தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, May 12, 2009

உங்கள் வாக்குகளை பதிவுசெய்யவும்

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? என்ற வாக்குப் பதிவினை C N N ஊடகம் மேற்க்கொள்கிறது.


இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? எனசி.என்.என் வாக்குப் பதிவு நடத்திக்கொண்டிருக்கின்றது.

இதில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு உங்கள் வாக்குகளை அளிக்கலாம். சிறீலங்காவிற்கு ஆதரவானவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளதால் தற்போது சர்வதேசம் தலைலயிடத் தேவையில்லை என்ற கருத்திற்கே அதிகம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஒவ்வொரு தமிழுறுவுகளும் உங்கள் வாக்குகளை அளிக்கும்படி வெண்டகிறோம்.

உங்கள் வாக்குகளை பதிவுசெய்ய இங்கே அழுத்தி நுழையவும்.>>>


http://internationaldesk.blogs.cnn.com/2009/05/11/monday-poll/#comment-2431இலங்கையில் மனித உரிமை மீறல்களை ஜப்பான் தட்டிக் கேட்க வேண்டும்

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை ஜப்பான் தட்டிக் கேட்க வேண்டும்: மனித உரிமை அமைப்புகள்இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் அந்நாட்டு பிரதமர் பிரதமர் டாரோ அசோவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மனித உரிமை கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, சர்வதேச அனர்த்த நிறுவனம் மற்றும் மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் சர்வதேச பொறுப்பு மையம் ஆகிய உலகின் முதனிலை மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை விடுத்துள்ளன.

வன்னியில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடான ஜப்பான், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையிடம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
odumna.jpg

http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dRj0g0ecGG7h3b4j9EE4d3g2h2cc2DpY3d426QV3b02ZLu2e

பாரதிராஜா பாய்ச்சல்;இழவு வீட்டில் பாயாசம் கேட்கிறார் சோனியா

தமிழகமே இழவு வீடாகி விட்டது; இங்கு வந்து பாயாசம் கேட்கிறார் சோனியா: பாரதிராஜா பாய்ச்சல்; கறுப்புக்கொடி காட்டிய பாரதிராஜா உட்பட 250 பேர் கைதுஇலங்கையில் நடைபெற்று வரும் போரால் தமிழகமே இழவு வீடாகியுள்ளது. இங்கு வந்து பாயாசம் கேட்கிறார் சோனியா காந்தி. இலங்கையில் போரை நிறுத்தா விட்டால், இனி அவரால் தமிழகத்திற்குள் நுழையவே முடியாது என்று நேற்று சென்னையில்  நடந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின்போது  இயக்குநர் பாரதிராஜா ஆவேசமாக கூறியுள்ளார். 

அவர் தொடர்ந்து பேசியதாவது:-

ஒரு நரியின் குணத்துடன் தமிழ் இனத்தை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்பதற்காக இலங்கையில் சோனியா காந்திதான் போரை நடத்திக்கொண்டிருக்கிறார். இலட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இலட்சக்கணக்கான பெண்கள் தாலியை இழக்கின்றனர். ஹிட்லர் காலத்தில் நடந்ததைவிட மிக மோசமான இனப்படுகொலை இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையை உலகமே தட்டிக் கேட்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஒப்பாரி ஓலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்றுவரை கேட்கவில்லை.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்காக சோனியா காந்தி இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இலங்கையில் போரை நடத்துவதே சோனியா காந்தி என்பதால்தான் அவர் தமிழர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார்.

இலங்கைத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் சோனியாவைக் கண்டித்து நாங்கள் ஜனநாயக வழியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துகிறோம். ஆனால், சோனியா காந்தியோ கொல்லைப்புறம் வழியாக ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடலுக்குச் செல்கிறார்.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இலங்கையில் மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அங்கு உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய சோனியா நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் இனி எக்காலத்திற்கும் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடியாது.

இலங்கையில் நடைபெற்று வரும் போரால் தமிழகம் இழவு வீடாக மாறிவிட்டது. ஆனால் இங்கு பாயாசம் கேட்பதற்காக சோனியா காந்தி வருகிறார். அவர் உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர் ஆவேசமாக கூறினார்.

சோனியாவுக்கு கறுப்புக்கொடி காட்டிய டைரக்டர் பாரதிராஜா உட்பட 250 பேர் கைது

இதேவேளை, "இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணாத சோனியாவே திரும்பி போ' என்ற முழகத்துடன், தமிழ் உணர்வு அமைப்பாளர்கள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சைதாப்பேட்டை பனகல் கட்டிடம் அருகே நடந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில்,  டைரக்டர் பாரதிராஜா, பழ.நெடுமாறன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.
மெமோரியல் அரங்கம் அருகே, கொளத்தூரைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினர், சோனியா வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவங்களில் மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.பின் அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dHj0g0ecGG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d426QV3b02ZLu2e#


61 ஆண்டு கால தமிழர் படுகொலை வரலாறு

61 ஆண்டு கால தமிழர் படுகொலை வரலாறு: ஒரு முழுமையான தொகுப்பு

http://www.puthinam.com/full.php?2b0QtTe0dCi3c0ecCE8V4b4k4Aj4d3c4f3cc2Hn13d42bQO3b037Ms3e

