Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, April 14, 2009

மிஸ்டர். பீன்’ஸ் நகைச்சுவைக் காணொளிகள்



http://www.youtube.com/watch?v=a4cmrMJul1g





http://www.youtube.com/watch?v=cMUxo1LoJq8





http://www.youtube.com/watch?v=7T403eJoOcE




http://www.youtube.com/watch?v=5P6UU6m3cqk





http://www.youtube.com/watch?v=ZRkSam472No




http://www.youtube.com/watch?v=nrlSkU0TFLs



http://www.tamilnenjam.org/2009/04/blog-post_11.html

இந்தியாவிற்குள் இலவச குறுந்தகவல் அனுப்ப

தமிழில் தட்டச்சு பயில்வதற்கு


"உங்களது தட்டச்சு வேகத்தை அளவிடுவது எப்படி?" - என்கிற எனது பதிவு ஒன்றில், தமிழில் தட்டச்சு பயில்வதற்கான இலவச மென்பொருள் உள்ளதா என திரு. Kumaravel கேட்டிருந்தார்.

சிலகாலம் இணையத்தில் தேடியதில், இன்று எனது கண்ணில் பட்ட ஒரு மென்பொருள் அவரது கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

தமிழில் தட்டச்சு செய்வதற்கு நிறைய இலவசப் பயன்பாடுகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் தட்டச்சு கற்றுக்கொள்வதற்காக பிரத்தியேகமாக உள்ள மென்பொருட்கள் மிகக் குறைவே.

How to learn typewriting in Tamil / English?

இந்த மென்பொருளின் பெயர் - தட்டச்சு ஆசான்

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளுக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு.

இயக்கும் முறை :
முதலில் உங்களுக்குத் தேவையான தட்டச்சு பலகையைத் தேர்ந்தெடுக்கவும். (தமிழ்நெட்99 இயல்பாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும்)

பின்பு திட்டத்தில் தங்களுக்கு விருப்பமானதைத் (பாடத்திட்டம், தேர்வு,விளையாட்டு) தேர்ந்தெடுத்து பயிற்சியினைத் துவங்குங்கள்.

மாற்றுப் பாடத்தில் எண்விசை, சிறப்பெழுத்துப் பயிற்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு : http://www.ildc.in/Tamil/GIST/htm/ck-kbd.htm

How to practice?
Choose your Typing Layout first.
(By default English mode is chosen).

Choose your 'Scheme'(Lessons, Test, Games)
and begin your exercise.

Choose 'Special Lessons' for learning Numeric and Special Characters.


தரவிறக்கம் செய்ய : http://www.ildc.in/Tamil/GIST/CK/TypTutor.zip






இந்தியாவிற்குள் இலவச குறுந்தகவல் அனுப்ப


இந்தியாவில் இருந்தபடி தேசிய அளவில் (national) குறுஞ்செய்தித் தகவல்களை (SMS) நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இலவசமாக அனுப்புவதற்கு உதவும் 12 தளங்களை இங்கே தருகிறேன்.

நாம் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி (Short Message Service) அனுப்பியிருக்கிறோம் என்பதை தனி தரவுத்தளத்தில் (Database) பதிந்திருக்கிறார்கள். அதனால் அவற்றை நாம் கையாள்வது (customize) எளிமையாக்கப்பட்டுள்ளது.

Send Free SMS All over India!

http://www.atrochatro.com/

http://www.mycantos.com/

http://www.jaxtr.com/

http://www.mysmsindia.com/

http://wwwh.way2sms.com/content/index.html

http://isms.ibibo.com/

http://www.jakasoffers.com/sign-in.php

http://www.smslife.in/

http://www.160by2.com/

http://gizmosms.com/

http://www.vakow.com/

http://www.smsgupshup.com/


http://www.tamilnenjam.org/2009/04/blog-post_8225.html

குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்



குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்




நம் வீட்டுக்கணினிகளில் நமது குழந்தைகளை விளையாட அனுமதிக்கலமா?

ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயங்குதளத்தில் குறிப்பாக விண்டோஸ், லினக்ஸ் போன்றவற்றில் பதிந்திருப்போம்.

இதே கணினியை குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதித்தால் அவர்களது குறும்புத்தனத்தால் நமது கோப்புகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழலாம்.

அவர்களது திறமையை வளர்ப்பதற்காகவும், அச்சமின்றி பாதுகாப்பு உணர்வுடன் கணினியை குழந்தைகள் வசம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியுடன் இருக்க என்ன வழி?

மழலைகளுக்காகவே ஒரு இலவச இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் Qimo

Qimo மென்பொருள் மிக இலகுவானது. சிடி, பென் டிரைவ் இவற்றில் Qimo வை ஏற்றி பிறகு கணினியில் நிறுவிப் பயன்படுத்தலாம்.

மிகக் குறைந்த திறன் கொண்ட கணினியிலும் நல்ல முறையில் இயங்க வல்லது( 400 MHz மைக்ரோப்ராசசர், 256 MB நினைவகம், 6GB வன்வட்டு )

வழக்கமான கணினித் திரையில் இயங்குதளத்தில் கண் முன் தெரியும் ஐகான்கள் எல்லாவற்றையும் விட இந்த Qimo வில் அளவில் பெரிய ஐகான்களாகத் தெரியும்.

TuxPaint, eToys, Gcompris ஆகிய பயன்பாடுகளை உள்ளடக்கியது.

பழைய மடிக்கணினிகள், ஒன்றுக்கும் உதவாது எனத் தூக்கிப்போடும் நிலையில் உள்ள பழைய கணினிகளில் இந்த Qimo வை நிறுவினால் அவற்றை இன்னும் பல காலம் பயன்படுத்தலாம்.

3 வயது குழந்தைகளும் பயன்படுத்தும் வண்ணம் மிக எளிமையான முகப்பையும்,நிறைய கணினி விளையாட்டுகளையும் உடைய இயங்குதளம் இது. இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்தால் 700 MB அளவுள்ள ஒரு ISO கோப்பாகக் கிடைக்கும்.

அதை ஒரு சிடி / டிவிடியில் எரிக்க வேண்டும். பின்பு அந்த சிடி / டிவிடி வழியாகக் கணினியை பூட் செய்து Qimo வை நிறுவலாம்.

ISO கோப்பினை சிடி / டிவிடியில் ஏற்றுவதற்கு ISO Recorder மென்பொருள் உதவும்.

உங்கள் ரகசியக் கோப்பு, ஆவணங்களை தனி இயங்குதளத்திலும், குழந்தைகளுக்கான பயிற்சிகளை, விளையாட்டுகளை இந்த Qimo விலும் என தனியாகப் பிரித்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் நிகழாது.

மேலும் பழைய கணினிகள் வீட்டில் பயன்படுத்தாது இருப்பின் அதில் இந்த Qimoவை நிறுவி அதை சிறுவர்களிடம் தைரியமாகக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்.

சுட்டி : http://www.qimo4kids.com/

கலைச்சொற்கள் :

வீட்டுக்கணினி : Home PC
மடிக்கணினி : Laptop
கோப்புகள் - Files
ஆவணங்கள் - Documents
இயங்குதளம் - Operating System
நிறுவுதல் - Installation
ஐகான் - Icon
பயன்பாடுகள் - Software Applications
ISO - An ISO image is an archive file (a.k.a. disk image) of an optical disc using a conventional ISO (International Organization for Standardization
தரவிறக்கம் - Download
சிடியில் எரித்தல் - CD Burning
பூட் - Boot - Startup
நினைவகம் - memory (RAM)
வன்வட்டு - Hard disk
மைக்ரோப்ராசசர் - Micro Processor
பென் டிரைவ் - Pen Drive

http://www.tamilnenjam.org/2009/04/blog-post_13.html

எலியை பிடித்து, கடித்து....


