Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, October 25, 2009

♥ இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர் நக்கீரன் தொடர்....! ♥

அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

இக் கொலைகள் எப்போது நடைபெற்றன என்ற விவரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள், வாசகர்களே.

பெண்கள் உட்பட சுமார் 4நால்வர் இங்கு கொலைசெய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் அதிர்வுடன் தொடர்புகொள்ளவும்.

athirvu@gmail.com







http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=712






இலங்கை மீதுள்ள போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா


இலங்கையில் இந்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை நடந்த யுத்தத்தில் 170 சர்வதேச சட்டமீறல் சம்பவங்கள் இடம் பெற்றன என்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டனர் என்றும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், செய்தி நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை தெரிவித்த பகிரங்கப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் செய்மதிப்படங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தயாரித்துள்ள 68 பக்க அறிக்கையிலேயே இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் அனுபவித்த அவலங்கள் குறித்து மிகவும் வேதனையளிக்கக்கூடிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிகாரிகள் தாம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்துவதாகக் கூறியுள்ளதால் அமெரிக்கா அதை ஏற்றுக்கொண்டு இலங்கையில் உண்மையில் பக்க சார்பற்ற விசாரணை நடக்கிறதா என பார்க்கபோவதாக இந்த அறிக்கைக்கான விசேட தூதர் ஸ்ரீபன் ரப் கூறினார். இதேவேளை அமெரிக்க ஒதுக்கீட்டு உபகுழுவின் தலைவரும் இந்த அறிக்கைக்கான அனுமதியை வழங்கியவருமான செனட்டர் பட்ரிக் ஜே.லீகே இலங்கையில் இரு தரப்பும் மிக மோசமான யுத்த மீறல்களில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் முழுமையாகத் தீர்ந்துபோயுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி யுத்தத்தின் போது தாக்குதல்கள், வன்முறைகள், பட்டினி, மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களின் நிலையையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை ஒவ்வொரு மீறல் சம்பவங்களையும் திகதி வாரியாக விவரித்துள்ளது. அதிலுள்ள சில விடயங்களாவன:

- ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பல தடவைகள் விடுதலைப்புலிகள் இளைஞர்கள் பலரை பிடித்துச் சென்றனர். ஆனால் இக்காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை சரியாகக் கிடைக்கவில்லை.
- போர்க் காலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காயங்கள் குறித்த முக்கியமான பல விவரங்கள் பதியப்படவில்லை என்றபோதும், ஆனால் அரச படையின் பெருமளவு ஷெல் தாக்குதல் பாதுகாப்பு வலயத்தின் மீது இடம்பெற்றன.

- பொதுமக்கள் வெளியேற இரு தடவைகள் 48 மணித்தியால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், அந்தக் காலம் முடிவடைவதற்குள் அரச படைகள் மீண்டும் ஷெல் தாக்குதலை ஆரம்பித்தனர். அதோடு விடுதலைப் புலிகள் பெருமளவு பொதுமக்களை வெளியேற விடாமல் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்தனர்.

- இலங்கைப் படையினர் சட்டவிரோதப் படுகொலைகளை மேற்கொண்டனர்.

- மோதலின் இறுதிக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைவதற்காக சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்து, இணக்கப்பாடு ஏற்பட்ட போதிலும் கூட, அவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
எனக் கூறப்பட்டுள்ளது.

அதிர்வு இணையம் மீது கஸ்பர் அடிகளார் கடும் கோபம்














நக்கீரன் இதழிலும், இணையம் ஊடாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் அதிர்வு குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பலர் இவர் எழுதுவதைப் இப்போது படிப்பது இல்லை என்றாலும், பொறுப்புள்ள இணையம் என்றவகையில் அதைப் படித்த சிலருக்கு நாம் விளக்கம் கூறியாகவேண்டும். அதிர்வு இணையத்தளம் நடத்துபவர் விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் எனவும், பின்னர் பொட்டு அம்மானால் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் கஸ்பர் புணைந்துள்ளார் ஒரு சிறுகதை. அத்துடன் அதிர்வு இணைய நிர்வாகி இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் சேர்ந்து பலகாலமாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள கஸ்பர் அடிகளார் , பின்னர் போர் உக்கிரமடைந்தக் காலத்தில் தேசியத்தலைவர் அதிர்வு நிர்வாகியை அழைத்ததாகவும் அவர் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்ததாகவும் கூறியுள்ளார்.


இலங்கை புலனாய்வுத் துறையுடன் நீண்டகாலமாக சேர்ந்தியங்கும் ஒருவரை தேசிய தலைவர் ஈழத்திற்கு வருமாறு அழைப்பாரா ? அடிமுட்டாளான கஸ்பர் இப்போது இவ்வுலகில் இல்லை, கனவு லோகத்தில் சஞ்சாரம் செய்கிறார். யாரிடமோ விசாரித்துவிட்டு அதனை அப்படியே சிறு பிள்ளைத் தனமாக எழுதுகிறார். அதற்குப் பிரபல நாளிதழ் ஒன்று களம் அமைத்துக் கொடுக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டம் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ள இவ் வேளையில், அரசியல் போராட்டத்தில் எமது சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுக்க நாம் அரும்பாடுபடும் வேளையில், இந்திய மத்திய அரசின் உதவியுடன் அடிகளார் அதனைத் கவுக்கப் பார்க்கிறார்.


