Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, July 5, 2009

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 35 -"தினமணி" தொடர் ♥




"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு '- 35: தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்



தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி (காங்கேயன்துறை)





இலங்கையில் 1918-இல் "இலங்கை தேசிய காங்கிரஸ்' எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின் ஆதிக்க வெறியை எதிர்த்து, "தமிழ் லீக்' (1924) என்னும் அமைப்பைக் கண்டார். இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க "தனிநாடு' வேண்டும் என்பதாகும்.

பின்னர் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் அமைந்த ஆணைக்குழுவின் முன் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை ஒரே குரலில் எடுத்துக்கூற "இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்' (1944) நிறுவப்பட்டது. அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம். அவர் தனது வாதங்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்த போதிலும் சோல்பரிக் குழுவினர் சிங்களவரின் கோரிக்கைக்கே இணங்கினர்.

பின்னர் ஏற்பட்ட சுதந்திர அரசில் பங்கேற்பது குறித்தும், இந்திய-பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டத்தை ஆதரிப்பது தொடர்பாகவும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949-இல் மலர்ந்தது. தந்தை செல்வா தலைமையில் இக்கட்சி தமிழர்களின் சமவாழ்வு மற்றும் உரிமைகளுக்காகப் போராடியும் கேட்காமல் 1972-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி புதிய சிங்கள புத்தக் குடியரசு அமைந்தது. இதன் மூலம் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தை இழப்பதற்கான சிங்கள அரசு ஏற்பட்டதும், தமிழ் மண்ணில் சிங்களர் குடியேற்றம் நிகழ்ந்தது. தனி ஆட்சி முறையில் தமிழர்களின் சமநிலை உரிமையும்-மண்பாதுகாப்பும் பறிக்கப்படும் என்பதைக் கண்டுபிடிக்க தமிழர் அமைப்புகளுக்கு மேலும் 24 ஆண்டுகள் பிடித்தன.

இந்நிலையில் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 3-இல் தந்தை செல்வா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

"இந்நாட்டில், சென்ற 24 ஆண்டுகளாக (1948-1972) நடந்தவற்றை மனதில் கொண்டு தமிழர்கள் இங்கு ஓர் அடிமை இனமாக -அழிவதா அல்லது விடுதலை பெற்ற மக்களாக வாழ்வதா என்ற தமது வருங்காலத்தை முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கை. விடுதலை பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பேன். இந்தக் கொள்கையில் அரசாங்கமே என்னோடு போட்டியிடட்டும். நான் தோல்வியடைந்தால் என் கொள்கையை விட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோல்வியடைந்தால் தனது கொள்கையையோ, அரசின் திட்டத்தையோ தமிழர்கள் ஆதரிப்பதாக மேற்கொண்டும் கூறக்கூடாது.' (கு.வே.கி. ஆசான் எழுதிய ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் -1948-1966).

செல்வா பதவி விலகியதால் காலியான காங்கேயன்துறை இடைத்தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் தந்தை செல்வாவே காங்கேயன்துறை வேட்பாளராக நின்றார். அரசு ஆதரவு கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மீண்டும் நாடாளுமன்றத்தில் 1976, பிப்ரவரி 4-இல் செல்வா பேசியதாவது:

"இலங்கையில் ஓர் ஆளப்படும் இனமாக வாழும் நிலையைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அடிமைத்தனத்திற்கு எதிராகப் புரட்சியில் இறங்குவார்கள். எங்கள் இனம் அழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு தனித் தமிழ்நாட்டை இங்கு நிறுவியே தீருவோம். தமிழ் மக்களின் குரலாக நின்றே இந்த அவையில் இதைக் கூறுகின்றேன்.' (ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் 1948-1996 கு.வே.கி.ஆசான்).

இதனைத் தொடர்ந்து காங்கேயன்துறை, உடுவில், மூதூர், வவுனியா, திருகோணமலை, கோப்பாய், சாவகச்சேரி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய 12 தொகுதிகளின் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஈழ விடுதலைக்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தனர். அத்தீர்மானத்தின் கடைசி வரி இவ்வாறு அமைந்திருந்தது. அது வருமாறு:

"காங்கேயன்துறை இடைத்தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விடுதலை பெற்ற அரசுரிமை உடைய, மதச்சார்பற்ற, சமனிய நாடான தமிழ் ஈழத்தை அமைப்பதற்குரிய செயலுரிமையாக ஏற்றுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது.'

1976 மே 22-இல் சிங்களவர் குடியரசு நாள் கொண்டாட்டத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடியபோது, தமிழர் பகுதிகளில் விடுதலை கோரும் அறிக்கையை அ.அமிர்தலிங்கம், வ.ந.நவரத்தினம், க.பொ.இரத்தினம், க.துரைரத்தினம் ஆகிய தமிழர் தலைவர்கள் விநியோகம் செய்தனர். அரசு இவர்களைக் கைது செய்து அரசுத் துரோகக் குற்றச்சாட்டினைச் சுமத்தியது.

இத்தலைவர்கள் மீது மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு (பழ்ண்ஹப் ஹற் ஆஹழ்) என்ற சிறப்பு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களான தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், வி.எஸ்.ஏ.புள்ளைநாயகம் முதலானோர் குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் வாதாடியதையொட்டி, நால்வரும் (1976 டிசம்பர் 10-ம் தேதி) விடுதலை பெற்றனர். பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

மலையகத் தமிழர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து "தமிழர் விடுதலைக் கூட்டணி' (பமகஊ) 1976-இல் அமையப் பெற்றது. 1977 ஏப்ரல் 26-இல் ஈழத் தந்தை செல்வநாயகம் மறைந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஈழவிடுதலையை முன்வைத்து "தமிழர் விடுதலைக் கூட்டணி'யினர் போட்டியிட்டனர். தமிழர் பகுதியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றனர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி (யு.என்.பி.) 140 இடங்களையும் கடந்த நாடாளுமன்றத்தில் 116 இடங்களைப் பெற்றிருந்த ஸ்ரீமாவோ கட்சி எட்டே இடங்களையும்தான் பெறமுடிந்தது. இதன்மூலம் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயிற்று.

சிங்கள மேலாதிக்கத்தில் நாட்டம் கொண்ட இனவெறியர்களுக்குத் தமிழரின் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியானது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நாடெங்கும் இனக்கலவரத்தைத் தூண்டிவிட ஸ்ரீமாவோ கட்சி முயன்றது. இலங்கைக் காவல்துறையில் 17 ஆயிரம் போலீஸôர் இருந்தனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் ஸ்ரீமாவோ ஆட்சியில் நியமிக்கப்பட்ட இனவெறியர் ஆவர். இவர்களே இனக்கலவரத்துக்கு மூலகாரணம் என்று கருதப்படுகிறது.

யாழ் மருத்துவமனையில் (1977 ஆகஸ்ட் 12-13) புற்றுநோய்ப் பிரிவு ஏற்படுத்த நிதி திரட்டும் விழாவொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கையில், சீருடை அணியாத போலீஸôர் கூட்டத்தினரிடையே புகுந்து முறைகேடாக நடந்தனர். பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலிசார் இருவர் காயமடைந்தனர்.

இதனைச் சாக்கிட்டு "யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கு ஆபத்து' என வதந்தி, நாடு முழுவதும் பரப்பப்பட்டு கடைவீதிகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தனர். எல்லா இடங்களிலும் (1977 ஆகஸ்டு 17) தமிழர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

அதற்குப் பிறகு இன்றுவரை தொடர்ந்து நடந்துவரும் அடக்கு முறைகளும், ரத்தக் கிளரிக்கும் பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் தமிழர்கள்மீது தொடுக்கப்பட்ட இந்தக் தாக்குதல்தான்.

