வாழ்வில்நான் மறக்க முடியா மனிதர் ம.செ.பேதுருப்பிள்ளை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தேன். பதிவு என்ப தற்கும் அப்பால் அவரை எழுதியமைக்கு காரணம் உண்டு.
ம.செ.பேதுருப்பிள்ளை ஆங்கில ஆசிரியர். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நீண்ட காலம் பணி செய்தவர். தமிழுக்கு இணையாக ஆங்கிலம், சிங்களம் பேசவும் எழுதவும் தெரிந்தவர்.
வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையிலிருந்த காலத்தில் மட்டுமே சுமார் 500 கடிதங்கள் எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பதிவாக இருக்கும். தமிழீழ விடுதலை விருப்பு என்னுள் மன எழுச்சியாக மாறிட இவரது கடிதங்களும் காரணமாய் இருந்தன.
வெள்ளிகள் வருவது விடியலின் அறிகுறி
ஞாயிறு வருவதற்கே, ஞாயிறு வருவதற்கே
சிலுவைகள் சுமப்பதும் செம்புனல் உகுப்பதும்
சீவியம் பெறுவதற்கே -விடுதலை
சீவியம் பெறுவதற்கே! - என்ற தமிழீழ
வானம்பாடி சிட்டு அவர்களின் பாடலை ஒரு கடிதத்தில் அறிமுகம் செய்து என்னை சிலிர்க்கச் செய்தவரும் ம.செ.பேதுருப்பிள்ளை அவர்கள்தான்.
2002-ம் ஆண்டு வன்னிக்கு சென்றிருந்தபோது அருட்தந்தை கருணரட்ணம் அவர்களுடன் என்னை வரவேற்க ஓமந்தைக்கு அன்புமிகுதியால் வாழைத்தண்டும் பேழைக்குள் பூமாலை பூட்டி வந்து, ஓமந்தை வீதியில் எனக்கு அதை அணிவித்து கூச்சமுறச் செய்தவர். அன்பு செய்ய மட்டுமே தெரிந்தவர், கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறவர்.
கிளிநொச்சியில் இருந்த தனது குடிலுக்கு என்னை கூட்டிச் சென்று அம்மா- அவரது வாழ்க்கைத் துணை சுட்டுத் தந்த பருத்தித்துறை வடையின் சுவை இப்போதும் என்னால் இனிதே நினைக்க முடிகிறது.
சிங்களமும், ஆங்கிலமும் நன்றாக அறிந்த காரணத்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு பொறுப்பாளராயிருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மொழிபெயர்ப்புத் துணையாளராக அமர்த்தப்பட்டார். அவர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அல்ல என்றபோதும் மிக முக்கியமான கடமைக்கு அவர் நியமிக்கப்பட்ட காரணத்தால் ம.செ.பேதுருப்பிள்ளை என்ற பெயர் மாற்றப்பட்டு ஜார்ஜ் என்ற பெயர் தரப்பட்டது.
அமைதிப் பேச்சுவார்த்தை களின்போது சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பல்வேறு நாடு களுக்கும் சென்று வந்த ஜார்ஜ் மாஸ்டர்தான் வேரித்தாஸ் வானொலியில் என் நிறைவு நாட்களில் ""தந்தை போல் ஆனவருக்கு...'' என விளித்து நான் கடிதங்கள் எழுதிய ம.செ. பேதுருப்பிள்ளை. மனைவி மாசறு பொன், வலம்புரி முத்து, எப்போதும் புன்சிரிக்கும் இறையருள் வசந்தம், கட்டுக்கோப்பான சிவபக்தை. இவரோ கத்தோலிக்க கிறித்தவர். அன்றில் பறவைகள் போல் ஆண்டாண்டு காலம் அன்பில் ஒன்றி வாழ்ந்த இவர்களின் இல்லற ஒழுக்கம் ஒளி நிறைந்தது.
முல்லைத்தீவு இறுதி யுத்தத்தின் தொடக்க நாட்களில் இலங்கை ராணுவம் தங்களிடம் புலிகளின் முக்கிய இரு அரசியற் தலைவர்கள் வந்து சரணடைந்ததாக உலகிற்குப் பிரச்சாரக் கடை விரித்ததை நீங்கள் பின்னோக்கிப் பார்த்தீர்களென்றால் நினைவுபடுத்த முடியும் -பலவீனமுற்ற நிலையில் இரு வயோதிக மனிதர்கள் -வதனத்தில் வியாகுலம் பதிந்தவர்களாய் உலக ஒளி ஊடகங்களில் உலாவரப்படுத்தப்பட்டார்கள். ஒருவர் தயா மாஸ்டர், இன்னொருவர் ஜார்ஜ் மாஸ்டர் என்ற என் ம.செ. பேதுருப்பிள்ளை.
