Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts

Sunday, May 3, 2009

இராணுவ லாரியை உடைத்து நொறுக்கும் ,வீடியோ படம்

இலங்கை சிங்கள அரசுக்கு ஆயுதம் ஏற்றிப் போகும் இராணுவ லாரியை,கோவையில் உடைத்து நொறுக்கும் ,பெரியார் திராவிடர் கழகம் வீடியோ படம்

http://www.youtube.com/watch?v=4BhuX-SMSNw

http://www.meenagam.org/?p=2113


Wednesday, April 22, 2009

விடுதலைப் புலிகளும் ,கொரில்லாப் போரும்


சரித்திரத்திலே பல முறை இறந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்தான். இவர் இறந்து விட்டார் என அறிவித்துவிட்டு எதிரிகள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுவார்கள்.
ஆனால் பீனிக்ஸ் பறவைகள் போல சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நாட்டிலிருந்து இவர் வெளிப்படுவார். ஒன்று இரண்டு முறை அல்ல பலமுறை இப்படி அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார். எதிரிகளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவின ஹோசிமின் புத்தபிட்சு பத்திரிகையாளர்கள் என் பல ஆதாரங்களை எடுத்திருக்கிறார்.

இன்றைய கணக்குப்படி அமெரிக்கா நடாத்திய முதலிலும் கடைசியுமான நீண்ட போர் வியட்நாம் போர்தான். அது போல அமெரிக்கா வேறு ஒரு நாட்டிடம் போரில் தோற்றிருக்கிறது என்றால் அது வியட்நாமிடம் தான். வியாட்நாமின் இந்த வீர வரலாற்றுக்குப் பின்னே இருப்பவர் ஹோசிமின்.

1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டு வந்தவர் என்பதால் அந்த நாட்டு மக்கள் 'ஒளி தந்தவர்' என்ற அர்த்தத்தில் இவரை நேசத்துடன் 'ஹோசிமின்' என்று போற்றினர். பிறகு இதுவே இவரின் பெயராக மாறியது.

ஹோசிமின் சிறுவனாக இருந்த போது வியட்நாம் பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்தது. சும்மா ஒப்புக்காக வியட்நாமை சேர்ந்த ஒருவரை தனது கைப்பாவையாக ஆட்சி பீடத்தில் உட்கார வைத்துவிட்டு அவரின் நிழலின் நின்று பிரான்ஸ் ஆட்சி செய்து வந்தது. அப்போது இந்த டம்மி அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரில்லா படையினருக்கு தகவல்கொண்டு செல்லும் தூதராக ஹோசிமின் வாழ்க்கையை தொடங்கினார்.

உயிரை பணயமாக வைத்து இந்த பணியை செய்த சிறுவன் ஹோசிமினுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. சிறுவன் ஹோசிமின் இளைஞனாக மாறியதும் தன் நாட்டு மக்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிவது என்று உறுதி பூண்டார்.

பிரான்ஸின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். இதனால் பிரான்ஸின் சக்தி மிகுந்த ஆயுதங்களையும் அதிகாரத்தையும் எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியவில்லை. பிரான்ஸை அப்படி ஜெயிப்பது என்று கண்டறிய பிரான்ஸ் நாட்டிற்கு இவர் போனார்.

பாரீஸில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டே பிரான்ஸ் மக்கள் எப்படி உலகத்தில் முதல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியை நடத்தினார்கள்; சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோஷம் அந்நாட்டு மக்களை எப்படி ஜெயிக்க வைத்தது என்று பொறுமையாக ஆராய்ந்தார். இவர் கடைசியாக தனது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்தது.

1940ம் ஆண்டு வியட்நாம் நாட்டை பிரான்ஸிடம் இருந்து ஜப்பான் கைப்பற்றியது. அப்போது பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்கள் ஜப்பானிய சிப்பாய்களை தங்களை மீட்க வந்த ரட்சகர்கள் என்று போற்றினார்கள். ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின் சொன்னார்.

'முக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது. பிரான்சாக இருந்தாலும் சரி ஜப்பானாக இருந்தாலும் சரி இவர்களில் யார் நம்மை ஆண்டாளும் நமக்குப் பெயர் அடிமைகள் தான். ஆகையால் இந்த இரண்டு பேரையுமே விரட்டியடித்தால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்க முடியும் என்று அவர் முழங்கினார்.

ஹோசிமின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்ட ஜப்பான் சும்மா இருக்குமா? ஹோசிமினைக் கைது செய்ய அந்த நாடு முழுக்க வலை விரித்தது. வியாட்நாமின் அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த ஹோசிமின் அப்போது பெரும் படையை திரட்டிக் கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் கலகலத்துப் போன சமயம் பிரான்ஸ் நாட்டின் இராணுவத்தை முந்திக் கொண்டு ஹோசிமின் படை வியட்நாமின் ஆட்சியை கைப்பற்றியது.
ஹோசிமின் சிறு வயதுக் கனவு நனவானது. வியட்நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஹோமிசின் உலகத்திற்கு அறிவித்தார். சூட்டோடு சூடாக தங்கள் நாட்டில் தேர்தலை நடத்தினார். இதில் ஹோசிமினின் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வாகை சூடியது. மக்கள் ஹோசிமினை தனது தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள்.

மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து தாமதமாக விழித்துக் கொண்ட பிராஞ்சு படைகளை ஹோசிமின் படைகளோடு மோத முதல் வியட்நாம் யுத்தம் ஆரம்பமானது. அப்போது பிரான்ஸிடம் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்கள் அத்தனையும் இருந்தன. பிரான்ஸின் படைகளோடு ஒப்பிடும்போது ஹோசிமின் கெரில்லா படையோ மிகவும் பலவீனமானது.
அப்போது ஹோசிமின் பிரான்சை பார்த்து இப்படி எச்சரித்தார். 'உங்களின் படை வீரர்களின் ஒருவரை நாங்கள் கொன்றால் உங்களால் எங்கள் படை வீரர்களில் பத்து பேரைக் கொல்ல முடியும். ஆனால் இந்த போரின் இறுதியில் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போய்வீர்கள் நாங்கள் ஜெயிப்போம்' ஹோசிமினின் இந்த வார்த்தைகளை வெறும் வாய்ச்சடவால் என்று ஒதுக்கிவிட்டு பிரான்ஸ் தனது படைகளை முடுக்கிவிட்டது.

வியட்நாமின் அடர்ந்த காடுகளில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்ட ஹோசிமினின் கெரில்லாப் படை ஐம்பத்தைந்து நாட்கள் கடுமையான போர் புரிந்தன. இறுதியில் பிரெஞ்சு இராணுவ தளத்தை அது தகர்க்க ஹோசிமின் சொல்லானது நிஜமானது. பிரான்ஸ் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தது.
என்றாலும் ஹோசிமினால் இந்தப் போரில் வடக்கு வியட்நாமை மட்டுமே தன் வசம் வைத்துக் கொள்ள முடிந்தது. வியட்நாமின் தெற்குப் பகுதியோ பிரான்ஸின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. ஹோசிமின் அசரவில்லை. தனது நாட்டை வடக்கு - தெற்கு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டை அழித்து ஒருமித்த வியட்நாமை உருவாக்கியே தீருவேன் என்று சபதம் செய்தார்.

வடக்கு வியட்நாமிலிருந்து ஆதிக்க சக்தியான பிரான்ஸை ஹோசிமினின் கெரில்லாப் படைகள் விரட்டி அடித்து விட்டு வெற்றிக் களிப்பில் இருந்த சமயம்... தெற்கு வியட்நாமின் பதுங்கியிருந்த பிரான்ஸ் ஒரு சதித் திட்டம் தீட்டியது.

ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமானவர். அவரை வளர விடுவது கைகட்டி வாய்மூடி கம்யூனிஸ்ட்களின் ஆட்சி பரவுவதை ஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று பிரசாரம் செய்தது. இதையடுத்து கம்யூனிஸ்ட்டுகள் வியட்நாமில் பரவுவதை தடுக்க பிரான்ஸ¤க்கு அமெரிக்கா ஆயுதங்களையும் உதவிகளையும் வாரி வழங்கியது.

இதையடுத்து வியட்நாம் யுத்த பூமியானது! அங்கே விண்ணிலிருந்து சதா குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள்? ஏன் நம் நாட்டில் யுத்தம் நடக்கிறது என்று கூடத் தெரியாமல் அந்த ஜனங்கள் செத்து வீழ்ந்தனர். இன்னொருபுறம் ஹோசிமினின் கெரில்லா படைகள் எதிரிகளுக்கு மூச்சு திணறும்படி தண்ணிகாட்டியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நடந்தது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் மாறி ஒருவர் என மூன்று ஜனாதிபதிகள் மாறினர். வடக்கு வியட்நாமில் ஹோசிமினின் தலைமையில் 'வெற்றியே குறிக்கோள்' என்று அவரது படை ஒருமுகமான சிந்தனையோடு பிரான்ஸின் படைகளை எதிர்த்து மூர்க்கத்துடன் போராடியது.

வடக்கு வியட்நாமையும் தெற்கு வியட்நாமையும் ஒன்று சேர்ந்து தனிநாட்டை உருவாக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஹோசிமின் சவால்விட... அமெரிக்கா அடிபட்ட புலி போல கர்ஜித்தது. அந்த சமயம் ஹோசிமினிற்கு எதிர்பாராத திசையில் இருந்து மாபெரும் உதவி ஒன்று வந்தது.

