Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, May 20, 2009

அவசர வேண்டுகோள்

பெரிதாக்கி படிக்க இங்கே தட்டுங்கள்

http://www.tamilveli.com/v2.0/Arikkai.pdf



 
.

பெரிதாக்கி படிக்க இங்கே தட்டுங்கள்

http://www.tamilveli.com/v2.0/Arikkai.pdf

இப்படியும் செய்யலாம்

பிரபாகரன்-'ஊடகங்கள் செய்கிற கொலைகள்'-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்


மிழர்களைக் கொன்று பிணக்குவியலாக்குகிற சிங்கள ராணுவத்தின் கொலைகள், ஆதாரத்தோடு ஊடகங்களில் கைகளில் வந்து விழுகிறது.

அந்தக் கொடுமைகளைச் செய்கிற இலங்கை அரசை அம்பலப்படுத்த அல்லது சாதாரணச் செய்தியாகக் கூட வெளியிட விரும்பாத தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆதாரமற்று அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களான 'விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்டார்கள்' என்கிற செய்தியை அவசர

அவசரமாக குதூகலத்தோடு, விஷேசப் படங்கள் என்ற வாசகத்தோடு, மகிழ்ச்சியோடு வெளியிட்டு, 'கல்லாக் கட்டி' குழப்பம் ஏற்படுத்துகின்றன.

இதுபோல் ஈழ பிரச்சினையில் தொடர்ந்து ஒரு சார்பாக செய்திகள் வெளியிடுகிற ஊடகங்களின் சதி வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

ஒரு ஆங்கில தொலைக்காட்சியின் அலுவலகத்தில் 'விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்ட்டார்' என்று கேக் வெட்டி கொண்டாடினார்களாம். இந்த மனோபாவம் கொண்ட யோக்கியர்கள் வெளியிடுகிற செய்தியின் யோக்கியதை எப்படி இருக்கும்?

இதுதான் இவர்களின் நடுநிலை. நல்லதிற்கும் கெட்டதிற்கும் நடுவில் இருக்கும் இவர்களின் மோசமான நடுநிலை. ஈழப்பிரச்சினையில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் நடத்திய வன்முறை, சிங்கள ராணுவத்தின் வன்முறைக்கு இணையானது.

ஈழமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள் என்கிற உண்மையை உறுதியாக ஆணித்தரத்தோடு வெளியிடாத ஊடகங்கள், 'விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்' என்று உறுதி செய்யப்படாத செய்தியை உறுதியாக வெளியிடுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து வெளியிடுவதின் நோக்கம் என்ன?

பிரபாகரன் இருக்கிறரா? இல்லையா? என்ற விவாத்தை விடுங்கள்.

ஆனால் 25 ஆயிரம் மக்களுக்கு மேல் அங்கு பலத்தக் காயத்தோடு உயிருக்குப் போரடிய நிலையில் ஆதரவற்று இருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அகதிகளாக தமிழகத்துக்குப் படகில் வந்த பலர் உணவின்றி வரும் வழயிலேயே இறந்திருக்கிறாகள் என்ற செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டு, 'பிரபாகரன் கொல்லப்பட்டார்' என்று தொடர்ந்து வெளியிடுவதில் ஏன் ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

செய்திகளைத் தாண்டி, 'ஈழ விடுதலைப் போராட்டம் இத்துடன் முடிந்தது' என்று  கருத்துச் சொல்லவேண்டிய கட்டாயம் ஊடகங்களுக்கு ஏன் நேர்கிறது?

இந்தக் கருத்துக்கும் ஊடகங்களுககும் நெருங்கியத் தொடர்பு இருப்பதால்தான் 'விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்' என்று உறுதி செய்யப்படாத செய்தியை, சிங்கள அரசின் சார்பாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

பெரும் திரளான மக்களை கொன்ற,  சிங்கள அரசின் கொலைகளை மறைந்து 'பிரபாகரனை கொன்று விட்டது' என்று கொலைகார சிங்கள அரச, வீரனைப்போல் சித்திரிக்க வேண்டிய project ஊடகங்களுக்கு தரப்பட்டிருக்கிறது.

