தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ ஒரு பாட்டு mp3
![]() | ஏதோ ஒரு பாட்டு mp3 | ![]() |
![]() | ||
![]() | Found at bee mp3 search engine | ![]() |
Pages
Monday, April 13, 2009
தலைவனா நீ…..
தலைவனா நீ…..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvkRfSp72H1lgXG03RQoXWdQGmx_zzt8T477q4Ea-QeNv7l-ubzj2-EYfv1A4wNX69RPLb8ycSCJY-YmCKQ34T5DShog8Tv2zkJgMkzLpd6l6QOLkkKpXIAz20vjWBDSZWLDvpgd3Ft0o/s400/Kalainjar.jpg)
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க
துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!
தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!
இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!
தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
இலங்கை பிரச்சினை குறித்த டிவிடிக்கள் தடையை மீறி விநியோகம்
| ||
இலங்கை பிரச்சினை குறித்த டிவிடிக்கள் காவற்துறை தடையை மீறி விநியோகம்: தூத்துக்குடியில் பரபரப்பு | ||
| ||
தூத்துக்குடியில் காவற்துறை தடையை மீறி பெரியார் தி.க.வினர் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவான டிவிடிகளை விநியோகித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. | ||
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், இயக்குநர் சீமானின் பேச்சுக்கள், கொழுவை நல்லூர் முத்துக்குமரனின் இறுதி நிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவிதைகள் கொண்ட டிவி டியை தயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது. இதனை வெளியிட காவல்துறை அனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் மத்தியில் எப்படியாவது சேர்த்துவிடும் முயற்சியில் பெரியார் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அந்த டிவிடியின் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட பிரதிகளை ஏற்கனவே தமிழகம் முழு வதும் வியோகித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறையினர் மற்றும் காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் அந்த குறிப்பிட்ட டிவிடிகள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், மார்க்கெட், டீக்கடைகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வந்து இந்த குறிப்பிட்ட டிவிடிகளை யாரும் அறியாதவகையில் பைக்குகள் மீதும், கார்கள் மீதும், உடமைகள் மீதும் போட்டு விட்டு செல்கின்றனர். முத்திரைகளோ அல்லது முகவரிகளோ இல்லாத இந்த டிவிடிகளின் கவரில் ஒரு கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த டிவிடி உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியது. பலரின் வாழ்வில் ஒளியற்றக்கூடியது. நமது எதிரிகளை அடையாளம் காட்டுவது. ஆகவே கட்டாயம் பாருங்கள். தெரிந்தவர்களுக்கு பிரதி எடுத்துக் கொடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 3 வீடியோ பைல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றில் இயக்குநர் சீமான் பேச்சின் முழு பதிவும், மற்றொன்றில் இலங்கை தமிழர்கள் சிலர் பேட்டியும் இடம்பெற்றுள்ளன. தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த டிவிடிகள் காவற்துறை தடையை மீறி விநியோகிக்கபட்டு வருவதால் தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ![]() -- ஜெ. பிரபாகரன், குடிமக்கள் சனநாயகம், தூத்துக்குடி. Prabakaran.J, Kappikulam, Ottapidaram Taluk, Thoothukudi district, Tamilnadu - 628718. Phone: 09486251948, E.mail : prabakartuty@gmail.com http://socialjustice-citizen.blogspot.com/ |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
microsoft -ன் தமிழ் தளம்
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
வழக்கு தொடர்ந்துள்ளது உண்மை....
சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கருப்பன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆமுகியோரும், தமிழக அரசும் இவ்வழக்கில் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹேமந்த் லட்சுமண் கோகலே தலைமையிலான நீதிமன்றக் குழு முன் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் கருப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில், இலங்கையில் சிங்களப் படையினர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்திய அரசு ஒரு காலத்தில் உதவி செய்து வந்தது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறி இலங்கையில் வாழும் தமிழர்களையும், தமிழர்களின் உரிமைக்காகப் போராடிவரும் விடுதலைப் புலிகளையும் அழிக்கும் நோக்குடன் சிங்களப் படையினருக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. சிங்கள அரசும், விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு அங்குள்ள அப்பாவித் தமிழ் மக்கள் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
இலங்கைப் படையினருக்கு இந்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது. மேலும் ராடார்களை இயக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 265 போர்ப்படை வல்லுநர்களையும் இந்திய அனுப்பி வைத்திருக்கிறது. இந்தியாவும், சீனாவும் சேர்ந்து 80,000 கோடி ரூபாயைக் கடனாக வழங்கியுள்ளது.
