தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, July 9, 2009

♥ கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று அசைபோட்டும் தாய்ப் பசு-கவிக்கோ அப்துல் ரகுமான் ♥

கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதை.

http://4.bp.blogspot.com/_2YoKcDIZfxg/SZgC5QMc_nI/AAAAAAAAAEs/ONMo2EpI4oY/s320/kavi2.jpg

ஈழத்தின் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களில்,கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதை.

 

ஈழத்தின் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களில்,தமிழக உறவுகள் பலர் முனைப்புடன் உள்ள போதும்,அது குறித்த எண்ணமும, செயலும் இல்லாத பலரது நிலை கண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது.

இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றனநாம் "எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!

அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன நாம் பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன்விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாம்"கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?"என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் இருட்டுக்காடுகளுக்கு வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள் சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள் நாம்அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!

இதில் வியப்பேதும் இல்லை அவர்கள் கவரிமான்கள் நாம் கவரிகள் இதோதேவவேடம் போட்ட சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

இதோ இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள் நீரைக் கலக்கிய பழியை ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!

இதோ சித்தாந்த வித்துவான்கள் ஒப்பாரியில் ராகப் பிழை  கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்!

இதோ வெள்ளைக் கொடி வியாபாரிகள் விதவைகளின் புடவைகளை உருவிக் கொண்டிருக்கிறார்கள்!

அன்று அசோகன் அனுப்பிய போதிமரக் கன்று ஆயுதங்கள் பூக்கின்றது!இன்று அசோகச் சக்கரத்தின் குருட்டு ஓட்டத்தில்கன்றுகளின் இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது!

தாய்ப் பசுவோ கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்றுஅசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!-

கவிக்கோ அப்துல் ரகுமான்

www.tamilkathir.com


http://www.vaarppu.com/2005/i/kavikko6.JPG


♥ இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கை அவலம் ஏற்பட்டிருக்காது ♥

இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்  : பழ.நெடுமாறன்


http://www.orunews.com/wp-content/uploads/2009/05/pala-nedumaran.jpg

இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் ஏற்பட்டிருக்காது என தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்:

அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. இராணுவ உடன்பாட்டு நாடுகள் உருவாக்கப்பட்டது. 3ஆம் உலகப்போர் வரும் என்ற அச்சம் நிலவிய போது அணிசேரா நாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தினார் ஜவஹர்லால் நேரு. இதனால் 3ஆம் உலகப்போர் தடுக்கப்பட்டது.

ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கும் போது குரல் கொடுத்தது அப்போதைய இந்தியா. நேருவை தொடர்ந்து இந்திராகாந்தியும் அணிசேரா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்தார். வாஜ்பாயும் பின்பற்றினார். ஆனால் ராஜிவ்காந்தி காலத்தில் கொள்கை அடியோடு மாற்றப்பட்டது.

இலங்கையில் சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காலூன்றி விட்டன. இலங்கை அரசின் இராணுவ வெற்றிக்கு 20 நாடுகள் உதவி செய்ததே காரணம் என்று அந்த நாடு கூறியுள்ளது. இலங்கையில் சீனா ஆயுத கிடங்கை திறக்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதுஉறுதியாக சொல்கிறேன்....பத்திரமாக இருக்கிறார் பிரபாகரன்: நெடுமாறன் பேச்சு

http://www.tamilkathir.com/uploads/images/videos/Nedumaran.jpg

''இலங்கையில் போரை நிறுத்த கோரி தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தியது. போரை நிறுத்த கோரி தமிழகம் உள்பட பல்வேறு நாடுகளிலும் 18 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு பின்னரும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் கூட்டணியாக சேர்ந்து போரை நடத்தி சிங்கள அரசு வெற்றி பெற்று இருப்பது வெற்றி அல்ல. இது தற்காலிக வெற்றிதான்.

இப்போது இலங்கையில் சீனா ஆயுத கிடங்கும் அமைத்து வருவதோடு, பெட்ரோல், எண்ணை கிணறு அமைக்கும் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங்காலையோ, சோனியா காந்தியாலையோ தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்பதை உறுதியாகவும், திட்டவட்டமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறேன். இதற்கு முன்பு பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் 4 முறை வெற்றி பெற்றது. அதுபோல மீண்டும் வெற்றி பெற்று பிரபாகரன் தலைமையில் தமிழ்ஈழம் அமையும். இது உறுதி. விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல.

தீவிரவாத இயக்கம் என்றால் மக்களை குண்டுவீசி கொன்று இருக்க வேண்டும். ஆனால் விடுதலைப்புலி இயக்கம் அப்படி செய்யவில்லை. சிங்கள மக்கள் மீது குண்டு வீசினார்களா? இல்லையே விடுதலைக்காக தான் போராடி இருக்கிறார்கள். ஆனால் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்சே அரசுதான் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி கொன்றது. இதில் யார் தீவிரவாதி..'' என்று பழ.நெடுமாறன்  தெரிவித்துள்ளார்.

