தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, June 11, 2009

♥ இந்தியாவை குறிவைத்து , போருக்கு அழைக்கிறது சீனா ♥

http://cache.daylife.com/imageserve/0gc4bj250J2Zi/610x.jpg

ஆபத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு... சீனா!

'சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்' என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர்.

 அமெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாதார பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு?

சமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல் தளத்தை சீனா அமைத்தது. சீனப் பத்திரிகை ஒன்று இது குறித்த தகவலைப் பெருமையாக வெளியிட்டபோது, இந்தியாவுக்குப் பேயறைந்தது போல் இருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 20 கப்பல்-களைமறைத்து வைக்க முடியும்.

உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் பயங்கர ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவிஞ் ஞானிகளின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்) எடுத்த செயற்கைக்கோள் புகைப் படத்தில் இந்தியாவுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி உட்பட இந்திய நகரங்களைக்குறி வைத்தபடி சீனா ஏவுகணைகளை நிறுவியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2,000 சதுர கி.மீ பரப்பளவில் கிட்டத் தட்ட 60 ஏவுகணைத் தளங்களை சீனா அமைத் துள்ளது.
http://www.fas.org/programs/ssp/nukes/_images/Hainan-full.jpg

ஒரு பட்டனைத் தட்டினால் போதும், ஒரு சில நிமிடங்களில் டி.எஃப்-21 ரக ஏவுகணைகள் விண்ணில் சீறிப் பாய்ந்து தாக்கும். இந்த ஏவுகணைகளில் அணு குண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்!

தனது நாட்டுக்குள் இருந்து இந்தியாவைக் குறி-வைப்பதற்கு அடுத்ததாக, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, தனது தளங்களை நிறுவி வருகிறது சீனா. இதில் முக்கியமானவை, துறைமுகங்கள். சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக என்று நொண்டிச்சாக்கு சொன்னா-லும், துறைமுகம் அமையும் இடங்களில் எல்லாம் விரைவில் கடற்படைத் தளத்தை சீனா அமைக்கும் என்று தகவல். உலக அளவில் கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்கு-மதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு சீனா.

http://www.china-briefing.com/news/wp-content/uploads/2009/03/string-of-pearls1.jpg

வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுசெல்கிறது. இந்தக் கப்பல்களின் பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு பாகிஸ்-தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்பன்தோடா ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைத்துள்ளது சீனா.

இந்தத் திட்டத்துக்கு சீனா வைத்துள்ள பெயர், 'முத்து மாலை'. முத்துக்களைக் கோத்தால் முத்துமாலை கிடைப்பது போன்று, இந்தத் துறைமுகங்களை இணைப்பதுதான் சீனாவின் பகீர் பாதுகாப்புத் திட்டம். கண்ணை மூடிக்கொண்டு யோசித்தால், இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் இரும்பு வளையம் அமைக்கப்பட்டு-விட் டது. ஒருவிதமான சுழலில் சிக்கி இருக்கிறது இந்தியா.

சீனாவின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் வழிக்கும், வங்க தேசம் மற்றும் மியான்மர் துறைமுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதனால், இந்தத் துறைமுக அபி விருத்திப் பணி மேற்கொள்வது இந்தியா-வுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் என்று சந்தேகிக்கப்படு கிறது.

தவிர, சீனா கமுக்கமாக இந்திய எல்லையில் இது-வரை கிட்டத்தட்ட 3 லட்சம் வீரர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் சீனா படுகில்லாடி. ஆனால், நாமோ படு லேட்! இப்போதுதான் அலர்ட் ஆன இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்காக இரண்டு புதிய பிரிவுகளைத் தொடங்கி, மொத்தம் 40 ஆயிரம் வீரர்-களை அனுப்ப உள்ளது. பல்வேறு ராணுவ அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள என அதிரடியாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவிட உள்ளது.

இந்தியாவை இவர்கள் எதிரியாக நினைக்க என்ன காரணம்?

இந்தியா - சீனா இடையே 3,500 கி.மீ-. நீளம் எல்லை உள்ளது. இதில் சீனா - காஷ் மீர் பகுதியில் 38 ஆயிரம் சதுர கி.மீ. தூரத்தை ஆக்கிர-மித்து வைத்துள்ளது. இந்தியா-வின் கிழக்குப் பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பைத் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது. அதாவது அருணாச்சலப் பிரதேசம்... சீனாவுடையதாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று வந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் கோயு உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகள் சீனா செல் வதாக இருந்தது.

அனைவருக்கும் விசா கொடுத்த சீன தூதரகம், கணேசுக்கு மட்டும் விசா தரவில்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், கணேஷ் ஒரு சீனப் பிரஜை. சொந்த நாட்டுக் குள் செல்ல விசா தேவை இல்லை என்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து, கடைசியில் அந்தப் பயணத்தையே இந்தியா ரத்து செய்தது.

கணேஷ் என்ற தனிப்பட்ட இளைஞ-னுக்கு ஏற்பட்டதல்ல அந்தச் சிக்கல். அது மொத்த இந்தியனுக்கும் வரப்போகிற ஆபத்து.

''பாகிஸ்தானால் ஆபத்து'' என்று சும்மா பேசு பவர்கள், அக்கறையுடன் அலற வேண்டியது இப்போது சீனாவையும் பார்த்துதான்!

சீன படைத்துறை புகைப்படங்கள்

http://cache.daylife.com/imageserve/0bgYgTM7b68x9/610x.jpg

 

http://cache.daylife.com/imageserve/0aOMbcjaLGfZg/610x.jpg

http://cache.daylife.com/imageserve/06fM195gRC7E2/610x.jpg

http://cache.daylife.com/imageserve/0gou5vefoT6JY/610x.jpg

http://cache.daylife.com/imageserve/05U6ftS9JPbu4/610x.jpg


 

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3633:2009-06-04-12-58-58&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

♥ சிரி சிரி.... .... சிரி.... கருணாநிதியிடம் 32 -கேள்விகள் ♥

கருணாநிதியிடம் 32 -கேள்விகள்


தமிழ்மணத்தின் அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நட்சத்திர வாரத்தின் முதல் பதிவை வெளியிடுகிறேன். 'முப்பத்திரண்டு கேள்விகள்' என்ற இந்த சங்கிலித்தொடர் விளையாட்டிற்கு என்னை அழைத்த கோவி கண்ணனுக்கு ஒரு நன்றி. அக்கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதைவிட நம் தமிழினத்தலைவர், தமிழக முதல்வர், திமுக தலைவர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள் பதில் அளிப்பது சாலப் பொருத்தம் என நான் கருதியதன் விளைவே இந்த இம்சை.


