Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, June 7, 2009

♥ இலங்கை தமிழரின் கின்னஸ் சாதனை படத்துக்கு தணிக்கை குழு அனுமதி மறுப்பு ♥

இலங்கை தமிழரின் கின்னஸ் சாதனை படத்துக்கு தணிக்கை குழு அனுமதி மறுப்பு


இலங்கையைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது.

58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். "சிவப்பு மழை' என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின்,

சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தர மறுத்தனர்.

இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறுதணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பிறகு சான்றிதழ் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்' என்றார்.

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3658:2009-06-06-19-12-08&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56


♥ தமிழீழ தேசிய புலிச்சின்னம் வரைந்து கொடுத்த ஓவியர் நடராசா மரணம் ♥

தமிழீழ தேசிய புலிச்சின்னம் வரைந்து கொடுத்த ஓவியர் நடராசா மரணம்

prabaartistபுலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா "தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்' என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார். ""இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத் துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே லட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்" என்று முனகியபடியே இருக்கிறார். ""இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்" என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணற்றுக்கு விரைந்தோம்.

அங்கே அவரைப் பார்க்க வந்திருந்தார் யாழ்ப்பாண நண்பரொருவர். அவர் நம்மிடம், ""இப்போது பிரபாகரன் மட்டும் இவர் முன்னால் வரட்டும். நடராசாவுக்கு எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்ல, புன்முறுவலோடு மெது வாகத் தலையசைத்தார் பெரியவர். உடனே அந்த நண்பர் ""இலங்கைல கொடூரமா நடக்குற தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்தணும். அதுக்காக இங்கே தமிழகத்துல நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லி வழக்கமாச் சாப்பிடுற மருந்து, மாத்திரையை வேண்டாங்குறாரு. எந்திரிச்சு உட்காரக்கூட முடியாத நெலமைல போராடப் போறேன்னு சொல்றாரு" என்று வருத்தப்பட்டார்.

"அய்யா…' என்று பெரியவரின் அருகில் சென்றோம். அவரோ உணர்ச்சிக் கொந்தளிப்பில், ""தேசப் பற்றோடு தமிழ்நாட்டுல கலெக்டரைச் சுட்டுக் கொன்ன வாஞ்சி நாதன் வரலாற்றுல இடம் பிடிச் சிருக்கான். விடுதலைக்காக புரட்சி செய்த பகத்சிங் புகழை நாம் பாடறோம். பிரபாகரனும் சாதாரண மனுஷன் இல்ல. ஒரு இனத்தோட விடுதலைக்காக போராடிக்கிட்டிருக்கான்" என்று அடிக்குரலில் பேசினார். பிறகு கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டார்.

prabaartist1""பிரபாகரனுக்கு பைக் ஓட்டத் தெரியாது. நாஞ் சொன்னேன். என்னோட புல்லட்டத் தர்றேன், நீங்க பைக் ஓட்டக் கத்துக்கணும்னு. அதுக்கு தம்பி சொன்னாரு, "எங்கட நாட்டுல பெட்ரோல் கிடைக்காது. சிங்கள ராணுவத்தோட கண்ணுல மண்ணைத் தூவிட்டு சத்தமில்லாம பயணிக் குறதுக்கு சைக்கிள்தான் சரியா இருக்கும். எங்கட மக்களுக் குப் பயன்படாத ஒரு விஷயத்த நான் கத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது அண்ணா… சிங்களத்தான் மிகக் கொடியவன். அவனை எதிர்த்து நிக்கணும்னா துப்பாக்கி சுடத்தான் தெரியணும். அதனால, துப்பாக்கிப் பயிற்சிதான் எங்கட இயக்கத்தோட தேவையே. அதைத்தான் மத்திய, மாநில அரசோட ஒத்துழைப்புல இங்கே பண்ணிக்கிட்டிருக் கோம்'னாரு.

போராடணும் போராடணும்னு துப்பாக்கி மீது தம்பிக்கு கிறுக்கே பிடிச்சிருச்சு. துருப்பிடிச்சு ஒண்ணுக்குமே உதவாத துப்பாக்கியா இருந்தாக்கூட, அத வாங்கி மண்ணெண்ணெய் ஊத்திக் கழுவித் துடைச்சு, அக்கக்காப் பிரிச்சு அதன் செயல்பாட்டத் தெரிஞ்சுக்குவாரு. இந்த ஆர்வத்துலதான் எந்தத் துப்பாக்கியா இருந்தாலும் அதைச் சிறப்பா கையாளுற நுட்பம் அவருக்கு அத்துபடியாச்சு.

நேதாஜியத்தான் மானசீக ஆசான்ம்பாரு. நேதாஜியப் படிச்சுப் படிச்சுத்தான் விடுதலை வேட்கைல தனக்குள்ள ஒரு தெளிவு வந்துச்சுன்னு சொல்வாரு. இந்திய தேசியப் படையின் பிரிவு களுக்கு நேதாஜி வச்சிருந்த பெயர்களையும், அவரு படை திரட்டுன விதத்தையும் அத்தனை விரிவாப் பேசுவாரு. எதையும் தீர்க்கமா சிந்திச்சு, திட்டம் தீட்டி ஒரு காரியத்தை முடிக்குற வரைக்கும் அதே சிந்தனையாத்தான் இருப்பாரு.

என் வீட்டுல தங்குறப்ப எப்பவுமே ஜன்னல் பக்கமா படுக்க மாட்டாரு. ரொம்பவும் முன்னெச்சரிக்கையா இருப்பாரு. சில நேரங்கள்ல ஒரு வாரம் கூட தங்குவாரு. ஆனா, வீட்டுல இருக்குறவங்களுக்கே தம்பி மாடில இருக்குறது தெரியாது. அந்த அளவுக்கு அவரோட நடவடிக்கைகள் சைலண்ட்டா இருக்கும். புலி பதுங்கிப் பாயுங்குறது தம்பி விஷயத்துல ரொம்பவும் பொருந்தும். இப்பவும் பதுங்கித்தான் இருக்காரு. அது உயிர் வாழணும்குற ஆசையில இல்ல. தமிழினம் நாதியத்துப் போயிடக் கூடாதுங்குற வெறில… சமைக்குறதுக்காக அறுக்குற கோழியக் கூட ஒரேயடியா அறுத்துட ணும். முனை மழுங்கிய கத்தியால ரொம்ப நேரம் அறுத்து அதைச் சித்திரவதை பண்ணக் கூடாதும்பாரு. இப்படித்தான் ஒரு தடவை என் மனைவியோட பிறந்த நாளன்னைக்கு கோழிய அறுக்கப் போன அவகிட்டயிருந்து கத்தியை வாங்கி "உங்களோட பிறந்த நாளான இன்னைக்கு உங்க கையால ஒரு உயிரு சாகணுமா? நான் அறுத்துத் தர்றேன்'னு அவரே அறுத்தாரு. எதிரிக்கு சிம்ம சொப்ப னமா இருக்குற அவருக்குள்ள இப்படி ஒரு சாந்தமான குணமும் இருக்குறது எனக்கு ஆச்சரியமா இருக்கும்.

ஒருநாள் ஏதோ ஒரு கவலைல நான் இருந்தப்ப, "அண்ணா… குவிச்சு வச்சிருக்குற என் கை விரலப் பாருங்க. இடைவெளி இல்லைல்ல. இப்படி யிருந்தா நல்லதுன்னு சொல்வாங் கள்ல…' என்று உற்சாகமாகச் சொல்ல… நானோ, "இத்தனை குழந்தைத் தனம் உள்ள ஒரு மனிதனை சிங்களனுங்க போராளி ஆக்கிட்டானுக' என தம்பியின் தனிப்பட்ட வாழ்க்கையை எண்ணி வருத்தப்பட்டேன். தம்பியோ "அடப் போங்கண்ணா… என் அப்பா, என் அம்மா, என் சொந்தக்காரங்கன்னு எல்லாரு மாதிரியும் எனக்கும் சாதாரண வாழ்க்கை அமையணும்னா நெனக்குறீங்க. என் நாடு, என் தமிழினம்னு ஒருநாள் வாழ்ந்தாக் கூட போதும்ணா. அப்படித்தாண்ணா… சுயநலமே இல்லாத ஒரு பெரும்படையே நம்ம இயக்கத்துல சேர்ந்து இனத்துக்காக ரத்தம் சிந்தி உயிரை விட்டுக்கிட்டிருக்கு'ன்னு தான் வாழ்வதற்கான அர்த்தத்தையே எனக்கு விளக்கிட்டாரு.

கண்ணகியின் கற்பு கூட இங்கே பேசப்படுது. பிரபாகரன் சுத்தமான தமிழ் வீரன். தமிழ் இனத்தோட அடையாளம்" என்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட, இயல்புக்கு மாறாக அவர் உடல் நடுங்கியது. உடல் நலிவையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் உரையாடிய பெரியவரிடம், ""சற்று ஓய்வு எடுத்துக்கங்க…" என்றார் அந்நண்பர். அவரைக் கைத்தாங்கலா படுக்க வைத்துவிட்டு, கரம் கூப்பி நாம் விடைபெற்ற போது நம் விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார்.

