Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, May 3, 2009

வீடியோ படம் :சிரி..சிரி கலைஞர் உண்ணாவிரத நாடகம்

http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU

கலைஞர்
 உண்ணவிரதம்......................
 சிரிக்க அல்ல..........சிந்திக்கவும்..........
 
cid:image001.jpg@01C9C8CF.B55323C0
 
Friday, April 24, 2009

சிரி....சிரி...

மாப்பு : எங்கடா கிளம்பிட்ட ??????????????
பாப்பு : எனக்கு செருப்பு வாங்கணும் அதுக்காக செருப்பு கடைக்கு போறேன் !!!
மாப்பு : ஹா ஹா !! நீ ஒரு விவரம் இல்லதவண்டா செருப்பு வாங்க செருப்பு கடைக்கா போவாங்க ????
பாப்பு : அப்புறம் வேற எங்கடா போவாங்க ?????????????
மாப்பு : என்கூடவா பக்கத்து தெருல ஒரு அரசியல் மீட்டிங் நடக்குது அங்க போவோம் இப்பெல்லாம் செருப்பு கடைக்கரவன்களே
அங்க போய் பார்த்துதான் டிசைன் பண்ணறாங்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Wednesday, April 22, 2009

எடைகுறைவோடு இந்தியா

http://www.sinlung.com/wp-content/uploads/2009/04/rahul1.jpg

பிரியமுள்ள இளைய ராஜகுமாரன் ராகுல்ஜி அவர்களுக்கு, வணக்கம்.

தாங்கள் நலம் என்று தெரியும் நாங்கள் நலமில்லை. ஆனால் கொஞ்சம் நாளாக தாங்கள் மிகவும் சிரமங்களை அனுபவித்து வருவதை நாடே அறியும். உயர்த்திப் பிடித்த உயர்ந்தரக துப்பாக்கிகளின் பாதுகாப்போடு தாங்கள் கிராமங்களுக்கு செல்வதும், குனிய முடியாத குடிசைகளில் குனிந்து செல்வதும், மூக்கொழுகும் குழந்தைகளை தூக்கி வாஞ்சையுடன் அனைத்துக்கொள்வதும், ஏழைகள் வீட்டில் கிடைக்கின்ற கஞ்சியோ அல்லது கூழோ அவைகளை உண்பதும், பல கரடுமுரடான சாலைகளில் பாதம் நோக அலைந்து திரிவதும், கலாவதியையும் அவளது குழந்தைகளையும் பார்த்து சோகமாய் முகத்தை வைத்துக்கொள்வதும், அப்பா எத்துனை சிரமங்கள் உங்களுக்கு.

நமது நாட்டின் எதிர்கால பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த விபரீதம் நடக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றாலும் உங்களுடன் சில வார்த்தைகள் பேசவேண்டியுள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம்.... இந்திய தலைநகர் டெல்லியில் உங்கள் கொள்ளு தாத்தாவான மாமா நேருவின், மன்னிக்கவும், அர்த்தம் மாறிவிட்டது. நேரு மாமாவின் இப்போதைய நினைவகம் உள்ள தீன்மூர்த்தி மார்கில் அமைந்துள்ள இடத்தில்தான், அவரது அப்போதைய வீடு இருந்தது. அந்த வீட்டின் நான்கு வாயில் படிகளிலும் விலை உயர்ந்த நான்கு விதமான கார்கள் நிற்குமாம். ஏனெனில், தனது மகன் எந்த படியில் இறங்கினாலும் அங்கு கார் நிற்க வேண்டும் என்பது மோதிலாலின் விருப்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த தாங்களுக்கு அவரின் சோசலிச கனவோ, அல்லது முதலாளிகளின் கலப்பு பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டதோ தெரியாது. அதே போல குளிரில் நடுங்கும் ஆனால் இதயம் சூடான எங்கள் குடிசையை உண்மை முகம் உங்களுக்கு தெரியாது.

அதே தலைநகரில் உங்கள் பெரியப்பா, அதாங்க "எடா சிறை மீண்ட, தலைவெட்டி புகழ்" வருண் காந்தியின் தந்தையும், ஆடு, மாடுகள் துன்பப்பட்டால் ஓடிச்சென்று வழக்குப்போடும், ஆனால், தன் மகன் மாற்று மத மனிதர்களை வெட்டச்சொன்னால் சந்தோஷப்படுகிற "புளுகிராஸ் புகழ்" மோகனா காந்தியின் கனவருமான சஞ்சைகாந்தி நகரின் அழகு என்ற பெயரில் புலம் பெயர்ந்து தங்கள் வாழ்க்கையின் தெடல்களுக்காக குடியிருந்த குடிசைகளுக்கு எதிராக நடத்திய நரவேடை நாட்டியம் உங்களுக்கு தெரியாது. இப்போதுள்ள பாலிகா பஜாரின் மேலே உள்ள பசுமையான புற்கள் அந்த கதையை பேசும் ..

வினை விதைத்து, விதைத்த வினைக்கு அறுவடை செய்த காரணத்தால், ஏதோ இரு சீக்கிய மத வெறியர்களின் தோட்டாக்களுக்கு பலியான உங்கள் பாட்டி இந்திராவின் மரனத்தால் வாழ்விழந்த, சீரழிந்த, சிதைக்கப்பட்ட, வெட்டிவீசப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட, அண்ணா என்னை விட்டு விடுங்கள் என்று கதரும் போது வன்புனர்ச்சி செய்யப்பட்ட ஆயிரமாயிரம் சீக்கிய சகோதரிகளின், விதவையாக மாற்றப்பட்ட, இன்றுவரை சித்த பிரமை பிடித்து அலையும் அந்த தாய்மார்களின் கண்ணீர் உங்களுக்கு புரியாது ராகுல்...

அந்த கொடூரங்களை தடுக்க வேண்டிய உங்கள் தந்தை ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று இந்த நரவேட்டைடை நியாயப்படுத்தியது சரியா என யோசியுங்கள் ராகுல்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் இந்தியா முன்னேறும் என்று எந்த நம்பிக்கையில்பேசி வருகிறீர்கள். நாடு விடுதலை அடைந்து 62 ஆண்டுகளில் 6 ஆண்டுகளை தவிர மற்ற ஆண்டுகளெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது என்பது தங்கள் அறியாததா? முதல் ஐந்தாண்டு திட்டத்தின் போது அனைவருக்கும் ஆரம்ப இலவச கட்டாய கல்வி என்று உங்கள் கொள்ளு தாத்தா நேரு அறிவித்த இந்த நாட்டில் இன்று வரை கல்வி அறிவு பெறாதவர்கள் 40 கோடிபேர் என தெரியுமா?

காலகாலமாய் உங்கள் கட்சி ஆட்சி செய்ததன் விளைவு என்ன?
http://www.thehindu.com/2008/03/16/images/2008031659321001.jpg

இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமகங்களில் குடிக்க தண்ணீர் கிடையாது, லட்சம் கிராமங்களில் கழிப்பிடம் கிடையாது, இரத்த சோகை நோய் எங்கள் தாய்மார்களின் தேசிய நோயாக மாறிவிட்டது, எதிர்கால இந்தியா எடைகுறைவோடுதான் பிறக்கிறது, வருங்கால தூண்கள் வேலயற்று விரக்தியில் வீதியில் அலைகிறது,

ஆலைகள் மூடுவதுதான் தொழில்துறையின் வேலையாக மாறிவிட்டது, சுதந்திரம் அடையும் போது சில கோடிகளை வைத்திருந்தத சிலர் இன்று லச்சம் கோடிகளை சேர்த்து வத்துள்ளனர். இதற்கும் உங்கள் கட்சியின் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று சாதிக்கப்போகிறீர்களா ராகுல்.

அந்நியர்களுக்கு எதிராக போராடிய காங்கிரஸ் கட்சியை அந்நிய நாட்டிடம் அடகு வைக்கும் போக்கை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? சிலியில் அலெண்டேவையும், ஆப்கானில் நஜிபுல்லாவையும், ஈராக்கில் சதாம் உசேனையும் போல பல நாட்டு தலைவர்களை படுகொலை செய்த, வியட்நாம், லிபியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் குண்டுகளி வீசிய, நைஜிரிய ஆற்றுப்படுகையில் ஷெல் கம்பெனிகள் எண்ணெயை உறிஞ்சுவதை எதிர்க்கும் அப்பாவி மக்களை ஆயுதம் தாங்கி அழிக்கும் அமெரிகாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அணுசக்தியை பயன் படுத்த, அதிலிருந்து மின்சரம் தயாரிக்க நமது சொந்த நாட்டு விஞ்ஞானிகளுக்கு வக்கில்லை என்று கேவலப்படுத்துவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

அதெல்லாம் இருக்கட்டும் எங்கள் தமிழ்நாட்டை தாங்கள் அறிவீர்களா, உத்தபுரம், மேலவளவும், திண்ணியமும் உங்களுக்கு தெரியுமா, சரி இவைகள் தூரத்தில் உள்ளது. கயர்லாஞ்சியாவது தெரியுமா? இந்தியா என்பது உத்திரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி மட்டுமல்ல, கயர்லாஞ்சியும் இந்தியாவின் ஒரு பகுதி என்று உங்கள் இதயம் ஏற்றுக்கொள்கிறதா? அப்படியே எனில் இன்னும் உங்கள் பயணம் அங்கு நீளாதது ஏன் ராகுல், இரண்டு ஏக்கர் நிலம் வைத்து தலைநிமிர்ந்து வாழ ஆசைப்பட்ட காரணத்தால் பையாலால் போட்மாங்கே குடும்பம் சிதைந்த வரலாறு இன்னும் நவீன சமூகத்தின் மீது காரி உமிழ்வது நியாயமா? இந்தியாவில் ஒரு அமெரிக்க மக்கள் தொகை அளவுக்கு தலித் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் சேரிகள் எனும் தனி நாட்டில் அல்லவா வசித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வடிவங்களில் இன்னும் தீண்டாமை அவர்கள் மீது திணிக்கப்படுவது குறித்து உங்கள் கட்சிக்கு கோபம் இருக்கிறதா?
http://www.hindu.com/2008/10/03/images/2008100356671201.jpg
மன்னிக்கவும் பல இடங்களில் இவைகளை அமலாக்கம் செய்வதே அவர்கள் தானே.
இதெற்கெல்லாம் உங்களுக்கு பதில் சொல்ல நெரமிருக்காது பாவம் நீங்கள் இன்னும் எத்துனை குடிசைகளுக்குள் நின்று புகைப்படம் எடுக்க வேண்டியுள்ளதோ, ஆனால் இந்த கேள்விகள் உங்களை தொடரும் ராகுல். இந்த கடித்தத்தைப் போல் தெசத்தை நேசிக்கின்ற ஆயிரமாயிரம் இளைஞர்கள் உங்களுக்கு கடிதங்களை தொடர்ந்து எழுதுவார்கள்...
நீங்கள் பதில் சொல்லும் வரை அல்லது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை கேட்காதவரை.

