மரணத்தை வென்ற மாவீரன் |
இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது?????? |
இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம், உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை. அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது. பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும். அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல. கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது, அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே…… உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை, அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது. எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம். சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன். உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு, உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது. இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை. உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது, மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல, மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான். மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல. எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே. எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம், சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும். மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது நண்பர்களே, உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல, அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம். மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம், ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம். தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் - கை.அறிவழகன் http://seithy.com/breifArticle.php?newsID=14906&category=Article |
தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ ஒரு பாட்டு mp3
ஏதோ ஒரு பாட்டு mp3 | ||
Found at bee mp3 search engine |
Pages
Sunday, May 24, 2009
மரணத்தை வென்ற மாவீரன்
நடேசன் உட்பட 12 பேர் எவ்வாறு சிங்கள அரசால் வஞ்சகமாக கொல்லப்பட்டனர் நேரடியாக சாட்சி
நடேசன் உட்பட 12 பேர் எவ்வாறு சிங்கள அரசால் வஞ்சகமாக கொல்லப்பட்டனர் நேரடியாக பார்தவர் சாட்சி --அதிர்வு ரிப்போட்
அவசரமாக அந்த தொலைபேசி அழைப்பு அதில் பேசியவர் சில மணிகளில் இறக்கப்போகிறார் என்பது எனக்கு தெரியாது என்கிறார் புலிகளுக்கும் ஐ.நா சபைக்கும் தொடர்புகளை ஏற்படுத்தும் இணைப்பாளர்.
அந்த தொலைபேசியில் பேசிய பா.நடேசன் அவர்கள் நாங்கள் சரணடைய தயார் பிரித்தானியா அல்லது ஒபாமாவின் அரசாங்கம் எமக்கு பாதுகாப்பு தருமா என வினவினார்,பின் புறத்தில் துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டவண்ணமே இருந்தன.
அந்த வேளை பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகளால் கிண்டப்பட்ட பதுங்கு குழிக்குள் கடும் எறிகணை தாக்குதலுக்கு மத்தியில் பதுங்கியிருப்பதாக நேரில் கண்ட சாட்சியாளர் தெரிவித்தார். தொலைபேசியிணைப்பாளர் வெளிநாட்டில் இருக்கிறார்.இணைப்பாளர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ,பா.நடேசன் தம்மிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறினார்.
1.தமது இயக்கம் ஆயுதங்களை கீழே வைப்பதாகவும்
2.தாம் பாதுகாப்பாக வெள்யேற உத்தரவாதம்
3.தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும்
உடனடியாக நான் விஜை நம்பியாரை தொடர்பு கொண்டேன்,பான் கி மூனிடமும் தொடர்பு கொண்டேன். அந்த செய்திகள் உடனடியாக இலங்கை அரசுக்குப் பரிமாறப்பட்டது.
புலிகள் சரணடையத் தயாரானதால் இந்த பிரச்சனை ஒரு சுமூகமான வழியில் தீர்க்கப்படப் போகிறது என்ற நம்பிக்கை எனக்கு தோன்றியது. அதனை நான் அவர்களுக்கு கூறினேன். எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்கு குழியில் இருந்தவாறு சிரித்தமுகத்துடன் ஒரு புகைப்படத்தை எடுத்து அவரது தொலைபேசியில் இருந்து எனக்கு SMS மூலம் அனுப்பிவைத்தார். என்கிறார் இணைப்பாளர். கடைசி ஞயிற்றுக்கிழமை அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நிபந்தனைகள் எதுவும் அவர்கள் வைக்கவில்லை என்கிறார் இணைப்பாளர். சரணடைவதைப் பற்றியே நடேசன் பேசியுள்ளார். நியூயோக்கைத் தளமாகக் கொண்டியங்கும் 24 மணிநேர அவசர பிரிவுடன் நான் தொடர்புகொண்டேன், அவர்கள் என்னை இலங்கையில் உள்ள நம்பியாருடன் காலை 5.30 மணிக்கு தொடர்புகளை ஏற்படுத்தினார்.
அவருடன் நான் காலை 5.30 மணிக்குத் தொடர்புகொண்டேன். அப்போது பேசிய நம்பியார், தான் மகிந்தவுடன் பேசியதாகவும் , நடேசன் மற்றும் புலித்தேவன் பாதுகாப்பாக வெளியேற அவர் உத்தரவாதம் கிடைக்கப்பெற்றதாக கூறியுள்ளார். மகிந்தவின உறுதிமொழி விஜய்நம்பியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நான் நம்பியாரிடம் நீங்கள் அந்த யுத்தப் பிரதேசத்திற்க்கு போகவில்லையா எனக் கேட்டேன், அவரோ இல்லை, உறுதிமொழி இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருக்கிறது, தாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என என்னிடம் கூறினார், என்றார் இணைப்பாளர். அவர்கள் வெள்ளைக் கொடியை அசைத்தவாறே செல்லவேண்டும் எனக் குறிப்பிட்ட மகிந்த அவர்கள் இராணுவத்தினரிடம் அச்சுறுத்தல் ஏதுமின்றி செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார்.
லண்டனில் இருந்து நான் அதிகாலை திரும்பவும் தொடர்புகளை மேற்கொள்ள தொடங்கினேன், ஆனால் நடேசனுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் தென்னாபிரிக்காவில் உள்ள புலிகளின் உறுப்பினருடன் தொடர்புகொண்டு நம்பியாரின் செய்திகளை நடேசனுக்குச் சொல்லுமாறு தெரிவித்தேன்.
காத்திருந்த சமயம் எனக்கு ஆசியாவில்லுள்ள புலி உறுப்பினரிடமிருந்து முக்கிய தொலைபேசி அழைப்பு வந்தது அதில் கதைத்தவர் , தானும் தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் இருப்பினும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றும் கூறினார். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்றும் கூறினார்..
அன்று மாலை இலங்கை அரசாங்கம் அவர்களது உடலை தொலைக்காட்சியில் காட்டியது. இங்கு என்ன நடந்தது , ஏன் சரணடையும் போது கொலை நடந்தது என நான் அறிய முற்பட்டேன்.
அப்போது தான் தெரியவந்தது ஞாயிற்றுக்கிழ்மை இரவு நடேசன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைபின் உறுப்பினர் சந்திரநேரு அவர்களைத் தொடர்புகொண்டிருக்கிறார் என்று. அவரும் மகிந்தாவிடம் உடனடியாகத் தொடர்புகொண்டு, நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் பாதுகாப்புக் குறித்து பேசியுள்ளார்.
மகிந்தா தனது உத்தரவாதத்தை வழங்கியுள்ளார், இருப்பினும் சந்திரநேரு தான் நேரடியாகச் சென்று அவர்கள் சரணடைவதை அவதானிக்க விரும்புவதாக ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
மகிந்த தனது இராணுவம் மிகக்கட்டுப்பாடு உடையது என்றும் தனது சொல்லுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள் என்றும் கூறி, யுத்தப் பிரதேசத்திற்கு நீங்கள் ஏன் அனாவசியமாகப் போகவேண்டும், உயிர் ஆபத்துநேரலாம் எனக் கூறியுள்ளார். சற்றுநேரத்தில் தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ச , அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார் என இணைப்பாளர் தெரிவித்தார்.
சந்திரநேரு அவசரமாக நடேசனைத் தொடர்புகொண்டு வெள்ளைக் கொடி ஒன்றை பிடித்தவாறு செல்லுமாறும். தான் அன்றைய தினம் மாலை அவரை சந்திப்பதாகவும் கூறியிருகிறார்.
திங்கட்கிழமை காலை(18.05.2009) 6.30 இலங்கை நேரப்படி, நடேசனைத் தொடர்புகொண்ட சந்திரநேரு நீங்கள் ஆயத்தமாக உள்ளீர்களா எனக்கேட்டபோது, பெரும் வெடிச் சத்தங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு கேட்டதாக கூறுகிறார். பதுங்கு குழிக்குள் இருந்த நடேசன் மற்றும் 12 பேரும் வெளியே வந்தனர். பின்னர் நடந்தவற்றை அங்கிருந்து தப்பிவந்த நபர் தெரிவிக்கிறார். அவர்கள் வெளியே வந்து வெள்ளைக் கொடியை அசைத்தவாறே வந்தனர், இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தது.
அப்போது பலர் கொல்லப்பட, புலித்தேவன் மீது குண்டுகள் பாயும் போது நடேசனின் மனைவி சிங்கள பெண்மணி என்பதால் சிங்களத்தில் நாங்கள் சரணடைய வந்திருக்கிறோம் என உரக்கக் கத்தியிருக்கிறார். அதனைக்கூடப் பொருட்படுத்தாமல் இலங்கை இராணுவம் அவரையும் மற்றவர்களையும் சுட்டுக் கொண்றொழித்தனர்.
சரணடைய வந்தவர்களையும் கொண்ற இலங்கை இராணுவம், அந்த 300 பேரையும் விட்டுவைத்திருக்குமா ? .
இங்கு இணைப்பாளர் என்று நாம் கூறுவது மாரியா கொல்வின் அம்மையார். அவர் பல காலமாக விடுதலைப் புலிகளுக்கும் ஜ.நா சபைக்குமான இணைப்பாளராக பணி புரிந்துள்ளார். அவரை 8 வருடத்துக்கு முன்னர் இலங்கை இராணுவம் தாக்கியுள்ளது, இருப்பினும் அவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். பின்னர் நாடு திரும்பிய அவரிடம், முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தப்பிவந்த நபர் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்தே இந்த ஆக்கம் அதிர்வு இணையம் வழியாக வெளிவந்துள்ளது.
தற்போது கிடைத்த தகவல் படி சந்திர நேரு எ.பி க்கு பசில் ராஜபக்ச விடுத்த அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறியப்படுகிறது.
நன்றி:அதிர்வு இணையம்.
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243127770&archive=&start_from=&ucat=4&
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
"தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்": 'தினமணி' சாடல்
"தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்": 'தினமணி' சாடல்
"தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான 'தினமணி' சாடியுள்ளது.இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளிவந்த 'தினமணி' ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது.
2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி.
இப்போதும் அதேபோன்று அமைச்சர் பதவி கேட்பதில் கருத்து வேறுபாடு கொண்டு, அதை ஒருநாள் முழுவதும் ஊடகங்கள் பெரிதாகப் பேசிமுடித்த பிறகு, டில்லியை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டார் தமிழக முதல்வர்.
பல்வேறு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை தாமாகவே அளித்துள்ள நிலையில், ஆட்சி நடத்தத் தேவையான எண்ணிக்கை பலம் காங்கிரசிடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுப்பதை ஏற்றுக்கொள்வது அல்லது வெளியிலிருந்து ஆதரிப்பது என்பதைத் தவிர திமுகவுக்கு வேறு வழி கிடையாது. காங்கிரசுடன் உறவை முறித்துக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக, தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத திமுக அரசுக்குத்தான் இழப்பு.
எண்ணிக்கை பலத்தால் மட்டுமே தற்போது திமுகவின் கோரிக்கையை காங்கிரஸ் மறுக்கிறது எனச் சொல்வதற்கில்லை. சென்ற ஆட்சிக் காலத்தில் கூட்டணிக் கட்சிகளால் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேர்ந்த தர்மசங்கடங்கள் ஏராளம். அதில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் திமுக அமைச்சர்களால் நேர்ந்தவை.
முதலாவதாக, சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான டி.ஆர். பாலு காட்டிய அவசரம். இதனால் தமிழக அரசே ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்து, அதை அடையாள உண்ணாவிரதமாக மாற்றியது. சேது சமுத்திரத் திட்டச் செலவும், அதன்பிறகு கிடைக்கும் குறைந்த வருவாயும், கால்வாயைத் தொடர்ந்து தூர்வாரும் பணிக்கான தொடர் செலவினமும், பவளப்பாறை அழிவு மற்றும் ராமர் பாலம் சிதைவு என எல்லா பிரச்னைகளும் சேர்ந்து கொண்டதால்தான் இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கொஞ்சம் தாமதப்படுத்த நேர்ந்தது.
