தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, July 26, 2009

கர்நாடகாவில் திருவள்ளுவருக்கு சிலையா? - தமிழ்நாட்டில் சர்வக்ஞரும் சிலை வை! யார் அந்த சர்வக்ஞர்?


" கர்நாடகாவில் திருவள்ளுவருக்கு சிலையா? - தமிழ்நாட்டில் சர்வக்ஞரும் சிலை வை!

யார் அந்த சர்வக்ஞர்?
"


http://www.tamilvu.org/courses/hg200/hg202/images/hg202va1.gif   http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/07/tiruvalluvar-statue.jpg


திருவள்ளுவரும்-சர்வக்ஞரும்


இத்தாலிக்கு தாந்தே, ஜப்பானுக்கு ஹைக்கூ, ஆங்கிலத்துக்கு எஸ்ரா பவுண்ட், சமஸ்கிருதத்துக்கு பர்த்ரூ ஹரி, இந்திக்கு கபீர்தாஸ், மராத்திக்கு ராமதாஸ் என்பதுபோல பண்டைய செய்யுள் வடிவில் மக்களுக்குப் பொதுவான அறநெறிக் கருத்துகளைத் தமிழுக்குத் தந்து வான்புகழ் கொண்டவர் வள்ளுவர் என்றால் கன்னட மொழியில் இந்நிலையில் வைத்துப் போற்றப்படுபவர் சர்வக்ஞர்.

கர்நாடக மாநிலம் ஹிரே கெடூரு மாவட்டத்தில் உள்ள மடகமாசுரு கிராமத்தில் பிறந்தவர் சர்வக்ஞர் என்பது பொதுவான நம்பிக்கை. இது பற்றி உறுதியான கருத்து இன்னும் உருவாகவில்லை. இவரது பிறப்பிடம் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருப்பதால் வரலாற்றறிஞர்களும் மொழியறிஞர்களும் விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு மாசுருவில் சர்வக்ஞர் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி கேட்டுக் கொண்டார். திருவள்ளுவரின் பிறப்பிடம் பற்றியும் விவாதங்கள் நீடிப்பதை அறிவோம்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலம் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அறிஞர்கள் பலரும் கூடி விவாதித்து கி.மு. 31 என இறுதி செய்து தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது. இந்த அடிப்படையிலேயே திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது.

சர்வக்ஞரின் காலம் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி என்று கர்நாடக ஆய்வாளர்கள் எல். பசவராஜு, பேராயர் உத்தங்கி சென்னப்பா, வெளி நாட்டு ஆய்வாளர் இ.பி. ரைஸ் ஆகியோர் கூறுகின்றனர்.

திருவள்ளுவரின் பெற்றோர் யார் என்ற விவரம் இல்லை. ஆனால் இவரது மனைவி வாசுகி என்ற கதை உள்ளது. சர்வக்ஞரின் தந்தை பெயர் சபசவராஜா. இவர் சைவபிராமணர் என்றும் காசிக்குச் சென்று திரும்பும் போது குயவர் சமூகத்தைச் சேர்ந்த மாலி என்ற விதவைப் பெண்ணுடன் உறவு ஏற்பட்டு இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சர்வக்ஞர் என்றும் கூறுவர். இவரது இயற்பெயர் புஷ்பதத்தா என்று கூறப்படுகிறது. செய்யுள்கள் எழுதும் காலத்தில் சர்வக்ஞர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அனைத்தும் அறிந்த அறிஞர் என்பது இதற்குப் பொருளாகும்.

சிறுவயதிலிருந்தே கவிபாடும் திறனை இவர் பெற்றிருந்ததாகவும் உண்மை ஒன்றையே எழுதுவது என்பதில் இவர் தீர்மானமாக இருந்தார் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எந்த இடத்திலும் தங்கியிராமல் வாழ்நாள் முழுவதும் ஊர் ஊராச் சுற்றித் திரிந்து மக்களோடு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இடுப்பில் ஒரு துணியும், தோளில் ஒரு துணியும் நெற்றியில் திருநீறு பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் கையில் நீண்ட கம்பும், மறுகையில் உணவுப் பாத்திரமும், கால்களில் பாத அணிகளும் என்பதுதான் இவரது உருவத் தோற்றம்.

எந்தச் சமயத்தையும் சாராதவர் என்பதாகத் திருவள்ளுவரின் கருத்துகள் இருந்தாலும், எல்லா சமயத்தினரும் தங்களுக்குரியவர் திருவள்ளுவர் என்று கூறினாலும் இவரது நெற்றியிலும் திருநீறு பூசப்பட்டு விட்டதை நாம் அறிவோம். திருவள்ளுவர் 1330 அருங்குறட்பாக்களை எழுதினார் என்று அறுதி யிடப்பட்டுள்ளது.

சர்வக்ஞர் எழுதிய பாக்களின் எண்ணிக்கை 77,00,77,070 என்று நம்பப்படுகிறது. இவற்றுள் சில ஆயிரம் பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 தொகுதிகள் பதிக்கப்பட்டுள்ளன. வடக்கு கர்நாடகத்தில் மக்கள் வாய்மொழியாக சர்வக்ஞரின் பாக்களைப் பாடுவதாகக் கூறப்படுவதால் மேலும் பல பாடல்களை தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறதாம்.

ஏழு சீர்களைக் கொண்ட ஒன்றே முக்கால் அடி குறள் வெண்பாக்களால் பலரும் வியக்கும் வண்ணமும் ஏற்கும் வண்ணமும் திருக்குறளை யாத்தார் திருவள்ளுவர். சர்வக்ஞரின் செய்யுள்களும் நீண்டு நெடிதானவை அல்ல. ஒவ்-வொன்றும் மூன்று அடிகளை மட்டுமே கொண்டதாகும். இதனால் இவரது பாக்கள் த்ரிபடி என்று கூறப்படுகிறது. முதல் வரியில் 20 மாத்திரைகளும் (எழுத்துக்களின் ஒலிஅளவு), 2 ஆவது வரியில் 18 மாத்திரைகளும், 3 ஆவது வரியில் 13 மாத்திரைகளும் கொண்டிருக்கும். ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் சர்வக்ஞர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக,

ஹசிவிலா துணாபேடா ஹசிது மாத்ரபேடா

பிசிபேடா தாங்குவால் வுபேடா வித்யனா

காசனியேபேடா சர்வக்ஞா

என்ற வடிவில் இருக்கும் இந்தப் பாடலின் பொருள்.

பசியில்லாக்கால் உண்ணாதே; பசியை ஒதுக்கியும் விடாதே

அதிக சூடு, அதிக குளிர்ச்சி, நாட்பட்ட உணவை உண்ணாதே

மருத்துவரின் தயவிலேயே வாழாதே சர்வக்ஞா


என்பதாகும்.

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபா டில்லை உயிர்க்கு


என மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதோடு சர்வக்ஞரின் கருத்து ஒத்திருப்பதைக் காணலாம்.

சர்வக்ஞரின் பாவடிவம் இத்தாலிக் கவிஞர் தாந்தேயின் டெர்சாரீமா என்ற பாடல் வடிவோடு ஒத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

சர்வக்ஞரின் பாடல்களில் திருவள்ளுவரின் திருக்குறள் போலவே தனிநபர் முதல் சமூகம் வரையிலும், வேளாண்மை முதல் வானியல் வரையிலும், தெய்விகம் முதல் சமூகவியல் வரையிலும், மெய்யியல் முதல் அறிவியல் வரையிலும் அனைத்தும் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்


என்று வள்ளுவர் கூறுவது போலவே சர்வக்ஞரும் பிறப்பால் அனைவரும் சமம் என்கிறார். எல்லா மனிதர்களும் 7 தாதுக்கள் 5 பூதங்களின் கூட்டுறவால் பிறக்கிறார்கள். ஒரே பூமியை ஒரே நீரை, ஒரே நெருப்பை எல்லோருமே பயன்படுத்துகிறோம். பிறகு ஏன் ஜாதி வேறுபாடு என்பது இவரது கேள்வி. பிறப்பு ஜாதியைத் தீர்மானிக்கக்கூடாது. அவரவர் ஒழுக்க நெறிகளே மனிதர்களின் ஏற்றத்தாழ்வை முடிவு செய்யவேண்டும் என்கிறார் இவர்.

திருவள்ளுவரைவிட காலத்தால் பிந்தியவர் என்பதால் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் சர்வக்ஞர் பாப்புனைந்துள்ளார். செத்த மாட்டைத் தின்னும் ஹொலேயா (தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவின)வை விட உயிருள்ளவற்றைக் கொன்று தின்னும் மற்றவர்கள் மோசமானவர்கள் என்று எழுதுகிறார்.

உழவு என்ற அதிகாரத்தில் வேளாண்மையின் இன்றியமையாமையை மட்டுமன்றி, அத்தொழிலின் பல நுட்பங்களையும் வள்ளுவர் பதிவு செய்திருப்பார். அதேபோல சர்வக்-ஞரும் வேளாண்மையை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

கோடிகோடி துறைகளில் ஞானம் பெற்றிருந்தாலும், வேளாண்துறை ஞானமே ஆகச் சிறந்ததாகும். அந்த ஞானம் இல்லாமல் போனால் நாடு நலிந்து போகும் என்பது சர்வக்ஞரின் கருத்து.

உடல் நலத்திற்கு உணவே சிறந்த மருந்து என்பதை வள்ளுவர் அழுத்தமாக கூறுவார். இதே போன்ற கருத்துப் பதிவுகள் சர்வக்ஞரின் பாக்களில் நிரம்ப உள்ளன.

பெண்கள் மூலமே இக வாழ்வு சாத்தியம்

பெண்கள் மூலமே பரவாழ்வு சாத்தியம்

பெண்கள் மூலமே அமைதியும் செல்வமும் சாத்தியம்

பெண்களை வேண்டாமென்பார் எவரேனும் உண்டா?

என்பதுபோலப் பல பாடல்களை இயற்றியுள்ள சர்வக்ஞர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அதே சமயம் இவரது காலத்தில் மதக் கருத்துகளும், மூடநம்பிக்கைகளும் பலவிதமான பிற்போக்கு சிந்தனைகளும் பரவலாக சமூகத்தில் பற்றிப் படர்ந்து இருந்தன என்பதால் பெண்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு ஹஸ்தினி (யானை போல் பருத்தவள்), சித்தினி (பூனைக் கண் உடையவள்), சங்கினி (சங்குக் கழுத்துக்காரி), பத்மினி (தாமரை போன்ற அழகுடையவள்) என வகைப்படுத்தும் போக்கும் உள்ளது.

குரு (ஜூபிடர் கோள்) ரிஷப வீட்டுக்குள் சென்றால், நல்ல மழை பொழியும். குரு விருச்சிக வீட்டுக்குச் சென்றால் கடும் பஞ்சம் ஏற்படும், யுத்தம் வரும் என வானியலை சோதிடத்தோடு இணைக்கிற போக்கும் சர்வக்ஞரிடம் உள்ளது.

எல்லா சமயங்களும் வள்ளுவரைத் தங்களுக்கு உரியவர் என்று சொந்தம் கொண்டாடும் வகையில் திருக்குறள் கருத்துகள் அமைந்துள்ளன. ஆனால் சர்வக்ஞர் தாம் சைவ சமயத்தவர் என்பதையும், அதிலும் குறிப்பாக வீரசைவ மரபைச் சேர்ந்தவர் என்பதையும் தெளிவாகப் பாக்களில் பதிவு செய்துள்ளார்.

கி.மு. 31 க்கும் கி.பி. 1600 க்கும் இடைப்பட்ட சுமார் 1700 ஆண்டு கால இடைவெளியில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் கூடுதலான தாக்கங்களும் சர்வக்ஞரிடம் பிரதிபலித்தாலும் கர்நாடக மக்களால் பல துறை அறிஞராகவும் கன்னடமொழியில் கருவூலக் களஞ்சியம்போல் ஏராளமாக கருத்துகளை வழங்கியவராகவும்போற்றி மதிக்கப்படுபவர் சர்வக்ஞர்.

--------------நன்றி: "தீக்கதிர்", 20.7.2009


http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2129.htmlhttp://www.viparam.com/thumbnail.php?file=ngl01_183471053_527981594.jpg&size=article_medium   http://www.tamilbooks.info/tamil%5C123%5Cviruba%5CImages%5CBooks%5CFpage%5CVB0001445.jpg

♥ செய் அல்லது செத்து மடி..! ♥
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா, சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது நமக்கான பணியாகவும் நம் கண் முன்னே நிற்கிறது. எனவே நமது சமூகப்பணியின் தொடர்ச்சியாக நாம் இப்பணியினை ஏற்று ஒரிரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாமே என்ற எண்ணம் தோன்றியது. நம் ஆர்குட் தமிழ்க் குழுமமான தமிழக அரசியல் குழுமம்( TNP) நண்பர்கள் சிலருடன் விவாதித்தபோது இதை மிகவும் வரவேற்றனர். இது தொடர்பாக த.நா.அரசியல் குழும நிறுவனர் நண்பர் கோபாலனைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவருக்கும் இத்தகைய எண்ணம் இருப்பதாகக் கூறினர். மேலும், இதன் ஆரம்பமாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியைத் தேர்வு செய்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். அவ்வாறு நாம் உதவும் பட்சத்தில் ஒரு மாணவருக்கு வருடாந்திர கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மற்றும் செலவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்வரைத் தொடர்ந்து உதவவெண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் நாம் தத்தெடுத்தவுடனேயே அவர்கள் "நமது பிள்ளைகள்" என்றாகிவிடுகின்றனர். எனவே, அவர்களுக்கு முழு உதவியும் செய்ய வேண்டும்.

