http://www.maalaimalar.com/2009/07/12111424/CNI0120120709.html
தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ ஒரு பாட்டு mp3
ஏதோ ஒரு பாட்டு mp3 | ||
Found at bee mp3 search engine |
Pages
Sunday, July 12, 2009
♥ சிங்கள அரசுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை; செஞ்சிலுவை சங்கம் செய்யும் பணியை தடுக்காதே...! ♥
http://www.maalaimalar.com/2009/07/12111424/CNI0120120709.html
♥ உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு!-ஆனந்த விகடன் ♥
உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு!
ராஜபக்ஷே பதவிக்கு வந்ததும் முதலில் தடை செய்தது பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத்தான். அனல் ஆவேசமாக 'அங்கு' போராடும் பத்மினி, புனல் புன்னகையுடன் இங்கு என்னை எதிர்கொண்டார்
''ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?''
''யாழ்ப்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில்தான், அங்கு மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். எந்தப் பெண்ணும் தனியாக நள்ளிரவிலும் வீதிகளில் நடந்து செல்லலாம். குற்றச் செயல்கள் நடவாத அமைதிப் பிரதேசமாக அது இருந்தது. சிங்கள அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டது தவிர, வேறு பாதிப்புகள் அப்போது இல்லை. 1985-ல் இருந்து மின்சாரம் கிடையாது. இருட்டில் வாழ்ந்து பழகிவிட்டது.
சந்திரிகா ஆட்சியின்போது யாழ்ப்பாணத்தை ராணுவம் கைப்பற்றியது. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த மக்களை ஒடுக்கமான இரும்புக் கம்பிகளுக்குள் போட்டு அடைத்துவிட்டது ராணுவம். தொப்பி அணிந்துகூட சாலையில் நடக்க முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே மின்சாரம் கொடுத்தார்கள். சோடா, ஃபேன்ட்டா பாட்டில்களைப் படம் எடுத்து பத்திரிகைகளில் போட்டார்கள். அவையும் சில மாதக் காட்சிகள்தான். யாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பத்திரிகையில் வந்த செய்தி குறித்து அந்த மக்களிடம் கேட்டேன். 'உதட்டில் உள்ள சந்தோஷம் அது. உள்ளத்து நெருப்பை அவர்கள் உணரவில்லை' என்று ஒரு பெண் சொன்னாள்.''''கிழக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து பிள்ளையான் முதலமைச்சர் ஆகப் பொறுப்பேற்கவும் அங்கு பல்வேறு நலத் திட்டங்களை இலங்கை அரசு செய்ய ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்களே?''
''அங்கு நடப்பது அரசாங்கம் அல்ல. ஒரு பொம்மை ஆட்சி. நாங்கள் நல்லது செய்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகச் சில திட்டங்களைச் செய்கிறார்கள். காலங்கள் ஓடும்போது, இதுவும் நிறுத்தப்படும். இந்துக்களின் மனதைக் காயப்படுத்தும் காரியங்கள் திட்டமிட்டு நடக்கின்றன. புத்த கோயில்கள் கட்டப்படுகிறது. தமிழ் வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை வைக்கிறார்கள். முஸ்லிம்கள் வசம் இருந்த வயல்கள் பறிக்கப்பட்டு அவை சிங்களக் குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன. இதுதான் அவர்களின் செயல் திட்டங்கள். இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் நலத் திட்டங்கள்.
நீங்களே அங்கு சென்று பாருங்கள்... 'எவள் தமிழ்ப் பெண், எவள் சிங்களப் பெண்' என்றே தெரியாது. சிங்களப் பெண்ணைப் போல உடையுடுத்தி, அவள் பயன்படுத்தும் அதே மாதிரியான பேக் போட்டுக்கொண்டு பொட்டு வைக்காமால், சிங்களம் பேசி வாழ எம் மக்கள் பழகிக்கொண்டார்கள். தமிழச்சி என்ற அடையாளத்தை இழந்து, சிங்களப் பெண்ணாகத் தன்னைக் காட்டிக்கொண்டால்தான் நிம்மதி என்று தமிழ்ப் பெண் நினைக்கிறாள். இதுவா நாங்கள் கேட்ட வாழ்க்கை? இதற்காகவா போராடினோம்?''இது போன்ற நிலைமைகளை நாடாளுமன்றத்தில் பேசினீர்களா?''
''அது அவர்கள் நாடாளுமன்றம். அங்கு தமிழனுக்காகக் குரல் கொடுக்க முடியாது. பேச விட மாட்டார்கள். எனக்குத் தெரிய, தமிழ் எம்.பி. யாராவது பேசினால் ஹெட் போனை பொருத்திக்கொள்ளவே மாட்டார்கள் பல சிங்களத் தலைவர்கள்!''''ஒரு எம்.பி-யாக ராஜபக்ஷேவைச் சந்திக்க முடியாதா?''
''தமிழின அழிப்பைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக சிங்கள மக்களிடம் தங்கள் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்கள் அங்குள்ள தலைவர்கள். தமிழனுக்கு எதிரான எந்த அநீதிக்கும் அங்கு நீதி கிடைக்காது. எதை வைத்து ராஜபக்ஷேவை நம்ப முடியும்?''''இன்று வன்னியில் நிலைமை என்ன?''
''வன்னிப் பகுதிகளில் திடீரென 1,000 கிலோ எடையுள்ள குண்டுகள் விழுந்து 30 அடி ஆழத்துக்குக் கிணறுகள் போல பள்ளம் பறிக்கும். கிளாஸ்டல் வகை குண்டுகள் குறிப்பிட்ட உயரம் வரை தாழ்ந்து வெடித்துச் சிதறும். வானத்தில் எந்த விமானம் பறந்தாலும் அங்குள்ள மக்கள் பதறுகிறார்கள். ஓமந்தைதான் ராணுவத்தின் செக் போஸ்ட். அதைத் தாண்டி ராணுவத்தால் வர முடியாது.
வீடு வாசலை இழந்த மக்கள், காட்டுக்குள் பதுங்கி பிளாஸ்டிக் ஷீட் அடித்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு பிளாஸ்டிக் ஷீட்டை செக் போஸ்ட்டில் அனுமதிப்பதில்லை. வன்னிக்குத் தேவையான பொருட்களில் இதுவரை அரைப் பங்குதான் வந்திருக்கிறது. கடைசிக் காலாண்டுக்கான மருந்து இதுவரை வரவே இல்லை. மலேரியாவுக்கான மருந்து, கடந்த 11 மாதங்களாக வரவில்லை. அதனால் 44 பேர் மருந்து இல்லாமல் இறந்து போனார்கள். விஷ நாய்க் கடிக்கு மருந்து இல்லாமல் 84 பேர் இறந்துள்ளார்கள். போரில் சாவது பாதி, போர்ச் சூழல் கொல்வது மீதி!''