இறுதியாக. . . . தலைப்பில் கொள்ளுவுக்கு கொம்பு போட்டிருப்பது எழுத்துப் பிழை என நினைக்க வேண்டாம். நெல்சோறு கிடைகாத மக்கள் குதிரக்கு வைக்கும் கொள்ளாவது கிடைக்குமா என்று அலைகழியும் தேசமாக இந்த நாடு மாறிக்கொண்டிருக்கிறது. 77 சதமான மக்களின் ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய் அதை தங்களுக்கு நினைவூட்டவே கொல்லை ஞாபக படுத்தினேன்.

நன்றி ராகுல். மீண்டும் சந்திப்போம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7tgUF2t_XCbTuLPxvovhcHuNoLYEUKEp-RdlEhZbjW3wKd7JhEqZcJaKLulURJ6um_QCnJFB_BhPCdcOaKfGP77lpGFUyMz3d0zB_0jFyDN6sEqUWmtnkkgjwKm1usLI3b-9SiLRL7nAM/s320/rahul_gandhi.jpg

BY
S.G.RAMESBABU

Friday, April 17, 2009

ஒரு ரவுடியின் கதை

http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_8122980595.jpg http://www.indiadaily.org/images/m-k-azhagiri66_26.jpg

வணக்கம் நண்பர்களே.. தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது.. அண்ணன் அழகிரி தேர்தல் களம் காண்கிறார். அவரை பற்றி வலை நண்பர் ஒருவர் தந்த செய்தி. விறுவிறுப்பான நாவலுக்கு ஒப்பானது.. படிங்கள் .....

யார் இந்த அழகிரி ?

கோவில்களில் தேவதாசி முறை ஒழிக்கப் பட்ட பின் வந்த தலைமுறையினர் பிற ஜாதியினரைப் போல சாதாரணமான குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி, அடுத்த தலைமுறையினர் படித்து முன்னேறி இன்று சமூகத்தில் உயர் நிலைக்கு சென்று விட்டனர். இந்த ஜாதியினரின் முன்னேற்றத்தில் இதே ஜாதியில் இருந்து வந்த கருணாநிதியின் பங்கு முக்கியமானது.. அவர்கள் அனைவருக்கும் அவர் தெய்வம் போல. இன்று இந்த ஜாதியில் யாரும் தாசிகளாகவோ விலைமகளிராகவோ மாறுவது இல்லை. பெரிய சமூக சீர்திருத்தம் நடந்து விட்டது அவர்கள் இனத்தில் இருந்தாலும் அவர்கள் ஜாதியையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவர்களை மிகவும் கேவலமாக அழைக்கும், தாழ்வாக ஏளனம் செய்யும் நிலமை இன்றும் இருந்து வருகிறது. தமிழ் நாட்டின் முக்கியமான இரண்டு தலைவர்களான அண்ணா என்ற துரைசாமியும், கருணாநிதி என்ற தட்சிணா மூர்த்தியும் இந்த ஜாதியில் இருந்து வந்தது அவர்கள் பெரும் அளவில் முன்னேற வசதியாக இருந்தது, ஈ வெ ரா கூட இந்த இருவரையும் மோசமான வார்த்தைகளில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார். அண்ணாத் துரை ஐயங்காருக்குப் பிறந்தவர் என்பார்கள். இந்த ஜாதியில் இன்று பெரும்பாலோர் படித்து ஐ ஏ எஸ், ஐ பி எஸ், டாக்டர், இஞ்சினீயர் என்று முன்னேறி விட்டனர். கருணாநிதி அவர்களை மிகவும் பின் தங்கிய பட்டியலில் சேர்த்தது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
இன்று பலரும் முன்னேறி விட்டாலும் வெளியில் தங்கள் ஜாதியைப் பொதுவாக பிள்ளைமார்கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ஏளனத்துக்கு அஞ்சி தன் சொந்த ஜாதியையயச் சொல்லத் தயங்குவார்கள். தலித்களின் நிலமையய விட இவர்களின் நிலமைக்காக நான் பெரிதும் பரிதாபப் பட்டிருக்கிறேன், அவமானத்தைச் சிலுவையாக சுமக்க நேரிட்டவர்கள்.
இது போன்ற சமுதாயத்தில் மிக இகழ்வாகக் கருதப் பட்ட ஒரு பின்புலத்தில் இருந்து வந்த கருணாநிதிக்கு பல்வேறு தந்திரங்களும், திறமைகளும்,சூழ்ச்சிகளும் தானாகவே கை வந்த கலையாய் வந்து சேர்ந்தன. ஒரு மோசமான சமூகச் சூழ்நிலையில் பிறந்து ஆதிக்க ஜாதி பின்புலன்கள் இல்லாத கருணாநிதியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாகும். ப்ரூஃ ரீடர், சினிமாக் கம்பெனி எடுபிடி, வசனகர்த்தா, அரசியல் மேடைப் பேச்சாளர் என்று பல்வேறு வேலைகள் பார்த்து தி மு க வின் முக்கியமான நபர்களில் ஒருவராக மிகவும் தந்திரமும், குள்ளநரித்தனமும், அனைத்துக் கீழ்த்தர குணங்களும் நிரம்பிய ஒரு அபாயகரமான அரசியல்வாதியாக கருணாநிதி உருவெடுத்து தி மு க வின் பிற சீனியர் தலைவர்களைப் புறம் தள்ளி, தந்திரமாகத் தலைவர் பதவியைப் பிடித்து இன்று 50 வருடங்களாகின்றன.
இந்தக் கருணாநிதிக்கு மூன்று மனைவிகள் (வைத்துக் கொண்டவை கணக்கில் இல்லை) முதல் மனைவி பிரபலப் பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி. அந்த மனைவிக்குப் பிறந்தவர் மு க முத்து. இவரைத் தான் தன் வாரிசாகக் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பக் காலத்திலேயே கணக்குப் போட்டுக் காய் நகர்த்தினார் கருணாநிதி. நல்ல முகவெட்டும், குரல் வளமும் இருந்த முத்துவை அன்று தி மு க வின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எம் ஜி யாருக்குப் போட்டியாகக் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி குள்ளநரித்தனமாகப் போட்ட தப்புக் கணக்கு அவருக்கு பெருத்த அடியாக விழுந்தது. மு க முத்துவும் எம் ஜி யார் பாணியிலேயே நடிக்க ஆரம்பித்தார். சமையல்காரன், வெள்ளிக் கிழமை, சொந்தக்காரன் போன்ற பல படங்களில் நடித்த மு க முத்துவின் திட்டமிடப் பட்ட வளர்ச்சி எம் ஜி ஆருக்கு பலத்த ஆத்திரத்தை வரவழைத்து கட்சியில் இருந்து வெளியேற வைத்தது அடுத்த 12 வருடங்களுக்கு கருணாநிதியின் அஸ்தமனத்துக்கு வழிவகுத்தது. எம் ஜி யார் சாகும் வரை கருணாநிதி தலை தூக்க முடியவில்லை. எம் ஜி யாருக்குப் போட்டியாக உருவாக்கிய கருணாநிதியின் மகன் போதைக்கு அடிமையாகி மீள முடியாத குடிகாரனாகி கருணாநிதியாலேயே புறக்கணிக்கப் பட்டு அநாதையாக மாறிப் போனார். பிற்காலத்தில் ஜெயலலிதா கருணாநிதியை அவமானப் படுத்த முத்துவுக்கு 5 லட்சம் நிதியுதவி அளித்தார். முத்து நடைப்பிணமாகிப் போக கருணாநிதியின் ஒரு கனவு சிதைந்தது. பின்னர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளின் மீது தன் கனவை மீண்டும் எழுப்பத் தொடங்கினார். மூன்றாவதாக சேர்த்துக் கொண்ட துணைவிக்கு ஒரு மகள். இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் என்று நினைக்கிறேன். யாரும் கருணாநிதி அளவுக்கு பிரகாசிக்கவில்லையெனினும், நம்பிக்கை இழக்காமல் தன் சாம்ராஜ்யத்தைத் தொடர இருக்கும் வாரிசுகளையே நம்ப ஆரம்பித்தார். அதில் தமிழரசு என்ற மகன் வங்கி வேலைக்குச் சென்று ஆரவாரத்தில் இருந்து ஒதுங்கி விட அரசியலில் ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்த ஸ்டாலினை மட்டும் தொடர்ந்து தன் வாரிசாக வளர்க்க ஆரம்பித்தார்.. ஸ்டாலின் அரசியல் வாரிசாக வளர்த்து விட்டதால் அழகிரி என்ற மகனுக்கு ஒரு வியாபாரத்தை அமைத்துக் கொடுத்து மதுரையில் கொண்டு போய் செட்டில் பண்ணினார்.
மதுரை திருநகரில் கோவிந்த சாமித் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்தப் பட்டார் இந்த அழகிரி. இவரது மனைவி மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த ஒரு தலித். மதுரை பஸ்ஸ்டாண்டில் ஒரு வீடீயோ, காசெட் கடையும், ஒரு டி வி விற்பனை ஏஜென்சியும் இந்த அழகிரிக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டது. ஒரு ஸ்கூட்டரில் திருநகரில் இருந்து கிளம்பி கடையில் போய் கடைக்கு வெளியே நின்று தம் அடித்துக் கொண்டிருப்பார். அவரை ஒரு சிலருக்கே கருணாநிதியின் மகன் என்று தெரியும். அவ்வளவு பிரபலம் கிடையாது. தெருக்காரர்கள் யாரும் பேசிப் பழகி பார்த்ததில்லை. எப்பொழுதாவது கருணாநிதி நீளமான காரில் வந்து போவார். அழகிரி அப்பா மாதிரியே காலுக்கு வெள்ளைக் கலர் செருப்புப் போட்டுக் கொள்வார். கார் கூட கிடையாது. அப்பொழுது மதுரையில் நெல்பேட்டை சீனி, பழக்கடைப் பாண்டி, மதுரை முத்து, என்று பல திராவிடக் கட்சிகள் ரவுடிகள் தங்கள் சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தனர். அதனால் புதிதாக ஒரு ரவுடி பெரிய அளவில் உருவாக வாய்ப்பு இருக்க வில்லை. மேலும் பழனிவேல்ராஜன் போன்ற ஜமீந்தார்கள் தி மு க வின் செல்வாக்கான நபர்களாக இருந்தமையாலும், லோக்கல் ஜாதியான தேவர்கள் இனத்தில் இருந்து வராததாலும் 90 வரை அழகிரி என்பவர் அடையாளமில்லாத சாதாரண ஒரு காசெட் கடை உரிமையாளராக மட்டுமே இருந்தார். 90ல் மீண்டும் கருணாநிதி ஆட்சியைப் பிடித்ததில் இருந்துதான் அழகிரியின் அசுர வளர்ச்சி ஆரம்பித்தது. கருனாநிதி அரசு கலைக்கப் பட்ட பொழுது இவர் தென் தமிழ் நாட்டின் முடிசூடா மன்னராக ஆட்சி செலுத்த ஆரம்பித்தார். தனது வீட்டையும் வாடகை வீட்டில் இருந்து மதுரை டி வி எஸ் நகரினில் உள்ள சத்தியசாய் நகர் பகுதிக்கு மாற்றிக் கொண்டார். எதிர் வீடு தினமலர் ஆசிரியர் லஷ்மிபதியின் வீடு. தினமலர் காரருக்குச் சனி பிடித்தது. மதுரையில் மெதுவாக ரவுடிகளின் தலமை அழகிரியிடம் இடம் பெயர்ந்தது. பழனிவேல் ராஜன் என்ற அரிஸ்டோகிராட் அரசியல்வாதி முதல் பழக்கடைப் பாண்டி போன்ற தேவர் இனத்து ஆட்களின் முக்கியத்துவம் குறைந்தது. அழகிரி ஒரு அதிகார மையமாக உருவெடுக்க ஆரம்பித்தார். கலெக்டர், கமிஷனர், எஸ் பி, எல்லோரும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்க ஆரம்பித்தனர். வரிசை வரிசையாக அழகிரியிடம் சிபாரிசுக்காகவும், பதவிகளுக்காகவும் படையெடுக்க ஆரம்பித்தனர். அழகிரியின் பிறந்த நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டன. அமைதியாக இருந்த டி வி எஸ் நகர்/சத்யசாய் நகர் பரபரப்பான அதிகார மையமாக மாறியது. அழகிரியின் பிறந்த் நாட்களின் பொழுதும், திருமண நாளின் பொழுதும், அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தங்கள் கப்பத்தைக் கட்டி விட்டுச் சென்றார்கள். கோடிக்கணக்கான பணம் புரள ஆரம்பித்தது. அழகிரியின் பெண் பெரிய பெண் ஆனது வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது, பல கோடிகள் வசூலாகியது. அடுத்த அடுத்த ஜெயலலிதா ஆட்சிகளின் போது அழகிரி சற்று அடங்கினாலும் அவரது செல்வாக்கு என்றும் அடங்கவேயில்லை. அவரது சாம்ராஜ்யம் பெரிதாக விரிந்தது, தனக்கென்று ஒரு லாயல் சர்க்கிள் உருவாக்கி தனக்கு ஒரு எம் எல் ஏ கோஷ்டியை உருவாக்கி வைத்துள்ளார். இன்றும் அவர் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்க்கலாம். இப்படி 89 வரை ஸ்கூட்டரில் பயணித்த ஒரு சாதாரண உதாவக்கரை பையன் இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி. பண பலம் ,அதிகார பலம், அதிகாரிகள் காலில் விழுந்து வணங்குகிறார்கள். ஜெயலலிதா ஏதோ ஒரு காரணத்தினால் வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அழகிரியை அடிக்காமல் விட்டு வைத்தார். இன்று மதுரையில் அழகிரி வைத்ததுதான் சட்டம், மதுரர முழுக்க ரியல் எஸ்டேட்டுகள் வளளத்துப் போட்டுள்ளார். ஏராளமான பினாமிகள். எதிர்க்கத் துணிந்த பலரும் கடுமையாகத் தாக்கப் பட்டனர். அவரது அதிகார மையத்தை தன் ஜாதி பின்புலம் கொண்டு எதிர் கொள்ள நினைத்த தா கிருஷ்ணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார். தேவர் ஜாதி வீரம் , பெருமை வெட்டிப் பெருமை என்பது நிரூபிக்கப் பட்டது. அழகிரியின் கை மேலும் பலப் பட்டது. இன்று தமிழ் நாட்டை ஆட்டுவிக்கும் முக்கியமான அரசியல் சக்திகளில் ஒருவர் அழகிரி. ஒரு உதவாக்கரை மகனில் இருந்து தந்திரமும், ரவுடித்தனமும், கொலைவெறியும், பண வெறியும் நிரம்பிய ஒரு கருணாநிதியின் பல அம்சங்களைக் கொண்ட ஒரு வாரிசாக உருவாகியுள்ளார். இவரது மகன் துரை தயாநிதி மதுரையின் மத்தியில் மாபெரும் ஐ டி பார்க்கை தயா ஐ டி பார்க் என்ற பெயரில் கட்டி முடித்து விட்டார். இவரும் ஒரு சினிமா கம்பெனி துவங்கியுள்ளார். தமிழ் நாட்டில் புதுப் படங்கள் அனைத்தும் இவர்களுக்குத்தான் விநியோக உரிமை இவர்கள் சொல்லும் காசுக்குக் கொடுக்க வேண்டும் கொடுக்கா விட்டால் படத்தை தியேட்டரில் வர விட மாட்டார்கள். கம்பெர்னியின் பெயர் ரெட் சன் என்றோ என்னமோ அழகிய தமிழில் வைக்கப் பட்டுள்ளது. அழகிரியின் மகளை அரசியலில் அடுத்த தலைமுறை வாரிசாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார். வார்த்தை மாதிரியான பத்திரிகைகளில் கூடிய விரைவிலேயே அவரது நூறு பக்க நூதன பேட்டி வரலாம் படிக்கத் தவறாதீர்கள். இன்னொரு பெண் காதல் திருமணம் செய்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் பறந்து கொண்டிருக்கிறார். மனைவி காந்திக்கு மதுரையில் மாபெரும் ஜவுளிக் கடை, திருமண மண்டபம் எல்லாம் இருக்கிறது. வாரன் பஃபெட்டை விட இவர்களது சொத்து மதிப்பு அதிகம் இருக்கக் கூடும் என்று அதிகாரபூர்வமான கணக்குச் சொல்லுகிறது.
அந்தக் காலத்தில் வாரிசுகளுக்குள் நடந்த போர்களையும், கொலைகளையும் படித்துள்ளோம் வரலாற்றில். தமிழ் நாடு என்றும் மாறவேயில்லல. வரலாறு மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது. சமுதாயத்தால் பழிவாங்கப் பட்ட தாசி குலம் இன்று சமுதாயத்தைப் பழிவாங்குகிறது. கருணாநிதியின் அரஜாகங்களையும் அட்டூழியங்களையும் விட அவரது வாரிசுகளின் அட்டூழியங்கள் இன்னும் உக்கிரமமாக இருக்கப் போகின்றன. இதில் இருந்து எல்லாம் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாடு விட்டு விடுதலையாகி வருமா ? அழகிரி இன்று தி மு க வில் அசைக்க முடியாத சக்தி. அழகிரி, மாறன் குடும்பம் எல்லோரையும் அனுசரித்துதான் கருணாநிதியும் ஸ்டாலினும் பிழைப்பு நடத்த முடியும். இவர்களது ரவுடித்தனங்களும் , கொள்ளைகளும் மக்களை மெதுவாக விஜயகாந்த் பக்கம் தள்ளி விடும். அது தனிக் கதை. மொத்தத்தில் நம் தலையெழுத்து சரியாக இல்லை. ரவுடிகளின், அயோக்கியர்களின், அழகிரிகளின், ஸ்டாலின்களின், மாறன்களின் தயவில்தான் தமிழக மக்கள் உயிர் வாழ வேண்டிய கேவலமான சூழ்நிலையில்தான் இன்றைய தமிழகம் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீள்வது மிக மிக கடினம். அழகிரி போன்ற ஆட்களும், மாறன் போன்றவர்களுமே நம் தலைமுறைக்கு முன்மாதிரியாகி விட்ட கேவலமான கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

