வினாயகர் சதுர்த்தி ஞாயிறு அன்று கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி வினாயகர், சித்தி வினாயகர், கற்பக வினாயகர், செல்வ வினாயகர் என பல வகையான வினாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு வினாயகர் சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரபாகரன் உருவத்தோடு ஈழ வினாயகர் சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூசை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூர் போலீசாரும், உளவுத்துறையினரும் விழிப்போடு அந்த சிலை நிறுவப்படுவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.
இதே போல ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் நாளை இலங்கையை நோக்கி ஈழ வினாயகர் சிலையுடன் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடித்து அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டு வருகிறது.
காவல்துறையின் கண்காணிப்பை மீறி ஈழ வினாயகர் சிலையை நிறுவி அர்ச்சனை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள். ஈஷா ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்படும் மரக்கன்று நடும் விழாவுக்காக வினாயகர் சதுர்த்தி நாளான ஞாயிற்றுக் கிழமை துணை முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் செல்லும் நிலையில் இந்து மக்கள் கட்சியினரால் தேவையற்ற பிரச்சனை உண்டாகிவிடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் திருப்பூர் போலீசார்.
http://www.thenaali.com/thenaali.aspx?N=2522
தினமணி டாட் காமில் காணாமல் போன ‘இலங்கை’!
இலங்கைத் தமிழர்கள் பிரச்னை, தமிழ் ஊடகங்களுக்கு ஏதோ சில வகையில் பொருளளவில் இலாபம் தரும் விவகாரமாகவே இருந்துள்ளது, இருந்து வருகிறது என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.
ஆனால், இந்தப் பட்டியலில் ‘தினமணி’ இணைந்ததை தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நேரடியாக விஷயத்துக்கே வந்துவிடுகிறேன்.
இலங்கைத் தமிழர்கள், இலங்கை விவகாரங்கள் மீது நாட்டமும் அக்கறையும் இருந்ததன் காரணமோ அல்லது வெளிநாடு வாழ் தமிழர்களில், அதுவும் இணையதளத்தில் வலம் வரும் தமிழர்களில் இலங்கைத் தமிழர்களே மிகுதி; எனவே அவர்களுடைய கவனத்தையும் ‘ஹிட்ஸ்’யையும் பெறுவதற்கான உத்தியா என்பது தெரியவில்லை…. தினமணி டாட் காமில் ‘இலங்கைச் செய்திகள்’ என்ற பிரிவு இருந்து வந்தது. அதில், அச்சில் ஏறும் இலங்கைத் தமிழர் தொடர்பான செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.
சில மாதங்களுக்கு முன்பு புதிய வடிவம் பெற்ற தினமணி டாட் காமில் ‘இலங்கைச் செய்திகள்’ என்ற பிரிவு இருந்தது.
ஆனால், இலங்கை போர் முடிவுக்கு வந்த பிறகு, பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்த பிறகு..?
தற்போது தினமணி டாட் காமில் ‘இலங்கைச் செய்திகள்’ என்ற பிரிவே காணாமல் போயுள்ளது. இலங்கை தொடர்பான செய்திகள், ‘உலகம்’ பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
வழக்கம் போல் இங்கே விடை தெரியா கேள்விகள் எழுகின்றன.
* தினமணி டாட் காமில் இட நெருக்கடி காரணமாக எடுத்துவிட்டார்களா? பார்த்தால் அப்படி தெரியவில்லை, மாவட்ட வாரியாக செய்திகள் தரப்பட்டுள்ளதே..! வேறென்ன காரணம்?
* இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டதே என்ற எண்ணமா?
* இனி, இலங்கைச் செய்திகளால் ‘ஹிட்’டுகள் பெரிய அளவில் கிடைக்காது என்ற கணிப்பா?
இப்படி பல கேள்விகள் எழுகின்றன…
உண்மையில் இன்றையச் சூழலில் தான் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மிகுதியாக செய்திகளைச் சேகரித்து, அதை உலகுக்கு தெரிவிக்கும் கடமை தமிழ் ஊடகங்களுக்கு உண்டென கருதுகிறேன்.
பிறந்த பூமியில் அகதிகளாய் அவதியுறும் தமிழர்களின் தற்போதைய நிலை தொடர்பான செய்திகளை திரட்டி வெளியிட்டு, அவர்களின் வாழ்வாதாரம் மீது உலகப் பார்வை பட வைக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்றே நினைக்கிறேன்.
வெறும் பரபரப்புக்காகவும், காசு பாப்பதற்காகவுமே இலங்கைப் பிரச்னையை சில அல்லது பல தமிழ் ஊடகங்கள் கையிலெடுத்திருந்தன என்பது அண்மைக் கால அப்சர்வேஷனில் புரிந்துகொள்ள முடிந்தது.
