தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை பற்றி கூறி நக்கி பிழைக்கும் துரோகி கருணா
வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்கள் விரைவாக அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்வதனையே விரும்புகின்றனர். நடந்து முடிந்த வடமாகாண ஊள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு இதுவே காரணம் என்று தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த யாழ்.மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளைச் செய்து கொடுத்தாலும் அந்த மக்கள் விரைவாக அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்வதனையே விரும்புகின்றனர்.
நடந்து முடிந்த வடமாகாண ஊள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்கூட இந்த உணர்வலைகளையே வெளிக்காட்டுகின்றன. இவ்வாறு தெரிவிக்கிறார் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்.
இந்த இரு தேர்தல்களிலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அவசர அவசரமாக தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பயங்கரவாதச் சூழ்நிலையில் பழக்கப்பட்ட இந்த மக்கள் ஒரு சாதாரண வாழ்வுக்கான நிலையை இன்னும் அடையவில்லை. அவ்வாறானதொரு வாழ்வு நிலைக்கு அவர்கள் பழக்கப்படவேண்டும்.
தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் நின்று இந்தத் தேர்தல்களைச் சந்தித்திருந்தால் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறான ஒற்றுமை என்பது நடக்கக்கூடியதொன்றல்ல.
சில தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியத்தைப் பேசியும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்துமே தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டன. ஆனால் இவையெல்லாம்இன்று தேவையானவையல்ல என்கிறார் தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையை பற்றி கூறும் நக்கி பிழைக்கும் துரோகி கருணா
ராஜபக்சே ஆணை: ஈழம் என்ற சொல் இனி தமிழ்நாட்டிலும் இல்லை.
சென்னையில் 17-ம்தேதி நடைபெற்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தமிழ் எழுச்சி விழாவையொட்டி காணபட்ட சுவரொட்டிகளில் 'ஈழம்' என்ற சொல்லையும், தலைவர் பிரபாகரனின் படத்தையும் தமிழக பொலிசார் அழித்தனர்
. இந்த விழாவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலானோர் திரண்டனர். இந்த விழாவிற்கு 'எழும் தமிழ் ஈழம்' என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
விழா நடந்து கொண்டிருந்த போது சென்னை முழுதும் சுமார் 2000 சுவரொட்டிகளிலும் டிஜிடல் பானர்களிலும் இது போல காணபட்ட ஈழம் என்ற சொல்லை வெள்ளைத்தாள் ஒட்டி பொலிசார் அழித்தனர். பிரபாகரனின் படத்தின் மீதும் இதுபோல வெள்ளைத்தாள் ஒட்டி அழித்தனர்.இது போன்ற சுவரொட்டிகள் கடந்த 10 நாட்களாகவே தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டிருந்த போதும் நேற்று பொலிசார் மேற்கொண்ட இந்த 'அழிப்பு' நடவடிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை கோபமடையச் செய்தது. அவர்கள் அங்கங்கே தன்னியல்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவரொட்டிகளில் மட்டுமின்றி சுவர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களிலும் ஈழம் என்ற சொல்லை பொலிசார் அழித்தனர். இதனை மாநகர உயர் பொலிசு அதிகாரிகள் பார்வையிட்டனர். சிறீலங்கா அரசு திட்டமிட்டு தமிழர்களை அழித்து வருவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 'ஆயுதம் தாங்கா விடுதலைப்புலிகளா'க செயல்படும் என்றார். (கருணாநிதி ஒருபக்கம் ஈழம் என்னும் பெயரே தமிழகத்திலும் இருக்க கூடாது என்று ராஜபக்சே சகோதரர்களை திருப்திபடுத்த நினைக்க, 2011-ம் ஆண்டு தேர்தல் வரும் வரையிலும் திருமாவளவனுக்கு வேறு போராட்ட கருத்துக்கள் கிடைக்காது என்பது உறுதி. தேர்தல் வந்தவுடன் மௌனச்சாமியாராகி விடுவார். அது வரை ஈழ விடுதலைக்காக இடி முழக்கம் செய்வார்).
விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய அரசியல் சட்டத்திற்கு கட்டுபட்டது என்றாலும், தமிழர்கள் அழிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு தமது கட்சி சும்மா இருக்க முடியாது என்றார் திருமாவளவன் (அப்புறம் அண்ணா?). பொலிசார் ஈழம் என்ற சொல்லை தங்களது சுவரொட்டிகளிலிருந்தும், பானர்களிலிருந்தும் அழித்ததைக்குறிப்பிட்ட திருமாவளவன் மக்களின் இதயங்களிலிருந்து ஒருபோதும் விடுதலை உணர்வை அழிக்க முடியாது என்ற உலக உண்மையை வெளியிட்டார். விடுதலைசிறுத்தைகள் எழுவதை இது போன்ற செயல்களால் தடுத்து விட முடியாது என்றார் திருமா (ஏனென்றால் அவர்கள் மாநாட்டரங்கில் மட்டுமே எழுவார்கள்).
நேற்றைய 'எழும் தமிழ் ஈழம்' விழாவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. ஒன்று: முட்கம்பி வேலிகளுக்கு பின்னே தடுத்து வைக்கப்பட்டுள்ள சொந்தங்களை விடுவிக்க வேண்டுமென்பது. இரண்டு: இந்திய மற்றும் அமெரிக்க அரசுகள் விடுதலிப்புலிகள் மீதான தடையை நீக்கவும், பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து நீக்கவும் வேண்டும். மூன்று: பத்மநாதன் கைதிலுள்ள உண்மைகளை வெளிப்படுத்தி அவரது உயிருக்கு ஐ.நா. அவை பாதுகாப்பு தரவேண்டும்.
நேற்று பல இடங்களில் திருமாவளவன் கைது செய்யப்பட்டதாக பொலிசார் வதந்தியை பரப்பினர். இதனால் குழப்பமடைந்த சிறுத்தைகள் பாயத்தொடங்கும் முன்பே அது வதந்திதான் என்பது உறுதியானது. பாய்ச்சல் தவிர்க்கப்பட்டது. இந்த வதந்தியை பொலிசார் பரப்பியதன் நோக்கம் பல இடங்களிலிலுருந்தும் சென்னைக்கு செல்லவிருந்த சிறுத்தைகூட்டத்தை கலையச்செய்து விடலாம் என்பதே.
கருணாநிதி அரசு திருமாவளவனை கையில் வைத்துக் கொண்டு கடந்த மேமாதம் அமைதிபூங்காவாக தமிழகத்தை துலங்கச் செய்து இன்று அவரது கட்சி மாநாட்டின்போதே இவ்வளவு தண்ணி காட்டி விட்டது. ஆனாலும் சொன்னார் திருமா:"நாங்கள் கூடுமானவரை தி.மு.க. அரசுக்கு தொல்லை தராமல் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. தமிழ் ஈழம் என்பதில் மாற்றம் இல்லை".
ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கியதாக இலங்கையின் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணையத்தளம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
இங்கிலாந்தில் உள்ள தமிழர் ஒருவரின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் ரஜினிகாந்தின் படங்களை தயாரிப்பதற்கு நிதி வழங்கியதாக அவர் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்தின் குசேலன் மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற எந்திரன் ஆகிய படங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரிசாட் பதியுதீன் லண்டன் தமிழர் என குறிப்பிட்டிருந்த லண்டன் கருணாஸ் ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேறிவிட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
அத்துடன் குசேலன் திரைப்படம் கே. பாலசந்தர் அஸ்வின் டட் மற்றும் ஜீ. பீ. விஜயகுமார் ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பிலேயே உருவாகியிருந்தமையை அது சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ரோபோ என்று முன்னர் பெயரிட்பட்டு பின்னர் எந்திரன் என பெயர் மாற்றப்பட்ட ரஜினிகாந்தின் அடுத்தப் படமும் சன் டீவியினால் தயாரிக்கப்பட்டுவருகிறது.
அது ஐங்கரன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவிருந்தாலும் பின்னர் அது கைமாறி தற்போது சன் டீ வி நிறுவனத்தின் கைகளில் தயாரிப்பில் உள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் குற்றச் சாட்டு ஆதரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் நீர்வழங்கல் சபைக்குச்சொந்தமான வெற்றுக்காணியிலிருந்த புதைகுழியொன்றிலிருந்து பல எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லடி காளிகோயில் வீதியிலுள்ள இவ்வளவினுள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் காலில் எலும்புத்துண்டொன்று குத்திய போதே அயலவர்கள் உதவியுடன் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாரின் உதவியுடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் முன்னிலையில் புதைகுழிதோட்டப்பட்ட போது பல எலும்புகளும் மனித எச்சங்களும் வெளிவந்தன.
மேலும் பெருமளவில் எலும்புத்துண்டுகள் இருக்கும் என்பதால் நாளை செவ்வாய்க்கிழமை (18.08.2009) கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் வரும் வரை புதைகுழி தற்காலிகமாக மூடிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் பஜார் பகுதியில் வடிகால் அமைப்பிற்காக குழிகள் தோண்டப்பட்ட போது மிகவும் சிதைந்த நிலையில் மனித எச்சம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சிதைந்த நிலையில் தலை மற்றும் உடற்பாகங்கள் மீட்கட்பட்டன.
வேலையாட்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அந்த மனித எச்சங்களையும் தடயங்களையும் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இது பலவருடங்கள் பழைமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது
தமிழக அரசின் உத்தரவுகளை மீறி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியமைக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நேற்று 20ஆம் தேதி வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 200 க்கும் மேற்பட்ட தீப்பந்தங்கள் ஏந்தி உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொதுக்கூட்டத்தில் அரசு உத்தரவுகளை மீறி அனு மதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தலைவர் பிரபாகரன் படம் பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இது போன்ற காரணங்களுக்காக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டல்களினால் ஒடுக்கிவிட முடியாது – பழ.நெடுமாறன்
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டல்கள் மூலம் ஒடுக்கிவிட முடியாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரியக் குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பத்திரிகை விளம்பரம் வாயிலாக எச்சரித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழு ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது குற்றமல்ல என கடந்த 2004 ஆம் ஆண்டில் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் தீர்ப்புகள் வழங்கியுள்ளன.
அந்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நானும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் உட்பட பலர் விடுதலை செய்யப்பட்டோம்.
நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் அளித்த இந்த தீர்ப்புகளைக் கொஞ்சமும் மதியாத வகையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளம்பரம் வெளியிட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தவிருந்த முழு அடைப்புப் போராட்டம் சட்ட விரோதமானது என இதே தலைமைச் செயலாளர் எங்களை எச்சரித்து கடிதம் அனுப்பினார்.
ஆனால் முழு கடையடைப்பு நடத்துவது சட்ட விரோதமானது அல்ல என்று 03.02.09 அன்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைக் கூட மதியாத தன்மையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நடந்து கொண்டது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும் அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் மிரட்டுவதற்கும் தலைமைச் செயலாளரை முதல்வர் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஈழத் தமிழர் பிரச்னை சுமுகமாக தீர்ந்துவிட்டது என்று சில நாட்களுக்கு முன்னால் கூறிய முதல்வர் இப்போது முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டுமென்று கடிதம் எழுதுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவது அவரது வழக்கமாகி விட்டது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை மிரட்டல்கள் மூலம் ஒடுக்கிவிட முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.
அன்று…. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. அந்த இயக்கத்துக்கு உதவிகள் செய்வதுதான் குற்றம் என்று 'பொடா சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் 16.12.2003 இல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேதான் ஜெயலலிதா ஆட்சியில் பொடாவில் கைது செய்யப்பட்டிருந்த பழ. நெடுமாறன், வை.கோ. உள்ளிட்டோர், சுமார் ஒன்றரையாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா, தவறாக சுட்டிக் காட்டினார். தி.மு.க. ஆட்சியில் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா, தனது தவறான கருத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 'முரசொலி' ஏட்டில் (பிப்.19, 2008) விளக்கமாக விடுத்துள்ள அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பகுதிகளையே எடுத்துக் காட்டி பதில் எழுதினார்.
"உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடாச் சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட் டிருந்தால் மட்டுமே அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ளபோது ஒரு நபர், 'பகிரங்கமாக அறிவிப்பதாலோ' (பொடாவின் 20வது பிரிவு) அல்லது, "ஆதரவைக் கோரினாலோ" அல்லது "ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ" அல்லது "ஏற்பாடு செய்வதினாலோ" அல்லது "ஒரு கூட்டத்தில் பேசினாலோ" (பொடாவின் 21வது பிரிவு), ஒரு (பயங்கரவாத) அமைப்பின், எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கர வாதச் செயலை செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்? அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" ('முரசொலி' பிப்.19, 2008)
- கலைஞர் கருணாநிதி உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டி அன்று 'முரசொலியில் இப்படி எழுதினார்.
இன்று….
"தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலட்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக் காட்சிகளில் பிரசுரித்தல் / காண்பித்தல் ஆகியவை unlawful activities (prevention) act , 1968படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது. – தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு."
- இது இன்று தி.மு.க. அரசு ஏடுகளில் தந்துள்ள விளம்பரம்.
கொடூரமான 'பொடா' சட்டத்தின் கீழேயே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதோ, கூட்டம் நடத்துவதோ, குற்றமாகாது என்று வாதிட்ட அதே கலைஞர் தான் – இன்று 1968 ஆம் ஆண்டு சட்டத்தைக் காட்டி கருத்துரிமையைப் பறித்து, காங்கிரசை மகிழ்விக்க துடிக்கிறார்.
காங்கிரஸ் இனப் படுகொலைக்கு துணை போனாலும், படுகொலைகளை முடித்த பிறகு, தமிழர்களுக்காக கண்ணீர் விட்டு அழுவதுகூட குற்றம் என்று காங்கிரஸ் கூறினாலும், கலைஞர், காங்கிரசின் பக்கம் தான் நிற்பார். தமிழின உணர்வை நசுக்குவார்!
இவர்கள் தான் புடம் போட்ட தமிழினப் பாதுகாவலர்களாம்!
இது மிக ஆபத்தான மெளனம் : இந்த மெளனம் தொடர்ந்தால் மூன்று இலட்சம் மக்களும் அழிந்து போவார்கள்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் தங்களின் குடும்பம், இல்லம், சொந்தங்கள், சொத்துப் பத்துகள், நிலம், தொழில் என்று அனைத்தையும் இழந்து, எந்த வன்னி மண்ணில் ஒராண்டுக்கு முன்னர் வரை வளமாக வாழ்ந்தனரோ அதே பூமியில் இன்று முகாம்களில் அடைப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், எங்கே அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடுவரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப் போரில் சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திய கொடூரத் தாக்குதலி்ல் உயிரிழந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் போக, குண்டடிபட்டு, கை, கால் இழந்து, மருத்துவ சிகிச்சை ஏதுமின்றி, சிங்கள இராணுவத்திடம் சிக்கிய சற்றேறக்குறைய 3 இலட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 33 முகாம்களில் கடந்த வாரத்தில் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் அவர்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. பல இடங்களில் இடுப்பளவிற்கு நீர் பெருக்கு, எங்கும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு பூமியில் குழி வெட்டி ஏற்படுத்தப்பட்ட கழிவுக் குழிகள் சிதைந்து அதில் தேங்கியிருந்த கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து சுற்றுச் சூழலை கெடுத்துள்ளது, சமைக்க அளிக்கப்பட்ட விறகுகள் மழையில் நனைந்து ஈரமானதால் கொடுத்த கொஞ்ச நஞ்ச உணவுகளை சமைத்து உண்ண வழியில்லை, மழையால் அந்தச் செம்மண் பூமி சேறானதால் அந்தப் பகுதிக்கு வாகனங்களில் தூய குடி நீர் கூட கிடைக்காமல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இம்மக்கள் நரக வேதனையில் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று வந்த வந்து கொண்டிருக்கும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்றும், வட கிழக்கு பருவமழை பொழியும் காலத்தில் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் வெள்ள நீர் தேங்கும் நிலை ஏற்படும் என்றும், அதன் காரணமாக, ஏற்கனவே மோசமான சுகாதார சூழல் உள்ள அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அந்த முகாம்களுக்கு சென்று வந்தவர்கள் அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள முன்றரை இலட்சம் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும் அபாய அறிவிக்கை செய்தும் போரை நிறுத்தி மக்களைக் காக்க எந்த நடவடிக்கையும் உலக நாடுகளும் ஐ.நா.வும் எடுக்காததால் இறுதிக் கட்டப் போரில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறிலங்கப் படைகளால் கொல்லப்பட்டது மட்டுமின்றி, அந்த அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், மிகக் கொடுமையான சூழலில், போதுமான அடிப்படைத் தேவைகளும், வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை இயற்கையால் ஏற்படும் அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மனித உரிமை கருத்தரங்குகளில் பேசப்பட்டும், அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்ட சூழலில், சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று மழை பெய்து அவர்களின் துயரத்தைப் பண்மடங்காகியுள்ளது.
திசை திருப்பும் சிறிலங்க அரசு!
போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம், இதற்கு மேல் அவர்களால் துளிர் விட முடியாது என்று கொழும்புவில் இருந்து கொண்டு வீர வசனம் பேசிம் சிறிலங்க அரச தலைவர்கள், முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்த வசதியையும் ஏற்படுத்தித் தரவில்லை. அதற்கான நிதிப் பலமும் சிறிலங்க அரசிற்கு இல்லை.
ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க உலக நாடுகளிடமும், பன்னாட்டு நிதி அமைப்புகளிடமும் வாங்கிய கடன்கள் அனைத்தையும் இராணுவத்திற்கு செலவிட்டுவிட்டு, போரில் இறந்து போன இராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டிய மாத ஊதியத்தைக் கூட தர வக்கற்ற நிலையில், இறந்த போன வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்து சிங்கள மக்களை ஏமாற்றிவரும் சிறிலங்க அரசு, முகாம்களில் உள்ள மக்களை ஐ.நா.வின் அகதிகள் அமைப்பிடம் ஒப்படைக்காமல், தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களைப் பிரித்து, துன்புறுத்தி கொன்று வருகிறது. இதனை உலகம் அறிந்து கொள்ளாமல் தடுக்க முகாம்களுக்கு பத்திரிக்கையாளர்களை அனுபதிக்க மறுத்து வருகிறது. அதன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகள் துணை போய்க்கொண்டிருக்கின்றன.
முகாமிலுள்ள மக்களை தங்களிடம் ஒப்படைக்காத நிலையிலும், அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை (கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை) ஐ.நா.வின் அகதிகள் அமைப்புதான் வழங்கி வருகிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் தேவையான உணவும் ஐ.நா.வின் உலக உணவும் திட்டத்தின் கீழ்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களை நேரடியாக அம்மக்களிடம் விநியோகிக்க அனுமதிக்காமல், சிறிலங்க இராணுவமே பெற்றுக் கொண்டு விநியோகித்து வருகிறது (ஐ.நா.வின் இந்தத் திட்டத்திற்கும் போதுமான நிதி உலக நாடுகள் இடமிருந்து வராததால், தங்கள் திட்டத்தின் கீழ் வழங்கிவரும் உணவு அளவை பாதியாகக் குறைக்கும் நிலை ஏறபட்டுள்ளது என்று இவ்வமைப்பு கூறியுள்ளது). உண்மை இவ்வாறிக்க, மழையினால் முகாம்களில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதிகளுக்கு ஐ.நா.தான் காரணம் என்று கூசாமல் கூறியுள்ளார் சிறிலங்க பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச! “தமிழர்கள் எங்கள் மக்கள், அவர்களை எப்படிப் பாதுகாப்பது என்று எங்களுக்குத் தெரியும், இப்போதே அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்த முற்பட்டால் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் யார் பொறுப்பு? நாங்களல்லவா?” என்று கருணைக் கடலாகப் பேட்டி அளித்துவிட்டு, அவர்களைக் காப்பாற்ற வக்கற்று, எல்லாவற்றையும் ஐ.நா.தான் செய்கிறது, எனவே அவர்களே பொறுப்பு என்று கூறுவது எவ்வளவு வெட்கம் கெட்டப் பேச்சு. ஆனால் வெட்கம், கருணை, மனிதாபிமானம் என்பதெல்லாம் இந்த பெளத்த - சிங்கள இனவெறியாளர்களிடம் தேடினால் எங்கிருந்து கிடைக்கும்!
மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்துவிட்டு, குடிக்க தண்ணீர் பெறவும், கழிவறைக்கு செல்வதற்காகவும் அவர்களை நாள் முழுவதும் வரிசையில் நிற்க வைத்து நாளும் அலைக்கழித்துவரும் இந்த வெறியர் இன்று கூறுகிறார் ‘அவர்களிடையே பதுங்கியுள்ள புலிகளைத் தேடுகிறோம், எல்லா புலிகளையும் தேடி கண்டு பிடிக்கும் வரை மீள் குடியமர்த்த முடியாது. அவர்களை இப்போதே வெளியில் விட்டால் வன்னிக் காடுகளில் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களை எடுத்து மீண்டு்ம் போரைத் துவக்கி விடுவார்கள்’.
“விடுதலைப் புலிகளே இல்லை, எல்லோரையும் ஒழித்துவிட்டோம். புலிகளின் படியி்ல் இருந்து தமிழர்களை மீட்டு விட்டோம்” என்று சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சேகாவும், நாடாளுமன்றத்தில் ராஜபக்சவும் வீராவேசத்தோடு முழங்கினார்களே? இப்போது மீண்டும் புலிகளைத் தேடுவது எதற்கு?
கோத்தபய கூறியதில் இருந்து ஒரு உண்மை வெளிவந்துள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான (24,000 பேர் என்று கூறுகிறார்கள்) இளம் வயதினரை தனியாக பிரித்து அவர்களைப் புலிகள் என்று முத்திரையிட்டு, சித்தரவதை செய்து வருகின்றனர். அந்தப் பகுதிகளுக்கு யாரையும் நுழைய விடாமல் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது சிறிலங்க இராணுவம்.
இவர்கள் மட்டுமின்றி, மேலும் 3,000 இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து கடத்தி சென்றுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. மீதமுள்ள மக்களையும் நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றனர். இப்படிப்பட்ட வதைகளையெல்லாம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடத்தப்பட்டதை வரலாறு படித்தவர்கள் அறிந்திருப்பர். அதையே இன்று ஈழத் தமிழர்கள் மீது செயல்படுத்துகிறது சிறிலங்க அரசு.
இதையெல்லாம் இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானு்ம் ஏற்றுக் கொள்ளலாம், ஏனென்றால் இந்த மூன்று நாடுகளுமே தமிழினப் படுகொலைக்கு எல்லா விதத்திலும் உதவின. ஆனால் மற்ற உலக நாடுகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன என்பதுதான் புரியவில்லை.
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற உலக நாடுகள், அதற்காக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய உலக நாடுகள், இன்று முகாம்களில் 3 இலட்சம் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப்படுத்தியிருப்பதை ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றன. இது மனித உரிமை மீறலில்லையா? தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய மக்களை முகாம்களில் அடைத்து வைத்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து கொல்கிறதே சிறிலங்க அரசு, இது அவர்களை காப்பாற்றம் பொறுப்பை திட்டமிட்டே தவிர்க்கும் குற்றம் அல்லவா?
போர் முடிந்துவிட்டது என்று அறிவித்தப் பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிக்கையாளர்களையும் மற்ற ஊடகங்களையும் அனுமதிக்காததை அம்னெஸ்டி மட்டுமே கண்டிக்கிறதே, ஐ.நா. ஏன் வாய் திறக்கவில்லை? அந்த மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை ஏன் ஐ.நா. பாதுகாப்புப் பேரவை விவாதிக்கவில்லை?
இது மிக ஆபத்தான மெளனம். இந்த மெளனம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால் இந்த மூன்று இலட்சம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிறிலங்க அரசப் படைகளாலும், அங்கு நிலவும் படுமோசமான சூழலால் ஏற்படப்போகும் தொற்று நோய்களாலும் அழிந்து போவார்கள்.
அப்படி ஒன்று நிகழுமானால், இந்த உலகில் ஐ.நா.வும் (ஏற்கனவே அது ‘கைப்பாவை’ என்று அந்தஸ்த்துடன்தான் உள்ளது), அதன் மனித உரிமை அமைப்புகளும், அதன் அமைவிற்கு அடிப்படையான தார்மீக நெறிமுறைகளுக்கும் எந்த மரியாதையுமின்றி போய்விடும்.
இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை கண்டு கொள்ளாமல் விட்டதுபோல, இன்றுவரை உயிருடன் இருக்கும் இம்மக்களையாவது காத்து தங்கள் தார்மீக கடமைகளை உலக நாடுகள் நிறைவேற்றட்டும்.
இங்குள்ள தலைவர்களும் அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று விவரம் தெரியாமல் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை காப்பாற்றுமாறு குரல் கொடுக்கட்டும்.
நமது நாட்டில் மத்திய அரசிலாகட்டும், மாநிலங்களிலாகட்டும் ஆட்சியில் அமரும் எந்த கட்சி அல்லது கூட்டணியாயினும் தாங்கள்தான் இந்த நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையும் காக்கப் பிறந்த தேச பக்தர்கள்போல் பேசுவார்கள், சட்டம் இயற்றுவார்கள், வலிமையான பாதுகாப்பு வலயத்திற்குள் நின்று கொண்டு பிடிக்க முடியாத பயங்கரவாதிகளுக்கு இந்த நாட்டின் சார்பாக கடும் எச்சரிக்கைகளை விடுப்பார்கள்.
ஆயினும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடரும், அப்பொழுதெல்லாம் மேற்குறிப்பிட்டது போல் வசனங்கள் பேசுவதும் தொடரும். எப்படி இந்தத் தாக்குதல் நடந்தது, அதற்கு எவருடைய செயலின்மை காரணம் என்றெல்லாம் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பேசுவார்கள். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் போக, படுகாயமடைந்தவர்களை மருத்துவமையில் சென்று பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வருவார்கள். அப்போதெல்லாம் முகத்தை மிகப் பரிதாபமாக வைத்துக் கொண்டு காயம் பட்ட குடும்பத்தினருடன் அக்கறையுடன் பேசுவார்கள்.
அதன்பிறகு, அடையாளம் தெரியாத அந்தப் பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்று பேச ஆரம்பித்து, பக்கத்து நாடுகளை பழிக்கு இழுத்து பிரச்சனையை எல்லையைக் கடந்து கொண்டு சென்று ஆக்ரோஷமாக விவாதிப்பார்கள். வழக்கு நடக்கும்… பல ஆண்டுகளுக்கு. இப்படித்தான் இருபது ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வீர வசனங்கள் பேசும் தலைவர்கள்தான் மாறுகின்றனரே தவிர, வசனங்கள் என்னவோ அதேதான்.
அப்படியான வசனங்களில் ஒன்றுதான் ‘இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுவதை சகித்துக் கொள்ள மாட்டோம்’ என்பது. தேசப் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள பற்றைக் காட்ட இவர்கள் சட்டமியற்றுவார்கள். சட்டமியற்றி பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்குவீர்கள் என்றால் பதிலிருக்காது. அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்களால் எந்த அளவிற்கு பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் போது, அந்த சட்டம் போதுமானதாக இல்லை, அதனை மேலும் வலுவூட்ட வேண்டும் என்று பதில் கூறி, சட்டங்களை மேலும் கடுமையாக்குவார்கள்.
இப்படி சட்டங்களைப் போட்டு, அதில் திருத்தம் கொணர்ந்து மேலும் பலப்படுத்தி பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளித்து இவர்களால் மேம்படுத்தப்பட்ட சட்டங்கள் அதன் பிறகாவது பயங்கரவாதத்தை வேரறுத்ததா என்றால் இல்லை! ஆனால் இப்படிப்பட்ட சட்டங்களைக் காட்டி தங்கள் அரசியல் எதிரிகளை (எதிர்கட்சி்த் தலைவர்களைத்தான்) கைது செய்து உள்ளே வைப்பது, அப்பாவிகளை கைது செய்து, போதுமான சட்ட வசதிகளை அளிக்காமல் குற்றவாளியாக்கி தண்டிப்பது, அவரே காஷ்மீரத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தூக்கு தண்டனை கொடுத்துவிட்டு, அவரை ஏன் இன்னமும் தூக்கி்ல் போடவில்லை என்று தேசப்பற்றுடன் குரல் எழுப்புவார்கள். இப்படிபட்ட நாடகங்கள் நமது நாட்டில் குறைவின்றி நடந்து வருகின்றன.
தங்கள் அரசியல் எதிரிகளை மட்டுமல்ல, அதையும் தாண்டி சில நேரங்களில் மனித உரிமைக்களுக்காக குரல் எழுப்புபவர்களையும் மிரட்டுவதற்கு இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையைத்தான் தமிழக அரசு எடுத்துள்ளது.
அதுதான் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசின் ஒரு அறிவிப்பு. “தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயங்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல்/ காண்பித்தல் ஆகியவை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act -1967) படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது” என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் பெயரில் ஒரு விளம்பரம் செவ்வாய்கிழமையன்று காலையிலும், மாலையிலும் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.
அந்தச் சட்டம் கூறுவது என்ன?
1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு கடுமையாக்கப்பட்ட சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நோக்கம்:
“இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குரிய அதிகாரங்களை வழங்கவும், நாட்டின் நலன் கருதி கருத்துரிமைக்கும், ஒன்று கூடுவதற்கும், அமைப்பு அல்லது சங்கங்களை உண்டாக்குவதற்கும் உள்ள உரிமைகள் மீது காரணத்திற்குரிய அளவிற்கு கட்டுப்பாடுகளை (Reasonable restrictions) விதிக்க அரசிற்கு அதிகாரமளிக்கவும் இச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது” என்று கூறுகிறது.
இதுமட்டுமின்றி, மும்பைத் தாக்குதலிற்குப் பிறகு, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு சில திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டு சேர்க்கப்பட்டபோது, இச்சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் ஒரு முகப்புரையும் (Preamble) சேர்க்கப்பட்டது. அதன்படி, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கூடிய ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1373இன் படியும், அதற்கு முன்னரும் ஐ.நா.பா.பே. நிறைவேற்றிய பல்வேறு தீர்மானங்களின் அடிப்படையிலும், பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் ஒடுக்குவதற்கு ஏதுவாக இச்சட்டம் பல்வேறு துணைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையாக்கப்பட்டது.
இச்சட்டத்தின் பகுதி 4 பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்வோர் மீது தண்டனை அளிப்பது குறித்து வரையறை செய்கிறது. அதில் பயங்கரவாத செயல் எது என்பது குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளது (இதனை குறிப்பிடும் இச்சட்டத்தின் பிரிவு 15, 2008ஆம் ஆண்டு திருத்தப்பட்டுச் சேர்க்கப்பட்டது).
“இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மை ஆகியவற்றிற்கு எதிராகவோ அல்லது மக்களை அல்லது ஒரு பகுதி மக்களை அச்சுறுத்தும் நோக்குடனோ இந்தியாவிலோ அல்லது அயல் நாட்டிலோ, வெடிகுண்டுகள், டைனமைட் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் அல்லது எரிக்கின்ற பொருள் அல்லது துப்பாக்கிகள் அல்லது மற்ற கடுமையான ஆயுதங்கள் அல்லது விஷ வாயுக்கள் அல்லது இரசாயண பொருட்கள் அல்லது அபாயத்தை விளைவிக்கக் கூடிய உயிரியல் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தியாவிலோ அல்லது அயல் நாட்டிலோ மக்களை அச்சுறுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாத செயல்கள் ஆகும்” என்று கூறியுள்ளது.
ஆக, இந்தச் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் (அதன் திருத்தத்திற்குப் பிறகு) இரண்டு தான்:
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிரான செயல்பாடுகளைத் தடுப்பது;
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும் நோக்குடன் இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ மேற்கொள்ளப்படும் அல்லது அவ்வாறு திட்டமிடப்படும் பயங்கரவாத செயல்களைத் தடுப்பது என்பதே.
அதாவது இந்தியாவின் நாடாளுமன்றத்தால் அரசியல் காரணங்களுக்காகவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாற்றப்பட்டு நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்புச் (POTA) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை ஒரு திருத்தத்தின் மூலம் ஏற்கனவே இருந்த சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் புகுத்தி, அதன் மூலம் நிராகரிக்கப்பட்ட பொடா சட்டத்தின் சாராம்சம் கொண்டதாகவே இச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தையும் அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அத்திருத்தங்களை எதிர்த்தவர்கள் கூறியதுதான் இப்பொழுது தமிழக அரசின் இந்த அறிக்கையின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று பொடா சட்டத்தின் கீழ் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களை அ.இ.அ.தி.மு.க. அரசு கைது செய்து சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தெளிபடுத்தியது மட்டுமின்றி, அவ்வழக்கிலிருந்து வைகோ உள்ளிட்டவர்களை விடுவித்தும் உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்துப் பேசுவது, அந்த இயக்கத்திற்கு உதவுவதாக ஆகும் என்ற அரசின் சட்ட விளக்கத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதாக இருந்தாலும், அதன் நோக்கத்தை அல்லது குறிக்கோளை ஆதரித்துப் பேசுவதற்கு எவரொருவருக்கும் உரிமையுள்ளது என்று அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
எனவே, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்தோ அல்லது அதன் நோக்கத்தை ஆதரித்தோ பேசுவதும், ஆதரவு திரட்டுவதும் எந்த ஒரு குறிப்பிட்ட கடுமையான சட்டத்தின் நோக்கின்படியும் குற்றமாகாது என்பதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலும், அதன் பிரிவு 19இன் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துரிமைக்கு உட்பட்டதே என்பதும் அத்தீர்ப்பின் சாரமாக இருந்தது.
இப்பொழுது திருத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ள அல்லது வலுவூட்டப்பட்டுள்ள சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை காப்பாற்றும் நோக்குடன் இந்திய அரசமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்துரிமை உரிமையின் மீது காரண அளவிற்கு கட்டுப்பாட்டை (Reasonable restriction) விதிக்க அரசிற்கு இச்சட்டம் அதிகாரமளித்துள்ளது. இந்த அடிப்படையை பயன்படுத்தியே தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த ‘கருத்துரிமைக் கட்டுப்பாட்டு’ அறிக்கை அமைகிறது.
இங்கே கூர்ந்து கவனிக்கத் தக்க ஒரு விடயம் யாதெனில், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவான அல்லது அதன் நோக்கத்தை ஆதரித்து பேசப்படுவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிரானதா இல்லையா என்பதே. இந்த அடிப்படை விடயத்திற்கு விடைதேட வேண்டுமெனில் அந்த அறிக்கை எந்த இயக்கத்தை குறிப்பாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது அவசியமாகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை இயக்கம் அல்லவா?
தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குறிப்பிட்டே வெளியிடப்பட்டுள்ளது என்பது விவரம் அறிந்த எவருக்கும் எளிதில் புரியக் கூடியதே. அதன் வெளிப்பாடு இந்த விளம்பரம் அளிக்கப்படுவதற்கு முன்னரே - ஞாயிறு, திங்கட்கிழமைகளில் - சென்னையில் பல்வேறு இடங்களில், அமைந்தகரையில் திங்கட்கிழமை விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாடு தொடர்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளிலும், அவர்கள் நிறுத்தியிருந்த விளம்பரப் பதாகைகளிலும் அச்சிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்தையும், ஈழம் என்ற வார்த்தையும் காவல் துறையினர் அழித்திருந்தனர். ‘அழிக்கச் சொல்லி அரசு உத்தரவிட்டிருந்தது, அதனால் அழித்துள்ளோம்’ என்று காவல் துறையால் பதில் கூறப்பட்டதாக செய்திகளும் வந்திருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழக மக்களிடையே பரவலான, ஆழமான ஆதரவு உள்ளது என்பதும், எந்த நோக்கத்திற்காக அந்த இயக்கம் ஆயுதம் தரித்துப் போராடியதோ அந்த இயக்கத்தின் நோக்கமான தமிழீழ விடுதலையை தமிழக மக்கள் பலமாக ஆதரிக்கின்றனர் என்பதும், அந்த இயக்கத்தையும், அந்த விடுதலை நோக்கத்தையும் ஆதரிக்கும் அரசியல், அரசியல் சார்பற்ற அமைப்புகளுக்கே இந்த எச்சரிக்கை அறிவிப்பு என்பதும் நன்றாகவே புலனாகிறது.
நமது கேள்வி இதுதான்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதிற்கு ஆதரவாகப் பேசுவதும், அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் படத்தை விளம்பரத்தில் போடுவதும் எவ்வாறு இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிரான நடவடிக்கை என்று ஆகும்?