நாளை: ஜெயவர்த்தனவின் அடக்கு முறை

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=83285&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 34 -"தினமணி" தொடர் ♥




"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 34 : சாஸ்திரி - ஸ்ரீமாவோ ஒப்பந்தமும் விளைவுகளும்!




ஸ்ரீமாவோ - லால்பகதூர் சாஸ்திரி







சுதந்திரத்திற்குப் பின், இலங்கையும், இந்தியாவும் இரு மாநாடுகளை நடத்தின. 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் நேரு-டட்லி சேனநாயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரஜா உரிமையற்ற மலையகத் தமிழர்களை யார் ஏற்றுக் கொள்வது என்பதுதான் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம். ஆனால் இப்பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றித் தோல்வி அடைந்தது.

பின்னர் நேரு-கொத்தலாவலை பேச்சுவார்த்தை புது டெல்லியில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதுவும் தோல்வி அடைந்தது. இந்திய அரசாங்கம் நாடற்ற மலையக மக்களை இலங்கையர் என்றது; இலங்கை அரசோ அவர்களை இந்தியர் என்றது. இவ்வாறு இப்பிரச்னை இழுபறியான சமயத்தில் ஒரு திடீர் சூழ்நிலை ஏற்பட்டது.

1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று, பர்மாவில் இருந்தும் (3,00,000 பேர்), உகாண்டாவில் இருந்தும் (28,755 பேர்) அந்த நாட்டு அரசாங்கங்கள் இந்தியர்களை விரட்டி அடித்தன. இத்தகைய ஒரு நிலை இலங்கையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என இந்தியா விரும்பியது. அடுத்ததாக நடைபெற்ற சீன-இந்திய யுத்தத்தைத் தொடர்ந்து, சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த இலங்கையுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பியது.

இறுதியாக, அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அயூப்கான், ""இலங்கையில் உள்ள சகல பாகிஸ்தானியர்களையும் தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயார்'' என்று இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இலங்கையில் 5749 பாகிஸ்தானியர்களே வாழ்ந்தார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு அவர்களை ஏற்றுக் கொள்வது அவ்வளவு சிரமமானதாக இல்லை.

அதே கடிதத்தில் அவர் ""இந்தியா தனது அண்டை நாடு எதனுடனும் சுமுகமாகப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை'' எனக் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, சீனாவுடனான யுத்தத்தினால் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் இந்தியா தன் பெயரை நிலைநிறுத்த வேண்டிய நிலையில் இருந்தது.

இந்தச் சமயத்தில் நேரு காலமானார். அதற்குப்பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். இவருக்கும், இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையே 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஆறு நாட்கள் தொடர்ந்த இப்பேச்சுவார்த்தை அக்டோபர் 30-ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வந்தது.

அன்றுதான் உலகமே கண்டித்த, மிக மோசமான சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இலங்கையில் இந்தியர்களின் மக்கள் தொகை 1964 செப்டம்பர் 25-ஆம் தேதி கணக்குப்படி 10,08,269 பேர் ஆகும்.

இதில் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை 28,269. மீதம் இருந்த 9,75,000 பேரின் பிரஜா உரிமை பற்றியே இம்மாநாடு முடிவு செய்தது.

சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின்படி, 9,75,000 பேரில் 5,25,000 பேருக்கு 15 வருடகாலத்தில் (அவர்களின் இயற்கை அதிகரிப்புடன்) இந்தியப் பிரஜை உரிமை வழங்குவதென்றும், அதே காலத்தில் 3,00,000 பேருக்கு அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் இலங்கைப் பிரஜா உரிமை வழங்குவதெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

எஞ்சியுள்ள 1,50,000 பேரின் பிரஜா உரிமை அந்தஸ்து பற்றி 1974-ஆம் ஆண்டு தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி 1974-ஆம் ஆண்டு ஜனவரியில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தத்தின்படி இலங்கையும், இந்தியாவும் 1,50,000 பேரையும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன.

இந்த ஒப்பந்தங்களைக் கண்டிக்காத சர்வதேச மனிதாபிமான இயக்கங்களே இல்லை எனலாம். இருந்தும் இரு அரசாங்கங்களும் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தத்தை மனிதாபிமான அமைப்புகளும் இயக்கங்களும் சர்வதேச அளவில் கண்டித்தன. ஆடு, மாடுகளைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொள்வதுபோல மனிதர்களைப் பங்குபோடும் அதிகாரத்தை அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அளித்தது யார் என்கிற கேள்விகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் எழுப்பப்பட்டன.

சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இரு அரசுகளும் தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிய ஒப்பந்தம் இது. அதாவது இதனை ஒரு சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பாராமல் அந்தப் பத்து லட்சம் மக்களின் தலைவிதியை, அவர்கள் பங்கு பெறாமலே இரு அரசாங்கங்களும், வெறும் எண்களைக் கருத்தில் கொண்டு கணித முறையில் முடிவு செய்தன.

இப்பேச்சு வார்த்தை நடந்தபோது குறைந்தபட்சம் அம்மக்களின் பிரதிநிதியின் கருத்துகூட கேட்டு அறியப்படவில்லை.

இவ்வாறு முடிவு செய்யப்பட்டதும் அம்முடிவு ஒருகட்டாய அடிப்படையில் அமல் நடத்தப்பட்டது என்பதுதான் அதைவிட வேடிக்கை. இதற்கான மனுக்கள் கோரப்பட்டபோது இலங்கை பிரஜா உரிமை கோரி சுமார் 7,00,000 மனுக்கள் தாக்கல் ஆயின. ஆனால், இவ்வொப்பந்தப்படி இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் 3,75,000 பேர் மாத்திரமே. இந்தியப் பிரஜா உரிமை 6,00,000 பேருக்கு வழங்கப்படும் என்ற நிலைமை இருக்கும்போது இந்தியப் பிரஜா உரிமை கோரி மனு செய்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 மட்டுமே. ஒருவேளை இலங்கை பிரஜா உரிமை மறுக்கப்பட்டால் இந்தியப் பிரஜா உரிமையாவது கிடைக்கட்டுமே என்று இரண்டிற்கும் மனு செய்தவர்கள் தொகை கணிசமானது.

அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தம் அமலாகும்போது இந்தியாவில் அமையப்போகும் ""புதுவாழ்வு'' பற்றி மிகக் கவர்ச்சியான சித்திரங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட இந்தியா செல்வதற்கு இவர்கள் மத்தியில் இருந்து மிகக் குறைவாகவே ஆர்வம் காணப்பட்டது.

இவ்வாறு இம்மக்களின் சுய விருப்பத்திற்கு மாறாகப் பல்வேறு நிர்பந்தங்களாலும், ஏமாற்றுகளாலும் திணிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் மனித அடிப்படை உரிமைக்கு முரணானது.

1948 டிசம்பர் 10-ஆம் தேதி இயற்றப்பட்ட உலக மனித உரிமைகள் சாசனத்தின் 15-வது ஷரத்து * பின்வருமாறு கூறுகிறது:

""தேசிய இனத்துவ உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவருடைய தேசிய இனத்துவம் வேண்டுமென்றே பறிக்கப்படுவதோ, அல்லது அவரது தேசிய இனத்துவத்தை மாற்றிக் கொள்வதற்குள்ள அவரது உரிமையை மறுப்பதோ கூடாது.''

இதன்படி பார்க்கும்போது இந்த இரு அரசாங்கங்களுமே உலக மனித உரிமை சாசனத்தை மிக மோசமாக மீறி இருக்கின்றன என்பது புலனாகிறது.