1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனது உண்மையான பெயர் தட்சிணா மூர்த்தி. தமிழனை உசுப்பேற்ற கருணாநிதி என்ற தமிழ் பெயர் வைத்துக்கொண்டேன். இது மட்டும் என்ன தமிழ் பெயரா என்று கேட்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே!. மேலும், கருணாநிதி என்று விளித்தால் பிடிக்காது கலைஞர் கருணாநிதி என்று அழைத்தால் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்போது?
நிஜமாக அழுததா அல்லது முதலைக் கண்ணீர் வடித்ததா? நிஜமாக அழுதது பல ஆண்டுகளுக்கு முன். பொய்யாக அழுதது நேற்று சாயுங்காலம். இன்று கூட ஒரு முதலைக் கண்ணீருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறேன். அது இரவு கலைஞர் செய்திகளில் வரும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
எனக்கு பிடிக்காமலா!! ஆனால் ஆரியர்களுக்கு இந்த தமிழனின் கையெழுத்து பிடிப்பதில்லை. பிடித்திருந்தால் நான் அனுப்பிய ஒரு கடிதத்தையாவது டெல்லிக்கார ஆரியர்கள் படித்திருப்பார்களே! எனவே தமிழனை காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு பிடித்த மாதிரி என் கையெழுத்தை மாற்றப்போகிறேன்.

4.பிடித்த மதிய உணவு!
உண்ணா விரதத்திற்கு முன் ரெண்டு இட்லி. உண்ணாவிரதத்திற்கு பின் கொஞ்சம் ஜூஸ். தமிழனின் துயர் கண்டு இப்போதெல்லாம் உணவு உண்ண முடிவதில்லை. துக்கம் தொண்டைக் குழியை அடைக்கிறது.

5. நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனேவெல்லாம் வைக்க முடியாது. ஜாதி ஓட்டு வைத்திருக்க வேண்டும். கொடுக்கிற சீட்டை வாங்கிக்கணும். நான் சொல்லும்போது 'தமிழ் தமிழ்' என்று தெருவில் இறங்கி கத்தவேண்டும். நான் போதும் என்றால் உடனே நிறுத்தவேண்டும். இப்படி இருந்தால் நட்பு வைத்துக்கொள்வது பற்றி பொதுக்குழுவை கூட்டி விவாதிப்பேன்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
சேதுக்கடல், ஹோக்கேனக்கள் அருவி இரண்டும் பிடிக்கும். அதில் வந்து சேர வேண்டிய பணம் வரும் வரை பிடிக்கும். மற்ற படி அவற்றில் குளிக்கவேல்லாம் பிடிக்காது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்?
சட்டைப் பையை கவனிப்பேன். கட்சி நிதிக்கு கூட காசில்லாதவர்களை கவனித்து என்ன செய்வது?

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எனது நடிப்பாற்றல், திரைக்கதை புருடா வசனம் எழுதுவது போன்றவை எனக்கு பிடிக்கும். ஆனால் எனது பிள்ளைகளிடம் என் பருப்பு வேகுவதில்லை. இதுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம் என்ன?
சரிபாதி என்று சொல்லமுடியாது. சரி குவாட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களிடம் பிடித்தது ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் இருப்பது. பிடிக்காதது எப்போதும் சண்டை போடும் பிள்ளைகளை பெற்றது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
எனது சர்வாதிகார நண்பர் பிரபாகரன் பக்கத்தில் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மற்றும் மஞ்சள் துண்டு. நான் தோள் துண்டிற்காக வேட்டியை இழந்துவிட்டேன் என்று விமர்சிக்கிறார்கள். அந்த நெசவாளர்கள் ... சாரி ... வசவாளர்கள் வாழ்க!!!

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க!
நான் எங்கே பாட்டு கேட்கிறேன்??!! என் பாட்டைத்தான் ஊரே கேட்கிறதே!!! இதோ நீங்களும் கேளுங்கள்!!

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா! - இது
கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு தங்கப் பேனாவை பரிசளியுங்கள். பிறகு எந்த வண்ண பேனாவாக மாற விரும்புகிறேன் என்று கூறுகிறேன்!

14.பிடித்த மணம்?
பணப்பெட்டியை திறந்ததும் வரும் அந்த பச்சை தாளின் மனம்.

15.நீங்க அழைக்க விருக்கும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?

உடன் பருப்பு: இவரை அறிவாலயம் வாசலில் நிற்க வைத்து டவுசர் கிழித்தாலும் அசராமல், அகலாமல் அங்கேயே நிற்பார். இதுதான் இவரை அழைக்க காரணம்.

குத்து தெலுங்கினி: இவர் நிரம்ப யோசிப்பதால் லாஜிக் இல்லாமல் திமுக -வை ஆதரிப்பார்.

பொடி டப்பா: இவர் திமுக -வை ஆதரிக்க எந்த காரணமும் தேவை இல்லை. அதனால் இவரை அழைக்க வேறு எந்த காரணமும் தேவையில்லை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு எது?
ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் வைகோ ஆவேசம் !

17.பிடித்த விளையாட்டு?
தந்தி அடித்து ஆடும் ஆட்டம் பிடிக்கும். எல்லா உடன்பிறப்புகளுக்கும் இது பிடிக்க வேண்டும்.

18.கண்ணாடி அணிபவரா?
என்னய்யா கேள்வி இது!! அதை அணியவில்லை என்றால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டரியல் ஆகும் பொது அது கண்ணில் தெரிந்துவிடாதா?!!

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
திரைக்கதை எழுதுவதோடு சரி. அதை படத்தில் பார்த்து ஆயுளை குறைத்துக் கொள்ள என்னால் முடியாது. அதற்குத்தான் உடன் பிறப்புகள் இருக்கிறார்களே! அத்திரைப் படங்களை பார்க்கும் அனைவருக்கும் என் இதயத்தில் மட்டுமல்லாமல் மருத்துவமனையிலும் இலவச இடமுண்டு. அவசர ஆம்புலன்ஸ் வசதியோடு!

