Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, January 8, 2010

♥ தேசியத் தலைவரின் தந்தையின் உடல் வல்வெட்டி துறைக்கு .... ♥

?ui=2&view=att&th=125bdb6703c81509&attid=0.1&disp=attd&realattid=ii_125bdb6703c81509&zw


மிழீழ தேசியத்தலைவர் உயிருடன் உள்ளார் – காசி ஆனந்தன்

[காணொளி] தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் கூறியுள்ளார்.


நன்றி: தமிழன் தொலைக்காட்சி
http://meenakam.com/?p=2319

தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார்


கொழும்பில் பிரத்தியேக இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தையார் இலங்கை நெரப்படி இன்று காலை மரணமானார். அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காரணமாகவே இவர் இறந்ததாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே இடத்திலேயே தேசிய தலைவரின் தாயாரு தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த திரு.வேலுப்பிள்ளைக்கு தாம் எந்த வகையான மருத்துவ உதவிகளை வழங்கினோம் என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக இவர் இறந்தார் என்பது பற்றி இராணுவத்தரப்பு கூற மறுத்துள்ளது. மேற்பட்டி பூத உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த சந்தேகங்களும் எழுகின்றன. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீள் தற்போது இருந்துவரும் தேசிய தலைவரின் தாயர் நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.

இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன, அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதும் மிகுந்த சந்தேகமாகவே உள்ளது.

நன்றி: அதிர்வு



தேசியத் தலைவரின் தந்தையின் உடலை வல்வெட்டி துறைக்கு கொண்டு சென்று தகனம் செய்ய இராணுவத் தரப்பு இணக்கம்

காலம் சென்ற அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் ஹோமெகம மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டி துறைக்கு கொண்டு சென்று தகனம் செய்ய இராணுவ தரப்பு இணக்கம். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
http://meenakam.com/wp-content/uploads/2010/01/valuppillai.jpg
தேசியத்தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இரங்கல் தெரிவிப்பு
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
07/01/2010
இரங்கற் செய்தி
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.
இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.





http://www.nerudal.com/nerudal.13289.html

Tell a Friend

“நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!


திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.

“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.

கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?

கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.

கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’

போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.

அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.

(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece

புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.

இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:

சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?

கே.பி.: ஆம்.

சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.

சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?

கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?

சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.

கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.

ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.

இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.

இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.

தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.

கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…

ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.

“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.

இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.

மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.

ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.

எமதருமை புலத்து மக்களே,

இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!