ஈழ விடுதலைப் போராட்டத்தை அதன் உன்னதத்தை விற்கவேண்டாம் என அதிர்வு வேண்டிக்கொண்டது, தமிழ் மக்களின் வாழ்க்கையோடு விளையாடவேண்டாம் என அது அவர்களைக் கேட்டுக்கொண்டது. அதில் பிழை எதுவும் இருப்பதாக நாம் கருதவில்லை. முன்னுக்குப் பின் பல முரணான தகவல்களுடன் மெகா சீரியல் எழுதுவதும், அதனை பரபரப்பாக்கி விற்றுச் சம்பாதிப்பதையும் நாம் நாளாந்தம் பார்க்கிறோம். அதிர்வு இணையத்தில் எழுதப்பட்ட கருத்துக்களால் ஆடிப்போயுள்ள கஸ்பர் அவர்கள் தற்போது புலம் பெயர் தமிழர்களின் இணையமான அதிர்வை நேரடியாகத் தாக்க முனைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.


தடைப்பட்டுள்ள எங்கள் போராட்டங்களை முன்னெடுத்தல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராடுதல் என அதிர்வு இணையத்திற்கு பல பொறுப்புகள் இருக்கிறது, இவரைப் போன்ற விமர்சகர்களின் விமர்சனத்திற்கு நாம் முகம் கொடுத்து எமது காலத்தையும் நேரத்தையும், வீணடிக்க விரும்பவில்லை. யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்பதை இனி வரும் காலம் சொல்லும், கஸ்பரின் முகத்திரை கிழிக்கும் ... தெரு நாய் குரைக்கிறது என்று நாமும் குரைக்க முடியுமா ?

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=726


சடலங்கள்-எலும்புக்கூடுகள் மீது 9-வது உலகத்தமிழ் மாநாடு

http://adhikaalai.com/images/stories/users/karunabeard.jpg

ஈழத்தில் பூவும் பிஞ்சும் கருக்கப்பட்ட வாசம், உலகின் மூக்கில் நாறுகிறது. விருட்சங்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட பின்னரும், சல்லி வேர்களைத் தோண்டி அழிக்கும் மனித வேட்டைகள் தொடருகின்றன. சிங்கள வெறிச் சிப்பாய்கள் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு இரை கொள்வதை போராயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். முகாம்களிலிருந்து பிரிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், 27 ஆயிரம் இளைஞர்கள் எந்த சிங்கத்தின் குகைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? வீடு எங்கே, ஊர் எங்கே, நிலம் எங்கே, வாழ்வு எங்கே என்ற மிகப்பெரிய கேள்விகளோடு மூன்று லட்சம் தமிழர்கள் வெற்று வெளியை நோக்கி வெறித்த, நிலைகுத்திய பார்வையுடன் துக்கித்து நிற்கிறார்கள். இந்திய வல்லாதிக்க அரசின் துணையோடு இலங்கை இனவெறிப்பாசிஸ அரசு, மறுபடி மறுபடி இரையெடுக்கப்பாய்கிறது. உலகத் தமிழர்களின் சிவந்த கண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

இங்குள்ள ஒருவர் - அவர் வேறு யாரோ அல்ல தமிழக முதல்வர் “இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தி அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளைக் குறைசொல்ல வேண்டாம்” என்று அறிக்கை தருகிறார். (22.09.2009) மனிதம் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க இந்திய நடுவணரசும் எதுவும் செய்யவில்லை; கடிதம் எழுதியே காலம் கழிக்கும் தமிழக அரசும் நேர்மையாய் நடக்கவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று நீர் உரிமைகள் பறிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் வறுமைப் பள்ளத்துக்குள் விரட்டப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டும் வாழ்வாதாராம் பறிக்கப்படுவது அன்றாடக் காட்சியாகி விட்டது.

வாழ்வியல் நெருக்கடிகளால் வீதிக்கு வரும் மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகள் கொதிநிலை அடைந்து கொண்டிருக்கிறபோது, தமிழர்களின் கவனத்தை திசை திருப்ப முதல்வர் கருணாநிதி கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டினை அறிவித்திருப்பது அரசியல் ஆதாயம் தேடும் தன்னல நோக்கமின்றி, வேறு என்ன? ஒரு இனத்தை அழிக்கத் துணை செய்தவர் அந்த இனம் பேசும் மொழி வளர்ச்சிக்கு உலகத்தமிழ் மாநாடு என்பது ஏமாற்று நாடகம். சேக்ஷ்பியரின் ‘மேக்பெத் நாடகத்தில்” தன்னுடைய சித்தப்பாவான ‘டங்கன்’ என்ற மன்னனை, ஆட்சியைக் கைப்பற்ற, கணவனுடன் கூட்டுச் சேர்ந்து கொலை செய்கிறாள் மேக்பெத். அந்தக் கொலை நினைப்பே தொடரும் வேதனையாகி தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு ஆளாகிறார்கள்.

தூக்கத்தில் நடந்துக் கொண்டே மேக்பெத் சொல்கிறாள்; “அரேபியாவின் வாசனைத் தைலங்களையெல்லாம் வைத்துக் கழுவினாலும் என் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை போகாது” அதுபோல் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாய் நடத்தி - தன்மேல் படிந்திருக்கிற ரத்தக் கறையை உலகத்தின் பாராட்டு மழையில் கழுவிட நினைக்கிறார் கருணாநிதி. ஒவ்வொரு தமிழறிஞராய் உள்ளிழுக்கப்பட்டு, வரவேற்பு அறிக்கை வாசிக்கிறார்கள். தன் குருதியிலேயே கலந்து விட்டிருக்கிற அரசியல் இயல்பாகிப் போன “விழா மோகம்” எனும் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளவும்; தமிழருக்கும், தமிழுக்கும் நேரும் எத்தகைய இழிவும் தனக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்கவும் நடக்கப் போகிறது இந்த மாநாடு.

தமிழ்மக்களே .....
தமிழ் உணர்வாளர்களே ...
தமிழ்க் கலை, இலக்கியவாதிகளே....
தமிழகத் தமிழறிஞர்களே...
அயலகத் தமிழறிஞர்களே...
மனச்சான்று நிறைந்த மாமனிதர்களே....