20.கடைசியாக பார்த்த படம்?
கடைசியாக பார்த்த குத்தாட்டம் எதுவென்று கேட்டால் சரியாக இருக்கும். மானாட மயிலாட வெண் திரையில் வெளியிட்டால் அதை பார்ப்பேன். இதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமருக்கும் அன்னை சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
நேரு எழுதிய இராமாயணம்.

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தையெல்லாம் மாற்றுவது இல்லை. கொள்கையை மட்டும் தான் மாற்றுவேன். அடிக்கடி!!

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்!
ஷெல்லடிக்கும் போது மக்கள் அலறும் சத்தம் மிகவும் பிடிக்கும். என் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சதா அடித்துக்கொண்டு எழுப்பும் சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு!
வேறெங்கே! டெல்லிதான்.

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
எனக்குத் தெரியாது. ஆனால் இருப்பதாக உலகம் இன்னும் நம்புகிறது.

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்?
நான் தமிழினத் தலைவர் என்பதை உடன்பிறப்புகளே ஏற்க மறுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது!

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்?
உள்ளே வேறு சாத்தான் வேண்டுமா? நாங்களே அப்படித்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
டெல்லியும் ஜன்பத் இல்லமும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த ஆசையும் கிடையாது. ஆனால் எப்படி இருந்தாலும் பதவி மட்டும் இருக்கவேண்டும் என்கின்ற ஆசையுண்டு என்பதை அடக்கத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
அவர்களை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. நிம்மதியாக உண்ணாவிரதம் கூட இருக்க முடியாது.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க!!
வாழ்க்கை ஒரு வட்டிக் கடை போன்றது. தேவையற்றதை அடகு வைத்து தேவையானதை பெறலாம். அவை மீண்டும் தேவைப்படும் போது மீட்டுக்கொள்ளலாம். இப்போதைக்கு தேவையற்றது தமிழின அரசியல். தேவையானது பதவி. கொள்கையை அடகு வைத்து மூழ்கிவிட்டதால் மீட்க முடியாமலே போய் விட்டது வேதனை.


http://mohankandasami.blogspot.com/2009/06/blog-post.html

♥ சிங்களவர்களின் கால்களை நோக்கி ஓடும் தமிழ்வின்.காம் ♥

'தமிழ்வின்' அமைக்கும் சரணாகதி களம் ,


www.tamilwin.com

சிங்களவர்களின் கால்களை நோக்கி 'ஓரடி முன்னே'!

ஈழமக்கள் காப்பு அமைப்பு தமிழ்நாடு

'தமிழ்வின்' இணையதளத்தை மையமாகக் கொண்டியங்கும் ஒரு குழு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையைக்கைப்பற்றவும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் சரணாகதி படுகுழிக்குள் தள்ளவும் முனைந்து செயல்படுகிறது. இதனை நான் கடந்த மே 24-ம் தேதி அனுப்பிய மின்னஞ்சல் செய்தியிலேயே சுட்டிக்காட்டியிருந்தேன். தேசியத்தலைவர் இறந்து விடவில்லை என்று மே 19-ம் நாள் அறிவித்த புலிகளின் பன்னாட்டு பேச்சாளர் செல்வராசா பத்மனாதன் மே 24-ம் நாளன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதி செய்வது போல தாமே 'அதிகாரப்பூர்வ' செய்தி ஒன்றை வெளியிட்ட அறிக்கையை 'தமிழ்வின்' மட்டுமே வலிந்தும் பல நாட்கள் பதிப்பித்தது. துரோகியாக மாறிப்போன செல்வராசா பத்மனாதனோடு ஒரு குழு 'தமிழ்வின்'னை மையமாகக்கொண்டு எதிரிகளின் கொலைக்கரங்களில் தமிழர்கள் சரணடையும் நிலைப்பாட்டை திணித்து வருவது இப்போது தெளிவாகியுள்ளது. அண்மையில் 'தமிழ்வின்' பதிப்பித்துள்ள சரண்தவராஜா என்பவர் எழுதியுள்ள 'ஈரடி பின்னேஓரடி முன்னே' என்ற கட்டுரையானது இதனை உறுதி செய்கிறது.

 

சரண்தவராஜா தனது கட்டுரையில் தகவல்வெளிப்போரின் மூலம் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் எதைச்சாதிக்க விரும்பிகின்றனவோ அதை அப்படியே வழிமொழிந்து எதிரிகளின் தற்போதைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து போராளிகளும் ஈழத்தமிழர்களும் சரணாகதி அடைந்து பொது மன்னிப்புக் கோரும்படி தூண்டுகிறார். இவ்வாதத்திற்கு அடிப்படைகளாக அவர் முன்வைக்கும் கருதுகோள்கள் ஆர்வமூடுபவையாக உள்ளன. முதலாவதாக அவர் தகவல் வெளிப்போரின் தன்மைகளைக் குறித்து தன் பொன்னான கருத்துக்களை உதிர்க்கிறார். அதாவது சிறீலங்கா அரசின் தகவல்வெளிப்போரும், தேசியத்தலைவரின் இறப்பு குறித்த செய்திகள், தயா மாஸ்டர் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் வழங்கும் தகவல்கள் புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தையும் மோதல்களையும் உண்டாக்குகின்றனவாம். நல்லது. தேசியத்தலைவரின் இறப்பு குறித்த செய்தியை தானே சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எவரும் இதுவரை நம்பவில்லை. தயாமாஸ்டரும் ஜார்ஜ்மாஸ்டரும் மருத்துவசாலையிலிருந்து கைது செய்யப்பட்டார்கள். பெண்புலித்தளபதி தமிழினியும் கைது செய்யபட்டதாக அறிகிறோம். வேறெந்த தலைவரும் கைது செய்யப்பட்டதை சிறீலங்கா அரசே உறுதி செய்ய முடிய வில்லை. இந்த மூன்று தலைவர்களை விட அதிமுக்கியம் வாய்ந்த வேறு மூன்று தலைவர்கள் சிறீலங்கா அரசிடம் வெகு காலத்திற்கு முன்பே சரணடைந்து விட்டனர். அவரகள் வேறு யாருமில்லை. கருணா, டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி ஆகியோர்தான். இவரகள் சரணடைந்ததால் புலம்பெயர் தமிழர்களிடம் எவ்வித்த பாதிப்பும், பிளவும், மோதலும் இடம்பெறவில்லை. தயாமாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டரும், தமிழினியும் இவர்களைப்போல் துரோகிகளும் இல்லை. எனவே இவர்களின் கைது புலம்பெயர் தமிழர்களிடம் எந்த குழப்பத்தையும் ஏர்படுத்தாது என்பது தெளிவு. 'தமிழ்வின்' கூட்டம் வலிந்து புலம்பெயர் தமிழர்களிடையே ஒரு குழப்பநிலை உள்ளது போன்ற தோற்றத்தை உண்டாக்க முனைவது தெரிகிறது.

