Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, June 13, 2009

♥ உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம் ♥

உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம்

http://www.shockwave-india.com/tamil/blog/uploaded_images/TamilMoBook_Preview1-737258.jpg

tamilஉலகில் இன்று பேசும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ் மொழி 15 வது இடத்தில் இருப்பதாக மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.

1996 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமை பிரகடனத்தின் படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன. ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.

இந்தநிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் மொழி 15 வது இடத்தை பிடித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரீஷியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மற்றும் 1862 ம் ஆண்டு பிரிட்டன் காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது.

தமிழ் மொழிக்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன. இவற்றை 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்கமுடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.


http://www.meenagam.org/?p=4812

♥ கால்பதித்த சிங்கள இராணுவத்தினர் தலையை இழந்தனர்..! ♥

கால்பதித்த இராணுவத்தினர் தலையை இழந்தனர்..!

ஆனையிறவிலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள  வெற்றிலைக்கேணி இராணுவமுகாமில் இருந்து, தினமும் வீதி ஒன்றைக் கண்காணிப்பதற்காக  இராணுவக்குழு ஒன்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு நேற்றையதினம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் புறப்பட்ட இராணுவஅணியொன்று, முகாமிற்குத் திரும்பாததையடுத்து, அப்பிரதேசத்தில் மேலதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு  தேடுதல்வேட்டை நடாத்தப்பட்டதாகவும், அவ்வேளையில் ஆறு இராணுவத்தினரின் தலைகள் ஓரிடத்தில் வெட்டிவீசப்பட்ட  நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

http://eeladhesam.com/

♥ வதைமுகாமில் இருப்பதைவிட, செல்லடிபட்டு செத்திருக்கலாம் ♥

வவுனியா வதைமுகாமில் இருப்பதைவிட வன்னியில் செல்லடிபட்டு செத்திருக்கலாம்




வன்னியில் கொட்டும் குண்டு மழையில் இருந்து விட்டு வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமில் இருப்பதுதான் கடினமாக உள்ளதாக தமது வேதனைகள் நிறைந்த இன்றைய அகதிமுகாம் வாழ்க்கையை பற்றி கண்ணீரும் இரத்தமும் சிந்திய வரிகளாக்கி தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர்மடல்.

07-05-2009 திகதியிட்ட கடிதம் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கிடைக்கப் பெற்றது. வழக்கமான சுக விசாரிப்புக்களுடன் தொடங்கும் கடிதம் ஒரு கட்டத்தில் நகர மறுக்கின்றது… வார்த்ததைகள் கனக்கின்றன… நா தழுதளுக்கின்றது… கண்கள் நமது கட்டுப்பாட்டை மீறி தாரை தாரையாக கண்ணீர் சிந்துகின்றது. சிரமப்பட்டு வாசித்த போது…

10மீட்டர் தூர இடைவெளியில் வீழ்ந்து வெடித்து சிதறிய செல்வீச்சில் இருந்து அதிஸ்டவசமாக உயிர்பிழைத்து வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமிற்கு வந்த பின்னர்தான் யோசிக்கின்றோம். அங்கேயே இருந்து செல்லடிபட்டு செத்திருந்தாலும் பறவாயில்லை போலிருக்கு.

மூன்று கிழமைக்கு ஒரு தடவை அரிசி, மா, பருப்பு குறிப்பிட்ட அளவுதான் தாரங்கள்;. அதுவும் பழுதாகிப்போய் வண்டுகள் பிடித்த சாமான்கள் தான். என்ன செய்வது நல்ல பொருட்கள் வாங்கி சமைத்து சாப்பிடுவது என்றால் காசு வேணும். எதற்கெடுத்தாலும் காசுதான் வேணும்;. காசு இருந்தால் எதுவும் செய்யலாம்.

கிடைப்பதை சமைத்து சாப்பிடுவது என்றாலும் மனசு நிறைய வேதனைகளை சுமந்தவாறு நடமாடும் பிணங்களாக வாழ்ந்துவரும் நிலையில் எவ்வாறு சாப்பிடுவது.

பசித்த வயிற்றுக்கு ஒரு வாய் சாப்பிடலாம் என்டால் கூட இங்கே நல்ல மனநிலை இல்லை. எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு கவலை, ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாமே இருக்கு. எங்களின் அடுத்த கட்டம் என்ன என்பதே கேள்விக்குறிதான்.

இந்த முகாமில் ஒரு தடவை எல்லோரையும் களைந்து எடுத்துவிட்டான். இனி என்ன நடக்குமெண்டு தெரியவில்வை. சிலவேளைகளில் வன்னியை விட்டு வராமலே இருந்திருக்கலாம் போலிருக்கும்.

வருத்தம் வந்தால் கூட ஆசுபத்திரிக்கு விடமாட்டாங்கள். பிள்ளைக்கு காச்சல் வந்து ஒரு கிழமையாகிவிட்து. எனக்கு தெரிந்த கைவைத்தியம் தான் பார்கிறது. இன்னும் மாறின பாடில்லை.

இவருக்கும் மலேரியா வந்து மருந்து எடுக்க வெளியே போகமுடியாமல் இருகின்ற போது எனக்கும் செங்கமாரி வந்துவிட்து. என்ன செய்யிறது? ஆண்டவன் மீது நம்பிக்கைவைத்து மீதமிருக்கும் நாட்களை நகர்த்திக் கொண்டிருகிறம்;.

உணவு பொருட்கள் வாங்கிதுக்கு, தண்ணி பிடிப்பதற்கு, மலம் கழிப்பதற்கு என எதற்கு சென்றாலும் லைனில் நின்றுதான் நிறைவேற்ற முடியும். அதுவும் மலம் கழிப்பதற்கு போனால் கூட நூற்றிற்கு மேற்பட்டவர்களுடன் லைனில் நின்று மணித்தியாலக் கணக்கில் காத்திருந்துதான் இயற்கை கடன்களை கழிக்க முடியும்.