♥ "பிரபாகரனின் நெற்றி தொடங்கி பாதம் வரை எனக்கு அத்துப்படி...." வைகோ ♥

திரைச்சீலை... தையல் இயந்திரம்... தூங்கும் பிரபாகரன்.. ஜூனியர் விகடன் பேட்டி

விருதுநகர் முதல் வன்னிக் காடு வரை கசப்புகளைப் பரிசளித்த நிலையிலும்... சற்றும் தளர்ச்சி அடையாமல், மறுமலர்ச்சிக்காக சுறுசுறுப்போடு களமிறங்கி விட்டார், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் நடத்தி வருபவர், கூடவே ஈழ விவாகரம் பற்றி 'குற்றம் சாட்டுகிறேன்...' என்கிற தலைப்பில் பரபரப்பு புத்தகத்தையும் எழுதிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சுற்றுப்பயணத்துக்காக திருநெல்வேலியிலிருந்து பட்டுக்கோட்டை விரைந்துகொண்டிருந்த வைகோவிடம் ஜூ.வி-க்காக நேரம் கேட்டோம். தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக நம்மிடம் மனம் திறந்தார் வைகோ.

''தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் உங்கள் இயக் கத்தினர் நம்பிக்கை இழந்து விடமாட்டார்களா?''
''எனக்கோ இயக்கத்துக்கோ துளி வருத்தம் கூட கிடையாது. வாரி இறைத்த


கோடிகளால், தப்பிப் பிழைத்திருக்கிறது தி.மு.க கூட்டணி. நாங்கள் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு... ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம். கிராமப்புறங்களில் 'மழை பதமாகப் பெய்தால் தான் உழவுக்கும் விதைப்புக்கும் சரியாக வரும்' என்பார்கள். அதிக மழை பெய்தால் விதைக்க முடியாது. உண்மையாகவே சொல்கிறேன்... நான் தோற்றதும் ஒரு வகையில் நல்லதற்குத்தான். இந்தத் தோல்வி, நடுநிலையான மக்களின் இரக்கத்தையும் அனுதாபத்தையும் எங்கள் பக்கம் திருப்பி இருக்கிறது. எங்களை நோக்கிய மக்களின் பார்வை, கருணையோடும் இரக்கத்தோடும் இருக்கிறது. மாறாக, 'பணத்தை இறைத்தால் வெற்றி பெற்று விடலாம்' என்கிற எண்ணம் தி.மு.க-வுக்குள் மதமதப்பாகத் தலைதூக்கி, அங்குள்ளவர்களின் கொள்கைப் பிடிப்பை மேலும் உறுதியிழக்கச் செய்திருக்கிறது. தேர்தலில் ஜெயித்திருந் தாலும், கொள்கை அளவில் தி.மு.க. குன்றிக்கொண்டே வருகிறது... இதுவே உண்மை. விரைவிலேயே இதை எல்லோரும் உணர்வார்கள்!''

''தேர்தல் தோல்விக்குப் பிறகு ஈழ வீழ்ச்சியும், 'பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்கள் மரணம்' என்று வந்த செய்திகளும் எந்தளவு பாதித்திருக்கிறது?''
''ஈழத்தில் கோரத் தாக்குதலை நடத்த சிங்கள அரசு திட்டமிட்டிருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் நடப்பதற்கு ஐந்து தினங்களுக்கு முன்பாக 11-5-09 அன்றே பேசினேன். அபாயம் நடக்கப் போகும் சேதியறிந்து, நான் ஓட்டுகூட கேட்கவில்லை. ஆனாலும், எல்லோர் கண் பார்க்கவே சிங்கள ராணுவம் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை நடத்தி முடித்து விட்டது. சிங்களப் பேய்கள் கோர நாக்கைச் சுழற்றிக் கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கடந்த மே 16-ம் தேதி... விருதுநகரில் நான் தோற்றுப்போன செய்தியும் எங்கள் கூட்டணி பெரும்பான்மை பெறாத செய்தியும் என் செவிகளை எட்டியது. அன்று மாலை 5.30 மணிக்கு 'கொஞ்ச நேரம் கண்களை மூடினால் தேவலாம்' போலிருந்தது. கட்டிலில் படுத்த சில நிமிடங்களிலேயே கண்ணயர்ந்து விட்டேன். அப்போது ஒரு கனவு... 'தலைவர் பிரபாகரனை பார்க்க வாருங்கள்' என என்னை யாரோ அழைக்கிறார்கள். ஒரு பெரிய மண்டபத்தில் பலர் கூடி இருக்கிறார்கள். அவர்கள் யாரென எனக்குத் தெரியவில்லை.

அங்குள்ள ஒரு அரங்கத்தின் மூலையில் திரைச்சீலைகள் தொங்குகின்றன. அதனருகே என்னை அழைத்துப் போகிறார்கள். அருகே ஒருவர் தையல் மிஷினில் துணி தைக்கும் சத்தம் கேட்கிறது. திரைச்சீலையை விலக்கி தலைவரைப் பார்க்கச் சொல்லி என்னை அனுப்புகிறார்கள். நான் தலைவரோடு பேசும் ஆவலோடு உள்ளே போகிறேன். அங்கே ஐந்தடி தூரத்தில் ஒரு மரக்கட்டிலில் தலைவர் பிரபாகரன் சீருடையில் படுத்துக் கொண்டிருக்கிறார். இடது கால் தரையை தொட்டவாறு இருப்பதைக் கூட கனவில் என்னால் உணர முடிகிறது. இருபது வருடங்களுக்கு முன் அவரை நேரில் நான் எப்படிப் பார்த்தேனோ, அதே தோற்றத்தில் இருக்கிறார் தலைவர். அங்கு வேறு யாருமே இல்லை. அவரை எழுப்புவதா வேண்டாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நம்மை வரச் சொல்லிவிட்டு, இப்படி தூங்க மாட்டாரே என்கிற யோசனையும் என்னுள் ஓடுகிறது... அவர் நிம்மதியாகத் தூங்கட்டும் என நினைத்தபடி அவர் முகம் பார்த்தபடியே நான் நிற்கிறேன். அடுத்த கணமே எனக்கு விழிப்பு வந்து விட்டது.

