தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, July 3, 2009

சமீபத்தில் கருணா நடத்திய களியாட்டக் கூட்டத்தின் வீடியோ

சமீபத்தில் கருணா நடத்திய களியாட்டக் கூட்டத்தின் வீடியோ

http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/n507913043_1753229_964733.jpg
சமீபத்தில் நடந்த கேளிக்கைக் கூத்து விழாவில் ஒன்றில், மதுபோதையில் மிதந்த கருணா திடீரென எழுந்துவந்து ஒரு பாடலுக்கு கிட்டார் வாசித்து உள்ளார். இதில் வேடிக்கையான விடையம் யாதேனில், அவர் கிட்டார் வாசிக்கும்போது, பின்னால் நின்றிருந்த பெடியன் அவர் வாசிப்பதை நக்கலாக நையான்டி செய்து இருப்பதையும், நீங்கள் காணொளியில் காணலாம். விடுவார்களா அதிர்வின் ரிப்போட்டர்கள், இப்படிப்பட்ட காட்சிகளை ? உடனே வீடியோவாக வந்துவிட்டது.

வன்னியில் 3 லட்சம் தமிழர்கள் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இது தேவையா ?, தனது சகாக்களுடன் சேர்ந்து, கேளிக்கை கூத்துகளை நடத்துவதும் அவர்களை மகிழ்விக்க பாடல் பாடி வாத்தியம் வாசிப்பதும், இவர் பொழுதுபோக்காகிவிட்டது. தமிழர் போராட்டத்தையே காட்டிக்கொடுத்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் கருணா !


கருணாவின் கூத்து வீடியோ
http://www.youtube.com/watch?v=D-uN2j_txf8

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1246576900&archive=&start_from=&ucat=3&

♥ சென்னை துறைமுகத்திற்குள் வணங்காமண் வந்த நிமிடங்கள் ♥

சென்னை துறைமுகத்திற்குள் வணங்காமண் வந்த நிமிடங்கள்


slideshow image  slideshow image


slideshow image

வணங்காமண் கப்பல் பயணத்தின் 57 ஆவது நாளான ஜூலை 2 மாலை 4.45 அளவில் வணங்காமண் சென்னைத் துறைமுகத்துள் நுழைவதற்கான அனுமதி கிடைத்தது. 5.50 அளவில் நங்கூரத்தை எடுத்து பயணத்தை ஆரம்பித்த வணங்கா மண்ணில் 6.30 இற்கு சென்னை துறைமுகத்தைச் சார்ந்த கப்பலோட்டி ஏறி, அதை சென்னை துறைமுகத்துக்குச் செலுத்த வழிகாட்ட 6.35 மணிக்கு துறைமுகத்துள் வணங்காமண் நுழைந்தது.

மாலை 7.30 மணியளவில் கப்பலுக்கான அனுமதி குறித்த அலுவலக ஆவணங்கள் அளிக்கப்பட்டு, சென்னை துறைமுகத்தின் நான்காம் தொகுதிக்கு கப்பல் வரவழைக்கப்பட்டது. அப்பொழுது செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
 
கப்பலை சோதனை செய்வதற்கென, வெடிகுண்டுகள் சோதனைப் பிரிவினர், வெடிகுண்டுகள் செயலிழப்புப் புரிவினர், க்யூ பிராஞ்ச் காவல்துறையினர், துறைமுகக் கழகத்தினர், பாதுகாவலர்கள் என அதிகாரிகள் உட்பட பலரும் அப்பொழுது திரண்டிருந்தனர். கப்பலில் சோதனையை தொடங்கிய இவர்கள் சுமார் 9 மணியளவில் சோதனை முடிந்த பிறகே அக்கப்பலின் கேப்டன் திரு. முகம்மது முஸ்தபாவை கப்பலில் இருந்து இறங்க அனுமதித்தனர்.
 
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து நிலைமையை விளக்கினார். இலங்கைக் கடற்பரப்பில் சிங்கள கடற்படையும், இராணுவத்தினரும் வந்து கப்பலை சோதனையிட்டதையும் அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தியதையும் அப்பொழுது அவர் நினைவு கூர்ந்தார். மேலும், கப்பல் கொல்கத்தாவிற்கு செல்லவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
 
கப்பலில் இருந்த நிவாரணப் பொருட்கள் வேகவேகமாக இறக்கப்பட்டு கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டன. அக்கண்டெய்னர்கள் வெவ்வேறு கப்பல்களில் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிர்வின் சென்னை நிருபர் தெரிவித்தார்.

 http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1246609347&archive=&start_from=&ucat=12&

♥ பிரபாகரனை கொலை செய்ய ராஜீவ் காந்தி உத்தரவிட்டடான் ! ♥

பிரபாகரனை கொலை செய்யுமாறு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார் – சிறில் ரணதுங்க :

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை படுகொலை செய்யுமாறு இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படையினருக்க உத்தரவு பிறப்பித்திருந்தார் என முன்னாள் இராணுவ ஜெனரல் சிறில் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1987
ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரின் முகாம்களுக்கு பிரபாகரன் வருகை தந்த போது அவரை படுகொலை செய்யுமாறு ரஜீவ் காந்தி உத்தரவிட்டதாக, சிறில் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிழையான அணுகுமுறைகளினாலேயே இந்த யுத்தம் இரண்டு தசாப்த காலமாக நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது


http://www.paranthan.com/index.php?option=com_content&view=article&id=2208:2009-07-03-11-58-51&catid=34:2009-04-30-04-35-39&Itemid=53


[Untitled-1+copy.jpg]


♥முள்கம்மி முகாமில்... கட்டாய விபசாரக் கொடுமை ♥

இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் தமிழ் பெண்களை விபசாரத்தில் தள்ளுகின்றனர்: ஆஸ்திரேலிய பத்திரிகை தகவல்
http://1.bp.blogspot.com/_FbRyCtIYcu8/SVs2ykyd81I/AAAAAAAAAI0/ZxNQpkflOzA/s400/rape-girl.jpg

கொழும்பு, ஜூலை. 3-
 
இலங்கை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் "தி ஆஸ்திரேலியர்" என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
 
தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் திரட்டிய தகவலின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
 
புல்மொட்டையில் உள்ள அகதிகள் முகாமில் பெண்களை அதிகாரிகளே கட்டாய விபசாரத்தில் தள்ளுகின்றனர். இதுபற்றி மேல் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
அகதி முகாம்களில் உள்ள ஒவ்வொரு கூடாரத்திலும் 3 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குறுகிய இடத்தில் 3 குடும்பங்கள் தங்கி இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் இடையூறாக உள்ளது.
 
அங்கு வரும் ராணுவத்தினர் அகதிகளுக்கு தேவையான இடத்தை ஒதுக்கவும், மற்ற தேவைகளை வழங்கவும் லஞ்சம் வாங்குகின்றனர்.
 
முகாம்களில் உள்ள குடும்பத்தினர் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆண்களும், பெண்களும் வேறு இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிய எந்த விவரங்களையும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. அவர்களை அழைத்து சென்றவதற்கான ஆதாரம், அடையாள சீட்டு போன்றவையும் வழங்கப்படவில்லை.
 
முகாமில் இருப்பவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவில்லை. முகாமில் பெரும் நெருக்கடி நிலவுகிறது. இதனால் மக்கள் கிளர்தெழ தொடங்கி உள்ளனர்.
 
குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதால் ரத்த உறவுகளை சந்திக்க மற்ற முகாம்களுக்கு செல்ல முயச்சிக்கின்றனர். இதற்கு ராணுவம் மறுப்பதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
இப்படி கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 அகதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். முகாம்களில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்த வருட இறுதிக்குள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அறிவித்து உள்ளன. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/2009/07/03113337/CNI031030709.htmlhttp://www.adhikaalai.com/images/stories/users/rapeimage.jpg    http://www.moviebadgirls.com/capimage/Bandit_Queen_01.JPG

♥ பிரபாகரன்""என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்பா...'' ♥

பிரபாகரனின் மகள் - மகன் - இறுதி நிமிடங்கள்
[Untitled-1+copy.jpg]

காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர்களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள்ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை.

 

முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத "தமிழ் இனப் பேரெழுச்சி' உலகெங்கும் கண்ணுக்குப் புலப்படாத மின் ஆற்றல் போல் உருவாகி வருகிறது. யதார்த்தத்தில் எவரும் அறி விக்காமலேயே ஐந்தாவது ஈழப்போர் ஆரம்பித்து விட்டது. மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் வென்றது உண்மையென்றால் இந்தப் போர் தமிழ் ஈழம் காணாமல் ஓயாது. ஆனால் தமிழரிடையே இன்று எழுந்துள்ள இவ்வுணர்வெழுச்சியை மழுங்கடிக்கும் அழுக்கான திரைமறைவு செய்மதி யுத்தமொன்றை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.

இந்த யுத்தத்திற்கு மும்முனை இலக்குகள். ஒன்று தமிழர்களுக்குள் -குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிளவுகளை கூர்மைப்படுத்துவது, இரண்டாவது உளப்பரப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது தமிழ் மக்கள் வனைந்திருக்கும் பெருமதிப்பை குலைத்து தமிழ் தேசிய உணர்வெழுச்சியை பலவீனப்படுத்துவது. மூன்றாவது மரண முகாம்களில் வாடும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர் மீதான நமது கூர்த்த கவனத்தையும், இன அழித்தல் குற்றச்சாட்டில் நாம் செலுத்தும் உறுதியான செயற்பாட்டையும் திசை திருப்புவது.

"பிரபாகரன் பொட்டு அம்மானால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?' "பொட்டு அம்மான் ராணுவப் பிடியில் இருக்கிறார்', "பிரபாகரன் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டு கோடாரியால் தலையில் வெட்டப் பட்டார்' பிரபாகரனது கண்களுக்கு முன் அவரது அன்பு மகன் சார்லஸ் ஆன்டணி கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்'' என்றெல்லாம் வரத் தொடங்கியிருக்கிற செய்திகள் இந்த அழுக்கு யுத்தத்தின் அருவருப்பான உத்திகள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இருப்பினை குறித்து விவாதித்த காலத்தை நாம் கடந்து விட்டோம். அதைச்சுற்றிய கேள்வி களுக்கான பதிலை காலம் எப்போது வேண்டுமானாலும் தரட்டும். நமது இலட்சியமோ தலைவனோடு களமாடிய ஆயிரமாயிரம் தியாகக் கண்மணிகளின் கனவான தமிழ் ஈழம். அத்தோடு இன அழித்தல் செய்த பாவிகளுக்கு நாம் வழங்க வேண்டிய நீதி. இவைதான் இன்றைய கருத்தாகவும், கவனமாகவும் இருத்தல் வேண்டும்.

2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை சந்தித்தபோது, ""உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?'' எனக் கேட்டேன். இக் கேள்விக்குப் பதில் சொன்னபோது இனம் புரியாததோர் சாந்தம் அவர் முகத்தில் படர்ந்ததை இப்போதும் என்னால் நினைவுபடுத்த முடிகிறது. ""அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்'' என்று கூறிய அவர், ""உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை'' என்றார். உள்ளுணர்வுக்குப் பிடிபடும் தூயதோர் நேர்மை அவர் பதில் கூறுகையிலேயே என் மனதில் பதிந்ததை இன்றும் மறவாது பாதுகாத்து வைத்துள்ளேன்.

அவரது அன்பு மகன் 24 வயதே ஆன சார்லஸ் ஆன்டணி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா வெளி நாட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டதாகத்தான் முதலில் செய்திகள் வந்தன. அண்மையில் கிடைத்துள்ள செய்திகளின்படி, 22 வயதே ஆன அவரது ஆசை மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்த சூழலை அறிந்த போது வேதனையில் விம்முவதா, பெருமிதத்தில் சிலிர்ப்பதா என்று தெரியாமல் தவித்து நின்றேன்.

சார்லஸ் ஆன்டணி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபா கரனோடு இருந்த அவரின் நம்பிக் கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் ஆன்டணி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளி களிடம் ""என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்'' என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் ஆன்டணி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.

தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக் காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.

உண்மையில் சார்லஸ் சண்டைக் களத்திற்குரிய பிள்ளையே அல்ல அது ஒரு சாக்லெட் குழந்தை என்றே அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். தலைவர் முகாமில் இருக்கிறவரை பயிற்சிகளில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறியதுமே "நீ போய் படுத்துக்கோ தம்பி' என்று அனுப்பிவைக்கும் தளபதிமார் தான் சார்லசுக்கு அதிகம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் "அப்பா, மாமா, அண்ணே... என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.

துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். "எனது தேவதை இந்தப் பிள்ளை' என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள். அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி "மாலதி படையணி'யில் நின்று களமாடியது. முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா... எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை... முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம்வரை உன் நினைவுகளும் உயிராய்... உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.

உண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக் கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.

ஆனால் அகன்றே தீரவேண்டுமென தளபதியர்கள் வற்புறுத்தியபோது சார்லஸ் காட்டுக்குள் நிற்கிறான்.

""தன்னையும் மகனையும் காப் பாற்றிக்கொண்டு "போராளிகளையும் மக்க ளையும் அழிவுக்குக் கொடுத்தான்' என்ற வரலாற்றுப் பழி என்னைச் சேரவிடமாட்டேன்'' என்றிருக்கிறார். ""அப்படியானால் சார்லஸை களத்திற்கு அழைத்து வருகிறோம்'' என்று தளபதியர் உறுதி கூறிய பின்னரே முல்லைத்தீவை விட்டு அகலும் முடிவினை பரிசீலிப்பதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். எளிய மொழியில் சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தை பாதுகாக்க வேண்டி தந்தையிடமே அவரது அன்பு மகனின் உயிரை தளபதியர் விலைபேசினார்கள் என்பதே உண்மை. தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்க வில்லையென உரத்துச் சொல், மதர்ப்புடன் பெருமிதம் கொள்.

மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.

காலை 10 மணியளவில் சார்லஸும் 10.40 மணியளவில் துவாரகாவும் வீரமரணம் தழுவினர். 12 மணியளவில் செயற்கைக்கோள் தொலைபேசியில் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசிய பிரபாகரன், ""என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்பா...'' என்றிருக்கிறார்.

விடுதலைக்காய் வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்று வேண்டிய தலைவன், தனது பிள்ளைகள் இரண்டை தியாக வேள்விக்குத் தந்த வரலாறு புனிதமாய், காவியமாய், வேதமாய், எமது வரலாற்றின் முடிவிலா காலங்களுக்கும் உயிர்த்துடிப்புடனும் தலைமுறைகள் மெய்சிலிர்க்கும் ஆன்மீகப் பரவசமாயும் தொடரும்.