இந்தியா செல்வதற்குத் தயாராதல், புறப்படுதல் போன்ற முறைகளில் இம்மக்கள் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்ட நாளில் இருந்து சகல ஒப்பந்தங்களையும் செய்து முடிக்க 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அவகாசம் (விசா) வழங்கப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதி, சேவைக் கால உபகாரப் பணம், நாணயப் பரிவர்த்தனை, அனுமதிப் பத்திரம், குடும்ப அட்டை ஆகிய அனைத்தையும் ஒரு வருட காலத்துக்குள் கல்வி அறிவு அற்ற இத்தொழிலாளர் பெற்றுத் தீர வேண்டும். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் தோட்ட நிர்வாகிகள் போன்றோர், இடைத் தரகர்களாக மாறி இவர்களைக் கொள்ளை அடித்தனர்.

இதன் பின்னர் வெளியேற்ற அறிவித்தல் (ணன்ண்ற் சர்ற்ண்ஸ்ரீங்) வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தங்கினால் அவரைக் கைது செய்து நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. 1971-77 ஆண்டுகளில் நாய்களைப் பிடித்துச் செல்வது போல இம்மக்களைப் பிடித்து ஜீப்புகளில் ஏற்றி, இடுப்புத் துணியோடு இந்தியாவுக்கு நாடு கடத்திய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. இதிலும் சாத் முரண்பாடு தலைதூக்கியது. தாழ்த்தப்பட்ட ஜாதியினர்தான் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் ராமேஸ்வரம் வரை பயணம் செய்யும்போது, பியூன் முதல் போர்ட்டர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் இவர்களை ஏமாற்றி லஞ்சம் வாங்கிக் கொண்டனர்.

இவ்வாறு குடிபெயர்ந்து செல்வோரின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்பட்டன. பிரஜா உரிமை முடிவு செய்யப்பட்டபோது மைனர் குழந்தைகளுக்குத் தந்தையுடன் சேர்த்து அதே பிரஜா உரிமை வழங்கப்பட்டு விடுகிறது. அனால் 18 வயது கடந்த அவர்களது குழந்தைகள் தனியாக மனு செய்து இலங்கை அல்லது இந்தியாவில் பிரஜா உரிமை பெறவேண்டும். வெளியேற்ற அறிவித்தல் வந்துவிட்டால்... தந்தையும், குடும்பத்தினரும் பிரிய நேரும். ஒரே குடும்பத்தில் அண்ணனுக்கு இலங்கைப் பிரஜா உரிமையும், தம்பிக்கு இந்தியப் பிரஜா உரிமையும் வழங்கப்பட்டு விடுகிறது.

பிறந்த நாட்டையும், வளர்ந்த மண்ணையும், பழகிய நண்பர்களையும் விட்டுப் பிரியும்போது அழுது, கதறித் துடிக்கும் பரிதாபகரமான காட்சியை மலை நாட்டில் உள்ள சகல புகைவண்டி நிலையங்களிலும் காண முடிந்தது. காதலனைப் பிரியும் காதலி, அண்ணனைப் பிரியும் தம்பி, பெற்றோரைப் பிரியும் பிள்ளை, இப்படி மனித உறவை அறுத்தெறியும் அந்தக் கொடிய காட்சி இரும்பு இதயத்தைக்கூட உருகச் செய்யும்.

புதுவாழ்வைத் தேடி இந்தியாவுக்கு விரட்டப்பட்ட இவர்களுக்கு இந்திய மண்ணில்கூட நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடையாது. இன்று இந்த அகதிகள் இந்தியத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். இவர்களின் கண்களின் வெறித்த பார்வையில், தங்கள் பிறந்த மண்ணும், உற்றார் உறவினரும், வஞ்சிக்கப்பட்ட தங்கள் தலைவிதியும் அடிக்கடி வந்து போகும் விஷயங்கள் ஆகிவிட்டன.

மலையகத் தமிழர்களின் தலைவராக இருந்த எஸ்.தொண்டமான், பெரிய கங்காணி ஒருவரின் மகனாக இருந்து ஆரம்ப காலத் தியாகத்தால் மலையக மக்கள் இதயத்தில் வலுவான இடம்பெற்றுவிட்டவர். இலங்கையில் ஒரு தனிநபரின் குரலுக்கு ஆறு லட்சம் மக்கள் அணி திரள்கிறார்கள் என்றால், அது தொண்டமானுக்கு மட்டும்தான் இருந்தது.

அவர் தனிநபரல்ல; அவருக்குப் பின்னால் ஸ்தாபனப்பட்ட 6 லட்சம் தொழிலாளர்கள் இருந்தார்கள். அந்தத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் 60 சதவிகிதம் தமது கைகளில் வைத்திருக்கிறார்கள். விண்ணை அதிரவைக்கும் இந்த மகத்தான சக்தியால் தாங்கப்படும் ஒரு மனிதர் எவ்வளவு வலிமை மிக்கவராக இருக்க வேண்டும்? ஆனால் தொண்டமானோ அற்பப் பதவிக்காக ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என்ற பலமான குற்றச்சாட்டு இவர் பேரில் உண்டு.

இந்த நிலையில் மலையகத் தமிழ் தொழிலாளர்களுடைய நிலையைச் சுருக்கமாகச் சிலவரிகளில் கூறிவிடலாம். பொருளாதார ரீதியில் சாகாமல் எப்படி உயிர் வாழ்வது என அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு இலங்கையில் விலைவாசி அதிகரித்துவிட்டிருந்தது.

தமிழர் என்ற முறையில் எப்படி சிங்கள குண்டர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்கலாம் எனச் சதா சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்குத் தேசிய இன ஒடுக்குமுறை உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. மேலும் அரசியல் விழிப்புணர்ச்சி மிக்க நல்ல தலைமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது கூட அவர்கள் சிந்தனையில் இடம்பெற ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக மற்றும் ஜெயவர்தன போன்ற சிங்கள இனவாதத் தலைவர்களில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் பலியானார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. தமிழன் என்ற உணர்வுடன் இவர்கள் கைகோர்த்து செயல்படத் தவறியதையும், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகியதையும் சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மலையகத் தமிழர்களை அரவணைத்துச் செல்லாமல் போனதால் ஏற்பட்ட விளைவுதான் இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்பதை சரித்திரம் மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுந்துவிட்ட தமிழர்களின் உரிமைக் குரல் இன்றும் ஒரு நியாயமான முடிவை எட்ட முடியாமல் போனதற்கு, இவர்களுக்குள் காணப்பட்ட பிளவுதான் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.



* Article 15 of Universal Declaration of Human Rights. (Dec.10.1948) ‘‘Every one has the right to a nationality; no one shall be arbitarily deprived of his nationality nor denied the right to change his nationality.’’



நாளை : தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்!


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=82743&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 33 -"தினமணி" தொடர் ♥





"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 33 : பிரஜா உரிமைச் சட்டம்





நடேச அய்யர் - பெண் கங்காணி



1870-ஆம் ஆண்டு வாக்கில் பணப்பயிர்த் தோட்டங்களில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட்டது. காப்பிச் செடிகள் இலைச்சுருட்டி (ஏங்ம்ண்ப்ங்ண்ஹ ஸ்ங்ள்ற்ஹற்ழ்ண்ஷ்) நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டன. காப்பிப் பயிராகும் நிலங்களை என்ன செய்வது என்ற பிரச்னை தோன்றியது. இதற்கு விடை தேயிலைப் பயிர் என்று முடிவு செய்யப்பட்டது.

1867-இல் ஹேவாஹெட்டையில் உள்ள ஊல்கந்தை என்ற இடத்தில் ஜேம்ஸ் டெயிலர் என்பவர் 50 ஏக்கர் நிலத்தில் வெற்றிகரமாகத் தேயிலையை உற்பத்தி செய்தார். இதனைத் தொடர்ந்து படிப்படியாக இலங்கையின் மலைப்பகுதி "லிப்டன்' கம்பெனியின் தேயிலைத் தோட்டமாக மாற்றமடைந்தது.

