தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, August 1, 2009

"தமிழீழம் மலரும்"பிரபாகரன் பேசுகிறார்-நக்கீரன் தொடர்                   காணும்பொழுதெல்லாம்உணர்வாளர்கள் எழுப்பும் கேள்வி, "ஈழம் இனியும் சாத்தியமா?'தர்மத்தை சூதுவெல்லும், தர்மம் மறுபடியும் வெல்லும். ஈழம் வரும்.

கடந்தஈராயிரம்ஆண்டுகளில் மக்கள் சமூகங்களையும் நாகரீக வளர்ச்சியையும்அதிகமாகப்பாதித்தவை போர்களும் நாடு பிடித்தல்களும்தான். வரலாற்றின்மிகப்பெரியநாடுபிடித்தல், ஐரோப்பிய வெள்ளையர்கள் இன்று லத்தீன் அமெரிக்காஎனப்படும்தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தம் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தநிகழ்வு. பூர்வகுடி திராவிடர்களுக்கும் ஐரோப்பிய வெள்ளையர்களுக்குமிடையானமுதல் சந்திப்பும் மோதலும் 1532-ம் ஆண்டு நவம்பர் 16-ம் நாள்இன்றைய பெருநாட்டிலுள்ள காசமார்கா என்ற இடத்தில் நடந்தது.

தென்அமெரிக்காவில்திராவிடர்கள் வாழ்ந் தார்களா என நீங்கள் கேட்பது புரிகிறது.வெள்ளையர்வருமுன் அங்கு வாழ்ந்தவர்களும் ஆண்டவர் களும் நம்மைப் போன்றநிறமும்சாயலும் கொண்ட வர்கள். மேற்கத்திய மானுடவியலார்கள் பொதுவாகஅவர்களை"பூர்வகுடி இந்தியர்கள்' என அடை மொழியிட்டுக் குறித்தார்கள்.ஆனால்உண்மையில் அவர்கள் திராவிட இன குடும்பத்தின் குணாம்சங்கள்கொண்டவர்கள்.

2001-ம்ஆண்டுமெக்சிகோ, கியூபா, உருகுவே, பெரு, பரகுவாய், நிகராகுவா,பிரேசில்நாடுகளுக்கு பயணப்படும் வாய்ப்பு கிடைத்தது. பிரேசிலில் மட்டுமேஅமேசான்காடுகள், சவோபவுலோ கடல் என நான்கு மாதம் சுற்றித்திரிந்த அனுபவம்மறக்கமுடியாதது. எல்லா இடங்களிலுமே நான் வாய் திறந்து பேசும்வரை என்னைபிரேசில்நாட்டவன் என்றே எல்லோரும் நினைத்தார்கள். நம்மைப் போன்றநிறமும்உடலாம்சங்களுமுடையோர் அந்நாட்டில் மட்டுமே சுமார் 30சதம்இருக்கிறார்களாம். கால்பந்து கதாநாயகர்கள் ரொனால்டோ, ரொனால்டிக்ஞோ,பெலேஆகியோரின் முகங்களைப் பார்த்தாலே நமக்கு இது புரியும். பெலேஅவர்கள்விளையாடி வளர்ந்த அரங்கில் அரைமணி நேரம் கால் பந்தாடிய அனுபவம்வாழ்வில்மறக்க முடியாதது.

பிரேசில்நாட்டின்தென்பகுதியிலுள்ள புவாஸ்திகாசு என்ற அருவி அற்புதமானது.புவாஸ்திகாசுஎன்றால் தமிழில் ""கற்களும் கவிதை பாடும் இடம்'' என்றுஅர்த்தமாம்.நாமெல்லாம் சிலாகிக்கும் நயாகராவை விட நான்கு மடங்கேனும்பெரிய அருவி. நீளவிரிவு மட்டுமே சுமார் மூன்றரை கி.மீ. இருக்கும்.குற்றால நீர்வீழ்ச்சிமூன்றரை கி.மீ. நீளத்திற்கு விழுந்துகொண்டேயிருந்தால் எப்படியிருக்குமெனகற்பனை செய்து பாருங்கள்?! ஆனால்எதையும் நன்றாக விற்கத் தெரிந்தவெள்ளையர்கள், நயாகராவை உலகின்பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சியாய்நிலைநிறுத்தி விட்டார்கள்.

