக்கிறார்கள்.
இதனால் என்ன செய்கிறோம் ஒரு பெரிய அதிகமான கொள்ளளவு கொண்ட கோப்பு ஒன்றை சிறு சிறு கூறுகளாக்கி அதைத் தனித்தனியாக ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்புகிறோம்.
அல்லது ஏதேனும் ஒரு கோப்புப்பகிர்வான் தளத்தில் ஏற்றி அதன் சுட்டியை எதிர்முனையில் இருப்பவரிடம் தருகிறோம்.
1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு புதிய இணையத்தளம் புறப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் அப்படியே மின்னஞ்சலில் இணைப்பாக இணைத்து அனுப்ப இயலும்.
http://www.dropsend.com/
ஒவ்வொரு மென்பொருளாகத் தனித்தனியாக அறிமுகப்படுத்தி வந்திருக்கிறேன். அந்த வரிசையில் பொங்கல் சிறப்பு அதிரடி முழக்கமாக 300+ இலவச மென்பொருட்கள் உங்களுக்காக - அனைத்துமே சிறந்ததெனெ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.
அவற்றை ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். அதன் சுட்டியைக் கீழே தருகிறேன்.
Office,Archive managers,Internet
P2P,Chat,Security
Network,Servers,Audio
Video,Image,3D
Developers,CD/DVD,Codecs
System Ulilities,UI Enhancements,Hardware monitoring/Benchmarking
Games,Education,Miscellaneous
Wallpapers
இத்தனை வகையான இலவச மென்பொருட்கள் அனைத்திற்கான சுட்டிகளை ஓரிடத்தில் தொகுத்துத் தந்த பாராட்டுக்கு உரியவர்கள் :
http://www.winaddons.com/top-300-freeware-software/
எத்தனையோ இணையத்தளங்களில் நாம் பயனர் கணக்கு (user name & password) வைத்திருப்போம். ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வேறு வேறு கடவுச்சொற்களை (password) உருவாக்கி இருப்போம். ஒவ்வொரு பாஸ்வேர்டையும் தனித்தனியாக பாதுகாப்பது கடினம் எனத் தோன்றியவர்கள் - அனைத்துத் தளங்களுக்குமே ஒரே பயனர்கணக்கையும், ஒரே பாஸ்வேர்டையுமே வைத்திருப்போம்.
இது மிகமிகக் குழப்பமான - கடினமான செயல். இதை எளிமைப்படுத்த உதவும் மென்பொருள்களில் மூன்றை கீழே சுட்டிகளில் (links) தரவிருக்கிறேன்.
இந்த மென்பொருட்களின் உதவியுடன் எந்தத்தளங்களில் என்ன username, என்ன password பயன்படுத்துகிறோம் என்பதை ஒரு தரவுத்தளமாக(Database) பதிவு செய்யவேண்டும்.
இறுதியில் இந்த மென்பொருளை இயக்குவதற்காக மட்டும் ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டைத் தேர்வு செய்து அதை மட்டும் மனதில் ஏற்றிக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.
யாருக்காவது உங்களது பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டால் உடனே மாற்றிவிடுங்கள். அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறையாவது பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் பெரிய கம்பெனியில் உலகம் சுற்றும் வாலிபன் பொறுப்பில் இருக்கிறார். அவருடைய பாஸ்வேர்ட் ஆறு ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கிறதாம் - பெருமையாகச் சொல்வார். மேலும் அதன் பாஸ்வேர்டை பல நண்பர்கள் சூழ வெளிப்படையாக இதுதான் பாஸ்வேர்ட் என்கிறார். அது என்னவெனில் அவருடைய மாற்றுப்பெயர். அருண் என்கிற நண்பர் அவர். அவரது மாற்றுப்பெயர் (nick name) சரவணன். அவர் அதையே பாஸ்வேர்டாக வைத்து ஆறு ஆண்டுகளாக மாற்றாமல் இருப்பதாகப் பெருமை வேறு தேடிக்கொள்கிறாராம். அவரை மாதிரி ஆட்களை ஒவ்வொரு நிறுவனங்களிலும் காணலாம். அவரைப்போல மிகமிக பிசியாக இருப்பவர்களுக்காகவே இந்த மென்பொருட்கள் உதவுகின்றன.
பாஸ்வேர்ட் விவகாரத்தில் எப்போதும் கவனம் தேவை. அதற்காகவே இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட சுட்டிகளைச் சொடுக்கவும்.
http://keepass.info/
http://www.zeraha.org/dload.php?action=license&license_id=2&file_id=42
https://www.steganos.com/us/products/data-security/locknote/overview/
நன்றி!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com