இந்த ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம். ஒவ்வொரு பகுதியிலும் ஒன்று திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்புவோம்.

உலகத் தமிழ் மாநாட்டைப் பார்க்காதீர்
உலகத் தமிழ் மாநாட்டைக் கேட்காதீர்
உலகத் தமிழ் மாநாட்டைப் பேசாதீர்...

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=692





















கூட்டாஞ் சோறு
சுவையில்லை
அகதி மண்

-ஜா.ஜெயராஜ்

இரா.இரவி
http://www.kavimalar.com


புதினம் இணையம் மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது









தமிழ் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்று பல காலமாக இயங்கிவந்த புதினம் இணையத்தளம் இன்று முதல் முடக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது. புதினம் இணையத்தளம் மே 17 வரை தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய இணையத்தளமாக இயங்கிவந்தபோதும், "வழுதி" போன்றோர் எழுதிய சில கட்டுரைகள் காரணமாக ஈழத் தமிழர்களின் எதிர்ப்புக்களையும், இதனால் பல சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசின் செய்திகளை பிரசுரிக்கும் ஒரு முக்கிய இணையமாக விளங்கியது புதினம். இவ்வாறு காரணம் எதுவும் சொல்லாமல் தனது சேவைகளை அது முடக்கியதற்கான சரியான காரணத்தை வெளியிடவேண்டும்.

அத்துடன் வழுதி போன்றோரின் கட்டுரைகளை எழுதி தமிழ் மக்களைக் குழப்பி தற்போது திடீரென இவ்வாறு முடங்குவது, ஏன் எனத் தெரியவில்லை. விமர்சனங்கள் இல்லாமல் நாம் செயல்பட முடியாது. அதுபோல ஆழும் கட்சி என்றால் எதிர்க் கட்சியும் இருந்தாக வேண்டும். அந்த வகையில் நல்லது கெட்டதுகளை, மற்றும் விமர்சனங்களை அது முன்வைத்தது. இருப்பினும் புதினம் இணையம் இனிச் செயல்படாது என்ற அறிவிப்பை பார்ப்பதில் அதிர்வு இணையம் ஆச்சரியமடைவதுடன் தனது கவலையையும் தெரிவிக்கிறது.

புதினம் இணையத்தளம், அதன் உரிமையாளர்களால் முடக்கப்பட்டதா இல்லை, அதன் வலையத்தளத்தில் எவரேனும் ஊடுரு இவ்வாறு செய்திருக்கிறார்களா என இதுவரை சரியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் பல நேயர்கள் புதினம் ஏன் முடக்கப்பட்டது என எம்முடன் தொடர்புகொண்டு கேட்டதற்கமைவாக இச் செய்தியை நாம் பிரசுரிக்கிறோம்.

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=637

புலிகளுக்கு ஆயுதம் வழங்கி பலம் பெறச்செய்வோம் மாவோஸ்டுகள் இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது. இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது.

இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.

அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.

சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என்று இந்திய மாவோஸ்ட் கட்சியின் தலைவர் கணபதி இவ்வாறு கூறினார்.


விண்ணகன்,
ஈழதேசம்.கொம்

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=1067:2009-10-22-09-44-16&catid=1:aktuelle-nachrichten&Itemid=50





அரசிலும் குழப்பம், நாட்டிலும் குழப்பம்... இப்பொழுது குடும்பத்திலும் குழப்பம்... இவர் தான் மகிந்த ராஜபாக்சே ..?










இப்போதுள்ள அரசியல் சிக்கல்களைத் தீர்க்கும் பொருட்டு, பசில் ராஜபக்சே மற்றும் கோத்தபாய ராஜபக்சே ஆகிய இரு சகோதரர்களையும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து எட்ட வைக்கும்படி மகிந்த ராஜபக்சே அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சே கேட்டுள்ளார் என அலரி மாளிகை வட்டாரச் செய்திகள் கூறுகின்றன. இலங்கையின் முதற்பெண்மணியின் கருத்துக்கு மகிந்தாவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஜனாதிபதிச் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஒத்துப் பாடியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்தக் கருத்துக்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் ஷிராந்திக்கு வழங்கப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகாவுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகலுக்கு கோத்தபாய ராஜபக்சேவே காரணம், இது மஹிந்த ராஜபக்ஷவின் ராஜபக்சேவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்குமாம். ராஜபக்சே குடும்பத்து உள்முரண்பாட்டையும் இந்த முறுகல் ஏற்படுத்தியுள்ளதால், பசிலையும் கோத்தபாயவையும் பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை அமைதியாக இருக்கும்படி மஹிந்த கேட்டுள்ளார்.

ராஜபக்சேவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்குமாம். ராஜபக்சேவின் குடும்பத்து உள்முரண்பாட்டையும் இந்த முறுகல் ஏற்படுத்தியுள்ளதால், பசிலையும் கோத்தபாயவையும் பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை அமைதியாக இருக்கும்படி மஹிந்த கேட்டுள்ளார்.

இது குறித்து ஈழ அகதி கூறும் பொழுது, நாட்டை அழித்தீர்கள், நாட்டு மக்களை அழித்தீர்கள்...மூன்று லட்சம் மக்கள் விடும் கண்ணீர்....இது..! நாசமாகப் போக வேண்டும் உங்கள் குடும்பம்...என்றார் ஈழத்துக்காரர்..


விண்ணகன், ஈழதேசம்.கொம்

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=1048:2009-10-20-09-15-37&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

ஜெகத் கஸ்பர் நல்லவரா ? துரோகியா ?


ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா? அதிர்வு இணையதளம் ஏன் அவரைக் காய்ச்சி எடுக்கிறது?