""நக்கீரன்ங்குற பேருக்கு ஏத்த மாதிரியே தமிழ் உணர்வோட நெறய கட்டுரைகள் எழுதுறீங்க. தம்பி பிரபாகரனைப் பத்தி பலருக்கும் பல விஷயம் தெரியும். ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதயும் உலகத்துக்குச் சொல்ல வச்சிட்டீங்க. ரொம்பவும் மனநிறைவா இருக்கு" என்று கண்கலங்கினார்.

மறுநாளும் பெரியவரின் வீட்டிலிருந்து தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொள்ள… "அய்யா அழைக்கிறாரா?' என்றோம். எதிர்முனையில் பதிலெதுவும் கூறாமல் அமைதி காத்தார்கள். அதுவே வலியாக நமக்குள் ஊடுருவ… ""அய்யா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருய்யா…" என்று பெருங்குரலெடுத்து அழுதார்கள்.

தனக்குள் பிரம்மாண்டமாக 32 ஆண்டுகளாக உறைந் திருந்த பிரபாகரனை கடந்த இரண்டு இதழ்களின் வாயிலாக வாசகர்களின் இதயத்தில் இறக்கி வைத்த அவர் அசையாத ஓவியமாக கண்ணாடிப் பேழைக்குள் காட்சியளிக்க… வாசகர் களின் சார்பில் அம் மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினார் ஆசிரியர்.

-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: அண்ணல்


http://www.nerudal.com/nerudal.7921.html


♥ 5ம் கட்ட ஈழப் போரை தமிழீழ தேசிய தலைவர் விரைவில் அறிவிப்பார் ♥

5ம் கட்ட ஈழப் போரை தமிழீழ தேசிய தலைவர் விரைவில் அறிவிப்பார்

annainewஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் அறிவிப்பார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

தமிழீழமும் நமது இன்றைய கடமையும் என்பது குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார்.

இலங்கை ராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர்..

அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் திரும்புவது கிடையாது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்..

தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்..

ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், சர்வதேச பத்திரிகையாளர்கள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளனர். அண்டை நாடான இந்தியா வாய் திறக்கவில்லை. ஏன் இலங்கைத் தலைமை நீதிபதியே கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்வுகூட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இல்லை என்றார் நெடுமாறன்.

http://www.nerudal.com/nerudal.7917.html



♥ "தொடரும் துரோக வரலாறு – அருட்தந்தை ஜெகத்கஸ்பர்"-நக்கீரன் கலக்கல் கட்டுரை ♥

தொடரும் துரோக வரலாறு – அருட்தந்தை ஜெகத்கஸ்பர்



gasparசென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோருக்கு நான் பரிந்துரைப்பது கனிவான உளநல உதவி.

பயணங்களின் போது நான் தேடி பணம் கொடுத்து வாங்கிப் படித்து வந்த பத்திரிகை "காலச்சுவடு'. அவர்கள் சென்னை சங்கமத்தை ஜீரணிக்க முடியாமலும் நாலு வார்த்தை பாராட்டாதிருந்தால் தனது நடுநிலை முற்போக்கு முலாம் சேதாரப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்விலும்பட்டிருந்த அவஸ்தை பரிதாபமாய் இருந்தது. போலித்தனங்களும், நாடகத் தன்மைகளும் இன்றி சமூக வாழ்வை கட்டமைத்தல் கடினம்தான். ஆனால் முற்போக்காளர் என தமக்கு முகவரி இட்டுக் கொள்கிறவர்களின் நாடகத்தன்மை அருவருப்பாகிறது.

நக்கீரனைப் போன்ற இன்னொரு பத்திரிகை எனக்கு முகப்பு அட்டை மரியாதை தந்தது. ""அரசின் ஆசிபெற்ற மர்ம மனிதர்" என்பது பெருந்தலைப்பு. ""யார் இந்த ஜெகத் கஸ்பர்?" என்பது துணைக் கேள்வி. சர்ச்சைக்குரிய ஒருவராக சமூக-அரசியற் களத்தில் ஆக்குவதன் மூலம் இயங்கும் ஆற்றலை மட்டுப்படுத்தலாம் என்ற நுட்பமான மேலாதிக்க அரசியல் அதில் இருந்தது. பொழுதுபோக்கு வியாபாரப் பத்திரிகைகளை பொதுவாக நான் விமர்சித்து மெனக்கெடுவதில்லை, அவசியமுமில்லை. ஆனால், அப்பத்திரிகைகள் தலையங்கம் எழுதி ஊருக்கு உபதேசம் செய்யும்போதுதான் பற்றிக் கொண்டு வரும். உபதேசிப்பதற்கு சில அடிப்படை யோக்கியதைகள் வேண்டும் என்றே நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருப்போரது தனிவாழ்வை சந்திக்குக் கொண்டு வந்து வியாபாரம் நடத்துகிற பத்திரிகை முதலாளிகளின்

தனிவாழ்வில் இருக்கிற வக்கிரங்களை அவர்தம் வாசகர்கள் அறிந்தார்க ளென்றால் ஆடிப் போவார் கள். அந்த வேலையை செய்வதற்கென்றே தனியாக ஒரு பத்திரிகை தொடங்க லாமா என்று கூட நான் யோசித்ததுண்டு.

ஜெயா தொலைக் காட்சி ஏதோ "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும்' உலகப் புகழ்பெற்ற த்ரில்லர் திரைப் பட விளம்பரம் போல் "சென் னை சங்கம திடுக்கிடும் மர்மங்களுக்கு' இடைவிடா முன் விளம்பரம் செய்து கொண்டிருந்தது. முன் விளம்பரத்தில் எனது முகத்தை நரகாசுரன் போல் கிராபிக்ஸில் வடிவமைத்திருந் ததை நான் நன்றாகவே ரசித்தேன்.

"சென்னை சங்கமம் ஊடாக பெரும் பணம் வந்தது. வந்த அப்பணம் விடுதலைப்புலிகளுக்குச் சென்றது என்பதுதான்' இவர்களது பிரதான கதை. துணைக் கதை அமெரிக்காவில் புலிகள் இயக்கத் தடையை நீக்க லஞ்சம் கொடுத்ததாய் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் எனக்கு நண்பர் என்பது. உண்மையில் துணைக் கதை உண்மைதான். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் நான் பார்த்த அறிவாளிகளில் மறக்க முடியாதவர். ஒரு நேரத்தில் நான்கு விஷயங் களை சிதறாமல் சிந்திக்கும் அபார அறிவாற்றல் கொண்டவர். அமெரிக்காவின் அணு ஆயுத திட்டமொன் றில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். 1970-களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக் கிய தமிழ் அக்னி குஞ்சுகளில் ஒருவர். சேலம் சேந்த மங்கலத்துக்காரர். அற்புதமான மனிதர். எனக்கு நண்பர்.

தந்தை பெரியாரின் கொள்கைபால் ஆழ்ந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். ஒரு விதவையை மணம் புரிந்தவர், அதுவும் கலப்புத் திருமணமாய் ஜாதி மீறல் செய்தவர். அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க அவர் உழைத்து வந்தது உண்மை. அதிலொன்றும் தவறேதும் இல்லை. அது சட்டரீதியான செயற்பாடு. ஆனால் அவரை ஏமாற்றி, வஞ்சக வலை விரித்து, 5000 டாலர்கள் ஒரு அதிகாரிக்கு "ஊக்கப்பணம்' கொடுக்க வைத்து சிக்க வைத்ததில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவன் சங்கரசே என்ற தமிழனும், ரஜினிகாந்தின் "பாஷா' திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக வரும் ஒரு கேரக்டரும் உண்டு என்பதை உலகறியாது.

ஜெயா தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி நிஜ மாகவே என்னை மனவருத்தப்படுத்தவில்லை. ஏனென்றால், முன்பு நான் குறிப்பிட்டது போலவே தமிழ் ஈழ ஆதரவு விஷயத்தில் குற்றம் சாட்டப்படுவது பெருமையே என்பது ஒருபுறமிருக்க, பொய் வேகமாகப் பரவினாலும் உண்மை ஒருநாள் உருண்டு, புரண்டு வந்து சேரும் என்ற எனது நம்பிக்கையும் முக்கிய கார ணம். ஆனால் எது வலித்ததென்றால் அந்த நிகழ்ச்சி யை ஆக்கிய பலரில் சௌபா என்ற சௌந்தர பாண்டி முக்கியமானவராக இருந்தார், பணத்திற்காக அதைச் செய்தார் என்று நான் கேள்விப்பட்டபோது உண்மையி லேயே மனது வலித்தது. ஏனென்றால் எனது மாணவப் பருவத்தில் ஏழை மனிதர்களுக்காய் அவர் எழுதிய கட்டுரைகள் படித்து நம்பிக்கை பெற்றவன் நான். அந்த நம்பிக்கை தகர்ந்தபோது வலித் தது. அதுவும் பணத்திற் காகச் செய்தார் என்றபோது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நமது இனத்தின் போர் வாளாய் நிற் கும் ஆற்றல் கொண்ட தோழர் கள், சில்லறை விஷயங்களுக் காய் சோரம் போவது காண எழும் வேதனை அனுபவித்தவர் களுக்கு மட்டுமே தெரியும். வெளியே ஈழத்தமிழர் களின் துயரத்தை வியாபாரமாக்கிக் கொண்டு இலங்கை தூதரகத் தின் மது விருந்துகளுக்கு மலிவாய் துணை போன பத்திரிகை -ஊடக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் மீதான கோபம் தீர்ந்து விட்டது. ஆனால் வலி தொடர்கிறது. துரோக வரலாற்றிலிருந்து நான் சார்ந்த இனத்திற்கு இறைவா, விடிவே இல்லையா என்ற கேள்வியில் வருகிற வலி அது.