போரை ஆரம்பிப்பது சுலபம், முடிப்பதுதான் கஷ்டம் இந்த சத்திய வாக்கியம் வியட்நாமிலும் உண்மையானது. கம்யூனிஸ்ட்டுக்களின் கைகளுக்குள் வியட்நாம் போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் இந்தக் குறிக்கோள்களுக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்து வியட்நாமில் தனது மூக்கை நுழைத்தது அமெரிக்கா.
தெற்கு வியட்நாமில் அமெரிக்கா ஒப்புக்காக கட்சியில் அமர்த்திய கைப்பாவை அரசு கம்யுனிஸ்ட்டுகளை நசுக்குகின்றேன் என்று பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுமக்களை வீதியில் ஓடவிட்டு விரட்டி விரட்டிச் சுட்டது.

கம்யூனிஸ்ட்டுக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டனர். இதற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்ப... அமைதியே உருவான புத்த பிட்சுகள் கூட போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளிடமே இரக்கம் காட்டாதவர்கள் புத்த பிட்சுகளிடமா இரக்கம் காட்டுவார்கள்? இவர்களின் போராட்டமும் மிருக பலத்தோடு நசுக்கப்பட்டது. அதனால் புத்தபிட்சுகள் 'தீக்குளிப்பு' என்ற சத்தியாக்கிரக ஆயுதத்தை கையில் எடுத்தனர்.

கடைசியில் 1965 ஆம் ஆண்டு வேறு வழியின்றி அமெரிக்கா, வியட்நாம் போரில் நேரடியாக குதித்து. தாங்கள் போரிடுவது ஒரு இராணுவத்தை எதிர்த்து அல்ல அதிரடிப் போரில் தீவிரப் பயிற்சி பெற்ற கெரில்லாப் படையினரை எதிர்த்து என்பதால் அமெரிக்கா இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாமில் அமைதியாக இருந்த கிராமங்களின் மீதும் கூட விமானத்திலிருந்து குண்டுகளை வீசியது.

அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாத ஹோசிமினின் கெரில்லாப் படை, அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்கு குண்டு வைத்தது. போரில் அமெரிக்கா நுழைந்த முதல்வருடமே தாங்கள் குறைவான வீரர்களைப் பலி கொடுத்து அதிகமான கெரில்லா படையினரை அழித்திருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டது.

எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால், அமெரிக்கா அப்போது ஹோசிமினின் படைகளைவிட போரில் முன்னிலையில் இருந்தது என்று சொல்லலாம். ஆனால் அடுத்தடுத்து அது சந்தித்த சோதனைகள், அமெரிக்க வீரர்களின் மனவுறுதியை குலைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப் பிடிக்க முடியாத பல அமெரிக்க வீரர்கள், போர்களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பி ஓடினர்.

அதனால் ஆனானப்பட்ட அமெரிக்காவே கடைசியில் ஹோசிமினைப் பார்த்து 'சமாதானமாகப் போய் விடலாமே' என்று தூதுவிட்டது.

நட்டநடுவீதியில் ஆடாமல் அசையாமல் சுழறாமல் உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எரித்து கொண்டார்கள். இதைப் பார்த்து கலவரமடைந்த அமெரிக்காவின் கைபாவை அரசு. புத்தபிட்சுகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அமெரிக்கா மீது அமெரிக்கர்களுக்கே வெறுப்பு உண்டானது.

1968 ஜனவரி மாதம் வியட்நாம் போரில் ஒரு திருப்புமுனை. தெற்கு வியட்நாமில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த சமயம் சாதாரண பொதுமக்கள் போல உடைஉடுத்தி நாடு முழுவதும் ஊடுவியிருந்த ஹோசிமினின் கெரில்லா படையினர் துல்லியமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி திடீர்என்று ஒன்று சேர்ந்து அமெரிக்கப் படைகளையும் அதன் கைப்பாவை அரசையும் எதிர்த்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர்.

இதை சற்றும் எதிர்பாராத அமெரிக்க படைகள் நிலை தடுமாறின. மின்னல் வேகத்தில் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக அலுவலகத்தைகூட கம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். அமெரிக்காவால் இந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. தனது கோபத்தை தணித்துக் கொள்ள அது தனது கட்டுப்பாட்டில் இருந்த எல்லா கிராமங்களிலும் மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்தது. இதில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் பரிதாபமாக இறந்தனர்.

இவர்களிடமிருந்து தப்பிக்க பிள்ளைகுட்டிகளோடு காட்டாற்றில் விழ்ந்தவர்கள் ஜலசமாதி ஆயினர். இந்த எல்லா அவலங்களையும் டி.வி.யில் பார்த்த அமெரிக்க மக்கள் 'ஐயோ' என்று தலையில் அடித்துக் கொண்டனர். அதனால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட இருந்த ஜோன்சன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

ஜோன்சனை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்ட நிக்ஸன். வியட்நாமில் மேற்கொண்டு எந்த அவமானமும் அடையாமல் தனது படை வீரர்களை நாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன்' என்று பிரசாரம் செய்துதான் ஜெயித்தார்.