முதல் கேள்விக்கு ‘நாயகன்’ பாணி ‘தெரியலியே…’தான் பதில்!

kasperஎனவே அடுத்த கேள்விக்குப் போய்விடலாம்…

ஜெகத் கஸ்பர் ராஜ் நக்கீரனில் மறக்க முடியுமா? தொடரை ஆரம்பித்த புதிதில் தமிழீழம், விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களோடு, பிற அனுபவங்களையும் அவர் எழுதி வந்தார். பின்னர் இறுதிப் போரின் இறுதிக் கட்டமான மே 17-ம் தேதிக்குப் பிறகுதான் தொடர்ந்து பிரபாகரன் குறித்த கட்டுரைகளை அவர் தீவிரமாக எழுதத் துவங்கினார்.

பிரபாகரன் பேட்டி என ஆரம்பித்தவர், 80 அத்தியாயங்களுக்கு இந்தத் தொடரை இழுப்பதற்காக இலக்கில்லாமல் பல விஷயங்களைச் சுற்றி வளைத்து எழுதுவதாகவே தமிழுணர்வாளர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இது மேலோட்டமான அவதானிப்புதான்.

ஆனால் ஜெகத் கஸ்பரின் உண்மையான முகம் என்ன என்பது இன்னும் பலருக்கு புலப்படவில்லை. பிரபாகரனை தேசியத் தலைவர் என்று உயர்த்திப் பிடிக்கும் இந்த மனிதருக்கு, இறுதி நாளில் நிகழ்ந்த துயரத்தில் ஏதோ ஒரு பங்கிருப்பதை புலம்பெயர் தமிழர்கள் உரக்கச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவரைப் போன்றவர்கள் பேச்சை நம்பித்தான் நடேசன், புலித்தேவன் போன்றோர் வெள்ளைக் கொடிகளோடு போய் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள் என்ற உண்மையை கஸ்பரே சுற்றி வளைத்து ஒப்புக் கொள்கிறார்.

அந்த நாளில் சிங்களத்துக்கு உதவிய இந்திய அரசுக்காக, அல்லது இந்திய அரசின் சார்பில் இயங்கியவர்களுக்காக கனிமொழியுடன் இணைந்து சில வேலைகளைச் செய்துள்ளார் கஸ்பர் என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் பிரபாகரனை இவர் தமிழீழத்தில் சந்தித்தது வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே என்றும், இவருக்கு பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார் என்பதைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை என்றும் அதிர்வு கூறுகிறது. இந்த 6 நிமிடச் சந்திப்பை வைத்துக் கொண்டு, புலிகள் இயக்கத்துக்கே தான்தான் காட்பாதர் என்ற ரேஞ்சுக்கு கஸ்பர் பேசி, எழுதி வருவது ஏமாற்று வேலை என்பது அதிர்வின் வாதம்.

ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு போராடி சிறைவாசம் அனுபவித்த நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்களை விமர்சிக்கையில் ‘விபச்சாரம்’ போன்ற வார்த்தைகளை கஸ்பர் பயன்படுத்தியதோடு, ஈழப் போராட்டத்தையும் பிரபாகரனையும் தவறாக வழிநடத்தியவர்கள் என அவர்களைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஈழப் போராட்டத்தை இந்தியாவின் காலடியில் வைக்கும் கஸ்பரின் முயற்சி பலிக்காததால் வந்த ஆத்திரத்தின் விளைவு இது’ என்கிறது அதிர்வு.

ஆனால் ஜெகத் கஸ்பரோ, அந்த அதிர்வு தளமே இலங்கை அரசின் ஏஜென்ட் என்று ஒரே போடாகப் போடுகிறார். அதற்கு பல விளக்கங்களை இந்த வார நக்கீரனில் ‘இணைய தளப் புல்லுருவிகள்’ என்ற தலைப்பில் தந்துள்ளார். பிரபாகரன் தன்னுடன் எவ்வளவு நேரம் பேசினார் என்பதற்கு வீடியோவுடன் விரைவில் ஆதாரம் தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இது முறையான பதிலல்ல. லாவணி மாதிரிதான் தெரிகிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘ உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா… எடுத்து விடட்டுமா?’ என்று மிரட்டுவது அருட்தந்தைக்கு அழகல்ல.

தன்னைச் சுற்றிய பல சந்தேகக் கேள்விகளுக்கு கஸ்பர் பதில் சொல்லித்தானாக வேண்டும்.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது வேறு நடவடிக்கைகளில் சரியாக வரலாம். ஆனால் ஒரு இனத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் தோழன், அவர்களை நசுக்கத் துடிக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களான கனிமொழி, கார்த்தி சிதம்பரத்துக்கும் நண்பன் என்ற தனது நிலைப்பாட்டின் வெளிப்படைத் தன்மையை அவர் தெளிவாகச் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இவருக்கும் ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்திய திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?

‘இந்தியாவின் உதவியோடு போர்நிறுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டும் புலிகள்’ என்று இப்போது சொல்கிறார் கஸ்பர்.

2008 மாவீரர் தின உரை தொடங்கி, போரின் இறுதிக் கணம் வரை ‘இந்தியாவே எமது நண்பன். இந்தியாவின் மூலம் போர் நிறுத்தம் வேண்டும்’ என்றுதானே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனும் கூறிவந்தார்கள். அதை இந்தியா குறைந்தபட்சம் செவிமடுக்கக் கூட தயாராக இல்லையே… மாறாக புலிகளை பயங்கரவாத இயக்கம் என்றுதானே கடுமையாகப் பேசினார்கள் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள்?

இறுதிநாளில், கஸ்பரும் சம்பந்தப்பட்ட அந்த சரணடைவு நிகழ்வில், அளிக்கப்பட்ட உறுதியை மீறி தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள்?

கஸ்பர் கருத்து சொல்வது தவறல்ல… ஆனால் இங்கே அதோடு நிற்கவில்லை. அந்தக் கருத்து சொல்லலின் நீட்சி களப்பலியில் அல்லவா முடிந்திருக்கிறது!