ஆனால், மத்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது திமுக. அடுத்தது ரூ. 60,000 கோடி 'ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் அமைச்சர் ராசா மீதான புகார். ஆகவே, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தகைய அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் அதிக கறாராக இருப்பதைக் குறையாகச் சொல்லமுடியாது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, திமுக கேட்பதைக் கொடுத்து சமாதானம் செய்துகொள்ளும் முடிவைத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் மேற்கொண்டுள்ளனர். ஆட்சியை அமைக்கும்போது நிலையற்ற தன்மையை விரும்பமாட்டார்கள். உத்தரப் பிரதேசம் போல தமிழ்நாட்டிலும் காங்கிரசும் சுய பலத்துடன் வளர்க்கத் தமிழக காங்கிரசார் விரும்பினாலும் அவர்கள் தன்மானத்துடன் செயல்படுவதைக் காங்கிரஸ் தலைமை விரும்பாது.
தற்போது திமுக எத்தனை அமைச்சர் பதவிகளைக் கேட்டது, எத்தனை பெற்றது, அல்லது பெற்றுக்கொள்ள மறுத்தது என்பது முக்கியமே அல்ல. அதற்கான நேரம் இதுவா? என்பதுதான் முக்கியமான கேள்வி.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'மறைவு'க்குப் பின், ஈழத் தமிழர்கள் 2.8 லட்சம் பேர் கதியற்று, காப்பான் இன்றி, கவலையிலும் பீதியிலும் பட்டினியாலும் நொந்து கிடக்கும்போது, அவர்களது வாழ்வு மற்றும் பாதுகாப்புக்குத் தமிழர் குழுக்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கும்போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பி தமிழர்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்களா; நிவாரணம் முழுவதுமாக கிடைக்கிறதா என்று கண்காணிப்புக் குழுக்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தமிழக முதல்வர், டில்லியில் அமைச்சர் பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தால்.... இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ!
உலக நாடுகளும், ஐ.நா. சபையும் தமிழருக்கு உதவிட இராணுவத்தின் கட்டுப்பாடு பெரும் தடையாக இருக்கிறது என்றும், கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்க முடியும், உதவிகள் வழங்க முடியும் என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்கையில், தமிழக அரசின் செயல்பாடு என்ன?
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று ஒரு சொல்லடை உண்டு. தென்னிலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்க, தில்லியில் பதவி பேரம் பேசினார் ஒரு தமிழினத் தலைவர் என்ற பேச்சு வரலாற்றில் இடம்பெறுவது சரியா?
இன்னின்ன அமைச்சர் பதவி வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் திமுக தலைவர் கருணாநிதி, சூழ்நிலை அவசியம் கருதி, ஈழத் தமிழர் நலன் மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் அங்கே அரசியல் தீர்வும் அதிகாரப் பகிர்வும் நியாயமாகவும் முறையாகவும் நடைபெறவும் ஒரு அமைச்சர் பதவியை திமுகவுக்கு ஒதுக்கக் கோரியிருந்தாலும்கூட, அதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனால் நிலைமை அதுவாக இல்லை.
திமுக தலைவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவர் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ச முன்பு சொன்னதனால், இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி பயணப்பட்டிருக்க வேண்டிய இடம் கொழும்புதானே தவிர, டில்லி அல்ல.
திசை மாறிப் பறக்கிறது திமுகவின் தமிழ் இன உணர்வு!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3508:q---------q--&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
வன்னிக்களப் பகுதியில் நடப்பது என்ன? அதிர்ச்சித் தகவல்!!
வன்னிக்களப் பகுதியில் இப்போது நடப்பது என்ன? அதிர்ச்சித் தகவல்!!
வன்னிக்களப் பகுதியில் உண்மை நிலையைக் கண்டறிய சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் மெள னம் சாதித்து வருகின்றது.
அங்கே நிலைமை களைச் சரிசெய்த பிறகு அனுமதிப்பதாக அரசா ங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது வன்னியில் நடப்பது என்ன? எமக்கு க் கிடைத்த சில தகவல்களை இங்கே தருகின் றோம்.
வன்னிப் போர்க்களத்தில் இப்போது ஆயிரக்கணக்கான மக்களின் உடல்கள் சிதை ந்தும், குற்றுயிரும் குலையுயிருமாகவும் கிடக்கின்றன.பல கிலோமீட்டா் பரப்பள வுக்கு பிணவாடையும், படையினர் வீசிய ரசாயன குண்டுகளின் கோர தாக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைவிட பெருமளவான இறந்த மக்களின் உடல் களை புல்டோசர்களில் கொண்டு புதுமாத்தளன் கடலில் கொட்டுவதாகவும் தகவ லொன்று தெரிவிக்கின்றது.
படையினரால் பாவிக்கப்பட்ட இரசாயனத் தாக்கங் கள் இன்னும் இருப்பதால் கடலில் பெருமளவான மீனகள் செத்து மிதந்து வருகின் றனவாம்.
சர்வதேச பார்வையாளர்கள் வருவதற்குள் அங்குள்ள தமிழ் மக்களின் இறந்த உடல்களை உருத்தெரியாமல் அழிக்கும் பணியில் வாயையும் மூக்கையும் மாஸ்க் அணிந்துகொண்ட பெருமளவான படையினர் மும்முரமாக ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். இதற்காக புல்டோசர்கள் வைத்து அனைத்தை யும் அகற்றும் வேலையில் இவர்கள் இறங்கியுள்ளனர்.
அத்துடன் தமிழர்களது கட்டடங்கள் அனைத்தும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு வருவதுடன் அங்கு போர் நடை பெற்றது என்பதற்கான அடையாளமே இல்லமல் செய்யப்பட்டுக் கொண்டி ருப்பதாக இராணுவத் தரப்பிலிருந்து நம்பகமான தகவலொன்று தெரிவிக்கின்றது.
இதையும் மீறி போர்ப் பகுதிக்குச் செல்வோம் என எந்த நாடு கோரினாலும், அங்கு ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், என்ன நடந்தாலும் நாங் கள் பொறுப்பேற்க முடியாது என்றும்அரசாங்கம் கூறுவதால், யாரும் அப்பகுதிக் குப் போக அஞ்சி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
பிரபாகரன் பற்றி ஊடகப்போரும் உலக ஊதுகுழல்களும்
ஊடகப்போரும் உலக ஊதுகுழல்களும் |
இப்பொழுது உலத்திதிலுள்ள ஊடகங்களில் முதன்மைச் செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்காப் படையினாரால் கொல்லப்பட்டார் என்பதும் அச்செய்தி பற்றிய சாதக பாதக ஆராய்ச்சி ஆய்வுகளுமே.. |
இது பற்றி அந்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் போதும் சிறிலங்காப் படையினர் தெரிவிப்பதாகவே குறிப்பிடுன்றன. இது உண்மையில் தமிழின விரோதிகளும், சிறிலங்கா அரசும் அதன் இராணுவ இயந்திரங்களும், அத்தோடு கூடி சர்வதேச சதிகளும் சேர்ந்து ஈழத்தமிழரையும் உலகத்தமிழரையும் உலுப்பிவிட பரப்பட்ட திட்டமிடப்பட்ட சதிகார வேலையே தவிர வேறொன்றுமில்லை. ஆனால் இப்போது அவர்கள் இந்த நாட்டிலே குடியுரிமையைப் பெற்று வாழ்ந்து வருவதால் அவர்களின் பிள்ளைகள் அந்நாட்டின் வாரீசுகள் ஆகிவிட்டன. அத்தோடு இந்த இளைய சமூகம் அந்தந்த நாட்டின் மொழிகளிலும் கலாச்சாரத்திலும் வளர்ந்து வருவதால் அவர்கள் அங்கேயுள்ளவர்களுடன் சரளமாக உரையாடவும் விவாதிக்கவும் தகுந்த தகுதியுள்ளவர்கலாயிருக்கின்றனர். ஆதலாலும் தங்கள் நாட்டின் பிரைஞைகளை எதிர்க்க முடியாதுள்ளது. ஆகவே அவர்களின் கோரிக்கையை மதிக்கவேண்டிய நிலை அந்த நாட்டின் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆக இந்த தொடர் போராட்டங்களைக் குழப்புவதற்கும், அதன் வீரியத்தினைக் குறைத்துக் கொள்ளவும் இந்தக் குள்ள நரிக்கூட்டம் முனைப்புடன் செயற்படுகிறது. இந்தப் போராட்டத்தினைத தொடர்வதலே அவ்வப்போது சில நாடுகள் தங்கள் திருவாயைத் திறந்து அருள்வாக்குப் போன்று அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆதலால் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை கட்டாயமாக நிறுத்திவைக்கவேண்டிய நிலைக்கு சிறிலங்கா இயந்திரம் இயக்கப்பட்டு விட்டது. |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக் கூறிய தமிழ் இளைஞர் கைது
புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக் கூறிய தமிழ் இளைஞர் கைது |
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனக்கூறிய தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். |
புறக்கோட்டையில் உள்ள நடைபாதை வியாபாரம் செய்யும் தமிழ் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற சிலரிடம் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் எவரும் பயப்படவேண்டாம் எனவும் கூறியிருக்கின்றார். அப்போது அருகில் வியாபாரம் செய்துகொண்டிருந்த தொப்பி அணிந்த தமிழ் பேசும் இளைஞன் ஒருவர் புறக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக நடைபாதை வியாபாரம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்து குறித்த தமிழ் இளைஞனை கைது செய்தனர். அவர் தற்போது புறக்கோட்டை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து கோட்டை புறக்கோட்டை பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பது பற்றி எதுவுமே பேசுவதில்லை. |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் வேண்டாம்-"ஆனந்த விகடன்"
"இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது": 'ஆனந்த விகடன்' வலியுறுத்தல் |
"ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது. |
இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம். 'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என்று வெறியோடு சிங்கள பீரங்கிகள் வெடித்து, கரும் புகையால் விண்ணை நிரப்பின. 'விரும்பிய இலாகாவைக் கேட்டுப் பெறுவோம்' என்ற மகிழ்ச்சியில் இங்கே இனிப்புப் பரிமாற்றம் தொடங்கிய அதே சமயம், 'பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்' என்று இனிப்பு ஊட்டிக்கொண்டார்கள் சிங்கள மக்கள்! இனி ஒரே ஒரு தமிழன் அங்கே துப்பாக்கியாலோ, பசியாலோ உயிர் நீத்தாலும், அதற்கான முழுப் பொறுப்பும் ராஜபக்சவைத்தான் சாரும் என்று உறுதியான குரலில் இந்தியா உடனே எச்சரிக்க வேண்டும். 'அது அடுத்த நாட்டு விவகாரம்' என்று சொல்லி, இனியும் நம் நாடு பதுங்கு குழிக்குள் முடங்கியிருக்கக் கூடாது! குண்டு மழையால் விளைந்த காயங்களாலும், குடலைச் சுருட்டும் பசியாலும், வாட்டி வதைக்கும் நோயாலும் உயிரோடு செத்துக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களுக்கான புனரமைப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். விரைவில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெற்றுத் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். உலக நாட்டுப் பிரதிநிதிகளும், பத்திரிகையாளர்களும், தொண்டு நிறுவனங்களும் அங்குள்ள தமிழர்களை நேரில் சந்திப்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றுவதும்கூட இந்திய அரசின் பொறுப்புதான்! இதற்கெல்லாம் இலங்கை அரசை உடன்பட வைக்க முடியாது என்றால், இலங்கையோடு சேர்ந்துகொண்டு இத்தனை நாளும் 'இறையாண்மை' என்கிற பெயரால் இந்திய அரசு இரக்கமற்ற நாடகம்தான் ஆடிக்கொண்டு இருந்தது என்கிற பழிச்சொல் உறுதிப்பட்டுவிடும்!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinam.com/full.php?2a2PtXe0d7d2t0ecLAbN3b4e6JW4d3g6d3cc2EpV2d43aSQ3b03ZOr3e |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
இறுதிச்சடங்கு-கவிதை
இறுதிச்சடங்கு
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்
அந்த தாக்கம் தான் ,
என்னை இந்த குமுறலை எழுத காரணமாக இருந்தது
இறுதிச்சடங்கு
————————–
இடுப்போடு
புள்ளையத் தான் வச்சிருந்தேன்
குண்டு மேல போடுறான்னு
ஓடி ஒளிஞ்சேன்
உசுர காக்க பதுங்குவெனா-இல்ல
சோறு பொங்கி திங்குவெனா
ஒடம்புல பொட்டு கூட நாதியில்ல
நான் எங்க ஓடி ஒளிய
இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு
ஐயா…
இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு-அதன்
தலை மட்டும்தனியாத்தான்
தூர கெடக்கு
ஏஞ்சாமி
உன் தலை எடுக்க ஓடுவனா-இல்ல
என் தலை காக்க ஓடுவனா
பணம் செதறி போனாலே
பதறித்தான் போயிடுவோம்
தலை செதறி போயிடுச்சே
ஏஞ்சாமி
என்ன செய்வேன்
செவனேன்னு,
ஐயா …
செவனேன்னு விட்டுருந்தா
சோறு தண்ணி இல்லாம
அஞ்சாறு நாளில்
நானே செத்திருப்பேன்
அமில குண்டு போட்டு
அந்த பாவத்தை - நீ
ஏன் சேத்துக்கரே
கடைசியா
நீ தான் வாழ வெப்பென்னு
உன்னைத் தான் நம்பியிருந்தேன்
நீயே குண்டு போட்டா
எங்க நானும் போயி சொல்ல ?
