![http://www.alaikal.com/news/wp-content/sarath12.jpg](http://www.alaikal.com/news/wp-content/sarath12.jpg)
ராஜபக்சே 2000 சிங்களப் படையினரை தன்னுடைய பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டபடி தான் வெளியில் நடமாடுகிறான்.
இந்த தொடை நடுங்கி பன்றி உலகத்துக்கு பேட்டி கொடுக்கிறான், இப்படி...
நாங்கள் புலிகளை முற்றிலும் அழித்து விட்டோம்!
என்று...
சரத் பொன் சேகா பேச்சிலிருத்து...
மாலை முரசு, 28.11.09.
![http://www.tamilnet.com/img/publish/2004/08/ltte_rpg_force_3_27874_435.jpg](http://www.tamilnet.com/img/publish/2004/08/ltte_rpg_force_3_27874_435.jpg)
சிங்கள மீனவர்கள் 68 பேர் தமிழக சிறையில் அடைப்பு
![Court news detail](http://img.dinamalar.com/data/images_news/tblkutramnews_87855166197.jpg)
சென்னை : இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 68 இலங்கை மீனவர்கள், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆந்திரா அருகே இந்திய கடல் பகுதியில், கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இலங்கை மீனவர்கள் சிலர், விசைப்படகுகளில் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, "விக்ரம்' ரோந்துக் கப்பல் அப்பகுதிக்கு விரைந்து சென்றது.
ஆந்திராவின் கிருஷ்ணாம்பட்டினம், ராமையா பட்டினம் அருகே 120 முதல் 150 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இலங்கை விசைப்படகுகளை, கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்தனர். அப்படகுகளிலிருந்த 68 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 6.6 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட 68 இலங்கை மீனவர்களும் பலத்த பாதுகாப்போடு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 68 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 68 பேரும், எழும்பூர் ஐந்தாவது பெருநகர மாஜிஸ்திரேட் விஜயகுமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரே நாளில் 68 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஆறு மாதத்தில், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக 359 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4579&ncat=TN&archive=1&showfrom=11/30/2009
சிங்களச் சிறையிலிருந்த 18 தமிழகமீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பினர்
![](http://img.dinamalar.com/data/images_news/tblSambavamnews_66924250126.jpg)
மண்டபம் : இலங்கை சிறையிலிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு 27 நாட்களுக்கு பின் நேற்று தமிழகம் வந்தனர்
மண்டபம் : இலங்கை சிறையிலிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு 27 நாட்களுக்கு பின் நேற்று தமிழகம் வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் வீரமணி(21) ரத்தினம்(21) சுகன்(21) பிரகாஷ்(23) சிவராஜ்(23) திவேல்(24) உட்பட 18 பேர் கடந்த 2ம் தேதி ஐந்து படகுகளில் கோடியக்கரையில் தமிழக எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக படகுகளை நோக்கி சுட்டு, துப்பாக்கிமுனையில் மீனவர்களை கடத்திச் சென்று இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கபட்ட பின் தமிழக மீனவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் உள்ள மீனவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா கேட்டுக் கொண்டதின் பேரில் மீனவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
நவ., 26ல் இலங்கையிலுள்ள மல்லாம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்களை, எவ்வித கட்டுபாடும் இன்றி கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவற்படையிடம் தமிழக மீனவர்கள் 18 பேரை ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவற்படையினர் 18 மீனவர்களையும் நேற்று காலை 8 மணிக்கு மண்டபம் அழைத்து வந்தனர். பின் அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர் ரவி (38) கூறுகையில், ""நவ., 2ல் நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் படகுகளை நோக்கி சுட்டு எங்கள் கைகளை மேலே உயர்த்தச் சொல்லி மூன்று மணி நேரம் சித்திரவதை செய்தனர். இந்திய தூதரகத்திலிருந்து தகவல் வந்தால், எங்களை விடுதலை செய்வதாக கோர்ட் தெரிவித்தது. ஆனால், இந்திய தூதரகத்திலிருந்து எங்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நாங்கள் காலதாமதமாக விடுதலை செய்யப்பட்டோம்,'' என்றார்.