விஜய் டிவியில் நட்ந்தது என்ன ?என்ற நிகழ்ச்சியில்  கொஞ்சம் நாட்கள் முன்பு ஒரு
ஆன்மீக  சாதுவைப்பற்றி வந்தது  சுடலைச்சாமி என நினைக்கிறேன்  அவர் இருக்கும் கிராமத்தில் இது வரை ஒருவரும்  டாக்டரிடம் போனதில்லையாம் ,எந்த வியாதி வந்தாலும்  அந்த மனிதரிடம் போய் அவர் கொடுக்கும் விபூதியை தடவ சரியாகிவிடுகிறது என்று சொல்கின்றனர் அந்தக்கிராமத்து மக்கள்  எல்லம் சரிதான்  ஆனால் அவர் உண்பதைப் பார்த்தால் ஒருபக்கம் ஆச்சரியமும்  மறுபக்கம் இப்படியும் ஒரு மனிதரா என்று எண்ணத் தோன்றுகிறது
 
அவர் பேட்டி எடுப்பவரிடம் பேசிக்கொண்டே திடீரென்று ஒரு எலியைப்பிடித்தார்  வாலைப் பிடித்துதூக்கினார் பின் வாயில்  கடித்து  தின்று விட்டார் , பின் மேலும் அவருக்குப்
பசிக்க  மண்ணைத் தோண்டினார் ஒரு பெரிய நண்டு ஓடி வந்தது  .அதை பிடித்து கால்களை கறுமுறு என்று சாப்பிட்டார் ,   அதன் பின்னும் பசிக்க  ஒரு தவளையைப் பிடித்துத் தின்றார்,
எல்லாவற்றுக்கும் மேலாக ஓடும் விஷப்பாம்பையும் பிடித்து அதன் உடலைக் கீறி உள்ளிருக்கும் பொருளையும் தின்றார் ,அவரை இதை பற்றி கேட்ட போது எனக்கு இவைகள்தான் உணவு  என்கிறார் ,அவரால் பலர் தங்கள்தீராத வியாதிகளைத் தீர்த்துக் கொள்வதால் இந்த விஷயத்தைப் பெரிது படுத்துவதில்லை  ,,
இதைப்பார்த்த எனக்கு அன்று  சாப்பாடு இறங்கவில்லை  இது எப்படி சாத்தியமாகிறது?
மிகவும் வியப்பாக உள்ளது .

 

தடை செயப்பட்ட புத்தகம்-1

சென்னை புத்தக அரங்கில் தடை செயப்பட்ட
"விடுதலைப் புலிகள்" என்ற புத்தகத்தை இணையத்தில் வாங்க....

http://nhm.in/shop/978-81-8368-638-9.html?gclid=CKfZoNqa2ZkCFc0vpAod0l-JWw




Author: Marudhan


<span title=விடுதலைப் புலிகள்" width="273" height="420">


உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு.

உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் தன்மை. இதெல்லாம் விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது ஆச்சரியமான விஷயம். தற்கொலைப்படை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இலங்கை, இந்திய அரசுகளின் முக்கியமான பல தலைவர்களை புலிகள் கொன்றுள்ளனர். பிற போராளி இயக்கங்கள் என்று எதுவுமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள், குழந்தைப் போராளிகளைப் படையில் வைத்திருப்பது, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மிரட்டிப் பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது.

ஆனாலும் ஈழத் தமிழர்கள் பலரும் இன்று விடுதலைப் புலிகளை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையில் உள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி/இனப் போரின் பின்னணி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

Details

ISBN 978-81-8368-638-9
Weight 240.00 gms
Book Title Viduthalai Puligal
Pages 208
Format Printed Book
Year Published 2007
Price: Rs. 100.00

Dinamani கட்டுரை கருணாநிதியின் தராசு!