ஈழத்திற்காக களப்பணியில் நம் தோழர்கள் சிலர் ஈடுபட்டிருக்கையில் கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ) இருப்பது தெரியவந்தது ., (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் , படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ..,) அவர்களுக்கு எவ்வகையிலாவது உதவலாம் என்று பல தொண்டு நிறுவங்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது .,

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...


நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....
குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அதை ஒரு அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி அதன் மூலம் இது போன்ற உதவிகளைச் செய்யலாம் என்று எண்ணுகிறோம். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின்( http://www.orkut.co.in/Main#Profile.aspx?uid=898104197585368552 ) வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:
C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy


மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே
D. Dhayalan
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087


தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

குறிப்பு:

கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமில் இது போன்ற பலர் தங்கள் மேற்கல்விக் கனவுகளோடு, மண் சுமந்து கொண்டும், கலவை கலந்து கொண்டுமிருக்கிறார்கள். தங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இது தான். தங்களால் ஒரு மாணவனுக்கோ, அல்லது மாணவிக்கோ அவர்களது மேற்கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் வசதியும், பெரிய மனதும் இருந்தால் தாங்கள் கும்மிடிப்பூண்டி ஏதிலி முகாமைத் தொடர்பு கொள்ளலாம்.
என்னைத் தாங்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அதன் முகவரியும், தொலைபேசி எண்ணும் வாங்கித் தருகிறேன்.

"அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்
"

என்பார்கள். அதனைச் செயல் படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
உதவி உயருவோம்..!!!!!

எதிர்பார்ப்பு கலந்த நன்றியுடன்

தமிழக அரசியல் குழுமம்
♥ "வணங்கா மண்ணும்"," அடங்காத் தமிழனும் . ..! " ♥

இலங்கையில் முடங்கிய 'வணங்கா மண்' நிவாரணப் பொருள்கள்!இலண்டனில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் நாதியற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை விநியோகம் செய்வதில் இந்திய, இலங்கை செஞ்சிலுவைச் சங்கங்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலண்டனில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் நாதியற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை விநியோகம் செய்வதில் இந்திய, இலங்கை செஞ்சிலுவைச் சங்கங்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 884 தொன் நிவாரணப் பொருள்களை இலண்டனைச் சேர்ந்த "மெர்சி மிஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அனுப்பியது. நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த 'வணங்கா மண்' என பெயரிடப்பட்ட 'கேப்டன் அலி' என்ற கப்பலை இலங்கை அனுமதிக்க மறுத்து ஜூன்7-ல் திருப்பி அனுப்பியதை அடுத்து இக்கப்பல் ஜூன்-14-ல் சென்னை வந்தது.

வேறு கப்பலில் நிவாரணப் பொருள்கள்: பின்னர் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகு நிவாரணப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்க இலங்கை ஒப்புக் கொண்டது. இதனையடுத்து நிவாரணப் பொருள்கள் 27 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு 'கேப் கொலராடோ' என்ற கப்பல் மூலம் கடந்த ஜூலை 6 அன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் 'கேப் கொலராடோ' கப்பலை இலங்கைக் கடல் எல்லையில் இலங்கை ராணுவம் தடுத்து நிறுத்தியது. பின்னர் பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தலை அடுத்து நிவாரணப் பொருள்களை அனுமதிக்க இலங்கை சம்மதித்தது.

32 இலட்சம் கோரி கடிதம்: இதனைத் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் கொழும்புத் துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டன. வவுனியா வரை இவற்றைக் கொண்டு சென்று விநியோகம் செய்ய ஆகும் செலவுத் தொகை ரூ.32 லட்சத்தை அளித்தால் மட்டுமே பொருள்களை விநியோகிக்க முடியும் என இலங்கை செஞ்சிலுவை சங்கம் கடிதம் அனுப்பியது. இது குறித்த செய்தியை இலங்கை செஞ்சிலுவை சங்கம் மறுத்து வந்த நிலையில் நிவாரணப் பொருள்கள் அனைத்தும் கொழும்பு துறைமுகத்திலேயே கேட்பாரற்ற நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செஞ்சிலுவைச் சங்கங்களிடையே மோதல்: நிவாரணப் பொருள்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலர் நாயகம் சுரேன் பீரிஸ் கூறுகையில், ""நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை இந்திய செஞ்சிலுவைச் சங்கம்தான் எடுக்க வேண்டும். இது குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடமும் தெரிவித்துவிட்டோம்'' எனக் கூறியுள்ளார்.

ஆனால் இலண்டனிலிருந்து வந்த நிவாரண பொருள்களை வழி மாற்றி இலங்கைக்கு அனுப்பியதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. தேவை எனில் "மெர்சி மிஷனை'த்தான் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்புகொள்ள வேண்டும் என்று இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் விளக்கம் கூறுகிறது.

இது குறித்து 'மனிதம்' அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் கூறியது: மெர்சி மிஷனின் தொடர்பு அலுவலராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இரு அரசுகளின் ஒப்புதலின்பேரில்தான் சென்னையிலிருந்து மாற்றுக் கப்பலில் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தோம்.

அப்போது இந்திய, இலங்கை செஞ்சிலுவைச் சங்கங்கள் சார்பில் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். ஆனால் பொருள்கள் இலங்கை சென்றவுடன் நிவாரணப் பொருள்களை விநியோகிக்க ஆகும் செலவுத் தொகையான ரூ.32 லட்சத்தைத் தருமாறு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கடிதம் அனுப்பினர். அவர்கள் எங்களிடம் அத்தொகையைக் கேட்டார்கள்.

ஆனால் எங்களால் மேலும் தொகை ஏதும் அளிக்க இயலாத நிலையை தெரிவித்தோம். இது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதை அடுத்து மூன்றாம் தரப்பினரிடம் பணம் கேட்கவில்லை என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மறுத்தது. எனவே இப்போது பணம்பெற வழியில்லாததை அடுத்து இந்தியச் செஞ்சிலுவை சங்கம்தான் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

ரூ.32 இலட்சம் யாரும் கட்டத் தயாரில்லை. நாங்கள் தொடர்பு பிரதிநிதிகள்தான். எனவே எங்களால் தொடர்ந்து ஏதும் செய்ய இயலாது. இந்திய அரசு தலையிட்டால் ஒழிய நிவாரணப் பொருள்கள் விநியோகம் ஆவது சந்தேகம்தான்' என்றார் சுப்பிரமணி.

- முகவை க.சிவகுமார்,

நன்றி: தினமணி (25.07.2009)

http://www.tamilkathir.com/news/1638/58//d,full_view.aspx♥ சிங்களப் படையை பலப்படுத்தும் நோக்கம் என்ன? ♥

சிறீலங்கா அரசின் படைத்துறை பலப்படுத்தல்களின் நோக்கம் என்ன?

விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் விடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் போர் நிறைவுபெற்ற பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் போருக்கு பின்னரான அபிவிருத்திகளோ அல்லது பாதுகாப்பு தளர்வுகளோ பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக சிறீலங்கா அரசின் படைத்துறை கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், மறுசீரமைப்புக்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கைகளின் அதிகரிப்புக்களுக்கு அப்பால் கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த வாரம் புதிய தளபதிகள் முப்படையிலும் புதிதாக நியமனம் பெற்றுள்ளதுடன், இராணுவத்தளபதியாக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஓருங்கிணைப்பு தளபதியுமான லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா நியமனம் பெற்றுள்ளார். சிறீலங்கா இராணுவத்தின் தளபதிகளாக வன்னி அல்லது யாழ் மாவட்ட கட்டளை தளபதிகளே நியமனம் பெறுவதுண்டு. முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்செக்கா யாழ்குடாநாட்டு கட்டளை தளபதியாக போர் நிறுத்த காலத்தில் பணியாற்றியதும் நினைவுகொள்ளத்தக்கது.

இந்த நிலையில் தற்போதைய தளபதியின் நியமனம் எதிர்பார்த்ததாகவே இருந்த போதும், கடும்போக்குடைய தளபதியின் நியமனத்தை தொடர்ந்து இராணுவத்தரப்பில் பல மாற்றங்களும் பதவி உயர்வுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறீலங்கா இராணுவத்தின் அதிகாரிகளின் ஓய்வுக்காலம் 55 வயதாக உள்ளதால் 50 வயதான ஜெயசூரியா தளபதியாக நியமிக்கப்பட்டதும், அவர் மூப்பு அடிப்படையில் எட்டாவது இடத்தில் உள்ளதும் பல சலசலப்புக்களை படைத்தரப்பில் ஏற்படுத்தியுள்ளன.

இருந்த போதும் இராணுவத்தரப்பில் பல மாற்றங்களை அவர் மேற்கொண்டுள்ளார். கடற்படை மற்றும் வான்படையினர் மட்டத்தில் தளபதிகள் மாற்றப்பட்டுள்ள போதும் அதன் கட்டமைப்புக்களில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இராணுவத்தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில் முக்கியமான மறுசீரமைப்புக்கள் வருமாறு.

முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுனராகவும், மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியா வெளிநாடு ஒன்றிற்கு தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது சிறப்புப்படை, கவசத்தாக்குதல் படை றெஜிமென்ட் உட்பட பல றெஜிமென்ட்களின் கட்டளை அதிகரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த மாற்றங்களில் வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்ட பல கட்டளை அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் வளங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா வன்னி பிராந்திய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் சாகி கலகே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிறப்பு படையணியை வழிநடத்தியவர்.

யாழ்குடாநாட்டு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மென்டக்க சமரசிங்கா இராணுவ தலைமையக பிரதம அதிகாரியாகவும், அவரின் இடத்திற்கு மேஜர் ஜெனரல் ராஜித சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவேந்திர சில்வா இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பாளராகவும், 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் அருணா பெரோராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசன்னா டீ சில்வா இணைந்த பயிற்சிகளுக்கான பணிப்பாளராக நியமிக்ப்பட்டுள்ளார். அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ டிவிசன்களின் கட்டளை அதிகாரிகள் பலருக்கும் பதவி உயர்வுகளுடன் புதிய பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் சூள டயஸ் ஜெர்மன் நாட்டு பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் இரு வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு வானகங்கள் பின்தொடராது தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுவிட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்த வேளை ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவர் பலத்த காயமடைந்திருந்தார். அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை படுகொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சில கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ள போதும் படைத்தரப்பு அதனை மறுத்துள்ளது. மேலும் வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்ட பல அதிகாரிகளுக்கு சூழற்சி முறையில் வெளிநாடுகளில் இரஜதந்திர பதவிகளை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே பாதுகாப்பு துறை பிரதம அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா இராணுவ கட்டமைப்பில் மேலும் பல மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பல திறமை மிக்க அதிகாரிகளை கொண்டு கூட்டுப்படை தலமையகம் (Joint Operations Command) ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலின் படை கட்டுமானங்களின் அடிப்படையில் சிறீலங்கா படை கட்டுமானங்களை மாற்றி அமைக்கும் பணிகளையும் படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. அதாவது தரைப்படையினருக்கென தனியான வான்படை பிரிவும், கடற்படையினருக்கென தனியான வான்படை பிரிவுகளும் அமைக்கப்படவுள்ளன. இதனிடையே இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியின் ஓரங்கமாக கடந்த வாரம் கஜபா றெஜிமென்ட் படையணியில் புதிய 22 ஆவது பற்றலியன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையணியின் பயிற்சி நிறைவுவிழா கடந்த வாரம் அனுராதபுரம் சாலியபுரம் பகுதியில் நடைபெற்றது.

இந்த பற்றலியனின் கட்டளை அதிகாரியாக மேஜர் டி ஆர் என் கெட்டியாராட்சி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அது துணுக்காய் பகுதியிலும் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர் நிறைவுபெற்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் சிறீலங்கா அரசு தனது படை கட்டுமானங்களை விரைவாக மறுசீரமைத்து வருவதுடன், அதனை வலுப்படுத்தியும் வருகின்றது. இந்த வலுப்படுத்தல்களில் கடற்படை வான்படை வளங்களும் உள்ளடங்கியுள்ளன.

கடந்த வாரம் கொழும்பில் வான்பாதுகாப்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னிலங்கை ஊடகங்களை பொறுத்தவரையில் சிறீலங்கா படையினரின் தற்போதைய பலப்படுத்தல்கள் வெளியாரின் தலையீடுகளை தடுப்பதற்காக என தெரிவித்து வருகின்றன. ஆனால்; சிறீலங்காவின் படையினரின் வளங்களை கணிப்பிடும் போது அதன் அண்டை நாடுகளில் எதனுடனும் அது பொருந்தப்போவதில்லை.

எனவே அண்டைநாடுகள் எவையுடனும் போர் புரியும் நிலையில் சிறீலங்கா இல்லை என்பது தெளிவானது. எனவே எதனை எதிர்கொள்வதற்கு சிறீலங்கா தன்னை தயார்படுத்தி வருகின்றது? மீண்டும் ஒரு சமச்சீரற்ற மோதலை களத்திற்குள் அது எதிர்கொள்ளப்போகின்றதா? அல்லது வெளியில் இருந்து சிறீலங்காவை நோக்கி நகரப்போகும் ஒரு ஆயுதப்போரை எதிர்கொள்ள அது தன்னை தயார்படுத்தி வருகின்றதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

http://seithy.com/breifArticle.php?newsID=17047&category=Article


பிரபாகரன் நன்றாக இருக்கிறார்;உறுதியான தகவல் கிடைத்துள்ளது

பிரபாகரன் நன்றாக இருக்கிறார்;உறுதியான தகவல் கிடைத்துள்ளது


 

அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் `ஈழத்தமிழரும்-நமது கடமையும்' என்ற கருத்தரங்கு நடந்தது.

உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

''சிங்கள அரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் யூத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விட மிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில் வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை.

ஏறத்தாழ 31/2 லட்சம் தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம்.

இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவின் ராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள்.

இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர்.

சிவசங்கர மேனனும், நாராயணனும் மாதத்துக்கு 4 தடவை இலங்கைக்கு சென்று வந்தனர். போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக இலங்கை சென்று டெல்லி திரும்பும் வழியில் சென்னையில் இறங்கி அவர் கள் தமிழக முதலமைச்சரையும் ஏமாற்றி விட்டனர்.

இலங்கையில் சீனா நாடுகள் உள்பட நமது எதிரி நாடுகள் கால்பதித்து வருகின்றன. இது நமது நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையும். இதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு உள்ளது.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார்.

பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன், பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது.

தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13001

♥ "இலங்கை ஜெயிலில் உணவின்றி, தூக்கமின்றி.....!" தமிழக மீனவர்கள் ♥

இலங்கை ஜெயிலில் உணவின்றி, தூக்கமின்றி நரக வேதனை அனுபவித்தோம்: தமிழக மீனவர்கள் கண்ணீர் பேட்டி
இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் புதன்கிழமை மண்டபம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சிறையில் உணவு, தூக்கமின்றி தவித்ததாக கூறினர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4 ந் தேதி 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இதில் கச்சத்தீவு அருகே 5 படகுகளில் மீன்பிடித்து கொண்டு இருந்த மலைச்சாமி (வயது 45), போஸ், ராமச்சந்திரன் (40), ரவிச்சந்திரன் (40), கணேசன், முனியசாமி, சேட்டு, முத்தழகு, பிரேம் (25) உள்பட 21 மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றனர்.

பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 21 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் கடந்த 8 ந் தேதி 5 படகுகளையும், 21 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு இருந்ததால் அவர்களை ராமேசுவரத்துக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு 5 படகுகளுடன் 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லைக்கு அழைத்து வந்தனர். அங்கு தயாராக நின்ற இந்திய கடலோர காவல்படையிடம் அவர்களை ஒப்படைத்தனர். பின்னர் இந்திய கடற்படையினர், 21 மீனவர்களையும் மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்து வந்தனர்.

புதன்கிழமை மாலை 4 மணிக்கு மண்டபம் வந்து சேர்ந்த அவர்களிடம் கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் 21 மீனவர்களும் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் இளம்வழுதி, மீன்துறை ஆய்வாளர்கள் சின்னகுப்பன், அஸ்மத்துல்லாகான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து மீனவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். நிரபராதி விடுதலைக்கான கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம், மீனவர் சங்க தலைவர் போஸ் ஆகியோரும் வரவேற்றனர்.

விடுதலையாகி வந்த மீனவர்கள் மலைச்சாமி, சேகர், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:

"கடந்த 4 ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 2 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி எங்கள் படகை சுற்றிவளைத்தனர். பின்னர் படகில் ஏறி பைப்களால் தாக்கி எங்களை தரக்குறைவாக பேசினர். அதன்பின் எங்களை பிடித்துச் சென்று தலைமன்னார் கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

அங்கு ஒரு அறையில் 300 க்கும் மேற்பட்ட சிங்கள கைதிகளுடன் எங்களையும் சேர்த்து அடைத்தனர். நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்ததும் சிறையில் இருந்த சிங்கள கைதிகள் எங்களை தூங்கவிடாமல் சித்ரவதை செய்தனர். அங்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை. நாங்கள் ஜெயிலில் உணவின்றி, தூக்கமின்றி நரக வேதனை அனுபவித்தோம்.

கடந்த 15 ந் தேதி அனுராதபுரம் சிறையில் இருந்து விடுதலை என்று கூறி மன்னார் கடற்கரைக்கு எங்களை அழைத்து வந்தனர். ஆனால் அன்று கடல் கொந்தளிப்பு காரணமாக அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆலயத்தில் எங்களை தங்கவைத்தனர். நேற்று தான் எங்களால் வரமுடிந்தது. அவர்கள் எங்களை ஒப்படைக்கும்போது எல்லைதாண்டி மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்தனர்."


http://seithy.com/breifNews.php?newsID=17015&category=IndianNews

♥ தமிழர் பேரழிவுக்கு மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது ♥

தமிழர் பேரழிவுக்கு மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது: பழ.நெடுமாறன்

http://www.orunews.com/wp-content/uploads/2009/05/pala-nedumaran.jpg


அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் `ஈழத்தமிழரும்-நமது கடமையும்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

''சிங்கள அரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் யூத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விட மிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில் வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை.

ஏறத்தாழ 31/2 லட்சம் தமிழர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம்.

இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் இராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள்.

இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர். சிவசங்கர மேனனும், நாராயணனும் மாதத்துக்கு 4 தடவை இலங்கைக்கு சென்று வந்தனர். போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக இலங்கை சென்று டெல்லி திரும்பும் வழியில் சென்னையில் இறங்கி அவர் கள் தமிழக முதலமைச்சரையும் ஏமாற்றி விட்டனர்.

இலங்கையில் சீனா நாடுகள் உள்பட நமது எதிரி நாடுகள் கால்பதித்து வருகின்றன. இது நமது நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையும். இதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு உள்ளது.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது. தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசினார்.

♥ தமிழகத்தில் இலங்கை அகதிகள்--'பி.எல். படிச்சுட்டு கல் உடைக்கிறான்...' ♥

தமிழகத்தில் இலங்கை அகதிகள்--'பி.எல். படிச்சுட்டு கல் உடைக்கிறான்...'
'இருந்த ஊரிலும் இடமில்லை; வந்த ஊரிலும்வாழ்வில்லை...' என்கிற கதையாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் பிள்ளைகள் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படுவதாக ஒரு விவாதம் சமீபத்தில் சட்டமன்றத்தில் எழுந்தபோது, 'ஈழத்தமிழ்

பிள்ளைகள் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தால், முதல்வரிடம் பேசி முறையான வாய்ப்பு வழங்கப்படும்...' என்று சமாதானம் சொல்லியிருந் தார் நிதியமைச்சர் அன்பழகன்.

ஆனால், ''எங்கட பிள்ளைங்க மெத்தப் படிச்சு மட்டும்என்ன புண்ணியம்? அரசாங்க உத்தியோகம் கிடைக்காவிட்டாலும் பரவா யில்லை, எந்த கம்பெனிக்குப் போனாலும் 'இலங்கைத் தமிழனா... போடா வெளியே!' என்று விரட்டியடிக்கிறார்கள். தாய் மண்ணைத் தொட்ட பின்னும் கல்லு டைத்து, மண் சுமந்து பிழைக்கத் தான் நாங்கள் ஜென்மம் எடுத்திருக்கிறோமா?'' என்று விசும்பு கிறார்கள் அகதிப் பெற்றோர்கள்.

பொறியியல், சட்டம், கலை என்று பல வகையான கல்லூரிப் படிப்புகளை முடித்துவிட்டு, தமிழ் அகதி இளைஞர்கள் கட்டட வேலை, பெயின்டர் வேலை என்று கூலித் தொழிலுக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். ஈழத்தமிழ் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நல்வாழ்வுக்காக களப்பணியில் இறங்கியிருக்கும் நேரு, இந்த வேதனைகளை விளக்குகிறார்.

''ஒரு சமயத்துல இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இங்கே பள்ளி, கல்லூரிகள்ல இட ஒதுக்கீடு, இலவச பஸ் பாஸ்னு ஏகப்பட்ட சலுகைகள் இருந்தன. ஆனா, காலப் போக்குல எங்களுக்கான சலுகைகள் படிப்படியா குறைஞ்சுகிட்டே வருது. குறிப்பா, 2003-ம் வருஷத்துல இருந்து எங்க மேலே ஏகப்பட்ட கெடுபிடிகள் பாய ஆரம்பிச்சிருக்கு. அகதிக் குழந்தைகள் அரசு பள்ளிகள்ல படிப்பு வேண்டிப் போறப்ப... எந்த சிக்கலும் பண்ணாம பள்ளிகள்லசேர்த்துக்கிறாங்க.

அப்படியே சிலபள்ளிகள்ல சிக்கல் பண்ணினாலும், பணம் கொடுத்துத் தனியார் பள்ளிகள்ல பிள்ளைகளைச் சேர்த்துப் படிக்க வச்சுடுறோம். ஆனா, ப்ளஸ்-டூ முடிச்சுட்டுக் கல்லூரி வாழ்க்கையில அடியெடுத்து வைக்கிறப்ப, 'நீ இலங்கை அகதி'னு சொல்லி, அரசு கல்லூரிகள்ல ஸீட் தர மறுக் கறாங்க. எங்களுக்கான ஒதுக்கீடு குறித்துக் குரல் கொடுத்தாலும், எந்தப் பலனும் கிடைக்கிறதில்லை. தனியார் கல்லூரிகள்லயும் இதே பிரச்னைதான். ஆனாலும், எக்கச்சக்கமா பணம் கட்டுறோம்னு சொன்னா, கொஞ்சம் மனசு இரங்கி வந்து ஸீட் தர்றாங்க.

ஆனா, ஒவ்வொரு செமஸ்டருக்கும் கொள்ளைப் பணம் கட்டிப் படிக்கிறதுக்கு எங்க கையிலே காசு ஏது? 'அகதிகள் முகாமைவிட்டு வெளியே போகக் கூடாது, அங்கே பேசக் கூடாது, இங்கே பேசக்கூடாது'னு எங்க மக்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள். இதுக்கு நடுவுல கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க நினைக்கிற பெத்தவங்களால பிரைவேட் காலேஜுக் கான ஃபீஸை எப்படிக் கட்ட முடியும்? ப்ளஸ்-டூ படிப்புல ஆயிரத்துக்கு மேலே மார்க் எடுத்தும், வறுமையால கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாம இருக்கிற முகாம் குழந்தைகள் பத்தி, ஈழ இன உணர்வு உள்ளவங்ககிட்டே எடுத்துச் சொன்னோம்.

அதோட விளைவா நடிகர் சூர்யா, சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்கள் எங்க பிள்ளைகளுக்கு உதவ இந்த ஆண்டு முன் வந்திருக்காங்க. இப்படிக் கஷ்டப்பட்டுப் படிச்சு முடிச்சாலும் எங்க எதிர்காலம் கேள்விக்குறியாத் தான் இருக்கு. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும்கூடப் பரவாயில்லை...அதுக்கு சம்பந்தமேஇல்லாத வேலையைக்கூடத் தரமாட் டேன்னுதான் சொல்றாங்க.

இப்படித்தான் பாருங்க... டெலாம், ஷோபா, லூமன், சிவாகரன், ஆனந்தசிவம்னு ஐந்து பேர் தமிழக அரசு சட்டக் கல்லூரிகள்ள பி.எல். படிச்சு பாஸ் பண்ணிட்டு, வழக்கறிஞரா ப்ராக்டீஸ் பண்றதுக்காக பார் கவுன்சில்ல பதிவு பண்ணப் போனப்போ... 'நீ இந்திய பிரஜை இல்லை. அதனால ப்ராக்டீஸ் பண்ண முடியாது'ன்னு சொல்லி புறந்தள்ளிட்டாங்க. என்ன தான் அரசு கல்லூரின்னாலும் பல வகையான செலவு களைப் பண்ணி, அஞ்சு வருஷமா விழுந்து விழுந்து படிச்சதுக்கான பலனில்லாம நொந்து போய்க் கிடக்கிறாங்க. இந்தப் பதிவுக்காக அலைஞ்சு திரிஞ்சு வெறுத்துப் போன பவானிசாகர் அகதிகள் முகாம்ல இருந்த ஆனந்த சிவம், பிழைப்புக்காக எங்கேல்லாமோ போய் ஒரு கட்டத்துல செத்தே போயிட்டாரு. அதே முகாம்ல இருக்கிற டெலாம் குடும்பத்தினரும் அவனோட வக்கீல் தொழிலை நம்பித்தான் எதிர்காலத்தை ஓட்ட நினைச்சி ருந்தாங்க. ஆனா, வக்கீலுக்குப் படிச்சது வீணாகிப்போய் ஏதாவது பிரைவேட் கம்பெனியில நல்ல வேலைக்குப் போகலாம்னு நினைச்சு ஏறி இறங்காத கம்பெனி யில்லை. ஆனா, எல்லா கம்பெனியிலேயும் சொல்லி வச்ச மாதிரி, 'இலங்கை அகதிக்கு இங்கே வேலை இல்லை'னு முகத்துல அடிச்சுத் திருப்பி அனுப்பிட்டாங்க. பத்து மாசத்துல குறைஞ்சது இருநூற்றியறுபது இன்டர் வியூக்களை அட்டெண்ட் பண்ணின அந்தப் பையனால, ஒரு வேலைகூட வாங்க இயலலை. விளைவு, பெயின்டர் வேலைக்கும் கல் உடைக்கிற வேலைக்கும் போயிட்டிருக் கிறான். என்ன கொடுமை பாருங்க! இந்த டெலாம் மாதிரியே இன்னும் ஏகப்பட்ட பேர் தமிழக முகாம்கள் முழுக்கத் தவிச்சுக் கிடக்கிறாங்க.

