தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, January 11, 2010

♥ யார் சொன்னாலும் கேட்காதே, போராடு! ♥

11/01/2010(இன்று திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்?????இன்றைய ஃபேஸ்புjavascript:void(0)க்கில் இடம்பெற்றுள்ள கதறல் செய்தி இதுதான்!

முள்வேலி முகாம்களிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட்ட 255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் அணைவரும் வரும் 11.01.2010, திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ப்போகிறார்கள் என்றும். அதற்குமுன் அவர்களை காப்பாற்ற மின்னஞ்சல்களிலோ மற்றும் ஏதும் மூகாந்திரங்களிலோ இந்தோனேசியவிலுள்ள ஐக்கியநாடுகள் சபை கிளையை

http://www.un.or.id/contacts

என்கிற இணைய முகவரி மூலம் தொடர்புகொண்டு நம் தாய் தமிழர்கள் 255பேரைகாப்பற்ற உதவுங்கள் என்று செய்தியை படிப்பவர்கள் அணைவரையும் கோருகிறார்கள்!

படிக்கையில் அதிரச்செய்யும் அந்த செய்தியில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள மற்ற சுட்டிகள்

http://www.theage.com.au/national/tamil-refugees-questioned-by-sri-lankan-officials-20100109-lz4q.html

http://www.theaustralian.com.au/news/world/sri-lanka-grills-tamils-in-jakarta/story-e6frg6so-1225817519367

இந்த செய்தியை நான் படிக்கையில் இப்போது சனிக்கிழமை 9.01.2010 இரவு 12 மணியாகிறது. மீதமுள்ளது நம்மிடம் அதிகபட்சம் 24மணி நேரம்தான்!

மேலே உள்ள இரண்டு சுட்டிகள் மற்றும் கூகுள் தேடல்களில் அவர்களின் இப்போதைய நிலை குறித்து எந்த விவரமும் என்னால் பெற முடியவில்லை

எனவே நான் un-indonesia@un.or.id என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்காணும் வேண்டுகோளை அனுப்பியுள்ளேன்.

Dear Sirs,

I understand that there are 255 defenseless, war stricken, terrified Tamil refugees pleading for asylum to the Government of Australia. They were caught by the Indonesian government at Jakarta and the Srilanka officials are now in Jakarata involved in interrogation of those poor Tamils. Also I learnt from the news agencies that the Sri Lankan Government plans to take them back to Sri Lanka on Monday in order to execute them.

Kindly stop the deportation of refugees fleeing from a government trying to kill them. This is like handing the Jewish people over to the Nazis, PLEASE HELP STOP THIS!
They survived a brutal genocide and lost everything before their eyes. These are innocent families, and right now, the genocidal Sri Lankan Government, the same one that destroyed everything in front of their eyes, disregarding the fact that they were civilians, that they were humans sent its Navy into Indonesian waters in order to bring them back to Sri Lanka on Monday,,January 11th . There are little children and babies on this boat, and every single one of these refugees will be killed if something isn't done to save them! They don't have UNHCR or any other ID cards, they will die, every single one of them. Please help save them!
--
K.Thangamani Prabu
Chennai, India
(நானும் மடல் அனுப்பியுள்ளேன்..இதைப் படிப்பவர்களும் அனுப்ப வேண்டும்)

மிகுந்த மன அழுத்தத்துடன் நான் அனுப்பிய இந்த மின்னஞ்சல் செய்தியில் ஏதும் எழுத்து அல்லது இலக்கண் பிழைகள் இருக்குமாயின் நிக்கிவிட்டு தயவு செய்து நீங்களும் மேலுள்ள முகவரிக்கோ அல்லது http://www.un.or.id/contacts என்கிற தளத்திலிருந்து உங்களுக்கு சரியெனப்பட்ட முகவரிக்கோ வேண்டுகோள் மின்னஞ்சலை அனுப்புங்கள். உங்கள் ஈமெய்ல் பல தமிழ் உயிர்களை காப்பாற்றும்!