Monday, April 6, 2009

கோபாலபுரத்துக் கோமானும் கோயில் மாடுகளும்

http://keetru.com/literature/essays/r_senthilkumar.php

கோபாலபுரத்துக் கோமானும் கோயில் மாடுகளும்
இரா.செந்தில்குமார்

karunanidhi_family அன்புள்ள மு.க.அ, மு.க.ஸ், மு.க.க, மு.க.அ.க, மு.ம.த.மு.க தலைவர் திரு. மு.க அவர்களுக்கு. இதோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரியும்னு நினைக்கிறேன் தலைவரே! இருந்தாலும் நான் இதை எழுதும்போது இது என்ன என்னன்னு கேட்டுட்டும் உங்களையே தமிழினத் தலைவரா நம்பி வாழ்ந்துட்டும் இருக்கிற எம் பொண்டாட்டி மாதிரியான அப்பாவிகளுக்காக முழுசாவே சொல்லிரலாம்ணு நெனக்கிறேன். முத்துவேலர் கருணாநிதி அழகிரி, முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின், முத்துவேலர் கருணாநிதி கனிமொழி, முத்துவேலர் கருணாநிதி அழகிரி கயல்விழி, முரசொலிமாறன் தயாநிதி முன்னேற்றக் கழகம்...... அப்பாடா சொல்லவே மூச்சு முட்டுதுங்க தலைவரே..... எம் பொஞ்சாதிய மாதிரி அப்பாவிகளெல்லாம் தி.மு.க.ன்னா இப்பவுங்கூட திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லீட்டு திரியுதுங்க தலைவரே. இந்த மட ஜென்மங்ககிட்ட அதுக்கான அர்த்தம் அதில்ல, திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியோட சுருக்கந்தா தி.மு.க.ன்னா ஒத்துக்கவே மாட்டேங்குறாங்க தலைவரே. நீங்களே செல்லுங்க! நீங்கதான தி.மு.க., தி.மு.க.ன்னா நீங்க தானே.

கட்சி பேரச் சொல்லி கண்டதையும் சொல்லி கடைசில, எழுத வந்ததை அப்படியே கோட்டவிட்டுவேன் போல இருக்குது தலைவரே. அதென்னமோ தெரியல, என்ன மாயமோ புரியலை நீங்க பேசுனா எல்லாரும் கொளம்பிப் போகற மாதிரி எனக்கும் உங்களுக்கு எழுதனும்ன்னு பேனா எடுத்தொடனே எல்லாமே கொளம்பிப் போச்சுங்க தலைவரே. சரி, நேரா விசயத்துக்கே வர்றனுங்க.

எனக்கு வீட்டுல ரெண்டு வாரமா எம்புள்ளயாள ஒரே பிரச்சனை தலைவரே. அதனால வேலவெட்டிக்குப் போகமுடியல, மனசு நிம்மதியா இல்ல. அப்பத்தான் உங்கள நெனச்சிட்டேன். ஒரே புள்ள, ஒரே பிரச்சனைய வெச்சிட்டு ஒரே வேலைக்குப் போற என்னாலயே ஒழுங்கா வேலை பாக்க முடியலேயே. உங்க நெலமயெல்லாம் அய்யய்யோ.... பாவந்தான் தலைவரே, இருந்தாலும் எம்பிரச்சனையை நீங்க தீத்து வெப்பீங்கன்னுதான் இந்த லெட்டரே எழுதுறேன். புள்ளைங்க பஞ்சாயத்து பாத்துப் பாத்து பழகிப்போன அனுபவஸ்தர் நீங்க. உங்ககிட்ட சொன்னா நிச்சயமா அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நான் நம்பறேன். ஏன்னா, இது ஈழப் பிரச்சனையில்ல கண்டுக்காம ஆஸ்பத்திரியில படுத்துக்க. புள்ளைங்க பிரச்சனை! அதுனால ஒரு தகப்பனா என் உணர்வை நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கிறேன். சமீப காலமா நீங்க ஒரு நல்ல தலைவரா இருக்கறத விட நல்ல தகப்பனா இருக்கிறதப் பாத்துட்டு ஊருல உள்ள கண்ணெல்லாம் உங்கமேல பட்டுருச்சு. அதனாலதான் இந்த முதுகுவலி, மூட்டுவலியெல்லான்னு நெனைக்கிறேன். திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க தலைவரே.