எங்களோட பிரச்னைகள் குறித்து முதல்வர், அமைச்சர் முதலியவங்களுக்கு மனு அனுப்பினாலும் கூட சிக்கல்தான். அந்த மனு நகலை எடுத்துக் கொண்டு வந்து க்யூ பிராஞ்ச் போலீஸ்காரங்க, 'யாரைக் கேட்டு மனு அனுப்பினே?'னு குடைஞ்செடுக்கிறாங்க. நிலைமை இப்படியே போயிட்டிருந்தா... எங்க எதிர்காலம் என்ன ஆகுறது? எங்க சந்ததிகள் முழுக்க இனி கூலி வேலை பார்த்தே மடிய வேண்டியதுதானா? இந்த வேதனைகளை எல்லாம் கனிமொழி எம்.பி-யை சமீபத்துல சந்திச்சு விளக்கியிருக்கோம். எங்களுக்கு அரசாங்க உத்தியோகம் கொடுங்கன்னு கேட்கலை; படிப்புக்கு ஏற்ற மாதிரி ஓரளவு வருமானம் வரும் வகையில சாதாரண வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாலும் தேவலை என்று புலம்பியிருக்கோம். அவங்களும் 'அப்பா கிட்ட பேசி நல்ல தீர்வு கிடைக்க முயற்சிக்கிறேன்'னு சொல்லியிருக்காங்க. நல்ல சேதி வருமா என்று பார்ப் போம்...'' என்கிறார் வேதனை பொங்க.

ஈழத்தமிழர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாத நிலை குறித்து சில சீனியர் வழக்கறிஞர்களிடம் பேசியபோது,

''அட்வகேட் ஆக்ட்படி ஒருவர் இந்தியாவில் சட்டம் பயின்றிருந்தாலும், அந்த நபர் இந்தியப் பிரஜையாக இருந்தால் மட்டுமே பார் கவுன்சிலில் பதிவு செய்து ப்ராக்டீஸ் செய்ய இயலும். அதே நேரத்தில், பி.எல். படித்து விட்டு ஒருத்தன் கல் உடைக்கிறான், பெயின்ட் அடிச்சு குடும்பத்தைக் காப்பாத்துறான் என்பதும் கொடுமை யான விஷயமே. அரசுதான் தலையிட்டு இவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்!'' என்கிறார்கள்.

- எஸ்.ஷக்தி
படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்

நன்றி:விகடன்

http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=158:2009-07-22-15-57-23&catid=35:2009-07-08-13-09-17&Itemid=54


♥ யூதர்களும் தமிழர்களும் ♥

யூதர்களும் தமிழர்களும்--அப்பா இணையத்திற்காக ஜானமித்ரன்


இன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் வழற்சிகள், ஒன்றிய சிந்தனைகள் என்பவற்றின்மூலம் இஸ்ரேல் என்ற தேசத்தினை

உருவாக்கினார்களோ அதேபோல இன்று செயற்படவேண்டும் என பல தரப்புகளிடம் இருந்து கருத்துக்களும் தற்போது வலுப்பெற்று வருவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்,

கேள்விப்பட்டிருப்பீர்கள்.இந்த நிலையில் நமக்கு யூதர்களின் போராட்ட வரலாறுகள், அவர்கள் அனுபவித்த வேதனைகள், அவர்களுக்கு நடந்த துரோகங்கள், அவர்கள் எழுச்சி பெற்ற ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உலகில் இடம்பெற்ற மாற்றங்களால் அவர்களின் எழுச்சிகள் அமர்ந்துபோன ஏமாற்ற வரலாறுகள் என்பனபற்றிய முழுமையான வரலாற்றினை நாம் தெரிந்துவைத்திருக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது.


இந்த நிலையில் இந்த தளத்தில் இஸ்ரேலின் முழுவரலாற்றினையும் எழுதுவதென்றால் அதற்கு பிறம்பாக ஒரு தளம் அமைக்கவேண்டும் என்பதால் அப்பப்போ எனது வலைப்பதிவுகளில் இஸ்ரேலின் உருவாக்கம் பற்றியும், யூதர்களின் பேளெருச்சி பற்றியும் பதிவுகளை மேற்கொண்டு நண்பர்களான உங்களுடன் பகிரலாம் என நினைத்துள்ளேன்.

ஏனென்றால் இஸ்ரேல் பற்றியோ, அல்லது யூதர்களின் வரலாற்றினையோ சரியாக தெரிந்துகொள்ளாதவர்கள்கூட தமிழர்கள் இன்று யூதர்கள்போல செயற்படவேண்டும், யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொண்டார்களோ அதேபோல தமிழர்களுக்கான ஒரு தேசத்தை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் யூதர்களுடன் தமிழர்கள் ஒத்துப்போகும் சில இடங்கள், தமிழர்கள் யூதர்களாக மாறுவற்கு இன்னும் எடுக்கவேண்டிய விஸ்வரூபங்கள், மாற்றிக்கொள்ளவேண்டிய குண இயல்புகள், இன்னும் செய்யத்தயாராக வேண்டியுள்ள தியாகங்கள் என பலவற்றை சுட்டிக்காட்டவேண்டிய தேவை வந்துள்ளது. எனவே யூதர்கள் மற்றும் இஸ்ரேல், பற்றிய இந்த ஆய்வுத்தொடரினை நீண்டதாக அல்லாமல் மிகவும் சுருங்கியதாக ஆகக்கூடியது மூன்று தொடர்களில் முடிக்க முயற்சிக்கின்றேன்.


"இன்றைய உலகில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள், ஒஸ்கார் விருதுகள் பெற்றவர்கள், மிகப்பெரிய கலைஞர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியல் வல்லுனர்கள், அரசியல் ஆய்வாளர்கள், என எந்தத்துறையை வேண்டுமானாலும், அதில் எத்தனை பேரை வேண்டுமானாலும் பட்டியலிட்டுப்பாருங்கள். அந்தப்பட்டியலில் எத்தனை யூதர்கள் உள்ளனர் என கணக்கிட்டுப்பாருங்கள், அதிர்ந்துபோவீர்கள்.
யூதர்களின் சரித்திரமே எத்தனைக்கெத்தனை அவர்கள் போராடினார்களோ, கஸ்டப்பட்டார்களோ அத்தனைக்கத்தனை சாதித்தும் காட்டியுள்ளனர்."
சரி…நாம் இப்போ யூதர்களைப்பற்றிப்பார்ப்போம்….


அது ஒரு வெள்ளிக்கிழமை, ஏப்ரல் மாதத்தில் முதற்கிழமையாக இருக்கலாம் என நம்பப்படும் நாள்.
"நஸரேத் நகரத்தைச்சேர்ந்த இவர், யூதர்களின் அரசன் என்று எழுதி ஒட்டப்பட்ட அந்த சிலுவையில் ஜேசு சிலுவையில் அறையப்பட்ட நாள். (Iesus Nazarenus Rex Inudaeorum –INRI) மூன்றாவது நாள் அவர் உயிர்த்து விண்ணுலகம் சென்றதாக கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகின்றது. இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

மரணத்தின்பின்னர் தேவதூதன் உயிர்தெழவில்லை என்பதே யூதர்களின் நம்பிக்கை. ஜேசு மரணத்தின் பின்னர் உயிர்த்தெழவில்லை என்று நம்பியவர்கள் யூதர்களாகவே இருந்தனர்.


ஆனால் ஜேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்பிய யூதர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு, கிறிஸ்தவம் என்றொரு மதம் தோன்றியதன் அடிப்படையே இதுதான். அப்படி ஒரு பிளவு உருவாக காரணமாக இருந்தவன் யூதாஸ். ஜேசுவைக்காட்டிக்கொடுத்தவன், ஜேசுவை கொலை செய்தவன் எனக் கிறிஸ்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டவன்.


யூதாஸ் என்ற தனி மனிதன் ஒருவன் சரிவர யோசிக்காமல் அவசரப்பட்டு செய்த ஒரு காரியம், யூதர்கள் என்றாலே காட்டிக்கொடுப்பவர்கள் என்று காலம்காலமாக உலகம் மாறி மாறி யூதர்களை பழிவாங்கும் நிலைக்கு ஆக்கியது. இதில் முக்கிமான ஒரு விடயம் என்னவென்றால், ஜேசுவும் யூதனே என்ற வாதம் முன்வைக்கப்படுவதுதான்.
இதன்மூலம் யூதர்கள் அனுபவித்த வலிகள் வேதனைகள் எராளம். இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு என்றால் அது யூதர்களுடையதுதான்.

இந்த நாட்களில் இருந்து ஒரு யுகத்தொடர்ச்சியாக கால காலங்களிலும் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளும், வேதனைகளும் மிக அதிகம், அவர்களுக்கான ஒரு மேய்ப்பானுக்காக அவர்கள் தமக்குள்ளேயே அழுத காலங்கள் மிக நீண்டவை.
தோழ்கொடுக்க ஆள் இன்றி அவர்கள் ஒரு கையால் தமது நிர்வாணங்களை மறைத்துக்கொண்டே மறுகையால் ஆடைநெய்து அணிந்துகொண்டார்கள்.


யூதர்கள் ஆரம்ப நாட்களில் இருந்து மோஸஸ், ஜோசப், ஜோஸ_வா, சாமுவேல், தாவீது, சொலமன், ஜேசு, ரோமானிய மன்னர்கள், நபிகள் நாயகம், சலாவுதீன், கலிபாக்கள், சிலுவைப்போர், போன்ற மன்னர்களையும், சம்பவங்களையும் கடந்தே யூதர்களின் வரலாறு வருகின்றது. இவை முழுவதையும் பதிவிடுவது இயலாத காரியம் என்பதால் அங்கிருந்து ஒரே பாய்ச்சலாக 18ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். எனினும் எதிர்வரும் காலங்களில் யூதர்களின் பண்டையகால வரலாறுகளை தொகுத்து சிறு சிறு பதிவுகளாக தருவது சிறப்பாக இருக்கும் எனவும் எண்ணுகின்றேன்.


கி.பி. 1772 தொடக்கம் 1815 க்குள் போலந்து லித்துவேனியா போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் ஜோர் என்ற மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அன்றைய ரஷ்யாவின் இளவரசர் பொட்ரம்கின் யுதர்களுக்கு அதரவான ஒரு அறிக்கையினை வெளியிட்டார். "ஐரோப்பிய நாடுகளில் வாழமுடியாத யூதர்கள் ரஷ்யாவுககு வந்து ரஷ்யாவின் தென்பகுதிகளில் வாழலாம் என்பதே அந்த அறிவிப்பு. இது யூதர்களே சற்றும் எதிர்பாராத அறிவிப்பு. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக அங்க சென்று பெரும் குடியிருப்புக்களை உருவாக்கினார்கள்.

துருக்கி மீது பெடையெடுக்கும் நோக்கத்துடன் அதில் தந்திரமாக யூதர்களையும் இணைத்துக்கொண்டார். யூதர்கள் மயங்கும் வண்ணம் பல சலுகைகளையும் வழங்கினார். 1768 இல் ரஷ்யா துருக்கியை கைப்பற்ற போரினை மேற்கொண்டது. இதில் யூதர்களின் படையும் பங்கு கொண்டமையினால் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு யூதர்களின்மேல் தோன்றியிருந்த வெறுப்பு இன்னும் அதிகரித்தது.


இந்த யுத்தங்களின் பின்னர் ரஷ்யாவில் இருந்து போலந்து பிரிந்துசென்றது. அந்தநேரத்தில் ரஷ்யா போலந்து எல்லைகள் சரியாக பிரிக்கப்படவில்லை. இந்த பிரிவினைச்சுழலில் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திய யூதர்கள் பல நிலங்களையும் வளைத்துப்போட்டார்கள். பல குடியிருப்புக்களை உருவாக்கி பெருமளவில் விவசாயத்திலும் ஈடுபட்டனர்.

நாளடைவில் யூதர்களின்மீது ரஷ்யாவுக்கு இருந்த காழ்ப்புணர்வு உயர்ந்து யூதர்களுக்கெதிரான கலவரங்கள் ஆரம்பித்தன.
ரஷ்யர்களை யூதர்கள் அடிமைப்படுத்த முயல்கின்றார்கள், அவர்களை மதமாற்ற முற்படுகின்றார்கள் என்று பொய்க்குற்றங்களை ரஷ்யர்கள், யூதர்கள் மீது சுமத்தி மேலும் 1802ஆம் ஆண்டு ரஷ்யாவின் மன்னராக இருந்த அலெக்ஸ்ஸாண்டர் 01 என்ற மன்னனால் யூதர்கள் அடித்து விரப்பட்டவேண்டியவர்கள் என்ற தொனிப்பொருளில் பல்வறு அழுத்தங்கள் யூதர்கள் மீது திணிக்கப்பட்டன.