என்றாலும் அவராலும் வியட்நாமிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நிக்ஸன் ஒரு தந்திரம் செய்தார். ஒரு பக்கம் வியட்நாமில் இருந்த பெரும்பாலான தன் துருப்புக்களை திருப்பி அழைத்துக் கொண்டார். மறுபுறம் கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வடக்கு வியட்நாம் மீது தனது விமானங்களை ஏவினார். இதையடுத்து இடைவிடாது இருபத்தி நான்கு மணி நேரமும் வியட்நாம் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப் போரில் தான் பயன்படுத்திய குண்டுகளுக்கு இணையாக குட்டி நாடான வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை தூவியது. இதில் லட்சக்கணக்கானோர் பரிதாபமாகத் துடிதுடித்து இறந்தனர். இந்த அட்டகாசங்கள் அனைத்தையும் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள் ஒரு காட்சி உறைய வைத்தது.
1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் போட்ட நேபாம் குண்டு ஒன்றில் ஒரு கிராமமே தீப்பற்றி எரிய சொந்தப்பந்தங்கள் என்று எல்லோரையும் கரும விட்டு விட்டு தப்பி ஓடி வரும் நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனதையும் பிசைத்து எடுத்தது. இந்தச் சிறுமி எப்படியோ கனடா சென்று விட்டார். வளர்ந்து பெரியவளானதும் தனது 20 வயதில் கடந்த 1997 ஆம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி மூலம் தன்னை இனம் காட்டிக் கொண்டார்.
இந்தக் கொடுமைகள் அனைத்தும் அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்பு மனப்பான்மையை தோற்றுவித்து விடவே, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் தனது துருப்புக்களை வேகவேகமாக திருப்பி அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

வியட்நாமின் அமெரிக்க தூதரகத்தின் கட்டத்தின் மாடியிலே வந்து ஹெலிகொப்டர் இறங்க.. போரை நடத்தியவர்கள் சந்தடியில்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டினர். வியட்நாம் போர் ஒரு வழியாக முடிவடைந்தது. அமெரிக்கப் படைகள் அகலவும் வட வியட்நாம் தென் வியட்நாமைக் கைப்பற்றியது.

இந்தப் போரில் சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை பலிகொடுத்துவிட்டு அமெரிக்க இராணுவம் வெறுங்கையோடு திரும்ப வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும் ஒரு நாடாக செங்கொடியின் கீழே இணைந்தது. இந்த அபூர்வ காட்சியைப் பார்ப்பதற்காக தனது வாழ்நாளை செலவிட்ட ஹோசிமின் இந்த இணைப்பு நிகழ்வதற்கு சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்றாலும் அந்த நாட்டு மக்கள் அவரை மறக்கவில்லை. ஒன்றாக இணைந்த தங்கள் தேசத்தின் தலைநகர் சைகோனுக்கு இவர்கள் 'ஹோசிமின் சிட்டி' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

முத்தமிழ் வேந்தன்
நாட்றம்பள்ளி
வேலூர் மாவட்டம்

Friday, April 17, 2009

இவன்தான் தலைவன்....!






வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம்

வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை யில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க் கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது.

மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.

பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். வேலை களையெல்லாம் எல்லோருக்கு மாய் பகிர்ந்து கொடுத்துவிட் டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கை யிலாகிவிட்ட போராளிகளை அவ்வப் போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார். என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர் களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'. உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக் கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.

உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.

உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், "பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொல வென பொரிந்தார். ""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சி ருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல் லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது. சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.

புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர் களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.

இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரி தாகத் தெரியாது. வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின் னது. தமிழர் படும் துன் பங்களுக்கெல்லாம் எங்க ளாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட் டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத் தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.

"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.

""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தி லெல்லாம் நான் போராடவில்லை. உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டி ருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக் கிறேன்.''

அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.


-நன்றி . நக்கீரன்-
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3072:2009-04-15-01-19-47&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54




Tuesday, April 14, 2009

தடை செயப்பட்ட புத்தகம்-1

சென்னை புத்தக அரங்கில் தடை செயப்பட்ட
"விடுதலைப் புலிகள்" என்ற புத்தகத்தை இணையத்தில் வாங்க....

http://nhm.in/shop/978-81-8368-638-9.html?gclid=CKfZoNqa2ZkCFc0vpAod0l-JWw




Author: Marudhan


<span title=விடுதலைப் புலிகள்" width="273" height="420">


உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு.

உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் தன்மை. இதெல்லாம் விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது ஆச்சரியமான விஷயம். தற்கொலைப்படை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இலங்கை, இந்திய அரசுகளின் முக்கியமான பல தலைவர்களை புலிகள் கொன்றுள்ளனர். பிற போராளி இயக்கங்கள் என்று எதுவுமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள், குழந்தைப் போராளிகளைப் படையில் வைத்திருப்பது, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மிரட்டிப் பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது.

