Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, May 28, 2009

♥ புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து ♥

கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்….செய்தோம்….

வீடியோ படம்

http://www.youtube.com/watch?v=glcYvmjCK6w





http://www.nerudal.com/nerudal.6948.html

புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து

கவலைகளை நீ நீக்கு
உன் கடமைகளை நீ நோக்கு
தமிழினத்தை கரை சேர்க்க
துடுப்புகளை நீ தூக்கு…

தோல்விகளா நீ பெற்றாய்
நம் தலைவனிடம் எதை கற்றாய்..?
தணலிலே எரிந்தால் தான்
ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்…

துவண்டுவிட நீ வாழை மரமா…?
இல்லை.! இரும்பு தெறிக்கும் வீர மரம்..!
உன் நிலத்தில் வாழ்வில்லையென்றால்
என் நிலத்தில் உன் வாழ்விருக்கும்….

கலங்கரை விளக்கத்தால்
உனக்கு வழிகாட்டத்தான் முடியும்…
அந்தவழி தொடராவிட்டால்
இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்…

எடுத்த உன் ஆயுதத்தால்
உன் வீரம் சொல்லி நின்றாய்…
இப்போது உன் கடமை
அகிம்சையில் உரிமை வென்றிடுவாய்….
இதை விட்டுவிட்டால் செத்திடுவாய்
உன் இனம் இனி மிஞ்சாது…
உன் உரிமை இழந்துவிட்டால்
உன் புதை நிலங்கூட மிஞ்சாது..

புலிப்படையின் பொறுப்பினிலே
நீ ஓய்ந்துவிட்டாய் பலவருடம்….
உன்கையில் பொறுப்பு இப்போ
புலிகள் ஓய்வெடுக்கட்டும் சிலவருடம்….
தருணத்தில் செய்யாத
கடமையதும் தோல்வியது…..
உன் கடமை முடித்துவிட்டு
அதன் பின்னர் ஓய்வு எடு…

அறிவில் சிறந்தவன் நீ…
அன்பிலும் சிறந்தவன் நீ…
அடையாளமாம் உன் இனத்தின்
அதரப்பழசு வாய்ந்தவன் நீ….
ஆனாலும் ஓர் குறை
ஒற்றுமையில் குறைந்தவன் நீ…
அதையும் சரி செய்துவிட்டால்
உலகத்திலும் சிறந்தவன் நீ…
அதன் பின்னால் திரும்பிப்பார்
உலகத்துக்கே முதல்வன் நீ…

துரோகிகளின் சமன் பாடு
உன் உரிமைப் போரிலே அதை நீக்கு
அவரை எதிரிகளே முடித்திடுவார்
அவர்பேச்சை நீ நீக்கு…

நிற்காதே உன் பின்னால்
நெருப்பு எரிகிறது….
அணைக்கத் தவறாதே
உன் அனைத்துரிமை எரிகிறது…
உன்னால் முடியுமென்று
உறுதியுடன் போராடு….
உன் உரிமை கிடைத்ததுமே
எழுச்சியுடன் நீ பாடு…

- இளங்கவி


http://www.nerudal.com/nerudal.7057.html

♥ பொய் புலிக்கு... சர்வதேச போலீஸ் வலை வீச்சு ♥

பத்மநாதனுக்கு வலை வீச்சு!

 
விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் வலை விரித்துள்ளனர் என அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவரது மறைவிடங்கள் என்று கருதப்படும் தாய்லாந்து, மlலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் இவர் தொடர்பான புலன்விசாரணைகளை சர்வதேசப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இலங்கை அரசும், இந்திய அரசும் விடுத்த கோரிக்கையையடுத்தே கே.பியைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேசப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/view.php?2a36QVH4b3dj9Eq34d0SWnB3b02R7GQb4d3aYpD4e0dfZLukce0cg2h32ccePj0U2e

♥ இது ஒரு சபிக்கப்பட்ட ஈழத்து குரல் ♥

மதிப்புக்குரிய நெடுமாறன் ஐயா அவர்களே! - இது ஒரு சபிக்கப்பட்ட ஈழத்து குரல்

article-1180055-04e26e00000005dc-475_468x354இது ஒரு சபிக்கப்பட்ட ஈழத்து குரல். யாருமேயில்லாத அனாதைகளாக செத்துக் கொண்டு இருக்கிறோம். தாய் தமிழகம் எங்களை காப்பாற்றும் என்று நம்பி நம்பி லட்ச கணக்கில் அநியாயமாக செத்துக் கொண்டிருக்கிறோம்.
 
எங்கள் பெண்கள் எல்லாம் கேட்பாரற்று கெட்டு சீரழிகின்றார்கள். பாவப்பட்ட பெற்றவர்கள் தடுக்க வழியின்றி செய்வதறியாது கண்ணீரிலேயே கரைந்து கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் பிள்ளைகள் முடமாக்கப்பட்டுள்ளார்கள். பஞ்சப் பரதேசிகளாக, பிச்சைகாரர்களாக கையேந்தி கொண்டிருக்கிறோம். முட்கம்பிக்குள்ளே முடக்கப்பட்டு முடமாகி போனோம்.
 எங்கள் குரல் நசுக்கப்பட்டு விட்டது. ஆனால் எங்கள் தொப்புள் கொடிகள் என் மவுனமாகி போனார்கள்? காவட் துறைக்கு பயந்து விட்டார்களா இல்லை அரசின் மாயாஜால கதைகளில் நம்பி உறங்கி விட்டார்களா? நாங்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது எங்கே போனார்கள் எங்கள் உறவுகள்? வீறு கொண்டு எழுந்தீர்கள். அப்போது நம்பிக்கை கொண்டோம்.
 
ஆனால் இன்று ஒரு சத்தத்தையும் காணவில்லையே! ஏன்? உங்கள் கண் முன்னால் எங்கள் அழிவுகள் காட்டப்பட்டால் மட்டுமா துடிப்பீர்கள்? சத்தமில்லாமல் சாட்சிகள் இன்றி சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமே அது உங்கள் நெஞ்சங்களை நெருக்கவில்லையா? நாளை எங்கள் கதி என்னவாக போகின்றது என்று உங்கள் மனதுக்கு புரியவில்லையா? ஏன் மவுனித்து போனீர்கள்?
 