சீரான கழிப்பறைகள் கூட இல்லாது குழிகளை தோண்டி அதன் மீது தடிகளை குறுக்கலாக வைத்து அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறைகள்தான் இருக்கு. அதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன் உயிராபத்து நிறைந்ததாகவும் உள்ளது.

அண்மையில் இரண்டு குழந்தைகள் மலம் கழிக்க சென்ற பின் காணாமல் போயிருந்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அடுத்தநாள் பார்தால் கழிப்பறை குழிக்குள் பிணமாக கிடக்குதுகள். இந்த கொடுமையை யாரிம் போய் சொல்வது.

மரண வேதனை ஒருபக்கம் என்றால் நிழல் போல் எங்கும் தொடரும் ஆமிக்காரங்களை கண்டால் உடம்பெல்லலாம் பதறுது. எவ்வளவு துன்பம் வந்தாலும் மானம் மரியாதையோடு வன்னியில் வாழ்ந்து வந்தனாங்கள். இங்கு வந்து ஒவ்வொரு நிமிடமும் எது செய்வதென்டாலும் சிங்களவனுக்கு முன்னால செய்ய வேண்டியிருக்கு.

அதைவிட அப்பப்ப, ஆமிக்காரனோடு வால்பிடித்து திரியும் கூட்டம் வந்து இளம் வயது பெடியள் பிள்ளைகளை வலுகட்டாயமாக பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். அரக்கர்களிடம் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு அழும் சனங்களை பார்த்தால் இவங்களுக்கு கெதியா முடிவு கட்டமாட்டாங்களோ என்ற எண்ணம்தான் தோன்றி மறையும்.

இவ்வாறு பிடித்து செல்லப்படும் இளைஞர் யுவதிகள் திரும்புவதில்லை. வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு நடைபிணங்களாக வாழ்ந்து வருகின்றனர் உறவுகள்.

இந்த அக்கிரமங்களை எல்லாம் பார்க்கும் போது வன்னியில் செல்பட்டு செத்திருக்கலாம் என்டு நினைக்கிறது. இப்ப கூட பிள்ளை இல்லை என்டால் நாங்கள் எப்போதோ உயிரை விட்டிருப்பம்.

எங்கள் சனம் கடைசிவரை தமிழ் நாட்டைதான் நம்பி இருந்ததுகள். எல்லோரும் சேர்ந்து கைவிட்டதால நாங்கள் இப்படி வதை முகாமில் இருந்து வதைபட்டுக் கொண்டிருக்கிறம்.

பான் கீ மூன் வந்தவர் வந்து என்ன பிரியோசனம். ஆமிக்காரங்களால் ஒழுங்கு செய்த இடத்தில கொஞ்ச சனத்தை பார்த்துவிட்டு போய்விட்டார். யார்வந்து போனாலும் எங்கட தலைவிதியை மாத்தமுடியாது.

தமிழனாக பிறந்ததுக்கு இதுதான் வாழ்க்கை என்றாகி போய்விட்ட பிறகு மற்றவர்களை குறைசொல்லி என்ன நடக்கப்போகுது.

இப்ப எங்களுக்கு இருக்கிற கொஞ்ச நம்பிக்கை வெளிநாட்டில இருக்கிற எங்கட மக்கள் தான்.; தொடர்ந்து போராடி நரக வேதனை அனுபவிக்கிற முகாமில் இருந்து எங்களை வெளியில கொண்டுவர ஏதாவது செய்வினம் என்டுதான் இறுதி மூச்சை கையில் பிடித்து காத்திருக்கிறம்.

இவ்வாறு உலகத் தமிழர்களை நோக்கிய வேண்டுகையுடன் கண்ணீர் கடிதம் முடிவடைகின்றது. ஆனால் வதைமுகாமில் வதைபடும் எமது உறவுகளது வேதனை நிறைந்த வாழ்க்கைதான் இன்றும் தொடர்கதையாக உள்ளது.

உலகத்தமிழர்களே நடந்தவற்றை உண்மையா பொய்யா என்று ஆராய்வதை விடுத்து அடிமைகளை விட கேவலமாக நடாத்தப்பட்டுவரும் எமது உறவுகளை காத்து சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு ஏதாவது செய்யமுடியுமா என சிந்தித்து செயற்படுங்கள்.

உலகமே கைவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கம் இத்தருணத்தில் புலம் பெயர் நாடுகளில் வசித்துவரும் ஈழத்தமிழர்களும் தமிழகத்து உடன்பிறப்புகளும் தான் எம்மக்களின் ஒரே நம்பிக்கை. இப்போது தேவை கைகொடுத்து தூக்கிவிடுவதற்கான ஆதரவு கரமே. செய்வீர்களா…?

ஈழதேசம் இணையத்தளத்திற்காக : இரா.மயூதரன் (11-06-2009)







http://eeladhesam.com/

♥ சீமான் அதிரடிப் பேச்சு: இனி மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும் ♥

இனி மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும்;ஒரு சிங்களன் கூட நிம்மதியாக இருக்க முடியாது:சீமான்

   
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/seeman04.jpg    http://www.dailythanthi.com/images/news/20090507/ceeman.jpg

altஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பெங்களூரில் பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டம், பொதுக்கூட்டம் நடந்தது.

 

இந்நிகழ்வுகளில்  தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,


''இலங்கையில் தனி ஈழம் அமைவதற்கு முன்பு சொல்லப்பட்ட காரணத்தை விட, இப்போது நமக்கு அழுத்தமான காரணம் கிடைத்து உள்ளது. இறுதிப்போரின் போது 25 ஆயிரம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து உள்ளனர்.