(நினைவுகள் சுழலும்)

நன்றி : நக்கீரன்

♥ சிட்னியில் சிங்கள மாணவர்கள் மீது அசிட் வீச்சு ♥

சிட்னியில் இலங்கை மாணவர்கள் மீது அசிட் வீச்சுhttp://www.elko.k12.nv.us/jackpot/users/lolson/images/Students%20in%20Classroom%20clip%20art.gif

சிட்னியில் படிக்கும் இரு இலங்கை மாணவர்களான ஜெயஸ்ரீ வட்டவல (22), சதுயிகா வீரசிங்க (27) ஆகியவர்கள் மீது மே மாதம் 17 இல் அசிட் வீசிய ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி இரு இலங்கை மாணவர்களும் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளானார்கள். தமிழ் சிங்கள் சமூகத்துடன் தொடர்புபடுத்தக்கூடியதென நம்பப்படும் தகராறின் பின்னரே இந்த அசிட் வீச்சு இடம்பெற்றதாகக் கூறுகிறார்கள். அவுஸ்திரேலியாவில் நடக்கும் இவ்வாறான வன்முறைகளுக்கும் இலங்கையில் எமது

உரிமையைக் கேட்டு நடத்தும் போராட்டங்களுக்கும் இப்போது முடிச்சுப் போடுகிறார்கள். ஆனால் க்டந்த வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் சிமித் இதுபற்றிக் கூறும்போது, சில தாக்குதல்கள் இன பேதம் காரணமாக நடைபெற்றவை என்றாலும், 

இனபேதம் தான் தாக்குதலுக்கு காரணம் என்று கூறுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
                                                                       Www.eeladhesam.coM

♥ " தலைவர் இறந்து விட்டார் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை"-ஈழதேசம்.காம் ♥

நுணலும் தன் வாயால் கெடும்

[Untitled-1+copy.jpg]


நான் எழுதிய முந்தைய இருகட்டுரைகளுக்கும் பரவலான வரவேற்பும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன .எதிர்த்து கருத்துக்கூறிய ஒருசிலரும் அறிக்கையாளர்களை விமர்சிக்க வேண்டாம் என்ற ரீதியில்தான் கூறியிருக்கிறார்களே தவிர, யாரும் தலைவர் இறந்து விட்டார் என்று அறிக்கையாளர்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அச்செய்தி யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.

செ. பத்மனாதன் கூறுவது போலவோ, வழுதி கூறுவது போலவோ தலைவர் உண்மையிலேயே மறைவெய்தியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாத தமிழர் சமுதாயத்திடம் அத்தகையதோர் கருத்தினை வலிந்து திணிப்பதாகவே உள்ளது அறிக்கையாளர்களின் பணி. செ. பத்மனாதன் சார்பில் கட்டுரை எழுதும் வழுதி 29–06–2009 அன்று வெளியிட்டுள்ள தனது 'பின்னாலே சென்றவரின் முன்னாலே சென்றவரின் வழியில்…' கட்டுரையின் இரண்டாம்பாகத்தில் தலைவரும் அவரது மகளும் முடிவெய்தினர் என்ற கருத்தை ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார். அதே கட்டுரையின் முதல் பாகத்தில் தலைவரின் குடும்பத்தில் அனைவருமே களச்சாவு எய்திவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் அக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் தலைவரும் அவரது மகளும் மட்டுமே களச்சாவு அடைந்திருப்பதாகவும் அவரது மனைவியும் இளையமகனும் இருக்குமிடம் தெரியவில்லை எனவும் அந்தர் பல்டி அடித்துள்ளார். (பார்க்க: வழுதியின் வரிகள் …வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார். http://www.puthinam.com/full.php?2b3cSVG4a44w9Fg04dcrOmYdb0eHaHE34d310pG3e0dB6Tmbce03kYd22cc4Tj4cae) .

ஏன் இந்த அந்தர் பல்டி? ஏனென்றால் இடையில் கடந்த வாரம் தலைவரின் மனைவி கனடாவில் இருப்பதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதே காரணம். இந்த அந்தர் பல்டியே அறிக்கயாளர்கள் தமது யூகக்கருத்தினடிப்படையில் பொய்மையை ஏற்றுக்கொள்ள செய்து தமது தலைமையை திணிக்கின்றனர் என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறது. நுணலும் தன் வாயால் கெடும் என்பது இதனால்தானோ!

இரண்டாம் பாகக் கட்டுரையில் தனது முதற்கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தன்னை character assasination செய்வதாகக் கூறி தனது கருத்துக்களை நியாயப்படுத்தப்பார்க்கிறார். அவ்வாறு செய்யும் பணியை நாம் இங்கு வேறு சிலருக்கு விட்டு விடலாம். ஏனெனில் நாம் (குறிப்பாக நான்) அதற்கு தகுதியற்றவர்கள். என்னைப்பொறுத்த வரை திரு. வழுதியின் கருத்துக்களையும் தற்போதைய சூழல்கலையும் மட்டுமே அறிவேன். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாதாகையால் நான் அவரை character assasination செய்ய முடியாது. இதே காரணத்தினால் திரு. வழுதி முதலானோர் முன்னாளைய புலிப் பிர்முகர்களுடன் நிகழ்த்தியிருப்பதாக எடுத்துக்காட்டும் சொல்லாடல்களையும் என்னால் மறுக்க முடியாது. அச்சொல்லாடல்கள் மூலம் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதை இயக்கத்தை சேர்ந்தோர் மட்டுமே மறுக்க முடியும். வேரு யாரும் மறுக்க முடியுமா என்று தெரியவில்லை. நக்கீரன் அதற்கு மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நான் இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் அறிக்கையாளர்கள் உண்மையிலேயே இன்று இயக்கத்திற்கு தலைமை தாங்குபவர்களாக இருந்தால், அவ்வாறு தலைவராலும் பொட்டு அம்மானாலும் ஏற்கப்பட்டிருந்தால் அதை மறுக்க வேண்டும் என்பதல்ல. அவ்வாறு மறுப்பதை விட ஏற்றுக்கொள்வதே சிறந்தது. இருப்பினும் ஒரு தலைமையை ஏற்றுக்கொள்வதை விட, அது முன் வைக்கும் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் கடினமானது. எனவே திரு.வழுதி அவர்கள் தற்போது முன்வைக்கும் நிலைப்பாடுகளை யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. சிங்கள ஆட்சியாளர்கள்தான் தமிழர்களுக்கு சிந்திப்பதற்கான உரிமையைத் தரவில்லை. வழுதி கூடவா அந்த உரிமையை தமிழர்களுக்கு வழங்கக்கூடாது! எனவே அவரது கருத்துக்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை விட விமர்சனக்கண்ணோட்டத்தோடு சொல்லாடலுக்கு உட்படுத்த வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகிறேன்.