''இந்த மக்களுக்காகத் தமிழகத்திலிருந்து உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டதே. அவை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்ததா?''
''எம் மக்களுக்கு சமீப காலத்தில் கிடைத்த மிகப் பெரிய ஆறுதல் தமிழகத்தில் எமக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும், அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களும்தான்.''''இது இன்னும் எத்தனை நாளைக்கு?''
''இப்போது விளிம்பு நிலையில் நிற்கிறோம். யாழ்ப்பாணத்து எம்.பி-யான நான், கடந்த 2 ஆண்டுகளாக அங்கே செல்ல முடியவில்லை. ராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிவநேசன் எம்.பி. தனது வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சியை இன்னமும் எவராலும் மறக்க முடியவில்லை.
அங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பிப்ரவரி மாதத்துக்குள் புலிகளை அடக்கிவிடப் போவதாக ராணுவம் சொல்கிறது. அவர்கள், இப்படிப் பல தடவைகள் நாள் குறித்திருக்கிறார்கள். அதை எம்மக்கள் முறித்திருக்கிறார்கள். விடியல் தூரத்தில் இல்லை என்று மட்டும்தான் இப்போது எங்களால் சொல்ல முடியும்!''
நன்றி: ஆனந்த விகடன்
http://www.tamilkathir.com/news/847/58//d,full_view.aspx- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்! – விகடன் ♥
அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்! – விகடன்
பத்தாம் நுற்றாண்டில் வாள் எடுத்துத் தன் வீரத்தைக் காட்டி, உலகை வென்றான் ராஜராஜ சோழன். 21-ம் நூற்றாண்டில் துப்பாக்கி எடுத்து தமிழனின் மானம் காத்தான் மாவீரன் பிரபாகரன். உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவன் அவன்.
ஒருவேளை அவன் மறைந்திருந்தால், அது துரோகத்தால் பெற்ற வெற்றி! சாவே வந்து பிரபாகரனிடம் பிச்சை கேட்டிருக்கும். அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல, கிழக்கு மீண்டும் சிவக்கும்…
மறுபடியும் உதிக்கும்… அந்த விடியலே தமிழ் ஈழம். இங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் ஈழத்தின் வலியைப் பற்றிப் பேசினார். அவரைப் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் ஈழம் மலரத் தேவை!" என்றார் வைரமுத்து.
ஈழ மக்களி டையே தனி யாகப் பேசிக் கொண்டிருந்த போது தமிழருவி மணியன், "தீக்குச் சியும், தீக்கிரையாக்கி விடும் சிகரெட்டும் ஒரே பெட்டியில் இருக்கலாம். ஆனால், தமிழனும் சிங்களவனும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது!" என்றார். "தமிழ் ஈழம் தவிர்க்க முடியாதது.
ஆனால், யுக்திகளை மாற்றவேண்டும். 20 ஆண்டுகள் முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. அப்போது அமெரிக்க-ரஷ்ய பனிப் போர். இப்போதோ, இந்தியா-சீனா பனிப்போர் ஆசியாவில் மையம் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளுமே தமிழர்களை ஆதரிக் காததால்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இலங்கையைவிட ராணுவ பலம் அதிகம் இருந்தால் போதுமே, தமிழ் ஈழம் பெற்றுவிடலாம் என்று முப்படை கண்ட மாவீரன் உலக நாடுகளின் ஆதரவை பெறத் தயங்கி நின்றான்.
அதுவே எதிராகிவிட்டது. ஆகவே, அநாதைகளாக விடப்பட்டோம். இப்போதுகூட தனிநாடு கேட்கவில்லை. இந்திய அரசில் உள்ள மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தைதான் கேட்கி றோம் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டது. ஆனால், அதை சிங்கள அரசு குப்பையில் போட்டது. அதையாவது மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டாமா?
இலங்கை இறையாண்மைக்கு இழுக்கில்லா தனி மாநிலம் பெற அனைத்து ஈழத்தலைவர்களும் கருணாநிதி, ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும். 40 எம்.பி-க்கள் டெல்லியை அசைக்க முடியும். அதற்கு உங்களிடம் முதலில் ஒற்றுமை அவசியம்!" என்றார்.
விழாவில் கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத் தக்க கவனத்தைப் பெற்றார் ம.நடராசன். ஜார் ஜியா மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டேவிட் போய்த்ரிஸ், சுமார் 2 மணி நேரம் ம.நடராசனுடன் பேசி இந்திய அரசியல், தேர்தல் வியூகம் என்று அலசி னாராம். ஈழத் தமிழர்களும் ம.நடராசனை சந்தித்து ஆலோசனை செய்தார்கள்.
அவர்கள் மத்தியில் பேசிய நடராசன், "இந்திரா உயிரோடு இருந்திருந்தால், பங்களா தேஷ் உருவாக்கியதைப் போல் தமிழ் ஈழம் அமைத்திருப்பார். அவர் ஒரு ராஜதந்திரி. ஆகவேதான், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தார். ராஜீவ் காந்தியும் மிக அழகாக ஈழப் பிரச்னையைக் கையிலெடுத்தார். அதற்குள் அவரை சுற்றி இருந்த தீயசக்திகள் இலங்கையிடம் காசு வாங்கிக்கொண்டு, அவர் புத்தியை மழுங்கடித்துவிட்டன. சோனியா தன் மாமியாரையும் மதிக்கவில்லை, கணவரையும் மதிக்கவில்லை..!
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையும்இணைத்து ஒரே தமிழ் நிலம் அமைக்க வழி வகுத்தது. இப்போது இலங்கை உச்ச நீதிமன்றம், அந்த ஒப்பந்தத்தின் 13-வது ஷரத்தை ரத்து செய்து, இந்தியாவின் முகத்தில் கரிபூசி உள்ளது. கணவர் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காத இலங் கையை தட்டிக்கேட்க சோனியாவுக்கு ஏன் தைரிய மில்லை? இந்தியா-பாகிஸ்தான் போரின்போது அமெரிக்க அதிபரான நிக்ஸன் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் இந்திரா.