 

பாதுகாப்பு வளையத்துக்குள் வா என்று கூறி, அங்கு வந்த அப்பாவி மக்களை நிர்வாணப்படுத்தி, பெண்களை விபசார விடுதியில் தள்ளி, உயிரை இறையாக்கி கொடூர செயலில் ஈடுபட்டனர்.

 

கொடூரமான அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து இருப்பதால் தனி ஈழம் அமைப்பதற்கு அழுத்தமான காரணங்கள் அமைந்துள்ளன.

 

தமிழ் ஈழம்தான் தீர்வு என்பது முன்பு ஆங்காங்கே ஒலித்தது. அது தற்போது உலகம் முழுவதும் ஒலிக்கிறது. ஈழத்தில் புலிகளின் கொடி இறக்கப்பட்டது. தற்போது அந்த கொடி உலகம் முழுவதும் பறக்கிறது. ஈழ தமிழர்களின் நிலத்தை வேண்டுமானால் சிங்கள அரசு கைப்பற்றி இருக்கலாம். ஆனால் அவர்களின் இலட்சியத்தை ஒருபோதும் அழிக்க முடியாது.

 

சாகப்பயந்தவன் தரித்திரமாகிறான், சாக துணிந்தவன் சரித்திரமாகிறான் என்று பிரபாகரன் சொன்னார். அடிமையாக வாழ்வதை விட சுதந்திரமாக சாவதே மேல் என்று வியட்நாம் போராளி சொன்னான். அதேபோல அடிமையாக வாழ்வதை விட வீரமாக சாவேத மேல் என்று பிரபாகரன் சொல்லி உள்ளார்.

 

இலங்கைக்கு பிழைக்க வந்த சிங்களனாகிய நீ இன்றைக்கு எங்களை விரட்டுகிறாயா?. இவ்வளவு நாளும் தனி ஈழத்துக்காக போராடினோம். இனி மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும்.

 

இலங்கையில் தமிழர்களின் அழிவுக்கு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மட்டும் காரணம் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்களும் காரணம்.

 

 சீக்கியன் ஒருவனின் தலைமுடி வெட்டப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிந்தது. ஆஸ்திரேலியாவில் சீக்கிய மதத்துக்குள் நடந்த மோதலில் மத குரு கொல்லப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் கொந்தளித்தது.

 

11ஃ2 கோடி சீக்கியர்களுக்கு உள்ள உணர்வு 61ஃ2 கோடி தமிழர்களாகிய நமக்கு இல்லை. காஷ்மீரில் ஒரு தமிழன் பாதிக்கப்பட்டால் கன்னியாகுமரி பற்றி எரியும் நாள் என்று வருமோ?
அன்றுதான் உலக தமிழனுக்கு பாதுகாப்பு கிடைக்கும். தமிழகத்தில் தமிழன் தமிழனாக இல்லை என்பதால்தான் ராஜபக்சே துணிந்து இலங்கை தமிழர்களை அழித்தார்.

 

மாவீரன் பிரபாகரன் போரில் தனது மகன் சார்லஸ் அந்தோணியை இழந்தார். தனது குடும்பமே அழிந்தாலும் பரவாயில்லை, தனது இனம் காக்கப்பட வேண்டும் என்பது அவரது நோக்கம்.

 

தற்போது இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்களது வெளியுறவு கொள்கையை மாற்றி கொள்ளுங்கள். இலங்கை தமிழர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும்.

 

விடுதலைப்புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள். இலங்கை தமிழர்களை நாங்கள் காப்பாற்றி கொள்கிறோம். எங்களை ஒட்டுமொத்தமாக அழித்தாலும் கூட நாங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பிரபாகரன் சொன்னார். அதை கடைசிவரை நிரூபித்து காட்டினார்.

 

பிரபாகரன் தனது மக்களை காக்க நல்லாட்சி செய்து வந்தார். நீதி, நியாயத்துடன் ஆட்சி செய்து வந்தார். விடுதலைப்புலிகளுக்கு மது அருந்துவது உள்பட எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் படையை அமைத்தார்.

 

 ஈழ நாட்டை போல உலகத்தில் எந்த ஒரு நாட்டையும் பார்க்க முடியாது. பிச்சைக்காரர்களே இல்லாத ஈழத்தை அமைத்து அவர் அழகு பார்த்தார். ஆனால் இன்றைக்கு அங்குள்ள தமிழர்களை பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டார்கள்.

 

பிரபாகரன் இறந்து விட்டார் என்று சிலர் தம்பட்டம் அடிக்கிறார்கள். அவரை ஒருபோதும் அழிக்க முடியாது. இலங்கையில் என்ன நடக்கிறது என்று கொஞ்சநாள் பொறுத்து இருந்து பார்ப்போம்.

 

அங்குள்ள தமிழர்களுக்கு சமஉரிமை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் இல்லை என்று அந்த நாட்டின் தலைமை நீதிபதியே உண்மையை தெரிவித்து விட்டார். ராஜபக்சே நிச்சயம் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க மாட்டார். இதனால் மீண்டும் போர் வெடிக்க போகிறது.

 

இதுவரை நடத்தி வந்த போர் மரபு சார்ந்த போர். ஆனால் இனி நடக்க போகும் போர் மரபுசாரா போர். இனிமேல் ஒரு சிங்களன் கூட நிம்மதியாக இருக்க முடியாது.

 

 ஈழ நாட்டை பிரித்து கொடுத்து விடுங்கள் என்று அவர்களே கதற போகிறார்கள். இதனால் இனி போர் தீவிரமடைய போகிறது. உலகம் முழுவதும் போராட்டமும் தீவிரமடையும்''என்று ஆவேசமாக பேசினார்.

 http://eeladhesam.com/


♥ விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலி அறிக்கைகள், ஊடகவியலாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்! ♥

உலகத் தமிழ் ஊடக வலையமைப்பில் றோ ஊடுருவல்! விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலி அறிக்கைகள் – தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்!



RAWஉலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில – தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான றோ நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு றோ நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் – ஆங்கில பத்தி எழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்ற கருத்தியலை விதைக்கும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முரண்பாடுகள் நிலவியமை போன்ற கருத்துக்களையும், தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களில் உடைவுகள் ஏற்பட்டிருப்பது போன்ற செய்திகளையும் வெளியிடும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை, த நேசன், த சண்டே லீடர், த ஹிந்து, புறொன்ட் லைன் போன்ற ஆங்கில ஊடகங்களில் ஆய்வுப் பத்திகளை எழுதி வந்த கனடிய தமிழ் ஊடகவியலாளரின் உதவியுடன், றோ நிறுவனம் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் வெளிப்பாடாகவே, இதுவரை காலமும் புலிச் சாயத்துடன் இயங்கி வந்த சில தமிழ் இணைய ஊடகங்கள், தமது முன்னைய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து அந்தர் பல்டி அடித்து, மாற்று அரசியல் தீர்வுகள், இராசதந்திர உறவாடல்கள் போன்ற குழப்பகரமான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதனிடையே, தென்தமிழீழ மாவட்டங்களில் தலைமறைவாக செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் இன்றி போலியான அறிக்கைகள் சிலவற்றை சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிடுவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக தென்தமிழீழத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்களுடன் எமது செய்தியாளர் தொடர்பு கொண்ட பொழுது, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் தமது அரசியல்துறைப் போராளிகள் எவரும் எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் எம்மிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

http://newsx.com/files/images/LTTE_AFP.jpg



Www.eeladhesam.coM



புலிகளின் பன்னாட்டு வலையமைப்பை சிதைக்க சிறீலங்கா முயற்சி





தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னலை சிதைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் அலுவலகங்களில் கைப்பற்றட்ட ஆவணங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்துவரும், சிறீலங்கா அரசின் புலனாய்வுப் பிரிவினர், அவற்றைக் கொண்டு வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வெளிநாடுகளில் இயங்கும் சிறீலங்கா அரசின் தூதரகங்கள் கடந்த சில வருடங்களாக தமது வழமையான பணியை ஒத்தி வைத்துவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பரப்புரைகளிலும், வெளிநாட்டில் விடுதலைப் புலிகளை முடக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்திருந்தன.

இந்த செயற்பாட்டை விரிவுபடுத்தி வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்களையும், அதன் வலைப் பின்னலையும் சிதைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு தற்பொழுது ஈடுபட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தல் தூதரங்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், தூதரகப் பதவிகளில் சில சிறப்பு நியமனங்களும் இடம்பெற்று வருகின்றன. பரப்புரைக்கு ஏதுவாக வெளிநாடுகளிலுள்ள மேற்குலக ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் விலைக்கு வாங்குவது அரசின் திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனின் ஈவினிங் ஸ்ரான்டட் பத்திரிகையில் "அமர் சிங்" என்ற செய்தியாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களது துணைவியார் அடேல் அம்மையார் பற்றி எழுத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.



♥ கச்சத்தீவை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கும் சிங்கள அரசு... ♥

கச்சத்தீவை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கும் இலங்கை! -விழித்துக்கொள்ளுமா இந்தியா?‏


http://www.comp.nus.edu.sg/~naresh/india/images/india.jpg





கடை தேங்காயை எடுத்து வழிப்-பிள்ளையாருக்கு உடைத்ததுபோல, இந்தியாவிற்குச் சொந்தமான, அதுவும் தமிழக மீனவர்களின் இச்சைத்தீவான கச்சத் தீவு முற்றிலும் வேறு ஒரு நாட்டிற்கு கைமாற உள்ளது. இலங்கைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறிய இந்தத் தகவல், மீனவர்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலை-களை ஏற்படுத்தி-இருக்கிறது.

இதைப்போல, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய கொலை வெறித்தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு எவ்வித கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்பு ரீதியில் அண்டை நாடான இலங்கையின் உதவி எப்போதும் தேவை என்பதால் இந்திய அரசு இலங்கையைப் பொறுத்தவரை மென்மையான போக்கை கடைப்-பிடித்து வந்தது. எந்த ஆபத்தைத் தடுக்க தவிர்க்க இலங்கையை இந்தியா அணுசரித்துச் சென்றதோ, அதே ஆபத்தை இலங்கை அரசு நமக்குத் தேடித்தந்துள்ளது. இது வெறும் ஆபத்தல்ல... மட்டுமல்ல பேராபத்து!

இந்தியாவிற்குச் சொந்தமான கச்சத்தீவு, ஓர் ஒப்பந்தத்தின் மூலம் 1974-ம் ஆண்டு இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்டது. இந்தியாவின் கிழக்குக் கடலோரத்தில் பாக் நீரிணைப்பில் உள்ள கச்சத்தீவு, தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள கச்சத்தீவை சுற்றிய கடற்பகுதி, மீன் வளம் நிறைந்தது. சேதுபதி மன்னர்களின் சொத்தான கச்சத்தீவு சுமார் 350 மீட்டர் அகலமும், ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. மொத்த பரப்பளவு 285 ஏக்கர். கச்சன்- கச்சம் என கடல் ஆமையை அழைப்பார்கள். இந்தத் தீவில் ஒரு காலத்தில் ஆமைகள் அதிக அளவில் வசித்ததால், இதைக் கச்சத்தீவு என்று அழைக்கின்றனர்.

கச்சத்தீவு இலங்கைக்கு அருகே இருப்பதால், இதைச் சொந்தம் கொண்டாட இலங்கை அரசு கடந்த 100 ஆண்டுகளாக முயன்று வந்தது. ஆனால், இந்தத் தீவு ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர் பரம்பரையினருக்கு உரியது.