ஐநாவில் இலங்கைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தார்கள் வெள்ளை இனத்தவர்கள். ஆனால் அந்த சட்டத்தையும் செல்லக் காசாக்கி விட்டார்கள் நெஞ்சிரக்கமில்லாத படு பாவி நாடுகள். அதற்கு இந்தியா அன்றிலிருந்து இன்று வரை துணை போகிறது. ஓரிரு குரல்கள் இந்தியாவிற்கு எதிராக தாய் தமிழகத்தில் எழுந்தன. பல முத்துக்குமாரார்கள் தன்னையே தியாகம் செய்துமே மதியாத இந்தியா இந்த கண்டனக் குரல்களை எப்படி கணக்கெடுக்கும்?
 
தமிழனின் உரிமைக்குரலும், தியாகங்களும் பாரத மாதாவிற்கு ஏன் இப்படி செல்லாக் காசாகி போனது?  ஏன் என்றால் நாம் உறுதியில்லாதவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். நம் தாய் தமிழக உறவுகள் மீது எந்த நம்பிக்கையில் முத்துக்குமாரர்கள் உயிரை கொடுத்தார்களோ தெரியவில்லை.  அவர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள்  போனதும், ஈழத்தில் நாம் செத்து மடிவதும் தான் வரலாற்றில் மிஞ்சப் போகிறதா?
 
அப்பாவி மக்கள் எங்களுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. உலகத்தை நம்பினோம். ஏமாற்றப்பட்டோம். தமிழக மக்களையும், கூடவே தமிழக தேர்தலை நம்பினோம். அதுவும் பொய்த்து விட்டது. ஐநாவை நம்பினோம்.  அங்கும் இந்தியாவின் கபட நாடகம் தான் அரங்கேரியிருகின்றது. இந்தியாவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் பகை நாடுகள். ஆனால் ஈழத்து தமிழனை அழிப்பதில் எல்லோரும் நேச நாடுகள். எங்கு போய் சொல்வது எங்கள் வேதனையை?  கடவுள் கூட அதர்மத்துக்கு கூட்டாகி போய் விட்டார். தலைவர் இருக்கிறார் என்பதால் கொஞ்சம் மானத்தோடு வாழ்ந்தோம். அவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தப் பின் நாயை விட கேவலமாகி போனோம். சிங்களவனில் பிச்சைக்காரன் கூட எங்களை ஏறி மிதிக்க போகிறான். ஆண்டியில் இருந்து அரசன்வரை எங்களை கேவலப்படுத்தப் போகிறான். வன்னியில் எங்கள் அழிவுகள் சாட்சியமில்லாமல் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் குட்டி தூக்கத்தில் இருந்து விழித்து தனது பொறுப்பை உணரும் போது, அங்கு எதுவுமே மிஞ்சப் போவதில்லை, எங்கள் நியாயங்களும் வெளியில் தெரியப்போவதில்லை.
 
மதிப்புக்குரிய ஐயா நீங்களும், வைகோ அவர்களும், திருமாவளவன் அவரகளும் மருத்துவர் ஐயா அவர்களும், வீரமணி அய்யா, சீமான் அவர்கள், சுபா வீரபாண்டியன் அவர்கள், மற்றும் இங்கு குறிப்பிடாத தமிழின பற்றாளர்கள் என்றுமே விடாது எங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றீர்கள். எங்களுக்காக எத்தனையோ துன்பங்களை அனுபவித்தீர்கள். அதனையெல்லாம் இந்த அல்லல்படும் நெஞ்சங்கள் என்றும் மறக்கப் போவதில்லை. ஆனால் ஐயா அவலத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த பாவப்பட்ட தமிழினத்துக்கு உங்களின் பணி இன்னும் தேவை என்பது தாங்களுக்கு நன்றாகவே தெரியும்.
 
வீறு கொண்டு எழுந்த மாணவா சமுதாயம், சட்டத்தரணி சமுதாயம், திரைப்பட துறையினர் மற்றும் நம் மக்கள் எல்லோரும் மீண்டும் எழுந்து வாருங்கள். அடங்காத போராட்டம் நடத்தி எங்களை காப்பாற்ற வாருங்கள். மத்திய அரசின் இந்த தர்மமற்ற செயலை கண்டித்து தடுத்து நிறுத்துங்கள். தமிழனின் உறுதி, ஒற்றுமை, உணர்வு எல்லாம் உலகத்துக்கு தெரிய வேண்டும். எங்கள் ஒட்டுமொத்த தமிழ் மானம் காக்கப் படவேண்டும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நாங்கள் அதாள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். தமிழனின் புல் பூண்டு கூட ஈழத்தில் மிஞ்சப் போவதில்லை. மீண்டும் ஒரு அடிமை சாசனம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.
 
ஐயா அணி திரட்டுங்கள் எங்கள் மக்களை! அவர்கள் எங்களுக்காக நிச்சயம் பாசத்தோடும் உரிமையோடும் போராடுவார்கள். எங்களுக்காக உயிர் கொடுத்த முத்துகுமரன்களை தந்த இந்த தமிழக மண் எங்கள் துயர் துடைக்க பின் நிற்க மாட்டாது. ஆனால் அவர்கள் ஒற்றுமையான ஒரு தலைமையின் தூண்டுதலையும்  அதன் வழிநடத்தலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமைகளின் ஒற்றுமை மேலோங்கும் போது மக்களின் ஒற்றுமையும் சீர்குலையாது. அவர்கள் போராட்டமும் வீறு கொண்டெழும். போராட்டம் வெற்றியும் பெறும்.
 
ஆவன செய்வீர்களா ஐயா? உங்கள் சொல் கேட்டு அணித்திரள எங்கள் தமிழின உணர்வாளர்கள் என்றும் பின் நிற்பதில்லை. தேர்தலுக்காக இடம் மாறினாலும் எங்கள் இன வெற்றியில் அவர்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. தமிழின உணர்வாளர்களே கட்சி மறந்து, பேதங்கள் மறந்து தயவு செய்து தமிழின வெற்றிக்காக ஒன்று திரளுங்கள். தமிழ் மானம் காக்க ஒன்று திரளுங்கள். ஈழம் விடிய ஒன்று திரளுங்கள். எங்கள் கண்ணீர் துடைக்க ஒன்று திரளுங்கள். எங்கள் உரிமை வென்றெடுக்க ஒன்று திரளுங்கள். எங்களின் வாழ்வும் சாவும் தமிழ் உறவுகளே உங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கின்றது. வேறு யாரும் நமக்காக இங்கில்லை என்பது தான் நிதர்சனம்.