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14396&ncat=TN&archive=1&showfrom=11/30/२००
இந்தியாவை நம்ப வைக்க பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை நாடகம் ஆடுகிறது; ஈழ தமிழ் எம்.பி. பேச்சு
"எமது தலைவர் பிரபாகரன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன் உடல் எதிரிகளின் கைகளில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தவர். இதற்காகவே தன் அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் உடலை முள்ளி வாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று சிங்கள அரசு கூறும் கதையை சிறுபிள்ளை கூட நம்பாது...."
![](http://www.maalaimalar.com/Articles/8d6ea072-e1f3-4698-b3c3-6a0bf3f959f8_300_225secvpf.gif)
கொழும்பு, நவ. 29-
விடுதலைப்புலி தலைவர் 1989-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை உரையாற்றிய மாவீரர் தின உரைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு பழ. நெடுமாறன் அணிந்துரை எழுதியுள்ளார். கவிஞர்கள் காசிஆனந்தன், பெருஞ்சித்திரனார் கவிதை எழுதி உள்ளனர்.இந்த புத்தக வெளியீட்டு விழா ஈழத்தில் நடந்தது. விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ்.ஜெயானந்தமூர்த்தி பேசியதாவது:-
பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடுவது இந்த காலக் கட்டத்தில் மிகவும் அவசியம். இந்த உரை களை படித்துப்பார்த்தால் பிரபாகரன் தன் கொள்கையில் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளார் என்பது தெளிவாகப் புரியும்.
ஈழம் நாட்டை உருவாக்க அவர் எத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுத்துள்ளார். சர்வதேச சக்திகளிடம் பேச்சு நடத்தி உள்ளார்.
ஆனால் சர்வதேச சமூகம் அவருக்கு துரோகம் செய்து விட்டன. இப்போதும் பல நாடுகள் அவருக்கு எதிராக செயல்படுகின்றன.
ஈழத் தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்த உண்மையை தற்போதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போதைய சூழ்நிலையில் என்னால் பல விஷயங்களை வெளியில் சொல்ல இயலாது. ஈழத்தமிழர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் வரும்போது அனைத்தும் வெளியில் வரும்.
எமது தலைவர் பிரபாகரன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன் உடல் எதிரிகளின் கைகளில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தவர். இதற்காகவே தன் அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் உடலை முள்ளி வாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று சிங்கள அரசு கூறும் கதையை சிறுபிள்ளை கூட நம்பாது.
இந்தியாவை நம்ப வைக்க இப்படி ஒரு நாடகத்தை இலங்கை அரசு நடத்தியது. எனவே நம் லட்சியத்தை அடையும் வரை அரசியல் ரீதியிலான போராட்டங்களை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.
இவ்வாறு ஜெயானந்த மூர்த்தி எம்.பி. பேசினார்.
http://www.maalaimalar.com/2009/11/29125047/CNI02502901109.html
இலங்கை தேர்தல்: பொன்சேகா அதிபரானால் விக்ரமசிங்கே பிரதமர்; கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
![](http://www.maalaimalar.com/Articles/b5da9fc9-334c-4bae-a44f-5e01f771e5ef_300_225secvpf.gif)
கொழும்பு, நவ. 28-
இலங்கையில் அடுத்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் சுதந்திர கட்சி சார்பில் அதிபர் மகிந்தரா ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலை மையில் ஐக்கிய தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டது. இதன் சார்பில் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.
இந்த நிலையிலும், இலங்கை அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்று அதிபரானால் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவார் என இலங்கை சுதந்திர மகாஜன கட்சி அறிவித்துள்ளது.
இந்த தகவலை அக்கட்சியின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
சரத் பொன்சேகா குறித்து மகிந்த ராஜபக்சே அரசு ஏராளமான வதந்திகளை கிளப்பி விடுகிறது. பொன் சேகா அதிபரானால் இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்படும் என்கின்றனர்.
உண்மையை கூற வேண்டுமானால் ராஜபக்சே அரசுதான் ராணுவ ஆட்சி போன்று நடக்கிறது. ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்ற 24 உயர் அதிகாரிகளை ராஜபக்சே முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார். அதிபராவதற்கு பொன்சேகாவிற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்றார்.