மக்களின் கவனத்தை திசைமாற்றும் தங்களின் வழக்கமான ஆள்காட்டி வேலையை ஊடகங்கள் கச்சிதமாக செய்து கொண்டு இருக்கின்றன.

ச்ச்சீசீ… இந்த ஈனச் செயலைச் செய்யும், இவர்களை உலகின் மிக மோசமான கெட்ட வார்த்தையால் திட்டினாலும் தவறில்லை….

"போங்கடா….ராஜபக்சே…"

வே.மதிமாறன்


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3467:2009-05-20-13-25-39&catid=39:2008-09-25-16-35-23&Itemid=௫௬



பிரபாகரன் பற்றிய சிறீலங்காவின் நாடகம் எதற்காக?--ஒரு முக்கிய ஆய்வு


விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளத்தை வெட்டி வீழ்த்தியது போல, எத்தனை முறை பொய்யான வதந்தி வேதாளங்களை வெட்டி வீழ்த்தி அடக்கம் செய்ய சுமப்பது?

தமிழர்களின் வரலாற்றில் மிக உன்னதமான போராளியான பிரபாகரன் துப்பாக்கி தூக்கிய காலங்கள் முதல் வதந்திகளும் அவரைச் சுற்றி பரப்பப்படுகிறது. இம்முறை வேதாளம் நிமிடத்துக்கு, நிமிடம் காட்சிகளை மாற்றிக் கொண்டு வருகிறது.

ஏன் இந்த நாடகங்கள்?

புலித்தேவன், பா.நடேசன் சமாதானமாக வெள்ளைக் கொடியுடன் ராணுவத்திடம் சென்ற போது அவர்களையும், அங்கு ஆயுதங்களை கீழே வைத்த போராளிகளையும், ஆயிரக்கணக்கான மக்களையும் கொன்றதாக செய்திகள் வருகின்றன.

சர்வதேச போர் விதிகளையும், மனித உரிமை, மனிதாபிமான சட்டங்களை மீறிய சிறீலங்காவின் இந்த வெறியாட்டத்தை மறைத்து சர்வதேச நாடுகளின் கவனத்தையும், ஊடகங்களின் பார்வையையும் மறைக்க, இனப்படுகொலைக்கு துணையாக நிற்கிற நாடுகளும் நடத்தும் நாடகம் பிரபாகரன் பற்றிய படங்களும், ஒளிக்காட்சிகளும்.

இதற்கும் உலக அளவில் உருவாகிற சில மாற்றங்களும் தொடர்புடையவை. பிரிட்டன் பாராளுமன்றத்தில் சிறீலங்காவிற்கு எதிராக போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை, பொருளாதாரத் தடைகள், ராஜதந்திர தடைகள், பொதுநலவாய நிதியத்திலிருந்து விலக்கல் கொண்டு வரவேண்டுமென்று பேசினார்கள்.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்காவை பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் எச்சரித்திருந்ததை கவனிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக எச்சரித்தது.

இந்த அழுத்தங்களிலிருந்து தப்பிக்க போரை முடிவுக்கு கொண்டுவந்து வெற்றியை அறிவிக்கும் தேவை சிறீலங்காவுக்கு உருவானது. உடனடியாக ஜோர்டானிலிருந்து அவசரமாக ராஜபக்சேயின் பயணம் துவங்கியது. நாடகத்தை அரங்கேற்றமும் கச்சிதமாக துவங்கியது. பிரபாகரனையும், தளபதிகளையும் அழிக்காமல் போரை முடித்ததாக அறிவித்தால் தென்னிலங்கையில் ராஜபக்சேவுக்கு எதிராக மதவெறியும், சிங்கள இனவெறியும் பிடித்த புத்த பிக்குகள் உள்ளிட்ட சிங்கள பேரினவாதக் கூட்டம் தயாராகும். இவர்கள் தயவில்லாமல் ராஜபக்சேவால் பதவியில் இருக்க முடியாது.

