தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, November 22, 2009

♥ முள் கம்பியில் விடுதலைப் பூக்கள்...! ♥

[pic13.jpg]
http://thatstamil.oneindia.in/img/2009/10/24-jayamravi-jananathan-200.jpg

மனிதர்கள் மீதும் மட்டும் இல்லை, எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்துபவராக "இயக்குனர் சனநாதன்" இருக்கிறார்.அது என்னை மிகவும் பாதித்தது.!
பேராண்மையில் மிமிக்ரி பேசி நடித்து கலக்கியிருக்கும் "லியாஸ்ரீ",

[liyasree.jpg]

http://www.dinamani.com/Images/article/2009/10/11/11kon11.jpg


கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?"வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்த பார்ப்பனக் குள்ளநரிக் கூட்டம்..."

ஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை

காஞ்சிபுரம் மூக்கைத் துளைக்கிறது; கசுமாலம் இப்படியும் ஒரு பக்தியா? ஜென்மங்களா? என்று நாக்கைப் பிடுங்க நாலு கேள்விகளைப் பெண்கள் நடு வீதியில் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

மச்சேஸ்வரர் கோயிலாம் - அந்தக் கோயில் அர்ச்சகன் தேவநாதனாம் - கோயில் கருவறையிலே கரு உற்பத்தி பண்ணிக்கொண்டு கிடக்கிறானாம்.

பகவான் கர்ப்பக் கிரகத்தில் சரசமாடினால் முதுமை வந்து முட்டாதாம்- என்றும் இளமையில் சுகிக்கலாமாம்! அர்ச்சகன் தேவநாதனின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி பாவையர் பலர் அவன் மடியில் வீழ்ந்தனராம்.

ஒரு பக்கம் அர்ச்சனைத் தட்டில் காசு விழுமாம். இன்னொரு பக்கம் கர்ப்பக்கிரகத்தில் காமச் சேட்டை பூஜைகள் நடக்குமாம்.

எவ்வளவு கொழுப்பும், வக்கிரமும் இருந்தால் இந்தக் கேவலத்தை கை தொலைபேசி மூலம் படம் பிடித்து வைத்து, பிறகு தனியே போட்டுப் பார்த்து ரசிப்பானாம்.

ஒரு பெண், இரு பெண் அல்ல; 15 பெண்கள் வரை பட்டியல் நீள்கிறது. விஷயம் வெளியுலகுக்கு வரவே, ஆசாமிதன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான்! இப்பொழுது நீதிமன்றத்தில் சரண் அடைந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

காமகோடி பீடாதிபதியே இந்தத் தரத்தில் உள்ளவர் என்கிறபோது இந்தத் தேவநாதன்தான் எம்மாத்திரம்!

காஞ்சி சங்கரமடத்தில் நடக்காதவைகளா இந்தக் கோயிலில் நடந்து விட்டது?

காமத்தையறுத்த மடாதிபதியே காமக் குளத்தில் விழுந்து நீச்சல் அடிக்கிறார் என்றால், அவாள் சிஷ்யாள் அவாள் வயதுக்கு எவ்வளவு ஆட்டம் போடுவா?

ஒவ்வொரு நாளும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு சல்லாப மொழிகளில் உல்லாசப் பேச்சுகளைப் கைப்பேசியில் பேசுவார் என்ற தகவல் எல்லாம் ஊர் சிரிக்கவில்லையா? அனுராதா ரமணன் என்ற பிரபல பார்ப்பனப் பெண் எழுத்தாளர், சங்கராச்சாரி வேங்கையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சிகளில் குமுறினாரே கொட்டியழுது வேதனையின் சூட்டைத் தணித்துக் கொள்ளவில்லையா? மைதிலி என்ற பெண்ணுடன் தன் எதிரிலேயே அந்த மடாதிபதி உறவு வைத்தார் என்று ஊருக்கும் உலகுக்கும் அறிவித்தாரே அதைப் பார்க்கும்போது இந்த தேவநாதன் விஷயம் அற்பமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

வடக்கே குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சவுமியநாராயண் கோயிலில் என்ன நடந்தது?

அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான சந்த், தேவ்வல்லப் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே கூத்தும் குடியுமாகக் கும்மாளம் போட்ட காட்சிகள் எல்லாம் வீடியோ கோப்புகளாக வெளியில் வந்த,, காரித் துப்பினார்களே!

சபரி மலைக் கோயிலின் மூத்த தந்திரியான மோகனரு விபச்சாரிகளின் வீட்டில் கையும் களவுமாகப் பிடிபட வில்லையா?

இவையெல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் சர்வ சாதாரணமாயிற்றே!

ஓம் என்பதற்கு அவர்கள் கூறும் தத்துவம் என்ன? ஆண் - பெண் சேர்க்கையின் வடிவம் என்றுதானே விளக்கம் சொல்லுகிறார்கள்?

பெண்கள் நெற்றியில் திலகமிட்டால், அது வீட்டு விலக்கான பெண்ணின் குருதியின் அடையாளம் என்று தானே கூசாமல் சொல்லுகிறார்கள். நாமம் தரிக்கிறீர்களே, அது என்ன என்று கேட்டால் அதற்கும் ஒரு தத்துவத்தைத் தயாராகவே வைத்துள்ளனரே!

வெள்ளைக் கோடுகள் இரண்டும், விஷ்ணுவின் தொடைகள் என்றும், நடுவில் உள்ள சிவப்புக் கோடு விஷ்ணுவின் ஆண் குறி என்றும்... அடேயப்பா, எவ்வளவு அட்சரப்பிசகு இல்லாமல் சொல்லுகிறார்கள்.

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் மும்மூர்த்திகளும் சரி, அவர்களின் சீடகோடிகளும் சரி, தேவாதி தேவர்களும் சரி கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?

காஞ்சிபுரம் தேவநாதன் இப்படியென்றால் அந்தத் தேவநாதனாகிய இந்திரன் கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழிக்கவில்லையா! சரசுவதியையே பெண்டாண்டவன் தானே படைத்தல் கடவுளான பிரம்மா.

தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழுமுதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவதாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த மாபாதகம் தீர்த்த புராணங்கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

கோயில்களைப் பாருங்கள் அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.

அதற்காக வெட்கப்படுவதில்லை; இன்னும் சொல்லப் போனால் அந்தராத்மாவும் பரமாத்வாவும் ஆலிங்கனம் செய்கின்றன என்று அதற்குத் தத்துவ வார்த்தைகள் எல்லாம் தடபுடலாகவே உண்டு.

சாஸ்திர ரீதியாகவே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளனர்.

வேஸ்யாதர்சனம் புண்யம்

ஸ்பர்சிவனம் பாபநாஸம்

சம்பனம் சர்வ தீர்த்தானாம்

மைதுனம் மோக்ஷ சாதனம்

பொருளும் வேண்டுமா?

வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்தக் குள்ளநரிக் கூட்டம்.

இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதையை அவாளின் செல்லப் பிள்ளையான கம்பனே கூறி வைத்திருக்கிறான்.

இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன; மரங்கள் கருகின. ஆனால் பார்ப்பனர்கள் ராமனிடம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர். ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன, உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்பனர்கள் வேசியர்களின் புடவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.

வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை யந்தணர் பறித்துச் சுற்ற வாசம், மென் கலவைச் சாந்து என்று இனையன மயக்கந்தன்னால் பூசினர்க்கு இரட்டி ஆனார்

பூசலார் புகுந்துளோரும்

காளமேகப் புலவர் என்ற குடந்தை பார்ப்பான், தான் மோகம் கொண்ட தாசிப் பெண்ணுக்காக தான் வரித்துக் கொண்ட வைணவத்திலிருந்து விலகி சிவத்துக்கு தாண்டினான் என்பதெல்லாம் காமக் குரோதங்களுக்குமுன் கடவுளாவது கத்தரிக்காயாவது வேதங்களாவது வெண்டைக்காயாவது மதங்களாவது மண்ணாங் கட்டிகளாவது சர்வம் சரணம் காம சுகப்பவது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும்; காஞ்சிக் கோயில் தேவநாதன் அர்ச்சகப் பார்ப்பானின் சமாச்சாரம்பற்றி திருவாளர் துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?

பக்தி போதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமும், இடமும் இது!

இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும் என்று விவேகானந்தரிடம் கூறினாராம் மாக்ஸ்முல்லர், எந்த அர்த்தத்தில் கூறினாரோ தெரியவில்லை இதயத்துக்கும், மூளைக்கும் பாயும் ரத்தம் கெட்டுப் போய்விடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.


---------------- மின்சாரம் அவர்கள் 21-11-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

http://thamizhoviya.blogspot.com/2009/11/blog-post_9104.html

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f9/Mukteswar_temple.jpg/200px-Mukteswar_temple.jpg

http://places.mongabay.com/india/kama_sutra_carvings.jpg


http://atlanta.artactivism.com/wp-content/uploads/kama_sutra-246x185.jpg

மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை

http://raagamtamil.net/images/swiss_maaveerar.jpghttp://4.bp.blogspot.com/_PRWPmcFXhZY/SShbK6Aer2I/AAAAAAAAA8o/PQ0WtnXVxvM/s320/Maveerar%2520006.jpg

எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, எப்படி? என்னும் விவரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சமீபத்தில் (நவம்பர் 17) வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இது.

`அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கும்… கடந்த 18.5.2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவைத் தொடர்ந்து, நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் கட்டியமைத்து வருகிறோம்.

இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணைக் குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது போன்ற பிரசாரப் போரை கடந்த 30 ஆண்டு போராட்ட வரலாற்றில் இலங்கை அரசு பல தடவை நிகழ்த்தியுள்ளது. இதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, இவ்வாறான போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதே வேளையில், எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்க உரை, வழக்கம் போல எதிர்வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’

புலிகள் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், சர்வதேச ஊடகங்கள், இலங்கை முள்கம்பிகளில் சிக்கியிருக்கும் அகதிகள், இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் என்று அனைவரது எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டிருக்கிறது இந்த அறிக்கை. என்ன ஆகப்போகிறது நவம்பர் 27 அன்று? யார் வந்து உரை நிகழ்த்தப்போகிறார்கள்? பிரபாகரனா? அவர் உயிருடன் இருக்கிறாரா? ஆம் எனில், தோன்றுவாரா? அடுத்தகட்ட திட்டத்தை அறிவிப்பாரா? நம்பிக்கை அளிப்பாரா? அனைத்து சந்தேகங்களும், குழப்பங்களும், அச்சங்களும் நவம்பர் 27 அன்று விலகும் என்று துடிதுடிப்புடன் காத்துக்-கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

நவம்பர் 27 அன்று ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் அன்று, பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு, கடுமையான போர்ச்சூழல் நிலவியபோதும், பிரபாகரன் உரை நிகழ்த்தினார். இந்த முறை அதைவிடக் கடுமையான சூழல். வருவாரா வரமாட்டாரா? என்பது மட்டுமல்ல கேள்வி. இருக்கிறாரா, இல்லையா? என்பதும் பலருடைய கேள்வி.

அந்த சந்தேகத்துக்கே இடமில்லை, பிரபாகரன் பாதுகாப்பான ஒரு மறைவிடத்தில் பத்திரமாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள் புலிகளோடு தொடர்பு கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அபிமானிகளும்கூட. சற்று முன்னால்வரைகூட, பிரபாகரன் நிச்சயம் மாவீரர் தின உரையாற்றுவார் என்றுதான் இவர்கள் சொல்லி வந்தனர். இணையதளங்களில் இது பற்றிய பல அறிவிப்புகளும் வலம் வந்தன. பிரபாகரனுக்கு அவசரப்பட்டு வீரவணக்கம் செலுத்தவேண்டாம், கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், மாவீரர் தினம் நெருங்கி வரும் சூழலில், ஒரே வரியில் தங்கள் வாதத்தை முடித்துக்கொள்கிறார்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஆனால், மாவீரர் தின உரை நிகழ்த்தமாட்டார். அது அவருடைய பாதுகாப்புக்கு உகந்ததல்ல. எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்னும் கேள்விகளுக்குப் பதிலில்லை.

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு இவர்களிடம் வலுவான ஆதாரங்கள் என்று எதுவும் இல்லை. அல்லது, அளிக்கத் தயங்குகிறார்கள். அல்லது, மறுக்கிறார்கள். ஆனால், மாவீரர் உரையாற்ற மாட்டார் என்பதில் மட்டும் சர்வநிச்சயமாக இருக்கிறார்கள். புலிகள் தரப்பில் இவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இரண்டாவது தரப்பினர், பிரபாகரனுக்குப் பதிலாக பொட்டு அம்மானை முன்னிறுத்துகிறார்கள். இலங்கை அரசு பொட்டு அம்மான் மரணத்தை இன்று வரை அதிகாரபூர்வமாக, ஆதாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது இந்த வாதத்துக்கு வலு சேர்க்கிறது. `நிச்சயம் இறந்துவிட்டார், ஆனால் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்கிறார் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே. பிரபாகரனின் உடலையே நம்பாத புலி ஆதரவாளர்களால் இந்த வாதத்தை குறைந்தபட்சம் பரிசீலிக்கக்கூட முடியவில்லை. இந்நிலையில், பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெள்ளை ஆடை தரித்து அருகருகே அமர்ந்திருக்கும் படம் வெளிவந்து, பரவலாக ஊடகங்களில் பரப்பப்பட்டது கூடுதல் உத்வேகத்தை அளித்தது. எனவே, அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பொட்டு அம்மான் நவம்பர் 27 அன்று மாவீரர் தின உரை நிகழ்த்துவார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் உரை நிகழ்த்த மாட்டார்கள். ஆனால், உரை மட்டும் புலிகள் லெட்டர்பேடில் வந்து சேரும் என்கிறார்கள் மூன்றாவது தரப்பினர். அந்த உரையில், இருவரும் உயிருடன் இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அந்த உரை விளக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்கள், இந்த மூன்றாவது கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். மாவீரர் தின உரை நிகழ்த்தப்படும். புலிகளின் அடுத்தகட்ட திட்டம் வெளியிடப்படும். யார் மூலமாக என்பது முக்கியமல்ல.