ஆனாலும் ஈழத் தமிழர்கள் பலரும் இன்று விடுதலைப் புலிகளை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையில் உள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி/இனப் போரின் பின்னணி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

Details

ISBN 978-81-8368-638-9
Weight 240.00 gms
Book Title Viduthalai Puligal
Pages 208
Format Printed Book
Year Published 2007
Price: Rs. 100.00

Dinamani கட்டுரை கருணாநிதியின் தராசு!






கருணாநிதியின் தராசு!




ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக எழுந்து நிற்க முடியாத நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு முதல்வர் கருணாநிதி தாமே தலைமை ஏற்று ஓர் ஊர்வலம் நடத்தியிருக்கிறார். பாவம்! எத்தனை முறைதான் ஊர்வலம் நடத்துவார்? எத்தனை முறைதான் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவார்? எத்தனை முறைதான் சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் மீண்டும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றுவார்? நாடகக்காரர்கள் "இன்றே இந்த நாடகம் கடைசி' என்று அறிவிப்பது போல, சட்டமன்றத்திலும் "இந்தத் தீர்மானம் இதுவே கடைசி' என்றெல்லாம் போட்ட தீர்மானத்தையே திரும்பப் போட்டு உலகத்தினர் நகைக்கும் நிலைக்கு உள்ளாகியும்கூட கருணாநிதி சோரவில்லையே! பேயோட்டுகிற பூசாரி பேய்க்குக் கெடு வைத்து வேப்பிலை அடிப்பது போல, தன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமா கடிதங்களைத் தன் பைக்குள் வாங்கி வைத்துக் கொண்டு, இரண்டு வாரத்துக்குள் போர் நிறுத்த ஏற்பாடு செய்யவில்லை என்றால் தில்லி செங்கோட்டையிலிருந்து விரட்டப்படும் நிலை ஏற்படும் என்று, உடுக்கை வேகமாகக் கருணாநிதி தட்ட, நாடகம் சூடு பிடித்தது. பதிநான்காம் நாள் என்ன நடக்கும் என்று நாடே திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தது. பதிநான்காம் நாளும் வந்தது. தில்லியின் சிறப்புத் தூதர் கோபாலபுரத்துக்கு வந்தார். பூசாரி "உடனே உடுக்கை கீழே போடாவிட்டால், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையைவிட்டே வெளியேற நேரிடும்' என்றார். அவ்வளவுதான்; கருணாநிதிக்குப் புரிகிற மொழியில் சொன்னால் எதையும் எளிதாகப் புரிந்து கொண்டுவிடுவார்! ஈழத் தமிழர்களின் ஆவி முக்கியமா? குடும்ப ஆட்சி முக்கியமா? இப்படித் தெளிவாகக் கேட்டால் குழப்பமில்லாமல் முடிவெடுத்துவிடுவார் கருணாநிதி! மேலும் இந்தியப் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது இந்துமாக்கடல் பகுதியில் இந்திய அரசின் மேலாண்மையை நிலைப்படுத்துவதோடு தொடர்புடையது என்று பெங்களூர் வந்தபோது வெளிப்படையாகவே சொன்னார்! இவற்றுக்கெல்லாம் பின்னால் கங்கையில் நிறைய வெள்ளம் பாய்ந்து வழிந்தோடிவிட்டது. சிங்கள ராணுவம் நுழைந்தபோது கிளிநொச்சி நகரமே அந்த மக்களால் கைவிடப்பட்டு, பேயறைந்த நகரம் போல மனித நடமாட்டேமே அற்றுப் போயிருந்தது. இதுவரை பொத்திப் பொத்திக் காத்த தங்களுடைய வீடுவாசல், சொத்து சுகம், வயல்வரப்பு, அத்தனையையும் விட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முல்லைத் தீவுக் காட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டவர்கள் ஒருவரா இருவரா? இரண்டு லட்சம் பேர். இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டு இரண்டு லட்சம் தமிழர்களைச் சிங்களக் காடையர்கள் கொல்லவும், ஈழமண் தமிழர்களின் ரத்தத்தால் செஞ்சகதியாக மாறவும் துணைபுரியும் மத்திய அரசையும், அதில் அங்கம் வகிக்கும் திமுகவையும் எந்தத் தமிழனாவது மன்னிப்பானா? நாளொரு ஆர்ப்பாட்டம், பொழுதொரு ஊர்வலம் என்று விடாமல் நடத்திக் கொண்டே இருந்தால், "பாவம் கருணாநிதி என்ன செய்வார்! தில்லியில் உள்ள பிரதமரும் அவரை