கருணாநிதியின் தராசு!




ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக எழுந்து நிற்க முடியாத நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு முதல்வர் கருணாநிதி தாமே தலைமை ஏற்று ஓர் ஊர்வலம் நடத்தியிருக்கிறார். பாவம்! எத்தனை முறைதான் ஊர்வலம் நடத்துவார்? எத்தனை முறைதான் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவார்? எத்தனை முறைதான் சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் மீண்டும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றுவார்? நாடகக்காரர்கள் "இன்றே இந்த நாடகம் கடைசி' என்று அறிவிப்பது போல, சட்டமன்றத்திலும் "இந்தத் தீர்மானம் இதுவே கடைசி' என்றெல்லாம் போட்ட தீர்மானத்தையே திரும்பப் போட்டு உலகத்தினர் நகைக்கும் நிலைக்கு உள்ளாகியும்கூட கருணாநிதி சோரவில்லையே! பேயோட்டுகிற பூசாரி பேய்க்குக் கெடு வைத்து வேப்பிலை அடிப்பது போல, தன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமா கடிதங்களைத் தன் பைக்குள் வாங்கி வைத்துக் கொண்டு, இரண்டு வாரத்துக்குள் போர் நிறுத்த ஏற்பாடு செய்யவில்லை என்றால் தில்லி செங்கோட்டையிலிருந்து விரட்டப்படும் நிலை ஏற்படும் என்று, உடுக்கை வேகமாகக் கருணாநிதி தட்ட, நாடகம் சூடு பிடித்தது. பதிநான்காம் நாள் என்ன நடக்கும் என்று நாடே திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தது. பதிநான்காம் நாளும் வந்தது. தில்லியின் சிறப்புத் தூதர் கோபாலபுரத்துக்கு வந்தார். பூசாரி "உடனே உடுக்கை கீழே போடாவிட்டால், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையைவிட்டே வெளியேற நேரிடும்' என்றார். அவ்வளவுதான்; கருணாநிதிக்குப் புரிகிற மொழியில் சொன்னால் எதையும் எளிதாகப் புரிந்து கொண்டுவிடுவார்! ஈழத் தமிழர்களின் ஆவி முக்கியமா? குடும்ப ஆட்சி முக்கியமா? இப்படித் தெளிவாகக் கேட்டால் குழப்பமில்லாமல் முடிவெடுத்துவிடுவார் கருணாநிதி! மேலும் இந்தியப் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது இந்துமாக்கடல் பகுதியில் இந்திய அரசின் மேலாண்மையை நிலைப்படுத்துவதோடு தொடர்புடையது என்று பெங்களூர் வந்தபோது வெளிப்படையாகவே சொன்னார்! இவற்றுக்கெல்லாம் பின்னால் கங்கையில் நிறைய வெள்ளம் பாய்ந்து வழிந்தோடிவிட்டது. சிங்கள ராணுவம் நுழைந்தபோது கிளிநொச்சி நகரமே அந்த மக்களால் கைவிடப்பட்டு, பேயறைந்த நகரம் போல மனித நடமாட்டேமே அற்றுப் போயிருந்தது. இதுவரை பொத்திப் பொத்திக் காத்த தங்களுடைய வீடுவாசல், சொத்து சுகம், வயல்வரப்பு, அத்தனையையும் விட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முல்லைத் தீவுக் காட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டவர்கள் ஒருவரா