![hungry hungry](http://www.meenagam.org/wp-content/uploads/2009/09/hungry.jpg)
ஈழத் தமிழ்க் குழந்தைகளின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் குறும்படம்.
http://www.youtube.com/watch?v=pDvwxaF5Bfc
நன்றி
http://www.meenagam.org/?p=10260
தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
![]() | ஏதோ ஒரு பாட்டு mp3 | ![]() |
![]() | ||
![]() | Found at bee mp3 search engine | ![]() |
கும்பிட்ட கைகளும்
கக்கத்தில் காலணியுமாய்
கொட்டாங்குச்சியில் கூழை
குடித்த இருளப்பனின்
மறுதலைமுறை வாரிசு,
இணையத்தில் இன்ஜினியர்
இல்லத்தரசிக்கு வலைவீசியபடி
கேட்டானே ஒரு கேள்வி
"என்னத்த பெருசா
புடுங்கீட்டார் இந்த
பெரியார்?..,"
ராகுலுக்கு எதிர்ப்பு: சேலத்தில் ஆர்ப்பாட்டம் செய்த 100பேர் கைது! |
சேலம்: ராகுல் தமிழக வருகையை கண்டித்து சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்குரைஞர்கள், பெரியார் தி.க.வினர், தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இன்று சென்னையில் 3 வது நாள் பயணத்தை தொடங்கிய ராகுல் கிருஷ்ணகிரியில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு சேலம் சென்றார். இந்நிலையில் சேலத்தில் ராகுல்காந்தியின் தமிழக வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்குரைஞர்கள், மற்றும் பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் சட்டக்கல்லூரி முன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதைகண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முழக்கமிட்டனர். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராஜபக்செவுக்கு ஆதரவு அளிக்கும் ராகுல் காந்தி தமிழ்நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று அவர்கள் வலியறுத்தினர். அவர்களை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போலீசார் கைது செய்தனர். |
வன்னி முகாம்களில் இருந்து 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த இறுதி கட்ட போரின்போது 3 லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். அவர்கள் வன்னி தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இம்முகாம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இம்மக்களை மீண்டும் அவர்கள் வசித்து வந்த அதே பகுதியில் குடியமர்த்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, இந்த வருட இறுதிக்குள் முகாமில் இருக்கும் 80 சதவீதம் மக்கள் மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என அதிபர் ராஜபக்சே ஐ.நா. சபையிடம் உறுதி அளித்து இருந்தார்.
எனினும் வாக்குறுதி அளித்து 100 நாட்கள் கடந்த விட்ட நிலையில் இதுவரை 29 ஆயிரத்து 280 பேர் மட்டுமே மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 ஆயிரத்து 984 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16329
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்