பாத்தீங்களா! மறுபடியும் நான் என் பிரச்சனையை மறந்துட்டேன். பிரச்சனை என்னன்னா 'என்னோட அஞ்சு வயசு மவ தெனம் ராத்திரில தூங்கும்போது ஒன்னுக்குப் போயிடறா தலைவரே. வீட்டுல இருக்கிற ஏகப்பட்ட சிக்கலுக்கு இந்த ஒரு பிரச்சனை தான் மூலகாரணம்னா உங்களால நம்பமுடியுதுங்களா தலைவரே! சரி விசயத்தைக் கொஞ்சம் விலாவரியாவே சொல்றனே. எம்மவ ஒன்னுக்குப் போறதுனால எங்கம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டையாயிடுது.

எங்கம்மா என்னடான்னா அஞ்சு வயசுப் புள்ள தெனம் ராத்திரியிலே ஒன்னுக்குப் போவுது பேசாம அவள மெட்ராஸ் ராமச்சந்திரா ஆசுபத்திரியில அட்மிட் பண்ணீரலாம் அப்படீங்குது. நான் சொன்னேன் அம்மா இந்த வயசுல இதெல்லாம் சாதாரணம் அட்மிட் ஆகற அளவுக்கு சிக்கலான விசயம் இல்லம்மான்னேன். ஆனா, அது எனக்கும் தெரியும்னு எங்கம்மா சொல்றாங்க. அப்புறம் ஏன் ஆஸ்பத்திரிக்குப் போலாங்கறேன்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, அட வயசான மூட்டுவலி வர்றது, முதுகுவலி வர்றது இதெல்லாம் சகஜந்தா, இதெல்லாம் தெரிஞ்சாலும் ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வரும்போது நம்ப முதல்வரே போய் ஆஸ்பத்திரில படுத்துக்குராறே. நம்ப புள்ளைய மட்டும் ஏன் ஆஸ்பத்திரில படுக்க வெக்கக் கூடாதுன்னு கேக்கறாங்க.

அட உங்களுக்கு இந்தியா. இலங்கை. சிங்கப்பூர். மலேசியான்னு 1431 பயோரியா பல்பொடி ரேஞ்சில பிரச்சனை. இந்தப் புள்ளைக்கு என்னங்க தலைவரே பிரச்சனை? அதையும் எங்கம்மாகிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க சொல்றாங்க 'உனக்கென்னடா தெரியும்? நீ காலைல போனா ராத்திரி வர்ற. அதுக்குள்ள பாவம், புள்ள படற பாட்ட என்னான்னு நான் சொல்ல? அவ காலைல எந்திரிச்சவுடனே பல்லுவெளக்கனும். குளிக்கனும். இது பிரச்சனையில்லையா? அவ ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தா ஹோம் வொர்க் எழுதனுமே அது பிரச்சனையில்லையா? முழுப்பரிட்சை வருதே அதுபிரச்சனையில்லையா? ஏன் சாயந்தரம் அவ "டோராவோட பயணங்கள்" பாக்கும்போது கரண்டு போயிடுதே அது பிரச்சனையில்லையா? பாவம்டா அவ'ங்கறாங்க.

அம்மா இதெல்லாம் சாதாரணம் தண்ணி ஊத்துனா குளிக்கிற பிரச்சனை தீர்ந்திடும். படிச்சா பரிச்சை பிரச்சனை தீந்திடும். கரண்டு வந்தா டோரா பிரச்சனை தீர்ந்திடும். இதுக்கெல்லாம் போயி ஆஸ்பத்திரிக்குப் போவாங்களான்னு நான் கேட்டேன். அதுக்கு, 'போடா போக்கத்தவனே. நம்ம மொதலமைச்சரு உக்காந்து பேசுனா இலங்கை பிரச்சனை தீந்திடும். நின்னு மெரட்டுனா மத்திய அரசாங்கமே நடுங்கிரும். இருந்தாலும் இதையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு பெரிய மனுசனே ஆஸ்பத்திரியிலே சேர்ந்துட்டாரு. நீ என்னமோ இந்த பச்ச புள்ளய ஆஸ்பத்திரியில சேக்க உடமாட்டீங்கறே'ன்னு எம்மேல கோவப்படுறாங்க தலைவரே. நான் என்ன பண்றது. நீங்கதான் சொல்லனும்.

உங்க புண்ணியத்துல ஒரு ரூவாய்க்கு அரிசி வாங்கிதான் எங்க வீட்டுல ஒலையே கொதிக்குது அப்படி இருக்கும்போது மெட்ராஸ் ராமச்சந்திரா ஆஸ்பத்திரிய எல்லாம் டீவி நியூஸ்ல வரும்போது பாத்துக்கலாம் (டீவியும் உங்க புண்ணியம்) அவ்வளவுதான். மத்தபடி நம்ம ரேஞ்சுக்கெல்லாம் ரெண்டு ரூவா குடுத்து தர்மாஸ்பத்திரிலதான் பாக்க முடியும்னு (ரெண்டு ரூவா குடுத்தாத்தான் அது தர்ம ஆஸ்பத்திரி) எங்கம்மாகிட்ட சொல்லி ஒரு சமாதான ஒப்பந்தத்துக்கு வரலாம்ணு பாத்தா எங்கம்மா, விடுதலைப் புலிக மாதிரி அப்பவும் சண்டைய நிறுத்துனபாடில்ல தலைவரே. அது சொல்லுது. அரிசி ஒரு ரூவா. ஆனா பஸ்டாண்டு பக்கம் போனா அவசரத்துக்கு ஒன்னுக்கு ரெண்டுக்கு அஞ்சு ரூவா தர்றயில்ல. அத மாதிரி இதையும் அவசர பிரச்சனையா நெனச்சி செலவு பண்ணுங்குது.

இந்த இடத்துலதான் எனக்கு சட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. உடனே 'அம்மா இனிமே புள்ளைய பேசாம ஸ்கூலுக்கு அனுப்பவேண்டாம். உங்க காலம் மாதிரியே அவ கை தலைய சுத்தி காத தொடும்போது ஸ்கூலுக்குப் போகட்டும். அப்படியே இந்த டீவிய தூக்கி பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளை பிளாஸ்டிக்குக்கு போட்டுடுவோம்'னு சொன்னேன். உடனே எங்கம்மா 'ஆமாப்பா. பேசாம. அதையே பண்ணிரெலாம். பாவம் சின்ன வயசு அவளால முடியல அவ என்ன பண்ணுவா? நம்பனால நம்ப புள்ளையதான் ஸ்கூல விட்டு நிறுத்தமுடியும். பாவம் நம்ப முதலமைச்சர் பெரிய மனுசன். அவராலயும் முடியல. அவர முதலமைச்சரா இருக்கறதவிட்டு நிறுத்திரலாம்னு யாராச்சும் நினைச்சா தேவல'ன்னு சொல்றாங்க. நான் என்ன சொல்ல முடியும் தலைவரே?

எம் புள்ள இந்த பிஞ்சு வயசுலேயே ஸ்கூலுக்கு போலாமா வேண்டாமான்னுதான் நான் முடிவு பண்ண முடியும். ஏன்னா அவ எம் புள்ள. அதே மாதிரி நீங்க எங்க தலைவரு. உங்கனாலயும் முடியல. நீங்க சட்டசபைக்குப் போக வேண்டான்னு இந்த மக்கள் முடிவு பண்ண மாட்டேங்கறாங்க. உங்க மேல பாசமே இல்லாத மக்கள். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்.

எம்புள்ள பாட்டி செத்ததுக்கு பத்து நாள் லீவு போட்டாலே அவங்க மிஸ்ஸூ 'நீயெல்லாம் ஒரு நல்ல ஸ்டுடண்டா? டாக்டர் சர்டிபிக்கட் எங்க? இஞ்சினீயர் பிளான் எங்க'ன்னல்லாம் திட்டறாங்கலாம். நீங்க பல வருசமா சட்டசபைக்கே போகாம இருந்தீங்களே நீங்கெல்லாம் நல்ல எம்.எல்.ஏவான்னு உங்கள யாரும் கேள்வியே கேக்கலையே தலைவரே.

இந்திய குடிமகன்ற உரிமையை மட்டும் வெச்சுட்டு தமிழ் பேசி தமிழக கடலோரத்துல மீன புடிச்சிட்டிருந்த நானுத்தி சொச்சம் பேர இலங்கை ராணுவம் கொன்னு போட்டுச்சே அப்பக்கூட ஒரு நாட்டோட குடிமகனை காப்பாத்த வக்கில்லாத அரசாங்கம் என்ன அரசாங்கம்? அவன் உயிருக்கு உத்தரவாதம் தராத நாடு ஒரு நாடா? அப்படி ஒரு நாடு தேவையான்னு சத்தமா குரல் கொடுக்க கையாலாகாத இந்த மக்களா உங்கள அப்படியொரு கேள்வி கேக்கப் போறங்க?

எங்கேயோ பிரான்ஸ்ல ஒரு சீக்கிய இளைஞனோட தலப்பாகைய களைச்சிட்டு மயிர இழுத்து பாத்ததுக்கே கொதிச்சு எந்திரிச்சு அவனுக்காக பிரான்ஸ்கிட்ட பேச இந்திய மந்திரிய அனுப்பிச்சாங்க சீக்கிய மக்கள். அப்பக் கூட 'அடே மத்திய அரசே சீக்கியனோட மயிருக்கிருக்கிற மரியாத கூட தமிழன் உயிருக்கு இல்லையா'ன்னு வீதிக்கு வந்து கேக்க நாதியத்த ஊமப் பயலுக உங்களப் பாத்து கேள்வி கேப்பாங்க? ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கே உரிய மத உணர்வுகளை மதிச்ச அரசாங்கமே தெனம் தெனம் செத்துப் பிழைக்கற தமிழ் மனித உயிர்களை ஏண்டா புரிஞ்சிக்கலன்னு ஒன்னு கூடி ஒப்பாரி வைக்கக் கூட கையாலாகாத இந்த தமிழனுகளா உங்களப் பாத்து விரல் நீட்டிப் பேசுவானுங்க? வாய்ப்பே இல்லை தலைவரே. அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும் தலைவரே. அதெல்லாம் ஏதோ உங்க மாதிரி ஆளுக பேச்சுல இருக்கிற புறநானுறுலயும். அகநானுறுலயும் கேக்கறதோட சரி. விஜயோட வில்லுலயும், விக்ரமோட அந்நியன்லேயும் பாக்கறதோட சரி.

ஊர்ல வேலவெட்டிக்குப் போகாத பெருசுக கோயில் அரசமரத் திண்ணைல உக்காந்திட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடும்போது பேசிட்டு இருந்ததை ஒரு நாள் கேட்டேன். (நான் ஏன் வேலைக்குப் போலைன்னு கேக்கமாட்டீங்க நீங்க. ஏன்னா இருக்கிற கரண்டு கட்டுல எல்லா வேலையும் என்ன லட்சணத்துல நடக்குதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும்) அதுல ஒரு பழமொழி டக்குன்னு மனசுக்குள்ள வந்து அப்படியே சம்மணம் போட்டு உக்காந்துருச்சுங்க தலைவரே. அது என்னன்னா.