இதற்கு மேல் எழுதினால் நம்மையும் ‘லிஸ்டில்’ சேர்த்துவிடுவாரோ என்னமோ!!

(பால் பழனி)

என்வழி

தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.

’தமிழீழ மக்கள் இந்தியாவால் கொல்லப்பட வேண்டும், அல்லது இந்தியாவுக்காக கொல்லப்பட வேண்டும்!’

-அம்பலமாகும் ஜெகத் கஸ்பர்-

http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_5711.html



இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்




""வதைமுகாம்களைத் திறந்து எமது மக்களை வாழவிடுங்கள்'' என்று முப்பதாயிரம்தமிழர்கள் கடந்த சனிக்கிழமையன்று லண்டன் வீதிகளில் முழக்கமிட்ட வாறுபுகழ்பெற்ற ஹைட் பூங்காவில் கூடினர். பேரி கார்ட்னர், கேத்வாஸ், எட்டேவி,ஜோஆன் ரியான், லீ ஸ்காட், கேத் பிரின்ஸ் உள்ளிட்ட பிரித்தானியாவின்முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். பாலஸ்தீன விடுதலைப்போராட்ட ஆதரவுக் குழுக்கள், லத்தீன் அமெரிக்க தோழமை குழுக்கள் உள்ளிட்டபத்துக்கும் மேலான முற்போக்கு ஆதரவு அமைப்புகள் பேரணியில் இணைந்திருந்தன.மிக முக்கியமான பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்த இதுவரை விடுதலைப்போராட்டத்தில் அக்கறை மேற்கொள்ளாத இளைய தலைமுறை புதியதோர் உறுதியுடன்பங்கேற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப்பயணத்தில் இது முற்றிலும் புதியதோர்பரிமாணம்.

இதேகாலகட்டத்தில் பிறிதொரு வெற்றி வடஅமெரிக்காவில் தமிழர்களுக்குக்கிடைத்திருக்கிறது. நிர்வாணம் செய்து கை, கால்கள் கட்டுண்ட நிலையில் தமிழ்இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சிகளைபிரித்தானியாவின் "சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அது உண்மை யானதல்ல-உருவாக்கப்பட்ட போலி என ராஜபக்சே அரசு உலக அளவில் பெரும்பணம் செலவிட்டுபிரச்சாரம் மேற்கொள்ளும்படி நிர்பந்தத்திற்குள்ளானது. ஆனால் ராஜபக்சேஅரசின் பொய்யை முறியடிக்கும் இலக்குடன் "இன அழித்தலுக்கெதிரான அமெரிக்கத்தமிழர்கள்' அமைப்பு மேற்கொண்ட விஞ்ஞான அடிப்படை யிலமைந்த முயற்சியின்விளைவாக அந்த ஒளிப்பதிவு உண்மையானது, உருவாக்கப்பட்டதல்ல என அமெரிக்க உயர்ஆய்வு மையம் ஒன்று உறுதி செய்துள்ளது.

அழிவின்இடர்பாடுகளின்று மீளும் வழி தேடி மூச்சுத் திணறும் தமிழர்களுக்கு இவையெல்லாம் மிகச் சிறிய வெற்றிகள்தான் -ஆயினும் நம்பிக்கைக்கு இன்னும்இடம் இருக்கிறது. தொடர்ந்து பயணிக்க லாம் என்ற மனபலம் தருகிற வெற்றிகள்.அதே வேளை நாம் கடக்க வேண்டிய தூரம் சிறியதல்ல, மிக நீண்டது.விடுதலைப்போராட்டம் மீது சார்த் தப்பட்ட பயங்கரவாதம் என்ற வஞ்சகத்திரைஇன்னும் அகற்றப்படவில்லை, யுத்த குற்றங்களுக்கான அனைத்துலக நீதி விசாரணைமுயற்சிகள் முன் நகர்வதாகத் தெரியவில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் ஒன்றுபட்ட, இடைவிடாத முயற்சிகள் இவற்றையெல்லாம் சாதித்து விடக்கூடியவாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பினை சிதைத்திட ராஜபக்சே அரசு இன்று இருவிதமானதந்திரோபாயங்களை முன்னிறுத்தி முனைப்பாக இயங்கி வருகிறது.

முதல்வியூகம் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைத்து, அவர்களுக்குள் ஐயங்களையும் கருத்து மோதல்களையும் தூண்டி அவர்களை சலிப்புறச் செய்துபலவீனப்படுத்துவது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் களத் தலைமை வெளிப்படையாகஇயங்க முடியாத இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கிற அந்த இடைவெளியை இலங்கைவெளியுறவு மற்றும் ராணுவப் புலனாய்வு அமைப்புகள் இணைந்து இப்பணியைகச்சிதமாய் செய்து வருகின்றன.

அதற்குஓர் சிறு உதாரணமாக "அதிர்வு' என்ற இணையதளத்தின் செயற்பாடுகளை கூர்ந்துநோக்கி ஆய்வு செய்தாலே போதுமானது. விடுதலைப் போராட்டத்துடனான புலம்பெயர்தமிழர்களின் முக்கிய இழையாக "இணையம்' (Internet) இன்று திகழ்கிறது. மூத்ததளபதிபானு அவர்களைச் சுற்றியே இரண்டு துரோகிகளை ஊடுருவச் செய்ய முடிந்தஇலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு சொகுசான ஐரோப்பிய-வடஅமெரிக்கச்சூழலில் துரோகிகளை விலைக்கு வாங்குவதொன்றும் பெரிய வேலையல்ல.பெருமைக்குரிய தளபதி பானு அவர்களுக்கு தெரியாமலேயே அவரைச் சுற்றி நடந்தஊடுருவல் குறித்து பிறிதொரு இதழில் நிச்சயம் பதிவு செய்யப்படும்.