இன அழிப்பை தட்டிக் கேட்காததேன்?
இலங்கை விடுதலைப் பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் பூர்வீகக் குடிமக்களான தமிழர்களுக்கும், 150 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார செழிப்பிற்கும் காரணமான மலையகத் தமிழர்களுக்கும் இயல்பாக இருந்த உரிமைகளை, அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் ஒவ்வொன்றாக பறித்து தமிழர்களை சம உரிமையற்றவர்களாக, இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கியது. மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. அதற்கு இந்திய அரசு முழுமையாக ஒத்துழைத்தது. சம உரிமை கோரி தமிழர்கள் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டங்கள் அரச படைகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. தமிழர்களை அழித்து அவர்களை எந்த உரிமையும் அற்ற அடிமைகளாக மாற்ற தொடர்ந்து முயற்சி நடந்தது, இன்றும் நடக்கிறது.
தங்களுடைய சாத்வீகப் போராட்டம் ஆயுத பலத்தால் ஒடுக்கப்பட்டதையடுத்து அதன் இயற்கையான நேர் வினையாக தமிழர்கள் ஆயுதமெடுத்துப் போராடத் துவங்கினர். அந்த ஆயுதப் போராட்டத்தை இந்தியா (இந்திரா காந்தி பிரதமராக இருந்துபோது) ஆதரித்தது, அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தது மட்டுமின்றி, ஆயுதங்களையும் கொடுத்தது, நிதியுதவியையும் செய்தது. ஏனெனில் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டத்ததின் நியாயத்தை இந்திய அரசு (அன்று) உணர்ந்திருந்தது.
அப்படி ஆயுதமேந்தி ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலிமையாக வளர்ந்து, சிறிலங்க அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னின்றுப் போராடி முடக்கியது. அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் மேற்கொண்ட தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தி அதன் ஆயுத பலத்தை நிர்மூலமாக்கியது. தமிழர் இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் நிலைக்கு சிறிலங்க அரசை பலமுறை தள்ளியது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீரம் சொரிந்த போராட்டமே.
ஆனால் அந்த இயக்கத்தை தனது கைப்பாவையாக்க இந்திய அரசு முயன்றபோது அதனை ஏற்காததால், விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரித்த சிறிலங்க அரசின் முயற்சிக்கு துணைபோனது. இந்திய அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட இந்த முரணே, ஈழத் தமிழர்களின் விடுதலை நோக்கத்தை அடிப்படையில் புறக்கணித்து உருவாக்கப்பட்ட இந்திய - சிறிலங்க ஒப்பந்தத்திற்கும், இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படைக்கும், புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலிற்கும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இராஜீவ் படுகொலைக்கும் வித்திட்டது. இப்படிப்பட்ட சங்கிலித் தொடர்பான நிகழ்வுகளின் பின்னணி முழுமையாக மக்கள் அறிந்திராத நிலையை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்டும், இராஜீவ் படுகொலையை கேடயமாக பயன்படுத்தியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கத் தலைப்பட்டது இந்திய அரசு. ஆனால் இராஜீவ் படுகொலை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையே, பயங்கரவாத செயல் அல்ல என்றும், அந்த நடவடிக்கை இந்தியாவை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று கருதுவதற்கு இடமில்லை என்றும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதன் முயற்சிக்குத் தடையானது.
அதன் பிறகே, சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயங்கங்களின் பட்டியில் இந்திய அரசு சேர்த்தது. அதற்கு அது கூறிய காரணம் என்னவெனில், தமிழகத்தை தனி நாடாக்கும் முடிவுடன் செயல்படும் தலைமறைவு இயக்கங்களுக்கு இரகசியமாகப் பயிற்சியளித்ததாக ஒரு குற்றச் சாற்றைக் கூறியது. இது சட்டப்படி நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றச் சாற்று அல்ல.
இச்சட்டத்தின் பகுதி 2, பிரிவு 3இன் படி, (1) எந்த ஒரு அமைப்பும் சட்டத்திற்கு முரணானது என்றோ அல்லது அவ்வாறு ஆகலாம் என்றோ மத்திய அரசு கருதுமானால் ஒரு அரசிதழை வெளியிட்டு அதனை சட்டத்திற்கு முரணான அமைப்பாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தியே விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் சேர்த்தது மத்திய அரசு.
அவ்வாறு ஒரு அமைப்பை சட்டத்திற்கு முரணான அமைப்பாக அறிவிப்பதற்கு (2) என்ன அடிப்படை என்றும், அதற்கான மற்ற காரணங்களையும் அவசியம் என்று மத்திய அரசு கருதினால் அந்த அரசிதழில் குறிப்பிட வேண்டும் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அப்படி தெரிவிக்க வேண்டிய விவரங்களையும் கூட, அது பொது நலனிற்கு பாதகமானதாக இருக்கலாம் என்று மத்திய அரசு கருதுமானால் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.
இப்படி எல்லா விதத்திலும் முழு அதிகாரமளிக்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இவ்வாறு சேர்த்தது சரியா தவறா என்று இதுநாள் வரை நீதிமன்றத்திலோ அல்லது அப்படிப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யும் இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்பாயத்திலோ (Tribunal) உறுதி செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சார்பாக அந்த இயக்கமோ அல்லது அதன் உறுப்பினரோதான் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் ஒரு நிபந்தனையை (பிரிவு 36) விதிக்கிறது. எனவே விடுதலைப் புலிகள் மீதான தடை இரண்டாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டே வந்துள்ளது. இப்பொழுதும் தொடர்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்ப்பதோடு நின்றுவிடவில்லை, அதனை அயல் நாட்டு பயங்கரவாத இயக்கமாக (Foreign Terrorist Organization) அறிவித்து தடை செய்யுமாறு வலியுறுத்தி அதன் காரணமாக அந்த இயக்கம் இன்று 30 நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது எப்போது தெரியுமா? நார்வே நாட்டின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க அரசிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்தபோதுதான் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவித்தன!
என்ன நியாயம்! எப்படிப்பட்ட அரசியல் அணுகுமுறை! அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டுவரும் ஒரு இனத்தின் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் ஒரு இயக்கத்தை, அது அரசியல் ரீதியான தீர்வு காணும் நோக்குடன் - சர்வதேச சமூகத்தின் வற்புறுத்தலை ஏற்று - தங்கள் இனத்தை அழித்துவரும் அரசுடனேயே பேச்சுவார்த்தை நடத்தும்போது பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது!
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தெற்காசிய வல்லரசுகளின் ஆதரவுடன் அழித்தொழிக்கும் முயற்சிக்கு வித்திடப்பட்ட முதல் நடவடிக்கை புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது அதனை பயங்கரவாத இயக்கமாக மேற்கத்திய நாடுகள் தடை செய்தன என்றே அரசியல் நோக்கர்கள் பலரும் கருதுகின்றனர்.
அதனால்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக நிராகரித்துவிட்டு இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணு்ம் நடவடிக்கையை துணிந்து முன்னெடுத்தார் ராஜபக்ச என்றால், அவருக்கு அந்தத் ‘துணிவை’ அளித்த பின்னணி இதுதான்.
தங்கள் மீது திணிக்கப்பட்டப் போரை நேர்மையாகவும், தீரத்துடன் எதிர்கொண்ட விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க தெற்காசிய வல்லரசுகள் அனைத்தும் சிறிலங்க அரசிற்கு முழு ஒத்துழைப்பை அளித்தன. அதிலும் இந்திய அரசின் ஒத்துழைப்பு எப்படிப்பட்டது என்பதற்கு போர் முடிந்ததாக சிறிலங்க அரசு அறிவிக்கப்பட்டப் பிறகு கோத்தபய ராஜபக்ச அளித்த பேட்டியே சான்றாகும்.
பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அப்பகுதிக்கு நிராயுதபாணியாக மக்கள் வந்தவுடன் அவர்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமான குண்டு வீச்சின் மூலமும் சிறிலங்க இராணுவம் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு, தாங்கள் வகுத்த யுக்தியே காரணம் என்று ராஜபக்ச பேட்டியளித்துள்ளாரே!
“பாதுகாப்பு வலயத்தை ஐ.நா.வோ அல்லது உலக நாடுகளோ உருவாக்கவில்லை, இராணுவம் தான் உருவாக்கியது. அங்கு அவர்கள் அனைவரும் வந்தப் பிறகு அதன் மீது குண்டு வீசி அனைவரையும் அழித்தோம்” என்று தனது ஆங்கில பத்திரிக்கையாள நண்பரிடம் அளித்த பேட்டியில் ராஜபக்ச கூறியுள்ளாரே? இதனை ஏன் இந்தியா உட்பட எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் கோத்தபய ராஜபக்ச கூறியது போல இவை யாவும் ஒவ்வொரு நாளும் கூடிப்பேசி மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள்!
இப்படித்தான் பேசி, ஆலோசித்து, திட்டமிட்டு இறுதிக் கட்டப் போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று, அடையாளம் ஏதுமின்றி அழித்து, பயங்கரவாதத்தை அழித்து விட்டதாக ராஜபக்ச கூறுகிறார்.
இலங்கையில் பலத்த மழை: வன்னி தமிழர் முகாம்களில் நோய் பரவியது-5 பேர் பலி; 251 பேரை காப்பாற்ற தீவிர சிகிச்சை
கொழும்பு, ஆக. 19-
இலங்கையில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள 251 பேரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தற்போது, இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வன்னியில் உள்ள தமிழர்களின் முகாம் களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு சிறுவன் உள்பட 5 பேர் பலியானார்கள். அங்குள்ள “செப்டிக் டேங்க்” வெள்ளத்தில் அடித்து செல் லப்பட்டது. இதையடுத்து அந்த குழிக்குள் விழுந்து சிறுவன் பலியானான். மற்ற 4 பேரும் கடும் குளிர் தாங்காமல் இறந்துள்ளனர்.
முகாம்களில் சேறும், மனித கழிவும் சேர்ந்துள்ளது. சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வவுனியா, செட்டிகுளம் பகுதிகளில் உள்ள முகாம் களில் பெருமளவுக்கு தொற்று நோய் பரவுகிறது. செட்டிகுளம் பகுதியில் உள்ள 13 முகாம்களில் வயிற்றுப்போக்கு நோய் அதிக அளவில் பரவியுள்ளது.
அங்குள்ள முகாம்களில் 735 பேர் வயிற்று போக்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 251 பேர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றோட்டத்துடன் 120 பேருக்கு அம்மை நோய் பரவியுள்ளது.
இலங்கை கடற்படை தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில்; மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்; கடற்கரை இன்று வெறிச்சோடியது
ராமேசுவரம், ஆக. 21-
ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி துன்புறுத்தி வருகின்றனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் விரட்டியடிக்கின்றனர். நேற்று முன் தினமும் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
எனவே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தொடர் தாக்குதல் நடவடிக்கையை கண்டித்தும் பாக்ஜலசந்தி, மன்னார் கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உரிமையை பெற்று தர கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை தொடங்கினர். சுமார் 800 விசைப்படகுகளும் மீன்படி தொழிலை சார்ந்த 25 ஆயிரம் பேரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
மீன்பிடி தொழிலை நம்பி இருந்த ஐஸ் கம்பெனிகள், லேத் பட்டறைகள் மூடப்பட்டன.
""பனி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1079 மதிப்பெண்கள் வாங்கி யும் என் தங்கைக்கு அண்ணா யுனிவர் சிட்டி கவுன்சிலிங் கிற்கு அழைப்பு வரவில்லை அய்யா. என் தங்கச்சியோட உயர்கல்வி தடைபடாமல் இருக்க நக்கீரன்தான் உதவி செய்ய வேண்டும்'''என்ற கோரிக் கையோடு நம்மை சந்தித் தார் சென்னை விவேகானந்தர் கல்லூரி மாணவரான பிரியதர்ஷன்.
பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கு மேலான இடங்கள் காலியாக இருக்கும் என்று கவுன்சிலிங் நடத்தும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சொல்லிவரும் நிலையில் 1079 மதிப்பெண்கள் வாங்கிய மாணவி நிராகரிக்கப்பட்டது ஏன்?