கருணா என இன்று நாம் அறிகிற கருணம்மான் விடுதலைப் போராட்டத்தை விட்டு விலகியபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உடல் என சொல்லப்பட்டதை அடையாளம் காட்டவென இலங்கை ராணுவம் கருணாவை முல்லைத்தீவுக்கு கடந்த மே 17-ம் தேதி கூட்டிச் சென்றது. முல்லைத் தீவு மண்ணில் தமிழின அழித்தலின் குரூர சாட்சியங்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கருணம்மானின் முகத்தில் படர்ந்திருந்த வேதனை இறுக்கத்தை தொலைக்காட்சி வழி நான் பார்க்கத் தவறவில்லை. எந்த இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தலைவன் போற்றிய தளபதியாய் உயர்ந்தாரோ அந்த இனம் தோற்கடிக் கப்பட்டு, பல்லாயிரம் சடலங்களால் பிணக்காடா கிக் கிடந்த அவலத்தின் சாட்சியாய் நிற்க வேண் டிய சாபத்தை எண்ணி கருணம்மான் உள்ளுக்குள் அழாமல் இருந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் வன்னிக் காடுகளில் வளரும் போராளியாய் தன் தலைவன் பிரபாகரன் உண்டு மிச்சம் வைத்த உணவை உண்ணும் பாக்கியத்திற்காய் தவமிருந்த நாட்கள் கருணம்மானின் மனசாட்சியை அக்கணம் குத்திக் கிழித்து ரணப்படுத்தியிருக்கும்.

2002-ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நான் நேர்கண்ட கையோடு வேறு பல மூத்த தளபதிகளையும் நேர்காண முயன்றேன். அவர்களில் முக்கியமானவர் கருணம்மான். மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியிலுள்ள அவ ரது முகாமில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மியன்மார் என்ற பர்மா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் உலகின் பணக்கார நாடுகளாகவோ, பெரிய நாடுகளாகவோ புகழ்பெறவில்லைதான். ஆனால் இந்நாடுகளுக்குப் பயணம் செய்தீர்களென்றால் பொறாமை யாக இருக்கும். அந்த அளவுக்கு எங்கு நோக்கினும் காடுகள், ஆறுகள், நீர் நிலைகள்… ""மீன் பாடும் தேனாடு" என தமிழர்கள் கொண்டாடும் மட்டக்களப்பு பிராந்தியமும் அப்படித்தான். எங்கு பார்த்தாலும் ஆறுகள், நீர்நிலைகள், காடு, கடல் என செழுமை சிறந்த பிராந்தியம். எளிமையான மக்கள், அவர்தம் விருந்தோம்பல் காவியத்தன்மை கொண்டது. எங்கள் வேரித்தாஸ் வானொலிக்கு மட்டக்களப்பு நகரில் கள அலுவலகம் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து தொடர்பாளர்களாய் கடமையாற்றிய இருவரை உயிருள்ளவரை நான் மறக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை.

கருணம்மானை பேட்டி காண நான் விரும்பி யமைக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணம் முக்கியமானது. ஓர் அரசியல்- ராணுவ ஆய்வாளன் என்ற வகையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த மகத்தான ராணுவ வெற்றியானது என்னைப் பொறுத்தவரை ""ஜெயசிகுறு எதிர்சமர் தான். அதிபர் சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்துக்கு வவுனியாவிலிருந்து தரைவழிப்பாதை திறக்க முயன்ற ""ஜெயசிகுறு" எனப் பெயரிடப்பட்ட யுத்தம் வென்றிருக்குமேயானால் இன்று முல்லைத்தீவில் நடந்தது 12 ஆண்டுகளுக்கு முன்னரேயே நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த ""ஜெயசிகுறு" ராணுவப் பெருநகர்வை எதிர்கொண்டு முறியடித்த வரலாற்றில் முக்கிய பங்காற்றியவர்கள் கருணம்மானும் அவரது படையாளிகளும். உள்ளபடியே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ""போராட்ட வரலாற்றில் மகத்தான ராணுவ வெற்றி எது?" என நான் கேட்டபோது அவரும் ""ஜெயசிகுறு எதிர்சமர்" என பதில் தர, நான் உளம் சிலிர்த்ததும் உண்மை. எனவே ஜெயசிகுறு எதிர்சமரின் நாயகன் கருணம்மானை நான் நேர்காண விரும்பியதில் வியப்பில்லை.

முப்பது ஆண்டு கால வீர வரலாற்றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மாவின் பிரிவு என்பது யாவரும் அறிந்ததே. கிழக்கின் போர் அணிகள் இல்லாது போனது பேரிழப்பென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவ, பூகோள, அனைத்துலக செயல்பாடு ரகசியங்களை இலங்கை அரசுக்கு அவர் தந்துதவியது கடந்த ஈராண்டு கால போரின் போக்கை முக்கியமாகத் தீர்மானித்தது. உண்மையில் கருணம்மான் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்ட செய்தி கேட்ட அன்று மனதில் அவநம்பிக்கை படர்ந்தது, போராட்டம் பெருத்த பின்னடைவு காணும் என உள்மனது சொன்னது. இன்று தன் எஜமானர்களை திருப்தி செய்ய வேண்டி கருணா பிரபாகரன் அவர்கள்மீது பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் பிரபாகரன் நெஞ்சார நேசித்த போராளிகளில் ஒருவர் கருணம்மான் என்பதே உண்மை. ஏனென்றால், திறமையாளர்களை பிரபாகரனுக்குப் பிடிக்கும். கருணம்மான் வியத்தகு ஆளுமைத்திறன் கொண்ட ஒரு தளபதி. படையணிகளை கட்டி யெழுப்புவதில் மட்டுமல்ல, மக்களோடு நெருங்கி உறவாடி ஆதரவுத் தளத்தை விரிவாக்கு வதிலும் கெட்டிக்காரன். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் பயன்படுத்திய எறிகணை எந்திரம் (Artillery Machine) கருணாவால் இலங்கை ராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட் டது. அந்த எறிகணை எந்திரத்தை வன்னியில் நின்ற தன் தலைவனிடம் ஒப்படைப்பதற்காக சுமார் 100 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பாதை அமைத்துக் கொண்டு சென்று சேர்த்தவர் கருணா. அந்த அளவுக்கு துடிப்பும் செயல்வேகமும் மதிநுட்பமும் கொண்ட கருணா விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு தானும் ஒரு காரணம் ஆனது எப்படி?

அடுத்த வாரம்.

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன்



http://www.nerudal.com/nerudal.7764.html

♥ “நலமாக இருக்கிறோம்” – பொட்டு அம்மான் தரும் உறுதி"-நக்கீரன் கலக்கல் கட்டுரை ♥

"நலமாக இருக்கிறோம்" – பொட்டு அம்மான் தரும் உறுதி

nakeeranவன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை.

இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.

இந்த வைபவம் குறித்து பாதுகாப்புத் துறையில் விசாரித்தபோது, ""போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு அறி வித்ததை அடுத்து, முகாம்களில் (திறந்த வெளி சிறைக் கூடங்கள்) தஞ்சமடைந் துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அரசு மேற் கொள்ள வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தின. இதனை ஏற்று அதனை மேற்கொள்ள வன்னிப் பகுதி ராணுவத் தினருக்கு உத்திரவிடப்படும்னு நினைத் தோம். ஆனால் இதற்கு மாறாக, இறுதி நாளில் நடந்த "நிகழ்வுகளின்' சாட்சியங் களை முற்று முழுதாக அழித்துவிட வேண்டுமென கொழும்பு தலைமையகத்தி லிருந்து கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இந்த பணிகளை ராணுவத்தினர் செய்து முடிக்கும் வரையில் முப்படைகளுடனான வைபவத்தை நிறுத்தி வைத்திருந்த அரசு, தற்போது அந்தப் "பணிகள்' முடிந்துள்ள நிலையில் கொண்டாடியுள்ளது" என்று, கடந்த 10 நாட்களாக வன்னிப் பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட "பணிகளை' விவரித்தார் வைபவத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவரே.

இந்த நிலையில், வன்னிப் பகுதியில் அரசு அமைத்துள்ள "முகாம்'களுக்கு (திறந்தவெளி சிறைக்கூடங்கள்) விசிட் அடித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா, இலங்கை அரசின் கொடூரங்களைப் பகிரங்கப்படுத்தி யிருப்பது, மனசாட்சி உள்ளவர்களை உலுக்கியுள்ளது.

நீர்க்கொழும்பு மாவட்டத்தில் மாரவில் பகுதியில் அமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி சரத் என் சில்வா, ""வன்னிப் பகுதியில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள "நிவாரண முகாம்'களுக்குச் சென்று வந்தேன்.