கே.பி.யால் இப்போதைக்குத் தொடர்புகொள்ள முடியாது. உலகெங்குமுள்ள இலங்கைத் தமிழர்கள் நவம்பர் 27ஐ ஆர்வத்துடன் எதிர்நோக்குவார்கள். அவர்களை ஏமாற்றமுடியாது. இனி புலிகளால் காந்திய வழியில் மட்டும்தான் போராட முடியும், புலிகளால் மட்டுமல்ல, ஆயுதம் தாங்கிய எந்தவொரு அமைப்பாலும் இனி இலங்கையில் செயல்படமுடியாது என்று சர்வதேச ஊடகங்கள் எழுதியும் பேசியும் வருகின்றன. பிரபாகரன் உயிருடன் இருந்தாலும், இன்னொரு ஆயுத எழுச்சி இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இந்தப் போர், விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திய சேதம் மிகக் கடுமையானது. இயக்கத்தின் எதிர்காலம் குறித்தும் தமிழர்களின் எதிர்காலம் குறித்தும் அவநம்பிக்கை அகலமாகவும் அழுத்தமாகவும் பரவிக்-கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் மாவீரர் தினம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்னொரு காரணமும் இருக்கிறது. இலங்கையில் இப்போது கடுமையான அதிகாரப்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. புலிகள் அழித்தொழிப்புப் போர் மூலம் கிடைத்த வெற்றி யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. இலங்கை அதிகார அமைப்பு பிளவுபட்டுக் கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தை புலிகள் தவறவிடக்கூடாது. தவறவிடவும் மாட்டார்கள்.

அதே சமயம், சில தீர்மானமான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திலும் புலிகள் இருக்கிறார்கள். சுயவிமர்சனங்களும் மறுபரிசீலனைகளும் தேவைப்படும் சமயம் இது. நடந்து முடிந்த அத்தியாயங்களைப் புரட்டிப் பார்ப்பதற்கும், தவறுகளைக் கண்டுகொள்வதற்கும், புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும், புதிய யுக்திகளை வடிவமைப்பதற்கும் நிச்சயம் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். இலங்கை குறித்து மட்டுமல்ல, இந்தியா குறித்தும் சர்வதேச நடுநிலைமையாளர்கள் குறித்தும் நடந்து முடிந்த போரில் அவர்களது பங்களிப்பு எத்தகையது என்பது குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம். ஒருவேளை, பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் உயிருடன் இருந்தாலும், மாவீரர் தினம் அன்று இருவரும் நிச்சயமாகத் தோன்றமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்!

- மருதன்

குமுதம் ரிப்போர்ட்டர்

http://www.meenagam.org/?p=16921


http://mediatamil.free.fr/tt11/1.bmp


இதுபோலவே தமிழீழத்தின் வருங்கால 1000 ரூபா கட்சியளிக்கலாம்

தமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என தமிழர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார்.

இது ஒரு கற்பனையாக இருந்தாலும் அவர் உணர்ச்சிகளிற்கு மரியாதை கொடுக்கின்றோம். மகிந்தவின் உருவப்படத்துடன் வெளியான 1000 ரூபா தாளை எமது மக்கள் எவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வரவிருக்கும் தமிழீழத்தின் 1000 ரூபா தாளை முன்னமே அறிவிக்கிறோம் என்ற தலைப்பில் தமிழர் ஒருவர் இப்படத்தை அனுப்பிவைத்துள்ளார்.


http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/tamileelam_rs1000_fake_front.jpg


http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/tamileelam_rs1000_fake_back.jpg

http://www.meenagam.org/?p=16944

கருணாநிதியின் அறிக்கையை கண்டித்து தமிழகத்தில் சுவர் ஓட்டிகள்


விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் மு.கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு பலத்த கண்டனம் தமிழ் நாட்டில் எழுந்துள்ளது.

தமிழ் நாட்டில் கோவை, மதுரை போன்ற இடங்களில் இவர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புலிகள் எடுத்த முடிவே அவர்கள் அழிவுக்கு காரணம் எனத் தெரிவித்திருந்த கருணாநிதி, ஈழ விடுதலைப் போராட்டம் சரிவர கொண்டுசெல்லப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

http://www.meenagam.org/?p=16780


http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/post-11.JPG


தமிழனுக்கு அகதி என்று பேர்!

http://1.bp.blogspot.com/_FWJ3Jpu_1Ts/SpUSVChBgtI/AAAAAAAAAH8/VT9CvWU_L24/s320/refugee_day_-1.jpg


வீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை…

”முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு இருந்த மூன்று லட்சம் வரையிலான மக்களில் சரிபாதியினரை அரசு வெளியேற்றி இருக்கிறது. மீதமிருக்கும் முகாம் மக்களையும் இலங்கை அரசு வெளியேவிட்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால், இலங்கைத் தீவானது பொருளாதார நிலைமைகளில் முற்றுமுதலாகச் சீர்குலைந்து கிடக்கிறது. சிங்கள மலைப் பாம்பு ஒரு பெரும் இரையை விழுங்கிவிட்டது. அதனால் எங்களைச் செரிக்க முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் துப்பித்தான் ஆக வேண்டும். ஆனால், தமிழர்களுக்கான பிரச்னைகள் வேறு.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக் குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடமாகராணுவம் கைப்பற்றிக்கொண்டே வந்தபோது, நாங்கள் எங்க ளின் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இடம்பெயர்ந்தோம். வீட்டுக் கூரை, கதவு, ஜன்னல், நிலைப்படி, சாமான்கள் என சகலத்தையும் எடுத்துப் போனோம். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பது வெறுமனே கூரை மட்டும்தான். பொருளாதாரத் தடை மற்றும் கால் நூற்றாண்டு கால போர்ச்சூழலால் அவ்வகையான வீடுகளே எங்களுக்கு வாய்த்திருந்தது. இறுதியில் உயிரன்றி வேறெந்த உடைமைகளும் அற்றவர்களாக முகாம்களில் அடைக்கப்பட்டோம். இப் போது திடீரென பூர்வீகப் பிரதேசங்களில்கொண்டு போய்விட்டால், என்ன செய்வது?

தண்ணீர் குடிக்கும் குவளை முதல், சோறு காய்ச்சும் அடுப்பு வரை சகலமும் புத்தம் புதிதாக ஏற்படுத்த வேண்டும். ஓர் ஏனம்கூடக் கிடையாது. வீட்டைச் சரிசெய்ய வேண்டும் என்றால், அதற்குரிய உபகரணங்கள் வேண்டும். அந்த வேலைகளைச் செய்யும் தொழிலாளிகள் வேண்டும். உளி, சுத்தியல், ஆணிகூடக் கிடையாது. அவற்றை விற்கும் வியாபாரிகள் இல்லை. இந்த யதார்த்தத்தில் இருந்துதான் இதை அணுக வேண்டும்.