புலம்பெயர்தமிழர்களின் "உணர்வுகள்' பெருமளவு இணையத்தினூடாக (Internet) இயங்குவதையும்இயக்கப்படுவதையும் நன்றாக அறிந்த இலங்கை புலனாய்வுப் பிரிவு தமிழ்இணையங்களை ஊடுருவியுள்ளது, கூலி கொடுத்து இயக்குகிறது. முதலில் அவ்வாறுஇலங்கை புலனாய் வுப் பிரிவுகளால் உருவாக்கப்பட்ட தமிழ் இணையம் "ஏசியன்ட்ரிபியூன்' (Asian Tribune). இதன் நடத்துனர் ராஜசிங்கம், குழப்பநிலையிலிருந்த கருணம்மானை துரோக முடிவுக்கு திட்டமிட்டு நுட்பமாக உந்தித்தள்ளியவர்களில் முக்கியமானவர். தமிழீழ விடுதலை கருத்தாக்கத்தைசிதைப்பதிலும், குழப்பங்களை உருவாக்குவதிலும் இந்த "ஏசியன் ட்ரிபியூன்'முக்கிய பங்காற்றி வருகிறது.

"ஏசியன்ட்ரிபியூனை' தொடர்ந்து இலங்கை புலனாய்வுப் பிரிவுகள் தத்தெடுத் துள்ளது" அதிர்வு' என்ற இணையதளத்தை. இவர்களின் தந்திரம் மிகவும் எளிதானது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவான முகம் காட்டி இணை யத்தை நன்றாக வளர்ப்பார்கள். ஓரளவுக்கு வளர்ந்தபின் மக்களை குழப்பி பலவீனப் படுத்துவதற்குப் பயன்படுத்துவார்கள். அக்டோபர் 11-ந் தேதி இந்த இணையம் நக்கீரன்பத்திரிகைக்கெதிராகவும் அதில் என் எழுத்துக்களையும் விமர்சித்து ஓர்செய்திக் கட்டுரை வெளியிட்டி ருந்ததாய் நண்பர்கள் என் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். பொதுவில் கட்டற்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை என எப்போதுமே கருதுவதால் விமர்சனம் நல்லதுதானே என விட்டுவிட்டேன். கட்டுரைஎழுதியிருந் தவரது பெயர் தமிழரசு என்றும் சொன்னார் கள். இரண்டுநாட்களுக்குப்பின் லண்டனிலிருந்து விடுதலைப் பணியில் நீண்ட காலமாய்ஈடுபட்டுவரும் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு "அதிர்வு' இணையதளம்நடத்துபவரது பெயர் கண்ணன் என்றும், தமிழரசு என்று எவரும் தாங்கள் அறிய"அதிர்வு' வட்டத்தில் இல்லையென்றும் கண்ணனும் குழுவுமே தமிழரசு எனபெயரிட்டு எழுதி யிருப்பதாகவும் சொன்னார்கள்.

விடுதலைப்போராட்டத்தோடு தொடர் புடைய எவரும் இக் கட்டுரையின் பின்னணியில் இல்லைஎனவும் கூறினார்கள். அப்போதும் நான் அக்கட்டுரையை முக்கியமானதாகக் கருதவில்லை.

லண்டனிலிருந்துஉணர்வாளர்கள் தொலைபேசிய இரண்டாம்நாள் அடையாளம் குறிக்க முடியாஇடத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று அலை பேசியில் பதிந்தது.

எடுத்தபோது"களத் தின் பிரதிநிதிகளாய்' பேசுவதாகக் கூறினார் கள். அதிர்வு கட்டுரைபற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் என்று சொல்லவே அழைத்த தாகவும் கூறியஅவர்களது தகவல் சுருக்கம் இது தான்:

""அதிர்வுஇணைய தளம் நடத்துகிறவரது பெயர் கண்ணன். இவர் தமிழீழ விடுதலைப்புலிகள்இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். தவறான ஒழுக்கம் காரணமாக புலனாய்வுப்பிரிவுத் தளபதி பொட்டம்மான் அவர்களால் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டவர்.பின்னர் இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் ஏஜெண்டாக மாறி இப்போதுஐரோப்பிய கண்டத்தில் வசதியாக செட்டில் ஆகி யிருக்கிறார். தமிழ்நாட்டில்ஒருசில தலைவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். அவ்வாறே போர் உக்கிரமடைந்தநாட்களில் தலைவர் நாட்டுக்கு அழைத்தும்கூட திரும்பி வராமல் ஐரோப்பாவில்தங்கி நின்ற சிலரோடும் பழைய போராளி என்ற கோதாவில் தொடர்புவைத்திருக்கிறார். அவர்களுக்கும்கூட இவரது நிஜமான குற்றப்பின்னணிதெரியாமல் இருக்கலாம். போராட்ட இயக்கமொன்றும் முற்றாக அழிந்து விடவில்லை.

நாட்டுக்கு அவர் திரும்பிவந்தால் என்ன தண்டனை என்பது அவருக்கே தெரியும். இத்தகைய புல்லுருவிகளுக்கெல்லாம் நீங்கள் பயப்படாதீர்கள்'' என்றார்கள். தொடர்ந்தும் அவர்தமிழகத்தின் சில தலைவர்களைப் பற்றி சொன்ன விஷயங்கள், ""கடவுளே...இப்படியுமா சுயநல அரசியலுக்காக துரோகம் செய்வார்கள்...'' என நெஞ்சம் பதறவைத்தது. தேசியத்தலைவர் அடிக்கடி கூறுவதுண்டாம் "துரோகிகளைவிட எதிரிகள்எவ்வளவோ மேலானவர்கள்' என்று. எதிரிகளை எதிர்கொள்ளலாம், துரோகிகளை...?

