Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, August 7, 2009

♥ பத்மனாதன் கைது...சில கேள்விகள் சில பதில்கள் ♥











விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவர் திருவாளர் செ.பத்மனாதன் அவர்கள்

கைகானதாகவும், கடத்தப்பட்டதாகவும் வந்திருக்கும் தகவல்கள் தற்காலத்தின்
நிலவரங்களை உற்று நோக்கி வருவோருக்கு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஒரு
சேர ஏற்படுத்தும். ஏனெனில் இலங்கை இந்திய அரசுகள் விரும்பும் முடிவான
தலைவர் இறந்து விட்டார் என்ற முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இனி
விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதி வழியில் தமிழீழம் அடைய அரசியல்
நடாத்துமென வழிகாட்டிமுறைகளை வகுத்தவர் செ.பத்மனாதன் அவர்கள்.
அதுமட்டுமின்றி அவரது வழிகாட்டலில் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்பட
அனைத்து முன்முயற்சிகளையும் எடுத்தவர். எல்லாவற்றிற்கும் உச்சக்கட்டமாக
இந்திய அரசுடன் தான் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தப்போவதாகவும்
அறிவித்திருந்தார் செ.பத்மனாதன்.

அதே வேளையில் செ.பத்மனாதன் அவர்களைக் கைது செய்ய முயற்சிகள்
எடுக்கப்படுவதாக இருமாதங்களுக்கு முன்பிருந்தே இலஙையின் வெளியுறவு
அமைச்சர் அறிவித்தவண்ணமிருந்தார். இரு நாட்களுக்கு முன்பு புலிகள்
இப்போது புதிய தலைமையின் கீழ் ஒன்று திரண்டு வருவதாகவும், தாங்கள்
அதனையும் முடித்து விடுவோம் என்றும் இலங்கையரசு கருத்து
வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் செ.பத்மனாதன்
கைதானதாகவும், கடத்தப்பட்டதாகவும், கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகவும்
செய்திகள் வருகின்றன. இந்த எல்லா நிகழ்வுகளையும் சேர்த்துப்
பார்ப்பவர்கள் இவற்றிற்கிடையே ஒரு முரண்பாடும் ஒரு பொருத்தப்பாடும்
இருப்பதை காண முடியும்.

முரண்பாடு:

செ.பத்மனாதன் அவர்கள் கூறியெதெல்லாம் உண்மைதான் என்று எடுத்துக்கொண்டால்
இப்போது நடந்திருப்பது வருத்ததிற்குரியது. ஏனெனில் மென்வழி அரசியல்
(smart politics) மட்டுமே இனி உதவும் என்று உறுதியாக தெரிவித்து இந்திய
அரச்சுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தவர் கடைசியில் கைதாகியும்,
கடத்தப்பட்டும் உள்ளார். இதன் பின்னணியில் ஒரு பெரியநாட்டின்
உளவுத்துறையின் பங்கு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த பெரிய
நாடு எது என்று யூகிப்பது யாவருக்கும் எளிதே. அப்படியானால் செ. பத்மனாதன்
அவர்களின் மென்வழி அரசியல் குறுகிய காலத்திலேயே தோல்வியடைந்து விட்டதை
தற்போதைய நிகழ்சி காட்டுகிறது. அவர் இந்திய அரசுடன் ஏற்படுத்திய நேரடித்
தொடர்பு இப்படித்தான் முடிந்திருக்கிறது என்பதை எண்ணிப்பர்க்க வைக்கிறது.
இதிலிருந்து ஏராளமான பாடங்களைக் கற்க முடியும்.

பொருத்தப்பாடு:

தலைவர் இறந்து விட்டார் என்பது இலங்கை, இந்திய அரசுகள் விரும்பிய முடிவு.
அவரது இறப்பில்தான் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட முடியும்.
அத்துடன் தமிழீழம் என்ற விடுதலையுணர்வும் ஒரேயடியாக குழிதோண்டிப்
புதைக்கப்பட வேண்டும் என்றும் இரு அரசுகளும் அய்யத்திற்கிடமின்றி
விரும்புகின்றன. இந்த இரண்டையும் நிறைவேற்றத்தான் செ. பத்மனாதன் அவர்கள்
கருவியாகச் செயல்பட்டாரோ என்று கருதுவதில் தவறில்லை. ஏனெனில் என்று அவர்
தலைவர் இறந்து விட்டார் என அறிவித்தாரோ அன்று முதலே பல்வேறு
வட்டாரங்களில் துரோகியாக கருதப்பட்டார். பின்னர் விடுதலைப்புலிகளின்
உயிர் நாடியான விடுதலைப்போராட்டத்தை ஸ்மார்ட் அரசியலாகவும் மாற்றி
உதவினார் என்றும் சொல்லலாம். கடைசியில் அவரும் மர்மமான முறையில்
மறைந்திருப்பது தமிழர்களின் ஸ்மார்ட் அரசியல் கூட தோற்று விடும் என்று
நிரூபிக்க பயன்படலாம். இதன் மூலம் 'விடுதலைப்புலிகள் - தமிழீழம் -
தனிநாடு' என்ற கருத்தாக்கத்திற்கு சமாதி கட்டலாம். இப்படியொரு நாடகம்
நிறைவேற்றப்பட்டிருக்கிறதோ என்று எண்ணுவதும் இந்த நாடகத்தில்
செ.பத்மனாதன் அவர்களுக்கு முக்கிய வேடம் தரப்பட்டதோ என்று எண்ணுவதும்
தவறல்ல.

அனைத்தையும் அண்மை எதிர்காலம் தெளிவாக்கும் என்று நம்புவோம்.

- நிலவரசு கண்ணன்



♥ ஈனத்தமிழர்கள் காண வேண்டிய ஈழச்சிறுவன் வீடியோ பேச்சு ♥

ஈனத்தமிழர்கள் காண வேண்டிய ஈழச்சிறுவன் பேச்சு

http://www.youtube.com/watch?v=RpZQPDrWi4k

♥ தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன் - கேப்டன் அன்பரசன் ♥

தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன் - கப்டன் அன்பரசன்

'ஐயா' என்றுதான் அவன் எங்களால் அழைக்கப்பட்டான். அவன் அதை விரும்பாதபோதும், சிலவேளைகளில் 'இப்பிடிக் கூப்பிட்டா இனி நான் கதைக்க மாட்டன்' என்று விசனத்துடன் சொன்னாலும் இறுதிவரை நாங்கள் அவனை 'ஐயா' என்றுதான் கூப்பிட்டோம். மற்றப் பிரிவினர் அவனை அன்பரசன் என்று கூப்பிட்டாலும் நாங்கள் அவனை 'ஐயா' என்றுதான் அழைப்போம். அவன் யாழ்ப்பாணத்தில் ஐயர் குடும்பமொன்றைச் சேர்ந்தவன் என்பதுதான் அதற்குக் காரணம்.

இயக்கம் அவனுக்கு வைத்த பெயர் அன்பரசன். அவனது வீட்டுப்பெயர் சரியாகத் தெரியாது. பொதுவாகவே போராளிகளின் இயற்பெயர்கள் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே இருக்கும். முன்பு அவனோடு படித்த ஒருவன் ஒருமுறை வீதியிற் கண்டு அவனைக் கூப்பிட்டபோது அவனது பெயர் இறுதியில் 'சர்மா' என்று முடியுமென்பதை அறிந்துகொண்டோம்.

அன்பரசனை நான் சந்தித்தது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில். வெவ்வேறு கடமைகளில் இருந்த நாம் ஒரு கற்கைநெறிக்காக ஓரிடத்துக்கு வந்திருந்தோம். அதன்பின் அவனது இறப்புவரை ஒன்றாகவே இருந்தோம்.

அன்பரசன் 1995 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் போராட்டத்தில் இணைந்தான். 'கெனடி -1' என்ற பெயரில் நடத்தப்பட்ட அடிப்படைப் பயிற்சி முகாமில் தனது பயிற்சியை நிறைவு செய்தான். அதன்பின்னர் இம்ரான்-பாண்டியன் படையணியில் கடமையாற்றினான்.

maaveerar1கற்கைநெறியில் பல படையணிகளிலிருந்தும், துறைகளிலிருந்தும் போராளிகள் பங்கெடுத்தனர். ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் தளமமைத்து எமது கற்கைநெறி தொடங்கியது. தள அமைப்பு வேலைகள் முடிந்து படிப்புத் தொடங்கிக் கொஞ்ச நாட்களிலேயே 'ஜெயசிக்குறு' தொடங்கிவிட்டது. அதுவும் முதலிரு நாட்களிலேயே நெடுங்கேணிப் பகுதியை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிவிட்டது.

எமது தளத்துக்கும் நெடுங்கேணியில் நிற்கும் இராணுவத்துக்குமிடையே அடர்ந்த காடு மட்டுமே இருந்ததால் சண்டையொன்றை எதிர்கொள்ளும் நிலைக்கு எமது கற்கைநெறித் தளம் மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவை வந்தது. சண்டைகள் வலுக்க நாமும் இடங்கள் மாறிமாறி நகர வேண்டிவந்தது. ஜெயசிக்குறுவில் மக்கள் மட்டுமன்றி நாமும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். நமது படிப்பும் இழுபட்டுக்கொண்டிருந்தது. ஜெயசிக்குறு இராணுவத்தினர் மீது நடந்த முதலாவது வலிந்த தாக்குதலான தாண்டிக்குளச் சமர் தொடக்கம் அதன்பிறகு நடந்த பல சண்டைகளுக்கு படித்துக்கொண்டிருந்த அணிகளும் அழைத்துச் செல்லப்பட்டன. அவற்றில் வீரச்சாவுகள், காயங்கள் என்று அணிகள் சேதமடைய மிகுதிப் பேரோடு படிப்புத் தொடர்ந்தது.