தொலைக்காட்சியில் அவரது முகம் கண்ட அந்நாளில் என் மனம் பட்ட வேதனையை நான் மட்டுமே அறிவேன். புலிகள் இயக்கத்திற்குள் பிளவு வந்துவிட்டது. தலைமையின் மேல் மூத்த தலைவர்கள், தளபதிகள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதாக இந்த இருவரையும் காட்டி இலங்கை ராணுவம் பரப்புரை செய்தது. தமிழுலகமும் இவர்களை "கோழைகள்' "துரோகிகள்' என்பதாகப் பார்த்து முத்திரை பதிக்க முற்பட்டது.
என் மனமோ ஒத்துக்கொள்ள மறுத்தது. என்றேனும் மெய்ப்பொருள் அறிந்தே தீர வேண்டுமென உறுதி கொண்டது. வாழ்வில் என் ஆதார நம்பிக்கைகளில் ஒன்று இது. முன்பே கூட எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுது கிறேன்: ""பொய்மையின் பயணம் வேகமானது. உண்மையின் பயணமோ மெதுவானது, காயங்கள் நிறைந்தது. ஆனால் உறுதியானது. என்றேனும் ஒருநாள் பொய்மையின் குப்பைமேடுகளினின்று உண்மை உயிர்த்தெழும்''.
தயா மாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டர் என்ற என் பேதுருப்பிள்ளையும் இலங்கை ராணுவம் காட்ட விரும்பியது போல் கோழைகளாகவோ, துரோகிகளாகவோ நிச்சயம் இருக்க மாட்டார்கள் என நம்பியவனாய் இறுதி யுத்தத்தைப் பார்த்தவர்கள், களத்தின் நம்பகமான செய்திகளுக் குரியவர்கள் என என் தொடர்புக்கு வந்தோர் எல்லோரிடத்தும் உண்மையில் தயா மாஸ்டருக்கும், ஜார்ஜ் மாஸ்ட ருக்கும் என்ன நடந்ததென்று விசாரித்து வந் தேன். விடாத, விட விரும்பாத, விடாப்பிடியான என் ஐந்து மாத கால தேடலுக்கு விடை கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கிடைத்தது.
அதுவும் முதுமலை கார்குடி காட்டுப் பகுதியில் வாரணங்களும் மான் கூட்டங்களும் இரு நண்பர்களோடு கண்டு பாரதியின் வியனுலகை அமுதென நுகரும் அனுபவம் வாங்கி நின்ற பனிவிழும் நள்ளிரவொன்றில் அந்த உண்மை கிடைத்தது. காடுகளுக்குள் அச்சம் அறுத்து விட்டேத்தியாய் சுற்றித் திரிவதுபோலொரு விடுதலைச் சுகம் உலகில் வேறில்லை.
தயா மாஸ்டரும் ஜார்ஜ் மாஸ்டரும் சரண டைந்துவிட்டதாக உலகிற்குச் சொல்லப்பட்ட அந்நாளில் உண்மையில் நடந்தது இதுதான்:
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நிலப் பகுதியை அறிந்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத் தீவுக்குச் செல்வதானால் மாத்தளன், பொக்கணை, வலையர்மடம், கள்ளப்பாடு, முள்ளிவாய்க்கால் பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். இருமுறை இவ்வழி யில் நானும் பயணப்பட்டிருக்கிறேன். மொத்தம் சுமார் இரண்டு கி.மீ. தூரம் இருக்கலாம் என நினைக்கிறேன். ஆடு, மாடுகளைப்போல் நான்கு லட்சம் தமிழர்களும் அடித்து விரட்டிக் கூட்டப்பட்டது இப்பகுதிகளில்தான்.
