தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, August 9, 2009

♥ பிரபாகரன் கொல்லப்பட்டதாக ராஜபக்சே இன்னும் அறிவிக்கவில்லை, ஏன்? ♥

• தலைவர; பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் மட்டுமே
அறிவித்துள்ளது. சிங்கள அரசின் தலைவர; என்ற முறையில் ராஜபக்சே இதுவரை
(இக்கட்டுரை எழுதப் படும் நாள் 27.6.09) அறிவிக்கவில்லை.

• சிங்கள இராணுவத் திற்குப் புதிதாக ஒரு இலட்சம் பேரைச் சேர;க்கவுள்ளதாக

சிங்களத் தளபதி பொன்சேகா அறிவித்துள்ளார்.

• ஆஸ்திரேலிய அரசு புலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிக்க மறுத்தபோது,
சிங்கள அரசு 'விடுதலைப் புலிகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை. அவர்கள்
மீண்டும் வளரும் அபாயம் உள்ளது' என்று வாதிட்டது.

• 'முல்லைத் தீவில் புதிய படைத் தளம் அமைக்கப்படும் என்று சிங்கள
இராணுவம் அறிவித்துள்ளது. விடுதலைப்
புலிகள் ஒழிக்கப்பட்ட நிலையில் புதிய தளம் எதற்கு? எனச் செய்தியாளர;கள்
கேட்டபோது, 'விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை. அவர;கள் பல
குழுக்களாகப் பிரிந்து நாடு முழுதும் பரவியுள்ளனர;' என்றார; சிங்கள
இராணுவ செய்தித் தொடர;பாளர; உதயநாணயக்காரா.

http://www.puthinam.com/d/p/2009/mar/flag_20090320001.jpghttp://www.alaikal.com/news/wp-content/artil.jpgவீழவில்லை விடுதலைப்புலிகள்

ம.செந்தமிழன்


"தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல்
அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை.
வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துலகத்
தயார்ப்படுத்தல்களையும் செய்து வருகிறது என்பதுதான் உண்மையாகும்.

சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர் கொள்வதைத் தவிர
தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை.

"....வரப்போகும் போர்க்காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர்
கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராவோம்".

- தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்புர்வ இதழான 'விடுதலைப்புலிகள்'
இதழில் முகப்புக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் இவை. எழுதப்பட்டது 2007
ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்!

2008 ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்ட்தில் தொடங்கிய நான்காம் ஈழப்போர்
2009 மே 19 ஆம் நாள்வரை நீடித்தது. இப்போரில் விடுதலைப்புலிகள்
'ஒழிக்கப்பட்டுவிட்டதாக' சிங்கள அரசும், இந்திய அரசுத் தலைமையும்
தம்பட்டம் அடித்து வருகின்றன. மறுபுறம், 'விடுதலைப்புலிகள் தோல்வியைத்
தழுவியதாகவும் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது' என்றும்
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற 'அடையாளத்துடன்' சிலர்
அறிக்கைகள் வெளியிடுகின்றனர்.

தமிழகத்திலும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் இயங்கும் பிழைப்புவாத
ஒட்டுக்குழுக்கள், 'புலிகள் அரசியல் மீது நம்பிக்கையற்ற' செயல்பாட்டால்
தான் அழிந்து போனார்கள்; அவர்கள் அழிவிற்கு அவர்களே காரணம்' என்று
காகிதக் கிறுக்கர்களாக உளறிக் கொண்டிருக்கின்றனர்.

இம்மூன்று தரப்புகளுமே, சிங்கள் இந்திய கூட்டுச் சதிகாரர்களின் மூன்று
முகங்கள் என்பதே உண்மை! நான்காம் ஈழப்போர் குறித்த நேர்மையான திறனாய்வை
முன் வைத்து அப்போர் குறித்த நான்காவது கோணத்தை விளக்குவதே
இக்கட்டுரையின் நோக்கம். கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக நீடித்து
வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், சிங்களப் பேரினவாதம் கற்றுக்
கொண்ட பாடம் ஒன்று உண்டு. 'தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ
அடிப்படையில் வெல்ல இயலாது' என்பதே அப்பாடம்.

இதே பாடத்தை இந்தியா 1987 முதல் 1989வரை வெகு சிறப்பாக கற்றிருந்தது.
சிங்களப் பேரினவாதத் தலைமை 1989 முதல் 2005 வரையிலான பதினாறு ஆண்டுகளும்
தொடர்ச்சியான இராணுவப் பின்னடைவுகளை மட்டுமே சந்தித்து வந்தது. இதே
காலகட்டத்தில், விடுதலைப்புலிகள் தமிழீழ நிலப்பரப்பின் பெரும்பகுதியைத்
தமது ஆளுகைக்குள் கொண்டு வந்து, ஒரு தேசிய அரசையே நடத்தத்
தொடங்கிவிட்டார்கள்.

'தமிழீழ தேசத்தைச் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்' என்ற கோரிக்கை
முழக்கத்தைத் தமிழகத்தில் நாம் முன் நிறுத்திப் போராடினோம். புலிகளும்
இக்கோரிக்கையை மையமாகக் கொண்டே புலம்பெயர் தமிழர் அரசியலை
முன்னேடுத்தனர். இதே பதினாறு ஆண்டு காலத்தில், இந்தியா தனது சதி வலையைத்
தமிழீழத்தைச் சுற்றி விரிக்கத் தொடங்கியது. தமிழீழ விடுதலைப் போரை
இயக்கும் காரணிகளாக இருந்தவை;

களம் : தமிழீழம் - விடுதலைப்புலிகள்
பின்களம் 1 : தமிழ்நாடு - தமிழ்த் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகள்,
உதிரி உணர்வாளர்கள்
பின்களம் 2 : புலம் பெயர் நாடுகள் - புலிகள் இயக்கத்தின் பல்வேறு கிளை
அமைப்புகள்.

களத்தில் புலிகள் வலுவாக நிற்பதற்கு, பின்களங்கள் இரண்டின் உறுதுணையும்
அவசியமாக இருந்தது. இந்தியச் சதிகாரர்கள் களத்தில் கண்ட
தோல்வியிலிருந்து படிப்பினை பெற்றவர்கள். ஆகவே, அவர்கள் மீண்டும்
களத்தில் மோத விரும்பவில்லை.

பின்களம் 1
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, போலி இடதுசாரிகள் மற்றும் பிழைப்புவாத
ஒட்டுக்குழுக்கள் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் தமிழீழ விடுதலையைக்
கோட்பாட்டளவில் ஏற்றுக் கொண்டிருந்தன.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, புலிகளை எதிர்க்கும் நிலையை எடுத்த
கட்சிகள் கூட, வெளிப்படையாக தமிழீழ விடுதலையை ஆதரிப்பதாகவே காட்டிக்
கொண்டன. இதற்கான புறநிலைத் தேவை, தமிழர்களிடமிருந்து வந்தது இதன்
காரணம். தமிழ்த் தேசிய அரசியலை முன் வைக்கும் கட்சிகள் எவ்வித
சமரசமுமின்றி புலிகள் ஆதரவு நிலையைத் தொடர்ந்து கடைபிடித்தன.

ஈழப் போராட்டத்தின் முதல் பின் களம் என்ற வகையில், தமிழகம் இந்தியச்
சதிக் கும்பலின் முதல் இலக்கானாது. இலங்கை இனச்சிக்கலில் தமிழினப்
பகைமையை முதன்மைப்படுத்தியே இந்தியா தனது நிலைபாட்டை வகுத்தது. தமிழ்
ஈழம் அமையவிடக்கூடாது, தமிழகத்தில் இன உணர்ச்சி எழுச்சி
கொள்ளவிடக்கூடாது என்பதே இந்திய அரசு எடுத்த நிலைபாடு.

1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட 'உலகமயப்
பொருளாதாரம்' ஈழவிடுதலைப் போரை எதிர்க்க உலகநாடுகளின் ஆதரவைத் திரட்ட
வாய்ப்பளித்தது.

• தேசிய இன அடையாளங் களை ஒழிப்பதே உலகமயத்தின் அடிப்படையென்பதால், பிற
முதலாளிய நாடு கள் இந்தியாவின் திட்டத்தை ஏற்றன.

• உலகமயமாக்கலின்போது பெரு நிறுவனங்களால், பணம் வாரியிறைக்கப்பட்டது.
இதன் விளைவாக, தமிழகத் தேர்தல் கட்சிகள் பெரு நிறுவனங்கள் போல வளர்ந்தன.

• 1991ஆம் ஆண்டுக்கு முன்புவரை, தமிழின எதிர்ப்பு மண்டல ஆதிக்க நலன் என்ற
வகைகளில் மட்டுமே தமிழீழக் கோரிக்கையை இந்தியா எதிர்த்து வந்தது.
உலகமயத்தின் வருகை இச்சிக்கலை 'உலக ஆதிக்க நாடுகளின் நலன் சார்ந்ததாக'
மாற்றியது. அதாவது இந்திய நலனும் பிற வல்லாதிக்க நாடுகளின் நலன்களும்
'உலகமயம்' எனும் கண்ணியால் இணைக்கப்பட்டன.

• பயங்கரவாதம், பிரிவினை வாதம் ஆகியவற்றிற் கெதிராக என்று சொல்லி தடா,
பொடா உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்கள் இக்காலத்தில் ஏவிவிடப்பட்டன.

மேற்கண்ட காரணிகள் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக இயங்கும் தமிழகத்தின் செயல்
வேகத்தை வெகுவாகக் குறைத்தன. உலகமய ஆதிக்கம் - தேசிய இன ஒடுக்குமுறை,
இவையிரண்டும் இணைந்து செயல்படத் துவங்கியதால் தான், தமிழகத் தேர்தல்
கட்சிகள் 'தீவிர இந்திய தேசபக்த' நிலையை எடுத்தன.

இக்கட்சிகள் தமிழக எல்லையைக் கடந்து, இந்திய அளவில் சுரண்டிக்
கொழுக்கும் நிறுவனங்களாக வளர்ந்தது இக்காலத்தில் தான் என்பதைக் கவனிக்க
வேண்டும். தமிழின உணர்வை அரசியல் முழக்கமாகக் கொண்டிருந்த விடுதலைச்
சிறுத்தைகள், தேர்தல் கட்சியாக மாற்றப்பட்டு கடந்த தேர்தலில் ஈழ இன
அழிப்பை ஆதரிக்கும் நிலையை எடுத்த வரலாற்றைப் பொருத்திப் பார்த்தால்,
மேற்கண்ட கூற்று எளிதில் விளங்கும். இன உணர்வை முன்வைத்த பா.ம.க.
இத்திசையில் ஏற்கெனவே வளர்ந்துவிட்ட பெரிய அரசியல் கம்பெனியாகும்.
இவற்றுக்கெல்லாம் முன்னதாக அனைத்திந்திய அரசியல் சந்தையில் கலந்துவிட்டது
ம.தி.மு.க.

தமிழ்த் தேசிய இன நலன்களை முன்னிறுத்துவதைக் கைவிட்டு, இந்திய
ஏகாதிபத்தியத்தின் அங்கத் தினராகவோ, அடிவருடிகளாகவோ அவரவர்
தகுதிக்கேற்ப மாறினால் பெருமளவு சுரண்டிக் கொள்ளலாம் என்பதே இந்தியா
தமிழகத்திற்கு வழங்கிய வாய்ப்பு.

இவ்வாய்ப்பை நிராகரித்த உறுதியான தமிழ்த் தேசியர்கள் கடந்த 16 ஆண்டுகளில்
எண்ணற்ற வழக்குகளில் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றனர். இவ்வித நடவடிக்கைகளின் வழி, தமிழீழ விடுதலைப்
போருக்கான ஆதரவு, அதன் முதன்மைப் பின்களமான தமிழகத்தில் கணிசமாகக்
குறைக்கப்பட்டது. இது இந்தியாவின் திட்டமிட்ட நீண்டகால வேலைத்திட்டத்தின்
வெற்றியாகும்!

பின்களம் 2
புலம் பெயர் தமிழர்களின் இணையற்ற ஆதரவு, புலிகள் இயக்கத்தின் விரைவு
வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தின. தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட பல்வேறு
தேவைகளைப் பல்வேறு நாடுகளிலிருந்து இயங்கிய புலிகளின் துணை அமைப்புகள்
நிறைவேற்றி வந்தன. உலகமயத்தின் பெயரால் கைகுலுக்கிய இந்திய – அமெரிக்க
ஏகாதிபத்தியங்கள், தமது தமிழீழ எதிர்ப்பு நிரலை அரங்கேற்றத் தொடங்கின.

1997 ஆம் ஆண்டு - அமெரிக்கா
2001 ஆம் ஆண்டு - பிரிட்டன்
2006 ஆம் ஆண்டு - ஐரோப்பிய யு+னியன்
2006 ஆம் ஆண்டு - கனடா

என 'உலகமய' ஏகாதிபத்தியங்கள் விடுதலைப ;புலிகள் இயக்கத்தைத் தத்தம்
நாடுகளில் தடை செய்தன. இந்நாடுகள் புலிகள் மீது தடை விதிப்பதற்குக்
காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்தன. கனடா விதித்த தடைக்குப் பின்வரும்
காரணம் கூறியது: 'விடுதலைப்புலிகள் இயக்கம் கனடா வாழ் தமிழரிடையே நிதி
சேகரிப்பதற்காக வன்முறையில் ஈடுபடும் அபாயம் உள்ளது'. எள்ளளவும்
நியாயமற்ற காரணங்களைக் கூறி, இந்திய – அமெரிக்க சிங்கள கூட்டணி நாடுகள்
புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளை முடக்கின. இதே காலகட்டத்தில் மொத்தம் 32
நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன என்பது கவனிக்கத்தக்கது.

இந்நடவடிக்கைகள் அனைத்தும், தமிழீழ தேசிய இன விடுதலைக்கு எதிரான
ஏகாதிபத்திய கூட்டுச் சதியின் விளைவுகளே. இரண்டாம் பின் தளம் இவ்வாறாக
பலவீனப்படுத்தப்பட்டது. வல்லாதிக்க நாடுகளின் நலன்களுக்கு இலங்கைத்
தீவைப் பலி கொடுத்துதான் சிங்களம் இவ்வளவையும் சாதித்தது. இதே வேளை,
தமிழீழ விடுதலைப்புலிகள் எந்த வல்லாதிக் நிர்பந்தத்திற்கும் பணியாமல்
நிமிர்ந்து நின்றனர். இதற்குக் கிடைத்த பதிலடியே மேற்கண்ட தடைகளும்
நெருக்கடிகளும்!