- லக்ஷ்மி

http://www.nerudal.com/nerudal.7066.html


♥ இந்திய ஊடகங்களின் கொலை வெறி ♥

ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள்!

Media_pic.gif


சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும்.

நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது தொடர்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய வட இந்திய அங்கில ஊடகங்களோ ஈழப் போரின் முடிவாக இதைக் கொண்டாடி மகிழ்கின்றன.

ஆங்கில ஊடகத்தின் தமிழகப் பிரிவில் வேலை பார்க்கும் எனது பெண் நணபர் ஒருவர் நேற்று என்னிடம் கேட்கிறார். மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் பொடி எல்லாம் எடுத்துட்டாங்களாமே? உங்களுக்குத் தெரியுமா?

எங்கம்மா இறந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும் பிரபாகரன் இறந்தாரா? அவரது மனைவி இறந்தாரா? என்பதெல்லாம எனக்குத் தெரியாது? பொதுவாக இவர்கள் இறப்பதில்லை என்பது மட்டும் தெரியும். நீங்கள் டில்லி டெஸ்கிற்கு செய்தி கொடுத்து விட்டீர்களா? இலங்கை அரசின் ஆர்மி சைட்டில் இதை போட்டிருக்காங்களா? என்று கேட்டேன் அவரோ எங்க சேனல்ல ப்ளாஸ் நியூஸ் போகுது என்றார். எனக்கு எதுவும் அதிர்ச்சியாக இல்லை. சிறிது நேரத்தில் எஸ்,எம்,எஸ் ரூகள் தொலைபேசி அழைப்புகள் விசாரிப்புகள் எதுவும் அதிர்ச்சியாக இல்லை. கடந்த சில நாட்களாகவே இறுக்கமாக மட்டுமே இருக்க முடிகிறது தமிழக மக்களைப் போல,

இலங்கையின தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரை இந்தியா நடத்துகிறது. இலங்கை நடத்தி முடித்த இன அழிப்பின் பின்னரான உளவியல் சிதைப்புப் போரை இலங்கையின் தூதரகத் திட்டத்தோடு வட இந்திய ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்படும் ஒரு இனத்திற்கு நம்பிக்கை ஊட்டும் எந்த நடவடிக்கைகளையும் தமிழக ஊடகங்கள் செய்யவில்லை என்பதோடு. தூதரக அதிகாரிகளோடு தமிழக ஊடகவியலார்களும் நெருக்கம் பேணினார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

வட இந்திய ஊடகங்கள் ஈழப் போரின் தோல்வியை இலங்கை சார்ந்த ஒன்றாக மட்டுமே பார்க்கவில்லை. அவர்கள் தமிழகத்தில் வாழும் ஏழு கோடி மக்களின் தோல்வியாகவே பார்க்கிறார்கள். இவர்களின் தோல்வி அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்து ராம். சோ ராமசாமி, சுப்ரமணியம் ஸ்வாமி போன்ற இலங்கை அரசின் நட்புச் சக்திகள் இந்தக் கொண்டாட்டங்களின் தமிழக முகங்களாகவோ முகவர்களாகவோ இருக்கிறார்கள்.

ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தப் போர் காட்சி ஊடகங்கள் தொடங்கிய காலத்திலிருந்து தொடங்குகிறது. ஈராக்கிய யுத்தத்தின் போது எப்படி சி.என்.என் தொலைக்காட்சி அமெரிக்க பயங்கரவாதத்திற்கு வலது கரமாக இருந்து பிரச்சாரம் செய்ததோ அது போலவே சகல வட இந்திய ஊடகங்களும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக மோசமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இந்திய சமூக நீதி வரலாற்றில் இட ஒதுக்கீட்டு உரிமைப் போரில் எல்லாக் காலத்திலும் தமிழகமே முன்னணியில் நின்றது.

உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது வட இந்திய உயர்சாதி மாணவர்கள் துடைப்பங்களை எடுத்து நீங்கள் எல்லாம் டாக்டருக்குப் படிக்க வந்தால் நாங்கள் தெருக்கூட்டப் போகிறோம் என்று வீதிக்கு வந்ததை மிகப் பெரிய போராட்டமாக சித்தரித்து அதை தமிழ் மக்களுக்கு எதிராக சித்தரித்ததும். ஓகேனக்கல் நீர் உரிமை தொடர்பான போராட்டங்கள் வெடித்த போது அதை தமிழ் சாவனிசம் என்று ஒடுக்கிய போக்கையும ; நாம் கடந்த காலத்தில் கண்டோம். அந்த தொடர் வன்மத்தின் வெளிப்பாடுதான் இன்றைய ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிற போக்கு.

பெருந்தொகையான மக்களை இன அழிப்பு செய்து நிலத்திலிருந்து மக்களைப் பிரித்து அவர்களை முகாம்களுக்குள் முடக்கி இந்தியா இலங்கையில் ஆடியிருக்கும் நரவேட்டை ஒரு பக்கம் அந்தப் போருக்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்த போது அதை ஒடுக்கி அச்சுறுத்தி அடக்கிய விதம் எல்லாம் சேர்த்து இன்று தமிழக மக்களிடம் இந்தியாவின் மீதான வெறுப்பு வளர்ந்திருக்கிறது.

( தேர்தல் வெற்றி எல்லாம் சும்மா சொல்வது அது குறித்து தனியாக எழுதுவேன்) மனுக்கொடுப்பது சத்தியாகிரகம் என்பது போன்ற ஐம்பதுகளில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வு என்னவாக இருந்ததோ அது போன்ற ஒரு உணர்வலை இன்று தமிழகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான கடும் போக்கு தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இதைத் தடுக்க முடியுமா? என்று தெரியவில்லை ஏனென்றால் குறைந்த பட்சம் போராடுகிற மக்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் மதித்திருக்க வேண்டும். தொடர் நாடகங்கள் மூலம் தேர்தல் வெற்றி கிடைத்த பிறகு இலங்கை பிரச்சனை தமிழகத்தில் ஒரு பிரச்சனையே அல்ல என்று செய்கிற உதாசீனம் இந்தியாவின் தேசீய மனோபாவத்தில் இருந்து தமிழக மக்களை வெகுவாக விலக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வெகுமக்கள் அரசியலில் தலைமைகள் இல்லாத சுழலில் அடிப்படை மாற்றத்திறாக போராடும் இடது அமைப்புகள் இந்த இளைஞர்களின் கோபத்தை அறுவடை செய்யக் கூடும்.