இருவரா? இரண்டு லட்சம் பேர். இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டு இரண்டு லட்சம் தமிழர்களைச் சிங்களக் காடையர்கள் கொல்லவும், ஈழமண் தமிழர்களின் ரத்தத்தால் செஞ்சகதியாக மாறவும் துணைபுரியும் மத்திய அரசையும், அதில் அங்கம் வகிக்கும் திமுகவையும் எந்தத் தமிழனாவது மன்னிப்பானா? நாளொரு ஆர்ப்பாட்டம், பொழுதொரு ஊர்வலம் என்று விடாமல் நடத்திக் கொண்டே இருந்தால், "பாவம் கருணாநிதி என்ன செய்வார்! தில்லியில் உள்ள பிரதமரும் அவரை வைத்து பொம்மலாட்டம் நடத்துபவரும்தான் கேட்கமாட்டேன் என்கிறார்கள்' என்று தம் மீது மக்கள் இரக்கம் கொள்ளும்படி செய்துவிட முடியும் என்று கருணாநிதி திண்ணமாக நம்புகிறார்! இதுதான் கருணாநிதியின் அரசியல் பாணி! அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்துள்ள இவ்வளவு கொடுமைகளுக்கும் மத்திய அரசு மட்டுமே காரணம் இல்லை; அந்த அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியும்தான் காரணம் என்பது கூடவா மக்களுக்குப் புரியாது? நடப்பது என்ன காங்கிரஸின் தனி ஆட்சியா? "காப்பாற்றுங்கள் தாயே' என்று சோனியாவிடம் கருணாநிதி பொதுக் கூட்டத்தில் முழந்தாளிடாத குறையாக வரம் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன? இந்தியாவை மன்மோகன் சிங் தனித்தா ஆள்கிறார்? அவர் சம அதிகாரம் பெற்ற அமைச்சரவைச் சகாக்களின் வரிசையில் முதலில் நிற்பவர். சங்கு ஊதிக் கொண்டு செல்லும் சிவப்பு விளக்குப் பரிவாரங்கள் அவரைப் புடை சூழ்ந்திருப்பதும், அவருக்காகப் போக்குவரத்து நிறுத்தப்படுவதுமான ஆரவாரங்களால் பெரிதாக்கப்படுகிறார், அவ்வளவே! எந்த முடிவையும் அவர் தனித்து எடுக்க முடியாது. நாட்டை ஆள்வது மன்மோகன் சிங் என்றோ கருணாநிதி என்றோ சொல்வது ஒரு சம்பிரதாயமே தவிர, அரசியல் நிர்ணயச் சட்டம் இவர்களுக்கு வீசம் அளவுக்கு அதிகாரத்தைக்கூட கூடுதலாகக் கொடுக்கவில்லையே! எந்த ஒரு முடிவையும் அமைச்சரவைதான் எடுக்க முடியும். அமைச்சரவைதான் நாட்டை ஆள்கிறது. அந்த முடிவுகள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. அமைச்சரவை நிலையிலேயே இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் ராணுவசூட்சும உதவிகளையும் செய்வதைக் கருணாநிதி தடுத்திருக்க முடியும். அடுப்பில் விறகை உருவிவிட்டால், கொதிப்பது அடங்கிவிடும் என்று சாதாரணப் பெண்கள் அறிந்திருப்பதை அசாதாரணமான அரசியல்வாதி கருணாநிதி அறியமாட்டாரா? அதைச் செய்யத் தவறியவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்; மன்னிக்கவும் கூடாது! விஜயகாந்த் ஈழத் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று வழிபாட்டுக்கு அழைக்கிறார்! தமிழர்களின் அழிவுக்குக் காரணம் கொழும்பு சார்ந்தது மட்டுமன்று; தில்லி சார்ந்ததும்கூட என்னும் நிலையில் பகையை நோக்கி தமிழ்நாட்டின் உணர்வுகள் ஒருமுனைப்பட வேண்டிய நேரத்தில், கடவுள், கூட்டுவழிபாடு என்று பகையின் முனையை விஜயகாந்த் மழுக்குவது யாது கருதியோ? தில்லி அரசோடு உள்ள முற்பிறவித் தொடர்பா? கூட்டுப் பிரார்த்தனை செய்தால் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுப்பதைக் கடவுள் நிறுத்திவிடுவாரா என்பதை விஜயகாந்த் தெளிவுபடுத்தவில்லையே! அதே வகையில் "காப்பாற்றுங்கள் தாயே' என்று தன்னுடைய வயதை மறந்து சோனியாவை நோக்கி தழுதழுக்கிறார் கருணாநிதி. தங்கபாலு நிலைக்கு கருணாநிதி வந்துவிட்டார். "காப்பாற்றுங்கள் தாயே' என்று தழுதழுத்தால் தன் முதிர்ந்த மகன் கருணாநிதியின் அழுகுரல் கேட்டு சோனியா தன் முடிவை மாற்றிக் கொண்டு சரணடைந்த மார்க்கண்டேயனைக் காக்க எமதர்மனைக் காலால் எட்டி உதைத்தது போல, ராஜபட்சவின் சட்டையைப் பிடித்து இழுத்து ஈழத் தமிழர்களைக் காக்கப் போரை நிறுத்தச் சொல்லிவிடுவாரா தாய் சோனியா? மண்டியிட்டதும் முட்டிக் கொண்டதும்தான் மிச்சம். இத்தகைய நாடகங்கள் ஈழத் தமிழர்கள் அழிந்து முடியும் வரையிலா? அல்லது இந்தத் தேர்தல் முடியும் வரையிலா? சிங்கள அரசில் அமைச்சர் பதவி வகிக்கும் கருணாகூட ஒரு தமிழர்தான். அவரும் தம் கட்சிக்குச் சில நியாயங்கள் பேசுகிறார். அவரும் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டுதான் அப்பாவித் தமிழ்மக்கள் அழிவதற்குச் சிங்களக் காடையர்களுக்குத் துணை போகிறார். இவரைப் பெற்றவர் புறநானூற்றுத் தாயாக இருந்தால், இவர் பாலுண்ட இரண்டு மார்பகங்களையும் அறுத்தெறிந்திருப்பார். யூத இனம் கொத்துக் கொத்தாக அரக்கன் ஹிட்லரிடம் அழிந்துபட்டது போல, ஈழத் தமிழினம் ராஜபட்சவிடம் கூட்டம் கூட்டமாக அழிகிறது. இலங்கை அரக்கர்களின் நாடு. பத்துத் தலைக்குப் பதிலாக ஒரு தலை என்பதுதான் மாறுதல்! ஐ.நா. சபை கண்ணீர் வடிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பரிவு கொள்கின்றன. அமெரிக்கா கூட பரிந்து பேசுகிறது! தில்லி அரசு மட்டும் இரங்க மறுக்கிறது. யாரோடோ உள்ள பழைய பகையை அப்பாவி மக்களிடம் தீர்த்துக் கொள்ள நினைப்பது காட்டுமிராண்டித் தனம் அல்லவா! பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதை மன்னிக்க முடியாத சீக்கியக் காவலாளி இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றார். நாடு பதைபதைத்தது. தில்லிக் காங்கிரஸ் ஆட்சி சீக்கிய இனத்தைப் பழி தீர்த்துக் கொள்ளக் களத்தில் இறங்கியது. சீக்கியர்கள் நான்காயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து