1989 முதல் 2005 வரையிலான பதினாறு ஆண்டுகளும் இந்திய – சிங்கள கூட்டுச்
சதிகாரர்கள் தந்திரமாக, நேர்மையற்ற வழிகளில் செயல்பட்டு, தமிழீழ
விடுதலைப் போரின் பின்களங்கள் இரண்டையும் பலவீனப்படுத்தின!
இதற்குப் பிறகே, தமது இறுதி இலக்கான தமிழீழக் களத்தில் இராணுவ
ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிங்களம். இப்பெரும் போரில் சிங்களத்தின்
முதன்மைப் பின்களமாக இந்தியாவும், இரண்டாம் பின்களமாக பிற வல்லாதிக்க
நாடுகளும் செயல்பட்டு, தமிழீழத்தின் மீதான பெரும் போரை நடத்தின! இவ்வளவு
சீர்குலைவு களைச் செய்த பிறகும், விடுதலைப்புலிகளை அவர்களது களத்தில்,
சந்திக்க அஞ்சிய சிங்கள - இந்திய வல்லாதிக்க சதிகாரக் கூட்டு நாடுகள்,
தமது நோக்கத்தை நிறைவேற்ற ஓர் கொடூரத் திட்டத்தை தீட்டின. 'பீக்கான்
திட்டம்' (Project Beacon) என்பது அத்திட்டத்தின் பெயர்.

பீக்கான் திட்டம்

பீக்கான்(Beacon) என்றால்,'திக்குத்தெரியா இடத்தில் வழிகாட்டி அழைத்துச்
செல்லுதல்' என்று பொருள். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நார்வே தலைநகர்
ஓஸ்லோவில் பீக்கான் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது. சிறீலங்கா, இந்தியா
உள்ளிட்ட இருபது இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் கூடி சதியாலோசனை
செய்து இத்திட்டத்தை தீட்டினர்.

பீக்கான் திட்டத்தின் சாரம் இதுதான்:

• இத்திட்டத்தின் நோக்கம் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' இயக்கத்தை
முற்றிலும் ஒழித்துக் கட்டுவது.

• 2006 மே மாதம் இத்தட்டம் துவக்கப்பட வேண்டும்

• 2009 மே மாதம் திட்டம் முடிக்கப்பட வேண்டும்

• புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ளோரைத் துடைத்து அழிப்பதற்கு மேலும்
இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 2011 மே மாதம் இதன்
கால எல்லை.

• பீக்கான் திட்டம் 2005 திசம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் கட்டுப்
பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

• புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மூன்று கடலோரப்
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று
ஆண்டுகளில் (2006-2009) மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற வேண்டும் எனத்
தீர்மானிக்கப்பட்டது.

• முதல் பிரிவு (2006-2007) திருகோணமலையில் உள்ள சம்பு+ர் முதல்
மட்டக்களப்பு பனிச்சங்கேணி வரையிலான கரையோரப் பகுதிகளும் இவற்றோடு
இணைந்த நிலப்பகுதிகளும்.

• இரண்டாம் பிரிவு (2007-2008) மன்னார் முதல் பு+நகரி வரையிலான கரையோரப்
பகுதிகளும், இவற்றோடு இணைந்த நிலப்பகுதிகளும்..

• மூன்றாம் பிரிவு (2008-2009) ஆணையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான
கரையோரப் பகுதிகளும் இவற்றோடு இணைந்த நிலப்பரப்பும்.

பீக்கான் திட்டத்தின்படியே கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழீழக்களம்
இயங்கியது என்பதை மேலேயுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2006 ஏப்ரல் 25 ஆம்
நாள் சம்பு+ரில் முதல் விமானக் குண்டு வீச்சில் சிங்கள இராணுவம்
ஈடுபட்டது. நான்காம் ஈழப்போர் துவங்கிய நாள் இதுவே.

விடுதலைப்புலிகள் பீக்கான் திட்டத்தைத் தொடக்கத்திலேயே அறிந்திருந்தனர்.
புலிகளின் ஆதரவு இணையதளமான (தமிழ் எடிட்டர்ஸ்.காம் - tamileditors.com)
பீக்கான் திட்டம் குறித்த விரிவான கட்டுரையை 2007 ஆம் ஆண்டிலேயே
எழுதியிருந்தது. 'இராணுவத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தாமல்,
தற்காப்புச் சமர் புரிந்து கொண்டே பின்வாங்குவது' என்பதே புலிகளின்
போர்த்தந்திரமாக இருந்தது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ல் சம்பு+ரில் முதல் குண்டு விழுந்தபோது,
சர்வதேச நாடுகள் சிங்கள அரசைக் கண்டித்து வாய் திறக்கவே இல்லை. அது
'சமாதானக் காலம்'. புலிகளும் சிங்கள அரசும் நார்வே தலையீட்டுடன் போர்
நிறுத்த உடன்படிக்கையில் இருந்த காலம். இருந்தபோதிலும், சிங்கள இனவெறி
அரசின் அத்துமீறுலை உலகம் கண்டும் காணாதிருந்தது. காரணம் - சம்பு+ரில்
விழுந்த குண்டு சிங்கள இராணுவத்திற்கு மட்டும் சொந்தமல்ல் இந்தியா
உள்ளிட்ட 20 நாடுகளுக்கும் சொந்தமானது.

பீக்கான் திட்டத்தின் நோக்கம் 'விடுதலைப்புலிகளை அழிப்பது' என்று
சொல்லப்ப்டாலும், அதன் முதன்மை நோக்கம் தமிழீழத் தேசிய இனத்தையே
அழிப்பது தான்!

பீக்கான் திட்டத்தின் முதன்மையான அம்சம் என்னவெனில், 'தாக்குதலின் போது,
அதிகப்படியிலான விமானக் குண்டு வீச்சிலும், பல்குழல் எறிகணை வீச்சிலும்
ஈடுபடுவது அவசியம்' என்பதாகும். இத்தாக்குதல்களின் நோக்கம் பேரளவில்
பொதுமக்களைப் படுகொலை செய்வது என்பதே! இதன் வழி சிங்கள - இந்திய
வல்லாதிக்கக் கூட்டுநாடுகள் அடைய விரும்பிய நலன்கள்:

1. ஆயிரக்கணக்கில் படுகொலைகள் செய்வதன் வழி, தமிழீழ இனத்தின்
எண்ணிக்கையைக் குறைத் தல்.

2. படுகொலைகள் கட்டற்றுப் போகும் நிலையில், மக்கள் பீதியடைந்து
விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு.

3. தொடர்குண்டு வீச்சுகளால் தமிழீழத்தின் வாழ் வாதாரங்களைச் சிதைத்து,
மக்களை உள்நாட்டு ஏதிலிகளாக்குவது.

4. போரின்போது, விடுதலைப் புலிகள் தற்காப்பு நிலை எடுத்து பதுங்கிக்
கொண்டால், பெருமளவு மக்களைப் பலி வாங்குவதன் வழி புலிகளைக் களத்திற்கு
வரச் செய்து வழிப்பது.

பீக்கான் திட்டத்தின் வடிவமைப்பில் 'இனப்படுகொலை' இடம் பெற்ற போது,
இதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று
அஞ்சப்பட்டது. பீக்கான் திட்டத்தின் வடிவமைப்பாளர்கள் தமிழர் போராட்டம்
வெடிக்கும் அபாயமுள்ள 12 நாடுகளைப் பட்டியலிட்டனர். இந்நாடுகளில் உள்ள
தமிழர் தலைவர்கள் "பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தனர்' என்ற குற்றச்
சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட வேண்டும்' என்று பீக்கான்
திட்டம் வழிகாட்டியது.

கடந்த ஓராண்டாக இன அழிப்புக்கு எதிராக மேடையில் பேசிய குற்றத்தறிகாக
தோழர்கள் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், பெ.மணியரசன் உள்ளிட்டோர்
பலமுறை கைது செய்யப்பட்டதை பீக்கான் திட்டத்தின் மேற்கண்ட விதியோடு
பொருத்திப் பார்க்க வேண்டுகிறேன்.

ஆகவே அனைத்தையும் சிங்கள இந்தியக் கூட்டுப்படையினர் 'திட்டப்படியே'
நடத்தினர்!

'பீக்கான் திட்டம்' குறித்த அடிப்படைகளை அறிந்து கொண்டால் மட்டுமே
நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரின் விளைவுகளை மதிப்பிட முடியும்.
இத்திட்டத்தின் அடிப்படைத் தந்திரோபாயங்களாக.

• பேரளவு இன அழிப்பை மேற்கொள்ளுதல், எதிர்க்க வரும் புலிகளை அழித்தல்

• சாரத்தில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக இராணுவத்தினர; முன்னே வைத்து,
புலிகளின் போர;த் திறனைக் குறைத்தல்.

• இவற்றைச் சாதிப்பதற்காக சிங்கள ராணுவத்தின் பெருமளவு திறனையும்
பயன்படுத்தல்.

• சிங்கள இராணுவத்திற்கு ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து
கவலைப்படாதிருத்தல்

• சிங்கள அரசின் நிதியாதரங்களை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய திட்டத்தில்
ஈடுபட முடியாது என்பதால் சிங்கள அரசின் பேரளவு நிதி ஒதுக்கீட்டைப் போர;
நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது. சிங்களர; வாழும் பகுதிகளுக்கான நிர;வாக
நிதியுதவிகளை இணைத ;தலைமை நாடுகள் கவனித்துக் கொள்வது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2007ஆம் ஆண்டிலிருந்தே இப்பெரும் போருக்குத்
தயாராகிவிட்டனர;. 2007ஆம் ஆண்டு அனுராதபுரம் இராணுவத் தலைமையகம் மீது
புலிகள் நடத்திய தாக்குதல் பீக்கான் திட்டத்தின் விளைவுகளைக்
குறைப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையே என்பதை இப்போது உணர
முடிகிறது.

'நான்காம் போரை இராணுவ ரீதியில் வெல்ல இயலாது' என்பதைப் புலிகள்
உணர;ந்திருக்கக் கூடும். ஏனெனில், 'நான்காம் போர;' உண்மையில் 'போர;'
அல்ல. அது ஒரு இன அழிப்பு நடவடிக்கை என்பதை பீக்கான் திட்டம் வெட்ட
வெளிச்சமாக்கிவிட்டது. இந்த அடிப்படையில் புலிகள் தமது தந்திரோ
பாயங்களாகப் பின்வருவனவற்றை வகுத்தனர; எனக் கருதலாம்.

• இராணுவத்தினரை முன்னேறித் தாக்கி விரட்டுவது சாத்தியமல்ல. எனவே,
தற்காப்புத் தாக்குதல்கள் மட்டும் நடத்துவது.

• இராணுவம் இன அழிப்பைத் தமது தந்திரோபாய நடவடிக்கையாகவும் கோட்பாட்டு
இலக்காகவும் கொண்டுள்ளது
என்பதால், நிலப்பகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளப் போரிட்டால்,
பொதுமக்கள் உயிரிழப்பு அபாயகரமாக அதிகரிக்கும். எனவே, நிலப் பகுதிகளை
விட்டு பின்வாங்கிச் செல்வது.

• ஏதிரிகளின் நோக்கம் புலிகளுடன் போரிடுவது மட்டுமல்ல. பொதுமக்களைப்
பெரும் எண்ணிக்கையில், அழிப்பதும்தான் என்ற நிலையில், பொதுமக்களை
ஆதரவற்றோராக விட்டுச் செல்லாமல், அவர;களையும் தம்மோடு அழைத்துச் சென்று
பாதுகாப்பது.

• இலட்சக்கணக்கான பொதுமக்களோடு காடுகளுக்குள் சென்று சர;வதேச
சமூகத்தின் மனச்சான்றை உலுக்கிப் போரை நிறுத்தச் செய்வது.

• முன்னேறி வரும் படையினரின் எண்ணிக் கையையும், தளவாட ஆற்றலையும் கணிசமான
அளவில் குறைத்து விடுதல்.

பீக்கான் திட்டத்திற்கான எதிர;த் திட்ட வடிவம் என்றளவில் மேற்கண்ட
தந்திரோபாயங்களைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர முடிகிறது. புலிகள்
'மனிதக் கேடயங்களாக' பொதுமக்களைப் பயன்படுத்தினர; என்று சிங்கள இந்திய
கூட்டுச் சதி நாடுகள் கூக்குரலிட்டதன் உண்மையான பொருள் வேறு.

தமிழீழப் பகுதி முழுதும் வான் தாக்குதல்களாலும், பல்குழல்
எறிகணைத்தாக்குதல்களாலும் இலட்சக்கணக்கான தமிழரைப் படுகொலை செய்யத்
திட்டமிட்டிருந்த இச்சதிகார நாடுகள், மூன்றரை இலட்சம் மக்களும் புலிகளின்
பின்னால், பாதுகாப்பாகச் சென்றதைக் கண்டு ஏமாற்றமடைந்தன. மேலும்,
கிளிநொச்சி, பரந்தன் போன்ற சமவெளிக் களங்களில் புலிகளை எதிர;கொள்ளலாம்
என்ற அவர;களது கனவும் கலைந்தது. புலிகளும் மக்களும் வன்னிக்
காடுகளுக்குள் சென்றது, பீக்கான் திட்டத்தின் அடிப்படைத்
தந்திரோபாயங்களை வலுவிழக்க வைத்தது.

2008 நவம்பர; முதல் 2009 ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களும் தற்காப்புத்
தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு, பொதுமக்களையும் பேரழிவு
களிலிருந்து பாதுகாப்பதில் புலிகள் வெற்றியடைந்தனர;. ஏப்ரல் முதல்
வாரத்தில் புலிகளின் எதிர;த்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத சிங்கள-
இந்திய கூட்டு;ப்படை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியது.

இந்நெருக்கடியிலிருந்து மீளுவதற்காகவே புலிகள் மீது இரசாயண குண்டுகள்
வீசப்பட்டன. இத்தாக்குதலில் விதுஷா, கடாஃபி, தீபன் உள்ளிட்ட ஏழு
முன்னிலைத் தளபதிகளும் இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளும் படுகொலை
செய்யப்பட்டனர;. இதற்குப் பிறகுதான், பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை
அதிகரித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிங்களப் படையினருடன்
விடுதலைப் புலிகள் பெரியளவிலான தாக்குதல்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.

முதலாவது பின்களமான தமிழகத்தில் இன அழிப்பிற்கு எதிராக இந்தியாவை
மிரட்டும் விதத்திலான எந்தப் போராட்டமும் நடக்க வில்லை. இரண்டாம்
பின்களமான, புலம் பெயர; தமிழர; சமூகம் எழுச்சி கொண்டு போராடியது.
இவ்வெழுச்சியைக் கண்ட மேற்குலக நாடுகள் தந்திரமாக, 'விடுதலைப் புலிகள்
ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும். இலங்கை அரசு போரை நிறுத்த
வேண்டும்' என்று அறிவித்தன. இரண்டு பின்களங்களும் ஒத்துழைக்காத நிலையில்,
களம் பலவீனப் பட்டது. பீக்கான் திட்டத்தின் படியே 2009 மே மாதம் போர;
'முடிவுக்கு' வந்தது. வீழவில்லை புலிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் நேர;ந்த
கொடூர அனுபவத்திற்குப் பிறகும், புலிகள் தமது படையணி களையும்,
தலைவர;களையும், முதன்மைத் தளபதிகளையும் கள முனையிலேயே நிறுத்தி
வைத்திருக்க வாய்ப்பில்லை.

மே 19ஆம் நாள் போர; 'நிறுத்தப்பட்டதாக' ராஜபக்சே அறிவிக்கும் வரை,
புலிகளின் ;எந்தப் படையணியும் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் இல்லை.
பொதுமக்கள் மீது இராணுவத்தினர; நடத்திய தாக்குதல்களை முறியடிக்க
ஆங்காங்கு சில 'முறியடிப்புத் தாக்குதல்கள்' மட்டுமே நடத்தப்பட்டன.