இடையிடையே ஒவ்வொரு படைப் பிரிவும் துறையும் ஓரிருவரை மீள அழைத்துக் கொள்ளும். சிலவேளைகளில் படிப்பு முற்றாக நிறுத்தப்பட்டு அணிகள் தத்தமது இடங்களுக்குச் சென்று தமது பணிகளைத் தொடரும். பிறகு மீண்டும் படிப்பு நின்ற இடத்திலிருந்து தொடங்கும். மீளத் தொடங்கும்போது இன்னும் சிலர் குறைந்திருப்பார்கள். ஜெயசிக்குறுவோடு தொடங்கிய படிப்பு இழுபட்டு இழுபட்டு பதினான்கு மாதங்களின் பின்னர் முடிவடைந்தது. தொடங்கிய போதிருந்த போராளிகளின் எண்ணிக்கையில் சரி அரைவாசிப் பேர்தான் அந்தக் கற்கைநெறியை முடித்தனர். அதற்கு முன்பே வீரச்சாவடைந்தவர்களில் கப்டன் அன்பரசனும் ஒருவன்.

பழகுவதற்கு மிகவும் சுவாரசியமாக இருப்பான் அன்பரசன். அவனது வேலைகளில் நேர்த்தியும் அழகுணர்ச்சியும் நிறையவே இருக்கும். காட்டில் தளம் அமைத்துக் கொண்டிருக்கும்போது மற்றவர்களுக்கு நிறையவே கரைச்சலைக் கொடுப்பான். கொட்டில் போடத் தடிகள் வெட்டும்போதுகூட அவனது தொல்லை தொடரும். நடப்படும் கப்புகள் ஒரே மொத்தமாக இருப்பது தொடக்கம், அவை ஒரே நிறமாக இருப்பது வரை சில்லறை விடயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான்.

"ஐயா, பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டியள் போல இஞ்ச ஆரும் கொட்டில் வடிவு பாத்து மார்க்ஸ் போடப்போறாங்களோ? இருக்கிறதுக்கு நல்ல பலமான கொட்டில் போட்டாச்சரி. அதுவும் எத்தினநாள் இஞ்ச இருக்கப்போறோமோ தெரியேல. சும்மா முட்டையில மயிர் பிடுங்கிற வேலையை விட்டிட்டுச் சும்மா இரும்."

என்று மற்றவர்களிடம் நல்ல பேச்சு வாங்குவான். ஆனால் விடாப்பிடியாக நின்று தான் நினைத்தமாதிரியே கொட்டிலைப் போடவைத்து விடுவான். சாப்பாட்டுப் பாத்திரங்கள் வைக்கும் பரண் அமைப்பதென்றால் சும்மா வரிச்சுத்தடிகளை வைத்து வரிந்து பரண் அமைத்துவிடுவோம். மறுநாள் பார்த்தால் அவையெல்லாம் கழற்றி எறியப்பட்டு புதுப்பரண் அமைக்கப்பட்டிருக்கும். விண்ணாங்குக் கட்டைகளைப் பிளந்து, சீவி அழகாக அடுக்கிக் கட்டப்பட்டிருக்கும் அப்பரண்.

எதையும் ஆராய்வதில் துருதுருவென்றிருந்தான். அவன் ஒரு வானொலிப் பெட்டி வைத்திருந்தான். அதைக் கழற்றிப் பூட்டாத நாளேயில்லை. அதற்காக எல்லோரிடமும் பேச்சு வாங்கிக் கொண்டேயிருப்பான். வானொலி கொஞ்சம் கரகரத்தாலும் உடனே அதைச் சரிசெய்ய வேண்டுமென்பது அவனெண்ணம். புலிகளின் குரலில் தொடர்நாடகம் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் பெட்டியைக் கழற்றுவான். அவனைத் திட்டக்கூட நேரமில்லாமல் மற்றக் கொட்டில்களுக்கு ஓடவேண்டும் நாடகத்தைக் கேட்க.

"ஐயா, ஒழுங்காத்தானே அது பாடிக்கொண்டிருக்கு. பிறகென்ன கோதாரிக்கு புடுங்கிக் கொண்டிருக்கிறீர்?" என்று அடிக்கடி யாராவது பேசிக்கொண்டேயிருப்பார்கள்.

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம். கற்கை நெறியின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தோம். வெடித்தல் தொகுதிகளின் பொறிமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்காக இயக்கத்தின் பொறிமுறைக் களஞ்சியம் இருக்கும் இடத்திற்கு அனைவரும் போயிருந்தோம். ஒருகிழமை அங்கேயே தங்கியிருந்து அனைத்து வெடிபொருட்களையும் பார்த்துப் படித்துக்கொள்வதே திட்டம்.

ஜூன் மாதம் நான்காம் நாள். அதுவொரு வியாழக்கிழமை. காலையிலேயே படிப்புத் தொடங்கிவிட்டது.

ஒவ்வோர் அறையிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அனேகமானவை நெடுக்குவெட்டுமுகமாக மூன்றிலொரு பகுதி வெட்டி அகற்றப்பட்டு, அவற்றின் உள்ளமைப்பைப் பார்வையிடக் கூடியவாறு வைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே தனித்தனியாகப் படித்திருந்த பொறியமைப்புக்களை ஒன்றாகவே வைத்து முழுமையாக அறிந்து கொள்வதே அந்த ஒரு கிழமைக்குரிய செயற்றிட்டம்.

ஆறுபேர் கொண்ட அணிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வோர் அணிக்கும் ஓரறை என்று வழங்கப்பட்டது. அணிகள் அறைமாறி அறைமாறி எல்லாம் பார்த்து முடித்துவிட்டன. பின் ஒரு சிறிய இடைவேளை. அதன்பின் அறைக்கொருவரைப் பொறுப்பாக நியமித்துவிட்டு, ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் விரும்பிய அறையில் போய் வெடிபொருட்களைப் பார்த்து விரிவாக அறிந்து கொள்ளலாம், ஆனால் ஓரறையில் ஆறுபேர்தாம் அதிகபட்சமாக இருக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Maveerar2நாம் முதலிற் சென்றது கையெறிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு. விதவிதமான கையெறிகுண்டுகள் – வெளிநாட்டுத் தயாரிப்பு, இயக்கத் தயாரிப்பு, பயன்பாட்டிலில்லாமற் போய் தசாப்தங்கள் ஆகிவிட்ட அரிய கைக்குண்டுகள் என்று சுமார் 300 வரையான கையெறிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் மூன்றிலொரு பகுதி நெடுக்குவெட்டுமுகமாக வெட்டியெடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் பொறித் தொகுதிகள் கெற்புடன் (Detonator) சேர்த்து அகற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் குண்டுகள் வெடிமருந்துடன் இருந்தாலும் அவை பாதுகாப்பான நிலையிலேயே இருந்தன.

அகற்றப்பட்ட பொறித்தொகுதிகள் தனியாக வைக்கப்பட்டிருந்தன. பார்த்தறிவதற்கு ஏதுவாக அவையும் நெடுக்குமுகமாக வெட்டப்பட்டிருந்தன. சில பொறித் தொகுதிகள் கெற்புடன் சேர்ந்திருந்ததால் இன்னும் ஆபத்தான நிலையிலேயே இருந்தன. எவரும் தொட்டுப் பார்க்கக்கூடாது என்ற அறிவிப்போடு அவை தனியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கையெறிகுண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நாம் போனபோது அன்பரசன் எம்மோடு இருக்கவில்லை. விலாவாரியாக பார்வையிட்டுவிட்டு 'ஒரு செக்கன் குண்டு' என அழைக்கப்படும் குண்டின் பொறிமுறைத் தொகுதியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தோம். நானும் இன்னொருவனும் தரையில் அமர்ந்திருக்க இன்னும் நாலுபேர் எம்மைச் சுற்றி குனிந்தபடி நின்றிருந்தனர்.

தீடீரென்று 'டப்' என்றொரு சத்தம் என் பின்னால் கேட்டது. திரும்பினேன். எனக்கு நேர்பின்னே அன்பரசன். கையில் ஏதோ இருந்தது. முகம் வெளிறியிருந்தது. ஒருகண நேரம்தான். நிலைமையின் விபரீதத்தை நான் அறிவதற்குள் எல்லாம் நடந்துவிட்டது. அன்பரசன் அறைக்கதவை நோக்கிப் பாய்ந்தான். கதவு நிலைகளுக்கிடையில் ஒரு வெளிச்சம், கூடவே பெரியதொரு சத்தம்.

என்ன நடந்ததென்று உடனடியாக எனக்குப் புரியவில்லை. 'டப்' என்ற வெடிப்பிச் சத்தம் கேட்டதும் நான் திரும்பிப் பார்த்தபோது அன்பரசன் நின்றதுதான் தெரியும். அன்பரசன் எப்போது அந்த அறைக்குள் வந்தானென்று தெரியவில்லை. நடக்கப் போகும் விபரீதத்தை நான் உணரக்கூட இல்லை. அதற்குள் எல்லாம் நடந்துவிட்டது. கதவு நிலைகளுக்கிடையில் அன்பரசனின் வயிற்றோடு ஒட்டி குண்டு வெடித்தபோது அவனின் முதுகின் பின்னே நாமிருந்ததால் நிலத்தில் இருந்த எமக்குக் காயமேதுமில்லை. கதவு நிலையடியில் நின்று கொண்டிருந்தவர்களில் இருவர் கடுமையான காயத்துக்குள்ளாகினர். அன்பரசன் கதவு நிலைகளுக்கிடையில் சுருண்டு வீழ்ந்தான்.

பொதுவாக, கையெறிகுண்டானது எறிந்தபின் குறிப்பிட்ட தாமத நேரத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்படுவது. பெரும்பாலும் இத்தாமத நேரம் நான்கு வினாடிகளாக அமைந்திருக்கும். அன்பரசன் கையில் வைத்திருந்தது 'M75' ரக கைக்குண்டு. அது 3000 சிதறுதுண்டுகளையும் 75 கிராம் C4 வெடிமருந்தையும் கொண்டிருக்கும். உள்ளமைப்புத் தெரிவதற்காக ஒருபகுதி வெட்டியெடுக்கப்பட்டிருந்ததால் இவற்றின் அளவு அக்குண்டில் குறைவாக இருந்தது.