அவர் உடம்பில் இந்திய ரத்தம் ஓடியது. இந்தியாவின் புகழை உலக நாடுகளில் நிலைநிறுத்தினார். ஆனால், இப்போது அண்டை நாடுகளான குட்டி தேசங்கள் நம்மை மதிப்பதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, சுதந்திரம் கிடைக்கும் வரை அங்கு அமைதி திரும்பாது; இலங்கையில் அமைதி இல்லாத வரை இந்தியாவில் அமைதி கிடையாது. இதை சோனியா உணர வேண்டும். கலைஞரையும் இனி நம்பிப் பயனில்லை. தமிழ் ஈழம், புலி என்றாலே கடுமையாக எதிர்த்துவந்த ஜெயலலிதா, அங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டு தன் 20 வருட நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டார். இனி, அவரை நம்பலாம்…" என்று பேசியிருக்கிறார்.
தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை, வேலூர் ஜி.விஸ்வநாதன்… தமிழ் சினிமா நடிகர்களான பசுபதி, ஜீவா, நடிகை கனிகா ஆகியோர் பேசுகையில் ஈழப் பிரச்னையைத் தொடவில்லை.
அனுராதா ஸ்ரீராம் தமிழ் இசை திரைப்பாடல் நிகழ்ச்சியில் இடை இடையே ஆங்கிலத்தில் பேச, கடுப்பான தமிழ் சங்கத் தலைவர் ஒருவர் 'தமிழில் பேசுங்க' என்று சத்தம் போட்டார். உடனே, அனுராதா ஸ்ரீராம், "நானும் தமிழச்சிதாங்க. தமிழ்த் திரைப்படத் துறையில் மலையாளிகளும், இந்திக்காரர்களும்தான் அதிகமாகப் பின்னணி பாடுகிறார்கள். உங்கள் கோபத்தை அங்கு சென்று காட்டுங்களேன்… பெருமைப்படுகிறேன்!" என்றார் பட்டென்று!
பேச்சுகளுக்கிடையில், வன்னியில் நடை பெற்ற படுகொலைகளை, சித்ரவதைகளை புகைப்படங்களாகத் திரையில் காட்டினார்கள். பிணக்குவியல்கள், முடமான மனிதர்கள் என உலுக்கிப்போட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து, அந்த அரங்கத்தில் இருந்த குழந்தைகள் பயப்பட, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கண்களைப் பொத்த வேண்டி வந்தது.
http://www.nerudal.com/nerudal.9226.html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ முள் கம்மி முகாம்களைப் பார்வையிட கனிமொழி குழு விரைவில் இலங்கைக்கு கிளம்பவுள்ளது ♥
நலன்புரி முகாமகளைப் பார்வையிட கனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது: - பார்வையிட்ட பின்னர் அக்குழுவினர் சார்பில் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கைகள் அளிக்கப்படுமெனவும் தெரிவிப்பு. |
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி தலைமையிலான குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
கவிஞர் கனிமொழி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர கவனம் செசலுத்தி வருகிறார். இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் தமிழர்க்ள நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான செய்திகளை தமிழகத்திலுள்ள பல பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கைக்கு வருகைதரும் அவர் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.முதலில் தனிப்பட்ட விஜயமாக மேற்கொள்ள நினைத்திருந்தார். பின்னர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கனிமொழியை அதிகாரபூர்வமாக அரசு சார்பில் அனுப்புவது என்று முடிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும் தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்புக்குழ உருவாக்கப்பட்டு அதற்கு தலைமையேற்று கனிமொழி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும், இந்திய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமையேற்று வருவார் என்றும் இருவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கனிமொழியுடன் தமிழகத்திலிருந்து மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்குழுவில் இடம்பெறக்கூடும் என்றும் இருவரில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, காங்கிரஸ் சார்பில் இரண்டு எம்.பிக்ககள் உட்பட மொத்தம் எட்டுப் பேர் கொண்ட குழு விரைவில் இலங்கைக்கு செல்லும் என்று தெரிகிறது. நலன்புரி முகாமகளைப் பார்வையிட்ட பின்னர் அக்குழுவினர் சார்பில் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கைகள் அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் மேலுதம் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது. தற்போது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபா நிதியுதவி கனிமொழியின் பயணத்தின் பின்னர் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ "துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'" ஜெகத் கஸ்பர் -நக்கீரன் தொடர் ♥
துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' பேசுகிறார் பிரபாகரன்
நாளாந்த வாழ்வின் கடமைகளும், கவலைகளும், சம்பந்தமில்லா மனிதர்களும் நீதிக்கான வேட்கையிலிருந்து நம்மை தணிக்கின்றன. இச்சூழல்வினைக்கு நானும் விதி விலக்கல்ல. அதிகாலை எழுந்து நடக்கும்போது இருக்கிற உணர்வெழுச்சியும் வேகமும் அந்தியாகும் போது இருப்பதில்லை. ஆயினும் ஒருசில நிகழ்வுகள் மட்டும் நம்மை நிம்மதியாக இருக்க முடியாமற் செய்யும், எண்ணும்போதெல்லாம் கண்ணியச் சீற்றம் கிளர்த்தும். கடந்த சுமார் ஐம்பது நாட்களாய் என்னை கனன்றுகொண்டே இருத்தி வைக்கும் நிகழ்வு மே, 14, 15, 16 நாட்களில் முல்லைத்தீவு பகுதியில் பாதுகாப்புத்தேடி ராணுவக் கட்டுப் பாட்டு பகுதிகளுக்குள் வந்த பல்லாயிரக் கணக்கான தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவம் ஆடைகள் களைந்து, நிர்வாணமாய் கைகளை உயர்த்திக்கொண்டு வரச்செய்த கொடுமை.
சரியோ, தவறோ... எந்த வரலாற்று- பண்பாட்டுக் காரணங் களாலோ தெரியவில்லை... பெண்களை பொத்திப் பாது காத்து வளர்க்கும் சாதி இந்த தமிழ்ச்சாதி. உயிரினும் மானம் பெரிதெனக் கருதி வாழ்ந்த சாதி. தாய்மையை தெய்வீகமாய் போற்றிய பண்பாடுடைத்த சாதி. அப்படியான தொரு மக்கள் இனத்தின் அன்னையர்களும், நங்கை நல்லாரும், மாணவ வயதிலான பிள்ளைகளும்கூட அக்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பதை நினைக்கும் போதெல்லாம் இரத்தம் சூடாகிறது. இயேசுபிரான் சொல்லித் தந்த "பகைவனுக்கும் நேசம் தா...', "வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தையும் காட்டு' போன்ற உன்னத பாடங்கள் மறந்து "பழிதீர்' என்ற வெறியே பிறக்கிறது. இந்த உணர்வுகள் சரியா தவறா என்றும் தெரியவில்லை.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகழ்பெற்ற சொல்லாடல்களில் ஒன்று- "துன்பத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'. எனது நேர்காணலின் போது கிளிநொச்சி அரசியல் அலுவலக வளாகத்தின் வேப்பமர நிழலில் அமர்ந்து நீண்டநேரம் உரையாடினார். அப்போது அவரிடம் சொன் னேன்: ""துன்பத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக்கொடு என்ற உங்களின் சொல்லாடல் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் ஆட்சியாளர் கள் செய்கிற குற்றத்திற்காய் அப்பாவி மக்களை தண்டிப்பது பழியும், பாவமுமல்லவா?'' என்றேன்.