எனது முந்தைய கட்டுரைக்கு பதிவான எதிர்ப்புகளில் ஒன்றிரண்டு புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு விமர்சிக்க நான் யார் என்ற ரீதியில் கேட்டிருந்தனர். நான் தொடர்ந்து எனது கட்டுரைகளில் தமிழகத்தின் ஆக்கபூர்வ பங்களிப்பு ஈழத்தமிழர்களுக்கு இல்லமல் போனதும், தமிழகத்தில் போராட்டக்களம் இல்லாமல் போனதாலும், ஓட்டுக்கட்சித் தலைவர்களே ஈழ ஆதரவு குரல் எழுப்ப முடிந்ததேயன்றி புரட்சிகர தலைமை ஒன்று இல்லாததுமே புலிகளின் வீழ்ச்சிக்கு மற்றெந்த காரணத்தையும் விட பெருங்காரணம் என்பதை வலியுறுத்தி வருகிறேன். அது மட்டுமின்றி சிங்கள மற்றும் இந்திய அரசுகளின் விஷமப்பரப்புரை தமிழ்நாட்டில் வலுவுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பார்கள். அதற்கு காரணம் என்னவென்பதை எவரும் எளிதில் யூகிக்கலாம். எனவே ஒரு பொறுப்புள்ள தமிழ்குடிமகன் என்ற ரீதியில் இதுபோன்ற பரப்புரைகளுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள வேண்டிய கடமை எனக்குள்ளது.

இந்திய சிங்கள அரசுகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் பொய்பரப்புரைக்கு எடுத்துக்காட்டாக அண்மைக்காலத்தில் செய்தித்தாள்கலில் வெளியான செய்திகள் தலைவர் இறந்து விட்டார் என்பதை மறைமுகமாக நிரூபிப்பது போல இருக்கின்றன. ஜூலை 1-ம் தேதி ஜூனியர் விகடன் வெளியிட்ட கட்டுரையில் களம் முழுவதும் மயக்ககுண்டு வீசப்பட்டு மக்கள் அனைவரும் மயங்கி வீழ்ந்து தலைவர் பிடிக்கப்பட்டு அவரது மகனோடு சித்திரவதைக்காளாகி கொல்லப்பட்டார் எனவும் விளம்பியிருந்தது. அந்தக்கட்டுரையை நுணுக்கமாக ஆராய்ந்தீர்களென்றால் தலைவரும் அவரது மகனும், பிற தளபதிகள் அனைவரும் மே 17-ம் தேதியன்றே பிடிபட்டுவிட்டனர் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் நடேசன், புலித்தேவன் போன்றோர் எப்படி 18-ம் தேதி அதிகாலை களத்திலிருந்து வெள்ளைக்கொடியுடன் போனார்கள்? 17-ம் தேதியன்று களம் முழுதும் மயக்கக்குண்டு வீசப்பட்டிருந்தால் 18-ம் தேதி காலை வரை நடேசன், புலித்தேவன் மற்றும் சகாக்கள் எப்படி மயங்காமல் உயிருடன் இருந்தனர் என்பதை சிந்தித்தாலே அக்கட்டுரை பொய் பரப்புரை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சொல்லாடல் மீதான சொல்லாடல்

வழுதியின் கட்டுரை மீதான் விமர்சனத்திற்கு போகுமுன் இன்று தமிழர் சொல்லாடல் அரங்கில் பரவலாக முன்வைக்கப்படும் ஒரு கருத்தை இங்கு திறனாய்வு செய்தல் இன்றியமையாதது. கடந்த ஜூன் 25-ம் தேதி இளந்தமிழர் இயக்கம் வெளியிட்ட ஓர் அவசர வேண்டுகோளில் தலைவரின் இறப்புச் செய்தியை ஒரு சொல்லாடல் களமாக்கி இந்திய, இலங்கை அரசுகள் தங்கள் கொடூரங்களை மறைத்து குளிர் காய்கின்றார்கள் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அத்தோடு புலிகள் அமைப்பின் மீது சேற்றை வாரி இறைக்கும் கட்டுரைகள் விமரிசனம் என்ற பெயரில் பல இணையதளங்களில் வெளியாவதையும், இவை இரண்டு அரசுகளின் சதி வலை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் வன்னி பெருமக்களின் அவலத்தை மறக்க ஏதுவாகிறது. உண்மையே.

ஆனால் இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். புலிகள் இயக்கத்தின் உள்ளக கலந்துரையாடல்கள் மற்றும் முடிவெடுக்கும் நிகழ்வுகள் முதலியவற்றை திறந்த வெளியில் சொல்லாடல்பொருளாக மாற்றிடல் கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. ஆனால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய சொல்லாடல்கள் முழுவதையுமே தவிர்க்க வேண்டியதில்லை. மேலும் அணுகுமுறைகள் பற்றிய இன்றைய திறந்த சொல்லாடல்கள் இதன்முன் கண்டிராத ஒன்று. இது வரை தமிழகத்தின் ஓட்டுக்கட்சித் தலைவர்களே ஈழத்தமிழர்களுக்காக பேசியது ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தது. இப்போது ஒவ்வொருவர் கூறுவதும் வெளியாகிறது. மேலும் பலர் சொல்லாடல் நிகழ்த்துவதனால்தான் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மற்றும் இப்போது முளைத்திருக்கும் உள்ளிருந்து கழுத்தறுக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் போன்றோரை அடையாளம் காண முடிகிறது.

அதே வேளையில் வன்னி துயரத்திற்கு தீர்வு காண வேண்டியது வேறெதை விடவும் இன்று முன்னணி கடமை என்பதை மறுக்க முடியாது. முகாம்களில் முடக்கப்பட்டுள்ள மக்கள், இழந்தவர்களின் துயரம், இயல்பு வாழ்க்கை  முதலியவை வேகமாக தீர்க்கப்படவேண்டும். இதையொட்டி தலைமை குறித்த சொல்லாடலை ஒதுக்க வேண்டியதில்லை. ஒன்றை மட்டும் பற்றி நிற்கும் போது மற்றொன்றிலிருந்து நாம் அன்னியப்படுத்தப் படுகிறோம். அண்மையில் விகடன் இதழில் வன்னிப்பேரவலத்தை  எதிர்கொள்ள தேவையான கட்டங்கள் காட்டப்பட்டிருந்தன. விகடன் ஏதோ கரிசனம் காரணமாக அச்செய்தியை வெளியிட்டுள்ளது என்று எண்ணியிருந்த போது விகடன் குழு இதழான ஜூனியர் விகடன் தன் பூணூல் புத்தியை காட்டியிருப்பதை அதன் ஜூலை 1-ம் தேதி இதழில் காணலாம். ஒரே ஊடக நிறுவனத்தின் ஒரு இதழில் வன்னிப்பேரவலம் வெளிச்சம் போட்டுக்காட்டப்படுகிறது. அதன் மற்றொரு இதழில்  தலைவர் இறந்து விட்டார் என்று 'நிரூபிக்க'ப்படுகிறது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

அறிகையாளர்களாயினும் சரி, வேறெவராயினும் சரி வன்னிபேரவலத்தை சுட்டிக்காட்டும்போதே தலைவர் இறந்து விட்டார் என்பதை 'உறுதிப்'படுத்தத் தவறுவதில்லை. அறிக்கையாளர்களுக்கு வேண்டுமானால் புலி அமைப்பின் மீதான தடையை நீக்கக்கோர இந்திய அரசை 'தாஜா' செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். ஆனால் சோழியன் குடுமிக்கு என்ன தேவை, தமிழக மக்களின் உணர்வுகளை இடித்து நொறுக்க வேண்டுமென்பதைத் தவிர? ஆகவே எந்த ஒன்றை முன்னிறுத்தினாலும் மற்ற ஒன்றை நாம் மறந்து விடுவோம் என்பது தெளிவு. எனவே இரண்டையும் சேர்த்தே சொல்லாடல் பொருளாக்க வேண்டும் என்பது என் கருத்து. வன்னிப்பேரவலத்திற்கான தீர்வைக்கோரும் அதே வேளையில் தலைவர் மற்றும் இயக்கத்தின் மீதான தமிழர்களின் உணர்வு சேதமாகவோ தளர்ந்து விடவோ விட்டு விடக்கூடாது. தலைமையின் மீதான உணர்வை தளர விட்டுவிட்டோமானால் பின்பு எந்த தீர்வும் கிடைக்காமலே போய் விடும்.