இத்தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான், "சரி, என்னதான் எழுதியிருக்கிறார்களென்று பார்ப்போமே' என கட்டுரையைப் படித்தேன். நகைப்பே மிஞ்சியது. முதலில் கண்ணன்"தமிழரசு' என முகமூடி அணிய வேண்டிய அவசியம் ஏன் என்று புரியவில்லை. ஒன்றை, ஒருவரை விமர்சிக்கையில் சொந்தப் பெயரிட்டு சுய கௌரவத்துடன் எழுதும் நாணயம்இல்லாதவருக்கும் மஞ்சள் பத்திரிகை வியாபாரிகளுக்குமிடையே பெரிய வேறுபாடுஇல்லை.

கிளிநொச்சியில்இந்தத் தமிழரசுதான் என்னை தேசியத் தலைவரிடம் அழைத்துச் சென்றதாகவும் தேசியத் தலைவர் சரியாக ஆறு நிமிடம் மட்டுமே என்னிடம் பேசியதாகவும்அக்கட்டுரையில் அழுத்தமாய் கூறியிருந்தார்.

எனது பதில் : ""கவலைப்படாதீர்கள்தமிழரசு என முகமூடி தரித்த தவறான ஒழுக் கத்திற்காய் இயக்கத்திலிருந்துவிரட்டியடிக்கப் பட்டு இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் ஏஜெண்டாகி,புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியை குலைப்பதற்காய் அதேஏஜெண்டாய் ஐரோப்பாவில் வசதியாக வாழும் கண்ணன் அவர்களே... இன்னும் இரண்டொருவாரங்களில் தேசியத் தலைவருடனான மிக நீண்ட நேர்காணலின் ஒளிப்பதிவு இதே இணையத்தில் வெளிவரும். அது ஒன்றே போதுமான தாயிருக்கும் உங்கள் முகத்திரைகிழிய.

பாவம், நான்எழுதுகிற பாணியைப் பார்த்து ஒளிப்பதிவு இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் கதையை அவிழ்த்துவிட்டீர்கள்போல் தெரிகிறது. "ஏஜெண்டுகள்'எப்போதுமே இப்படித் தான். எவ்வளவு அழகாக நாடகமாடினாலும் சட்டென்று தங்களைகாட்டிக் கொடுத்து விடுவார்கள்.

இன்னொன்றுதமிழீழ விடுதலையை இனியில்லையென்று கொச்சைப்படுத்திய ஊடகங்களையெல்லாம்விட்டுவிட்டு தமிழகத் தில் லட்சக்கணக்கான உணர்வாளர்களுக்கு ஆறுதலாயும்நம்பிக்கை இழையாயும் நின்ற - நிற்கிற நக்கீரனோடு போர்புரிய வரிந்துநிற்பது யாருடைய வேண்டுதல் -அல்லது உத்தரவின் பேரில் என்றும் புரியவில்லை.

எதிரிகளோடுஉரையாடுவோம், துரோகி களோடு கடைசிவரை இல்லை. துரோகி ஒரு வனைப் பற்றிஇவ்வளவு வரிகள் வீணடித்திருக் கக்கூடாது. ஆயினும் விடுதலைப் போராட்டஇயக்கத்தின் போர்க்களப் பின்னடைவைப் பயன்படுத்தி புலம்பெயர் மக்களைகுழப்பப் புறப்பட்டுள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்ட வேண்டிய தேவைகருதியே இவ்வளவும் எழுதும் துரதிருஷ்டம் நேர்ந்தது.

சரி, ராஜபக்சே அரசின் இரண்டாவது தந்திரோபாயம்?
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18977


வடகாட்டில் சீமான் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் இயக்கம் துவங்கி தமிழ்நாடு முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான்.


இன்று (சனிக்கிழமை) மாலை 6மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு சீமான் தலைமையேற்று உரையாற்றுகிறார்.

இப்பொதுக்கூட்டத்திற்கு வரும் சீமானுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை முழுவதும் சுவரொட்டிகளும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

பிரபாகரன் படத்திற்கு போலீசார் அனுமது மறுத்துவிட்டனர். சீமான் படம் மட்டும் வைப்பதற்கு போலீசார் அனுமது அளித்துள்ளனர்.

அதன்படி திரும்பிய பக்கமெல்லாம் சீமான் படம் இருக்கிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19159


மணி நேர "நாம் தமிழர்" வலைத்திரை

நம் இணைய தளத்தில் வலைத்திரை பகுதியில் (http://www.naamtamilar.org/valaiththirai.php) 24 மணி நேர நாம் தமிழர் வலைத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
இதில் நம் அண்ணன் சீமான் அவர்களின் எழுச்சி உரைகள், இயக்க கூட்டங்களின் காணொளிகளும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். நாம் விரும்பும் காணொளியை உடனடியாக பார்க்க ON-DEMAND சேவையை பயன்படுத்தவும். மேலும் இதில் இயக்க கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் பேட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உறவுகளே, இது நமக்கான ஊடகம். தமிழருக்கான ஊடகம். இதன் சேவைகள் இயக்க பணிகளுக்கு சிறப்புற பயன்படுத்த நம் தோழர்கள் அனைவரும் முன்வந்து ஆலோசனைகள் வழங்க வேண்டும்.


சத்தியம் தவறிய சத்யம் நிறுவனம்


இன்றைக்கு நாம் வேலையில் இருப்போமா? .. இதுதான் தனியார் அல்லது ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மனதில் ஒவ்வொரு நாள் காலையிலும் எழும் கேள்வி.

மனைவி, குழந்தைகள் என்று வாழும் ஒரு குடும்பத் தலைவனுக்கு திடிரென்று வேலை பறிபோனால் எழும் மனஉளைச்சல்கள்...பதட்டம்...இவற்றை வார்த்தைகளில் விளக்க முடியுமா?

குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்காத ஐ.டி நிறுவன ஊழியர்களே இல்லை எனலாம். வேலை போகும் பட்சத்தில் அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்?