 

போரின் முடிவும், ஐக்கிய நாட்டவையில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்ததும் எதிர்தரப்பை உற்ச்சாகப்படுத்தி இருக்கின்றன, விடுதலைப்புலி என்ற நாமத்தையே உச்சரிக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது என்கிறார் சரண்தவராஜா. எதிரி என்ன சொல்கிறானோ அதனை ஏற்றுக்கொண்டு தலையாட்டுவோம் என்கிறார் தவராஜா. அதற்கு மேல் அவரால் சிந்திக்க முடியவில்லை. போரின் முடிவு உலகத்தமிழர்களின் இயக்கத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை. ஈழமக்களுக்கு பேரிழப்பு நேரிட்டிருக்கிறது. ஆனால் புலிகளின் செல்வாக்கை உடைத்து விட்டதாக சிறீலங்கா அரசு பரப்புரையில் ஈடுபட்டாலும், அவர்களின் உலகவலைப்பின்னல் அப்படியே இருப்பதாக சிறீலங்கா அரசின் வெளியுறவு அமைச்சர் பொகலகாமாவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது சிறீலங்கா அரசின் போர் என்பது புலிகளின் அந்த வெளிப்புறக் கட்டமைப்பை நோக்கித்தான் நீண்டு வருகிறது. புலித்தலைவர்களோடு தொடர்புடைய வெளிநாட்டினரை இனம்காண சிறீலங்கா அரசு முயன்று வருவது கண்கூடு. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. .நாவில் சிறீலங்காவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும் மேற்கு நாடுகள் அதன்மீது பொருளாதாரத்தடைகளை விதிக்க முயற்சிப்பதை கவனிக்க வேண்டும்.

 

அதே வேளை நான்காம் ஈழப்போர் உலகத்தமிழர்களின் மீது ஏர்படுத்திய தாக்கம் தொய்வின்றி இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. இந்த  உலக எழுச்சியானது விடுதலைப்போரின் இரண்டாம் தலைமுறையினரால், கடந்த இருபத்தி ஐந்தாண்டுகளுக்குள் பிறந்தவரகளால் முன்னின்று நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எழுச்சி இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்று பகுத்தறிவோடு எதிர்பார்க்கலாம். அதுதான் நான்காம் ஈழப்போர் தமிழர் விடுதலை இயக்கத்தில் ஏற்படுத்தி இருக்கும் திருப்புமுனை. இந்த திருப்புமுனை எழுச்சி ஒரு வடிவத்தை மட்டும் எடுக்காது. ஈழத்திலும், தமிழகத்திலும், உலகத்திலும் பல வடிவங்களை எடுக்ககூடியது. ஆனால் இந்த எழுச்சியை எவ்வாறேனும் ஒடுக்கி விட வேண்டும், புலித்தலைமையிடமிருந்து தமிழர்களை எவ்வாறேனும் பிரித்து விட வேண்டும் என்று சிறீலங்கா அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இதற்க்காக அது தமிழர்களுக்குள்ளே ஒரு துரோகிகளின் தலைமையை ஏற்படுத்தத் தயங்காது. இதனை எதிர்பார்த்தோ அல்லது சிறீலங்கா அரசுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டோ என்னவோ ஒரு கூட்டம் அவசரம் அவசரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தக்கூட்டத்தின் உள்ளக்கிடக்கையை பத்மனாதன் விரைந்து அறிவித்தார். தலைவர் இறந்து விட்டதாக அறிவித்தார். புலிகள் இனி ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். முதற்கட்டமாக சிறீலங்கா அரசு அதனை நிராகரித்திருந்தாலும் புலிகள் பெயரில் ஒரு டம்மி தலைமையை உருவாக்க வேண்டிய தேவை சிறீலங்கா அரசுக்கும் துரோகக்கூட்டத்திற்கும் உண்டு. எனவே அதற்குரிய தளத்தை விரிவாக்கிட சிறீலங்கா அரசும், துரோகக்கூட்டத்தினரும் முயற்சித்தபடியே இருப்பார்கள். சரண்தவராஜா போன்றவர்கள் இந்த முயற்சிக்கு முதுகெலும்புகளாக இருப்பவரகள் என்பதை அவரது கட்டுரையை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

 

சரண்தவராஜா உலகத்தமிழர்களின் எழுச்சியை எவ்வாறெல்லாம் திரிக்கிறார் என்பதை அக்கட்டுரையில் வெளிப்படும் அவரது கருத்துக்கள் காட்டுகின்றன. முதலில் விடுதலைப்புலி என்ற நாமத்தையே உச்சரிக்க முடியாத நிலைமை தோன்றியிருப்பதாக கூறுகிறார். பின்னர் விடுதலைப்புலிகள் என்ற நாமம் இருக்கக்கூடாது என்றே புலம்பெயர் அறிவுஜீவிகளும் மாற்றுக்குழுக்களும் விரும்புவதாகக் கூறுகிறார். பிள்ளையான் குழுவினரோ கருணா குழுவினரோ அப்படித்தான் விரும்புவார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய மாற்றுக்குழுக்கள் எல்லாம் ராஜபக்சேவின் மிரட்டலுக்கு அடிபணிந்து பயந்து தங்கள் மாற்றுக்குழுக்களை கலைத்து விட்டு ராஜபக்சேவின் சுதந்திராக்கட்சியிலேயே போய் சேர்ந்து கொண்டனர் என்பதை இஙே கவனிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் என்ற ஒரே ஒரு பெயர்தான் சிங்கள இனவெறிக்கு ஒரே மாற்றாக இருந்தது, இருந்து வருகிறது. அதனாலேயே சிங்கள இனவெறியர்கள் விடுதலைப்புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னலை எவ்வாறேனும் தாக்கி விடவேண்டும் என முயற்சிக்கின்றனர். அந்த முயற்சிக்கு தோள் கொடுக்க வருகின்றனர் 'தமிழ்வின்' மாற்றுக்குழுவினர்!