பதற்றம் கவ்வ எழுந்துவிட்டேன். எப்போ தும் என் இதயத்தில் சுமந்திருந்தாலும், கடந்த இருபது வருடங்களில் ஒரு தடவைகூட நான் தலைவர் பிரபாகரனை கனவில் கண்டதில்லை..! இதுவே முதல்முறை. இப்படியரு கனவு இப்போது ஏன் வந்தது என்று எனக்கு விளங்கவில்லை..!
என் மனம் சொல்ல முடியாத அளவுக்குக் குழப்பத்தில் ஆழ்ந்தது. அடுத்த இரு தினங்களில்தான் ஈழ சாம்ராஜ்யம் சரிக்கப்பட்ட அடுத்தடுத்த செய்திகள் என் ஈரக் குலையை அறுத்து வீசின. புலிகளையும் தமிழ் ஈழக் கோரிக்கையையும் ஒருசேர அழிக்க இந்தியா போட்ட திட்டம் ஈடேறி விட்டது. என் தவிப்பும், கொதிப்பும்குறை யாத நாளில்தான் பிரபாகரனின் சடல மாக ஒரு போலி உரு வத்தை சிங்கள ராணுவம் காட்டியது அதைப் பார்த்த பிறகுதான் பிரபா கரன் கொல்லப்படவில்லை என்பது எனக்குப் புரிந்தது.''

''பிரபாகரன் இறந்து விட்டதாக புலிகளே சொல்லி இருப்பது பற்றி...''
''தலைவர் உயிரோடு இருக்கிறார் என உறுதியாக சொன்ன செல்வராசு பத்மநாபன், இப்போது 'இல்லை' எனச் சொல்கிறார். இந்த விவகாரத்தில் நான் யாரையும் குற்றம்சாட்டும் நிலையில் இல்லை. ஆனாலும், எனக்கு வந்த உறுதியான உண்மைத் தகவல்களை வைத்து, 'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' என்பதை இப்போதும் அடித்துச் சொல்கிறேன். அவர் மிக பத்திரமான இடத்தில் இருக்கிறார் என்பதுதான் என் நம்பிக்கை. உரிய நேரத்தில் ஈழப் போரை மறுபடியும் அவர் முன்னெடுத்து முன்னேறுவார். பாதுகாப்பு காரணங்கள் கருதி அவரைப் பற்றி நானறிந்த விவரங்களை இப்போதைக்கு சொல்ல முடியவில்லை!''

''சிங்கள அரசு காட்டியது பிரபாகரனை போன்ற போலி உடல் என்று எப்படி இத்தனை உறுதியாகச் சொல் கிறீர்கள்?...''

''பிரபாகரனின் பெற்றோர் இப்போது ராணுவ முகாமில்தானே இருக்கிறார்கள்... அவர்களுடைய மரபணு மாதிரியை எடுத்து பிரபாகரனின் உடலாக வெளிப்படுத்திய அந்த உடலின் மரபணு வோடு ஒப்பிட்டுக் காட்ட வேண்டியதுதானே... ஏன் செய்யவில்லை? 'எங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரபாகரனை கொன்று விட்டோம்' என உரிய ஆதாரங்களை காட்டி, உலகத்தின் முன்னால் நிரூபிக்க வேண்டியதுதானே... சிங்கள அரசின் இடத்தில் இருந்தால் அதுதானே யாரும் செய்யக்கூடியது!
பிரபாகரனின் நெற்றி தொடங்கி பாதம் வரை எனக்கு அத்துப்படியாகத் தெரியும். புலிகள் தரப்பிலிருந்து எனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களும் என் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன. ஈழப் போராட்டம் மறுபடியும் முன்னெடுக்கப்படும் நாளில் அனைத்து மர்மங்களும் விலகும்...''

''பிரபாகரன் உயிரோடிருப்பதாக வீணான நம்பிக்கையை பரப்பி, நீங்கள் அரசியல் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் விமர்சனங்கள் குறித்து?''
''ஒரு நாக்கு எந்த அளவுக்கு புகழும் என்பதும், எந்தளவுக்கு மனதைப் புண்ணாக்கும் என்பதும் இத்தனை வருட பொது வாழ்வில் நான் அறியாததா? இதைவிட கொடூரமான, குரூரமான விமர்சனங்களைக் கடந்து வந்தவன் நான். என் தம்பி ரவி, ஒரு வருட காலம் விலங்கோடு சிறைக் கொடுமை அனுபவித்தார். காயம்பட்ட நாற்பது போராளிகளை மருந்தூட்டி, உணவூட்டி என் தாய் காப்பாற்றினார். ஈழ விடுதலையில் நாங்கள் கொண்டிருக்கும் தூய்மை மிக்க உறுதியை, யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. பரபரப்புக்காகவோ ஆதாயத்துக்காகவோ வெற்று நம்பிக்கையை நாங்கள் பரப்ப வேண்டிய அவசியமில்லை..!''