Source: http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/


முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன்


கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது. முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையரசையும் அதன் ஆட்சியாளர்களையும் உறக்கமின்றி திகைக்கவைத்தது மட்டுமன்றி, உலகநாடுகள் பலதும் பொருளாதார, ஆயுத மற்றும் படையுதவிகளையும் செய்து பராமரித்து வந்த இலங்கையின் இராணுவத்தை நிலைகுலையச் செய்த வீரம் செறிந்த ஒரு இயக்கத்தைப் பற்றி, இன்று பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்ற இந்நிலையில், தமிழீழ மக்களின் தற்போதைய உண்மை நிலையையும், அவர்களுக்காக காத்திருக்கும் எதிர்காலம் பற்றியும் எந்தபக்கமும் சாராமல் நடுநிலைமையோடு நின்று மீள்பார்வை செய்வதற்கு இது தகுந்த நேரம் எனலாம்.
இலங்கையில் தமிழீழம் என்ற கோட்பாடு திடீரெனத் தோன்றிய ஒரு கருத்து அல்ல. ஈழத்தமிழர்கள், போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்கள் காலம் வரையும் தமது சொந்த அரசையும் (யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு, வன்னி சிற்றரசு என) இறையாண்மையையும் பேணி வந்தவர்கள் என்பது சரித்திரம் அறிந்த உண்மை. ஆனால் அந்த இறையாண்மையுள்ள தமிழீழத்தின் நிலைப்பாட்டை, சிங்கள ஆதிக்க வெறி பிடித்த பேரினவாத அரசாங்கங்களிடம் நிலைநாட்டுவதற்கு அளப்பரிய தியாகம் அவசியம் என ஈழத்தின் தந்தை செல்வநாயகம் மற்றும் வி.நவரத்தினம் போன்ற தமிழீழ அரசியல்வாதிகள் பலரும் முன்பே வலியுறுத்தி இருந்தனர்.
இந்த அடிப்படையில், தமிழீழ இறையாண்மைக்காகவும், தன்மானமிக்க தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏறத்தாழ 33 வருடங்களாக ஆயதமேந்தி போராடி 33,000 மாவீரர்களின் உயிர்களையும் அதுமட்டுமன்றி பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் தியாகம் செய்து, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரை, தங்களது ஆயுதங்களை மௌனிக்கின்ற நிலையை எடுக்கும் வரையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிராபகரன் அவர்கள் அந்தக் கொள்கையை அதுவரைக்கும், சர்வதேச அரசுகளின் அழுத்தங்களையும் மீறி, தளராது வைத்திருந்ததை நாம் அறிவோம். சர்வதேச தமிழ் சமுதாயத்திடம் குறிப்பாக இளையோர்களிடம் அந்தக் கொள்கையை கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் அவர் குறிப்பிட்டதை உலகமெங்கும் வாழும் எட்டு கோடித் தமிழர்கள் ஒருவரும் மறவோம்.
மேல்நோக்கிப் பார்க்கும்போது நகைப்பிற்கொத்த பிரச்சனையாகத் தோன்றினாலும், ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரச்சனை என்ற கோணத்தில் “புலிகள் முள்ளிவாய்க்கால் (வன்னி) யுத்தத்தில் வெற்றியடைந்திருந்தால் அவர்களது (அல்லது ஈழத்தமிழரின்) நிலை என்னவாகியிருக்கும்?” என்ற கேள்வியையும் அதன் பதிலையும் நாம் ஆராய்ந்தோமானால், பல சுவையான காரணங்களை நாம் அவதானிக்க முடியும். அதனுடன் இக்கட்டான பலகேள்விகளும் ஒன்றிற்குமேல் ஒன்றாக எழலாம்.
1. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால், உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா?
2. உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா?
3. உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம் அல்ல என மாற்றச் சொல்ல இயலுமா?
4. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஒழிப்பு நடவடிக்கைகளையும், இனம் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா?
