நம்மிடம் இருக்கும் எழுத்து வடிவிலான(text), பட வடிவிலான(picture) கோப்புகளை பிடிஎஃப் கோப்பு வகைக்கு மாற்றுவதற்கு உதவும் இலவச மென்பொருட்கள் நான்கினை இங்கே காண்போம்.
இந்த சேவையை வழங்கும் மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வணிகரீதியிலானவையாகவும் இலவசம் அல்லாதவையாகவும் இருக்கும். இலவசமாக இருந்தால் அவற்றில் ஏதேனும் வரையறை இருக்கும்.
மிகுந்த திறன் உடைய மென்பொருளாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.
1. PDFForge
இது ஒரு திறந்த நிலை மூலவரைவு வகையைச் சேர்ந்த மென்பொருள் பயன்பாடு. விசுவல் பேசிக் மூலம் எழுதப்பட்ட நிரலைக் கொண்டது. இலவசமாகவே இருந்தாலும் பிற வணிகரீதியிலான மென்பொருட்களின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. இதன் மூலம் உருவாக்கப்படும் பிடிஎஃப் கோப்புகளுக்கு கடவுச்சொல் மூலம் கட்டுப்பாடு விதிப்பதோ, அச்செடுப்பதைத் தடைசெய்வதோ இயலும். ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை ஒன்றிணைப்பதும் எளிது.2. PDF4Free

எந்த விதமான மின் கோப்புகளையும் பிடிஎஃப் ஆக மாற்ற உதவுகிறது.
3. doPDF

கணினியின் எந்த ஒரு பயன்பாட்டிலிருந்தும் பிரிண்ட் எனக் கொடுக்கும்போது Virtual PDF Printer என்பதைத் தேர்வுசெய்து பிடிஎஃப் ஐ உருவாக்கிடலாம்.
4. PrimoPDF

முன்னூறுக்கும் அதிகமான கோப்பு வடிவங்களிலிருந்து பிடிஎஃபை உருவாக்க இந்தப் பயன்பாடு உதவுகிறது.




























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com