Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, June 16, 2009

♥ இதோ...! இலவச பனுள்ள ஆன்லைன் மென்பொருள்கள் ♥


லேப்டாப்களை தூக்கிக்கொண்டு போய் அக்கவுண்ட்ஸ் பார்ப்பது. டெமோ காட்டுவது
என்பதெல்லாம் போன தலைமுறை என்று சொல்லும்படி இதற்கு மாற்றாக கைவீசி‌ச்
சென்று வாடிக்கையாளரது அலுவலக கம்ப்யூட்டரிலேயே பில் போடும் ஆசை
உங்களுக்கு இருக்கிறதா?
போட்டோ எடிட் செய்யவேண்டும், ஒரே ஒரு அனிமேசன் வேண்டும்,
வீடியோ எடிட்டிங் செய்யவேண்டும் ஆனால் இவற்றிற்கான மென்பொருள் இல்லை
என்று புலம்புபவரா நீங்கள்?
இதுபோன்ற எண்ணற்ற வேலைகளை எப்போதாவது செய்பவராக இருந்தாலும் அல்லது உலகம்
சுற்றி பட்டையைக் கிளப்பும் பிசினஸ்மேக்னட்டாக நீங்கள் இருந்தாலும்
உங்களுக்காகவே இருக்கிறது சில ஆன்லைன் மென்பொருள் தளங்கள். நீங்கள்
உங்கள் பெயரைப் பதிந்துகொண்டு பயன்படுத்திப் பாருங்கள்.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போலவே ஆன்லைன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ ஓஎஸ்
http://eyeos.info

ஆபீஸ் டாக்குமெண்ட் டெம்ப்ளேட்டுகள்
http://www.docstoc.com/index.aspx

ஆன்லைன் ஆபீஸ்
microsoft office: http://office.microsoft.com/en-us/default.aspx
Google Office: http://docs.google.com
Zoho Office: http://www.zoho.com/
www.thinkfree.com/
அடோப் ஆன்லைன் வேர்ட் பிராசசர்
https://www.acrobat.com/?app=share&si=1#/bw/BuzzwordBegin/
அடோப் வெப் கான்பிரன்ஸ்
https://www.acrobat.com/?app=share&si=1#/brio/BrioBegin/

ஆன்லைன் பிரசன்டேசன்
http://preezo.com/
http://www.live-documents.com/

அடோப் ஆன்லைன் கோப்பு சேமிப்பகம்
https://www.acrobat.com/?app=share&si=1#/org/ManageBegin/

போட்டோ‌‌ஷாப் மென்பொருளுக்கு மாற்றாக
அடோப் போட்டோ‌‌‌ஷாப் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் போட்டோ எடிட்டிங்குடன்
2ஜீபி அளவு இலவச போட்டோ சேகரிப்பு தளம் https://www.photoshop.com/
மற்றும் சில
http://www.sumopaint.com
http://www.splashup.com
http://www.picnik.com/

டயக்ராம். பிளா‌ன் சார்ட், நெட்வொர்க் சார்ட் வரைய
http://www.gliffy.com
http://www.chartall.com

வீடியோ எடிட்டிங் தளம்
http://jaycut.com/

Gif அனிமேசன் உருவாக்க
http://www.gickr.com/

இண்டெர்நெட் Fevicon இமே‌ஜ்களுக்கு
http://www.prodraw.net/index.htm

பல்வேறு கணக்கீடுகளை உடனுக்குடன் செய்து பார்க்க
http://instacalc.com/

எந்த ஒரு ‌‌‌‌ஃபைலையும‌் மற்றொரு ஃ‌பைல் பார்மேட்டுக்கு மாற்ற ஆன்லைன்
ஃபைல் கன்வெர்டர்,
படங்கள், வீடியோ, இசை, டெக்ஸ் டாக்குமெண்ட்டுகள். சுருக்கப்பட்ட
கோப்புகள் எனப் பலவற்றையும் மற்றொரு பார்மேட்டுக்கு மாற்றித் தருகிறது.
ஒரு கோப்பு அளவு 1 ஜீபி வரை அனுமதியளிக்கிறது,
http://www.zamzar.com/

ஆன்லைன் அட்ரஸ் புக்
http://www.addressbookonline.com/

ஆன்லைன் இசையமைப்பாளராகலாம் நீங்கள் இந்தத் தளத்தின் மூலம்
http://www.buttonbeats.com/

உங்கள் டெக்ஸ்ட் டாக்குமண்ட்களை காப்பி செய்து ஆன்லைனில் பேஸ்ட் செய்து
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த தளம்
http://tinypaste.com

பார்த்துக்கொண்டிருக்கும் இணைய தளத்தை அப்படியே பிடிஎப் கோப்பாக மாற்ற
இந்த தளம், இதிலேயே pdf பைலை டெக்ஸ்டாக மாற்ற, pdf பைல்களை ஒருங்கிணைக்க.
பிரிக்க என பல வசதிகள் உள்ளது.
http://www.html-to-pdf.net/

பிடிஎப் கோப்பு உருவாக்க அடோப் பிடிஎப் கிரியேட்டர்
https://www.acrobat.com/?app=share&si=1#/cpdf/CreatePDFBegin/

ஆன்லைனில் பிடிஎப் மற்றும் பிறகோப்புகளை பகிர்ந்துகொள்ள
https://www.acrobat.com/?app=share&si=1#/share/ShareBegin/



More Recent Articles
--
ராஜா நடராஜன்

♥ சிங்கள அரசு நடுக்கம் :விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படை நடமாட்டம் ♥

விடுதலை புலிகளின் கரும்புலிகளின் படையணி கொழும்பில்



blacktigers67vt6தலைநகர் கொழும்பில் இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளின் பிரசன்னம் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போராட்டத்தின் கோது தலைநகர் கொழும்பிற்குள் 26 தற்கொலைதாரிகள் ஊடுறுவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஊடுறுவிய 26 தற்கொலைப் பேராளிகளில் நான்கு பேர் மட்டுமே இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபாகரனின் மரணம் காரணமாக, கொழும்பிற்குள் ஊடுறுவிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது மன ரீதியாக பாதிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், தற்கொலைப் பேராளிகளை இனங்கண்டு அவர்ளை கைது செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென விசேட காவல்துறை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச வலையமைப்பிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படக் கூடும் என பாதுகாப்பு தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



Www.eeladhesam.coM



புலிகளின் குரல் - "வரலாறு திரும்பும்"



வழக்கம் போல கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து வேலை பார்க்கும் போது அருகில் இருந்த Sagem இணைய வானொலிக் கருவியை முடுக்கி விடுகின்றேன். அதில் வானொலி விருப்பப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் வானொலியாக வந்து "புலிகளின் குரல்" வானொலியில் வந்து நிற்கின்றது. அதுவரை ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றும் போது விதவிதமான குரல்களையும், பாடல்களையும் அந்தந்தக் கணத் துளிகளில் பாய விட்ட வானொலிப் பெட்டி இப்போது வெறும் மயான அமைதியை மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறது.