இந்தவேளைகளில் ரஷ்யாவின் கெடுபிடிகள் காரணமாக ரஷ்யாவை விட்டு யூதர்கள் மெல்ல மெல்ல வெளியேறத்தொடங்கினர், அனால் காலங்கள் சென்றாலும் யூதர்களை அடிமைகளாக்க ரஷ்யா முயன்றுகொண்டே இருந்தது. இந்த நிலையில் 1881ஆம் அண்டு ரஷ்ய கிளர்ச்சியாளர்களே அலக்ஸாண்டர் 02 மன்னனை கொலை செய்ய அந்தப்பழியினை யூதர்கள்மீது சுமத்தி யூதர்கள் மீது பெரும் இனவெறியினை கட்டவிழத்து யூதர்களை கொன்று குவித்தனர் ரஷயர்கள். வகைதொகையின்றி யூதர்கள் கொலை செய்யப்பட்டனர். இது ரஷ்யாவில் மட்டும் இன்றி யூதர் ஒழிப்பு நடவடிக்கைகள் மெல்ல மெல்ல ஐரோப்பா முழுக்க பரவ தொடங்கியது.


ரஷ்யாவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் யூதர்கள் மீது கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, அப்போதைய சக்கரவர்த்தியாக திகழ்ந்த நெப்போலியன் "பாலஸ்தீனத்தில் இருந்துவந்தவர்கள் யூதர்கள், இதன் அடிப்படையில் அவர்களுக்கு அவர்களது குடியேற்ற உரிமைகள் பாதுகாக்கப்படும், இருப்பு அங்கீகரிக்கப்படும்" என அறிவித்தார்.

ஒரு மாபெரும் சக்கரவர்த்தி பாலஸ்தீனம் யூதர்களின் நிலம் என அங்கீகரித்தமையினாலும், ஐரோப்பா முழுவதும் யூதர்களை அடித்து ஒதுக்கியபோதும் தமக்கு அதரவாக குரல் கொடுத்ததாலும், நெப்போலியனை உளமார வாழ்த்தினார்கள் யூதர்கள். கி.பி.1799 இல் நெப்போலியன் எகிப்தில் இருந்து சிரியா நோக்கி படையெடுத்திருந்தார்.

அவரது நோக்கமே அன்றைய பாலஸ்தீனத்தில் இருந்த ஏர்க் கோட்டையினை பிடிப்பதாகும். எனவே போகும்வழியல் பாலஸ்தீன ரமல்லா என்ற இடத்தில் தங்கியிருந்த நெப்போலியன், அங்கிருந்த யூதர்களைத்திரட்டி "நீதி கேட்கும் ஊர்லம்" என்ற பெயரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினார். இது அவரது இராஜதந்திரமே ஆகும்.

இநதப் போரில் அரேபியர்களை வெற்றி கொள்ள நீங்கள் உதவினால், ஜெருசலத்தினை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து உங்களுக்கே தருவேன் என யூதர்களிடம் ஊர்வலத்தில் தெரிவித்தார் நெபபோலியன்.

யூதர்கள் உடனடியாக நெப்போலியனின் படையுடன் இணைந்து செயற்பட்டார்கள். அனால் துருக்கிக்கு அப்போது பிரித்தானியாவின் உதவி இருந்தமையினால் நெப்போலியானால் வெற்றிகொள்ளமுடியவில்லை. நாளடைவில் பிற ஐரோப்பிய நாடுகளில் நடந்துகொண்டதுபோலவே யூதர்களை நெப்போலியனும் அடக்கி ஆழ தொடங்கினார்.


கொலை செய்யப்பட்டாலும் துரத்தியடிக்கப்பட்டாலும் அதே இடங்களில் மீண்டும் வந்து வாழ்வதற்கு யூதர்கள் தயங்கியதே கிடையாது. உலகமெல்லாம் பரவி தங்கள் வியாபாரங்களை வலைப்பின்னலாக பரவச் செய்தவர்கள் யூதர்களே. அதாவது Multi Level Marketing ஐ யூதர்கள் 17அம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டார்கள்.

வியாபாரத்தை விஸ்தரிக்க எந்தவிதமான குறுக்கு வழிகளில் நுளைய அவர்கள் அஞ்சியது கிடையாது. ஆனால் தமது வாடிக்கையாளர்களை அவர்கள் சிறிதளவும் ஏமாற்றவில்லை. எவ்வளவு தாம் முன்னேறினார்களோ அவ்வளவு தமது இனமும் முன்னேற வேண்டும் என்பதில் யூதர்கள் மிக உறுதியாக இருந்தார்கள்.

தம்மினத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு துறையில் சிறப்பானவராக இருந்தார் என்றால் அவர் அதேதுறையில் உச்சத்திற்கு செல்ல சகல உதவிகளையும் மற்ற யூதர்கள் வழங்கினர்.

1839 இல் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மெஷாக் என்ற இடத்தில் இருந்த பழமையான யூத தேவாலயம் ஒன்று முஸ்லிம்களால் தீ வைததுக்கொழுத்தப்பட்டது. அங்கே பற்ற வைக்கப்பட்ட கலவரத்தீ யூதர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் தீயாக பரவியது. இஸ்லாமியனாக மாறு இல்லை என்றால் இறந்துவிடு இதுவே முஸ்லிம்களால் யூதர்களுக்கு அன்று கொடுக்கப்பட்ட தெரிவுகள். யூதர்களுக்கு எதிராக எங்கும் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்து யூதர்களை தாக்கினார்கள்.


19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல ஐரோப்பிய தேசங்களில் ஜனநாயகம் மலரத்தொடங்கியது. எவ்வாறு ஒவ்வொரு தேசத்திலும் தங்கள் இருப்பை யூதர்கள் நிலைநிறுத்த முயற்சித்தார்களோ, அதேபோல ஜனநாயக நாடுகளிலும் தமது உரிமைகளைப்பெறவும். உரிய பதவிகளைப்பெறவும் முயற்சிகளை செய்தனர்.

1848 இல் பிரான்ஸில் இடம்பெற்ற தேர்தலில் யூதர் ஒருவர் வெற்றி பெற்று நாடாளுமன்றப்பிரதிநிதியானார். தொடர்ந்து 1870 இல் பெஞ்சமின் டி இஸ்ரேலி என்ற யூதர் தேர்தலில் நின்று வெற்றிபெற்று பிரித்தானிய பிரதமராகவே ஆகினார்.

தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல, வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி, நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.
ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது.

வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும், இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை.

ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு தந்திரத்தில், ஏதோ ஒரு முறையில் அவர்களின் இலக்குகள் அடையப்பட்டே தீரும்;. உண்மையான நியாயமான தமது இலட்சியங்களை இன்று அடையாதவர்கள் நிற்சயம் அதை நாளை அடைந்தே தீர்வார்கள்.
தமிழ்ழர்களுக்கு உரிய நாடு ஒன்று இன்றோ அல்லது நாளையோ பிறந்தவிடும் என கால நிர்ணயம் தந்து கூறிவிடமுடியாதுதான், அனால் இன்னும் 10 வருடங்களிலோ அல்லது 100 வருடங்களிலோ அது சாத்தியப்படலாம் அல்லது இன்னும் நாட்கள் எடுக்கலாம். யூதர்களின் வரலாறே இதற்கான சாட்சியம்தானே…சரி நாம் விடயத்திற்கு வருவோம்…

1870 இல் பெஞ்சமின் டி இஸ்ரேலி என்ற யூதர் பிரித்தானியாவின் பிரதமராகவே ஆகிவிட்டாரே. அப்பறம் என்ன நீண்ட நூற்றாண்டுக்குப்பிறகு யூதர்களின் வரலாற்றில் ஒரு வசந்தகாலம் உருவானது. அவர்கள் அதுவரை தாங்கள் அனுபவித்திருக்காத சுகங்களை அனுபவித்தனர். அதுவரை எட்டாத உயரங்களை தொட்டனர். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் யூதர்கள் சம அளவு உரிமைகளை பெற்றனர்.

ஆனால் மறுபக்கம் ஜெர்மனி, போலந்துபோன்ற நாடுகளில் யூதர்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தவண்ணம் இருந்தனர். கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு "மதம் மாறு அல்லது மடிந்துபோ" என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
பிரிட்டனில் சாதகமான நிலை இருந்தமையினால் யூதக்குடியிருப்புக்களின் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்தது. ஜோர்ஜ் மன்னர் இரண்டாவது அலெக்ஸ்ஸாண்டர் படுகொலைக்குப்பின்னர் ரஷ்யாவின் யூத ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருந்தது.


தொடர்ந்தும் துரத்தப்படும், அழுத்தப்படும் இனமாக இருந்த யூதர்கள் சிந்தித்தனர்.
நமக்குத் தேவை நாம் நின்மதியாக வாழ்வதற்கு எமக்கேயான நிரந்தரமான ஒரு தேசம். எத்தனைகாலம்தான் நாம் இப்படி ஓடிக்கொண்டே இருப்பது? உலகில் பெரும்பான்மையான இனங்களுக்கு தாம் வாழ்வதற்கென்று நிரந்தரமான தேசங்கள் இருக்கின்றன. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு என்று எங்கள் நிலமான பாலஸ்தீன் இருக்கின்றதே! அதை நாங்கள் எப்படி அடைவது? இன்றைய உலகியலின் பார்வையில் அது சாத்தியமே இல்லையே! சாத்தியப்படாதவற்றையும் நாம் எப்படி சாத்தியப்படவைப்பது? என இவற்றைத்தான் அவர்கள் சிந்தித்தார்கள்.

சிறு சிறு குழுக்களாக கூடிப்பேசினார்கள். எல்லாமே இரகசியக்கூட்டங்கள். சுற்றியிருக்கும் சுவர்களில் ஒருவார்த்தைகூட எதிரொலிக்காத வண்ணம் தமது வார்த்தைகளை மிக இரகசியமாகப்பேசினார்கள்.
இவர்களில் தியொட்டர் ஹெசில் என்ற ஜெர்மனியில் இருந்த யூதர், பாலஸ்தீனத்தை நாம் கைப்பற்ற என்ன வழி என்று ஒரு பாரிய திட்டமே போட்டு வைத்திருந்தார்.

அந்த திட்டத்தை நிறைவேற்ற யூதப்பணக்காரர்களின் உதவிகளை அவர் நாடினார். எவ்வளவுதான் பணக்காரர்களாக யூதர்கள் மற்ற நாடுகளில் மாறியிருந்தாலும் அவர்கள் யூதர்கள் என்ற இன உணர்வு மிக்கவர்களாகவே இருந்தார்கள். ஹெசில் இந்த திட்டம் குறித்து பல யூதப்பணக்காரர்களுடன் இரகசியப்பேச்சுக்களை நடத்தினார். ஹெசிலின் இந்த திட்டம் ஜியோனிசம் எனப் பெயரிடப்பட்டிருந்தது.


முதலில் யூதர்களை ஒருங்கிணைக்கவேண்டும். மிகப்பிரமாண்டமான வலையமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும், உலகில் யூதர்கள் எந்த மூலையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரினதும் எண்ணங்கள் ஒரே புள்ளியை நோக்கித்தான் குவியவேண்டும். அந்தப்புள்ளிதான் யூதர்களின் பூமியாகிய பாலஸ்தீன். அதனை அடைய எத்தனை காலம்வேண்டுமானாலும், எத்தனை இழப்புக்களை சந்திக்கவேண்டுமானாலும் யூதர்கள் தயாராக இருக்கவேண்டும். சுருக்காகச்சொல்வதென்றால் ஜியோனிஸத்தின் அர்த்தம் கொள்கை நோக்கம் எல்லாம் இதுதான்.

இந்த ஜியோனிஸம், 1975 களில் மிகத்தீவிரமாக மிக இரகசியமாக யூதர்களிடம் பரவிக்கொண்டிருந்தது. ரபிக்கள் ஜியோனிஸம் பற்றி யூதமக்களிடம் விரிவாக, ஆழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறினர்.

"யூதர்களிடையே இந்த எண்ணத்தினை மிக ஆழமாக விதைக்கவேண்டும். யூத தேசிய உணர்வை அவர்களுக்குள்த் தூண்டவேண்டும். நமக்கு நாடு வேண்டும் என்றால் நாம்தான் அதற்காக உழைக்கவேண்டும். கலாலங்காலமாக நாம் எத்தனையோ பாhர்த்தாகிற்று, எத்தனையோ இழந்தாயிற்று. யாரும் எமக்கான தனிநாட்டை தட்டில்வைத்து தூக்கிக்கொடுத்துவிடப்போவதில்லை. எல்லோரும் அவர் அவர்களின் சுயநலங்களிலேயே தங்கிருக்கின்றனர். ஆனால் எமக்கான நாட்டை நாமே மலரச்செய்யவேண்டும்"
நாடு என்றால் என்ன? ஒரு நிலப்பரப்பு. குடியிருபுக்கள்.

வணிகநிலங்கள், வயல்வெளிகள் தோட்டங்கள் என பலவற்றை அடுக்கியது. அவ்வளவுதானே? நாம் அவற்றை விலைகொடுத்துவாங்குவோம். வீடுகளில் இருந்து பெரிய நிறுவனங்கள்வரை வாங்குவோம், விவசாயம் செய்ய நிலங்களை வாங்குவோம். வாங்கி வாங்கி யூதர்களுக்கே உரியதாக சேர்ப்போம். சேர்த்துக்கொண்டே போவோம். இப்படி நாம் செய்துகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பினை நாம் காசு கொடுத்துவாங்கியிருப்போம். கிட்டத்தட்ட ஒருதேசமே யூதர்களுக்குச்சொந்தமாக இருக்கம். அந்த நிலப்பரப்பு பாலஸ்தீனமாக இருக்கட்டும் அது தானே எம் பல நூற்றாண்டுக்கனவு! ஹெசிலின் இந்தத்திட்டம் யூதப்பணக்காரர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உணர்சிவசப்பட்டவர்களாக எவ்வளவு பணம் என்றாலும் வழங்க தாம் தயார் என்றனர்.