இங்கு கருத்து தளத்தில் எதிரியை எதிர்கொள்ளும் விதம் பற்றி லெனின் கூறியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: "எதிரியை வீழ்த்த வேண்டுமானால் முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!" என்றார் லெனின். தற்போது இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் சித்தாந்தமே 'தலைவர் இறந்து விட்டார்' என்பதும் 'தலைமையின் கதை முடிந்து விட்டது' என்பதுமே. தலைமையைப் பற்றியோ, இயக்கத்தைப் பற்றியோ பேசவேண்டாம் என்பவர்கள் ஏதோ ஒரு வகையில் எதிரியின் சித்தாந்ததிற்கு உரம் சேர்ப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். வன்னிப்பேரவலத்திற்காக வாதிடும் அதே வேளையில் எதிரியின் சித்தாந்தத்தை வீழ்த்த வேண்டிய கடமையும் நமக்குள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

அந்த மூட நம்பிக்கை!

இந்தியாவின் சிற்றூரகங்களில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. ஒரு பெண்ணை ஒருவன் பாலியல் வன்முறைக்காளாக்கி விட்டால், அவனுக்கே அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமே அது. அவன் ஏற்கனவே கெட்டவன் என்பதால்தான் தகாத செயலில் ஈடுபட்டான். அத்தகைய அவனுக்கே அவளை மணம் முடித்துக்கொடுத்தால் ஓநாயின் வாயில் ஆட்டுக்குட்டியை கொடுத்தது போலாகி விடாதா? ஆனால் இந்திய  பிற்போக்கு மரபானது ஒருவனால் கற்பழிக்கப்பட்டவள் இன்னொருவனால் மணமுடிக்க லாயக்கற்றவள் என்று சாதிய ரீதியாக மக்களை நம்ப வைத்திருக்கிறது. அதற்கு மேல் சிந்திக்கவோண்ணாத படி விலங்கு போட்டிருக்கிறது. இந்த மரபை முறியடிப்பதே புரட்சிகரம்.

இந்த எடுத்துக்காட்டை எதற்கு எங்கு குறிப்பிட்டேன் என்றால் ஈழத்தலைவர்களின் இந்தியா மீதான 'காதலை' வெளிச்சம் போட்டுக்காட்டத்தான். முன்பும் சரி, இன்றும் தாங்களே தலைவர்கள் என்று சொல்வோரும் சரி, இந்தியா செய்யாத துரோகங்களையெல்லாம் செய்த பின்னும், இந்தியா 'யேசு ரட்சகன்' 'எங்கள் கதிமோட்சம்' என்ற ரீதியிலேயே மன்றாடுகின்றனர். இன்றைய செ.பத்மநாதனின் குரலை அய்யப்படுவோர் உண்டு. முன்பு நடேசன் அவர்களும் இவ்வாறே கடைசி வரை கூறி வந்ததை எவரும் சொல்லாடலுக்குள்ளாக்கவில்லை.

இன்று (01 – 06 – 2009) கருணாநிதி தமிழக சட்டசபையில் என்ன பேசியிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். கருணாநிதி கூறியிருப்பதாவது: "தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும். எனவே சிங்களவர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்".

சிங்களவன் காலை ஈழத்தமிழர்கள் நக்கிக்கொண்டு கிடக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டாரே கருணாநிதி!  இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு அனைத்துலக நீதி மன்றத்தில் வழக்கு தொடர அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்திய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் மன்றத்திலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.  ஒருசில நாட்லளுக்கு முன்பு திருமாவளவன் விடுத்த அறிக்கையில், "ஈழத்தமிழர்களை அன்னை சோனியாதான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதனால்தானோ என்னவோ இணையதளங்களுக்கப்பால் தமிழகத்தின் அறிவுய்திகளும், புரட்சிகர குழுக்களும் விடுதலைப்புலிகளின் மீது இன்று சரமாரியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்தபடியே உள்ளனர். ஏனெனில் இன்று இந்திய அரசியல் வாதிகள் எடுக்கும் நிலைப்பாட்டிற்கும், தமிழக ஓட்டுக்கட்சி தலைவர்களின் போக்கிற்கும் புலிகளின் இந்தியாவை தாஜா செய்வது என்ற யுக்திக்கும் வேறுபாடு பெரிதாக ஒன்றும் கிடையாது. அதனால்தான் புலிகள் ஓட்டுக்கட்சித் தலைவர்களை நம்பியிருந்தனர் போலும்!.

அதே வேளையில் இலங்கை இனவாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதை இதோ ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்: "அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை" என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளார்.

சிங்கள இனவாதிகளின் இந்த நிலைப்பாட்டை இந்தியா ஒருபோதும் மாற்ற முடியாது. அப்படியே இந்தியா மாற்ற முனைந்தாலும் இலங்கை சீனாவின் பக்கம் ஒரேயடியாக சாயும் நிலை தோன்றும், எனவே இந்தியா இந்த விடயத்தில் தலையிடாது. இங்கு புலிகளின் போர்த்தந்திரங்களையும், உத்திகளையும் (strategies and tactics) சொல்லாடலுக்குள்ளாக்குவதன் மூலமே புதிய தலைமுறை பாடம் கற்றுக்கொள்ள முடியும். (இவை நான்கு சுவர்களுக்குள் விவாதிக்கப்பட வேண்டியவை அல்ல. உலக அரசியலின் ஒருபகுதியே. புலித்தலைமையின் உயர்மட்ட சொல்லாடல்கள், முடிவுகள் மட்டுமே நான்கு சுவர்களுக்குள் பேசப்பட வேண்டியவை).

திறனாய்வின் திறனாய்வு

நடந்து முடிந்த நான்காவது ஈழப்போரில் மாபெரும் இனப்படுகொலை பலநாடுகளால் நிறைவேற்றப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு பெரும் பின் தங்கல் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. இதுவரைப் போராடி பல வெற்றிகள் ஈட்டி தமிழீழத்திற்கான ஆளுகைக் கட்டுகோப்பையும் உருவாக்கிய புலிகளின் மீது பலதரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் வைப்பது இயல்பே. தமிழகத்தைப் பொறுத்தவரை புலிகளின் வீழ்ச்சி தொடங்கியவுடன் முதலில் குற்றச்சாட்டுக்களை அடுக்கத்தொடங்கியவர் கருணாநிதி. புலிகள் சகோதர யுத்தம் நடத்தியதாகவும், தவறான முடிவுகளை எடுத்ததாகவும் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தார் கருணாநிதி. வீழ்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த அவர்கள் பக்கம் தமிழகமக்களின் கரிசனம் சாய்ந்து விடுவதை தடுத்து தனது சுயநல அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள கருணாநிதி அவ்வாறு கூறினார்.