தொண்ணூறாம் ஆண்டுப் பகுதி, அப்பவெல்லாம் ஆல் இந்தியா ரேடியோவும், இன்னொரு பக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமுமாக மட்டுமே செவிக்குணவு கிடைத்தது. அதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்லவே வேண்டாம். மத்தியானம் பிளேனால் குண்டு போட்டு அதில் செத்துப் போன கிழவர்களையும், குழந்தைகளையும் மாலைச் செய்தியில் புலிகளின் லெப்டினெண்ட் கேர்னல் தரத்துக்கு பதவி உயர்த்திப் பட்டியலிட்டுப் பயங்கரவாதிகள் ஆக்கிச் செய்தி படிக்கும். இது போதாதென்று "மக்களின் குரல்" என்ற மகா மட்டமான வானொலித் தயாரிப்பொன்றை வழங்கித் தன் தலையில் மண்ணள்ளிப் போடும்.

இந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.

அந்த இரவு நேரங்களின் நிசப்தத்தைக் கலைத்து எல்லா வீடுகளிலும் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை புலிகளின் குரல் பாயும். அந்த ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்துளிகளையும் போராளிகளின் வீரச்சாவு, களம் கண்ட கதைகள், குறு நாடகங்கள் , செய்திகள், தாயக எழுச்சிப்பாடல்கள் விபரணச் சித்திரங்களாகச் செதுக்கித் தந்தது இந்த வானொலி. அது தவிர மாவீரர் வாரம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது நேர நீடிப்புச் செய்து பகல் வேளைகளிலும் தன் ஒலிபரப்பை அது தரும். புலிகளின் குரல் வானொலிப் பணிமனை

யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும்.

புலிகளின் குரல் வானொலிக் கலையகத்தினுள்

சந்தனக்காடு போன்ற பல பிரபலமான நாடகங்களைப் பிரசவித்துப் பின்னர் இந்த நாடகம் வெளிநாடுகளில் வேறு ஆட்களால் மேடையேற்றிப் போடும் அளவுக்குப் பிரபலத்தை உருவாக்கியது இந்த வானொலி நிகழ்ச்சிகளின் தரம். புலிகளின் குரல் வானொலியில் இடம்பெற்ற பாடல்களை ஒலிப்பதிவு செய்து பின்னர் வவுனியாவில் பெடியளோடு குருமன்காட்டில் கொஞ்ச நாள் இருந்த போது கேட்ட நினைவுகள் நேற்று போல இருக்கிறது. வவுனியாவிலும் ஒலிபரப்பு வருகுதாம் என்று களவாக மீட்டர் பிடிச்ச 93 ஆம் ஆண்டும் சாகும் வரை மறக்கமுடியாது. புலிகளின் குரல் வானொலியின் பரிமாணம் எத்தகையது என்பதை எனது தாயக வாழ்வியலுக்குப் பின் அதிக காலம் இருந்த சக நண்பர்கள் நிறையவே சொல்லுவார்கள்.

என்னதான் யதார்த்தம் பேசினாலும் அற்ப மனம் விடாது இல்லையா, அடிக்கடி புலிகளின் குரல் தளத்துக்குப் போய்ப் பார்க்கும் அவா விடாது போல. ஆனால் அதுவோ மே ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் அழுக்குடையோடு மெளனமாய் நிற்கிறதே :(

எங்கோ பிறந்து, சுற்றிச் சுழன்று நானும் வானொலிப் பணிக்கு வரவேண்டும் என்ற தலையெழுத்தின் நிமித்தம் 11 ஆண்டுகளைக் கழித்து விட்டாயிற்று. இந்த இடைப்பட்ட காலத்தில் நான்கு வருஷங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் புலிகளின் குரல் வானொலி நாடகங்கள் இரண்டு. அதில் " வரலாறு காத்திருக்கும்" என்ற நாடகத்தை ஒலிப்பேழையில் இருந்து கணினிக்கு மாற்றி உங்களோடு பகிர்கின்றேன். அந்த ஒலிப்பேழையில் குறுகலாகத் தன் பேனா எழுத்துக்களில் நிரப்பியவரும் சரி, இந்த நாடகத்தில் பங்கு கொண்டவர்களும் சரி இன்னும் இருக்கிறார்களா, மீண்டும் வருவார்களா எதுவும் தெரியாத நிலையில்
நாடகத்தை எழுதியவர்: போராளி தமிழ்க்கவி
நாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்
மூதாட்டி: வனஜா
கமலம்: கலையரசி
சிறுவயது சேய் - டிலானி
மதன் - கண்ணன்
செந்தூரன் - ரதன்
வளர்த்த சேய் - விதிகுகன்
நிகழ்ச்சித் தயாரிப்பு
க.சிவராசா
கப்டன் துஷான்
போராளி ஜீவகன்
கலையரசி

"வரலாறு திரும்பும்" நாடகத்தைக் கேட்க




கடந்த நவம்பர் 2008 இல் புலிகளின் குரல் பணிமனை அழிக்கப்பட்ட போது

புலிகளின் குரல் வானொலிப் பணிமனை, வானொலிக் கூடம் படங்களைப் பிரத்தியோக ஆல்பத்தில் இருந்து தந்துதவிய நண்பர் சயந்தனுக்கு நன்றி.


http://kanapraba.blogspot.com/2009/06/blog-post_16.html

சீமான்:" கடத்தப்படும் இளம் தமிழ்ப் பெண்கள் எங்கே? "

தடுப்பு முகாம்களில் உள்ள இளம் தமிழ்ப் பெண்களை இராணுவமும், போலீசாரும் கடத்தல்: சீமான்



இலங்கையின் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இளம் தமிழ்ப் பெண்களை இராணுவமும், போலீசாரும் கடத்திச் செல்வதாக தமக்கு தகவல் வந்துள்ளது என்று இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். திறந்த வெளி சிறையாக உள்ள இந்த முகாம்களில் உள்ள இளம் தமிழ்ப்பெண்களை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து, கடத்திச் செல்லும் வேலையில் இராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளதாக தமக்கு அங்கிருந்து நம்பகமான தகவல் வந்துள்ளது என்று இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள ஐ.நா. சபையின் கண்காணிப்பு ஏதுமில்லாமல் இளம் தமிழ்ப்பெண்களை தனியாக எவ்வாறு பிரித்து செல்லலாம் என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், தமக்கு கிடைத்துள்ள இந்த தகவலை மேலும் உறுதிபடுத்திக் கொள்ள இயலாத நிலையில், உலக நாடுகளின் கவனத்திற்கு தாம் இந்த விடயத்தை கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.




                                                                       Www.eeladhesam.coM

♥ கவிஞர் தாமரையின் கனல் கக்கும் கவிதை - " உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும்! " ♥

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! – கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை

thamarai poet

ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…

உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

……….

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…

அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!


http://www.nerudal.com/nerudal.8372.html





அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….
குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்…
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே…
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்…
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”

நன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை



♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 16 -"தினமணி" தொடர் ♥




ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: சர்வஜன வாக்குரிமைச் சட்டம் - 16







ஆரம்பத்தில் சிங்கள மற்றும் தமிழ் மேட்டுக்குடியினர் கூட்டாக இருந்தே இந்திய வம்சாவளியினருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தியர் மூலதன ஆதிக்க எதிர்ப்பிலும், இந்திய நிர்வாகிகளை வெளியேற்றுவதிலும் அவர்கள் தீவிரம் காட்டினர்.