''திராவிட நாடு கோரிக்கையைப் போலவே தனி ஈழக் கோரிக்கையையும் தவிர்த்து விட்டு, சிங்கள அரசுடன் அனுசரித்து நடந்து கொள்வதே நல்லது என முதல்வர் கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?''

''திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன எனச் சொன்னார் அண்ணா. அது மட்டுமல்ல... திராவிட நாடு கோரிக்கையையும் ஈழக் கோரிக்கையையும் ஒப்பிடுவதே தவறு. இங்கே நமக்கு சம உரிமை இருக்கிறது. ஆனால், ஈழத்தில் குறைந்தபட்ச அடிப்படை சுதந்திரங்கள்கூட அப்பாவி தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழர்களின் கலாசாரம், வழிபாடு, இலக்கியம் என அனைத்து அடையாளங்களுமே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் நடந்தேறிய அத்தனை கொடூரங்களையும் கொட்டக்கொட்ட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர், இப்போது சிங்களர்களோடு தமிழர்களை அனுசரித்து வாழச் சொல்கிறார். ஆயிரம் ஆயிரமாக உயிர்களைக் கொடுத்து, மலை மலையாக சடலமாகி... ஈழத்து மண்ணில் கலந்து கிடக்கும் ஆத்மாக்கள்கூட கலைஞரின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிப் போயிருக்கும். என் தமிழினத்தை அழித்தவனை கூண்டிலேற்றச் சொல்ல வேண்டிய கடமைமிக்க முதல்வர் பதவியில் உள்ள ஒருவரே, சிங்களவனிடம் மண்டியிடச் சொல்லும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது..?

'தமிழர் பூர்வீகத் தாயகத்தை ஒருபோதும் அமைய விடமாட்டேன்' என ராஜபக்ஷே இப்போதும் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய குரூர வெறியை உலகுக்குஅம்பலமாக்கி, அவரைக் கூண்டிலேற்றி, 'இவர்தான் ஹிட்லரைவிடகொடூரமான இனவெறியர்' என்ற உண்மையை அடையாளப்படுத்தவேண்டிய கடமை, தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் கலைஞரின் வார்த்தைகள், 'சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. 'நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்' என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞரால் உருவாக்கப்பட்டு விட்டது. தமிழ் வரலாற்றில் மன்னிக்க முடியாத மற்றுமொரு துரோகத்தை கலைஞர் கருணாநிதி செய்து விட்டார்.
கலைஞரின் மதுரமான எழுத்துகளும் மயக்க வைக்கும் பேச்சும் தமிழினத்தை அழிக்கவே முழுதாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் பதவி என்ற கத்தியை கொலை செய்யப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

நான் ஒருபோதும் கலைஞரின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் தவறாகச் சொன்னதில்லை. ஆனால், இதயத்து நரம்பு தெறிக்க தாங்க முடியாத வலியோடு இப்போது சொல்கிறேன்... நாளைய தமிழ் சமுதாயம் தமிழினத்துக்கு துரோகம் செய்தவராகவே கலைஞரை வரிசைப்படுத்தி வைத்திருக்கும்!''

- கறுப்புத்துண்டை முறுக்கி விட்டபடி தொண்டர் களோடு கலக்கிறார் வைகோ.

நன்றி: ஜூனியர் விகடன்

http://athirvu.com/target_news.php?subaction=showfull&id=1247078084&archive=&start_from=&ucat=2

♥ " சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவதுதா?"...வைகோ ♥

'சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார் கலைஞர்: வைகோ குற்றச்சாட்டு

http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_18141901494.jpghttp://oviyam.files.wordpress.com/2008/11/vaiko.jpg

'

சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. 'நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்' என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டு விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:

"திராவிட நாடு கோரிக்கையைப் போலவே தனி ஈழக் கோரிக்கையையும் தவிர்த்து விட்டு, சிங்கள அரசுடன் அனுசரித்து நடந்து கொள்வதே நல்லது என முதல்வர் கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?"

"திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன எனச் சொன்னார் அண்ணா. அது மட்டுமல்ல… திராவிட நாடு கோரிக்கையையும் ஈழக் கோரிக்கையையும் ஒப்பிடுவதே தவறு. இங்கே நமக்கு சம உரிமை இருக்கிறது. ஆனால், ஈழத்தில் குறைந்தபட்ச அடிப்படை சுதந்திரங்கள்கூட அப்பாவி தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழர்களின் கலாசாரம், வழிபாடு, இலக்கியம் என அனைத்து அடையாளங்களுமே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் நடந்தேறிய அத்தனை கொடூரங்களையும் கொட்டக்கொட்ட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர், இப்போது சிங்களர்களோடு தமிழர்களை அனுசரித்து வாழச் சொல்கிறார். ஆயிரம் ஆயிரமாக உயிர்களைக் கொடுத்து, மலை மலையாக சடலமாகி… ஈழத்து மண்ணில் கலந்து கிடக்கும் ஆத்மாக்கள்கூட கலைஞரின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிப் போயிருக்கும். என் தமிழினத்தை அழித்தவனை கூண்டிலேற்றச் சொல்ல வேண்டிய கடமைமிக்க முதல்வர் பதவியில் உள்ள ஒருவரே, சிங்களவனிடம் மண்டியிடச் சொல்லும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது..?