ஜார்ஜ், தயா மாஸ்டர்கள் ஆயுதம் தரித்த களப்போராளிகள் அல்ல, அரசியல் பிரிவில் இருந்தவர்கள். வேறு பணிகள் செய்கிற உடல் வலுவும் இல்லாதவர்கள். மக்களோடு மக்களாய் மாத்தளன் அடைக்கலமாதா ஆலயம் பகுதியில் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் முல்லைத் தீவு சாலை கடற்கரை பரப்பிலிருந்து நகர்ந்த இலங்கை ராணுவம் மாத்தளன் பகுதியை ஊடறுத்து அச்சிறு நிலப்பரப்பையும் மக்களையும் இரு பிரிவுகளாய் துண்டாட இவர்களும் சுமார் 300 பொதுமக்களும் தீவுபோல் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மாத்தளன் பகுதியில் நின்றிருந்த போராளிகள் உறுதியுடன் களமாடி வீரமரணம் தழுவ, கழுத்தில் சயனைடு குப்பி அணியாத அரசியல் பிரிவின் தயா மாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டரும் மக்களோடு மக்களாய் நின்று ராணுவ கட்டுப்பாட்டு நிலைக்கு தங்களை ஒப்படைத் திருக்கிறார்கள். கோழைத்தனம் என்ப திலும் ஓர் தந்திரோபாயமான முடிவு என்ற மன நிலையில்தான் அவர்கள் அம்முடிவை எடுத்ததாக அருகிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனில் தொலைக்காட்சிகளில் விடுதலைப் போராட் டத்தின்மேல் நம்பிக்கையிழந்த தொனியில் அவர்கள் பேசிட காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். குரூர வெறியோடு ரத்தக்குளியல் நடத்திக்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் கையில் பிடிபட்ட இரண்டு வயோதிபத் தமிழர்களின் நிலையை நாம் உள்ளார்ந்த, நேசம் தோய்ந்த புரிந்துணர்வோடே பார்க்கவேண்டுமென நினைக்கிறேன்.
விரிவாக இதனை இங்கு நான் எழுதத் தலைப்படு வதற்குக் காரணம் உண்மையை, உண்மையானவர்களை வரலாறு நிச்சயம் ஒருநாள் விடுவிக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கவும், போலிகள்-பொய்யானவர்கள் ஒன்றேல் வெளிப்படுத்தப்படுவார்கள் அல்லது அற்பப் பதர்கள்போல் காலவீதியில் பரிதாபமாக விழுந்து கிடப்பார்கள் என்பதை வலியுறுத்திப் பதிவு செய்யவுமே.
போர்க்களத்தில் தமிழர்களை தோற்கடித்தவர்கள் களத்தில் சிந்தப்பட்ட தூய குருதியையும் களங்கப்படுத்தப் பார்க்கிறார்கள். உணர்வாளர்கள் என பிடரி சிலிர்த்துத் திரிகிறவர்களைச் சுற்றியே பல ஊடுருவல்கள் நிகழ்கின்றன. நீதிக்கான தேடலிலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பி சலிப்புறச் செய்யும் திட்டத்தோடு தவறான செய்திகளை பரபபுகின்றார்கள். அவற்றுள் ஒன்று, கடற்புலித் தளபதி சூசை என்ன ஆனார்? பிடிபட்ட அவரது குடும்பத்தாரை இலங்கை அரசு நன்றாகப் பராமரிக்கிறது. அவர் துரோகியாக இருக்கக்கூடும்'' என்பது போன்ற கேவலமான ஓர் பிரச்சாரத்தை உளவு அமைப்புகள் உலவ விட்டன. உண்மைக்கான தேடலுக்கு இறையருளே பதில் தந்ததால் கடந்த புதன் கடிதமொன்று வந்தது. பெயர் இல்லை இலங்கை திரிகோணமலையிலிருந்து தபால் செய்யப்பட்டிருந்தது.
கொண்ட இலட்சியம்
குன்றிடாத தங்களின்
கொள்கை வீரரின்
காலடி மண்ணிலே
நின்று கொண்டொரு
போர்க்கொடி தூக்குவோம்
நிச்சயம் தமிழீழம் காணுவோம்!
-என்ற வரிகளோடு நிறைவு செய்யப்பட்டிருந்த அந்த ஏழு பக்கக் கடிதத்தை எழுதியிருந்தவர் கடைசிவரை களத்தில் நின்ற ஓர் போராளி. கடற்தளபதி மாவீரன் சூசை அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மை விபரங்கள் சுமந்த அக்கடிதம் வரும் இதழில்.
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18595
""குருதிச்சுவடுகளில்பாதம் பதித்தபடி'' என அக்கடிதத்திற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தின் நிறைவு வரிகளை மீண்டும் நினைவுபடுத்துதல்அர்த்தமுடைத்தது.
""கொண்ட இலட்சியம்
குன்றிடாதெங்களின்
கொள்கை வீரரின் காலடி மண்ணிலே
நின்று கொண்டொரு
போர்க்கொடி தூக்குவோம்
நிச்சயம் தமிழீழம் காணுவோம்''
இதோமே-17 கடைசி நாள் கடந்து மேலும் ஒரு நாள் களத்திலே நின்று உண்மையான தோர்புறநானூற்று வீரனின் கடிதப் பதிவு காலம் கடந்த கண்ணீர் வரலாறாய் இங்குவிரிகிறது:
எமது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப்பேரின வாதம் மேற்கொண்ட "இரத்தக் குளியல்' நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை.