இதே வேளை, விடுதலைப் புலிகளின் படையணிகள் தமிழீழத்தின் பல்வேறு
பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பொதுமக்களைக்
காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், 'ஆயுதங்களை ஒப்படைக்கவும் தயார;'
என்று புலிகள் இயக்கம் அறிவித்தது. இது குறித்துப் பேச்சுவார;த்தை நடத்த
புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர; பா. நடேசன் சமாதானச் செயலகத்
தலைவர; புலித்தேவன் உள்ளிட்டோர; வௌ;ளைக் கொடியுடன் சென்றபோது, சிங்கள
வெறியர;கள் அவர;களைப் படுகொலை செய்தனர;. பிறகு, மே 17,18,19 ஆகிய மூன்று
நாட்களும் இடைநிறுத்தாது கனரக ஆயுதத் தாக்குதல்களை பாவித்து 20
ஆயிரத்திற்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர;. இதே மூன்று நாட்களும்
மூன்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சம்பவங்களில் தலைவர; பிரபாகரன்
கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

புலனாய்வுப் பிரிவுத் தலைவர; பொட்டு அம்மான், கடற்புலிகள் தலைவர; சூசை
உள்ளிட்ட புலிகளின் ஒட்டு மொத்தத் தலைமையும் அழிக்கப்பட்டதாக இராணுவம்
மார;தட்டிக் கொண்டது. பகுத்தறிவு கொண்டு ஆய்வு செய்தால், தமிழீழ
விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டார;கள் என்ற அறிவிப்பு ஒரு
கட்டுக் கதை என்பதை உணரமுடியும். பீக்கான் திட்டத்தை நன்கு உணர;ந்து,
தொடக்கம்; முதலே செயற்பட்ட புலிகள் தமது படைத் திறனை இறுதிவரை காத்து
வைத்தனர; என்பதையும் மிகக் குறைந்த வலுவைக் கொண்டுதான் எதிரிகளுக்குப்
பேரிழப்புகளை ஏற்படுத்தினர; என்பதையும் அனுராதபுரம் தாக்குதல் தொடங்கி
இறுதித் தாக்குதல்கள் வரை காண முடிகிறது.

புலிகள் தமது ஆற்றல் வளங்களைக் கணிசமாகத் தக்க வைத்துக் கொண்டு,
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டனர;.
இதற்கேற்றவாறு புலிகளின் போர;த்தந்திரங்கள் அனைத்தும் அறிவார;ந்த
முறையிலும் மிகுந்த நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டன. (புதிய தமிழர;
கண்ணோட்டம் இதழில் வெளியான சிங்களத்தின் இறுதிப்போர; - முதல் கட்டம்,
இரண்டாம் கட்டம் கட்டுரைகளைப் பார;க்க) 'பீக்கான் திட்டம் மே மாதம்
முடிவடையும்' என்பது ஏற்கெனவே தெளிவான செய்தி. ஆகவே 'மே மாதம் வரை
போரில் நீடிப்பது, பிறகு
பாதுகாப்பான நிலைகளுக்குத் திரும்பி விடுவது' என்ற செயல் திட்டம்
புலிகளால் வகுக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்.

மே 15 முதல் 19 வரை யிலான தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்களும்,
புலிகளின் படையினருமே பேரளவில் படுகொலை செய்யப்பட்டனர;. புலிகளின்
அரசியல் பிரிவுத் தலைவர;கள் பா. நடேசன், புலித்தேவன் வஞ்சகமாகக்
கொல்லப்பட்டனர;. சில அரசியல் பிரிவுத் தளபதிகள் இராணுவத்தினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர;. புலிகளின் முக்கியப் படையணிகள் முக்கியத் தளபதிகள்
குறித்த எதிர;மறைத் தகவல்கள் ஏதும் ஆதாரப் பு+ர;வமாக இதுவரை
வெளியாகவில்லை. எனவே, அவர;களனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்பலாம்.

இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் சான்றுகள்:

• தலைவர; பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் மட்டுமே
அறிவித்துள்ளது. சிங்கள அரசின் தலைவர; என்ற முறையில் ராஜபக்சே இதுவரை
(இக்கட்டுரை எழுதப் படும் நாள் 27.6.09) அறிவிக்கவில்லை.

• சிங்கள இராணுவத் திற்குப் புதிதாக ஒரு இலட்சம் பேரைச் சேர;க்கவுள்ளதாக
சிங்களத் தளபதி பொன்சேகா அறிவித்துள்ளார்.

• ஆஸ்திரேலிய அரசு புலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிக்க மறுத்தபோது,
சிங்கள அரசு 'விடுதலைப் புலிகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை. அவர;கள்
மீண்டும் வளரும் அபாயம் உள்ளது' என்று வாதிட்டது.

• 'முல்லைத் தீவில் புதிய படைத் தளம் அமைக்கப்படும் என்று சிங்கள
இராணுவம் அறிவித்துள்ளது. விடுதலைப்
புலிகள் ஒழிக்கப்பட்ட நிலையில் புதிய தளம் எதற்கு? எனச் செய்தியாளர;கள்
கேட்டபோது, 'விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை. அவர;கள் பல
குழுக்களாகப் பிரிந்து நாடு முழுதும் பரவியுள்ளனர;' என்றார; சிங்கள
இராணுவ செய்தித் தொடர;பாளர; உதயநாணயக்காரா.

'பீக்கான் திட்டத்தின்' நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தவிடாமல்,
தமிழீழ விடுதலைப் புலிகள் தீரமிகுப் போரை நடத்தி முடித்திருக்கிறார;கள்.
கோழி இறக்கைகளுக்குள் குஞ்சுகளை வைத்துப் பாதுகாப்பது போல் மூன்றரை
இலட்சம் மக்களை ஏழு மாதங்களாகக் காத்தனர;.

இந்திய வல்லாதிக்க அரசின் செயல்வேகத்தைக் குறைக்கும் அளவுக்கான
போராட்டங் களையாவது தமிழகத்திலிருந்து எதிர;பார;த்தனர;. அவர;களது
எதிர;பார;ப்பாற்றலை நாம் நிறைவேற்றவில்லை. இந்திய வல்லாதிக்கத்தின்
குரல்வளையை இறுக்குமளவு போராடினால் மட்டுமே, தமிழீழ விடுதலையின் களம்
வலுப்பெறும். நாம் முதன்மைப் பின் களத்தில் நிற்கிறோம் என்ற உணர;வு
நமக்கு வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது களத்தில்
சந்தித்திருப்பது பின்னடைவு மட்டுமே! தோல்வி அல்ல! அவர;கள் வீழவில்லை!
அவர;கள் மீண்டும் வருவார;கள். தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுப்பார;கள்.
இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.

இதே வேளை, களத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றிபெறுவதற்கு
முதன்மைப் பின்களமான தமிழகத்தில், தமிழ்த் தேசிய விடுதலை உணர;வு வலுப்பெற
வேண்டும். பின்களப் போராட்டம் களத்திற்கு வலுவு+ட்ட வேண்டும். இது நம்
தேசியக் கடமை. இதைச் செய்வதை விடுத்து, தமிழீழ விடுதலைப் போர;
முடிந்துவிட்டதாகவும், புலிகள் வீழ்ந்து விட்டதாகவும் சிங்கள -இந்தியக்
கூட்டுப் படை மேற்கொள்ளும் பொய்ப் பரப்புரைகளை நம்பினால், நாம் பிழை
செய்தோர; ஆவோம்.

வீழவில்லை விடுதலைப் புலிகள்! ஓயவில்லை தமிழீழ விடுதலைப் போர;!

சான்றுகள் :

www.tamilcanadian.com –World Democracies Wake up: Stop Sri-Lankan
terror - By: Dr C P Thiagarajah, TamilCanadian - November 1,
2007.2007.
www.thesamnet.co.uk (இந்த இணையதளம் தமிழீழ விடுதலைக்கு எதிரான, சிங்கள
அரசுக்கு ஆதரவான ஒட்டுக்குழக்களால் நடத்தப்படுவது.; பீக்கான் திட்டம் மே
மாதத்தோடு முடியப் போகிறது என்றும், புலிகள் இயக்கத்தின் தலைமைக்கு
ஆபத்து என்றும் இந்த இணையதளம் ஏப்ரல் 2009ல விரிவான கட்டுரை வெளியிட்டது
குறிப்பிடத்தக்கது)

ம.செந்தமிழன்

http://tamizharkannotam.blogspot.com/2009/07/blog-post.ஹ்த்ம்ல்


http://www.sankathi.com/uploads/images/news/2009/May/Pukal/Austria%20(1).JPG

http://www.nankooram.com/wp-content/uploads/2009/03/tamil-tigers.jpg

http://www.puthinam.com/d/p/2009/mar/flag_20090320002.jpg


http://www.telonews.com/sritelo/wordpress/wp-content/uploads/2009/02/2040chalei_j.jpg


         
http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/03/ltte-guards-1.bmp


♥ தாலி என்னும் தரித்திரம் ♥


தாலி என்னும் தெரித்திரம்
தாலி என்னும் தரித்திரத்தை நினைத்தாலே எனக்கு கோபம் வரும். பழங்காலங்களில் அடிமைகளை குறிக்க அவர்களின் கழுத்தில் ஒரு வளையம் போடுவார்கள். அந்த வளையத்தை அவர்கள் எப்போதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும். அடிமையாய் இருப்பவனுக்கு தான் எப்போதும் அடிமை எஜமானர்களுக்கு அடங்கி போக வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்கும் எஜமானர்களுக்கு இவன் நமக்கு அடிமை இவனை நசுக்கலாம் என்று உற்சாகமூட்டுவதற்குமாக கொண்டு வரப்பட்ட வழக்கம் தான் மாறி பெண்களை அடிமை பார்வை பார்க்க ஆண்கள் உருவாக்கி வைத்தனர் - தாலி.

அப்படி சங்கிலி பிணைக்கப்பட்ட அடிமை என்ன செய்யவேண்டும் தெரியுமா...எஜமானர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் - இது பெண்கள் விஷயத்தில் பெண் பார்க்க வரும் போதே தொடங்கிவிடுகிறது.

அடுத்து அவர்களின் அழுக்கு துணிகளையும் கழிப்பறையையும் சுத்தம் செய்ய வேண்டும். - வீட்டு வேலை பெண்கள் செய்ய வேண்டியது என வற்புறத்தப்பட்டு காலம் காலமாய் பெண்ணை ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் மாற்றிவிட்டார்கள்.

எஜமானர்களை எதிர்த்து நாம் எதுவும் செய்துவிட முடியாது - பெண்கள் ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது. கணவன் அடித்தால் திருப்பி அடிக்க கூடாது. மண் சோறு சாப்பிட வேண்டும். நோன்பு இருக்க வேண்டும். அந்த அடிமை வளையத்தில் அதாவது தாலியின் கும்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டுமாம். ஆண் என்ன கடவுளா. அப்படி கடவுளையே பகுத்தறிவு என்னும் ஆயுதம் கொண்டு எதிர்க்கும் காலகட்டத்தில் ஒரு சாதாரண மனிதன் ஒரு ஆண் என்பதால் அவனை கடவுள் என பாவிக்க யார் சொல்லி கொடுத்தது. ஆண்கள். அவர்கள் தான் அடிமை விலங்கு என தாலியை கட்டி இனி மேல் நீ என் அடிமை என கூவி அவர்களை அவர்களாஎ கடவுளாக்கிக்கொண்டார்கள். எத்தனை சிரிப்பு வரவைக்க கூடிய விஷயம் பாருங்கள்.அழகான பெண்கள் அழைத்தால் ஆண்கள் இப்படி வரவும் தயார்.
அடுத்து எஜமானர்கள் தின மிச்சத்தை சாப்பிட வேண்டும். - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் மனைவி சாப்பிட வேண்டுமாம். இது எத்தனை வக்கிரம் பாருங்கள். தான் தின்ற எச்சிலை மனைவி சாப்பிட வேண்டும் என விரும்பும் ஆண் ஹிட்லரை விட சாடிஸ்ட் என்று தானே சொல்ல வேண்டும். ஆண் என்றல்ல ஒரு சமுதாயமே அதை விரும்புகிறது. அப்படி தான் பெண் சாப்பிட வேண்டும் என்று பண்பாட்டு போர்வையில் அடிமை தனத்தை திணிக்கிறது. அதற்கெல்லாம் சங்கிலி போட்டாற் போல ஒரு தாலியை கழுத்தில் கட்டிவிட்டால் போதும். யோசித்து பாருங்கள் பெண் என்பவள் உங்களை போல் ஒரு ஜீவராசி. இந்த பூமியில் பிறந்தவள். அவளை உங்கள் சுக போதைக்கு அடிமை போல் வளர்த்து மிகவும் கீழான ஆண் வர்க்கத்தை மேலாக காட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை அடிமை படுத்தி பார்த்த உங்களை என்ன சொல்வது.

பிறகு எஜமானர்களுக்கு கால் அமுக்கி விட வேண்டும் விசிறி விட வேண்டும். இதுவும் பெண்கள் மேல் திணிக்கப்பட்ட அடிமை பணிகள். இப்போது அப்படி இருக்கிறதா தெரியாது ஆனால் நம் அம்மா அப்பா காலத்தில் நிச்சயம் இருந்திருக்கும். பிறகு எஜமானர்களின் செக்ஸ் தேவைகளை அடிமைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அது தான் காட்டு யானை போல் வந்து விழுகிறீர்களே ஆண்களே. தாலி ஒன்றை கட்டிவிட்டு அப்படா இனி எல்லாம் ஓசி என்று மனைவியின் விருப்பம் இல்லாமலே அவளை தொட்டு உங்கள் ஆண்மையை நிலைநாட்டுகிறீர்கள். இது எந்த வகையில் வீரம் ஆண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் தொட்டு புணர்ந்து இன்பம் கண்டு விட்டு அதை ஏதோ பெரிய ஆண் சிங்கம் செய்யும் சாகச ச்யல் போல் மீசையை முறுக்கி விட்டுக்கொள்வது எந்த ஊர் வீரம் என்று புரியவில்லை. வெட்கப்படுங்கள் ஆண்களே. வெட்கம்.

இப்படி அடிமை சின்னமான தாலியை பெண்கள் கழுத்தில் கட்டி அவர்களை அவமதிப்பதை இந்த சமுதாயம் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த தாலி என்னும் திரு விலங்கை ஆண்கள் தங்கள் சட்டைக்கு மேல் அணிந்துகொள்ளும் காலம் வரும். வாழ்க்கை ஒரு சக்கரம். வரலாறில் வென்ற நாடுகள் தோற்றும் இருக்கின்றன. தோற்ற நாடுகள் வென்றும் இருக்கின்றன. நம் நாள் வரும் பெண்களே.....கலங்காதீர்கள்.