'தமிழர் பூர்வீகத் தாயகத்தை ஒருபோதும் அமைய விடமாட்டேன்' என ராஜபக்ச இப்போதும் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய குரூர வெறியை உலகுக்கு அம்பலமாக்கி, அவரைக் கூண்டிலேற்றி, 'இவர்தான் ஹிட்லரைவிடகொடூரமான இனவெறியர்' என்ற உண்மையை அடையாளப்படுத்த வேண்டிய கடமை, தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் கலைஞரின் வார்த்தைகள், 'சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. 'நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்' என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞரால் உருவாக்கப்பட்டு விட்டது. தமிழ் வரலாற்றில் மன்னிக்க முடியாத மற்றுமொரு துரோகத்தை கலைஞர் கருணாநிதி செய்து விட்டார்.

கலைஞரின் மதுரமான எழுத்துகளும் மயக்க வைக்கும் பேச்சும் தமிழினத்தை அழிக்கவே முழுதாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் பதவி என்ற கத்தியை கொலை செய்யப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர். நான் ஒருபோதும் கலைஞரின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் தவறாகச் சொன்னதில்லை. ஆனால், இதயத்து நரம்பு தெறிக்க தாங்க முடியாத வலியோடு இப்போது சொல்கிறேன்… நாளைய தமிழ் சமுதாயம் தமிழினத்துக்கு துரோகம் செய்தவராகவே கலைஞரை வரிசைப்படுத்தி வைத்திருக்கும்!"

http://www.meenagam.org/?p=5313


http://www.pathivu.com/uploads/images/EpaperImages_2012009_20012009-cni-mn-01_img7-large.jpg

♥ மாவீரன் பால்ராஜின் "என்ட ராசா... சண்டையென்டா இதுதான் சண்டை...'' ஹாலிவுட் யுத்த படங்களுக்கு இணையான விடுதலைப் போர் ♥  http://www.altergroup.com/blog/wp-content/uploads/2009/06/hollywood-sign-address1.jpg


http://www.blogcdn.com/www.cinematical.com/media/2006/05/blessedbyfire1.jpg


http://littledailyprophet.files.wordpress.com/2007/03/wallpaper_0711.JPG"மாவீரன் பால்ராஜ் நடத்திய "வதிரையன் பாக்ஸ்' சண்டையை "ஹாலிவுட்' திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று."


 

 
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, ""என்னையும் விஞ்சிய போராளி'' என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந் தான். அவன் யாரெனத் தெரியுமா உங்க ளுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!''.

உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் ""யாழ்தேவி'' எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே புறமுதுகிட்டு ஓடச் செய்தவன். அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள் அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு ராணுவத்தினர் யாழ்தேவி சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.

எத்தனையோ ராணுவ வரலாறுகளை படித்திருக் கிறேன். எண்ணிலா தளபதியர்களின் போர்க்கள சாகசங் களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும் எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத் தின் கொக்குத் தொடுவாய் கிராமம் தந்த இத்தளபதிதான்.

இரவு பகலென களப்பணியில் நின்ற அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ் மருத்துவர்கள் வந்திருந்து பெருமை யுடன் அவனை சிங்கப்பூரில் பராமரித்தார்கள். சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம் வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற் குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம் சிங்களத் தளபதியர்கள் முழு ராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்களோ... என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ் தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கில மும் கலந்து உடைக்கிறார். ""பயப்படாதீர்கள் பால்ராஜ்... "வதிரையன் பாக்ஸ்' சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போ தேனும் பார்க்கிற பாக்கியம் கிட்ட வேண்டு மென்று ஆசித்த ராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள் ராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?'' என்று அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உண்மையான ராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

என்றேனும் ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன் பால்ராஜ் நடத்திய "வதிரையன் பாக்ஸ்' சண்டையை "ஹாலிவுட்' திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத் தமிழ்ச் சாதியில் பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாக வோ, யூதனாகவோ பிறந்திருந்தால் இன்று அவன் உலகம் போற்றும் போர்க் கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.
அதென்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிகு "வதிரையன் பாக்ஸ்' சண்டை? சுருக்கமாக முதலில் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பின்னர் விரிவாக விளக்குகிறேன்: கடல், சிங்கள கடற்படையின் கட்டுப்பாட்டில், வடக்குப்புறம் பலாலி ராணுவ தளமும் அத்தளத்தையொட்டி யாழ்குடாவில் நிற்கும் 20,000 ராணுவத்தினர், வடமேற் கில் பளை ராணுவ முகாமும் அங்கிருக் கும் சுமார் 7,000 ராணுவத்தினரும், தெற்குப்புறமாய் 14,000 ராணுவத்தின ருடன் அசைக்க முடியா ஆனையிறவு முகாம், இவ்வாறாக கடற்படை, வான் படை, எறிகணைப் படை, பீரங்கிப் படை, தங்குதடையற்ற விநியோகம் இவற்றோடு சுமார் 40,000 ராணுவத் தினர் சூழ்ந்து நின்ற களத்தை வெறும் 1,500 போராளிகளுடன், சிறு ரக ஆயு தங்களோடு, விநியோக வசதியோ மீட்கப்படும் வாய்ப்போ ஏதுமின்றி, கடல்வழி ஊடறுத்து உள் நுழைகிறார் பால்ராஜ்.