முல்லைத்தீவு முழுவதையும் புலிகள் இழந்தபின்னர் இன்று பல ஆய்வாளர்களும் அறுவுய்திகளும், அமைப்புக்களும், புரட்சிகர குழுக்களும் புலிகளின் தவறுகளை தொடர்ச்சியாக கண்டுபிடித்து வெளியிட்டபடி உள்ளனர். இவை இணையதள விமர்சனக்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களை அடைந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தின் இடதுசாரி அறிவுய்தியாகவும் சிறந்த மனித உரிமை காப்பாளராகவும் கருதப்படும் பேராசிரியர் அ. மார்க்ஸ் கூறும் குற்றச்சாட்டுக்களை கவனிக்க வேண்டும். 'தீராநதி' ஜூன் 2009 மாத இதழில் 'புலிகள் செய்த கடைசித் தவறு' என்ற அவரது கட்டுரையில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக ஈழ ஆதரவாளர்களிடையே ஜெயலலிதா அணிக்கு சாதகமான ஆதரவுப் போக்கு தோண்றியதை புலிகளின் விருப்பத்தின் படி நடந்ததாகவும் தமிழக அரசியலில் புலிகள் தலையிடும் நிலையை எடுத்தார்கள் என்றும் கூறுகிறார் அ. மார்க்ஸ். இதை விட மேலாக தேர்தல் நேரத்தில் பிரபாகரனின் குரலில் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று வதந்திகள் உலவியதாக கூறுகிறார் அ. மார்க்ஸ். இது யாருமே கேள்விப்படாத ஒன்று.

அ. மார்க்ஸ் தவிர புதிய ஜனநாயக  புரட்சிக் குழுவினர் (மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர ஜனநாயக முன்னணி போன்றன) புலிகளின் அரசியல் அறிவை மட்டமாக கணித்து 'புரட்சிகர' விமர்சனக்களை முன்னெடுத்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் விமர்சனம் இன்னும் கிடைக்க வில்லை. தமிழ் தேசிய விடுதலை இயக்கம் இந்த வாரம் சென்னையில் ஒரு நிகழ்சி நடத்தவுள்ளது. அதன்பின்னர் அவர்களது விமர்சனம் கிடைக்கப்பெறும். ஈழ ஆர்தரவாளர்களில் திரு.நெடுமாறன், திரு.சீமான் போன்றோரின் கருத்துக்கள் கிடைத்து வருகின்றன. ஜெயமோகன் போன்றோர் தமெக்கென மிகக்குறுகிய வட்டத்தையே வைத்திருப்பவர்கள். இவர்கள் இந்திய தேசியவாதிகள். பரவலாக மதிக்கப்படாதவர்கள். எனவே ஜெயமோகன் போன்றோரின் விமர்சனங்கள் சிந்திக்க அருகதையற்றவை. புலம்பெயர் தமிழர்கள் பொழுதொரு வண்ணமும் கட்டுரைகளை தீட்டிக்கொண்டிருந்தாலும் புலிகள் அமைப்பின் மீதான விமர்சனங்களை வைக்காததனால்தானோ என்னவோ தமிழகப் புரட்சிகர குழுவினரும் அ. மார்க்ஸ் போன்றோரும் புலிகளின் தவறுகளை கடுமையுடன் பட்டியலிட்டு வருகின்றனர்.

1) புரட்சிகர நோக்கில் பார்த்தால் புலிகள் கிளிநொச்சியை கட்டியெழுப்பியதில் காட்டிய அக்கறையை மக்கள் திரள் போராட்டங்களை கட்டியெழுப்புவதில் காட்டவில்லை என்பது உண்மையே. ஆனால் ஈழத்தில் எண்பது விழுக்காடு புலிகளின் வசம் இருந்தபோது யாரை எதிர்த்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவது? நேபாளப்புரட்சியின் இறுதிக் கட்டத்தில் மன்னராட்சிக்கு எதிராக தலைநகர் காட்மண்டுவில் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இலங்கை தலை நகர் கொழும்புவோ புலிகளின், ஈழமக்களின் போராட்டக்களமல்ல. ஈழமக்களோ கொழும்புவாழ் தமிழர்களோ அங்கு பெருந்திரள் போராட்டங்களை நடத்தியிருக்க முடியாது. ஈழத்தில் ராணுவ ஆதிக்கமிக்க பகுதிகளில் பெருந்திரள் போராட்டங்கள் வெடித்திருக்க முடியாது. தொலைவிலிருந்து ராணுவத்தை ஏவும் எதிரியை ராணுவ ரீதியாகவே எதிர்கொள்ள நேர்ந்தது புலிகளுக்கு.

2) ஆனால் புலிகள் ஆதிக்க நிலையிலிருந்த போதே தமிழகளுக்கென்று ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவிக்க தவறிவிட்டனர். அவ்வாறு அரசியல் கட்சியைத் தோற்றுவித்திருந்தார்களானால் தங்கள் கை மேலோங்கியிருந்த நிலையில் தாங்களே ஈழத்தில் தேர்தலும் நடத்தி ஈழமக்களின் ஜனநாயக விருப்பங்களை உலகுக்கு பறைசாற்றியிருக்க முடியும். இன்று நாடு கடந்து அமையும் தமிழீழ அரசு அன்று ஈழத்திலேயே அமைந்திருக்கும். அதே வேளையில் சிங்கள அரசின் பாசிச போக்கினை எதிர்க்கும் சிங்கள குழுக்களை சாதகமாக பயன்படுத்தவும் புலிகள் தவறினர். ஆனால் சிங்கள அரசோ புலிகளுக்கு ஏதிரான தமிழர்களை திறம்பட பயன்படுத்திக்கொண்டமை தெளிவு. சேனநாயகா தொடங்கி சிங்களம் பயன்படுத்திக்கொண்ட தமிழர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அன்று ஜி.ஜி.பொன்னம்பலம் முதல் இன்று கருணா வரையும் இன்னும் புலம்பெயர் நாடுகளிலும் அப்பட்டியல் நீளும்.