நாங்கள் விட்டுபோன வீடுகளில் சரிபாதிக்கு மேல் குண்டுவீச்சில் சிதிலம் அடைந்துவிட்டன. அந்தப் பகுதியே உடைந்து நொறுங்கிச் சுடுகாடாகக் கிடக்கிறது. மிச்சமிருக்கும் சில வீடுகள்கூட கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மழை, வெயில் அனைத்திலும் சிக்கி புதர் மண்டி, மரம் முளைத்துக் கிடக்கின்றன. காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்து விட்டன. இந்த நிலையில், அடிப்படையான உள் கட்டுமானங்களைச் செய்யாமல் அங்கு மக்கள் வசிக்க முடியாது.

பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் இறந்துவிட்டனர். இருப்பவர்களும், கை கால்களை இழந்து நிற்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் வயசாளிகளும், பெண்களும், குழந்தைகளுமே நிறைந்திருக்கிறார்கள். உழைக்கத் தகுந்த உடலுடன் இருப்பவர்கள் வெகு குறைவு. இவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்புதான்.

நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 33 தடுப்பு முகாம்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் இருப்பவர்களைச் சிலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு வெளியே விடுகிறார்கள். முகாமில் இருந்து பூர்வீகப் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லும்போது வசிக்க வீடு இல்லை என்றால், இடைத்தங்கல் முகாம்களில் விட்டுவிடுகிறார்கள். இதைத்தான் ‘ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமில் அடைக்கிறார்கள்’ என்று தமிழ்நாட்டில் பேசுகின்றனர்.

காடுகளை அழித்து வெறும் மண் தரையில் உருவாக்கிய முகாம்கள் இப்போது மழைநீரில் தத்தளிக்கின்றன. ஆழம் குறைவாகத் தோண்டப்பட்ட மலக் குழிகள் மழை நீரில் சிதைந்து கழிவுகள் மேலே மிதக்கின்றன. கொடுக்கப்படும் அரிசியைச் சமைத்து சாப்பிடவும் விறகு இல்லை. வெளியில் சென்றோ, பக்கத்து முகாமுக்குச் சென்றோ விறகுகளை எடுத்து வரவும் ராணுவம் அனுமதிப்பது இல்லை. உலக உணவுத் திட்டத்தின் கீழ்தான் இப்போது மக்களுக்கான உணவு விநியோகிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பிருந்து அவர்களும் ‘நிதிப் பற்றாக்குறை’ எனக் காரணம் சொல்லி, தங்களது உணவு விநியோகத்தை 50 சதவிகிதம் அளவுக்குக் குறைத்துவிட்டார்கள்.

தமிழர் வாழ்ந்த பகுதிகளில் தீவிரமான நிரந்தரக் கண்காணிப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, முள்ளிவாய்க்காலின் நந்திக்கடலைச் சுற்றி இலங்கைக் கடற்படை நிறுத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு இடங்களில் ராணுவத் தளங்களும், காவல் நிலையங்களும் உருவாகிவிட்டன. ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடமராச்சி கிழக்கு, வளிகாமம் வடக்கு போன்ற பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்த நிலத்துக்காகப் போராடினோமோ, எந்த நிலத்தைச் சமர் புரிந்து எங்கள் வசமாக்கி வைத்திருந்தோமோ அதே நிலத்தில் இப்போது அகதிகளாக வாழ்கிறோம். முகாமில் இருந்து வெளியே வந்தாலும் இதுதான் நிலைமை.

நாம் தோல்வியுற்ற இனம். நமக்கென யாரும் இல்லை. இன்று இலங்கை அரசாங்கத்துடன் சவால் செய்து உரிமைகளைப் பெறுவதற்கு ஓர் அரசியல் தலைமை அரங்கில் இல்லை. நாம்தான் கைகளைக் கோத்து எழுந்து வர வேண்டும். ஈழ மக்களின் உரிமைப் போராட்டம் நந்திக்கடலுடன் முற்றுப்பெற்றுவிடவில்லை. முற்றுமுதலாக அடக்கி ஒடுக்கப்பட்ட அல்ஜீரிய விடுதலைப் போர் 40 ஆண்டுகள் கழித்து வெல்லப்பட்ட வரலாற்றை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். இனியாவது ஆயுதங்களை நம்பிய காலத்தைக் கைவிட்டு, அரசியலை நம்புவோம்!” என்கிறார்கள் மிகுந்த நம்பிக்கையுடன்!

நன்றி: விகடன் சஞ்சிகை
http://www.meenagam.org/?p=16774

http://tamiljournal.com/show_image_NpAdvSinglePhoto.php?filename=/idp.jpg&cat=17&pid=3100&cache=false

ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கைக்கு உதவியாக கொட்டிக் கொடுக்கும் இந்திய அரசு, நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்? – இயக்குநர் சீமான்http://www.tamilspy.com/wp-content/uploads/2009/09/Annai_Seeman.jpg
ஈழ மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட் களோடு வந்த ‘வணங்கா மண்’ கப்பல் யாருடைய உதவியும் இல்லாததால் எப்படி நடுக்கடலில் தத்தளித்து நின்றதோ… அதேபோல் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக 255 இலங்கைத் தமிழர்களை ஏற்றிவந்த ‘ஓஷியானிக் வைக்கிங்’ என்கிற கப்பலும் பரிதாபத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இலங்கையில் சிங்கள அரசின் பாதுகாப்பு முகாம்களுக்குள் சிக்கித் தவித்த தமிழர்கள் எப்படியோ தப்பி, ‘ஓஷியானிக் வைக்கிங்’ என்கிற இந்த சிறியரக கப்பலில் ஆஸ்திரேலியாவுக்கு பயணப்பட்டிருக்கிறார்கள். அப்போது இந்தோனேஷிய கப்பல் படையால் வளைக்கப்பட்ட அந்தக் கப்பல், ஜாவா தீவுக்கு அருகே நிறுத்தப்பட்டது. அடுத்த கணமே ‘அகதிகள் உருவில் விடுதலைப் புலிகள் தப்பப் பார்ப்பதாக’ செய்திகள் பரவ… ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் நடுக் கடலில் தடுமாறிக் கிடக்கும் அந்த அப்பாவி ஜீவன்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.

”அப்பாவிப் பெண்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளுமாகத் தத்தளிக்கும் எங்களை ஆஸ்திரேலிய அரசு கருணையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்!” என

கப்பலில் இருந்தபடியே தமிழர்கள் கதற, ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித் கொஞ்சமும் மனசாட்சியின்றி பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுத்துவிட்டார். இதற்கிடையில் தத்தளிக்கும் தமிழர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி சிங்கள அரசு வற்புறுத்த, ‘அங்கே போனால், நாங்கள் பிணமாவது உறுதி!’ எனச் சொல்லி அலறியழுகிறார்கள் நடுக்கடல் தமிழர்கள்.