தனித்தனியே கிடந்த கைக்குண்டையும் அதற்குரிய வெடித்தற் பொறிமுறைத் தொகுதியையும் எடுத்துப் பொருத்தியநிலையில் என்ன காரணத்தாலோ பொறிமுறை செயற்பட்டு, வெடிப்பி வெடித்துவிட்டது. அதுதான் முதலிற் கேட்ட 'டப்' சத்தம். குண்டையும் பொறியமைப்பையும் ஒன்றாக்கியது அன்பரசன்தானா அல்லது வேறுயாரும் பொருத்திப் பார்த்துவிட்டு தவறுதலாக விட்டுப் போனதை அன்பரசன் தூக்கிப் பார்த்தானா என்பது விடை தெரியாத கேள்விகள்.

உள்ளமைப்பைப் பார்வையிடுவதற்காக நெடுக்காக வெட்டப்பட்டு ஒருபகுதி அகற்றப்பட்ட காரணத்தால் அப்பொறியமைப்பு நியம தாமத நேரமான நான்கு வினாடிகளுக்குத் தாமதத்தைத் தரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வினாடி என்றளவுக்கு மிகக்குறைந்த தாமத நேரத்திலேயே குண்டு வெடித்துவிட்டது.

அன்று ஒரு பேரழிவிலிருந்து இயக்கம் தப்பியது. அன்பரசன் நின்ற இடத்திலேயே குண்டுவெடித்திருந்தால், அவ்வறையிலிருந்த மற்றக் குண்டுகளும் – அதன் காரணத்தால் பக்கத்து அறைகளிலிருந்த அனைத்து வெடிபொருட்களும் வெடித்து அக்கட்டடமே தகர்ந்திருக்கும். கற்கைநெறியை முடிக்குந் தருவாயிலிருந்த முப்பது வரையான போராளிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர் என அனைவரும் மாண்டிருப்பர். எல்லாவற்றுக்கும் மேலாக, பல்லாண்டுகளாகச் சேர்த்துச் சேர்த்து வைத்திருந்த வெடிபொருட்களின் மாதிரிகள், கற்பித்தல் தேவைக்கேற்றாற்போல் வடிவமைக்கபட்டிருந்த வெடிபொருட்கள், பொறியமைப்புத் தொகுதிகள் என்று மிகப்பெரும் போர் அறிவியற் சொத்துகள் அழிந்து போயிருக்கும்.

maaveerar3

அன்பரசனுக்கு இருந்தது ஒரு கண நேரந்தான். சிந்திக்க நேரமேயில்லை. அவ்விடத்திலேயே குண்டு வெடித்தால், அல்லது யன்னல் வழியாகக் குண்டை எறியமுனைந்து அது கம்பிகளிற்பட்டு மீண்டும் உள்ளே விழுந்தால் நடக்கப்போகும் அழிவு விபரீதமானது. யோசிப்பதற்குக்கூட மில்லி செக்கன்களைச் செலவிடமுடியாத தருணம். ஆனாலும் அவனது மூளை சரியாகவும் வேகமாகவும் வேலைசெய்தது. சாவின் விளிம்பிற்கூட பதற்றப்பட்டுவிடவில்லை. திகைத்துப் போய் அப்படியே நிற்கவில்லை.

குண்டை தனது வயிற்றோடு சேர்த்தபடி கதவை நோக்கிப் பாய்ந்தான். சிதைந்த இடுப்போடு, பெருமளவு சிதறுதுண்டுகளை உள்வாங்கிய அவனது உடல் கதவு நிலைகளுக்கிடையில் துவண்டது. அன்று தனது உயிரை மட்டும் கொடுத்துப் பேரழிவைத் தடுத்தான் கப்டன் அன்பரசன்.

--------------------------------------------

*அன்பரசன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது 04/06/1998. அதுவொரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்துவந்த வியாழக்கிழமையும் அதேயிடத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது.


http://eelavarkural.blogspot.com/2009/08/blog-post_02.html

♥ சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட ஈழநாதம் செய்தியாளர்கள் ♥

http://www.meenagam.org/wp-content/uploads/2009/08/eelanaatham.jpg

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிறிலங்கா படையினரால் கொல்லப்ட்ட செய்தியாளர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கொல்லப்பட்டனர்.

முல்லைத்தீவில் ஈழநாதம் நாளாந்த பத்திரிகைக்கு பொறுப்பாளராக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவர். மாத்தளன் வலைஞர்மட வீதியில் வைத்து கொல்லப்பட்டார்.

சிறிலங்காப் படையினர் ஏவிய எறிகணை வீச்சிலேயே இவர் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்ட போது 24 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, 2009 மே மாதம் 14 ம் திகதி அன்று முள்ளிவாய்க்காலில் வைத்து, ஈழநாதத்தின் களஞ்சியப் பொறுப்பாளராக இருந்த, பரந்தனைச் சேர்ந்த அந்தனிகுமார் கொல்லப்பட்டார். அதேதினம், ஈழநாதத்தின் கணணி இயக்குநரான 27 அகவையான ரூபன் கொல்லப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஈழநாத விநியோகஸ்தர்,சசிமதன் முள்ளியவளையில் வைத்து கொல்லப்பட்டார்.

25 அகவையான ஈழநாதத்தின் கணணி இயக்குநர் டென்சி மற்றும் அவரின் கணவர் ஆகியோர், வீட்டில் இருந்த போது கொல்லப்பட்டனர்.

அத்துடன் ஈழநாதத்தின்,விநியோகஸ்தரான 36 அகவையான அன்டன் இரணைப்பாலை என்ற இடத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

http://www.meenagam.org/?p=7294

♥ 'புலிகள் தலைவர் கே.பத்மநாதன் கைது முழு வதந்தியே' ♥

  'புலிகள் தலைவர் கே.பத்மநாதன் கைது முழு வதந்தியே'

கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் புதிய தலைவர் கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் பேங்காக்கில் கைது செய்யபட்டதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தியே எனத் தெரியவந்துள்ளது.

தாய்லாந்தில் குமரன் பத்மநாதனை வியாழக்கிழமை இரவு தாம் கைது செய்துள்ளதாக இன்டர்போல் போலிசார் தெரிவித்ததாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

பத்மாநாதனின் கைதை உறுதி செய்வதாக, அவரது அடையாளங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை உளவுத்துறையை, தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.


http://www.nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=2218:2009-08-06-23-46-09&catid=4:sarvadesm&Itemid=5

இதுதொடர்பாக இலங்கை அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, இத்தகைய வதந்தி தமக்கு கிடைத்துள்ளதாக கூறி, உறுதி செய்ய மறுத்துவிட்டனர் என்று ஏசியன் டிரிப்யூன் செய்தித் தளத்தில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கே.பி.யை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசை இலங்கை ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் தாய்லாந்தில் பத்மநாதன் கைதானதாக தகவல் கிடைத்ததும், இலங்கை பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் உடனே தாய்லாந்து விரைந்ததும், பேங்காக் சென்ற பிறகு யாரையும் கைது செய்யவில்லை என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறிய பின் அவர்கள் வெறும் கையுடன் திரும்பியதும் நினைவுகூரத்தக்கது.

♥ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த வே.பாலகுமார், யோகி, கரிகாலன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் படுகொலை – சிறீலங்கா இணையத்தளம் தகவல் ♥

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த வே.பாலகுமார், யோகி, கரிகாலன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் படுகொலை – சிறீலங்கா இணையத்தளம் தகவல்


SLG



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக 'சிறிலங்கா கார்டியன்' என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

அரச வட்டாரங்களில் இருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி தென்பகுதியில் உள்ள சிறைச்சாலைககளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இவர்கள், அங்கு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக இந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 வரையிலான முக்கிய உறுப்பினர்கள் திட்டமிட்ட முறையில் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசின் 'கொலைக் குழு' ஒன்றினால் கொன்று அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் என அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டிருப்பதாகவும் 'சிறிலங்கா கார்டியன்' தனது செய்தியில் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த வே.பாலகுமார் (முன்னாள் ஈரோஸ் தலைவர்), யோகரட்ணம் யோகி, கரிகாலன், புலவர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிலர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் இருந்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக என இவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவோ அல்லது இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையிட்டோ அரசு தொடர்ந்தும் மெளனமாகவே இருந்துவருகின்றது. தயா மாஸ்டர் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பாக மட்டுமே அரசு தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மற்றொருவர், இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவோ அல்லது இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பாகவோ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவுக்குக்கூட அரசு தகவல் தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.


http://www.nerudal.com/nerudal.9510.html

♥ இலங்கைக்கு சென்ற இந்திய இராணுவத்தி நிலை என்ன ????? ♥

இலங்கைக்கு சென்ற இந்திய இராணுவத்தி நிலை என்ன ?????


http://www.worldwidephotos.org/pics/1833_b.jpg

சில தினங்களுக்கு முன்பு கன்னி வெடி அகற்றுவதற்கு என்ற ஓர் பொய்யான பேச்சில் கெரில்லா முறையில் ஈடுபட்டுவரும் போராளிகளை முற்றாக அழிக்க சிங்கள் இனவெறி அரசினால் வரவழைக்கப்பட்ட காந்தி தேசத்து இராணுவத்தினர் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழத்தின் சில காடுகளில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் இதில் 1500 அதிகாமான காந்தி தேசத்து இராணுவத்தினை காணவில்லையாம் அவர்களை மீட்கும் பொருட்டு சிங்களதேசத்தின் முப்படைகளும் அங்கு முடக்கி வடப்பட்டுள்ளதாம் இந்த தகவல் இன்னும் உத்தியா புர்வமாக வெளியிடவில்லை,