எதிர்கால சிறீலங்கா அரசியலில் ராஜபக்சே குடும்பம் நீடிக்க 'துட்டகை முனுவாக' ராஜபக்சேவுக்கு அவதாரம் தேவை. அதற்கு தமிழர்களின் தலைமையான 'எல்லாளன்' பிரபாகரனை கொன்றதாக சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டும். அப்படியே சர்வதேச ஊடகங்களையும் இனப் படுகொலை குற்றங்களைப் பற்றியும், அரசியல் பிரச்சனைகள் பற்றியும் பேசாது திசை திருப்பலாம். காட்சிகள் படங்களாக, ஒளிக்காட்சிகளாக பரவியது.

மகிந்தா ராஜபக்சேயின் போர்த் திட்டங்களின் கட்டங்களில் ஒன்று புலிகளின் நிர்வாகத்திலிருந்த நிலங்களைப் பிடிப்பது. இதில் அவர்கள் கிழக்கில் துவங்கி, வடக்கிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னொன்று விடுதலைப்புலிகளின் மரபுரீதியான நிர்வாக, ராணுவக் கட்டமைப்புகளை அழிப்பது. இதிலும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொன்று புலிகளின் முக்கிய தளபதிகளையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும் அழித்தொழிப்பது.

பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகள், கட்டமைப்புகளை அழித்தால் ஈழப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாமென்ற சிந்தனையின் விளைவான போர்த் திட்டமிது. இந்தியாவும் இத்தகைய கொள்கையை எண்பதுகளில் இந்திராவுக்கு பிறகு ராஜீவ் காந்தியின் ஆட்சியிலிருந்து துவங்கியிருந்தது. அதற்கு புதுடில்லியிலும், கொழும்பு தூதரகங்களிலும் பொறுப்பு வகித்த அதிகாரிகளுக்கு பிரதான பங்குண்டு.

இந்திய அமைதிப் படையின் காலத்தில் பிரபாகரன் கொல்லப் பட்டதாக செய்தி ஒன்றை பரப்பியது. அப்போது தினமலர், இந்து உள்ளிட்ட நாளிதழ்கள் வதந்திக்கு கண், காது, மூக்கு வைத்திருந்தன. உண்மையில் பிரபாகரனது இருப்பிடத்தை அறியும் நோக்கத்துடனும், தமிழ் மக்களின் மனபலத்தை நொறுக்கி ஈழப் போராட்டத்தை முடிக்கும் எண்ணத்துடனும் அத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டன. அப்போது பிரபாகரன் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.

ஆனாலும் தமிழ் மக்களும், போராளிகளும் மனம் தளராது போராட்டத்தை தொடர்ந்தார்கள். சுனாமிப் பேரழிவின் போதும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு செய்திகளை பரப்பியது.

மகிந்தாவின் திட்டத்தின் கடைசி பகுதி புலம்பெயர் தமிழர்களையும், வன்னி மக்களையும் ஈழப் போராட்டப் பாதையிலிருந்து பிரித்தெடுப்பது. அதற்காக அவர்களது ஆன்ம பலத்தை சிதைப்பதற்காக புலிகள் இயக்கம் மீதான நம்பிக்கைகளை தகர்க்க பல பிரச்சாரங்களை போர் நடந்த போது நடத்த துவங்கியது. அதன் இன்னொரு காட்சியாக பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒன்றுக்கொன்று முரணான பலவித படங்களை, புதிது புதிதாக பரப்புகிறது. சிறீலங்கா.

பிரபாகரன் இன்னமும் எங்கோ பாதுகாப்பாக இருக்கிறார். இறப்புகளின் போது வரும் மனதை தற்காலிகமாக திருப்திப்படுத்துகிற வெற்று நம்பிக்கையல்ல இது. பிரபாகரனின் உருவ அமைப்பிலுள்ள ஒருவரை அதற்காக பயன்படுத்தியிருக்கிறது சிறீலங்கா.