ராமேஸ்வரத்தில் 1605-ம் ஆண்டு தொடங்கிய சேதுபதி மன்னர்களின் ஆட்சி, 1803-ம் ஆண்டில் முடிவிற்கு வந்தது. அதன்பிறகு ஜமீன்தார் முறையை கொண்டுவந்த ஆங்கிலேய அரசு, மங்களேஸ்வரி நாச்சியாரை ஜமீன்தாராக நியமித்தது. அப்போது, அவருக்கு அளித்த நில உடமை பட்டியலில் கச்சத்தீவும் இடம்-பெற்றிருந்தது. கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது என்று விக்டோரிய மகாராணி பிரகடனம் செய்திருந்தார். ராமேஸ்வரம் பேரூராட்சியின் சொத்து அதிகார எல்லை பற்றிய பட்டியலிலும் கச்சத்தீவு இடம்பெற்றுள்ளது.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாரை கடல்வழி காட்டும் தெய்வமாக அனைத்து மத மீனவர்களும் மதிக்கின்றனர். கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்-கும் போது கிழிந்துவிடும் பருத்தி நூல் மீன்பிடி வலைகளை சரி-செய்ய, கச்சத்தீவில் ஓரிரு நாட்கள் தங்குவது மீனவரின் வழக்கமாக இருந்தது. இதைத்தவிர ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கச்சத்தீவில் அந்தோணி-யாருக்கு இருநாட்ட-வரும் விழா எடுத்தனர்.

இந்த விழாவின்போது, இரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தங்களது உறவினர்களைச் சந்தித்து ஆனந்தம் அடையும் இடமாகக் கச்சத்தீவு இருந்தது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் தங்களது நாட்டு பொருள்களை, பண்டமாற்று முறையில் விற்பனை செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து படகில் கச்சத்தீவிற்குச் செல்லும் பக்தர்களிடம் சுங்கவரி, திருவிழாக் காலத்தில் மட்டும் வசூலிக்கப்பட்டது. இருநாட்டு மீனவர்களும் தங்களுக்குள் ஏற்பட்ட மீன்பிடி பிரச்னைகளைப் பேசித் தீர்க்கின்ற பஞ்சாயத்து மேடையாகவும் கச்சத்தீவு ஒரு காலத்தில் திகழ்ந்தது.

இந்நிலையில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இருநாட்டு எல்லைகளில் போர்ப் பதற்றம் நிலவியது. அப்போது இந்தியாவை அதிர வைக்கும் சம்பவங்கள் இலங்கையில் திகழ்ந்தன. பாகிஸ்தான் போர் விமானங்கள் கொழும்பு விமான நிலையத்தில் இறங்கின. அவை அங்கே எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்று இலங்கை அரசு சிறப்பு அனுமதி அளித்தது.

கொழும்பு வரை வந்த இந்த விமானங்கள், தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் மீது எந்த நேரத்திலும் குண்டு வீசலாம் என்ற அச்சம் இந்தியத் தரப்பிற்கு ஏற்பட்டது. தங்களது எதிரி நாடான பாகிஸ்தான் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அனுமதிக்க வேண்டாமென அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கோரினார்.

இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இலங்கை, இந்தியாவுடனான நட்பு தொடர வேண்டுமானால், இலங்கைக்கு அருகே உள்ள கச்சத்தீவை தமக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத்-தொடர்ந்து 1974-ம் ஆண்டில் கச்சத்தீவு ஒப்பந்தம் தயாரானது.

அப்போது இந்தியாவின் தென்பகுதியில் ராணுவத்தளம், விமானத்தளம், கப்பற்-படை-தளம் எதுவும் பெரிய அளவில் செயல்படாத நிலை. தென்னிந்தியா, யுத்த ரீதியில் பாதுகாப்பற்ற பகுதியாகவே அப்போது இருந்தது.

இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகவும் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்குச் சாதகமான ஷரத்துக்கள் உள்ளதால் மீனவர்களுக்கு உரிமை இழப்பு ஏற்படாது என்று இருநாடுகளும் அறிவித்தன. இந்தியா, இலங்கை மீனவர்கள், இருநாட்டு கடலிலும் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கலாம். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயிலுக்குச் சென்று வழிபட இந்தியர்களுக்கு பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் தேவையில்லை என்பது ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்து.

ஆனால், இலங்கை அரசும், கடற்படையும், பாதுகாப்புப் படையும் இந்த ஒப்பந்த விதிகளை அன்று முதல் இன்று வரை மதிக்கவில்லை. விடுதலைப்-புலிகள் ஊடுருவலை காரணம் காட்டி அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவிப்பது தொடர்கிறது. மீனவர் மீதான தாக்குதல் இதுவரை நிறுத்தப்படவில்லை. கச்சத்தீவு கடற்பகுதிக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக்-கூறி, இலங்கை கடற்படை வழக்கு தொடர்கிறது.

இந்த நிலையில் அண்மையில் நடந்த போரில் இலங்கைப் படைகள் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை வெற்றியோடு முடிக்க இந்தியவும் பாகிஸ்தானும், சீனாவும் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கின. உலகில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள், கண்ணி வெடிகள் மற்றும் ரசாயன ஆயுதங்களை இலங்கைக்குத் தொடர்ந்து வழங்கியது பாகிஸ்தான் தான்.

இதற்குக் கைமாறாக கச்சத்தீவை தமக்குத் தருமாறு இலங்கை அரசிடம் பாகிஸ்தான் நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த ரகசிய கோரிக்கையை இலங்கை அரசு அப்போது ஏற்காவிட்டாலும், இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபாகரனையும், ஏராளமான விடுதலைப்-புலிகளையும் கொன்று குவித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியை இலங்கை அரசு பாகிஸ்தானுடன் இப்படிப் பகிர்ந்து கொண்டுள்ளது.