இந்த செய்தி சொன்னது ஒரு தமிழ் உறவு , இதில் எனக்கு கிடைத்த தகவல் , இந்திய இராணுவத்தினரை சிங்கள இன வெறி இராணுவத்தினர் சுட்டு கொன்று விட்டு , இதை நம் தேசிய இராணுவத்தினர் (LTTE ) மீது பழி சுமத்தி , மேலூம் நம் தேசிய இராணுவத்தினர் மீது இந்தியாவின் கோபத்தை துண்ட சதி செய்தது சிங்கள இன வெறி இராணுவம் , இதை புரிந்து கொண்ட நம் தேசிய இராணுவத்தினர் , சில இந்திய இராணுவத்தினரை கடத்தி உண்மைய சொல்லி , பின் விடுவித்தனர் .

authimoolam jillaa <authi84@gmail.com>

♥ ராஜபக்சே மீது அதிருப்தி: சிங்கள முன்னாள் ராணுவ தளபதி நாட்டை விட்டு வெளியேறுகிறார் ♥





அதிபர் ராஜபக்சே மீது அதிருப்தி: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி நாட்டை விட்டு வெளியேறுகிறார்; அமெரிக்கா செல்ல திட்டம்

கொழும்பு, ஆக. 5-

இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் கூட்டுப்படை தளபதியாக இருந்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து இவருக்கு பொதுமக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது. இவர் சென்ற இடங்களில் எல்லாம் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இலங்கை அரசில் இவருக்கு உரிய மதிப்பும் மரியாதையும் தரப்படவில்லை. மேலும் அவரை ராணுவ தளபதி பதவியில் இருந்து நீக்கி விட்டார் எனவும் கூறப்படுகிறது. அதிபர் மகிந்த ராஜ பக்சேயின் இந்த நடவடிக்கைகள் அவரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

மேலும் பாதுகாப்பு அமைச்சக்கத்தின் செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சே இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளார். சரத்பொன் சேகாவின் அறிக்கைகளை வெளியிடக்கூடாது. அவர் தொடர்பான போட்டோக்கள் மற்றும் கட்டுரைகளை அரசு ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டை விட்டு வெளியேற சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.

அமெரிக்கா சென்று அங்கு குடியேற திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இலங்கையில் 3 மாகாணங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று சரத் பொன்சேகாவை சந்தித்தது. அவரது இந்த முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

அவரது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அதிபர் மகிந்தா ராஜபக்சேயிடம் எடுத்துக்கூறுவதாகவும் உறுதி அளித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அவசர கால சட்ட நீடிப்பு மீதான விவாதம் நடக்கும்போது சரத் பொன்சேகா விவகாரம் குறித்து ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயகா பேச இருக்கிறார்.

பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயும் பாராளுமன்றத்தில் பேசுகிறார்.

♥ 4-வது முறையாக தமிழக அரசு வழங்கிய ரூ.15 கோடி உணவு பொருட்களுடன்கப்பல் இலங்கை புறப்பட்டது ♥

4-வது முறையாக தமிழக அரசு வழங்கிய ரூ.15 கோடி உணவு பொருட்களுடன்கப்பல் இலங்கை புறப்பட்டது

சென்னை, ஆக. 6-


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முதல்- அமைச்சர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக பெறப்பட்ட நிதியை கொண்டு இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவுப்படி தமிழக அரசு சார்பில் 3 முறை இலங்கை தமிழர்களுக்கு கப்பல் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதல் தடவை ரூ.10.07 கோடிக்கும், 2-வது முறை 6.62 கோடிக்கும், 3-வது தடவை 6.90 கோடிக்கும் பொருட்கள் அனுப்பப்பட்டன. இப்போது, 4-வது முறையாக ரூ.15 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்ப தமிழக அரசு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உணவு பொருட்கள், மளிகை சாமான்கள், பிளாஸ்டிக் கேன்கள், செருப்புகள், குழந்தைகளுக்கான துணிகள் உள்ளிட்ட பொருட்கள் இதில் அடங்கும். ரூ.15 கோடி மதிப்புள்ள இந்த பொருட்களை “எம்.சி.பி. ஆம்ஸ்டர்டாம்” என்ற கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கப்பல் இன்று மதியம் 11.50 மணிக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. 8-ந்தேதி 11 மணிக்கு இது கொழும்பை சென்றடையும். பின்னர் நிவாரண பொருட்கள் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம், ஐக்கிய நாடு சபை நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு வழங்கப்படும்.

♥ இலங்கை தமிழர்களுக்கு சிகிச்சை: இந்திய ராணுவ டாக்டர்கள் நாடுதிரும்புகின்றனர்; ஆஸ்பத்திரி மூடப்படுகிறது ♥

இலங்கை தமிழர்களுக்கு சிகிச்சை: இந்திய ராணுவ டாக்டர்கள் நாடுதிரும்புகின்றனர்; ஆஸ்பத்திரி மூடப்படுகிறது
http://www.blogthecoast.com/rainbow/3980%20hospital%20room.jpg
கொழும்பு, ஆக.6-

இலங்கையில் போர் உச்சக்கட்டமாக நடந்து கொண்டிருந்தபோது போரில் காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய ராணுவ டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 6 மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்ற அவர்கள் திரிகோணமலை மாவட்டம் புல்மொட்டை என்ற இடத்தில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைத்து சிகிச்சை அளித்தனர். போரில் காயம் அடைந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இந்த ஆஸ்பத்திரி வவுனியா மாவட்டம் செட்டிகுளத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள மெனிக்பாம் அகதி முகாமில் தங்கியிருந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

தங்களது பணிகள் முடிந்துவிட்டதால் இப்போது அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப ராணுவ டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதர் அலோக்பிரசாத் இலங்கை சுகாதார துறை மந்திரி சிரிபாலடி சில்வாவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

எங்கள் டாக்டர்கள் குழு பணி முடிந்துவிட்டதால் அவர்கள் நாடு திரும்ப உள்ளனர். இந்த ஆஸ்பத்திரியை இனி இலங்கை சுகாதார துறை எடுத்து நடத்தலாம் என்று கூறியுள்ளார்.

இலங்கை அரசு இந்த ஆஸ்பத்தியை ஏற்று தொடர்ந்து நடத்துமா? என்று தெரியவில்லை. இந்திய டாக்டர்கள் திரும்பியதும் ஆஸ்பத்திரி மூடப்படும் என்று தெரிகிறது.

http://www.maalaimalar.com/2009/08/06121212/CNI023060809.html

♥ இன்னும் முப்பதாண்டுகளுக்கு ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி உண்டென்றால் அது பிரபாகரன்தான்! ♥

இன்னும் முப்பதாண்டுகளுக்கு உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி அது பிரபாகரன்தான்.


ராஜீவ்கொலைக்கு பழிவாங்கியாக வேண்டிய தேவையும் நினைவும் சோனியா குடும்பத்திற்கு இருந்திருக்கலாம். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்து மகாச்சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுக்கு, ரஷ்யாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே ஒரு ஐக்கியம் ஏற்பட்டு அது தனது பிராந்திய நலனில் பேரிடியாக மாறும் கவலைகள் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக மோசமான முறையில் இலங்கைக்கு இந்தியா ராணுவ உபகரணங்களை வழங்கி வந்திருக்கிறது.

கடந்த வருடம் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சு.ப. தமிழ்ச் செல்வன் படுகொலை செய்யப் பட்ட போது. நீண்ட நேரம் போராடி மண்ணுக்குள் புதைந்திருந்த அவரது உடலைத் தோண்டி எடுத்ததாக தகவல்கள் வந்த போது மிக மோசமான க்ளஸ்டர் குண்டு வீசப்பட்டதான செய்திகளை இப்போது நம்ப வேண்டியிருக்கிறது. க்ளஸ்டர், பாஸ்பரஸ், கொத்துக் குண்டுகள், ரசாயன ஆயுதங்கள் என பேரழிவு ஆயுதங்களோடு மக்களைத் துரத்தும் துணிச்சலும் தைரியமும் இலங்கைக்கு இந்தியா கொடுத்தது.

விளைவு பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து முள்ளியவாய்க்காலில் ஒரு நரவேட்டையை நடத்தி முடித்து விட்டது. இன்று இலங்கையில் புதிய சந்தை ஒன்றை உருவாக்கி விட்டது இந்தியா.

ஒரு மாபெரும் இரத்தக் குளியலின் பின் இந்திய முதலாளிகளுக்கு அந்தச் சந்தையை பரிசளிக்கப் போகிறது இந்தியா. மீள்கட்டுமானம், புனர்நிர்மாணம் என்கிற பல பெயர்களால் இவர்கள் இதை அழைத்துக் கொண்டாலும் டி.வி.எஸ் நிறுவனம், இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள், ரிலை-யன்ஸ், எல்.என்.டி போன்ற நிறு-வன-ங்கள் அங்கே முதலீட்-டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

வடக்கில் தேர்தலை நடத்தி டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி போன்ற துரோகிகளிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் இது மட்டுமே இப்போது ஈழத்தில் இன்னும் எஞ்சியிருக்கிறது.

ஆனால் இது இந்தியாவோ இலங்கையோ நினைப்பது போலல்ல, இந்தப் பிரச்சனையை புதிய தலைமுறை கையிலெடுத்துள்ளது. புலத்திலும் தமிழகத்திலும் மாற்றங்கள் வரும். இந்தியா மீது கடுமையான வெறுப்பில் இருக்கும் ஒரு கடும்போக்கு ஈழத்திற்கான அரசியல் போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.

இந்நிலையில்தான் இதுவரை ஈழம் பற்றி வாயே திறக்காத சிலர். அல்லது அங்கு இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று பேசியும் எழுதியும் வந்த சிலர். எல்லாம் முடிந்து விட்டது. இருபதாயிரம் போராளிகளை இழந்து ஒரு இலட்சம் மக்களை இழந்து, மூன்று லட்சம் மக்களை அகதி முகாமுக்குள் முடக்கி விட்டு முப்பதாண்டுகளுக்குப் பிறகு நாம் தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறோம் என்கிறார்கள் சிலர்.