பசி கொடுமைக்கு
புள்ளைய கொன்னா -அது
கருணைக்கொலை
அமில குண்டு போட்டு
கொத்து கொத்தா கொன்னா –அது
என்ன கொலை
கொத்து கொலையா ?
என்னாலே
மூச்சே விட முடியலியே
உனக்காக கதறி எங்கு
நானும் அழ
உன்னை
பொதைக்கக்கூட நாதியில்ல
நாய் நரிக்குப்போடவா
உன்னை நானும் பெத்துவிட
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
[முற்றும்]
நான் சுயநலவாதி ,
நீங்கள் அங்கே இரத்தம் சிந்துகிறீர்கள் -ஆனால் ,
நான் சுயநலவாதி,-உங்களுக்காக
கண்ணீர் மட்டும் சிந்த முடிகிறது .
கண்ணீருக்கும்,கவிதைக்கும் சொந்தக்காரன்
[Dr.மகேஷ் –தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் ]
mageshbpt@gmail.com][ CELL-9444686521 ]
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
தமிழீழம் சாத்தியமா?! தமிழ் நாட்டிலிருந்து ஒரு கண்ணீர் மடல்
தமிழீழம் சாத்தியமா?! தமிழ் நாட்டிலிருந்து ஒரு கண்ணீர் மடல்
அன்பான ஈழத்து தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
தினமும் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளில் நானும் ஒருத்தி.
மனம் திறந்து சில விடயங்களை விவாதிக்க வேண்டும் போல் தோணுகிறது
தமிழீழம் சம்பந்தமா பல கேள்விகள் இங்கே எழுகின்றன. தமீமீழம் கிடைக்குமா? இத்தனையாயிரம் உயிர்கள் பலியாகிய பின்னாலும் இது தேவையா ? இந்த இரண்டும் தான் நம்மளைப் போன்றவர்களுக்கு எழும் கேள்விகள்.
முதல் கேள்வியைவிட இரண்டாம் கேள்விக்கு விடை தெளிவாகத் தெரிகிறது. ஆம் நிச்சயம் தேவை. கிடைக்க வேண்டும். சிங்களனை நம்பி ஒரு தமிழன் நிம்மதியாக வாழமுடியாதுங்க. சமீபத்தில நடந்த அந்த துயராமான சம்பவத்தை நீங்கள் கேள்விப் பட்டிருப்பிங்க. மட்டக்களப்பு யுத்த பூமி அல்ல அங்கேயும் கூட எட்டு வயதுச் சிறுமி தினுஷிகாவை கடத்திக் கொன்றுவிட்டு கிணத்துல போட்டிருக்காணுங்க கொலைகாரப் பாவிங்க. கிழக்கு முழுமையா விடுவிக்கப் பட்டு அமைதி தவழ்கிறது என்று சிங்களம் அறிவிக்கிறது. அமைதியின் லட்சணத்தை பாருங்க.
தமிழீழத்தின் தேவையைத்தான் இது தெளிவாகக் காட்டுது. ஆனால் அது சாத்தியமா? சாத்தியம் என்றால் நாம என்ன செய்ய வேணும் இது சம்பந்தமா விவாதிக்க விரும்புறன். வெறும் விடுதலைப் புலிகளின் பிரச்சனை இல்லிங்க இது. உலகத்தமிழர் அனைவருக்கும் இதில் பங்கு இருக்கா? இல்லையா?
சும்மா தர்மம் வெல்லும் என்று மகாபாரதத் தனமா கூவிக்கிட்டு இருக்க முடியாதுங்க! வல்லவன் வாழ்வாங்கிறதுதான் உண்மை.
விடுதலை போராட்டம் தோற்காது என்று வீரவசனம் பேசுவது கூட சரியாப் படலேங்க. நமக்கு கியூபாவையும் வியட்நாமையுதான் தெரியும் எத்தனை நியாயமான விடுதலைப் போராட்டங்கள் கஷ்டப்பட்டு போராடியும் அழிக்கப் பட்டு இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கின்றன. தப்பா பேசுறேன்னு நினைக்காதிங்க அந்த நிலைமை உங்களுக்கு வரக்கூடாதுங்க! வரவே கூடாது!
சரி ஒரு முக்கியமான விசயம் சொல்றேன்.
எந்த ஒரு சாதகமாக சூழலும் இல்லாமல்தான் பிடல் கஸ்ட்றோ விடுதலை வாங்கியிருக்கிறார். கடுமையான போராட்டங்கள். நினைச்சே பார்க்க முடியாத அழுத்தங்கள். சளைக்காமல் போராடினார். வென்றார். காரணம் என்ன? ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை. அயர்லாந்து விடுதலைப் போராட்டம் சாதகமான சூழல் இல்லாமலே வென்றிருக்கிறது அதுக்கும் ஒற்றுமைதான் காரணம்.
ஆனால் தமிழீழ விடுதைலப் போராட்டத்தில் பல சாதகமான சூழல் இருந்திருக்கின்றன. நாமதான் அதைக் கெடுத்திருக்கின்றோம். அதற்கான காரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பழைய குப்பைகளை கிளறுவதாக நினைக்காதீங்க. விட்ட தவறுகளை மறுபடியும் மறுபடியும் விடக்கூடாதல்லவா அதற்காகத்தான்.
1.தமிழ் நாட்டு அரசியல்வாதிகள்.
அன்றும் சரி இன்றும் சரி. இவர்களின் போக்கே அருவருப்பா இருக்கு. ஈழவிடுதலைக்கு தமிழ் நாடு மிகப் பெரிய அனுகூலம். அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மத்திய அரசை நிர்ப்பந்தித்து சரியான தீர்வை வாங்கிக் கொடுக்கத் தவறி விட்டார்கள். எம்.ஜீ. ஆர் ஒரு பக்கம் பார்த்தால் கருணாநிதி வேறு பக்கம் பார்ப்பார். இப்போ ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் இதுதாங்க நடந்திட்டிருக்கு. இரண்டு பெரிய கட்சிகளும் இந்தப் பிரச்சனையில் ஒன்று சேர்ந்தால் அது எவ்வளவு பெரிய பலம். கேட்டால் அது எப்படி முடியும் என்பார்கள்? சிங்களனால் முடிகிறதே. SLFP மீது UNP எவ்வளவு விமர்சனங்களை வைத்தாலும் சிங்களனின் நலம் என்று வரும்போது எப்படிப் கைகோர்க்கிறானுங்க பாருங்க அதுவும் தமிழனுக்கு எதிராகச் செயல்படும் போது எப்படி எல்லாம் ஒண்ணாகிறானுங்க. JVP ஐய எடுத்துக்குங்க இலங்கை அரசாங்கத்தால் எப்படி எல்லாம் ஒரு காலத்தில் கொன்று குவிக்கப் பட்டார்கள். இப்போது பாருங்க தமிழர்களுக்கு எதிராக எப்படி எல்லாம் கைகோர்த்து இருக்கிறாங்க. தமிழர்களால் இனியாவது முடியுமா?
2.சகோதர யுத்தம்
தப்பாக எடுத்துக்காதீங்க, கலைஞர் கருணாநிதியைப் போல் பேசமாட்டேன். சாத்திரியின் வலைப் பதிவைப் பார்த்தேன். உண்மைதான் சாத்திரியின் கருத்தை 90 % ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அனைவருடமும் தவறுகள் இருந்திருக்கின்றன. சாத்திரி சில விடயங்களை மறைத்திருக்கிறார் போல தெரியுது. விடுதலை எனும் கொள்கையில் தெளிவாக இருந்திருந்தால் சாத்திரி குறிப்பிடும் இயக்கங்கள் தவறு செய்திருக்காதுகளே! இந்த இயக்கங்களை ஒன்றிணைக்காமல் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கட்சிக்கு ஒரு இயக்கத்தை ஆதரித்து இதிலும் தங்கள் அரசியலை காட்டியது வேதனையான விசயம்.
3.தமிழீழ அரசியல்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப் பெரிய பலம் விடுதலைப் புலிகளின் வீரமும் தியாகமும்தான் என்றால் மிகப் பெரிய பலவீனமாக இருப்பது அரசியலும் கருத்துப் பரப்புரையும்தான். மக்களை அரசியல் மயப் படுத்த புலிகள் தவறி விட்டார்கள் (நன்றி திரு. வழுதியின் கட்டுரை) என்றே நினைக்கத் தோணுது. மக்கள் விடுதலை இயக்கத்தின் மாபெரும் சக்திகள். மக்களின் நலம்தான் புலிகளின் நலம். மக்களை அவர்கள் உயிராக எண்ண வேண்டும். அதிலும் வன்னி மக்களை தெய்வங்கள் என்றே சொல்லலாம். *****
ஒரு விடயம் சொல்கிறேன் ரணில் விக்கிரமசிங்காவை தமிழ் மக்கள் நம்பியது கூட பாரவாயில்லை புலிகள் நம்பியது சற்று வருத்தமாகத்தாங்க இருக்குது. சரி நடந்தது நடந்து விட்டது. ரணில் குள்ள நரி வேலை பார்க்கிறார் என்று தெரிந்தவுடன் மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். என்ன சொல்ல வர்றன் என்றால் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் ரணிலையே ஜெயிக்க வைச்சிருக்கலாம். தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் ரணில் நிச்சயம் ஜெயிச்சிருப்பார். இவ்வளவு அழிவு வந்திருக்காது. புலிகள் தங்களை இன்னும் பலப் படுத்தியிருக்கலாம். ஏற்கனவே ரணில் காலத்தில் எற்பட்ட அனுபவத்தை மனதில் வைத்து, அதே ரணிலுடன் ரொம்ப ஜாக்கிரதையா, பதிலுக்கு ரணில் மாதிரியே சாணக்கியத்தனத்தோட நடந்திருக்கலாமே. மற்றுமொரு பிரிவு ஏற்படாமல் தவித்திருக்கலாம். இவ்வளவு நடந்திருக்காதே. மக்களை ரொம்ப நல்லவே அரசியல் மயப்படுத்தி இருக்கலாம்.