கப்பலில் இருந்தபடியே ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவரான சீமானை தொடர்புகொண்டு பேசிய அந்தத் தமிழர்கள், ”எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். இலங்கை அரசின் சித்ரவதைகள் பொறுக்காமல் ஓடிவந்த எங்களை அங்கேயே திருப்பி அனுப்புவது எவ்விதத்தில் நியாயம்?” என ஓலமிட்டிருக்கிறார்கள்.

நாம் சீமானிடம் பேசினோம். ”நடுக்கடலில் நின்றபடி ஈழத்தமிழர்கள் கதறிய ஓலத்தைக் கேட்டு நொறுங்கிப் போய்விட்டேன். தமிழன் என்றாலே அவனுக்கு இப்படியரு ஈனத் தலையெழுத்தா? இலங்கைக்கு ஆயுதத்தை அள்ளியள்ளி வழங்கிய உலக நாடுகள், நடுக்கடலில் அப்பாவித் தமிழர்களை காயப்போட்டு வேடிக்கை பார்க்கும் வேதனையை எங்கே போய்ச் சொல்வது? சாப்பாட்டுக்கும், தண்ணிக்கும் வழியில்லாமல் அரைகுறை உயிரோடு அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு கைகொடுக்கக்கூட இந்த உலகம் முன்வரவில்லையே… ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் தத்தளிக்கும் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், இந்திய அரசும் அதனை கண்டுகொள்ளாமல் கைகட்டி நிற்கிறது.

தமிழர்களோடு புலிகள் கலந்திருப்பதாக மனசாட்சி இல்லாமல் பொய்களை அவிழ்த்து விடும் சிங்கள அரசு, இந்தோனேஷிய அரசின் உதவியோடு கப்பலில் இருக்கும் தமிழர்களை கைது செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் நின்று கதறியபடி என்னிடம் பேசிய தமிழர்கள், ‘இலங்கை அரசிடம் எங்களை ஒப்படைக்கத் துணிந்தால் நடுக்கடலிலேயே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்கிறார்கள். மனிதநேயம் குறித்து வாய்கிழியப் பேசும் உலகநாடுகளுக்கு தமிழனின் ஒப்பாரி மட்டும் கேட்கவில்லையா? உலகில் எந்த இனத்துக்காவது இத்தனை துயரங்கள் ஏவப்பட்டிருக்கிறதா? ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கைக்கு உதவியாக கொட்டிக் கொடுக்கும் இந்திய அரசு, நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்?” என உடைந்த குரலில் சொன்னார் சீமான்.

உப்புத் தண்ணீர், உக்கிர வெயிலோடு உலகநாடுகளும் சேர்ந்து மனிதக் கருவாடு தயாரிப்பதற்காக தமிழனை நடுக்கடலில் மிதக்க விட்டிருக்கிற கொடுமையை என்னவென்று சொல்வது?!
- இரா.சரவணன்

நன்றி: ஜீனியர் விகடன்

http://www.meenagam.org/?p=16927


http://3.bp.blogspot.com/_3t3cqoFHpLI/SaVRVclStuI/AAAAAAAAAUI/RoVcjZFfvpM/s400/3.jpg

தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது கருணாநிதியின் பேனா – தமிழருவி மணியன்

http://www.nerudal.com/images/2009/05/karunanidhi-sonia1-300x293.jpg

மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர்....

ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. ‘மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ‘அழுதால் கொஞ்சம் நிம்மதி’ என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், ‘விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை’ விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.

மகிந்தா ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கேவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து. ஒரு லட்சத்து

81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளைவழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம். 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய ‘மாவீரர் தின’ உரைகளில், ‘சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!’ என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், ‘ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்’ என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார். ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, ‘நெஞ்சுக்கு நீதி’ தேடுவதைத் தடுத்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, ‘நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்’ மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த ‘அமைதிப் படை’ நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று…?

சந்திரிகா குமாரதுங்காவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, ‘காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக’ தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.

ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் ‘ஜெய சுக்குறு’ (வெற்றி நிச்சயம்), ‘தீச்சுவாலை’ போன்ற மோசமான ராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன. ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. ‘சமாதான தேவதை’ சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.

சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. ‘சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா… போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!’ என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திரா கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ‘ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது’ என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.

நார்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பிப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையப்பமிட்டார். பிரதமர் ரணில் கையப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் – நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.

‘உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் ராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்’ என்றார் பிரபாகரன். ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.

கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்கே, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசுபயன் படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கைஇழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.

சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதி யையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர் மையும், உண்மையான அர்ப் பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும்தங்கள் பதவியைத்தக்க வைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் ஃபொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் ‘சகோதர யுத்தம்’ குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்?

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா?

வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை? அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய ரத்தக் குளியலுக்கு ரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?

சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன?

‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன்.

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

நன்றி: ஜூனியர் விகடன்
http://www.meenagam.org/?p=16918வவுனியா தடுப்பு முகாம்கள் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து சுதந்திரமான நடமாட்டத்திற்காக திறந்துவிடப்படும்: பசில் ராஜபக்சhttp://www.trofr.com/tamil%20file/image/news2008/Refugies.jpg

வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.சிறீலங்கா அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த அறிவித்தல் அரசியல் நோக்கம் கருதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் முட்கம்பிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வரலாம் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளக்குடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இன்று பசில் ராஜபக்ச வரலாற்று ரீதியான ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தமைக்கு அமையவே இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
http://www.meenagam.org/?p=16915விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16 நாடுகளில் 27-ந்தேதி மாவீரர் தின நிகழ்ச்சி

http://photos1.hi5.com/0065/387/580/loN61v387580-02.jpg


சென்னை, நவ. 22-

விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் நவம்பர் 27-ந்தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இலங்கையில் போர் மேகம் சூழ்ந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.

இந்த உரையின்போது அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இதனால் இலங்கை மட்டு மல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இந்த உரையை கேட்க ஆவலுடன் காத்திருப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவம் பொழிந்த விஷ குண்டு மழையில் லட்சக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர்.

இதில் பிரபாகரன், மற்றும் அவரது குடும்பத்தினர், முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது. பிரபாகரன் இறந்து விட்டதாகக் கூறி வீடியோ படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியா இலங்கையிடம் பிரபாகரன் இறப்பு சான்றிதழை கேட்டு வருகிறது. ஆனால் இதுவரை இலங்கை அந்த சான்றிதழை தராமல் இழுத்தடித்து வருகிறது.