 

விடுதலைப்புலிகள் என்ற பெயரே இருக்கக்கூடாது என்றுரைக்கும் இந்த  மாற்றுக்குழுவினர் இன்னொரு ஆயுதப்போராட்டம் என்பது நினைத்துப்பார்க்க முடியாதது என்றும் முடிவு கட்டிவிட்டனர். இல்லையேல் சிங்கள இனவெறியர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கி எடுப்பது எப்படி? இதனை தெரிவிக்கும் சரணாகதி தவராஜா ஜனநாயக வழிமுறையில் இனி இறுதி இலக்கை நோக்கி நகர வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். அதென்ன ஜனநாயக வழிமுறை? சிறீலங்கா அரசு நடத்தப்போகும் ஊராட்சி மன்ற தேர்தல்களில் பங்கெடுப்பதாம். அதுவும் விடுதலைப்புலிகள் முன்பு உருவாக்கிய அரசியல் கட்சியான 'விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி' என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடவேண்டுமாம். ஏன் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியின் பெயரில் போட்டியிட வேண்டுமாம்? இல்லையேல் யார் வெற்றி பெறமுடியும்? விடுதலைப்புலிகள் என்ற பெயரை விட்டுவிட்டு ஈழமண்ணில் யாரும் வெற்றி பெற முடியாது என்பது உலகறிந்த விடயம். விடுதலைப்புலிகள் என்ற பெயரையே பயன்படுத்தும் நிலைமை இல்லை என முதலில் சொன்னவர், பின்னர் பல்டியடித்து விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறுவது விடுதலைப்புலிகளின் தலைமையை தாங்கள் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

 

அதுசரி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மாற்றுக்குழுவினருக்கு அங்கீகாரம் கிடைத்து விடுமா? கருணா குழுவினருக்கும், பிள்ளையான் குழுவினருக்கும் எங்கே கிடைத்தது அங்கீகாரம்? ஈழத்தில் அல்ல,  சிங்களத்தில்தான்! அதுவும் அவர்கள் தங்கள் மாற்றுக்குழுக்களை கலைத்து விட்டு எவ்வித அடையாளமுமின்றி சிங்களக்கட்சியில் போய்ச்சேர்ந்த பின்னர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரணாகதி தவராஜா ஜனநாயகவழியில் இறுதி இலக்கை நோக்கி நகர வேண்டும் என்று கூறும்போது எந்த இலக்கை நோக்கி மாற்றுக்குழுவினர் நகர விரும்புகின்றனர் என்பது இங்கே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி போன்றோர் எந்த இலக்கை இநோக்கி நகர்ந்தார்களோ அந்த இலக்கை நோக்கித்தான். அதுவே அவர்களது இறுதி இலக்கு. அந்த இலக்கினை அடையும் போது போரில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் போராளிகள் ஆகியோரை கைவிட்டுவிடுவார்களா சரணாகதிக்குழுவினர்? மாட்டாவே மாட்டார்கள். அந்த அளவுக்கு கல்மனம் படைத்தவர்கள் அல்ல மாற்றுக்குழுவினர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களிடம் தீர்வு இருக்கிறது. ஆம், சரணாகதி தவராஜா கூறுகிறார்: போராளிகளும் மக்களும் பொதுமன்னிப்பு பெறவேண்டும்! எவ்வளவு அருமையான தீர்வு! சுமார் முப்பது ஆண்டுகளாக வீரஞ்செறிந்த விடுதலைப்போர் நடாத்தி ஈழத்தமிழரின் இழந்த வரலாற்றை மீட்டெடுத்த போராளிகளும் அவர்களுக்கு இறுதிவரை துணையிருந்த மக்களும் சரணடையவேண்டும். அவர்கள் சரணடையாவிட்டால் மாற்றுக்குழுவினர் சிங்கள அரசு வீசும் எலும்புகளை நிம்மதியாகப் பொறுக்கிக்கொள்ள முடியாதல்லவா?

 

'தமிழ்வின்' குழுவினர் ஒரு தீர்மானகரமான திட்டத்துடனயே களத்தில் இறங்கியிருப்பதாகவே அவர்களது கட்டுரை புலப்படுத்துகிறது. தங்கள் சரணாகதிபொதுமன்னிப்பு படலத்தை நிறைவேற்றி சிங்களவன் வீசும் எலும்புத்துண்டுகளை பொற்றுக்கிகொள்ள இப்போதிருந்தே பேரம்பேசியாக வேண்டுமே! தமிழ்வின் மாற்றுக்குழுவினர் அதற்கும் ஒரு தலைசிறந்த திட்டம் வைத்திருக்கின்றனர். சரணாகதிதவராஜா சொல்கிறார்: ஈழ நிலைமைகள் குறித்து ஆராய அனைத்துலக ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கவேண்டுமாம்! அவ்வாறு செய்தால்தானே தங்கள் துரோகத்தனத்திற்கு அனைத்துலக அங்கீகாரத்தைக் கோர முடியும்! தமிழ்வின் மாற்றுக்குழிவினர் விடுதலைப்புலிகளின் தலைமையை கைப்பற்றவும், விடுதலைப்புலி என்ற பெயரையே இல்லாதொழிக்கவும், சுதந்திராக்கட்சியில் போய்ச் சேர்ந்துகொள்ளவும், சிங்களவன் வீசும் எலும்புத்துண்டுகளை வீசியெடுக்கவும் முன்வைக்கும் அருமையான திட்டம் இதுதான். இத்திட்டத்தினூடே விடுதலைப்புலிகளின் போராட்டம் நிகழ்த்தியிருக்கும் பல அரிய சாதனைகளை பாராட்டவும் தயங்கவில்லை. கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக தமிழினத்தின் அடையாளத்தை நிறுவுவதில் விடுதலைப்புலிகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அவர்கள் செய்திருக்கும் தியாகமும் அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிடக்கூடியவையல்ல.