மேட்டங்காட்ட உழுதவனும் கெட்டான்
மேனா மினுக்கிய கட்டுனவனும் கெட்டான்.

அதென்னமோ நீங்க ஜெயலலிதா அம்மாவோட பழைய செருப்பு, புது செருப்பு, நகை, நட்டு, போல்டு எல்லாத்தையும் அப்போ உங்களோடதா இருந்த சன் டீவியில போட்டுப் போட்டு காட்டி அந்தம்மாவ மக்கள் முன்னாடி மேனா மினுக்கியாவே சித்தரிச்சுட்டீங்க. அந்தம்மாவுக்கு முதலமைச்சர் பட்டம் கட்டுனவனும் கெட்டான்னு நீங்க சொன்னதா நெனச்சுதான் நம்ம தமிழ்ப் பயலுகலெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட்டு உங்கள மொதலமைச்சரா ஆக்குனாங்களோன்னு ஒரு சந்தேகம் எனக்கு. மேனாமினுக்கிக்கு மொதலமைச்சரா பட்டங்கட்டி கெடக் கூடாதுன்னு நெனச்ச வீணாபோன தமிழன் அப்படியே உங்களுக்கு ஓட்டக் குத்தனான் பாருங்க. அப்ப தெரியல நாம மேட்டாங்காட்ட உழுது கெடப்போறோம்னு. இப்ப புரிஞ்சுதுன்னு புலம்பி என்ன பிரியோஜனம் இல்லீங்களா தலைவரே.

இப்ப இன்னொன்னுங்கூட தோணுது தலைவரே. பேசாம இதுக்கு மேனா மினுக்கிய கட்டியே கெட்டிருக்கலாம். ஏன்னு கேளுங்க. அந்தம்மா மட்டும் இப்ப முதலமைச்சாரா இருந்திருந்தா எப்படியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராத்ததான் முடிவெடுத்திருப்பாங்க. (இப்ப மட்டும் என்ன வாழுதாம்) அப்படி ஒருசமயத்தில எதிர்கட்சியா மட்டும் நீங்க இருந்திருந்தா உங்களுக்கு முதுகுவலி வந்திருக்குமா? இல்ல முடியாமதான் போயிருக்குமா? அப்ப யாராச்சும் இந்த மாதிரி படுத்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க. எத்தனை பேருக்கு தமிழின துரோகின்னு பட்டங்கட்டியிருப்பீங்க? கால்குலேட்டர் வெச்சாவது கணக்குப் போட்டுப்பாருங்க. அப்படி ஒரு சூழல்ல முரசொலில நீங்க எழுதற லெடடர்களும் அதுல நீங்க குடுக்கற புள்ளி விவரங்களும் என்னவா இருந்திருக்கும். இன்னைக்கு தமிழ்நாடு பூர எழுச்சி உண்டுபண்ணியிருக்கிற முத்துக் குமாரோட இறுதியறிக்கை எழுத்தெல்லாம் உங்க எழுத்துக்கு முன்னாடி கால் தூசிக்குப் பெறுமா? அவன மாதிரி ஒரு தமிழ் போராளி உயிர் போகுமளவுக்கு மந்தமாகத்தான் நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பீங்களா? யோசுச்சுப் பாருங்க தலைவரே.

ஜெயலலிதா மட்டும் முதல்வரா இருந்திருந்தா வாழ்வோ, சாவோ, போராடிப் பாப்போம்னு எல்லாரும் அந்தம்மாவ எதிர்த்து நின்னிருப்பாங்க. ஆனா துரதிஸ்டவசமா நீங்க முதலமைச்சர். நீங்க போராட்டத்த முன்னெடுப்பீங்கற ஒரே காரணத்துக்கா தான் உங்களுக்காக எல்லாரும் காத்திருந்தாங்க. நீங்க என்ன செஞ்சீங்க? உங்களுக்கு முன்னால இருந்த வராலாற்றுக் கடமை என்ன? நீங்க செஞ்சிட்டு இருக்கிறது என்ன? நீங்க மட்டும் ஒரு தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தா ஒரு போராளி செத்திருப்பானா? யோசிச்சுப்பாருங்க தலைவரே.

இந்த நேரத்துல நாங்க ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம் இல்ல இல்லை நீங்க அந்த கட்டாயத்துக்கு எங்கள தள்ளீட்டீங்க தலைவரே. உடலை எரிச்சு உயிரைவிட நாங்க எல்லாரும் தைரியசாலிகளில்லை. ஆனாலும் எதையாவது எரிச்சு எங்க எதிர்ப்பை காட்டுற அளவுக்கு எங்க ஒடம்புலயும் தன்மான தமிழ்ரத்தம் கொஞ்சமாச்சு ஓடுது. அதனால நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என் கைக்கு ஒரு சூட்ட போட்டுடலாம்னு இருக்கேன். ஓட்டுபோட அனுமதி அளிக்கிற உங்க அரசாங்கம் சூடுபோட அனுமதி தருமா? ஏன்னா நாளைக்கு உங்களுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையான்னு எவனும் என்னப் பாத்து ஒரு கேள்வி கேட்டுற கூடாதில்லீங்களா தலைவரே!

உங்க அளவுக்கு இல்லைன்னாலும் உங்கள்ல ஒரு ஐஞ்சு பர்ஸண்ட் அறிவாவது இருந்திருந்தா தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என்ன மாதிரி எல்லாருக்கும் முரசொலிலயோ. இல்ல என் மூக்கு சளிலயோ அலைகடலென திரண்டு வா உடன்பிறப்பே. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட கைக்கு ஒரு சூட்டை போட சூரியனாய் எழுந்து வா உடன்பிறப்புகளேன்னு எழுதி ஒரு கூட்டங் கூட்டி இருப்பேன். ஆனா அந்த அளவுக்கு அறிவோ, பணமோ, அதிகார பலமோ இல்லாத என்னால என்ன பண்ணமுடியும்? தனியா ஒத்த ஆளா நின்னு இனிமே திமுகவுக்கு ஓட்டு போடுவியா கேட்டு என் வலது கையில வலிக்கிற மாதிரி ஒரு சூடு போடுவேன். இதுல உடன்பாடு இருக்கிற எல்லாரும் சேர்ந்து சூடுபோட போடலாம்னு முடிவெடுத்து ஒரு நாள் ஒரு இடம் ஒரு நேரம் குறிச்சா அதில நானும் ஒருத்தனா பங்கெடுக்க முடியும் அவ்வளவுதான்.

அடுத்தவன் போயிட்டு வந்ததுக்கு பேராசிரியர் விளக்கம் சொல்ற மாதிரி யார் யாரோ சூடு போட நான் ஏற்பாடு பண்ற அளவுக்கு என்னைய நான் இன்னும் வளர்த்துக்கல. ஆமா தலைவரே பேச்சுவார்த்தை நல்லாயிருக்கு. மேனனோட பயணம் ஓ.கே. பிரணாப் முகர்ஜியோட பயணம் ஓ.கே.ன்னு எல்லாம் சொல்றீங்களே. அப்ப நெஜமாலுமே இலங்கை அரசாங்கம் செய்றதெல்லாம் சரிதானுங்களா.

எனக்கு ஒரு சந்தேகம் முல்லைத்தீவு பகுதில 2 லட்சம் தமிழர்கள் மாட்டீட்டாங்க. இலங்கை அரசு இந்திய அரசு இவங்கல்லாம் சொல்ற மாதிரி புலிகள் தீவிரவாதிகள்னே வச்சிக்கிடுவோம். 2 லட்சம் தமிழர்கள் புலிகள் கிட்ட மாட்டி முல்லை தீவுல இருக்காங்கன்னே வச்சுக்குவோம். இப்ப இலங்கை அரசாங்கம் சொல்லுது மக்கள் வெளியே வராவிட்டால் அவர்கள் உயிருக்கு இலங்கை அரசு பொறுப்பேற்காதுன்னு. இது எந்த வகைல நியாயம்? விடுதலைப் புலிகளே தீவிரவாதிகளாச்சே. அவங்க மக்களை விடமாட்டாங்கதான அப்புறம் எப்படி அந்த மக்கள் வெளியே வருவாங்க. வெளியே வந்தா நீங்க சொல்ற மாதிரி புலிகள் கொல்லுவாங்க (ஏன்னா அவங்க தீவிரவாதிகள்) வரலைன்னா நீங்க குண்டு போடுவீங்க. அப்ப அந்த மக்களுக்கு வாழ்வதற்கு உரிமை உண்டா? இல்லையா?

ஆமா போனா மாசம் மும்பைல தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலை புடிச்சப்ப மக்களே நீங்களே வெளியே வந்திருங்க. இல்லைன்னா உங்க உயிருக்கு நாங்க பாதுகாப்பு தரமுடியாதுன்னு சொல்லி உங்க மத்திய அரசாங்கம் குண்டு போட்டிருந்தா மூனுநாள் யுத்தம் நடந்தே இருக்காதே. ஏன் குண்டு போடுல? அங்கிருந்தவனெல்லாம் முதலாளிகள். வெளிநாட்டுக்காரர்கள். ஏன்? என்ன காரணத்துனால உங்க மத்திய அரசு தாஜ் ஹோட்டல் மேல குண்டு போடல? ஒருவேளை இழிச்சவாய தமிழ்ப் பயலுக மட்டும் உள்ளார இருந்திருந்தா குண்டு போட்டிருப்பீங்க. ஏன்னா கேக்க நாதியத்த கேணப்பயலுகதான தமிழ் பயலுக.

நீங்க சொல்லுங்க தலைவரே. மும்பைல தீவிரவாதிகள் மேல இந்திய இராணுவம் குண்டு போடாதது சரின்னா. முல்லைத்தீவுல புலிகள் மீது குண்டு போடாம இருக்கறதுதானே சரி. முல்லைத்தீவுல குண்டு போடறது சரின்னா? இந்திய ராணுவம் தாஜ் ஹோட்டல் மேல குண்டு போட்டு ஒரேநாள்ள தீவிரவாதிகள அழிச்சிருக்கலாம்ல. அது தான சரி. ஒரு பதிலச் சொல்லுங்க தலைவரே.

இதையெல்லாம் ஏன் காங்கிரஸ்காரங்கிட்ட கேக்காம உங்ககிட்ட கேக்கறோம் தெரியுங்களா தலைவரே! அவனெல்லம் ஒரு ஆளு மயிருனு நமக்கு சமானமா ஒக்கார வெச்சுப் பேச நானொன்னும் மானங்கெட்ட திமுககாரனில்லீங்க தலைவரே.