http://www.maalaimalar.com/2009/11/28114726/CNI02202801109.html
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழரை களம் இறக்க முயற்சி: ஈழத் தமிழ் தலைவர்கள் ஆலோசனை
![](http://www.maalaimalar.com/Articles/7b0004e8-68a8-4142-86a4-27915bbc0ecc_300_225secvpf.gif)
கொழும்பு, நவ. 28-
இலங்கையில் ஜனவரி மாதம் 26-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் சுதந்திர கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சேக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கும் இடையில் கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சே, பொன்சேகா இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் ஓட்டுக்களை பெற இருவரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் பிளாட் எனப்படும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மகிந்த ராஜபக்சேயை ஆதரிக்கப் போவதாக நேற்று அறிவித்தது. இதற்கு பதிலடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் முயற்சிகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை களம் இறக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர். அவர்கள் ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தமிழர் தரப்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் கருத்து எழுந்துள்ளது. இதையடுத்து தமிழர் வேட்பாளர் குறித்து ஈழத்தமிழ் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூத்த தலைவர்கள் இது தொடர்பாக வேறு சில தமிழ்த்தரப்புகளிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒத்துப்போனால் தமிழர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழர்கள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஓட்டுக்கள் சிதறும் அது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. இதற்கிடையே ராஜபக்சே, பொன்சேகா இருவருமே தாங்கள் எளிதான வெற்றியை பெறுவோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதால் கூடுதலாக 4 சதவீத ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாக பொன்சேகா கூறுகிறார். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஓபாமாவுக்கு பிரசார யுக்திகளை வடிவமைத்து கொடுத்தவர்களின் உதவியை ராஜபக்சே நாடி உள்ளார்.
ஆனால் ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் ஒருவித சோகம் நிலவிக்கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் தேர்தல் ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.
http://www.maalaimalar.com/2009/11/28151950/CNI02802801109.html
அரை மண்டையனின் அட்டகாசங்கள்...!
விரட்டி விரட்டி செருப்பால் அடிப்போம்: அர்ச்சகர் தேவநாதன் எங்கு சென்றாலும் விடமாட்டோம்; பெண்கள் ஆவேசம்
![](http://www.maalaimalar.com/Articles/129b9dab-11c9-4738-9b85-9b51d2f27f6e_300_225secvpf.gif)
காஞ்சீபுரம், டிச. 1-
அர்ச்சகர் தேவநாதன் நேற்று மாலையில் விசா ரணை முடிந்து காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோர்ட்டு வளாகத்தில் அர்ச்சகர் தேவநாதன் வந்த போலீஸ் ஜீப்பை வழிமறித்து செருப்பு மற்றும் துடைப்பம் ஆகியவற்றால் தாக்கினர். சாணியை வாரி ஜீப் மீது வீசினர்.
தகவலறிந்த டி.எஸ்.பி. சமுத்திரகனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவேசமாக இருந்த பெண்களை கைது செய்து ஜீப்பில் ஏற்றிசென்றனர். பின்னர் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தினர்.
நீதிபதி சுதா அர்ச்சகர் தேவநாதனை மீண்டும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அர்ச்சகர் தேவநாதனை செருப்பாலும், துடைப்பத்தாலும் தாக்கிய மக்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் கூறியதாவது:-
கோவிலின் புனித இடமான கருவறையில் பெண்களுடன் காமவெறியாட்டம் நடத்திய காமகொடூரன் அர்ச்சகர் தேவநாதனை ஜாமீனில் விடுவிக்ககூடாது. மேலும் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வரவேண்டும். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளியில கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத உணர்வுகளை சீர்கெடுத்த காமகொடூரன் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
தேவநாதனை எந்த காலத்திலும் எந்த கோவிலிலும் அனுமதிக்கவே கூடாது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அர்ச்சகர் தேவநாதனுக்கு உரிய தண்டனை வழங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் . காமகொடூரன் தேவநாதனை எங்கு பார்த்தாலும் அவரை விரட்டி, விரட்டி செருப்பால் அடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிராக கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய 47 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 447 ஐ.பி.சி. (அத்து மீறி நுழைதல்), 143 சட்ட விரோதமாக கூடுதல், 341 வழிமறித்து தாக்குதல், 294 ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
http://www.maalaimalar.com/2009/12/01164115/vlr05012009.html
செல்போனில் எடுக்கப்பட்ட ஆபாச படங்களை காட்டி அர்ச்சகர் கற்பழித்தார்; ஏமாந்த பெண்கள் குமுறல்
![](http://www.maalaimalar.com/Articles/f7faf84b-b6c2-4780-9f50-368b8725afc2_300_225secvpf.gif)
காஞ்சீபுரம், டிச. 1-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதனை பிடிக்க வலைவிரித்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
2 முறை காவலில் எடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தேவநாதனை மச்சேஸ்வரர் கோவிலுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கருவறையில் பெண்களுடன் எவ்வாறு செக்சில் ஈடுபட்டேன் என்பதை தேவநாதன் நடித்து காட்டினார். அதன் பின்னர் கருவறையில் இருந்து ஒரு முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் தேவநாதன் தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது என விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த கடையை தேவநாதன் அடையாளம் காட்டினார்.
தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் (கம்ப்யூட்டர்) மூலம் டவுன்லோடு செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தேவநாதனுடன் கோவில் கருவறையில் செக்சில் ஈடுபட்ட ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
நான் தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். மிகவும் பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார்.
ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார்.
நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது. என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை. என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து தேவநாதன் மீது போலீசார் புதிதாக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் விபசாரம் நடப்பதாகவும் அதில் அர்ச்சகருக்கு தொடர்பு உடையதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது போல மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
http://www.maalaimalar.com/2009/12/01113356/CNI0120101209.html
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அர்ச்சகர் செக்ஸ் சி.டி.க்கள் விற்பனை
ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 29-
காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபடட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான செக்ஸ் லீலையில் ஈடுபட்ட படம் ரகசிய காமிராவில் படமாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆபாச படம் செல்போனில் தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது. மேலும் செல்போனில் டவுன் லோடு செய்து ஏராளமான சி.டி.க்கள் தயாரிக்க்பபட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அர்ச்சகரின் செக்ஸ் சி.டி.க்கள் அமோக மாக விற்பனை ஆகிறது. அதாவது ஆண்டாள் கோவில் வீதி, பெரிய பெருமாள் மேலமாட வீதி பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் அர்ச்ச கரின் செக்ஸ் சி.டி.க்கள் விற்பனை ஆகின்றன.
எனவே இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
http://www.maalaimalar.com/2009/11/29161601/MDU06291109.html
செக்ஸ் லீலைக்காக அர்ச்சகர், உண்டியல் பணத்தை திருடினார்; பரபரப்புதகவல்கள்
![](http://www.maalaimalar.com/Articles/414bddb7-c734-4eea-b72b-ec1305811ed4_300_225secvpf.gif)
ஸ்ரீபெரும்புதூர், நவ. 29-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் காஞ்சீபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் யார்-யார் என்பது தெரிய வந்துள்ளது.
அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெரிய இடத்துப் பெண்கள் (தொழில் அதிபர்களின் மனைவிகள்) 3 பேரும் அர்ச்சகரின் வலையில் விழுந்துள்ளனர். 2 பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையும் தேவநாதன் நாசப்படுத்தியுள்ளார். விப சார அழகிகள் 3 பேரும் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்கள் அனைவரிட மும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.
அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார்.
இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.
இவர்களது பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நேற்று இரவு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமயில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.
இனி வரும் நாட்களில் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் அப்போது அர்ச்சகர் தேவநாதன் பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.maalaimalar.com/2009/11/29111932/CNI01602901109.html
போலீஸ் விசாரணை தீவிரம்: செக்ஸ் அர்ச்சகரின் ரூ. 80 லட்சம் முடக்கம்; மேலும் 5 பெண்களின் ஆபாச படம் சிக்கியது
![](http://www.maalaimalar.com/Articles/c1e2aa9f-4d52-415b-a56e-0f2c6bdddf2b_300_225secvpf.gif)
ஸ்ரீபெரும்புதூர், நவ. 28-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த அர்ச்சகர் தேவ நாதன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை முதலில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அவரிடம் இருந்து மேலும் முழுமையான விவரங்களை பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த போலீசார் கோர்ட்டு உத்தரவுபடி 3 நாள் காவலில் எடுத்தனர்.
நேற்று இரவோடு இரவாக செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை வேலூர் ஜெயிலில் இருந்து காஞ்சீபுரம் அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் தலைமையிலான சிவகாஞ்சி போலீசார் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இதில் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தினந்தோறும் தீபாராதனை தட்டுகளில் விழும் காசை நம்பி குடித்தனம் நடத்தி வந்த குருக்கள் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று கண்டு பிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்? எவ்வளவு நாட்களுக்கு முன்பு அந்த படம் எடுக்கப்பட்டது என்பன போன்ற கோணங்களில் தேவநாதனிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.