வெட்ட வெளி மணற்பரப்பு, மறைந்து நின்று தற்காத்து சண்டையிட மரங்களோ, புதர்களோ, பாறைகளோ, மணல் மேடுகளோ இல்லாத களம். அப்பரப்பில் "ப', "ட' வடிவில் எதிரியின் குண்டு மழைக்கு நடுவே பதுங்கு குழிகள் வெட்டி நிலையெடுத்து -இதைத்தான் ""பாக்ஸ் சண்டை'' என்கிறார்கள்... அப்படி "ப' "ட' வெட்டிக் கொண்டே மெல்ல நகர்ந்து ஆலி9 நெடுஞ்சாலையை புதுக்காடு சந்திப்பில் இடைமறிக்கிறார்கள். எவ்வித பின்புல விநியோக ஆதரவோ, மருத்துவ உதவிகளோ, தப்பிக்கும் வாய்ப்போ இன்றி சிறு ரக ஆயுதங்களுடனும், பிஸ்கட்-ரஸ்க்-ரொட்டி- வறுத்த மாவு- குடிநீர் என குறைந்த உலர் உணவுடனும் வெறும் 1,500 போராளி கள் -நான்கு படை அசுர பலத்தோடு நின்ற 40,000 ராணுவத் தினரை எதிர்கொண்டு அவர்களின் இதயப் பரப்பிலேயே நிலையெடுத்து -ஒன்றிரண்டல்ல 34 நாட்கள் -ஆனையிறவு முகாம் விழுகின்றவரை சண்டையிட்டார்களென்பது உலகின் வீர வரலாறுகள் இதுவரை அறியாத மெய்சிலிர்க்கும் அதிசயம். இது நடந்தது ஓயாத அலைகள் ஒஒஒலின் இறுதிக் கட்டமான 2000-ம் ஆண்டில்.

2002-ல் நான் வன்னி சென்றிருந்தபோது தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வைத்த முதன்மையான வேண்டுகோள் இதுதான்: ""திரும்பிச் செல்லுமுன் தலைவரையும், தளபதி பால்ராஜையும் நான் பார்க்க வேண்டும், பார்த்தே ஆக வேண்டும், பார்க்காமல் நாடு திரும்பப் போவதில்லை''. பால்ராஜ் அவர்களை நான் சந்தித்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில். மருத்துவ ஓய்வில் இருந்தார். எளிய மனிதனாய், லுங்கி கட்டிக் கொண்டு, மரப்பலகையில் போர்வை விரித்து படுத்திருந்தார். ""சிகிச்சையின் போதேனும் மெத்தையில் படுக்கக்கூடாதா, இது சமாதான காலம்தானே...?'' என்றேன். சிரித்தார். ""பழகினால் அதையே உடலும் மனசும் தேடும். இப்படியே இருந்துவிட் டால் போர்க்களத்தில் சுகம்'' என்றார்.

வேரித்தாஸ் வானொலியில் பல புத்தகங்களிலிருந்து கடன் வாங்கி நான் படைத்த நிகழ்ச்சிகளைக் கேட்டு, இயல்பி லேயே நான் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென கற்பிதம் செய்து கொண்டு, என்னிடம் கேட்டு தெளிவு பெறவென, மாசில்லா மாணவன் போல், 49 கேள்விகளை கசங்கிய தாளில் எழுதிவைத்து, அறிந்து கொள்ளும் தீரா ஆர்வத்துடன் வினவிக் கொண்டிருந்த பால்ராஜை எப்படி நான் மறப்பேன்!

""இத்தாவில் "வதிரையன் பாக்ஸ்' சண்டை அனுபவத்தை கேட்டறியத்தான் வந்தேன்'' என்றேன். ஊர்த்திருவிழாவில் சலங்கை கட்டி கரகமாடும் நடன மணியைப் போல், உருண்டு புரண்டு ஓடும் அருவியைப் போல் கதை சொல்லத் தொடங்கினார் பால்ராஜ்.

""மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே தலைவர் வரச்சொல்லி "பால்ராஜ் இத்தாவில்-தாளையடி- வதிரையன் பக்கமாய் போய் ரெக்கி பார்த்திட்டு வா' என்றார். ("ரெக்கி' என்றால் தகவல்கள் சேகரிப்பது, உளவுச் செய்திகள் திரட்டுவது). எனக்கு ஒன்டுமே விளங்கவில்லை. ஏனென்டா தாளையடி, வதிரையன் பகுதிக்கு ராணுவ முக்கியத்துவம், எதுவும் இல்லை. தொடர்ந்தும் தலைவர் சொன்னார். "கவனமா பார்த்து வா பால்ராஜ்... யாழ்ப் பாணத்துக்கான சண்டை அங்கேதான் தொடங்கும்'. அப்போகூட எனக்கு எதுவுமே விளங்கலெ. நானும் போய் ரெக்கி எடுத்தேன். கடல் மணலைத் தவிர வேறொன்டும் அங்கெ இல்லெ. அப்பவும் தலைவர் விபரம் எதுவும் சொல்லெயிலெ''.