""ஒருபோதும் சிங்கள மக்கள் அழிய வேண்டுமென நாங்கள் நினைத்ததில்லை. அப்படி நினைக்கவும் மாட்டோம். எல் லோரும் மனிதர்கள்தானே. சிங்கள ராணுவம் தமிழர்களை கண்மூடித்தனமாக அழிப்பது போல் நாங்களும் சிங்கள மக்களை அழிக்கவேண்டுமென்று முடிவெடுத்தால் தினம் ஆயிரம்பேரை கொல்ல முடியும். எங்களுடைய ஒரு தாக்குதல்கூட அப்பாவி மக்களை இலக்கு வைத்து செய்யப்பட்ட தில்லை. ராணுவ-அரசியல் இலக்குகளை தாக்கும்போது சில நேரங்களில் பொதுமக்கள் சிலரும் பலியாகிவிடுகிறார்கள். அதற்காக மிகவும் வருந்துகிறோம். நீங்கள் ஒரு கணக்கெடுத்துப் பாருங்களேன்... சிங்கள ராணுவத் தாக்குதலில் ஆயிரம் தமிழர்கள் ஒருமாதம் செத்திருந்தா, எங்கட தாக்குதல்களில் பத்து அப்பாவி சிங்கள மக்கள்கூட செத்திருக்கமாட்டார்கள்.''
தொடர்ந்து பேசிய பிரபாகரன் சொன்னார் : ""கொழும்பிலெ இன்டைக்கு தமிழ் சனம் பாதுகாப்பா தலை நிமிர்ந்து நடக்குதென்டா அது புலியளாலத்தான். தமிழரெ அடிச்சா புலி திருப்பி அடிக்கு மெண்டு இப்போ அவையளுக்குத் தெரியும். 1983-க்குப் பிறகு இன்றுவரைக்கும் தமி ழருக்கெதிரான கலவரம் எதுவும் நடக்கே லெதானே? சிங்களவன் திருந்தியிட்டா னெண்டு நினைக்கிறியளா? இல்லெ. அடிச்சா புலியள் கட்டாயம் திருப்பி அடிப்பினு மென்ட பயம். அந்த பயம்தான் தமிழருக்கு இன்றிருக்கிற பாதுகாப்பு.''
போரின் இறுதி நாட்களில் தினம் சராசரி 200 தமிழ்மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, கொழும்பு நகரில் பொதுமக்களை குறிவைத்து பெரிய தாக்குதல்களை புலிகள் நடத்துவார்களென்ற அச்சம் இருந்தது. குறிப்பாக மே-15 அன்று காயம்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் புல்டோசர்கள் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட கொடுமை நடந்தபின் அத்தகையதோர் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அப்படி எதுவும் நடந்து விடக்கூடாதென நான் பிரார்த்தித்த அதேவேளை -நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை அறிய முயன்றதும் உண்மை. மே 15-ம் தேதி இது குறித்து, அப்படி எதுவும் தயவுகூர்ந்து செய்து விடாதீர்கள் என்ற வேண்டுதலோடு புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர் கூறினார், ""ஃபாதர்... இன்றுகூட புலிகள் நினைத்தால் சிங்கள ராணு வம் கொல்லும் தமிழரைவிட பத்து மடங்கு சிங்களவரை அழித்தொழிக் கும் வளங்கள் புலிகளிடம் உள்ளன. ஆனால் அப்படி எதுவும் செய்யக்கூடாதென தலைவர் மிகவும் கண்டிப்பான உத்தரவிட்டுள் ளார்.''
உண்மையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் கொழும்பு நகரில் பெரிய தாக்குதலொன்று நடத்த வேண்டுமென்ற அழுத்தம் பிரபாகரன் மீது தளபதியர்களால் தரப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் சொன்னதாகக் கூறப்படுவது : ""தமிழ் மக்களுக்கான நீதியை வரலாற்றுக்கும், உலக சமுதாயத்திற்கும் விட்டுவிடுகிறேன். புலிகள் இயக்கம் அப்படியொரு செயலைச் செய்து அவனுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையென்டு காட்டவேண்டாம்'' என்றிருக்கிறார்.
வேப்பரமர நிழலில் நான் கேட்ட "சென்சிடிவ்'வான கேள்விகளில் ஒன்று- ""மாற்றுக் கருத்துடைய தலைவர்களை அழித்தொழிக்கும் புலிகளின் கொள்கை ஏற்புடையதல்ல. அதிலும் அரசியல் ரீதியாகச் செத்துப் போனவர்களை யெல்லாம் ஏன் மீண்டும் நீங்கள் கொல்ல வேண்டும்? இந்த அணுகுமுறையை மாற்றக்கூடாதா?'' என்றேன். இக்கேள்வியை சற்று தயக்கத்தோடுதான் நான் கேட்டேன். ஆனால் துளியளவுகூட அவர் கோபமோ, அதிருப்தியோ காட்டவில்லை. ""எங்களைப் பொறுத்தவரை சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஓர் இன அழித்தல் போரை நடத்தி வருகிறது. அந்த அரசுடன் இணைந்து செயல்படு கிறவர்கள் அனைவருமே தமிழருக்கெதிரான போரில் பங்குதாரர்கள் ஆகிறார்கள். அவ்வகையில் அவர்களும் எமது அரசியல்-ராணுவ எதிர் தாக்குதலுக்கெதிரான இலக்குகளே. அதேவேளை புலிகள் இயக்கமும் மாறிக்கொண்டுதான் வந்திருக்கிறது. முன்பிருந்த இறுக்கம் இப்போது இல்லை. வளர்ச்சிப்பாதையில் நாங்களும் பலவற்றை கற்றுக்கொண்டு எங்களை சரிப்படுத்திக்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறோம்'' என்றார்.