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசு தலைமையில் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு வரலாறு நீண்டது. பல வடிவங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இன அழிப்பில் முதன்மையான வடிவமாக இருந்து வருவது நேரடியான படுகொலைகளாகும். இந்த படுகொலைகளின் அத்தியாயங்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறாக கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரியவைகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்து வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) ஒரு தொகுப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த படுகொலைகள் நடைபெற்ற சூழ்நிலைகள், அவை தொடர்பான சாட்சியங்கள் என்பன முடிந்த அளவிற்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

அந்த சாட்சியங்கள் தாம் நேரடியாகப் பார்த்ததாகக் கூறிய விடயங்கள் மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப் படுகொலைகளின் சில பகுதிகளை மட்டுமே ஒரு சாட்சி கண்ணால் பார்த்திருக்க முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த படுகொலைகள் எங்கு நடைபெற்றன என்பது தொடர்பான வரைபடமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் - படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர என மக்களால் எழுப்பப்பட்ட நினைவு கட்டடங்களின் படங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் இறுதி பக்கங்களில் - படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஓவ்வொரு படுகொலைகள் தொடர்பான உண்மையான பல தகவல்களை மேலும் விபரமாக ஆராய்வதாக இருந்தால் அதற்கு மேலதிக நேரமும், தகவல்களும் தேவை. ஆனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் அவற்றை இப்போது செய்வது கடினமானது.

இருந்தாலும் தற்போதைய சூழலில் எந்த அளவுக்கு முழுமையாகத் தகவல்களைத் திரட்ட முடியுமோ அந்த அளவுக்கு முழுமையாக தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன. 

சுட்டி

http://www.tamilnaatham.com/pdf_files/2009/may/neshor_20090511.pdf

செருப்பு வீசும் தூரம்......!

செருப்பு  வீசும் தூரம்......!

odum.jpg

 [தமிழ்நாட்டிலிருந்து அ.பொன்னிலா]ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடா்பாக தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனமும் புதுடில்லி ஆட்சியாளர்களின் தமிழ்நாட்டு மக்கள் மீதான ஏளனமும் தொடர்பாக அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா.

"இராணுவச் சீருடையில் வந்த அவர்கள் மூன்றாவது பெண்ணின் உடைகளைக் களைந்தபோது நான் எனது கண்களை மூடிக்கொண்டேன். இம்மாதம் என் ஊதியத்தில் ஏதேனும் வெட்டு விழுமோ என்பதை நினைத்தபோது இறுக்க மூடிய கண்களை நான் கடைசி வரை திறக்கவே இல்லை."

ஜேர்மனியின் நாஜி முகாமில் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போதோ,
பாலஸ்தீனத்தில் இன்று அமெரிக்க,
யூத அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவோ,

ருவாண்டாவின் டுட்சிக்களுக்கு எதிரான ஹுட்டுக்களின் படுகொலைக் காலங்களின் போதோ எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை.

ஈழத்தில் அன்றாடம் இனச் சுத்திகரிப்பில் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது அதைப் பார்த்து மௌனமாக இருக்கும் தமிழ்நாட்டு ஊடகங்களையும், ஊடக நண்பர்களையும் நினைத்த போது நான் எழுதித் தொலைத்த கவிதைதான் இது,

மௌனம் என்பதன் நேரடிப் பொருளான சம்மதம் என்பதை இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் நிலையில் இருந்து நாம் புரிந்து கொள்கிறோம்.

ஆனால், சம்மதம் என்கிற நிலையையும் கடந்து இன்றைய இந்தியா ஒட்டு மொத்த ஈழத் தமிழர் அழிப்பிற்கும் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குகிறது என்பதும் உண்மையாகி இருக்கிறது.

ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நெருக்கடியோடு ஊடக முதலாளிகளின் தொழில் ரீதியான தொடர்பு என்று இன்று ஆளும் திமுகவின் விருப்பங்களுக்கு ஏற்ப ஈழத்தில் அன்றாடம் கொல்லப்படும் மக்களின் செய்திகள் தமிழக ஊடகங்களில் முக்கியத்துவமற்று எழுதப்படுகின்றன.

கலைஞர் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களோ நேரடியாக இலங்கையில் போரே நடைபெறவில்லை என்பது போன்று பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அல்லது வவுனியா முகாமில் இராணுவ வீரன் ஒரு தமிழ் குழந்தைக்கு பிஸ்கெட் கொடுக்கிற படத்தைப் போட்டு சென்னையில் இருக்கும் சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரி அம்சாவுக்கு வாலாட்டிக் கொண்டிருப்பதன் மூலம் கொல்லப்பட்ட பல நூறு ஈழத் தமிழ் குழந்தைகளின் கொலைகளை கேள்விகளற்ற ஒன்றாக பெரும்பாலான தமிழ்நாட்டு ஊடகங்கள் மாற்றுகின்றன.

கொல்லப்படும் மனித உயிர்கள் குறித்த அக்கறை சிறிதளவு கூட இவர்களிடம் இல்லாமல் போனதை நாம் சமகாலத்தில் எதிர்கொள்கிறோம்.

தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனம் இப்படி இருக்க, வட இந்திய ஆங்கில ஊடகங்களோ போர் நடைபெறும் பூமியான ஈழத்துச் செய்திகளில் இலங்கை அரசாங்கம் எதைக் கொடுக்கிறதோ அதை அப்படியே வாந்தி எடுத்து கொட்டிக் கொண்டிருக்கின்றன.