இதன் முதற்கட்டமாக 1896ஆம் ஆண்டில் "உலக யூதர் கொங்கிரஸ்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு சுவிட்ஸர்லாந்தில் மிக இரகசியமாக அழைக்கப்பட்ட ஒரு சிலருடன் நடைபெற்றது. இங்குதான் ; The grand Plane என்ற நூறுபக்க அறிக்கையினை ஹெசில் வாசித்தார். அதை "ஒபரேஷன் பாலஸ்தீன்" என்று கூட அழைக்கலாம். யூதர்கள் இனிவரும் காலங்களில் எப்படி எல்லாம் தமது புத்திசாலித்தனங்களை உபயோகித்து தந்திரமாக காய்களை நகர்த்தவேண்டும். எப்படி எல்லாம் செயற்படவேண்டும், எப்படி எல்லாம் செயற்படக்கூடாது என சகலவற்றையும் விலாவாரியாக தெரிவிக்கப்பட்ட அறிக்கையாக அது இருந்தது.

அந்த அறிக்கையில் யூதர்கள் அன்றைய நிலையில் எப்படி காய்களை நகர்த்தவேண்டும் என சொல்லப்பட்வைகளில் முக்கியமானதை பார்த்தோமானால்,"யூதர்களுக்கு என்று ஒரு தேசத்தை அமைத்தே தீருவோம் என நாம் சபதம் எற்றுக்கொள்வோம். எத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தாலும், எத்தனைபேர்களை நாம் இழந்தாலும், எந்தச்சூழ்நிலையிலும் எமக்கான தேசம் என்ற நிலையில் இருந்து நாம் பின்வாங்கக்கூடாது.

எம் தேச உருவாக்கலை தகர்க்க பல சக்திகள் எம்மைத்தடுக்க எப்படியான சதித்திட்டங்களையும் தீட்டும், அவற்றை உடனடியாக இனங்கண்டு நாம் தகர்க்கவேண்டும். எம் இனம்மீதான பற்றும், எமக்கான நாடு என்ற உறுதியும் எம்மனங்களில் இருந்தால் எவராலும் எதனையும் செய்துவிடமுடியாது"

ஜேசுவைக்கொன்றவர்கள், ஜேசுவைக்கொன்றவர்கள் என்று நம்மீது பல ஆண்டுகளாக பழி சுமத்தி எம்மை அழித்துக்கொண்டே வருகின்றனர். அவர்களின் அடிப்படை மரபுகளிலும், விசமத்தனமான சிந்தனைகளிலும் ஊறிப்போன இதனை உடனடியாக அழித்துவிடமுடியாது. சாமர்த்தியமாக சமாளிக்க நாம் தயாராகவேண்டும். கிறிஸ்தவர்களுடன் பல வழிகளிலும், தோன்றல்களிலும் நாம் ஒத்திருந்தும் அவர்கள் நீண்ட நாட்களாக எமக்கு தொடர் துரோகங்களையே செய்துவந்துள்ளனர்.

ஐரோப்பாவில் மிக அதிகமாக வாழ்பவர்கள் கிஸ்தவர்கள்தான். அவர்கள் நம்பகைவர்களே. அனால் இப்போது அது எமக்கு முக்கிமல்ல. உணர்ச்சிகளையும் பழிவாங்கல்களையும் விட்டுவிட்டு, இனிநாம் தந்திரமாக முன்னேறவேண்டும், கிறிஸ்தவர்களுடன் நட்பு கொள்ளவேண்டும். அவர்கள் மனதில் இருந்து நம்மீதான பகைமை உணர்வை சிறிதாவது அகற்றவேண்டும். இந்த திட்டங்கள் உடனடியாக நிறைவேறப்போகும் திட்டங்கள் அல்ல. பல ஆண்டுகள் நாம் தீராமல் உழைப்பதன்மூலம் அடையப்போகும் திட்டங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(இந்த இடத்தின் எம்தமிழினத்தின் இன்றைய சூழலில், யூதர்களாக தமிழர்களையும், கிறிஸ்தவர்கள், ஐரோப்பாவாக இந்தியாவையும், ஜேசுவாக ராஜூவ் காந்தியையும் ஒப்பிட்டு பார்த்து மீண்டும் வாசித்துப்பாங்கள் கன கச்சிதமாக எப்படி பொருத்தமாக உள்ளது என்று)

சரி…யூதர்களின் இந்த திட்டங்களை நிறைவேற்ற பணம் தேவை. அதற்காக யூதர்களால் ஒரு வங்கி உருவாக்கப்படும். அதன் பெயர் "யூத தேசிய வங்கி" யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாஙகுவதற்கான சகல உதவிகளையும் அந்த வங்கி தரும் என அறிவிக்கப்பட்டது.

சொன்னபடியே எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக இயங்கியது யூத தேசிய வங்கி. பிற நாடுகளிலும் இருந்த யூதர்கள் மெல்ல மெல்ல பலஸ்தீனத்தை நோக்கி நகரத்தொடங்கினார்கள். பலஸ்தீன யூதர்கள் மௌனமாக புரட்சிக்கு தயாராகிகொண்டிருந்தனர்.
இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது, பலஸ்தீனத்தில் இருந்த மொத்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தை தாண்டியது.

மெல்ல மெல்ல பலஸ்தீனத்தில் யூத நில வங்கிகள் முளைக்க ஆரம்பித்தன. அதிக இலாபம் கிடைக்குதென எண்ணி அரேபியர்கள் யூதர்களின் வலையில் விழுந்தனர். அரேபியர்கள் அபபோது நினைத்ததெல்லாம் ஒன்றுதான். இன்னும் எவ்வளவு அதிகமாக விலை சொல்லலாம் என்பதுதான.; அதன்படியே புறம்போக்கான தங்கள் நிலங்களுக்கு எல்லாம் தாறுமாறாக விலைகளைச்சொன்னார்கள், எவ்வளவு சொன்னாலும் யூதவங்கிகள் அவற்றை வாங்கிப்போட்டுக்கொண்டே இருந்தன. மறுபுறம் யூத வங்கியின் நிலங்கள் பெருகிக்கொண்டே இருந்தன.

இன்னொருபுறம் உலகமெங்கும் உள்ள யூதர்கள் தங்கள் பங்கிற்கு நன்கொடையாக தமது பணத்தினை இந்த வங்கிக்கு வழங்கிக்கொண்டே இருந்தனர். பணம் இல்லாத யூதர்கள் கூட, தம்மாலான வழிகளில், புத்தகம்விற்று, கலைநிகழ்வுகளை நிகழ்த்தி, சாகசங்கள் புரிந்து, என உணர்வுடன் இந்த வங்கிக்கு பணம் வழங்கிக்கொண்டே இருந்தார்கள்.


யூதர்களை எப்படி அடக்கலாம்? இழந்த நிலங்களை எப்படி மீட்கலாம் என அரேபியர்கள் காலம்தாழ்த்தி விழித்துக்கொண்டு தமக்குள் பேசிக்கொண்டிருக்கையில், இன்னும் மிச்சமிருக்கும் நிலங்களையும் எப்படி அபகரிக்கலாம் என யூதர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

யூத தேசிய நிதி என்ற பெயரில் ஜியோனிஸ இயக்கத்திற்காக உலக யூதர்களிடமிருந்து பணம், மூட்டை மூட்டையாக குவிந்துகொண்டிருந்தது. யூதர்களின் பொருளாதார பலம் என்பது படு சுபீட்சமாக இருந்தது. சமுதாய பலத்திலும், அவர்கள் முக்கிய நாடுகளின், பெரிய பதவிகளிலும். ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுபவர்களாகவும் இருந்தார்கள். பண பலம் இருக்கின்றது. எதையும் சாதிக்கலாம் என்ற தைரியம் அவர்களுக்கு இருந்தது, தாராளமாக எங்கும் இலஞ்சத்தை பழக்கிவிட்டார்கள். அதன்மூலம் தமது காரியங்களை பணத்தினால் சாதித்துக்கொண்டார்கள்.

பலஸ்தீனத்தில் மட்டும் இன்றி, இங்கிலாந்துபோன்ற பல மேலை நாடுகளிலும் உயர் அதிகாரிகளுடனான நட்பை, பணத்தினால் பலப்படுத்தி இருந்தார்கள்.
அரேபிய முஸ்லிம்களின் யூதர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகரித்தபோது யூதர்களுக்காக பலஸ்தீன் என்ற கோரிக்கையோடு, ஹெசில் சில நாடுகளின் ஆட்சியாளர்களை சென்று சந்தித்தார். ஜெர்மனியச்சக்கரவர்த்தி ஹெய்ஸர் வில்லியம் 2, துருக்கியின் சுல்த்தான் மெஹ்ருத் பதிதீன் ஆகிய இருவரும் அவருக்கு உதவ பின்வாங்கினர்.

ஹெசின் பிரிட்டனுக்குச்சென்றார். பிரித்தானியாவுக்குரிய காலணிகளை நிர்வகித்துக்கொண்டிருந்த மூத்த அமைச்சர் ஜோசப் ஷேம் லெலினை சந்தித்து பேசினார். அவர் நிதானமாக யோசித்து, அப்போதிருந்த யதார்த்த நிலையில் யூதர்களுக்கு பலஸ்தீனம் சாத்தியம் இல்லை எனத் தெரிவித்தார். ஆனால் வேண்டும் என்றால் கிழக்கு ஆபிரிக்காவில் உகண்டாவில் யூத நாட்டினை அமைக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்த பதிலால் ஹெசில் மகுந்த வருத்தமடைந்தார். அப்போதைய நிலமைகளை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வாறு பலஸ்தீன் யூதர்களுக்கு சாத்தியப்படாது என சொல்லமுடியும் என வேதனைப்பட்டார். என்றாலும் அதை பிரிட்டனிடம் காட்டாமல் இது குறித்து யோசித்து முடிவெடுக்கலாம் எனச்சொல்லிவிட்டு விடைபெற்றார்.

எத்தனை நூற்றாண்டுகளாக நாம் துரத்தப்பட்டு ஓடிக்கொண்டே இருப்பது? நமக்கென்று பலஸ்தீனத்தை வாங்கிவிடலாம் எனத் திட்டம் தீட்டி, அந்த திட்டமும் ஓரளவு வெற்றிகரமாக தனது இலக்கை நோக்கிக்கொண்டு செல்லும் வேளையில், இன்னொரு புறம் எமக்கு எதிரான சக்திகள் கூட்டுச்சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்;வு தனி நாடுதான். பிரிட்டனின் யோசனைப்படி உகண்டாவை ஏற்றுக்கொண்டால் என்ன? ஒரு தற்காலிகத்தீர்;வு கிடைக்குமே! இதிலிருந்து பலஸ்தீனத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாமே!! என ஹெசில் யோசித்தார்.

இந்த யோசனையினை ஆறாவது யூதர்கள் கொங்கிரஸ் மாநாட்டில் அவர் முன்வைத்தார். அவ்வளவுதான், ஹெசில் தடம்மாறிவிட்டார். பாலஸ்தீன் கனவை கைவிடச்சொல்கின்றார், இவருக்கு பித்து பிடித்துவிட்டது, பிரிட்டனிடம் விலைபோய்விட்டார் இப்படி பல விமர்சனங்களுக்கு அவர் ஆளானார்.

யாருக்காக பாடுபட்டோமோ அந்த மக்களே இப்படித்தாற்றுகின்றார்களே என்று பெருமளவில் உடைந்துபோனார் ஹெசில். இதனால் படுத்த படுக்கையாகி 1904 ஆம் அண்டு இறந்துபோனார். அதன்பின்னரே ஹெசிலின் வார்த்தைகளில் இருந்த உண்மையினையும், தங்கள் வார்த்தைகளில் இருந்த விசத்தன்மையினையும் யூதர்கள் புரிந்துகொண்டு கண்ணீர்வடித்தனர். ஹெசிலிடம் மானசீகமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டனர்.

http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=185:2009-07-25-11-17-36&catid=35:2009-07-08-13-09-17&Itemid=54


♥ தமிழகத்திலேயே தமிழர்களை அடிக்கும் சிங்களர்கள்! ♥

தமிழகத்திலேயே தமிழர்களை அடிக்கும் சிங்களர்கள்!

'தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல் வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில்,

சுமார் ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி கம்பெனி கேன்டீ னுக்குள் ஒரு பெரிய மோதல் உருவாகி, தமிழர்கள் தர்ம அடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரிஸ்ஸா

மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் கடியும், அடியும் வாங்கிய செல்ல பாண்டியன் அதைப் பற்றிச் சொல்கிறார். ''மூணு மாசத் துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் இருந்துச்சுங்க கம்பெனி. ஆனா, சமீந்தா பண்டாராங்கிற சிங்களன் என்னிக்கு இங்கே ஜெனரல் மேனேஜரா வந்து சேர்ந் தாரோ... அன்னிலேருந்து எங்களுக்கு ஆரம்பிச்சுதுங்க தலைவலி. அந்தாளுக்கு தமிழர்களைக் கண்டாலே பத்திக் கிட்டு எரியும். நாங்க எதைப் பண்ணினாலும் தப்புன்னு சொல்லித் திட்டுறது, மிரட்டுறதுன்னு டார்ச்சர் பண்ணிட்டே இருப்பாரு. எல்லாத்தையும் தாங்கிட்டு வேலை பார்த்துட்டு இருந்தோம். அதனால, மத்த மாநிலத் துக்காரங்களை வச்சு தமிழ் ஆளுங்களை வம்பு பண்ண ஆரம்பிச்சாரு. குறிப்பா, ஒரிஸ்ஸா ஆளுங்ககிட்ட, 'நீங்க தமிழனுங்ககூட பழக்கம் வச்சுக்கக்கூடாது'னு சொல்லி யிருக்காரு. அவங்க முதல்ல இதைக் கண்டுக்கல. ஆனா, 'வேலையை விட்டு தூக்கிடுவேன்'னு மிரட்டுனதால, அவங்க எங்ககிட்டே தேவையில்லாம முறைச்சுக்க ஆரம் பிச்சுட்டாங்க. லேசா ஆரம்பிச்ச உரசல், நாளாக நாளாக வளர ஆரம்பிச்சுடுச்சு.

அன்னிக்கு கேன்டீன்ல வச்சு எங்களுக்கும், ஒரிஸ்ஸாக் காரங்களுக்கும் சின்ன வாக்குவாதம் உருவாச்சு. ஆனா,

திடீர்னு அவங்க அடிதடியில இறங்கிட்டாங்க, கத்திரி மாதிரி இருக்கிற ட்ரிம்மரை எடுத்து கண்டபடி கீறிவிட் டாங்க. தமிழருங்களைப் பார்த்து பார்த்து அவங்க அடிச் சாங்க; கடிச்சாங்க. அவனுங்ககிட்ட கடிபட்டதுல எனக்கு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. உடனே,

இதைப் பற்றி நிர்வாகத்துகிட்ட சொன்னோம். ஆனா, கொஞ்சமும் கண்டுக்காம, தமிழர்களை அடிச்சவங்களை பாதுகாக்கறதுலேயே குறியா இருந்தாங்க. அப்புறம் நாங்க எல்லாம் அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்!''

என்கிறார் வேதனையாக. இவரைப் போலவே ரவி என்பவ ரையும் ட்ரிம்மரால் நெஞ்சில் கீறிவிட்டிருக்கின் றனர். ஏஞ்சல் என்கிற பையனுக்கும் அடி விழுந்திருக்கிறது.

இதனைக் கண்டித்த தமிழர் தொழிலாளர்கள் தங்கள் கம்பெனிக்கு எதிரே பந்தல் போட்டு ஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் உட்கார்ந்து விட்டார்கள். அவர்களில் ஒருவரான கமலநாதன்,

''எங்க முதலாளி வினோத் நல்லவர்தானுங்க ஆனா, அவரோட பையன்கிட்டே... இந்த சமீந்தா பண்டாரா 'கம்பெனியை பக்காவா மாத்திக்காட்டுறேன்!'னு சொல்லி பவர் வாங்கிக்கிட்டு, இந்த ஆட்டம் ஆடுறாரு. இந்த கம்பெனியில ஒரு தமிழன்கூட வேலை பார்க்கக் கூடாதுங்கிறது அவரோட எண்ணம். கூடவே இலங் கையில இருந்து சிலரை கூட்டி வந்திருக்கிறாரு. அவங்களுக்கும் ஏதேதோ பொறுப்பு போட்டுக் கொடுத்திருக்காரு. அந்த இலங்கைக் காரனுங்க தமிழ் ஆளுங்களை கண்காணிச்சு, வம்புக்கிழுக்கிறதே முழுநேர தொழிலா வச்சுருக்கானுங்க. தமிழ் பொண்ணுங்க கிட்டேயும் தரக்குறைவா நடந்துக்கிறாங்க. சுடிதாரை பிடிச்சு இழுக்கிறது, பின்பக்கம் தட்டிட்டு போறதுன்னு மோசமா சிலுமிஷம் பண்றானுங்க. இதையெல்லாம் தட்டிக் கேட்டா, தகராறு வந்து அடி விழுது. இந்தப் போக்கு மாறணும்; சமீந்தாவை வேலையில இருந்து தூக்கணும்னு சொல்லித்தான் இந்தப் போராட்டத்துல உட்கார்ந்திருக்கோம்!'' என்றார்.

மெர்டியன் அப்பேரல்ஸின் ஜெனரல் மேனேஜரான சமீந்தா பண்டாராவை இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேச முயன்றோம். ஆனால், அவர் பேச சம்மதிக்கவில்லை. நிர்வாகத் தரப்பு மட்டும், ''இனவெறித் தாக்குதல் எல்லாம் இங்கே நடக்கல.

தொழிலாளர்களுக்குள்ள நடந்த சின்ன மோதலை பெரிய விஷயமா சிலர் வேணும்னே ஊதிவிட்டிருக் காங்க. இந்த விவகாரம் போலீஸ் கேஸாயிருக்கு. போலீஸ்காரங்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க. நாங்களும் பேச்சுவார்த்தை நடத்து றோம். கூடிய விரைவில் இந்த விவகாரம் சரிசெய்யப்படும்!'' என்று சொல்கிறது.

இந்த கம்பெனியில் மட்டுமில்லை...

திருப்பூரில் பல கம்பெனிகளில் இப்படியரு நிலை இருப்பதாகச் சொல்லிச் சாடும் ம.தி.மு.க-வின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ''திருப்பூர்ல இருக்கிற பல பிரபல பனியன் கம்பெனிகள்ல சிங்களளர்கள் முக்கியப் பொறுப்புல இருக்கிறாங்க. தமிழ் தொழிலாளர்களை நசுக்கிப் பிழியுறதுதான் இவங்களோட முக்கிய வேலையே. 'யூனியன் வைக்கக்கூடாது; சட்டம் பேசக் கூடாது; எதிலும் நியாயம் கேட்கக் கூடாது'ன்னு சொல்லி தமிழ் தொழிலாளர்களோட கழுத்தை நெரிக்கிறாங்க. தமிழ் பெண்கள் கிட்டேயும் பாலியல் அத்துமீறல் நடக்குது. எவ்வளவு கொடுமையான நிலை பாருங்க... இதைவிட பெரிய கேவலம் தமிழனுக்கு வேறென்ன இருந்திடப் போகுது?

இந்த சிங்களர்களுக்கு பெரிய பொறுப்பும், கைநிறைய சம்பளமும், காரும் பங்களாவும் கொடுத்து ஆடவிட்டிருக்கிற பனியன் கம்பெனி முதலாளிகளுக்கு 'தமிழுணர்வு அற்றுப் போயிடுச்சு'ன்னுதானே அர்த்தம்? மெர்டியன் அப்பேரல்ஸ்ல நடந்தது அப்பட் டமான இனவெறித் தாக்குதல்தான். இதை அப்படியே மூடிமறைக்க முயலாம, அந்த சிங்களர்களை உடனடியா வேலையில இருந்து தூக்கி எறியணும். இங்கே இருக்கிற எல்லா கம்பெனிகளுமே எந்த சிங்களர்க ளுக்கும் கூலி வேலை கூட கொடுக்கக்கூடாது. கூடிய சீக்கிரத்தில் அத்தனை கம்பெனி தமிழ் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய போராட்டங்கள்ல இறங்குவோம்!'' என்றார் ஆக்ரோஷமாக.

இதுதொடர்பாக திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர்கள் சங்கங்களிடம் பேசியபோது, ''ஒருத்தரை வேலைக்கு எடுக் கிறப்போ படிச்சவனா, நிர்வாகத் திறமையானவனான்னு பார்க்கிறோமே தவிர... அவனோட சாதி, இனமெல்லாம் பார்க்கிறதே இல்லை. பனியன் கம்பெ னிகள்ல சிங்களர்கள் ஆட்டம் போடுறாங்க... பெண்களைத் தொந்தரவு பண்றாங்கன்னு சொல்றதெல்லாம் அடிப்படையற்ற குற்றசாட்டுகள். இலங்கையில இருந்து அகதியா வந்த தமிழர்கள் பலபேருக்கு எங்க கம்பெனிகள்ல வேலை வாய்ப்பு கொடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிற எங்களுக்கா தமிழ் இன உணர்வு இல்லை?'' என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

- எஸ்.ஷக்தி, ஜெ.அன்பரசன்
படங்கள்: தி.விஜய்


http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=184:2009-07-25-10-50-48&catid=37:2009-07-08-13-09-56&Itemid=59

♥ 30 தற்கொலைப் படையினர் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தனர்..! ♥

கரும்புலிகள் கொழும்பு அனுப்பப்படவிருந்தனர் – திவயின


blacktigers1


வன்னித் தாக்குதல்களைக் குழப்புவதற்காக கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளவென 30 கரும்புலி வீரர்கள் தயார் படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த 30 பேரும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தயார்ப்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது.

அவர்களின் சீருடைகள், மற்றும் 30 பேரின் தனிப்பட்ட தகவல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆண்கள், பெண்கள் என அதிலுள்ள அனைவரும் கப்டன், மேஜர் தரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் அந்த அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

http://www.meenagam.org/?p=6480


♥ "சிங்களக்கைக்கூலி இந்து ராமே...! தமிழகத்தைவிட்டு ஓடு ..!!" ♥

சிங்களக்கைக்கூலி இந்து ராமே தமிழகத்தைவிட்டு ஓடு – புஇமு பரப்புரை

http://www.defence.lk/img/20090628_HinduLogo.jpg

சிங்களர்களுக்கு கைக்கூலியாக இந்தியாவில் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வரும் இந்து ராமை கண்டித்து தமிழகத்திலுள்ள புரட்சிகர இளைஞர் முன்னணியினர் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

சிங்கள இனவெறியன் பாசிசக்கொடுங்கோலன் ராசபக்சே அரசு, இந்திய, சீன, பாக்கிஸ்தான், மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களை கூண்டோடு அழித்து தாயகநிலத்தை பறித்து, ஈழத்தமிழர்களை ராசபக்சேவின் வதை முகாம்களில் சித்திரவதை,படுகொலை செய்துவருகின்றனர்.

முள்கம்பி வேலிகளில் விலங்குகள்போல் அடைத்தும் உண்ண உணவின்றி, குடிநீரின்றி, 'ஆட்டுமந்தை'போல் கட்டாந்தரையில் தமிழீழமக்கள் அல்லல் படுகின்றனர், இதை உலக ஏகாதிபத்திய நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்த்துவருகிறது.

இந்நிலையில் உலக ஊடகங்கள் , ராசபக்சேவின் வதை முகாம்களை பார்க்க அனுமதி மறுத்துவரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த தமிழின எதிரி 'இந்து'-ராம் தன் இந்து ஏட்டில் தமிழகத்தின் அகதி முகாம்களைவிட ராசபக்சேவின் அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளது என்று சொல்லியுள்ளார்.

indhuram

ஈழத்தமிழர்களின் பிறப்புரிமை என்பது, தனது தமிழீழ தாயகத்தை அடைவதே. அதுவன்றி தமிழீழ மக்களுக்கு அகதி முகாம் தீர்வாகாது. இது நல்ல அகதி முகாம், இது கெட்ட அகதி முகாம் என்று ஒன்றும்மில்லை. அகதிமுகாம் என்பதே சுதந்திரத்தை பறிப்பதேயாகும். இத்தகைய ஈழத்தமிழருக்கு, எதிராக எழுதிவரும் சிங்கள கைக்கூலி தமிழின எதிரி 'இந்து'-ராம் உள்ளிட்ட கும்பலை தமிழகத்தைவிட்டு விரட்டியடிக்கவேண்டும் என்று பு.இ.மு.(புரட்சிகர இளைஞர் முன்னணி) அமைப்பினரால் சென்னை மாவட்ட அளவில் சுவரொட்டி பரப்புரை விரிவாக செய்துள்ளனர்.


http://www.meenagam.org/?p=6405


♥ கைத்தொலைபேசி போன்ற வடிவ அதிசய துப்பாக்கி ♥

கைத்தொலைபேசி போன்ற வடிவமைப்பில் அதிசய துப்பாக்கி
கைத்தொலைபேசி வடிவத்தில் புதிய கைத்துப்பாக்கி உலக சந்தையில் வந்துள்ள காரணத்தால் இலங்கை அரசு மிக விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பாதுகாப்பிற்கான மையம் எச்சரித்துள்ளது.


இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'செல்போன்" வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் இலங்கைக்கும் கொண்டுவரப்படலாம் எனவே படை உயர் அதிகாரிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்தவகை துப்பாக்கி ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருப்பினும், தற்போதே உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த துப்பாக்கி 0.22 மி.மீ வகை துப்பாக்கி ரவைகள் நான்கை கொண்டது. செல்போன் வடிவில் அமைந்திருக்கும் துப்பாக்கியிலுள்ள  தொலைபேசியில் ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் வெடித்து பாயும் துப்பாக்கி குண்டு துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது. இந்த வகை துப்பாக்கிகள் பிரித்தானியாவின் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

ஈழதேசம்.கொம் நிருபர் இலக்கியன்

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=133:2009-07-26-07-57-49&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

♥ "அந்த இறுதி இசை ஒரு இன அழிப்பின் இறுதி ஓலமாய் ஒலித்த ஓசை... "பியானிஸ்ட் விமர்சனம் ♥

தனிமையின் இசைக் கலைஞன்


" மரணத்தின் வாசனையை உணர்ந்தவனால் மட்டுமே அதை ஒலிக்க எதிரொலிக்கச் செய்ய இயலும்
பியானிஸ்ட்டின் அந்த இறுதி இசை ஒரு இன அழிப்பின் இறுதி ஓலமாய் ஒலித்த ஓசை
இன்றளவும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தன் இனம் அழிக்கப்படுகையில் எங்கெங்கும் எதிரொலிக்கும் தனிமைகளின் இசை."