ஏனென்றால் நான் சந்தித்த பெரும்பாலான உணர்வாளர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் அனைவருமே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து காட்டும் இந்தப் படங்களை கடந்து செல்லவே விரும்புகிறார்கள். உயிரை காப்பாற்றக் கேட்ட மக்களுக்கு, உணவு கேட்ட மக்களுக்கு, போர் நிறுத்தம் கேட்ட மக்களுக்கு தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற அவமானமும் குற்ற உணர்ச்சியும் ஏராளமான இளைஞர்களை கசக்கிப் பிழிகிறது. இந்த குற்ற உணர்ச்சியிலிருந்தே அவர்கள் அவலத்தைக் கடக்கிறார்கள். இந்தியா காட்டும் படங்களை உதாசீனப்படுத்துகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலையில் தொடர்புடையவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். போர்க் குற்றங்களை மறைத்து போட்டோக்களை வெளியிட்டு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய பகுதி. நாஜிக்களின் கொலைகள நடந்து முடிந்த சில காலத்திற்கு அந்தக் கொலைக் கூடங்கள் குறித்த செய்திகள் எதுவும் உலகிற்குத் தெரியவில்லையாம். அங்கிருந்து தப்பி வந்த இருவர் கொடுத்த தகவலும். அறம் சார்ந்து எழுத நினைக்கும் சில ஆன்ம பத்திரிகையாளர்களாலுமே யூதப் படுகொலை உலகிற்கு வெளிக் கொணரப்பட்டது. அன்றைய உலகச் சூழலில் இரு துருவ அரசியல் உண்மைகள் வெளிவர ஏதுவாக இருந்திருக்கலாம் ஆனாலும் நாம் ஆகக கூடிய சாத்தியங்களோடு இரண்டு மூன்று விஷயங்களைப் பேசியாக வேண்டும்.

ஒன்று பல்லாயிரம் பல்லாயிரமாய் கொல்லப்பட்ட மக்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்து இலங்கை அரசை தண்டிக்க வேண்டும்.

இந்தப் போரில் இந்தியாவின் கொலை வெறியை உலகுக்குச் சொல்ல வேண்டும்.

இந்தப் போர் இன்னும் முடியவில்லை என்பதை சிங்கள பெரும்பான்மை வாதிகளுக்கும், அதிகாரப் பசி கொண்ட இந்தியத் தரப்பிற்கும் சொல்ல வேண்டும் என்பதே எங்களை இப்போது ஆறுதல் படுத்தும்.

http://www.nerudal.com/nerudal.7028.html

Dead_sea_newspaper.jpg

♥ புலிகள் பற்றி பேசினாலே சிறை...! ♥

புலிகள் தொடர்பாக உரையாடும் தமிழ் இளைஞர்களை கைது செய்யும் காவல்துறை

LTTE_AFP.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக உரையாடுகின்ற தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கொழும்பிலும் மலையகத்திலும் தேநீர் கடை மற்றும் உணவு விடுதிகளில் ஒன்றுகூடுகின்ற தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகள் வன்னிக் காட்டுக்கள் இருந்து வந்து மீண்டும் சிறிலங்கா படையினரை தாக்குவார்கள் என்றும் விடுதலைப் புலிகளின் சில தளபதிகள் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர் என்பவை உட்பட கேள்விப்பட்ட பலதரப்பட்ட விடயங்களை இளைஞர்கள் பலர் சந்திக்கும் இடங்களில் உரையாடிக்கொள்கின்றனர்.

இவ்வாறு உரையாடுகின்றபோது அருகில் உள்ள ஏனைய தமிழ் பேசும் சமூகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கின்றனர் அல்லது பொது உடையில் நிற்கும் இரகசிய காவல்துறையினர் அவர்களை கைது செய்கின்றனர்.

கொழும்பில் மட்டும் இதுவரை 19 இளைஞர்களும் மலையகத்தில் 22 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொதுமக்கள் கொல்லப்பட்ட முறை தொடர்பாக கேள்விப்படுகின்ற விடயங்களை வீதிகளில் நின்று ஆவேசப்பட்டும் உணர்ச்சிவசப்பட்டும் உரையாட வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

கொழும்பில் குறிப்பாக வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை மட்டக்குளிய ஆகிய இடங்களில் ஒன்றுகூடுகின்ற தமிழ் இளைஞர்கள் எதுவும் செய்யமுடியாத நிலையில் ஆவேசப்பட்டு தமக்குள் உரையாடிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் தனியார் மற்றும் அரச அலுவலகங்களில் பணிபுரியும் தமிழர்களை சிங்களப் பணியாளர்கள் பகிடி வதைக்கு உட்படுத்தப்படுத்துகின்றனர்.

இது இவ்வாறிருக்க, எல்லாள மன்னன் துட்டகைமுனு மன்னனிடம் தோற்றமை தொடர்பான வரலாறுகளுடன் ஒப்பிட்டு சிங்கள பத்திரிகைகளில் தொடர்ச்சியாக செய்திகளும் விமர்சனங்களும் வெளிவருகின்றன.

 
http://www.eelamartistes.com/index.php?option=com_content&view=article&id=4296:2009-05-28-16-42-23&catid=1:srilanka&Itemid=3

♥ "காதில் பூ சுற்றும் சிங்கள அரசு" சாட்டிலைட் தொலைபேசிக்கு சிம் காட் இல்லை..! ♥

சாட்டிலைட் போனில் பிரபாகரனுடன் பேசிய அரசியல் தலைவர்கள்; "சிம்" கார்டில் ரகசியம் அம்பலம் (சாட்டிலைட் தொலைபேசிக்கு சிம் காட் இல்லை?..)


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் துப்பாக்கி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சாட்டிலைட் போன் சிம்கார்டை எடுத்து இலங்கை ராணுவ உளவு பிரிவினர் ஆராய்ந்தனர். அந்த போனில் அவர் பேசிய எண்கள் அவருக்கு வந்த போன்களின் எண்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன.