பொதுவாக, மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரு வார்த்தைதான் உலக நாடுகள் அனைத்திடமிருந்தும் வரக்கூடிய பதிலாக அமையும் என்பதில் நம்மனைவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இராது. அப்படியே ஒரிருநாடுகள் ‘தர்மம்’ எனும் அடிப்படையில் செயற்பட எத்தனித்தாலும் அவற்றின் சுயநலம் அவ்வாறு செயற்படவிடுமா?; என்பது சந்தேகித்திற்குரியதே. உலகநாடுகளின் நீதியோ, தர்மமோ, ஒரு சிறிய நாட்டில் வசிக்கும், அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனம், தனது இனத்தைக் காப்பதற்கு நிகழ்த்தும் போராட்டத்தை, அந்தக் கோணத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, தமது அரசியல், பொருளாதார, பூகோள ரீதியில், சுரண்டும் மனப்பான்மையுடன் நோக்குதல் என்பது காலங்காலமாக சரித்திராசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்ட ஓர் உண்மையாகும். எனவே, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் போரில் (அல்லது 4ம் கட்ட ஈழப்போரில்) வெற்றியடைந்திருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கும் என்று நாம் நினைத்திருந்தோமானால், அது உலக அரசியலை சரிவர நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். அதையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அப்படியான முள்ளிவாய்கால் வெற்றியானது, புலம்பெயர் சமூகத்திற்கு, அரசியல் ரீதியாகத் தமிழீழத்தைக் கோருவதற்கு, மேலுமோர் உந்துசக்தியாக மட்டுமே இருந்திருக்கும் என்றே அவர் நினைத்திருப்பார். ஆனால், வல்லரசுகள் அடங்கிய 20 நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த போரில், பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இயக்கம் அவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களின் ஆணவமும் குறுகிய மனப்பான்மையும் அதற்கு இடம் கொடுக்காது. அப்படியான வெற்றியை வைத்து அரசியல் பேச முயலும் புலம்பெயர் சமுதாயத்தின்மீதும், உலகநாடுகள் ‘பயங்கரவாத’ முத்திரையைக் குத்தி அதன் கண்ணூடாகத்தான் தமிழீழ பிரச்சினையையும் நோக்கியருப்பார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நைஜீரியாவில் ‘BIAFRA’ போரின்போது நடைபெற்ற இப்படியான ஒரு சோக நிகழ்வையும் அதன் போராட்ட வரலாற்றையும் உற்று நோக்கினால், பயங்கரவாதம் என்ற சர்ச்சைகளே இல்லாத அந்த நாட்களில்கூட, உலகநாடுகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாண்டன என்பதே, நமக்கு தௌ;ளத்தெளிவாக பறைசாற்றும் சான்றுகளாகும்..
நாம் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்திருந்தால்.. என்ற பிரம்மையை ஒரு புறம் வைத்துவிட்டு, மீண்டும் யதார்த்த நிலையை இனி நோக்குவது பொருத்தமாயிருக்கும். இந்நிலையில் போரின் பின்விளைவுகளை அதாவது இலங்கை, இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றின் தனித்தனி நிலைப்பாடுகள் அடங்கிய மூன்று கோணங்களில் பார்க்கலாம். இக்கட்டுரையை வாசித்தபின் தமிழ் உறவுகள், தமது சொந்த அனுமானங்களைத் தடையின்றி உறுதிப்படுத்துவார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் போரின் முடிவு முற்றிலும் அழிவுசார்ந்ததா அல்லது அதனால் ஏதேனும் அரசியல் ரீதியான விளைவுகள் உருவாகியுள்ளனவா? எனத் தீர்மானிப்பார்கள்.
இலங்கையின் நிலைமை: ஈழத்தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் தொடங்கிய நாள் முதல், இலங்கை உலகநாடுகள் பலவற்றிடம் உதவி எதிர்பார்த்து பிச்சசைப்பாத்திரம் ஏந்தித்திரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யார் எந்த வகையில் உதவிகளை அளித்தாலும் அதை ஏற்பதே இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். உண்மையை கூறுவோமானால், இலங்கையின் அத்தகைய நிலை, கணிசமான பலனை நீண்டகாலமாக அதற்கு கொடுத்து வந்தது என்பதே உண்மை.
ஆனால் அதே நேரத்தில், உதவிகளைப் பெற்ற போதிலும், அந்த நாடுகளிடம் தனது எந்தவிதமான பிடிகளையும் கொடுக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொண்டது இலங்கை. ஆனால், யுத்தத்தின் கடைசி மாதங்களில், இவ்விதக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையரசால் நடக்க முடியவில்லை.