நகர்ப்புறத்துத் தமிழ்த் தொழிலாளர்களை நகர்ப்புற நிறுவனங்களில் இருந்து வெளியேற்றுவதில் இவர்கள் ஆர்வம் காட்டினார்களே தவிரத் தோட்டத் தொழிலாளர்களை அல்ல. காரணம், சிங்கள - தமிழ் தோட்ட அதிபர்கள் தோட்டத் தொழிலாளர் வெளியேற்றத்தை விரும்பவில்லை என்பதுதான். அவர்கள் வெளியேற்றப்பட்டால் குறைந்த கூலிக்குத் தோட்டத் தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதும் காரணம்.

இதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெளிவாக உணரலாம். தொழிலாளர் இறக்குமதிக்கு உரிமம் வழங்குவதை நிறுத்தும் பிரேரணையை பெரேரா (Perera) பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதைத் தோல்வி அடையச் செய்தனர். ஆனால் அதே நேரத்தில் இவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் அரங்கில் நுழைவதற்கும் தடைகளை உருவாக்கினார்கள். 1920-இல் சட்ட நிறுவன சபைக்கு இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள் தேர்வு ஆவதை இவர்கள் எதிர்த்தனர். 1929-இல் சர்வஜன வாக்குரிமை (டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசு) வழங்க முன்வந்த ஆணையினையும் எதிர்த்தனர். அதன் உச்சகட்டமாக 1947 பொதுத் தேர்தலில் ஏழு இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொழிலாளர் மத்தியில் உள்ள செல்வாக்கின் பலத்தால் 17 இடதுசாரி உறுப்பினர்களும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் கை ஓங்குவதும் இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாவதும் அவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது. அரசியல் அரங்கில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்பதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.

தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை வெளியேற்றும் கோஷம் தீவிரமானது என்பது மட்டுமல்ல, அதனால் அறிவு ஜீவிகளும், மத்தியதர வகுப்பினரும் பாதிப்பு அடைந்தனர். உதாரணமாக~போக்குவரத்து அமைச்சர் எட்டாயிரம் இந்தியர்களுக்கு வேலைநீக்க நோட்டீஸ் அனுப்பினார். (ஆதாரம்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சரித்திரம்-இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் கருத்தரங்கக் கட்டுரை).

இந்த இனவாதச் செயல்பாட்டின் விளைவாக முதன் முதலில் 1931-ஆம் ஆண்டு சர்வ ஜன வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகையில், யாழ் பகுதியில் இருக்கும் இடதுசாரி இளைஞர் இயக்கம் முதன் முதலில் ஒரு போராட்டத்தை நடத்தியது.

இதன் தலைமையில் யாழ் பகுதியில் தேர்தல் நிராகரிப்பு இயக்கம் தீவிரமாக உருவானது.

ஆனால் அதே நேரத்தில் அந்தத் தேர்தலில் மலையக மக்கள் பங்கேற்றனர். ஏனெனில், அதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த மலையக மக்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் மலையக மக்கள் வாக்குரிமை பெற்றனர். நடேசய்யர், பெரியசுந்தரம், வைத்திலிங்கன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பெரியசுந்தரம் தொழில் அமைச்சர் ஆனார்.

இலங்கையின் பிரபலமான அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும்

1. லங்கா சமசமாஜக் கட்சி (L S) (S P))–1935 இடதுசாரி - என்.எம். பெரேரா

2. கம்யூனிஸ்ட் பார்ட்டி (CP)~1942 இடதுசாரி - பீட்டர் கெனமன்.

3. ஐக்கிய தேசியக் கட்சி (U N P) 1947 வலதுசாரி - டி.எஸ். சேனநாயக்கா.

4. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்~1944, 1947 - ஜி.ஜி. பொன்னம்பலம்.

5. மக்கள் ஐக்கிய முன்னணி~1956 - இடதுசாரி -பிலிப் குணவர்த்தனா.

6. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி~(S L F P)-1951- நடுநிலைக்கட்சி - வலதுசார்பு - எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கா.

7. தமிழரசுக் கட்சி~(சமஷ்டிக் கட்சி) (F.P) - 1953 - சா.ஜே.வே. செல்வநாயகம்.

8. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்~(C W C)~ 1950 - செü. தொண்டமான்.

9. நவலங்க சமசமாஜக் கட்சி~(NLSSP)~1968-இடதுசாரி~வாசுதேவ நாணயக்காரா.

10. ஜனதா விமுக்தி பெரமுன (JVP) (மக்கள் விடுதலை முன்னணி) - 1971-இடதுசாரி~உரோகண விஜய வீரா.

11. தமிழர் விடுதலைக் கூட்டணி~(TULF)~1972- வலதுசாரி - சா.ஜே.வே. செல்வநாயகம்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=74545&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 15 -"தினமணி" தொடர் ♥




"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 15: இடதுசாரிகளை வீழ்த்திய இனவாதம்




லங்கா சமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை உக்கிரப்படுத்தியதன் விளைவாக என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா, விக்ரமசிங்க போன்றவர்கள் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றைய நிலையில் சிறையை உடைத்து வல்வெட்டித்துறை வழியாகத் தோணிகளில் இவர்கள் இந்தியாவுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

இவர்கள் இந்தியப் பெயர்களை ஏற்று கல்கத்தா, பம்பாய், சென்னை நகரங்களில் தலைமறைவாகத் தொழிற்சங்க, அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இலங்கை இடதுசாரி, இந்திய இடதுசாரி இயக்கங்களுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் வளர்ந்தன. பிலிப் குணவர்த்தனா இந்தியப் பற்றின் விளைவாக, தனது இரண்டாவது மகனுக்கு இண்டிகா குணவர்த்தனா என்று பெயரிட்டு அழைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிலிப் குணவர்த்தனா லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி, புரட்சிகர சமசமாஜக் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சிக்குத் தலைவரானார் (பின்னர் பொதுவுடைமைக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியை 1951-இல் அமைத்தார்).

இலங்கைத் தமிழர்கள் பற்றி, அவர்கள் தனி இனமென்றும் அவர்களுக்கென தாயகம் இலங்கையில் உண்டென்றும், அதில் அவர்கள் தமக்கென அரசை உருவாக்க உரிமையுடையவர்கள் என்ற நிலைப்பாட்டையும் 1935-இல் முதன் முறையாக கட்டுரை வடிவில் எழுதியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆவார். சமஷ்டி அமைப்பின் கீழ் இலங்கையின் இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது சாத்தியம் என்ற கொள்கையை அவர் முன்வைத்தார். அப்போது அவர் எந்தவொரு கட்சியையும் சார்ந்திருக்கவில்லை (1945-இல் தான் பண்டா சிங்கள மகாசபை இயக்கத்தை, சிங்களவர் விழிப்புணர்ச்சி நோக்கிற்காக ஆரம்பிப்பதாகக் கூறி, செயல்பட்டார்).