""நாங்க இலங்கைத் தமிழர்கள் அய்யா. அங்கிருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள். இந்தியா வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. மூன்றாம் வகுப்பிலிருந்து என் தங்கை சென்னையில்தான் படித்தாள். ஆனாலும் இலங்கை அகதிகள் என்பதால் எங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக் கிறது'''என்ற பிரியதர்ஷன் தன் குடும்ப பின்னணி குறித்து நம்மிடம் விளக்கி னார்.
எங்கள் அப்பா நாங்கள் இலங்கையில் இருந்தபோதே தவறிவிட்டார். 1999ம் ஆண்டில் படகு மூலம் ராமேஸ்வரம் வந்தோம். அங்கே மண்டபம் முகாமில் சில நாட்கள் தங்க வைக்கப்பட்டி ருந்தோம். பிறகு சென்னையில் இருந்த அத்தை உதவியுடன் நாங்களும் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு பார்த்து வந்துவிட்டோம். அப்போது நான் ஐந்தாம் வகுப்பும், தங்கை ஜனனி மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். அப்பாவும் இல்லாமல் வருமானம் இன்றி எங்கள் குடும்பம் அவதிப்பட்ட போது எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்தவர் எங்கள் அத்தைதான். அத்தை குடும்ப உதவியோடுதான் நாங்கள் பள்ளிப்படிப்பை முடித்தோம். நான் சென்ற ஆண்டு முதல் விவேகானந்தா கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து படிக்கிறேன். என் தங்கைக்கு படிப்பில் நிறைய ஆர்வம் உண்டு. என் தங்கையோடு வேலம்மாள் பள்ளியில் படித்த மற்ற நண்பர்களுக்கு எல்லாம் நல்ல கல்லூரிகளில் பொறியியல் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ஜனனியின் கட் ஆஃப் மதிப்பெண் 200க்கு 176. இதைவிட குறைவாக வாங்கியவர்களுக்கு நல்ல கோர்ஸ் கிடைத்திருக்கிறது. இத னால் என் தங்கை மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக் கிறாள் அய்யா'''என்று கவ லையோடு பேசினார் பிரியதர்ஷன்.
அண்ணா பல்கலைக் கழக கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வராததால் தனியார் பொறியியல் கல்லூரிகள் சிலவற்றை அணுகியிருக்கிறது ஜனனியின் குடும்பம். அந்த கல்லூரிகளின் நிர்வாகங்களும், ""உங்களை கல்லூரியில் சேர்ப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று அண்ணா யுனிவர்சிட்டியில் ஒரு என்.ஓ.சி. வாங்கிட்டு வந்துடுங்க. நாங்க சேர்த்துக் கொள்கிறோம்'''என்று சொல்லியிருக் கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக வளாகத் துக்கு போய் சர்ட்டிஃபிகேட் பற்றி ஜனனி குடும்பம் விசாரிக்க... அப்படி எந்த சர்ட்டிஃபி கேட்டும் வழங்க வாய்ப்பில்லை என்று பதில் வந்திருக்கிறது.
""என் கணவர் மாரடைப்பால் இறந்தபிறகு நிரம்ப வேதனைகள் அனுபவித்துதான் இலங்கை யில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தோம். தமிழ்நாட்டில் நம் சொந்தங்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்தான் இங்கே வந்தோம். தமிழர்களாக இருந்தும் எங்களை அன்னியராக பார்ப்பது வேதனையாக இருக்கிறது'' என்று கலங்கினார் ஜனனியின் தாயார் வனஜா.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிய 5 நாட்களே இருந்த நிலையில் , ஜனனியின் பிரச் சனை குறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவகரிடம் பேசினோம். ""கேண்டிடேட்டை நேரில் வரச்சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவி களை நிச்சயம் செய்கிறேன்'''என்று அவர் சொல்ல...அன்று மாலையே ஜனனி குடும்பத் தோடு நாமும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்றோம். ஜனனியின் மதிப்பெண் சான்றிதழ், டி.சி. உள்ளிட்டவற்றை வாங்கி சரிபார்த்த மன்னர் ஜவகரிடம், தங்கள் பிரச்சனையை விளக்கமாக சொன்னார் ஜனனியின் அம்மா வனஜா.
""இப்படி ஒரு பிரச்சனை என் கவனத்துக்கு வருவது இதுதான் முதல்முறை. நீங்கள் தொலைபேசியில் தகவல் சொன்ன உடனேயே அட்மிஷன் அதிகாரிகளிடம் இது பற்றி விசாரித்தேன். "அப்ளி கேஷனில் வெளிநாட்டை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தால் அது நிரா கரிக்கப்பட்டிருக்கும்' என்று சொன் னார்கள். அகதிகளாக உள்ள இலங் கைத் தமிழர்களை என்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வைப்பதற்கு சட்டப்படி இடம் இல்லை. கவுன்சிலிங் நடத்துகிற பொறுப்பை மட்டுமே தமிழக அரசு எங்களுக்கு ஒப்படைத்திருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறி முறைகளை அரசாங்கம்தான் வகுக்கிறது. எனவே அந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்பதான் நாங்கள் கவுன்சிலிங் நடத்தமுடியும். அண்ணா பல்கலைக்கழக சீட்டில் வேண்டுமானால் வெளிநாட்டவர்களுக்கான ஒதுக் கீட்டில் சீட் பெற இவர்கள் விண்ணப்பிக்கலாம்'''என்று சொன்ன துணைவேந்தர் கவுன்சிலிங் அதிகாரிகளையும் வரவழைத்தார். அவர்களும் ""தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் தகுதி சட்டப்படி ஜனனிக்கு இல்லை'' என்றே சொன்னார்கள்.
""அப்படியானால் இதுவரை பொறியியல் கவுன்சிலிங் கில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வாய்ப்பே வழங்கப்பட்ட தில்லையா?'' என்று நாம் கேட்க"கவுன்சிலிங் முறை கொண்டுவரப்பட்ட 1997-ம் ஆண்டில் இருந்து, எந்த இலங்கை அகதிக்கும் கவுன் சிலிங்கில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்திருக்காது'''என்றார் கவுன்சிலிங் அதிகாரியான ரெய்மெண்ட்.
""கடந்த ஐந்தாறு ஆண்டு களில் சில இலங்கை தமிழர்கள் தனியார் கல்லூரிகள் சிலவற் றில் படித்திருக்கிறார்களே? என்ற நம் கேள்விக்கு விளக்க மளித்தார் மாணவர் நலன் களுக்கான இயக்குனர் கணேசன், ""நீங்க சொல்வது உண்மைதான். அவர்கள் மேனேஜ் மெண்ட் கோட்டாவில் சேர்ந்திருப் பார்கள். ஆண்டுக்கு 10 மாணவர்கள் வரை இப்படி படித்திருப்பார்கள். சென்ற ஆண்டு வரை டைரெக்டரேட் ஆஃப் டெக்னிக்கல் எஜுகேஷன் அனுமதி பெற்று குறிப்பிட்ட மாணவர் களுக்கு என்.ஓ.சி. கொடுத்தோம். ஆனால் இந்த ஆண்டு அரசிடம் இருந்து வந்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின் விதி எண் 7-ல் இலங்கை மாணவர்களையும் ஃபாரின் நேஷனலாகத்தான் பார்க்க வேண்டும் என்று குறிப் பிட்டு சொல்லியிருப்பதால் இந்த ஆண்டு அப்படிப்பட்ட என்.ஓ.சி. வழங்கமுடியாத நிலை இருக்கிறது'''என்றார் கணேசன்.
""நீங்கதான் எப்படியா வது முயற்சி எடுத்து எங்க பொண்ணுக்கு என்ஜினியரிங் படிக்கிற வாய்ப்பை உருவாக்கித் தரணும் அய்யா. நல்லா படிக்கிற பொண்ணு... அகதிகளா இருக்கிற எங்களுக்கு படிப்பு மட்டும்தாங்க பெரிய சொத்து''' என்று ஜனனியின் அம்மா வனஜா மீண்டும் துணை வேந்தர் மன்னர் ஜவகரிடம் கோரிக்கை வைத்தார்.
""உங்க பிரச்சனையை எழுத் துப்பூர்வமாக கொடுங்க... நிச்சயம் நான் உயர்கல்வித்துறை உயரதிகாரி கள் பார்வைக்கு இதைக்கொண்டு போய் உங்க மகளோட பிரச்சனைக்கு தீர்வு காண எல்லா முயற்சிகளையும் எடுக்கிறேன்'''என்று நம்பிக்கையூட்டினார் துணைவேந்தர்.
குஜராத், மகாராஷ்டிரா, பீகார் என்று பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து ஐந்து வருடங்களுக்கு குறையாமல் படித்திருந்தால் அவர்களை தமிழ்நாடு கோட் டாவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறது தமிழக அரசின் நெறிமுறைகள். அதே போன்று ஐந்து அல்லது ஐந்து வருடங்களுக்கு அதிகமாக தமிழகப் பள்ளிகளில் படித்த இலங்கைத் தமிழர்களையும் தமிழக கோட்டாவில் சேர்க்கலாம் என்று விதியை உருவாக்கினால் போதும். அகதிகளாக இங்கிருக் கும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் பொறியியல் படிக்க முடியும் என்கிறார்கள் கல்வி யாளர்கள். இலங்கைத் தமிழ் அகதிகளின் வாரிசுகள் உயர் கல்வி பெற தேவையான நடவடிக் கைகளை எடுக்குமா தமிழக அரசு?
தமிழக அரசின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து தமிழக ஊடகங்கள் ! தமிழ் ஈழம் தொடர்பான செய்திகளை தவிர்த்து வருகிறது.
இலங்கையில் இன உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி தடை விதித்துள்ளது. அதை தமிழன் ஆட்சி செய்யும் தமிழகம் ஏற்று செயல்படுத்தி வருகிறது. சிங்கள அரசின் கொடுங்கோள் ஆட்சியில் தமிழர்கள் தங்கள் உரிமைகளை இழந்து, உடமைகளை இழந்து ஏதிலிகளாய் தவித்து வருகின்றனர். அவர்களின் உரிமை மீட்கப்பட வேண்டும் என தமிழகத்தில் இருந்து வை.கோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், கொளத்தூர் மணி, தா.பாண்டியன், மருத்துவர் இராமதாஸ் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட அமைப்பை பற்றி செய்தி விளம்பரம், பத்திரிக்கை தொலைகாட்சிகளில் வெளியிடுவதும் சட்டப்படி குற்றம், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பத்திரிகைகளை மிரட்டியுள்ளது.
அதனால் திருமாவளவன் நடத்திய எழும் தமிழ் ஈழம் பற்றிய செய்தியையும், பெரியார் திராவிடர் கழகம் நடத்திய மாநாடு குறித்த செய்தியையும் தமிழக பத்திரிகைகள் புறக்கணித்துள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் இலங்கைத் தமிழர்களைப் பற்றி கூறும் செய்திகளை மட்டும் பத்திரிகைகள் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா முகாம்களில் தங்கியிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அகதிகள் சிலர் மீள்குடியமர்த்துவதற்காக அம்பாறைக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் முதலில் காரைதீவு விபுலானந்தர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் தாம்பட்ட அவலம் பற்றிக் கூறிய கண்ணீர் கதைகள் இதோ...
"நாம் இடம்பெயர்ந்து இராமநாதபுரம், பிரமணங்குளம், துறவில், தேவிபுரம், இரணைப்பாலை என 3 மாதங்கள் வரை அலைந்து நாடோடியாக புதுமாத்தளனை அடைந்தோம். அங்கு தினமும் வெறும் பருப்பை தண்ணீரில் அவித்து உண்டோம்.'' வன்னி யுத்தத்தில் சிக்கி வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து காரைதீவுக்கு சென்ற, அம்பாறை மாவட்ட 159 அகதிகள் சார்பில் நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி (வயது 32) என்ற பெண்மணி இவ்வாறு கூறினார். காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வேளையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் அவர்களைப் பேட்டி கண்டனர். அப்போது அப்பெண்மணி கூறியவை வருமாறு:
"எனது கணவர் த.சிவராசா கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நான் நற்பிட்டிமுனை. 1982 இல் திருமணம் செய்தோம். அதன் பலனாக 3 பிள்ளைகள் பிறந்தனர். 2006ஆம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து மீண்டும் திரும்வர "பாஸ்' தரமறுத்துவிட்டனர். கடந்த வருடம் யுத்தம் தொடங்கியது. வேறு வழியின்றி இடம்பெயர ஆரம்பித்தோம். வட்டக்கச்சி, இராமநாதபுரம் எனத் தொடங்கி புதுமாத்தளன் வரை 3 மாதங்கள் உடுத்த உடுப்புடன் நாடோடிகளாக "டச்"ட அலைந்தோம்.