அப்போது அவர் ஒவ்வொருத்தரும் தங்கள் செல்போனில் அவா, அவாவுக்கு பிடித்தவாளை படம் எடுத்து வைத்திருப்பார்கள். அது நடிகையாக கூட இருக்கும். அதே போலதான் எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். இதெல்லாம் குற்றமென்னு சொன்னால் எப்படி? அவாளை யாருன்னு காட்டி கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.
அவரிடம் உரிய முறையில் விசாரித்து உண்மையை வெளிகொண்டு வரும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
http://www.maalaimalar.com/2009/11/28142521/CNI03102801109.html
![http://www.siliconeer.com/past_issues/2006/june2006_files/Page-Guft-Priyanka-Bluffmas.jpg](http://www.siliconeer.com/past_issues/2006/june2006_files/Page-Guft-Priyanka-Bluffmas.jpg)
எவ்வளவு பெரிய மனகஷ்டத்திலும், துக்கத்திலும் கூட சிரித்தபடி நடிக்க வேண்டும். நடிகையாக நாங்கள் கொடுக்கும் மிகப் பெரிய விலை, இது!
-பிரியங்கா சோப்ரா.
![http://www.webfinanceguru.com/wp-content/uploads/2009/07/cc4.jpg](http://www.webfinanceguru.com/wp-content/uploads/2009/07/cc4.jpg)
தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புக் கழகம்
தனிநபர் கடன்(personal loan) மற்றும் கிரெடிட் கார்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு இலவச சட்ட ஆலோசனை முகாம்
14/ 15, கிருஷ்ண தெரு,
நுங்கம்பாக்கம்,
சென்னை-34
கைப்பேசி:
92823 41090
92821 16111
நேரம் காலை: 10 மணி முதல் 1.00 மணி வரை வாரந்தோறும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்...
![http://enterpriseblog.net/wp-content/uploads/2009/07/nokia-mobile-phone.jpg](http://enterpriseblog.net/wp-content/uploads/2009/07/nokia-mobile-phone.jpg)
உலக அளவில் பயன்படுத்தப்படுகிற மொபைல் போன்களில் பத்தில் ஒன்று இந்தியாவில் தயாரானதாக இருக்கிறது.
![http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_15133303404.jpg](http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_15133303404.jpg)
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மார்க் பாயல்,30 வயதான இவர் பொருளாதார பட்டதாரி ஆவார்.
இவர் கடந்த ஒரு ஆண்டுகாலமாக ஒரு காசு கூட செலவழிக்காமல் வாழ்ந்து இருக்கிறார்.பாத் நகரில் உள்ள டிம்ஸ்பரி நகரில் உள்ள ஒரு கேரவனில் வசித்து வருகிறார்.மக்கள் தேவை இல்லை என்று கொட்டிய உணவு பொருள்களை சாப்பிட்டும்,செல்ல வேண்டிய இடங்களுக்கு சைக்கிளில் சென்றும், தனக்கு வரக்கூடிய டெலிபோன்களை மட்டும் பேசியும், மக்கள் தூக்கி எறிந்த உடைகளை பயன்படுத்தியும், அவர் பணமே
செலவழிக்காமல் கடந்த ஓர் ஆண்டு காலமாக வாழ்ந்தார்.இந்த வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது என்கிறார்.அவர் தொடர்ந்து பணம் இல்லாமல் வாழப் போவதாகவும் தெரிவித்தார்.
பணத்தை அடிப்படையாக கொண்ட உலகத்துக்கு நான் திரும்ப மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த வாழ்க்கையில் வங்கிக் கணக்கு இல்லை.பில் இல்லை.டிராபிக் ஜாம் இல்லை.இதெல்லாம் சந்தோஷந்தான்...
ஆனால்...
ஆனால்...
கஷ்டமானது காசு இல்லாததால் நண்பர்கள் இல்லாதது தான் என்கிறார்.
தினத்தந்தி, 1.12.09.
![http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-18/money-to-burn.jpg](http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-18/money-to-burn.jpg)
![Photobucket](http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/Animation4.gif)
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
![](http://farm4.static.flickr.com/3392/3607123925_9e369ebd8b_o.gif)
![smail](http://i965.photobucket.com/albums/ae138/aadippaavai/download.gif)
![Update me when site is updated](http://w3.followsite.com/img/button1.gif)