1944-இல் இலங்கைச் சட்டசபையில் சிங்களம் அரச மொழி என்ற தீர்மானத்தை ஜே.ஆர். முதன் முறையாகப் பிரேரித்தார். ஆங்கிலத்தை அகற்றி, சிங்களம் மட்டுமல்லாது, சிங்களமும் தமிழும் அரச மொழிகளாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இடதுசாரிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதனால் சிங்களமும்~தமிழும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சிங்களவர் மத்தியில் படித்தவர் அதிகரிக்கவும் வேலையற்றவர் பிரச்னை சிக்கல் தீர்வு, சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துப் பெற்ற உத்தியோக மொழிகள் என்ற கொள்கையை முன்வைத்தும் இயங்கி வந்த இடதுசாரி இயக்கங்கள், இந்த நிலைப்பாட்டிலிருந்து தடுமாறி வாக்குகளை மையமாகக் கொண்ட சிங்கள இனவாத எழுச்சிக்குப் படிப்படியாக அடிபணிந்தன.

யாழ்ப்பாணம்~கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் (1954) கலந்துகொண்ட பிரதமர் கொத்தலாவலை ஆற்றிய உரையில், சிங்களத்தையும், தமிழையும் சமத்துவம் பெற்ற மொழிகளாக ஆக்குவதாக உறுதி தந்தார்.

கொழும்பு திரும்புவதற்குள் ஆளும் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) க்குள் முரண்பாடுகள் தலையெடுத்தன. மொழியை மையமாகக் கொண்டு முதலமைச்சராக யார் வரலாம் என்ற நிலையெழுந்தபடியால் கொத்தலாவலையின் வாக்குறுதி கைவிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் களனியா மாநாட்டில் (1955) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிங்களமே அரச மொழி என்றானது.

இந்த வேளையில் அந்நியத் தளங்களை அகற்றுதல், அந்நியக் கொடி இறக்கல், இலங்கையின் முழுமையான சுதந்திரத்திற்கு வழிகோலுதல், சமதர்மச் சமுதாயம் காணல், இந்தியாவுடனான நட்பு போன்ற கொள்கைகளை முன்வைத்த பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரத்தை விஞ்சும் வகையில் இருபத்து நான்கு மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன்~என்ற மொழிக் கொள்கையை முன்வைத்தார். இதைப் பிரசாரப்படுத்தப் புத்த குருமார்களும், ஆயுர்வேத மருத்துவர்களும், சிங்கள ஆசிரியர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் முன்வந்து செயல்படவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அப்பொழுது நகரவாசிகளையும், ஆங்கிலம் படித்த நடுத்தர வர்க்கத்தினரையும் மையமாகக் கொண்டு இடதுசாரி இயக்கங்கள் இயங்கி வந்தன. இடதுசாரி இயக்கத்தினர் அக்கறை காட்டி வந்த தொழிலாளர் இயக்கங்கள் கூட, நடுத்தர வர்க்கங்களாலேயே செயல்பட்டன. இதை நன்கு உணர்ந்த பண்டாரநாயக்காவின் இயக்கம் கிராமப்புற விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தனது அரசியல் இயக்கத்தில் ஒன்றிணைத்துக் கொண்டது. இதை முற்றுப் பெறச் செய்ய, தனிச் சிங்களமென்ற இனவாத எழுச்சியும் அவரால் உபயோகப்படுத்தப்பட்டது.

1956-இல் தனிச் சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை இடதுசாரிகள் எதிர்த்துப் பேசி வாக்களித்தனர். சிலர் வாய்விட்டுக் கதறினர். ஒரு மொழியென்றால் இரு நாடுகள் மலரும்~என்று கொல்வின் ஆர்.டி. சில்வா நாடாளுமன்றத்தில் அழுதபடியே உரக்கக் கூறினார்.

சட்டம் நிறைவேறிய அந்த வாரத்திலேயே இடதுசாரித் தலைவர்களின் இல்லங்கள், அலுவலகங்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன.

இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான என்.எம். பெரேரா என்பவரை, "என்.எம். பெரேரா வன முல்லே வோட் இல்லே' என்று சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டன.

தேர்தலின் மூலம் சிங்களவரின் வாக்குப் பெறுவதானால் மொழிச் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க முடியாது என்று இடதுசாரிக் கட்சிகள் உணர்ந்து, தங்கள் கொள்கையிலிருந்து மெல்ல மெல்ல பின்வாங்கின. மொழி சமன் மட்டுமின்றி சிங்களப் பேரினவாதமும் இடதுசாரிக் கட்சிகளின் உள்ளேயும் தலையெடுத்தது. இடதுசாரிக் கட்சிகளால் அமைக்கப்பட்ட கூட்டணி பதவிக்கு வந்ததும் தமிழ்மொழியை ஒரு தேசியமொழியாக ஏற்கும் நிலையைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

மார்க்சிய, லெனினிச கோட்பாடுகள் கைவிடப்பட்டன. இதன் விளைவாக இடதுசாரிகளும் இனவழிச் சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய இடதுசாரிக் கிளைகள் நிலைகுலைந்து பொதுமக்கள் தொடர்பற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டன.

மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆளுகைக்கு வந்தபோது இடதுசாரிக் கட்சிகள் சம்பள உயர்வு கோரி மேற்கொண்ட பெரிய போராட்டம் 40,000 அரசு ஊழியரின் தொழிலைப் பறித்தது. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும், அரசுக்கெதிராக இடதுசாரிகளால் தம் மத்தியில் ஐக்கியமற்ற நிலையில் தமிழின விடுதலைப் போராட்டத்திற்குக் குறிக்கோள் கொண்ட ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் ஆதரவு தந்து, வென்றெடுக்கப்படாத நிலையில் பலவீனப்பட்டு இடதுசாரிகள் இயக்கம் தற்போது விளங்குகிறது.

இதன் வரலாற்றில்-ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்புச் சக்திகளிடையே ஐக்கிய முன்னணி உருவாகியபோது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டுள்ளது. இதற்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்பாளர் மத்தியில் ஒற்றுமையின்மை நிலவியதால் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

நாளை: சர்வஜன வாக்குரிமைச் சட்டம்

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=74253&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 14 -"தினமணி" தொடர் ♥





"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 14: அரசியல் கட்சிகளின் தோற்றம்!


கண்டிய சிங்களவர்


இலங்கையின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 1935-இல் லங்கா சமசமாஜக்கட்சி உருவெடுக்கிறது. இந்தக் கட்சியின் தோற்றமானது தொழிலாளர் இயக்கத்திலிருந்து தொடங்குகிறது.

இலங்கையில் 1860-இல் முதல் தொழிலாளர் போராட்டம் நடந்தபோதிலும் 1899-இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு வெளிப்பட்டபோதிலும் 1920-இன் காலத்தில்தான் இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகளைப் பார்க்க முடிகிறது.

பிரபல பத்திரிகையாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனமும் ((Ceylon Indian Workers Federation) ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கமும்தான் அந்தக் குறிப்பிடத்தக்க அமைப்புகள்.

தோட்ட அதிபர்களிடம் ஓரளவு அங்கீகாரம் பெற்ற இயக்கமாக அய்யர் இயக்கம் அமைந்திருந்தது. இவர் 1925-இன் ஆரம்பத்தில் குணசிங்காவின் தொழிற்சங்கத்துடன் தன்னுடைய தொழிற்சங்கத்தை இணைக்கிறார். ஆனால் 1928-ஆம் ஆண்டுகளில் குணசிங்காவின் இனவாதமும், இந்தியர் எதிர்ப்பும் மேலோங்கியதால் அந்த அமைப்பை விட்டு வெளியேறுகிறார் (இந்தியர் என்பது -மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களைக் குறிக்கும்).