-----------------போன பதிவை பாராட்டி நிறைய கடிதங்கள் வந்தன. குறை சொல்லியும் எழுதி இருந்தார்கள். நீங்கள் ஒரு அண்ணனாய் ஒரு தந்தையாய் அந்த பெண்ணை பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் அந்த ஏமாற்றிய கயவனை கொல்ல வேண்டும் என ஆத்திரம் வரும். அதே கோபமும் ஆத்திரமும் தான் எங்களுக்கு வந்தது. நாங்கள் தண்டித்தால் உங்களுக்கு அது கொடூரமாக இருக்கிறது அல்லவா. எத்தனை குடிசைகளில் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியின் தலை முடியை கொத்தாய் பிடித்து அடித்திருப்பான். அப்போது எல்லாம் இந்த ஆண் குஞ்சுகள் எங்கே போயிருந்தன என்பது தெரியவில்லை.


சமுதாயத்தில் உங்கள் உரிமையை எப்போதும் விட்டு கொடுக்காதீர்கள். ஆண்கள் உங்களை ஒரு கேலி பொருளாக பார்க்க விடாதீர்கள். ஆண்களுக்கு பெண்கள் மீது ஒரு பயம் வர வேண்டும். நம்மை ஒரு பயபக்தியோடு ஒரு பிரமிப்போடும் அணுக வேண்டும். நம்மிடம் மிகுந்த மரியாதையோடு தான் பேச வேண்டும். எந்த இடத்திலும் ஒரு ஆண் வல்லவன் என நினைத்துவிடாதீர்கள். நாம் தான் இந்த உலகத்தில் இறைவனின் சிறந்த படைப்பு என்பதை எபொபதும் மனதில் கொள்ளுங்கள்.

பொது இடங்களில் ஆண்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்தால் பணிந்து போகாதீர்கள். எதிர்த்து கேளுங்கள். பணிந்து போகவேண்டியவர்கள் ஆண்களே அன்றி நீங்கள் அல்ல. பெண்கள் எதிர்த்து கேட்டால் நொறுங்கி போகும் அளவுக்கு பலவீனமானவர்கள் தான் ஆண்கள். குடித்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டுவதை தான் வீரம் என்றும் ஆண்மை என்றும் நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் அவர்கள். விடாதீர்கள். உங்களை நோகடித்தால் புகார் கொடுங்கள். தண்டனை வாங்கிக்கொடுங்கள். சட்டமும் சமுதாயமும் உங்கள் பக்கம்.

---------

பெண் வீட்டின் தலைவியாகவும் ஆண் அடிமையாகவும் வாழ பிரியப்படும் ஒரு தம்பதியினரின் சுவார்ஸ்யமான கடிதமும் பதிலும் அடுத்த பதிவில்.


உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் எனக்கு எழுதுங்கள்.

உங்கள் தோழி
வின்சி

vincyontop@gmail.com

http://womenrules-menobeys.blogspot.com/2009/08/blog-post_03.html


பொங்கியெழும் கணவர்கள்!

"ரௌத்ரம்" - ஆம், அநியாயத்தை எதிர்த்துப் பொங்கியெழும் நியாயமான கோபம்!

இதைத்தான் காண்கிறோம் அவர்களின் கண்களில்!

ஆண்களை வதைக்கும் கொடுங்கோன்மை சட்டங்களைக் கைக்கொண்டு தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கி, வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து கைதாகி சிறைக்குச் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்து நிற்கும் பாதிக்கப்பட்ட கணவர்களின் கண்களில்!

ஆம். அவர்கள் முடிவெடுத்து விட்டனர். அவர்களுக்கு விடுதலை இல்லை. சுதந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான சட்டங்கள் களையப்படும் வரை. அவை 100% துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கெடுமதியும் கள்ளக்காதல் வெறியும் பிடித்து அலையும் பல பெண்கள், அவர்களுக்குத் துணை போகும் சில பெண்ணியவாதிகள், சில பணத்தாசை பிடித்த வக்கீல்கள் மற்றும் பல மேட்டுக்குடிப் பெண்டிரைக் கொண்ட பெண்கள் இயக்கக் கும்பல் - இவர்கள் ஒன்று சேர்ந்து பல லட்சங்களைக் கொள்ளையடிக்கும் (extortion and legal terrorism) இந்த நடைமுறை தடுக்கப்படும் வரை அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.


அதனால் வரும் ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று இத்தகைய பாதிக்கப்பட்ட கணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புகளுக்காகப் பாடுபடும் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family Foundation) முடிவெடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியை அவ்வியக்கத்தின் சென்னைப் பிரிவின் அமைப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


நம் நாட்டின் பல இடங்களில் இத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பட்டால் பொய் வழக்கு போடப்பட்டு சீரழியும் ஆண்கள் மற்றும் அவர்களுடைய் பெற்றோர் துயர் களைய இந்த இயக்கம் பாடுபடுகிறது. இத்தகைய சட்டங்களில் முக்கியமானவை இந்திய குற்றவியல் சட்டம் 498A பிரிவு (IPC Sec 498A) மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act) ஆகும்.


திரு. சுரேஷ் மேலும் கூறுகிறார்:-


ஆண்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமான சட்டங்கள் பல நம் நாட்டில் இருக்கின்றன. உதாரணமாக கள்ளக்காதலில் ஒரு ஆண் ஈடுபட்டால் அது குற்றம். அந்த ஆண் உடனே கைது செய்யப்படுவான். ஆனால் ஒரு பெண் சோரம் போனால் அது சட்டப்படி குற்றமில்லை. அதாவது உங்கள் மனைவி உங்கள் எதிரிலேயே இன்னொருவனுடன் கலவியில் ஈடுபட்டால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் கணவன் இது போல்
செய்தால் உடனே கைது. அவன்மேல் அத்துணை சட்டங்களும் பாயும். இதுதான் இந்திய சட்டங்களின் ஒருதலைப் பட்சமான கட்டமைப்பு (Blatant discrimination against men).


அதே போல் குடும்ப வன்முறைச் சட்டம் மனைவிக்கு எத்தகைய வன்முறையிலும் ஈடுபட சுதந்திரம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் கணவன் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவான் என்று கூறுகிறது அந்தச் சட்டம். அதன்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாலோ அது குற்றம்; அந்த மனைவி உடனே கிரிமினல் கோர்ட்டில் புகார் கொடுத்து அந்தக் கணவன்மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஆனால் அந்த மனைவி கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கண்டபடித் திட்டலாம், உணவு கொடுக்க மறுக்கலாம், அடிக்கலாம், அனைத்து வன்முறைகளிலும் ஈடுபடலாம். அவை குற்றமேயில்லை, இந்தச் சட்டத்தின்படி!இப்படி ஒரு பாலருக்கு மட்டும் எத்தகைய குற்றமும் புரிய முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டு, அனைத்து ஆண்களையும் அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படும் நிலை இந்தியாவில் இன்று இருக்கிறது (It is a crime to be born a male in India!).இந்தச் சட்டங்களின் அடிப்படையில் ஆண்களுக்கு மட்டும் பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவனை விட்டுப் பிரிந்தபின்னும் அவனது முன்னாள் மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஆம், விவாகரத்து பெற்ற பின்னும் கூட மாஜி மனைவிக்கு மெயிண்டெனென்ஸ் என்ற பெயரில் பணம் கொடுத்து அழவேண்டும்! ஆனால் மனைவிக்கு மட்டும் எவ்விதப் பொறுப்பும் கிடையாது, கடமையும் கிடையாது! மனைவிக்கு இருப்பது உரிமை மட்டுமே, கணவனுக்கு இருப்பதெல்லாம் கடமை மட்டுமே, எவ்வித உரிமையும் கிடையாது! என்ன அநியாயமய்யா இது! இப்படித்தான் இந்திய திருமணச் சட்டங்களும் குற்றவியல் பிரிவு 125 (Sec 125 of CrPC) போன்ற பல சட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


பெற்றோர் இருவருடைய அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தேவை என்பதற்காகப் பாடுபடும் இயக்கமான "Children's Rights Iniative for Shared Parenting" (CRISP) என்னும் அமைப்பின் தலைவர் திரு. குமார் ஜாகீர்தார் (இவர்தான் கிரிகெட் விளையாட்டுக்காரர் அனில் கும்ப்ளேயின் மனைவியுடைய முந்தைய கணவர் - தான் பெற்ற குழந்தையை கண்ணால் காணும் உரிமையைக் கூட நீதிமன்றங்களின் மூலம் பெற இயலாமல் தவிப்பவர்) இன்னொரு மிகவும் பரபரப்பான சிக்கலைப் பற்றிச் சொல்கிறார்:


"இந்திய ஜனத்தொகையில் 40% குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளின் நலத்தை கவனிக்க ஒரு தனி அமைச்சகம் கிடையாது. குழந்தை என்றாலே பெண்கள்தான் அவர்களின் போஷகர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். தந்தைகளின் உரிமைகளைப் பற்றியோ, அந்தத் தந்தையின் அரவணைப்பு குழந்தைகளுக்கு கட்டாயம் தேவை என்பதைப் பற்றியோ இந்தச் சமுதாயமும் சட்டங்களை இயற்றுபவர்களும் சிந்திப்பதில்லை. பெண்களின் தேவைகளும் குழந்தைகளின் தேவைகளும் ஒன்றல்ல. விவகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்துகொள்வது அந்தப் பெண்ணின் நோக்கில் தேவையாக இருக்கலாம். ஆனால் அது அந்தக் குழந்தைக்கு நன்மை விளைவிக்கக் கூடியதா என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் தம்பதிகள் பிரியும்போது குழந்தைகளை பெரும்பாலும் பிரிந்து சென்ற மனைவியின் வசம்தான் நீதிபதிகள் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் கணிப்பில் ஒட்டுமொத்த ஆண்கள் சமுதாயமும் கிரிமினல்கள், பொறுப்பற்றவர்கள் போலும்! இயற்கையின் நியதிப்படி ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்யமுடியாது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது. அது இந்தக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது."


இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் வரும் ஆகஸ்டு 15 அன்று மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் பற்றி திரு. சுரேஷ் விளக்கினார்:


"அன்றைய தினம் காலையில் சென்னையில் நாங்கள் எங்கள் பிரச்னைகளைப் பற்றியும், இன்றைய சமூகத்தில் இத்தகைய ஆணெர்ப்புச் சட்டங்களால் நம் குடும்ப வாழ்வு முறையே எப்படிச் சிதறிப்போகின்றது என்பதைப் பற்றியும் இந்தச் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டயம் பற்றியும் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை மெரீனா கடற்கரையில் வினியோகிக்கப் போகிறோம். மேலும் தமிழக ஆளுனர் அவர்களிடமும் சட்ட அமைச்சரிடமும் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அளிக்க இருக்கிறோம்.


அன்றைய தினம் நாடு தழுவிய அளவில் எங்கள் போராட்டம் நிகழவிருக்கிறது. ஆகஸ்டு 15, 16 தேதிகளில் சிம்லாவில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த இயக்கத்தின் தொடர்புள்ள 14 அரசு சாரா குழுமத்தினர் வந்து கூடி இரண்டாவது தேசிய மகாநாட்டை நடத்துகிறார்கள்."


இதுபற்றி Save Indian Family Foundation இயக்கத்தின் உறுப்பினர் திரு. விராக் அவர்கள் கூறுகிறார்:-


"இந்த அமைப்பின் முதல் மாநாடு கோவாவில் சென்ற ஆண்டு நடந்தது. இந்த ஆண்டின் மாநாட்டில் இந்த அமைப்பைச் சார்ந்த 14 அரசு சாரா இயக்கங்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சுமார் 100 செயல் வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரங்கள்யும், பெற்றோர் நலத்தையும் பாதிக்கும் இந்த மாபெரும் பிரச்னைகளை நாங்கள் எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் பற்றியும், ஆண்கள் நலத்திற்காக ஒரு பிரத்தியேக ஆணையம் மற்றும் அமைச்சகம் - National Commission for Men and a seperate ministry for men's welfare (பெண்களுக்கு இருப்பது போலவே) கொண்டு வரவேண்டிய கட்டாயத்தை உணர்த்துவது பற்றியும் விவாதித்து செயல் திட்டங்களை வகுத்து முடிவெடுக்க இருக்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு சென்னையிலிருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொள்ள விருக்கிறார்கள்.


வெகு நாட்களாக தங்கள் மேல் சுமத்தப்படும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் மௌனமாக தாங்கிக் கொண்டிருந்த ஆண்கள் கடைசியில் இனிப் பொறுக்கமுடியாது என்று பொங்கியெழுந்துவிட்டனர்!

(செய்தி மற்றும் படம் உதவி - டைம்ஸ் ஆஃப் இந்தியா)

http://tamil498a.blogspot.com/2009/08/blog-post_06.html
தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி ?தமிழ் சினிமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதான் . பின்ன என்னங்க

கில்லின்னு சொல்றாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுறாரு .

போக்கிரில போலீஸ் ன்னு சொல்லிட்டு
(watchman) காட்டுறாங்க.


அழகிய தமிழ் மகன்னு சொன்னாங்க ஆனா கடைசிவரை அது யாருன்னு காட்டவே இல்லை.என்ன கொடுமை சார்.
இதுகூட பரவாயில்லை குருவின்னு சொன்னாங்க ஆனா
தியேட்டர்ல ஒரு காக்கா கூட இல்லை .

வில்லுனு சொன்னாங்க ஆனா தியேட்டர் ல கல்லு பறந்தது தா நிஜம் சத்தியமா நா டாக்டர் .விஜய் ய கிண்டல் பன்னலைங்கோ

பின் குறிப்பு;
இதெல்லாம் நான் கேள்வி பட்டது இப்படி ரிஸ்க் எடுத்து இந்த படங்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

எப்படி எல்லாம் எஸ்.எம்.எஸ் ரூம் போட்டு யோசிச்சி அனுப்புறாங்க பாருங்க .

( நகைச்சுவைக்காக மட்டுமே )

எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் இது . தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் தங்கள் சுய நலத்திற்க்காக ரசிகர்களை இப்படி தூண்டி விட்டு தங்கள் வளர்ச்சியடைவதை நிறுத்துவார்களோ தெரிய வில்லை .

அவர்களுக்காக இப்படி கேவலமாக யோசிக்காமல் நல்ல சிந்தனைகளை எஸ்.எம்.எஸ் அனுப்பலாமே. ரசிகர்கள் திருந்தாதவரை இது மாறப்போவது இல்லை .


http://saidapet2009.blogspot.com/2009/08/blog-post_6851.htmlவாவ்! இந்த பெண் வரைவது என்ன?

நடனத்துடன் அனாயாசமாக இந்த பெண் வரைவது என்ன என்பதை உங்களால் யூகிக்கமுடிகிறதா?

http://www.youtube.com/watch?v=wGB3HoQVVSk


http://www.premkg.com/2009/08/blog-post.html


cid:image001.jpg@01C9FB3B.617CA250


♥ கருணாநிதிக்கு ஒரு கடிதம்... ♥


கருணாநிதிக்கு ஒரு கடிதம்...
கடந்த சில மாதங்களாகவே மனது சரியில்லை. காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஈழப்படுகொலைகள்தான். நீங்களும் நானும் சேர்ந்துதான் போர் நிறுத்தம் கோரினோம். கண்டு கொள்ளாத மத்திய அரசு நம் மனம் கோணும்படி நடந்து கொண்டது. ஆனால் அதே நாட்களில் டில்லியில் தங்கியிருந்து பதவிகளைப் பெற்று செல்வத்தோடும் செல்வாக்கோடும் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும் உங்களுக்கு உள்ளூரில் நமது அண்டை மாநிலத்தில் வாழும் நமது தமிழ் மக்கள் குறித்து எச்சரிக்கை செய்யவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதும்படியாயிற்று.