4.கருத்துப் பரப்புரை
வெறுமனவே எங்கள் தலைவன் பிராபாகரன், எங்கள் யுத்தம் தர்ம யுத்தம் என்று கோஷம் போடுறீங்க. இப்போது லண்டனில் நடக்கும் போராட்டம் போல முதல்லயே நடத்தியிருக்க வேணும். திரு. பிராபாகரன் அவர்களை நினைக்கும் போது உண்மையான தமிழர்களுக்கு பெருமித உணர்வு வரும். அதற்கு நானும் விதிவிலக்கு கிடையாது. ஆனால் அதையே வைத்து கோஷம் போடுவதால் மற்ற சமூகத்தை எந்த அளவிற்கு கவர முடியும்? தப்பா எடுக்காதீங்க! என்ன சொல்ல வருகிறேன் என்றால். தமிழீழத்தின் தேவையை உணர்ந்து அதை புலிகளால் பெற்றுத் தரமுடியும் என்று நம்புவதால், அவங்களை ஆதரிக்கிறோம். அதனை வழி நடத்துவதால் பிரபாகரனை ஆதரிக்கிறோம் என்று தெளிவாக பரப்புரையை மேற்கொண்டிருக்க வேணும். புலம் பெயர் தமிழர்களோட பல போராட்டப் புகைப் படங்களைப் பார்த்திருக்கிறோம். பிரபாகரன் அவர்களின் படங்கள் பல இருக்கின்றன. நல்ல விசயம் ஆனால் தமிழீழத்தின் படங்களை காணவில்லையே. தமிழீழத்திற்காகத்தானே நாம் அவரை நேசிக்கின்றோம். இது தான் நம்ம நாடு. நம்ம நாடு ஸ்ரீறிலங்கா கிடையாது. தமிழீழம்தான் என்பதை உலக அரங்கில் சத்தமாச் சொல்லணும். தற்போது நடக்கும் பரப்புரை ரொம்ப நல்லது. இதை முதலே செய்திருக்கலாமே.
ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் குறைந்தது 99 % தமிழர்கள் அங்கு கண்டிப்பா போகணும். அந்த இடமே ஸ்தம்பிக்கணும். லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் போல எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் நடக்கணும். குறிப்பாக தமிழ் நாட்டில் நடக்கணும் நாடே அதிரணும்
இன்னொரு ரொம்ப முக்கியமான விசயம்
தமிழ்நாட்டில் ஈழ ஆதரவை தொடங்கி மிகப் பெரிய அளவில பேச வைத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதாங்க. ரொம்ப அற்புதமான கருத்துப் பரப்புரை. பெரிய எழுச்சி ஏற்பட்டது. நாங்களெல்லாம் ரொம்ப சந்தோஷப் பட்டோம். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? சீமான் போன்றவர்கள் புலிகளின் வீர தீரங்களை பேசினார்கள் (தயவு செய்து தப்பா நினைக்காதீங்க, விடுதலைப் புலிகளைப் பற்றி சின்ன விமர்சனம் வைத்தாலே வேற மாதிரி பட்டம் கட்டப் பார்காதீங்க. நான் இங்கு விமர்சனம் கூட வைக்கவில்லை. நான் சொல்லவர்றதைக் கொஞ்சம் கேளுங்க). சீமான் போன்றவர்களின் உணர்வை மதிக்கிறோம். புலிகளையும் பிரபாகரனையும் ரொம்ப நல்ல மதிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் பேச வேண்டியதைப் பேசாமல் வெறுமனமே வார்த்தைகளைக் கொட்டுவதால், விளைவுகள் வேறமாதிரி போய்விடுது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இடையில் சீமான் இந்த மாதிரி பேச, இதற்கென்றே காத்திருந்த நம்மளோட எதிரிகள் புலிகளையும் சீமான் போன்றவர்களையும் எதிர்த்துப் பேச, ஆக புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்று பட்டிமன்றக் கணக்கா பிரச்சனை சூடு பிடித்தது. நடந்தது என்ன இந்தப் பட்டிமன்றச் சூட்டில் ஈழத் தமிழரோட சோகம் காணாமல் போய்விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி எதுக்காகப் போராடியதோ அந்த எழுச்சி சிதைக்கப் பட்டது. மறுபடியும் சிங்களனுக்கே வெற்றி. பேச்சுக்கு ஊடாக வரலாற்றை சொல்லுங்கள். தெளிவை ஊட்டுங்கள். அதன் பின் உங்களோட ஆதரவை வெளிப்படுத்துகள். யாராவது குறுக்கே கேள்விகள் கேட்டால் ஆத்திரப் படாதீங்க, நியாயமா விளக்கம் சொல்லுங்க. கேள்விகள் நியாயமா இருக்கலாம் அதற்கான பதில்களை கொடுத்தால் அந்தப் பதில்களும் நியாயமாத்தான் இருக்கும்
இப்போது மறுபடியும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது நல்ல முறையில் போகணும்
5.துரோகிகள்
தனிப் பட்ட முறையில் புலிகள் மீது மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் சிங்களனோடு சேர்ந்து போராட்டத்தைக் கொச்சைப் படுத்துபவர்களை துரோகி என்று கூறாமல் பட்டுக் கம்பளமா விரிப்பார்கள்.
தேனி என்றொரு வெப்சைட். நினைக்கவே காறித்துப்பணும் போல இருக்கு. இவ்வளவு எழுதுறாங்களே சிங்கள இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி கொல்லப்படும் மக்களைப் பற்றி ஒரு வரி எழுதுறாங்களா?! இவங்க எல்லாம் மனுஷப் பிறவிதானா? ஷோபாசக்தி போன்றவர்களிடம் காணப்படும் நேர்மை கூட இவர்களிடம் இல்லை. இவங்க துரோகிங்க இல்லாம வேறு யார்?
அதில ஆனந்த சங்கரியோட கடிதத்தை அடிக்கடி போடுறாங்கள். சங்கரி கேக்கிறார்! எப்படி? யானைப் பசிக்கு கோழிக் குஞ்சு கணக்கா கேக்கிறார்!
ஐயா சங்கரியாரே! உங்களோட ஒரு வார்த்தையையாவது சிங்களம் கேட்குமா? நட்போடு இருப்பது வேறு ஆனால் நக்கித் திரியாதீங்க. ஆனால் இந்த நேரத்தில் நட்போடு சிங்கள அரசோடு இருந்தாலே அவன் ஈனசாதி நாய்தான் அப்படின்னா நீங்க யார்?
புலி ஆதரவா எதிர்ப்பா என்கிற பிரச்சனை இல்லீங்க இது! தமிழரோட உயிர் பிரச்சனை ஒட்டு மொத்த தமிழன் தமிழச்சியோட தன்மானப் பிரச்சனை. அதே நேரம் விடுதலைப் புலி ஆதரவாளர்களே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஒரு சில சம்பவங்களால் கவலை காரணமா விடுதலைப் புலிகளை எதிர்த்தால், தமிழீழத்தின் நியாயங்களை சொல்லி புரிய வையுங்க. எடுத்த உடனையே அவர்களையும் எதிர்த்து விரோதியாக்கிக் கொள்ளாதீங்க. துரோகிகள் வேறு இவர்கள் வேறு.
புலி எதிர்ப்பாளர்களே! (சிங்கள அடிவருடிகள் அல்ல அவர்கள் மன்னிக்க முடியாதவர்கள்) உங்களுக்கு ஒரு கண்ணீர் வேண்டுகோள். இது தனிப்பட்ட ஒரு இயக்கத்தின் பிரச்சனை அல்ல. தமிழினத்தின் உயிர்ப் பிரச்சனை. தங்களின் சுயலாபங்களுக்காக அவர்கள் போராட வில்லை. பிரபாகரன் நினைத்திருந்தால் எப்பேர்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்! தனது மக்களுக்காக எந்தளவு பெரிய பொறுப்பை தாங்கிப் போராடுகிறார். தவறுகள் நடந்திருக்கின்றன, மறுக்கவில்லை. மாகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டத்திலேயே தவறுகள் இருக்கும் போது ஆயுதப் போராட்டத்தில் இல்லாமல் போகுமா? அதையே திரும்பத் திரும்பப் பேசாமல் உங்க தனிப்பட்ட எதிர்ப்பை தூக்கிப் போட்டு விட்டு தமிழினத்தின் எதிர்காலத்திற்காக தமிழுணர்வாளர்களுடன் கரம் சேருங்க.
6. ஊடகங்கள்
மக்கள் தொலைக் காட்சியை தவிர மற்றவற்றை நினைத்தாலே வயிறு எரியுது. இவற்றை ஈழத் தமிழர்களும் பார்த்துத் தொலைக்கிறார்களே என்று நினைத்தாலே தலை சுத்துது. தமிழனின் பிணம் குவியுது. இவனுங்க மானாட மயிலாட ஆடுறானுக. ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுமில்லீங்க எந்த ஒரு தமிழனோட எந்த ஒரு பிரச்சனையையும் இவனுங்க கவர் பண்ணுறதே கிடையாது. ஈழத் தமிழர்களே! உங்களுக்கு ஈரம் இருப்பது உண்மையானால் சன் டிவி, கலைஞர் டிவி போன்றவற்றை சுத்தமா விட்டுத் தள்ளுங்க.
சுவிட்சர்லாந்திலிருந்து எனது தோழி ஒருத்தி நடந்த சம்பவத்தைக் கூறினாள்
அது ஈழத் தமிழர் ஒருத்தரோட டெலிக்காட் கம்பனி. லைக்காடெல்லோ ஏதோ ஒண்ணு. சன் மூவீசோட அயன் படத்தைப் பார்க்கிறதுக்காக அத்தனை பேருக்கும் வருடாந்த போனஸா டிக்கட் எடுத்துக் கொடுக்கப் போறாங்களாம். அங்கு வரும் மற்ற ஆடியன்ஸ் காக ஸ்டால் போட்டு தங்களை விளம்பரப் படுத்தப் போறாங்களாம். எனது தோழியே இதை என்னிடம் கூறினாள். இது என்ன கொடுமை இப்படியும் ஈழத் தமிழரா?
ஈழம் எரியுது. வேலை ரொம்பவே இருக்கிறது. தமிழீழம் சாத்தியமா? இது வெறும் விவாதம் கிடையாது. கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்கிற பிரச்சனை கிடையாது, வாழ்கைக்கு உகந்தது காதல் திருமணமா நிச்சயிக்கப் பட்ட திருமணமா என்பது போன்ற பட்டி மன்ற விவாதம் கூட இல்லீங்க.
இதில தர்மம் வெல்லும் போன்ற ஆன்மீகச் சொற் பொழிவுகள் வைக்காமல் விஞ்ஞான ரீதியாக விவாதியுங்க. நடமுறைச் சாத்தியமான விஷயங்களை முன்வையுங்க. அது மட்டுமல்லாமல் உடனே செய்ய வேண்டிய பணிகளையும் குறிப்பிடுங்க. வழுதியோட கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தயவு செய்து அனைவரும் விவாதத்திற்கு வாருங்கள். சாத்திரி, தமிழச்சி, சபேசன், இளங்கோ, (எங்கே காணாம போயிட்டீங்க) நெடுக்காலபோவான், நாரதர், கறுப்பி, தூயா (உங்களின் நானும் ஈழமும் ரொம்ப நல்ல முயற்சிங்க), பருத்தியன் (உங்களின் வலைப் பதிவு நெகிழ்வாக இருந்தது), நிலாமதி, கலைஞன், இன்னும் பலரிடம் பல கருத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. சிவா சின்னப்பொடி, வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களும் யாழில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உலகெங்கும் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த உணர்ச்சையை அணையாமல் பார்க்கணும் அதை பல மடங்கு பெருக்கணும்.