வளர்ந்து பெரிய பிள்ளையானால் நீ போராளியாகலாம்! என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம்! அந்த கொலைகாரர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள். இந்திய வாழ் தமிழர்களாலும், ஏன்… அமெரிக்காவாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிற மமதை நிறைந்த அந்த கொலைகாரகூட்டம் எந்தவிதமான கொலைக்கும் அஞ்சமாட்டார்கள்!!

255 பேர், ஏதுமறியா அப்பாவிகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தாய்மார்கள், இலங்கையில் தமிழர்களாக பிறந்ததன்றி எந்த தவறும் செய்யாதவர்கள்! ஒரே வெடிகுண்டால் அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி குண்டென்கிற விதத்தில் அந்த ஈரமற்ற சிங்களக்காடையர்கள் நம் த்மிழர்களை கொண்று போடுவதை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இப்போதைக்கு மின்னஞ்சல்தான். தயவு செய்து அவர்களுக்கு உதவுவோம்.(செய்தி ஏஜன்சிகளில் தொடர்புள்ள பதிவர்கள் ஜக்கார்தாவில் சிங்கள அதிகாரிகளின் விசாரணை முடிந்து இலங்கை கொண்டு செல்ல ஆயுத்தப்படுத்தப்படும் அந்த 255 தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்று தெரிந்துகொண்டு பதிவிட்டால், நாம் இன்னமும் ஏதும் செய்ய முயலலாம்)


*********

தங்கமணி பிரபுவின் இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியை கொஞ்சம் தள்ளி வைத்து நானும் மடல் அனுப்பி இருக்கிறேன்.. இதைப் படிப்பவர்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவு.

http://www.narsim.in/2010/01/11012010-255.html
http://www.ikaro.net/br/wp-content/uploads/2009/01/sms.jpg
என் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி

எத்தனை துன்பங்கள் வந்தாலும்....
எத்தனை தடைகள் வந்தாலும்.... எனக்கு கவலை இல்லை!
ஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன் இல்லை.
1000 முறை தோற்றவன் !
_எடிசன்


http://www.pathivu.com/uploads/images/NEWS%20PHOTOS/2009/JULY/vellupillai.jpgதேசியத் தலைவரின் தந்தைக்கு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வணக்கம் செலுத்தினர்.

http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SOj1_D7lSsI/AAAAAAAACLg/66k3kC9nO0Q/s400/leader_20081005003.jpg

12


நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் வட்வெட்டித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் இருந்து வருகைதந்த திருமாவளவன், சட்டவாளர் சந்திரசேகரன் உட்பட பலரும் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி வரை தீருவில் சதுக்கத்தில் மக்கள் வணக்கத்திற்காக உடலம் வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேசியத் தலைவரின் இல்லத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு இந்துமுறைப்படி ஈகைக்கிரிகைகள் இடம்பெறவுள்ளது.

இறுதியாக வட்வெட்டித்துறை பொதுமயானத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு தகனம்


1236689101214


http://www.worldtamilweb.com/?p=1711பிரபாகரன் தாயார் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும்: வலுப்பெறும் கோரிக்கைகள்

இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை ராணுவம் பிடித்து சென்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் கொழும்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார்.

வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் இன்று நடக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ராணுவ தடுப்பு காவலில் இருந்து திடீரென விடுதலை செய்யப்பட்டார்.

கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் வல்வெட்டி துறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் அவதிப்படுகிறார். அவருக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன. எனவே சிகிச்சைக்காக அவர் இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் எம்.பி.யும், அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர், ‘’இலங்கையில் உள் நாட்டு போர் நடந்தபோது கடந்த 1980-ம் ஆண்டுகளில் பார்வதியும் அவரது கணவர் வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தங்கி இருந்தனர். இலங்கை அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தபோது போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பினார்கள்.