அங்கு தமிழர்கள் படும் துன்பங்களையும் வேதனை களையும் வார்த்தைகளில் என்னால் விவரிக்க இயலவில்லை. செட்டிக்குளம் முகாமிற்குச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. ஒருவேளை கஞ்சிக்காக அவர்கள் ஏக்கத்துடன் இருந்தனர்.

இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட, 50 பேர், 60 பேர் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. முள்கம்பிகளால் சூழப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த மக்கள், ஒரு பிரட் துண்டுக்காக பல நாட்கள் காத்துக் கிடப்பது கொடுமை.

மிகப் பிரமாண்டமான கட்டிடங்களையெல்லாம் நாம் கட்டியெழுப்புகிறோம். ஆனால், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள், மிகச் சிறிய கூடாரங்களுக்குள் அடைக்கப் பட்டுள்ளனர். ஒரே கூடாரத்தில், 10 பேர் திணிக்கப்பட்டிருக் கிறார்கள். அந்தக் கூடாரத்தில் இந்த 10 பேரும் நிற்கத்தான் முடியும். உட்காரக் கூட முடியாது. கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முயன்றால், அவ்வளவு எளிதாக வெளியேறி விட முடியாது. அவர்கள் கழுத்து உடைந்துவிடும்.

மொத்தத்தில், வார்த்தைகளால் விவரித்து விட முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் அவர்கள். அவர்களுக்குப் போதுமான அளவில் நிவாரணம் வழங்க வேண்டும். உரிய நிவாரணங்களை அளிக்காவிட்டால் நாம் குற்றம் செய்தவர்களாகி விடுவோம். அந்தப் பழியை நாம்தான் ஏற்க வேண்டும்.

நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத் தின் முன் கொண்டு வரப்படவே இல்லை. "இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் இருக் கிறது' என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல் லாம் பச்சைப் பொய்கள். இதனையெல்லாம் நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம். கவ லையில்லை" என்று வன்னி முகாம்களின் நிலைமைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார் தலைமை நீதிபதி.

விழா முடிந்து வெளியேறும்போது சக நீதிபதிகளிடம் மனம் திறந்த தலைமை நீதிபதி, ""முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து, அவர்களை ஒன்றிணைய விடாமல் தடுப்பதும் பற்றி அந்த மக்கள் விவரிக்கும் போது, என் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது" என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வன்னி "முகாம்' அவலங்களை தலை மை நீதிபதியே பகிரங்கப்படுத்தியிருப்பது இலங்கை அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியிருப்பதாகவே கொழும்பு பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ""பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை அரசு அவிழ்த்துவிடும் பொய்களை சிங்களவர் கள் நம்பலாம். தமிழர்களாகிய நாங்கள் நம்பவில்லை. கடைசி நாள் போரின் போது அங்கு என்ன நடந்தது என்பது அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தனி முகாம் களில் அடைந்து கிடக்கும் அவர்கள் யாருடனும் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். தனி முகாம்க ளில் உள்ள அவர்களோடு கருணாவின் ஆட்கள் ஊடுருவியிருப்பதால், பிரபா கரனைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் மௌனத் தையே கடைப்பிடித்து வருகின்றனர்" என்று வன்னிப் பகுதியிலிருந்து கிடைக் கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பிரபாகரன் பற்றிய பொய்யான தகவல்களை பரப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள இலங்கை அரசு, புலிகளின் புலனாய்வுப் பிரிவு (உளவுத்துறை) தலைவர் பொட்டு அம்மான் குறித்த தேடுதல் வேட்டை யைத் துவங்கியுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பொய்யான செய்தியை இலங்கை ராணுவம் அறிவித்த சமயத்தில் "புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தளபதி சூசை உள்பட முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர்' என்று கொக்கரித்தது ராணுவம். இதையே, பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்தினார் ராணுவ பேச்சாளர் உதயநாணயக்கார.

இதனை அடுத்து, பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டவர்களின் உடல்களைத் தேடி அலைந்தது ராணுவம். ஆனால் கிடைக்கவில்லை. "யாரோ ஒருவர் உடலைக் காட்டி இதுதான் பிரபாகரனின் உடல்' என்று கூறியது போல, இவர்களுக்காகவும் அப்படி உடல்களை காட்டுவோமா என்று கோத்தபாய ராஜபக்சே அதிகாரிகளோடு விவாதித்தார். ஆனால் இதனை அறிந்த ராஜபக்சே ""கூடாது" என்று தடுத்து விட்டதால், அந்த நிகழ்வு நடக்கவில்லை. அதனால் பொட்டு அம்மானை பற்றி தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார் ராஜபக்சே.

இந்த நிலையில், (20-க்கும் மேற்பட்ட ஊடறுப்பு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பத்திரமாக வெளியேறிய சம்பவங்களை "பிரபாகரன் உயிருடன் உள்ளார்' என்ற தலைப்பில் வெளியான நக்கீரன் இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம்).

தீவிர தேடுதல் வேட்டையில் இலங்கை ராணுவம் மட்டுமல்ல இலங்கை உளவுத்துறையும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "ரா'வும் ஈடுபட்டது. இந்த உளவு அமைப்பினர் "பொட்டு அம்மான் தப்பித்து விட்டார், அவர் கொல்லப்படவில்லை' என்று அறிந்து அதனை ராஜபக்சே விடம் தெரிவித்தனர். இதனை அடுத்துதான், பத்திரிகையாளர்களை சமீபத்தில் மீண்டும் சந்தித்த உதயநாணயக்கார, ""பொட்டு அம்மான் கொல்லப் பட்டதாக சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை அல்ல. அவரை தேடி வருகிறோம்" என்று ஒப்புக் கொண்டார். இலங்கை பாதுகாப்புத் துறையும் இதனை வெளிப்படுத்தி யது. ஆனால், பொட்டு குறித்த எந்தத் தகவல்களும் அதற்கு மேல் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில் பொட்டு அம்மான் குறித்து நாம் விசாரித்தோம். கடந்த 10 நாட்களாக அமைதியாக இருந்த பொட்டு, செவ்வாய்க்கிழமை தனது உளவுத்துறையின் கீழ் சர்வதேச அளவில் செயல்படுபவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ""நலமாக இருக்கிறோம், பிறகு பேசுவோம்" என்று கதைத்துள்ளார். பொட்டுவின் குரலை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட புலிகளின் உளவுப்பிரிவினர் தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டபோது, ""நானே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போது தேசிய தலைவர் இருக்க மாட்டாரா? நிம்மதியாக இருங்கள்" என்று தெளிவுபடுத்தியுள்ளார் பொட்டு அம்மான் என்பதாக நமக்கு வரும் தகவல்கள் சொல்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தொடர்ந்து தான் அளித்துவரும் பேட்டிகளில் "பிரபாகரன் இல்லை' என்பது போலவே பதிவு செய்து கொண்டு வருகிறார். இது உலகத் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.

இதுபற்றி புலிகளின் சர்வதேச தொடர்புகளில் நாம் விசாரித்தபோது, ""சர்வதேச நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. புலிகளின் செயல்பாடு களுக்கு இது மிகப் பெரிய தடை. அதனால் தான் அந்தத் தடை நீக்கப்பட தற்போது உலகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பிரபாகரன் இல்லை என்று அவர்கள் நம்பினால்தான் இந்தத் தடையை நீக்க உலக நாடுகள் முன்வரும். இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, சுமுகமான சூழல் உலகம் முழுவதும் பரவுகிற நேரத்தில் திடீரென பிரபாகரன் தோன்றுவார் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

நன்றி நக்கீரன்


http://www.nerudal.com/nerudal.7915.html

♥ பெங்களூரில் புலிகள், "எவன் டா தலைவன்? " சீமான் ஆவேச கேள்வி ♥

குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?? - சீமான் ஆவேச கேள்வி


http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009020.jpg


http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009004.jpg




ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது "குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறீலங்கா அரசு, சீனமும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது.
இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.
இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

இரத்த உறவுகள் மானபங்கபடுத்தப் பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,
இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அறுகதை கிடையாது.

தமிழினத்தை சொந்தமண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, அய்.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சே வுடன் கை குலுக்குவானா?
வழக்கை முடிக்க டெத் சர்டிபிகேட் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடியவேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோணி ஆயுதம் கொடுப்பானா??

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பதவிக்காக நாயை விட கேவலமாக நக்கிட்டு கிடக்கிறான்…..

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான்.

அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ்தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வோட்டு கேட்கிறான்…

ச்சீய்….என்ன மானங்கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?
இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??

மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது.
தமிழினமே செத்துப் போனது.

பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே,தமிழினமே உயிரெழுந்தது.

இப்போது புரிந்து கொள்ளுங்கள்….

தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறீலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்?

ராஜபக்சே காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்சே தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..'கருணா'க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே! என வேதனையோடு குறிப்பிட்டார்.

சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.

நிகழ்ச்சி நடைபெற்ற திடல் எங்கும் தேசியத் தலைவரின் படங்களும்,ஈழத்தின் மனித பேரவலத்தை விளக்கும் பதாகைகளும் நிரம்ப இருந்தன.
ராஜபக் சே உருவபொம்மை தூக்கிலிடப்பட்டு, தீயூட்டப்பட்டது.