ஆனாலும் பிரபாகரனின் உடல் அமைப்பு, அங்கங்களுக்கும் சிறீலங்கா வெளியிட்டுள்ள படங்களுக்கும் எந்த பொருத்தமும் இல்லை. பிரபாகரனின் போலிப் படங்களை சர்வதேச அரசுகளும், ஊடகங்களும் கேள்விக்கு உட்படுத்தாமல் வெளியிடுவதன் பின்னால் சிறீலங்காவின் திட்டங்களுக்கு இசைவாக போகிற போக்கு பிரதான காரணம். அதை செய்வதால் 'புலிகளுக்கு பிந்தைய அரசியல்' என்னும் ஏற்கனவே இந்தியா தயாரித்து இயக்குகிற நாடகத்தை அரங்கேற்றலாம். புலம்பெயர் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இந்த சதிகளையும், அரசியலையும் ஆழ்ந்து கவனித்து செயலாற்ற வேண்டும்.

ஈழப் போராட்டம் பிரபாகரனோடு துவங்கியதில்லை. பிரபாகரனை பலமுறை வழியாக வதந்திகளில் கொல்வதாலும் முடிவதில்லை. ஈழத்திற்கான அரசியல் உருவை வட்டுக்கோட்டை தீர்மானம் வழியாக கொடுத்த தந்தை செல்வா மறைந்த பிறகு ஈழப் போராட்டம் முடிந்து போனதா? அதுபோல.இன்னும் அரசியல் விவேகத்துடன், வேகம் பெறும். இடங்களை பிடிப்பதாலும், போராளிகளை அழிப்பதாலும் முடிந்து போகக் கூடியதா தமிழர்களுக்கான அரசியல் உரிமை பிரச்சனைகளுக்கான சுதந்திர உணர்வு?



http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/mahinda1.jpg

கடந்த 3 நாட்களில் பிரபாகரன் இறப்பு பற்றிய வதந்திகள்
3 நாட்களில் மட்டும் பிரபாகரனை கொலை செய்ததாக செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. முதலில் பதுங்குக்குழியில் பிரபாகரன் தற்கொலை செய்திருக்கலாமென இணையத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டது. பிரபாகரனது மகன் சார்ல்ஸ் ஆன்றனியை கொன்றதாக சற்றும் பொருத்தமில்லாத படத்தை வெளியிட்டது. பொட்டு அம்மான், சூசை போன்ற தளபதிகளை கொன்றதாக செய்தியை பரப்பியது. அவர்கள் கொல்லப்பட்டதற்கான எந்த தடையமும் இல்லை. பிரபாகரன் முகத்தோற்றமுடைய படங்களும், ஒளிக்காட்சிகளும் இன்று பரப்பியது போல மற்ற தளபதிகளுக்கும் தயாரித்து வெளியிடவும் தயங்காது சிறீலங்காவும், உளவு அமைப்புகளும்.

அடுத்ததாக நேற்றைய செய்தியில் பிரபாகரன் 'ஆம்புலன்சில்' தப்பிய போது சுட்டுக் கொன்றதாக பரப்பின சிறீலங்காவின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள். 600 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் சண்டை நடந்த போது பிரபாகரனும், தளபதிகளும் ராணுவத்தின் பல சுற்று பாதுகாப்பு, கண்காணிப்பு வளையத்தையும், உடைக்க 'ஆம்புலன்சை' பயன்படுத்தினார்கள் என்றது கோடம்பாக்கத்தின் திரைப்படக் கதைகளுக்கு கூட பொருந்தாத 'லாஜிக்'. அதையே மீண்டும், மீண்டும் ஒளிபரப்பினார்கள்.