அழுவதற்கும்அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல் களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள்.நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல் லாமல் பிணங்களாய்விழுந்தவரின் உருக் குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள். பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கிஉயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டுஉயிர்காக்க அங்குமிங்கும் ஓடிய லட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள்மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கேமல்லாக் காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இனஅழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.
இப்பேரழிவிற்கும்நடுவில் "கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம்' என உறுமும்துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல்தாக்குதல் தளபதியாய் இருந்த சீலன் அண்ணை சண்டைக்களத்தில் விழுப்புண்அடைந்தபோது, தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துச் சென்று தொடர்ந்துபோரிடு என அருண் என்ற சக போராளிக்கு உத்தரவிட்டார். அந்த மரபையே நாங்கள்சீலன் அண்ணை மரபு என்கிறோம். அவ்வாறே கடைசி நாட்களில் நாங்கள் களமாடினோம்.
விமானகுண்டுவீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, டாங்குகளின் ராட்சத குண்டு வீச்சுயாவற்றையும் நேரடியாக எதிர்கொண்டபடி கடற் புலித் தளபதி சூசையோடு தளபதியர்கள் பானு, விடுதலை, புலவர், சிறீராம் அணிகள் இறுதிவரை போராடிமடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.
தேசியத்தலைவருடன் தளபதியர்கள் பொட்டம்மான், ஜெயம், குமரன் மற்றும் ரட்ணம்மாஸ்டரின் கரும்புலி அணி கள் களத்தில் ஆவேசம் எடுத்து ஆடின. மே 15 அன்றுஊடறுத்துத் தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணை தனது உடலைவெடிகுண்டு வைத்துத் தகர்க் கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண்முன்னாலேயே ""கடைசிவரை போராடுங்கோ. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்''என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு சய னைட் குப்பிகளையும் கடித்துகண்கள் சொருக வீரமரணம் தழுவினார். சொர்ணம் அண்ணை கேட்டுக்கொண்டபடி, அவரின்திருவுடல் எதிரியின் கையில் கிடைத்து விடக்கூடா தென்ற அவரின் விருப்பத்தைநிறைவேற்ற அவரது உடலை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு சூசை அண்ணையிடம்சென்றபோது ஐ.நா.பொதுச் செயலரின் தனிச்செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசியற்பிரிவு பொறுப்பாளர் நடேசண்ணையையும், புலித்தேவனையும் அறி வுறுத்தியதின்படி இருவரையும் முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். வெள்ளைக் கொடியேந்திப் போனவர்களின்தொடர்பு வட்டுவாகல் சென்றபின் அறுந்தது.
நடேசன்,புலித்தேவன் அண்ணையர்களுக்குக் கிடைத்த துரோக மரணம் உலகம் நிச்சயம் எங்களைகாக்க வராது என்ற செய்தியை எமக்கு உறுதியாக்கியது. இந்நிலை யில் தலைவரைக்காப்பது ஒன்றே களத்தில் நின்ற எமது கடமையாகியது. களமுனையில் அவசரமாற்றங்கள் செய்யப் பட்டன. எமது ஆட்லறி பீரங்கிகள் யாவும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடற்புலி அணிகள் மட்டும்இடைமறிப்புத் தாக்குதல்களில் உக்கிரம் காட்டி நின்றன.
எஞ்சிநின்ற நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளை காயங்களோடு தளபதி விடுதலை நெறிசெய்தார். மே-16 இரவு நந்திக் கடற்கரை வழி முன்னேறிய ராணுவத்தினருக் கும்தளபதி புலவர் அணியினருக்கும் இடையே அதிகாலை வரை சமர் தொடர்ந்தது. ராணுவத்தின் 53-வது டிவிஷனது முழுப்பலத்துடனான முன்னெடுப்பை புலவரின் சிறு அணிமுறியடித்து பலநூறு ராணுவத்தினரை கொன்றழித்தது.
அதேநேரத்தில்இரட்டை வாய்க்கால் பகுதியிலிருந்து முன்னேறி வந்த 58-வது டிவிஷன்ராணுவத்தினருக்கு தளபதி விடுதலை யின் அணி மரண அடி கொடுத்தது. ஆத்திரம்கொண்ட சிங்கள ராணுவம் தன் வெறிக்கூத்தை அப்பாவி மக்கள் மீதுதிருப்பியபோதுதான் அலறியடித்த மக்கள் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்படுத்துப் படுத்து நகர்ந்தனர். சூசை அண்ணைக்குத் தொடர்பெடுத்து இதனைக்கூறினேன். தொடர்ந்து தலைவரின் நிலை என்ன என்று கேட்டபோது ""அதைப்பற்றிகவலைப்படாதீர்கள்'' என்றார்.