சோனியா,கருணாநிதி ஆகியோரை தமிழின இரத்தம் குடிக்கும் எதிரியாக,துரோகியாக… உருவகப்படுத்தி, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தங்கவயல் தமிழர் முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் சார்பில்,தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும்… கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் நாளிதழ் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இதே தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பினால்,அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தியதில்,தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதும், திமுகவின் அடுத்த சர்வாதிகாரி யார்? என அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நடந்த சகோதர யுத்தத்தில், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எழுச்சிகரமாக நடந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், ஏராளமான கன்னடர்களும் கலந்து கொண்டனர். மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

http://www.meenagam.org/?p=4681



ஈழத்தமிழரை காக்கக்கோரி பெங்களூரில் தமிழக உறவுகளால் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்


banglore_07072009001[படங்கள்]கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் "மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்" இன்று ஞாயிறு காலை (07/06/2009) நடைபெற்றது. முன்னதாக பெங்களூரு கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

banglore_07072009001

இக்கூட்டத்திற்கு கருநாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து பேராசிரியர். பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழித் தெரிவித்துக் கொண்டார்.

banglore_07072009005

சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது. குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?? என்று இயக்குநர் சீமான் ஆவேச கேள்வியெழுப்பினார்.

banglore_07072009002

மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

banglore_07072009007

தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும் கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

banglore_07072009016

banglore_07072009012

banglore_07072009020banglore_07072009030


http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009003.jpg


http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009031.jpg

http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009024.jpg


http://www.meenagam.org/?p=4633


http://www.mdmkonline.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=15&id=473&Itemid=90

♥ தமிழா... உன் கதி இதுதானா? "அனந்த விகடன்" கட்டுரை ♥

தமிழா... உன் கதி இதுதானா?--விகடன்


விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜ பக்ஷேவின் ராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்குப்பறந்தனர்.

ராஜபக்ஷேவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லா யிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!

சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும் பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!

ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன. 'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன்.

அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங் களை என்னால் மறக்க முடியாது. என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக் கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திரிகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? ராணுவத்திலும் காவல் துறையிலும் தமிழர் கணிசமாக இடம் பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.

'பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய ரத்த வெறியே காரணம்!' என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்தயாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?

சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956-ல் அறிவிக்கப் பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந் தத்தை நிறைவேற்றும்படி 1958-ல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக் கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974-ல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடி குண்டு வீசி மோசமான தாக்குதலை முன் நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977-ல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண் டாடப்பட்ட யாழ்நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக் கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27-ம் நாள் 18 தமிழரும் குரூர மாகக் கொல்லப்பட்டது யாரால்?

சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல் களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை ரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர் கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.

எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழி னம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான ராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவி ழந்து, மனஅமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம் களில் இரக்கமற்ற ராணுவத்தின் முன் மார் பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!

சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். 'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?' என்று பண்டார நாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்ஷேவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபா கரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப் பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ஷே வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத்தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.

பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ஷே சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவ டிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், ஃபிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்துகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.

'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ஷே அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங் கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்ஷேவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!

வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர்

எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!

'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள். ஈழத்தில் வாடும் தமிழரும், புலம் பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.

முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடெல்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்ஷேவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந் தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3651:2009-06-06-08-34-38&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53


♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 1 -"தினத்தந்தி" தொடர் ♥



1


இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் இது.

பல ஆண்டுகளுக்கு முன்பே ``தமிழ் ஈழம்'' கோரிக்கை, இலங்கைத் தமிழர்களால் எழுப்ப பட்டது. ``இலங்கைத் தமிழர்களின் தந்தை'' என்றும் ``இலங்கையின் காந்தி'' என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம்,

தமிழர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிப் பார்த்தார். இலங்கை அரசுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பயன் இல்லை. கையெழுத்திட்ட மை உலருவதற்கு முன் ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டனர், சிங்கள ஆட்சியாளர்கள்.

எனவே, ``இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ `சுதந்திர தமிழ் ஈழம்'தான் ஒரே வழி'' என்று மாநாடு கூட்டி அறிவித்தார்.

அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட தீர்மானம் இது.

இலங்கையின் வரலாறு

``தமிழர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இலங்கைக்குப் போனவர்கள்தானே! அவர்கள் தனிநாடு கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?'' என்று இன்றும் பலர் கேட்கிறார்கள். அவர்கள் இலங்கையின் வரலாற்றை அறியாதவர்கள்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். இலங்கையின் "மண்ணின் மைந்தர்கள்.'' தமிழ் மன்னர்கள் பலர் இலங்கையை ஆட்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.
 
குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்து மகா சமுத்திரம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது லெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப்பட்டது என்றும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

``லெமூரியா கடலில் மூழ்கி விட்டது. அப்போது தமிழ்நாட்டுடன் இலங்கையும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாளடைவில் தனி தீவாகப் பிரிந்து விட்டது'' என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் ஆழமின்றி இருப்பதற்கு இதுதான் காரணம்.

ஆதாரங்கள்

திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், 1876-ல் பூமியைத் தோண்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பலவகையான மண் பாண்டங்கள் கிடைத்தன. அவை சூளையில் நன்றாக வேக வைக்கப்பட்டு, நல்ல மெருகுடன் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைப்பதற்கான ``தாழி''கள் இவை.

இதேபோன்ற ``தாழி''கள், இலங்கையின் வடபகுதியிலும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, புராதன தமிழர்கள் உபயோகித்த பல நாணயங்கள், அரச இலட்சினைகள், முதலானவை இலங்கையின் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்திலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் எத்தகைய நடை- உடை- பாவனையுடன் வாழ்ந்தார்களோ, அதே மாதிரிதான் இலங்கைத் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் `தொப்புள் கொடி' உறவு இருந்திருக்கிறது.

வரலாறு கூறுவது என்ன?

இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடுதான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான்; சிங்களர்கள் அல்ல.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மவுரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பவுத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அக்குழு இலங்கைக்கு வந்தபோது, அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் என்றும், அசோகன் விருப்ப்ப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு ``தேவ நம்பி'' என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 வருடங்கள், அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினார்கள் என்று அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ராஜ்ஜியங்கள்

ஆதிகாலத்தில், இலங்கை ஒரே நாடாக இருந்தது இல்லை. பல அரசர்களும், சிற்றரசர்களும் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டு வந்தனர்.
ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது, இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன:

( 1 ) தென் கோடியில், கொழும்பு பகுதியை உள்ளடக்கிய கோட்டை ராஜ்ஜியம். இந்த கோட்டையை ஏற்படுத்தியவனே அழகுக்கோன் என்ற தமிழன்.
( 2 ) கட்டி ராஜ்ஜியம்.
( 3 ) யாழ்ப்பாண ராஜ்ஜியம்.

இவற்றில் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை எக்காலத்திலும் சிங்களர்கள் ஆண்டது இல்லை. கோட்டையையும் கட்டிதமிழர்களும், சிங்களர்களும் மாறி மாறி ஆண்டு வந்திருக்கிறார்கள்.

பல ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்படு வந்த ஆங்கிலேயர்கள், இலங்கையையும் ஒரே நாடாக மாற்றினார்கள். சிலோன் (இலங்கை) என்ற பெயரையும் சூட்டினார்கள்.

http://dailythanthi.com/FlashNews/Histroy/Eelam_Story/history01.html





































































  











♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 7 -"தினமணி" தொடர் ♥







ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 7. பண்டாரவன்னியனின் கொரில்லாப் போர்!



அடங்காப்பற்று என்னும் வன்னிப் பகுதி கருநாவற்பற்று, கருக்கட்டுமூலை, முள்ளியவளை, மேல்பற்று என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரத்தில் செயல்பட்டன. 1790-இல் நல்லமாப்பாணான் என்ற வன்னியன் தலைவனாக விளங்கினான். இவன் பேரில் குற்றம் சுமத்தி நீக்கினர்.

பின்னர் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக "குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன்' விளங்கினான். வன்னிப் பகுதியின் சுதந்திரத்திற்காக இறுதி வரை போராடி உயிர் துறந்தவன் என்ற பெயர் இவனுக்கு உண்டு. (1)*
ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் அவர்களோடு மோதி பதவியிறக்கம் பெற்று ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கத்தில் மீண்டும் மன்னனாகி, பின் அவர்களுடன் மோதினவன் என்ற பெயரும் பண்டாரவன்னியனுக்கு உண்டு.

ஒல்லாந்தருக்கும்-ஆங்கிலேயருக்கும் வரிகட்ட மறுத்த காரணத்தினால் பல யுத்த களங்களைக் கண்டான். அடுத்து சாயவேர் தர மறுத்த குற்றம்-அக்காலத்தில் வன்னிப் பகுதியில் கிடைக்கும் சாயவேர்கள் ஒல்லாந்தரால் ஏற்றுமதி செய்யப்பட்டு, நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து அங்கு சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயரிடம் வன்னிப்பகுதி நிர்வாகம் மாற்றம் பெற்றதும் ஒல்லாந்தரான கேப்டன் வான்டெரிபேக் ஆங்கிலேயப் படையில் சேர்ந்து கொண்டான்.

