தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, April 29, 2009

குடி-"நீர் "
 

 

 


 

 

 

 


மனிதனாக இரு....


உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.

 

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

 

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

 

துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer தேடுகிறார்.. ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்

 

 

மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

 

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி  கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.

 

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................

 

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....

ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

 

"ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது"

- மகாத்மா காந்தி

 

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....

 

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.

 

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

 

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?

 

நல்ல நியாம்டா சாமி.............

 

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......

 

ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

 

 

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

 

ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...

 

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''

 

 

ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

 

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................

 

 

மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்.....................

 

 

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

 

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான்.  சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

 

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...

 

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

 

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

 

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

 

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

 

இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?

 

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

 

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

 

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!

 

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

 

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..

 

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........

 

அட நாய்களே.....

 

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..

இந்தியனாக இருக்க தேவை இல்லை…..

தமிழனாகவோ இருக்க தேவை இல்லை

 

மனிதனாக இருந்தால் போதும்.....

 

 

இப்படிக்கு,

மனிதன்


 

 


மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பாரதி.......

http://www.tamiloviam.com/img/Bharathi2.jpg


விடுதலை தாகமும்,
வீறுகொண்ட கவிதையுமாய்,
கவிபாடி திரிந்தநான்,
கல்லறையில் அமைதியாய்
குடியிருக்க இயலவில்லை!

மீசையினை முறுக்கிவிட்டு,
முண்டாசை சரிசெய்து,
பாரதத்தின் நிலையை
பாட்டெழுத வந்தேனே !
பாரதியார் நான்தானே !

சென்னைநகர் சாலைகளில்
சுற்றிவர புறப்பட்டேன்!
உயரமாய் ஓர் கட்டிடம்!
அடையாள அட்டையுடனே
ஆண்களும் பெண்களுமாய்
உள்நுழைந்த காட்சி பார்த்தேன்!

வேலை செய்யும் அலுவலகமா?
இரும்படிக்கும் சத்தமேதும்
இம்மியளவும் கேட்கவில்லை!
கையிலேதும் கொண்டுசென்ற
காட்சியொன்றும்  காணவில்லை!

என்னதான் நடக்கிறதிங்கே?
சாலையோர புழுதியிலே
யோசித்தே உறங்கினேன் ,
யாரும் அறியா பாரதியாய்!

தூக்கத்தை கலைத்தது
தடம்பதித்த சத்தம்!
கண்விழித்துப்பார்க்கையிலே
ஆண்களும் பெண்களுமாய்
கலந்துரையாடியே வெளிவந்த
காட்சிகண்டு வியந்தேன்!

மணியோ பனிரெண்டு
மங்கை எவர்க்கும் பயமன்று!

விடியும்வரை காத்திருந்தேன்
வினாக்கள் பல வைத்திருந்தேன்
வரிசையாய் தொடுப்பதற்கு!

விடியலும் வந்த வேளையிலே
வாசலருகே நடந்தவனை
வழிமறித்து "தம்பி" என்றேன்!

"YES, TELL ME" என்றான்!
ஐயகோ! இவன் ஆங்கிலேயன்!
அழித்தொழிக்கப்படவேண்டியவன்!

பலம் மொத்தம் கையில் ஏற்றி
பின்மண்டைப்பிடரியிலே
பளீரென்று ஒன்று விட்டேன்!

"அம்மா………" என
அலறினான்!
டித்த டியில்
அழகுதமிழ்
அருமையாய் வந்தது!

தமிழ்மறந்த தமினிடம்
பெயரென்ன எனக்கேட்டேன்!
புலம்பியபடி பெயர் சொன்னான்!

முன்தினம் பார்த்தவற்றின்
முழுவிவரம் அறியக்கேட்டேன்!

"SOFTWARE COMPANY..... ." என்று ழுத்து
மென்பொருள் நிறுவனமென்றான்!
வாங்கிய அடி
வேலை செய்தது!

"ஆணும் பெண்ணும் சமம்!
அளவுக்கும் அதிகமாய் ஊதியம்!
வாரத்தில் இருநாள் விடுப்பு!
வேலைத்திறன் வைத்தெ உயர்வு!
ஏராளமாய் உண்டிங்கே சலுகை!"

ஆகாவெனப்புகழ்பாடி
அலுவலகம் உள்நுழைந்தான்!

சிறுமகிழ்ச்சி மனதிற்குள்
சமச்சீர் இந்தியாவின்
சாத்தியங்கள் நெருங்குதோ!

சிந்தித்துக்கொண்டிருக்கையிலே
சிலர் அலுவலகம் வெளியே
சோகமாய் வந்தது கண்டேன்!

புகழ் பாடியவனும்
புருவம் நனைய
புலம்பி அழுதான்!

"எல்லாம் கிடைக்கிறதிங்கே!
என்றும் நிலைக்கிற ஒரு வேலையைத்தவிர!

அமெரிக்கா ஆட்டங்கண்டால்
அம்பத்தூரில் வேலைபோகும்!

இதுதான்
இன்றைய நிலை!"

எங்கே போனது
எம் சுதேசியம்!

இவர்கள்தான்
இருபத்தோராம் நூற்றாண்டின்
கிக்கிந்தியக்கம்பெனிகளோ!!!

விழித்துவா தோழா!
மாற்றத்தை நோக்கிய
மற்றுமொரு பயணம்
துவங்கலாம் இன்றே....

சிந்தன்
http://www.yaanilaavin-thandhai.blogspot.com/

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!