இவர்கள் புலிகளின் தோல்விக்கான நேரம் ஒன்றை கணித்துக்கொண்டு அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் தோல்வியை ஒட்டுமொத்த ஈழ மக்களின் தோல்வியாக மட்டுமல்லாமல், இந்தியத் தமிழ் மக்களின் தோல்வியாகப் பார்க்கிற பார்வையின் வெளிப்பாடுகள்தான் இந்த ஆங்கில ஊடகங்களில் அப்பட்டமான இனவாதமாக உருவாகி இருக்கிறது.

இது எந்த அளவுக்கு மோசமான இனவாதச் சித்தரிப்பாக மாறியிருக்கிறது என்றால் வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக போராடிய போது அதை பதிவு செய்கிற ஆங்கில ஊடகங்கள் அதை (pro tamils) அதாவது தீவீர தமிழ் ஆதரவாளர்கள் என்று பதிவு செய்கிறார்கள்

தமிழ்நாட்டில்,  தமிழர்களால்,  ஈழத் தமிழர்களுக்காக நடத்துகிற போராட்டத்தை  தீவிர தமிழ் ஆதரவாளார்கள் என்று பதிவு செய்கிற திமிர் எங்கிருந்து வருகிறது.

இந்தியத் தமிழர் மீதான வெறுப்புதான் ஈழத் தமிழர் படுகொலைச் செய்திகளையும் பதிவு செய்ய மறுக்கிறது.

ஈழத்தில் புலிகள் வலுப்பெற்றால் அது இந்தியத் தமிழர்களுக்கான எழுச்சி அரசியலாக மாறிவிடும் என்றும் பார்க்கப்படுகிறது.

தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் என்றால் சென்னையிலேயே செட்டில்மெண்ட்.

அதுவே ஆங்கிலம் பேசும் மேதாவிப் பத்திரிகையாளர்கள் என்றால் கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள்.

பெரும்பாலான  ஊடகவியாலாளர்கள் இலங்கை அரசால் வழங்கப்படும் சில நூறு டாலர்களுக்கு விலை போய்விட்டார்கள்.

'மக்கள்' தொலைக்காட்சி, அரசியல் காரணங்களுக்காக ஈழத்துச் செய்திகளுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் 'ஜெயா' தொலைக்காட்சி தவிர்த்து பெரும்பாலான தமிழக ஊடகங்களில் நிலை இதுதான்.

இன்றைய தமிழகத்தில் இனப்படுகொலை பற்றிய விழிப்பு நிலை எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

அதே நேரத்தில் போருக்குப் பிந்தைய பேச்சான தனி ஈழம், அல்லது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்படுகிறது. பேசப்படுவதோடு ஈழம் முழுமையான தேர்தல் பிரச்சினையாக மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழக அரசியல்வாதிகளிடம் இன்றிருக்கும் வேகம் வாக்கெடுப்பு முடிந்த பிறகு இருக்குமா? என்பதும் தெரியாது ஆனால் நிரந்தரமான ஈழ விடுதலை ஆதரவாளர்களை கவர்ந்திருக்கும் ஜெயலலிதாதான் இன்று இவர்களுக்கு உற்சாக டானிக்.

தமிழ்நாடு தொடர்பான அச்சம் டில்லி காங்கிரஸ்காரர்களிடம் எந்த அளவுக்கு பரவிக் கிடக்கிறது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஒன்று சோனியாவின் வருகைக்காக சென்னை தீவுத்திடலில் பொதுக்கூட்ட மேடை ஒன்று அமைக்கும் பணி நடைபெற்றது. மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலரை அழைத்து மேடையை நோக்கி செருப்பை வீசச் சொல்லி செருப்பு விழுந்த தூரத்தை  அளந்து அந்தப் பகுதிக்கு வெளியே  பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள், அமரும் பகுதியை அமைத்தார்களாம்.

அது போலவே பிரதமர் மன்மோகன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தபோது பத்திரிகையாளர்கள் யாரும் கையில் எடுத்து வீசும் படியான எந்தப்பொருளையும் சந்திப்பு அறைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

செல்போன், தண்ணீர் பாட்டில், போன்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததோடு மன்மோகன் அமரும் மேடைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் மிக நீண்ட இடைவெளி இருந்தது.

சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் மக்களுக்கும் இடையே மேடைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த இடைவெளிதான் இனப்படுகொலை மீதான தமிழக மக்களின் கோபம்.

இந்த இருவருமே சென்னையை விட்டுக் கிளம்பிய பிறகு காவல்துறை அதிகாரிகள் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான் தமிழக மக்களின் இனப்படுகொலை மீதான தார்மீக ரீதியிலான கோபம்.

சரி, மன்மோகன் எதற்காக சென்னைக்கு வந்தார். வந்து என்ன சொன்னார். என்றால் அவரது பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதானமாக இருந்தது ஐந்து விடயங்கள்தான்.

1. வடக்கு மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற இந்திய இராணுவத்தினர் விரைவில் இலங்கைக்குச் செல்வார்கள். இந்திய இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றிய பிறகு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் விரைவில் அவர்களின் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

2. இப்போது எங்கள் கவனமெல்லாம் போரால் பாதிக்கப்பட்டு முகாம்களுக்குள் இருக்கும் மக்களைப் பற்றித்தான். அவர்கள் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பது பற்றித்தான்.