விடுதலைப்புலிகளை விமர்சிக்கிறவர்கள் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்ட- ""வளர்ச்சிப் பாதையில் நாங்களும் பலவற்றை கற்றுக்கொண்டு எங்களை சரிப்படுத்திக்கொள்ளும்'' -தன்மையை காண மறுக்கிறார்கள். அவர்களது பழைய சில தவறுகளின் அடிப்படையிலேயே இன்றும் அவர்களைத் தீர்ப்பிடுகிறார்கள். எனது நண்பரும் இப்போது கனடா மருத்துவ பல்கலைக் கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றி வருகிறவருமான கலாநிதி சந்திரகாந்தன் ஒருமுறை என்னிடம் கூறிய நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. சந்திரகாந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1995 இடப்பெயர்வின்போது உள்நாட்டு அகதியாகி, பின் லண்டன் சென்று, அங்கிருந்து பின்னர் கனடா போனவர். கொழும்பிலிருந்து லண்டன் செல்லும் பயண வழியில் மணிலா நகருக்கு என்னை நேரில் பார்த்து நன்றி சொல்ல வந்திருந்தார். இவரும் வானொலியில் என் குரலைக் கேட்டு நான் 50, 60 வயதுக்காரராக இருப்பேன் என்ற நினைப்பில் வந்தவர். வானொலியிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே இதுதான். அது ஒரு குருட்டு மீடியம். குரல்தான் பொறி. காதோடு வந்து கதைபேசி வசியம் செய்யும். குரலுக்குரியவன் கறுப்பா, வெளுப்பா, பல் விளக்கினானா, தலை வாரியிருக்கிறானா, உடலசைவுகள் நயமாக இருக்கிறதா, பார்க்க லட்சணமாய் இருக்கிறானா போன்ற அக்கறை களெல்லாம் வானொலிக்கு இல்லை. கருத்தும், குரலுமே அங்கு கதாநாயகர்கள்.
10, 15 நிமிடங்களுக்கு சந்திரகாந்தனால் என்னிடம் எதுவுமே பேச வரவில்லை. அப்போது 1997. நான் மாணவத் தோற்றம் மாறாதிருந்த காலம். கால்பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டி ருந்தபோதுதான் சந்திக்க வந்தார். வாசகர்கள் என்னிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள விரும்பி னால் அது அன்றாட உடற்பயிற்சி. அதிகாலை 4.30க்கு எழுந்துவிடுவேன். விட்டேத்தியாய் ஒன்றரை மணி நேரம் நடப்பேன். பிரபஞ்சத்தின் ஆதார ஸ்ருதியோடு ஒத்திசைவாய் இணைந்திருப்பது போன்ற உணர்வு அக்காலைப் பொழுதுகளில் கிட்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாய் என் எடையை 68 கிலோவிலும் இடையை 34 இன்ச் சிலுமாய் வைத் திருக்கிறேன். ஆதலால் இதுவரை சர்க்கரை நோயோ, கொழுப்போ, ரத்த அழுத்த மோ எதுவும் இல்லை. தினம் சுமார் 15 மணி நேரம் வரை களைப்பின்றி வேலை செய்ய முடிகிறது.
இரவு உணவில் நானும் சந்திரகாந்தனும் நண்பர்களானோம். கணக்கில்லாமல் முதுகலை பட்டங்களும், முனைவர் பட்டங்களும் படித்து வைத்திருக்கிற நடமாடும் பல்கலைக்கழகம் அவர். என்னை கையோடு லண்டனுக்கு கூட்டிச் சென் றார். பி.பி.சி.தமிழோசையின் ஆனந்தி அக்கா அவருக்கு நண்பர். என்னை பி.பி.சி.யில் ஈழ மக்களின் அவலம் பற்றி பேசவைக்க வேண்டு மென்பது சந்திரகாந்தனின் அவா. லண்டன் பி.பி.சி. நிலையம் சென்றபோது ஆனந்தி அக்காவும் அருட்தந்தை என்ற பிம்பத்தை "தாடி, வெள்ளை அங்கி, கனிந்த முகமென'வெல்லாம் எதிர்பார்த் திருந்திருக்கிறார். நானோ கல்லூரி மாணவன்போல் சந்திரகாந்தன் அருகில் நின்றிருந்தேன். ""எங்கெ பாதிரியார்?'' என ஆனந்தி அக்கா கேட்க... ""இவர் தான்'' என சந்திரகாந்தன் என்னைக் காட்ட... முதலில் நம்ப மறுத்த அவர், ""இந்த போப்பாண்ட வரை என்ன செய்யிறது... இப்படி சின்ன பொடியனையெல்லாம் அவர் எடுத்துக்கொண்டா எங்கட பிள்ளையளுக்கு எங்கெ போய் மாப் பிள்ளை தேடுறது...'' என்று கலாய்த்தது இன்னும் மிச்சமிருக்கும் இதமான சில நினைவுகள்.
பி.பி.சி. கேன்டீனில் மதிய உணவில் இணைந்த போது சந்திரகாந்தனும் ஆனந்தி அக்காவும் பேசிய வற்றுள் மறக்க முடியாதது இது: ""புலிகள் தவறுகள் பல செய்திருக்கினும்தான். அதேவேளை, வளர வளர அவர்கள் மாறிக்கொண்டு வருகின்றனர். ஆனால் உலகமோ அவர்களை பழைய தவறுகளின் அடிப்படையில்தான் தீர்ப்பிடுகிறது. ""இது நூற்றுக்கு நூறு சதம் உண்மை. தமிழகத்தின் சில எழுத்தாளர்கள்கூட புலிகளின் பழைய தவறுகளை இப்போதும் முழங்கி வருகிறார்கள். ஆனால் சிங்கள -பௌத்த பேரினவாதம்தான் பிரச்சனையின் வேர்மூலம் என்பதைக்கூட நமக்கு சுட்டிக்காட்ட இவர்கள் தயங்கும் போதுதான் நமக்கு சந்தேகம் வருகிறது.''