 

ஆனால் அதெற்கென்ன செய்வது? சரணாகதி கூட்டத்திற்கு இடத்தை சிங்களவன் கைகளில் ஒப்படைக்க வேண்டும், அவன் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கிக்கொள்ள வேண்டும். அவ்வளவே. எனவே இனி தனிநாட்டுக்கோரிக்கையை கைவிட்டுவிட வேண்டும். ஆனால் அதனை சும்மா போகிற போக்கில் விட்டுவிட்டால் பெருந்திரளான மக்கள் ஆதரவு கிடைக்காது. எனவே சொல்கின்றனர் 'தமிழ்வின்' குழுவினர்: "தனி நாடு கோருவதற்கான காரணங்கள் மறைந்து விடவில்லை; அப்படியே உள்ளன". இது தமிழ்வின் மாற்றுக்குழுவின் சார்பில் சரணாகதி தவராஜா சொல்வதில்லை. இன்றைக்கு நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இதேபோல் தனி நாட்டுக்கொரிக்கையை முன்வைத்து அரசியல் நடத்திய தி.மு..  தலைவர் அண்ணாதுரை1962-ம் ஆண்டு நேரு தலைமையிலான நடுவணரசு 'பிரிவினை தடைச்சட்டம்' கொண்டு வந்தவுடன் தனிநாட்டுத் தாகம் தீர்க்க தேச ஒற்றுமை குளிர்பானம் அருந்தியபடி கொள்கையை குழி தோண்டிபுதைத்து விட்டு அண்ணாதுரை சொன்னார்: "தனிநாடு கோருவதற்கான காரணங்கள் மறைந்துவிடவில்லை; அப்படியே இருக்கின்றன". இனத்துரோகிகளுக்கு காரணங்கள் அப்படியே இருக்கும். எதிரிகளிடம் சரணடைந்து பதவி சுகம் பெறுவது வரை இனத்துரோகிகள் அவ்வாறு சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதிரிகளிடம் சரணாகதி அடைவார்கள். எலும்புத்துண்டுகளை பொறுக்கிக்கொள்வது வரை மாற்றுப்பாதை, ஜனநாயகப்பாதை எனப் பசப்புவார்கள். எதிரி வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கியெடுத்த பின்னர், பதவி நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டபின்னர் சரணாகதிப்பாதையே சமத்துவப்பாதை என சாதிப்பார்கள்.

 

'தமிழ்வின்'னை மையமாகக் கொண்டு சரணாகதிப்பாதையை திணிக்க முயலும் கூட்டத்தின் குரலை ஒலிக்கும் சரணாகதி தவராஜா முன்வைக்கும் அனைத்துலக ஆலோசனை சபையானது வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்து, புலிகளுக்கும் பொதுமக்களுக்கும் பொதுமன்னிப்பு வாங்கிக்கொடுத்து, மிச்சமீதி இருக்கும் விடுதலை வேட்கையை குழிதோண்டிபுதைத்து விட்டு ராஜபக்சேவின் காலைநக்கி சில பதவிகளை சில துரோகிகள் பெறுவதற்கான கருவியாகவே செயல்படும் என்பதில் அய்யமில்லை. 'தமிழ்வின்' அதற்கான களம் அமைத்துக்கொண்டிருக்கிறது என்பதிலும், சரணாகதி தவராஜாவின் 'ஈரடி பின்னே, ஓரடி முன்னே' என்ற கட்டுரையில் ஓரடி முன்னே என்பது சிங்களவனின் கால்களை நோக்கிய ஓரடி முன்னே என்பதுதான் என்பதும் இனி யாருக்கும் புரியாமல் போகாது.


ஈழமக்கள் காப்பு அமைப்பு தமிழ்நாடு

இந்த அறிக்கைக்கும் ஈழதேசம்.கொம் இணையத்திற்கும் எந்த விதமான ஒரு தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்http://eeladhesam.com/

♥ கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல....இந்திய உளவுதுறை ‘ரா’ அதிர்ச்சி ♥

இந்திய உளவுதுறை 'ரா' அதிர்ச்சி… கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல…

கை ரேகை ஒப்பீடு நிரூபணம்!

நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில் உள்ளதாவது.

தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்துவந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது!

·         தமிழக முதல்வர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாக பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியில் நோக்கர்கள் கூறுகின்றனர்! இதன் அடிப்படையில் 'நெற்றிக்கண்' புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு:

·         விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள இராணுவதத்hல் படுகொலை செய்யப்பட்டார். ஆப்போது தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனை கண்டித்தார்கள்!

·         புpரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான்  பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! 'மாவீரன்' பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு இது ஒரு நிரூபணம்! அடுத்து…

·         'மாவீரன்' பிரபாகரனின் கை விரல் ரேகை சென்னை போலீசாரால் 1982ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பில் இருக்கின்றது!·    

·         கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன் - சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது. அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு (ஊஊP) மாற்றப்படுகின்றது!

·         பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிஸ்னர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு யுனுஐ- சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க- அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை யுனுஐ சண்முகம் பதிவு செய்தார்!

·         இதை தவிர பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப்பதிவுகளும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது!

·         1986ல் சென்னை – திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார் பிரபாகரன். பெசண்ட் நகரில் வீட்டுவசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு மாத்தையன் பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்! அந்த சமயம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி விடுதலைப்புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்! திடீரரென்று விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு! முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனை தடுத்து நிறுத்த இயலாத சூழல்!

·         அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிஸ்னர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலிஸ் கமிஸ்னர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிஸார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

·         1982ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்….

·         1986ல் சென்னை போலிஸ் கமிஸ்னர் தேவாரம் எடுத்த எட்டு கோணங்களிலான புகைப்படமும்…

தமிழக 'க்யூ' பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது! தற்போது 'க்யூ' பிராஞ்ச் ஐ.ஜி – சங்கர் ஜுவால்!

·         சுpங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஐpனல் பிரபாகரன்தானா என்பதை உறதி செய்து கொள்ள இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான சுரூயுறு பிரதமர் அலுவலக கட்டளைப்படி முயற்சிகளை மேற்கொண்டது!

·         சுரூயுறு அமைப்பின் தென்னிந்தியப் பகுதிக்கான இணை – டைரக்டர் விஜயசங்கர். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை - இந்தியா தொடர்பான பிரச்சினைகளை இவர்தான் மேற்கொண்டுள்ளார்! இவரது அலுவலகம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில் கமுக்கமாக செயல்படுகின்றது! பங்களா வாடகை ரூ3 லட்சம்.