1803-இல் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் பெரும் யுத்தம் ஏற்பட்டது. இந்தப் போரைப் பயன்படுத்திக் கொண்டு பண்டாரவன்னியன் ஆங்கிலேயர் வசமிருந்த ஆனையிறவுக் கோட்டை, இயக்கச்சி பைல் கோட்டை, வெற்றிலைக்கேணி பெஸ்சூட்டர் (ஆங்ள்ஸ்ரீட்ன்ற்ங்ழ்) கோட்டை ஆகியவற்றை மூன்று தனித் தனி படைப் பிரிவுகளை அனுப்பி தாக்கினான்.

*(2) முள்ளிவளையிலிருந்து சுண்டிக்குளம் வழியாகச் சென்ற ஒரு படைப்பிரிவு பெஸ்சூட்டக் கோட்டையைக் கைப்பற்றியது. கண்டா என்னும் ஊரின் வழியாக இயக்கச்சிக்குச் சென்ற படைப்பிரிவு குமாரசிங்க முதலியார் தலைமையில் "பைல்' கோட்டையைத் தாக்கி கைப்பற்றினர். இங்கிருந்த வீரர்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி ஓடினர்.

தாங்கள் கைப்பற்றிய கோட்டைகளைத் தகர்த்துவிடுமாறு பண்டாரவன்னியன் உத்தரவிட்டிருந்தமையால், படைப் பிரிவினர் அக்கோட்டைகளின் ஒரு பகுதிகளைத் தகர்த்து விட்டனர்.

அதே போன்று ஆனையிறவுக் கோட்டையை தகர்க்கும் முயற்சியில் அதன் நான்கு கொத்தளங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பெரும் திரளாக வந்த ஆங்கிலேயப் படைப்பிரிவினரிடமிருந்து தப்பிக்க வன்னியன் படைகள் பின்வாங்கி கற்சிலை மடுவுக்கு திரும்பினர்.

அதே ஆண்டில் கேப்டன் வான்டெரிபேக் முல்லைத்தீவில் கட்டிய கோட்டையை பண்டாரவன்னியன் தகர்த்தான். இந்த முயற்சியில் கண்டி மன்னன் படைப்பிரிவும், நுவரகலாவியா திசாவையின் படைப்பிரிவும் சேர்ந்து கொண்டன. இந்தப் போரில் வான்டெரிபேக் தோல்வியுற்று யாழ்ப்பாணம் நோக்கி, படகில் தப்பினான். ஆனாலும் திரிகோணமலையில் இருந்து வந்த ஆங்கிலேயப் படை 19-வது கர்னல் எட்வர்ட் மெட்ஜின் தலைமையில் முல்லைத் தீவைக் காத்து, கைப்பற்றிக் கொண்டது.

பின்னாளில் பண்டாரவன்னியனுக்கு உதவி புரிந்த குற்றத்தை குமாரசேகர முதலியார் மீது பழி சுமத்தி அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களைக் காப்பாற்ற தனது காதலி குருவிச்சிநாச்சி தலைமையில் குழு அனுப்பி வைத்தும் பண்டாரவன்னியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

குமாரசேகர முதலியாரையும் அவரது நண்பர் குழாத்தையும் காப்பாற்ற முடியாமல் போன பண்டாரவன்னியன் பெரும் வருத்தமுற்று, இதற்குப் பழிக்குப் பழி வாங்க ஆனையிறவுக்கோட்டை, இயக்கச்சிக்கோட்டை முதலியவற்றை கடுமையாகத் தாக்கினான். 1803 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஜான் ஜ்வல் தலைமையிலும், மன்னாரிலிருந்து கேப்டன் வான்டெரிபேக் தலைமையிலும் வன்னிப் பகுதியை நோக்கி விரைந்தன.

கற்சிலைமடுவில் கேப்டன் வான்டெரிபேக் படைகள் காட்டுப் பகுதியில் வந்தபோது கடும் தாக்குதலுக்கு ஆளாயின. எங்கிருந்தோ கற்கள் பெருமளவில் பறந்து வந்து தாக்கின. பண்டாரவன்னியன் படைப்பிரிவு முந்தைய நாளில், அங்கிருந்த மூங்கில் மரக் காடுகளில் புகுந்து, ஒவ்வொரு மரத்தின் நுனியிலும் கருங்கற்களைக் கட்டி, அதன் நுனியை பின்புறமாகக் கயிறு மூலம் இழுத்து வேறொரு மரத்தில் கட்டியிருந்தனர். ஆங்கிலேயப் படை வரும் நேரமாகப் பார்த்து கட்டியிருந்த கயிறை அவிழ்த்துவிட மூங்கில் மரங்கள் நிமிர்ந்து கற்கள் எகிறி விழுந்தன. (3)*

இந்தச் செயலே கொரில்லாப் போரின் முதல் யுக்தியாக இன்றும் கருதப்படுகிறது. பண்டாரவன்னியன் இப்போரில் தோற்றபோதிலும். அந்தப் பகுதியில் இருந்து தப்பினான்.

உயிருடனோ, கொன்றோ பண்டாரவன்னியனைப் பிடிக்க விரும்பிய வான்டெரிபேக் அவமானமுற்றான். இருப்பினும் கற்சிலை மடுவில் நடுகல் ஒன்றை நட்டு, 1803 அக்டோபர் 31-இல் கேப்டன் வான்டெரிபேக் பண்டாரவன்னியனைத் தோற்கடித்தான் எனப் பொறித்தான்.

கண்டி மன்னன் உதவியுடன் 1811-ஆம் ஆண்டு உடையாவூரில் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரை மீண்டும் தாக்கினான். இந்தத் தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதை ஒற்றன் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள், திரிகோணமலையிலிருந்தும்-யாழ்ப்பாணத்திலிருந்தும் பெரும் படையுடன் வந்து காத்திருந்தனர். இத்தாக்குதலில் பண்டாரவன்னியன் தரப்பில் பேரழிவு ஏற்பட்டதுடன் அவனுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. தளபதிகள் பண்டாரவன்னியனை பனங்காமத்துக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளித்தும் பலனளிக்கவில்லை; பண்டாரவன்னியன் மறைந்தான்.

* (1,3) When the English took possession of the country in 1795 it enjoyed tranquillity for some years, until in 1803, when Pandara Wanniya, said to have been one of the original Wanniyas deposed by the dutch, raised a formidables insurrection against the British Government, and being assisted by Kandians with whom we were then at war, soon overran all the Northern Districts and had the boldness to penetrate as far as Elephant’s Pass into the peninsula of Jaffna. His object was to restore the independence of the Wanni, and render himself head of all its principalaties, but though daring and active, the force under his command was unable to cope with regular troops, and was only fitted for guerilla warfore. After several unsuccessful attempts to discover his retreats, made from the different posts, he was finally surprised, his troops killed or dispersed, the country was cleared of the rebels, and tranquillity was restored.‘‘. An Historical, Political and Statistical Account of Ceylon and its Dependencies -by Charles Pridham -1849 -Vol II. Page 522.

* (2) "அடங்காபற்று(வன்னி) பாகம்-2 பண்டாரவன்னியன்'-அருணா செல்லதுரை மற்றும் "ஈவத்தவர் வரலாறு'-கலாநிதி ஆ.குணராசா.

நாளை: ஐக்கிய இலங்கை எனும் அரசியல் தவறு!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=70517&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=



♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 6 -"தினமணி" தொடர் ♥

Image and video hosting by TinyPic




ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு': 6. ஐரோப்பியர் வருகையும் அவர்களது ஆட்சியும்

பாவை சந்திரன்



சிக்கலான கால கட்டங்களிலெல்லாம் சிங்களவர்கள் அந்நியரிடமே தஞ்சம் புகுந்தனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டுதான் ஐரோப்பியர் வருகை.
17-வது நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பா தொழிலில் செழித்திருக்கவில்லை. அங்கு இயந்திரமயமான புரட்சி ஏற்பட்டது வெகுகாலத்திற்குப் பின்னர்தான்.

ஆதலால் பொருள்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் அக்காலத்தில் முன்னணியில் இருந்த ஆசிய நாடுகளுக்கு வியாபார நிமித்தம் செல்ல ஆரம்பித்தார்கள். ஐரோப்பிய வியாபாரிகள் தங்களது பொருள்களைக் கொடுத்து ஆசியப் பொருள்களை வாங்கினார்கள்.