3. இலங்கை ஒரு பூரண இறையாண்மை உள்ள நாடு அப்படியான தேசத்திற்குள் நாம் தலையிடுவது முடியாது. அண்டை நாட்டிற்கு இராணுவ உதவிகள் செய்வதும் பயிற்சிகள் கொடுப்பதும் சகஜமான ஒன்று.

4. இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று ஒன்றுபட்டு இலங்கைக்குள் வாழ இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

5. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.
 
என்பதான ஐந்து கருத்துக்கள் பொதுவாக இருந்தது.

மேலே உள்ள ஐந்து கருத்துக்கள். குறித்தும் நாம் பல முறைப் பேசியாகி விட்டது.

இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி செய்யவில்லை என்று இந்தியத் தரப்பும் இதுவரை மறுக்கவில்லை. மாறாக வெளிப்படையாகவே ஒத்துக்கொள்கிறது.

அது போல போர் நிறுத்தம் குறித்தும் இந்தியத் தரப்பு இதுவரை இலங்கை அரசிடம் கேட்கவில்லை.

சென்னைக்கு வந்த மன்மோகன் மறந்தும் போர் நிறுத்தம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

மாறாக எப்போதெல்லாம் இந்தியத் தரப்பினர் கொழும்புவுக்கு சென்று பேசி வந்தார்களோ அப்போதெல்லாம் ஈழ மக்கள் மீதான இனப்படுகொலை முழு வீச்சுப் பெற்றது என்பதற்கு மிகச் சரியான சான்றாக மன்மோகன் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்ற சில மணி நேரங்களுக்குள் இலங்கை இராணுவம் தன் கொடூரத் தாக்குதலை தொடங்கி விட்டது. 

கனரக ஆயுதங்களைக் கொண்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை இரக்கமற்ற முறையில் கொன்று குவித்திருக்கிறது.

நாம் தொடர்ந்து போர் நிறுத்தம் கேட்கிறோம். இவர்களோ கொல்லப்படுகிற நிர்க்கதியாய் விடப்படுகிற மக்களுக்கான நிவாரணங்கள் குறித்துப் பேசுகிறார்கள்.

அப்படியான நிவாரணங்களைச் செய்கிற யோக்கியதை இந்திய அரசுக்கோ தமிழக அரசிற்கோ இருக்கிறதா? என்றால் கொலைக்கு துணை போய்விட்டு சவங்களை அடக்கம் செய்ய பெட்டி தயாரித்து அனுப்புகிற செயலைத்தான் இந்தியா இப்போது ஈழத்தில் செய்து கொண்டிருக்கிறது.

இலங்கை இறையாண்மை உள்ள தேசம் என்றால்? ஈழ மக்கள் மீதான படுகொலையை தடுக்க இலங்கையின் இறையாண்மை மன்மோகனை தடுக்கும் என்றால் அப்படியான இறையாண்மை உள்ள தேசத்தில் கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற போர்வையில் இராணுவ வீரர்களை மட்டும் அனுப்புவது எந்த வகையில் இந்திய இறையாண்மைக்கு உகந்தது என்று ஒரு கேள்வியை யாராவது ஒரு பத்திரிகையாளர் கேட்பார் என்று எதிர்ப்பார்த்தோம்.

அதற்கான ஊடகச் சூழலே தமிழகத்தில் இல்லாதபோது நாம் மட்டும் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.

அண்டை நாட்டுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது சகஜமென்றால் பாகிஸ்தானுக்கு இதே பயிற்சியை இந்தியா வழங்குமா?

அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியமைத்த பிரதமர் பிரசந்தாவின் இராணுவத்துக்கு ஏன் இந்தியா பயிற்சியளிக்கவில்லை? மாறாக நேபாளம் சீனாவோடு நெருங்குகிறது என்பதற்காக நேபாளத்தில் இன்று அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கியதே இந்தியாதானே?

நேபாளம் எந்த சீனாவோடு நெருங்குகிறதோ அதே சீனாவோடு இலங்கையும் நெருங்குகிறதே? இந்தியாவின் இந்துப் பிராந்திய நலன் கருதியாவது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே? ஏன் சீனா இந்தியாவின் வடக்கு - கிழக்கில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இப்பிராந்தியத்தின் சீனாவிடம் மோதி வெற்றிபெற முடியாது. என்கிற அச்சம் தானே இலங்கையில் இனப்படுகொலையில் இந்தியாவை கை நனைக்கத் தூண்டுகிறது.

மன்மோகன் வந்து சென்ற ஒரு இரவுக்குள் 2 ஆயிரம் கொலைகள். மறுநாள் மாலை சென்னை தீவுத்திடலில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிற சோனியா காந்தியோ இந்தியாவின் அழுத்தங்களால் இலங்கையில் போர் நின்றிருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

எவ்வளவு துணிச்சல் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் இவர்கள் சொல்வதன் மூலம் பொய்யை மெய்யாக்கப் பார்க்கிறார்கள்.