ஏற்கெனவே இலங்கை கடற்படையினருடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சிலர் இந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கச்சத்தீவுக்குச் சென்றிருந்தனர். இதைப்பற்றி நமது இதழில் மட்டுமே அப்போது செய்தி வெளியானது.

தற்போது கச்சத்தீவில் கடற்படைத்தளம் அமைக்க பாகிஸ்தான் இடத்தைத் தேர்வு செய்துவிட்டது. இந்தக் கடற்படை தளத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் வந்திறங்க 'ரன் வே' ஒன்றையும் பாகிஸ்தான் அமைக்கப்போகிறது. இதற்கான செலவை பாகிஸ்தான் ஏற்கிறது என்றும் இலங்கையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது, கச்சத்தீவில் கடற்படைத்தளம் அமையவுள்ள இடத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்ற ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையே இலங்கை கடற்படை பயன்படுத் தியதாகத் தகவல். ராமேஸ்-வரத்தில் இருந்து சென்ற மீனவர்களை வலுக்-கட்டாயமாகக் கச்சத்-தீவிற்கு அழைத்துச்சென்று, துப்பாக்கி முனையில் செடிகொடிகளை அகற்றி தரையை சமப்படுத்தச் செய்திருக்கிறார்கள். இலங்கை கடற்படையின் இந்தச் செயல்குறித்து மீனவர்கள் கடந்த வாரம் புகார் செய்தனர். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகம் சூழும்போதெல்லாம் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கொழும்பில் தரையிறங்குவதை அப்போதையை பிரதமர் இந்திரா காந்தி தனது சாமர்த்திய செயல்பாட்டால் தடுத்து நிறுத்தினார். ஆனால், இப்போது இந்தியாவிற்கு மிக அருகே கச்சத்தீவிலேயே கடற்படை தளத்தை அமைக்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் என்பது உறுதி.

விடுதலைப்புலிகளை ஒடுக்க இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும்  இந்தியாவும் உதவின. இதற்குக் கைமாறாக இலங்கை அம்பாந்தோட்டையில் நூறுகோடி டாலர் செலவில் துறைமுகம் அமைக்கும் பணியை இலங்கை அரசு சீனாவிடம் அளித்துள்ளது.

இந்நிலையில் கச்சத்தீவில் அமையவிருக்கும் கடற்படைத் தளம், பாதுகாப்பு ரீதியில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஒரு காலத்தில் இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொண்ட இலங்கை, தற்போது நமது எதிரி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நட்பு நாடாக மாறிவிட்டது. இலங்கையில் துறைமுகம் அமைக்கும் பணி என்ற பெயரில் சீனா காலூன்றிவிட்டது. இதற்கு அடுத்த படியாக பாகிஸ்தான் காலூன்றப் போகிறது.

இதில் மிக மோசமான விஷயம் எதுவென்றால், கச்சத்தீவிலும் அதையொட்டியுள்ள இலங்கைக் கடற்பகுதியிலும் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு எடுக்கும் துரப்பண பணியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ளது. கச்சத்தீவின் நிலத்தடியில் பெட்ரோலியம் அல்லது உலோகம் கிடைத்தால், அதை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்று கச்சத்தீவு ஒப்பந்தத்தில் (1974) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்த விதியை இலங்கை இதுவரை கடைப் பிடித்ததில்லை. இனியும் கடைப்பிடிக்கப் போவதில்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிக்கத் துடிக்கும் கச்சத்தீவில் பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனம் தோண்டவுள்ள எண்ணெய்க் கிணறுகள், சேதுசமுத்திர திட்ட கால்வாயின் மிக அருகே அமையப்போவது இந்தியாவின் துரதிருஷ்டம். சேது கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களை கச்சத்தீவில் இருந்து கண்காணிக்க முடியும். இதை மனதில் கொண்டுதான் பாகிஸ்தான் அரசு கச்சத்தீவில் கால்பதிக்கும் நடவடிக்கைகளை துரிதப்-படுத்தியுள்ளது.

இதுவரை இலங்கை கடற்படையிடம் அடிபட்டு உதைப்பட்டு மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களை இனிமேல் பாகிஸ்தான் கடற்படையும் அடித்து உதைத்துக் கொடுமை படுத்தலாம். இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்த இலங்கை அரசு, இப்போது தமிழக மீனவர்களையும் அழிக்க அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை காக்கவும், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன? இலங்கைத் தமிழர் பிரச்னையைப் போலவே இந்த விஷயத்திலும் வேடிக்கை பார்க்கப் போகிறார்களா?



                                                                       Www.eeladhesam.coM

Anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்.

 Anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்.




 நாம் வைத்துள்ள anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்.....

முதலில் notepad ஒன்றை open செய்யவும்....

பிறகு கீழே கொடுக்க பட்டுள்ள கோடை copy paste செய்யவும்.....


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

(அனைத்தும் ஒரே வரியில் அமையுமாறு paste செய்யவும்)

பிறகு file சென்று save option கொடுத்து, file type எனும் இடத்தில் all files

என்று தெரிவித்து eicar.com என்று save செய்யவும்.....

இப்பொழுது உங்களுடையது நல்ல anti-வைரஸ் மென்பொருளாக இருந்தால் அது இவ்வாறு save பண்ண விடாது,அப்படியே save ஆனாலும் eicar.com உள்ளடக்கிய folder ஐ நீங்கள் ஸ்கேன் செய்யும் போது பிரச்சனை என்று சொல்லினால் உங்கள் மென்பொருள் ஓகே....
இல்லை என்றால் "மாத்துங்க பாஸ்....."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விளக்கம்:
இது உண்மையில் வைரஸ் அல்ல, அனைத்து anti-வைரஸ் மென்பொருளாளர்களும் கடைப்பிடிக்கும் ஒரு யுத்தி இது.....

eicar என்பது European Institute for Computer Anti-virus Research என்பதின் சுருக்கம் ....
அனைத்து anti-வைரஸ் மென்பொருள்களும் இதனையும் ஒரு வைரஸ் ஆக எடுத்து கொள்ளும் பொருட்டு வடிவமைக்க பட்டுள்ளது , எனவே இதை anti-வைரஸ் கள் பிடிக்கும்....பிடிக்காத பட்சத்தில் அதில் கோளாறு...அப்டேட் அல்லது புதிது போடவும்.....