இயற்கையோடிணைந்துஅறமும்இறையுமாய் இசைபட வாழ்ந்த பூர்வகுடி மக்களை ஈவிரக்கமின்றிகொன்றுஅழித்துவிட்டு ""கிறிஸ்டபர் கொலம் பஸ் அமெரிக்காவைகண்டுபிடித்தார்''என்று கதை எழுதிய பயங்கரவாதத்தின் மொத்த விலைவர்த்தகர்கள்தானே இந்தவெள்ளையர்கள். நம்மில் பலர் இன்றுவரை கொலம்பஸ்சென்று "கண்டுபிடிப்பதற்கு'முன் அமெரிக்கா வில் மனித சமூகங்கள் வாழவில்லைஎன்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஐரோப்பிய வெள்ளையர்கள்ஆக்கிரமிப்பதற்கு முன்அமெரிக்காவை ஆண்டவர்கள் "பூர்வகுடி இந்தியர்கள்',"செவ்விந்தியர்கள்' எனஅறியப்படும் திராவிட இனத் தொடர்புடைய மக்கள் என்பதுஎத்தனைபேருக்குத்தெரியும்? அறிவு மோசடியில் முதலிடம் பெறுவதுமதவாதிகளென்றால் அடுத்தஇடத்தில் நிற்பது வரலாற்று ஆசிரியர்கள்,எழுத்தாளர்கள்.

இந்தியாவில்இடைநிலை,உயர்நிலை பள்ளிக் கல்விக்கான பாடங்கள் எழுதுவோர்கூட இந்தமோசடிக்குவிதிவிலக்கல்ல. முதற்பாடம் ""ஆரியர் வருகை'' என்ற தலைப்பிலும்அடுத்த பாடம்""முகலாயர் படையெடுப்பு'' என்றும் இருக்கும். ஆரியர்,முகலாயர் இருவருமேகைபர் போலன் கணவாய் வழி நம் நிலம் வந்து ஆக்கிரமித்துவாழ்ந்தவர்கள். ஆனால்வரலாறு எழுதுகையில் ஆரியர்கள் ""வந்தவர்கள்''என்றும் முகலாயர்கள்""படையெடுத்தவர்கள்'' என்றும் படம் விரியும். நுட்பம்புரிகிறதா,உங்களுக்கு? ஆரியர்கள் சாதுக்கள், முகலாயர் சண்டியர்கள் என்றகற்பிதம்எப்படி ஆரம்பக் கல்வியிலேயே விதைக்கப்படுகிறது.

1532-ம்ஆண்டுநவம்பர் 16-ம் நாள் பெருநாட்டு காசமார்காவில் பூர்வகுடி ""இன்கா''இனபேரரசன் அத்தகுவல்ப்பாவின் படைகளும் தூய உரோமாபுரிப் பேரரசரும்,ஸ்பெயின்நாட்டு மன்னனுமான ஐந்தாம் சார்லஸின் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோதலைமையிலானபடைகளும் சந்திக்கின்றன. அத்தகுவல்ப்பாவின் படையணிகளில் 80,000வீரர்கள்,அவர்களோடு பின்னணிப் படையினர், தங்கு தடையற்ற விநியோகஏற்பாடுகள் மற்றும்வலுவான கோட்டை கொத்தளங்கள். எதிர்பக்கம் பிசாரோவின்படையோ மொத்தம் 168பேர். சொந்த நாட்டிலிருந்து 1000 மைல் கடல் கடந்துபின்புல உதவிகள் எதுவுமேசாத்தியமில்லாத போர்க்களத்தில் நின்றவர்கள்.ஆனால் சரித்திரத்தின்மிகத்தீர்க்கமான திருப்புமுனைகளில் ஒன்றான 1532,நவம்பர் 16-ம் நாளின்பதிவு என்னவென்றால் பிசாரோவின் 168 பேர் படை,அத்தகுவல்ப்பாவின் 80,000பேர்கொண்ட பெரும் படையணியை தோற்கடித்துவெற்றிவாகை சூடியதென்பதாகும்.

