இளையோர் போராட்டங்களும்..இழிபிறப்புக்களும்...--சாத்திரி
தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று எமது இளையோர் போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றது.. எம்மக்கள் மீதான இன அழிப்பினைக்கண்டு கொதித்தெழுந்த இளையோர்களின் போராட்டமானது உண்ணாவிரதம் .ஊர்வலங்கள் .ஆர்ப்பாட்டங்கள்.
என்றும்.தனியாக இனஅழி்பிற்கெதிரன போராட்டமாக மட்டுமல்லாது ஜரோப்பா .கனடா .அமெரிக்கா
என்று சீரற்ற காலநிலைகளையும் எதிர்த்து மழையிலும் கொட்டும் பனியிலும் இரவு பகலாக தொர்ந்து போராடிவருகிறார்கள்..முதலில் அவர்களிற்காய் தலைநிமிர்ந்து மனப்பூர்வமாய் ஒரு மரியாதை வணக்கத்தினை செலுத்தி விட்டு தொடர்கிறேன்...
சிறிது காலங்களிற்கு முன்னர்.. கழண்டு விழும்கழுசாண்..காதிலே கடுக்கன்..கலர்அடித்த தலை. கழுத்தில் கம்பி வழையங்கள்....காதிலே எந்தநேரமும் கைத்தொலைபேசியோ அல்லது ஜ போனோ கிணு கிணுக்க கையை காலை ஆட்டியபடி திரிந்த இவர்களைப்பார்த்து...நாங்கள் சொன்னதெல்லாம்..உருப்படாததுகள்..இதுகள் தமிழையோ கலாச்சாரத்தையோ காப்பாத்தாதுகள்..இனி எல்லாஞ்சரி அழிஞ்சுபோச்சுது.. அங்காலை சிங்களவன் அழிக்கிறான் இஞ்சை இதுகள் அழிக்கிதுகள்..என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ..எமது இனத்தின் இருப்பின் இறுதிப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க புலம்பெயர் தேசமெங்கும் புயலெனப்புகுந்த இளையவர்களைப்பார்த்து புறணிபாடியவர்களெல்லாம் வாயடைத்து நாக்கைப்புடுங்கலாமா?? மூக்கைப்புடுங்கலாமா என்று முழிபிதுங்கிநிற்க..
உலகின் அனைத்து இன மக்களிற்கும் அதன் அரசுகளிற்கு எங்கள் போராட்டத்தின் தேவையும் நோக்கமும் பிரச்சனைகளும் அவர்களிற்கேயுரிய மொழிகளிலும்..வழிகளிலும் போய்ச்சேர்ந்ததுமட்டுமல்ல..இதுவரை காலமும் எங்கள் போராட்டங்களின் நியாயங்களையும் எங்கள் அவலங்களையும் எவ்வளதூரம் மூடிமறைத்து ஆணியடித்து வைத்திருந்த முடியுமோ அவ்வளவிற்கு மூடிமறைத்து வைத்திருந்த சர்வதேச ஊடகங்களும் தங்கள் பின்பக்க தூசிகளை தட்டியவாறே மெல்ல எழுந்து முன்பக்க செய்திகளில் போடத்தொடங்கினார்கள்..
இந்த உலகின் ஒரு முலையில் சிறிலங்கா என்கிற குட்டித்தீவில் ஈழம் என்கிற இன்னொரு குறுகிய சேத்தில் வாழும் இனத்தின்மீது இதுவரைகாலமும் நடாத்தப்பட்டுவந்த அழிப்புக்களும் அனியாயங்களும் ஒரு குறுகிய காலத்திலேயே உலகெங்கும் ஒலிக்கவைத்துக்கொண்டிருக்கும் எமது இளையொர் சந்திக்கும் சவால்களும் இடையூறுகளும் கொஞ்சநஞ்சமல்ல..
சீரற்ற காலநிலைகள் கூட இவர்களைச்சீண்டிவிடாது.. ஆனால் இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் சிறீலங்கா அரசின் நேரடியான அழுத்தங்கள்.. இரண்டகக்குழுக்களின் சதிகள் பொய்யான பரப்புரைகள் .. இவை எல்லாவற்றிற்கும் மேலாக.. ஆனால் முக்கியமானதும் பாரியதுமான பிரச்சனை என்னவெனில் ..இதுவரை காலமும் போராட்டங்களை நடத்தியவர்களும் புலம்பெயர் தேசங்களின் தமிழ்த்தேசியத்தின் ஒட்டுமொத்த காவலர்கள் தாங்களே என்று கூறித்திரியும் ஒரு கும்பல்தான் இலங்கையரைவிட மிக மோசமான செயல்களையும் அழுத்தங்களையும் அவப்பெயர்களையும் இந்த இளையோர்மீது திணித்து வருகின்றனர்.அவர்கள் இளையோர் மீது முக்கியமாக வைக்கும் குற்றச்சாட்டு என்னவெனில் போராட்டங்களில் சட்டத்தை மீறுகிறார்கள்.. வன்முறை செய்கிறார்கள் என்பதே.....