வீதிகளில் பட்டாசு வெடித்தும், பால்ச்சோறு, சம்பல் பரிமாறியும் கொண்டாடினார்கள். போர் முடிவுக்கு வந்ததாகவும். இலங்கையில் அனைத்து பகுதிகளும் சிறீலங்கா அரசின் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்தார்கள். மகிந்தா முப்படைத் தளபதிகளையும், பரிவாரங்களையும் சந்தித்து கேக் வெட்டி கொண்டாடியுமிருந்தார்.

இந்திய பார்ப்பன ஊடகங்களும் கொண்டாடின. இந்து ராம் போன்றவர்கள் கக்கத்தில் சுமந்து நடக்கிற கருத்துப் பாசிசத்தை ஊடக குழாய்களில் ஊதிப்பெருக்கி பேனுக்கு கண் வைத்து, காது வைத்து பேயாக்கி மகிழ்ந்தார்கள். அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் வழக்கை முடிக்க வசதியாக இருக்குமென்று தமிழர்களின் ரத்தத்தை நக்கியபடி இந்தியா நேற்று சொன்னது. பரிசோதனை செய்கிறோமென்றது சிறீலங்கா. பிரபாகரனின் ரோமங்கள் கூட தங்களிடம் இல்லாத போது யாருடைய டி.என்.ஏ மாதிரிகளுடன் பிரபாகரன் என்பதை உறுதிப்படுத்துவார்கள்?

இன்று ராஜபக்சே பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எங்கும் பிரபாகரன் பற்றிய தகவல் இல்லை. என்ன செய்வது ராஜபக்சேயின் பேச்சுக்கு முன்னர் முகமூடி ஒளிப்படங்களும், மார்பிங் படங்களும் அப்போது தயாராகியிருக்காது. பாராளுமன்றத்தில் அறிவித்தால் சட்டப்பூர்வமாக பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதாகிவிடும். அதன் பிறகு பிரபாகரன் மீதான வழக்குகள், குற்றங்களை சிறீலங்காவால் சுமத்த முடியாது.

ஆனால் தற்கால வெற்றிக்கும், இழுத்த ஆப்பை பிடுங்கவும் ராஜபக்சே குரங்கிற்கு பிரபாகரனை கொன்றதாக அறிவிக்கும் அவசியமுள்ளது. பாராளுமன்றத்திற்கு வெளியே பொன்சேகாவை வைத்து இன்று பிரபாகரன் தப்ப முயன்ற போது நந்திக்கடலில் கொன்றதாகவும், இன்று உடல் கிடைத்ததாகவும் நாடகத்தை இன்னொரு முறை அரங்கேற்றியது. அதற்காக ஒரு படம், ஒரு ஒளிக்காட்சி! 'ஆம்புலன்சில்' தப்பிய போது சுட்டது உண்மையானால் நந்திக்கடலில் தண்ணீரில் 'ஆம்புலன்ஸ்' ஓட்டுகிறார்களா?

2 நாட்களுக்கு முன்னர் இறப்புக்குள்ளான உடலின் முகம் மார்பிங் அல்லது முகமூடிகள் போல பளீரென்று இருக்குமா?

2008 மாவீரர் உரை படங்களை விடவும் சிறீலங்கா வெளியிட்டுள்ள படங்களில் முகம் இளமையான தோற்றத்துடன் இருப்பது ஏன்?

இறந்து பல மணிகளான/நாட்களான உடலில் தலையை எளிதாக திருப்ப முடிவது எப்படி?

தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரது ராணுவ உடை சற்றும் கலையாமல் இருப்பது எப்படி?

நேற்று டி.என்.ஏ பரிசோதனை செய்த உடலை, இன்று கண்டுபிடித்தது எப்படி? அப்படியானால் நேற்று கண்டுபிடித்த உடல் யாருடையது? இன்று தான் கண்டு பிடிக்கப்பட்டதானால் நேற்று பொன்சேகாவின் டிஎன்ஏ பரிசோதனையா நடந்தது? சரத் பொன்சேகா!