ஈழப் போராட்டம் தொடங்கிய இடத்திற்கா வந்திருக்-கிறது, ஐம்பதுகளில் ஈழப் போராட்டம் ஈழத்தைத் தாண்டு வேறு எங்கும் பேசப்பட்டதில்லை. இன்று ஈழப் போராட்டம் பல்வேறு விதங்களில் விவாதிக்கப்படுகிறது. தமிழகம் தழுவிய பிரச்சனையாக ஓரளவுக்கேனும் மாறியிருக்கிறது. புலத்தில் வாழும் மக்களின் பங்களிப்பு ஈழத்தை சர்வதேச சமூகம் பேசும் ஒரு பிரச்சனையாக மாற்றியிருக்கிறது. தொடங்கிய இடம் என்பது இதுவல்ல. அப்போது நாம் ஒப்பீட்டளவில் உயிர்களை இழக்கவில்லை. அதே நேரம் அது ஒரு இந்தியாவின் பிராந்திய நலனுக்கான சீட்டு விளையாட்டுப் பிரச்சனையாக இருந்தது. இன்றும் அப்படித்தான் ஆனால் இனி இந்தியா விரும்பியது போல இந்தப் பிரச்சனையை நீண்டகாலத்திற்கு நீட்டித்துச் செல்ல முடியாது.

ஆசியாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழப் பிரச்சனை முன்னிலும் பார்க்க இந்து மகாச்சமுத்திரப் பிராந்திய அரசியலை பதட்டப்படுத்தும் ஒரு பிரச்சனையாக இருக்கும் என நம்பலாம். ஆனால் இந்த நிலைக்கு வந்து சேர ஈழ மக்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம். வடுக்களும் அதிகம். முடமாக்கப்பட்ட அம்மக்களிடம் இனி போராடக் கேட்பதே அபத்தமான விஷயமாகப் படுகிறது. ஆனால் அதே சமயம் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இலங்கைக்கு வெளியில் உள்ள பிராந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் கைகளில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழர்களிடமே உண்டு. தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாகச் செயல் படும் தலைவர்கள் இனியாவது இந்தப் பிரச்சனையை தீவீரமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்களின் கிளார்ச்சியிலேயே ஈழ மக்களின் வாழ்வுரிமை அடங்கியிருக்கிறது.

இன்று ஈழம் மூன்று கழுகுகளிடம் சிக்கியிருக்கிறது ஒன்று பேரினவாதப் பாசிச இலங்கை அரசு. இன்னொன்று இந்தியப் பேரினவாத அரசு, மூன்றாமவர்கள் மேற்குலகினர். இந்தப் பிரச்சனையை மனிதாபிமானப் பிரச்சனையாகப் பேசும் எல்லா நாடுகளுமே லாபம் கருதியே அங்கு தலையிடக் கோருகின்றன. உண்மையில் இந்த நாடுகள் இந்தப் போரை நிறுத்த நினைத்திருந்தால் இந்தியாவின் விருப்பத்தையும் மீறி இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது தங்களின் தன்னார்வக் குழுக்களை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதைத்தான். அதாவது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வக் குழுக்களை அனுப்ப வேண்டும் என்பதுதான். இயற்கைப் பேரிடர் நேரும் போதும் யுத்த அழிவு ஏற்படும் போது தன்னார்வக் குழுக்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது. ஆனாலும் அம்மக்களுக்கு உண்ண உணவோ உடையோ கிடைக்கும் என்பதால் நாம் இதை அமைதியாக சகித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

ஐநாவோ, பான்கிமூனோ, விஜய்நம்பியாரோ எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் கண்கூடாக இலங்கையில் பார்த்தோம். ''பெருந்தொகையான மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட அதை அமைதியான முறையில் ஐநாவின் கழுத்தறுத்து விட்டார் பான்கிமூன்'' இன்னர் சிட்டி பிரஸ் கண்டித்தது இங்கே நினைவில் நிறுத்தலாம். சேனல் 4, டைம்ஸ், லே மாண்டோ ஆகிய இதழ்கள் வெளியிட்ட ஆவணங்கள் மட்டுமே நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியாக இருக்கிறது. இந்தியாவின் செல்லப் பிள்ளையாக ஐநா அவையில் இருக்கும் விஜய்நம்பியார் இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சென்ற போது அங்கு சென்று விட்டு அவர் நேராக டில்லி வந்து விட்டு ஐநா அவைக்குப் போனார். அங்கே தனது இலங்கைப் பயணம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க மறுத்திவிட்டார். புலிகளின் தலைமை துரோகத்தனமாக அழிக்கப்பட்ட அதே நாட்களில் இலங்கைக்குச் சென்ற விஜய்நம்பியார் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து அப்படியே திரும்பி நியூயார்க்கிற்குப் போனார். எல்லாம் முடிந்த பிறகு ஹெலிகாப்டரில் இருந்து போர்ப் பகுதியைப் பார்த்து விட்டு மௌனமாக இன்று வரை விஜயநம்பியார் இருக்க பான்கிமூனோ அங்கே கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்றார். ஆனால் பான்கிமூன் இலங்கை செல்வதற்கு முன் டில்லிக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து விட்டுச் சென்றதாக செய்திகள் கசிந்தது.

ஆனால் இந்தியாவின் இத்தகைய போர் வெறியும் பிராந்திய அடாவடித்தனமும்தான் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. போர் முடிந்துவிட்டச் சூழலில் இந்தியா கண்டெடுத்த 13&வது சட்டத்திருத்தம் குறித்துக் கூட இந்திய, இலங்கை அரசுகள் பேச மறுக்கின்றன. 13&வது சட்டத் திருத்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை பிரித்த போது அது செல்லாமல் ஆகி விட்ட சூழலில் தமிழ் மக்களுக்கான உருப்படியான அரசியல் தீர்வை வைக்காமல் இலங்கை நிம்மதியாக இருக்க முடியாதபடி தமிழ் மக்கள் நெருக்கடிகளை முன்னெடுக்க வேண்டும். இதுவே தமிழ் மக்கள் இந்திய, இலங்கை அரசுகளுக்கு சொல்ல வேண்டிய செய்தி.

வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு 180 நாட்களுக்குள் அனுப்புவதாகச் சொன்னதாக வும் இந்தியாவுக்கு உறுதி மொழி கொடுத்ததாகவும் இந்தியத் தரப்புத் தெரிவித்தது. ஆனால்

இன்னும் மூன்றாண்டுகளுக்காவது அவர்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருந்தால் மட்டுமே வன்னியின் மீதான இராணுவ ஆதிக்கம் சாத்தியம். அதுவரை வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உளவியல் ரீதியிலும் உடல் ரீதியிலும் ஊனமாக்கி வெறும் நடை பிணங்களாக பாரம்பரீய பிரதேசங்களுக்கு அனுப்பினால் இனி தமிழீழம் என்றோ தமிழர் உரிமை என்றோ பேச சாத்தியம் இல்லை.


முப்பதாண்டுகளாய் ஏதோ ஒரு வகையில் நெருக்கடிக்குள் வாழ்ந்த மக்கள் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்ததை விட இராணுவத்தின் கீழ வாழ்வதை நினைத்துப் பார்க்கவே முடியாது. எப்படி இன்று உலகெங்கிலும் விடுதலைப் புலிகளுக்கு புதிய எழுச்சியும் ஆதரவும் கிடைத்துள்ளதோ அது போல வன்னியில் மீண்டும் புலிகள் அரசியல் எழுச்சியைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிரபாகரன் தேவையில்லை.


இன்னும் முப்பதாண்டுகளுக்கு உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி உண்டென்றால் அது பிரபாகரன்தான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போராட்டக் குறியீடாக முன்னை விட இப்பொழுது அதிக அளவில் முதன்மைபடுத்துவது மிக எளிதாக முடியும்.

உலகம் முழுவதும் அது இலகுவாக நடந்து வருகிறது. தடைகளும் கட்டுப்பாடுகளும் எதனையும் தடுத்துவிட இயலவில்லை.


ஆனால் தமிழகத்திலோ வழக்கம் போல எவ்வித அரசியல் செயல்பாடும் இல்லாமல் இருக்கிறது. உதாரணமாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சிங்கள ராணுவம் செய்தி பரப்பிய அன்று அதனை மிகப் பெரிய எழுச்சியாக மக்களிடம் மாற்றி இருக்க முடியும். அந்த எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தி அதனை போராட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும். பிரபாகரன் இறந்துவிட்டார், இறக்கவில்லை என்பதைத் தாண்டி அந்த மரணச் செய்தியை அரசியலாக்கி இருக்க வேண்டும்.

ஆனால் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு தமிழகத்தில் தலைமை தாங்கும் தலைவர்கள் அதற்குத் தயார் இல்லை. அல்லது அவர்களால் முடியவில்லை. இல்லை அவர்களுக்குத் தெரியவில்லை.

விளைவு லட்சக்கணக்கான ஈழ தமிழ் மக்களின் மரணம், தமிழ்நாட்டில் தீக்குளித்த போராளிகளின் மரணங்கள் எவ்வாறு அரசியலாக்கப்படவில்லையோ அதைப் போல பிரபாகரன் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டதும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் சவமாய்க் கிடந்தது தமிழகம்.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் எக்காலத்திலும் ஈழ ஆதரவு அலையை மக்களிடம் உருவாக்க முடியாது. எழுச்சி மிக்க செயல்பாடு மட்டுமே அதனை உருவாக்க முடியும்.

இப்பொழுது உருவாகியுள்ள புதிய தலைமுறை இதனை முன்னெடுத்துச் செல்லும். செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.