இவரது மகள்களில் ஒருவரான ஜெகதீஸ்வரி மதியாபரணம் தமிழ்நாட்டில் தான் தங்கியுள்ளார். எனவே, அவரை சிகிச்சைக்காக இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.

அவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டால் கொழும்பில் வைத்து இவருக்கு சிகிச்சை அளிப்பேன். அதற்கு இலங்கை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் தாயார் பார்வதியை சிகிச்சைக்காக இந்தியா வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24493


பிரபாகரன் தாயாரை என் வீட்டில் வைத்து பராமரிப்பேன்: வைகோ

http://www.lovetamils.com/eelam/wp-content/uploads/2009/10/vaiko.jpg
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு இலங்கையில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

’’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது.

பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24517

http://www.independent.co.uk/multimedia/archive/00090/pg-28-Tamil-Getty_90221a.jpg

745 முன்னாள் விடுதலைப்புலிகள் விடுதலை


இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் தடுப்பு காவல் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 745 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

வவுனியா மாவட்டம் மேனிக்பார்ம் முகாமில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அவர்களை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்தார். இவர்களில் 98 சிறுவர்களும் அடங்குவர். அனைவரும் அவரவர் பெற்றோருடன் சேர்ந்தனர்.

அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல விடுதலைப்புலிகளை விடுவிக்க பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24484


http://i.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01374/tamil_1374237c.jpg
E-paper | Rss Feed | Site Mapசன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ்
Tamil, Tamil News, Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema


சென்னை : தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் அரசு பொது மருத்துவமனையில் உயிர் பிழைத்தார்.அண்ணா நகர் (மேற்கு) குஜநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபி (42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அனுராதா. மாதவரத்தில் உள்ள கம்பெனியில் செக்யூரிட்டியாக கோபி வேலை பார்த்தார். கடந்த மாதம் 30ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபியை சேர்த்தனர்.
இந்நிலையில், கோபி இறந்து விட்டதாக கடந்த 7ம் தேதி டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு ஐஸ் பெட்டியில் கோபியின் உடலை வைத்த போது உடல் ஆடியுள்ளது. வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபியின் உறவினர் தனபால் கூறியதாவது:
கோபியை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 48 மணி நேரத்தில் காப்பாற்றி விடலாம் என்றனர். ரூ.1.40 லட்சம் மருந்துகள் வாங்கி கொடுத்தோம். மருத்துவமனை பில் மட்டும் ரூ.1.25 லட்சம் ஆகிவிட்டது.
இந்நிலையில் கோபி இறந்துவிட்டார். ரூ.1 லட்சத்தை செலுத்தி விட்டு உடலை எடுத்து செல்ல டாக்டர்கள் கூறினர். அதன்பின் மருத்துவமனையில் பேசி ரூ.40 ஆயிரம் கட்டிவிட்டு கோபியின் உடலை எடுத்து சென்றோம். உடலை புதைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம். உறவினர்களும் மாலைகளுடன் வந்துவிட்டனர். ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்ற போது அசைவுகள் இருந்தன. வீட்டுக்கு கொண்டு சென்றதும், கோபி உயிருடன் இருக்கிறான். இறந்து விட்டதாக கூறுகிறாய்’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். அதன்பின் கோபியை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.
இவ்வாறு தனபால் கூறினார்.
மருத்துவமனை டீன் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘கோபி மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

http://dinakaran.com/highdetail.aspx?id=3756

http://koottanchoru.files.wordpress.com/2009/04/kalaignar1.jpgநம்மிடம் வரியாக வசூலித்த பணத்தில்...
அதாவது நம் பணத்தை , தானே கஷ்டப்பட்டு தன் சொந்த பணத்தை மக்களுக்கு இலவசமாக வாரி வழங்குவது போல வழக்கம் போல ஒரு புதிய திட்டத்தை

உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்


என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், கலைஞர்.