Karunanidhi பெங்களூருவில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் வரை நான் பெங்களூருவுக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சில வருடங்களுக்கு முன் நீங்கள் அறிவித்தீர்கள். சொன்னது போலவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பெங்களூருவுக்குச் சென்றதில்லை, உங்கள் மகள் செல்வி வீட்டிற்குக் கூட, இப்போது காலம் கனிந்திருக்கிறது. அதுவும் நீங்கள் முதல்வராக இருக்கும் போதே, கூடவே உங்கள் மகள் செல்வி வீட்டிற்குச் செல்லும் ஆசையும். கர்நாடக அரசுடன் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு காவிரி, ஓகேனனக்கல் பிரச்சனையில் முட்டலும் மோதலும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. காவிரி, ஓகேனக்கல், திருவள்ளுவர் என்கிற இந்த மூன்றில் ஓகேனக்கலும், காவிரியும் பல கோடி ஏழை விவசாயிகள் தொடர்பான நீராதார உரிமைகள். திருவள்ளுவரோ தமிழர் வாழ்வின் அடையாளம். தமிழக மக்களின் நீராதார உரிமைகளான ஓகேனக்கலும் காவிரிப் பிரச்சனையும் முடியாத நிலையில் நீங்கள் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கையாண்ட தந்திரம் ராஜதந்திரம்தான். உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகுக்குக் கொடுத்த அய்யன் திருவள்ளுவர் சிலையை பெங்களூருவில் திறக்க கன்னடக் கவிஞர் சர்வஞ்ஞரின் சிலையை சென்னையில் திறக்க ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம் வள்ளுவரையும் கன்னடக் கவிஞர் சர்வஞ்ஞரையும் சமன் செய்திருக்கிறீர்கள். வெள்ளியை வாங்கும் விலையில் தங்கத்தை வாங்க முடியாத இந்த காலச் சூழலில் வெள்ளியையும் தங்கத்தையும் ஒன்று போல காட்ட முனைகிற உங்கள் ராஜதந்திரத்தைப் புரிந்து கொள்வதில் நமக்கு சிக்கல் ஒன்றும் இல்லைதான். நாளையே கழகக் கண்மணிகள் ''பெங்களூருவில் அய்யன் வள்ளுவனுக்கு சிலை கண்ட வள்ளலே....வள்ளுவனே'' என்று உங்களுக்கு பிரமாண்ட டிஜிட்டல் பேனர்களை வைத்து உங்களை குளிர்விக்கலாம். இதற்கான இன்னும் பத்து பாராட்டு விழாக்கள் பிரமாண்டமாக உங்களுக்கு நடத்தப்படலாம். அதுவல்ல இப்போது பிரச்சனை.

வள்ளுவர் சிலை என்றால் அதை சமன் செய்ய கன்னடக் கவிஞரின் சிலை வைக்க சென்னையில் நமக்கு ஏராளமாக இடம் இருக்கிறது. கன்னடக் கவிஞரின் சிலையை சென்னையில் அனுமதிக்கும் மனப் பக்குவமும் தமிழர்களுக்கு வாய்த்திருக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். காவிரிப் பிரச்சனையில் பெங்களூருவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், ஓகேனக்கல் பிரச்சனையில் போது தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்ட போதும் தமிழகத்தில் ஒரு கன்னடர் மீது கூட, கன்னடர்களின் ஒரு வணிக நிறுவனங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்படவில்லை, தமிழ் மக்கள் எப்போதும் சகிப்புத்தன்மை உள்ள மக்களாக இருக்கிறார்கள். திருவள்ளுவரின் சிலை பெங்களூருவில் திறக்கப்பட வேண்டும் என்ற உங்களின் ஆசைக்காக சர்வஞ்ஞருக்காக ஒரு இடத்தை சென்னையில் ஒதுக்கிக் கொடுத்து விட்டீர்கள். நல்ல விஷயம் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை பெற்றுக் கொள்கிற இந்த ராஜதந்திரம் நன்றாகவே இருக்கிறது. சரி எதைக்கொடுத்து நாம் காவிரியின் தண்ணீர் பெற்றுக் கொள்வது, எதை விட்டுக் கொடுத்து ஓகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவது. ஒன்று செய்யலாம் காவிரி, ஒகேனக்கலில் கர்நாடக அரசு நமது உரிமைகளை விட்டுத் தர நமது மாவட்டங்களில் ஒன்றையோ இரண்டையோ அவர்களுக்கு எழுதிக் கொடுத்தாவது தண்ணீரை பெற்றுக் கொள்ள முடியும் என்றால் உங்கள் ராஜதந்திரம் வெறும் சிலையோடு முடிந்து போகாமல் பல கோடி விவாசாய ஏழைகளின் வாழ்வில் பாலையாவது வார்க்கும்.

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசிடம் நீங்கள் நீக்குப் போக்காக நடக்கச் சொன்னீர்கள். இந்த நீக்குப் போக்குக் கொள்கை நீண்ட கால அரசியல் அனுபவத்தினால் வந்தது. ஐரோப்பிய தமிழர்கள் தங்களின் இரத்த உறவுகளுக்காக அனுப்பிய மெர்ஷிமிஷன் நிவாரணப் பொருட்களை நீங்கள் தலையிட்டு தமிழகத்தில் இருந்து வேறு ஒரு கப்பல் மூலம் கொழும்பு அனுப்பி வைத்தீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? கிட்டத்தட்ட எழுபது நாட்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது அந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் அநாதையாகக் கிடக்கிறதாம். அதை முகாம்களில் உள்ள மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றால் நாற்பது லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்பதால் அப்படியே கிடக்கிறது அந்தப் பொருட்கள். விளைவு அந்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போகத் துவங்கிவிட்டதாம். தாயக உறவுகளுக்கு புலம்பெயர்தமிழர்கள் அனுப்பிய பொருட்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிற சிங்கள அரசிடம் நீங்கள் நீக்குப் போக்காக நடந்து கொள்ளச் சொல்கிறீர்கள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

கன்னட அரசோ, கன்னட மக்களோ தமிழக மக்களுக்கு எப்போதும் எதிரிகளல்ல, இன்றும் எல்லையோர கிராமங்களில் தமிழர்களும் கன்னடர்களும் ஒரு தாய்ப்பிள்ளைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதோடு பெங்களூருவில் வாழும் தமிழர்களும் கன்னடர்களும் அண்ணன் தம்பிகளைப் போலத்தான் இன்றும் பழகிவருகிறார்கள். ஆனால் சுயநலமிக்க அரசியல் ஆட்டத்தால் ஒவ்வொரு முறை காவிரியிலும் ஓகேனக்கலிலும் பிரச்சனை எழும் போதும் அங்கே தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், சில நேரங்களில் ஒட்டு மொத்த சிவில் உரிமைச் சமூகத்தில் இருந்தும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் போதாக்குறைக்கு முல்லை அணை உரிமைக்காக கேரளத்தோடும், பாலாறு அணைக்காக ஆந்திராவோடும் முரண்பட்டு நிற்கிறோம். இந்த எல்லாப் பிரச்சனைகளிலுமே பாதிக்கப்படுவது தமிழகம்தான். புவியியல் ரீதியாக இந்தியாவில் நமக்கு வாய்த்த இடம் அப்படி. ஆனால் அணை போட்டு தடுக்கக் கூடாத தண்ணீரைத் தடுப்பதன் மூலம் தமிழனின் தொண்டைக்குழியை வறளச் செய்கிற வேலையை அண்டை மாநிலங்கள் செய்து கொண்டிருக்கின்றன. தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசோ மௌனமாக இருக்கிறது. பல நேரங்களில் அண்டை மாநிலங்களுக்கு சாதகமாகவும் நடந்து கொள்கிறது. நீரினின்றி அமையாது உலகு என்பது தமிழின் முதுமொழி. நாமோ பருவமழையை மட்டும் நம்பியே காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். பருவமழை பொய்த்துப் போகிற வருடங்களில் காவிரிப் பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பதும். மழை பெய்தால் அதை மறந்து போவதும் பருவங்களுக்கு ஏற்ப நடந்து வருகிறது. இதோ தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கொட்டவில்லை. வரும் காலங்களில் பெய்ய வேண்டிய மழையின் அளவு இல்லாமல் போனால் இந்த வருடமே காவிரியும், ஒகேனக்கலும் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கும். நீருக்காக அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கும் இம்மாதிரியான சூழலில் அதுவே இரு மாநிலங்களிலும் அரசியலாகவும் மாறிப் போனது பரிதாபம்தான், ஆனால் இந்த இரண்டிற்கும் இடையில் சிக்கிக் கொண்ட பெங்களூர் தமிழர்கள் நிலை?

சர்வஞ்ஞர் சிலையை சென்னையில் திறப்பது குறித்து யாருமே தமிழகத்தில் ஒரு வார்த்தை கூட வாய் திறக்காத நிலையில், வருகிற 9-ஆம் தேதி நீங்கள் சென்று சிலையைத் திறப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்காக தயாராகியும் வருகிறீர்கள். இப்போதே உங்களை சந்தித்து பலரும் சால்வைகளும் பொன்னாடைகளும் போர்த்தத் துவங்கிவிட்டார்கள். ஆனால் இதோ, எந்த ஒன்பதாம் தேதி நீங்கள் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதாக அறிவித்திருக்கிறீர்களோ அந்த ஒன்பதாம் தேதி பெங்களூரையே ஸ்தம்பிக்க வைக்கப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. வாட்டாள் நாகராஜின் கன்னட சாளுவளி, வட்டாள் பக்ஷ£, பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சேனை, கன்னட வேதிகே, நாராயண கௌடா தலைமையிலான இன்னொரு கன்னட ரக்ஷன வேதிகே என அடுக்கடுக்கடுக்காக அத்தனை அமைப்புகளும் கடந்த சில தினங்களாக விஷத்தைக் கக்கி வருகின்றன. பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு தமிழனும் ஒன்பதாம் தேதி என்ன நடக்குமோ என்று அஞ்சி நடுங்கும் சூழல் உருவாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் இதை ஒட்டியே இந்தக் கடிதம் எழுத நேர்ந்தது.

அவர்கள் சொல்வது இதுதான் சென்னையில் சர்வஞ்ஞருக்குச் சிலை தேவையில்லை. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லித்தான் ஒன்பதாம் தியதி பந்த் அறிவித்திருக்கிறார்கள். ஒரு முதல்வராக சர்வ பாதுகாப்போடும் சிகப்பு கம்பள வரவேற்போடும் நீங்கள் பெங்களூர் சென்று கன்னட மக்களின் விருப்பத்தையும் மீறி அங்கு திருவள்ளுவர் சிலையை அங்கு திறந்து வைத்து விட்டு வந்து விடலாம். அது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் அது குறித்த அச்சம் இப்போதே பெங்களூர் தமிழர்களிடம் பரவியிருக்கிறது. அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? காவிரி, ஓகேனக்கலோடு இப்போது கூடுதலாக திருவள்ளுவரும் அந்த மக்களுக்கு தலைவலியாக மாறியிருக்கிறார். நான் ஒரு மானமுள்ள தமிழனாகக் கேட்பது இதுதான். என்ன காரணத்திற்காக திருவள்ளுவரின் சிலையை பெங்களூருவில் திறக்க வேண்டும்? வான்புகழ் வள்ளுவனுக்கு வானாளவிய சிலையை குமரிக் கடலில் நிறுவி அழகு பார்த்த நீங்கள், அய்யனின் சிலையை தமிழகத்தில் இன்னும் நிறுவ எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது அதை ஏன் பெங்களூருவில் திறக்க வேண்டும்? அதற்கு சமனாக சர்வஞ்ஞரின் சிலையை ஏன் சென்னையில் திறக்க வேண்டும்? இந்த இரண்டுமே வெறும் சிலைகளாக இங்கே நிற்கப் போகிறதா? அல்லது காலாகாலத்திற்கும் தமிழர் எதிர்ப்பரசியலுக்கு கன்னடர்களுக்கு கிடைக்கும் இன்னொரு வாய்ப்பாக உருவாகப் போகிறதா? நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

பல கோடி விவசாயிகள் தொடர்பான ஓகேனக்கல், காவிரி தொடர்பாக மௌனம் சாதிக்கிற நீங்கள் இன்றுவரை ஓகேனக்கல் கூட்டுக் குடி நீர்திட்டத்தை துவங்கவில்லை. பல லட்சம் மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்ப்பதை விட ஒரு சிலை திறப்பதிலா தமிழனின் தன்மானம் இருக்கிறது? கர்நாடகத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கடந்த கால நிகழ்வுகளை நினைவில் கொண்டே இதை எழுதுகிறேன். இப்போது தேவை சிலைகளல்ல, வாழ்வாதார உரிமைகளே. இதைச் சுட்டிக் காட்டியதற்காக வழக்கம் போல ''ஐய்யகோ அய்யனுக்கு சிலை வடிக்க நினைக்கிறேன் அக்ரகாரம் வடிக்கும் நீலிக்கண்ணீரை பார்த்தீர்களா?" என்று முழு நீளக் கவிதை எழுதாதீர்கள். அதை ரசிக்கிற மனம் ஒரு தமிழனாக எனக்கு இல்லை என்பதோடு உங்கள் ஆட்சிக்காலத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது ஓகேனக்கல், காவிரி சிக்கலைத் தீர்ப்பதைத்தானே தவிர சிலை திறப்பதை அல்ல என்பதைக் கூறி நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் மகள் வீட்டிற்குச் செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி இக்கடிதத்தை முடிக்கிறேன்.

வழக்கம் போல போருக்கு எதிராக உங்களுக்கு மடல் எழுதிய அதே தமிழன்.

http://www.keetru.com/literature/essays/karunanidhi.php

♥ செல்வராசா பத்மநாதனின் கைது அல்லது கடத்தல் உலகத் தமிழர்களுக்கு சொல்லி நிற்கின்ற செய் ♥

செல்வராசா பத்மநாதனின் கைது அல்லது கடத்தல் உலகத் தமிழர்களுக்கு சொல்லி நிற்கின்ற செய்திதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலளார் செல்வராசா பத்மநாதனின் கைது அல்லது கடத்தல் தெளிவான செய்தி ஒன்றை உலகத் தமிழர்களுக்கு சொல்லி நிற்கின்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனான சர்வதேசத்தின் உறவு நிலை மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றது என்பது தான் அந்த கசப்பான செய்தி.

கே.பி அல்லது செல்வரசா பத்மநாதன் என்பவர் தாய்லாந்து நாட்டு பிரஜை அவரை மலேசியா என்ற மற்றுமொரு நாட்டில் வைத்து கைது செய்வது அல்லது கடத்துவது என்பதும் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது என்பதும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றல்ல.

சர்வதேச நாடுகளுடன் கே.பியின் நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த கொண்ட தரப்பும் அவருடைய இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை உண்மை.