இதன் மூலம் பிரபாகரனுடன் யார்-யார்? பேசியுள்ளனர். அவர் யாருக்கெல்லாம் போன் செய்து பேசி இருக்கிறார் என்ற விவரங்களை கண்டு பிடித்து உள்ளனர்.

தமிழக மற்றும் தென் மாநில அரசியல் தலைவர்கள் அவருடன் பேசியிருப்பதும் சிம் கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. அந்த தலைவர்கள் யார்? எந்தெந்த தேதிகளில் பேசி உள்ளனர். எந்த எண்ணில் இருந்து பேசி இருக்கிறார். போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இது பற்றி இலங்கை மந்திரி பாண்டுலா குண வர்த்தனே கூறும் போது பிரபாகரன் போன் சிம் கார்டு மூலம் அவருக்கு யார்-யாருடன்? தொடர்பு இருந்தது என்பதை கண்டு பிடித்துள்ளோம்.

தென் இந்தியாவில் முக்கிய தலைவர்கள் அவருடன் பேசி இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

குறிப்பு: மேலேயுள்ள செய்தியில் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது போன்று சாட்டிலைட் தொலைபேசிக்கு சிம் காட் இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மையே!. அவர்களின் மந்த அறிவு இதனுடாக தெளிவாகின்றது.

♥ " சுடப்பட்ட இளைஞரின் தந்தை, பிரபாகரன் உருவ ஒற்றுமை உள்ளவர் ♥

கொட்டாஞ்சேனையில் சுடப்பட்ட இளைஞரின் தந்தை விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை ஒத்தவர்: காவற்துறைப் பேச்சாளர்

 
கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை புதுச்செட்டித்தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.


http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dPj0U0ecQG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e

♥ "பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்...! " - மாலைமலர் செய்தி ♥


♥ "உல்லாசமாக இருந்தாரா பிரபாகரன்? " நக்கீரன் கலக்கல் கட்டுரை ♥




உல்லாசமாக இருந்தாரா பிரபாகரன்?

 _அருட்தந்தை ஜெகத்கஸ்பர்



"இங்கே எங்கு பார்த்தாலும் பிணக் காடாய் கிடக்கிறது' வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையச் சென்று, துரோ கத்தால் சுட்டுக் கொல்லப் படுமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் இறுதியாக உலகோடு பேசிய வார்த்தைகள் இவை. ""இங்கே எங்கு பார்த்தாலும் பிணக்காடாய் கிடக்கிறது!''. மரணத்தின் எஜமானர்கள் நம் மக்களை முற்றுகையிட்டார்கள், சந்தையில் மலிந்த பொருள் போல் அள்ளிச் சென்றார்கள். சிங்களம் தின்ற உயிர் எத்தனை என்ற கணக்குக்கூட இல்லை. நாமறிய நவீன மனித வரலாற்றில் இப்படியோர் கொடுமை வேறெந்த இனத்திற்கும் நடந்ததில்லை.

"யுத்தம் முடிந்துவிட்டது, விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது' என இலங்கை அரசு அறிவித்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. எனினும் முல்லைத் தீவுக்குச் சென்று வர ஐ.நா. அமைப்புகளுக்கே அனுமதி இல்லை. முல்லைத் தீவை முற்றுகையிட்டது சுமார் ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர். அவர்கள் கடந்த பத்து நாட்களாய் செய்து வரும் வேலை தமிழர் இன அழித்தல் நடந்ததற் கான அத்தனை தட யங்களையும் அகற்றி விடுவது. இத்தனை ராணுவத்தினர் பத்து நாட்கள் துடைத்தபின்னரும் உலகினை அங்கு அனுமதிக்கும் துணிவு இலங்கை அரசுக்கு வரவில்லையென்றால் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

பஞ்சாப் பற்றியெரிந்து கொண்டிருக் கிறது. சீக்கியர்களை யாரும் அடிக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. ஆஸ்திரியா நாட்டில் ஒரு குருத்வாராவில் சீக்கிய மதத்திற்குள்ளேயே இருபிரிவினருக் கிடையில் சண்டை. அதன் எதிரொலி பஞ்சாபில் கேட்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை விடுகிறார். பிரதமர் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இதே நாளில் ஜெனீவா நகரில் அனைத்துலக மனித உரிமை அவையின் அவசர சிறப்பமர்வு நடந்தது. முல்லைத்தீவில் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் செய்த மனித உரிமை மீறல்களை, யுத்த விதிமீறல்களை விசாரிக்க அனைத்துலக குழு ஒன்று அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன. இத்தீர்மானத்தை எதிர்த்து இலங்கை அரசு தன்னைத் தானே பாராட்டும் ஒரு தீர்மானத்தையும், உலகிடமிருந்து பெரு நிதி கோரும் தீர்மானத்தையும் முன்வைத்தது. இலங்கையின் தீர்மானம் வெற்றி பெற வேண்டி அவையின் 47 உறுப்பு நாடுகளிடையே ஆதரவு திரட்டிய நாடுகள் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகியவை. ""எத்தனை அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற எண்ணிக்கையை அறியும் அருகதை கூட தமிழர்களுக்கு இல்லை'' என்று இலங்கையோடு சேர்ந்து இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகள் கூறியிருக்கின்றன. இங்கே கூப்பிடு தொலைவில் ஏழு கோடித் தமிழர்கள் ஏதேனும் செய்யும் எண்ணமும் திண்ணமும் அற்றவர்களாய் எதுவும் பெரிதாக நடக்காததுபோல் நடக்கிறோம். நாதியற்றுப் போனோமடா தமிழா, நாதியற்றுப் போனோம். இப்படியொரு கீழ்மை வேறெந்த இனத்திற்கும் நேர்ந்திடக்கூடாதென இறையருளை வேண்டுகிறேன்.