புதுமாத்தளனில் இருக்கும்போது உணவுக்கு கஷ்டப்பட்டோம். அங்கு தேங்காய் 2 ஆயிரம் ரூபா, சீனி 2,500 ரூபா, செத்தல் மிளகாய் 16,000 ரூபா, மீன் 1,500 ரூபா இப்படி விலைகளில் பொருட்கள். கப்பல் வந்தால் உணவுப் பொருட்கள் வரும். ஆனால் எங்களுக்கு வெறும் பருப்பு மட்டுமே கிடைக்கும். அதுவும் கோதுப்பருப்பு. என்ன செய்வது. அப்பருப்பை வெறும் தண்ணீரில் அவித்து பசியைப் போக்கினோம். சிலர் சைக்கிளை விற்று, தங்கத்தை விற்று தேங்காய் வாங்கினர். எம்மிடம் பணமில்லை. அங்கு துப்பாக்கிச் சூடுகள் விழவிழ ஓடினோம். ஒரு தடவை பார்த்தோம். எம்முடன் வந்த அறுவருக்கு கால்களில்லை.
இப்படி நாதியற்று அலைந்து கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதியன்று படையினரிடம் சரணடைந்தோம். எம்முடன் 2,500 பேர் சரணடைந்தனர். அதன்பிறகு ஓரளவு நிம்மதி. நாம் செட்டிக்குளம் அருணாசல முகாமில் தங்க வைக்கப்பட்டோம். எமது ஒரு மகனை மொட்டை அடித்து வவுனியா காமினி வித்தியாலயத்தில் வைத்துள்ளனர். அவர் இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தர பரீட்சை எடுப்பவர். அவரை அவர்கள் விடவில்லை. நாம் அருணாசல முகாமில் 3 மாதங்கள் வரை இருந்தோம். சாப்பாடு பரவாயில்லை. நிவாரணம் தந்தார்கள். உடுப்புகளைத் தந்தார்கள். இன்று ஆண்டவன் அருளால் இங்கு வந்திருக்கிறோம். இனி புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவிருக்கிறோம்'' என்றார்.
மாங்குளத்தில் காலையிழந்தேன்!நிந்தவூரைச் சேர்ந்த சீ.வில்டன் (வயது 57) என்பவர் கூறியவை வருமாறு: "நான் மேசன் வேலை செய்து பிழைத்து வந்தேன். 1996இல் விமானத் தாக்குதலில் காலையிழந்தேன். மாங்குளத்தலிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றது. எனது குடும்பத்தினருடன் கிளிநொச்சிக்குச் சென்று யுத்தம் தொடங்கியதும் 3 மாதம் அலைந்து அடுத்த மே 17ஆம் திகதி செட்டிக்குள முகாமிற்கு வந்தடைந்தோம். அங்கு 1,500 குடும்பங்கள் உள்ளனர்'' என்றார். வில்டனின் மகளான ரவீந்திரராஜ பேபி (வயது 33) தெரிவித்தவை வருமாறு: "நாம் கிளிநொச்சிக்கு 1992 இல் குடியேறினோம். எமக்கு 5 பிள்ளைகள் பிறந்தனர். எனது மகன் ரசிதர் (வயது 10) அங்கு நிலவிய கடும் காய்ச்சல் காரணமாக காக்காய் வலிப்பு வந்தது. ஒரு காலையும் இழந்தார். மற்ற மகளுக்கும் அதேகதி'' என்றார்.
அன்னமலையைச் சேர்ந்த சந்திரசேகரன் யமுனா (வயது 32) கூறியவை வருமாறு: "நான் 2003 இல் முன்பள்ளிப் பாடசாலையில் கற்பிப்பதற்கு புதுக்குடியிருப்புக்குச் சென்றேன். அங்கு 2004இல் சு. சந்திரசேகரனுக்கு (வயது 39) வாழ்க்கைப்பட்டேன். பலனாக 02 பிள்ளைகளைப் பெற்றோம். கடந்த வருட நடுப்பகுதியில் யுத்தம் ஆரம்பமாக வீட்டை விட்டு வெளியேறி தேவிபுரம், ஆனந்தபுரம், பழையமடம், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் கடந்து மே 5 இல் வெள்ளமுள்ளி வாய்க்காலுக்கு வந்து சேர்ந்தோம். கடும் கஷ்டப்பட்டு மே 17 இல் இராணுவத்தில் சரணடைந்து வவுனியா முகாமை அடைந்தோம். வழியில் எமது 2ஆவது நான்கரை வயது பிள்ளையை தவறவிட்டிருந்தோம். வவுனியா முகாமில் "உறவுப்பாலம்' வானொலி நிகழ்ச்சியின் பலனாக இரண்டரை மாதங்களுக்கு பிறகு எனது மகள் புகழரசி எங்களுக்குக் கிடைத்தாள். அவள் வேறொரு முகாமில் இருந்திருக்கிறாள். வலயம் 4 முகாமில் நாம் சமைத்துச் சாப்பிடுவோம். அவர்கள் உணவுப் பொருட்கள் தருவார்கள். யுனிசெவ் எமக்கு முத்திரை வழங்கி முதலாம் கட்ட உணவுப் பொருட்களைப் பெற்றவேளை இங்கு வந்திருக்கிறோம். இப்பதான் சந்தோசம். எமது தலைவிதி; கஷ்டப்பட்டோம். இனி நிம்மதி'' என்றார்.
மற்றவர்களையும் விடவேண்டும்!
திருக்கோவிலைச் சேர்ந்த கா.துஸ்யந்தி (வயது 26) கூறியவை வருமாறு: "நாம் 1996 இல் கிளிநொச்சிக்கு தொழில் நிமித்தம்சென்றோம். மாங்குளத்திலிருந்த வேளை 2 பிள்ளைகள் கிடைத்தது. அவர் கார்த்திகேசு ( வயது 37) கூலி வேலை செய்பவர். யுத்தம் தொடங்கியதும் கஷ்டப்பட்டு சாப்பாடின்றி அலைந்து திரிந்து புதுமாத்தளனுக்கு வந்தோம். அங்கிருந்து ஏப்ரல் 20இல் முகாமிற்கு வந்து சேர்ந்தோம். முகாமில் கஷ்டம்தான். என்றாலும் நிம்மதி. எங்களை வெளியே விட்டதுபோன்று ஏனையவர்களையும் விட்டால் நல்லது'' என்றார்.
நேர்த்திசெய்யபோய் மாட்டினோம்திருக்கோவிலைச் சேர்ந்த தி.குமரன் தெரிவித்தவை வருமாறு: "வற்றாப்பளை, அம்மன் கோவிலுக்கு நேர்த்தி செய்வதற்கு 2006இல் முல்லைதீவு சென்றோம். பின்புவர "பாஸ்" தரமறுத்துவிட்டார்கள். மாட்டிக் கொண்டோம். இவ்வேளையில் யுத்தம் இடம்பெற்றது. இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து வல்லிபுரம், மாத்தளன், முள்ளிவாய்க்கால், வட்டுவாள் ஊடாக 5 மாதங்கள் அலைந்து இராணுவத்திடம் சரணடைந்து மெனிக் பாம் முகாமில் தங்கவைக்கப்பட்டோம். குளிப்பதற்கு 3 வாளி தண்ணீர் மாத்திரம்தான் கஷ்டம்தான். என்றாலும் நிம்மதி. நாம் இப்படி வருவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. வெறும் பருப்பை தண்ணீரில் அவித்துச் சாப்பிட்ட எமக்கு இங்கு காரைதீவுப் சாப்பாடு தேவாமிர்தமாக உள்ளது'' என்றார்.
வினாயகபுரத்தைச் சேர்ந்த அ.சத்தியராஜ் (வயது 17) கூறியவை வருமாறு: "2006இல் மாமாவைப் பார்க்க தேவிபுரத்திற்கு சென்றேன். அங்கு "பாஸ்" தராமையினால் மாட்டினேன். யுத்தம் ஆரம்பமானது. அங்கு ஷெல் வீழ்ந்ததில் எனது கால் போய்விட்டது. 2 மாதமாக உரிய மருந்தில்லாமல் அலைந்தேன். ஒருவாறு காய்ந்தவுடன் கம்பின் உதவியுடன் ஓடிஓடி வட்டுவாளூடாக வந்து இராணுவத்திடம் சரணடைந்தேன். வவுனியா இராமநாதபுரம் முகாமிலிருந்து இங்கு வந்துள்ளேன். எனது பெயர் இங்கில்லை என்கிறார்கள். அதுதான் கவலையாக இருக்குது'' என்றார்.
திருக்கோயிலைச் சார்ந்த கு.திருநாவுக்கரசு (வயது 63) குறிப்பிட்டவை வருமாறு: நான் குடும்பத்துடன் கிளிநொச்சிக்கு போனபோது யுத்தம் தொடங்க மாட்டிக் கொண்டேன். புதுமாத்தளன் பகுதியில் குழந்தைக்காக பால்மா வாங்கப் போனபோது ஷெல் வீழ்ந்ததில் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டது. பின்பு அத்தலைந்து திரிந்து இராணுவத்திடம் சரணடைந்தேன். எப்போ சாவு என்ற நிலையில் நடைப்பிணமாக அலைந்தோம். நாம்பட்ட கஷ்டங்களை எழுத்தால், சொல்லால் வடிக்க முடியாது. இன்று இங்கிருக்கிறோம்'' என்றார்.
அதன் பின் தமிழீழத்தின் தேசிய தலைவர் அவர்களால், இப்போராட்டம் ஆயுதபோராட்டமாகியது. சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை, கொடுமைகள், சித்திரவதைகளை கண்டு தலைவர் அவர்கள் பொறுக்கமுடியாமல் "கிளர்ந்தெழுந்தார். தமிழ் மக்களின் விடிவிற்காகவும், சுதந்திரத்திற்காகவும் இடையான தடை கற்களை உடைக்க ஆரம்பித்தார்.(இது தவறா).
மகாபாரதத்தில் கூறப்பட்டவற்றை ஆழமாக சிந்தியுங்கள். யோசியுங்கள். தர்மம், நீதிக்கு எதிராக இருப்பவர்கள், எவராயினும் அழிக்கப்படவேண்டியவர்கள். (அது கூட பிறந்தவர்களாயினும்) இந்த கூற்று தவறு என்றால், கடவுள் தவறானவர். தவறான கடவுளை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள். (நீங்கள் வணங்குவதால் கடவுள் தவறானவர் இல்லை). ஆகவே, இந்த தமிழீழத்திற்கான போர் தவறில்லை.
ஒரு கணம், சிந்தியுங்கள் வசதியான நல்ல குடும்பத்தில் பிறந்த தலைவருக்கு என்ன தலையெழுத்தா?
16 வயதிலிருந்து தலைமறைவாக இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க. கேட்டால் சொல்பார்கள், அவர் அங்கு சொகுசாகதான் வாழ்ந்தார் என்று. நான் ஒன்று கூறுகிறேன், உலகில் உள்ள மற்ற தலைவர்கள் போல் அவர் சொகுசாக வாழவில்லை. அவர் நல்லா இருந்தால்தான் நாங்கள் நல்லா இருக்க முடியும்.
அண்மை காலத்தில் இலங்கை இராணுவம் வெளியிட்ட வன்னியில் இருந்து எடுத்த புகைப்படங்கள் என்று.
நீங்கள் சிந்தியுங்கள், கஷ்டப்பட்ட குடும்பதில் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு பெரிய ஹொட்டலில் போய் சாப்பிட்டு, அல்லது சுற்றுலா தளங்களுக்கு ஒரு முறை சென்றிருந்தாலும், புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எடுத்து அதை பாதுகாப்பார்கள். இதற்காக இவர்கள் தினமுமா?, அல்லது சிலவேளைகளிலோ இப்படி சொகுசாக வாழ்பவர்கள் என்று கருதமுடியுமா?
உங்கள் சிறு வயது பிள்ளைகளுக்கு மிக வேண்டப்பட்டவர்கள், விலை உயர்ந்த சிறு விளையாட்டு பொருள் ஒன்றை அன்பளிப்பு அளித்தால், உங்களால் தடுக்க முடியுமா? இக் குழந்தை சிறு வயதில் எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் வாழும் இந்த குழந்தைக்கு இது ஒன்று கிடைத்தால் சொகுசா?.