மக்கள்இப்போது முழுமையாக வெளியேறத் தொடங்கியிருந்தனர். அதைப் பயன்படுத்திராணுவம் எமது நிலைகளை நோக்கி முன்னேறியது. எம்மால் எதிர்தாக்குதல் செய்யமுடியாத நிலை. எம்மை ராணுவம் கடந்து முன்னேறிவிட்டபோது சூசையண்ணைக்குமீண்டும் தொடர்பெடுத்து அதனைச் சொன் னேன். அதற்கு சூசையண்ணை, ""நான்ஜக்கத் அடிக்கப் போறேன், நீங்கள் கடைசிவரை சண்டையிடுங்கோ'' என்றார்."ஜக்கத்' என்றால் வெடிமருந்து அங்கி அணிந்து எம்மையே தற்கொடையாக்கும்மரபு. அத்தோடு சூசையண்ணையோடான தொடர்பு அறுந்தது.
சூசையண்ணைஇருந்த புளியமரத்தடி எமது நிலையிலிருந்து 300 மீட்டர் தூரம்தான். அவர்இருந்த மண் அணையாலான காப்பரணுக்குள்தான் வெடிபொருட்களும், ஆயுதங்களும்இருந்தன. அப்பக்கம் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. கருந்திரளான புகை வான்நோக்கி எழுந்தது. கடலில் சரித்திரம் படைத்த எங் கள் சூசையண்ணை கடற்புலிகள்பிறந்து வளர்ந்த அதே முல்லைத்தீவு கரையில் காவியமானார்.
நெஞ்சுகனத்த வேதனையோடு மீண்டும் களமிறங்கினோம். காயமுற்றுத் துடித்தபடிஉறவினரால் கைவிடப்பட்ட மக்களின் கதறல்கள், முனகல்கள், சிதறிய பிணங்களின்அகோரங்கள், முண்டங்கள், தலைகள், சிதறிய உடைமைகள், எரியும் வாகனங்கள்இவற்றினூடே தவண்டு தவண்டு எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவி னோம். மே 17மாலை 7 மணி அளவில் ஐவர் ஐவராகப் பிரிந்து களமாட முடிவு செய்தோம்.எமக்கிடையே எஞ்சியிருந்த எல்லா தொடர்பு களையும் துண்டித்தோம்.இறந்துகிடந்த ராணுவத்தினரின் சீருடைகளை அகற்றி நாங்கள் அணிந்தோம்.அவர்களின் நிலைகள், காவலரண் களில் நின்றபடி இரவு முழுவதும் சமராடினோம்.எனது ஐவர் அணி மட்டுமே அன்றிரவு 50-க்கும் மேலான ராணுவத்தினரை அழித்தது.
குடிக்கத்தண்ணீரில்லை. மூன்று நாளுக்கு முன் கிடைத்த ஒரேயொரு மாவு உருண்டையைசாப்பிட்டுவிட்டு இரத்தக்கறை படிந்த உடலும் உடையுமாய், இரண்டு மாதமாய்உறங்காத கண்கள், குண்டுக் கீறல்களில் வழியும் ரத்தம், வலி எதையும்பொருட்படுத்தாது மோதிக் கொண்டிருந்தோம்.
உண்டியலடிச்சந்தியைக் கடந்து பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த கவச வாகனத்திற்குஆர்.பி.ஜி. அடித்து எரித்தோம். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டைஎழவே உள்ளுக்குள் புகுந்து 53-வது டிவிஷ னுக்கும் 58-வது டிவிஷ னுக்கும்இடையே சண்டையை மூட்டிவிட்டோம். நூற்றுக்கணக்கான ராணு வத்தினர்ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொண்டி ருந்தபோது நாங்கள் நந்திக்கடல்பக்கமாய் நகர்ந்தோம்.
எமதுஐவர் அணியில் இருவர் வீரமரணம் அடைய எஞ்சியிருந்த மூவரும் இரட்டைவாய்க்கால்பகுதிக்கு நகர்ந்து அங்கும் இரு ராணுவ அணிகளுக்கிடையே சண்டையை மூட்டினோம்.எமது அணி மட்டுமே அங்கு 200-க்கும் மேலான ராணுவத்தினரை சுட்டுக்கொன்றது.