ஒரு பிரதமர் பொய் பேசவும், பிரதமரை இயக்கும் ஒரு செல்வாக்குள்ள பெண்மணி பொய் பேசவும் பின்னால் இருந்து உற்சாகமளிப்பது தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிதான்.

இனப்படுகொலையில் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டிய முதல்வரே பொய் சொல்கிறார். டில்லியில் இருந்து வந்து செல்கிற நாம் சொல்வது மட்டும் எப்படி பொய்யாக இருக்கும் என்று சோனியாவும், மன்மோகனும் பொய் சொல்கிறார்கள்.

பொய்யை உண்மை போலப் பேசுகிறார்கள்.

வளைக்குள் சிக்கியிருக்கும் முயல்கள் இரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து இவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.

இந்த நூற்றாண்டில் இது மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம். புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் இவர்களே!

இன்றைக்கு ஈழம் என்கிற சுதந்திரமான தேசீய இன விடுதலைக் கருத்தியல் தமிழகத்தில் மிகவும் வலுப் பெற்றிருக்கிறது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் ஒரு புதிய தலைமுறை உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது.

முப்பதாண்டுகால ஈழ விடுதலை ஆயுதப் போரில் இது மூன்றாம் தலைமுறைக்கான போராட்டம். அவரவர் வழியில் அவரவரால் இயன்ற அளவு போரடுவோம்.

இந்தியாவின் விருப்பத்திற்கிணங்க அல்ல, இரத்தவெறி கொண்ட பாசிச பயங்கரவாத இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கிணங்க அல்ல மாறாக நமக்காக நமது மக்களுக்காக குரல் கொடுப்போம்.

நமது மக்களை இனப்படுகொலைகளில் இருந்து காப்போம்.

உலகத்தை விழித்திருக்கச் செய்வோம்.

முதலில் போர் நிறுத்தம் செய்!

மக்களை அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பு.

இலங்கை இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்று.

சுதந்திர தமிழீழத்தை அங்கிகரி..

இதுதான் இன்றைய உலகின் முன்னால் நாம் முன்வைக்க வேண்டிய முழக்கம்.

(இக்கட்டுரைக்கு பொருத்தமான ஓவியம் ஒன்றை வரைந்து தந்த நண்பரும் மாணவருமான புதியவனுக்கு நன்றி)

அ.பொன்னிலா

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: aponnila@gmail.com

http://www.puthinam.com/full.php?2b34OOA4b3dg6Dp24d01VoU3a03O4AAb4d34SmA4e0dq0Mtjce0cf1e02cceKcYe3e


புலிகள் பேச்சு:சிறிலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது


அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றுவதில் சிறிலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது: விடுதலைப் புலிகள்LTTE_bike_platoon_north_of_Killinochini_may_2004.jpg


அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, தான் மேற்கொள்ளும் இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவல நிலையையும் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசு மறைத்திருக்கின்றது எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றது.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"தமிழர்களுக்கு எதிராக தாம் முன்னெடுக்கும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சிக் குழுவினரைக் கைது செய்திருப்பதன் மூலமாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு உணர்த்தியிருக்கின்றது.

ஊடக சுதந்திரத்தை மீறும் வகையிலான சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 'சனல் - 4' தொலைக்காட்சிக் குழுவினருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் என்ன நடைபெறுகின்றது என்பதை வெளிக்கொணர முயன்ற அவர்களுடைய 'மனிதாபிமானப் பணியை'யிட்டு ஈழத் தமிழர்கள் அவர்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

அனைத்துல சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது. தன்னுடைய இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவலத்தையும் சிறிலங்கா அரசாங்கம் வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்திருக்கின்றது. வடக்கு - கிழக்குப் பகுதியில் இருந்து வரும் செய்திகளைப் படிக்கும் போது, கேட்கும் போது பார்க்கும்போது வெட்கப்பட வேண்டியிருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கமானது தன்னுடைய இனப்படுகொலை போரை தற்போது முழு அளவில் பல முனைகளில் முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து அந்த தாயகத்தை இல்லாமல் செய்வதில் இருந்து தமிழ் மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் பல்குழல் எறிகணை மற்றும் கனரக  எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் கல்வி மற்றும் வாழ்வாதாரங்களின்றி தமிழர்களைப் பலவீனப்படுத்துவது மற்றும் தடுப்புக்காவல் முகாம்களில் உள்ளவர்களை பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், அனைத்துலக சமூகம் பெரும்பாலும் மெளனமாகவே இருக்கின்றது.

தெரிவு செய்யப்பட்ட சில முகாம்கள் மட்டுமே அனைத்துலக சமூகங்களின் அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கும் காண்பிக்கப்படுகின்றது. மிகவும் மோசமான நிலையில் உள்ள ஏனைய முகாம்கள் உலகத்தின் கண்களில் இருந்தும் காதுகளில் இருந்தும் மறைக்கப்படுகின்றன.

இதனைவிட இடம்பெயர்ந்தவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள 'அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதி'களில் தடுத்துவைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வவுனியாவை விட இந்தப் பகுதிகளில் தடுத்து வைக்கப்படுபவர்களை பார்வையிடுவது ஊடகவியலாளர்களுக்கு மிகவும் சிரமமானதாகும்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், பட்டினி போடுதல், ஊட்டச்சத்தின்மை, சுகாதாரம் போன்றன தமிழர்களுக்கு எதிரான போரில் சாட்சிகள் இல்லாத ஆயுதங்களாக சிறிலங்கா படையினரால் பயன்படுத்தப்படுகின்றது.