ஐதராபாத்திலுள்ள சத்யம் நிறுவனம் 6400 பேரை வேலை நீக்கம் செய்வதாக தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனத்தில் அதிபர் ராமலிங்க ராஜூ நிறுவனங்களில் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு சத்யம் நிறுவனத்தை மத்திய அரசு அமைத்த குழு நிர்வாகம் செய்தது. பின்னர் மகேந்திரா நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டரை வாங்கி விட்டது.
இதையடுத்து இந்த நிறுவனம் ஊழியர்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இங்கு வேலை பார்த்த 9 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் கட்டாய விடுமுறை அளித்து பணியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி இருந்தனர். அவர்களில் 1600 ஊழியர்களை திரும்ப அழைத்து கொண்டனர்.

இந்த நிலையில் மீதி உள்ள 6400 ஊழியர்களுக்கு நிர்வாகம் நேற்று இ.மெயில் ஒன்று அனுப்பி உள்ளது. அதில் உங்களை பணியில் தொடர வைக்க முடியாது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் உங்கள் கணக்குகளை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே 6400 ஊழியர்களும் திடீரென வேலையை இழந்துள்ளனர்

ஏற்கனவே வேலை வாய்ப்புகள் குறைவை உள்ள இந்த பொருளாதார சூழலில்..அவர்ளுக்கு வேறு சரியான வேலை எப்போது..எப்படி கிடைக்கபோகிறது?

"நிரந்தரம் இல்லாமையே நிரந்தரம்" என்னும் தத்துவம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கு நூறு சதம் பொருந்துகிறது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களின் பாடல ஒன்று..பள்ளி நாட்களில் படித்தது.

"உழ‌வும் தொழிலும் இல்லாம‌ல் உல‌கில் ஒன்றும் செல்லாது"

எங்கு வேலை செய்தாலும்..எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு சுயதொழிலுக்கான முனைப்புகள், முதலிடுகள் மற்றும் சேமிப்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர வேண்டியதைத்தான் இந்த பாடலும், செய்தியும் உணர்த்துகிறது.

கடைக்காரர் கமெண்ட் :
என்னத்தை சொல்றது...நான் படிச்ச ஜோக்கு ஒன்னு உங்களுக்கு சொல்றேன்..


என் மூத்த மகன் கம்ப்யூட்டர் எஞ்சினியர்..ரெண்டாவது மகன் விமானம் ஓட்டுறான்...மூணாவது மகன் ஷேர் மார்க்கெட் பத்தி ஆலோசனை சொல்றவன்..ஆனா..நாலாவது மகன் டீக்கடை வச்சு இருக்கான்...

ஏன் அவனை மட்டும் படிக்க வைக்கலையா நீங்க...

அட நீங்க வேற...அவன் குடும்பத்தோட ..மூத்த பசங்க குடும்பத்தையும் சேர்த்து அவன்தான் இப்போ பாத்துக்கிட்டு இருக்கான்.

சொந்தமா,நமக்குன்னு ஒரு தொழில் இருக்கறதுதான் எப்போவும் நல்லதுன்னு தோணுதுங்க...

http://kadaitheru.blogspot.com/2009/10/blog-post_23.html





விவேக்கின் வில்லத்தனம்!


http://www.envazhi.com/wp-content/uploads/2009/10/vivek-padmashree.jpg

‘நான் உங்க ஜாதி… எனக்காகக் குரல் கொடுங்க!’ – விவேக்கின் வில்லத்தனம்


ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே…’ என்று ஒரு பழமொழி உள்ளது. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… விவேக்குக்கு நன்றாகவே பொருந்தும்.vivek-padmashree

திரையில் காமெடியனாக வந்து ‘சாதியில்லை, மதமில்லை, சாமியில்லை’ என்றெல்லாம் உபதேசம் பண்ணும் இவருக்குள் இத்தனை வில்லத்தனமா? என்று பலரையும் புருவம் உயர வைத்துள்ளது அவர் சமீபத்தில் செய்துள்ள ஒரு காரியம்.

சமீபத்தில், “பத்திரிகையாளர்கள் என் மீது வழக்குத் தொடர்கிறார்கள். பத்மஸ்ரீ விருதினை திரும்பப் பெற வைக்க சூழ்ச்சி செய்கிறார்கள். எனக்கு ஒரு அவமானம் என்றால் அது நான் சார்ந்த சாதிக்கே நேர்ந்த அவமானமல்லவா… எனக்காக நீங்கள் எல்லாம் களமிறங்க வேண்டும். ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டும்” என்று முழங்கியிருக்கிறார்.

அவர் முழங்கியிருப்பது, டாக்டர் சேதுராமன் நடத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில். பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் 23-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் எதிரொலிதான் விவேக்கின் இந்தப் புலம்பல்.

அப்போதைக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்த சேதுராமன், ‘தனிப்பட்ட முறையில் யாராவது வழக்கு தொடர்ந்தால் தனது சாதிக் கட்சி சார்பில் குரல் கொடுப்போம்’ என்று கூறி அனுப்பினாராம். அதேநேரம், ஒட்டு மொத்த நடிகர்கள் மீதும் வழக்கு என்று வந்தால் அதில் நாம் தலையிடக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு கூறிவிட்டாராம்.

சாதி முகமூடியை அணிய விவேக் முற்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே சசிகலா நடராஜன் நெற்கட்டும்செவலில் நடத்திய முக்குலத்தோர் மாநாட்டில் கலந்து கொண்டு, தங்கள் சாதி ஆண்ட பரம்பரை என்றும், அந்த மரபைக் காக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்றும் பேசியவர்தான் விவேக். இந்த மாநாட்டில்தான் முக்குலத்தோர் இன நடிகர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.envazhi.com/?p=12696






Update me when site is updated
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!