அங்கே எல்லாம் முடிந்துவிட்டதாக, பிரபாகரன் மறைந்துவிட்டதாக தகவல் கிடைத்த மறுநாளில் இருந்தே போட்டிக் போட்டிக்கொண்டு பத்திரிகைகள் ‘இலங்கைப் போராட்ட வரலாற்றை’ தொடராக போட்டு, போட்டுக் கொண்டு விளம்பரங்கள் செய்து காசாக்க முனைந்தன.
அதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அந்த வரலாற்றுத் தொடர்கள் இன்றைய இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்த உதவலாம் என்பதால்.
ஆனால், இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி அறிந்துகொள்ள பத்திரிகைகளில் புரட்டினால், அது குறித்த செய்திகள் எங்கேயும் சிங்கிள் காலத்தில் கூட கிடைப்பது இல்லை. மாராக, மன்னிக்கவும் மாறாக, சினேகா – ரம்பாக்கள் – சொனியா அகர்வால்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை முதல் பக்கங்களில் படிக்க முடிகிறது.
இது புலம்பலா என்று எனக்குத் தெரியவில்லை. இதைப் பற்றியெல்லாம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்பதும் எனக்குத் தெரிகிறது.
ஆனால்…
தினமணி டாட் காமில் இருந்து ‘இலங்கைச் செய்திகள்’ பிரிவு நீக்கப்பட்டது தான் ஆரம்பத்தில் கோபத்தையும், பிறகு வருத்தத்தையும் தந்துள்ளது.
கோபம் மட்டுமே இருந்திருந்தால், அதைப் பொறுத்துக் கொண்டு போயிருக்கலாம். ஆனால், வருத்தமே மேலிட்டதால், அந்த வருத்தத்தை இறக்கி வைக்க இங்கே ஒரு பதிவிட நேரிட்டுள்ளது.
தமிழ் பத்திரிகைகளில் சார்பு மற்றும் சில ‘பூச்சு’கள் இருப்பினும் கூட மனித நலன் (Human Interest) மீது அக்கறை கொண்ட பத்திரிகைதான் ‘தினமணி’. அதில், வர்த்தக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததே மரியாதையை மேலும் கூட்டும் விஷயம்.
அத்தகைய நாளிதழின் இணையதளத்தில் இருந்து ‘இலங்கைச் செய்திகள்’ பிரிவு நீக்கப்பட்டதன் நோக்கம், ‘இனி பிரயோஜனமில்லை’ என்பதாக இருந்திருக்கக் கூடுமோ என்பதால் தான், அதை வருத்தமுடன் இங்கேச் சுட்டிக் காட்ட விரும்பினேன்.
இதே வேறு ஏதாவது இணையதளம் அப்படிச் செய்திருந்தால், அதைக் கண்டு கொண்டிருக்கவோ – அதைப் பற்றி யோசித்திருக்கவோ மாட்டேன்.
இது ஒரு மிகச் சாதாரண விஷயம் போல் தோற்றமளித்தாலும், நான் ஏன் இந்த விஷயத்தில் மிகவும் டிஸ்டர்ப் ஆனேன் என்று தெரியவில்லை.
தமிழ் செய்தி அல்லது பல்கலை வலைத்தளங்கள் ‘ஹிட்’டுகளை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் உண்மையான சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.
பின் இணைப்பு : www.dinamani.com
http://globen.wordpress.com/2009/08/22/dinamanidotcom/
பாவம் பிள்ளையார்
இப்படிக் கடலில் கொண்டு போய் போடுவதற்கு எத்தனை அனுமதிகள், போக்குவரத்து நெரிசல்கள், மத மோதல்கள், குடித்து விட்டு பிள்ளையார் முன் குத்தாட்டம் போடுவது இப்படிப் பல பல.
வடக்கத்திய பண்டிகை, இந்த புதுக் கலாச்சாரம் தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது, என்ற ஆரம்ப கால எதிர்ப்புகளை மீறி ரவுடி ராஜ்ஜியத்துடன் பிள்ளையார் ஊர்வலம் நடக்கிறது.
இப்படி அவரை அவமானப்படுத்த வேண்டாம் என்று மற்றவர்கள் சொன்னால் "இந்துக்கள் மனதை புண்படுத்துகிறார்கள்" என்பார்கள்.
பிள்ளையாரை புண்படுத்தாமல் இருந்தால் சரி.
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
http://kilvaanam.blogspot.com/2007/09/blog-post_15.html