இலங்கை அரசு பிரபா கரன் இறந்து விட்டதாக கூறுவதை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைச் செய லகம் 2 வாரத்திற்கு முன்பு ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நவம்பர் 27-நதேதி வழக்கம்போல் மாவீரர் தின கொள்கை விளக்க உரை வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் மாவீரர் தின உரையை நிகழ்த்தப்போகும் தலைவர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளின் மாவீரர் தின உரையில் இடம் பெறப்போகும் விஷயங்கள் என்ன, என்பதை எதிர் நோக்கி காத்திருக்கிறது.

மேலும், வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒருவேளை கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடக்கிறது பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடத்தப்படுகிறது.

இவ்விழாவின் போது விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் சமீபத்தில் தமிழ் ஈழம் பற்றிய தமிழர் நமக்கு, காலம் தந்த தலைவர், புயலுக்கு பின் மலரும் நம் தேசம், தமிழ்நாதத்தில் தமிழீழ கானங்கள் ஆகிய 4 இசை ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது.

http://www.maalaimalar.com/2009/11/22144018/CNI03902201109.html

http://seithy.com/admin/upload/mannar19-07.jpg
ஈழம்வருமா? வரும். எங்ஙனமென்பதை இவ்விதழில் விவாதித்து விவரிப்பதாயிருந் தோம். இடையில் அரங்கேறிய ராணுவத் தளபதி சரத் பொன் சேகா தொடர்பான அதிரடிக் காட்சிகள் முக்கிய சில செய்தி களை சொல்லிச் செல்வதால் முதலில் அதனைப் பார்ப்போம்.

காட்சிச் சுருளை சற்று பின்னோக்கி ஓடவிட்டு இயக்கு வோம். தமிழரை அழித்த போருக்கு களத்தில் தலைமை ஏற்றிருந்தவர் சரத் பொன்சேகா. போர் வெற்றியின் முழுப் பெருமை யினையும் ராஜபக்சே-கோத்த பய்யா சகோதரர்கள் அரசிய லாக்கி அபகரிக்க, உள்ளுக்குள் ராஜபக்சே சகோதரர்களுக்கும் பொன்சேகாவுக்கும் உரசல் என அரசல் புரசலாய் செய்திகள் வந்தன. செய்திகளை உண்மை யாக்கும் வண்ணம் ராணுவ தலை மைத் தளபதி பதவி பொன் சேகாவுக்கு நீட்டிக்கப்படவில்லை. இது நடந்த அக்டோபர் மாதத் தில்தான் இலங்கையில் ராணுவப் புரட்சி வெடிக்கக் கூடுமென்ற அச்ச அதிர்வலைகள் எழுந்து இந்திய ராணுவத்தின் உதவியை ராஜபக்சே அக்டோபர் 15-ம் தேதி வேண்டியதாக பொன்சேகா இப்போது குற்றம் சாட்டியுள்ளார். இதே காலகட்டத்தில் சிறப்பு இந்திய கமாண்டோக்கள் ஏதோ கொழும்பு நடவடிக்கைக்காக ஆயத்தமாய் வைக்கப்பட்டிருந்த செய்திகளும் அப்போது உலவின.

இப்பின்னணியில் பொன் சேகா அதிபர் தேர்தலில் போட்டி யிடக் கூடுமென்ற செய்திகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளராக அவர் நிறுத்தப்படும் சாத்தியப்பாடுகளும் விவாதிக்கப்பட, கொழும்பு அரசியற் களம் சூடேறத் தொடங்கியது. அமெரிக்க குடி யுரிமையும் கூடவே கொண்ட பொன்சேகா திடீரென அமெரிக் காவில் வாழ்ந்து வரும் தனது மகளை சந்திக்கப் புறப்பட்டதும், அங்கு அவரை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து "சம்மன்' இல்லாமலேயே விசாரிக்க அமெரிக்க தேச பாது காப்பு பிரிவு விருப்பம் தெரி வித்ததும் வெப்ப நிலையை மேலும் சூடேற்றின.

விசாரணை எதையும் சந்திக் காமலேயே சரத் பொன்சேகா கொழும்பு திரும்பினார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் முக்கிய அமெரிக்க அதிகாரிகள் அவரைச் சந்தித்தனர் என்றும், அமெரிக்கா அறிய விரும்பிய முக்கிய சில செய்திகளை அவர் சொல்லிவிட் டார் என்றும் இப்போது தெரிய வருகிறது. இந்நிலையில் ராணுவ அமைப்பில் இப்போது பொன்சேகா வகித்து வரும் முதன்மை அதி காரி என்ற பதவியிலிருந்தும் அவரை விடு வித்து அதிபர் ராஜபக்சே கடந்த சனிக்கிழமையன்று கடிதம் எழுத, அவசர கதியில் இந்திய அரசின் இரண்டாம் நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜி அவர் கள் கொழும்புக்குப் புறப்பட, இலங் கை அரசியல் உலகின் கூர்த்த கவ னம் பெற்றது. மேற்குலக நாடுகளின் அரசியல்-ராஜதந்திர முற்றுகை இறுக்கத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களை காப்பாற்றும் நோக் குடன் பிரணாப் முகர்ஜி புறப்பட் டாரா, இல்லை சர்வாதிகாரிகளாய் கொக்கரித்தவர்கள் பலவீனப்படுகிற தருணத்தை பயன்படுத்தி அரசியற் தீர்வு முயற்சிகளை துரிதப்படுத்தும் வாய்ப்பு தேடிச் சென்றாரா என்பது ராஜதந்திர வட்டங்களில் ஒருபுறம் விவாதிக்கப்பட, வந்திறங்கியபின் முதல் நிகழ்வாக அவர் ஆற்றிய லக்ஷ்மண் கதிர்காமர் நினை வுரையில் "அரசியற் தீர்வுக்கான வரலாற்றுத் தருணமும் வாய்ப்பும் இது' என வலியுறுத்திக் குறிப்பிட்ட தும் கவனிக்கப்பட்டது.

இதற்கிடையில் ராஜபக்சே அரசும் தனியார் நிறுவனங்களும் நடத்தியுள்ள ஆய்வுகளில் சரத் பொன்சேகா எதிர்கட்சிகளின் ஆதரவின்றித் தனித்து நின்றாலே சராசரி 22 சத வாக்குகள் பெறு வார் என்பதும், குறிப்பாக இலங்கை சமூகத்தில் சக்திமிக்க பௌத்த பிக்குமாரின் பெருவாரியான ஆதரவு அவருக்கு இருப்பதும், போர் வெற்றி யின் நாயகனாக சாதாரண சிங்கள மக்கள் சரத் பொன் சேகாவைத்தான் பார்க்கிறார்களென்ப தும் தெரிய வந்துள் ளது. இந்தப் பின்ன ணியில்தான் 2012-ம் ஆண்டு நடைபெற வேண்டிய அதிபர் தேர்தலை வரும் ஆண்டு ஏப்ரல் மாதமே நடத்தலாம் என முன்னர் ராஜபக்சே செய்திருந்த முடிவினை இப்போது மறுபரிசீலனை செய்யும் செய்திகளும் வந்திருக்கின்றன. கடந்த ஞாயிறு தனது கட்சியின் மாநாட்டில் ஏப்ரல் மாதம் தேர்தல் என அறிவிப்பதாய் முன்னர் முடிவு செய் யப்பட்டிருந்தது. இப்போதோ தேர்தல் அறிவிப்பு உரிய நேரத்தில் வரும்'' என ராஜபக்சே சமாளித்துள்ளார்.