டைட்லரைச் சீக்கியர்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணியே மத்திய புலனாய்வுத் துறையைக் கொண்டு, டைட்லர் குற்றமற்றவர் என்று அறிவிக்கச் செய்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மூடிவிட முயன்றார்கள்! பொறுப்பானா தன்மானச் சீக்கியன்? டைட்லர் தேர்தல் களத்திலிருந்து உடனடியாகக் காங்கிரஸôல் தூக்கிவீசப்பட்டுவிட்டார். அதைப் பற்றி மன்மோகன் சிங் கருத்துச் சொல்கிறார்: "சீக்கிய உணர்வுகளுக்குக் காங்கிரஸ் காட்டும் மரியாதை இது! திருத்திக் கொள்ளாமலே போவதைவிட காலம் கடந்தாவது திருத்திக் கொள்வது நல்லதுதானே! மன்மோகன் சிங் சொந்தமாக எடுத்த ஒரே ஒரு முடிவு சீக்கியர்களுக்கு ஆதரவாக நின்ற இந்த ஒன்றே ஒன்றுதான்! மாறாகப் போனால் தலைமை அமைச்சர் என்றாலும் பொற்கோயிலில் செருப்புத் துடைக்க வைத்துவிடுவார்கள்! சீக்கிய இனத்துக்குக் காட்டும் மரியாதையை காங்கிரஸ் ஏன் தமிழினத்துக்குக் காட்டவில்லை? காரணம், இனத்துக்கு ஒரு நெருக்கடி என்னும் நிலையில் சீக்கியத் தலைவர்கள் விலை போவதில்லை. பிரபாகரனைக் கைது செய்யப் போகும் ராஜபட்ச அவரை மரியாதையாக நடத்த வேண்டும் என்று கருணாநிதி கேட்டிருப்பது பிரபாகரனின் மீது கொண்டுள்ள அன்பைக் காட்டவில்லை. கருணாநிதி மனத்திலுள்ள அழுக்கைக் காட்டுகிறது! தமிழினத்தை அழித்தொழித்த ராஜபட்ச என்னும் பெயர் அலெக்சாந்தருக்கு நிகராகத் தெரிகிறது கருணாநிதிக்கு! பதுங்கு குழிக்குள்ளும் பாதுகாப்பு வளையத்துக்குள்ளும் அஞ்சி வாழும் ராஜபட்ச என்ன அலெக்சாந்தரா? விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைக் கொன்று ஒரு பெரிய நாட்டைப் பகைத்துக் கொண்டது தற்கொலைக்கு நிகரான ஒரு மாபெரும் ராஜதந்திர பிழை. தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிப் பார்க்காத ஒரு பேதைமைச் செயல் அது! ராஜபட்ச அரியணை ஏறும் வகையில் விடுதலைப் புலிகள் தேர்தல் நேரத்தில் கையாண்ட தவறான அரசியல் உத்தி என்று இன்னும் எத்தனை எத்தனையோ பிழைகள் ஓர் இயக்கத்தின் வரலாற்றில் நிகழ்ந்து விடுகின்றன. அதற்காகவெல்லாம் தமிழினத்தையே அழித்து ஈழத்தையே சுடுகாடு ஆக்கிவிடலாமா? பொழுது விடிந்து பொழுது போகிறவரை போர்க்களத்தில் சாவோடு மோதி வாழும் ஒருவன், கைது செய்யப்பட்ட பிறகு கருணாநிதி பரிந்துரையால் ராஜபட்ச தரப்போகும் மரியாதையை எண்ணியா வாழ்வான்? சுகபோகங்களை அடையத் தான் ஆள வேண்டும்; தனக்குப் பின் தன் மகன் ஆள வேண்டும் என்று எண்ணி வாழ்பவர் கருணாநிதி. விடுதலையை அடையத் தான் சாகவேண்டும்; தனக்குப் பின் தன் மகன் சாக வேண்டும் என்று எண்ணி வாழ்பவன் விடுதலை வீரன். வீரர்களை நிறுக்கக் கருணாநிதியின் தராசு தகுதியற்றது! புளியை நிறுக்கும் தராசு வேறு; தங்கத்தை நிறுக்கும் தராசு வேறு!