இவர்களில் முன்னணியில் நின்று வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள் போர்த்துக்கீசியர்களே. இதனால் இவர்களிடம் பெருத்த செல்வம் சேர்ந்தது. இவர்களது செல்வப் பெருக்கைக் கண்ட பொறாமையின் விளைவே ஆங்கிலேய, ஒல்லாந்த (டச்சு) கம்பெனிகள் ஆசிய நாடுகளை நோக்கித் தங்களது வியாபாரப் பயணத்தைத் தொடர்ந்தன என்கிறார் ஜவாஹர்லால் நேரு தனது "உலக சரித்திரம்' எனும் நூலில். வியாபாரத்தில் தனக்கென இடம் பிடித்துக் கொண்டதும் ஆங்காங்குள்ள அரசுகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு முதலில் அவர்களின் நண்பர்களாகவும், நாளடைவில் அந்தந்தப் பகுதிகளின் சிற்றரசுகளைப் பிடித்துக் கொண்டு ஆட்சியும் புரியலாயினர். சிற்றரசுகள் பணிந்தால் மட்டும் போதுமானது அல்ல; பெரும்பாலான சிற்றரசுகளின் மீது ஆதிக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

இந்தியாவில் போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் தங்களது வியாபாரங்களைப் பெருக்கிக் கொண்டு பின் உள்நாட்டுச் சிற்றரசுகளை மோதவிட்டு நாட்டையும் பிடித்தனர் என்பதே நம் கடந்த கால வரலாறு.
போர்த்துக்கீசியர் 1505-இல் கும்பலாக வியாபாரம் செய்யும் நோக்கில் இலங்கை வருகிறார்கள். போர்த்துக்கீசியர்கள் அடியெடுத்து வைத்தபோது இலங்கையில் மூன்று தனித்தனி நாடுகள், தனித்தனி மன்னர்களின் கீழ் அரசாட்சி நடந்தன.
நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழர் ஆட்சி~
கண்டியைத் தலைமையகமாகக் கொண்ட கண்டி மன்னனின் ஆட்சி~
கோட்டையைத் தலைமையகமாகக் கொண்ட கோட்டை மன்னனின் ஆட்சி~ என்பதே அந்த மூன்று அரசுகளாகும்.

இதில் கண்டியும், கோட்டையும் சிங்களவர் வாழ்ந்த பகுதியாகும். இந்த மூன்று அரசுகளில் போர்த்துக்கீசியரை அன்புடன் வரவேற்றும், மரியாதை வழங்கியதும் கோட்டை அரசுதான்.


இருபாலரும் தங்களது அன்பையும் நேயத்தையும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார்கள். கோட்டை மன்னனுக்கு வாரிசு என்று யாரும் இல்லாததைக் கண்ட போர்த்துக்கீசியர் தங்களின் பிடியை மேலும் வலுப்படுத்திக் கொண்டனர். கோட்டை அரசுக்கு வாரிசாகப் பலர் போட்டியிட்டதால், யார் சரியான வாரிசு என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பைப் போர்த்துக்கீசியரிடமே கோட்டை மன்னன் அளித்தான்.

இதன் மூலம் 1597-இல் கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதிகள் யாவும் போர்த்துக்கீசியர் வசமாயின.
போர்த்துக்கீசியர் 1505-இல் இலங்கையில் அடியெடுத்து வைத்த போதிலும் தமிழர் பகுதியை ஆளும் வாய்ப்பு அவர்களுக்கு 1619-இல் தான் கிடைத்தது. அந்த ஆண்டில் சங்கிலி மன்னன் போர்த்துக்கீசியரால் சிறைபிடிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள கோவாவில் தூக்கிலிடப்பட்டான்.

ஆளும் தலைமை ஒன்றாக இருந்த போதிலும் தமிழர் பகுதி நிர்வாகம் 1658 வரை தனியாகவே இருந்தது. இருப்பினும் குடா நாட்டுக்குத் தெற்கேயுள்ள வன்னிப்பகுதிகள் போர்த்துக்கீசியரின் மேலாணையை ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டி அரசுக்கும் திறை செலுத்தவில்லை. எந்தவொரு அரசின் பாதுகாப்பையும் நாடாது தன்னாட்சியை அமல்படுத்தி நடத்தி வந்தன. கிழக்குக் கரையோரத்தில் உள்ள கொட்டியாற்றுப்பற்று வன்னிமை, பழுகாம வன்னிமை, பாணமை வன்னிமை ஆகிய மூன்றும் கண்டி அரசின் மேலாணையையும், பாதுகாப்பையும் நாடியிருந்தன. ஆனாலும் அவை தன்னாட்சியுள்ள தமிழ்ப் பகுதிகளாகவே இருந்தன. பல்வேறு ஆட்சிகளின் கீழ் ஆளப்பட்டிருந்த போதிலும் தமிழ் ஈழ நிலப் பகுதிகளின் தமிழ்த் தன்மை மாறாதிருந்தது என்று கூறுகிறார்கள். (தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்~ நூலில் ஜே.ஆர். சின்னதம்பி மற்றும் க. சச்சிதானந்தன்.
போர்த்துக்கீசியருக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைக் கண்டு ஒல்லாந்தருக்கும், இங்கு வியாபாரம் செய்யவும் ஆட்சிபுரியவுமான ஆசை எழுந்தது.

ஒல்லாந்தர்கள் இலங்கையை நோக்கித் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். 1638-இல் மட்டக்களப்புத் துறையைக் கைப்பற்றி தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அங்குதான் முதன்முதலில் கோட்டையொன்றை அவர்கள் அமைத்தனர். கொழும்பைத் தாக்கி 1656-இல் வெற்றி பெற்றனர். அது போலவே யாழ்ப்பாணத்தையும் 1658-இல் தாக்கி வெற்றி கண்டனர்.
கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களோ, போர்த்துக்கீசியரை வீழ்த்த வேண்டும் அல்லது அவர்களது பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஒல்லாந்தர்கள் பக்கம் சாய்ந்தால் அவர்கள் உதவமாட்டார்களா என்ற கருத்தில், போர்த்துக்கீசியர்மீது ஒல்லாந்தர் தொடுத்த போருக்கு கோட்டை அரசு உறுதுணையாக இருந்தது. இதனால் போர்த்துக்கீசியர் தங்களது ஆட்சியை இழக்க வேண்டியதாயிற்று.

ஒல்லாந்தர்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப் பிரிக்கப்பட்டது. இந்த ஆட்சி 1795 வரை தொடர்ந்தது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது.

போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் இலங்கையின் மீது கவனம் செலுத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டும் சும்மா இருப்பார்களா? அவர்களும் இலங்கையை நோக்கி தங்களது கப்பல்களைத் திருப்பினர்.

கி.பி. 1660-இல் ராபர்ட் நாக்ஸ் (தர்க்ஷங்ழ்ற் ஓய்ர்ஷ்)எனும் ஆங்கிலேயர் திருகோணமலைத் துறைமுகத்தில் வந்து இறங்கியதும் கண்டி அரசால் கைது செய்யப்பட்டார். 1679-இல் கண்டி அரசனின் சிறையிலிருந்து தப்பினார். தான் தப்பிய விதத்தைப் பின்னாளில் ஒரு நூலாக எழுதினார். இதில் தமிழ், தமிழர்களின் நாகரிகம் பற்றி உயர்வான கருத்துத் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது இலங்கையின் வரைபடம் ஒன்றை, தான் எழுதிய நூலில் சேர்த்திருக்கிறார். கயிலாய வன்னியனின் ஆட்சிப் பகுதியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அருவியாற்றின் கீழிருந்து தொடங்கும் எல்லை, கயிலாய வன்னியனின் ஆட்சிப் பகுதியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அருவியாற்றின் கீழிருந்து தொடங்கும் எல்லை, வடக்கில் வன்னியப் பகுதியையும், கிழக்கில் கொட்டியாறு பழுகாமம், பாணமை வன்னிமைகளை அடங்கியிருக்கிறது. (தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் பக்.17).
1782-இல் வந்த ஆங்கிலேயர் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1795-இல் தமிழர் வாழ்ந்த பிரதேசமான திருகோணமலையைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேயர் ஆட்சியமைக்க அடித்தளமிட்டவர்கள் யார்?
சிங்களவர்கள்தான்!

முன்பு போர்த்துக்கீசியரிடமிருந்து தப்பிக்க ஒல்லாந்தர்களிடம் எப்படிப் போனார்களோ, அதுபோலவே இப்போது ஒல்லாந்தப் பிடியிலிருந்து விடுபட ஆங்கிலேயருக்கு ஒத்துழைப்புக் கொடுத்தனர். முடிவு 1815-இல் இலங்கைத் தீவு ஆங்கிலேயர் வசமாயிற்று.

நாளை : பண்டார வன்னியன்


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=69798&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 5 -"தினமணி" தொடர் ♥





ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 5. சிங்களமொழி உருவானது எப்படி?

பாவை சந்திரன்


மொழியியல் ஆராய்ச்சியின்படி சிங்களம் திராவிட இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட் (டேவிட் 1981-இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமுற்றவர்). (1)*
""சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார். மொழியியல் அறிஞர் ஆக்ஸிமோரன் (Oxymoron).(2)* இவ்வாறு ஆக்ஸிமோரன் கூறியிருந்தாலும் அண்மைக்கால வரலாற்று மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூற்றுப்படி சிங்கள மொழி பெருவழக்காக கி.பி. 800}900ல் பேச்சு மொழியாக எழுந்ததாகக் கொள்ளலாம்.

பழந்தமிழர் இலக்கியங்களில் இலங்கை "ஈழம்' என்றே குறிப்பிடப்படுகிறது. ஈழு என்ற திராவிட மொழியிலிருந்து ஈழம் பிறந்தது. இம்மொழியே இப்பொழுது "எலு' என்ற மொழி. தமிழுக்கும் முந்தைய திராவிட மொழியாகும்; இது திருந்தாத பேச்சு வழக்கு மட்டுமே உள்ள மொழியாகும். இதற்கு இலக்கியமோ, இலக்கணமோ கிடையாது.