காரணம் விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உத்வேகம் என்பதே உண்மை. இதனால், விடுதலைப்புலிகளைச் சமாளிப்பதற்கு பெருந்தொகை கொண்ட பொருளாதார நிர்ப்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலங்கையரசு தள்ளப்பட்டது. ஆனால், இலங்கைக்கு அத்தகைய பெருந்தொகையைச் சீனாவினால் மட்டுமே கொடுத்து உதவமுடிந்தது. இதற்கு பரிகாரமாக, ராஜபக்ஷே இலங்கை முழுவதையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்திருப்பார் என்பதே அவரது தற்போதைய போக்கு எடுத்துக்காட்டுகிறது. 25,000 க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்களை (அல்லது படையினரை?) இலங்கைக்குள் வரவழைத்ததைவிட நமக்கு வேறென்ன உதாரணம் தேவை. இதே பாணியில், இலங்கையின் முன்னாள் சிங்கள பேரினவாத ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “புலிகளை வெல்வதாயின் நான் பிசாசின் உதவியைக்கூட நாடத்தயார்” என முன்னர் ஒரு முறை கூறியது ஞாபகமிருக்கலாம்.. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் ஜே.ஆர்.ஜே வார்த்தை ஜாலம் மட்டுமே காண்பித்து வந்தார். ஆனால் மகிந்தா ராஜபக்ஷே அதை நடைமுறையிலேயே காண்பித்துவிட்டார். எனவே, புலிகளின் போர் தந்திரம், ஈழத்தமிழ் உறவுகள் நினைப்பதுபோல் வீண்போனதும் முடிந்து போனதும் அல்ல. புலிகள் இலங்கையரசை, சீனாவின் பிடியில் தள்ளியவுடன், தமிழர்களுடைய பிரச்சினைகளை செவிமடுக்க மறுத்த எத்தனையோ நாடுகள், தமிழர்களின் பிரச்சனைகளை கேட்கவும், தீர்க்கவும் முன்வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகின்றோம்.
விடுதலைப்புலிகளின் போராட்டத்தினால், இலங்கை மட்டுமே ஓர் நிர்பந்தத்திற்;குள் தள்ளப்படவில்லை. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அடிப்படையில், தமிழீழம் அமைக்கும் கொள்கைக்கு எதிராகவே இருந்து வருவதை நாம் அறிவோம். இலங்கையில் தமிழீழம் உருவானால், அது தமிழ் நாட்டில் பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் என்ற தேவையற்ற பயம் இதற்கு ஒருகாரணமாய் இருந்திருக்கலாம். இந்திரா பிரதமராக இருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, வங்கதேச விடுதலைக்கு உதவியபோது, அதே வங்கமொழி பேசும் மக்களை உள்ளடக்கியதும், வங்கதேசம் பிரிவதற்கு மிகவும் உதவியாக இருந்த இந்தியநாட்டின் ஒரு மாநிலமாகவும் இருந்த மேற்குவங்கம் தனிநாடாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும் தமிழ்நாட்டில், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என தனித்தமிழ்நாடு கோரிய கட்சிகள், தடைச்சட்டம் வந்ததும், 1962 களிலேயே திராவிடநாடு கோரிக்கையை சுலபமாக கைவிட்டுவிட்டனர். அதன்பின்னர், அழகு தமிழிழ், மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! என்று முழங்கிய போதிலும், திராவிடக் கட்சிகளால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டாட்சிக்குப் பதிலாக கூட்டணி ஆட்சியில் பங்குமட்டுமே பெறமுடிந்தது.
ஆரம்பக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையானது, குறுகிய கண்ணோட்டங்கள் கொண்ட தற்போதைய நிலைப்பாடு போல், எதுவும் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் இராணுவ நிலைப்பாட்டில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் இருந்துவந்தது. இதனால் முக்கிய கேந்திர இராணுவக் கட்டுமானங்களை, சீனா, பாக்கிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால், தென்னிந்தியாவில் பெங்களுரில் நிறுவியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய நிலையில், சோனியா அம்மையாரின் கண்கானிப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்திய அரசாங்கமோ, சீனா, இந்தியாவின் வாசற்படிவரை வந்து நிற்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சோனியா அம்மையாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளை இலங்கையில் அழிப்பதில்தான் எல்லாக் கொள்கையிலும் முதன்மைபெற வேண்டிய கொள்கைபோல் அமைந்தது எனக்கூறின் அது மிகையாகாது. ஏதோவொரு வகையில், சீனாவிற்கு தலைசாய்க்கும் இலங்கையரசை காலப்போக்கில் தன்வசமாக்கலாம் என்றவொரு அசட்டு நம்பிக்கை இந்தியாவிற்கு இருந்துவருகின்றது என்றுதான் கூறவேண்டும்.