(நினைவுகள் சுழலும்)
நக்கீரன்
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ ' யுத்தத்தில் தோற்றவர்களை விட வென்றவர்கள்தான் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்!’- விகடன். ♥
சிக்கலில் சிங்கள இராணுவம்! நாட்டை இராணுவ மயமாக்கி வருகிறார் ராஜபக்ச: – விகடன். |
இனி, எமது அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வரும் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு நித்தமும் புத்த விகாரைகளில் புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. சிங்களப் படை வீரர்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. "உலகின் தர்மதுவீபம் என்ற விருதை நான் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அடைந்துவிட்டேன்" என்கிறார் ராஜபக்ச. |
அவருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கக் காத்திருக்கிறது. கொண்டாட்டங்களில் மகிந்தாவின் அலரி மாளிகை ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்படைத் தளபதிகளுக்கும் நான்கு நட்சத்திர அந்தஸ்துப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஜெனரலாகவும், கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட அட்மிரலாகவும், விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் ரொஷான் குணதிலக ஏர் சீஃப் மார்ஷலாகவும் பதவி உயர்வு செய்யப்பட்டனர். இதில் சரத் பொன்சேகாவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதை மற்ற இருவரும் விரும்பவில்லை. தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவும் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவும் ஆரம்பத்தில் இருந்து எதிரும் புதிருமான ஆட்கள். ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது கொழும்பு பத்திரிகையாளர் வட்டாரத்துத் தகவல். "புலிகளை ஒடுக்குவது என்பது அவர்களுக்குக் கடல் பகுதியில் இருக்கும் ஆதிக்கத்தை அடக்குவதுதான். இதைக் கடற்படைதான் செய்து காட்டியது. கடற்புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களைக் கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் தான் அழித்தோம். போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளில் ஒருவரைக்கூட கடல் எல்லை வழியாகத் தப்பிச் செல்ல விடாமல் தடுத்ததும் கடற்படையின் சாதனைதான்" என்று கடற்படைத் தளபதி பொங்குகிறார். "எங்களுக்கு விமானப் படைதான் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது" என்று பாராட்டு தெரிவித்த சரத் பொன்சேகா, கடற்படைக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை. "யுத்தம் நடந்த காலம் முழுவதும் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்துகொண்டுதான் இருந்தன. கடைசியாக, கடந்த டிசம்பரில்கூட ஆயுதங்களைக் கொண்டு வந்தார்கள்" என்று சொல்கிறார் சரத் பொன்சேகா. இந்த ஏட்டிக்குப் போட்டிகள் இப்போதைக்கு முடிய வாய்ப்பு இல்லை. ஆனால், தனக்கு அடுத்து பொன்சேகாதான் என்பதைச் சட்டபூர்வமாக அறிவித்து விட்டார் மகிந்தா. இன்றைய சூழலில் ஸ்ரீலங்காவின் நம்பர் டூ அந்தஸ்து அவருக்கு வந்து விட்டது. எனவே, அவர் வைத்ததுதான் சட்டம். பொன்சேகாவின் முதல் திட்டம், இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. "புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களைத் தக்க வைக்க வேண்டுமானால், மொத்தம் 3 இலட்சம் இராணுவ வீரர்கள் அவசியம். ஆனால், இன்று இரண்டு இலட்சம் பேர்தான் இருக்கிறார்கள். ஒரு இலட்சம் பேரை ஜனவரிக்குள் எடுத்தாக வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். இராணுவத்துக்கு ஆள் எடுக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது இலங்கை முழுவதும். கடந்த நான்கு ஆண்டு போரில் மட்டும் 5,500 இராணுவ வீரர்கள் பலியானார்கள். சுமார் 20 ஆயிரம் வீரர்கள் உடல் உறுப்புகளை இழந்து ஊனமானார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் இராணுவத்தைவிட்டு ஓடியுள்ளார்கள். இவை தோராயமான புள்ளிவிவரங்கள்தான். "2006-07 ஆண்டுகளில் 2ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 3 ஆயிரம் வீரர்களும் இந்த ஆண்டு மே வரை 2 ஆயிரம் பேரும் இறந்துள்ளார்கள். கடைசி நாளில் மட்டும் 800 வீரர்கள் பலியானார்கள்" என்று அங்கு உள்ள பத்திரிகையாளர்கள் மத்தியில் பேச்சுள்ளது. கண்ணி வெடிகளில் சிக்கி கால்களை இழந்தவர்கள் மீண்டும் இராணுவத்தில் இணைய முடியாது என்பதால், அவர்களுக்கு ஆட்டோ ரிக்ஷாக்களை வழங்கி மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார் ராஜபக்ச. கருணா தன்னுடன் உள்ளவர்களை இராணுவத்தில் இணைக்க முயற்சி எடுத்து வருகிறார். 540 பேருக்கு விண்ணப்பங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். பழைய போராளிக் குழுக்களில் இருந்தவர்களும் விண்ணப்பித்து வருகிறார்கள். "இவர்களை வைத்து தமிழ் இராணுவப் படையணி அமைக்க சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளார்" என்று ஆர்வக்கோளாறாக கருணா சொல்லப் போக, "அப்படி எந்தத் திட்டமும் இல்லை" என்று அடுத்த நாளே மறுத்துவிட்டார் கோத்தபாய. இராணுவத்துக்கு ஆள் எடுப்பு விவகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், "யுத்தம் முடிந்தாலும் அரசு யுத்த பீதியைத் தக்கவைத்துள்ளது. தற்போது யுத்தம் இல்லை. அரசாங்கத்தின் எதிரிகள் அழிந்துவிட்டார்கள். ஆனால், அரசுக்கு எதிரி ஒன்று தேவை என்ற நிலைப்பாட்டில்தான் அரசாங்கம் இருக்கிறது. ஒரு இலட்சம் பேரை இராணுவத்தில் சேர்க்கப் போவதாகச் சொல்கிறீர்கள். இதில் தமிழ், முஸ்லிம், சிறுபான்மையினர் எத்தனை பேர் இருப்பார்கள்? அல்லது முழுவதும் சிங்களவர்களைத்தான் சேர்த்துக் கொள்வீர்களா?" என்று கேட்டபோது, எந்தப் பக்கத்தில் இருந்தும் பதில் இல்லை. "இராணுவத்தைப் பரவலாக்கிக்கொண்டே போவது தமிழருக்கு மட்டுமல்ல, சமாதானத்தை நேசிக்கும், ஜனநாயக வழியில் சிந்திக்கும் சிங்களவர்க்கும் மோசமானது" என்று இன்னொரு எம்.