காப்பிப்பயிர் வீழ்ச்சி அடைந்தவுடன் தமிழர்களைக் கணிசமாக விரட்டிய இலங்கை அரசும் துரைமார்களும் மீண்டும் தமிழ்நாட்டுக் கூலிகளைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர்.

1911-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, அந்த ஆண்டில் மலையகத் தமிழர்களே (5,30,983) ஏனைய தமிழர்களைவிட (5,28,024) எண்ணிக்கையில் அதிகம் இருந்தனர். (ஆதாரம்: பட்ங் பஹம்ண்ப்ள் ர்ச் நழ்ண் கஹய்ந்ஹ க்ஷஹ் ரஹப்ற்ங்ழ் நஸ்ரீட்ஜ்ஹழ்ஞ்).

இந்த பணப்பயிர் பெருவாரியான தமிழகத்து ஏழைக் கூலி விவசாயிகளை இலங்கைக்குக் கூட்டம் கூட்டமாகக் குடியேற வைத்துவிட்டதைத்தான் இப் புள்ளிவிவரம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

துரைமார்களின் அடிமைகளான இந்தக் கூலி விவசாயிகளைத் தமிழ்நாட்டிலிருந்து திரட்டியவர்கள் அந்தந்தக் கிராமத்தில் செல்வாக்குள்ளவர்களாக இருந்தவர்கள்தான். இவர்கள் கங்காணி என்று அழைக்கப்பட்டனர். இலங்கைக்கு மனிதக் கூட்டத்தை ஏற்றுமதி செய்யும் பொறுப்புடன், ஏற்றுமதி செய்யப்பட்ட மனிதப் பட்டாளத்தை மேய்த்து, கண்காணிப்பதால் இவர்களுக்கு கண்காணி-கங்காணி என்ற பெயர் ஏற்பட்டது.

இப்படித் திரட்டப்பட்ட தொழிலாளர் கோஷ்டி (எஹய்ஞ்) இந்த கங்காணியின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. தலைமைக் கங்காணி அல்லது பெரிய கங்காணி சில சில்லறைக் கங்காணிகளை இப்பணியில் தனது ஏஜெண்டுகளாக வைத்திருப்பார். பெரிய கங்காணியின் வரையறையில்லாத அதிகாரமும், அவர்கள் இழைத்த அடக்குமுறைச் சுரண்டல் அட்டூழியங்களும், மனித நாகரிகத்திற்கே சவால் விடும் காட்டுமிராண்டித்தனமானவை ஆகும்.

தமிழ்நாட்டில் தனது கிராமத்தைவிட்டுப் புறப்படும் முன்னர் தான் பட்ட கடனைத் தீர்ப்பதற்காகவும், பிரயாணத்துக்கான செலவுக்காகவும் கங்காணியிடம் ஆரம்பத்தில் கடன் வாங்க நேர்ந்தது. இவ்வாறு தமிழகத்தை விட்டுப் புறப்படும்போதே இவர்கள் பெரிய கங்காணிக்குக் கடன்காரராயினர்! இந்த மீளாக் கடன் அவர்களைச் சுரண்டும் ஆயுதமாகப் பெரிய கங்காணியால் பயன்படுத்தப்பட்டது.

இத்துடன், தோட்டத்தில் வேலைக்குச் சென்றபிறகு திருமணம், ஈமச்சடங்கு, பூப்பெய்தும் வைபவங்கள் எனப் பல காரணங்களுக்காக இத்தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் பெரிய கங்காணியிடம் கடன் வாங்கினர். இதைவிட, கங்காணிக்குச் சொந்தமான மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள் தோட்டத்தில் இருந்தன. அந்தக் கடையில்தான், அவர் கூறும் விலைக்குத்தான் பொருட்களை வாங்கவேண்டும். இந்தக் கடனும் பழைய கடனுடன் சேர்ந்து மிகப் பெரிய சுமையை இவர்கள் தோளில் ஏற்றியது.

இத்துடன் தோட்டத்துரையிடமிருந்து தனது தொழிலாளர் கோஷ்டிக்குரிய மொத்த சம்பளத்தையும், பெரிய கங்காணிதான் வாங்குவார். பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியினரையே இவ்வாறு கூலி வேலைக்கு அழைத்துச் சென்றிருந்தால், அவர்களது கல்வி அறிவின்மையைப் பயன்படுத்தி, வெள்ளைக் கம்பளி வாங்கிய கணக்கு, கருப்புக் கம்பளி வாங்கிய கணக்கு என்று கள்ளக்கணக்கு எழுதி அவர்களது சம்பளப் பணம் முழுவதையும், தன்னிடம் வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியுமாக வரவு வைத்துக் கொள்ளுவார். இதனால் சம்பளப் பணத்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் கண்ணிலேயே காணாமல், வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட இழிந்த வாழ்க்கை, இவர்களுக்கு அளிக்கப்பட்ட முன்வினைப் பயன் என்று தங்களையே சமாதானம் செய்து கொண்டு இயந்திரமாக வாழ்க்கையில் தங்களைப் பிணைத்துக் கொண்டனர்.

தோட்டத்தில் வேலை செய்யும்போது வேலைப் பளுவும், வாழ்க்கைச் சுமையும் தெரியாமல் இருக்க இவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி மதுபானமும், மனதை நெகிழ வைக்கும் பாட்டுக்களும்தான்.

இவர்கள் துயரங்களில் இருந்து தப்பிக்க விரும்பினாலும், இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல நினைத்தாலும், சட்டமோ, கங்காணியோ, துரைமாரோ ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டார்கள்...

மலையக மக்களின் இன்னல்களைக் கண்டு, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதாபிமான இயக்கங்களும், தனி நபர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.

இதன் விளைவாக 1912-இல் மருத்துவ வசதிச் சட்டமும், 1920-இல் கல்விக்கான சட்டமும், 1921-இல் தொழிற் சட்டமும், 1927-இல் சம்பளச் சட்டமும் இலங்கை அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டன.

மலையக மக்கள் இலங்கை மண்ணில் நிலைபெறத் துவங்கிய பிறகு, தங்களது அடிப்படைப் பிரச்னைகளுக்காகப் போராடவும், அதற்கான தொழிற்சங்கங்களை அமைக்கவும் தொடங்கினர்.

ஆரம்ப நாட்களில் மலையக மக்கள் மத்தியில் தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்றுவித்தவர் நடேச அய்யர் ஆவார். இவர் ஒரு பத்திரிகையாளர். இவரும், ஏ.இ. குணசிங்காவும் தொழிலாளர் சங்கத்தின் முன்னோடிகளாவார்கள் என்பதை நூலின் முந்தைய பகுதியில் பார்த்தோம்.

இதன்பிறகு வெள்ளவத்தை நெசவாலைப் போராட்டம் வெடித்தது. இந்தச் சூழ்நிலையில் தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதைத் தோட்ட துரைமார்கள் கொடிய முறையில் நசுக்கினர். இருப்பினும் லங்கா சமசமாஜக் கட்சி அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தைப் பதிவு செய்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகும், அதற்கு முந்தைய காலக் கட்டத்திலும் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில், மலையக மக்களின் கணிசமான வாக்குகள் இடதுசாரியினரைப் பெருமளவில் தேர்தலில் வெற்றி பெறச் செய்தது. இதன் காரணமாக வெறுப்பும், ஆத்திரமும் அடைந்த டி.எஸ். சேனநாயக்கா மனித உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்கும் இலங்கை பிரஜா உரிமைச் சட்டம், இந்தியர் பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டம் மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை நிறைவேற்ற முனைந்தார்.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவு கடுமையான முறையில் பிரஜா உரிமைச் சட்டம் இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இக் கொடிய சட்டத்தின்படி, சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாக மலையகத் தமிழர் கருதப்பட்டனர்.