என்னோட கருத்துகள்ள தவறு இருந்தால் தெரியப் படுத்துங்க
நன்றி
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
எம் மூத்த மகன் பிரபாகரன் - சீமானின் தாய்
எம் மூத்த மகன் பிரபாகரன் - சீமானின் தாய் அன்னம்மாள்
`படுபாவி ராஜபக்ஷே போரை நிறுத்துறேன்னு சொல்லிப்போட்டு கூட்டம் கூட்டமா நம்மாளுகளை கொல்றானேய்யா. இந்த காக்கா குருவியைவிட நம்ம உசுருக ஈனமாயிடுச்சு. எப்பையா இதுக்கெலாம் தீர்வு கெடைக்கும். நம்ம வாழ்க்கைல அமைதி பெறக்கும்?" காலையிலிருந்து மிளகாய்த் தோட்டத்தில் வேலைபார்த்த அலுப்போ களைப்போ சிறிதும் தெரியாமல் இலங்கையின் இனப்படுகொலை குறித்துப் பேசும் இவர்கள்தான் இயக்குநர் சீமானின் தாய் அன்னம்மாள். தந்தை செபஸ்த்தி.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் இருக்கிறது சீமானின் வீடு. கிராமத்து எளிமையும், யதார்த்தமும் துளியும் குறையாத வீடு அது.
"என் மகன் சீமானை உள்ள தூக்கிப் போட்டாங்க. ஒரு பாவமும் செய்யாதது ஒலகத்துல தப்பு போல. அந்தப் புள்ளை கேக்குற நெசமான கேள்விக்கு யாருகிட்டவும் பதிலில்லை. புள்ளையைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு. எலந்தைப் பழமும் எள்ளுருண்டையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பட்டணத்துக்குப் போறவுககிட்ட கொடுத்து விடணும்" என்றபடி தாய்ப்பாசம் தன்னை மீறிக் கசிய… கிராமத்து போராளியாகப் பேசுகிறார் சீமானின் தாய் அன்னம்மாள்.
சீமானைப் பற்றி சொல்லுங்கள்?
"பஞ்சாமிர்தமா அஞ்சு புள்ளைக. மூணு பையக, ரெண்டு பொண்ணுக. சீமான்தான் ரெண்டாவது. மெத்தப் படிப்பும் தம்பிதான். சடுகுடு, கராத்தே, ஆடுறது, பாடுறது, ஓடுறது, ஓடியாறது, திரைப்படம் பாக்குறது, கவிதை எழுதுறதுன்னு இப்பயிருக்கிற மாதிரித்தான். பொதுச்சங்கதிகளில் ஈடுபடவும் அதுக்கான வேலைகளையும் செஞ்சுகிட்டே இருப்பான். தனக்குன்னு சிந்திக்கத் தெரியாத புள்ளை. சடுகுடு ஆடி காலை பெசக்கிட்டு, கராத்தேவுக்குப் போயி கைய பெசக்கிட்டு வரும். வயல் வேலை அத்தனையும் பாக்கும்.
பள்ளிக்கோடம் போறப்ப புதுசா செருப்பு வாங்கி போட்டனுப்புவே. மக்கா நாளு செருப்பு இருக்காது. நண்பர் கேட்டாகன்னு குடுத்துடும். அதே போல புதுச் சொக்கா போட்டுவிடுவேன். நண்பர் யாராவது கேட்டாகன்னு குடுத்துடும். நண்பருக்குனா சீமான் உயிரையும் குடுக்கும்.
அந்த கொணந்தான் இன்னைக்கு ஊருக்கும், நம்ம மக்களுக்காகவும் போராட வைக்குது. நல்ல வழியைச் சம்பாதிச்சிருக்காரு. இப்பப் போற பாதையும் நல்ல பாதைதான். முடிவும் நல்லாதான் இருக்கும்.
நம்ம மக்கள் சாகக் கூடாது, நல்லா இருக்கணும்னுதான் நெனைக்கிறாரு. அது தப்புங்களா தம்பி? அவரு நம்ம மக்களுக்காக போராடுறது எங்களுக்குப் பெருமைதான். தம்பி, இன்னமும் தகிரியமா போராடணும்னு நெனைக்கிறோம்.'
சீமானிடம் வெளிப்படும் போராட்ட குணத்திற்கு நீங்கள் தானே ஆணிவேர்?
"எவ்வளவு காலந்தான் பூமியில வாழப்போறோம். ஈழத்துல நம்ம ஆட்கள் படுற அவதி இங்க தெரியணும்ல. காசு பணம் சம்பாதிக்க வேணாம். சொத்து சொகம் வேணாஞ் சாமி. தம்பிக்காக காலம்பூரா நாங்க ஒழைப்போம். அல்லாடுற நம்ம மக்களை நல்ல நிலைக்கு தம்பி கொண்டு வந்தாலே போதும்."
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றி சீமான், எல்லா மேடைகளிலும் பேசுகிறாரே?
"பேசட்டுமே! அதுக்காக சந்தோஷந்தாபடுறேன்! பிரபாகரன்தான் என் மூத்த மகன்!! அதுக்கப்புறந்தான் எம் புள்ளைகயெல்லாம்.
எம் மூத்த மகன் பிரபாகரன் பண்றது கெடுதலா? நன்மைதானே! நம்ம மக்கள் யாரும் சாகக்கூடாதுன்னு நெனைக்கிறாரு. தம்பி செய்யுறது சரிதான்! இப்ப நடக்குற போரில் நமக்கு வெற்றி கெடைக்கும். நம்ம மக்கள் நல்ல நிலைக்கு வந்துடணும் என்கிறதுக்காக நான் வேண்டாத தெய்வமில்லை. பிரபாகரன் கண்டிப்பா ஜெயிக்கும். தமிழ் ஈழம் கெடைக்கும். ரவைக்கும் பகலுக்கும் கஷ்டப்படுற பிரபாகரன் நல்லா இருக்கணும். அந்த சாமி அவருக்கு நீண்ட ஆயுசைக் கொடுக்கட்டும்?
அங்க பிஞ்சுக் கொழைந்தக கை காலெல்லாம் குண்டுபட்டு பொத்தலாயி மருந்தில்லாம கடலோர மணலுல அனாதையா படுக்க வச்சுருக்கிற காட்சிகளை பாத்ததுலருந்து சோறு எறங்கலை தம்பி.
பள்ளிக்கூடம்கூட நிம்மதியா போக முடியலை. பதுங்கு குழிக்கு ஓடுதுக. ஒரு பெட்டியைத் தூக்கிட்டு ஊரைவிட்டே போறாக. ஒரு வேளைச் சோத்துக்கே தட்டுத் தடுமாறுதுகளே. படுக்கிறது, குளிக்கிறது, சாப்பிடுறது, சுடுகாடெல்லாம் ஒரே எடத்துக்குள்ள நடக்குதே தம்பி.
போதாததுக்கு, அந்தப் பயலுக நம்ம புள்ளைகள கெடுக்கிறானுக. கருவையெல்லாம் கலைச்சு அநியாயம் பண்றானுக. அதுதான் எனக்கு வகுத்தெரிச்சலா இருக்கு. காசுக்காக வேஷம் போட்டுத் திரியறாய்ங்க."
சீமான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போவதாகக்கூட பேச்சுகள் எழுகிறதே?
"தானா கையூண்டி கரணம் பாஞ்சுதான் இந்த நிலைக்கு வந்துருக்கு தம்பி. எல்லாமே சீமானோட முடிவுதான். அரசியலுக்குப் போக இஷ்டமெல்லாம் கெடையாதுன்னு தம்பி தெளிவா சொல்லிடுச்சு! சம்பாதிக்கணும்.. வீட்டுக்கு சேக்கணுங்கிற ஆசை கிடையாது. மக்கள் நல்லா இருக்கணும். மக்களுக்காக மகன் போராடுறான். போராடி வெற்றி பெற்று வரட்டும். எம் மவராசனை தமிழ் மக்களுக்குத் தாரை வார்த்தாச்சு. இனி, அவுக பாத்துக்குவாக!
தம்பிக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கோம். `அங்க சாகையில் இங்க எனக்கெதுக்கு கல்யாணம்'னு கேக்குறாரு. அங்க மக்கள் துயரம் நீங்கினாத்தான் கல்யாணம் பண்ணிக்குவேங்கிறாரு. தனி மனுஷனா மூத்த மகன் பிரபாகரன் போராடுவதை மக்கள் புரிஞ்சுக்கணும். அவர் குடும்பம், குட்டின்னு ஒதுங்கி வாழ இடமா இல்லை. நம்ம மக்கள் சாகக் கூடாதுன்னு நெனைக்கிறாரு. எல்லாரும் சமமா வாழணும்னு நெனைக்கிறாரு தப்பில்லையே."
இந்தத் தேர்தல் எப்படியிருக்கும்?
"இலங்கையில் நடக்குற `இனக் கொலைகளை' வாக்கா மாத்தணும்னு ஆளாளுக்குத் துடிக்கிறாங்க. ஒண்ணும் பண்ண முடியலைங்கிறப்ப எதையாவது பண்ணி மக்களை திசை திருப்புறாக. ஆனா, இது ரொம்பத் தாமதம். ஒலகம் பூரா இருக்குற தமிழர்கள் முழிச்சுகிட்டாக.. அங்க இன்னல்படுற நம்ம குழந்தைகளோட ரத்தத்தையும் கண்ணீரையும் விரயமாக்கி அரசியல் பண்றவுகளை எந்த சாமியும் எப்பவும் மன்னிக்காது. தமிழினம் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் கண்ணீருக்கும் அதுக்குக் காரணமான எல்லோரும் பதில் சொல்லியே தீரணும்." வீரம் செறிந்த தமிழ்த் தாய் அன்னம்மாளின் முகத்தில் கண்ணீர் உருண்டோடுகிறது..
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
சிங்களம் எம் மக்களை மட்டும் கொல்லவில்லை எம் மானம், மரியாதையும் சேர்த்துத்தான்
சிங்களம் எம் மக்களை மட்டும் கொல்லவில்லை எம் மானம், மரியாதையும் சேர்த்துத்தான்
இது எனது உறவுக்காரப் பெண்ணுக்கு நடந்த உண்மைச் சம்பவம், ஆனால் பெயர் விபரங்கள் தவிர்த்து வெளியிடுகின்றேன். வயது 14 இன்னமும் பருவமடையாத அவள் தாயுடன் தந்தை முல்லைத்தீவில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டதால் தஞ்சம் தேடி வவுனியா நோக்கி வந்திருக்கின்றார்கள். இடையில் மறித்த அவர்களை சிங்கள இராணுவம் அவர்களுடன் வந்த அனைவரையும் நிர்வாணமாக்கியுள்ளது. அது மட்டுமல்ல கொண்டுவந்த நகை, பணம் எல்லாம் பறிக்கப்பட்டது.
அம்மாவுடன் நிர்வாணமாக இருந்த அவளை வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சிங்களப்படையினர் உடலுறவு கொண்டிருக்கின்றார்கள், மூர்ச்சை அடைத்து மயங்கி வீழ்ந்த அவளை சிறிது நேரம் கழித்து இரத்தம் தோய்ந்த வயிற்றுப்பகுதியுடன் அவளது தாயருகில் வீசி இருக்கின்றார்கள். தாயும் அவளைத் தூக்கிக்கொண்டு நிர்வாணமாகவே வந்திருக்கின்றாள்.