3) அடுத்தபடியாக பார்த்தால் எந்த ஒரு தேசிய இன விடுதலைப்போராட்டமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நீரோட்டத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். புலிகள் ஏகதியபத்திய எதிர்ப்பை பின்பற்ற வில்லை என்று புதியஜனநாயகம் இதழ் குற்றம் சுமத்துகிறது. இக்குற்றச்சாட்டில் பொருள் இல்லாமல் இல்லை. புலிகள் உலக வரைபடத்தில் மேற்குலகின் ஆதரவை பெரிதும் நாடினர். இதனால் அமெரிக்காவின் எதிரணியில் இருக்கும் நாடுகளான – சீனா, ரஷியா முதல் சின்னஞ்சிறு கியூபா வரை புலிகளின் எதிர்முகாமில் சேர்ந்து கொண்டன. அதே வேளையில் எந்த ஏகாதிபத்தியத்தின் ஆதரவை புலிகள் விரும்பி வேண்டி நின்றனரோ அந்த மேற்குலகம் புலிகளை விட சிங்கள இனவாதிகளே தங்களுக்கு அதிக 'சேவை' புரிய முடியும் என்பதைக் கண்டனர். எனவே மேற்குலகு புலிகளை ஆதரிப்பது போல போக்கு காட்டி கழுத்தறுக்கும் வேலையை கச்சிதமாகச் செய்தது. புலிகளின் கை மேலோங்கியிருந்த போது பேச்சுவார்த்தை மேடையில் அவர்களை உட்கார வைத்தனர். பின் அனைத்து நாடுகளும் சேர்ந்து தடை விதித்தனர். இதனால் புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிய போது அனைத்து நாடுகளும் சேர்ந்து சிங்களத்துக்கு படை கட்டினர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை கடைசிவரை இந்திய ஏகாதிபத்தியத்தின் நட்பு சக்தியாக தங்களைக் காட்டிக்கொள்ள புலிகள் பெரும்பாடு பட்டனர். கடைசி வரையிலும் அரசியற்பிரிவுத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,'இந்தியாவின் நட்புசக்தியாக விளங்குவது யாரென்று இதிலிருந்தே தெரியும்…….(புலிகள்தான் என்பது)' என்ற ரீதியிலேயே தெரிவித்திருந்தார். புலிகளின் தமிழக ஆதரவு அரசியல் தலைவர்களும் இந்துமாக்கடலில் புலிகள் இந்தியாவின் நட்புசக்தியாக விளங்குவர் என்பதை திரும்ப திரும்பச் சொல்லினர். அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து விட்டது. இந்தியா தொடக்க முதலே புலிகளை பகடையாக பயன்படுத்தவும், அது முடியாத போது அவர்களை அழிக்கவுமே நினைத்தது. இந்தியாவின் இப்போக்கினை நன்றாக அறிந்து அனுபவித்த புலிகள் தெரிந்தே திரும்ப திரும்ப இந்தியாவின் நட்பு சக்தி தாங்களே என்று நிரூபிக்க நினைத்தனர்.

எதனால் இந்த நிலைப்பாட்டை எடுத்தனர் புலிகள்? இந்தியாவின் ஆதரவு சக்த்தியாக தம்மை காட்டிக்கொண்டால் அமெரிக்காவின் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களா அல்லது தமிழகத்தின் ஆதரவை இழக்காமல் இருக்க முடியும் என்று நினைத்தார்களா? இந்தியாவின் எதிர்ப்பு சக்த்தியாக குரல் கொடுத்திருந்தால் குறைந்தபட்சம் சில மேலை நாடுகளும் சில கீழை நாடுகளும் புலிகளை புருவத்தை தூக்கி பார்த்திருப்பார்கள். அதே வேளை தமிழ்நாட்டிலும் முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கும். இந்தியாவின் போக்கினை எதிர்க்கும் (ஏகாதிபத்திய எதிர்ப்பு) முகாம் ஒன்று தமிழகத்தில் தெளிவாக தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறு தேர்தலை புறக்கணிக்கும் தீவிர முகாம் ஒன்றை தமிழகத்தில் ஏற்படுத்தாமல் விட்டமை புலிகள் செய்த பெருந்தவறாகும். இன்றைக்கு செ.பத்மனாதனும் ஜூலை 1-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் 'இவ்வளவும் நடந்த பிறகும் நாங்கள் இந்தியாவை வெறுக்க வில்லை' என்றும் 'இந்தியாவின் ஆதரவுடனும் ஆசிர்வாதத்தினோடும் தங்கள் லட்சியங்களை அடைவோம்' என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் இந்தியாவுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

4) புலிகளின் தலமையை பொறுத்தவரை அது இறுகிப்போன தலைமையாகவே இருந்தது என்பதை மறுக்க முடியாது. தலைவரை சுற்றியிருந்த நம்பிக்கையாளர்களின் தலைமையாக இருந்த அதற்கு வழிகாட்ட அரசியல் தலைமை இல்லை. அரசியற்பிரிவு எவ்விதத்திலும் அரசியல் தலைமை கொடுக்க வில்லை. அதன் விளைவை இன்று பார்க்கிறோம். த்லைவர் புதிராக மாறிய சூழலில் ஒவ்வொருவரும் தலைமை கொடுக்கின்றனர். ராணுவத்தலைமை மட்டுமே புலிகளிடம் தங்கி நின்றது. எனவே ராணுவத்தலைமைக்கப்பால் இயக்கம் செயல் படமுடிய வில்லை. அரசியல் முடிவுகள் எடுக்க முடியவில்லை.

இத்தகைய தலைமை தனக்காக பேச தமிழ்நாட்டில் ஓட்டுக்கட்சி பிரமுகர்களையே நம்பியிருந்தது. தமிழ்நாட்டில் பரந்த மக்கள் ஆதர்வு தளமோ அதனை இயக்கும் தலைமையோ இல்லை. திரு. நடேசன் ஒருமுறை விடுத்த அறிக்கையில்," தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்கள் தம் சுண்டு விரலை அசைத்தால் போதும், ஈழ மக்களின் கண்ணீர் துடைக்கப்பட்டுவிடும்" என்று குறிப்பிட்டார். அது உண்மை. ஆனால் புலிகள் நம்பிய ஓட்டுக்கட்சித் தலைவர்களால் தமிழக மக்களின் சுண்டு விரலைக் கூட அசையச் செய்ய முடியவில்லை.

இந்த நிலைமைகளை தமது விமர்சனத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அறிவுய்தி அ. மார்க்ஸ் புலிகள் என்ன சொன்னார்களோ அதை ஓட்டுக்கட்சித் தலைவர்கள் செய்ததன்மூலம் புலிகள் தமிழக அரசியலில் தலையிட்டார்கள் என்ற ஒரு நகைப்புக்கிடமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் (தீரநதி, ஜூன் 2009). மேலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டபோதும் ஓட்டுக்கட்சித் தலைவர்கள் அவர்களை எச்சரிக்க வில்லை என்கிறார். ஓட்டுக்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்காக புலிகள் மே 16-ம் தேதி வரை காத்திருந்தார்கள் என்ற புதியஜனநாயகத்தின் விமர்சனத்தை இது மறுதலிக்கிறது. தமது இடப்பரப்பு 500 சதுர மீட்டராக சுருங்கும் வரை காத்திருந்தார்கள் என்பதே உண்மை. அந்த நிலை மே 16-ம் தேதியோ, 17-ம் தேதியோ ஏற்பட்டது. அதுவும் இந்திய ஆட்சியாளர்களின் முன் திட்டத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.

மற்றபடி இந்தியாவில் ஆட்சி மாறும் என்று சாதாரண கிராமத்து மக்களே நம்பத் தயாரக இல்லாதபோது, அவ்வாறு நம்பிச் செயல்படுமளவிற்கு புலிகள் முட்டாள்களாக இருந்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா கூட்டணி அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றிருந்தாலும் அவர் தனி ஈழக்கோரிக்கையை தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பார் என்பதற்கு எந்த உறுதிப்படும் கிடையாது. கால சந்தர்பத்திற்கேற்ப அவரது குரல் பயன்பட்டது. அவ்வளவே. புலிகளின் வீழ்ச்சி முழுக்க முழுக்க இந்தியாவும் அதன் துணைக்கண்ட பகைநாடுகளும் வழங்கிய ஆயுதங்களால் ஏற்பட்டதே. அந்த நிலையை எதிர்கொள்ளுமளவிற்கு புலிகள் அனைத்துலக அரசியலை கைய்யாளவில்லை என்பது தெளிவு. இது அவர்களது ஏகாதியபத்திய ஆதரவு போக்கினால் ஏற்பட்டது என்பதும் தெளிவு.