மார்பிங் அல்லது முகமூடி படங்களும், காட்சிகளும் போலியானவை என்பதற்கான விளக்க படம் (இப்படச் சுட்டியை தந்த பதிவர் நண்பர் பதிக்கு நன்றி! படத்தின் மேல் அழுத்தி முழுவதும் பெரிதாக பார்க்கவும்.)கெட்டிக்காரன் புளுக்கு எட்டு நாளைக்கு. இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் சில மணிநேரங்களுக்கு.

சார்லஸ் ஆன்றனி என்று வந்த படமும் இன்னொருவருடையது. பிரபாகரன் பற்றி வெளியாகிற இப்போதைய படங்களும், செய்திகளும் பொய். சார்லஸ் ஆன்ரனி என்று சிறீலங்கா அடையாளங்காட்டுகிற உடல் சார்லஸ் என்னும் பெயருடைய கடற்புலிகள் அணியை சார்ந்த இன்னொரு போராளியுடையது. சார்லஸ் ஆன்ரனியும் எங்கோ நலமாகவே இருக்கிறார்.

நம்பாதீர்கள்!

நண்பர்களே,
தொழில்நுட்ப உலகின் யுத்தம் ஈழத்தில் நமது மக்களின் உளவியலை பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. அதற்கு பலியாகி விடாதீர்கள். இன்னொரு அத்தியாயத்தில் ஈழப் போராட்டம் நகரும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டிருக்கின்றார். பாதுகாப்பான தளத்தில் தனது முக்கிய தளபதிகளுடன் அவர் இருப்பதை நம்புங்கள். அவராக வெளியே வரும் வரையில் சிங்களப் பேரினவாதமும், துணைக்கு நின்றவர்களும் கொண்டாடட்டும்.

இப்போது நாம் சிறீலங்கா செய்துள்ள போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மறைக்கவும், அழிக்கவும் உளவு அமைப்புகளும், அரசுகளும் நடத்துகிற நாடகங்களுக்கு பலியாகாமல் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு நீதி பெற கவனம் செலுத்த வேண்டும்.

ஈழம் ஒரு போதும் வெற்றுக் கனவாக முடியாது. தமிழ் மக்களின் சுதந்திர வேட்கை இன்றைய இழப்புகளால் கலைந்து போகாது. நேற்றைய, இன்றைய தவறுகளிலிருந்து கற்ற அனுபவங்களோடு தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடரும். சுதந்திர தேசமாக ஈழம் பிறக்கும் போது ஈழத்தமிழர்களும், உலகத்தமிழர்களும் தங்கள் இன்பக் கண்ணீரால் இன்றைய துயரங்களை துடைப்பார்கள். நம்புங்கள்! நம்பிக்கைகளை உடைக்க சிறீலங்கா முன்னெடுக்கும் அனைத்து உளவியல் தந்திரங்களையும் ஒற்றுமையுடன், உறுதியாக எதிர்கொள்ளுங்கள் தமிழர்களே!

களத்தில் வீழ்ந்த போராளிகளுக்கும், மக்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கம்!

நன்றி:யோ.திருவள்ளுவர்

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3468:2009-05-20-13-40-50&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

கேள்விகள் இங்கே... பதில்கள் எங்கே...?