தாய்லாந்தில் வைத்து அவரை கைது செய்ய முடியாது என்பதை அறிந்த ஸ்ரீலங்காவின் புலனாய்வு துறை அவரை மலேசியா வரை அழைத்து வந்து அங்கு வைத்து அந்த நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் அவரை கைது செய்துள்ளதாகவே தெரியவருகின்றது.

இத்தனை வருடங்கள் சர்வதேச காவல்துறைக்கே தண்ணி காட்டிய ஒருவர் இப்படியாக இலகுவாக கைது செய்யப்படும் நிலை தானாகவே உருவாகியிருக்காது என்பதே பலரின் கருத்தாகும்.

கடந்த 30 வருடங்கள் உலகின் மிகப் பலமான போராட்ட வலையமைப்பை தலைமை தாங்கிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் குறித்த மர்மங்கள் அடங்கும் முன்பு மற்றுமொரு மர்ம முடிச்சு கே.பியின் கைதின் மூலமாக போடப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஏதோ ஒரு வகையில் எங்கோ எதற்கோ திட்டமிடப்பட்ட ஒழுங்கில் நடைபெறும் சங்கிலி தொடர் நிகழ்வின் அங்கமாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.


கே.பி ஒரு சாகசக்காரர் வெளிநாட்டு புலனர்வு அமைப்புகளுக்கு சிம்ம சொப்பமனாக திகழ்ந்தவர். எப்போது எங்கே என்ன பெயரில் என்ன உருவத்தில் அவர் உலாவுவார் என்பதே மண்டை குடையும் கேள்வியாக புலனாய்வு அமைப்புகளை வாட்டி வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படியான கே.பி எப்படி இவர்களின் கைகளில் சிக்கினார் என்பது பல மில்லியன் டொலர் கேள்வி தான். அதைவிடவும் அவர் வெளியிட்ட அண்மைய புகைப்படங்களும் அவரா இவர் என்ற சந்தேகங்களை எழுப்பாமல் இல்லை. ஏற்கனவே புலிகளின் தலைவரின் உடல் எனக் காட்டப்பட்ட அந்த உடலம் குறித்த சந்தேகங்கள் தீராத நிலையில் பத்மநாதனின் கைதும் அவரின் புதிய புகைப்படங்களும் இன்னும் இன்னும் சந்தேகக் கோடுகளை கீறி விடுவதை தவிர்க்க முடியவில்லை.

உலகில் மிகப் பலம் வாய்ந்த போரதட்ட அமைப்பாக புலிகள் வளர்ச்சி பெற்றதில் கணிசமான பங்கு கே.பியிற்கு உண்டு. ஸ்ரீலங்கா அரசாங்க படைகள் கூட அறிந்திருக்காத புதிய ஆயுதங்களை கூட புலிகளுக்கான தருவித்துக் கொடுத்தவர். எத்தனை கப்பல்கள் சுற்றி வளைத்து நின்றாலும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை பாதுகாப்பாக கரை சேர்த்த கெட்டிக்காரரர் கே.பி. கே.பியின் காலத்தில் புலிகளின் ஆயுத விநியோகம் பின்னடைவினை சந்தித்திருக்கவில்லை அதற்கு கே.பியின் அனுபவம் மற்றும் ஆயுதக் கொள்ளவனவு சுட்சுமங்கள் குறித்த அறிவு என்பன தான் காரணம்.

ஆயுத சந்தைகளின் பிந்திய நிலவரங்கள் குறித்தும் கப்பல் போக்குவரத்து வாய்ப்புகள் குறித்தும் விரல் நுனியில் தகவல்களை கொண்டிருந்தவர். ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆயுதம் வாங்கும் சந்தையில் அவர்களுக்கு முன்னரே அதே ஆயுதங்களை வாங்கி சாதனை படைத்துக் காட்டியவர். ஸ்ரீலங்கா படைகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களை புலிகளின் கப்பலில் ஏற்றி முல்லைத்தீவிற்கு அனுப்பி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் அதன் ஆயுத முகவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியமும் செய்தவர் கே.பி.

கே.பியின் கட்டாய விலக்கி வைப்பை தொடர்ந்து புலிகளின் புதிய ஆயுத முகவர்கள் மிகப்பெரும் பணத்தை செலவு செய்து கொள்வனவு செய்த அதிநவீன ஆயுதங்கள் எவையும் புலிகளை வந்து சேரவில்லை அது தான் புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் கே.பியின் அவசியத்தை உணர்ந்த புலிகளின் தலைமை மீண்டும் கே.பி ஊடாக ஆயுதங்களை தருவிக்க முனைந்தது. தனக்கு முன்னர் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதாலும் மீண்டும் தன்னை புலிகள் கழற்றி விடக் கூடாது என்பதாலும் தனக்கான பதவி நிலை ஒன்றை இந்த வருட ஆரம்பத்தில் அவர் புலிகளின் தலைமையிடம் கோரி பெற்றிருந்தார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதானி என்ற அந்த பதவி நிலையை ஏற்படுத்திய புலிகளின் தலைவர் பிரபாகரன் அதற்கு பத்மநாதனை நியமித்தும் இருந்தார். கே.பி 2003 ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இருந்து விலகி இருந்த போதிலும் பிரபாகரனுடன் நெருக்கமான தொடர்பினை கொண்டிருந்தாகவே சொல்லப்படுகின்றது. புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வியை ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டதன் மூலம் புலம்பெயர் வாழ் புலி ஆதரவாளர்களால் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு இவரின் தலைமையினை ஏற்கவும் புலம் பெயர் புலிகளின் பெரும்பான்மையினர் மறுத்திருந்தனர். எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரின் தலைமையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு இணங்குவதாக புலிகளின் வெளிநாட்டு முகவர்கள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருந்தனர். இவ்வாறான ஒரு நிலையில் தான் கே.பி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

மலேசியாவிற்கு கே.பி சென்ற விடயமும் அங்கு புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடசேனின் மகனை அவர் சந்திக்கப் போகும் விடயமும் நிச்சயம் புலிகள் தரப்பின் மூலமாகவே அரச புலனாய்வு பிரிவிற்கு கசிந்திருக்க வேண்டும் என்பது கே.பி தரப்பு ஆதரவாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. தனது நாட்டு பிரஜையின் கைது குறித்து விசாரணை நடத்துமாறு தாய்லாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ள போதிலும் பிராந்திய வல்லரசுகளின் முன் இந்த அறிக்கைகள் எடுபாடு என்பது எல்லோருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஆகாமலேயே புலிகளின் முக்கியஸ்தராக வலம் வந்த கே.பியின் கைது புலிகளின் சர்வேதச வலையமைப்பிற்கு பெருமளவில் பாதிப்பெதனையும் ஏற்படுத்தாது என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கே.பியின் நடவடிக்கைகள் இராணுவ நலன்சார் அம்சங்களுடன் தொடர்புபட்டனவே அன்றி புலம் பெயர் நாடுகளின் புலிகளின் நடவடிக்கைகள் அவர்களின் வர்த்தக முயற்ச்சிகள் நிதி முகாமைத்துவம் ஊடக செயல்பாடுகள் போன்றவற்றில் கே.பி ஈடுபாடு கொண்டிருக்கவில்லை.

எனவே கே.பியின் கைது புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளை முடக்கி விடும் என்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எண்ணம் வெற்றியளிக்காது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது. ஆனாலும் புலிகளின் தலைமை குறித்தும் முக்கிய சில உறுப்பினர்களின் நிலை குறித்தும் உலகத்திற்கும் வேறு பல புலிகளின் முக்கியஸ்தர்களுக்கும் தெரியாத பல விடயங்கள் கே.பிக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது. இந்த விடயங்கள் ஸ்ரீலங்காவின் புலனாய்வு பிரிவிற்கு தெரிய வருவது ஆபத்தானது. புலிகள் எந்த வகையிலும் எதிர்காலத்தில் மீள் உருவாக்கம் பெறக் கூடாது என்பதில் இலங்கையை விடவும் அதிக அக்கறை இந்தியாவிற்கு உண்டு. அதன் காரணமாகவே இந்த கைது நடவடிக்கைக்கு தனது பூரண ஒத்டதுழைப்பை இந்தியா வழங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.

இராணுவ ரீதியில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீட்சி பெறும் வரை பத்மநாதன் ஊடாக வன்முறைகளற்ற போராட்ட வடிவங்கள் குறித்து பேசி சிலமாதங்களின் பின்னர் மீண்டும் புலிகள் ஆயுதப் போரட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதான சந்தேகம் ஸ்ரீலங்கா மற்றும் இந்திய புலனாய்வு பிரிவுகளிடம் நிலவுகின்றது. ஊண்மையான கள நிலைமைகள் மற்றும் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை புலனாய்வு துறையினர் நன்கு அறிவார்கள் என்பதால் தான் இலங்கையில் புலிகளின் தோல்விக்கு பின்னரும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கே.பியின் கைது மூலம் புலிகளின் திட்டம் என்ன எத்தனை விரைவில் அவர்கள் மீள் எழுச்சிக்கு திட்டமிட்டுள்ளார்கள் அதற்கான மூலோபாயங்கள் எவை போன்ற விடயங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் புலிகள் மீண்டும் இராணுவ ரீதியிலான ஒரு போராட்டத்திற்கு தம்மை தயார் படுத்தி வருவார்களேயானால் நிச்சயமாக அந்த போரட்டம் என்பது நிலங்களை கைப்பற்றுவதற்கான போரட்டமாக இருக்காது என்றும் ஸ்ரீலங்காவின் அரச மற்றும் இராணுவ தலைமைகளை இல்லாதழிக்கும் விதமான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களாகவே இருக்கும் என்றும் ஆசிய வெளிவிவாகர புலனாய்வு சஞ்சிகை தெரிவித்துள்ளது.

புலிகள் தமது அழவிற்கு காரணமானவர்கள் என்று கருதும் இலக்குகளை எப்படியும் அழிப்பார்கள் என்றும் அதற்கான தருணம் வரை அவர்கள் உறங்கு நிலையில் இருப்பார்கள் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறான உறங்கு நிலையில் உலகின் கவனத்தை ஈர்பதற்கான முயற்சியாகவே நாடு கடந்த அரசாங்கம் மற்றும் இந்திய ஒத்துழைப்பிற்கான கே.பியின் அழைப்பு போன்றவை நோக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் பழிவாங்கலுக்கான இலக்குகள் குறித்து ஏற்கனவே ஸ்ரீலங்கா புலனாய்வு துறைக்கு தகவல்கள் கசிந்துள்ளதாகவும் இதனை அடுத்தே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தான் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்புகளை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகளின் உறங்கு நிலைக் காலம் குறித்து கே.பி எதாவது பயன்மிக்க தகவல்களை வழங்கக் கூடும் என்பதும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை தருவிப்பதில் அவருக்கு உதவிய முக்கிய சக்திகள் பற்றிய சில அதிர்ச்சி தகவல்களை பெறலாம் என்பதும் ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவின் எதிர்பார்பு. புலிகளின் மீள் எழுச்சியில் கே.பியின் கைது நிச்சயமாக ஒரு பின்னடைவாகவே கொள்ளப்பட வேண்டும் ஆனால் அதுவே புலிகளின் முடிவாகிவிடும் என்று கருதவியலாது என்று ஸ்ரீலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவரின் கருத்து கவனிக்க பட வேண்டியது தான்

http://tamilthesiyam.blogspot.com/2009/08/blog-post_7216.html

♥ வயிறு பற்றி எரிகிறது ! கருணாவே !ஈமெய்லில் வந்த செய்தி ♥

வயிறு பற்றி எரிகிறது ! கருணாவே !ஈமெய்லில் வந்த செய்தி

கணம் அமைச்சர் கருணா அவர்களுக்கு! நான் ஒரு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்பதாலும் இம்மடலை எழுதும் தார்மிக உரிமை எனக்கு உண்டு என்பதால் இம்மடல்... என்னக்கு தாங்களில் எந்த விதமான தனிப்பட்ட போலி முகங்களோ, கோப தாபங்களோ, பொறாமைகளோ இலலை நான் தராக்கி சிவராமும் அல்ல புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுத அரசை குறைக்கூருவதும் எனது நோக்கம் அல்ல இந்த விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாதவர்களும் (அல்லது புரிதல் இருந்தாலும் அரசை திட்ட வேண்டும் / அரசாங்கத்தை குறை கூற வேண்டும் / அரசு நடைமுறைகளின் மேல் சேறிறைக்க வேண்டும் என்ற "அரிப்பு" இருப்பவர்களும்) ஊடகங்களில் இது குறித்து வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி (கைக்கு வந்ததை எல்லாம் தட்டச்சு செய்து) பல கட்டுரைகள் எழுதியதை நான் படித்தேன் . கிழக்கில் இன்று என்ன நடக்கின்றது என்பதை விளக்க இம்மடல் உதவும் என்ற ஒரு சிரு நப்பிக்கைதான் சிறு நம்பிக்கை என்றால் இது ஒரு சிறு தீக்குச்சிதான் சிறு தீக்குச்சிதான் ... பெரும் நெருப்பை உண்டாக்கும் என்பதில் எனக்கு அளவு கடத்த நம்பிக்கை தாங்கள் 2004 மார்ச் 03- கிழக்கு மாகான புலிகளின் தளபதியாக இருத்து பிரிந்து வந்த பொழுது உங்களை அளவு கடந்து ஆதரித்தவன் நான்... காரணம் உண்டு சுயநலம். சுயநலம் என்பதைவிட பொது நலம் என்பது சாலட்சிறந்தது பாசிசப்புலிகளை துடைத்து எறியவேண்டும் என்ற வெறி அது மாற்ருக்கருத்துக்கொண்ட அனைவர் மனதிலும் இருந்த் தீ அதை அணைக்க தாங்கலை துருப்பு சீட்டாக என்னீனோம் இது தவறு அல்ல அபடியே அது நடத்து முடிந்தது முதலில் மகிந்த ராஜபக்ச அரசுக்கு நன்றி கூரவேண்டும். அனால் தாங்கலும் தாங்கள் அமைப்பும் முப்பது வருடங்களாக நடத்திய சர்வாதிகார சாம்ராச்சியம் காட்டுதர்பார்கள் எங்கள் மனங்களில் தீயாக எரிந்து கொண்டுதான் இருக்கும் இல்லை என்றால் அது உங்களால் படுகொலை செய்யப்பட்ட எங்கள் அனைவருக்கும் செய்யும் துரோகம்.

நீங்கள் கிழக்கின் தளபதியாக இருத்த பொழுது நடந்த சிலவற்றை மறக்க முடியாது நிங்கள் ஒரு போட்டியின் போது கூறுகின்றீர்கள் பிரபாகரன் எந்த தாக்குதலுக்கும் வந்ததில்லை என்றும் பொட்டு அம்மானும் பிரவாகரனும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் அடுத்தது யாரை போட்டுத்தள்ளுவது என்றுதான் கதைப்பார்கள் அதனால்தான் நான் அந்த இயக்கத்தில் இருத்து வெளியில் வந்தேன் என்றும் அப்படியானால் கிழக்கில் நடந்த உங்களால் நடத்தப்பட்ட நீங்கள் கேணல் கருணா அம்மனாக இருந்த பொழுது நடத்த கொலைகளுக்கு பொட்டு அம்மான்தான் காரணம் என்று நீங்கள் தப்பிக்கொள்ள நினைப்பது தவறு.