போதுமான ஊழியர்களை நியமித்து, காலியிடங்களை நிரப்பாத,எந்த பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் போய் சிகிச்சை பெற அஞ்சுகிற கலைஞர் கருணாநிதி அரசு.இவ்வளவு ஏன் கலைஞங்கரே சிகிச்சை பெற நடுங்கும் ,ஏற்கனவே இருக்கிற அரசு மருத்துவ மனைகளை சரியாக பராமரிக்காத கலைஞர்

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் உண்டு கொழுக்க தான் , இந்த புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் ,கலைஞர் !

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவ செலவு ஏழைக்கு வந்தால்....?
கலைஞர் ஆட்சியில் இருப்பதை விட இறப்பதே மேல் என்று போய் சேரவேண்டியது தான்!

அப்படி சாகிற ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பார்,நம் கலைஞர்..!

இந்த லட்சணத்தில் தான்....

தனியார் மருத்துவ மனையில் இறந்த மனிதர் அரசு மருத்துவ மனையில் உயிர் பிழைத்தார்!
என்ற செய்தியை கலைஞரின் பேரப்பிள்ளைகளின் பத்திரிகை தினகரனே வெளியிட்டிருக்கிறது !

கொலைகார கலைஞர் என்ன சொல்லப் போகிறார்?


_மனிதன்.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg
http://www.vinavu.com/wp-content/uploads/2009/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE.jpg

யார் சொன்னாலும்
கேட்காதே,
போராடு!


அகராதி!
அடித்தார்களா மகளே உன்னை?
ஆண் பெண் பிரிவின்றி
வளர்ந்தவளை
வளர்க்கப்பட்டவளை
ஆண்மையற்ற ஆண்களும்
பெண்மையற்ற பெண்களுமான
நாலைந்து காக்கிப் போக்கிலிகள்
இறுக்கிப் பிடித்துக் கொள்ள
பொறுக்கிச் சிறுக்கி
தன்கை வலிக்கத்
தடி கொண்டடித்தாளா?
தன்னந்தனியாய்
வெறுங்கையாய் நீயொருத்தி
உன்னைச் சுற்றி நின்று
தடி சுழற்ற
இத்தனை விலங்குகளா?
அப்போதே
அவர்கள் தோற்றுப் போனார்கள்,
சிரி மகளே, வென்றது நீ!
நாய்களுக்குத் தெரியுமா
பெண்புலி நீயென்று?
அகராதி
போர்க்குணத்தில் நீ அணையாத் தீ!

அய்யோ கொல்றாங்களே
என்றுநீ கத்தவில்லையா?
கதறவில்லையா மகளே?
காவல் சேவையைப்
பொதுவாகப் பாராட்டத்தான்
வேண்டும் என்றவர்கள்
ஒரு பெண்ணை
இத்தனை ஓநாய்கள்
வளைந்து நொறுக்கியதை
நக்கீரனில் பார்த்து
நெற்றிக்கண் திறந்தார்களா மகளே?
அல்லது
காவல் மனம் கசங்காதிருக்க
இந்தச் சேவையைப் பாராட்டி
அண்ணா விருது கொடுப்பார்களோ?
பெட்டைப் பன்றிக்கு
கல்பனா சாவ்லா விருது கூட
கொடுப்பார்களோ?
அடிவிருந்து படைப்பவர்களுக்குத்
தனிவிருது ஏற்படுத்திக்
கொடுத்தாலும் கொடுப்பார்
காவற் காவலர்.