"இன்கா'இனபெரும்படையின் தோல் விக்கும் ஸ்பெயின் நாட்டு சிறு குழுவின்வெற்றிக்குமானகாரணங்களை ஆய்வதென்றால் அதற்கு மட்டுமே இருபது "மறக்கமுடியுமா' இதழ்கள்தேவைப்படும். மிக முக்கியமான கார ணங்கள் நான்கு.ஸ்பானியர் களிடம் இரும்புஆயுதங்கள் இருந்தன. இன்கர்களோ மரம், கல் சார்ஆயுதங்களையே கொண்டிருந்தனர்.இரண்டு, ஸ்பானியர்களிடம் குதிரைகள் இருந்தன;ஆதலால் வேகம் சாத்தியப்பட்டது.இன்கர்களோ யானைகள் வைத்திருந்தனர்;குதிரைகள் இல்லை. மூன்று முக்கியமானது.ஸ்பானியர்கள் யுத்தகளத்திற்கானதிறன்மிகு "தகவல் பரிமாற்ற முறையை(ஈஞஙஙமசஒஈஆபஒஞச நவநபஊங) கொண்டிருந்தனர்.-இன்கர்களிடம் அது இருக்க வில்லை.இறுதியாக இன்கர்படை அத்தகுவல்ப் பாவைகடவு ளாகக் கருதியது. ஸ்பானி யர்கள்முத லில் வீழ்த்தியது கடவுளை. கடவுளேவீழ்ந்துவிட்டா ரென்றால் ஏனையோர்நிற்க முடியுமோ? சிதறுண்டார்கள்.

சுருக்கமானசெய்திஇதுதான். புதுமை-நவீனத்துவங்களோடு ஈடுகொடுத்து, ஜனநாயகநம்பிக்கைகளுடன்,திறமான தகவல்-செய்தி உத்திகளோடு வேகமும் காட்டிஇயங்கினால் 80,000 பேர்கொண்ட படையை அவர்கள் நிலத்திலேயே 168 பேரால்வீழ்த்த முடியும், முடிந்தது.16-ம் நூற்றாண்டில் பெருநாட்டுகாசமார்கா-வில் முடிந்ததென்றால் 21-ம்நூற்றாண்டில் ஏன் கரிப்பட்டமுறிப்பிலும், முல்லைத்தீவிலும் மீண்டும்நடக்கக்கூடாது? நடக்கும்.

வேலுப்பிள்ளைபிரபாகரன்அவர்களுக்கு அத்தெளிவு இருந்தது. ""எனது காலத்திலேயே ஈழம்கைகூடும் என்றநினைப்பில் நான் போராடவில்லை. எனக்குப் பின்னரும் நாற்பதுஆண்டுகள்இளைஞர்கள் போராடி இயங்குவதற்கான ஒழுங்குகளையும்ஏற்பாடுகளையும்செய்துகொண்டிருக்கிறேன்'' என்றார்.

""தமிழ்ஈழத்திற்குஆதரவான உலகப் பொதுக்கருத்து உருவாகுமென நீங்கள்நம்புகிறீர்களா?'' என்றேன்.""நான் மீண்டும் மீண்டும் ஒன்றைவலியுறுத்துகிறேன். ஒருபோதும் போருக்குபுலிகள் காரணமாய் இருந்ததில்லை.யுத்தம் எம்மீதும் எமது மக்கள் மீதும்திணிக்கப்பட்டது. நாங்களோ, எமதுமக்களோ யுத்த வெறி கொண்டவர்களல்ல. சிங்களப்பேரினவாதம்தான் யுத்தவெறிகொண்டு எம் மக்களை நசுக்க வருகிறது. இதனை உலகம்ஒருநாள்புரிந்துகொள்ளும்'' என்றார்.

""நேரில்பார்க்கவும்பேசவும் அப்படியொரு சாதுவாகத் தெரிகிறீர்கள். உலகமோ உங்களைப்பற்றிகடுமையான பார்வை கொண்டிருக்கிறது. உங்களது உண்மையான ஆளுமையைஉலகிற்குஎடுத்துக்கூறும் விளம்பர முயற்சிகளை ஆங்கில ஊடகங்கள் வழிஅதற்குரியநிறுவனங்களைப் பயன்படுத்தி செய்யக்கூடாதா?'' என்றேன்.இக்கேள்விக்குப்பிரபாகரன் அவர்கள் தந்த பதில் காலங்களையெல்லாம் கடந்துநிற்கும். இதுதான்அவரது பதில்: ""வியாபாரிகளுக்குத்தான் விளம்பரம்வேண்டும். வீரனுக்கல்ல''.இதனை எழுதுகையில் எழுதுகோலும் தாளும்கூடஎன்னோடிணைந்து சிலிர்ப்பதாய்உணர்கிறேன். என்னே தெளிவு. என்னே கூர்மை.""வியாபாரிக்குத்தான் விளம்பரம்வேண்டும், வீரனுக்கல்ல. தொடர்ந்துகூறினார் : ""எம்மைப் பற்றின தவறானபுரிந்துமைகள் நிச்சயம் ஒருநாள்மாறும். ஏனென்றால் தன் பேரினவாதவெறியிலிருந்து சிங்களம் ஒருபோதும்மாறப்போவதில்லை. சிங்களப்பேரினவாதத்தின் கொடூர முகத்தை உலகம் நிச்சயம்புரிந்துகொள்கிற காலம்வரும்'' என்றார்.