மூன்று வருஷத்துக்குப் பிறகு ஓயாத அலைகள் ஒஒஒ நடக்கேக்க தலைவர் வரச் சொன்னார். ""பால்ராஜ், ஆனையிறவுக்கான சண்டையெ நீதான் நடத்தப் போறெ' என்றார். ""நீ பெரிய வீரன், பால்ராஜ். எத்தனையோ சோத னைகளெ உனக்கு நான் தந்திருக்கேன். எல்லாத்திலெயும் நீ வென்றாய். இது கடைசியா நான் உனக்கு வைக்கிற சோதனை. உன்னையும் 1,500 போராளிகளையும் தாளையடி கடற்பக்கம் சூசை தரையிறக்கி விடுவான் அவ்வளவுதான். சிக்கலென்டா உங்களை காப்பாற்றிக் கொண்டு வரக்கூட எங்களாலெ வர ஏலாது. நீ ஆலி9 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனை யிறவுக்கு வர்ற விநியோகத்தை வெட்டி முறிக்கணும். அதைச் செய்தா ஆனையிறவு தானா விழும். நீ உண்மையான வீர னென்டா ஆனையிறவெ விழ வச்சு நீ அந்தப் பக்கத்திலிருந்து ஆலி9 ரோட்டுலெ ஆனையிறவெ நோக்கி வர, நான் கிளிநொச்சியி லிருந்து இங்காலெ பக்கமா வர ரெண்டுபேரும் ஆனையிறவிலெ கை குலுக்கலாம்'' என்றார்.

2000, மார்ச் 18-ந் தேதி சீறிப்பாய்ந்த கடற்புலிகளின் படகுகள் 1500 போராளி களையும் தளபதி பால்ராஜையும் தாளையடி- செம்பியன்பற்று கடற்பரப்பில் தரையிறக்கம் செய்யும்போதே கடும் சண்டை தொடங்கிற்று. விடுதலைப்புலிகள் போன்றதொரு அமைப்பு எதிரிப்படையை எதிர்கொண்டு ஒரே நேரத்தில் இத்தனைபேரை தரையிறக்குவதென்பதே மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல்வழித் தரையிறக்கம் இது என ராணுவ ஆய்வாளர்கள் அப்போது வியந்தார்கள்.

பால்ராஜ் தொடர்ந்தார். ""இறங்கேக் கெயே கடும் சண்டை... சக்கை அடி அடிச் சான்... நாங்கள் மெதுவா நகர்ந்து வதிரையைனிலெ பாக்ஸ் வெட்டி நிலையெடுத் தம். சண்டையென்டா இதுதான் சண்டை ஃபாதர். குளிக்க ஏலாது, சப்ளை இல்லை... வெட்டி நிற்கும் குழிக்குள்ளெதான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம். காயம்பட்ட போராளிகளெ அதே குழிக்குள்ளே பராமரிக்க ணும். வீரமரணம் தழுவிய போராளிகளெ வணக்கத்தோட விதைக்கணும்... விமானத்தாலெ அடிப்பான்... டாங்கு கொண்டு அடிப்பான்... எறிகணை அடிப்பான்...''

""என்ட ராசா... பழைய தமிழ் இலக்கி யங்கள்லெ படிப்பம்தானே ஃபாதர், "இன்டு போய் நாளெ வா' என்டு... அதுபோலத்தான் வதிரையன் சண்டை யும். இன்டு 400 மீட்டர் அவன் பிடிச்சா, நாளை 600 மீட்டர் நாங்க பிடிப் பம். அவன் 10, 20 டாங்குகளை வேகமா கலச்சுக் கொண்டு எங்களெ குழிக்குள் ளேயே உயிரோட புதைக்கலாமென்டு வருவான்... நாங்க பாய்ஞ்சு அவன் டாங்குகள் மேலெ ஏறி சுட்டுப்போட்டு அதே டாங்கு களெ திருப்பி நாங்க ஓட்டி அவனையே அடிப்பம். ஹாலிவுட் யுத்த படங்கள் பார்த் திருப்பிங்கதானே... அப்பிடித்தான் சண்டை நடந்தது.''

""ரெண்டுநாள்... எட்டுநாள்... பத்துநாள்... சப்ளை துப்புரவா இல்லாத நிலை... கொண்டு வந்த சாமானெல்லாம் தீருது... சாப்பாடு தட்டுப்பாடு, சிங்கள ஆமிக்காரர்களெ பாய்ஞ்சு பிடிச்சு அவங்கட ஆயுதங்களெ எடுத்து சண்ட பிடிச்சம்... என்ட ராசா... சண்டையென்டா இதுதான் சண்டை...'' -அப்படியொரு ரசனையுடன் வதிரை யன் பாக்ஸ் சண்டையை வருணித்தார் பால்ராஜ்.