இராஜதந்திர வழிமுறைகளுக்கு அப்பால் சென்று, 'போரற்ற பாதுகாப்பு வலய' பகுதியில் உள்ள மக்களுக்கு வானூர்தி மூலம் நிவாரணப் பொருட்களைப் போடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உலகின் மனிதாபிமான சமூகத்தை நாம் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், சிறிலங்கா படைகளின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களை நடத்துமாறும், அவற்றைக் கண்காணிக்குமாறும் கோருகின்றோம்.''

இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/full.php?2b34OOA4b3dg6Dp24d01VoU3a03O4AAb4d34SmA4e0dg0Mtjce0cf1e02cceKcYe3e


சீமான் பேச்சு:இங்கு தமிழ்ப் பெண்களின் மார்புகள் கிடைக்கும் என்றவன் சிங்களன்.


ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிரஸ்": சீமான் குற்றச்சாட்டு


"ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிரஸ் கட்சியே" என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது ஏன்? விளக்கப் பொதுக்கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இயக்குநர்கள் சீமான், ஆர்.கே. செல்வமணி, சந்தனக்காடு கௌதமன், தாமிரா, பாவலர் அறிவுமதி, பாவலர் சினேகன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இயக்குநர் சீமான் உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு சக்திகளுக்கிடையே போர் நடக்கிறது. ஒன்று பணம். மற்றொன்று இனம். இனத்திற்காக ஒன்றும் செய்யாதவர்கள் தமிழினத்தின் முன் வாக்குக் கேட்டு வரும்போது ஒரு வாக்குக்கு 200, 300, 500 ரூபாய் கொடுத்து வென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுதான் கண்ணியமிக்க ஜனநாயகமா?.

தமிழ் சொந்தங்களின் குழந்தைகள் பசியால் வாடி சாவும்போது பால் கொடுக்க வராதவர்கள், வாக்குக் கேட்டு வரும்போது பணத்தைக் கொடுத்துவிட்டு பால் மீது சத்தியம் வாங்குகிறார்கள். தமிழச்சிகளின் மானத்தை காக்க சீலை கொடுக்காத நீங்கள், வாக்குகளை பொறுக்க சீலை கொடுக்கிறீர்களே? உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? அசிங்கமாக இல்லையா?.

கடந்த எத்தனையோ தேர்தல்கள் பல சிக்கல்கள் முன்னிறுத்தப்பட்டு தேர்தலை சந்தித்திருக்கிறோம். இந்தத் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டிருப்பது தமிழனின் உயிர் சிக்கல். தமிழனின் உணர்வை உரசினால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை சொல்வதற்காக இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன உணர்வுள்ள தமிழர்களே!, மான உணர்வுள்ள தமிழர்களே!

இந்த ஒருமுறை மட்டும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள். கடந்த தேர்தல்களில் கட்சிக்காக வாக்களித்தீர்கள். சாதிக்காக வாக்களித்தீர்கள். மதத்திற்காக வாக்களித்தீர்கள். இந்த ஒருமுறையாவது கட்சி, சாதி, மதம், பணம் இவையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு கை சின்னத்திற்கு வாக்களிக்காமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

போற்றுதலுக்குரிய மருத்துவர் இராமதாஸ், அண்ணன் வைகோ, அருமைச் சகோதரர் திருமாவளன், பொதுவுடமைக் கட்சிகளை சேர்ந்த தா.பாண்டியன், நல்லக்கண்ணு, து. இராஜா, இவர்களெல்லாம் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்று சொல்கிறார்கள். தமிழர்களின் வாழ்வு நல்லபடியாக அமைய வேண்டுமானால் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு ஒன்றுதான் என்று பெருமகள் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். அந்தச் சொல்லுக்காகத்தான் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்தோம்.

தமிழ் ஈழத்திற்கு எதிராக ஜெயலலிதா இருக்கும்போது அவரை விமர்சித்து முழங்கியவன் இந்த சீமான். தேர்தலுக்காக தமிழீழம் பற்றி பேசும் ஜெயலலிதா தேர்தலுக்குப் பிறகு பேச மாட்டார் என்று கூறுகிறார்கள். பேசட்டும், பேசமால் கூட போகட்டும் அவர்கள் தேர்தலுக்காகவாவது தமிழீழம் அமையும் என்று சொன்னார்கள். ஆனால், நீங்கள் தேர்தலுக்காகவாவது ஈழம் பற்றி பேசவில்லையே.
தமிழினத்தின் முன் பொய் சொல்லிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது. வேறொரு முறை வந்தால் அந்த மக்களை நாடி வந்தால் முன்பு சொல்லிவிட்டு செய்யாததை கேள்வி கேட்பார்கள், அதற்காக தண்டிப்பார்கள்.

ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஈழத்தை பெற்றுத்தரக்கூட தேவையில்லை. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் களமாடி அங்கு புதைந்துபோனார்கள். நெஞ்சில் உரம்முள்ள மறத்தமிழர் பிரபாகரன் கட்டிய எழுப்பிய தேசிய போர்ப்படை மூலம் இழந்த தமிழீழ மண்ணை மீட்டெடுப்பார்கள். அதற்கு தடையாக இருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான் புலிகள் மீதான தடை. புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கிவிட்டால் உலகமெல்லாம் நீக்கிவிடும்.

ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் அரிசி தரவேண்டாம், பருப்பு தரவேண்டாம், மண்ணெண்ணெய் தரவேண்டாம். ஒன்றே ஒன்றை மட்டும் செய்யுங்கள், புலிகள் மீதான தடையை நீக்குங்கள். அவர்களே ஈழத்தை வென்றெடுப்பார்கள். தமிழினம் கொடுமைக்கு உள்ளாகும்போது பிறந்த உண்மையாக இருக்கவே போராடி வருகிறேன்.

தமிழர்களே நீங்களும் தமிழினத்திற்கு இந்தத் தேர்தலில் உண்மையாக இருந்து வாக்களியுங்கள். தமிழனின் மான உணர்வு செத்துப்போய்விடவில்லை என்பதைக் காட்ட கை சின்னத்தில் வாக்களிக்காதீர்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.
காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக செய்யப்படும் பரப்புரை மட்டுமல்ல இந்தக் கூட்டம், தமிழனின் உள்ள உணர்ச்சிகளை எழுப்புவதற்கான பரப்புரை கூட்டம் இது. ஒரு காக்கையின் மீது கல்லெறிந்தால் நூறு காக்கைகள் கத்துகின்றன.

ஒரு நாயில் கல்லெறிந்தால் அந்தப் பகுதிகளும் அத்தனை நாய்களும் குரைக்கின்றன. வரிப்புலிகள் காக்கப்பட வேண்டும், கரடி இனம் அழிகின்றன அவை காக்கப்பட வேண்டும், வனவிலங்குகள் அழிக்கின்றன அவை காக்கப்பட வேண்டும் என்று கூறி காப்பகங்களை அமைத்து விலங்குகளை காக்கின்றனர். ஆனால், ஈழத்தில் சக மனிதன் சாகிறான். அதைத் தடுக்க உலகத்தில் உள்ள யாரும் முன்வரவில்லை.

இலங்கையில் தெருக்கள் தோறும் புத்தர் சிலைகள் சிரிக்கின்றன. அவற்றின் காலடியில் தமிழர்களின் பிணங்கள் கிடக்கின்றன. அங்கே தமிழனின் குருதி தெருக்களில் ஓடுகிறது. கறிக்கடை பக்கம் நாம் போகும்போது குருதி வாடை வீசுகிறது என ஒதுங்கிச் செல்கிறோம். ஆனால், அங்கே தமிழினம் உள்ள தேசத்தில் குருதி வாடை வீசுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக வாழ விரும்புகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. என் பாட்டன், அப்பன் வாழ்ந்த பூமியை அயலவன் அபகரிக்கக்கூடாது. என் தாயின் மடியில் மாற்றான் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அதை தடுப்பதற்காகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆய்தம் ஏந்தி போராடி வருகிறார்கள். இதனை பயங்கரவாதம் என்று எப்படி சொல்வது?.
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடுகிறான். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறுகிறீர்களே? அவர்கள் எப்போது ஆயுதம் ஏந்தினார்கள். நான் இறந்தால் என் கண்கள் அப்படியே வைத்துப் புதைக்காதீர்கள். பார்வையற்ற யாருக்காவது அதனை பொருத்துங்கள்.

தமிழீழம் மலருவதை என் கண்களால் பார்க்கிறேன் என்று சொன்னான் குட்டி மணி. ஆத்திரமடைந்த சிங்களவன், குட்டிமணியின் கண்களை பிடுங்கி தனது பூட்ஸ் காலால் மிதித்தான் சிங்களன். இங்கு தமிழ்ப் பெண்களின் மார்புகள் கிடைக்கும் என்று எழுதி வைத்தவன்தான் சிங்களன்.

தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிறீ என்ற சிங்கள எழுத்தை எழுதினான் சிங்களவன். இவற்றையும் கண்ட பிறகுதான் எந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு தமிழ் இனத்தை வன்கொடுமை சிங்களவர்கள் செய்கிறார்களே, அதே ஆயுதத்தை வைத்து எமது மக்களை காக்கப் போகிறேன் என்ற வைராக்கியத்தில் ஆயுதம் ஏந்தி தமிழீழ தேசியப் போர்ப்படையை உருவாக்கினான் பிரபாகரன். இப்போது எண்ணிப் பாருங்கள் பிரபாகரன் எந்த நிலையில் ஆயுதம் ஏந்தினான்.

இந்த உண்மையைச் சொன்னால் அதை பொறுத்துக் கொள்ளாத நீங்கள் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்?.
இலங்கை இறையாண்மை மிக்க நாடு என்று கூறும் தலைவர்களே, ஈராக்கில் மக்கள் செத்தபோது சிந்தை கலங்கி கதறியழுதோம். பாலஸ்தீனத்தில் குண்டு விழும்போது கதறியழுதோம்.

இதேபோலத்தான் பக்கத்து ஈழத்தில் சக மனிதன் சாவதை எண்ணி அழுகிறோம். அதனை மக்களுக்கு தெரியப்படுத்த பரப்புரை செய்து வருகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. பாலஸ்தீனத்தில் குண்டு விழும்போது பதறித் துடிக்கும் நீங்கள், பக்கத்து ஈழத்தில் குண்டு விழுந்து துடிக்கும் தமிழனுக்கு ஆதரவாக கேட்காதது ஏன்?.