நம்ம வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் அய்யா முன்ன ஒருதடவை கூட்டத்துல பேசும்போது சொன்னாரு "காங்கிரஸ்காரன திட்டாதீங்கய்ய! அவன் ஒரு கோயில் மாடு. அத பாத்தீங்கன்னா கொஞ்ச நேரம் குப்ப தொட்டீல வாய வெக்கும். அப்பறம் மார்கெட்டுக்கு வரும். கொஞ்ச நேரம் மார்கெட்டுலயும் வாய வெக்கும். யாரும் அத திட்டமாட்டங்க. ஏன்ன அது கோயில் மாடு. காங்கிரஸ்காரனும் அப்பிடிதான். கொஞ்ச நாள் திமுக கூட இருப்பான். கொஞ்ச நாள் அதிமுக கூட இருப்பான். அவன திட்டாதீங்கய்ய பாவம் அவன் ஒரு கோயில் மாடு" அதனாலதான் அவன நாங்க திட்டல தலைவரே. அப்பறம் மார்கெட் யாரு குப்ப தொட்டி யாருன்னு கேட்டு சொல்லுங்களே. ஏன்னா செல்வேந்திரன் அய்யா நாங்க கேட்டா இப்ப சொல்ல மாட்டாரு.

எந்த மொழி பேசி உங்க வாழ்க்கையை துவங்கினீங்களோ, எந்த மொழி உங்களுக்கு இந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொடுத்ததோ, எந்த மொழிபேசுகிற மக்கள் உங்களை உலக தலைவர்ன்னு கொண்டாடுகிறாங்களோ, அந்த மொழி பேசுகிற ஒரேயொரு காரணத்துக்காக ஒதுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்டு, இருக்க இடம், குடிக்க நீர் ஏதுமின்றி அனாதைகளாக அலையுறாங்களே...... நம்ம மொழி பேசுகிற அந்த மக்கள் உங்கள் சமகாலத்தில் சமாதியாக்கப்பட்டால் அதை அப்படியே சரித்திரம் பதிவு செய்யுமே என்ன செய்ய போகிறீங்க?

தயவு செய்து அவங்களுக்கும் உங்க இதயத்துல இடம் இருக்குதுன்னு மட்டும் சொல்லீறாதீங்க. ஏன்னா தேர்தல்ல நிக்க கூட இடங்குடுக்காதவங்களுக்கு எல்லாம் நீங்க இதயத்திலதான் இடம் கொடுப்பீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா ஈழத்துல நம்ம மக்கள் உட்கார, நிற்க, நடக்க சுதந்திரமாக வாழ, தன்னைத்தானே ஆள ஒரு நிலத்தை கேக்கறாங்க. அதுக்காக போராடறாங்க. அதுனால தயுவு செஞ்சு அவங்களுக்கு உங்க இதயத்துல இடங்குடுத்து கேவலப்படுத்தீறாதீங்க தலைவரே

கடைசி ஒன்னே ஒன்னு அந்த ஒன்னுக்கு மேட்டருதான் தலைவரே! இரண்டு, மூணு நாளா புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பறதில்ல. அதனால ராத்திரியில அவ ஒன்னுக்கும் போறதில்ல. ஒரு வழியா பிரச்சனை எனக்கு முடிஞ்சிபோச்சுது. நீங்களும் பேசாம இன்னைல்ல இருந்து மொதலமைச்சரா போறதில்லைன்னு ஒரு முடிவு பண்ணுங்க. ஒரு வேள உங்க முதுகுவலி போனாலும் போயிரும்

இப்படிக்கு
இரா.செந்தில்குமார்

பின் குறிப்பு: ஒரு மூத்த தலைவருடைய உடல்நலக் குறைவை மோசமாக விமர்சனம் செய்வது நாகரிகம் இல்லைதான் இருந்தாலும் என் கோபம் உண்மையானதெனில் அதில் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. நாகரிகமாக நான் கோபப்பட்டால் அதில் உண்மை இருக்க முடியாது. இந்த வார்த்தைகள் உங்களுக்கு வலிக்கும்தான் இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாய் உங்களையே நம்பி இருந்த என் போன்றவர்களின் இதயத்திலிருக்கும் வலியோடு ஒப்பிட்டால் உங்கள் வலி ஒரு பொருட்டல்ல.... ஓட்டுப்போட எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ திட்டவும் அதே உரிமை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

- இரா.செந்தில்குமார் (covaibhai@gmail.com)

Sunday, April 5, 2009

தமிழக நாட்டுப்படகு மீனவர்களை நிர்வாணப்படுத்தி, மீன்கள், பணம், பிடிக்கட்டுகளை திருடிச் சென்றனர் இலங்கைக் கடற்படை

AUDIO ATTACHED:  http://www.tamilnewscenter.com/audio/tn/2009/fishermen_slnavy_04042009.mp3 
----------------------------------
தமிழக நாட்டுப்படகு மீனவர்களை நிர்வாணப்படுத்தி, மீன்கள், பணம், பிடிக்கட்டுகளை திருடிச் சென்றனர் இலங்கைக் கடற்படை

ஈழத்தமிழர்கள் மேல் இன ஒழிப்பை கடந்த 30 ஆண்டுகளாய் நடத்திக் கொண்டு, இன்று உச்சகட்ட அழிப்பை இலங்கை இராணுவ துணையுடன் செய்து வரும் இலங்கை அரசு, தமிழக தமிழர்களான மீனவ மக்களை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்துவதோடு அல்லாமல், கிடைக்கும் பொருளை திருடி சென்றுள்ளது.
 
நேற்று முன்தினம், இராமேஸ்வரம் பம்பனைச் சார்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 200 பேர் 40 படகுகளில் இந்திய எல்லை பகுதியான கச்சத்தீவு அருகில் பகல் 12 மணியளவில் நங்கூரமிட்டு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 6 பெரிய படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை முதலில் மிரட்டி அனுப்புவது போல் நடித்து விட்டு, பின்னர் அனைத்து படகுகளையும், கச்சத்தீவுக்கு போகுமாறு கட்டளையிட்டதோடு மீனவர்களை பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் துப்பாக்கியால் வானம் நோக்கி சுட்டுள்ளனர்.
 
கச்சத்தீவில் மீனவர்களை கொதிக்கும் மணல் மீது நிற்க வைத்து, அவர்களின் துணிகளை கழற்றச் சொல்லியும், அவர்களின் சட்டை, பேண்ட் பைகளில் பணம் மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் திருடி விட்டு, பிடித்த மீன்களை தங்களது படகுகளில் ஏற்றிக் கொண்டு, ரப்பர் குழாய்களில் தமிழக மீனவர்களை அடித்துள்ளனர்.
அத்தோடு, மீனவர்களை புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். மீனவர்கள் தமிழக ஊடகங்களுக்கு இது பற்றி எதுவும் வாய்திறந்தால், பின்னர் ஒரு நாள் தங்களிடம் சிக்கினால் புகைப்படங்களை பார்த்து சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட ஒரு மீனவரான மார்க்ஷன், நமது தமிழ்ச் செய்தி மையத்தித்துடன் தொலைபேசியில் பேசியபோது நடந்தவற்றைக் கூறினார். அவருடன் பேசியதை நாம் ஒலி வடிவில் தனியே தரவுள்ளோம்.
 
இதுவரை 400 தமிழக மீனவர்களை சுட்டு கொன்றும், பல ஆயிரம் மீனவர்களை ஊனப்படுத்தியும் வந்துள்ள இலங்கை கடற்படையை, தட்டிக்கேட்க முடியாத அரசுகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில், சரியான பாடம் புகட்டப் போகிறோம் என்கின்றனர், மீனவ சங்கத் தலைவர்கள்.
 
தமிழக இராமேஸவரம் மீனவர்கள் 23 பேரையும், சுமார் 6 விசைப்படகையும் நேற்று முன்தினம் சிறைப்படுத்தி சென்ற இலங்கைக் கடற்படையினர், நேற்றும் மீனவர்களை கேவலப்படுத்தி, பொருட்களை திருடி செல்வது குறித்து இந்திய மைய அரசோ, மாநில அரசோ இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.--
______________________
www.tamilnewscenter.com 

--
www.manitham.net
manitham@manitham.net

Saturday, April 4, 2009

கலைஞர் கருணாநிதியும் நடிகர் வடிவேலுவும் ஒரு கற்பனை சந்திப்பு

கலைஞர் கருணாநிதியும் வடிவேலுவும்

ஒரு கற்பனை சந்திப்பு

நா. வைகறை

வடிவேலு : அய்யா, வணக்கம்

கலைஞர் : வாஙக் தம்பி வடிவேலு. ஓய்வு நேரத்துல உங்க நகைச்சுவை காட்சிகள் தான் மனதுக்கு ரொம்ப ஆறுதலா, தெம்பா இருக்கு.

வடிவேலு : எப்படி இருக்கீங்க அய்யா?

கலைஞர் : முடியல. கண்ணக்கட்டுது. (சிரிக்கிறார்)

வடிவேலு : முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குக் குப்புற படுக்கச் சொன்னதுக்கு நான் எதுக்காகவும் குப்புற விழமாட்டேன்னு சொன்னீ;ங்களாமே?

கலைஞர் : இந்த பத்திரிக்கைகாரங்க ஏன்தான் இப்படி எழுதுறாங்களோ. உட்கார்ந்து யோசிப்பாங்களோ தம்பி. இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திதான் என்னை ரணகளப்படுத்துறாங்கப்பா.

வடிவேலு : எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மத்தவங்க உணர்ச்சிய உருவாக்கினாலும் , உசுப்பேத்தினாலும் நீங்கதான் ‘பொசுக்’;குன்னு இறக்கிவிட்டுருங்களே?

கலைஞர் : எதச் சொல்ற தம்பி? வடிவேலு : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராகப் போராடிய கன்னடர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் திரையுலகினர் நாங்களும் உங்களுக்கு ஆதரவா உண்ணாவிரதம் இருந்தோம். ஆனா நீங்க கர்நாடக தேர்தல் முடிஞ்சவுடன் பேசிக்கலாமுன்னு சொல்லித் தமிழக உணர்ச்சியை மடைமாற்றி விட்டுட்டீங்க.

கலைஞர் : நான் சமயோசிதமா சிந்தித்து; எடுதத் முடிவாலதான் கர்நாடக- தமிழக மத்தியில் பகையுணர்ச்சி வளராம தடுக்க முடிஞ்சது. இந்திய இறையாண்மைக்கு வரவிருந்த ஆபத்தை என்னுடைய ராஜதந்திர நடவடிக்கையால தடுத்து நிறுத்தினதை நீங்க புரிஞ்சிக்கனும். நீங்க புரிஞ்சுக்காம போனா பரவாயில்ல. என்னுடைய ராஜதந்திரத்தை தோழர் என். வரதராஜனும், தம்பி வீரமணியும் வரவேற்று பாராட்டியதை நான் எப்பவும் மறக்க மாட்டேன்.

வடிவேலு : அய்யா வரதராசனும் - அய்யா வீரமணியும் உங்கள பாராட்டியதை என்னுடைய திரைப்படத்துல பயன்படுத்தியிருந்தேனே - பார்த்தீங்களா?