""குறைந்தஅளவுபடையணிகளைக் கொண்டு எப்படி பெரும் சிங்களப்படைகளை எதிர்கொண்டுவெற்றிபெற்றீர்கள்?'' என்றேன். ""தொடக்கத்திலிருந்தே நான்வலியுறுத்திவருகிறேன். இது ஆயுதங்களுக்கும் ஆயுதங்களுக்கும் இடையே நடக்கிறமோதல்அல்ல. தமிழரை அடக்கி அழிக்க நினைக்கிற சிங்களப் பேரினவாதத்திற்கும்அடிமைவிலங்குகளை உடைத்து விடுதலை பெறத்துடிக்கும் ஓர் இனத்தின்மனஎழுச்சிக்கும் இடையே நடக்கிற போர் இது. ஆயுதங்களுக்கிடையேயானபோரென்றால்எப்போதோ எங்கள் கதை முடிந்திருக்கும். எதிர்காலத்தில் மீண்டும்போர்தொடங்கி ஆயுதப்போராட்டத்தில் நாங்கள் பின்னடைவு கண்டாலும் கூட,தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் வரலாற்றில் அபூர்வமாகத்தொடங்கிவைத்தமன எழுச்சி அடங்காது. அந்த மன எழுச்சியை எந்தப் படைகளா லும்அடக்கவோஅழிக்கவோ முடியாது. அந்த நம்பிக்கையில் திடமாக நின்றுதான் நான்தமிழீழம்நிச்சயம் ஒருநாள் மலரும் எனவும் நம்புகிறேன்'' என்றார்.

தமிழீழம் வரும். எப்படி?

(நினைவுகள் சுழலும்)

♥ புதிய பயிற்சியில் புலிகள், அதிரும் காடுகள் ♥

புதிய பயிற்சியில் புலிகள், அதிரும் காடுகள்

""பயத்தை மறைக்க நினைப்பவன் நடுராத்திரியில் காட்டுவழியில் பாட்டு பாடிக்கொண்டே செல்வதுபோலத்தான் இருக்கிறது ராஜபக்சே அரசின் நடவடிக்கைகள்'' என்கிறார் அந்த ஈழத்தமிழர். கொழும்பில் வாழ்ந்து ஈழத்தில் உள்ள அரசாங்க வதை முகாம்களுக்குச் சென்று, அங்கு தமிழர்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் வெளியேறி, வன்னிக்காடுகள் வரை சென்று திரும்பியுள்ள அவர், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பயோ-டேட்டாவைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் விரிவாகப் பேசினார்.""தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த அளவுகூட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றித் தெரியாது. அந்தளவுக்கு முடக்கப்பட்டிருக்கிறார்கள். நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும். கொழும்பிலிருந்து புறப்பட்டால் செட்டிகுளம் தொடங்கி, வவுனியா வரைக்கும் முகாம்கள்தான்.

இதில் செட்டிகுளம் கதிர்காமர் முகாம் மட்டும்தான் சுத்தமாகவும் வசதியாகவும் இருக்கு. அதைத்தான் ஐ.நா. அதிகாரிகளுக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் காட்டி ஏமாத்திக்கிட்டிருக்காங்க.

எப்படியாவது சொந்த இடத்துக்குப் போகணும்ங்கிறது தான் முகாம்களில் இருக்கிற மக்களோட விருப்பம். சாப்பாடு, தண்ணீர், துணிமணி எதுவும் கிடைக்கிறதில்லை. நீர்கொழும்பு பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதி யிலிருந்து வந்த தமிழக மீனவர்கள் அதிகம். அவங்க நடத்தி வந்த 50 தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மூடியாச்சு. குடப்பாடுல உள்ள விஜயரத்னா பள்ளிக்கூடத்துல சிங்களம் படிக்க ஆரம்பிச் சிட்டாங்க. தமிழர்கள் பேசிக்கொள்ளும்போதும் சிங்களத்தில தான் பேச வேண்டிய நிலைமை. ராணுவத்துக்கிட்டேயிருந்து தப்பிக்கணுமே...