இப்படிப் பழந்தமிழ் வடிவம் இங்கு வழக்கில் இருந்தபோதுதான் புத்தமதம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையில் நுழைகிறது. அப்போதுதான் பாலி மொழி இலங்கைக்குள் அடியெடுத்து வைக்கிறது. பேச்சு வடிவத்தில் இருந்த ஈழமொழியின் மீது பாலியும் சம்ஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்த, இந்த ஆதிக்கத்தின் விளைவால் உருவான கலப்பு இன மொழியே சிங்கள மொழியாகும். அதனாலேயே தமிழ்மொழியில் உள்ள அநேக சொற்கள் சிங்களத்திலும் கலந்து இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.

தமிழ்தேவி, சோழமக்கள், அன்னியக்கரை, மறுகரை போன்றவை மகாவம்சத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்களாகும். (3)*

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆதிக்கத்தில் இலங்கை வந்த பிறகே சிங்களமொழிக்கென எழுத்து வடிவம் கிடைத்தது என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

தமிழர்கள் புத்த மதத்துக்கு தீராத விரோதிகளாக என்றும் இருந்ததில்லை. அவரவர் தத்தமது மதக் கொள்கையை கடைப்பிடித்து வந்தனர் என்பதற்கும் சான்றுகள் இலங்கையில் மட்டுமல்ல; தென்னிந்தியாவிலும் உண்டு. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் புத்தமத்தை உயர்த்திப் பிடித்திருக்கின்றன. இலங்கையிலோ தமிழர்களும் புத்த மதப்பீடத்தில் தலைமைக் குருமார்களாக பொறுப்பு வகித்து சிறப்பித்திருக்கிறார்கள். புத்த மடாலயத் தலைவர்களாக இருந்த தமிழர்கள்:
சங்கமிதா - 4-ஆம் நூற்றாண்டு
புத்தமித்ரா - 5-ஆம் நூற்றாண்டு
வஜ்ரபோதி - 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்.
அனுராதா - 12-ஆம் நூற்றாண்டு
தர்மகீர்த்தி - 12-ஆம் நூற்றாண்டு
மற்றும் குபலன்கா - 13-ஆம் நூற்றாண்டு.

மேலும் திக்கநாகர், (வட இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தில்) தர்மபாலா போன்ற தமிழர்கள் புத்த பீடத்திற்குத் தலைவர்களாகத் தங்களது பங்கினை விரும்பி அளித்திருக்கிறார்கள்.

போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்தபோது இருந்த கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதியில் தமிழர்கள் நிறையப் பேர் வசித்ததாகவும், மேற்கு, வடமேற்கு ஆட்சிப் பகுதியில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களைக் கண்டதாகவும், நிர்வாகத்தில் கூட அவர்கள் பங்கேற்றிருந்ததாகவும் போர்த்துக்கீசியக் குறிப்புகள் கூறுகின்றன.

இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்களோ இலங்கையின் வரலாற்றை, தமிழர்-சிங்களவர் ஆகியோரின் பகைமையை அவ்விரு இனங்களும் போரிட்டுக் கொண்டே இருந்த வரலாறாகவே உள்ளது என்று திரித்து எழுதுகின்றனர். மேலும் வரலாற்றில் தமிழர்களின், தமிழ் மக்களின் கலாசாரப் பங்களிப்பை அதன்மூலம் கிடைத்த மேன்மையை இழிவுபடுத்தி, குறைத்து மதிப்பிட்டு அல்லது மறைத்துவிடும் முயற்சியில் இலங்கையின் வரலாற்றை அவர்கள் சித்திரிக்கின்றனர்.

இது மன்னராட்சிக் காலத்தில் தங்களது மதமான புத்த மதத்தின் மேலாண்மை வீழ்ந்தது என்ற கருத்துக் கொண்டு மதவாதிகளின் உள்ளங்களில் ஏற்பட்ட கருத்துக் குழப்பமாகும். (4)*
மகாவம்சத்தையும் புத்தமத தத்துவத்தையும் விவாதிக்கையில் மூன்று நம்பிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

(1) ஆரிய இனம் என்ற நம்பிக்கை; சிங்கள மொழி பேசும் மக்கள் இனரீதியாக ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற நம்பிக்கை.
(2) சிங்கதீவு~விஜயன் என்ற மன்னன் இலங்கைத் தீவில் அடியெடுத்து வைத்து ஆட்சியை நிலைநாட்டுவதற்கு காரணமானவன் என்ற மூட நம்பிக்கை.
(3) தர்மதீவு~புத்தரின் இலங்கையோடு உள்ள அவரது சிறப்பான உறவு பற்றிய மூட நம்பிக்கை. (5)*

இவை யாவும் தவறான தத்துவங்களின் மேல் எழுந்த நம்பிக்கைகள் ஆகும். இவை ஏன் எழுப்பப்பட்டன? கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வடபகுதியைத் தமிழர்கள் கைப்பற்றி ஆண்டபோது வெறுப்புற்ற புத்த மதவாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான கருத்துக்களே இவை.

அப்போது உறுதியான தேசியத் தத்துவம் எதையும் புத்தர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களின் தனித் தன்மைக்கு ஒரு தத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் இது பிறந்தது. (6)*

இதன் மூலம் "இன மேலாண்மை, நாகரிகப் புகழ்பாடுதல், ஆரிய இனத்துடன் சிங்கள இனத்தை இணைத்த கடந்த காலத்துதி, புத்த கலாசார நம்பிக்கை முதலியவற்றை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்' என்று வரலாற்று ஆய்வாளர் டாக்டர் குமாரி. ஜெயவர்த்தனே குறிப்பிடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், வரலாற்றைப் பொய்யாக்கி, தொன்று தொட்டு வாழ்ந்தவரைத் தாழ்ந்தவராக்கி, பெரும்பான்மைத் திமிராலும், அதிகார சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஆணவத்தாலும் தமிழர்கள் உரிமைக்கு உலைவைத்து, உயிருக்கு விலைவைத்து, உடமைக்குத் தீவைத்து, தமிழ் இனத்தையே பூண்டோடு அழித்து வரும் கொடுமையான நிலைமை திடீரென்று குதித்து விடவில்லை. படிப்படியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டம் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால், வரலாற்றில் இந்த ஒழிப்பு முறைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தமிழ் இனம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. அந்தப் போராட்டம் இறுதி வெற்றி வரை தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழன் இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரன்~முதல் பங்குதாரன் என்ற உண்மையை கடந்த இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறு, நமக்குப் புலப்படுத்துகிறது.


நாளை: இலங்கை - ஐரோப்பியர் வருகையும்
அவர்களது ஆட்சியும்


*(1) (i) ‘‘The Tamil spoken in Ceylon represents a pre Pallava period with its ancient morphological and grammatical forms and its repertoire of words considered obsolete for centuries on the neighbouring continent’’
-Tamil Culture -Its past, Its present and future - By Father (Dr) Xavier S.Thanianayagam, Tamil Cultural Society -Ceylon 1955 - Page 8-9

NOTES
W.Geiger ‘‘The Mahavamsa’’ -P-165, 264
Colombo 1950
*(2) (ii) "கி.மு.2000 முந்தைய தமிழர் (இலங்கைத் தீவில் பேசப்பட்ட மொழி) சுய மொழியில் பேசினர். அப்போதைய காலத்தில் அது உருவானது. அவர்கள் ஆதிகால திராவிடர் ஆகும்'!- மொழியியலாளர் எச்.எஸ்.டேவிட்.
*(3) (iii) ""ஆதிகால திராவிடத்திலிருந்து தமிழ் சிங்கள மொழி உட்பட 20 மொழிகள் பிறந்தது'' Oxymoron- மொழி இயலாளர்.

*(4) NOTES
W. Geiger ‘‘The Mahavamsa’’-p-165, 264 Colombo 1950
*(5) ‘‘The writings of many of the Buddhist ‘patriots’ Anagarika Dharmapala, Piyadasa Sri Srisena, Battaramulle Sri Subuti, and articles in journals like the ‘‘Sinhala Jatiya’’ and Sinhala Baudhaya, abounded in claims not only that Buddhism was the only true religion, all others being mere superstitious, but the pure Aryan Singhala of the Sihadipa were the chosen race with a historic mission to preserve Buddhism in Dhammadipa and were therefore superior to the Tamils, Moors, Malayalis, Sindhis and Chettiars who were Doubly doomed as being ‘‘infidels of degraded race.’’
-Kumari Jayawardane
‘‘Revival revolt and race’’
*(6) Vijaya according to Mahavamsa was the founder of the Sinhala ‘race’ and landed in Srilanka on the day of Buddha’s death, interwoven with ‘Sihadipa’ idea; that civilization began in Srilanka with the landing of Vijaya and the founding of the Aryan Sinhala race is the ‘Dhammadipa’ concept of the special role of the Sinhalese as guardians of the Buddha Dhamma. For not only was it believed that Buddha visited Srilanka three times, but on his death bed he is also said to have asked ‘Sakra’ to protect Vijaya in his historic mission to Srilanka the land where the Damma would flourish for five thousand years. In this way were interwined the racist theory of Aryan Origin, the traditional myths of Vijaya and divinely ordained mission of the Sinhala ‘race’ to project the Buddhist religion. Racial purity and religious purity were thus, combined and the ‘Pure Aryan Sinhalese’ became the appointed guardians of the ‘Pure Doctrine’ of Buddhism.
-Dr.Kumari Jayawardane


http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=69376&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81:+5.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!