கிழக்கு சிறுவர் சிறுமிகளை பிடித்து வன்னிக்காடுகளில் வன்னிப்புலிகலை பாதுகாககவும் அங்குள்ள முகாங்களில் சமைக்கவும் வன்னியில் பூநகரி இராணுவமுகாம் அழிப்பிலும் மாங்குளம் இராணுவமுகாம் அழிவிலும் ஆனையிறவு இராணுவமுகாம் தகர்ப்பிலும் எங்கள் கிழக்கின் விடிவெள்ளிகள் மாவிரர் ஆனதும் யாரால் ஆனையிறவு இராணுவமுகாம் தகர்ப்பு தமிழர்களது வரலாற்றில் மிகப்பெரிய வரலாறாகப் பதிவு செய்யப்படுமளவுக்கு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இதற்குப் புலிகள் கொடுத்த விலை கொஞ்சமல்ல. ஏறத்தாள நான்கைந்து மாதங்கள் நடைபெற்ற மோதல் அது. இறுதியில் இயக்கச்சியிலிருந்து இராணுவமுகாமுக்குப் போன குடிநீர்த் தொடர்பைப் புலிகள் துண்டித்ததன் மூலம் இலகுவாக வெற்றியை ஈட்டினார்கள் அந்த கோரக்கொடுமைளுக்கு முன்நின்று புலிக் கொடி ஏத்தியது யார் ?

ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள் அதில் ஒன்று பிரவாகரன் மற்றையது நீங்கள் கிழக்கில் நடந்த அனைத்து கொடுமைகளுக்கும் நீங்கள்தான் காரணம் 1987 இல் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் தோல்வியடையத் தொடங்கியதும் போரில் பங்கெடுத்த புலிகள் தமது படைகளில் பெண்களையும் சேர்த்துக் கொண்டு "சுதந்திரப் பறவைகள்" எனும் பெண்கள் படைகளை உருவாக்கினர்.முதலில் பெண்கள் படையனி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இருந்த பொது யாழில் பெண்களுக்கு என்னடி இயக்கங்களில் வேலை என்று குட்டித் துரத்திய அதே புலிகள் பெண்கள் படையணியை அமைத்தார்கள் அப்போது இயக்கங்களின் இலக்குகள் யாழ்பாணத்தின் மையங்கொண்டிருந்தாலும் காலப்போக்கில் யாழ்ப்பாணத்துக்கு வெளியே புலிகளின் ஆட்சேர்ப்பு இலக்குகள் நகரத் தொடங்கியது. இதற்கு மேற்கு நாடுகளை நோக்கி யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தினரில் அதிகமானோர் ஓடத்தொடங்கியமை டெலோ இயக்கத்தவர்களை யாழில்தான் கிட்டு ஊத்தை ரவி, கிட்டுவின் மெய்ப்பாதுகாவளர் ரஹீம் இவர்கள் டயர் போட்டு எரித்தகொமைகள் நடந்தன அதைப்பர்த்த யாழ்ப்பாணத்துசனம் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு ஓடவைத்தார்கள் இதற்கு ஒரு காரணமாகும்.

இந்நிலையில் தங்களுக்கான ஆள்திரட்டல்களில் (கிழக்கு மாகாணமே) இந்த மட்டு அம்பாறை பிரதேசங்களை நோக்கி புலிகளின் பார்வை திரும்பியது. அப்போதுதான் ஆண்களைவிட மிகமிக அதிகமான சிறுமிகள் இந்த போருக்குள் சிக்கவைக்கப்பட்டனர். இது இம்மாவட்டங்களின் பெண்களது கல்விநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதொன்றாகும்1990.இன் பின்பு வடக்கு கிழக்கு போர்முனைகளில் நிறுத்தப்பட்டவர்களில்; அதிகமான வீதத்தினர் இந்த அம்பாறை மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த பெண் சிறுமிகளே என்பது கவனிக்கவேண்டியது. இது போன்ற போக்குகள் இந்த மாவட்டங்களின் ஆரம்பக் கல்வியில் இருந்து ஒரு சந்ததியையே சீர்குலைத்தது. அதுமட்டுமன்றி 1998களில் புலிகளினால் ஆரம்பிக்கப்பட கட்டாய ஆள்பிடிப்பு எந்தவிதமான சமூக எதிர்ப்புமின்றி (வாழைச்சேனை மகாவித்தியாலயம், கறுவாக்கேணி மாகாவித்தியாலம் போண்ற பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்களால் காட்டப்பட்ட சிறிய எதிர்ப்பும் புலிகளினால் அடித்து நொருக்கி அடக்கப்பட்டது) இப்பகுதிகளில் நிறைவேற்றப்பட்டது. 10 - 15 வயது சிறுமிகள் ஆயிரக்கணக்கில் புலிகளினால் பிடித்து பயிற்சி களங்களுக்கும், போர்முனைகளுக்கும் அனுப்பப்பட்டனர். மேலும் பூபதியம்மாவின்சாகும் வரை உண்ணாநோன்பு மட்டக்களப்பு "கோணேஸ்வரி பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டு" சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட நிகழ்வு அது தந்த துன்பியல் உணர்வைவிட பிரச்சார உத்திக்கே மிகமிக அதிகமாக புலிகளால் பயன்படுத்தப்பட்டது. அதாவது ஆயுதம் தாங்காத பெண்களுக்கு இப்பிரதேசங்களில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையெனும் உணர்வு மாபெரும் சமூக உண்மையாக கட்டமைக்கப்பட்டது. இதனுடாக புலிகளது கட்டாய ஆள்பிடிப்பில் சிறுமிகள் வேட்டையாடப்பட்டு சண்டைகளில் பலியிடப்படுவது நியாயப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட மட்டு அம்பாறைப் பகுதிகளில் மட்டும் இந்த காலகட்டத்தில் சுமார் 4000 சிறுமிகள் கட்டாய கைது மூலம் வீடுகளிலும், பாடசாலைகளிலும், தெருக்களிலும் புலிகளினால் கைதாகியிருந்தனர். இது பற்றிய புகைகூட மட்டக்களப்பை விட்டு வெளியே கசியவிடாமல் அங்கு பணியாற்றிய பத்திரிகையாளர்கள் யாவரும் தொண்டாற்றியிருந்தனர். [கருணாவால் கொல்லப்பட்ட நடேசன் ] சிவராம், துரைரெட்ணம் என்போர்கள் இந்த நாலாயிரம் சிறுமிகளினதும், அவர்களது பெற்றோர்களதும் கண்ணீரைக் கண்டும் கலங்காதவர்கள்;. இதனால் இப்பிரதேச சிறுமிகளின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்டதுடன் அவர்களது சமூக வாழ்க்கை நிலையும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளபட்டுள்ள அதேவேளை 1993 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழும் 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட விதவைகளின் எண்ணிக்கை 6000 ஆக இருந்தது. இது இன்றைய நிலையில் இப்பொலுது 26000 ,தாண்டிவிட்டது . இப்பெண்களினது வாழ்க்கையும் சீர்குலைக்கப்பட்டு எவ்வித எதிர்காலமும் இன்றி நிற்கின்றது. போராட்ட சூழலில்தான் இதுபோன்ற அழிவுகளும் இழப்புகளும் எற்பட்டு வந்தது என்றால் சமாதான சூழலும்கூட அதற்கு மாறாக எதையும் செய்யவில்லை. சமாதான ஒப்பந்தம் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட பல பெண்சிறுமிகளுக்கு புதுவாழ்வழிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது இதற்கு எதிர்மாறகவே நடந்துகொண்டிருக்கின்றது. கிழக்கின் விடிவெள்ளிகள் எனக்கூரும் எவரும் எதையும் செய்யவில்லை பெண்களுக்கான கல்வியறிவு, பெண்ணடிமை குறித்த விழிப்புணர்வு, கிழக்கின் விதைவைக்களுக்கு ஈ.பி.டி.பியின் கட்சியினருக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உதவிகள் புரிகின்றார் ஏன் நீங்கள் கேணல் கருணா அம்மனாக இருத்த பொழுது உங்கள் அமைப்பால் கொலை செய்யப்பட்ட மாற்ருக்கருத்துக்கொண்ட கிழக்கின் விதைவைக்களுக்கு உதவக்கூடாது மறுவாழ்வுத்திட்டங்கள், பெண்களுக்கான சமவுரிமைக் கோரிக்கைகள் என்று குறைந்த பட்சம் ஏதாவது கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு. வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய இன்றைய சூழலில் அதைவிடுத்து இப்பிரதேச சிறுமிகளின் எதிர்காலம் இன்னும் இன்னும் சூனியமயமாக்கப்படுவதே தொடர்கிறது.

தாங்கள் கூரும் நொண்டிச் சாக்கு ஏற்று கொள்ளமுடியாது இம்மடலை நான் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கவிதை பார்த்தேன் 1990.08.03 அன்று புலிக் கொலைஞர்களால் காத்தான்குடி புனித பள்ளிவாசலிலே அரங்கேற்றப்பட்ட வெறித்தனத்தின் நினைவு நாளையொட்டி இக் கவிதை வடிக்கப்பட்டுள்ளது)

சில வரிகள். வயிறு பற்றி எரிகிறது !
வணங்கிக் கொண்டிருந்த எம் சோதரங்களை
வக்கற்ற மிருகங்கள்
வதைத்து விட்ட அந்த நாளை எண்ணுகையில்
வயிறு முழுக்க பற்றி எரிகிறது !!
வருடங்கள் இருபது ஓடித்தான் போயிடினும்
விம்மியழுத எம் சோதரங்களின்
விடியாத அந்த இரவு தான் - இன்னும்
வி (வ) ழி நெடுகிலும் ரத்தக் கண்ணீராய்
வடிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு யார் காரணம் 1990 ஓகஸ்ட் 11- ஏறாவூரில் 103 முஸ்லிம்களைப் புலிகள் தூக்கத் தின்போது கொலை செய்தனர்
1992 ஏப்ரல் 29- அழிஞ்சிப் பொத்தானைக் கிராமத்தில் 69 முஸ் லிம்கள் புலிகளினால் கொல்லப் பட்டன 1992 ஜுலை 15- கிரான்குளத் தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளினால் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் .இருவதில் பொலநருவை முஸ்லிம் கிராமத்தில் நூறஎண்பத்தீரன்ருபெர் படுகொலை சம்மாந்துரை மல்வத்தை படுகொலைகள் முஸ்லிம் கிராமஙகள் மட்டுமா சிங்கள அப்பாவிகள் ௧௯௯௦. மே விசாக் தினத்தில் தககொலை தாக்குதலில் இருவத்திமுன்று கொலைகல் சிங்கள எல்லைக்கிராமங்களில் புகுத்த புலிகள் சிறுவர்கள் பெண்கள் உட்பட படுகொலை இன்னும் எத்தநைஜோ அடிக்கிக் கொண்டே போகலாம் முஸ்லிங்கலும் சிங்களமக்களும் மரந்து விடுவார்கள் என நினைப்பது முட்டாள்தனம் பள்ளிவாசல் படுகொலையின் எதிரொலியாக
அம்பாறை வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் முஸ்லிம் இழஞ்சர்களால் படுகொலை செய்யப்பட்ட 150ட்கு மேற்பட்ட
தமிழர்கள் .
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் முஸ்லிம் இழஞ்சர்களால்படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்கள் .
ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் முஸ்லிம் இழஞ்சர்களால் படுகொலை செய்யப்பட்ட 100ட்கு மேற்பட்ட தமிழர்கள் .
மீரவோடை தமிழ் கிராமத்தில் முஸ்லிம் இழஞ்சர்களால் படுகொலை செய்யப்பட்ட 30ட்கு மேற்பட்ட தமிழர்கள் .
மஞ்சன்தொடுவாய் கிராமத்தை எரித்து சுடுகாடாக்கிய முஸ்லிம் இழஞ்சர் கூட்டம்.