மே18 நண்பகல் 12 மணியளவில் அதே ராணுவச் சீருடையுடன் ஒற்றைப்பனையடி நோக்கிநகர்ந்தோம். ராணுவ கவச வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர் திசையில்ஆர்.பி.ஜி. உந்துணையோடு வேறொரு ராணுவ அணி வந்தது. நாங்கள் கவச வாகன அணிநோக்கி தாக்குதல் தொடுக்க அவர்களோ எதிர்திசை ஆர்.பி.ஜி. அணியோடு சண்டைதொடங்கினார்கள். நாங்கள் மீண்டும் நந்திக்கடல் பக்கமாய் முல்லை வீதியைகடக்க முற்பட்டோம். அங்கே காவலரணில் நின்ற மூன்று ராணுவத்தினர்சிங்களத்தில் எங்களைக் கூப்பிட சிக்கல் வெருமென்பதால் மூவரையும் சுட்டோம்.அங்கு சண்டை வெடித்தது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் நுழைய முயன்றபோதுஎங்கிருந்தோ வந்த ஆர்.பி.ஜி. எறிகணை என் காலை பதம் பார்த்தது.தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தேன். எழ முயன்றேன்.முடியவில்லை. கண்கள் சுழன்றன. சாவதாய் நினைத்தேன். கண்கள் மூடின. ஆனால்மீண்டும் கண்விழித்தபோது நம்ப முடியவில் லை. உயிருடன் இருந்தேன். முள்ளிவாய்க்காலில் அல்ல. ஸ்ரீலங்காவின் இராணுவ மருத்துவமனையில். அங்கிருந்து எப்படித் தப்பினேன் என்பது இன்னொரு நெடிய கதை. உயிரோடிருந்தால் மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.
ஆனால்ஒன்று : சுமார் 38000 மாவீரர்களின் தியாகங்களோடு நான்காம் ஈழப்போர்முற்றுப் பெற்றிருந்தாலும் அவர்களின் குருதிச் சுவடுகளில் பாதம் பதித்தபடிஐந்தாம் ஈழப்போர் தொடங்கும் -என்றேனும் ஒருநாள் தமிழீழம் வெல்லும்.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18786
பிரபாகரனை காட்டிக்கொடுக்க மாட்டேன்: சீமான் உணர்ச்சி
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான். 16.10.09 அன்று திருவண்ணமலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
மாசிலாமணி திருமனமண்டபத்தில் மாலை 6.15 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் சீமான் 1 1/2 மணி நேரம் எழுச்சி உரை ஆற்றினார்.
எழுச்சி உரைக்கு பின் உணர்வாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். அப்போது பிரபாகரன் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு சீமான், ''பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தமிழ் இன உணர்வாளர்கள் இதை நம்புகிறோம். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று மட்டும் கேட்காதீர்கள். நான் சொல்லமாட்டேன்.
அப்படி சொல்லி பிரபாகரனை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை''என்று உணர்ச்சிபூர்வமாக பதில் அளித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18723
இலங்கைக்கு சென்ற எம்பிக்கள் குழு ஏன் மீடியாக்களை அழைத்துச் செல்லவில்லை: தா.பாண்டியன்
இலங்கைக்கு சென்ற தமிழக எம்பிக்கள் குழு ஏன் மீடியாக்களை அழைத்துச் செல்லவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் உண்மை நிலவரம் அறிய சென்ற டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் குழு, சுற்றுலா தலத்திற்கு சென்றதுபோல் சென்று வந்துள்ளது. பிரச்சனை நடந்து 100 நாட்கள் ஆகிய பின்னர் ஏன் செல்ல வேண்டும்.
உண்மையை அறிய வேண்டும் என்கிறவர்கள் கூடவே மீடியாக்களை அழைத்து சென்றிக்கவேண்டும். ஏன் அவர்களின் சொந்த சன் டிவி கலைஞர் டிவி தங்கபாலுவின் மெகா டிவி இவைகளை அழைத்துச் சென்றிருக்கலாமே.
மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனையில் அவர்களுடைய நிலைப்பாட்டினை மூடி மறைப்பதற்காகவே இந்த பயணத்தை அனுமதித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் இன்னல்களை தீர்க்க வலியுறுத்தி கன்னியாக்குமரி, நீலகிரி, சென்னை, திருச்சி ஆகிய தமிழகத்தின் 4 பகுதிகளில் இருந்து 27ஆம் தேதி ஊர்வலமாக புறப்பட்டு, 29ஆம் தேதி திருச்சியில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாப நான் (தா.பாண்டியன்) நல்லக்கண்ணு, பாமக நிறுவனர் ராமதாஸ், இலங்கை தமிழர் பாதுகாப்பு ஒருங்ணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கு அடுத்தக்கட்டமாக நவம்பர் 17ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் சார்பாக தமிழகம் முழுவதும் விலை வாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18868
அடி,உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்:சீமான்
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான். 16.10.09 அன்று திருவண்ணமலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
மாசிலாமணி திருமனமண்டபத்தில் மாலை 6.15 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் சீமான் 1 1/2 மணி நேரம் எழுச்சி உரை ஆற்றினார்.
''நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம். மே-17ல் இதற்கான மாநாடு நடைபெறும். அதன் பிறகு அடிக்கு அடி;உதைக்கு உதைதான்.