கலாநிதி நியூட்டன் குணசிங்கே ஆய்வுப்படி 1930-க்கு முன்னர் சிங்களவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருந்தனர். அவர்கள் கண்டிய சிங்களவர் என்றும் (உயர்வானவர்கள்), கரையோரச் சிங்களவர் (மீனவர் மற்றும் இதரத் தொழிலில் ஈடுபடுபவர்) என்றும் பிரிக்கப்பட்டு இருந்தனர். ஆங்கிலேயர்கள் இவர்களிருவரையும் தனித்தனிப் பிரிவாகக் கருதும் அளவுக்கு இவர்களிடையே கலாசாரப் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தன.

1930-இல் இவர்களிடையே ஓர் இணக்கம் ஏற்பட்டு கலப்பு மணங்கள் உருவாகின்றன. இதன் பின்னரே சிங்களவர்கள் ஒரே சமூகசக்தியாகவும், ஓர் இனமாகவும் ஒன்றுபட்டனர். உதாரணமாக கரையோரச் சிங்களப் பிரிவினரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா கண்டியச் சிங்களப் பிரிவினரான ஸ்ரீமாவோவை மணந்தார்.

இதுபோன்ற பல்வேறு திருமணங்கள் இவர்களிடையே நடைபெற்றன.

1933-இல் வெள்ளவத்தைத் தொழிலாளர் போராட்டத்திற்கு குணசிங்கா தலைமையேற்கிறார். அதன்பின் அவர் பிரபலமாகிறார். இவரது தொழிற்சங்கத்தில் பரவலாக இடதுசாரிகள் நிறைந்து இருந்தனர். திடீரெனக் குணசிங்கா முதலாளிகள் சங்கமான எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனுடன் சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தத்துக்கு எதிராக மாறினார்.

வேலைநிறுத்தம் முதலாளிகளுடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றார். தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருந்ததால் அங்கத்துவம் காலாவதியாகி விடுகிறது. தொடர்ந்து குணசிங்கா சிங்கள இனவாதத்தைக் கடைப்பிடித்ததால் தொழிலாளர்களிடையே அதிருப்தி ஏற்படுகிறது.

அதே ஆண்டு (1933) பிப்ரவரி 23-இல் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து வாலிப முன்னணியின் கூட்டம் நடக்கிறது. அதில் வெள்ளவத்தைத் தொழிலாளர் சங்கம் உருவாகிறது.

1935-இல் ‘All Ceylon Estate Workers Union’ உருவாகிறது. அவ்வாண்டில் ஏற்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தின் மூலம் இந்த யூனியன் அங்கீகாரம் பெறுகிறது. குணசிங்கா தொழிற்சங்கத்திலிருந்த அதிருப்தியாளர் அனைவரும் இதில் இணைகின்றனர். முதன்முதல் இடதுசாரிகள் தலைமையிலான சங்கமாக இது அமைகிறது.

இதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்து சென்று திரும்பிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த அன்றைய தீவிரவாத இளைஞர்களான டாக்டர் என்.எம். பெரேரா, டாக்டர் விக்ரமசிங்கா, பிலிப்குணவர்த்தனா, எம்.ஜி. மென்டிஸ், பீட்டர் கெனமன் போன்றோர் இணைந்து லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவினர்.

நாட்டின் முழுமையான சுதந்திரத்திற்கும், குடியரசு அமைப்பதற்கும், சமதர்ம சமூக அமைப்பொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர், விவசாயி, அறிவு ஜீவிகளை ஒன்றிணைத்து ஆங்கில ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து இலங்கையை விடுவித்து, ஒரு சமதர்ம சமுதாய அமைப்புக்கு உதவுவதே இக்கட்சியின் நோக்கம்.

உலக அரங்கில் ட்ராட்ஸ்கிய, ஸ்டாலினிச இயக்கங்கள் என்ற பிளவு தோன்றவே இக்கட்சியில் சித்தாந்த ரீதியான பாகுபாடு தலையெடுத்தது. ட்ராட்ஸ்கியத்தை ஆரம்பித்தவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆளும் இயக்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். சோவியத் தலைமையை ஏற்றவர்கள் ஸ்டாலினிஸ்டு என்ற முத்திரை குத்தப்பட்டு லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் 1940-இல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி (மநட) என்ற பெயருடன் இயங்கத் தொடங்கினர். 1942-இல் இலங்கை பொதுவுடைமைக் கட்சி என்ற பெயருடன் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.

1942-இல் தனது வேலைத் திட்டத்தை வெளியிட்ட இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி ஏகாதிபத்ய எதிர்ப்பு, சமத்துவ சமதர்மக் குடியரசை நிறுவுதல் போன்ற கொள்கைகளை வற்புறுத்தியதுடன், இலங்கைத் தேசிய இனங்கள் பற்றிய ஜனநாயக நிலைப்பாடும் 1942 "மே'யில் இடம்பெற்ற "மே'தினக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இலங்கை இனப் பிரச்னை சம்பந்தமான ஒரு மார்க்ஸிய, லெனினிச தீர்வாக இது முதன்முறையாக முன் வைக்கப்பட்டது. இதன் சாராம்சம் வருமாறு:

தமிழர் தனித்துவம் பெற்ற தேசிய இனம். அவர்களின் பாரம்பரிய தாயகம் வடக்கு, கிழக்குப் பகுதிகள். இதைத் தமிழர் ஆள, ஏற்ற அரசை அமைத்துக் கொள்ள லெனினிச கோட்பாட்டின்படி, சுய நிர்ணய உரிமையை அனுபவிக்கத் தமிழினம் உரிமையுடையது. அவசியமானால் அவர்கள் பிரிந்து தமது தனித்துவமான அரசை உருவாக்க உரிமை பெற்றவர்கள். இலங்கைவாழ் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜா உரிமை பெறத் தகுதியுடையவர்கள்~என்றெல்லாம் தீர்மானத்தில் கூறப்பட்டது.

இந்தத் தீர்மானம், அன்று அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மையமாகிய இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்திற்கு அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அமைப்பின் அன்றைய செயலாளர் யார் தெரியுமா? பின்னர் இலங்கை அதிபராக வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனேதான்! அப்போது இவர் இடதுசாரி நூல்கள், வெளியீடுகளைத் தருவித்து நூல் நிலையம் அமைத்து~கங்ச்ற் ஆர்ர்ந் இங்ய்ற்ழ்ங்~ இடதுசாரி நூல் மையம் என்ற நூல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தார்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=73803&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 13 -"தினமணி" தொடர் ♥






"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-13: இலங்கையின் பொருளாதாரப் பின்னணி







ஆங்கிலேயர் கையிலிருந்து 2 பிப்ரவரி 1948-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

1977-இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் வரையில் ஓரளவு பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டு, நல்வாழ்வு நடவடிக்கைகளிலும், சமூக நலக்கொள்கைகளிலும் குறிப்பிடத்தகுந்ததொரு நிலைக்கு முன்னேறியது. மக்கள் நல (ரங்ப்ச்ஹழ்ங் நற்ஹற்ங்) அரசுக்குரிய வடிவத்தில் அது இயங்கியது

ஆங்கிலேயர் வெளியேறியபோது, பெரும்பாலான தோட்டங்கள் அனைத்தும் கம்பெனிகளிடம் தொடர்ந்து இருந்தன. உள்நாட்டு மூலதனம்கூட மேலைநாட்டு மூலதனக் கூட்டோடும், தொழில்நுட்ப உதவியோடும் இயங்கி வந்தது.