பிறந்தநாளே கொண்டாடாத குழந்தை ஏதேனும் ஒரு முறை அமைதியான சந்தர்ப்பத்தில் சிலரின் விருப்பங்களுக்கு அமைய ஒரு முறை கொண்டாடினால் சொகுசா? இப்படியான குழந்தையின் வாழ்க்கையை சொகுசு வாழ்க்கை என்பவர்களை எப்படி கூறுவது?
சிந்தியுங்கள்!...
ஆரம்பகாலத்தில் தலைவர் அவர்கள், அப்போதைய யாழ்.மேயராக இருந்த அல்பிரைட்டை கொன்றாராம். இது மாபெரும் குற்றமாம், ஒரு இனத்தில் பிறந்து அதே இனத்தை காட்டிக் கொடுத்தும், உயிர் பலி எடுப்பதை அங்கீகரித்து, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன். ஒரு தகுதியான பொறுப்பில் இருக்க முடியுமா? இவ்வாறானவர்கள் வாழ தகுதியானவர்களா? இதை அல்பிரைட்டுக்கு வேண்டியவர்கள், தலைவரை தப்பாக பிரச்சாரம் செய்தார்கள்.(சுயநலத்திற்காக)
இதே, போல் ஒவ்வொரு தொடர்சம்பவங்களும். சிலர் தாமும் தமிழருக்காக போராடுகிறோம் என்பார்கள். போராடுபவர்கள் நல்ல விதமாக போராடினால் யாராக இருந்தாலும் வரவேற்போம். அதை விட்டு விட்டு இப் போராட்டத்தை அரசியலாக்குவது,வியாபாரம்,பதவி,பணம்,பெண் என்று கட்டு கோட்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வது, அவர்களிடம் பேசிப்பார்த்தார்கள் முடியவில்லை, போராட்டத்திற்கும் தடை கற்களாக இருந்தார்கள். என்ன செய்வது, நீங்களே கூறுங்கள். இப்படியானவர்களுக்கு துதிபாடுகிறவர்களும், இவர்களின் நட்பை வைத்திருந்த சில அரசியல்வாதிகளும், மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் இவர்கள் மரணத்தை தப்பு என்கிறார்கள்.
உண்மையில் நீங்கள் இதை விட்டு விட்டு இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எவ்வளவு வேதனைகள், இழப்புகள் என்பதை அந்த பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்து பாருங்கள். எல்லோராலும் எதிர்த்து போராட முடியாது. ஆனால் போராட முடிந்தவர்கள் போராடாமல் இருப்பதே மா பெரும் தவறு.
இப்படி நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும், மிகமோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மனநிலையில் இருந்து பாருங்கள். உண்மையான வலி புரியும். இவர்கள் என் உறவினர்கள் இல்லை என்று நினைப்பதை விட்டு விட்டு, (இப்போது உறவினர்களாக இருந்தாலே சில சமயங்களில் சில பேருக்கு வலிப்பதில்லை) தனக்கு தான் கஷ்டம் வந்தால்தான் புரியுதே தவற, அப்படியே தனக்கு வந்தாலும் சிலர் திரும்பவும் வரக்கூடாது என்பதற்காக ஒதுங்குகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு.
உங்களையே மீண்டும் இது தாக்கும் மற்றும், உங்கள் குழந்தைகள் என அடுத்த சந்ததியினரையும் தாக்கும். இப்படி எவ்வளவு காலத்திற்கு அடிமையாக இருப்பீர்கள். அடிமையாக இருப்பதை விட, உயிரை விடுவது மேல். உயிரை விட துணிந்தால் ஏன் வீணாக உயிரை விட வேண்டும். உயிரை விட துணிந்த நீங்கள் அதை பிரயோசனமாக அதுவும் நமது நாட்டிற்காகவும், எம் மக்களுக்காகவும் விட்டால் எவ்வளவு பெரும் நன்மை. அடுத்த சந்ததியினராவது நிம்மதியாக வாழ்பார்கள். அல்லது அவர்களும் உங்களை போல ஒவ்வொரு நாளும் பயத்திலும், நிம்மதியில்லாமலும் வாழவேண்டிவரும்.
மற்றும், நீலன்திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், அமிர்தலிங்கம் போன்ற அறிவு தலைவர்களை எல்லாம் புலிகள் கொன்றுவிட்டார்கள் என்கிறார்களே. அந்த அறிவாளிகள் தங்கள் அறிவை என்ன செய்தார்கள். எதிரிக்கு அடகு வைத்தார்கள். தன் இனத்திற்காக செய்திருந்தால் எவ்வளவோ நன்மை அதை விட்டு விட்டு இனத்திற்கு ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தார்கள். தமிழ் மக்களின் பாதுகாவலர்களான புலிகளையும் அழிக்க திட்டமிட்டார்கள், பிரச்சாரம் செய்தார்கள். தங்களின் சுயநல சுகபோக வாழ்க்கைக்காக. இப்படி எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள்.
சிந்தியுங்கள், சிங்கள தலைவர்கள் அவர்கள் இனத்திற்காக ஒற்றுமையுடன் குரல் கொடுப்பது போல இவர்களும் கொடுத்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இதற்கு எதிர் மாறாகவே இவர்கள் இருந்தார்கள் தவற, என்ன செய்தார்கள். லக்ஸ்மன் கதிர்காமர் சந்திரிக்காவிற்கு மிகவும் வேண்டியவராக இருந்ததும் வெளிநாட்டமைச்சராகவும் இருந்தார். நீலன் திருச்செல்வம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் செல்வாக்கோடு இருந்தார். இவ்வளவு காலமாக என்ன செய்தார்கள். கேட்டால் புலி தடையாக இருந்தது என்பார்கள்.
புலி நல்லதுக்கு தடையாக இருந்ததில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களால் புலிகளை மீறி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய உண்மையான மனம் இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை, சிங்கள இனவாதமும் விட்டுயிருக்காது அப்படியானால் ஏன் இவர்களுடன் கைகோர்ப்பான்.
மற்றும், ராஜீவ் காந்தி கொலை மாபெரும் தவறு என்கிறார்கள். ராஜீவ் அமைதி ஒப்பந்த காலத்தில் அவரின் அமைதி படை இலங்கையில் என்ன செய்தது.
பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை எடுத்தது, கொடும் சித்திரவதை, பாலியல் வல்லுறவு, சொத்துக்கள் சூறையாடல் அழிப்பு என எவ்வளவோ நாசம் பண்ணினது, ஒரு ராஜீவ் இறந்ததிற்கு இவ்வளவு துடிக்கிறார்ககளே.
அங்கு அவ்வளவுபேர் இறந்ததிற்கும், அக் கொடுமைகளுக்கும் என்ன பதில் சொல்வார்கள்.
இப்ப அதனால் எவ்வளவு பிரச்சினை என்கிறார்கள். இருந்திருந்தால், அப்பவே அழித்திருப்பார்கள், அப்ப அழித்திருந்தால் இப்படியான சம்பவம் உலகிற்கு தெரிந்திருக்காது. தமிழ் இனத்தின் அழிப்பும் அவ்வளவாக தெரிந்திருக்காது. ஆனால் இப்ப தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கிறது. முழு உலகத்தின் கவனத்திற்கும் வந்திருக்கிறது. மற்றும் முழு தமிழ் இனமும் கிளர்ந்து நிற்கிறது. இது எவ்வளவு பெரிய வெற்றி. ஆனால் எம் இனத்திற்கு இந்தியா மாபெரும் தவறு இழைத்து விட்டது. தனக்கு தானே மண் அள்ளிக் கொட்டி விட்டது. மற்றும் இந்தியாவின் இச்செயலை தமிழீழ மக்கள் மறக்க மாட்டார்கள்.
இந்தியாவில் மேலிடத்தில் இருக்கும் சில முக்கிய பகை உணர்வு தலைவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம். அதனால் ஒட்டு மொத்த இந்தியாவை இவ்வளவு அழிவிற்கும் பின் நாங்கள் எதிரியாக நினைக்கவில்லை. உண்மை நட்பு நாடாக இருக்கவே விரும்புகிறோம். அதுவே இந்தியாவினது பாதுகாப்பிற்கும் உகந்தது.
இப்ப இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் தூர நோக்கு பார்வை குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவும் இத் தவறை ஒரு நாள் உணர்வார்கள்.அப்போது இவ் அழிவுக்கு என்ன பதில் சொல்வார்களோ.
புலிகள் இராணுவ பலத்தை மட்டுமே நம்பினார்கள், அரசியல் போக்கை மறந்து விட்டார்கள், வெளிநாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்றார்கள். உண்மையில் புலிகள் அரசியல் சம்பந்த நடவடிக்கைகள் எடுத்தார்கள். வெளிநாடுகளுடன் தொடர்புகளை ஏற்ப்படுத்தினார்கள் ஆனால், வெளிநாடுகள் விலை பேசுவதாக அமைந்தது, சில விடயங்கள் இந்தியாவுக்கு பாதகமான விடயமாகவும் இருந்தது.
எங்கள் தலைவர் எதற்கும் விலை போகமாட்டார். நம்பினவர்களை ஏமாற்றவும் விரும்பமாட்டார். அப்படி பல காரணங்களால் சரிவரவில்லை. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தார்கள். உலக நாடுகள் தங்கள் சுயநலத்தை கருத்திற் கொண்டே அரசியல் நடத்தினார்கள். தமிழ் இனத்தின் உணர்வு, சுதந்திரம், கெளரவம் கண்ணுக்குத் தெரியவில்லை. என்பதே உண்மை.
ஒரு கணம் சிந்தியுங்கள், பல ஆயிரம் மாவீரர்களின் தமிழீழ கனவை அழிக்கலாமா? தலைவர் இதை எப்படி செய்வார்? மாவீரர்களை நீங்கள் சாதாரணமாக பார்க்காதீர்கள். ஒவ்வொரு மாவீரனும் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். இள வயதில் நாட்டுக்காக எந்த சுகபோக வாழ்க்கையும் அனுபவிக்காமல், நாட்டுக்காகவே சந்தோஷ்மாக வீரமரணமடைந்தார்களே, நீங்கள் சிந்தியுங்கள் உங்கள் எல்லோராலும் அப்படி முடியுமா?
அந்த தலைவன் வளர்த்த இந்த மாவீரர்களாளேதான் முழு உலகிற்கும் தமிழ் இன பெருமை தெரியவந்தது. இல்லையென்றால் ஆரம்பகாலம் போல் அடிமையாக, உணர்வற்று பயந்து வாழ்ந்தவர்களாகவே இருப்பீர்கள்.
அவர்களின் தியாகத்தினால் நீங்கள் இன்று கெளரவத்துடன் ஓரளவேனும் வாழ்கிறீர்கள். மாவீரர்களை உங்களில் ஒருவை போல் நினையுங்கள், அதன் புனித தன்மை தெரியும். அது புரிந்தால் "நீங்களும் உணர்வுள்ள, வீரமும், மானமும் கொண்ட சோர்ந்து போகாத வீர தமிழ் மகன் ஆவீர்கள்".
எமது போராட்டத்தில் தலைவர் அவர்கள் சில தவறுகள் செய்திருப்பதாக கூறுகிறார்கள். எங்களுக்கு பாதகமாக அமைந்தவற்றை கூறினார்கள்.
ஆனால் அம் முடிவுகள் அந்நேரத்தில் நிச்சயமாக சரியானதாகவே எடுக்கப்பட்டது. போராட்டத்தில் வெற்றி, தோல்வி வருவது சகஜம், அதற்காக தவறு என்று அர்த்தமில்லை.
தலைவர் அவர்கள் ஒரு முடிவை தீர்க்க தரிசனமாகவே எடுப்பார். எடுத்த பின் அதைப் பற்றி மனச்சஞ்சலங்கள் கொள்வதில்லை. ஒரு முடிவு எடுத்தால் எப்பவும் தெளிவுடனே இருப்பார். மற்றவர்கள் போல் அடிக்கடி குழப்பிக் கொண்டிருப்பதில்லை. இதில் இருந்து அவரின் மன உறிதியை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் போல் இருந்திருந்தால் தனி மனிதராக இவ்வளவு கால போராட்டத்தை வழி நடத்தியிருக்க முடியாது. இது உண்மை.