வரலாறு நெடுகிலும் நாம் தரிசிக்கும் மகா மன்னர்களின் குப்பைமேடுகளும், சரிந்த சாம்ராஜ் யங்களின் இடிபாட்டுச் சிதறல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. முள்ளிவாய்க் கால் கொடுமை நடந்த வாரத்தில் -வரலாறு ஓர் சுழல் வினை -சாம்ராஜ் யம் சரியும்- அதிகார போதையின் உச்சகட்ட கிறக்கத்தில் நிற்கும் ராஜபக்சே சகோதரர்களை யதார்த்த உண்மைகள் ஒருநாள் நிச்சயம் சுற்றி வளைக்குமென எழுதியிருந்தோம். இத்துணை விரைவில் அது நடக்குமென நினைக்கவில்லை.

ஏதோ உலக மகா சரித்திர புருஷர்கள் போல் தமிழர் இன அழித்தலை கொக்கரித்துக் கொண்டாடிய ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரையும் திருவிழாக்கூத்தின் வித்தியாசமான பரமபத மரண விளையாட்டில் மேற்குலக நாடுகள் எப்படி எலி-பூனைகளாக மணி கட்டி ரசமான வேடிக்கை ஜீவராசிகளாக இறக்கி விட்டிருக்கின்றன என்பதை உன்னிப் பாய் கவனித்தால் உலக அதிகார ஒழுங்கு எவ்வாறெல்லாம் இயங்க முடியும், அந்த உலக அதிகார ஒழுங்கினை தமிழர்கள் தம் நலன் களுக்காய் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற சூட்சுமங்கள் புரியும்.

சாமான்யமானதோர் அரசியல் விஞ்ஞான மாணவனாய் எனது அவதானங்களும், அவற்றினடிப்படையிலமைந்த அனுமானங் களும் இவை: ஆனையிறவு வெற்றி யின் உச்சியில், நின்ற விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை வளை யத்திற்குள் இந்தியா மற்றும் அமெரிக்க மேற்குலக நாடுகள் உந்தித் தள்ளியதில் பல பிராந்திய வல்ல மைக் கணக்குகள் இருந்தன. ஆனால் அவற்றினூடே தமிழ் மக்க ளுக்கு அதிகபட்ச அரசியல் உரிமை களை உறுதி செய்யும் ஓர் ""கூட் டாட்சி ஏற்பாட்டினை'' உருவாக்க வும், அதன் முதன்மை நாயகர் களாய் விடுதலைப் புலிகளை ஏற் றுக் கொள்ளவுமான முடிவுகளும் மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரை இருந்தன. அமைதிப் பேச்சு வார்த்தைகளின் காலத்தில் அமெ ரிக்க பயங்கரவாத இயக்கம் எனத் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அன்டன் பாலசிங்கம் அவர்களை அவரது லண்டன் இல்லத்திற்கே சென்று அதே அமெரிக்காவின் தென் ஆசியாவிற்கான அரசியற் செயலர் ரிச்சர்ட் அர்மிடாஜ் சந்தித்தது மிக முக்கியமான நிகழ்வு. அதுபோலவே இப்போதைய அமெரிக்க வெளி யுறவுச் செயலர் ஹிலாரி கிளிண் டன் அவர்களின் கடந்த 15 ஆண்டுகால ஈழத்தமிழர் பிரச் சனை தொடர்பான உரைகளையும், நேர்காணல்களையும் நோக்கினோ மென்றால் ஒரு தருணத்தில் கூட தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தை பயங்கரவாதமாக அவர் தீர்ப்பிட்டதில்லை. விடுதலைப் புலிகளை வன்முறை- பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கமாகக் குறிப்பிடும் அவர் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் நியாயங்கள் உண்டு, அவர்களது போராட்ட நியாயங்களுக்குப் பதில் தரப்பட வேண்டுமென்றே கூறி வந்திருக் கிறார். இந்த அணுகுமுறையின் தெளிவான தொடர்ச்சியை இன்றும் அமெரிக்க-மேற்குலக நாடுகள் அதனிலும் தெளிவாக வலியுறுத்துகின்றன. செய்தி இதுதான்: ""விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக நாங்கள் பட்டியலிட்டாலும் தமிழர்களின் நீண்ட அரசியற் சிக்கல் பயங்கரவாதமல்ல. அதற்கு அரசியற் தீர்வு ஓர் கூட்டாட்சி ஏற்பாடாக காணப்பட வேண்டும்''.

போருக்குப் பின் ராஜபக்சே சகோதரர்கள் காட்டிய ஆணவமும், அப்பட்டமான தமிழ் இன வெறுப்பு அணுகுமுறையும் மேற்குலக நாடுகளை கோபப்படுத்தியுள்ளன. இப்போதைய தென் ஆசியாவுக் கான அமெரிக்காவின் வெளி யுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ் ராஜபக்சே சகோதரர்களை மண்டியிட வைக்கும் வியூகங்களை வாஷிங்டனில் இருந்துகொண்டு வகுக்கிறார். இந்த ராபர்ட் பிளேக்ஸ் முன்னர் இலங்கையில் அமெரிக்காவுக்கான தூதராக இருந்தார். ராஜபக்சே சகோதரர் களை- குறிப்பாக கோத்த பய்யாவை போர்க்குற்றவாளியாக கூண்டில் நிறுத்த வேண்டுமென்பதில் குறியாக இருப்ப வரும் இவர்தான் எனக் கூறப்படு கிறது.

காரணம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன்- புலித் தேவன் படுகொலை. இந்த உண்மை நார்வே நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றிற்கு முன்னாள் அமைதி பேச்சு வார்த்தையாளர் எரிக்சோல் கெய்ம் வழங்கிய செவ்வியில் வெளிப்பட்டுள்ளது. நடேசன்-புலித்தேவன் சரணடைதல் பேச்சுவார்த்தை களை இலங்கை அதிபர் -இந்தியத் தலைவர்கள் -ஐ.நா. அமைப்புகள் -புலித்தேவன் என நான்கு முனையிலும் ஒருங் கிணைத்ததுதான் என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி பதிவு செய்துள்ளார் எரிக்சோல் கெய்ம். தென் ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ்தான் எரிக்சோல்கெய்மை அதில் வழி நடத்தியிருக்கிறார். அவரது உத்தர வாதத்தின்பேரில்தான் சரணடையும் அறிவுறுத்தல் புலித்தேவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக புலித்தேவனுடன் கடைசியாக நடந்த தொலைபேசிப் பதிவையும் எரிக் சொல் கெய்ம் வெளிப்படுத்தி யுள்ளார். வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சென்ற நடேசன், புலித் தேவன் உள்ளிட்ட சுமார் 17 பேரை படுகொலை செய்ய உத்தரவிட்டது கோத்தபய்யா ராஜபக்சே. இதனை மன்னிக்க ராபர்ட் பிளேக்ஸ் தயாராக இல்லை.