கலைஞர் : நீங்க நடிச்ச படத்துலேயே நான் அதிகம் ரசித்த படமாச்சே இம்சை அரசன் 23-ம் புலிகேசி . எதிரி மன்னன் படையெடுத்து வந்தவுடன் வீரர்களிடம் ஆவேசமாக பேசிவிட்டு, வௌ;ளைக் கொடியோடு ஒரு ஆட்டம் போட்டு சரணடைவீங்க. உடனே இரண்டு புலவர்கள் வந்து உங்களப்பாத்து வெள்ளைக் கொடியோடு வந்து எதிரியை விரட்டிய மாமன்னா என்று பாராட்டுவாங்க. இந்த காட்சியதான சொல்றீங்க.

வடிவேலு : ரொம்ப சரியா சொன்னீங்க அய்யா.

கலைஞர் : இநத் படத்துல வௌ்ளைக்காரன்கிட்ட இனாம் அது ரொம்ப முக்கியமுன்னு சொல்லுவீங்களே அந்தக் காட்சியில நடிப்பும் முகபாவனையும் ரொம்ப அருமை.

வடிவேலு : பல்வேறு பணிகளுக்கு இடையிலும் என்னுடைய படங்களையெல்லாம் பார்க்குற நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அய்யா.

கலைஞர் : என் காதுபட என்னைப் புகழாதீங்க தம்பி, கவியரங்கம் ஏற்பாடு செய்கிறேன். அங்க வந்து பேசுங்க. ஆஸ்தான கவிஞர்கள் பட்டியல்ல உங்களையும் சேர்த்துக்கிறேன்.

வடிவேலு : அய்யா இந்த முத்துக்குமார் அறிக்கையை பார்த்தீங்களா?

கலைஞர் : என்ன, சின்னப்புள்ளத்தனமா கேக்குற, அறிக்கையா தம்பி அது ! இல்லப்பா என்னைப் போன்றவர்களுக்கு வைத்த பெரிய ஆப்பு. நீங்க நடித்த வின்னர் படத்து கைப்புள்ள கதாபாத்திரத்தோடு என்னை கனக்கச்சிதமாப் ‘பொசுக்’குன்னுபொருத்திட்டானே.

வடிவேலு : ஆமாங்கய்யா. நீங்களும் அனைத்துக்கட்சி கூட்டம், சட்டமன்றத் தீர்மானம், பேரணி, மனித சங்கிலின்னு செய்றீங்க. ஒண்ணும் எடுபடலையே.

கலைஞர் : நல்லா கேட்கிறாங்க டீடெய்லு. இருப்பது ஒர் உயிர். அது போவது ஒருமுறை. அது தமிழுக்காக போகட்டுமுன்னு நான் ஆயிரத்து நானூறு முறை சொல்லியிருந்தேன்.

வடிவேலு : எத்தனைபேர் அடிச்சாலும் வலிக்காத மாதிரி நான் நடிப்பது போல நீங்களும் நல்லா சமாளிக்கிறீங்க அய்யா.

கலைஞர் : உண்மை தம்பி. அதுமட்டுமல்ல. கைப்புள்ள நீங்க அடிபட்டு சட்டைகிழிஞ்சு நடக்க முடியாம பாலத்துல உட்கார்ந்து இருப்பீங்க. அந்த வழியா நடந்துபோற ரெண்டு பேர் உங்களப் பார்த்துச் சொல்லுவாங்க அடி கொடுத்த கைப்புள்ள நிலையே இப்படின்னா, “அடி வாங்குனவன் கதி என்னவாயிருக்குமோ?” அப்படின்னு சொல்லும்போது, “இன்னுமாடா நம்பள நம்புறாங்க”ன்னு நீங்க சொல்வது போலத்தான் என் நிலையும்.

வடிவேலு : எதிர்ப்புகளை எப்படி எதிர் கொள்றீங்க.

கலைஞர் : உடம்புல எங்க வேண்ணாலும் அடிச்சுக்குங்க. ஆனா ஃபேசுல மட்டும் அடிக்காதீங்க, பர்சனாலிட்டி முக்கியமுன்னு நீங்க சொல்லுவீங்க. அதுமாதிரி தான் நானும் என் குடும்ப உறுப்பினர்களை யாராவது குறை சொன்னா உடனே கவிதை எழுதிடுவேன். கண்டன அறிக்கை கொடுத்துடுவேன். “பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கு. பேஸ் மட்டம் வீக்கா இருக்குறதால வேகமா செயல்பட முடியல.” மருதமலை படத்துல போலீசுகாரர் உங்கள அடிச்சு கத்திக்குத்து கந்தன், பீடா ரவியெல்லாம் பெரிய ரவுடிகளா ஆனது போல பலர் என்னைப் பேசி பெரிய ஆளா வரப்பார்க்குறாங்க. போகட்டும் தம்பி, உங்களுக்கும் ஏதாவது ஒரு பட்டம் தரணும்னு ரொம்ப நாளா ஆசை.

வடிவேலு : (தனக்குள்) (பார்க்க வந்தது ஒரு குத்தமாடா) பட்டமெல்லாம் ஒண்ணும் வேண்டாங்கய்யா. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.

கலைஞர் : எதுக்குப்பா?

வடிவேலு : நான் 23-ம் புலிகேசி, தீப்பொறித் திருமுகம், கைப்புள்ளன்னு பல கதாபாத்திரங்கள்ள நடிச்சிருக்கேன். நீங்க என்னுடைய கதாபாத்திரங்களுக்கே உயிர் கொடுத்து வாழ்ந்துகிட்ருக்கீங்க. அதுக்காகத்தான்.

“என்னை வைச்சு காமெடி - கீமெடி பண்ணலயே” - என்றவாறு கலைஞர் முறைக்க வடிவேலு வேகமாக வெளியேறுகிறார்.

நன்றி : புதிய தமிழர் கண்ணோட்டம் மாத இதழ்

க.அருணபாரதி"

arunabharthi@gmail.com

"சோ"-தான் ஒரு முட்டாள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்!

"துக்ளக்"

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை; வக்கீல் - போலீசார் மோதல்; கலைஞரின் ஹிந்து மத துவேஷம் போன்றவற்றில் துணிந்து கருத்துகளைச் சொல்லி வருகிறீர்களே! இந்த அசா தாரண தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

பதில்: தேவதைகளும் கால்வைக்கத் தயங்கும் இடத்தில் முட்டாள்கள் நுழைவார்கள் என்பது ஒரு ஆங்கில வாசகம்.

("துக்ளக்", 25.3.2009).

என் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் பத்திரிகை நடத்துகிறேன் என்றார் ஒருமுறை. இப்பொழுதோ தான் ஒரு முட்டாள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

"சோ" ராமசாமியை ஒருமுறை பாராட்டலாம் என்றால், இந்த இரண்டுக்காகவே ஒருமுறை பாராட்டி விடலாம்.

முட்டாள்தனத்தில் ஒரு படு முட்டாள்தனம் என்னவென்றால், தேவதைகள் என்று முட் டாள்தனமாக ஏதோ ஒரு கிறுக்கன் கூறியதை இவர் எடுத்துக்காட்டியுள்ளாரே - அதுதான்.

---------------------"விடுதலை"31-3-2009

கருத்துப்படம்

முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
சென்னை

கலைஞர் தமிழினக் கொலைஞர்

கலைஞர் தமிழினக் கொலைஞர் வீடியோ

http://www.youtube.com/watch?v=tjk4Tbwv6kE

பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. "உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்" என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.

(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).

ஆய்வு:முத்தமிழ் வேந்தன்(சென்னை)

திருமா இது தகுமா?

thiதிருமா இது தகுமா? -சு.தளபதி

மானமிகு திருமாவளவன் அவர்களுக்கு,

இந்த அடைமொழியுடன் உங்களை யாரும் இதுவரை அழைத்தார்களா என்று எமக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையுடன் மடலைத் தொடர்கிறோம்.

கடந்த பத்தாண்டுகளாய் உங்களை இந்தத் தமிழகம் கூர்மையாகக் கவனித்து வந்திருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துச் சிறுத்தையாய் நீங்கள் வெளியே வந்தபொழுது இந்தத் தமிழகம் உங்களை ஆரத் தழுவி வரவேற்றது.

பெருமையுடன் உங்கள் அடையாளங்களை அரங்கேற்றியதும், அங்கீகரித்ததும் இந்தத் தமிழினம் தான். அதற்குக் காரணம் நீங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அல்லது அந்த இனத்துக்காய் குரல் கொடுப்பவர் என்பது மட்டுமல்ல.அதையெல்லாம் தாண்டி எங்கெல்லாம் மனிதம் துன்புகிறதோ அங்கெல்லாம் உங்கள் ஆதரவுக் கரங்கள் நீண்ட காரணத்தினால்தான்.

சாதி அடையாளங்களைத் தாண்டி உங்களை ஒரு தலைவனாக உயர்த்திப் பிடிக்கத் தமிழர்கள் ஒரு போதும் தயங்கியதே இல்லை.

தமிழுக்கு முகவரி தர தமிழ்ப் பெயர்களை நீங்கள் சூட்டிய பொழுது தமிழ்ப் பகைவர்கள் உங்களை எள்ளி நகையாடினார்கள். ஆனால் தந்தைக்கே பெயர் சூட்டிய தனயன் என்று உங்களை இந்தத் தமிழ் மக்கள் பெருமையுடன் உச்சி முகர்ந்தார்கள்.

தமிழ் அடையாளங்களை காப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த நீங்களும் மரியாதைக்குரிய ராமதாசும் தமிழ் பாதுகாப்புக் குழுவை உருவாக்கி அரசியல் அரங்கில் ஒற்றுமை பேணிய போது உங்களை வராது வந்த மாமணியாய் நாம் அரவணைத்துக் கொண்டோம்.

பாப்பாபட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சக்திகளை நீங்கள் அஞ்சாமல் எதிர்த்த போது உங்கள் கரங்களுக்கு தமிழர்கள் தாங்களாய் உரம் சேர்த்தார்கள்.

சங்கராச்சாரியாரின் பார்ப்பன பிதற்றலுக்கு ஒரு சரியான சவுக்கடியாக, ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் கையில் தண்ணீர் வாங்கிப் பருகச் சொல்லி கேட்டபோது இங்கு இருந்த பெரியார் தொண்டர்கள் எல்லாம் பூரித்துப் போனார்கள்.

சென்ற முறை திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் போது அவர்கள் ஆதரவில் நின்று வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறிந்ததில் அரசியல் அரங்கில் ஒரு வித்தியாசமான மனிதனைக் கண்ட பெருமை எங்களுக்கு.

உங்கள் பாதை தெளிவாய் இருந்தது, உங்கள் நடை நேர்மையாய் இருந்தது கண்டு, ஒடுக்கப்பட்டோர் மட்டுமல்லாமல் இன உணர்வாளர்கள் அனைவரும் உங்கள் தோளுடன் தோளாக நின்றார்கள். உங்களின் சுயமரியாதையும், இனமான உணர்வும் அவ்வப்போது எங்கள் இதயத்தில் நல்ல பதிவுகளாக பதிந்து போயின.

தவறைத் தவறு என்றும் சரியை சரி என்றும் சரியாகச் சொன்னதினால் தமிழ் அரசியல் வரலாற்றில் பத்தாண்டுகள் பலபடிகள் உங்களை உயர்த்திக் கொண்டு வந்தவர்கள் இந்த தமிழர்கள்.