வைத்து பொம்மலாட்டம் நடத்துபவரும்தான் கேட்கமாட்டேன் என்கிறார்கள்' என்று தம் மீது மக்கள் இரக்கம் கொள்ளும்படி செய்துவிட முடியும் என்று கருணாநிதி திண்ணமாக நம்புகிறார்! இதுதான் கருணாநிதியின் அரசியல் பாணி! அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்துள்ள இவ்வளவு கொடுமைகளுக்கும் மத்திய அரசு மட்டுமே காரணம் இல்லை; அந்த அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியும்தான் காரணம் என்பது கூடவா மக்களுக்குப் புரியாது? நடப்பது என்ன காங்கிரஸின் தனி ஆட்சியா? "காப்பாற்றுங்கள் தாயே' என்று சோனியாவிடம் கருணாநிதி பொதுக் கூட்டத்தில் முழந்தாளிடாத குறையாக வரம் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன? இந்தியாவை மன்மோகன் சிங் தனித்தா ஆள்கிறார்? அவர் சம அதிகாரம் பெற்ற அமைச்சரவைச் சகாக்களின் வரிசையில் முதலில் நிற்பவர். சங்கு ஊதிக் கொண்டு செல்லும் சிவப்பு விளக்குப் பரிவாரங்கள் அவரைப் புடை சூழ்ந்திருப்பதும், அவருக்காகப் போக்குவரத்து நிறுத்தப்படுவதுமான ஆரவாரங்களால் பெரிதாக்கப்படுகிறார், அவ்வளவே! எந்த முடிவையும் அவர் தனித்து எடுக்க முடியாது. நாட்டை ஆள்வது மன்மோகன் சிங் என்றோ கருணாநிதி என்றோ சொல்வது ஒரு சம்பிரதாயமே தவிர, அரசியல் நிர்ணயச் சட்டம் இவர்களுக்கு வீசம் அளவுக்கு அதிகாரத்தைக்கூட கூடுதலாகக் கொடுக்கவில்லையே! எந்த ஒரு முடிவையும் அமைச்சரவைதான் எடுக்க முடியும். அமைச்சரவைதான் நாட்டை ஆள்கிறது. அந்த முடிவுகள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. அமைச்சரவை நிலையிலேயே இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் ராணுவசூட்சும உதவிகளையும் செய்வதைக் கருணாநிதி தடுத்திருக்க முடியும். அடுப்பில் விறகை உருவிவிட்டால், கொதிப்பது அடங்கிவிடும் என்று சாதாரணப் பெண்கள் அறிந்திருப்பதை அசாதாரணமான அரசியல்வாதி கருணாநிதி அறியமாட்டாரா? அதைச் செய்யத் தவறியவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்; மன்னிக்கவும் கூடாது! விஜயகாந்த் ஈழத் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று வழிபாட்டுக்கு அழைக்கிறார்! தமிழர்களின் அழிவுக்குக் காரணம் கொழும்பு சார்ந்தது மட்டுமன்று; தில்லி சார்ந்ததும்கூட என்னும் நிலையில் பகையை நோக்கி தமிழ்நாட்டின் உணர்வுகள் ஒருமுனைப்பட வேண்டிய நேரத்தில், கடவுள், கூட்டுவழிபாடு என்று பகையின் முனையை விஜயகாந்த் மழுக்குவது யாது கருதியோ? தில்லி அரசோடு உள்ள முற்பிறவித் தொடர்பா? கூட்டுப் பிரார்த்தனை செய்தால் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுப்பதைக் கடவுள் நிறுத்திவிடுவாரா என்பதை விஜயகாந்த் தெளிவுபடுத்தவில்லையே! அதே வகையில் "காப்பாற்றுங்கள் தாயே' என்று தன்னுடைய வயதை மறந்து சோனியாவை நோக்கி தழுதழுக்கிறார் கருணாநிதி. தங்கபாலு நிலைக்கு கருணாநிதி வந்துவிட்டார். "காப்பாற்றுங்கள் தாயே' என்று தழுதழுத்தால் தன் முதிர்ந்த மகன் கருணாநிதியின் அழுகுரல் கேட்டு சோனியா தன் முடிவை மாற்றிக் கொண்டு சரணடைந்த மார்க்கண்டேயனைக் காக்க எமதர்மனைக் காலால் எட்டி உதைத்தது போல, ராஜபட்சவின் சட்டையைப் பிடித்து இழுத்து ஈழத் தமிழர்களைக் காக்கப் போரை நிறுத்தச் சொல்லிவிடுவாரா தாய் சோனியா? மண்டியிட்டதும் முட்டிக் கொண்டதும்தான் மிச்சம். இத்தகைய நாடகங்கள் ஈழத் தமிழர்கள் அழிந்து முடியும் வரையிலா? அல்லது இந்தத் தேர்தல் முடியும் வரையிலா? சிங்கள அரசில் அமைச்சர் பதவி வகிக்கும் கருணாகூட ஒரு தமிழர்தான். அவரும் தம் கட்சிக்குச் சில நியாயங்கள் பேசுகிறார். அவரும் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டுதான் அப்பாவித் தமிழ்மக்கள் அழிவதற்குச் சிங்களக் காடையர்களுக்குத் துணை போகிறார். இவரைப் பெற்றவர் புறநானூற்றுத் தாயாக இருந்தால், இவர் பாலுண்ட இரண்டு மார்பகங்களையும் அறுத்தெறிந்திருப்பார். யூத இனம் கொத்துக் கொத்தாக அரக்கன் ஹிட்லரிடம் அழிந்துபட்டது போல, ஈழத் தமிழினம் ராஜபட்சவிடம் கூட்டம் கூட்டமாக அழிகிறது. இலங்கை அரக்கர்களின் நாடு. பத்துத் தலைக்குப் பதிலாக ஒரு தலை என்பதுதான் மாறுதல்! ஐ.