நாவக்குடா சந்தை பிரதான வீதியில் இருந்த தமிழரின் கடைகள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிய முஸ்லிம் இழஞ்சர் கூட்டம். இவைகள் ஆனைத்துக்கும் புலிகல்தான் காரணம் முஸ்லிம் மக்கலைக் கொலை செய்த்த புலிகள் ஏன் தமிழலர்கலை பாதுக்ககவில்லை இரு இனத்தில்குள்ளும் சன்டையை மூட்டிவிட்டு குளிர் காய்ந்தார்கள் முஸ்லீம் இன மக்கள் மிகவும் மோசமான முறையில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டமை குறித்து மிகவும் வேதனை அடைகின்றோம். எந்தத்தவறை அரச சிங்களப் படைகள் அன்று தமிழினத்திற்கு செய்தனவோ அதே செயலை மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், விடுதலைக்காக போராடும் வீரர்கள் என்றும், தமிழர்கள்தான் புலிகள் - புலிகள் தான் தமிழர்கள் என்று தம்மை தாமே கூறிடும் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டங்களில் கூடிய பங்கேற்ற முஸ்லீம் மக்களின் உயிர்களைப்பறிக்க கங்கணம் கட்டிய புலிகளுக்கு விடுதலைவரலாறு தெரியாமல் இருக்கலாம் ஆனால் வரலாறு தெரிந்த அறிஞர்கள் பலர் முஸ்லீம் மக்களாக இருப்பதும், இன்றும் இவர்கள் இப்படியான குரோத மனப்பாங்கை வளர்த்தாலும், தமிழ் மக்களோடு கூடியே வாழவேண்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள முஸ்லீம் சகோதரர்களையும் எம்மால் பகைத்துக் கொள்ளமுடியாது. அந்த எண்ணமும் எம்மத்தியில் எழாது. ஒற்றுமையே பலம் என்று இளவயதில் நாம் படித்த பள்ளிப்பாடங்கள் என்றும் எம் நெஞ்சில் நீங்காது இருக்கின்றது. அதாவது முஸ்லீம்களை மட்டுமல்ல தமிழ் சிங்கள அப்பாவிப் பொதுமக்கள் அறிஞர்கள் தலைவர்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சரியான நீதி வழங்கப்படவில்லை. இவையனைத்தையும் முஸ்லீம் சகோதரர்கள் உணர்ந்து நீண்ட காலம் அன்பில் இணைந்த நாம் ஒன்று படவேண்டும் முஸ்லிகள் என்பது யார் சின்னத்தம்பி[க்] [காக்கா] .நல்லதம்பிக்காக்கா. வெல்லைதம்பிக்காக்கா. இவர்கள் அனைவரும் எங்கள் சைவத்தமிழர்கள் இவர்கள் மதம் மாறியதால் மதம் மாறி முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொண்டதால் முஸ்லிம்கள் ஆனார்கள் இவர்களின் வாரிசுகள்தான் முஸ்லிம் தமிழ் என்று சண்டை இடுகின்றார்கள் மதம் தான் வேறு இவர்கள் பேசும் மொழி என்ன தமிழ் எத்தனை எத்தனை பொலிஸ் அதிகாரிகளின் படுகொலைகள் 1990 ஜூன் மாதங்களில் புலிகளிடம் சரன் அடைந்த 600 மேற்பட்ட பொலிசாரின் கொலைகள் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் கொல்லப்பட்ட மாற்று இயக்கத்தவர்கள் எத்தனை 1987ல் புலிகளின் பேச்சு வர்த்தைக்கு என்று அழைத்து நிராயுதர்களாக வந்தத தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) ) மத்தியகுழு உருப்பினர்களை கிளைமோர் குண்டை வைத்து கொலை செய்ததும் அதில் உயிர் தப்பி தண்ணீர் கேட்ட போராளிக்கு வாய்க்குள் சுட்டதும் ஏன் உங்கள் முகாமில் மாற்று கட்சி உறுப்பினரை தொங்கவிட்டு துப்பாக்கி பயிர்ட்சி எடுத்தும் ஏன் நீங்கள்.2004 மார்ச் பிரிந்து வந்ததின் பின் நடந்தது என்ன?மட்டு-அம்பாறையில் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக செயலாற்றிய கௌசல்யன் அவர்களையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் சில புலிகளையும் கிளிநொச்சியில் சுனாமி புனரமைப்பு பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கண்ணிவெடி வைத்து 8 பெப்ருவரி 2005 இரவு 7.15 மணியளவில் கொன்றது 2005 டிசம்பர் திங்கள் 25ம் நாள் நள்ளிரவில் மட்டகளப்பில் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமைப் போராளி) புனித மரியாள் தேவாலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் நற்கருணை பெற்று திரும்பும் போது, வழிபாட்டில் வைத்து மனைவிக்கு அருகில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர், கருணா, குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாற்றுக் கருத்துக்கொண்ட பத்திரிகைகள் தொடக்கம் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வரை தடைசெய்யப்பட்ட காலங்கள் இருந்தன. புலிகளது செய்தித் தாள்களும் புலிகளது சஞ்சிகைகளுமே வாசிக்க முடயும் அதே பானியில் இன்றும் ஊடக சுதந்திரம் மிரட்டப்படுகின்றது உங்கள் ஊடகச் செயலாளராகிய நியூட்டன் அல்லது யூலியன் என்கிற ஞானப்பிரகாசம் என்பவரால் ஒரு ஊடகத்துக்கு விடபட்ட சிறுபிள்ளைத்தனமான அட்சுறுத்தல் கேட்டேன் அந்த புலிகளின் பாணியில் இருந்து சற்றும் மாரவேயில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விடையம் புலிகளில் இருந்து அவர்களின் ஜனநாயக் விரதப்போக்கால் வெளியேறிய நீங்களும் உங்கள் கட்சியினரும் அதே போக்கை கடைப்பிடிப்பது முறையா? அது உங்கள் எதிர்காலதை பாதிப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சிக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை கருணாவுக்கும், கருணா இன்று வகிக்கும் அரசியல் பாத்திரத்தை ஆதரிக்கும் எமக்கும், மேற் சொன்ன கூற்றுக்குள் பெரிய செய்தி காத்துக்கிடக்கின்றது. சில கேள்விகளும் எம் நோக்கி எழுப்பப்படுகிறது. கருணா எதற்காக அரசியல் செய்கிறார்? அவரது கச்சியின் எதிர்காலம் என்ன? நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்? இன்று ஏன் கட்டாயம் அதை ஆதரிக்க வேண்டும்? இவை சில முக்கிய கேள்விகளாகும். கருணா புலிகளில் இருந்து பிரிந்து வந்தாலும் அவர் இன்னொரு பிரபாகரன் போலவோ, அவரது குழு பொட்டம்மானினது வழிகாட்டலில் இயங்கிய மோசமான கொலைகாரக் கும்பலைப் போன்ற மற்றொரு கும்பலாகவோ மாறுவதை மனதார விரும்பாதவர்கள்
கருணாவுக்கும், முதல் அமைச்சர் பிளையனுக்கும் நடக்கும் சட்சரவுகளும் ஏர்புடயதல்ல எங்களுக்கு முக்கிய தேவை ஒற்றுமைதான் அதைவிடுத்து உங்களுக்குள் நடக்கும் யுத்தத்தை ஏல்லோர் கவத்தையும் திசை திருப்பாதீர்கள். எனக்கு நாபகம் வருவது எல்லாம் தமிழ் நண்டு கதைத்தான். எல்லா போத்தல்களிலும் இரண்டு இரண்டு நண்டுகள் போட்டார்கள் அதுவும் நமது நாட்டில் உள்ளபடி இரண்டு இரண்டு நண்டுகளாக
எல்லா நண்டும் வெளியில் வந்துவிட்டன ஆனால் இரண்டு நண்டுகள் மட்டும் வெளியில் வரமுடியாமல் ஒன்றை ஒன்று கலை வாரி கொன்டிருத்தது கலைவாரிய இரண்டும் தமிழ் நண்டுகள். நமக்குள் இல்லாத ஒற்றுமைதான் இரு கைகள் தட்டினால்தான் ஓசை வரும் என்பதை உணர மறுத்த எமது தமிழ் தலைவர்கள் விட்ட தவறு இன்றைய தமிழ் மக்களின் அவலம்
அதுதான் புலிகளின் இன்றைய அழிவுக்கும் காரணம் டைனோசர் வாழ்க்கை .டைனசோர்கள். தம் பெருத்த உடல்களைத் தூக்கிக் கொண்டு புழுதி பரவ கர்ணகடூரமாக பேரொலி எழுப்பிக்கொண்டு ஓடி ஏறி மிதித்துத் துவைத்துப்போட்டுக்கொண்டிருப்பவர்கள். மாற்றுக்கருத்தை மதிக்கவேண்டுமென்ற விவஸ்தையே இல்லாது வெறி பிடித்து அலைபவர்கள். சர்வசாதரணமாக ''புனா சுனா'' "வேசிமகன்" என்று சக மனிதனையே தூஷணை செய்பவர்கள்.டைனோசர் இன்று அந்த இனம் உலகில் இல்லை புலிகளுக்கும் அதே நிலைதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரை மாற்ற அக்கட்சி தீர்மானித்துள்ளது என்று தெரிவித்து இருபது வரவேற்கவேண்டிய ஒன்று விடுதலைப் புலிகள் என்ற பெயர் மாற்றபட்டு த்மிழ் மக்கள் என்ற பெயரில் எதையாவது ஒன்றை தெரியு செய்யலாம் தமிழ் மக்களின் கட்சி தமிழ் மக்கள் என்ற உரிமையை விட்டுக்கொடுக்காமல் கட்சியின் பெயரை வைப்பது தவறல்ல ஈழம் என்ற கட்சிகளுக்கு எதிர் காலத்தில் தடைகள் வரலாம் இன்னொரு பக்கம் பல கட்சிகளின் பெயர்கள் மாற்றப்பட வேண்டிய நிர்பந்தத்தை அரசு ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுவதை இங்கே நான் சொல்லியே ஆகவேண்டும்.
காரணம்..

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு பரபரப்புக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.
"யுத்தத்தில் ஈழம் என்ற கொள்கையை நாம் (இவ்வளவு காலமும் அரசாங்கம் என்ன செய்தாலும் எதிர்த்தவர்கள் இவர்கள்) தொர்கடித்திருக்கிறோம்.. இப்போது அரசியல் ரீதியிலும் தோற்கடிக்கவேண்டும்.
கட்சிப் பெயர்களில் ஈழம் என்பதைக் கொண்டுள்ள கட்சிகள் அனைத்தும் தடை செய்யப் படவேண்டும். இல்லாவிட்டால் என்றோ ஒருநாள் மீண்டும் தனிநாடு என்ற பிரிவினை எண்ணம் தோற்றுவிக்கப்படக் கூடும்"அதற்க்கு பதில் தந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஈழம் என்பது எமது தேசியகீதத்திலும் உள்ளது ஈழம் என்று சொல் இலங்கையையும் குறிக்கும் எனக் கூரினார் அதனனால் எந்த பிரசனையும் வராது எனவும் உறுதியளித்தார். அப்படியானால் கருணா அம்மான் எனபது உங்கலுக்கு புலிகள் வைத்த பெயர் அம்மான் என்ற பெயர் இனி உங்களுக்கு பொறுந்தாது இப்பொழுது நீங்கள் அமைச்சர் புலிகள் இல்லாதபோது புலிகள் சூட்டிய மகுடம் எதற்கு அதனாலதான் அம்மான் என்று எழுதாமல் அமைச்சர் கருணா என எலுதினேன் யாரை புலிகள் துரோகிகள் என்று சுட்டுத்தள்ளினார்களோ இன்று அவர்கலே மக்களுக்கு துரோகம் செய்து மறைந்து விட்டார்கள். மக்களுக்கு இது ஒரு பாடம் மக்கள் முள் கம்பி வேலிளுக்கப்பால் எப்பொழுது விடியும் என ஏக்கத்தில் யாரையும் நம்பமுடியாமல் பாதுகாக்க வேண்டியவர்கள் பாடையில் எத்தி விட்டு மறைந்து விட்டார்கள். அந்த ஏக்கமும் கனவும் முகங்களில். இப்போது உங்களைத் தேடி ஓடிவந்திருக்கும் எங்கள் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துங்கள். அவர்களின் கல்விக்கு உதவுங்கள். எந்த தலைவராவது அவர்களின் நிலைமை யோசித்துப் பார்த்திருப்பீர்களா? அவர்களின் வாழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்து அதற்காக அரசிடம் குரல் கொடுத்திருக்கிறீர்களா?
நீங்களாவது உங்கள் தெருத் சண்டைகளை விட்டு விட்டு இந்தமக்களை மிட்க்கப்பாருங்கள் இதுதான் இனரைய் காலத்தின் தேவை கிழக்கு முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த்தப்பதவிக்கு தகுதியற்றவர் என்று கூருவது முறையல்ல அடுத்தவர் எழுதிக் கொடுத்த மாவீரர் உரையை வாசித்து இந்த உலகத்தை ஏமாத்தியவர்களின் பின்னால் 22, வருடங்கள் இருந்த உங்களுக்கு இப்படிக்கூரும் உரிமை இல்லை அது மக்கள் எடுக்க வேண்டிய முடிவு நீங்கள் உங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை ஆரபித்து அதை நம்பி வந்தவர்களையும் நடுத்தெருவில் விட்டு விட்டு உங்கள் உயிரை காப்பாத்த ஓடினீர்கள் அந்தகட்சியை அக்கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தூக்கி நிறுத்தி இன்று அந்தக்கட்சியின் சார்பில் ஒரு முதல்வர் இருக்கின்றார் நீங்கள் நாட்டுக்கு திரும்பிய பின் மக்களால் தெரிவு செய்யப்படாமல் மகிந்த்த கொடுத்த நன் கொடை இன்று தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ரபதவியில் இருக்கிறிர்கள் நீங்கள் ஏன் கிழக்கு மகானத்துக்கு1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வழங்கபட்டுள்ள அதிகாரங்களை வழங்கக் கூடாது எனக் குறுவது நல்லதல்ல கிழக்கு மாகாணத்துக்கு என்று ஒரு அரசு உண்டு அது மக்களால் நல்லதோ கெட்டததோ கள்ளவாக்கோ நல்லவாக்குகலோ ஜனநாயகம் மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட. அரசு அதில் நீங்கள் தலையிடுவது முறையல்ல முதல் அமைட்சர் தவறும் பட்சத்தில் மக்கள் அடுத்த தேர்தலில் தூக்கி எறிவார்கள் முதல்வர் ஒரு போட்டியில் கூருகிரார் எனக்ககு எனது அதிகாரங்களை பயன் படுதமுடியாமல் இருப்பாதாக நீங்கள் அமட்சர் பதவியில் இருதுகொண்டு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து உங்கள் நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சிக்கு ஏனைய கட்சியில் இருப்பவர்களை உங்கள் கட்சியில் இணையும் படி கூருவது முறையல்ல கட்சி மாறுபவர்களும் நன்று சிந்திக்க வேண்டும் மக்கள் உங்களுக்கு வாகளித்தது உங்கலை பிரதிநிதபடுத்திய கட்சிக்காக அது உங்களுக்கு அல்ல. நீங்கள் மக்களுக்கு நனமை செய்ய நினைத்தால் அது எந்த்க் கட்சியிலும் இருத்து கொண்டு செய்யலாம் மக்கள் கொடுத்த வாக்கை மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்கையும் காப்பாத்துங்கள் ஏன் பாரிய முதல்லிடுகலில் கவனம் செலுத்தும் அதே நேரம் பாமரமக்கள் என்ன வக்கற்றவர்களா. சகோதரர்களே ஏழையின் வாழ்வையும் ஒரு கணம் சிந்யுங்கள் ஏழையின் சிறிப்பில் இறைவனை கான்பிர்களோ எனக்குத்தெரியாது அடுத்த ஏலக்சனில் கலக்சனைக் [அறுவடை] கான்பிர்கள் இல்லை என்றால் வீடுசெல்ல தயார் ஆகுங்கள் அமைட்சர்ராக இருந்தால் என்ன முதல் அமைசராக இருந்தால் என்ன முன்னாள் கேணல் கருணா என்பதுபோல முன்னால் அமைட்சர் ஆகாமல் இருக்கு வேண்டும் என்றால் கிழக்கின் கொடுமைகளுக்கு காரணமானவர்கள் பிராயட்சித்தம் செய்துதான் ஆகவேண்டும் உப்பை தின்றால் தன்னீர் குடிக்கணும். தென்றலாய் வாழ ஆசைப்படும் தமிழ் மக்களுக்கு புயலை கொடுக்காதீர்கள் நீண்டகாலமாக எனக்கு இருந்த மனக்குமுறல் தான் இது இம்மண்ணில் பெருக்கெடுத்தோடிய செங்குருதியும் கண்ணீரும் இனியும் வேண்டாம். இம்மண்ணில் சகோதரத்துவத்தையும், இன ஐக்கியத்தையும் சீர்குலைத்து அநாதைகளையும், விதவைகளையும் உருவாக்கி இம்மண்ணையே சுடுகாடாக்கிய கொடிய யுத்தமும் அதன் தூதுவனான பயங்கரவாதமும் இங்கு மீண்டும் வரக்கூடாது. நாம் அனைவரும் கரம் கோர்த்து வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக, நியாயமாக ஒருவரின் உரிமையில் இன்னொருவர் தலையிடாமல்[கருணா மற்றும் பிள்ளையான் ] வளமான கிழக்கு மாகாணம் என்ற பொது இலக்கை நோக்கி செயற்படுவோமாக இருந்தால் பயங்கரவாதமும், கொடிய யுத்தமும் இங்கு மீண்டும் தலைகாட்ட முடியாது. எனது எழுத்தில் அல்லது கருத்தில் அல்லது நான் சொன்ன விதத்தில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். நான் தங்களை புண்படுத்தும் நோக்கில் இதனை சொல்லவில்லை.
நீண்டகாலமாக எனக்கு இருந்த மனக்குமுறல் இந்த இயற்கை பூமி இம்சை பூமி ஆனதற்கு யார் காரணம் சற்றே சிந்யுங்கள் என்

அன்பு நண்பர்களே அபுடன் அ.ஜெயக்குமார் [ஜோதி

http://sannthi.blogspot.com/2009/08/blog-post_4983.html

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!