"எயார் பிரான்ஸ்' விமான சிதைவடைவதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்னர் விமானத்திற்குள் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன


புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவார்களா?





♥ கணினி எழுதிய காதல் கவிதை ♥

http://www.yourcomputerfriends.com/images/frustrated-computer-user.jpg     http://static.howstuffworks.com/gif/computer-infected-virus-1.jpg



கணப்பொழுது கூட கவனம் சிதறாமல் கருமமே கண்ணாய் கண்ணிமைக்காமல்
கணினியையே கண்டு கொண்டிருக்கும் காதலிக்கு...

காதல் என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப் பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த என் மனதை Google searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே, என் போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!

உன் நுனிவிரல் நடனமாடும் மேடை கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse க்கு மவுசு ஏறிப்போனதடி!

Microsoft Windows ஐப் பார்ப்பதை விட்டு என் மனமெனும் windowக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப் பார்!
உன் கணினி mouse pointer என் நெஞ்சில் ஈட்டியாய் பாய, எத்தனை முறை Restart பண்ணினாலும் Hang ஆகிறது இதயம்.

Printer ribbon பார்க்கும் போதெல்லாம், ribbon வைத்த உன் கூந்தல் ஞாபகம்.
Busy mouse pointer இல் Hour-glass பார்த்தால் உன் உடல் வாகு ஞாபகம்.

Intelligent எனப் பெயரெடுத்த நான், உன்னால் Artificial Intelligence கூட
இல்லாத ஜடமாகிப் போனேன்.

உன் கணினிக்கு மின் தடை பாதிக்காத வண்ணம் UPS Backup வைத்திருக்கிறாயே,
நீ இல்லையென்றானால் எனக்கு Back up யாரும் இல்லையடி ( உனக்கு தங்கை யாராவது இருக்காங்களா?)

JPEG formatஇல் உன் படங்கள்,
MPEG formatஇல் உன் அசைவுகள்,
MP3 formatஇல் உன் குரல் என சேமித்து என் மன Hard disk ஐ நிரப்பி விட்டேன்!

உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox என்றும் காத்திருக்கும் !

(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!




E.K.Sharavanan

eksharavanan@gmail.com


♥ "போர் முடிந்தும் சிங்கள அரசு எங்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை" :பெண் அகதி கண்ணீர் பேட்டி ♥

http://www.tamilnet.com/img/publish/2008/01/28_01_08_mary_02_66524_445.jpg   https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnDpGviWIX14X_pw7PDiY2vu_zTiI7-excR5w_FRjOQ4BvsgDQfEYpZzh6aqcnPGckiYWIUWiFrQ-h5vBxWVJPRe6jrf0YivbR1OZbTlU97PikE6AEwxpiIF8gaYnGoL3Y9aWbeodXtps/s320/refugee_day_-1.jpg


போர் முடிந்தும் இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்தவித வசதியும் செய்துதரவில்லை: ராமேசுவரம் வந்த பார்வையற்ற பெண் அகதி கண்ணீர் பேட்டி



ராமேசுவரம், ஜூன். 9-  

இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்து உள்ளது. தற்போது அங்கு போர் முடிந்து அமைதி நிலவுகிறது. இருந்தபோதிலும் தமிழ் மக்களை இலங்கை ராணுவம் அடிமைப்போல் நடத்தி வருவதாகவும், பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்குவதாகவும் தகவல் கள் வெளியாகின்றன.
 
இந்த நிலையில் இலங்கை பேச்சாளை கடற்கரையில் இருந்து விஜயன் (வயது35), அவரது மனைவி சாந்தி (32) ஆகிய இருவரும் நேற்று இரவு ராமேசுவரத்திற்கு அகதிகளாக வந்தனர். இதில் சாந்தி இலங்கையில் நடத்திய தாக்குதலில் பார்வை யிழந்தவர். ராமேசுவரத்தில் இறக்கிவிடப்பட்ட அவர்கள் கோவில் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து வரப் பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்டு கமலாபாய், சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
 
இதையடுத்து பெண் அகதி சாந்தி கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறிய தாவது:- 
 
 
நாங்கள் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கை கிளிநொச்சி பகுதியில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தோம். அப் போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று எனது தாயை பார்ப்பதற்காக நான் சென்றேன். அந்த சமயத்தில் இலங்கை ராணு வத்தினர் நடத்திய பயங்கர தாக்குதலில் எனது தாய் இறந்தார். எனது கண் பார்வையும் பறிபோனது. சிகிச்சைக்காக வவுனியா அரசு ஆஸ்பத்திரியில் நான் அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அங்கு எனக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை.
 
தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு வந்தும் அந்த அரசு இலங்கை தமிழர் களுக்காக எந்த வசதியையும் செய்துதர வில்லை. தமிழர் கள் தொடர்ந்து அடிமை களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு மேலும் அங்கு வாழ பிடிக்காமல் நானும் எனது கணவரும் அகதிகளாக இங்கு வந்துள்ளோம்.
 