தனிமனித சராசரி ஆயுள்காலம், இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய நாடுகளிலேயே 50 ஆண்டுகள் என்றிருந்தபோது, இலங்கையில் மட்டும் 66 ஆண்டுகளாக இருந்தது. இந்தியாவைவிட இது அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் விகிதம் இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய நாடுகளில் 45 சதவிகிதமாக இருந்த வேளையில், இலங்கையில் 85 சதவிகிதம் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சில இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய கூட்டாட்சி இதில் தீவிர அக்கறை காட்டியதின் விளைவு இது. இருந்தபோதிலும், வேலை இல்லாத் திண்டாட்டம், குறிப்பாக படித்த இளைஞர் மத்தியில், வேகமாகப் பெருகி வந்தது முந்தைய பொருளாதாரத் திட்டத்தின் குறைபாடாகும். ஜனதா விமுக்தி பெரமுனை (ஒ.ய.ட.) தலைமையில் 1977-ஆம் ஆண்டு நடந்த இளைஞர் கிளர்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. இன்று தமிழ் இளைஞர்களுக்கு இருக்கக் கூடிய முக்கியமான பிரச்னைகளில் இதுவும் ஒன்று.

பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டதற்கு சுதந்திரக் கட்சி அரசு விதித்த பல கட்டுப்பாடுகளும் அவற்றை ஒட்டிய ஊழலுமே காரணமென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

உலகப் பொருளாதார நெருக்கடியும் 1970-ஆம் ஆண்டுகளில் இலங்கைப் பொருளாதார நிலைமையில் சிக்கல்கள் உருவாகக் காரணமாயின. அதுமட்டுமல்லாமல், சுதந்திர கட்சி கடைப்பிடித்த சில பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும்கூட இது அதிகமாவதற்குக் காரணமாயின.

விஞ்ஞானப்பூர்வமான விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது. பணப்பயிர்ப் பொருளாதாரம் சமூகத்தில் சில புனரமைப்புகள் உருவாகக் காரணமாயின. வெங்காயம் போன்ற பணப்பயிர் முறைகளில் புதிய வேகம் உருவானது. அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

இந்தக் காலத்தில் பொருளாதார நிலையில் ஒருகட்ட மேம்பாடு அடைந்த சிங்களவர்களின் வளர்ச்சி துரிதமாக்கப்பட்டது. இதை சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மாறுதலாகக் கொள்ளலாம்.

சமூகத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் புதிய கோஷங்களோடு ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் முன்னுக்கு வரவழைத்தது.

""அனைவருக்கும் வேலை, குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம் தரக்கூடிய சுதந்திரமானதும், நீதியுமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்'' என்று ஐக்கிய தேசியக் கட்சி அப்போது கூறியது.

சிங்கப்பூர், தைவான், தென்கொரியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்ற முனைந்தது.

இதைத்தான் சர்வதேச மூலதன நிறுவனங்களான உலக நிதி நிறுவனமும் (ஐ.எம்.எப்.) உலக வங்கியும் ஆதரித்தன.

சுதந்திரமானதொரு சந்தை அமைப்பின் கீழே (ஊழ்ங்ங் ற்ழ்ஹக்ங் க்ஷ்ர்ய்ங்) இறக்குமதிக்குப் பதிலான உற்பத்தியிலிருந்து ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்கு மாறுவதை இது உள்ளடக்குகிறது.

அந்நிய முதலீட்டையும், அந்நிய உதவியையும் கடனாகப் பெற்றுச் சர்வதேசச் சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபடுவதை இது ஆதரிக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் இந்தக் கொள்கையைத்தான் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டன. பல தொழிற்சாலைகள் பொதுத் துறையில் இருந்து தனியார் துறைக்கு மாற்றப்பட்டன. அந்நிய மூலதனத்திற்குச் சாதகமான நிலைமைகளை வழங்கும் சுதந்திரத் தொழில் மண்டலம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

நீர்ப்பாசனத்திலும் மின்சாரத்திலும் 39 சதவிகிதத்தைத் தொடுமாறு திட்டமிடப்பட்ட மிகப் பெரிய மகாவெளி அபிவிருத்தித் திட்டமானது 30 ஆண்டுகளுக்குப் பதில் 6 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுவிடும் என்று அறிவிக்கப்பட்டது.

1978-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) மூலதனத்தில் 60 சதவிகிதம் அந்நியக் கடன்களாகும். இவை எல்லாம் புதியதொரு பொருளாதார உத்வேகத்தை அளித்தன. வளர்ச்சி விகிதம் 5.6 சதவிகிதமாக உயர்ந்தது. இவை இறக்குமதிப் பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகளை மிகவும் உயர்த்தியது. இந்தக் கொள்கையின் எதிர்மறை விளைவுகள் மெல்ல மெல்ல உணரப்பட்டன.

அந்நியக் கடன்கள் மிகவும் அதிகமானதொரு விகிதத்திலேயே உயர்ந்ததும், இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டதும் இதன் எதிர்மறை அம்சங்கள் ஆகும்.

சுற்றுலா மூலமும், ஏற்றுமதி மூலமும் கிடைக்கும் அந்நியச் செலாவணி, கடன்களையும், அதற்குரிய வட்டியையும் அடைப்பதற்கே பெரிதும் போய்விடுகிறது. அந்நியச் செலாவணியில் துண்டு விழுதல் ஒவ்வொரு ஆண்டிலும் மேலும் மேலும் கீழிறக்கமாக மாறிக்கொண்டு வந்தது. குறைந்த ஏற்றுமதி 4 சதவிகிதமாக உயர்ந்த 1977-81 காலக் கட்டத்தில், இறக்குமதி 11 சதவிகிதம் கூடியது என உலக வங்கியின் அறிக்கை கூறியது.

அந்நியப் போட்டிக்கு வழிவிட்டதன் காரணமாக இலங்கையின் சிறுதொழில் அதிபர்களும், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

கைத்தறித் தொழில் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தேசியப் பஞ்சாலைகள் எல்லாம் அந்நிய கூட்டாளிகளின் கையில் விடப்பட்டன. 1977-ஆம் ஆண்டில், தேயிலை, ரப்பர் ஆகியவைகளின் உற்பத்தியில் ஏற்றுமதி என்பது வீழ்ச்சிப் போக்கில் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தன.

இந்த வீழ்ச்சிப் போக்கானது இத்துறையின்மீது செலுத்தப்படாத அத்தியாவசிய முதலீட்டின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.

""கடந்த இருபது ஆண்டுகளாகக் காப்பி, கொக்கோ, தேயிலை ஆகிய பயிர்களில் அதன் மதிப்பு எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது. தேயிலையின் உண்மையான விலை மதிப்புக் குறைந்துகொண்டே வருகிறது'' என்று அப்போது கூறினார் அத்துறை அமைச்சர்.