அதிலும் மிக முக்கியமாக ஈழப் பிரச்சனையில் நீங்கள் எடுத்த நிலைப்பாடு உள்ளூர் தமிழர்களைத் தாண்டி உலகத் தமிழர்கள் மத்தியிலும் உங்களுக்கு என்று உயர்ந்த இடத்தை பெற்று தந்தது.
அய்யா நெடுமாறன், வைகோ ஆகியோரோடு நீங்கள் கொள்கை கூட்டணி கொண்டபோது ஈழத் தமிழனுக்காய் குரல் கொடுக்க ஒரு தன்மானத் தமிழன் எழுந்து விட்டான் என்றுதான் இந்த இனம் நம்பியது.

போர் செய்யும் சிங்கள அரசையும், போருக்கு உதவும் இந்திய அரசையும் பற்றி நீங்கள் போட்டுடைத்த உண்மைகளில் இந்த இனம் உன்னைத் இனமானத் தலைவனாய் உயர்த்திப் பிடித்தது.

மேடைமேடையாய் நீங்கள் முழங்கிய முழக்கங்கள் ஈழத்தமிழர் துயர் துடைக்கும் மருந்தாய், அவர்களுக்கு ஒரு விடியல் காட்டும் வெளிச்சமாய் இருந்ததில் உங்களை இந்த தமிழினம் நம்பியது.

ஈழத்தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த இந்த காங்கிரசு அரசு ஒப்புக்கெரள்ளும் வரை, போர் நிற்கும் வரை, நீங்கள் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்ட போது எத்தனை தமிழர்கள் கண்ணீருடன் உங்கள் பின்னே காத்துக் கிடந்தார்கள் தெரி யுமா? உங்களின் ஒவ்வொரு இதயத் துடிப்புடன் எத்தனை கோடி துடிப்புகள் கலந்தன தெரியுமா?

உண்ணாவிரதம் முடிந்த போது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஞாபகம் இருக்கிறதா? அவை உங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டவை அல்ல, எங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் கொடுக்கப்பட்டவை.

தமிழினத்தின் தலைவர் என அறியப்பட்டவர்கள் எல்லாம் இனத்தை இந்திய காங்கிரசுக்கு அடகு வைத்த போது எதிர்த்துக் குரல் கொடுத்து இலங்கை பாதுகாப்பு இயக்கம் என்று எல்லோரும் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தம், உண்ணா நோன்பு, மனிதச்சங்கிலி என போராட ஆரம்பித்த போது திருமா என்ற மூன்றெழுத்து தமிழோடும் தமிழ் மக்களும் இரண்டறக் கலந்து போனது.

தமிழின எதிரிகள் யார் என்பதை தெளிவாக அடையாளம் காட்டியதில் உங்கள் பங்கு மகத்தான ஒன்று என்பதை தமிழினம் எப்போதும் மறக்காது.

இந்திய அரசும் அதை நடத்துகின்ற காங்கிரசு கட்சியுமே ஈழம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எதிரிகள் என்று நீங்கள் அறிவித்து அவர்களைத் தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்துவது என்ற கொள்கை முழக்கம் எடுத்தீர்கள்.

நம் எதிரிகள் ஏன் உங்களை கைது செய்யவில்லை என்று கரடியாய் கத்திய போது நாம் எடுத்த போராட்ட நடவடிக்கையால் சத்திய முர்த்திபவனே சற்று ஆடித்தான் போயிற்று.

மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து தற்கொடை அளித்த போது அவன் உதடுகள் உச்சரித்த கடைசி சொற்கள் பிரபாகரனும், திருமாவும்.

தொடர்ந்து இதுவரை ஒரே ஒரு லட்சியத்துக்காக, ஒரே ஒரு கோரிக்கைக்காக பதின் மூன்று உயிர்கள் தற்கொடை அளிக்கப்பட்ட போது ஒவ்வொரு இறுதி நிகழ்விலும் உங்கள் கண்ணீருடன் எங்கள் கண்ணீரும் விழுந்தது. அவ்வளவு ஏன் உங்கள் அரசியல் இயக்கத்திலிருந்தே மூவர் தீக்குளித்தார்கள்.

எல்லோரும் சேர்ந்து யாரை நம்பினார்களோ இல்லையோ உங்களை நம்பினார்கள். உங்கள் கைகளிலும் தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகளை விட்டுப் போனார்கள்.

நாங்களெல்லாம் அதை நம்பினோம். யார் எப்படியோ திருமாவின் பார்வையில் தெளிவு குறையாதென்று உறுதியாயிருந்தோம்.

என்ன ஆயிற்று உங்களுக்கு, தேர்தல் வந்துவிட்டதா?

தேர்தல் எப்போதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரத்தான் செய்யும். அதற்காக துரோகிகளுடனும், எதிரிகளுடனும் கூட்டணி சேர்வதா?

எதுவும் மாறவில்லை இதுவரை. தினந்தோறும் குண்டு வீச்சும் ,செத்துமடியும் தமிழினமும், வீடின்றி, நாடின்றி தங்கக்கூட இடமின்றி அலையும் அவலமும் இன்று வரை குறையவில்லை.

குண்டு போடுவதை நிறுத்துங்கள் என்றால் காங்கிரசோ குண்டுவீச்சில் செத்தவர்கள் போக மீதமிருப்பவர்களுகு மருத்துவ உதவிகள் செய்கிறோம் என்கிறார்கள்.

ஆனால் போர் நின்று விட்டது போலவும், அமைதி திரும்பிவிட்டது போலவும், தமிழர்கள் பாதுகாப்பு அடைந்துவிட்டார்கள் என்று போலவும், நீங்களும் உங்கள் நண்பர்களும் பேசி வருகிறீர்களே?

நாங்கள் எந்த திருமாவை உண்மை என நம்புவது?

கொள்கையே உறுதியாய் நின்ற குன்றா விளக்கையா, இல்லை கொள்கையை எதிரிகள் காலடியில் ஒரு பாரளுமன்றத் தொகுதிக்காய் அடமானம் வைக்கும் இந்த திருமாவையா?

காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என்ற கொள்கை முழக்கத்தை துவக்கி வைத்த நீங்கள் இப்போது எந்த முகத்தோடு அதே காங்கிரசுடன் அணி சேர்ந்தீர்கள்.

திமுகவும் நீங்களும் ஈழப்பிரச்சினையில் ஒரே கொள்கை உள்ளதாக அறிவித்திருக்கிறீர்களே. அது எப்படி? திமுகவும், காங்கிரசும்தான் ஏற்கனவே ஒரே கொள்கை என்று அறிவித்தார்களாயிற்றே.

நீங்களும் காங்கிரசும் திமுகவும் ஒரு அணியில் வாக்கு கேட்டு எப்படி எங்களிடம் வருவிர்கள்? இதில் ராமதாசையும் வேறு அழைத்திருக்கிறீர்கள், அப்படியே அம்மையாரையும் மார்க்சியவாதிகளையும், முடியுமானால் விஐயகாந்தையும் உங்கள் அணிக்கே அழைத்துக் கொண்டு போய் விட வேண்டியது தானே. நாங்கள் ஒட்டு போட வேண்டிய தேவையே இல்லாமல் போகுமே.

மாவீரன் முத்துக்குமாருக்கும் அவன் பின்னே போன பதின்மூன்று பேருக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள்?

தன்மான சிங்கங்களெல்லாம் தேர்தல் அரசியலில் அசிங்கங்களாய் மாறிப் போனதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த சிறுத்தையும் இப்போது பூனையாய் மாறி மியாவ் என்பது எங்களையெல்லாம் அதிரவைக்கிறது.

விலை மகளிர் பலர் வேசித்தனம் செய்யலாம். ஆனால் ஒரு கண்ணகி சோரம் போவதில் எங்களுக்கெல்லாம் உடன்பாடு இல்லை.

உண்மைகளை உரத்துப்பேசிய குற்றத்திற்காக சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் போது நீங்கள் மட்டும் தேசிய நீரோட்ட சாக்கடையில் குதித்துக் களிப்பதா?

ஆறு கோடி தமிழ் இதய நாற்காலியை விட ஒரு எம்.பி நாற்காலி உங்களுக்கு அதிக அங்கீகாரம் அளித்துவிட்டதா? உங்களுக்கு அங்கீகாரம் தந்த தமிழ் மக்களை விடவா இந்த ஒரு பாராளுமன்றத் தொகுதி அதிக அங்கீகாரம் தந்துவிடப்போகிறது.

பொதுவாக சிதம்பரம் என்றாலே உடனே கூடவே நினைவுக்கு வந்து தொலைப்பது தமிழ் விரோதக் கும்பல் தான்.

புராணத்தில் பார்வதியை தோற்கடிக்க ஒரு காலைத் தூக்கி சிவன் ஆடி பெண்ணடிமைத்தனத்தை துவக்கி வைத்தது சிதம்பரத்தில்தான்.

நஞ்சைக் கக்கும் ஒரு உள்துறை அமைச்சர் சிதம்பரம் என்ற பெயருக்குச் சொந்தக்காரர்தான்.

தமிழே கூடாது என்று அடித்து விரட்டிய தீட்சிதர் கும்பலும் சிதம்பரத்தில் தான்.

இன்று ஒரு மக்களவைத் தொகுதிக்காக ஒரு இனமான தமிழன் சோரம் போனான் என்று வரலாறு எழுதப்போவதும் இந்த சிதம்பரத்தில்தான்.

ஈழத்தில் நல்ல தலைவன் கிடைத்திருக்கிறான், ஆனால் நாடு சொந்தமாயில்லை. தமிழ்நாட்டில் நாடு சொந்தமாயிருக்கிறது ஆனால் நல்ல தலைவர்கள் கிடைப்பதில்லை. அதனால்தான் இன்னும் சில அறியாக் கூட்டம் ரசினிகாந்தை கட்சி ஆரம்பிக்க சொல்லி பின்னால் அலைந்துகொண்டிருக்கிறது.

எது எப்படி ஆனாலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் திருமா.

நீங்களே தூக்கிப்பிடித்தாலும் சரி, இல்லை வேறு யாரையும் துணைக்கு அழைத்து பல்லக்கு தூக்கினாலும் சரி, இந்தத் தேர்தலில் மனிதத்தின் எதிரிகளான காங்கிரசு, பார்ப்பன கட்சிகளுக்கு கண்டிப்பாக நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை.

நீங்கள் தோற்றால் பரவாயில்லை, தமிழ் தோற்பதில் தமிழர்கள் தோற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

மீண்டும் மடலின் ஆரம்பத்தைப் பாருங்கள்.உங்களை அப்படி அழைக்கவே ஆசைப்படுகிறோம், இனிமேலும்..

எங்களைப் பொறுத்த வரையில் மாண்புமிகுவை விட மானமிகு உயர்வானது, உங்களுக்கு எப்படியோ..

http://sthalapathy.wordpress.com/2009/03/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/#கமெண்ட்ஸ்

Thursday, April 2, 2009

Tuesday, March 24, 2009

Sunday, March 22, 2009

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!