அடி,உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்''என்று அழைப்பு விடுத்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18722
இது பெரியார் கண்ட கனவு:சீமான் பேச்சு
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான். 16.10.09 அன்று திருவண்ணமலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
மாசிலாமணி திருமனமண்டபத்தில் மாலை 6.15 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் சீமான் 1 1/2 மணி நேரம் எழுச்சி உரை ஆற்றினார்.
''தமிழனின் இன உணர்வை அரசியல்வாதிகள் குறைத்துவிட்டார்கள். தமிழனை இன உணர்வுள்ள தமிழனாக வாழ வைப்பதற்குத்தான் நாம் தமிழர் இயக்கம் உருவாயிற்று.
உலகில் தமிழனுக்கு எங்கே பிரச்சனை என்றாலும் அங்கே நாம் தமிழர் இயக்கம் நிற்கும். தமிழனை தமிழந்தான் ஆளவேண்டும் என்பது பெரியார் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவோம்''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18721
விடுதலைப் புலிகளிலும் குறைபாடு உண்டு என்கிறார் ஜெகத் காஸ்பர்
"விபச்சாரம்", "நான்" "நீ" என்ற ஏக வசனங்களைக் கொண்டு தமிழீழ உணர்வாளர்களை வயது தராதரம் பார்க்காமல் வசைபாடியுள்ளார் திரு.ஜெகத் காஸ்பர் அவர்கள். ஆண்மை பற்றிப் பேசி, ஒருவரை ஆண்மை இல்லாதவர் என வசைபாடும் கீழ்த்தரமான நடத்தை கொண்டவர் காஸ்பர் அவர்கள். ஒரு அருட் தந்தை என்ற தனது ஸ்தானத்தில் இருந்து விலகி மிகவும் கீழ் தரமாக ஈழ உணர்வாளர்களை விமர்சித்திருக்கிறார். இப்படி இவர் விமர்சிக்க அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தது. தனது பிறந்த நாளுக்கு தேசிய தலைவர் வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதுவே தனக்கு கிடைத்த அங்கிகாரம் எனக்கூறுகிறார். இதற்கு மேல் யாரும் என்னுடன் பேச முடியாது என்கிறார் காஸ்பர். துரோகி கருணாவிற்கும் கூடத்தான் தேசிய தலைவர் ஒரு காலத்தில் பிறந்த நாழ் வாழ்த்து தெரிவித்தார், என்பதை காஸ்பர் மறந்துவிட்டாரா?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தவறுகள் இருப்பதை தாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் காஸ்பர். அப்படி ஒத்துக்கொள்ள இவர் யார்? விடுதலைப் புலிகளின் உறுப்பினரா? சுபவீர பாண்டியன் மற்றும் காஸ்பர் அடிகளார் முன் நிலையிலேயே, இந்தியாவால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு, ப.நடேசன் அவர்களும் புலித்தேவனும் வெள்ளைக்கொடியுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் நுழைந்தனர், இதில் இவர்கள் பங்கும் சிதம்பரத்தின் பங்கும் இருப்பதை யாரும் மறந்துவிடவில்லை. இருப்பினும் அப் பழியை அப்படியே விஜய் நம்பியார் மீது திருப்பிப் போட்டு அவரை ஒட்டுமொத்த குற்றவாளியாக்கி தான் தப்பிக்கப் பார்க்கிறார் காஸ்பர்.
வெள்ளைக் கொடிகளை காட்டியவாறு செல்லுங்கள் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் நாம் தருகிறோம் எனக் கூறிய இந்தியா, நயவஞ்சகமாக எமது தலைவர்களைக் கொல்லக் காரணமாகியது. அப்படியே அதை இலங்கை அரசு செய்திருந்தால் கூட அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அற்ற இந்தியாவிடம், இனியும் நாம் சென்று பிச்சை கேட்கவேண்டும் என்கிறார் காஸ்பர் அடிகளார். அதாவது இந்திரா காங்கிரசுடன் பேசினால் நல்லது நடக்கும் என்றால் பேசலாம் என்பது அவர் கொள்கை. அடிப்படையில் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்படும் சோனியாவிடம் நக்கிப் பிழைக்கலாம் என்கிறார் காஸ்ப்பர் அடிகளார்.