இந்த ஊரில்
ஈழச்சிக்கலே உன்னால்தான்
என்று சொல்லி அடித்தார்களா மகளே?
அவர்களுக்குத் தெரியுமா
கண்ணகி மதுரையை
எரித்தது யாரால் என்று?
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகுமென்ற
காப்பியத் தலைவிக்கு
சிலை வைத்தென்ன
படம் எடுத்தென்ன
அறச் சீற்றத்தின்
அகராதியைப் புண்ணாக்கிய
வெறி நாய்களின்
காவலராய் இருந்து கொண்டே?
ஈழத்தைச் சொல்லி
உன்னை அடித்த தடி
கொழும்பு சென்ற குழு
இராசபட்சனிடம்
வாங்கி வந்த பரிசோ?

அகராதி!
அடித்தபோது
வலித்ததா மகளே உனக்கு?
உடல் புண் ஆறினாலும்
உள்ள வடு ஆறாதே!
சட்டம் படிக்கிறாய்.
வழக்கறிஞர் நீதிபதி
யாரானாலும்
அடிபடும் பயிற்சியும் தேவை
தெரியாதா உனக்கு?
இந்த நாட்டில் இரண்டு வர்க்கம் -
அடிக்கிறவர்கள், அடிக்கப்படுகிறவர்கள்
அடிக்கப்படும் வர்க்கத்தில்
முழுத் தகுதியோடு
சேர்ந்து விட்டதற்காய்ப்
பெருமை கொள் மகளே!
பெற்றவர்க்குப் பெருமை
என்போல் தோழமை
உற்றவர்க்குப் பெருமை!
அகராதி அல்லவா நீ?
உன்னில் எல்லாச் சொற்களும்
இருக்க வேண்டுமே,
அச்சம் நாணம் அடிமைக் குணம்
கூழைக் கும்பிடு கோழைத்தனம்
விடுபட்டதேன்?
அகராதி!

மதுரையில்தான் மகளே
பிட்டுக்கு மண்சுமந்த ஈசனைப்
பிரம்பால் காவலன்
அடித்தபோது
அனைத்து மாந்தர்க்கும்
வலித்ததாகக் கதை
அடித்தவனுக்கும் கூட
அடிவிழுந்தாற் போல்
வலித்ததாம்.
உனக்கு விழுந்த
அடியைப் படித்த போது
மகளே எங்களுக்கும் வலித்தது.
உணர்வுள்ள ஒவ்வொரு
தமிழச்சி தமிழனுக்கும்
வலித்திருக்க வேண்டும்.
ஆனால் அடித்த
காவலர்க்கும்
காவலரின் காவலர்க்கும்
வலித்திருக்காது,
வலிக்கச் செய்ய வேண்டும் நாம்.
அடித்த கைகளை
தடிக்கை, அதை ஏவிய
கொடிக்கை இரண்டையும்
ஒடிக்கும் நாள் வரும்,
வர வைப்போம் மகளே!
அது வரை
பொறுத்திரு என்று
யார் சொன்னாலும்
கேட்காதே,
போராடு!
- தியாகு

http://www.vikatan.com/av/2009/sep/23092009/p89a.jpg
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1694:2009-12-18-01-29-25&catid=957:09&Itemid=208
http://ivarfjeld.files.wordpress.com/2009/08/tamil460.jpg

தினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா

http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SRmrgfq5pPI/AAAAAAAAAXU/Kh2uD-8IR2Q/S220/nyalam.JPG
பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக வெளிவரும் நாளேடு ‘தினமணி’. அதன் ஆசிரியராக உள்ள கே. வைத்தியநாதன், ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர். ‘முரசொலி’ நாளேட்டில் கட்டுரை தீட்டும் சின்னக் குத்தூசி - ‘தினமணி’யையும், ஆசிரியர் வைத்திய நாதனையும் - பார்ப்பன வெறியராக செயல்படுகிறார் என்று தொடர்ந்து கடுமையாக எழுதி வந்தார். இப்போது சின்னக்குத்தூசிக்கு தர்மசங்கடமான நிலை. எந்த சின்னக் குத்தூசி ‘முரசொலி’யில் வைத்தியநாதனின் பார்ப்பனீயத்தை கடுமையாக எழுதி வந்தாரோ, அதே வைத்தியநாதனுக்கு, கலைஞர் பாராட்டு மழைகளைப் பொழிந்து தள்ளி விட்டார்.
‘தினமணி’, தி.மு.க.வை தாக்கி எழுதியது, அவர்களுக்குரிய பத்திரிகை சுதந்திரம் என்று கலைஞர் எழுதியிருப்பதோடு, “என்னைத் தாக்கி (தினமணி) வெளியிட்ட கேலிச் சித்திரங்களைக்கூட நானே பல முறை ரசித்திருக்கிறேன். அந்த பத்திரிகையின் ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையிலே வேறுபட்ட கருத்து அவருக்கு இருந்தாலும், தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் போன்றவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை நான் அறிந்தவன்.