http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81!&artid=5|EQX8HcE1E=&SectionID=/qcbHa7MGUY=&MainSectionID=dL|cr5lWy8c=&SectionName=XQcp6iFoWTtatPsF70nSz9PqxwNlZpme&SEO=


"இடிந்த மனசு " வீடியோ படங்கள்

பகுதி 1:



http://www.youtube.com/watch?v=HHUqx4S5UGo



பகுதி 2:






http://www.youtube.com/watch?v=wYXw2bmZiX4


அன்புடன் வெ யுவராசன்.
www.thamizhthottam.blogspot.com

காது குத்துதல் அவசியமா?

காதுமடல்களில் ஓட்டை போட்டு அதில் நகைகளை மாட்டித் தொங்கவிடும் பழக்கம் இந்துமத ஆண், பெண்களிடம் இருக்கிறது. குழந்தைகளாக இருக்கும் போதே இதைச் செய்துவிடுகிறார்கள். காது குத்தல் என்று கூறுகிறார்கள். காது குத்தல் எனும் கெடல் குற்றங்களுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. பொய் பேசுதல், மோசடி செய்தல், ஏமாற்றுதல், போன்றவற்றைக் குறிப்பிட இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.


கடுக்கண் அணிந்தால், தொங்கட்டானைத் தொங்க விட்டால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்; ஆகவே காது குத்த வேண்டும். என்கிறார்கள்.
உடம்பின் எல்லா நரம்புகளும் காது மடலில் இணைகின்றன. மருத்துவர்கள் - உடற்கூறு படித்த மருத்துவர்கள் நேர்மை அற்றவர்கள் புதிய விளக்கம் தர முயல்கிறார்கள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGdAzRTRvOol5OA6wv_pwQ2g1j7Yz8nsO-6xplcnEnVZt5nWdbVnLor5LVxnKf2MABqlD5eXWsvGpFl3D-8e0WTpNNuzUUFcKJoVoggIIAKwthA6wbHW_ErMRm72WUI03amFCYCiVUiIk/s400/Bradlaugh+with+Periyar.JPG

இம்மாதிரிச் சொன்ன போது பெரியார் கேட்டார் - காதில் ஓட்டை போட்டால் நரம்பு மண்டலம் சரியாக இயங்கும் என்பது உன்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் ஓட்டை போட்டே உன்னை உருவாக்கியிருப்பானே அப்படிச் செய்யாததிலிருந்தே அது தேவையற்றது, மடத்தனம் என்பதை விளங்கிக் கொள்ளலாமே! என்று கேட்டார் அறிவுஆசான் தந்தை பெரியார்.

ஒன்பது துளைகள் என்று பாட்டே எழுதினார் கண்ணதாசன் காதில்ஓட்டை அவசியம் என்றால் ஒன்பதோடு ஒன்று சேர்த்துப் பத்தாகப் படைத்திருப்பானே, பகவான்! காது குத்தல் பிறருக்குச் செய்தாலும் சரி,தம் குழந்தைகளுக்குச் செய்தாலும் சரி - குற்றம்தான்,தேவை அற்றதுதான், தவிர்க்கப்படவேண்டியது தான். தவிர்ப்பார்களா.....?



http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_8641.html

ஜிமெயிலில் படங்கள செருகுவது எப்படி..?


எளிய முறையில் ஜிமெயிலில் படங்கள் சொருகுவது எப்படி..?

இப்படி தான்



1. முதலில் உங்கள் Gmail வலது மேல் நீங்கள் பச்சை கூஜாவை காணலாம்.. அது தான் கூகிள் Lab
கீமே இருக்கும் படத்தை காண்க
1.jpg

......................................................................................................

2. பிறகு Inserting Images என்றதை Enable செய்யவும்.
2-select.jpg


......................................................................................................

3. பிறகு Compose செய்யவும்.  இப்பொழுது ஜிமெயில் டூல் பாரில் புதிய படத்தை காணலாம். 3-compose.jpg


......................................................................................................

4. Add Image பட்டனை கிளிக்கினால் புதிய Frame ஓபனாகும்.
5.jpg


அதில் படத்தை அப்லோட் செய்து  Add Image பொத்தானை அழுத்தினால்..

உங்க மடலுக்கு இடையில் Imageஐ சொருக முடியும்.
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!