ஆமிக்காரங்களோ விசாரணைங்கிற பேரில் இளசுகளைப் பிடிச்சிட்டுப் போறாங்க. உறவினர்களைப் பார்க்க ணும்னு நான் முகாம்களுக்குப் போனப்பவும் இதே நிலைமைதான். இரண்டு நாள் கழிச்சி அந்த இளை ஞர்கள் காட்டுப்பகுதியில் கை, கால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாங்க. அதே நேரத்தில், வவுனியா காட்டுப் பகுதிக்குப் போயிட்டுத் திரும்பும் ஆமி வாகனத்தில் 10, 15 ஆமிக்காரன் பொணமா வருவதையும் பார்த்தேன். எல்லாம் பொடியன்களின் (புலிகள்) அட்டாக்தான்.

யூலை 13-ந் தேதி, காட்டுப் பகுதியில் பொடியன்கள் இருக்காங் களான்னு கண்காணிக்கும் ஆமிக் காரங்களுக்கு 3 லோரியில் உணவுப் பொருள் போனது. இதை தெரிஞ் சுக்கிட்ட புலிகள் 10 பேர் ஜெய புரம்-முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள காட்டுப்பகுதியில் லோரி களை வழிமறிச்சு, அதிலிருந்த ஆமிக்காரங்களை கொன்னுபோட்டு , உணவுப் பொருளோடு அந்த லாரிகளை காட்டுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. இந்தக் கோபத் திலேதான் முகாமில் இருந்த 40 இளைஞர்களை இழுத்துக்கிட்டுப் போயி, காட்டிலே வெட்டிப் போட் டான்கள் ஆமிக்காரன்கள்.

காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறி வச்சுத் தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும். புலிகளின் தாக்குதல் தீவிரமானால் அப்பாவித் தமிழர்களை ராஜபக்சே அரசாங்கம் சித்திரவதை செய்யும். அதனால கொழும்பு, நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமா இடம்பெயர ஆரம்பிச்சிட்டாங்க. இதுவும் இயக்கத்தோட மறைமுக உத்தரவுதான்.

புலிகள் ஒரு பாரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போறாங்கன்னு ராஜபக்சே அரசாங்கத் துக்கும் தெரிந்திருக்கு. அதனாலதான் ஆமிக்கு ஆள் சேர்க்கிறார். ராணுவப் பயிற்சிக்கு இந்தியா வின் உதவியைக் கேட்டிருக்கிறார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதுங்கிற பேரில் இந்திய ராணுவத்தை அழைத்து, காட்டில் புதிய வியூகத்தோடு செயல்படும் புலிகளை அழிப்பதுதான் ராஜபக்சேவின் திட்டம். அதோடு, சொந்த மண்ணுக்கு எப்போது போவோம்ங்கிற ஏக்கத்தோடு முகாமில் இருக்கும் தமிழர்களை கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தவும் திட்டம் போடப்பட்டிருக்கு.

சொந்த மண்ணில் குடியிருக்கலாம்ங்கிற ஆசையோடு வரும் தமிழர்களை கண்ணிவெடிகளில் சிக்க வைத்து கொன்று குவிக்கும் கொடூ ரத் திட்டமும் போடப் பட்டிருக்கு.

முகாம்களில் மூன்றரை லட்சம் தமிழர்கள் இருக்கும் போது, 40 ஆயிரம் பேர்தான் இருக்காங்கன்னு ராஜபக்சே சொல்லி இருக்கிறார். மற்றவங்களை கண்ணி வெடியில் கொன்னுடலாம்ங்கிற கணக் கோடுதான் அவர் இப்படி சொல்கிறார். இதெல்லாம் உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கு. ராஜபக்சேவின் கொடூரத் திட்டங்களை பிரபாகரன் நொறுக்கிவிடுவார்னும் தெரியும். அதனாலதான் தன் நாட்டு மக்கள் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம்னு அமெரிக்கா எச்சரித்திருக்கு.

கண்ணி வெடி மூலமாகவும் முகாம்களில் உள்ள இளைஞர்களை கடத்திச் சென்றும் தமிழினத்தை அழிக்கும் அடுத்த திட்டத்தை ராஜபக்சே அர சாங்கம் தயார் பண்ணியிருக்கு. சிங்களன் இனி என்ன திட்டம் போட்டாலும் புலிகள் தரப் போகும் அடியைத் தாங்குவது கஷ்டம்தான். உலகத்தாரே... பார்க்கத்தான் போறீர்கள்'' என்றார் அந்த தமிழர்.

-கொழும்பிலிருந்து எழில்

நன்றி நக்கீரன்


நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!