இலங்கையில் பிறந்த ஒருவர், தான் இலங்கைப் பிரஜை என்ற தகுதியைப் பெறுவதற்குத் தனது தந்தை, அல்லது தந்தைவழிப் பாட்டன் இலங்கையில் பிறந்ததற்கான ஆதாரத்தைக் காட்டி நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தந்தைவழி முப்பாட்டன் இலங்கையில் பிறந்ததற்கான சான்றைக் காட்டவேண்டும். இதற்கான சிறப்பு அத்தாட்சியாக பிறப்புச் சான்றிதழ் (ஆண்ழ்ற்ட் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்) கருதப்பட்டது. உண்மையில் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. காரணம், பிறப்பைப் பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப் பட்டது 1895-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான். அதற்கு முன் பிறந்தவர்களைப் பதிவு செய்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்தச் சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் கெனமன், ""இந்தச் சட்டத்தில் கோரப்படும் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கப் போனால், மதிப்பிற்குரிய பிரதமர் டி.எஸ். சேனநாயக்க கூட இலங்கைப் பிரஜையாக முடியாது. ஏனெனில் அவரது தந்தை இலங்கையில் பிறந்ததற்கான சான்றை அவரால் கூட சமர்ப்பிக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார். இருப்பினும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அடுத்து 1949-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டம் பிரஜா உரிமை இல்லாதவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்று மறுத்ததன் மூலம் மலைகத் தமிழர்கள் தங்களது வாக்குரிமையை இழந்தனர். இதன் மூலம் மலையக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இழிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

அதுமாத்திரமல்ல, இச்செயல் முழுத் தொழிலாளர் வர்க்கத்தின் பலத்தையும் வெகுவாகக் குறைத்துவிட்டது. அன்று முதல் இலங்கையின் பொது அரசியல் வாழ்விலிருந்து மலையகத் தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

நாளை: சாஸ்திரி - ஸ்ரீமாவோ ஒப்பந்தமும் விளைவுகளும்!

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=82197&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 32 -"தினமணி" தொடர் ♥





"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- - 32 : ஆங்கிலேயரின் நயவஞ்சகம்





தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆங்கிலேயர் தந்த அனுமதிச் சீட்டு



ஆங்கிலேயர் ஆரம்பத்தில் சீன தேசத்தில் இருந்து தோட்ட வேலைக்கு ஆட்களை அமர்த்த முடிவு செய்தனர். ஆனால் அதற்குச் செலவு அதிகமாகும் என்ற காரணத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தென் இந்தியா இலங்கைக்கு அருகில் இருந்தால் அதிக செலவின்றிக் கூலிகளைக் கொண்டு செல்ல வாய்ப்பாய் இருந்தது.

மேலும் இந்தியாவும் இலங்கையும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமையால் இதனைச் சுலபமாகச் செய்யக் கூடியதாகவும் இருந்தது. அத்துடன் அந்தச் சமயம் தமிழகத்தில் கடும் பஞ்சமும் வறட்சியும் நிலவியதால் தமிழக ஏழை மக்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரவும் மிகுந்த வாய்ப்பாக இருந்தது.

இதற்காக ஆள்பிடிக்கும் தரகர் பலரை ஆங்கிலேயர் தேடிப்பிடித்தனர். இத்தரகர்கள் தமிழ் ஏழை விவசாயக் கூலிகளை ஆசைகாட்டி, ஏமாற்றி இலங்கைக்கு அழைத்துப் போயினர்.

இதில் மிகப்பெரிய ஏமாற்று என்னவெனில், பர்மா, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள், பிஜித் தீவுகள் போன்ற ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளுக்கு லட்சக்கணக்கானவர்களை அழைத்துச் சென்றபோது, அந்நாடுகளில் பரம்பரையாக வாழும் மக்களுக்கு வழங்கப்படும் சகல உரிமைகளும் சலுகைகளும் கூலிக்கு வேலைக்குப் போகும் இவர்களுக்கும் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் மீதே இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆரம்பத்தில் கூலி விவசாயிகள், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய தென் மாவட்டங்களில் இருந்தே திரட்டப்பட்டனர்.

இப்படி இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.*

இவர்களை இந்தியாவில் இருந்து நயவஞ்சகமான முறையில் அழைத்து வந்தபோது இவர்கள் அனுபவித்த துயரக்கதைகள் ஏட்டிலும், எழுத்திலும் அடங்காதவை.

தமிழ்நாட்டில் தங்கள் கிராமங்களில் இருந்து, ராமேஸ்வரத்திற்கும், தட்டப்பாறைக்கும் (தொண்டி) கால் நடையாகவே அழைத்து வரப்பட்டனர்.

வழியில் பல சமயங்களில் திருடர்களிடம் தங்கள் உடமைகளைப் பறிகொடுத்துவிட்டு வெறுங்கையோடு தோணிகள் மூலம் இலங்கை சென்றனர். தலைமன்னாரில் இருந்து மீண்டும் கால்நடையாக வனாந்தரங்களில் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும், மலேரியா போன்ற கொள்ளை நோய்களின் கோரப் பிடியில் சிக்கியும், இவர்களது பயணம் இலங்கையின் மத்திய பகுதியை நோக்கித் தொடர்ந்தது.

கொடுமையின் உச்சகட்டமாக, பல சமயத்தில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் இறந்துவிட்டால், அவர்களது சடலத்துக்கு அருகே உயிருடன் இருக்கும் பச்சைக் குழந்தையையும் விட்டுவிட்டே இவர்களது பயணம் தொடருமாம். தனித்துவிடப்பட்ட குழந்தை அலறுவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் மற்றவர்கள் பயணத்தைத் தொடர வேண்டிய நிலைமையைக் கற்பனையில் காணும்போதுகூட உடலும் உள்ளமும் நடுங்கத்தான் செய்கிறது.

இத்தனை இடர்களுடன் பணப்பயிர் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற இவர்களுக்கு அங்காவது வாழ்க்கை துயரமில்லாமல் இருந்ததா என்றால், அங்கும் துயரத்தின் தொடர்கதைதான்!

தென் இந்தியாவின் கடும்வெப்பக் காலநிலைக்கு முற்றிலும் மாறுபட்ட குளிர்மிகுந்த மலைநாட்டில் சோர்வுற்ற நிலையில் இவர்கள் குடியமர்த்தப்பட்டபோது, பலர் நிரந்தர நோயாளிகளாக ஆனார்கள்.

குறுகிய காலத்திற்குள், குறைந்த செலவில் பெருத்த லாபம் சம்பாதிப்பதே தோட்டத்துரைமாரின் நோக்கமாக இருந்தது. எனவே, துரைமார்கள் இம்மக்களின் துன்பங்களைப் பற்றி கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லை.

10ல10 அடியுள்ள ஓர் அறையில் பட்டியில் மாடு அடைப்பதைப்போல் பத்து பேர் அடைக்கப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் பயிர்களுக்கு உரமாக்கப்பட்டன. எதிர்த்துக் குரல் கொடுத்தால் சாட்டையும், துப்பாக்கியும் பேசின. வியர்வைக்குச் சமமாக ரத்தமும் அவர்கள் உடல்களில் இருந்து வழிவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அடக்கு முறையாலும், கொடுமையாலும் நூற்றுக்கு 40 பேர்கள் ஆரம்ப காலத்தில் மரணம் அடைந்ததாக நம்பப்படுகிறது. இந்த மரண விகிதத்தை ஆராய்வதற்காக 1826-இல் ஒரு கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது. 1841-ஆம் ஆண்டுக்கும் 1849-ஆம் ஆண்டுக்கும் இடையில் தமிழகத்தில் இருந்து இலங்கை தோட்டத்தில் குடியேறியவர்களில் சுமார் 70,000 பேர் இறந்ததாக ""சண்டே அப்சர்வர்'' அறிவித்தது. அரக்கத்தனமான ஏகாதிபத்தியத்தின் சுரண்டிக் கொழுக்கும் தன்மையால் இந்த மக்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல.