இலங்கையில் இருந்து ராமேசுவரம் வருவதற்காக இலங்கை படகோட்டி சீலன் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம். நடுக் கடலில் தமிழக மீனவர்கள் உதவியுடன் இங்கு வந்து சேர்ந்தோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.




http://naanchithan.files.wordpress.com/2009/03/5001-9271.jpg




தமிழர்கள் மீது புல்டோசரை ஏற்றிக் கொன்றான், சிங்களன்...

முல்லைத்தீவில் காயம் அடைந்த தமிழர்கள் மீது புல்டோசரை ஏற்றிக் கொன்றனர்: மனித உரிமைக்குழு குற்றச்சாட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ-yBxfhyphenhyphen0vUJbfyET3HIxxbaGC9Xl74Nu2TIKPSe9gkWe_mCcjL-xhCRvH6tNavD812tt4X8Aj-iTf3-iSe19q2TZjSQvbcwgfdHQO99Zdu0nEs_huF8_TJnh5LBJnjNKwwH-QAznljQ/s300/vanni_20090222009.jpg   http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/sri_lanka_civil_war_ejx_3_6_2009_1.jpg

கொழும்பு, ஜூன். 13-
 
இலங்கையில் மனித உரிமைக்காக போராடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் அறிக்கையை லண்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:-
 
இலங்கை ராணுவத்தினர் கடைசி கட்ட போரின் போது காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள உத்தரவிட்டனர். அப்பாவி மக்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த பதுங்கு குழிகள் மீது ராணுவத்தினர் ராணுவ வாகனங்களை ஏற்றி நசுக்கினர். காயம் அடைந்த, குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றிக் கொன்றனர். அவர்களை இறந்தவர்களுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக புதைத்தனர்.
 
சரணடைந்த விடுதலைப்புலிகளையும் சரணடைய வந்த விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே தடுப்பு முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்ட 3000 தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். மக்கள் தங்கியுள்ள தடுப்பு முகாம்களில் மொத்தமாக 7200 பேரை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்த விசாரணைகளின் போது இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.



http://www.maalaimalar.com/2009/06/13150240/CNI0570130609.html


♥ ராஜபக்சே ஒப்பாரி :"விடுதலைப்புலிகள் என்னை மூன்றுமுறை கொல்லப் பார்த்தார்கள்" ♥

ராஜபக்சேயை கொல்ல 3 தடவை முயன்றனர்: விடுதலைப்புலிகள் மீது ராணுவம் குற்றச்சாட்டு


http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/3577976220_6551920c3f_o.jpg




கொழும்பு, ஜூன். 13-
 
இலங்கை அதிபர் ராஜ பக்சேயை கொலை செய்ய விடுதலைப்புலிகள் 3 தடவை முயன்றனர் என்று சிங்கள ராணுவம் குற்றஞ்சாட்டி உள்ளது.
 
இது தொடர்பாக சிங்கள ராணுவ இணையத் தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
இலங்கை அதிபர் ராஜபக்சேயையும், அவரது தம்பியும் பாதுகாப்பு செயலாளருமான கோதபய ராஜபக்சேயையும் தற்கொலை தாக்குதல் மூலம் படுகொலை செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பலத்த பாதுகாப்பு காரணமாக விடுதலைப்புலிகளின் திட்டம் நிறைவேறவில்லை.
 
ராஜபக்சேயை படுகொலை செய்ய மனித வெடிகுண்டாக வந்த கரும்புலியை ராணுவத்தினர் உயிருடன் பிடித்தனர். வி.ஐ.பி.க்களை கொல்ல அவருக்கு கிளிநொச்சியில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் இருந்து 4 தற்கொலை உள்ளாடைகளை கடந்த மாதம் 14-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது.
 
அதன் தொடர்ச்சியாக ஒரு என்ஜினீயரிங் மாணவரை பிடிக்க முயன்றபோது அவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சுஜிந்திரன் என்று தெரிய வந்தது.
 
அவர் குடும்பத்தினர் கொழும்பில் தங்கி இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உதவியுடன் ராஜபக்சேயை கொல்ல 3 தடவை முயற்சி நடந்தது.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி ராணுவ அணிவகுப்பை பார்வையிட வந்த ராஜபக்சேயை கொல்ல ஒரு விடுதலைப்புலி வந்தார். அவரை ராணுவ வீரர்கள் உயிருடன் பிடித்தனர். அவருக்கு ரகசிய உதவிகள் செய்திருந்த ராணுவ அதிகாரியும் பிடிபட்டார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி கண்காட்சியை பார்வையிட வந்த ராஜபக்சேயை கொல்ல 2-வது தடவை முயற்சி செய்தார். வெடிகுண்டு தீவிரவாதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராஜபக்சே உயிர் தப்பினார்.
 
கடந்த மார்ச் மாதம் தற்கொலை தீவிரவாதிகள் வேறுவிதமாக முயற்சிகளில் ஈடுபட்டனர். இஸ்லாமிய கூட்டத்தில் குண்டு வெடிப்பை நடத்தி சில மந்திரிகளை காயம் அடைய வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மந்திரிகளை ராஜபக்சே பார்க்க வரும்போது அங்கு தற்கொலை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
 
இதற்காகவே மனித வெடிகுண்டு கரும்புலி ஒருவர் அந்த மருத்துவமனையில் தயாராக இருந்தார். இதை உளவுப்பிரிவினர் கண்டு பிடித்து சரியான நேரத்தில் தகவல் தந்தனர். இதனால் அந்த படுகொலை முயற்சியில் இருந்தும் ராஜபக்சே தப்பினார்.
 
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக விடுதலைப்புலிகளின் 3 தாக்குதல் முயற்சிகளையும் ராணுவம் திறம்பட முறியடித்து விட்டது.
 
இவ்வாறு அந்த இணையத்தள தகவலில் கூறப்பட்டுள்ளது.

http://www.athirvu.com/ca1.jpg


http://www.maalaimalar.com/2009/06/13104856/CNI030130609.html


smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!