நா. சபை கண்ணீர் வடிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பரிவு கொள்கின்றன. அமெரிக்கா கூட பரிந்து பேசுகிறது! தில்லி அரசு மட்டும் இரங்க மறுக்கிறது. யாரோடோ உள்ள பழைய பகையை அப்பாவி மக்களிடம் தீர்த்துக் கொள்ள நினைப்பது காட்டுமிராண்டித் தனம் அல்லவா! பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதை மன்னிக்க முடியாத சீக்கியக் காவலாளி இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றார். நாடு பதைபதைத்தது. தில்லிக் காங்கிரஸ் ஆட்சி சீக்கிய இனத்தைப் பழி தீர்த்துக் கொள்ளக் களத்தில் இறங்கியது. சீக்கியர்கள் நான்காயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து டைட்லரைச் சீக்கியர்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணியே மத்திய புலனாய்வுத் துறையைக் கொண்டு, டைட்லர் குற்றமற்றவர் என்று அறிவிக்கச் செய்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மூடிவிட முயன்றார்கள்! பொறுப்பானா தன்மானச் சீக்கியன்? டைட்லர் தேர்தல் களத்திலிருந்து உடனடியாகக் காங்கிரஸôல் தூக்கிவீசப்பட்டுவிட்டார். அதைப் பற்றி மன்மோகன் சிங் கருத்துச் சொல்கிறார்: "சீக்கிய உணர்வுகளுக்குக் காங்கிரஸ் காட்டும் மரியாதை இது! திருத்திக் கொள்ளாமலே போவதைவிட காலம் கடந்தாவது திருத்திக் கொள்வது நல்லதுதானே! மன்மோகன் சிங் சொந்தமாக எடுத்த ஒரே ஒரு முடிவு சீக்கியர்களுக்கு ஆதரவாக நின்ற இந்த ஒன்றே ஒன்றுதான்! மாறாகப் போனால் தலைமை அமைச்சர் என்றாலும் பொற்கோயிலில் செருப்புத் துடைக்க வைத்துவிடுவார்கள்! சீக்கிய இனத்துக்குக் காட்டும் மரியாதையை காங்கிரஸ் ஏன் தமிழினத்துக்குக் காட்டவில்லை? காரணம், இனத்துக்கு ஒரு நெருக்கடி என்னும் நிலையில் சீக்கியத் தலைவர்கள் விலை போவதில்லை. பிரபாகரனைக் கைது செய்யப் போகும் ராஜபட்ச அவரை மரியாதையாக நடத்த வேண்டும் என்று கருணாநிதி கேட்டிருப்பது பிரபாகரனின் மீது கொண்டுள்ள அன்பைக் காட்டவில்லை. கருணாநிதி மனத்திலுள்ள அழுக்கைக் காட்டுகிறது! தமிழினத்தை அழித்தொழித்த ராஜபட்ச என்னும் பெயர் அலெக்சாந்தருக்கு நிகராகத் தெரிகிறது கருணாநிதிக்கு! பதுங்கு குழிக்குள்ளும் பாதுகாப்பு வளையத்துக்குள்ளும் அஞ்சி வாழும் ராஜபட்ச என்ன அலெக்சாந்தரா? விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைக் கொன்று ஒரு பெரிய நாட்டைப் பகைத்துக் கொண்டது தற்கொலைக்கு நிகரான ஒரு மாபெரும் ராஜதந்திர பிழை. தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிப் பார்க்காத ஒரு பேதைமைச் செயல் அது! ராஜபட்ச அரியணை ஏறும் வகையில் விடுதலைப் புலிகள் தேர்தல் நேரத்தில் கையாண்ட தவறான அரசியல் உத்தி என்று இன்னும் எத்தனை எத்தனையோ பிழைகள் ஓர் இயக்கத்தின் வரலாற்றில் நிகழ்ந்து விடுகின்றன. அதற்காகவெல்லாம் தமிழினத்தையே அழித்து ஈழத்தையே சுடுகாடு ஆக்கிவிடலாமா? பொழுது விடிந்து பொழுது போகிறவரை போர்க்களத்தில் சாவோடு மோதி வாழும் ஒருவன், கைது செய்யப்பட்ட பிறகு கருணாநிதி பரிந்துரையால் ராஜபட்ச தரப்போகும் மரியாதையை எண்ணியா வாழ்வான்? சுகபோகங்களை அடையத் தான் ஆள வேண்டும்; தனக்குப் பின் தன் மகன் ஆள வேண்டும் என்று எண்ணி வாழ்பவர் கருணாநிதி. விடுதலையை அடையத் தான் சாகவேண்டும்; தனக்குப் பின் தன் மகன் சாக வேண்டும் என்று எண்ணி வாழ்பவன் விடுதலை வீரன். வீரர்களை நிறுக்கக் கருணாநிதியின் தராசு தகுதியற்றது! புளியை நிறுக்கும் தராசு வேறு; தங்கத்தை நிறுக்கும் தராசு வேறு!