இலங்கையின் எல்லா எல்லைகளிலும் (கச்சைத்தீவிலும் கூட) சீனா நுழைந்ததை இந்தியாவால் விமர்சிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத நிலை உருவாகிவிட்டதே தற்போதைய அதிர்ச்சிகலந்த உண்மை. சீனாவின் இத்தகைய ஆதிக்கம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய சமுத்திரத்தில் ஆர்வம் கொண்ட ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்பிரச்சனையில், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட பல புத்திசீவிகளின் புத்திமதிகளைக்கூட கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமையவில்லை. ‘எதிரிக்கு எதிரி தனது நண்பன்’ என்கிற வட்டார வார்த்தைக்கிணங்க, புலிகளுக்கு எதிராக, இலங்கையை ஆதரிப்பதில் மட்;டுமே, இந்திய அரசின் நாட்டம் சென்றது. “தன்னுடைய மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால்போதும்” என இந்தியா கருதி வருவது மட்டுமன்றி சீனாவிலும் பார்க்க இலங்கையிடம் கூடியநட்பு வைத்தால் எல்லா பிரச்சினைகளும் தானாக தீர்ந்துவிடும் என இந்தியா நம்பி வருவதே இந்தியா செய்துவரும் வரலாற்றுப் பிழையாகும். இலங்கையை, சரித்திர ரீதியாக நாம் பார்த்தோமானால், அது ஓருபோதும், இந்தியாவை தனது நட்பு நாடாக எடுத்துக்கொள்ளவில்லை.
உதாரணமாக கடந்தகாலத்தில் நடந்துமுடிந்த சீன-இந்தியப் போராக இருந்தாலும் சரி அல்லது இந்தியா-பாக்கிஸ்தான் போராக இருந்தாலும் சரி அவற்றில் இலங்கையின் ஆதரவு நிலை என்பது இந்தியாவிற்கெதிராகவே அமைந்திருந்தது இதனை எடுத்துக்காட்டும். இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு கைப்பற்றியபோதே, இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகள், சிங்கள மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது.பின்னாளில் உருவான ஜே.வி.பி இயக்கம், இப்பகை உணர்வினை சிங்கள மக்களிடையே மேலும் வளர்த்ததை ஈழத்தமிழ் உறவுகள் நன்கறிவார்கள்..
இராஜிவ்காந்தியை ஒரு கடைநிலை இராணுவத்தினன் அடிக்க முற்பட்டதற்கும் இது அடிப்படைக் காரணம் எனலாம். இந்திய பிரதமரை அவமானப்படுத்த முயன்ற ஒருவனை தண்டிப்பதற்குப் பதில், இலங்கை அரசு, அவனுக்கு, அதன் பின்பு, பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றுகூட வதந்திகள் பரவின. இப்படியாக இந்தியாவிற்கு எதிராகவே காலங்காலமாக நடந்துவரும் இலங்கையின் நட்பை, இந்தியா எதிர்பார்ப்பது பகற்கனவாகலாம் என பல அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவே, மேற்கூறியவற்றை நாம் உற்றுநோக்கினோமானால், புலிகளை துரத்தும் வேட்டையில், இந்தியாவும் இலங்கையும் தமது சொந்தப் பாதுகாப்பு வேலிகளைத் தாமே மேய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை, உணரலாம்.
முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் ஈழத்தமிழருக்கு சர்வதேச சமூகத்தில் சாதகமேனும் விளைந்திருக்குமா எனப் பார்த்தால், சர்வதேச சமாதானத்தை தூக்கிப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நடைமுறைகளும் அவற்றின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளையும் சற்று உற்று நோக்குவோம்.