எமது போராட்டத்தில் தற்சமயம் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கிறது. அதை தோல்வி என்று மட்டும் பார்க்காமல், வேறு வழிகளிலும் சிந்தியுங்கள். கடைசியாக நடந்த வன்னிப்போரில் இலங்கை இராணுவத்திற்கும், புலிகளுக்கும் நடந்த போராக நிச்சயம் இல்லை.
இது புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர். எந்த உதவியின்றி தனியே நின்ற புலிகளும், 20 உலக நாடுகளின் துணையுடன் நின்ற இலங்கை அரசும்.
அதாவது உலக நாடுகளின் முப்படைகளுக்குரிய ஆயுதம், புலனாய்வுத் தகவல்கள், ராடர்கள், பயிற்சி, இராணுவம், இராணுவ வல்லுனர்கள், மருத்துவங்கள், இராணுவ உபகரணங்கள், பணபலம், பதவிபலம் என்று நிறைய ஒன்று சேர்ந்து வன்னிப்போர் முனையில் குவித்தார்கள்.
இது மட்டுமில்லாமல் விலை போனவர்களும், துரோகிகளாகியவர்களும் இப் போரில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு இருந்தும் உலக நாடுகளால் புலிகளுடன் எவ்வளவு காலம் போரிட்டார்கள் என்று யோசியுங்கள்.
அவ்வளவு காலம் போரிட்டதும் இல்லாமல், கடைசியிலும் முடியாமல் கோழைத்தனமாகவும், நயவஞ்சகத்துடனும் தடை செய்யப்பட்ட நச்சுக்குண்டுகள், எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், மயக்கக்குண்டுகள் என்பவற்றையும் வீசினார்கள். அவற்றை வீசியும் புலிகளும், மக்களும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தார்கள் என்று யோசியுங்கள்.
புலிகள் இன்னும் போராடி இருப்பார்கள். ஆனால் சிலர் கூறினார்கள் புலிகள் ஏன் பெரிதாக சண்டை பிடிக்கவில்லை எல்லாவற்றையும் இழந்தார்கள். வெளியில் இருந்து பார்பவர்களுக்கு புரியாது.
ஏனெனில் இலங்கை அரசு போர்பகுதியில் செய்தியாளர்களையும், தொண்டு நிறுவனங்களையும் அனுமதிக்கவில்லை,
உண்மையில் புலிகள் அங்கு முழு பலத்துடன் போரிட்டார்கள். சிந்தித்து பாருங்கள் ஒரு நாள் போருக்கு எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டு இருக்கும் இம் மாபெரும் போரில். ஆனால் புலிகள் பல மாதக்கணக்கில் நடந்த போரை தாக்குப்பிடிக்க எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று அவர்களின் ஆயுதக் கப்பல்கள் வரமுடியாமல் போனதால் ஆயுத சப்ளை குறைந்து விட்டது. அதனால் தலைவர் அவர்கள் நடக்கவிருந்த இன்னும் பல ஆயிரக்கணக்கான உயிர் இழப்புக்களை தடுப்பதற்காகவும் ஆயுதங்களை மெளனிக்கச் செய்தார்.
உண்மையில் புலிகள் பலத்தை உலக வல்லரசு மற்ற இதர நாடுகளின் இராணுவ வல்லுனர்கள் நன்கு கணித்திருப்பார்கள். என்பதே உண்மை. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்த "கிருஸ் ரையன்" போன்றவர்களும் புலிகளின் பலத்தை ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
புலிகளைப் போல் சிறிய நிலப்பரப்பில் குறைந்த வளங்களுடன் உலக நாடுகளுடன் இவ்வளவு காலம் போரிட்டு அப் படைகளுக்கு பாரிய இழப்புகள்(இலங்கை அரசு அறிவித்தது கடைசி போரில் 6500 இராணுவம் பலி, 25000 ற்கு மேற்பட்டோர் காயம் என்றார்கள். ஆனால் உண்மையில் எவ்வளவு இருக்கும் யோசியுங்கள்). ஏற்படுத்த உலகத்தில் எந்த இராணுவத்தாலும் நிச்சயமாக முடியாது. தடை செய்யப்பட்ட குண்டுகளின் மத்தியில் போய் நின்று பார்த்தால் தான் புரியும். அப் போரின் கணம்.
தற்போது தமிழ் மக்கள் தலைவர் அவர்கள் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று குழம்பியிருக்கிறார்கள்.
இதில் அதாவது தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களும், ஆயிரக்கணக்கான போராளிகளும் மரணித்தவேளையில் அவர்கள் மரணிக்கும் போது தான் மட்டும் தப்பிப்பது சரியில்லை என நினைத்தும்,
தான் இருப்பதால் தான் உலக நாடுகள் ஒரு தீர்வு தராமல் இருப்பதாகவும் கருதி போரிட்டு வீரமரணம் அடைந்திருந்தாலும்,
அல்லது தான் வீரமரணம் அடைந்தால் இவ்வளவு கால போராட்டம் வீணாகிவிடும் என்றும், உலக நாடுகளிற்கு தெரியாமல் இருப்பதற்காகவும்,
கடைசி நேரத்தில் தலைமறைவாக இருந்தாலும். இதில் எந்த முடிவையும் தலைவர் அவர்கள் எடுத்திருந்தாலும், நிச்சயமாக போற்றுதலுக்குரியவராவார்.(எப்பவும்)
அந்த மாமனிதனின் விலை பேசமுடியாத உறுதிபடைத்த இலட்சியத்தையுடைய அவரின் மனதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. அவர் எப்பவும் எந்த துயரத்திலும் மனம் தளராத உறுதிபடைத்தவர். எப்போதும் தெளிவாகவே இருப்பவர், அதனால் அவர் அந்த நேரத்தில் நிச்சயமாக உறுதியான ஒரு முடிவை எடுத்திருப்பார். ஆகவே நீங்கள் எல்லோரும் தலைவனின் இலட்சியத்தை அடைவதற்காக, ஒன்று பட்டு கருத்து வேறுபாடுகளை இப்போதாவது மறந்து ஒற்றுமையுடன் தமிழ் இனம் சுயகெளரவத்துடன், தலை நிமிர்ந்து, உரிமையுடன் நிம்மதியாக வாழ உலக நாடுகளின் மனதில் இடம்பிடிக்க கூடியவாறும், அதனால் "தமிழ் தனி அரசு" அமைய பாடுபட உறுதிமொழி எடுத்துகொள்வோமாக.
இவ் அமைதி வழிப்போராட்டம் எச்சந்தர்ப்பத்திலும் வன்முறைகளற்றதாக இருக்க மிக முக்கிய கண்காணிப்புடன் செயற்படுங்கள். தீயசக்திகளும் தூண்டிவிடக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள்.
இப் போராட்டத்தில் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற பதவிப்போட்டிகளை இச்சந்தர்ப்பத்திலாவது தமிழர்களாகிய நீங்கள் நீக்கிவிடுங்கள்.
தமிழ் இனம் தலைநிமிராமல் இப் பதவி, பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். நீங்கள் மட்டும் எத்தனை நாட்கள் வாழுவீர்கள். வாழவிடுவார்கள்,
சிந்தியுங்கள். தயவுசெய்து அளவுக்கதிகமான ஆசைகள், பொறாமைகள், போட்டிகளை தள்ளிவையுங்கள். நீங்கள் அவர் பக்கம், இவர் பக்கம் என்றில்லாமல் நியாயத்துடன், வழிதவறாதவர்களுடன் உங்களின் உண்மையான மனச்சாட்சிபடி நில்லுங்கள். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள்.
எதிரி எங்களை அழிக்க எவ்வளவு இரகசியமாக, திட்டங்களை உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் தீட்டினான். அவனை விட புத்திசாலிகள் நீங்கள். ஏன் உங்களால் முடியவில்லை. முக்கியமாக முகாம் மக்களின் நிலையை ஒரு கணம் சிந்தியுங்கள். ஏனோ தானோ என்று இல்லாமல், அவலங்களை உங்கள் அவலங்களாக எண்ணிப் பாருங்கள். இவர்களை வெளியே எடுப்பது புலம்பெயர் தமிழ் மக்களாகிய உங்கள் கையில் உள்ளது.
புலிகளால்தான், இவ்வளவு இழப்பு என்பவர்கள், இப்ப அவர்களுக்கு எந்த தடையும் தற்சமயம் இல்லை. இப்ப இவர்களது பேச்சு இலங்கை அரசிடம் எவ்வளவுக்கு எடுபடுகிறது என்பதை பார்ப்போம். தமிழ் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகு எப்படி தங்களால் உடனடியாக செய்யமுடியும் என்பார்கள். சரி இப்போராட்டத்திற்கு முன் இவர்கள் என்ன செய்து எதை பெற்றுக்கொடுத்தார்கள். ஆகவே எல்லாவற்றையும் உணர்ந்து செயற்படவேண்டிய காலம் இது.
எங்கள் போராட்டம் வெறும் ஆயுதபோராட்டத்தில் மட்டும் இருக்கவில்லை. புலிகள் ஆரம்பகாலங்களில் அகிம்சை வழியிலும், பேச்சுவார்த்தை வழிகளிலும் ஈடுபட்டார்கள். அவை திருப்திதரவில்லை, ஏமாற்றமாகவே இருந்தது.
உதாரணமாக திலீபன் அண்ணாவின் அகிம்சை போராட்டம். அவரின் தியாகம் காந்தியின் தேசத்திற்கே அகிம்சையை உணர்த்தியது. அப்படி நடந்தும் ஏதும் கிடைக்கவில்லை. அதன் பின் ஆயுத போராட்டம் உச்சம் பெற்றது. எம் போராட்டத்தை எதிரி தவறு என்றாலும், எம் இனத்தவர்களும் அல்லவா. இலங்கையில் எத்தனையோ சிங்களவர்களுக்கு இடையில் போட்டி கட்சி, குழுக்கள் உள்ளது. ஆனால் தமிழனுக்கு எதிராக என்றால் ஒன்று சேருகிறார்கள். இங்கு அப்படியா, எம் இனத்தவர்கள் சிலர், எதிரி பக்கம் செல்கிறார்கள். எவ்வளவு வேதனை. உயிருக்காக எப்பவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.
ஆகவே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் உலக அரங்கில் எம் உணர்வுகளை உரத்து ஒலிக்க செய்வதுடன், எம் சுயஉரிமையை பெற்றுக்கொள்வதுடன் "தமிழ் அரசை" நிறுவ உறுதி பூண்டு நிற்போமாக.
என் அன்பான இன்னொரு வேண்டுகோள், தமிழர்கள் எல்லோரும் (முக்கியமாக குழந்தைகளுக்கு) மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை குழந்தைப் பருவத்திலே நிச்சயமாக கற்று அறிந்து கொள்ளவையுங்கள். அவை ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் மிக முக்கியமானவை. அவற்றை மேலோட்டமாக பார்க்காமல் அதில் இருப்பவற்றை ஆழ்ந்து சிந்தியுங்கள். அத்துடன் எமது தாயக வரலாற்றை முக்கியமாக அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருங்கள். தெரியாத பலவிடயங்களை தெரிவியுங்கள்.
எனவே சோர்ந்து போகாமல் எமது அமைதி வழி "தமிழ் தனி அரசு" போராட்டத்தை பெரும் எழுச்சியுடன் தொடர்ந்து கொண்டிருப்போமாக. இப் போராட்டத்தின் முடிவை காலம் நிர்ணயிக்கும். அதுவரை உலக நாடுகளின் கைகளில் தான் தற்போது உள்ளது. அதனால் இவர்கள் உண்மையை உணர்ந்து நல்ல தீர்ப்பை தருவார்கள் என்று நம்புவோமாக. அப்படி நடக்காவிடின் அதன் விளைவுகளுக்கு உலக நாடுகளே பொறுப்பாவார்கள்.
♥ தூங்கும் புலியை....♥
-
தமிழ் mp3
*http://youthsmp3.blogspot.com/*
*வணக்கம் நண்பர்களே !எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...
கூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி.....!
-
[image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg]
கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள்
கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...
பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?
-
[image:
http://2.bp.blogspot.com/_VABrPZnj4j0/SwtvSziJvqI/AAAAAAAACDE/OO8_QsNvIbw/s1600/HappyBirthdayFlowers.jpg]
பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம...