தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, July 11, 2009

♥ தன் தேசியக்கொடியில் துப்பாக்கியை சின்னமாக கொண்ட நாடு . ♥

Picture092.jpg Shadows image by CiaraJane123456


தன் தேசியக்கொடியில் துப்பாக்கியை சின்னமாக  கொண்ட நாடு மொசாம்பிக்


http://unimaps.com/flags-africa/mozambique-flag.gif


♥ "பிரபாகரன்" தப்பிவிட்டார்!? இலங்கை காவல்துறை விசாரணை ♥

"பிரபாகரன்" தப்பிவிட்டார்!? இலங்கை காவல்துறை விசாரணை


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் ஓர் உடலை காட்டி செய்தி வெளியிட்டது. அந்த உடலை காட்டுவதற்கு முன்னர் மூன்று நாட்களில் பிரபாகரன் சாவு குறித்து பல்வேறு முரண்பட்ட செய்திகளை இலங்கை இராணுவம் கூறியது. அதாவது, பிரபாகரன் புலிகளுடன் தற்கொலை செய்துகொண்டார். பிரபாகரன் முக்கிய தளபதிகளுடன் ஓர் மூடுந்தில் தப்பி செல்ல முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டார்; உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அவற்றில் பிரபாகரன் உடல் எது என்பதை கண்டறிய முயன்று வருகிறோம் என்று கூறியது.
இந்த முரண்பட்ட தகவல்களால் இது பிரபாகரன் உடல் என்று சிங்கள இராணுவம் காட்டிய உடலை பெரும்பாலானோர் நம்பவில்லை. இந்நிலையில் பிரபாகரன் இறக்கவில்லை; உயிருடன் உள்ளார் என்று விடுதலைப் புலிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரெதிராக "பிரபாகரன் இறந்தது உண்மை" என்று கூறப்பட்டது. இதனால் பிரபாகரன் சாவில் மர்மம் தொடர்கிறது.

இந்நிலையில், இலங்கை காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ள கருத்து, பிரபாகரன் விசயத்தில் ஒரு மாறுபட்ட முரண்பட்ட கருத்தாக உள்ளது.

கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆய்தக்குழு இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், இளைஞர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதனை அறிந்து அங்கு காவல்துறை சென்று விசாரணை நடத்தியது. அப்போது, ஒரு பெரிய தகவல் வெளியாகியுள்ளது.
"துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், "துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞர் பெயர் விமலன். அவர் யாரெனில், கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரின் மகன். விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடையவர் சற்குணராஜா என்று பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.
சற்குணராஜா பற்றி இலங்கைப் படையினர் நடத்திய விசாரணையில், அவர் தற்போது இலங்கையில் இல்லை; தப்பி வேறொரு நாட்டுக்கு சென்றுவிட்டார் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

"கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான நிழற் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட நிழற் படமொன்று இருந்துள்ளது.
இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற உருவமுடைய ஒருவர் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது . நிழற் படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் வேறொரு நாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது'' என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆக, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சற்குணராஜா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவத்தை ஒத்த உருவத்தை உடையவர் என்று இலங்கை காவல்துறை ஒப்புகொண்டுள்ளது. பிரபாகரன் உருவமுடைய இரண்டு பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் தப்பிவிட்டார். தப்பியவர் பிரபாகரனாக கூட இருக்கலாமே?

இது குறித்து கொட்டாஞ்சேனை காவல் துறையினர் உட்பட சிறப்பு காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றது.


http://sakyabuddhan.blogspot.com/2009/05/blog-post_30.html

"என்  இனமே....!"வீடியோ பாடல்http://www.youtube.com/watch?v=uee4HdaWxLM

"Turtles Can Fly " - ஈரானியத் திரைப்பட விமர்சனம்

  Turtles Can Fly - ஈரானியத் திரைப்படம்"எப்போதும் சாவையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக நடமாடுகிறாள். ஒரு கட்டத்தில் தன் மகனைக் கட்டிப்போட்டுவிட்டு சாகச் செல்கிறாள். ஆனாலும் அவளால் சாகமுடியவில்லை"
 


"கண்ணி வெடிகளை எடுத்துக்கொண்டு, சந்தைக்குச் சென்று சிறுவர்கள் துப்பாக்கி வாங்கும் காட்சிகளில், போர் அகதிகளின் சிறுவர்களின் நிலையை காட்டிவிடுகிறார் இயக்குநர்
"


turtles-can-fly  http://mmimageslarge.moviemail-online.co.uk/boy-with-mines.jpg

ஈராக் துருக்கி எல்லையில் இருக்கும் அகதிகளின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இத்திரைப்படம். அமெரிக்க படையெடுப்பில் சதாம் ஹுசேனின் வீழ்ச்சி தொடங்கும் காலகட்டத்தில் நிகழ்கிறது இத்திரைப்படத்தின் களம். மலையோரத்தில் கூடாரம் அமைத்துக்கொண்டு வாழும் அகதிகளில் சாட்டிலைட் என்னும் ஒரு சிறுவனையும், அவன் காதல் கொள்ளும் அக்ரின் என்ற பெண்ணையும் சுற்றிச் சுழல்கிறது இத்திரைப்படம். அக்ரினிக்கு இரண்டு கைகளும் இல்லாத ஒரு அண்ணனும், கண் தெரியாத ஒரு மகனும் இருக்கிறார்கள். அக்ரின் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சித்துக்கொண்டே இருக்கிறாள். தனது மகன் தன் மகனல்ல என்று சொல்லிக்கொள்கிறாள். அதேசமயம் அவன் மீது பாசம் வைக்காமலும் அவளால் இருக்கமுடியவில்லை.

அந்தப் பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கும் இருக்கும் கண்ணி வெடிகளை எடுத்து விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் அங்கிருக்கும் சிறுவர்கள். அக்ரினின் அண்ணன் தனது இரண்டு கைகளும் இல்லாத நிலையில், தான் வாயால் கண்ணி வெடிகளை அகற்றுகிறான். அமெரிக்கக் கண்ணி வெடிகள் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. சாட்டிலைட் தனக்குத் தெரிந்த கொஞ்சம் ஆங்கிலத்தில் எல்லோருடனும் பேசுவதன்மூலம், எல்லா சிறுவர்களையும் தனக்குக் கீழ் வைத்துக்கொள்கிறான். வெளிநாட்டுக்காரன் என்று சொல்லி, உள்ளூர்க்காரனிடமே பேரம் பேசுகிறான். சந்தைக்குச் சென்று, அமெரிக்க கண்ணிவெடிகளை விற்று, துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வாங்கி வைத்துக்கொள்கிறான். அமெரிக்கப் படையெடுப்பு தங்கள் குர்தீஷ் இன மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்று நம்புகிறான். அவனுக்கு சாட்டிலைட் நிறுவத் தெரியும் என்பதாலேயே அவனை எல்லோரும் சாட்டிலைட் என்று அழைக்கிறார்கள். உள்ளூர் தலைவர்கள் சதாம் ஹுசேனின் செய்தியை அறிந்துகொள்ள சாட்டிலைட்டைத்தான் நம்பியிருக்கிறார்கள். தடைசெய்யப்பட்ட சானலைப் பார்க்கக்கூடாது என்று சொல்லும் உள்ளூர் தலைவர்கள், சாட்டிலைட்டை செய்திக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்கிறார்கள்.

turtles_can_fly_02


சாட்டிலைட்டுக்கு அக்ரினின் மேல் ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. அமெரிக்கப் படைகள் அங்குவந்து மாஸ்க் தரும்போது, அவளுக்கு ஒன்றைத் தருகிறான். குளத்தின் ஆழத்தில் உள்ள சிவப்பு மீனை அவளுக்காக எடுக்கச் செல்கிறான். அவளது வாழ்க்கையில் உள்ள சோகம் அவனுக்குத் தெரியவில்லை.

அக்ரின் எப்போதும் சோகமான முகத்துடனும், பதட்டமான கண்களுடனும் எப்போதும் சாவையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக நடமாடுகிறாள். ஒரு கட்டத்தில் தன் மகனைக் கட்டிப்போட்டுவிட்டு சாகச் செல்கிறாள். ஆனாலும் அவளால் சாகமுடியவில்லை. போரில் ராணுவ வீரர்களால் வன்புணரப்பட்டதன் விளைவாகப் பிறந்த மகனை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் திணறுகிறாள்.

http://thecia.com.au/reviews/t/images/turtles-can-fly-lakposhtha-ham-parvaz-mikonand-6.jpg

அக்ரினின் அண்ணனுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை உள்ளுணர்வால் அறிந்துகொள்ள முடிகிறது. அவன் சொல்லும் விஷயங்கள் அப்படியே நடக்கின்றன. அமெரிக்கப்படைகள் ஈராக்கைத் தாக்கப்போகின்றன என்று சொல்கிறான். அதன்படியே தாக்குதல் தொடங்குகிறது. ஒருநாள் இரவு தன் தங்கை அவளது மகனைக் கொல்வதுபோல் கனவு காண்கிறான். அதேபோல் அக்ரின் தன் மகனைக்கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்கிறாள்.

அதே நாளில் போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்கப் படைகள் ஊருக்குள் நுழைவதை அடுத்து தங்கள் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்பும் குர்தீஷ் மக்கள், தங்கள் மலையைவிட்டு, நகருக்குள் செல்கிறார்கள். சாட்டிலைட்க்கு ஒருவித ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவன் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த அமெரிக்க படையின் வெற்றியும், சதாம் ஹுசேனின் தோல்வியும் நிகழ்ந்துவிட்டபோதும், அவனால் அதை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை. அக்ரினின் மரணமா அல்லது அமெரிக்க வெற்றிக்குப் பின்பும் வாழ்க்கை ஒன்றும் மாறிவிடப்போவதில்லை என்கிற குழப்பமா என்று தெரியாமல் அவன் நடந்து செல்வதோடு படம் முடிவடைகிறது.

இத்திரைப்படம் எல்லையில் இருக்கும் போர் அகதிகளின் வாழ்க்கையை மிக அருகில் சென்று காண்பிக்கிறது. அமெரிக்கப் படையெடுப்பையும், சதாம் ஹுசைனின் சர்வாதிகரத்தின் வீழ்ச்சியையும் எதிர்பார்த்துக்கிடந்த குர்தீஷ் இன மக்களில் ஒரு பகுதியினரின் வாழ்க்கையை விவரிக்கிறது. அங்கிருக்கும் மக்கள் கண்ணி வெடியை அகற்றியே வாழ நேரும் அவலத்தை பிரசாரத் தொனியின்றி இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் முக்கியமாகச் சொல்லவேண்டியது. பெரியவர்கள் குறைவாகவும், கண்ணி வெடியில் கைகால்களை இழந்த சிறுவர்கள் அதிகமும் வாழும் சூழலில், அவர்களே மீண்டும் கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் இறங்கவேண்டியதாகிறது. அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக தினக்கூலிக்கு வேலைக்கும் செல்கிறார்கள்.

Bahman Ghobadi

Bahman Ghobadi

பெர்லின் திரைப்பட விழாவில் அமைதிக்கான விருதைப் பெற்ற இத்திரைப்படத்தில் வரும் சிறுவர்கள் எல்லோருமே நிஜமாகவே அகதிகள். அங்கிருக்கும் குர்தீஷ் இனமக்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்த இயக்குநர் Bahman Ghobadi அவர்களின் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்து, அதிலிருந்து படத்தை இயக்கத் தொடங்கியிருக்கிறார். இயக்குநரும் குர்தீஷ் இனத்தைச் சார்ந்தவரே என்பதால், இத்திரைப்படம் ஒரு இனத்தின் ஒரு சாராரின் குரலாகவே மாறிவிடுகிறது. இத்திரைப்படம் அமெரிக்கப் படையெடுப்புக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்கிற விமர்சனமும் உண்டு. அமெரிக்கப்படைகளின் வரவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் நிலை, அமெரிக்கப் படைகளின் வெற்றிக்குப் பின்பு என்னானது என்பதைப் பற்றி இயக்குநர் ஒன்றுமே சொல்லவில்லை என்பது அக்குற்றச்சாட்டின் சாராம்சம். அமெரிக்கப் படைகள் சதாம் ஹுசைனின் சிலைகளையெல்லாம் தகர்க்கின்றன. சதாம் ஹுசைனின் உடைந்த கையை எடுத்துக்கொண்டு வரும் சிறுவனும் சாட்டிலைட்டும் பேசிக்கொள்ளும் காட்சிகளில், குர்தீஷ் இனமக்களின் குரல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்கப்படைகளோடு சேர்ந்து சிறுவர்கள் தடைசெய்யப்பட்ட சானல்களைப் பார்கிறார்கள் என்கிறான் ஒரு சிறுவன். அவன் குரலில் தெரிவது மகிழ்ச்சியா ஏக்கமா வருத்தமா என்பது அவனுக்கே தெரியவில்லை. இந்த பாரம்பரிய மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பது அவனுக்குப் புலப்படவில்லை. அமெரிக்கப் படைகளில் வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டு, புஷ்ஷைக்கூட மிஸ்டர் புஷ் என்று அழைக்கும் சாட்டிலைட்டுக்கும், சதாம் ஹுசைனின் கையைக் காணும்போது வெறும் கலக்கமே மிஞ்சியிருக்கிறது. அக்கலக்கத்துக்கும் காரணம் குழப்பமே என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு சிறுவன் இனி தான் நகரத்துக்குச் செல்லப்போவதாகச் சொல்லிச் சொல்கிறான். சர்வாதிகாரம் தகர்ந்துவிட்டதன் காரணமாகவே அவன் நகருக்குச் செல்வதாகக் காட்டப்படுகிறது. இத்தனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த அமெரிக்கப்படைகளைப் பார்க்க மனமில்லாமல் சாட்டிலைட் முகத்தைத் திருப்பிக்கொண்டு நடக்கிறான். அதே குழப்ப நிலையில் திரைப்படம் முடிவடைகிறது. ஒருவகையில் இந்த அமெரிக்கப் படைகளில் வெற்றியோடு ஈராக்கில் மறுமலர்ச்சி வந்துவிட்டது என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்பதையே இயக்குநர் கூறவருவதாகத் தோன்றுகிறது. அதேசமயம் சதாம் ஹுசைனின் வீழ்ச்சியையும் அம்மக்களில் பலர் எதிர்பார்த்துக்கிடந்தார்கள் என்பதையும் அவர் சொல்லிவிடுகிறார்.

இப்படத்தில் மனதை பதறச்செய்யும் சில காட்சிகள் உள்ளன. போரில் அகதிகளாக்கப்படும் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் காட்சிகள் ஒருபுறம் என்றால், போரில் இப்படி சீரழிக்கப்பட்ட பெண்களின் மனநிலையை இன்னொருபுறம் காண்பித்து நம்மை நெகிழச் செய்துவிடுகிறார் இயக்குநர். எப்போதும் தன் சாவையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அக்ரின் ஓரிடத்தில் அமர்ந்திருக்க, அவளது கண் தெரியாத மகன், அவளைத் தேடி அலைகிறான். அவனது குரலைக் கேட்டுக்கொண்டிருக்கும் அக்ரின் அப்படியே அமர்ந்திருக்க, அந்தப் பையன் எங்கெல்லாமோ அலைந்து அவளைத் தேடி வந்தடைகிறான். தான் இறந்துவிட்டால், இவன் இப்படித்தான் அலையவேண்டியிருக்குமோ என்கிற அவளின் தவிப்பு அவளது கண்ணிலேயே தெரிகிறது. தான் போய்விட்டால் தன் மகனை யாராவது காப்பாற்றுவார்கள் என்று சொன்னாலும், அவ்னை நினைத்து அவள் அழுகிறாள். இந்த இரண்டு நிலைகளுக்குள் அக்ரின் கொள்ளும் தவிப்பு அபாரமாக வெளிப்பட்டுள்ளது. கண் தெரியாத சிறுவன் கண்ணி வெடியை மிதிக்க இருக்கும் காட்சியும் நம்மை பதறச் செய்துவிடுகிறது. கண்ணி வெடிகளை எடுத்துக்கொண்டு, சந்தைக்குச் சென்று சிறுவர்கள் துப்பாக்கி வாங்கும் காட்சிகளில், போர் அகதிகளின் சிறுவர்களின் நிலையை காட்டிவிடுகிறார் இயக்குநர். சிறுவர்களின் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரச் சொல்லி வாதிடுகிறார். ஆனால் சாட்டிலைட்டோ அவர்களுக்கு வேண்டியது ஆயுதமே என்று சொல்லி வாதிடுகிறான். ஒரு கட்டத்தில் ஆசிரியர் சாட்டிலைட்டின் வாதத்தை ஏற்றுக்கொள்கிறார். இப்படி படம் நெடுக போர் வன்முறையின் பல்வேறு கோர முகங்களை காட்டிச் செல்கிறது இத்திரைப்படம்.

சிறுவர்களின் வாழ்க்கையை அவர்களது கோணத்தில் காட்டுவதில், உலக அளவில் ஈரானியத் திரைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈரானியத் திரைப்படங்களில் இருந்து, தனது படங்களை வேறுபட்டதாக, குர்திஸ்தான் மக்களின் வாழ்க்கையாகக் கூறும் இயக்குநர், அதற்கான நியாயத்தையும் செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.

http://www.tamilhindu.com/2009/06/world_movies_turtles_can_fly/


http://mmimageslarge.moviemail-online.co.uk/girl-with-landmines.jpg  


http://www.ica.org.uk/thumbnail.php?max=408&id=702

http://www.metroactive.com/papers/metro/04.13.05/gifs/turtles-0515.jpg

http://static.screenindia.com/m-images/2009-03-06/M_Id_65017_Turtles_Can_Fly.jpg♥ சிங்கள அகதி முகாம்களில் வாரம்தோறும் 1,400 தமிழர்கள் சாவு ♥

இலங்கை அகதி முகாம்களில் வாரம்தோறும் 1,400 தமிழர்கள் சாவு: பட்டினி, நோயால் மடியும் அவலம்
லண்டன், ஜூலை.11-
ஈழமண்ணில் விடுதலைப்புலிகளை தோற்கடித்த சிங்கள ராணுவம் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களையும் கொன்று குவித்தது. போர் முடிந்த பிறகும் மீதமுள்ள தமிழர்களை காக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கையின் வடக்கு பகுதியில் பல அகதி முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் தமிழர்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்த பிறகும் தமிழர்களை தங்கள் வீடுகளுக்கு செல்ல இலங்கை ராணுவம் அனு மதிக்கவில்லை.
கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைத்திருப்பதாக கூறி அவர் களை முகாம்களை விட்டு வெளியேற விடவில்லை. சொந்த நாட்டில் 2? லட்சம் தமிழர்கள் அகதிகளாக தவிக்கிறார்கள். இந்த முகாம்களில் நிலவும் அவலங்களை லண்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அகதி முகாம்களில் அள வுக்கு அதிகமானவர்களை தங்க வைத்துள்ளனர். சுகாதாரமான குடிநீர், கழிப் பறை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. விடுதலைப்புலிகளை அடை யாளம் காண்பதாக சொல்லி இலங்கை ராணுவம் தமிழர் களை சித்ரவதை செய் கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த வர்களை பிரித்து தனித்தனி முகாம்களில் அடைத்துள் ளனர். இதனால் உடன் பிறந்தோர், பெற்றோர் கதியை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.
போரில் காயம் அடைந்த பலருக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை. சுகாதாரமான குடிநீர், உணவு கிடைக்காமல் திண்டாடு கிறார்கள்.
நிவாரண முகாம்கள் அனைத்தும் மரண முகாம் களாக மாறி வருகிறது. வாரம்தோறும் 1,400 தமிழர்கள் பட்டினியாலும், தொற்று நோயாலும் செத்து மடிவதாக தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம் முகாமில் தண்ணீருக்காக 3 நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான வந்தனா சந்திரசேகர் என்பவர் 3 நாட்கள் வரிசையில் காத்திருந்த பிறகு அவருக்கு 100 லிட்டர் தண்ணீர் கொடுத்துள்ளனர். ஒட்டு மொத்த குடும்பமும் குடிக்க, குளிக்க, துணி துவைக்க இந்த தண்ணீர்தான்.
தண்ணீருக்கு மட்டுமல்ல கழிவறைக்கு செல்லவும் மணிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள்.
முகாம்களில் நடக்கும் அவலங்கள் வெளிஉலகுக்கு தெரியாமல் இருப்பதற்காக பத்திரிகையாளர்களையும் இலங்கை அரசு அனுமதிப்பது இல்லை.
நிவாரண முகாம்களில் சுகாதாரத்தை பேண உரிய நடவடிக்கை எடுக்குமாறு செஞ்சிலுவை சங்கம் இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மேற் கொண்டுள்ள மனிதாபி மான உதவிகளையும் குறைக்குமாறு இலங்கை அரசு வற்புறுத்தி வருகிறது. இதனால் மொத்த தமிழன மும் கூண்டோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2009/07/11105901/CNI060110709.html

♥ "உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்"- தினமணி தலையங்கம்♥

http://2.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SiZGRVcgI3I/AAAAAAAACu0/XU2CgTGMviM/s400/SRI_LANKA_(F)_-_Refugee_(500_x_375).jpghttp://2.bp.blogspot.com/_3XkpeCTgBBA/SFtJv60RXvI/AAAAAAAAAmg/Gz9m4jVNiXM/s320/refugee_day_-1.jpg http://www.socialist-alliance.org/img/refugees.jpg

http://naanchithan.files.wordpress.com/2009/04/28724179-wardisplaced-tamil.jpg


தலையங்கம்:
வாளாவிருத்தல் நியாயமில்லை!
சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.

எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!

அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?

பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?

வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.

முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.

நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!

நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=

http://www.thenral.org/wp-content/uploads/refugee_camp_1.jpgதலையங்கம்:இது உரிமைக் குரல்!நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கேட்டால், எங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடித்தார்கள் என்று காரணம் கூறப்படுகிறது. ஆழ்கடலில் மீன்பிடிக்கப் போகும் அப்பாவி மீனவர்கள், எல்லைக்கோடு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேலி இருக்கிறதா, எல்லைக்கோடுதான் இருக்கிறதா?

இத்தனை நாள்களும் விடுதலைப் புலிகள் இவர்களை சுட்டுவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும், இந்த மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் இலங்கை அரசு தனது செய்கைகளுக்கு நியாயம் கற்பித்தது. இப்போதுதான் இலங்கை அரசின் கூற்றுப்படி விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அந்த நாடே சிங்கள அரசின் ஆளுமைக்குள் வந்துவிட்டதே. பிறகும் ஏன், இந்த அப்பாவி மீனவர்கள் துன்புறுத்தப்பட வேண்டும்?

சேது சமுத்திரத் திட்டம் தொடங்கியது முதலே தமிழகக் கடல் எல்லைக்குள்ளும், வெளியேயும் மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறைபாடு மீனவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. வங்காள விரிகுடாவிலிருந்து பெரிய அளவில் மீன்கள் இந்து மகா சமுத்திரப் பகுதிக்குச் சென்று விட்டதாகக் கூறுகிறார்கள். அதனால், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதில் நாம் குற்றம் காண முடியாது. அதிலும் குறிப்பாக, கச்சத்தீவு பகுதியில்தான் அதிகமாக மீன்கள் கிடைப்பதாகத் தெரிகிறது.

ஆதாரபூர்வமாகக் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமான இடம் என்பது தெளிவு. 1974-லும், 1976-லும் இந்திய அரசு சரியான வழிகாட்டுதலைப் பெறாமல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டது என்பதும் உண்மை. ஆனால், அந்த ஒப்பந்தத்திலும்கூட, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் வலைகளைக் காயப் போடும் உரிமையும், கச்சத்தீவு அந்தோனியார் கோயிலில் திருவிழா நடத்தும் உரிமையும் இந்திய மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒப்பந்தங்கள் என்பது மீறப்படக் கூடாது என்பது ஒரு சிலரின் வாதமாக இருக்கிறது. ஒரு நாட்டின் எல்லையோ, அல்லது ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமோ மறுபரிசீலனைக்கும், மறு சீரமைப்புக்கும் உள்பட்டதுதான் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும்.

மக்மோகன் எல்லைக் கோடையும், அருணாசலப் பிரதேசத்தையும் இந்தியாவின் பகுதியாக சீனா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. என்றோ இருந்த இஸ்ரேல் என்கிற நாட்டை, மேலை நாடுகள் இரண்டாம் உலகப் போரில் அடைந்த வெற்றியைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கி நிலைநிறுத்த முடிந்த பிறகும், சர்வதேச எல்லை, சர்வதேச ஒப்பந்தம் என்று பேசிக் கொண்டிருப்பது நாட்டு நலனைவிட அயல்நாட்டு சிநேகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாகத்தான் இருக்கும்.

கச்சத்தீவில் அன்னிய நாடுகள் இராணுவ தளங்களை அமைக்க விடமாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி கூறிவிட்டது என்று இந்திய அரசு மகிழ்ச்சி அடைகிறது. ஆனால், கச்சத்தீவில் இலங்கை அரசு கண்காணிப்பு கோபுரங்களை அமைக்கிறதே, அதைப்பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தால் எப்படி? இதற்கு முன்னால் இந்தக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அமைக்கிறோம் என்று இலங்கை சமாதானம் சொல்லியிருக்கும். இப்போது அமைக்கிறதே எதற்காக? நமது மீனவர்களைக் கண்காணிக்கவா? இந்தியாவையே கண்காணிக்கவா?

இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் எந்தவோர் அரசும் இன்னொரு நாட்டுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட முடியாது. இந்தியாவின் எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் ஒருவர் பதவி ஏற்கவே முடியும். அப்படியே சர்வதேச ஒப்பந்தம் ஏதாவது செய்யப்பட வேண்டுமானாலும்கூட, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல், கச்சத்தீவு 1974-ல் தாரை வார்க்கப்பட்டதே அது ஏன், எப்படி என்றெல்லாம் இப்போது ஆராய்ச்சி நடத்துவதை விட்டு விட்டு, அதை மீட்பதற்கு வழிகாண்பதுதான் புத்திசாலித்தனம்.

கச்சத்தீவை மீட்காமல் போனால், அங்கே இந்தியா தனது உரிமையை நிலைநாட்டாமல் போனால், 1974 ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு, அந்தத் தீவின் மீதான இந்திய உரிமை மீண்டும் நிலைநாட்டப்படாமல் போனால், அதன் விளைவுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே பேராபத்தாக இருக்கும் என்பதை மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து செயல்பட வேண்டும். இதற்காக, சர்வதேச நீதிமன்றத்தை அணுகினாலும் சரி; இல்லை, ராஜபட்ச அரசிடம் கண்டிப்புடனும் கறாருடனும் ராஜதந்திரமாகப் பேசி நல்லதொரு முடிவை எட்டினாலும் சரி. கச்சத்தீவை மீட்டே தீர வேண்டும.

1974-ல் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவால் கச்சத்தீவு விஷயத்தில் குரலெழுப்ப முடிந்ததே தவிர, அன்றைய இந்திரா காந்தி அரசு எடுத்த முடிவைத் தடுக்க முடியவில்லை. இன்றைய நிலைமை அப்படி அல்லவே. 1989 முதல் பல மத்திய அரசுகள் திமுகவின் தயவில் ஆட்சியில் அமர்ந்தும், தமிழகத்தின் உரிமைப் பிரச்னையான கச்சத்தீவைப் பற்றிய கரிசனம் அந்தக் கட்சித் தலைமைக்கு இல்லாமல் போனதன் காரணம்தான் என்ன என்பது புரியவில்லை.

எல்லோரும் ஆதரித்தால் கச்சத்தீவு பற்றிய தீர்மானத்தைத் திமுக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார் என்கிறார் முதல்வர் கருணாநிதி. அந்தத் தீர்மானத்தை யார் எதிர்க்கப் போகிறார்கள்? முன்னால் நின்று தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய முதல்வர் மற்றவர்களை முன்நிறுத்தி விட்டுப் பின்னால் இருந்து வழிமொழியலாமா?

கட்சி மனமாச்சரியங்களைத் தூக்கி எறிந்துவிட்டுக் கச்சத்தீவுக்காக ஒத்த குரலில் குரல் கொடுக்க நாம் தயாராகாவிட்டால், "நாமமிது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்வீர்?'

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=85380&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=


http://www.kelvi.net/wp-content/uploads/2008/08/610x.jpg


♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 41 -"தினமணி" தொடர் ♥

'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-41: தங்கதுரையின் சூளுரைதங்கதுரை


கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, விசாரித்தபோது ஈழத் தமிழர்களின் பிரச்னை என்ன என்பதைத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை தெரிவித்த கருத்துகள் வரலாற்றுப் புகழ்பெற்றவை. அந்த உரை, தனக்கு மரண தண்டனை நிச்சயம் என்பது தெரிந்திருந்தும் தனது கொள்கைகளிலிருந்து மாறாது உறுதியாய் நின்ற சாக்ரட்டீஸின் உரைக்கு நிகரானது அந்த உரை. நவீன கால உதாரணம் சொல்ல வேண்டுமானால், கியூபாவின் விடுதலைக்காக ஆயுதமேந்தி அப்போதிருந்த அரசிடம் மாட்டிக் கொண்டு நீதிபதிமுன் நிறுத்தப்பட்ட ஃபெடல் காஸ்ட்ரோவின் உரைக்கு ஒப்பானவை எனலாம்.

1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை நிகழ்த்திய வாதத்திலிருந்து: *

''கனம் நீதிபதி அவர்களே!

ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.

நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம்.

எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு.

வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.

இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல.

இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?

நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.

இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன?

காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.

இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர்.

இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?

பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு.

இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?

பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.

ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று.

இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.

எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.

எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.

ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.

வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு - நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு - தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.

உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே.

இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.

விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ''இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?'' என்றார்.

''எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது.

நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?

மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸôரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம்.

* நாம் வன்முறைமீது காதல் கொண்ட

மன நோயாளிகள் அல்லர் - தங்கதுரை

(வெளியீடு: தமிழ் ஈழ விடுதலை இயக்கம்).

நாளை: நீதிமன்றம் மெüனமானது!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=86567&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 40-"தினமணி" தொடர் ♥


'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 40: தீக்கிரையானது யாழ் நூலகம்!தீக்கிரையான யாழ் நூலகம்

ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும்.-ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில்

உள்ள 700 நூல்கள்

-சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்)

-ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம்,

தத்துவம் பற்றிய நூல்கள் 250)

-கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்)

-ஆறுமுக நாவலர் நூல் தொகுதி

-பைபிள் - முதன்முதலாக தமிழில்

எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி

-ஏட்டுச்சுவடிகள்

-பிரிட்டானியா கலைக்களஞ்சியம்

-அமெரிக்க கலைக்களஞ்சியம்

-கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம்

-விஞ்ஞான தொழில்நுட்பக்

கலைக்களஞ்சியம்

-சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்

-மருத்துவக் கலைக்களஞ்சியம்

-மாக்மில்லன் கலைக்களஞ்சியம்

-குழந்தைகள் கலைக்களஞ்சியம்

-அகராதிகள் (பல்வேறு வகை)

-கைடுகள் (பல்வேறு வகை)

-புவியியல் வரைபடங்கள், வரைபட நூல்கள்

-தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்

பெருமக்களின் நூல்கள்

-ஆங்கில பிரெஞ்சு - ஜெர்மானிய -

அரபி மொழியிலான நூல்கள்

-பத்திரிகைகள்.

இவ்வளவுமாகச் சேர்ந்து 97 ஆயிரம் நூல்களைக் கொண்ட புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் 1981 ஜூன் 1-ஆம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது. செய்தி கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வீதிக்கு வந்து கதறி அழுதனர். வரலாற்றில் மன்னிக்க முடியாத கருப்பு நாள் இது!

யாழ்ப்பாணத்தில் நூலக இயக்கம் என்பது 1915 டிசம்பர் 18-ஆம் தேதி அன்றைய பருத்தித்துறை அரசியல்வாதி கே.பாலசிங்கம் கொழும்பில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பில் நூலகங்கள் அமைய வேண்டிய அவசியம் குறித்து பேசினார். இந்தச் செய்தி வெளியான 9-வது நாளில், டிசம்பர் 27-ஆம் தேதி - யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள கீரிமலை, காங்கேசன் துறைக்கு அண்மையில் கடற்கரையொட்டிய ஊரில் உள்ள நகுலேஸ்வரர் கோயில் மண்டபத்தில் அமைந்த நூலகத்துக்கு நகுலேஸ்வர படிப்பகமும் நூல் நிலையமும் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நூல் நிலையத்தை நிறுவியவர் சைவப் பெரியார் சி.நமசிவாயம். இதனைத் திறந்து வைத்தவர்: ஆன்மிகத்துறவி சர்வானந்த அடிகள். (தகவல்: ஆவணஞானி இரா.கனகரத்தினம்)

1916-ஆம் ஆண்டு கீரிமலை நகுலேஸ்வர நூலகம் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் கன்னிமரா நூல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தஞ்சை சரஸ்வதி மகால் (1918), ஆல்காட் ஆரம்பித்து வைத்த அடையாறு நூலகம் (1880), மறைமலை அடிகள் நூலகம் (1958), உ.வே.சாமிநாதய்யர் நூலகம் (1943) ஆகியவை உலகப் புகழ்பெற்றது போலவே, யாழ்ப்பாண நூலகமும் சரித்திரப் புகழ் கொண்டதாகும்.

யாழ்ப்பாண நூலகம் 1934-ஆம் ஆண்டில் 844 நூல்களுடன் (கலாநிதி ஐசக் தம்பையா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கட்டடத்தில் எடுத்த முடிவுப்படி) ஆஸ்பத்திரி வீதியில், வாடகை வீட்டில், தொடங்கப்பட்டு 1936-இல் நகரசபைக் கட்டடத்தில் நிறுவப்பட்டது. பெருகி வரும் வாசகர்களுக்கேற்ப அனைத்து வசதிகளையும் கொண்ட நூலகம் ஒன்றினை அமைக்க 1952-இல் யாழ் மேயர் சாம்.ஏ.சபாபதி தலைமையில் கூடிய மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டபடி லாட்டரி சீட்டு மூலம் நிதி திரட்டப்பட்டது.

இந்த நூலகம் அமைப்பதில் அருட்தந்தை லாங் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். நூலகம் அமைப்பதற்கான திட்டங்களை நூலகத்தின் தந்தை என்று தமிழகத்தில் அறியப்பட்ட எஸ்.ஆர்.ரங்கநாதன் வகுத்தளிக்க, கட்டுமானப் பணிகளை சென்னையைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுநர் கே.எஸ்.நரசிம்மன் ஏற்றார். திராவிடக் கலையம்சம் பொருந்திய இந்த நூலகம் 11.10.1959-இல் திறந்து வைக்கப்பட்டது.

காவல்துறைத் தலைவர் மற்றும் பிரிகேடியர் வீரதுங்கா ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில், தமிழர்களின் பண்பாட்டின் வைப்பகமாக உருவான யாழ்ப்பாண நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினர். 97 ஆயிரம் சிறப்பு வாய்ந்த நூல்கள் எரிந்து சாம்பலாயின. உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி என்று பெயரெடுத்த ஹிட்லர்கூட இங்கிலாந்து சென்று தாக்கும் தனது விமானப் படையினருக்கு, "ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்மீது குண்டு போடாதீர்கள்' என்று எச்சரித்ததாகத் தகவல்கள் உண்டு. அதே போன்று, "ஜெர்மனியில் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தைத் தாக்காதீர்கள்' என்று பிரிட்டன் விமானப் படைப்பிரிவுக்கும் அறிவுறுத்தப் பட்டதாகவும் சொல்வார்கள்.

ஆனால் ஜெயவர்த்தனாவின் சீடன் அமைச்சர் காமினி திசநாயக்காவின் மேற்பார்வையில், தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகத்தைத் தகர்க்க வேண்டும் என்ற வெறியில், தீமூட்டி எரித்தார்கள். (இதற்காகவே, இரு தினங்கள் முன்பாக தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம், மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தல் வேலைகள் என்ற சாக்கில் காமினி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் வந்து திட்டம் தீட்டியதாக தகவல்). நூலகத்துக்கு எதிரே சில அடி தூரத்தில்தான் யாழ் தலைமைக் காவல்நிலையம் உள்ளது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பாதுகாப்புக்கு என கொழும்பிலிருந்து வந்திருந்த போலீஸôர் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டரங்கமும் நூலகத்துக்கு எதிரேதான் இருக்கிறது. இவ்வகையான பாதுகாப்பு உள்ள நூலகம் தீப்பிடித்து எரிந்தது என்றால் ஆச்சரியம்தான்!

மே 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நூலகத்தில் நுழைந்த போலீஸ் உடைக் கொடியவர்கள் அங்கிருந்த காவலர்களைத் துரத்தி, நூலகத்தின் கதவை உடைத்து, நூல்களின் வரிசைக்கு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி அழிக்கின்றனர் என்று பலரும் சாட்சியம் அளித்தனர். லெண்டிங் செக்ஷன், ரெபரென்ஸ் செக்ஷன், குழந்தைகள் பிரிவு யாவும் எரிந்தன. சுவர்கள், ஜன்னல்கள் வெப்பத்தால் வெடித்து சிதறி, எங்கும் சாம்பல் குவியல். பேய் வீடாகி விட்டது. இச்சம்பவம் தமிழின அழிப்பு என்கிற சிங்கள இனவாதிகளின் மனவோட்டத்தை உலகினருக்கு சந்தேகமின்றி வெளிப்படுத்தி விட்டது.

"இப்படியொரு மிருகச் செயலா?'- என்று கண்டனம் தெரிவித்த அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நூலக எரிப்புச் செய்திகளை வெளியிடக்கூடாது என பல தடைகளை விதித்தார். ஆனாலும் செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. இச்சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, இழப்பீடாக ரூபாய் ஒரு கோடியை அரசு வழங்க வேண்டும் என்று பணித்தது.

ஆனால் ஜெயவர்த்தன அரசு ஒரு ரூபாய்கூட அளிக்கவில்லை. மாறாக, "இயற்கை இடர்கள் மூலம் இழப்பு ஏற்பட்டால் அளிக்கப்படும் நிதியிலிருந்து' சிறு தொகை மட்டும் அளிக்க உத்தரவிட்டார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சந்திரிகாவும் கடும் கண்டனம் தெரிவித்து, யாழ் மக்களின் மனங்களை வெல்ல "புத்தமும் செங்கல்லும்' என்று கோஷம் வைத்தார். அவர் சேகரித்த செங்கற்கள் எங்கே போயின என்பது தெரியவில்லை; அவர் சேகரித்த நூல்களோ பெரும்பாலும் சிங்கள நூல்கள் என்பது பின்னர் தெரிய வந்தது என்கிறார் யாழ்வாசி ஒருவர்.

யாழ் நூலகம் எரிப்பு குறித்து தமிழர்களின் குற்றச்சாட்டுக்கிடையே சிங்களரான அதிபர் பிரேமதாசா கூறியது என்ன?

""வடக்கு-கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார்? இதற்கு பிரதான காரணம் காமினியே. பத்து வருடங்களுக்கு முன் 1981-இல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கிடையேயான உறவுகளில் இது ஒரு கறை படிந்த - துயரமான சம்பவமாகும்.

பாராளுமன்றத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை முறையை நாம் கொண்டு வந்தபோது - அதிகாரத்தைப் பரவலாக்க முயன்றபோது - காமினி எதிர்த்தார். தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் காமினி நிறைய ஆட்களைக் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு வாக்குப் பெட்டிகளைச் சேகரித்து கள்ளவாக்குகளைப் போட்டார். இதனை நான் கூறவில்லை. பாராளுமன்றத்தில் காமினி பிரசன்னமாய் இருந்தபோது கூட்டணி செயலதிபர் ஆற்றிய உரை என்னிடம் உள்ளது.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்களில் சதிநாச வேலைகள் இடம்பெற்ற பின்னர், ஒரு சர்வதேச நூல் நிலையமான யாழ் நிலையம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுகளால் நீதியைப் பெறுவதற்கு எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியைக் குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ்த் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாதச் செயல்களில் இறங்கினார்கள்'' என்பதாகும். (ஈழநாடு- (யாழ்பாணம்) 26.10.1991-இல் வெளிவந்தபடி).

இதற்கு ஒருபடி மேலே சென்று ஐக்கிய முன்னணியின் புத்தளம் அமைப்பாளர் ஜனாப் எம்.எச்.எம்.நவாஸ் கூறுகையில், ""தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூல் நிலையமாக விளங்கிய யாழ் நூல் நிலையத்தை எரித்து சாம்பலாக்குவதற்கு முக்கிய சூத்ரதாரியாக இருந்த காமினி திசநாயக்காவுக்கு ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்'' என்றார்.நாளை:

தங்கதுரையின் சூளுரை!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=85945&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 39 -"தினமணி" தொடர் ♥"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 39: ஆயுதம் ஏந்தும் இளைஞர் அமைப்புகள்!
உண்மையில் விடுதலைப் புலிகளின் இயக்கம் 1972-லேயே உருவாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ்ப் புதிய புலிகளாக இருந்த பின்னால் பெயர் மாற்றம் அடைந்ததே இது.

ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் ஆயுத எதிர்த்தாக்குதல் இயக்கமே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமே தனி ஈழம் கட்டமைக்க முடியும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் இவர்கள்.

இவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் 1954-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வல்வெட்டித்துறையில் பிறந்தார். தனது 16-ஆவது வயதிலேயே தமிழ் இன ஒடுக்கு முறையை எதிர்க்கும் மனோபாவத்தைக் கொண்டிருந்தார்.

சிறு வயதாக இருந்ததால் மற்றச் சக புரட்சியாளர்கள் இவரைத் "தம்பி' என்றனர்.

இவர் ராணுவ வெளித்தாக்குதல்களை எதிர்த்துத் தீவிர எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவர் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட ஓர் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார்.

1983-ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்கா அரசு நடத்திய உள்ளூராட்சித் தேர்தல் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியில் இவ்வியக்கம் முதன்மைப் பங்கெடுத்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மூவர் மீது ராணுவ நடவடிக்கை தொடுத்தது. அதேபோன்று 1983 ஜூன் 5-ஆம் தேதி காங்கேயன் துறைத் தாக்குதலும், சாவகச் சேரிப் போலீஸ் நிலையத் தாக்குதலும், நெல்லியடியில் அரசுப்படையினருக்கு எதிராக 1982-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலும் ஆவ்ரோ விமானத் தகர்ப்பும் இவ்வமைப்பால் நடத்தப்பட்டவை ஆகும்.

தமிழ் மாணவர் பேரவை உருவானபின் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து அரசியல் தலைமை உருவாக ஆரம்பித்தது. தரப்படுத்துதல் மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் பல வந்தபின், முதல் தடவையாக தமிழ் இளைஞர்கள் இனவாதத்திற்கு எதிராக ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயம் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதப் போராட்டங்கள் உருவாயின.

1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையின் கீழ் ஏற்பட்ட அரசுக்கு எதிரான எழுச்சியில் பல்வேறு இளைஞர்களைக் கும்பல் கும்பலாகக் கைது செய்து அரசாங்கம் காவலில் வைக்கிறது. இந்தக் கைது படலத்தில் தமிழ் இளைஞர்களும் இருந்தனர்.

இந்த இளைஞர்கள் விடுதலையானபின் அரசுக்கு எதிராகத் தீவிர எதிர்த்தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர்.

அரசு பதில் நடவடிக்கையாகக் கொடூரமான ஒடுக்குமுறையை மேற்கொள்ளுகிறது.

இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் மூன்று விதமான போக்கு வெளிப்படுகிறது.

1. தலைமறைவு ஆதல்.

2. ஒதுங்குதல்.

3. அரசால் கைது செய்யப்படுதல்.

தலைமறைவான இளைஞர்களில் அரசியல் தெளிவு பெற்ற ஒரு சிலர் லண்டனில் கூடி ஈராஸ் (EROS) என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். இதனுடன் மாணவர்களுக்கான அமைப்பான கஸ் (GUES)சும் உருவாகிறது. (General Union of Eelam Students)

ஆரம்பத்தில் இவ்விரண்டு அமைப்பும் ஒன்றாக இணைந்தே செயல்படுகின்றன.

ஈராஸ் படிப்படியாக ஆயுதப் படைக் குழுக்கள் கட்டமைப்பதற்கான வேலைகளைச் செய்கிறது. அதே நேரத்தில் பல பிரிவு வெகுஜன அமைப்புகளையும் உருவாக்கிச் செயல்பட வேண்டும் என்ற கருத்தும் உருவாகி, அதற்கான செயல்களில் சில தலைவர்களும் ஈடுபடுகிறார்கள். இதன் உச்சக்கட்டமாக 1980-இல் ஒரு பிளவு ஏற்படுகிறது. இப்பிளவில் இருந்து உருவானதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகும்.EROS-இன் தலைவர் பாலகுமார் ஆவார்.

ஈராசிலிருந்து வெளியேறி வந்த தலைவர்கள் உருவாக்கிய அமைப்பே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகும்.

1981 அக்டோபர் 10-ஆம் நாள் இவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிடுகின்றனர்.

இந்த அமைப்பு மூன்று மிக முக்கியமான நோக்கங்களைக் கொண்டதாகும்.

1. ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் தேசத்தை விடுவித்து தனி ஈழம் காண்பது.

2. ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, கலாசாரச் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியல் சுதந்திரத்தைப் பெற்று ஒரு சோஷலிச சமுதாயத்தைக் கட்டமைப்பது.

3. சர்வதேச முற்போக்குப் போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஏகாதிபத்தியத்திற்கும், மிதவாத இனவாதத்திற்கும் எதிராகப் போராடுவது.

இம்மூன்று நோக்கங்களை உள்ளடக்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கட்டமைக்கப் பலதரப்பட்ட பிரிவு மக்கள் மத்தியில் இறங்கிப் பல வகையான மக்கள் இயக்கங்களை உருவாக்கித் தனி ஈழத்திற்காகப் போராட வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

கஸ் ((GUES)அமைப்பு, பின்னால் இவர்களுடன் இணைந்து விட்டது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை அமைப்புகளாக, மாணவர் அமைப்பாக கஸ் (GUES) கிராமப்புறத் தொழிலாளர் விவசாயிகள் முன்னணி (Rural Workers & Peasants Front), ஈழ இளைஞர்கள் முன்னணி (Eelam Youth Front), தோட்டத் தொழிலாளர் முன்னணி (Plantation Proletariat Front), ஈழ பெண்கள் விடுதலை முன்னணி (Eelam Women’s Liberation Front), மீனவத் தொழிலாளர் முன்னணி (Fishery Workers Front) ஆகியவைகளும் அடங்கும்.

1983-ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஆயுதப்படைப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் விடுதலைப் படை உருவானது.

இது பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும், இனவாத அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவராகப் பத்மனாபா இருந்தார்.

இது 1980-இல் LTTE - தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்து உருவான ஒரு அமைப்புதான் தமிழ் ஈழமக்கள் விடுதலை இயக்கம்- PLOT.. இது முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் தலைமையில் செயல்பட்டது.

இவரது தலைமையில் உள்ள இயக்கம் பல ஆயுத எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளது.

இந்த ஐந்து (EROS, EPRLF, TELO, LTTE, PLOT) அமைப்புகளையும் தவிர மற்றும் சில சிறு ஆயுதக் குழுக்கள் இலங்கை மண்ணில் இருக்கத்தான் செய்தன. அதைத் தவிர ஒரு சில மனித உரிமை மற்றும் பல மக்கள் இயக்கங்களும் இலங்கை மண்ணில் இனவாத ஒடுக்குமுறையை எதிர்த்து இயங்கி வந்தன.

ஆனால் இந்த ஐந்து இயக்கங்கள் மட்டும்தான் ஆயுதப் படைப்பிரிவைக் கட்டமைத்து அரசு பயங்கரவாதத்தை வீரத்துடன் எதிர்த்துத் தியாகம் பல புரிந்து வந்தன.

ஒரு காலகட்டத்தில் EROS, EPRLF, LTTE, TELO ஆகிய நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதாக முடிவெடுத்தன. அதன்படி வேறு சில மக்கள் இயக்கங்களுடன் (23 மக்கள் இயக்கங்கள்) இணைந்து இனவாத எதிர்ப்பு மக்கள் அணிகளைக் கட்டமைத்தும் அதே சமயம் ஆயுதப்படைப் பிரிவுகளின் மூலம் ராணுவ பதிலடியும் தந்தனர்.

பிரபலமாக உள்ள அமைப்புகளைத் தவிர (TELO, EPRLF, EROS, LTTE, PLOT) வேறு சில குழுக்களும் சிறிய அளவில் செயல்பட்டு வந்தன என்று சொன்னோம். இவற்றில் இரண்டு அமைப்புகள் நம் கவனத்திற்குரியது.தமிழ் ஈழ விடுதலை ராணுவம் (TELA) என்கிற அமைப்பு TELO விலிருந்து பிரிந்ததாகும். இவ்வமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் ""ஓபராய்'' தேவன் என்பவர். இவர் இலங்கையில் தியாகியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஜூலை கலவரத்திற்குமுன் யாழ் பல்கலைக்கழக மாணவியரைக் கடத்திச் சென்று கற்பழித்த ராணுவ வீரர்களைக் கொன்ற தாக்குதல் நடவடிக்கை இவர்கள் எடுத்ததே ஆகும்.

இவைத் தவிர (TEA, TELE) என்ற ராணுவ அமைப்புகளும் உள்ளன.தமிழ் ஈழ தேசிய ராணுவம் (TENA) என்கிற அமைப்பு தமிழ் விடுதலைக் கூட்டணியின் (TULF)ன் தலைவரான அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதனால் உருவாக்கப்பட்டதாகும். மற்ற விடுதலைக் குழுக்கள் இவ்வமைப்பைத் தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவருடைய துணை அமைப்பு என்றே குறிப்பிட்டனர்.தமிழ் ஈழ விடுதலை முன்னணி (Tamil Eelam Liberation Front) என்பது ஈழவேந்தன் தலைமையில் உருவான அமைப்பாகும்.

அதேபோன்று எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகனான சந்திரஹாசனால் வெளியேறிய இலங்கைத் தமிழரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு PROTEG. இலங்கையில் இருக்கும் மதத் தலைவர்கள் (புத்த, கிறிஸ்துவ முஸ்லிம்) தமிழ்நாட்டில் உள்ள விடுதலைக் குழுக்களுடன் பேசுவதற்கு வரும்போது இவ்விரு அமைப்புகளுடனேயே பேச விரும்பியதற்குக் காரணம், இவர்களின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு என்கிற விமர்சனம் உண்டு.

இவைகளைத் தவிர அகதிகளுக்கு உதவும், வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் OFERR என்ற ஓர் அமைப்பும் உள்ளது.

மேலும் ஆயுதப் போராட்ட விடுதலைக் குழுக்களைத் தவிர பரந்த அளவில் தமிழ் ஈழத்துக்காக மக்களைத் திரட்டிப் போராடும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற ஒரு வெகுஜன அமைப்பும் குறிப்பிடத்தக்கது. இது 1983 ஜூலை கலவரத்திற்குப் பின் பல்வேறு மக்கள் போராட்டங்களை இலங்கையில் கட்டமைத்துள்ளது.

நம்மால் அறியப்பட முடியாமல் இலங்கையில் இயங்கிய பல சிறு சிறு அமைப்புகளும் கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த அமைப்புகளும் விரிவான தொடர்பின்மையின் காரணமாக அவ்வமைப்புகளைப் பற்றிய தெளிவான விஷயங்களை அறியமுடியவில்லை.நாளை:

தீக்கிரையாகிறது யாழ் நூலகம்!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=85420&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 38 -"தினமணி" தொடர் ♥


'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 38: தீவிரவாதம் உருவான காரணம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்தி வந்தவரை, ஓர் ஐக்கிய அரசின் அமைப்பிற்குள் தங்களின் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது ஒன்றே வழி என தமிழ் மக்கள் கருதி வந்தனர். ஆனால் 1970-க்குப் பின் நிலைமை வேகமாக மாறியது.

அரசியல் தீர்வு பெறாத தமிழர் பிரச்னை, வளர்ந்து வரும் வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவற்றின் விளைவாக 1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான வீரசாகச அரசியல் கலவரத்தின் செல்வாக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் இனப்படுகொலையும் தமிழர் மத்தியில் தீவிரவாதம் உருவாகக் காரணமாயின.

இந்தச் சூழ்நிலையில்தான், தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராகக் தமிழ் இளைஞர் பேரவை உருவாகிறது. இவர்கள் வெகுஜன இயக்கத்தின் மூலம் சிங்கள இன வெறியர்களுக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டனர்.

இளைஞர்கள் ஓரளவு அரசியல் தெளிவுடன், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடங்கி இருந்தனர். தமிழ்த் தலைவர்களின் மிதவாதமும், இனவாத ஒடுக்குமுறையின் விளைவாக நிகழ்ந்த படுகொலைகளும் இவர்களை ஆவேசமூட்டி வேகமடையச் செய்தது. இவ்வுணர்வே விடுதலைப் புலிகளின் இயக்கம் 1971-இல் உருவாகக் காரணமாயின.

இந்த நிலையில் 1974-இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் நிகழ்கின்றன. இதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் சிவகுமாரன் தலைமையில் பழிக்குப்பழி வாங்கச் சபதம் செய்கின்றனர்.

மாநாட்டில் நடந்த படுகொலைகளுக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சந்திரசேகராவை எப்படியும் தீர்த்துக் கட்டுவது என்றும் இந்தப் படுகொலைகளுக்குப் பக்க பலமாக விளங்கிய தமிழின துரோகி யாழ் நகர மேயர் துரையப்பாவை கொல்வது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

போலீஸ் அதிகாரி மீது இரண்டு முறை தாக்குதல் நடக்கிறது. மேயர் துரையப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார்.

போலீஸ் அதிகாரியைக் குறி வைத்துக் கொல்ல முயற்சி எடுக்கும் போது சிவகுமாரன் வளைத்துப் பிடிக்கப்படுகிறார். போலீஸ் கையில் சிக்காமல் இருக்க, சயனைட் குடித்துத் தியாக மரணம் அடைகிறார். இவரது வீரமரணம் நிகழ்ந்தது 1974-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி ஆகும்.

சிவகுமாரன் தலைமையிலான தமிழ் மாணவர் பேரவைத் தொடர்ந்து இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்தது. அதே காலத்தில் தொடர்ச்சியாக "தமிழ் புதிய புலிகள்'' (Tamil New Tigers) என்ற தீவிரவாத இயக்கத்தினரும் போராடி வந்தனர்.

சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் விருப்பப்படி தமிழர் கூட்டணியின் உட்கிளையாக தமிழ் இளைஞர் பேரவை அமைகிறது.

இவ்வாண்டின் நடுப் பகுதியில் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் புதிய புலிகளின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் என்ற செட்டி 1976-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்.

இதற்குப் பின் தமிழ்ப் புதிய புலிகள் இயக்கம் 1976-ஆம் ஆண்டு மே 5-ஆம் நாள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்கிற புதிய இயக்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் தலைவராக வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன் பொறுப்பேற்கிறார்.

இதே நேரத்தில் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தால் தனி ஈழக் கோஷத்தை முன்வைத்துத் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக 1976-இல் உருவாகிறது. இதுதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். இந்தக் கால கட்டத்தில் ஒரு சில தீவிரவாத அமைப்புகளும் தலைமறைவு இயக்கமாக சிறு சிறு குழுக்களாக இயங்கி வருகின்றன.தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-(TELO)ஈழத் தமிழர் போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வியக்கத்தின் ஆரம்ப காலத் தலைவர்கள் அனைவரும் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து உருவானவர்களே.

தமிழ் மாணவர் பேரவை உருவானதிலும் இத்தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும். அப்போதிருந்த தரப்படுத்துதல் சட்டம் மற்றும் பல்வேறு வகையான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இவர்கள் போராடி வந்தனர்.

தமிழ் மிதவாதத் தலைவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மூலம் இன ஒடுக்குமுறையை எதிர்க்க முடியாது என்றும் தனி ஈழத்தைக் கட்டமைக்க முடியாது என்றும் இவர்கள் கருதினர்.

இதன் ஆரம்பகால முன்னணித் தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர் ஆவார்கள்.

போலீஸ் அதிகாரி சந்திரசேகரா புகழ் சிவகுமாரனுடன் சேர்ந்து இவர்களும் மாணவர் பேரவை உறுப்பினர்களாக இருந்தனர்.

அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது குட்டிமணியும், பிற தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தமிழ் மாநாட்டிற்கு முந்தைய இனப் படுகொலைக்கு எதிராகப் போராடியதன் விளைவுதான் இவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் காரணமாகும். குட்டிமணியுடன் கைதானவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ என்கிற சபாரத்தினம். சாட்சியம் இல்லாததால் இவர் விடுதலை செய்யப்படுகிறார்.

யாழ் மேயர் துரையப்பா கொல்லப்பட்டதன் விளைவாகக் குற்ற செயல்களுக்காகத் தேடப்படுவர் பட்டியலை அரசு சுவரொட்டியாக ஒட்டியது. அதில் இவர்கள் பெயரும், இவர்களது தலைக்கு விலையாக 1 லட்சம் ரூபாயும், அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கைது செய்யப்பட்ட இவர்கள் 1971-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

1977-இல் ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த பல இனப் படுகொலைகளுக்குப் பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் இவர்கள் அமைப்பு ஈடுபட்டது.

1969-ஆம் ஆண்டிலிருந்தே தங்கதுரை "தமிழ் ஈழ விடுதலைக்கு ஆயுதம் தாங்கிய போராட்டமே வழி'' என்று முடிவு கட்டுகிறார். அப்போதிருந்தே அதற்கான நடைமுறைப் போர்த் தந்திரங்களையும், இயக்க விதிமுறைகளையும் உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டார். சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு தங்கதுரை தனக்குக் கீழே ஒரு குழுவாக அமைத்துச் செயல்பட்டார்.

கட்டுப்பாடும், உறுதியும் நிறைந்த இயக்கமாகப் படிப்படியாக வளர்ந்து 1981-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கமாகப் பரிணமிக்கிறது. இதில் பிரபாகரன் இணைந்து கொள்கிறார்.

1981 ஏப்ரல் 5-ஆம் தேதி தங்கதுரை, குட்டிமணி, தேவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.

22-ஆம் தேதி நடந்த அரசு நடவடிக்கையில் இதன் மற்றொரு தலைவரான ஜெகனும், பிற இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைதானபின் அமைப்பு ஸ்தம்பிக்கிறது.

இந்த நேரத்தில் பிரபாகரன் மீண்டும் வெளியேறித் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒருங்கிணைக்கிறார்.

1983-ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆயுதப் படைகளின் விரிவாக்கத்தை இவ்வமைப்பு மேற்கொள்கிறது.

1983 கடைசியில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதன் விரிவான பகுதி வெலிக்கடை சிறைப்படுகொலைகள் என்னும் பிரிவில் பிறகு கூறப்படும்.நாளை: ஆயுதம் ஏந்தும் இளைஞர் அமைப்புகள்!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=84856&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 37 -"தினமணி" தொடர் ♥


'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 37: அடக்குமுறையின் உச்சகட்டம்!

கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் இளைஞர்கள் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள நெல்லியடி என்ற இடத்தில் நான்கு போலீஸôர் கொலை செய்யப்படுகின்றனர். மூன்று போலீஸ் அதிகாரிகள் கடுமையாகக் காயம் அடைகின்றனர்.

ஒருவர் இருவராகத் தமிழர்களைக் கொன்ற இனவாதம் இப்போது வேறு உருவம் எடுத்துக் கும்பல் கும்பலாக தமிழர்களைக் கொல்லும் போக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் படுபயங்கர நிகழ்ச்சிகளையும், தமிழர்களின் வேதனையையும் முழுமையாகச் சொல்வதற்கு இந்தப் புத்தகம் போதவே போதாது. மேலும் அந்தக் கொடூரத் தாக்குதல்களைச் சரியாகச் சொல்ல எந்த மொழியாலும் முடியவும் முடியாது.

ஆவேசத்தின் வேகத்திலும், உணர்ச்சியின் உச்சகட்டத்திலும் இருந்த தமிழ் இளைஞர்கள் ராணுவத்திற்கும் போலீஸýக்கும் எதிராகப் பல இடங்களில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் (விடுதலைப்புலிகள் வரலாறு 1975-84).

சாகவச்சேரிப் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டு, பலர் காயம் அடைகின்றனர். போலீஸ் ஒடுக்குமுறையைத் தீவிரமாகக் கையாண்ட பருத்தித்துறைக் காவல் நிலைய அதிகாரி போலீஸ் நிலைய வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடன் ஜீப் டிரைவர் ராஜபட்சவும் கொல்லப்பட்டார். உமையாள்புரம், பரந்தன் என்ற பகுதியில் ஒரு ராணுவ லாரி தாக்கப்பட்டு ராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் தீவிர மோதல் ஏற்பட்டுப் பல ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும், பலர் காயத்துடனும் தப்பி ஓடுகின்றனர்.

யாழ்ப்பாணம் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காகக் கூட்டப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாடு-உள்ளே நடந்து கொண்டிருக்கையில் செயலகக் கட்டிடம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது (விடுதலைப்புலிகள் வரலாறு 1875-84).

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று தீவிர ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் உள்ளூர் தேர்தல் வேட்பாளர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் பலர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்கின்றனர்.

அக்டோபர் 15-ஆம் நாள் ராணுவத்தில் மூவர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதை ஒட்டி ஆத்திரம் கொண்ட ராணுவம் வெறித் தாக்குதல் நடத்தியது. சாலையில் போவோர் வருவோரைத் தாக்குவது, பஸ், ரயில் வண்டியில் பயணம் செய்வோரை வழிமறித்துத் தாக்குவது, கடைகளைச் சூறையாடுவது போன்ற அதிரடித் தாக்குதல்களை நடத்தியது ராணுவம்.

அக்டோபர் 21-ஆம் நாள் கிளிநொச்சியில் ஒரு வங்கி கொள்ளை அடிக்கப்பட்டு, கொள்ளை அடித்தவர்கள் வெளியேறியபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

இது நிலைமையை மோசமாக்கி மேலும் ராணுவத்தினரின் கொலை வெறி அதிகமாகியது.

அக்டோபர் 25-ஆம் நாள் இங்கிலாந்து அரசி இலங்கை வரவேண்டி இருந்ததால் ராணுவத்தினர் அரசினரால் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், தமிழர்களும் சிங்களவர்களும் வாழும் பகுதிக்கு இடையில் இருந்த எல்லை மாவட்டமான வவுனியா மாவட்டத்தில் ராணுவமும் போலீஸýம் அடக்குமுறை அட்டகாசத்தைத் துவக்கியது.

1970-ஆம் ஆண்டு முதல் இந்தியத் தமிழர் குடும்பங்களும் இலங்கைத் தமிழர் குடும்பங்களும், மலைப்பகுதித் தோட்டங்களில் இருந்தும், மற்றும் தென்பகுதியில் இருந்தும் கலவரங்களால் பாதிக்கப்பட்டு வீடு, சொத்துச் சுகங்களை இழந்து வவுனியா மாவட்டத்தில் தங்கி வாழ முயற்சி செய்து கொண்டிருந்தனர். இங்கு அரசின் பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்பட்டது.

ஏற்கெனவே கலவரங்களில் குடும்பங்களை இழந்து பாதிப்படைந்திருந்த இவர்கள் திரும்பவும் ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுச் சின்னாபின்னமானார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் மகத்தான பொறுமையும் தாங்கும் சக்தியும் கொண்டிருந்ததால்தான் இந்த மோசமான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடிந்தது. மறுபடியும் இவர்களைக் குடியமர்த்துவதில் பெரும் தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்கள் இவர்களுக்கு உதவினர்.

பல பகுதியில் இருந்து அகதிகள் மீண்டும் இங்கு கொண்டு வரப்பட்டுக் காந்தீயம் நிறுவனத்தால் குடி அமர்த்தப்பட்டனர். அகில இலங்கை விவசாயக் காங்கிரஸ் மூலமாகவும் அகதி முகாம் அமைக்கப்பட்டது.

இந்தக் கலவரங்களுக்குப்பின் நாட்டின் பல பகுதிகளிலும் அகதிகள் முகாம்கள் தோன்றின. நவம்பர் மாத முடிவில் இப்பகுதியில் காடுகளில் தங்கி இருக்கும் தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இப்பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ராணுவம் இறங்கியது.

பண்ணைகளின் உள்ளே புகுந்து அகதிகளை அடித்து நொறுக்கி, கைது செய்தபோது இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சமூக சேவகிகள் தாக்கப்பட்டனர்; மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர்.

இந்தக் கலவரங்களை அரசு தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்ததற்கு முக்கியமான காரணங்கள்:-

ஒன்று, தொடர்ந்து இனவாத ஆளுமையை நிலைநாட்டிக் கொள்ளுவதற்கு. இரண்டாவதாக, நாடு தழுவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களைத் திசை திருப்ப. மூன்றாவதாக, புதிய அரசின் பொருளாதாரத் திட்டங்களின் சீர்கேடுகளை மறைத்துக் கொள்ள!

இதுவரை காணாத மிகப் பெரிய பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளை அரசு சந்தித்துக் கொண்டிருந்தது. இவைகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப இந்த அணுகுமுறை உதவியது.

தேசிய இனப்பிரச்னைக்கான கேள்வியில் சிங்கள பாசிச ராணுவ பயங்கரவாதம் மக்களைப் பெருமளவில் இனப்படுகொலை செய்வதை மட்டுமே தனது ஒரே தீர்வாக வைத்திருந்தது.

சிங்கள ஆட்சியாளர்கள் மிகப் பெரும் அளவிலான மக்கள் படுகொலைகள், உடமைகளைச் சேதப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்களின் சுதந்திரத் தேசிய இன உணர்வை நசுக்கிவிடலாம் என்று கனவு கண்டதும் இந்தத் தொடர் வன்முறைக்கு ஒரு காரணமாகும்.

மேலும் ஓர் ஆய்வாளர் குறிப்பிடுவதைப் போல்,

சேனநாயக்கா (முன்னாள் பிரதம மந்திரி) சட்டங்களின் மூலம் தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தார். பிறகு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கூட்ட வன்முறை (mass violence) மூலம் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் சித்திரவதைகள் செய்தார். ஆனால் ஜே.ஆர். ஜெயவர்த்தன எல்லாவற்றிற்கும் மேலாக ஒருபடி மேலே சென்று, ஒரு பாசிசவாதியாக மாறி, அரசு ஆயுத சக்திகளின் பயங்கரவாதத்தின் மூலம் தமிழர்களை ஒடுக்க நினைக்கிறார்.*

இவையெல்லாம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி ஈழத்தைப் பெறுவதையும், தமிழ் மக்களின் கெüரவம், சுதந்திரம், உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதையும், மதச்சிறுபான்மையினரின் சுயபாதுகாப்பு உரிமையையும் ஒடுக்குவதற்கு உருவான ஒரு புதிய வடிவமும் ஆகும்.* கெயில் ஓம் விடட் (Gail Om Vedtt) Article in Frontier, Calcutta, Sept. 83.நாளை: தீவிரவாதம் உருவான காரணம்!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=84297&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!