வழியில் ஒரு வீட்டினைக்கண்டு அந்த வீட்டினுள் சென்று அங்கே இருந்த இரண்டு துணித்துண்டுகளை மானத்தைக் காப்பாற்ற எடுத்து மறைத்துக்கட்டிக்கொண்டு மகளைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றாள். என்ன கொடுமை அய்யா, இது. வழியில் இடைமறித்த சிங்களச் சிப்பாய் ஒருவன் மீண்டும் அந்தப் பச்சிழம் குழந்தை மீது அவர்களுடன் வந்தவர்கள் முன்னிலையில் உடலுறவு கொண்டிருக்கின்றான் இதனைப் பார்த்த அவளது தாய் மயங்கி வீழ்ந்திருக்கின்றாள். கூட வந்த உறவினர் கைத்தாங்கலாக அவளையும் தாயையும் கொண்டுவந்து ஒரு இடத்தில் தஞ்சமடைந்திருந்திருக்கின்றர்கள். இவ்வளவு கொடுமையும் தாங்கி தான் வாழவேண்டுமா என அவள் புலம்பி இருக்கின்றாள்.
இரவுப்பொழுது கழிந்து காலையில் எழுந்து பார்த்தபோது அவள் தூக்குமாட்டி இறந்திருந்திருக்கின்றாள். அவள் கொல்லப்பட்டாளா அல்லது தற்கொலை செய்துகொண்டாளா என்று அவளது அன்னைக்கு கூட தெரியவில்லை, புலம்பி அழுத அவளை உறவினர்களும் நண்பர்களும் கொண்டுவந்து வைத்தியசாலையில் அனுமதித்து இருக்கின்றார்கள். பித்துப்பிடித்தவளாக எந்த சம்பவமும் தெரியாதவளாக இப்போது இருக்கின்றால். சிங்களம் எம் மக்களை மட்டும் கொல்லவில்லை எம் மானம், மரியாதையும் சேர்த்துத்தான்.
தயவு செய்து பெயர் விபரங்கள் கேட்காதீர்கள்.
- யாழ்நிலவன்
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
ராஜபக்சே மாண்டான்...! கிராபிக்ஸ் படங்கள்
திலீபன் வரதராஜன் அவர்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிய Graphics. அவர் இவற்றை எமது இணையத்தளத்தில் இணைக்குமாறு வேண்டியதற்கிணங்க....
http://www.nerudal.com/nerudal.6505.html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
மனநோயாளிகள்…சோனியா, ராஜபக்சே , கருணாநிதி.
சோனியா காந்தி தலைமையில், கருணாநிதியின் மேற்ப்பார்வையில், றாஜபக்~ படை, பால் குடிக்குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் உட்பட 10000க்கும் மேற்ப்பட்டோரை கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது, 10000ற்கும் மேற்ப்பட்ட அப்பாவித்தமிழர்களை அங்கவீனப்படுத்தியுள்ளது, பிடிபட்டோரை சித்திரைவதைசெய்து கொலைசெய்கின்றது, குழந்தைகள் உட்பட வன்னி மக்களை உணவின்றி பட்டினிபோட்டும், காயங்களுக்கு மருந்துகளின்றியும், துடிதுடித்து கொடூரமாகக் கொலைசெய்கின்றது, இவ்வளவு கொடூரங்களை செய்த கொடும் பாவிகளை தமிழர்கள் யாரும் சும்மாவிடமாட்டார்கள், இவர்கள் மூவர்களும் பயங்கரவாதிகள், மரணதண்டனைக் கைதிகள், கொடூரக்கொலைகாரர்கள், இவர்கள் மனநோயாளர்கள்,
சோனியா நீ 10000இற்க்கும் மேற்ப்பட்டோரைக் கொன்று குவித்துவிட்டு War is Over என்றாய், இல்லை நீ தான் over ராஐிவ்காந்தி செத்ததிற்காக 10000ற்க்கும் மேற்ப்பட்ட அப்பாவித்தமிழர்களைக் கொன்றுகுவிக்கின்றாய், ஆனால் ராஐீவ்காந்தி ஈழத்தில் 6000ற்கும் மேற்ப்பட்டோரைக்கொன்று குவித்ததிற்கு கடவுள் தான் ராஐீவ்காந்தியைக்கொன்றது, ராஐீவ்காந்தி 6000கும் மேற்ப்பட்டோர், சோனியா காந்தி 10000ற்கும் மேற்ப்பட்டோரைக் கொன்றுகுவித்துள்ளது, இனி றாகுல் காந்தி, பிரியங்கா காந்தி எத்தனை மக்களைக் கொல்லுவார்கள்?
காந்தி பரம்பரையே கொலைகாரக் கும்பலாக மாறிவிட்டது, கொலைக்கும்பலை அடியோடு அழிக்கவேண்டும், உன் குழந்தைகளை மாளிகையில் வைத்துக்கொண்டு எங்கள் குழந்தைகளை இரத்த வெள்ளத்தில் கதறக்கதறக் கொலை செய்கின்றாய். வல்லரசுப்படையொன்றை சொந்தப்பழிவாங்கலுக்கு பயன்படுத்தி இந்தியமக்களை ஏமாற்றிவிட்டாய்.
சோனியா உன் படையும், றாஜபக்~ படையும் சேர்ந்து போர்தர்மங்களுக்கு மாறாக கொடூரம் செய்கின்றது. பிடிபட்ட அப்பாவி மக்களை உணவின்றி வாட்டுகின்றது, இரகசிய சிறுமுகாம்களில் இவ்விருவராக நிர்வானமாக அடைத்து வைத்திருக்கின்றது. சொந்தமண்ணிலேயே நிர்வானக் கைதிகளாகிய கொடுமை உலகிலே வேறெங்கும் நடந்திருக்கமுடியாது. ஏன் சோனியா உன்னையும் றாஜபக்சவையும் நிர்வானமாக ஒரு முகாமிற்குள் அடைத்தால் தான் உனக்கு தெரியும்?.
இது எல்லாம் ஒரு கோழைத்தனமான செயல். அன்று றாஐிவ் படையும், சிங்களப்படையும் அடிவேண்டி ஓடியது. இன்று உன் படையும், சிங்களப்படையும் மரண அடிவேண்டியொடியது. புலியின் அடிக்கு ஈடுகொடுக்கமுடியாமல், நாடுகளுக்கிடையில் பாவிக்கும் பாரிய யுத்தக் கருவிகளுடனும், விமானங்கள், பீரங்கிகள் மூலமும் அடித்தும், முடியாமல் பின்வாங்கி அப்பாவித்தமிழ் மக்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி உலகத்திலேயே தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை அடித்து முன்னேறுகின்றாய்.
கிழவர் கருணா(ய்)நிதியும் உடந்தையாக இருந்தார். துமிழக உறவுகள் தீயில் வெந்து தியாகம் செய்ததைக்கூட கண்டுகொள்ளாத அரக்கர்கள். சோனியா நீ தமிழர்களை ஏமாற்றமுடியாது. தமிழகமும், உலகிலுள்ள அத்தனை தமிழினமும் ஒன்று சேர்ந்துவிட்டது. இனி கருணா(ய்)நிதிக்கும், சோனியாக்கும் தமிழ் நாட்டில் முழுக்கு தான். உலகில் எந்தவொரு வீரத்தமிழனிடத்திலும் உனக்கு இடமில்லை.
மொக்கன் றாஜபக்சவுடன் சேர்ந்து எம்மண்ணில் எவ்வளவு அட்டகாசம் செய்கிறாய். சுிங்களப்படை புலிப்படையைக் கண்டு நடுங்கும், சிதறி ஓடும். நீ சிங்களப்படையுடன் உன் படையைச் சேர்த்து ஒழித்து நின்று முதுகில் குத்தும் நரித்தந்திரத்தை சொல்லிக்கொடுக்கிறாய்.
இதோ பார் றாஜபக்ச உன்னுடன் சேர்ந்திருக்கும், நீ போட்ட கழிவைத்திண்ணும் ஐந்தாறு எட்டப்பனுடன்; சேர்ந்து தமிழனை வென்றுவிடலாம் என்று நினைக்காதே. சுிஙகளப்படையும், எட்டப்பனும் சிதறி ஓடும் காலம் விரைவில். முன்பு ஈழத்தில் மட்டும் தான் புலிகள் இப்போ உலகெங்கும் புலிகள். உலகில் உள்ள ஒவ்வொரு ரோசத்தமிழனும் புலிகளே. சிங்களப்படையின் கொடுமையான ஆட்சியால், எமது வெற்றித்தலைவனின் வழியில் உலகின் எல்லாத்தமிழனும் புலிப்படையாகினர். திரு நெடுமாறன, வைகோ, பாரதிராஜா, சீமான் போன்ற வீரத்தமிழர்களுடன், தமிழகமே ஈழத்தமிழர்களுக்காக அணிதிரண்டுள்ளது. ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.
வீரம், தீரம், நேர்மை, கட்டுப்பாடு, தியாகம் எல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு பெரும்படைதான் புலிப்படை. இனி புலிகளை அழிக்க யாராலும் முடியாது. உலகின் எட்டுக்கோடி தமிழனும் தலைவர் பக்கம். புலிப்படை ஈழதேசத்தில் இருப்பது இலங்கைக்கே பெருமை, இது சிங்களதேசத்திற்;கு புரியவில்லை.
வுிழ விழ எழுவோம், வீறுகொண்டெழுவோம். உலகில் எட்டுத்நிக்கிலும் எமது தேசியக்கொடிகள் பட்டொளியுடன் பறக்கிறது. தமிழா தமிழா நாளை நம்நாளே.
தமிழவன்
http://www.nerudal.com/nerudal.5521.html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
என் ஹீரோ பிரபாகரன்: நடிகர் பிரகாஷ் ராஜ்
'என் தேசத்து மண்ணே!
உனக்கு என் ரத்தத்தை தருவேன்.
இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...'
அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.
கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன்.
''புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா?''னு கேள்வி கேட்கிறார் நிருபர். 'புல்லும் துன்பப்படக்கூடாது'னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்' என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம்.
குழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம். துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது.
என் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன். என்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, 'அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு.
எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு.
நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, 'உண்மையை மட்டும் பேசுவது' என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம். ஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான். உலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.
கேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா? கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார். அந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. 'அக்கா, அக்கா'னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது. இன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது?
'ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்'னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை. சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை?
தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும்?
ஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம். திரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன். சொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க.
கொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, 'உன்னுடைய ரோல்மாடலா அவ'னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான்.
முப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்.
''வன்னியில் நடந்த குண்டுப்வெடிப்பில்
ஐந்துபேர் பலியானார்கள்.
ஐம்பதுபேர் புலியானார்கள்''னு
ஒரு கவிதை படிச்சேன். அதில் இருக்கிற வார்த்தை நயங்களைவிட, கருத்து உண்மைகளுக்கு காந்தம் அதிகம். உண்மை கசப்பா இருந்தாலும் ஒத்துக்கிட்டுதான் ஆகணும். விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். சும்மா, 'உச்' கொட்டிக்கிட்டே இல்லாம..
இன்னும் தொடருவேன்...
நன்றி: தெனாலி.காம் http://www.thenaali.com/thenaali.aspx?A=192
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
பிரபாகரன் இணையதளத்தில் பேசியதாக பரபரப்பு
பிரபாகரன் இணையதளத்தில் பேசியதாக பரபரப்பு
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்துடன் நடந்த போரில் உயிரிழந்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஆனால், நக்கீரன் வார இதழ் பிரபாகரன் மிகவும் பாதுகாப்போடு நலமாக உள்ளார் என செய்தி வெளியிட்டது. அடுத்து விடுதலைப்புலிகளும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனாலும், பிரபாகரன் குறித்து பல்வேறு வதந்திகள், வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், கூடலூ-பந்தலூர் தாலுகாவில் நேற்று காலையில் இணையதளத்தில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பேசியதாக தகவல்கள் பரவின.
இதனால் பந்தலூர் பகுதியில் உள்ள இண்டர்நெட் சென்டர்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
காலை முதல் மாலை வரை பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து இணைய தளத்தை பார்வையிட்டு சென்றனர்.