வாஷிங்டனிலிருந்து நமக்கு கிடைக்கிற முக்கிய தகவல்கள் இவை: ""சரத் பொன்சேகா அமெ ரிக்கா செல்லவில்லை, வர வழைக்கப்பட்டார். நடேசன்-புலித் தேவன் படுகொலை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. கோத்தபய்யா உத்தரவில் அது நடந்ததென்றும், படுகொலை நடந்து பத்து நிமிடங்களுக்குப் பின்னரே தனக்கு அதுபற்றித் தெரிய வந்ததாகவும் வாக்குமூலமும் கூறியுள்ளார் பொன்சேகா. சரத் பொன் சேகாவை அதிபர் தேர்தலில் போட்டியிடும்படி அறிவுறுத்தியதும் -உண்மையில் உத்தரவிட்டுள் ளதும்- அமெரிக்காதான் என்றும் தெரிய வருகிறது. கோத்தபய்யா வுக்கெதிராய் வாக்குமூலம் தரவில்லையெனில் அமெரிக்க குடிமகனென்ற வகையில் அவர் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு எங்கு வைத்து வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்பட முடியு மென்றும் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த ""எங்கு வைத்து வேண்டுமானாலும் எங்களால் உங்களை கைது செய்ய முடியும்'' என்ற எச்சரிக்கைதான் அவரை வழிக்குக் கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கும் வேறு பின்னணி கள் உள்ளது. அவை...!

(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21080


ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்


ஈழத்தமிழர்கள்மீது 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரையில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட 'தமிழினப் படுகொலைகள்' என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவர உள்ளது.

கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்' (சர்ழ்ற்ட் ஊஹள்ற் நங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ண்ஹற் ர்ய் ஐன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள்) தன்னிச்சையாகவும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் இத்தகவல் தரவுகளை சேகரித்து ஆவணமாக்கியுள்ளது.

ஈழத்தமிழர் மீதான படுகொலைகளில் மிக மோசமான படுகொலைகளின் தொடக்கமான 1956ம் ஆண்டு இங்கினியாகலைப் படுகொலையிலிருந்து 2008ம் ஆண்டு இறுதிவரை சேகரிப்பட்ட விபரங்கள் இந்நூலில் பதிவாக்கப் பட்டுள்ளன.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தேறின. அவற்றுடன் 2009ம் ஆண்டு மேமாதம் இறுதிக்கட்டம் வரையான தரவுகள் சேகரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகிறன என்பதும் குறிப்பித்தக்கது.

மேலும் இந்நூலில் இறந்தவர்கள் யார், யார், காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்ந்தவர்கள், 14 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி ஆகியவற்றுடன் படுகொலை நிகழ்ந்த இடங்களின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்டவர்களின் ஒளிப்படங்களும் முடிந்தவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தமிழர்களின் மனித உரிமை மற்றும் விடுதலைக்காக செயற்படும் திருமதி. எலின் சாடார் எழுத உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பினை, ஈழத்து ஓவியர் நந்தா கந்தசாமி மேற்கொள்கிறார்.

ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட பக்கங்களில் தயாராகும் இந்நூல், வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி ஆகிய ஆறு மொழிகளில் வெளிவர உள்ளன.

வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்திடமிருந்து உரிமம் பெற்றுள்ள மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்நூலை வெளியிடுகின்றன.

மொழிமாற்ற பணிகளும் நூலாக்க பணிகளும் சீரான வேகத்துடன் நடைபெற்றுவருவதாக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21233
என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா


http://4.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/SH_k2e79prI/AAAAAAAADBw/Cgx5kQoBTwg/s400/SarathFonseka120608.jpg
அரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

கொழும்பில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்துள்ளார்.

முதலில் எனது பாதுகாப்புக்கான படையினர் எண்ணிக்கையை அவர்கள் (பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர்) 25ஆகக் குறைத்தார்கள். நான் எதிர்த்தேன். பின்னர் அதனை 60 காலாட்படையினராக அதிகரித்தார்கள். அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்புப் படையினரை ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்கள் என் கைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் புதியவர்கள். அவர்கள் படுகொலை செய்யும் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். என்று தெரிவித்திருக்கிறார் பொன்சேகா.

அவரது உயிருக்கான ஆபத்து விடுதலைப் புலிகளிடம் இருந்து மட்டும்தானா? என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

இல்லை. இங்கே குற்றவாளிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும்கூட என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களால் அது முடியவும்கூடும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, எனக்கு இருக்கக்கூடிய மிகப் பயங்கரமானதும் பாரதூரமானதுமான உயிர் அச்சுறுத்தல் குறித்துக் கவனத்தில் எடுக்கும்படி அரச தலைவரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன். தரைப்படையில் இரண்டாம் நிலைத் தளபதியாக இருப்பவருக்குக்கூட என்னைவிட அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால், அரச தலைவரின் பதில் நீங்கள் இப்போது ஒரு பொதுமகன் என்பதுதான் என விளக்கினார்.

அவரை (அரச தலைவர்) அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைவிட மேலான ஒரு குடிமகன் இல்லையா நான்?” என்று கேள்வி எழுப்பினார் பொன்சேகா. அப்போது அவரது குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது.

தான் வாடகை வீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சும் அதன் செயலாளரும் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21248

பிரபாகரனை கொல்ல வந்த கிருபன்;பாய்ந்து சென்று காப்பாற்றினார் பொட்டு அம்மான்: வைகோ

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/05/2079podduamman_05_11_07_j.jpg


விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகு‌றி‌த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது.

இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்தவர்கள் துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள்.

இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்.

சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.

அது மட்டும் அல்ல, ‘பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார்’’என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21091

http://weblogs.baltimoresun.com/business/consuminginterests/blog/education.jpg

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இலவச கல்வி: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இன்று துணைவேந்தர் ஜி.திருவாசகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்தியாவில் வாழும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களில் கல்லூரி படிப்புக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் இலவச கல்வி அளிக்க சென்னை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் தொலைதூரக்கல்வி கல்வி திட்டத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்ந்துகொள்ளலாம். இந்த திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கும் திட்டத்திலும் இலங்கை தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21187


தமிழ் இனத்தலைவன்

தமிழ் இனத்தலைவன்
என்றான் ...?
தமிழ் இனம் என் குடும்பம் என்றான் மேடையில்
இனம் அழிந்து கொண்டிருக்கிறதே
தலைவா? என்றேன் ......
'என் குடும்பம்..!' தமிழ் இனம் என்றான் ...!

http://vennirairavugal.blogspot.com/2009/11/blog-post_18.htmlPhotobucketபதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updatedநன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!