·         சுரூயுறு இணை – டைரக்ரர் விஜய சங்கர் தமிழக க்யூ பிராஞ்ச் ஐ.ஜி சங்கர் ஜுவாலை மே18ம் தேதி இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து 1982ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்;ட பிரபாகரன் கைவிரல் ரேகைகளின் பிரதியையும் 1986ல் எட்டு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்பட பிரதிகளையும் பெற்றார்!

·         பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுனர்களுன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே19ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுனர்களின் துனையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை!

·         இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான சுரூயுறு அமைப்பின் தென் இந்திய அணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்தள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது, இந்தியா திரும்பினார்!

·         இது தொடர்பான விரிவான அறிக்ரகையை 'ரா' டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்!

·         இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

·         கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் அகியுள்ளது!


தமிழீழத் தாகம் அடங்கும்வரை அடங்கமாட்டோம்:- நவின இசைப்பாடல்

http://www.youtube.com/watch?v=tL5wgSrQDp4

♥ மற்றுமொரு அதிர்ச்சி தகவல் " விடுதலைப் புலிகளோடு இந்திய ராணுவமே நேரடியாக மோதிய கேவலம்!" ♥

மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

n1527581102_30330391_3099206.jpg

ஈழதேசம்.கொம் நிருபர்
இந்திய ராணுவம் இலங்கை காடுகளில் விடுதலைப் புலிகளை தேடும் பணியில் உள்ளனர்.
இலங்கை ராணுவத்தின் வழிகாட்டலில் இந்திய ராணுவம் காடுகளில் விடுதலைப் புலிகளை தேடி வருகின்றனர். கைது செய்து....சட்டத்தின் முன் போர்க் கைதியாக நிறுத்த அல்ல .....கொன்று ஒழிப்பதற்காக .....

கடைசி 72 மணி நேர யுத்தம் பற்றிய பல செய்திகள் உலக பத்திரிக்கைகள் மற்றும் இந்திய ஊடகவியலாளர்களும் ஒரு மர்ம நாவல் எழுதுவதை போல் பல உண்மைகளையும் அங்கு நடைபெற்ற கொடூர யுத்த மீறல்களை மறைத்து விட்டு ராஜபக்க்ஷே, சோனியா மனம் குளிரும் படி செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டனர்.

உண்மையில் நடைபெற்றது என்ன ?

முள்ளிவாய்க்கால் முழுவதும் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த பொழுது மூன்று அடுக்கு ராணுவ வியூகம் இந்திய ராணுவத்தால் திட்டமிடப்பட்டு அதில் வெற்றியும் பெற்றனர்... 50 ஆயிரம் மக்களை கொன்று ..யுத்த விதிமீறல்களை செய்து, .... போரில் தோற்கும் நிலையில் இருக்கும் பொழுது சரணடைவது என்பது பொதுவான யுத்த விதிகள்.. சங்க காலம் தொட்டு இன்று வரை..

முதல் ராணுவ வளையத்தில் சிங்கள ராணுவம் புலிகளுடன் யுத்தம் நடத்தினர். ...
இரண்டாவது இந்திய ராணுவ வளையத்தில்..... கடற் புலிகள் மற்றும் காயம் அடைந்த புலிகள் மற்றும் தலைவர்கள் வெளியேறும் பொழுது அவர்களை கொன்று அழிப்பது....
மூன்றாவது இந்திய ராணுவ வளையத்தில் .... யுத்தம் நடைபெறும் பொழுது அங்கிருந்து வெளியேறும் ( மற்ற நாடுகளில் தஞ்சம் அடையும் ) மக்களை தடுத்து கொல்வது, இதுதான் கடைசி மாதங்களில் நடந்த துயரம் .... இதற்க்கு சான்றாக இன்று வரை இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும் அகதிகள் வெளியேறாமல் போன துயர சம்பவம் நடந்தது....இவை எந்த யுத்த நாடுகளிலும் நடைபெறாத மிகப்பெரிய போர்க் குற்றம் .....

இவ்வளவும் இந்திய ஆளும் பார்ப்பன கும்பல் திட்டமிட்டு செய்த மகாபாதக செயல்... யுத்தம் முடிந்தவுடன் ...சிங்கள ராணுவம் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். தற்பொழுது இந்திய ராணுவம் முழு அளவில் அங்கிருக்கும்....அங்கிருந்து வெளியேறிய மக்களை .....வவுனியாவிற்கு மற்றும் வெவ்வேறான முகாம்களுக்கு வலுக்கட்டையமாக கொண்டு அடைக்கும் பணியில் ....இந்திய ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன...

.இந்த மாபாதக செயல்கள் போதாதுஎன்று ....தற்பொழுது இலங்கை காட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை கொன்று அழிப்பதற்கு முழு மூச்சுடன் இந்திய பார்ப்பன ஆளும் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது....

இவையெல்லாம் ஆளும் போலி..... தமிழின தலைவராக தானே பட்டம் சூட்டிக் கொண்ட MNC கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.... தற்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கிறார்கள் ஈழத் தமிழனுக்கு விரைவில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று.....இவர்கள் விவாதித்து முடிந்தவுடன் ராஜபக்க்ஷே சமஉரிமை கொடுத்து விடுவார் என்று மக்களிடம் சொல்வார்கள்... தனது ஊடகங்கள் வழியாக....
இவற்றையும் உலக சமூகமும்....ஐ.நாவும் ஒப்புக் கொண்டு விடுவார்கள்...

http://eeladhesam.com/

ஈழதேசம்


n1527581102_30330390_1183989.jpg


ஈரானில் பகிரங்க தூக்குத் தண்டனை காட்சிகள்

ஈரான் அரசியல் கைதிகளுக்கு சன நெரிசல் மிக்க சாலைகளில் பகிரங்கமாக
தூக்குத் தண்டனை வழங்குவது ஒரு வழமையான நிகழ்ச்சி. இது குறித்த வீடியோ ஆவணங்கள் அரிதாகவே வெளியுலகை எட்டியுள்ளன. பல மனித உரிமை நிறுவனங்களின் கண்டனங்களையும் மீறி, அண்மையில் ஐந்து குர்திஷ் விடுதலைப் போராளிகள் தூக்கிலடப்பட்டனர். ஈரானில் சிறுபான்மை இனமான குர்தியரின் விடுதலைக்காக போராடும் PJAK (Party for Free Life in Kurdistan) என்ற இயக்க உறுப்பினர்களே இவ்வாறு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டனர்.
Execution Sentence for a Kurdish Political Activist in Iran
ஈரானில் பாசிஸ மதவாத கொடுங்கோலாட்சியின் சாட்சியமாக இந்த வீடியோ உள்ளது. ( இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்)

http://www.youtube.com/watch?v=CQdoLsypXRc


http://kalaiy.blogspot.com/2009/06/blog-post_11.html

♥ திடுக்கிடும் தகவல் : இலங்கையில் மூன்று மாதத்தில் 53 ஆயிரம் தமிழர்கள் படுகொலை: புள்ளிவிவரங்களுடன் அதிர்ச்சித் தகவல் ♥