பொன்னிலா

http://tamilthesiyam.blogspot.com/2009/08/blog-post_5029.html

♥ இலங்கைக்கு செல்ல மாட்டேன் வேளாண் விஞ்ஞானி‐ எம்.எஸ். சுவாமிநாதன் ♥

<span title=



வடக்கின் வசந்தத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை‐ இலங்கைக்கும் செல்ல மாட்டேன் வேளாண் விஞ்ஞானி‐ எம்.எஸ். சுவாமிநாதன்:

வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளை சீரமைக்கும் நடவடிக்கைளில் உதவுவதற்காக எம் .எஸ்.சுவாமிநாதனை அழைத்திருந்தார் ராஜபக்சே. இதற்காக சுவாமிநாதனும் கொழும்பு சென்று ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பத்திரிகையாளர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் சுவாமிநாதனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சுவாமிநாதன்.

அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் தன்மானம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் வவுனியாவில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் தங்களது இடங்களுக்கு சென்றால் தான் விவசாயம் மற்றும் மீன்பிடிப்பு தொழிலில் மீண்டும் ஈடுபட முடியும். இலங்கை தமிழர்கள் நல்ல விவசாயிகள். இதற்கிடையே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனரமைப்பு ஏற்படுத்த இந்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. உடனடி தேவைக்கும், மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி பயன்படும்.

இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கையில் வேளாண்மையையும், மீன்பிடிப்பு தொழிலையும் மீண்டும் கொண்டு வரவும், இலங்கை தமிழர்கள் மீண்டும் கண்ணியத்துடன் வாழவும், வேளாண்மையில் சிறந்து விளங்கவும் மிகுந்த அக்கறை உள்ளத்துடன் செயல்பட எண்ணியுள்ளது.

இதுதொடர்பாக இந்த 2 தொழில்களையும் வளப்படுத்துவதற்காக உரிய பயிற்சியும், தொழில்நுட்ப உதவியும் செய்வதற்கு இந்திய அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில் தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதற்காக இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப உதவிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
அந்த குழுவில் மத்திய வேளாண் அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், மதுரை டான் நிறுவனம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.அக்டோபர் மாதம் இலங்கையில் தொடங்க இருக்கும் மகா பருவத்தில், இடம் பெயர்ந்துள்ள தமிழர்கள் மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்கு தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை இந்த குழு திரட்டி தருவதுதான் இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும்.

தற்போது இலங்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை இந்த குழுவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.

நான் கடந்த மாதம், சர்வதேச நீர் மேலாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே இலங்கைக்கு சென்றேன். வேறு எதற்காகவும் அங்கு செல்லவில்லை. இலங்கை அரசு அறிவித்திருக்கும் வடக்கின் வசந்தம் என்ற திட்டத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்றார் சுவாமிநாதன்.

http://www.paranthan.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=34&Itemid=53

ஈழம் பற்றி வைரமுத்து வீடியோ பேச்சு







http://www.youtube.com/watch?v=koXNz6N53jc











வீடியோ - உயிர் போவதை பார்த்ததுண்டா!!!

நீங்க யாராவது வீடியோவில் ஒருவர் இறப்பதை பார்த்ததுண்டா? இங்கே பாருங்க இந்த இந்த வீடியோவில்!






நொடிப்பொழுதில் அனைவரின் கண்முன்னே ... ஒரு மன்நிலை சரியில்லாதவன் புகைவண்டியின் மேலேறி அதன் மேல் உள்ள மின்கம்பியை பிடித்த கொடுமை :(

ஒரு நண்பர் எனக்கு அனுப்பியது ...


http://wethepeopleindia.blogspot.com/2009/08/blog-post.html

♥ காலம் ஒரு பதிலெழுதும்! ♥

காலம் ஒரு பதிலெழுதும்!

காலம் ஒரு பதிலெழுதும்!

எனக்கும் உனக்கும்
இடைவெளிகள் அதிகம்.
என்றாலும் நான்
உன்னை விரும்பினேன்.
ஒருவகையில்
உன்னை ரசித்தேன்.

நீ

வீரன் என்பதற்காக அல்ல.
கடவுளுக்குச் சமனானவன்
என்ற கற்பனையாலும் அல்ல.

நானே நீயாக
எனது உணர்வுகளே உனது உணர்வுகளாக
எனது ஆவேசமே உனது ஆவேசமாக
பாவித்துக் கொண்டே
உன்னில் என்னைக் கண்டேன்.

இன்று,

நீ இல்லை
அது குறித்து
அழக் கூட முடியவில்லை.

எம்மவர் வாழ்வில்
ஒருசில பொழுதுகள்
அன்று இருந்தன.

அந்நியப் படைகள்
எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த காலம்
இருண்ட பொழுதுகளே
எமக்காக மிச்சமிருந்த காலம்
உறவுகளைப் பிரிந்தாலும் அழமுடியாத காலம் .

அந்தக் காலங்கள்..
மாறவேண்டுமென்றே நினைத்தோம்.
நான் வேண்டுதல் செய்தேன்.
நீயோ
உனக்காகவும் எனக்காகவும் போராடினாய்.

இன்று - நீ..

எம்மிடையே இல்லை
தெரிந்தும்
பகிரங்கமாக அழ முடியவில்லை.
அஞ்சலிக்க முடியவில்லை.

இன்று,

எமை அழுத்தும்
ஷபூட்ஸ்| கால்கள் இல்லை.
ஆக்கிரமிப்பாளனின்
ஆதிக்கமும் இல்லை.
இருந்தும் கூட
என்னால அழ முடியவில்லை.

என் கையே
குரல்வளையை நசிக்கிறது.
வளர்த்த கடாவே
மார்பில் பாய்கிறது.
இதனையா நான் யாசித்தேன் ?

இதற்காகவா - நீ..
உன் வாழ்வை
அர்ப்பணித்தாய் ?

வளர்ப்பு நாய்
இறந்ததற்குக் கூட
கண்ணீர் வடிக்கும் உலகில்.
மூன்றுநாள்
துக்கம் அனுட்டிக்கும் உலகில்
எசமான் இறந்ததற்காய்
அழமுடியா அவலம்.

சரித்திரத்தை உருவாக்கச்
சமராடிய உனது
சரித்திரமே இன்று
மறைக்கப்படும் அவலம்.

எதிரியினால் அல்ல
நேற்றுவரை உனது
நண்பனாய்
சகோதரனாய்

நீ..

இறுதிவரை
நம்பியருந்தவர்களால்.
சுதந்திரத்துக்காகப் போராடிய(?)
அடக்குமுறையாளர்களால்.

காலம் ஒரு பதிலெழுதும்
அப்போது
உன் கல்லறையில்
ஒரு பூ வைப்பேன்.
அதுவரை……?

16-06-09 -சண் தவராஜா-

http://seithy.com/breifPoems.php?newsID=15761&category=Poems


♥ கைது செய்யப்பட்ட முக்கிய போராளிகள் கொல்லப்பட்டது எப்படி? ♥

கைது செய்யப்பட்ட முக்கிய போராளிகள் எவ்வாறு கொல்லப்படுகின்றனர்? அவர்கள் நிலை என்ன?: ஈழநாதம் பத்திரிகை தகவல்




lttea

கடந்த மே மாதம் 17,18,19 ம் திகதிகளில் சரணடைந்த மூத்த போராளிகள் மற்றும் போராளிகள் ஆகியோரை சிறிலங்கா அரச படையினர், அரச புலனாய்வு துறையினர், மற்றும் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் பல்வேறு இடங்களில் எந்தவிதமான தகவல்களோ அன்றி பதிவுகளோ இன்றி சிறையில் வைத்து சித்திரவதைகள் செய்யப்படுவதனை பலரும் அறிவர்.

இவ்வாறு கொழும்பு, பனாகொட, வெலிகந்த, அனுராதபுர போன்ற இரகசியமான இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

17 ம் திகதி மே மாதம் ஓமந்தை பகுதியிலும், முள்ளிவாய்க்கால் பகுதியிலும், பின்னர் 19, 21 ம் திகதிகளில் தடுப்பு முகாம்களில் வைத்தும் கைது செய்யப்பட்ட மூத்த உறுப்பினர் திரு வே.பாலகுமாரன், அரசியல் துணை பொறுப்பாளர் திரு சோ.தங்கன், படைத்தளபதி லெப்.கேணல் வேலவன், லெப்.கேணல் லோரன்ஸ், திரு .யோகரட்னம் யோகி, திரு கரிகாலன்,திருமதி எழுமதி கரிகாலன், வைத்திய கலாநிதி சிவபாலன் மற்றும் பலர் அடங்கிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பனாகொட இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டு சித்திர வதை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

இதனை பனாகொட இராணுவ முகாமிற்கு வழங்கல் செய்யும் பிரபல வழங்கல் நிறுவனத்தில் பணிபுரிந்த சிங்கள அதிகாரி மூலமாக அவரது முஸ்லிம் நண்பர் ஒருவருக்கு கடந்த மாதம் 16ம் திகதி கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவின் நாலாம் மாடியில் ஜோர்ச் மாஸ்ரர், தயா மாஸ்ரர், மனோஜ்,கரும்புலிகள் அணியினை சேர்ந்த மூன்று போராளிகள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு முக்கிய அரசியல் துறை மற்றும் நிதி துறையினை சேர்ந்த போராளிகள் ஆகியோர் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. இங்குதான் புனர்வாழ்வு கழக உறுப்பினர்களும் மற்றும் நான்கு வைத்தியர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

பல போராளிகள் சித்திரவதை காயங்களுடன் பனாகொட இராணுவ முகாமில் எந்தவித மருத்துவ வசதிகளும் இன்றி போதிய உணவு,குடி நீர் வசதி இன்றியும் இருப்பதாகவும் இதன்மூலம் தொற்று ஏற்பட்டெ பல போராளிகள் இறப்பதாகவும் நம்பப்படுகின்றது. "காயங்களிற்கு போதிய சிகிச்சைகள் இன்றி விடப்பட்டுள்ளனர், காயங்களை மாற்றும் உயிர் காப்பு குளிசைகள் கொடுப்பதில்லை,அண்டி பையோடிக் மருந்துகள் குளிசைகள் கொடுப்பதில்லை.