வதிரையனில் நிலை நின்று வரலாற்றுச் சமராடி, மெல்ல நகர்ந்து புதுக்காடு சந்திப்பு பகுதியில் ஆலி9 நெடுஞ்சாலையை இடைமறித் தார்கள். பல்லாயிரம் ராணுவத்தினரை அணி திரட்டி மீண்டும் மீண்டும் சிங்கள ராணுவம் முயன்ற முன் நகர்வுகளை நினைத்துப் பார்க்க முடியாத இதிகாச வீரம் காட்டி முறியடித்தனர் பால்ராஜின் போராளிகள். ஆலி9 நெடுஞ்சாலை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவு முகாமில் இருந்த 14000 ராணுவத்தினருக்கு உணவு, ஆயுத விநியோகம் தடைபட்டது. இன்னொரு முனையில் ஆனையிறவுக்கு குடிநீர் வழங்கிய பரந்தன் பகுதி யையும் புலிகளின் பிறிதொரு படையணி கைப் பற்ற, பால்ராஜும் 1500 போராளிகளும் தாளையடி யில் தரையிறங்கிய 34-ம் நாள், 2000 ஏப்ரல் 22-ம் நாள் ஆனையிறவு முகாம் விழத்தொடங்கியது. ஏப்ரல் 23-ம் தேதி ஆனையிறவு விடுதலைப்புலிகளின் முழுக்கட்டுப் பாட்டில் வந்தது.

பிரபாகரனும் பால்ராஜும் தங்களுக்குள் செய்துகொண்ட வரலாற்றுச் சபதம் நிறை வேறியது. புதுக்காடு சந்திப்பிலிருந்து வந்த பால்ராஜும் கிளிநொச்சியிலிருந்து வந்த பிரபா கரனும் ஆனையிறவில் கை குலுக்கினார்கள். ஆனால் பொதுவாக சிறு வெற்றிகளுக்கே தாராளமாய் பாராட்டி மகிழும் பிரபாகரன் ஒரு வார்த்தைகூட பால்ராஜிடம் சொல்லவில்லை. அமைதியாக ஒரு நிமிடம் பால் ராஜையே பார்த்தவர்... ""என்ன பால்ராஜ், நான் ஒண்டும் பாராட்டிச் சொல்லெலியே என்டு யோசிக் கிறியா. இந்தா கேள் உன்ட எதிரி உன்னைப் பற்றி என்ன சொல்றா னெண்டு? எனக் கூறிக்கொண்டே ஒரு "வாக்மேன்' (ரஹப்ந்ம்ஹய்) பிளேயரையும் குறுந்தகடையும் கொடுத்திருக்கிறார். யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சிக்கும் அப்போ தைய ராணுவ மந்திரி அனுருத்த ரத்வத்தேக்கும் வதிரையன் பாக்ஸ் சண்டையின் இறுதிக் கட்டத்தில் நடந்த காரசாரமான உரையாடலை தனது கட்டளை மையத்தில் இருந்துகொண்டு பதிவு செய்திருக் கிறார் பிரபாகரன்.

ஆனையிறவு விழக்கூடும் என்ற நிலையில், அது தென் னிலங்கையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கு மென்ற அச்சத்தில் பலாலி ராணுவத் தளத்திற்கு பறந்து வருகிறார் ராணுவ மந்திரி ரத்வத்தே. அங்கிருந்து தளபதி ஹெட்டியாராட்சியை காய்ச்சி எடுக்கிறார். ""வேசி மகன்களே... 40,000 பேர் படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டை யிடும் 1500 பேரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு ராணுவமா? த்தூ...'' இப்படிச் சொல்ல முடியாத அசிங்க வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். எல்லாம் கேட்டுவிட்டு ஹெட்டியாராட்சி பொறுமையாகச் சொன்ன பதில் : ""ஐயா பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாகூட சமாளிச் சிடுவேன். வந்திருப்பது பால்ராஜ். அவன் வந்து உட்கார்ந்தானென்றால் கிளப்ப முடியாது'' -இந்த உரையாடலைத்தான் பதிவு செய்து பால்ராஜுக்கு கொடுத்தார் பிரபாகரன். ""உன்ட எதிரியே உன்னெ இப்படி பாராட்டியிட்டான். இதுக்கு மேலெ நான் என்ன சொல்றதாம்? வென்டுட்டெ பால்ராஜ்'' என்று சொல்லிக்கொண்டே பாசமுடன் கட்டித் தழுவிப் பாராட்டினாராம் பிரபாகரன்.

1996 ஓயாத அலைகள் ஒ-ன் போது இதே முல்லைத்தீவில் சிங்களப் படைகளை துவம்சம் செய்து துரத்தியடித்த பால்ராஜ், 1998 ஓயாத அலைகள் ஒஒ-ல் மின்னல் வேகத் தாக்குதலில் கிளிநொச்சி ராணுவ முகாமை துடைத்தெறிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பால்ராஜ், 2000-ல் ஆனையிறவை வீழ்த்திய பால்ராஜ், அதன் பின்னர் இறுதியாக ஆனை யிறவை மீளக் கைப்பற்ற சந்திரிகா அரசு 2001-ல் மேற்கொண்ட "அக்னிஹேலா' பெரும் எடுப்பை எதிர் கொண்டு தகர்த்தெறிந்த பால்ராஜ் 43-ம் வயதில் 2008 -கடந்த ஆண்டு மே 23-ம் நாள் மாரடைப்பால் மரண மடைந்தார். பணமும் மனமுடைய தமிழர் எவரேனும் இம்மாவீரனை திரையில் பதிவு செய்வீர்களா?

நக்கீரனுக்காக ஜெகத் கஸ்பார்

நன்றி: நக்கீரன்


    
     


நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!