போராட்டம் என்றாலே வன்முறைகலந்ததும் சட்டத்தை மீறுவதும்தான் போராட்டம்.. சட்டத்தை மீறாமலும் வன்முறையற்றும் போராட்டம் நடாத்தவேண்டுமென்றால் இன்று எங்கோ எஞ்சியிருக்கும் ஒரு சில தமிழர்கள் இன்னமும் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்துகொண்டிந்திருப்பார்கள்...நாங்களும் எண்பதுகளிலிருந்து புலம்பெயர் தேசமெங்கும் சட்டத்திற்குட்பட்டும் வன்முறையற்றும் போராட்டங்களை நடாத்தியிருக்கிறோம்.. காவல்த்துறையிடம் சட்டப்படி அனுமதியெடுத்து .. அவர்கள் காட்டிய கட்டத்திற்குள் நின்றபடி ..சுட்டுக்கொண்டுவந்த வடை சூடாறிப்போகமுதல்..சம்பலுடன் தொட்டுத்தின்றபடி..மொட்டைத்தலை முருகேசன்ரை பெடியும் கட்டைத்தங்கம்மாவின்ரை கடைசிப்பெட்டையும் காதலிச்சு ஓட்டினமாம்..என்றும்.. சிற்றிசன் எடுத்தாச்சோ.. இன்னமும் வாடைகை வீடுதானே..வாங்கியாச்சோ???இப்ப என்னகார் வைச்சிருக்கிறாய்...என்றும் இன்னபிற பல கதைகள் பேசி......
என்ன கூட்டம் என்று பக்கத்தில் வந்து தட்டிக்கேட்ட வெள்ளைக்கு பதில் சொல்லத்தெரியாமல் வெக்கத்தில் நெளிந்து.... கடைசியாய் ஜ.நா..சபை கட்டிடக் காவலாளியிமும் உணவு விடுதி ஊளியரிடமும் எங்கள் கோரிக்கை மனுவைக்கொடுத்து படமும் எடுத்து விட்டு ...காவல்த்துறை குறித்துக்கொடுத்த முகூர்த்தநேரம் முடிந்ததும் கூடிய இடத்தில் கொட்டியிருந்த குப்பைகளையும் கூட்டியெடுத்து சட்டைப்பைக்குள் போட்டுகொண்டு வீட்டைபோய் குப்பைக்கூடைக்கள் போட்டுவிட்டு.. வெள்ளைக்காரனிற்கு எங்கள் பிரச்னைகளைச்சொல்லித்தெரியவைப்பதை விட வெள்ளைக்காரனிடம் எப்படி நல்லபெயர் எடுப்பது என்று மட்டுமே சிந்தித்து செயலாற்றி யதும் எடுத்தபடங்களை அதை வன்னிக்கனுப்பி கால் இல்லாதஒருவரிற்கு வால் பிடித்தும்தான் நாங்கள் நடாத்திய போராட்டங்கள்
இன்று இளையோர் உணவு மறந்து உறக்கம் தொலைத்து இரவுபகலாய் எங்கள் தேசம் தமிழீழம்.. எங்கள் தலைவன் பிரபாகரன்..எங்கள் மீதான இனஅழிப்பினை நிறுத்து என்றுஉரத்துச்சொல்லி உலகத்தின் கவனத்தையே எங்கள் பக்கம் திருப்பி பழைய தமிழ்த்தேசிய பெருச்சாளிகளால் அரிக்கமுடியாததை முறித்துக்காட்டிய இளையோரின் போராட்டங்கள் வன்முறையாகத்தான் தெரியும்... குறிப்பாக சுவிஸ். கனடா..ஜெர்மனி.இங்கிலாந்து .ஆகிய நாடுகளில் வாழும் தேசியத்து பூசாரிகளே கவனியுங்கள்...புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் இன்னமும் நீங்கள் போடும் கோட்டினுள் நின்றுதான் கும்புடுபோடவேண்டும் என்கிற வறட்டு பிடிவாதத்தில் நின்றுகொண்டிருந்தால் வன்னியில் கடைசித் தமிழனின் மூச்சும் காற்றில் கரைந்துவிடும்..மாறிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள்..இளையோர் இங்கு குண்டுவைக்கவில்லை..கொள்ளையடிக்கவில்லை... கொலைசெய்யவில்லை.... தங்கள் பக்கம் மற்றையவர்கள் கவனத்தினை திருப்ப சிலமணிநேர சாலைமறியல்கள் செய்தனர்... சாலைமறியல் என்பது சர்வதேசக்குற்றம் அல்ல....நீங்கள் வாழும் நாடுகளிலேயே அரசிற்கெதிரான போராட்டங்களில் முதலில் குதிப்பது போக்குவரத்து நிறுவனங்கள்தான்..இயந்திர மயமாகிவிட்ட மேலைநாடுகளில் போக்குவரத்து நிறுத்தப்படு்ம்பொழுதுதான் பிரச்சனைகள் நேரடியாகவும் உடனடியாகவும் மக்களை சென்றடைகின்றது..அது அவர்களை சிந்திக்கவைக்கிறதே தவிர சினக்கவைப்பதில்லை...எனவே புலம்பெயர் தேசங்களில் தமிழத்தேசியத்தினை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கும் தேசியத்துப்பூசாரிகளே...போராட்டங்கள் இன்று உங்கள் கையைவிட்டு போகின்ற வயித்தெரிச்சலில் வன்முறை .. வன்முறை என்று கத்தாமல்..வாய்மூடி வழிவிடுங்கள்..