இதனால் காயங்கள் சீழ் பிடித்து அழுகிய நிலையில் கடும் காச்சல் வந்த நிலையில், ஆடைகள் இன்றி , முட்கம்பிகளால் நான்கு பக்கமும் சுற்றப்பட்ட கூண்டிற்குள் விடப்பட்டுள்ளதனை தான் கண்டதாக குறிப்பிட்ட அதிகாரி அந்த முஸ்லிம் நபரிடம் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் உள்ள போராளிகள் தடுப்பு முகாமிலும் இந்த நிலை தொடர்கின்றது. கடந்த கிழமை சில போராளிகள் சீழ் பிடித்த அழுகிய காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடியமுன்பே குற்ற புலனாய்வு பொலிசார் அழைத்து சென்றுள்ளனர்.

http://www.meenagam.org/?p=7310

♥ ஈழத்தமிழர் என்றாலே சிங்களத்தின் பரிசு விசாரணை இன்றி சிறை‏ ♥

இலங்கைத் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்து வந்தேன் ஏ.ஆர். ரஹ்மான்

இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், எனது மனதை மிகவும் பாதித்ததால் கடந்த 2 மாதங்களாக எந்த விழாக்களிலும் பங்கேற்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கெளரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார். பட்டத்தை பெற்ற பின் அவர் வழங்கிய ஏற்புரையில் இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன. திரையுலகின் மிகப் பெரிய ஆஸ்கார் விருது பெற்ற பின்னரும், கடந்த 2 மாதங்களாக எந்த விழாவிலும் நான் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன். அமெரிக்காவுக்குச் சென்று இசையமைப்புப் பணிகளில் ஈடுபட்டு திரும்பிய எனக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்ததைக் கேட்டபோது என் மீது முத்து மழை பொழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றார் ரஹ்மான்

 

 

ஈழதேசம்.கொம் நிருபர் காணகன்


http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=197:2009-08-02-08-57-43&catid=1:aktuelle-nachrichten&Itemid=50


ஈழத்தமிழர் என்றாலே சிங்களத்தின் பரிசு விசாரணை இன்றி சிறை‏

ஈழத்தமிழர் என்றாலே சிங்களத்தின் பரிசு திறந்த வெளிச்சிறைச்சாலை அல்லது உள்ளக சிறைச்சாலை வெளியிலிருக்கும் ஈழ தமிழர் சப்பாடு இல்லாமல் பட்டினி உள்ளக சிறைச்சாலையில் விசாரணை இன்றி பட்டினி

கொழும்பு விளக்க மறியல் சாலையில் 200க்கும் மேற்பட்ட தமிழ்க்கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4 ஆவது நாளாகவும் தொடரும் நிலையில் 5 பேரின் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா ஆகியோர் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துள்ள தமிழ்க் கைதிகள், தமது விடுதலை தொடர்பிலோ அல்லது தம் மீது வழக்குத் தொடர்வது குறித்தோ நீதியமைச்சர் மிலிந்த மொர கொட நேரடியாக வந்து உறுதிமொழி தரும் வரையில் தமது போராட்டம் தொடருமென அறிவித்துள்ளனர். நீதியமைச்சர் மிலிந்த மொரகொட தற்போது வெளிநாட்டில் உள்ளார். பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணியை தொடர்பு கொண்டபோது அவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மொனராகலையில் உள்ளார். அவர் எதிர் வரும் செவ்வாய்க்கிழமையே கொழும்பு வருவார். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனும் இது தொடர்பாக புத்திரசிகாமணியுடன் பேசியுள்ளார். இந்தக் கைதிகளின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத்தையாவது சிறைச்சாலைக்கு அனுப்பி கைதிகளுடன் பேச்சு நடத்துமாறு புத்திரசிகாமணியிடம் கோரினேன். சுகத கம்லத் வெளிநாட்டிலிருந்ததாகவும் இன்றிரவு (நேற்று) நாடுதிரும்புவாரெனவும் அவரிடம் இது தொடர்பாக கூறுவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் பெற்றோரும் எம்மைத் தொடர்பு கொண்டு தமது பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றும் படி கேட்டுள்ளனர். உண்ணாவிரதிகளில் இதுவரை 5 பேரின் நிலை மோசமடைந்துள்ளதாக அறிகிறேன். ஆனால் அவர்கள் உண்ணா விரதத்தை கைவிடத் தயாரில்லை. உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் பலமுறை உண்ணாவிரதமிருந்து அரசியல் வாதிகளாலும் மனித உரிமை அமைப்புக்களாகும் மற்றும் நீதித்துறையாலும் சட்டமா அதிபராலும் வழக்கு விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என வாக்குறுதி வழங்கி உண்ணாவிரத்தை பல முறை கைவிட்டவர்கள் ஆவர். சுமார் 85ம் ஆண்டிலிருந்து கூடி வழக்கு விசாரனை எதுவுமின்றி அவசரகால சட்டத்தின் கீழும் பயங்கரவாத சட்டத்தின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

 

 

ஈழதேசம்.கொம் நிருபர் காணகன்

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=195:2009-08-02-08-26-29&catid=1:aktuelle-nachrichten&Itemid=50



♥ குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த உண்மையான தலைவன் பிரபாகரன்:சீமான் பேச்சு ♥

இந்தியாவும் இலங்கையும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நேபாள முன்னாள் பிரதமர் பிரசந்தா கண்டனம்

நேபாள முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசந்தா விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு  கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேபாள முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசந்தா  காத்மாண்டுவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


அப்போது,  விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் எடுத்து  வரும் நடவடிக்கைகளுக்கு  கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும்,  உலகளவில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் பணியில் இந்திய, இலங்கை அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.


நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதியாக ஆதரிப்போம்.

நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியது தவறு. நேபாள அரசு தனது தவறை திருத்திக்கொள்ள நான்கு நாட்கள் அவகாசம் தருகிறோம். அதன்பிறகும் திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=217:2009-08-04-07-59-07&catid=1:aktuelle-nachrichten&Itemid=50


குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த உண்மையான தலைவன் பிரபாகரன்:சீமான் பேச்சு

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில், வழக்கு நிதியளிப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.


இக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பங்கேற்று பேசினார்.
'புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


நான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். பிரபாகரன் என் அண்ணன் என்று கூறினேன். என்னை கைது செய்யும் போது புதுச்சேரியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் கிடையாது. அதன் பின்னர்தான் அதைக் கொண்டு வந்தனர்.


புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதாக, கூட்டத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளுக்காக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ. 1.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.


 எல்லோரும் பிறர் தங்களை தலைவர் என்று அழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தந்தை பெரியார்தான் உண்மையான தலைவர்.

 

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=214:2009-08-03-22-01-24&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை: தாய்லாந்து பிரதமர்

nakkheeran





























செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை: தாய்லாந்து பிரதமர்

விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என தாய்லாந்தின் பிரதமர் அப்சிட் வெஜ்யஜிவா ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
தமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் வேறொரு நாட்டில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளமையை தம்மால் உறுதி படுத்த முடியும் எனவும், அவர் எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏற்கனவே அவர் மலேசியாவில் வைத்து கைதானதாக வெளியான தகவல்களை இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.
 
இதற்கிடையில் சர்வதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
 

 http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13825

♥ "அன்பா சொன்னா அம்மி கூட நகராது -பேசுகிறார் பிரபாகரன்"-நக்கீரன் தொடர்!



                   ஸ்ரீஅரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்: ""ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''.

பிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது!

ஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென கடந்த இதழில் நிறைவு செய்திருந்தோம். நீதியான தீர்வொன்று உறுதி செய்யப்படும் வரை ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்ட மொன்று அங்கு தேவை. துணிவானதொரு போராட்ட இயக்கமும் நம்பகமான தலைமையும் களத்தில் இல்லாதவரை "எல்லை கடந்த தமிழீழ அரசு' என்ற யோசனையெல்லாம் கடைசியில் தலாய்லாமா அவர்களைப் போல் பயணங்கள் செய்து சொற்பொழிவுகளும் கருத் தரங்க உரைகளும் ஆற்றிக் கொண்டிருப்பதாகத்தான் முடியும்.

ஸ்ரீஅரபிந்தோ அவர்களைப் போல் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தெளிவாக இருந்தார். சற்றேறக்குறைய அரபிந்தரின் வார்த்தைகளையே வெளிப்படுத்தினார்: ""தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமென்டு நினைப்பது வெறும் கனவு. மற்ற சமூகங்க ளெல்லாம் பெரும் விலை கொடுத்து பெற்ற சுதந்திரத் தை சிங்களவன் எமக்கு இலவசமாகத் தருவான் என்று நான் நம்ப வில்லை'' என்றார்.

நேர்காணலின் நடுவழியே அறையில் ஓரமாக வந்து உட்கார்ந்து கொண்ட காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் இருவரையும் ஓரக்கண்ணால் பார்த்து குறும்புப் புன்னகை உதிர்த்துக் கொண்டே தொடர்ந்தார்: ""எங்கட பழமொழிகள் உங்களுக்குத் தெரியும் தானே...? மயிலே மயிலே இறகு போடென்டா போடாது. அன்பா சொல்லி அம்மி நகராது. அப்படியே மயில் இறகு போட்டு, அம்மி நகர்ந் தாலும் கூட சிங்களவன் தமிழ் மக்க ளுக்கு தானாக முன்வந்து அரசியல் உரிமைகள் தரமாட்டான்'' என்றார்.