எல்லாம் போகட்டும், விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்பதற்காக ஐயா பழ நெடுமாறன் சிறையில் அடைக்கப்பட்டார், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோ பல வருடங்கள் போடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார், சீமான் உட்பட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர், ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் காஸ்பர் அவர்கள் ஏன் தமிழ் நாட்டில் இன்னும் கைதுசெய்யப்படவில்லை, குறைந்த பட்சம் கியூ பிரிவினரால் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது மிகுந்த சந்தேகத்திற்கு உரியது. மத்திய அரசில் இவருக்கு இருக்கும் தொடர்புகளும், இந்திய உளவுப் பிரிவின் நெருங்கிய தொடர்பும் இருப்பதன் காரணமாகவே இவர் இது நாள்வரை கைதுசெய்யப்படவில்லை.
குமுதம் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு, பதிலைக் கூறாமல் உலக பயங்கரவாதம் குறித்து பேசி சில கேள்விகளை திசை திருப்பி அதனை ஒரு விவாதமாக மாற்றி, நேர்காணலை திசை திருப்ப காஸ்பர் மேற்கொண்ட முயற்சிகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அத்துடன் 2002ம் ஆண்டு இந்தோ- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், அதனால் ஏவப்பட்ட செயற்கைக்கோள், அதில் உள்ள புற ஊதாக்கதிர் உள்வாங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதனை முன்னமே விடுதலைப் புலிகளுக்கு அறிவித்திருக்கலாமே, தற்போது அதைப் பற்றி பேசி என்ன பயன்.?
தமிழ் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களையும் வசைபாடி, தான் மட்டும் செய்வதே சரி எனக் கூறி தனது நேர்காணலை நிறைவுசெய்துள்ளார் காஸ்பர் அவர்கள். சிதம்பரம், தொடக்கம் சிதம்பரத்தின் மகனுடனும் தாம் தொடர்புகளைப் பேணிவருவதாகக் கூறும் காஸ்ப்பர், கவிஞர் க*****மொழி யுடனான தொடர்புகளைப் பற்றி கடைசிவரை வாய் திறக்கவில்லை.
புலம்பெயர் தமிழ் மக்கள், தற்போது ஈழ விடுதலைப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இளையோர் அமைப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த கால கசப்பான அனுபவங்களை இரை மீட்டி, தமிழர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ண முனையும் விசக் கிருமிகளை முதலில் களைந்தால் தான் எமது போராட்டம் வலுப்பெறும். தேசிய தலைவர் எனது நண்பர், விடுதலைப் புலிகளை நான் ஆதரிக்கிறேன் எனச் சிலர் கூறி கடைசியில் கவிழ்த்த விடையங்களை நாம் அறிவோம்.
தமிழர்கள் தற்போது பிரிந்து கிடப்பதாக முழத்திற்கு, முழம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் காஸ்பர் அவர்கள். தமிழராகிய நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் உணர்வாளர்களாக இருக்கிறோம் அப்படியே இனியும் இருப்போம் என அதிர்வு இணையம் நம்புகிறது. அதுவே உண்மை. இதில் காஸ்பர் போன்ற புல்லுருவிகள் அகற்றப்படவேன்டும். சுதந்திர ஈழம் மலரவேண்டும். தமிழர்களின் போராட்டமே விடுதலையை வென்றெடுக்குமேயன்றி, நாம் நக்கிப் பிழைக்கத் தேவையில்லை. காங்கிரசிடம் மண்டியிடவோ அல்லது இந்திய அரசிடம் பிச்சையாக நாம் தமிழீழத்தைப் பெறவேண்டியது இல்லை.
அதனை தமிழீழ தேசிய தலைவரும் விரும்பமாட்டார். போராடாமல் ஒரு இனம் வெற்றிபெற்றதாகச் சரித்திரமில்லை என்றான் எமது தங்கத் தலைவன்! எனவே அவர் வழியில் நாம்செல்வோம். அது ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் அல்லது அரசியல் போராட்டமாக இருக்கலாம்.
http://athirvu.com/target_news.php?subaction=showfull&id=1255972889&archive=&start_from=&ucat=17&
அதன்டா! இதான்டா!!
காங்கிரஸும், திமுகவும் ராஜபக்சேவுக்கு நண்பர்கள் என்று தானே அர்த்தம்?
-டாக்டர் ராமதாஸ்
www.theekkathir.in
(19.10.09)
சர்வாதிகாரி முசோலினிக்கு மனித இரத்தம் குடிப்பது என்றால் ரொம்ப பிடிக்குமாம்!
.
நாடுகடந்த தமிழ் ஈழத்துக்கு 5 நாடுகள் அனுமதி : இலங்கை அதிர்ச்சி
கொழும்பு, அக். 20-
இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த 4-வது ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை அகதிகளாக முகாம்களுக்குள் சிங்கள அரசு அடைத்து வைத்துள்ளது.
விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்ட போதிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் “ஈழம்” கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனி ஈழம் நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.
நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் 59 தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் ஈழத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.
http://maalaimalar.com/2009/10/20144900/CNI04702001009.html