பியானிஸ்ட் – ஒரு தனிமையின் இசை

அமைதியான ஒரு தேசம். அந்நியர்களின் ஆக்கிரமிப்பு. மொத்தமாய் எல்லாமே மாறிவிடுகிறது. ஒரே நாளில். முதலில் ஒரு இனம் மட்டும் தனித்து அடையாளம் காணப்படுகிறது. பின் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. பின் அவர்களது இனமே மொத்தமாய் அழிக்கப்படுகிறது. அந்த அத்தனை சம்பவங்களிலும் அனைத்து துன்பங்களையும் அனுபவிக்கும் ஒருவன் , விடாமல் துரத்தும் மரணம் , அதிலிருந்து தப்பி அத்தனை கொடுமைகளுக்கும் ஒரு மௌனசாட்சியாய் தன் இசையின் மூலம் உலகத்திற்கே அறிவிக்கிறான் அவன். அவன் ஒரு பியானிஸ்ட்.

அது செப்டம்பர் 1 1939 போலந்தின் வார் சா (WARSAW) நகரம் தன் அழகோடு அமைதியாய் ஒரு காலை வேளையில் தன் வேலைகளை மும்முரமாகிறது. ஒரு நிசப்தமான வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவுக்கூடம் . அதன் உள்ளே தனிமையில் ஒருவன் தனது பியானோவில் மிகப்புகழ் வாய்ந்த ஒரு இசையை வாசித்துக்கொண்டிருக்கிறான். வெளியே அதை பதிவு செய்யும் இருவர் ரசித்தபடி இருக்கின்றனர். இசை மெல்லியதாய் நகர அவனது விரல்கள் அந்த பியோனோவினைத்தழுவ.. மிகப்பெரிய குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. வெளியே பதிவு செய்து கொண்டிருந்தவர்கள் அவனை நிறுத்தச்சொல்லி வெளியே அழைக்கின்றனர். அவன் விடாது வாசித்துக்கொண்டிருக்கிறான். மீண்டும் இன்னொரு மிகப்பெரிய சத்தம். அடுத்த குண்டு. தொடர்ந்து வாசிக்கிறான் . மூன்றாவது குண்டு அந்த கட்டிடத்தின் ஒரு பகுதிலேயே விழுகிறது. இப்போது வேறு வழியின்றி வாசிப்பதை நிறுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறுகிறான். கட்டிடத்தை விட்டு வெளியே வர அங்கே அழகான பெண்ணொருத்தி நீங்கள் சில்மேன் தானே என கேட்கிறாள். ஆம் நான்தான் என இவள் சொல்ல. அங்கே ஒரு மெல்லிய காதல். அடுத்த குண்டு மீண்டும் விழுகிறது. அனைவரும் தப்பி ஓடுகின்றனர்.

இப்படித்தான் துவங்குகிறது பியானிஸ்ட் திரைப்படம்.

ஜெர்மனி இரண்டாம் உலகப்போரினை துவக்கிய காலம் அது . போலந்து நாட்டை ஆக்கிரமிக்கிறது. அந்நாடு முழுக்க ஜெர்மனி தன் படைகளை குவித்திருக்கிறது. அப்படி ஒரு சூழலில்தான் இத்திரைப்படம் துவங்குகிறது. வீட்டிற்கு செல்கிறான் சில்மேன் என்னும் இப்படத்தின் நாயகன். அங்கே அவனது தந்தை,தாய்,தம்பி மற்றும் தங்கை என அனைவருமே பிபிசி வானொலியின் அறிவிப்பை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அதில் இங்கிலாந்து ஜெர்மனியை எதிர்த்து தன் போரை அறிவிக்கிறது. இங்கிலாந்து போலந்தைக்காக்கும் என நம்புகின்றனர். விரைவில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் விரட்டியடிக்கப்படுமென மகிழ்ச்சியடைகின்றனர். அம்மகிழ்ச்சியை அன்றிரவே அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாட்கள் நகர்கிறது. ஜெர்மனி முழுமையாக போலந்தை தன் ஆக்கிரமிப்பில் கொண்டு வருகிறது. இக்காகலக்கட்டத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் (Jews ) மீது தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்குகிறது ஆதிக்க அரசு. அனைத்து யூதர்களும் கட்டாயம் தங்களது சட்டைகளில் நீல நிற நட்சத்திரம் பதித்த பட்டையை அணிய வேண்டும் என்பதே அது. அந்த பட்டையும் இத்தனை சென்டிமீட்டர் அளவில் இருக்க வேண்டும் எனவும் நிர்பந்திக்கிறது.

பின் மற்றொரு அறிவிப்பு வருகிறது. யூதர்கள் தங்கள் வீட்டில் மிகக்குறிப்பிட்ட அளவு பணமே வைத்துக்கொள்ள வேண்டும் என அடுத்த அறிவிப்பு வருகிறது. சில்மேனின் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. அவர்களிடமிருக்கும் அதிக தொகையை மறைக்க இடம் தேடி அலைகின்றனர். கடைசியில் சில்மேனின் தந்தையின் வயலினில் அவை மறைத்து வைக்கப்படுகிறது.

ஜெர்மனியின் தொடர் அறிவிப்பு அதிர்ச்சிகள் குறைவதற்குள் இடியாய் அடுத்த அறிவிப்பு வெளியாகிறது. யூதர்களுக்கென ஊரிலிருந்து பிரிந்து தனி காலனி அமைக்கப்பட்டு அங்கே இடம் பெயர வற்புறுத்தப்படுகின்றனர். சில்மேனின் குடும்பமும் இடம் பெயர்கின்றனர். வசதியாய் வாழ்ந்த அவர்களது குடும்பம் ஒரு சிறிய குடிலுக்குள் தங்க வைக்கப்படுகின்றனர். அனைத்து யூதர்களுக்கும் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு , பசியிலும் பட்டினியிலும் கிடந்து வாடி சாகின்றனர்.

சில்மேனின் குடும்பமும் வறுமையில். சில்மேன் ஒரு சிறிய ஹோட்டலில் பியானோ வாசிக்கிறான். அதற்கிடையில் அந்த காலனியில் இருக்கும் அனைத்து யூதர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாய் அறிவிக்கின்றனர். உண்மையில் அத்தனை பேரும் கொல்லப்படவே அழைத்துச்செல்லப்படுகின்றனர். சில்மேன் மட்டும் அவரது போலந்து போலீஸ் நண்பர் ஒருவரால் எதிர்பாராமல் தப்பவைக்கப்படுகிறான். பின்தான் தெரிகிறது யூதர்கள் அனைவருமே சாகடிக்க படவே அந்த இடமாற்ற அறிவிப்பு என்பது. மீண்டும் போலந்து வீதிகளில் அநாதையாய் சுற்றித்திரிகிறான். யாருமே இல்லாத வீதிகள் அவை. மயான அமைதி. மயானமேதானோ என்று எண்ண வைக்கிறது. அத்தனை பிணங்கள்.
ஜெர்மனியப்படையிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறான். அவனை ஒரு கட்டுமானப்பணியில் வேலைக்கு அமர்த்துகின்றனர். அங்கே அவனது சக யூத நண்பர்கள் ஜெர்மனிய படையிடம் மோத ஒரு திட்டம் தீட்டுகின்றனர். இவன் அதற்கு உதவுகிறான். திட்டம் நிறைவேற்றப்படும் முன் அந்த இடத்தில் இருந்து தப்புகிறான். அங்கிருந்து தப்பி நண்பர் ஒருவரின் உதவியை நாடுகிறான்.

நண்பர் அவனை அந்த பகுதியின் ஒரு கட்டிட்டத்தில் தங்க வைக்கிறார். எப்போதாவது உணவு . என்கிற ரீதியில் ஒரு சிறிய அறைக்குள் பல நாட்கள் முடங்கிக்கிடக்கிறான். அவனுக்கு உதவிய நண்பர் இறந்துவிட அந்த அறையைவிட்டு வெளியேறி மீண்டும் மறைந்து வாழ இடம் தேடி அலைகிறான். மீண்டும் ஒரு நண்பர். மீண்டும் தனிமை. எப்போதாவது உணவு. ஜன்னல் வழி உலகம்.

அறையிலேயே பியானோ இருந்தும் வாசிக்க இயலாது தவிக்கிறான். பல முறை மரணத்தைக் கண்டும் இறந்து போகாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துகிறான். இப்படி மறைந்து வாழ்வதற்கு இறந்து போய்விடலாமே என எண்ணி அழுகிறான்.
இதற்கிடையில் போலந்து நாடே அழிந்து போய் கிடக்கிறது. அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதி அழிந்து போயிருந்தது. ஜெர்மனி அடி மேல் அடி வாங்கி தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.

இவன் மட்டும் யாருமில்லா போலந்து வீதிகளில் உணவு தேடி அடையாளமிழந்து அலைகிறான். ஒரு பாழடைந்த வீட்டில் கிடைத்த பழைய ரொட்டியும் ஒரு டின் ஏதோ ஒரு திரவத்தையும் வைத்துக்கொண்டு அங்கேயே மறைந்து வாழ்கிறான். ஒரு நாள் அந்த வீட்டிற்குள் ஒரு ஜெர்மனி இராணுவ அதிகாரி ஒருவர் நுழைகிறார். இவன் அவரைக்கண்டு அஞ்சுகிறான். யார் நீ என கேட்க , தான் ஒரு பியானிஸ்ட் என்கிறான். எங்கே வாசித்துக்காட்டு என சொல்கிறார் அந்த அதிகாரி.

பல வருடங்களுக்கு பிறகு பியானோவில் விரலை வைத்து வாசிக்கத்துவங்குகிறான் தன் வாழ்க்கையின் மிக உன்னதமான இசையை இடைவிடாது பல மணி நேரங்கள் வாசித்து கொண்டே இருக்கிறான். அந்த அதிகாரி அந்த இசையில் மெய்மறந்து நேரம் செல்வதைக்கூட அறியாது அமர்ந்திருக்கிறார்.

இரவாகிறது. அவனை உயிரோடு விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் அந்த ஜெர்மனிய அதிகாரி. தினமும் அவனுக்கு அந்த பாழடைந்த வீட்டிலேயே உணவு கொண்டு வந்து தருகிறார். அது போல ஒரு நாளில் இனி நான் வரமாட்டேன் இனி உனக்கு விடுதலை என தனது கோட்டை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு செல்கிறார்.

போர் முடிவடைகிறது. இவன் சுதந்திரமாய் தன் நாட்டின் வீதியில் இறங்கி நடக்க , அவனது ஜெர்மனிய கோட்டைக் கண்டு போலந்து நாட்டினர் அவனை ஜெர்மானியன் என எண்ணி கல்லால் அடிக்கின்றனர். தன்னை ஒரு யூதன் என அறிவித்துக்கொள்கிறான். பின் ஜெர்மனியின் கொடும் சிறைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுகின்றனர். அங்கே அந்த அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு யூதனிடம் சில்மேனை எனக்கு தெரியும் அவரிடம் நான் இங்கிருக்கிறேன் என சொல்லுங்கள் என்கிறான்.

மீண்டும் சில்மேன் தனது வானொலி நிலையத்தின் ஒலிப்பதிவுக்கூடத்தில் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறான். அதே அமைதி. அதே இசை. சுதந்திரமான இசை.
அந்த அதிகாரியைத்தேடி சிறைக்கூடம் இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறான். அங்கே சிறையும் இல்லை அதிகாரியும் இல்லை..

சில்மேன் என்கிற அக்காலத்திய பியானிஸ்ட் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதப்பெற்ற ஒன்றாகும்.

அது தவிர பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.
இப்படத்தின் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. ஜெர்மனிய சிறைகளின் கொடுமைகளையும் , கீட்டோ எனப்படும் யூதர்களின் காலனிகளில் நடந்த பிரச்சனைகளையும் கண்முன்னே நிறுத்துகிறார். யூதரான இவர் போலந்தைச்சேர்ந்தவர். இவரும் ஜெர்மனியின் படைகளால் துன்புறுத்தப்பட்டு அதிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்காக ஆஸ்கரின் சிறந்த இயக்குனர் விருதையும் வென்றார்.

தனிமையின் இசை மிகவும் அழகானது
அது நம் வாழ்வோடு இணைந்தது
அது மரணத்தின் வாசலில் அதீத ஒலியுடன் எதிரொலிப்பது
மரணத்தின் வாசனையை உணர்ந்தவனால் மட்டுமே அதை ஒலிக்க எதிரொலிக்கச் செய்ய இயலும்
பியானிஸ்ட்டின் அந்த இறுதி இசை ஒரு இன அழிப்பின் இறுதி ஓலமாய் ஒலித்த ஓசை
இன்றளவும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தன் இனம் அழிக்கப்படுகையில் எங்கெங்கும் எதிரொலிக்கும் தனிமைகளின் இசை.


http://www.athishaonline.com/2009/07/blog-post_21.html

http://aycu13.webshots.com/image/16212/2005846766756436116_rs.jpg       http://www.movieposterdb.com/posters/05_12/2002/0253474/l_74020_0253474_46127929.jpg


நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!