1. சர்வதேச சமூகம், தற்போது, விழிப்படைந்து மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடக்கின்றன என ஒவ்வொருவராக உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். அத்தோடு அதை நிரூபித்து இலங்கை அரசின் மகிந்த ராஜபக்ஷே, சரத்பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷே ஆகியோரைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குச் சாட்சிகளைச் சேர்ப்பதிலும் ஆவலாக இருக்கின்றனர். இதன்பொருட்டு அரசியல் பிரச்சாரங்களை செய்வதோடு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்பாளர்கள், தனிப்பட்ட மக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கக்கூடிய சாட்சிகளையும் சேகரிக்கின்றனர்.
2. இனப்படுகொலை தடுப்பு அமைப்புகளும் தற்போது ஊக்கத்துடன் செயல்களில் இறங்க முற்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழருக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளை (உதாரணமாக மலையகத் தமிழரின் வாக்குரிமையை பறித்தமை, யாழ்பொதுநூல் நிலையத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் எரித்தமை, கல்விநிலையம், மருத்துவமனைகளை தாக்கியழித்தமை) வரிசைப்படுத்தி, இலங்கை அரசை குற்றக்கூண்டில் நிறுத்தும் பணிகளை உலகளாவிய ரீதியில் செயற்படுத்த தொடங்கியுள்ளனர்.
3. 100,000 மேல் அப்பாவி பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நாம் முறையே வெளிக்கொணர்ந்து நிருபிக்கும் பட்ஜத்தில், இச்சம்பவம் ஐ.நா.வின் சட்டப்பிரகாரம் நமக்கு சட்டமூலமாக இலங்கைத் தீவினில் இருந்து பிரிந்து தமிழிழம் அமைக்க வலுச் சேர்க்கும் என்பது நிச்சயம்.
4. இலங்கையில், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில், ஐக்கிய நாடுகள் பிரகடனப்படுத்திய பாதுகாப்பானது என வரையறுக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறல் செயல்களை புரிந்த இலங்கையை எந்தவிதத்திலேயும் கண்டிக்கத் தவறிய ஐ.நா- வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் மற்றும் அவரது ஆலோசகர் நம்பியார் ஆகியோர் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எண்ணம் சர்வதேச சமூகத்தினரிடையே தற்போது வேகமாகப் பரவி வருகின்றது.
5. ஐரோப்பாவில் இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
6. இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல், மேற்கு உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஓர் சிறிய இராஜதந்திர விரிசலைக்கூட முள்ளிவாய்க்கால் போர் ஏற்படுத்தியது எனக் கூறலாம். 2011-ல் நடக்கவிருக்கும் பொதுநல வாய (Common Wealth)நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு 45 நாடுகளின் ஆதரவைத் திரட்டிய இந்தியா, டிரினிடாடில் நடந்த பொதுநல வாய பிரதமரின் மாநாட்டில், வெற்றிபெற இயலவில்லை. இதனால், இந்தியா ஒரு பாரிய இராஜதந்திர பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. காரணம் பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கை ஓர் போர்க் குற்றம் நடத்திய நாடு என்ற வகையில் இம்மாநாட்டை அங்கு நடத்த முடியாது என உறுதியாகவும் கடுமையாகவும் ஆட்சேபித்தனர். இதனால் இம்மாநாடு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் இடைவிடாத அழுத்தத்தினால் விளைந்த பலன்களில் ஒன்று எனக் கூறலாம்.
7. இந்தியா, இலங்கையின் அரசியலில் தலையிட்டதால் அடைந்த பின்னடைவு மேற்கூறிய பிரச்சனையுடன் முடிந்துவிட்டது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த வகையில், இந்தியாவும் ஒரு காரணகர்த்தா ஆகலாம் என்ற இன்னொரு குற்றப்பத்திரிகையும் உலகநாடுகளிடமிருந்து பெறவேண்டிவருமோ என அனுபவம் மிகுந்த அரசியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இப்பிரச்சினை உலக அரசியல் அரங்கில் வெளிக்கொணரப்பட்டால், இந்திய அரசுக்கு ஒரு இராஜதந்திர பின்னடைவையும் அல்லாது அத்தோடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றின் அந்திமத்தையும் உருவாக்கக்கூடும். எனினும், இம்முயற்சியின் பெறுபேறு புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடத்தும் மற்றும் தமிழ் நாட்டு மக்களிடத்தும் தங்கி உள்ளது.
8. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் அமைக்கும் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. “புலிகள் அழிந்து விட்டார்கள்” என சிறிலங்கா அரசே கொக்கரிக்கும் நிலையில், இனிமேல் வெளிநாட்டு அரசுகள் “பயங்கரவாதம்” எனும் வாதத்தை தமிழ் மக்கள் மீதோ அல்லது தமிழீழம் கோரும் அமைப்புகள் மீதோ கொண்டுவர முடியாது. அத்தோடு மனித உரிமை மீறல்களையும் இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தும் ஓர் அரசின்கீழ் அல்லது அரசுடன் தமிழ் மக்கள் இனிமேலும் ஒருங்கிணைந்து வாழ முடியாது என்பதும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது உலகில் ஒரு பண்பாகக் கடைபிடிக்கும் நாளில், இன்று சிங்கள இனவெறி அரசானது இனஅழிப்புக் கொள்கையின் ஒரு திட்டமாக மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர்களால் தகர்த்து எறிந்திருப்பதிலிருந்து ஐயமின்றி நிருபணம் ஆகிவிட்டது என்று, கடல்கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஜனநாயக வழியில் தமது தமிழீழ இலட்சிய வேட்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழீழம் ஒன்றே தமது தீர்க்கமான முடிவு என (1976-ல் முன்மொழியப்பட்டு 1977 இலங்கைப் பொதுத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில்) உலகத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றனர். இன்று பிரான்சு, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு (கருத்துக்கணிப்பு) மூலம் 99மூ தமது ஆதரவுக் குரலை எழுப்பி உள்ளனர். பிரித்தானியா, ஜெர்மனி உட்பட ஏனைய நாடுகளும் இதே வழியில் பின்செல்ல அணிவகுத்து நிற்கின்றன. “ஜனநாயக வழியை பின்பற்ற வேண்டும்” எனக் கொக்கரிக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இந்நடவடிக்கை ஓர் கண்திறப்பாக அமையும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள்மீது தரங்குறைந்த அரைகுறைத் தீர்வுகளை திணிக்க யோசிக்கும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நடவடிக்கை ஒரு சம்மட்டி அடியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேற்பட்ட கருத்துகளை நோக்கின், முள்ளிவாய்க்கால் போரில் தமிழினத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என ஓருவர் கருதினாலும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய மனித இழப்புக்களையும், 300,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலிகளின்பின் பட்ட வதைகளையும், அவலங்களையும், என்றும் எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது கசப்பான உண்மை. எந்தப் போரிலும் மனித உயிரிழப்பு ஓர் தடுக்க முடியாத அம்சம் என சிலர் ஆறதல் அடையக்கூடும். ஆனாலும் இன்னும் இராணுவச் சித்திரவதைக்குள் உட்பட்டிருக்கும் பல்லாயிரம் போராளிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது அலட்சியப்படுத்தக்கூடிய பிரச்சனையல்ல.
எனவே, ஈழத்தமிழ் உறவுகள் மேற்கூறிய பிரச்சனைகளை ஆராய்ந்து உணர்ச்சிவசப்படாத வகையில் ஓர் அமைதியான முடிவுக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன். இதை எழுதும்போது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி நினைவிற்கு வருகின்றது “every cloud has a silver lining” அதாவது எந்த கருமேகத்தையும் ஒரு வெள்ளி மின்னல்கீறு சூழ்ந்து இருக்கும் என்பதே அதன் விளக்கமாகும்.

— பேராசிரியர் தீரன்

(இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்)
http://meenakam.com/?p=2287


Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...






smail


http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updated





Get more followers
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!