இலங்கைப் படைக்கு ஆதரவாகப் போரிடுவதற்காக அனுப்பப்பட்ட இந்திய வீரர்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து அவர்களின் உடல்கள் புனே நகருக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போரில் காயமடைந்த 125க்கும் மேற்பட்ட இந்திய படையினருக்க சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள போர்ப்படை மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி அண்டை நாடுகளுக்கு மறைமுகமாக உதவிகளை வழங்குவது குற்றம் ஆகும். எந்த நாட்டிற்கு உதவி செய்வதாக இருந்தாலும் அதை வெளிப்படையாக குடியரசுத் தலைவரின் இசைவுடன்தான் செய்ய வேண்டும். எனவே அந்த உதவிகள் அனைத்தையும் திரும்பப் பெறும்படியும், இலங்கையில் போரிட்டு வரும் இந்தியப் படையினரை உடனடியாக திரும்பப் பெறும்படியும் இந்திய அரசுக்கு ஆணையிட வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களைக் கொடிய முறையில் கொன்று குவித்ததற்கு இழப்பீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஈழத் தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
ஈழத்தமிழரின் வலி இங்கே அண்ணண் அறிவுமதி குரலில்
http://iishaq.blogspot.com/2009/04/blog-post.html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நன்றி....!
![நன்றி....!](http://i46.tinypic.com/6h6ude.jpg)
Locate IP Address on Map
http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
![animated gifs](http://www.free-animations.co.uk/words/new/images/new_34.gif)
சற்று முன்...!
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- "தினத்தந்தி " தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)
- "தினமணி" (1)
- "தினமணி" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)
- chat (2)
- firefox (2)
- shortcuts" (1)
- sms (2)
- video (2)
- அரசியல் (12)
- ஆனந்த விகடன் (1)
- இணைய நூல் (3)
- இணைய முகவரிகள் (2)
- இமெயில் (2)
- இமெயில் குழு (2)
- இலங்கை (21)
- ஈழ வரலாறு புத்தகம் (1)
- எல்லாம் (1)
- என் பக்கம் (9)
- கணினி தொழில் நுட்பம் (32)
- கதை (6)
- கலக்கல் டான்ஸ் வீடியோ (1)
- கவிதை (10)
- குர்து இனத்தவர் கடிதம் (1)
- குறும் படம் (2)
- சிரிப்பு (10)
- சினிமா (9)
- சீமான் (11)
- சு.பொ. அகத்தியலிங்கம் (3)
- தமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)
- தமிழச்சி (5)
- தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)
- தமிழீழ வீடியோ பாடல் (2)
- தமிழீழம் (53)
- தமிழ் 99 (2)
- தமிழ் ஈழம் (11)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- தலைவர் பிரபாகரன் தொடர் (12)
- தன்னம்பிக்கை (1)
- தாமரை (4)
- தியாகு (4)
- திருமாவளவன் (1)
- தினத்தந்தி (2)
- தினமணி (55)
- நகைச்சுவை (13)
- நக்கீரன் (2)
- படங்கள் (18)
- பாரதிராஜா (2)
- பிரபாகரன் (15)
- பெரியார் (9)
- பேச்சு (1)
- பேட்டி (4)
- பொதுவுடைமை (5)
- மனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)
- மூட நம்பிக்கை (8)
- மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)
- ராஜபக்சே (1)
- விடுதலைப் புலிகள் (14)
- விஜய் (5)
- வீடியோ (14)
- வீடியோ படம் (85)
- வைரமுத்து (1)
- ஜி இமெயில் (2)
- ஜி மெயில் (2)
- ஜெகத் கஸ்பார் (1)