*அட்டவணை: இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்கள்.

1842-இல்--14,000 பேர்

1843-இல்--31,000 பேர்

1844-இல்--71,000 பேர்

1845-இல்--67,000 பேர்

1847-இல்--50,000 பேர்

1877-இல்--1,46,000 பேர்

நாளை: பிரஜா உரிமைச் சட்டம்

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=81647&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 31 -"தினமணி" தொடர் ♥




"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 31: கூலிப்பட்டாளமல்ல, மண்மாறிய மக்கள்!




காப்பி பழம் பறித்தல், தோட்டத் தொழிலாளர்களின் ஆரம்பகாலக் குடியிருப்பு





இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு என்பது மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களையும் உள்ளடக்கியதே. இவர்கள் உண்மையில் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவார்கள். இவர்கள் இலங்கையின் மத்தியப் பகுதியான கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கில், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கையின் வடபகுதியான யாழ், முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் ஆகிய பகுதிகளில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் ஒன்றாகப் பாவித்து இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள விவரம் அறியாதவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள். விவரம் அறிந்த அரசியல்வாதிகளோ குழப்புகிறார்கள்.

இந்தக் குழப்பத்தின் விளைவாக தமிழகத்தில் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. ""பொழைக்கப் போன இடத்திலே, தனிநாடு கேட்டுத் தகராறு பண்ணா சுட்டுப் பொசுக்காம விடுவானா...'' என்பதுதான் அக் கேள்வி.

பிழைக்கப் போன இடத்தில் உரிமைகள் கேட்டுப் போராடுவது என்பது தவறு அல்ல என்பது ஒருபுறம் இருக்க, உண்மையில் இன்று தங்களுக்குத் தனி ஈழம் வேண்டும் என்று கேட்பவர்கள் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து குடியேறி முப்பாட்டன் காலத்திலிருந்து இலங்கையைத் தங்கள் தாய் நாடாகவும், இலங்கை மண்ணில் தாங்கள் பிறந்து, வளர்ந்து, உழைத்து, ஓய்ந்து முடிவில் அந்த மண்ணுக்குள்ளேயே மறைந்து விடுவது தவிர வேறு எண்ணமே இல்லாத மலையக மக்கள் அல்ல. இவர்கள் ஒருபோதும் தனிநாடு வேண்டும் என்று கேட்டதில்லை. தங்களுக்கென்று ஒரு நாடு... ஏதோ ஒரு நாடு-அந்த நாட்டின் சட்டத்துக்குட்பட்ட பிரஜைகளாக இருந்து, வாழ்ந்து, மடிந்து போகவே இவர்கள் விரும்புகிறார்கள்.

மனித உரிமைகளைக் காட்டுமிராண்டித்தனமாக, காலம் காலமாகக் கற்பழித்துவரும் சிங்கள இனவாத அரசு, இந்த மலையகத் தமிழர்களைத் தன் நாட்டின் பிரஜைகளாகக் கருதவே மறுக்கிறது. அது மட்டுமல்ல, இவர்களைப் பற்றி அரசுப் பதிவேட்டில் குறிப்பிடும்போது "இந்திய வம்சாவளித் தமிழர்' என்ற சொற்பதத்தையே உத்தியோகபூர்வமாக உபயோகிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், இவர்கள் இந்தியாவில் இருந்து வந்த கூலிப் பட்டாளம்; இவர்களுக்கு இலங்கையில் எந்தவிதத் தேசிய உரிமையோ, சமத்துவமோ கிடையாது என்பதுதான்.

இந்த வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் சிங்களவர்கள் கூட வட இந்தியாவில் இருந்து ஓடிவந்து இலங்கையில் நுழைந்தவர்கள்தான். அவர்களுக்கு மட்டும் உரிமை; இவர்களுக்கு அது ஏன் இல்லை?

இது ஒரு புறம் இருக்க, பரிதாபத்திற்குரிய இந்த மலையக மக்கள், இன்று "அகதிகள்' என்று பெயர் மாற்றம் பெற்று இருண்டு போன தங்கள் வாழ்க்கை, இழந்துவிட்ட தங்கள் மண், நொறுங்கிப் போன தங்கள் குடும்ப உறவுகள் பற்றிய கசப்பான நினைவுகளால் சூழப்பட்டு நடமாடும் பிணக் கூட்டமாய் நிற்கிறார்கள். இவர்களுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? எப்படி இது நேர்ந்தது?

மலையக மக்களின் வரலாறு, இலங்கையில் காப்பிப் பயிர் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து துவங்குகிறது. 1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகில் இருக்கும் சிங்கப்பிட்டி என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேர்ட் (Henry Bird) என்பவர் 14 தொழிலாளர்களை வரவழைத்து மிகவும் வெற்றிகரமான முறையில் காப்பிச் செடியைப் பயிர் செய்து, 600 பவுண்டுகள் நிகர லாபம் பெற்றார்.

இந்த வெற்றியானது இலங்கையின் மலைப்பகுதியை மாத்திரமல்ல, இலங்கையின் பொருளாதாரத்தையே அடியோடு மாற்றி அமைத்துவிட்டது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்களை வஞ்சகமான முறையில் வரவழைத்து ஒரு நவீன அடிமைச் சமுதாயத்தை இலங்கையில் உருவாக்கும் தொடக்கப்புள்ளி இந்தக் கட்டத்திலிருந்துதான் தொடங்குகிறது.

மாபெரும் லாபம் தரும் பணப் பயிரான காப்பி, நவீன தொழில் நுட்பம் எதுவும் தேவை இல்லாத விவசாயத் தொழில் என்பதால், வெள்ளைக்காரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர் இத்தொழிலில். இதற்குத் தேவை இரண்டே விஷயம்தான். ஒன்று-காப்பி பயிரிடச் சாதகமான தட்பவெப்பச் சூழ்நிலை உள்ள பரந்த மலைச்சரிவுகள். இரண்டாவது-அந்த மலைச்சரிவுகளில் கடுமையாக உழைக்கக்கூடிய அடிமைக் கூட்டம்.

அன்று இந்தியா, இலங்கை இரண்டிலும் வெள்ளையர் ஆட்சி நிலவியதால், இலங்கையில் இடத்தையும், இந்திய மண்ணில் இருந்து கூலி அடிமைகளையும் வெள்ளைக்காரப் பெரு முதலாளிகளால் மிகச் சுலபமாகப் பெறமுடிந்தது. அத்துடன் ஆப்பிரிக்க மண்ணில் நீக்ரோ இன மக்களை அடிமையாக்கி, சுரண்டிக் கொழுத்த நீண்ட கால அனுபவம் வேறு இருந்ததால் இந்திய மக்களைச் சுரண்டுவதற்கு அவர்கள் அதிகம் சிரமப்படவில்லை.

காப்பியும், தேயிலையும் இலங்கையின் பிரதான விளைபொருட்களாக மாறிய பிறகு, இந்தப் பெருந் தோட்ட முதலாளிகளுக்கு உதவிட 1800-ஆம் ஆண்டு ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, இலங்கை உள்ளூர்வாசிகள் 100 ஏக்கருக்கு மேல் காணி வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்றும், அதேசமயம் வெளிநாட்டுக்காரர்கள், குறிப்பாக ஐரோப்பியர்கள் 4000 ஏக்கருக்கு மேற்படாமல் காணி வைத்துக் கொள்ளவும் இச்சட்டம் வகை செய்தது.