தேயிலையின் உண்மையான விலை 1960-இல் இருந்ததை விட 1982-இல் 40 சதவிகிதம் குறைந்தது என்பதுதான் உண்மை.

நாட்டின் மூலதனச் சொத்திற்குப் பெரிய பங்களிப்பினை அளிக்கக்கூடிய சாலைப் போக்குவரத்து, பாசன அமைப்பு, பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், மின்சாரம் நீர்வழிப் போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய அனைத்துத் துறைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை அமைச்சரே ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகள் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை அளிக்க முடியாது. வேலை இல்லாத் திண்டாட்டம் 15.6 சதவிகிதத்தில் இருந்து 1981-இல் 17.9 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் இத்தொகை கூடுதலாகவே இருக்கும்.

மேற்கண்ட கொள்கைத் திட்டங்களால் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது. மாதச் சம்பளம் வாங்குவோரும் நகர்ப்புற, கிராமிய ஏழைமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். கூடுதலாகி வரும் சமத்துவமின்மையே நல்வாழ்வுத் திட்டங்களில் செய்யப்பட்டு வரும் வெட்டுகளால் உறுதி செய்யப்பட்டன. அதற்கு மாறாக நாட்டில் பாதுகாப்புச் செலவும், ராணுவத்திற்கான ஒதுக்கீடும் அதிகமாக்கப்பட்டது. *

1983-இல் பாதுகாப்புத் துறைக்கான மூலதனம் 1982-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82.7 சதவிகிதம் உயர்ந்தது. பாதுகாப்பு நடைமுறைச் செலவானது 82-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83-ஆம் ஆண்டில் 47.6 அதிகரிக்கப்பட்டது. ஆனால் மொத்த நடைமுறைச் செலவு 19.1 சதவிகிதம் மாத்திரம் அதிகரித்தது.

இதனைச் சீர்செய்ய பொதுமக்களுக்கான சலுகைகளில் கைவைக்க வேண்டிய நிலை அரசுக்கு உருவானது. இப்படி மக்கள் நல அரசு என்ற நிலையில் இருந்து மாறி, யுத்தப் பொருளாதார (War Economy)சூழலை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் இக்கொள்கைகளின் மறுபக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகளால் வியாபார வர்க்கம் மிகவும் பயன் அடைந்தது. குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதித் தொழில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஆதாயம் அடைந்தனர். சர்வதேச ஏகபோக கம்பெனிகளுடன் கூட்டுறவு கொண்ட சக்திகள் தோன்றின. அதேசமயம், மானியத்தில் செய்யப்பட்ட வெட்டுகளால் கீழ்நிலைச் சமூகப் பிரிவுகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின.

-------------------------

* ஸ்ரீலங்கா: "பாசிசத்தை நோக்கிய போக்கை யார் தடுத்து நிறுத்துவது?' பாஸ்டியன் ஷலேங்கா-பட்ங் ஏண்ய்க்ன் 10.10.84.

நாளை: அரசியல் கட்சிகளின் தோற்றம்

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=73195&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 12 -"தினமணி" தொடர் ♥






"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 12: முஸ்லிம் தமிழர்கள்





முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரவலாக வாழ்கிறார்கள். அதாவது கொழும்பு, குருநாகல், களுத்துறை, புத்தளம், கம்பஹா, அநுராதபுரம், காலே, பொலனறுவை, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, கண்டி, கேகாலை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுணியா, முல்லைத்தீவு பகுதிகளில் 41 சதவிகிதம் முதல் 1 சதவிகிதம் வரை வாழ்கின்றனர்.

கொழும்பு முதல் மொனறாகலை வரையிலுள்ள 11 மாவட்டங்களில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரும், கண்டி முதல் இரத்தினபுரி வரையுள்ள மாவட்டங்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேரும், வடக்கில் உள்ள 6 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேரும் வசிப்பதாக 1981-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு உறுதி செய்கிறது.

குருநாகல், கண்டி, புத்தளம் பகுதிகளில் தென்னந்தோப்பு உரிமையாளர்களாக, விவசாயம் சார்ந்த பண்ணை அதிபர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். வடக்கு கிழக்கில் கீழ்த்தட்டு வர்க்கத்தினராகவும், தெற்கிலோ நடுத்தர மற்றும் உயர்தர வகுப்பினராகவும் உள்ளனர்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் தமிழ் மற்றும் தமிழரோடும், தெற்குப் பகுதி மக்கள் வாழ்நிலை, வசதி காரணமாக சிங்களவரோடும் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தென்பகுதி முஸ்லிம்களின் குழந்தைகள் சிங்களத்தையே கல்வி கற்கும் மொழியாகத் தேர்வு செய்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம்களின் தாய்மொழி என்னவோ தமிழ்மொழிதான்.

இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அப்போது வெறும் வியாபாரத் தொடர்போடுதான் அவர்கள் இருந்தனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வது 9, 10, 12 ஆம் நூற்றாண்டுகளில்தான் தொடங்கியது. இதை ** இரண்டாவது நகரமயமாதல் என்று குறிப்பிடுகிறார்கள். மூன்றாவது நகரமயமாதல் என்பது நவீன மத்தியதர வாழ்க்கை நிலையை உருவாக்கிய காலனி ஆட்சிக் காலமாகும்.

இவர்களில் பெரும்பான்மையோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். பாராளுமன்ற, ஜனநாயகப் பங்களிப்பவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

அம்பாறை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நல்ல கவித்திறன் உண்டு. இவர்கள் கழனிகளில் வேலை செய்யும்போது பெண் கவி புனைந்து பாடும்போது, ஆண் எதிர் வரியைப் பாடுவதும் ரொம்ப இனிமையாக இருக்கும். இந்தக் காட்சியைக் கண்டு புல்லரித்துப் போன உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் முஸ்லிம் ஆண்-பெண்களின் கவித்திறமையை சிலாகித்து அழகான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார்.

முஸ்லிம்களையும், தமிழர்களையும் தனியாகப் பிரிக்க எண்ணிய சிங்கள அரசு, வானொலி நிகழ்ச்சியில் கூட இஸ்லாமிய நிகழ்ச்சிகள் என்ற ஒரு பிரிவையே ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி தமிழில்தான் வழங்கப்படுகிறது.

1981 கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 11,34,556 ஆகும்.

இங்குள்ள முஸ்லிம்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. இலங்கை வாழ் முஸ்லிம்கள், ""மூர்கள்'' என்று இவர்களை குறிப்பிடுகிறார்கள். 2. இந்திய அல்லது பாகிஸ்தானி முஸ்லிம்கள். 3. மலேயா முஸ்லிம்கள்.

(ண்)"மூர்கள்' இந்தியாவில் இருந்தும், அரேபிய நாட்டில் இருந்தும் வந்தவர்கள். இவர்கள் வியாபாரிகளாக இலங்கை வந்து பின்னர் இங்குள்ள மக்களோடு திருமணத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.

தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய (காயல்பட்டணம், கீழக்கரை) முஸ்லிம்கள் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் வாழ்கின்றனர். இவர்களுடைய தாய்மொழி தமிழாகும்.