வன்னியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 53,215 அப்பாவித் தமிழ் உறவுகள் படுகொலை: பிரித்தானிய தமிழர் பேரவை

aftermath_idp8.jpg

வன்னிப் பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் இறுதி மூன்று மாதங்களில்  நடாத்தப்பட்ட பாரிய தாக்குதலிகளின் போது 53,215 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும், திரட்டப்பட்ட நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலும்,....

அரச மற்றும் ஐக்கிய நாடுகளின் உத்தியோக பூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இச்செய்தியை பேரவை வெளியிடுகின்றது.

இவ் ஆண்டின் ஆரம்பத்தில் வன்னிமண்ணில் 330,000 மக்கள் வாழ்ந்ததை அரச அதிபரின் அறிக்கைகளும், அப்பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் ஊர்ஜிதம் செய்கின்றன.

ஆனால் தற்போது அகதி முகாங்களில் 276,785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இவ்வடிப்படையில் தான் நாம் எமது மக்கள் இப்பாரிய தொகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என அஞ்சுகின்றோம்.

மேலும் சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து வதை முகாங்களிற்குள் வாடிய 13,130 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை ஊர்ஜிதம் செய்துள்ளது.

இத்தகவல்களின் அடிப்படையில் நாம் எமது உறவுகளில் 53,215 பேரை பங்குனி மாதம் முதல் வைகாசி மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் இழந்து நிற்கின்றோம்.

காணாமல் போயுள்ள 13,130 தமிழர்களை மீட்டுத் தாருங்கள்.

அரச கட்டுப்பகுதிக்கு வந்தடைந்த மக்களில் 13,130 காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந் நிலையில் இம்மக்களை மீட்டுத்தருமாறு பேரவை அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கின்றது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் அதிகார ஆசனங்களில் உள்ளவர்கள் காணாமல் போயுள்ள மக்களை மீட்டுத்தருவதில் காத்திரமான பங்கை செய்யமுடியுமென பேரவை நம்புகின்றது. இப்பணியில் நாம் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. முள்கம்பிவேலியின் பின்னால் நிற்கும் மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

ஐக்கிய நாடுகள் சபை

ருவாண்டாப் படுகொலைகள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட போது மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நீதி வழங்கி அதன் மூலம் உலகில் பிரசித்தி பெற்றவரான ஐ.நா வின் மனித உரிமை ஆணையாளர் நவி. பிள்ளை அம்மையார் , தற்போது இலங்கையின் இனப் படுகொலைகளை நீதியின் முன்நிறுத்தப் பாடுபட்டு வருகின்றார்.

அப்படி ஒரு நீதி விசாரனை நடைபெற்றால் இப்பாரிய படுகொலைகளின் சகல பங்காளர்களும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆகவேதான் அம்மையாரின் முயற்சியை இந்நாடுகள் தடுத்து நிறுத்துவதில் முன் நின்று பாடுபடுகின்றன.

இந்நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்தினால் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை இயலாததொன்றாகி விட்டது.

ஆனாலும் உலகின் நீதியை நிலைநாட்டுவாதில் அம்மையாரின் நேர்மை பாராட்டத்தக்கதாகும்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் திரு. பான் கி மூன் அவரோடுள்ள அதிகாரிகள் திரு. நம்பியார் மற்றும் திரு. ஹோம்ஸ் மக்களுக்கேற்பட்ட அவலத்தை குறைத்து வெளியிடுவதாக வரும் செய்திகளை பேரவை கவலையோடு நோக்குகின்றது

பிரித்தானிய மக்களுக்கான வேண்டுகோள்

இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக எமது சக்தியினைத் திரட்டி எமது மக்களுக்கு நடந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்யவேண்டும்.

காணாமல் போதலை உடனடியாக தடுக்க வேண்டும்.

வெளியேறிவந்த மக்களை ஐ.நா தலைமையில் சர்வதேசம் பொறுப்பேற்று அவர்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரவேண்டும் என வலியுறுத்தவேண்டும்.

இப்பாரிய படுகொலையை உலகறியச் செய்வதோடு , காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் மக்களை மீட்க சர்வதேசத்தை வலியுறுத்தவும் , முள்கம்பிவேலியின் பின்னால் நிற்கும் மக்களின் அவலத்தைப் போக்க ஆவண செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தி மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இப்பேரணி யூன் 20ம் திகதி, சனிக்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களது மரணத்திற்கு நீதி கேட்கவும் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் பேரவை அன்போடு அழைக்கின்றது.

முள்கம்பிவேலியின் பின்னால் நின்று எம்மக்கள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர்.

நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை.aftermath_idp4.jpg

♥ புளியைக் கரைக்கும் 'பொட்டு அம்மன்" ஆனந்த விகடன் கட்டுரை ♥

புளியைக் கரைக்கும் 'பொட்டு'!--ஏமாற்றப்பட்டதா இலங்கை ராணுவம்?


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக்

கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் 'கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்' என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!

பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,

''பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், 'பொட்டு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.

அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 'பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்' என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை...'' என்கிறார்கள்.

புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ''ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், 'எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!' என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.

எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான 'ரா', இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, 'ரா'வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. கருணா, சிங்கள அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, 'ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்' என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.

புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான். ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் கேட்டு இந்திய அரசு, சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் ராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், 'பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது' என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!'' என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.

மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற ாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே 'புலிகளின் பெரிய மூளை' என்று குறிப்பிடப்பட்டவர்.

பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!
- இரா.சரவணன்

நன்றி:விகடன்


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3708:2009-06-10-14-48-12&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!