1835-ஆம் ஆண்டு வெளியான கோல்புரூக் ஆணைக் குழுவின் சீர்திருத்தம் காப்பி உற்பத்தியாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. இவ்வாணைக்குழுவின் சிபாரிசினால் காப்பிப் பெருந்தோட்ட உற்பத்திக்கு அவசியமான சகல அரசியல் நிர்வாக மாற்றங்களும் செய்து முடிக்கப்பட்டன. முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகப் பல சலுகைகளை அரசாங்கம் வழங்கியது. சகல வரிகளும், சுங்கத் தீர்வைகளும் 12 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டன. காப்பிக்கான நிலம் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்பட்டது. அப்போது ஓர் ஏக்கருக்கு 5 ஷில்லிங் (ஏறக்குறைய 25 சதம்) மாத்திரமே. இதுகூடச் சர்வே சார்ஜ் (அளவைக் கட்டணம்) தான்.

காப்பிப் பெருந்தோட்ட முதலாளிகளுக்கு பல சலுகைகள் அளித்த பிறகு அடுத்த கட்டமாக அதற்குக் கூலி வேலை செய்ய அடிமைப்பட்டாளம் தேவைப்பட்டது. இந்த கட்டத்தில்தான் தமிழகத்து மண்ணின், மனிதர்களின் மனதை மாற்றி, அவர்களது மண்ணை மாற்றி, இலங்கை மண்ணுக்குக் கூட்டம் கூட்டமாக நயவஞ்சகமாக, பல்வேறு குயுக்தி வழிமுறைகளைக் கையாண்டு வெள்ளையர் அரசு அழைத்துச் சென்றது.

நாளை: ஆங்கிலேயரின் நயவஞ்சகம்


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=81189&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ எலும்புத்துண்டும், கண்ணீர் துளியும்..! ♥

"எந்தத் தருணத்திலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ராணுவ வீரர்கள்...
 அன்று அழுதபடியே அணிவகுத்துச் சென்றார்கள்....!"





http://www.keetru.com/dalithmurasu/sep06/yasar_arabat.jpg   http://wwwpublic.ignet.army.mil/images/1stCavin344.jpg  

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/prabhakaran.jpg       http://www.cpdulles.com/img/h_military.jpg   http://greekmilitary.net/Greek%20Military%20full%20camo%20Trooper.jpg

ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.

இது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். "அப்பா, செத்தானே" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை. யாசர் அராஃபத்தின் மரணத்தால் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய இஸ்ரேலியத் தலைவர்கள் கூட, நவம்பர் 11, 2004 அன்று ரமல்லா நகரில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் குழுமிய கூட்டத்தின் கேவல் ஒலியில், சற்றே அசந்துதான் போனார்கள். எந்தத் தருணத்திலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ராணுவ வீரர்கள் அன்று அழுதபடியே அணிவகுத்துச் சென்றார்கள். இறுதிச் சடங்குகளைப் படமெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிச் செய்தியாளர்களும் கண்கலங்கி, ரகசியமாகத் துடைத்துக்கொண்டதைத் தொலைக்காட்சியில் நாம் பார்த்தோம்.

பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.

காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை. அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது. மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.

அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.

எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.

பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள். அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.

எங்கே பாலஸ்தீன்?
அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே. ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை. இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.

அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள். அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது. யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.

அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (ỆAhmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?

அதுதான் பிரச்னை. பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.

இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.

இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.

எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழவழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள். வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?
 
தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன?
 
இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்.
 

யாசர் அராபத்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 நவம்பர், 2004


             http://www.nankooram.com/wp-content/uploads/2009/04/prabakaran-21.jpg                                                                                   http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/05/p6aew5.jpg      



 
   http://www.usma.edu/images/CFT2.jpg






♥ காந்தியும், காமராஜரும் கலந்த கலவை நீ..! -கக்கன் ஜீ ♥

-

http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/p071299d.jpg http://www.tamilauthors.com/tamilwriter-index%20welcome.JPG


http://heroworkshop.files.wordpress.com/2006/10/gandhi.GIF?w=217&h=217 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh15f1zKLYgJG2G2KEB6UklPiLXQmnSxdoOzM_OkTO4Hfa8D4uBjtgBr-MmiVaDLE2xEHeYTxal_aWUWnikjwwI6mlJwtoivz4y1_zIUZ7UWhHOTvMlZepY9ubihKeOZQgI7Cn1peBF9Tk/s400/kamaraj-periyar.jpg

கக்கன் ஜீ யின் நிலைத்த புகழுக்குக் காரணம் அரசியல் பணியா? ஆளுமைப் பண்பா? -பட்டிமன்றத்தில் கவிஞர் இரா. இரவி உரை


விழா ஏற்பாடு : கக்கன் ஜீ அறக்கட்டனை

தும்மைப்பட்டியில் மலர்ந்த தும்பைப் பூ கக்கன் ஜீ
மேலூர் பகுதியில் மலர்ந்த குறிஞ்சிப் பூ கக்கன் ஜீ
பூசாரிக் கக்கனுக்குப் பிறந்த கடவுள் கக்கன் ஜீ
குப்பி அம்மாள் ஈன்றெடுத்த சிப்பிமுத்து கக்கன் ஜீ

இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதையே இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் என்று காந்தி ஜீ-யை சொல்வார்கள். அதுபோல வாழ்ந்த மாமனிதர் கக்கன் ஜீ பிறந்த இந்த மண்ணிலிருந்து பேசுவதை மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன். இந்த மண்ணில் பிறந்த நாம் எல்லாம் பெருமை கொள்வோம். ஏழ்மையில் பிறந்து வளர்ந்து, அமைச்சர் பதவி வரை உச்சம் அடைந்த போதும், கடைசி வரை ஏழ்மையிலேயே வாழ்ந்த திருமகன் கக்கன். அவர் ஒரு மகா சமுத்திரம். அவரை அரசியல் என்ற குட்டையில் அடைக்காதீர்கள். அவர் ஒரு சகாப்தம், அவரை வட்டத்தில் சுருக்காதீர்கள்.

கக்கன் அவர்களுக்கு தம்பி பிறக்கும் போது தாயை இழந்தார். சிற்றன்னை வளர்க்கிறார். தந்தை கிராம காவலராக பணிபுரிந்து வந்தார். மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். ஆனால் கக்கன் ஜீ-க்கு படிப்பை விட நாட்டு விடுதலையில் ஆர்வம் அதிகம் இருந்ததால், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். பெண் வேடம் பூண்டு மறைந்து போராட்டம் செய்தார், பிடித்து வைத்து மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. அவருடைய சிறந்த பண்புக்கு, மன உறுதிக்கு பல எடுத்துக்காட்டுக்கள் அவரது வாழ்வில் உள்ளன.

இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார். வட்டச் செயலாளர், மாவட்ட பொருளாளர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகள் வகித்த போதும் உண்மையாக. நேர்மையாக வாழ்ந்த நல்லவர். இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் முனைவர் அரங்க சம்பத்குமார் எழுதிய நடையில் நின்றுயர் நாயகன் கக்கன் என்ற நூலை வாங்கிப் படித்து திருத்த வேண்டும். இங்கு உரையாற்றுவதற்கு ஆதாரமாக விளங்கியது இந்த நூல் தான். மிகச் சிறந்த மனிதரைப் பற்றி நூற்றாண்டு விழா கண்ட இந்தத் திருமகன் பற்றி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்தது. மிக வருத்தம். நடிகர் நடிகைகளுக்குத் தரும் முக்கியத்துவம் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு காந்தியும், காமராஜரும் கலந்த கலவையான கக்கன் ஜீக்கு வழங்கவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று போராடிய போது, அவருடன் வருகை தந்த அம்பலம் செட்டியார் இருவரையும் வெட்ட வந்த போது எனக்கு ஆதரவாக வந்த அவர்களை வெட்டு முன்பு என்னை வெட்டுங்கள் என்று கழுத்தைக் காட்டிய போது வெட்கிப் போனார்கள். இன்னா செய்தாரை திருக்குறள் வழி வாழ்கிறார்.