இதன் காரணமாக பந்தலூர் முழுவதும் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
ராஜபக்சே ஆவேசம்:தூக்கு தண்டனையை ஏற்க தயார்
தூக்கு தண்டனையை ஏற்க தயார்:ராஜபக்சே ஆவேசம்
கொழும்பு நகரில் உள்ள இலங்கை பாராளுமன்ற தேசிய பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில், அதிபர் ராஜபக்சே உரையாற்றினார்.
அப்போது, ''இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி வெற்றி பெற்றதை, குற்றம் என்று கூறி, சர்வதேச போர் குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர, சில வெளிநாட்டு சக்திகள் முயன்று வருகின்றன. இதற்காக நான் பயப்பட மாட்டேன். வழக்கு தொடர்ந்தால், சந்திக்க தயாராக இருக்கிறேன்.
விடுதலைப்புலிகளை அழித்தது, குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கு மேடை ஏற கூட தயாராக இருக்கிறேன். விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தியது, இந்த நாட்டின் நன்மைக்காகத்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். விடுதலைப்புலிகளின் தோல்வி, தமிழர்களின் தோல்வி அல்ல என்பதை உலக தமிழர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8852
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
துப்பாக்கிகள் மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல: விடுதலைப்புலிகள்
துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல: விடுதலைப்புலிகள்
எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல என்றும், தலைமையின் உத்தரவுக்காகவே காத்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் யாழ், செல்லும் படையணித் தளபதி வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார் என விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
யாழ், குடாநாட்டில் மறைவாக உள்ள விடுதலைப்புலிகள் 48 மணி நேரத்திற்குள் இலங்கை ராணுவத்திடம் சரணடைய வேண்டும் என யாழ் மாவட்ட ராணுவத் தளபதி கேட்டுள்ளார் என்ற செய்தியை அடுத்து விடுதலைப்புலிகளின் யாழ், செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடையவதற்காக அல்ல. உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்.
தமது போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள்.
இலங்கை ராணுவம் இன்று பாரிய உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதையறிந்து மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பயங்கரவாதத்தை அழிப்பதாகக் கூறி சுதந்திரப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் மாயை மிக விரைவில் உடையும் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
ஆனந்த விகடன் கட்டுரை "இனி என்ன ஆவான் இலங்கைத் தமிழன்?"
'30 ஆண்டுக் கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது!' - ஜோர்டான் போன இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே பறந்து வந்து, கொழும்பு மண்ணைக் குனிந்து முத்தமிட்டார்.
சிங்கள ஆட்சியின் கீழ் கிடந்த மூன்றில் ஒரு பங்கு நிலத்தைச் சிறுகச் சிறுகப் பறித்து 'தமிழீழம்' என்று பெயர் சூட்டி ஐ.நா. அங்கீகாரம் தவிர, அத்தனை உள்கட்டமைப்புகளையும் நிர்மாணித்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாகச் சிங்கள அரசு சொல்ல ஆரம்பித்திருக்கிறது.
"இனி விடுதலைப் புலிகள் என்பதே கிடையாது. எல்லா மக்களையும் புலிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம்" என்று மகிந்தாவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார். சிங்கள ராணுவத் தின் அதிகபட்ச சாதனைக்குக் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் பலியாகி இருக்கிறார் கள். மகிந்தா பதவிக்கு வந்து யுத்தத்தைத் தொடங்கிய பிறகு, சுமார் 90 ஆயிரம் தமிழர்கள் குண்டு வீசிக் கொல்லப்பட்டுள்ளார்கள். 22 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு பல்லாயிரம் தமிழர்களைப் புதைகுழிக்குள் அனுப்பிக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதாவது, பிணங்கள் புதைக்கப்பட்ட மைதானம் மகிந்தா வசமாகியிருக்கிறது.
இருக்கலாம், கொன்றது போக மீதம் உள்ள தமிழர்களின் கதி என்ன? இதுதான் இன்று பூதாகாரமாக இருக்கும் கேள்வி!
ராணுவ சாகசத்தைத் தன்னுடைய வெற்றிக் களிப்பாகக் கொழும்பு கொண்டாடி வரும் வேளையில், இலங்கையில் இருந்து இரண்டு குரல்கள் கேட்கின்றன. "அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தால் பாதிக்கப்பட்டது நிராயுதபாணிகளான மக்கள்தான். புலிகள் மீதான வெற்றி தேசியப் பிரச்னைக்குத் தீர்வாகாது. தமிழர்களின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்" என்று சிவத்தம்பி உள்ளிட்ட தமிழ் அறிவுஜீவிகள் சொல்லியிருக்கிறார்கள்.
கொழும்பு தலைமை நீதிபதியான சரத் என். சில்வா, "வன்னியில் இருந்த மக்களை முதலில் சொந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும். சோறு போட்டு முகாமில் தங்கவைப்பது தீர்வாகாது. வடக்கு மாகாணத்தில் அகதி முகாம்கள் அதிகரித்து வருவது தீர்வாகாது. பத்து ஏக்கர் நிலப்பரப்புக்குள் 2 லட்சம் மக்களை எத்தனை காலத்துக்கு வைக்கப்போகிறீர்கள்? அவர்களுக்கு சட்டரீதியான தீர்வைச் சொல்லுங்கள். இல்லையென்றால், சர்வ தேச நாடுகள் தலையிட நேரிடும்" என்று சொல்லிஇருக்கிறார்.
போரை முடித்துவிட்டதாக அறிவித்திருக்கிற அரசாங்கம், அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை உலகம் உற்றுக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.
கொழும்பில் ஆறு லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே எண்ணிக்கையிலான மக்கள் இருப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் நான்கு லட்சம் பேரும், போர் முனையின் கொடுமையைக் கடந்த ஓராண்டாக அனுபவித்த வடக்கு மாகாணத்தில் இரண்டரை லட்சம் பேரும் இருக்கிறார்கள். சிங்க ளர்களின் பண்டிகை, இலங்கை சுதந்திர தினம், தேர் தல் வெற்றிகளின்போது கொழும்புத் தமிழர்களின் நிம்மதி மொத்தமாகப் பறிபோய்விடும். வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும், காவல் துறையால் அச்சுறுத்தப்பட்டும் வாழும் மக்கள் அவர்கள். தமிழன் என்பதற்கான அடையாளமான பொட்டு வைக்காமல் வாழப் பழகிவிட்டார்கள் அங்கு. யாழ்ப்பாணம், கடந்த 14 ஆண்டுகளாக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பகுதி யாகத்தான் இருக்கிறது. அங்கு உறவினர்கள் யாரும் வந்து பார்க்க முடியாது. இவர்களும் வெளியூர் போக முடியாது. எங்கு வேலைக்குப் போனாலும், மாலை ஆறு மணிக்கு முன்னதாக வீட்டுக்குள் போய் அடங்கி விட வேண்டும் என்ற அடக்கு முறை தொடர் கிறது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் இடங்களில் சிங்களவர்கள் வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இடஒதுக்கீட்டின்படி, சுகாதாரப் பணியாளர் வேலைக்கு 100 பேர் எடுத்தால், ஐந்து தமிழர்களுக்குத்தான் அங்கு வேலை கிடைக்கும். அந்த அளவுக்கு சிங்களக் குடியேற்றம் அதிகமாகிவிட்டது. புலிகளிடம் இருந்து கைப்பற்றியதும் 'கிழக்கின் உதயம்' என்று ஒரு திட்டத்தை மகிந்தா அறிவித்தார். பள்ளிக் கூடம், தொழிற்சாலை, மருத்துவமனை ஆகியவை கட்டித் தரப்படும் என்றார். எதுவும் நடக்கவில்லை. அங்கு நடத்தப்பட்ட தேர்தலில், பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். 'என் மாகாணத்தின் வளர்ச்சிக்குச் சொன்னபடி பணத்தை ஒதுக்கவில்லை' என்று அவர் புகார் சொன்னார். உடனே சிங்கள அதிகாரிகளால் மிரட்டப்பட்டு, இப்போது அமைதியாக இருக்கிறார். வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியதும் 'வடக்கில் வசந்தம்' என்ற திட்டம் கொண்டுவரப்படும் என்று மகிந்தா அறிவித்துள்ளார். கிளிநொச்சியைப் பிடித்ததும் தமிழர்களுக்கான தீர்வு அறிவிக்கப்படும் என்று சொன்னார். ஆனால், ஐந்து மாதங்கள் ஆகியும் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
'தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே?' என்று டெல்லி பத்திரிகையாளர்கள் மாறி மாறிக் கேட்டபோது கோபமான மகிந்தா ராஜபக்ஷே, "என் நாட்டு மக்களைப் பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகமான அக்கறை இருக்குமா?" என்று கேட்டார். அந்த அக்கறையை ராஜபக்ஷே காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் அவர் கவனிக்க வேண்டியது வன்னி பகுதியில் உள்ள முகாம்களை.
போரின் பெருவாய் தின்று தீர்த்த மக்கள் போக, இன்றும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை வதை முகாம்களில் அடைத்துவைத்திருக்கிறது சிங்கள அரசு. மாற்றுடுப்புகள் சிலவற்றுடன் தலைச் சுமையாக ஒரு பையைச் சுமந்தபடி உயிர்ப் பிச்சை கேட்டு வரும் மக்களை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதி யின் அடர்காட்டுக்குள் அமைந்திருக்கும் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டுசெல்கிறார்கள். சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான இந்த முகாமில், அரசின் கணக்குப்படி 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இதுவரை 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் வந்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால், அந்த முகாம்களில் குடியிருப்பு என்று எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் வழங்கிய தற்காலிகக் கூடாரங்கள் மட்டுமே எங்கும் நிறைந்திருக் கின்றன. சின்னஞ்சிறிய கூடாரம் ஒவ்வொன்றிலும் மூன்று குடும்பங்கள் நெருக்கியடித்து வசிக்கின்றன.
முகாம் அமைக்கப்பட்டு மாதக் கணக்காகிவிட்ட நிலையில், இதுவரை லாரிகள் மூலமாகவே குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. அது குடிக்க மட்டுமே! குளிக்கவும் அன்றா டத் தேவைகளுக்கும் தண்ணீர் கிடை யாது. அவர்கள் அனைவரும் குளித்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஆகின்றன. இப்போதுதான் முகாமில் கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு தடவை லாரிகள் மூலம் ஏதோ உணவு விநியோகிக்கிறார்கள். பசியால், பட்டினியால் வாடித் துடிக்கும் அம்மக்கள் அந்த உணவை வாங்க லாரிகளின் முன்னால் கையேந்தி முண்டியடிக்கின்றனர். கூட்டம் அதிகமாகும் நாட்களில் நாய்களுக்கு பிஸ்கட் வீசுவது போல மக்களை நோக்கி உணவுப் பொட்டலங்கள் தூக்கி வீசப்படுகின்றன. மக்கள் அதை ஓடி ஓடிப் பொறுக்கிக்கொள்ள வேண்டும். அந்த உணவையும் பெற வாய்ப்பற்ற வயது முதிர்ந்த பெரியவர்கள் மரணத்தைச் சந்திக்கின்றனர். மே 1 முதல் மே 11 வரைக்கும் மட்டும் பூந்தோட்டம் முகாமில் 61 முதியவர்கள் பட்டினியால் செத்துப் போயிருக்கிறார்கள்.