பி-யான மனோ கணேசன் சுட்டிக் காட்டியதற்கும் பதில் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இரண்டு பெரிய இராணுவத் தலைமையகங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன் கீழ்தான் தமிழர் வாழும் முகாம்களை ஒப்படைக்கப் போகிறார்கள். "மீண்டும் அப்பகுதியில் தீவிர வாதக் குழுக்கள் தோன்றாமல் இருக்க இராணுவம் அங்கு நிரந்தரமாக இருந்தாக வேண்டும்" என்று சரத் பொன்சேகா சொல்லிவிட்டார். இப்போதைக்கு இராணுவ நடமாட்டம் குறைவதாகத் தெரியவில்லை. புலிகள் அமைப்பு முற்றிலும் துடைத்து எறியப்பட்டதாக இராணுவம் சொன்னாலும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு காடுகளில் இப்போதும் சில பல போராளிகள் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் தமிழ்ப் பகுதியின் முதலமைச்சராக இருந்து இன்று ஒரிஸாவில் எங்கோ தங்கி இருக்கும் வரதராஜப்பெருமாள் சமீபத்தில் அளித்த பேட்டியில், இதை உறுதிப்படுத்தியுள்ளார். "காட்டுப் பகுதியில் மறைந்துள்ள புலிகள் சரணடைய வேண்டும்" என்று அரசு அறிவித்து உள்ளது. அதைவிடப் புலிகளின் சில முக்கிய உளவுத்துறை ஆட்கள் இன்னமும் கொழும்புப் பகுதியில் ஊடுருவி இருப்பதாகவும் இராணுவம் அச்சப்படுகிறது. இந்நிலையில் ஐந்து மணிக்கே அடங்க ஆரம்பித்து விடுகிறது கொழும்பு. அத்தனை கடைகளையும் இருட்டுவதற்கு முன் அடைத்துவிடுகிறார்கள். பெரும்பாலான இராணுவ வீரர்கள், புலிகளின் ஆளுமையில் இருந்த பகுதியில் தினமும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அனைத்து இராணுவ வீரர்களுக்கும் தமிழர் பகுதியில் உள்ள இடங்களை இலவசமாக வழங்க இருப்பதாக அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது. இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அதுதான். உயிர் இழந்த இராணுவ வீரர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி வாட்டுகிறது. உலக வங்கியிடம் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கேட்டது இலங்கை. அதுபற்றி இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது என்று ஆறப்போட்டுவிட்டது உலக வங்கி. எனவே, இராணுவத்துக்கும் நாட்டுக்கும் உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள் என்று மக்களிடம் கையேந்தும் நிலையும் வந்துவிட்டது. "போர், போர் என்று சொல்லி இதுவரை கணக்கில்லாமல் இராணுவத்துக்குச் செலவு செய்து வந்தீர்கள். இனிமேல் இதை விசாரணை செய்ய வேண்டும். இங்கு நிறைய ஊழல் நடந்துள்ளது" என்று எதிர்க்கட்சிகள் குரலை உயர்த்த ஆரம்பித்துள்ளன. வவுனியா, மயிலிட்டி ஆகிய இரண்டு இராணுவ ஆயுதக் கிடங்குகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்குப் பின்னணி இந்த முறைகேடுகள்தான் என்கிறார்கள். "ஆயுதங்கள் வாங்கப்பட்டது, பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இனி தலைமைக்குக் கணக்குகளைக் கொடுத்தாக வேண்டும். அந்த முறைகேடுகளை மறைப்பதற்காகத்தான் விபத்து நடந்து அழிந்ததாகச் சொல்கிறார்கள். எதிர்பாராத விபத்தாக இருந்தால் யாராவது இறந்திருக்க வேண்டுமே" என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். இராணுவத் தலைமையகம் இது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. புலிகளுக்கு உதவி செய்ததாக இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மனித வெடி குண்டுத் தாக்குதல் நடத்துவதற்காக சில மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்ட புலியான கிரி, தனக்கு உதவி செய்த இராணுவ அதிகாரிகளைச் சொன்னபோது, அதிகார வட்டமே அதிர்ந்து போனதாம். மேலும், மேலதிகாரிக்குப் பிடிக்காத சிலரையும் புலிகளுக்குத் தகவல் தந்தவர்கள் என்று கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது. கைதான அதிகாரிகளில் ஒருவர், 'எனக்கு இராணுவத்தில் உரிய முக்கியத்துவம் தராததால் புலிகளுக்குப் பல தகவல்களைத் தந்து வந்தேன்" என்று சொல்லி இருக்கிறார். இது போன்ற விசாரணைகள் இராணுவ வீரர்கள் மத்தியில் கிலி ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டைவிட, வரும் ஆண்டில் இராணுவத்துக்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று சரத் பொன்சேகா கோரிக்கை வைத்துள்ளார். டிசம்பரில் ஜனாதிபதி தேர்தல், அடுத்த பெப்ரவரியில் பொதுத் தேர்தல் என்று அடுத்தடுத்த மெகா செலவுகள் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கின்றன. "சர்வதேச நாடுகளின் நம்பிகையைப் பெறுவதுதான் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது" என்ற தனது வேதனையை வெளிப்படையாக ராஜபக்ச சொல்லிக் கொண்டு இருந்தபோதுதான், 'மோசமாக வீழ்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் 22-வது இடத்தில் இலங்கை இருக்கிறது' என 'ஃபாரின் பாலிசி' இதழ் பட்டியல் போட்டுள்ளது. 117 நாடுகளின் தரவரிசை இது. புத்தரின் போதனைகளில் அசோகருக்கு அதிகம் பிடித்தது இதுதான்: 'ஒரு யுத்தத்தில் தோற்றவர்களை விட வென்றவர்கள்தான் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்!' http://seithy.com/breifNews.php?newsID=16578&category=TamilNews |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ சிங்களனுக்கு ஆயுதம் ஏற்றிப் போன ராணுவ வாகனங்கள் அடித்து நொறுக்கிய வழக்கு ரத்து! ♥
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1080&cntnt01origid=53&cntnt01returnid=51
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ அகதி முகாமில் தண்ணீருக்காக 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கும் கொடுமை! ♥
வரிசையில் காத்திருப்பது வாழ்க்கையாகி... மருந்தெடுக்க காத்து நின்றோர் மயக்கமடைந்து விழுகின்றனர். |
வட இலங்கையின் வவுனியாவுக்கு அருகேயுள்ள செட்டிகுளத்தில் அடர்ந்த காடாக இருந்த நிலப்பகுதியில் வரிசையாக வெள்ளை, நீலநிறப் புள்ளிகள் இடப்பட்டிருந்த கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளனர். |