வாரம் தோறும் ‘கலாரசிகன்’ என்ற புனைப் பெயரில் ‘தினமணி’யில் அவர் எழுதும் இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்” என்றெல்லாம் புகழ் மகுடத்தில், அவரை ஏற்றி வைத்து உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள் தொடர்பு, மற்றும் விளம்பரக் குழுவில் அவரின் சம்மதமின்றியே உறுப்பினராக்கினார். இதற்கு கலைஞருக்கு பதில் எழுதிய வைத்தியநாதனோ, கலைஞரின் முடிவில் நெகிழ்ந்து போனதாகவும், ஆனால், தன்னால், அப் பொறுப்பை ஏற்க இயலாது என்று பதில் எழுதினார்.

கலைஞர் - வைத்தியநாதன் மீது கொண்டிருக்கும் தீராத அன்பினால், விடாமல் மீண்டும் அவருக்கு பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “தமிழின் பால் தடம் மாறாப் பற்றுக் கொண்ட தங்களைப் போன்றோர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு முயற்சியில் தேரிழுப்போர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் தேரின் வடத்தைத் தாங்கிக் கொண்டு வருபவராக இருந்தால் போதும். அந்த எண்ணத்தோடுதான் குழுக்களின் அறிவிப்பில் தங்கள் பெயரும் இணைக்கப்பட்டது. மறுத்திடாமல் ஏற்றுக் கொள்வதோடு, மாநாட்டுக்குச் சிறப்பினைச் சேர்க்க மீண்டும் வேண்டுகிறேன்” என்று மன்றாடி பதில் ‘முகம்’ அனுப்பினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே கே. வைத்தியநாதன், அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். இந்தக் கடிதம் - மறுப்புக் கடிதம் - மறு வேண்டுகோள் கடிதம் - இறுதி ஒப்புதல் கடிதம் - எல்லாவற்றையும் ‘முரசொலி’ ஏட்டில் (21.12.2009) கலைஞர் கருணாநிதி பதிவு செய்துள்ளார்.

கடந்த முறை நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகளையே அரசு இன்னும் வெளியிட வில்லை என்ற கேள்வியை இதே ‘தினமணி’ தான் சில வாரங்களுக்கு முன் எழுப்பியது. அதுமட்டுமல்ல, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தினமணியின் ‘வெள்ளிமணி’ இணைப்பில் அருமறையின் உட்பொருளே அண்ணாமலை என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டது. தமிழர்களின் சமய வழிபாடுகளை தமிழ்த் திருமுறைகள்மூலம் நடத்துவோரை கடுமையாக சாடுகிறது அக்கட்டுரை. தமிழ்த் திருமுறைகள் வழியாக வழிபாடு நடத்துவோருக்கு, இக்கட்டுரை கீழ்க்கண்ட பெயர்களை சூட்டியுள்ளது. “நவீன பண்டிதர், துன்மார்க்கர், கீழோர், பொறாமைக்காரர், குரு துரோகி, மரண தண்டனை பெறுவோர், நரகம் போவோர்கள்”