தனது வளர்ப்புத் தந்தை குரு வைத்தியநாதய்யர் தந்த பணத்திற்கு மிகச் சரியாக கணக்கும், மீதித் தொகை திருப்பித் தரும் நல்ல குணம். அவர் இறந்த போது இவரும் மொட்டை அடித்துக் கொள்கிறார். இவரது சிறந்த பண்பை சொல்லிக் கொண்டே போகலாம். அமைச்சராக இருந்த போது தன் மனைவி ஒரு அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னதற்காக, பலர் முன்னிலையில் தெருவில் மனைவியை கடிந்து கொள்கிறார். அரசு ஊழியரை தவறாக பயன்படுத்தக் கூடாது. சொந்த வேலை வாங்கக் கூடாது என்கிறார். வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு காபி வழங்க பால் இருப்பதில்லை. எனவே ஒரு மாடு வாங்கலாம் என யோசனை சொல்லி, நண்பர் திரு.எழுமலை மாடு வாங்கி வருகிறார். அவரிடம் ஒப்புகைச் சீட்டு எங்கே என்கிறார். அவர் மாட்டிற்கு தருவதில்லை என்கிறார். தேடி பிடித்து மாடு விற்றவரிடம் வாங்கி வருகிறார். வருவாய் தலை ஒட்டவில்லை. ஒட்டி வாங்கி வா என்கிறார். இப்படி பல நிகழ்வுகள்.

காந்தியடிகளை அவர் மிகவும் நேசித்த காரணத்தால் தனது மகளுக்கு கஸ்தூரிபாய் என பெயர் சூட்டுகிறார். தம்பி அழைத்து வந்த உறவினர் தவறு செய்து தண்டனை பெற்றவர். பரிந்துரைக்கு வந்த போது வெளியே போ என விரட்டுகிறார். அன்று மனம் வருந்திய தம்பி, இன்று அண்ணனின் நேர்மை கண்டு மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றார். கட்சிக்காரராக இருந்தாலும் வேலை சரியில்லை என்றால், காசோலை தர முடியாது என மறுக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது எழுத்தாளர் ஜெயகாந்தன் இவருடன் ரயில் பயணம் செய்த போது, பல்வேறு திரவியங்கள் கருவிகள் கொண்டு முகச்சவரம் செய்தார். ஆனால் கக்கன் அவர்கள் பிளைடால் அற்புதமாக முகச்சவரம் செய்ததைத் கண்டு அசந்து போய் பாராட்டி உள்ளார்.

மந்திரியாக இருந்த போது வெளியூர் சென்ற போது மாற்று உடை இல்லை என்று அவரே துவைத்து இருக்கிறார். மகிழுந்து ஓட்டுரை முதலில் சாப்பிடச் சொல்லும் மனித நேயம் மிக்கவர். கவர்னர் மாளிகை விருந்துக்கு தனது குழந்தைகள் கதராடை அணிந்து வரவில்லை என்பதற்காக வர வேண்டாம் என்று குழந்தைகளை திருப்பி அனுப்புகின்றார். சமரசம் என்ற சொல்லிற்கு இடமின்றி கொண்ட கொள்கையில் உறுதியாக வாழ்ந்த நல்லவர். உறவினர்கள் மருத்துவச் கல்லூரியல் இடம் கேட்டு வந்த போது காலை 9 மணிக்கே சென்று வரிசையில் நின்று படிவம் வாங்குகங்கள் என்று சொல்லி அனுப்பியவர். தங்கப் பேனா மலேசியா மந்திரி தந்ததும், அரசு பதிவேட்டில் பதிய முற்பட்ட போது மந்திரி எதற்கு என்று கேட்டதற்கு நான் மந்தரி பதவியை கேட்டு விலகும் போது பேனாவை அரசிற்கு ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும், அதற்காக பதிய வேண்டும் என்றார். இல்லை இதை பதிய வேண்டாம்,உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது அன்பளிப்பு என்றார். எனக்குத் தேவை இல்லை. இந்த தங்கப் பேனா பயன்படுத்தும் தகுதி எனக்கு இல்லை என திருப்பி தந்து விடுகிறார். விவிலியத்தில் ஒரு வசனம் வரும். தன்னைத் தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவர் அதைப் போல வாழந்த மாமனிதர் கக்கன்.

கக்கன் அவர்களை கக்கன் ஜீ என்று முதலில் அழைத்தவர் நேரு ஜீ. அந்தப் பெயரே நிலைத்தது. அவரது அரசியல் வாழ்க்கை 15 ஆண்டுகள் என்ற போதும் வாழ்நாள் 72 ஆண்டுகள் மிகச் சிறந்த பண்பாளராக நேர்மையின் சின்னமாக எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர். பெரிய பதவிக்காக மனம் மகிழவும் இல்லை. தோல்விக்காக துவளவும் இல்லை. ஒரு ஞானியைப் போல வாழ்ந்து உள்ளார்.

சாதிக் கலவரம் நடந்த போது தேவரை நேரில் போய் சந்திக்கச் சென்ற போது போக வேண்டாம் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மீறி மன தைரியத்துடன் சென்று தேவரை சந்திக்கிறார். அவர் மிகச் சிறப்பாக வரவேற்று, இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை விட்டு சாதிக் கலவரத்தை நிறுத்துகின்றனர். அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது தம்பி முன்னோடியின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். இப்படிப்பட்ட அமைச்சரை இன்றைக்கு இந்தியாவில் உலகில் எங்காவது பார்க்க முடியுமா?

கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி வழங்குகிறார். வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அதை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை. எனவே தருவது என் கடமை என்கிறார். இப்படிப்பட்ட நாணயம் மிக்க மனிதனை எங்கு தேடினாலும் காண முடியாது.

தனது தம்பிக்கு, காவல் துறை உயர் அதிகாரி திரு.அருள் அவர்கள், துணை ஆய்வாளர் பதவி தந்த செய்தி அறிந்ததும் என் தம்பிக்கு எப்படி நீங்கள் பதவி தரலாம் என்கிறார். உடல் தகுதி அடிப்படையில் தான் தந்தேன் என்கிறார். இல்லை ஒரு விபத்தில் காயம் பட்டு ஒரு விரல் சரியாக மடக்க வராது. துப்பாக்கி சுட முடியாது. எனவே அந்தப் பதவி தரக் கூடாது என கண்டிக்கிறார்.

வறுமையிலும் நேர்மையாக, நெறியாக வாழ்ந்த மாமனிதர், சத்யமூர்த்தி சீடர் என்பதால் தனது மகன்களுக்கு சத்தியநாதன், நடராசமூர்த்தி என்று பெயர் சூட்டி மகிழ்கின்றார். இந்த நாள் இனிய நாள், மிகச் சிறந்த மனிதரைப் பற்றி பேசிய நாளை சிறந்த நாளாகக் கருதுகின்றேன். மாமனிதர் கக்கன் ப+த உடல் மறைந்து இருக்கலாம். அவரது புகழ் உடலுக்கு என்றும் அழிவில்லை, உலகம் உள்ளவரை நிலைக்கும்.

கவிஞர் இரா. இரவி
www.kavimalar.com


era.2

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!