தமிழனுக்கெதிராய் உலக அரங்கில் தீர்மானத்தை ஆதரித்துவிட்டு புதுடில்லியில் எவரும் சர்க்கார் நடத்திவிட முடியாதென முழங்கும் தமிழகம் எழுகின்றவரை, "இந்தியப் பெருங்கடல் எங்கள் மூதாதையர்களின் கடல்- எங்கள் இனத்தை அழிக்கத் துணைபோகும் எவனும் இந்தக் கடலில் கப்பல் ஓட்டவோ எண்ணெய் குழாய் பதிக்கவோ முடியாது' என முழங்கும் தலைவன் ஒருவன் இந்நிலத்தில் எழுகின்றவரை நம் இனத்தின் அவலம் இவ்வாறே தொடரும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறிழைத்துவிட்டார். சிங்களவருக்கு இந்தியாவும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் பெருந்துணையாய் நின்ற நாட்களிலேயே அவர் சீனாவுடன் பேரம் பேசியிருக்க வேண்டும். அல்லது முன்பேயே அமெரிக்காவுடன் வர்த்தகம் பேசி "திரிகோணமலை துறைமுகத்தை' நீங்கள் விரும்பும் காலம் வரை நீங்கள் விரும்புகிறபடி பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தமிழீழம் எப்போதோ கிடைத்திருக்கும். பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டு உலகத் தலைவர்களில் ஒருவராய் அவர் பெருமையுடன் உலா வந்திருப்பார். உண்மையில் இலங் கையின் இறையாண்மைக்காய் வேலுப்பிள்ளை பிரபாகரன் உறுதியாக நின்ற அளவுக்கு அந்நாட்டின் சிங்களத் தலைவர்கள் நிற்கவே இல்லை. எந்த உலக சக்திக்கும் வடகிழக்கு இலங்கையின் நிலப்பரப்பையும் வளங்களையும் தாரைவார்க்க வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்வரவில்லையென்பதுதான் அவர் செய்த பெரும் பிழை.

"இதயத்தில் பரிசுத்தமுடையோர் பாக்கியவான்கள். அவர்கள் கடவுளின் அரசை காண்பார்கள்' என பைபிள் சொல்கிறது. நான் பார்த்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தனது இயக்கத் தலைவர் என்ற வகையில் உறுதியானவ ராகவும், கடுமையானவராகவும் இருந்தாலும் ஒரு மனிதனாக இதயத்தில் பரிசுத்தமுடையவராகவும், நீதிமானாகவும் இருந்தார்.

தனக்கெனவும் தன் குடும்பத் தினருக்கெனவும் அவர் சொத்து எதுவும் சேர்க்கவில்லை. தனக்கென வங்கிக் கணக்கு அவர் வைத்திருக்கவில்லை. அவரது குடும்பம் உல்லாச வாழ்வு வாழ்ந்ததாய் இங்குள்ள ஆங்கில ஊடகங்கள் இலங்கை ராணுவம் வெளியிட்ட புகைப்படங்களை காட்டிய போது அந்த மனிதனை இந்த உலகம் யாரென அறியவில்லையே என மனம் வேதனித்தது.

உண்மையில் அவர் வாழ்க்கையை வெறுத்து ஒறுத்த மனிதரல்ல. அறநெறி நிற்க வேண்டுமென்ற உறுதியைப் போலவே எல்லோரும் வாழ்வில் உண்டு, களித்து, கதை பேசி இன்புற்றிருக்க வேண்டுமென விரும்பியவர். 2001-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதுமே அவர் இயக்கத்திற்கு கொடுத்த முதல் அறிவுறுத்தல்களில் ஒன்றாகக் கூறப்படுவது... ""போராளி களுக்கு வாய்க்கு ருசியா, இறைச்சி, கறியெல்லாம் வச்சு தினமும் சமைச்சுப் போடுங்கோ. யுத்த காலத்திலெ வெறும் சோறும் பருப்புக் குழம்பும் சாப்பிட்டு சரியா கஷ்டப்பட்டு போயிட்டினும்''.

ஆனையிறவுக்கான இறுதி தாக்குதலை 1999-ல் அவர்கள் நடத்து முன் ஒரு சிறு கப்பல் முழுக்க மருந்துப் பொருட்களை புலிகளின் அனைத்துலக கொள்வனவுப் பிரிவினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் கொள்வனவு செய்யப்பட்டி ருந்தது. ஆனால் வெளிக் குறிப்பு களின்படி அம்மருந்துகள் காலாவதியாகி -ஆங்கிலத்தில் "ஊஷ்ல்ண்ழ்ஹ் உஹற்ங்' என்று சொல்கிறோமே, அது -அப்படி காலாவதி யாகி ஒரு மாதம் கடந்திருந்தது. ஐரோப்பிய நாடுகளது இறுக்கமான தர நிலை கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் காலாவதியாகி விட்டாலும்கூட இரு ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியுமாம். விலையும் குறைவாக இருக்குமென்பதால் வாங்கியிருக்கிறார்கள். அறிந்ததுமே அப்படியொரு ஆத்திரம் கொட்டித் தீர்த்திருக்கிறார் பிரபாகரன். கொள்வனவுப் பிரிவு பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, சீறித் தள்ளினாராம். ""என்ட போராளிகளின்ட உயிர் உங்களுக்கு அவ்வளவு மலிவா போச்சுதா? இந்த மாதிரி விளையாட்டெ இதோட கடைசியா வச்சுக் கொள்ளுங்கோ'' வேரித்தாஸ் வானொலி நாட்களில் போராளி நேயர் ஒருவர் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது: ""எங்கள் தலைவன் பொத்திப் பொத்தியும், தாய்க் குருவி போல் கொத்திக் கொத்தியும் திருத்தி வளர்க்கும் இக்கூட்டம் சண்டையில் மட்டும் புலிக்கூட்டம். மற்றபடி நெஞ்சில் நிறைய ஈரம் கொண்ட மனிதக் கூட்டம்!''.

""நீங்கள் பெரிய சண்டைக்காரர் என்று உலகிற்குத் தெரியும். மற்றபடி உங்களுக்கு மென்மையான ரசனைகள் உண்டா'' என்று கேட்டேன். ""ஓம் ஃபாதர்... நாட்டியம் எனக்கு நல்ல விருப்பம். என்ட மகளையும் நாட்டியம் படிக்க உற்சாகப்படுத்தியிருக்கேன்'' என்றார்.

"நன்றாகச் சமைப்பீர்களாமே...?'' என்றேன். ""சமைப்பேன். இப்போ அதுக்கெல்லாம் நேரம் இல்லதானே? ஒரு காலத்திலே தோழர்களோடு சந்தோஷமா சமையலெல்லாம் செய்திருக்கோம்'' என்றார்.