ஈழத்தில் பிறந்த தமிழினம் செய்த பாவம் என்ன? அவர்கள் இத்தனை கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் 100 கிராம் சீனி கிடைக்கும். இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை ஏன்? அங்கு வாழும் ஒரு தலைமுறை மின்சாரத்தை காணாமல் வாழ்கிறதே ஏன்? இது இங்குள்ள தலைவர்களுக்குத் தெரியாதா?.

இலங்கை இறையாண்மை உள்ள நாடு அது ஒரு தனி தேசம். அங்கு நடப்பது பற்றி நான் பேசமுடியாது என்று கூறும் தலைவர்களை அப்புறம் அங்கு அமைதிப்படையை எப்படி அனுப்பினீர்கள்?

தமிழினத்திற்கு எதிராக எவன் பேசினாலும், எவன் செயல்பட்டாலும் கதி இதுதான் என்பதை சொல்வதற்காக தமிழர்களே இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புலிகளை அழித்தொழித்துவிட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தருவதாக ராஜபக்ச சொல்கிறான். பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழ் மக்களுக்குச் சோறு கொடுத்தானா அவன்.
பாதுகாப்பு வலையப் பகுதிக்கு செல்ல அனுமதியுங்கள் என்று சொல்பவர்களே, அங்கு செல்பவர்களின் கதி என்ன? பரிசோதனை என்ற பெயரில் அங்கே உறவுகளுக்கு மத்தியிலே பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்படுகிறார்கள். அந்த இடமா அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். அந்த மண்ணில் தமிழர்களுக்கு உடுத்த மாற்று உடையில்லை. பட்ட காயத்திற்கு போட மருந்து இல்லை.

பாதுகாப்பு வலையப்பகுதிக்கு வந்தவர்களுக்கு சிங்களவன் என்ன செய்து கொடுத்தான். அவன் செய்தது ஒன்றே ஒன்று மட்டும்தான். உறவுகளை சிதைத்து தனி சிறை வைக்கிறான். அப்படிப்பட்ட சூழலில் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத் தரப்படும் என்று சொல்பவர்களே, போரை நிறுத்த முடியாத நீங்கள் தமிழர்களுக்கு சம உரிமை எப்படி பெற்றுத் தருவீர்கள்?.

காவிரி ஆற்று தண்ணீர், முல்லை ஆற்றுத் தண்ணீர் அண்டை மாநிலங்களில் இருந்து பெற்றுத் தராத நீங்கள், மீனவர்களின் சாவை தடுக்காத நீங்கள், ஈழத்தில் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத் தருவேன் என்று கூறுவதை எப்படி நாங்கள் நம்புவது?.

60 ஆண்டுகளாக பல கொடுமைகளை அனுபவித்து வந்த தமிழர்கள், சிங்களவனோடு சகோதரனாக ஒன்றாக இரு என்று கூறுவது எப்படி சாத்தியம். ஈழத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதா? அல்லது தனி நாட்டில் வாழ்வதா? என்பதை தீர்மானிக்க அந்த மண்ணில் பிறந்த தமிழனுக்கு மட்டும்தான் உரிமை உண்டு. மாறாக உலகத்தில் பிறந்த எந்வொரு கொம்பனுக்கும் இல்லை.

மக்களை கொல்பவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி பயங்கரவாதம் ஆகும். அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள போர்ப்படை குண்டுகளை வீசிக் கொல்வதை அரச பயங்கரவாதம் என்று உலகம் பார்க்காதது ஏன்?.

சென்னைக்கு வந்த பிரதமர் சொன்னார், எல்லா நாடுகளிலுமிருந்து வந்து இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள். அப்படி என்றால், பாகிஸ்தானிலிருந்தும், சீனாவிலிருந்தும் இந்தியாவிற்கு வந்து பயிற்சி பெறுகிறார்களா? இலங்கை போர்ப்படைக்கு ஆயுதம் வழங்கியது பற்றி கேட்டால், 'பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கியதாக'ச் சொல்கிறார். யாருடைய பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கியிருக்கிறீர்கள். தமிழர்களிடமிருந்து தம்மை காத்துக் கொள்ள சிங்களவர்களுக்கு ஆய்தம் வழங்கினீர்களா?.

ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிரஸ் கட்சிதான். ஆயுதம் தரவில்லை என்று சிதம்பரம் உள்ளிட்ட பலர் கூறுகிறார்கள். தமிழினத்திற்கு எதிரான போரில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு ஆயுத உதவி வழங்கிய இந்தியாவிற்கு நன்றி சொன்ன பொன்சேகா பேச்சுக்கு இங்குள்ளவர்கள் மறுப்பு சொல்லவில்லையே ஏன்?.

கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல், வெட்மில்லாமல் போரை நிறுத்திவிட்டோம் என்று சோனியா பேசுகிறார். இந்த தேசத்தில் பிறந்த எனக்கு இந்த தேசம் செய்யும் தவறையும் சுட்டிக்காட்ட உரிமையுண்டு. நாங்கள் சொன்னால் பயந்துபோய் சிறை வைக்கிறீர்கள்" என்றார் அவர்.


நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!