இவர்கள் பெரும்பாலும் சன்னிப் பிரிவு மற்றும் சாஃபிப்பிரிவைச் (நன்ய்ய்ஹ் & நஹச்ண்)சார்ந்தவர்கள்.

(ண்ண்)இரண்டாவது பிரிவான இந்திய-பாகிஸ்தானி முஸ்லிம்கள் என்பவர் பெரும்பாலும், ""மேமோன்'' ""போக்ராஸ்'' மற்றும் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் இருந்துவந்து குடியேறிய வியாபாரிகள் ஆவர்.

இவர்கள் பெரும்பான்மையோர் ""சாஃபி'' பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் மேமோன் முஸ்லிம்கள் மட்டுமே ""ஷியா'' பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பெரும்பாலும் தமிழ், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

மேமோன் மற்றும் போக்ராஸ் பிரிவினர் உருது மற்றும் குஜராத்தியைப் பேசக் கூடியவர்கள். (சஹற்ண்ர்ய்ஹப் ணன்ங்ள்ற்ண்ர்ய் ஹய்க் ற்ட்ங் ஙன்ள்ப்ண்ம் டங்ர்ல்ப்ங் ஆஹ் ய.ஐ.ந. ஒஹஹ்ஹக்ஷஹப்ஹய்.)

(ண்ண்ண்)மூன்றாவது பிரிவான மலேயா முஸ்லிம்கள் சமீப காலத்தில் வந்து குடியேறியவர்கள். இவர்கள் டச்சுக்காரர்கள் காலத்தில் ஜாவாவில் இருந்து வியாபார நிமித்தமாக குடியேறியவர்கள். தாய்மொழி மலேயா மொழியாக இருந்தபோதிலும் தமிழையே பேசுகின்றனர். இவர்கள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மற்ற பிரிவினரைப்போல் அல்லாது திருமணங்களை சிலோன் மூர்களோடும் கூட நடத்திக் கொள்கின்றனர்.

1. இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 34,195 பேர். 2. மலேயா முஸ்லிம்கள் 43,378. 3. மூர்கள் 10,56,972.

ஆக்கிரமிப்பாளர்களைப் போலன்றி இம்மூன்று குழுக்களும் படையெடுப்பால் வந்து குடியேறியவர்கள் அல்ல. இவர்கள் இலங்கையில் தங்களுக்கெனத் தனியான ஆட்சி முறையையும் நிலைநாட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவர்களது மதம் அரசாங்கத்தால் ஒடுக்கக் கூடியதாகவும் இல்லை.

சிலர் விவசாய சமூகத்தில் இருந்தபோதும் பெரும்பான்மையான சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வைர வியாபாரத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்றனர்.

நகர முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வர்த்தகர்களாகவும் சிறுபான்மையோர் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.

இதில் மேல்தட்டு சக்திகள் கொழும்பில் தங்கி உள்ளன. மொத்த முஸ்லிம்களின் அரசியல் தன்மை கொழும்பு வாழ் முஸ்லிம்களால் தீர்மானிக்கப்படுகிறது.

பெரும்பாலான முஸ்லிம்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் கணிசமான பகுதியினர் விவசாயிகளாகவும் மற்றவர் சிறு வியாபாரம், நில உரிமையாளர், மீனவர் மற்றும் கூலிகளாகவும் உள்ளனர். கிராமப்புற சமூகத்தில் சிங்களவர்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களின் கல்வியறிவு மிகக் குறைவு. சிங்கள மேலாண்மைக் கலாசாரம், இவர்களை "தம்பியா' (பட்ஹம்க்ஷண்ஹ்ஹ) அதாவது கல்வி அறிவற்ற ""நரித்தனம்'' உள்ள வியாபாரிகள் என்று குறிப்பிடுகிறது.

இவர்கள் புத்த இனவெறி கலாசாரத்தால், அடிக்கடி இனவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். முதன் முதலில் போர்த்துக்கேயர் உள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்தவர்கள் இவர்களே.

எல்லாக் காலனிவாதிகளுடனும் கடுமையான எதிர்ப்பினைக் காட்டியவர்கள். வியாபாரத்தில் போட்டி நிமித்தமாக அந்நிய ஆட்சியாளர்களும் இவர்களை ஒடுக்கி உள்ளனர். 1613இல் "மதாரா' என்ற இடத்தில் நடந்த படுகொலைகள் இதற்குச் சான்றாகும்.

புத்த மேலாண்மைக் கலாசார உணர்வால் "சிங்கள பெüத்தயா' என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியரான அநகாரிக தர்மபாலா, ""முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிப்பவர்கள் மட்டுமே உண்மை தேச பக்தர்கள்'' என்று எழுதுகிறார்.

அவர் மேலும் கூறுவதாவது~

"பிரித்தானியருக்கு ஜெர்மானியர் எவ்வாறோ, சிங்களவருக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. முகமதியர், சிங்களவருக்கு சமயத்தாலும், இனத்தாலும் மொழியாலும் அந்நியர்கள். பௌத்த சமயம் இல்லாவிடின் மரணத்தையே சிங்களவர் வேண்டுவர். பிரித்தானிய உத்தியோகஸ்தர்கள் சிங்களவரைச் சுடலாம்; தூக்கிலிடலாம்; சிறைபிடிக்கலாம். ஆனால், எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே. அந்நியரால் இழைக்கப்படும் அவமானங்களை இனியும் பொறுக்க முடியாது என்பதை அமைதிமிக்க சிங்களவர் இறுதியில் உணர்ந்துவிட்டனர். முழு தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதார ஆன்மீக ரீதியிலான காரணங்கள் இருந்தன' - என்று முஸ்லிம்கள்மீது வெறுப்பைக் கொட்டுகிறார்.

முஸ்லிம்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட முதலாவது வகுப்பு மோதல் 1915இல் ஆகும்.

1948க்குப் பின் சிங்கள புத்த அரசு அதிகாரம், இவர்களை வாழ்க்கையில் சமூகப் பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்கான எந்த வகையிலும் உதவி செய்யாமல் இருந்ததோடு 1958 தமிழ் எதிர்ப்புக் கலவரத்தில் இவர்களைப் பாதிப்படையவும் செய்தது.


1970இல் ஒரு மிகுந்த அபாயகரமான நிலையை இவர்கள் அடைகிறார்கள். ஏழாண்டு காலத்திற்குள் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வன்முறை வெறியாட்டம் தீவிரமாகியது. புத்தளம் படுகொலை மிகப் பெரிய ஒன்றாகும். அது 1976இல் நடந்தது. அப்போது சிங்கள அரசு ராணுவத்தின் உதவிகொண்டு மசூதியில் தொழுகையில் இருந்த 7 முஸ்லிம்களைப் படுகொலை செய்ததோடு 271 வீடுகளையும், 44 கடைகளையும், இரண்டு தொழிற்சாலைகளையும் தீக்கிரையாக்கியது.

மேலும் இரு மசூதிகளும் இடித்துத் தள்ளப்பட்டன.

** Populing of Srilanka: The national question and some problems of history and ethinicity by Dr. Senake Bandaranayaka (paper submitted in a seminar conducted by Social Scientists Association–Colombo on Nationality problems of Srilanka.)

நாளை: இலங்கையின் பொருளாதாரப் பின்னணி

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=72689&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!