"பாட்டு பாடுவீர்களா?'' என்ற போது மட்டும் கொஞ்சம் வெட்கப்பட்டார். ""பாட வராது... பாட்டுக்கள் நல்லா ரசிப்பேன்'' என்றார்.

இரண்டாம் முறையாக நான் அவரைச் சந்தித்தபோது யுத்த காலத்தில் சுமார் 15,000 ஏழை -கைவிடப்பட்ட குழந்தைகளை தங்கள் பிள்ளைகளாய் எமது வானொலியூடாக ஏற்ற புலம்பெயர் மக்களுக்கு நன்றி கூறி நானே எழுதி இசையமைத்த ""கண் கண்ட எங்கள் தெய்வங்களே, நீர் வாழும் திசை நோக்கி கரம் கூப்பினோம்'' என்ற பாடல் ஒலிநாடாவை அவரிடம் கொடுத்தேன். கேட்டு நெகிழ்ந்த அவர் நானே ஒரு கணம் ஆடிப்போகும் வண்ணம் கேட்டார், ""ஃபாதர்... "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படம் பார்த்தினீங்களா? அடேயப்பா... "கண்ணாமூச்சி ஏனடா' பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் என்ன மாதிரி போட்டிருக்கிறார். சின்ன வயசென்டாலும் சரியான திறமைக்காரன். கேட்டுக் கேட்டு சலிக்கேலெ... அப்படியொரு அழகான பாட்டு... ஏ..ஆர்.ரஹ்மான் நிச்சயம் உலக அளவிலெ பெரிய இசையமைப்பாளரா வருவார்'' என்றார்.

சோழ மன்னர்களுக்குப் பின் தமிழரின் வீரத்தை உலகிற்குச் சொன்ன வேலுப்பிள்ளை பிரபாகரன், "கண்ணாமூச்சி ஏனடா' பாடலை வியந்து ரசிக்கிற குழந்தையாகவும் இருந்ததென்பது பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய செய்தியாக எனக்குப்பட்டது. எனவேதான் எழுதத் தலைப்பட்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பெருமை பெற்ற செய்தியை போர்க்களத்தில் நின்று கேட்டு நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.

1995 முதல் ஈழத்தமிழ் மக்களை மையமாகக் கொண்டு எமது வானொலி நிகழ்ச்சிகள் இருந்தபோதும் செய்திகள் சேகரிப்பிற்குக் கூட விடுதலைப்புலிகள் இயக்கத் தோடு நேரடி தொடர்புகள் எதுவும் நாங்கள் மேற்கொண்டதில்லை. மாதம் ஒன்றுக்கு தமிழ் ஈழப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான கடிதங்கள் எமக்கு வரும். அந்தக் கடிதங்கள் சுமந்து வந்த உண்மையை உலகோடு நாங்கள் பகிர்ந்தோம். அக்கடிதங்களூடே உலகத் தமிழ் மக்களின் உணர்வு களைக் கட்டினோம். சிலுவைகளும் வியாகுலங் களுமேயான மக்களது வாழ்வுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்பிக்கை தந்தோம். அவ்வாறு செய்வதை பெரிய பணியாகவொன்றும் நினைத்துக் கொண்டு செய்யவில்லை. ஒரு தமிழனாக சக தமிழனின் அவ லத்தில் உணர்வளவில் பங்கேற்ற செயலாக மட்டுமே நான் கருதினேன்.

நான் பிறந்தது ஜனவரி மாதத்தில். 1998-ம் ஆண்டு எனக்குத் தெரியாமலேயே என் சக ஒலிபரப்பாளர்கள் வானொலியில் எனது பிறந்தநாளை அறிவித்திருக்கிறார்கள். இந்த விபரம் எனக்குத் தெரியாது. நள்ளிரவு 11.50-க்கு ஒரு தொலைபேசி அழைப்பு. ""வணக்கம் ஃபாதர்... நான் தமிழ்ச்செல்வன் கதைக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்கட தலைவர் பேசுவார்'' என்றார். எனக்கு கை, கால் உதறியது. இனம் புரியா உணர்வொன்று தலைக்கேறி கிர்றென்றது.

""பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃபாதர். எங்கட போராட்ட வரலாற்றிலெ உங்களுக்கும் ஒரு இட முண்டு. யாழ்ப்பாணத்தை விட்டு 1995-லெ நாங்க வெளிக்கிட்டப்போ எங்கட சனம் மட்டுமல்ல போராளிகளும் இந்த போராட்டத்தில் நம்பிக்கை இழந்திருந்தாங்கள். அப்ப மக்களின்டெயும் போராளிகளின்டெயும் நம்பிக்கையை தூக்கி நிறுத்தினது உங்கட குரல்தான். அதுக்கு நாங்க மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறம். தொடர்ந்தும் எங்கட மக்களுக்காக கதையுங்க'' என்றார். அப்போது எனக்கு வயது 32. படுக்கையினின்று எழுந்து அலுவலகம் ஓடினேன். பழைய என் நிகழ்ச்சிக் குறிப்புகளைத் தேடினேன். அப்படி என்னதான் செய்துவிட்டோம். ஒரு இனம் தேசியத்தலைவன் என்று கொண்டாடும் மனிதன் நம்மை வாழ்த்துவதற்கு என்ற கேள்வி, அலையாய் மனதில். அப்படியொன்றும் நான் செய்திருக்கவில்லை, நம்பிக்கை வார்த்தைகளைத் தவிர. தகர்ந்து போய் நிற்கும் அம்மக்களுக்கு இன்று நாம் தரக்கூடியதும் நம்பிக்கை.

(நினைவுகள் சுழலும்)
 
நன்றி: நக்கீரன்


Logo

♥ " முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையில் ஈழத் தமிழர்கள்" - தினமணி கட்டுரை ♥

கட்டுரைகள்
ஈழம்: கனவிலிருந்து வாழ்க்கைக்கு...




இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கும் சூழ்நிலையில், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் ஓர் ஆழ்ந்த மெüனத்தை அவதானிக்க முடிகிறது. ""அடுத்தது என்ன; இனி நாம் என்ன செய்யப்போகிறோம்?'' என்ற கேள்விகள் ஒவ்வொருவரிடமும் தொக்கி நிற்பதையும் உணர முடிகிறது.  ஏறத்தாழ ஓர் அறுபதாண்டு காலப் போராட்டம் - முப்பதாண்டு காலப் போர் லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் குடித்துவிட்டு, ஓர் இனத்தையே அகதி இனமாக்கிவிட்டு படுதோல்வியில் முடிந்திருக்கிறது.  இந்தப் போரின் முடிவு கசப்பானதாக இருக்கலாம். நம்மால் ஜீரணிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. அதிலிருந்து தப்பி நம்மால் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது.  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் ஈழத் தமிழர்கள். இந்தப் போராட்டமும் போரும் தொடங்க எவையெல்லாம் காரணங்களாக இருந்தனவோ அந்தக் காரணங்கள் அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆனால், கேட்டவை கிடைக்காததுடன் இருந்தவற்றையும் இழந்து நிற்கின்றனர் அவர்கள்.  தம்முடைய மொழிக்கும் தம்முடைய இனத்துக்கும் தம்முடைய பண்பாட்டுக்கும் சம உரிமை கேட்டு போராடிய அவர்களுக்கு, இன்று இவை எதுவுமற்ற பழைய வாழ்க்கையே பெருங்கனவாக மாறியிருக்கிறது.  ஒட்டுமொத்த தமிழினமும் தன்னை ஆத்மப் பரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு நேரமிது. இனி கடந்த காலத்தை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை.  ஓயாத குண்டுகளுக்கு இடையே உறவுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து முகாம்களில் அடைந்து கிடக்கும் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் இன்றைய தேவை இன்னொரு போரோ போராட்டமோ அல்ல.  ஈழத் தமிழினம் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழினமும் மூன்று தளங்களில் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.  முதலாவதாக, மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சி. முகாம்களில் சிக்கியுள்ளோரை விடுவிப்பதோடு, மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சியில் தன்னுடைய முழு கவனத்தையும் ஈழத் தமிழினம் செலுத்த வேண்டும். இந்த வளர்ச்சியை சுயமாகத் தேடிக்கொள்ள இயலாது. நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின், தேசத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்தே அது சாத்தியமாகும்.  ஆகையால், ஈழத்தமிழ்ச் சமூகம் தம்மிடையே காணப்படும் வேறுபாடுகளைக் களைவதோடு, பொருளாதார ரீதியாக கடும் சவால்களை எதிர்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சியின் ஊடாகத்தான் இந்த வளர்ச்சியை வென்றெடுக்க முடியும் என்ற உண்மையை உணர வேண்டும்.  இரண்டாவதாக, நல்லெண்ண நடவடிக்கைகள். ஒருபுறம் வளர்ச்சியை முன்னெடுக்கும் அதே நேரத்தில் மறுபுறம் நல்லெண்ணச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தமிழர் - சிங்களர் இடையேயான இனவெறிப் பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  அதிகாரமும் உரிமைகளும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு இன அடிப்படைவாதத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக உருவாக்கப்படும் தடைகளைத் தகர்க்க இது முக்கியமானது.  மூன்றாவதாக, சகல தளங்களிலும் தமிழர்களுக்கு சம உரிமைகள், அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு. இந்தத் தளத்தைப் பொருத்த அளவில் தமது வலுவை முழுமையாக இழந்து நிற்கும் ஈழத் தமிழர்களால் செயல்பாட்டை முன்னெடுக்க இயலாது.  ஆகையால், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் சர்வதேச அளவில் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசின் மீது சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க காரியமாற்ற வேண்டும். தவிர, முதல் இரு தளங்களிலும் அனைத்து வகைகளிலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்.  உலகில் போரால் பாதிக்கப்படாத சமூகங்கள் ஏதுமில்லை. ஆனால், போரைவிடவும் போருக்குப் பிந்தைய காலகட்டமே பல சமூகங்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானித்திருக்கின்றன. இன்றைய ஜெர்மனியும், ஜப்பானும் இதற்கு நிதர்சன உதாரணங்கள்.  கனவுகள்; நம்பிக்கைகள்; உண்மைகள். இவை எல்லா தருணங்களிலும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமுமில்லை; வெவ்வேறாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. கனவிலிருந்து போராட்டத்திற்குச் சென்ற ஈழத் தமிழினம், கனவிலிருந்து வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய நேரமிது. எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ""உணவுதான் உணவு; கனவு உணவல்ல!''


http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=66027&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...

♥ "ஐ.நா சபையில், இலங்கை தமிழர்களுக்கு வாக்கரிசி போட்ட இந்தியா " - மாலைமலர் செய்தி ♥



மனித உரிமை மீறல் புகார்: இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு; ஐ.நா. விசாரணை இல்லை



 
இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது.
 
இதுபற்றி ஐ.நா. சபையில் மனித உரிமை குழு விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகள் முயற்சியால் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
 
கடந்த 2 நாட்களாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடந்தது.
 
தொடக்கத்தில் இருந்தே தீர்மானத்துக்கு எதிராக அதே நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொண்டது. இதேபோல சீனா, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளும் இலங்கையை ஆதரித்தன.
 
நேற்று இரவு ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 17 நாடுகளும், எதிர்த்து இந்தியா உள்பட 22 நாடுகளும் ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
 
எனவே மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா.சபை மனித உரிமை குழு விசாரணை நடத்த தேவை இல்லை.
 
இந்த தீர்மானம் வந்ததுமே இலங்கை பல்வேறு நாடுகளையும் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. மனித உரிமை குழுவில் உறுப்பினராக உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா, கியூபா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 22 நாடுகள் இலங்கையை ஆதரித்து உள்ளன.
 
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் இலங்கைக்கு எதிராக ஓட்டு போட்டன. 8 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
இந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு போடக்கூடாது என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை புறக்கணித்து இந்தியா இலங்கையை ஆதரித்து உள்ளது.
 
இதே விவாதத்தின்போது இலங்கை தனது நாட்டு மறு சீரமைப்புக்கு சர்வதேச நாடுகளின் நிதி உதவியை கோரும் தீர்மானத்தையும் கொண்டு வந்தது.
 
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஓட்டு போட்டன. ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. எனவே இலங்கைக்கு சர்வதேச நிதியுதவி தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


http://www.maalaimalar.com/2009/05/28104314/CNI040280509.html

♥ "வரலாறு படைத்த பிரபாகரன்" நக்கீரன் கலக்கல் கட்டுரை ♥

     

        றப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது.

இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.

ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8963
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!