- இப்படி தமிழ் உணர்வாளர்களை பச்சையாக வசை பாடும் பார்ப்பனர்கள் கலைஞர் பார்வையில், “தமிழின் மேல் தடம் மாறாப் பற்றுக் கொண்டவர்கள்”. ‘தினமணி’ வெளியிட்ட இந்தப் பார்ப்பன வெறி கட்டுரையைக் கண்டு கொதித்துப் போய் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், கடந்த டிசம்பர் முதல் தேதி மறுப்புக் கட்டுரை ஒன்றை ‘தினமணி’க்கு எழுதி, அதன் பிரதியை ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கும் அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழ் வழிபாட்டை எதிர்க்கும் ‘தினமணி’ பார்ப்பனீயத்துக்கு எதிராக, சென்னையில் தமிழின உணர்வாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தினார். கழக சார்பில், துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், அதில் பங்கேற்றுப் பேசினார்
.
கலைஞரின் புகழ் பாடும் கி.வீரமணியின் ‘விடுதலை’யும் கூட அதன் ஞாயிறு மலரில் (டிசம் 19) ‘கொத்துகிற பார்ப்பனர் பாம்பு’ என்ற தலைப்பில் ‘தினமணி’யின் பார்ப்பன வெறியை சாடியுள்ளது. நாள்தோறும் ‘விடுதலை’யை படித்தால்தான் தமக்கு முழு திருப்தி கிடைப்பதாகக் கூறும் கலைஞர் கருணாநிதி, ‘விடுதலை’யில் கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே ‘தினமணி’ வைத்தியாத அய்யருக்கு ‘பாசவலை’ வீசி நெகிழ்ந்து நெக்குருகி, கடிதங்களை எழுதி குவித்துவிட்டார்; இதுதான் கலைஞர் ‘விடுதலை’யை நேசிக்கும் பாசம் போலும்!

கலைஞர் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டின் மக்கள் தொடர்புக் குழுவில் ‘தினமணி’ வைத்தியநாதன் அய்யர் மட்டுமல்ல, தமிழின உணர்வு ‘பீறிட்டு’ நிற்கும் வேறு சில தமிழர்களும் இடம் பெறுவதை கலைஞர் பெருமையுடன் அறிவித்துள்ளார். ‘இந்து’ ராம், ‘தினமலர்’ கிருஷ்ணமூர்த்தி ஆகிய பார்ப்பனர்கள்தான், இந்த தமிழின உணர்வாளர்கள்!

ஜூன் மாதம் வரை இனி செம்மொழித் திருவிழா கொண்டாட்டங்களிலேயே மக்களை மூழ்கடிக்க முடிவு செய்து விட்டார், தமிழக முதலமைச்சர். தமிழ் செம்மொழிதான் என்று கால்டுவெல், பாவாணர் போன்றோர் கூற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, ‘முரசொலி’யில் ‘கடிதத் தோரணம் கட்டுகிறார்; தமிழ் செம்மொழி என்பதை தமிழ்நாட்டில் எவரும் மறுக்கவில்லையே?

பிறகு எதற்கு இந்த ஆதார விளக்கங்கள்? தமிழ் செம்மொழி என்பதற்கான இலக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதைவிட, தமிழை பயன்பாட்டுக்குக் கொண்டுவர முனைப்பு காட்ட வேண்டியதே முக்கியம்.

• தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் முழுமையான வழிபாட்டு மொழியாகிவிட்டதா?

• தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சையில் தமிழ் பரப்பும் பல்கலையாக செயல்படுகிறதா?

• உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக அண்ணா தரமணியில் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மய்யம் நலிந்து போய் கிடக்கும் நிலை மாறியதா?

• அறிவிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் வழிக் கல்வி இருக்கிறதா?

• தமிழ் வழிப் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அவர்களின் எண்ணிக்கைகேற்ப தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதா?

• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வந்த பிறகும், அர்ச்சகர் ஆக முடியாத நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா?

இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தாமல், ஈழத்தில் நடந்து முடிந்துள்ள தமிழினப் படுகொலைகளின் துரோகங்களுக்கு நியாயம் பேசிக் கொண்டு, பார்ப்பனர்களோடு கரம் கோர்த்து, ‘செம்மொழித் திருவிழா’ நடத்துகிறார், தமிழக முதல்வர்!

‘துக்ளக்’ சோ, சு. சாமி, இராமகோபாலன்கள் இனி, செம்மொழி மாநாட்டுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாலும் வியப்பதற்கில்லை!

அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையே எந்த பயனும் தராத ‘கும்பமேளா’ என்று கூறி கண்டித்தவர் பெரியார். அவரது ‘வாரிசாக’ உரிமை கொண்டாடும் வீரமணியும் திருவிழா கொண்டாட்டத்தில் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதுதான், இன்னும் வேடிக்கை!

அண்ணா சொன்னார் “காரணங்கள் அப்படியே இருக்கின்றன”

“இந்த மன்றத்தின் மூலமாகப் பொது மக்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டு விட்டோம் என்றதாலே காரணங்களையும் விட்டுவிட்டோம் என்பது பொருள் அல்ல. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மத்திய சர்க்காரோடு போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடுகிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும். எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.” - சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா, 27.6.1967)

கலைஞர் சொல்கிறார் காரணங்கள் மறைந்து விட்டன

இந்தியாவைப் பொறுத்தவரையில் நமக்கு எஞ்ஜினாக இருப்பது டெல்லி. அது நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால் அந்த எஞ்ஜினிலே இன்றைக்கு கோக்கப்பட்டிருக்கின்ற பெட்டிகளிலே ஒரு பெட்டியாகத்தான் நம்முடைய மாநிலங்கள் இருக்கின்றன. அந்த மாநிலங்களிலே ஒரு மாநிலம்தான், தமிழ் மாநிலம். நான் இதைச் சொல்லுகின்ற காரணத்தால், இந்தப் பெட்டி தனியாக வரவேண்டும் என்ற அர்த்தத்திலே அல்ல. சில பெட்டிகளிலே கோளாறு ஏற்படுகிறது. அந்தக் கோளாறை இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற, இந்தியாவை கட்டி ஆளுகின்ற, இந்தியாவிலே நிர்வாகம் நடத்துகின்ற மத்திய அரசு அந்தப் பெட்டிகளையும், தன்னோடு இழுத்துச் செல்லுகின்ற அந்த லாவகத்தைப் பெறவேண்டும். அதேநேரத்திலே பெட்டிகள் ஒன்றோடொன்று கழன்று விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றோடொன்று பெட்டிகள் இணைந்திடாமல், கழன்று போனால் பிறகு இந்தியா என்கின்ற ஒரு தேசிய நிலை நமக்கு இல்லாமல் போய்விடும்.

இந்தியா பெரிய நாடு. பெரிய நாடாக இருக்கின்ற காரணத்தினால்தான், வல்லரசு நாடுகளெல்லாம் இன்றைக்கு நம்மோடு கைகுலுக்க வருகின்றன. இன்றைக்கு நம்மோடு நட்போடு பழகி, நம்மை ஆதரித்தால்தான் உலக நாடுகளிலேஒரு நாடாக பரிணமிக்க முடியும் என்று மற்ற நாடுகளெல்லாம் கருதுகின்றன. அந்தப் பலத்தை நாம் இன்றைக்கு பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை இங்கே இருக்கின்ற ரயில் பெட்டிகள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சென்னை புதிய ரயில்களின் துவக்க விழாவில் கலைஞர் பேசியது - 22.12.2009 ‘முரசொலி’

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1789:2009-12-30-10-49-45&catid=956:09&Itemid=207
http://www.dinamani.com/Images/article/2009/10/24/logcm.jpg

Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...


smail

http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg

Update me when site is updatedGet more followers

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!