முகாமுக்கு வந்து சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இப்போது வவுனியா முகாமைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டு, அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுஇருப்பதாகச் சொல்லப்படுகிறது. தப்பிக்க நினைத்தால் மரணமே பரிசு. "இப்போது எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அடித்தாலும், சுட்டாலும், சிதைத்தாலும், கற்பழித்தாலும், என்ன சித்ரவதை செய்தாலும் எங்களால் வாய் திறந்து பேச முடியாது. துப்பாக்கிகளின் கண்காணிப்பில் சோறு உண்ணவும், உடுப்பு மாற்றவும் நிர்பந்திக்கப்படுகிறோம். சின்ன பாதுகாப்புக்கூட இல்லாமல் ஒரு திறந்தவெளி சித்ரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். இலங்கை அரசாங்கம் எங்களைப் போர்க் கைதிகளாகவே பாவிக்கிறது. எங்களைச் சிரிக்கச் சொல்லி புகைப்படம் எடுத்து, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பிரசாரம் செய்கிறது. அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு எங்களை நிச்சயம் இந்த முகாமைவிட்டு அனுப்ப மாட்டார்கள். வெளியில் வேலைக்குப் போகக்கூட அனுமதிக்க மாட்டார்கள். அரசாங்கம் கொடுக்கும் சோற்றைத் தின்றுகொண்டு, அவர்கள் கொடுக்கும் தண்ணீரைக் குடித்துக்கொண்டு, வெறும் பிணங்களாக, அடிமைகளாக வாழ்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.
இனி வரும் நாட்கள் எங்களுக்கு இன்னும் மிக மோசமானதாக இருக்கும். கேட்க நாதியற்ற எங்களை, இலங்கை அரசாங்கம் என்னவும் செய்யும். கடும் சித்ரவதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதையும் தாண்டி, எங்களின் பூர்வீகப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தினாலும் அந்த வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எங்களின் குறைந்தபட்சப் பாதுகாப்பு அரணாக இருந்த புலிகளும் இல்லாத நிலையில், இனி நாங்கள் யாரை நம்பி வாழ முடியும்? உலகத்து நாடுகளே… தயவுசெய்து எங்களை இலங்கையில் இருந்து மீட்டுச் செல்லுங்கள். இந்த தேசத்தை சிங்களனே வைத்துக்கொள்ளட்டும். அவர்களே ஆளட்டும். எங்களை விடுவியுங்கள். வேறு ஏதோ ஒரு நாடு… ஏதோ ஒரு வேலை… இலங்கை மட்டும் வேண்டாம். அரசியல் தஞ்சம் கேட்கிறோம், உயிர் தஞ்சம் கேட்கிறோம். தயவுசெய்து செவிமடுங்கள்… எங்களை மீட்டுச் செல்லுங்கள்" - வவுனியா முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண், அங்கு பணிபுரியும் சேவை நிறுவன ஊழியரின் உதவியுடன் நம்மிடம் பேசிய வார்த்தைகள் இவை.
இன்று பிச்சைக்காரர்களைவிடக் கேவலமான நிலையில், மேலாடை இல்லாமல் உடம்பு வற்றி கையேந்தி நிற்கவைக்கப்பட்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் அத்தனை பேரும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்திலும் இப்போது எண்ணிப் பார்த்தாலும்கூட 50-க்கு மேல் பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். தமிழகம் போல ஈழத் தமிழர்களிடம் இத்தனைப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. 90 சதவிகிதம் பேர் மத்திய தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வறுமையையும் பட்டினியையும் கண்டறியாதவர்கள். இந்தக் கொடிய போர் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலக் கையேந்த வைத்திருக்கிறது.
உச்சகட்ட சித்ரவதைக் கூடமாக இருக்கும் இந்த கதிர்காமர் இடைத்தங்கல் முகாமைத்தான் 'நலன்புரி மையங்கள்' என்றும், 'உலகின் முன்மாதிரி நிவாரணக் கிராமம்' என்றும் வர்ணிக்கிறது இலங்கை அரசு. 'உலகின் மிகப் பெரிய பணயக் கைதிகள் மீட்பு நட வடிக்கை' என இதைப் பிரசாரம் செய்கிறது. இம் மக்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக ரவிசங்கர் மீது கோபப்பட்டார் கோத்தபய ராஜபக்ஷே. கொழும்பிலும் இதே போன்ற நிலைமைதான். கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "எங்கள் பல்கலைக்கழக வளாகம் எங்கும் தமிழர்கள் பிணமாகக் கிடக்கும் காட்சிகள் புகைப்படங்களாக மாட்டி வைக்கப்பட்டுள்ளன. 'இதே நிலைமைதான் நாளைக்கு உங்களுக்கும்' என்று அந்தப் புகைப்படங் களைக் காட்டி சிங்கள மாணவர்கள் எங்களை எச்சரிக்கின்றனர். நடந்து செல்லும்போது மாடிக் கட்டடத்தில் இருந்து எச்சில் துப்புகின்றனர். எங்களால் எந்தச் சிறு வார்த்தையும் பேச முடியவில்லை. சிங்களம் கற்றுக்கொண்டு சிங்களனாக மாறுவது ஒன்றுதான் இங்கு உயிர் தரித்திருப்பதற்கான ஒரே வழி!" என்று தொலைபேசியில் கதறுகிறார்.
"கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டவை 56 ஆயிரம் வீடுகள். இப்படி தமிழர் வாழும் 10 மாவட்டங்களிலும் புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டு புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதில் தொடங்கி, உயிரோடு இருக்கும் அப்பாவி மக்களைக் கொண்டுபோய் அந்த வீடுகளில் குடியமர்த்தி, நிம்மதியான தேசத்தில்தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை விதைப்பதில் முடிய வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வேலைகள் தொடங்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்து எமர்ஜென்சி விலக்கப்பட வேண்டும். கொழும்புத் தமிழர்கள், தங்கள் தொழிலைத் தொடர உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர் அமைப்புகள் சொல்ல ஆரம்பித்துள்ளன.
தமிழ் எம்.பி. சேனாதிராஜா சொல்கிறார்… "ஒரு கொள்கைக்காக அர்ப்பணித்து நின்ற தமிழ் மக்கள் ஆவியாக அலைகிறார்கள். அவர்தம் உறவுகள் சிறையில் வீழ்ந்து கிடக்கிறார்கள். கையில் காசுமின்றி, நோய்க்கு மருந்துமின்றி, குழந்தைக்குப் பாலுமின்றி, உடுக்க மாற்றுத் துணியுமின்றி பட்டினியில் கிடக்கின்றன சொந்தங்கள். எமது உழைப்பில், எமது உணவில், எமது உப்பில், ஒரு பிடியையேனும் அல்லல்படும் தமிழனுக்குக் கண்ணீருடன் கொடுத்து உயிர் கொடுப்போம். கடல் கடந்து வாழ்பவர்கள் எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்!"
அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்களா?
'இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டதால் உலகம் முழுவதும் வாழும் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்' என்று சிலர் பயமுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் 117 முகாம்களில் 73,433 பேரும், உலகமெங்கும் பல லட்சம் ஈழத் தமிழர்களும் அகதிகளாக வாழ்கிறார்கள். இவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்களா என்று ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பொருளாளர் சந்திரஹாசனிடம் கேட்டோம். "ஓர் அகதி மறுபடியும் தன் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கு அங்கு அவரது உயிருக்கும், வாழ்வாதார உரிமைகளுக்கும் உத்தரவாதம் இருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் இப்போது ஆயுதப் போராட்டம் ஒரு நிறைவுக் கட்டத்தை எட்டியிருப்பதை வைத்து, தமிழ் மக்கள் அங்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழல் இருப்பதாகச் சொல்ல முடியாது. இப்போதும் அங்கு சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம் தொடர்கிறது. தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இப்போதும் அகதிகளாக வெளியேறி வருகிறார்கள். எனவே, அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. தவிரவும் ஒரு தேசம் தன் நாட்டில் இருக்கும் அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டுமானால், 'அகதிகளின் சொந்த நாட்டில் அமைதி திரும்பிவிட்டது, அங்கு வாழலாம்' என்று அவர்கள் நம்ப வேண்டும். உண்மையில் இன்று இலங்கைப் பேரினவாதத்தின் கொடூரம் பற்றி அனைத்துலக நாடுகள் அதிகமாக அறிந்துவைத்திருக்கிற சூழலில் திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை!"என்றார்.
- ஆனந்த விகடன்
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நன்றி....!
Locate IP Address on Map
http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
சற்று முன்...!
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- "தினத்தந்தி " தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)
- "தினமணி" (1)
- "தினமணி" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)
- chat (2)
- firefox (2)
- shortcuts" (1)
- sms (2)
- video (2)
- அரசியல் (12)
- ஆனந்த விகடன் (1)
- இணைய நூல் (3)
- இணைய முகவரிகள் (2)
- இமெயில் (2)
- இமெயில் குழு (2)
- இலங்கை (21)
- ஈழ வரலாறு புத்தகம் (1)
- எல்லாம் (1)
- என் பக்கம் (9)
- கணினி தொழில் நுட்பம் (32)
- கதை (6)
- கலக்கல் டான்ஸ் வீடியோ (1)
- கவிதை (10)
- குர்து இனத்தவர் கடிதம் (1)
- குறும் படம் (2)
- சிரிப்பு (10)
- சினிமா (9)
- சீமான் (11)
- சு.பொ. அகத்தியலிங்கம் (3)
- தமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)
- தமிழச்சி (5)
- தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)
- தமிழீழ வீடியோ பாடல் (2)
- தமிழீழம் (53)
- தமிழ் 99 (2)
- தமிழ் ஈழம் (11)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- தலைவர் பிரபாகரன் தொடர் (12)
- தன்னம்பிக்கை (1)
- தாமரை (4)
- தியாகு (4)
- திருமாவளவன் (1)
- தினத்தந்தி (2)
- தினமணி (55)
- நகைச்சுவை (13)
- நக்கீரன் (2)
- படங்கள் (18)
- பாரதிராஜா (2)
- பிரபாகரன் (15)
- பெரியார் (9)
- பேச்சு (1)
- பேட்டி (4)
- பொதுவுடைமை (5)
- மனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)
- மூட நம்பிக்கை (8)
- மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)
- ராஜபக்சே (1)
- விடுதலைப் புலிகள் (14)
- விஜய் (5)
- வீடியோ (14)
- வீடியோ படம் (85)
- வைரமுத்து (1)
- ஜி இமெயில் (2)
- ஜி மெயில் (2)
- ஜெகத் கஸ்பார் (1)
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
-
▼
2009
(874)
-
▼
May
(199)
-
▼
May 24
(18)
- மரணத்தை வென்ற மாவீரன்
- நடேசன் உட்பட 12 பேர் எவ்வாறு சிங்கள அரசால் வஞ்சகமா...
- "தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேர...
- வன்னிக்களப் பகுதியில் நடப்பது என்ன? அதிர்ச்சித் தக...
- பிரபாகரன் பற்றி ஊடகப்போரும் உலக ஊதுகுழல்களும்
- புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக் கூறிய தமிழ்...
- இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் வேண்டாம்-"ஆன...
- இறுதிச்சடங்கு-கவிதை
- தமிழீழம் சாத்தியமா?! தமிழ் நாட்டிலிருந்து ஒரு கண்ண...
- எம் மூத்த மகன் பிரபாகரன் - சீமானின் தாய்
- சிங்களம் எம் மக்களை மட்டும் கொல்லவில்லை எம் மானம்,...
- ராஜபக்சே மாண்டான்...! கிராபிக்ஸ் படங்கள்
- மனநோயாளிகள்…சோனியா, ராஜபக்சே , கருணாநிதி.
- என் ஹீரோ பிரபாகரன்: நடிகர் பிரகாஷ் ராஜ்
- பிரபாகரன் இணையதளத்தில் பேசியதாக பரபரப்பு
- ராஜபக்சே ஆவேசம்:தூக்கு தண்டனையை ஏற்க தயார்
- துப்பாக்கிகள் மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல: ...
- ஆனந்த விகடன் கட்டுரை "இனி என்ன ஆவான் இலங்கைத் தமிழ...
-
▼
May 24
(18)
-
▼
May
(199)