குறும்பு, குழந்தைத்தனம், இயல் பான நகைச்சுவை, தன்னைப் பற்றின சுய பிரக்ஞையே இல்லாத எளிமை, தெளிவு, தீர்க்கம், உறுதி இவை யாவுமானதான ஓர் அற்புத ஆளுமையாகவே அவரைக் காணமுடிந்தது. முன்பொரு முறை நான் குறிப் பிட்டது போல் தமிழ் வரலாற் றில் ஆறுபடைகளை கட்டி யெழுப்பிய இந்த அதிசய மனிதர். ""ஃபாதர்... ஏ.ஆர்.ரஹ் மானின் கண்ணாமூச்சி ஏனடா பாட்டு கேட்டினிங்களா? என்னென்டு மியூசிக் போட்டிருக்கார்... சரியான திறமைக்காரன்'' என்று கபடும் கசடுமின்றி வியக்கிற விடலைப் பிள்ளையாகவும் இருந்தார்.

மதிய உணவின் போது இசைஞானி இளையராஜா அவர்களுடன் சிம்பொனியில் திருவாசகம் செய்து கொண்டிருப்பது பற்றிக் கூறினேன். ""ஆளெ (இளைய ராஜாவை) இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்... தமிழ்ச்செல்வன் எல்லா ஒழுங்குகளையும் செய்து தருவார். அவரின்டெ பாட்டுகளால்தானே ஒரு தலை முறைக்கு தமிழ்மொழி மேல் ஈர்ப்பு அதிகமாச்சுது... நீங்க எப்ப வேண்டுமென்டாலும் வரலாம். கிளிநொச்சியிலெ விஸ்தாரமான திறந்தவெளி அரங்கெல்லாம் இருக்குது. எங்கட சனமும் பெரிய இசைக்கச்சேரி பார்க்கலாம் தானே... திருவாசகம் செய்யிறதென்டா முல்லைத்தீவு அம்மன் கோயில் அருகாலெ செய்யலாம்...'' என்று பேசிக் கொண்டே இருந்தார்.

இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் ஈழத்தமிழ் வரலாற்றின் அதி உயர் இரகசியங்கள் சிலவற்றிற்கு சாட்சியாய் இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் மே-15 அன்று முல்லைத்தீவு களத்தை விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது முதல்வட்ட தற்கொலைப் படையணியும் இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் வழியாகத்தான் வெளியேறும் திட்டம் வைத்திருந்ததாக மிக மிக நம்பகமானதோர் தகவல் கடந்த வாரம் கிடைத்தது. அதுதொடர்பான விபரங்களை பின்னர் நிச்சயம் எழுதுவேன்.

நாம் சொல்லி மயில் இறகு போட்டு, அன்பால் அம்மி நகர்ந்தாலும் கூட சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு நீதியானதொரு தீர்வினைத் தராது என வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்காணலில் கூறிய காலகட்டம் அமைதிப் பேச்சுவார்த் தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம்: ""அப்படியென்றால் ஏன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் போனீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: ""புலிகள் யுத்த வெறியர்களென்ற பார்வை உலக நாடுகளுக்கு இருக்கிறது. நாங்களும் சமாதானத்தைத்தான் விரும்புகிறோம். இப்போது கூட பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டே இலங்கை அரசு பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றோடு ராணுவ ஒப்பந்தங்கள் செய்து எங்களை கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிர் கால ராணுவ முற்றுகைக்குள் நகர்த்திக் கொண்டி ருக்கிறது. எனினும் நாங்கள் சமாதானத்தையே விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்றால் அதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் போர் வெறியர்களல்ல என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், சிங்களப் பேரினவாத மனோபாவம்தான் தமிழரின் அரசியல் சிக்கலுக்கு அடிப்படை காரண மென்பதை உலகம் புரிந்து கொள்கிற நிலையை உருவாக்கவும் வேண்டியே பேச்சுவார்த்தைகளில் தொடர்கிறோம்'' என்றார்.

அவரது பதில் உருவாக்கிய தருணத்தைப் பயன்படுத்தி வன்னிப் பகுதிக்கு நான் பயணித்து அவரிடம் நான் கூறவேண்டுமென்று விரும்பி, ஆனால் மனம் திறந்து சொல்லலாமா என தயங்கி, குழம்பி நின்ற ஓர் விஷயத்தை படபடவென்று சொல்லத் தொடங்கினேன். அது என்னவென்ற விபரத்தையும் பின்னர் எழுதுவேன்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தெளிவான தீர்க்கதரிசன பார்வையை வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. ""சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு எதுவும் தராது'' என்ற அவரது பார்வை யை ராஜபக்சே அரசு வெள்ளிடை மலையாய் உலகிற்கு இன்று காட்டி நிற்கிறது. உலக நாடு களினது உதவியோடு புலிகளின் ராணுவ பலத்தை நிர்மூலமாக்கி இன அழித்தலையும் செய்து முடித்த பின், ""அரசியல் தீர்வா? எதற்கு..? பிரச்சனைதான் முடிந்து போயிற்றே...'' என்ற ரீதியில் பேசுகிறார் ராஜபக்சே. இந்தியா பேசி வந்த கதைக்குதவாத 13-வது சட்ட திருத்தம் பற்றிகூட இப்போது கப்சிப். ஆனால் இந்தியாவோ ராஜபக்சே கேட்காமலேயே ஐநூறு கோடி ஆயிரம் கோடி என அள்ளிக் கொ டுக்கிறது, கேள்விகள் எதுவும் கேட்காமல். இப்போது புரிகிறதா ""புலிகளின் ராணுவ பலம்தான் தமிழருக்கான அரசியல் பலம்'' என்று நம்பியவர்கள் எவ்வளவு சரியாகக் கணித்திருந்தார்களென்று?

எனவேதான் எல்லை கடந்த தமிழீழ அரசெல்லாம் அமைத்தாலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறினாலும், இலங்கை பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டாலும், உலக கருத்து தமிழீழத்திற்கு ஆதரவாக மாறினாலும் அங்கு களத்தில் உறுதியான தலைமை இல்லையென்றால் எதுவும் வராது. அந்தத் தலைமையை புலிகள்தான் தரவேண்டுமா, வேறு ஜனநாயக சக்திகள் தரக்கூடாதா என்ற நியாயமான கேள்வியை பலர் முன் வைக்கலாம். கேள்வி நியாயம்தான். ஆனால் முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டம் ஒன்றரை லட்ச மக்களின் உயிர்த் தியாகம், இன அழித்தல் வரை வந்த பேரழிவுகள் இவற்றிற்கெல்லாம் பிறகு... அதுவும் முல்லைத்தீவில் பெருங் கொடுமை நடந்து நூறு நாட்கள் கூட ஆக வில்லை. கேவலம் யாழ்ப்பாண மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்காய் ராஜபக்சேவிடம் மண்டியிடுகிறார்களே அங்கிருக்கும் தமிழ் கட்சிகள்- தலைவர்கள்... எச்சில் பொறுக்கித் தின்னும் தெருநாய்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? மிகக்குறைந்தபட்சம் ""கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களையும் விடுவியுங்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்'' என்று சொல்கிற மிகமிகமிகமிக குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத அந்த தமிழ் அரசியல் கட்சிகளை, தலைவர்களை என்னென்று சொல்வது? எனவேதான் விதைநெல்களாய் எஞ்சியிருக்கிற தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் ஒருங்கிணை வது வரலாற்றுக் கட்டாயமாகிறது. அவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு மிகக்குறைந்தபட்ச அரசியல் தீர்வுகூட கிட்டுமென்று நான் நம்பவில்லை.

அருட்தந்தை ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கலாமா என்று அன்பர்கள், அடியவர்கள் அங்கலாய்த்துக் கேட்க லாம். நான் நக்கீரனில் எழுதுவது அருட்தந்தையாய் மட்டுமல்ல... ஓர் அரசியல் மாணவனாயும், அதற்கும் மேலாய் தமிழனாயும், உண்மையில் தமிழருக்கு அறிவுரை சொல்கிற ஒழுக்க யோக்யதைகள் அனைத்தையும் இந்த உலகம் முற்றாக இழந்து நிற்கிறது. மானுடத்தின் பொது விழுமியங்கள், அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள், அனைத்துலக யுத்த விதிகள் அனைத்தும் உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே மீறப்பட்டும், அதே உலக நாடுகளின் ஆயுத, பொருளாதார, ராஜதந்திர உதவிகளுடனும் தமிழ் இன அழித்தல் மிகவும் கொடூரமான உன்மத்தத்தோடு நடத்தப்பட்டது.

தமிழர்களுக்கு அறிவுரை சொல்ல உலகத்திற்கு இனி என்ன தார்மீகம் இருக்கிறது? உண்மையில் பாதாளத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட தமிழர்கள் இலங்கை மீது -இந்த உலகின் மீது இதுவரை இல்லாத அளவிலானதொரு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டால்கூட -அப்படி நடக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கிறேன் -ஆனால் அப்படி நடந்தால்கூட அதனை கண்டிக்கிற ஒழுக்க தார் மீகத்தை இந்த உலகம் இழந்து நிற்கிறதென்பதுதான் உண்மை. முல்லைத் தீவெங்கும் உடைந்தும் கைவிடப்பட்டும் சிதறிக்கிடக்கிற புலிகளின் பழைய படைக்கருவிகள் மௌனமாய் காற்றுவெளிக்குச் சொல்கின்றன. ""புலிகளின் ராணுவ பலம்தான் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு கடைசியான உத்தரவாதமாய் இருந்தன''.

"மீண்டும் தமிழீழ எழுச்சி சாத்தியமா?' என நீங்கள் கேட்கலாம். இன அழித்தலுக்கு நீதியும், குறைந்தபட்சம் தன்னாட்சி உரிமையென்ற அரசியல்தீர்வும் வழங்கப்படாத வரை தமிழீழத்திற்கான எழுச்சிக்கு மரணமில்லை.

(நினைவுகள் சுழலும்)

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13812
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!