http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81!&artid=5|EQX8HcE1E=&SectionID=/qcbHa7MGUY=&MainSectionID=dL|cr5lWy8c=&SectionName=XQcp6iFoWTtatPsF70nSz9PqxwNlZpme&SEO=


"இடிந்த மனசு " வீடியோ படங்கள்

பகுதி 1:



http://www.youtube.com/watch?v=HHUqx4S5UGo



பகுதி 2:






http://www.youtube.com/watch?v=wYXw2bmZiX4


அன்புடன் வெ யுவராசன்.
www.thamizhthottam.blogspot.com

Friday, April 10, 2009

Hitler Re-born



CAUTION  !!!!

Weak Heart DO NOT SEE



Hitler Re-born
Visit Us @ www.MumbaiHangOut.Org

Note:

If you feel this mail pictures are very cruel so we no need to send others, then more number of people will be brutally killed by Srilankan Army in near future. Kindly forward to others outside Tamil Nadu and India, so that everyone in world can know about this cruelty.


Note:

மெயில் கொடூரமாக இருக்கிறது என்று...... நீங்கள் மற்ற மொழி காரர்களுக்கு நீங்கள் அனுப்பாமல் விட்டால்..... இதை விட பல கொடுரங்கள் எதிர் காலத்தில் ஈழத்தில் நடை பெரும்....... தயவு செய்து மற்ற மொழி காரர்களுக்கு அனுப்புங்கள்.... தமிழ் நாட்டினுள் மட்டும் இந்த செய்தி பரவுதனால் ஒரு பயனும் இல்லை…..

If you feel this mail pictures are very cruel so we no need to send others, then more number of people will be brutally killed by Srilankan Army in near future



Thursday, April 9, 2009

இந்தியா கொடுத்த நச்சுவாயு

இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 12:06.34 PM GMT +05:30 ]
 
விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.
அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.
 அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில்  கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது.
இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.
இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி  கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

போராளி ஒருவர் மீது நேரடியாக எரி நச்சுக்குண்டு பட்டு அவரின் உடல் கருகியதை படத்தில் காணாலாம்

எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்

 

 

தழிமினத்திற்கு ஆபத்து

அவசரமாக விடுதலைப்புலிகளின் வேவுப்பிரிவினர் இத்தகவலை அறிவித்திருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்கரையோர பிரதேசத்தில் எழு(07) குழிதோண்டும் (வைக்கோ இயந்திரம் நின்று பாரிய குழிகள் தோண்டப்படுகின்றது. அக்குழிகளில் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்ற அப்பாவி மக்கள் மீது இந்தியா கொடுத்த நச்சுவாயுவை வீசி கொண்றுவிட்டு இக்குழிகளி ல் போடும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.. இப் பணியில் ஈடுபடுவதற்கென தென்பகுதியில் இருந்து ஊர்காவற்படையினர் அலம்பில் பிரதேசத்தில் வந்து நிலை கொண்டுள்ளனர். அவர்களிற்கு ஒவ்வொரு நாளும் காலை, மாலை முகமூடி(மாஸ்க்) அணிவிக்கப்பட்டு கடற்கரையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
இரவு வேளை வேவுப்பணியில் போராளிகள் ஈடுபட்டிருந்த போது அங்கு நின்ற ஊர்காவற்படையினரின் உரைகளில் இருந்து இத்தகவல் மேலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இவ் கொடூரத்தை அரங்கேற்றுவதற்காகவே வன்னியில் சுமார் அறுபதினாயிரம் மக்கள் மட்டும் உள்ளனர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. உண்மையில் முல்லைத்தீவு அரச அதிபரின் கணக்குப்படி வன்னியில் உள்ள மக்கள்; தொகை இரண்டு லட்சத்துக்கும் மேல் என்று உத்தியோகப10ர்வமாக அறிவித்திருக்கின்றார்.
எனவே உடனடியாக சர்வதேசசமூகமும், புலம்பெயர் தமிழர்களும், குறிப்பாக தழிழக தலைவர்கள் இவ்விடயத்தில் ஒற்றுமையாக தலையிட்டு இங்கு நடக்கப்போகின்ற பாரிய மனித அவலத்தை தடுத்து நிறுத்துங்கள்.. இல்லையேல் ஒரு வரலாற்றுத் தமிழினம் பூண்டோடு அழிந்து விடும். இந்த நாகரிகமான புதிய நுற்றாண்டில் இப்படியொரு அவலம் தமிழனுக்கும், மனிதகுலத்திற்கும்.
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரிக்கு சந்தர்ப்பமாகவும், தழிழனுக்கு மரண இடியாகவும் அமையப்போகின்றது.



smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!