பல கோள்விகள் சந்தைகங்கள் ஐயங்கள்
 
1.சவரம் செய்த முகம்- உயிர் பிரியும் நாளில் கூட முக சவரம் செய்து Mr.Clean ஆக????
2.யாருடைய டி.என்.யே-வுடன் ஒப்பிட்டீர்கள்
3. டி.என்.யே பரிசோதனை வசதி இலங்கையில் இல்லையே
4. முக மூடி ஆர்டர் கொடுக்கும் போது ஏன் புதிய புகைப்படத்தை கொடுக்கவில்லை
5. 2000 க்கு முன்புள்ள முகம் அது
6. தலை பின்புறம் அத்தனை சேதம் அடைந்திருந்தால், கழுத்தில் தோட்டாக்கள் பாய்ந்திருந்தால்
மருத்துவர்களின் கூற்றூப்படி முகம் சில மணி நேரத்தில் கருத்துவிடும்.
7. ஆம்புலன்ஸ் திரைக்கதையை யார் எழுதியது
8. அது எப்படி வீரப்பனுக்கும் ஆம்புலன்ஸ், பிரபாகரனுக்கும் ஆம்புலன்ஸ் - ஒரே திரைக்கதை ஆசிரியரா
9. பிரபாகரனுக்கு அதனை அடர்த்தியான புருவம் எந்த புகைப் படத்திலாவது யாராவது பார்த்திருக்கிறீர்களா
10. டி.என்.யே பரிசோதனை செய்து முடித்தபின் பிரேதம் கண்டெடுப்பு அருமை.. அருமை
11.இந்திய அரசாங்கம் போட்டுக் கொடுத்த அட்டவனைப் படி கச்சிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்டுகிறதா
12. தேர்தல், வாக்கு எண்ணிக்கை முடிந்து அடுத்த அரசு பதவி ஏற்புக்கு உட்பட்டு care taker  அரசாங்கம்
இருக்கும் போது நடந்தால் பொறுப்பு ஏற்காமல் நழுவிவிடலாம் அல்லவா
13. அடையாள அட்டை Matter அய் இந்திய பாராளுமன்றத் தாக்குதலில் இருந்து எடுத்து கையாண்டீர்களா
14. அடுத்து அமெரிக்கா ஒரு வேலை ஒசாமா பின் லாதனை பிடித்தால் பாருங்கள் அவரிடமும் அவரே
கையோப்பமிட்ட Identity Card இருக்கும். அதாவது நான் தானுங்க அந்த அவர்????????
15.ராஜபக்சே இப்பொழுதும் கூட பிரபாகரனின் மரணத்தை பாராளுமண்ரத்தில் அறிவிக்க தாயாரா???
16. கண்கள் இத்தனை பிரகாசமாக ......
17. கைகள் தண்ணீரில் ஊரிய நிலையில் முகம் மட்டும் எப்படி தண்ணீரில் ஊரவில்லை
18.எந்த உலக ஊடக நிருபரும் போர் பகுதிக்கு அனுப்படாத நிலையில்  The Hindu வில்  Muralidhar Reddy க்கு
மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளாது. அவன் RAW வின் ஏஜண்டா, அல்லது தமிழரை காட்டி கொடுப்பவனா.
19. The Hindu N.Ram  க்கும் Subramania Swamy க்கும் இலங்கை பிரச்சனையில் விஷேச அக்கறை ஏண்??
20. பார்பான் தமிழுக்கு தமிழருக்கு துரோகி தான் என்கிற பெரியாரின் கூற்றூ முற்றாக உன்மை...
பெரியாரை கொண்டாடுவோம்.

 

 
உங்களுக்கு முக மூடிகள் வேண்டுமெனில் அனுகவும்












மக்கள் தொலைக்காட்சியில் பிரபாகரன் ஆய்வு

மக்கள் தொலைக்காட்சியில் முன்வைக்கப்பட்ட தலைவர் பிரபாகரன் குறித்த ஆய்வு



http://www.youtube.com/watch?v=_Wjdj73vkxk


மக்கள் தொலைக்காட்சியில் இன்று 19.05.2009 தலைவர் பிரபாகரன் குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது காணொளி இணைப்பு

ஈழத்தமிழன் செத்தால் தந்தி,மகன் பதவிக்கு ஏறுவார் விமானம்

ஈழத் தமிழன் செத்தால் தந்தி; மகனுக்கும் மகளுக்கும் பதவி வேண்டுமென்றால் டெல்லி பயணம்!