இந்த முகாம்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்வு தண்ணீருக்காக வரிசையில் காத்திருந்து போராடுவதிலேயே ஆரம்பமாகிறது. நோய்களை ஏற்படுத்தும் மோசமான சுகாதார நிலைமையும் மருந்துக்காக காத்திருப்பதும் அங்கு காணப்படுகிறது. முகாம்களிலுள்ள சிறுவர்களுக்கு பாடசாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் அங்கு வசதிகள் இல்லாமலும் ஆசிரியர்கள் இல்லாமலும் கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளது என்று "ரைம்ஸ் ஒவ் இன்டியா' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; மூன்று வேளை உணவு வழங்க சமையலறைகள் உள்ளன. ஆனால், உணவு விநியோகம் மற்றும் பங்கீட்டுப் பொருட்களை அங்குள்ள 2 1/2 இலட்சம் மக்களுக்கு வழங்குவது பெரும் சவாலாக உள்ளது. முட்கம்பி வேலிகளால் முகாங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்கூட்டியே அனுமதி பெறாமல் எவராவது வராதவாறு ஆயுதம் தரித்தவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இந்த நாட்களில் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், தன்னார்வ பணியாளர்களுக்கு மட்டுமே அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பல்வேறு வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டதாக இது உள்ளது. இடைக்கால நிவாரணக் கிராமங்கள் அல்லது வலயங்களில் இந்த அகதிகள் வெவ்வேறாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இக்கிராமங்களுக்கு கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி, இராமநாதன், அருணாசலம் உட்பட தமிழ் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வலயங்களும் பிரிவுகளாகவும் வகுக்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதி செயலணிப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பல கிராம சேவை அதிகாரிகளால் இவை நிர்வாகம் செய்யப்படுகின்றன. இறுதியாக வலயம் காணப்படுகிறது. இதற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. இங்கு புலி உறுப்பினர்களுடன் இருந்த அகதிகள் உள்ளனர். அவர்களுடைய துன்பங்கள் மோசமாக உள்ளன. இருப்பிற்கான அவர்களின் போராட்டம் தொடர்வதை இந்த முகாம் நிச்சயமாக்கியுள்ளது. செட்டிகுளம் முகாமானது இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள உலகின் மிகப் பெரிய முகாமென ஐ.நா.வால் வர்ணிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள நிலைமை அதிர்ச்சியளிப்பவை என அண்மையில் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்திருந்தார். அத்துடன், அங்கு நிவாரணங்களை வழங்க அனுமதியளிக்கப்பட்டிருந்த அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இதனைத் தெரிவித்திருந்தனர். இங்கு வரிசையே வாழ்க்கையாக உள்ளது. மருந்தகத்தின் முன்னால் பல மணித்தியாலங்கள் மருந்தெடுக்க காத்து நின்றோர் மயக்கமடைந்து விழுகின்றனர். நீர்க்குழாய், மலசலகூடங்களிலும் இந்நிலைமையே காணப்படுகிறது. வந்தனா சந்திரசேகர் ( 28 வயது) என்ற பெண் 9 மாத கர்ப்பிணி. இவருக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளனர். இவர் தண்ணீருக்காக மூன்று நாட்களாக வரிசையில் காத்திருக்கிறார். நீண்டதூரம் காத்திருந்த பின்னர் ஒவ்வொரு குடும்பமும் தலா 10 லீற்றர் தண்ணீரைக் குடிக்க, குளிக்க, உடுப்புக் கழுவப் பெற்றுக் கொள்கின்றனர். சிறிய தாங்கிகளில் தண்ணீர் http://tamilwin.com/view.php?2aSWnLe0dRj0K0ecGG773b4D9Ei4d3g2h3cc2DpY3d426QV3b02ZLu2e |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ அகதி முகாமுக்கு வந்த ராஜபக்சே மகனுக்கு கல்லடி! ♥
வவுனியா ஏதிலிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் ஏதிலிகள் முகாமுக்குச் ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.
தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அளித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Www.eeladhesam.coM
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நன்றி....!
Locate IP Address on Map
http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
சற்று முன்...!
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- "தினத்தந்தி " தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)
- "தினமணி" (1)
- "தினமணி" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)
- chat (2)
- firefox (2)
- shortcuts" (1)
- sms (2)
- video (2)
- அரசியல் (12)
- ஆனந்த விகடன் (1)
- இணைய நூல் (3)
- இணைய முகவரிகள் (2)
- இமெயில் (2)
- இமெயில் குழு (2)
- இலங்கை (21)
- ஈழ வரலாறு புத்தகம் (1)
- எல்லாம் (1)
- என் பக்கம் (9)
- கணினி தொழில் நுட்பம் (32)
- கதை (6)
- கலக்கல் டான்ஸ் வீடியோ (1)
- கவிதை (10)
- குர்து இனத்தவர் கடிதம் (1)
- குறும் படம் (2)
- சிரிப்பு (10)
- சினிமா (9)
- சீமான் (11)
- சு.பொ. அகத்தியலிங்கம் (3)
- தமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)
- தமிழச்சி (5)
- தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)
- தமிழீழ வீடியோ பாடல் (2)
- தமிழீழம் (53)
- தமிழ் 99 (2)
- தமிழ் ஈழம் (11)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- தலைவர் பிரபாகரன் தொடர் (12)
- தன்னம்பிக்கை (1)
- தாமரை (4)
- தியாகு (4)
- திருமாவளவன் (1)
- தினத்தந்தி (2)
- தினமணி (55)
- நகைச்சுவை (13)
- நக்கீரன் (2)
- படங்கள் (18)
- பாரதிராஜா (2)
- பிரபாகரன் (15)
- பெரியார் (9)
- பேச்சு (1)
- பேட்டி (4)
- பொதுவுடைமை (5)
- மனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)
- மூட நம்பிக்கை (8)
- மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)
- ராஜபக்சே (1)
- விடுதலைப் புலிகள் (14)
- விஜய் (5)
- வீடியோ (14)
- வீடியோ படம் (85)
- வைரமுத்து (1)
- ஜி இமெயில் (2)
- ஜி மெயில் (2)
- ஜெகத் கஸ்பார் (1)
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
-
▼
2009
(874)
-
▼
July
(166)
-
▼
Jul 12
(9)
- ♥ சிங்கள அரசுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை; செஞ்சிலு...
- ♥ உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு!-ஆனந்த ...
- ♥ அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்! – வ...
- ♥ முள் கம்மி முகாம்களைப் பார்வையிட கனிமொழி குழு வ...
- ♥ "துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'" ஜெகத...
- ♥ ' யுத்தத்தில் தோற்றவர்களை விட வென்றவர்கள்தான் நி...
- ♥ சிங்களனுக்கு ஆயுதம் ஏற்றிப் போன ராணுவ வாகனங்கள் ...
- ♥ அகதி முகாமில் தண்ணீருக்காக 3 நாட்களாக வரிசையில் ...
- ♥ அகதி முகாமுக்கு வந்த ராஜபக்சே மகனுக்கு கல்லடி! ♥
-
▼
Jul 12
(9)
-
▼
July
(166)