அடடா… கலைஞரின் தமிழின உணர்வு புல்லரிக்க வைக்கிறது. sonia-karu4 ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனின் எண்ணிக்கை பத்து நூறாகி ஆயிரம் லட்சமாகி இன்று ஆயுளுக்கும் நெஞ்சை விட்டகலாத துன்பமாகிவிட்டது.

தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரது இதயமும் ரத்தம் வடிக்கிறது. ஆனால் இங்கோ அது அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் தேர்தல் பிரச்சினைக்குத் தொட்டுக் கொள்ளும் உறுகாயாகிவிட்டது.
தேர்தல் வரை கொழுந்து விட்டு எரிந்த ஈழப் பிரச்சினை, தேர்தல் முடிந்ததுமே கை கழுவப்பட்டது. தனி ஈழம் என்று சொன்னவர், தேர்தல் தோல்வி தந்த கோபத்தில் ஒரு அறிக்கை விட்டு முடங்கிப் போக, அவருக்குப் போட்டியாக தமிழீழம் வாங்கித் தருவதாகச் சொன்னவர் இப்போது மீண்டும் தபால் அனுப்புவதிலும், தந்தியடிப்பதிலும்ம மும்முரமாகி விட்டார்.

தாயக தமிழினம் இந்த விளையாட்டுக்களை வேடிக்கை பார்க்க, உலகம் பேடித்தனமாய் வாய் மூடிக் கிடக்க, இந்தியப் பாதுகாப்போடு சிங்கள காடையர்கள் எம் உறவுகளைக் மொத்தமாகக் கொன்றழித்துவிட்டனர்.

யாருக்காக தமிழீழம்..? இனி எதற்காக தனி ஈழம்? யார் தலைமையில் தமிழீழம்?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் பதிலிருக்கிறதா திமுக தலைவர் அவர்களே…

30 ஆண்டு காலம்… ஆயிரக்கணக்கான மறவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை, ராஜீவ் காந்தி என்ற சராசரி ஊழல் அரசியல்வாதி ஒருவரது மரணத்துக்காக நிர்மூலமாக்கிவிட்டீர்களே… நியாயமா?

ஈழத்தில் எம் உறவுகள் அழியும் போது, வேதனைக் குரலில் நாடகமாடி, தந்திகளையும் கடிதங்களையும் டெல்லிக்கு அனுப்பி வந்த நீங்கள், இன்று மத்திய ஆட்சியில் மகனுக்கும் மகளுக்கும் பங்கு வாங்க, இந்த தள்ளாத வயதிலும், நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் தருணத்திலும் விமானம் பிடித்து டெல்லி பறக்கிறீர்களே… உலக மகா நடிகரய்யா நீர்…

கொஞ்ச நஞ்சமிருந்த சின்ன மரியாதையும் தூக்கி எறிந்துவிட்டுச் சொல்கிறோம்… பழிவாங்கப்பட்டு, குடும்பங்களையும் எம் இனக் காவலர்களையும் இழந்துவிட்டு கண்ணீருடன் கதறும் எம் உறவுகளின் சார்பில் நின்று உணர்வுள்ள தமிழனாய்ச் சொல்கிறோம்…

எதிரிக்குக் கூட மன்னிப்புண்டு… இனப் படுகொலைக்கு மௌன சாட்சியாய் இருந்த உமக்கு எந்தப் பிறவியிலும் மன்னிப்பே கிடையாது! உங்கள் மரணத்தின்போது சிந்த இந்த தமிழர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரும் மிச்சமிருக்காது!

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3461:2009-05-20-04-25-30&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56


உணர்வோடு கலந்த பிரபாகரன் மாலைமலர் கட்டுரை

பெரிதாக்கி படிக்க இங்கே தட்டுங்கள்

http://epaper.mmnews.in/2052009/showtext.aspx?parentid=1183&boxid=16343953



Image and video hosting by TinyPic






பெரிதாக்கி படிக்க இங்கே தட்டுங்கள்

http://epaper.mmnews.in/2052009/showtext.aspx?parentid=1183&boxid=16343953
.
.
.
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!