இதற்கு மாறாக கிளிநொச்சியிலிருந்து வெளியேறும் நிலைமை தோன்றியவுடனேயே கரந்தடிப்படையாக மாறியிருக்கலாமோ, அல்லது கிளிநொச்சியிலேயே மக்களுக்கு ஆயுதம் வழங்கி வீதிப்போர் நிகழ்த்தியிருக்கலாமோ என்றால் 'அவ்வாறு செய்திருக்கலாம்' என்ற சொற்களுக்கு வரலாற்றில் இடமில்லை. முல்லைத்தீவு வரை அவர்கள் மக்களோடு மக்களாக இருந்ததற்கு என்னென்ன காரணங்கள் அவர்களைத் தள்ளின என்பது வெளிக்கொணரபட்டு 'ஒபாமாவிற்கான தமிழர்கள்' அமைப்பு வெளியிடப்போகும் 'வன்னிப்படுகொலை'யில் இடம்பெற வேண்டிய ஒன்று.
 
இந்த கருத்துக்களின் அடிப்படையிலான எண்ணவோட்டங்களை தமிழர்கள் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த கட்டுரை தொடரும்.
 
--------------
அன்பன்
ஈழதேசம்-கொம் நிருபர் நிலவரசு கண்ணன்

http://eeladhesam.com/♥ 12 நாட்களில் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி? ♥

12 நாட்களில் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி?[Untitled-1+copy.jpg]

வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது.

தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், மக்கள் அறிந்த போராளி ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருக்கின்றார் என நம்பும் ஒரு பகுதியினரும் இல்லை என மறுத்து அறிக்கைவிடும் கூட்டத்தினருக்கும் மத்தியில் தலைவர் தொடர்பான உண்மைத் தகவல்களையும், களமுனையில் இறுதியாக என்ன நடந்தது என்பது பற்றியும் அறிந்துகொள்வதற்கு ஈழமுரசு கடந்த பல நாட்களாக எடுத்த பல்வேறு முயற்சிகளின் வெற்றியாக களமுனையில் இருந்து நம்பகத்தகுந்த பல தகவல்களைப் பெற்றுள்ளோம்.

களமுனையில் கடந்த 18.05.2009 அன்றுவரை போராடிக்கொண்டிருந்த போராளி ஒருவருடன் ஈழமுரசு அண்மையில் தொடர்புகளை ஏற்படுத்தி நடந்த சம்பவங்களை அறிந்துகொண்டுள்ளது. அந்தத் தகவல்களை வழங்கிய 'மக்கள் அறிந்த அந்தப் போராளியை' தற்போதையை சூழ்நிலையில் எம்மால் இனம்காட்டிக்கொள்ள முடியவிட்டாலும், கால ஓட்டத்தில் ஒருநாள் அவரை அடையாளம் காட்டமுடியும் என்றே நம்புகின்றோம்.

சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட எந்த நிழற்படங்களையும் இதுவரையும் அவர் பார்த்திராதபோதும், தலைவரை இறுதியாக தான் கண்டபோது இருந்த அவரது தோற்றம் தொடர்பாக, அந்தப் போராளி வழங்கிய தகவல்கள் தலைவர் எனக்கூறி சிறீலங்கா வெளியிட்ட நிழற்படங்கள் போலித்தனமானவை என்பதை அப்பட்டமாகப் புரியவைத்தன.

அவருடனான எமது உரையாடிலின்போது பகிர்ந்துகொண்ட விடயங்களை இங்கே தொகுத்து தருகின்றோம்.

மே மாதம் 4ம் திகதி அல்லது 5ம் திகதியா என்பது சரியாக நினைவில் இல்லை. இந்த இரண்டு தினங்களில் ஒன்றில்தான் தலைவரை இறுதியாக நான் சந்தித்திருந்தேன். அன்றைய தினம் தலைவருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. உண்டியலடிக்கு வருமாறு வந்த அழைப்பை அடுத்து போராளிகள் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு சுமார் ஒன்பது வரையான உந்துருளிகளில் ஒரு அணியொன்று வந்து சேர்ந்தது.

ஒரு உந்துருளியில் தலைவரும் பொட்டம்மானும், ஏனையவற்றில் அவர்களது மெய்ப்பாதுகாவலர்களும் இருந்தனர். தலைவர் தலைக்கவசம் (கெல்மட்) அணிந்திருந்தார். வழமைபோலவே போராளிகளுடன் உரையாடியவர், தாக்குதலுக்கான திட்டங்களையும் வழங்கினார். அப்போது தலைவர் முழுமையாக முகச்சவரம் செய்திருந்தார். அவரது மீசை கூட மளிக்கப்பட்டிருந்ததை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஆனால், நீங்கள் சொல்லவதுபோல் சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட படத்தில் அடர்த்தியாக மீசை உள்ள தலைவரின் உருவம் வந்திருக்க வாய்ப்பில்லை. பத்து, பன்னிரண்டு நாட்களில் அவ்வளவிற்கு மீசை வளர்ந்திருக்கும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அத்துடன், அன்றைய சந்திப்பின் பின்னர் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தலைவர் அந்த முற்றுகைப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்.

சுமார் 45 முதல் 50 வரையான கரும்புலித் தாக்குதல்கள் நடத்தப்பட்டே படையினரின் முற்றுகைகள் உடைக்கப்பட்டு நந்திக்கடல் ஊடாக இந்த வெளியேற்றம் நிகழ்ந்ததாகவும், இதன்போது ஆயிரம் வரையான படையினர் கொல்லப்பட்டிருந்ததாகவும் களமுனையில் போராளிகளிடையே பரவலாக செய்திகள் இருந்தன.

தலைவர் இறுதி வரையும் நின்று போராடப் போவதாகவே கூறிக்கொண்டிருந்தார். ஆனால், போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே வலியுறுத்தி கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் தலைவர் வரவிட்டால் மயக்க மருந்து செலுத்தித்தான் கொண்டுபோவோம் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை இருந்தது.

இதேவேளை, சண்டை மிகவும் இறுக்கமடைந்திருந்த நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து இரண்டு அணிகளுடன் வரவுள்ளதாக தலைவருக்கு தளபதி ஒருவரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர், அணிகளைச் சிதைக்காமல் அந்ததந்த இடங்களிலேயே தக்க வைத்துக்கொண்டிருக்குமாறு பணித்திருந்தார்.

தலைவர் அங்கிருந்து வெளியேறியிருந்தபோதும், தம்பிதான் இறுதிவரை எங்களுடன் களமுனையில் நின்றிருந்தார். தலைவரின் மகன் சாள்சைத்தான் அவர் தம்பி என்று குறிப்பிட்டார். அவரது மகள் துவாரகாவும் கையில் காயமடைந்த நிலையிலும் களமுனையில் போரிட்டுக்கொண்டிருந்தார் என்பதை அறியமுடிந்தது.

ஆனந்தபுரம் தாக்குதலில் கேணல் தீபனும், கேணல் கடாபியும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இறுதிச்சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காயமடைந்த கேணல் சொர்ணம் அவர்களும் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ஜெயமும் கேணல் சூசையும் களமுனையில் இருந்து போராளிகளை பெரும் கடல் வழியாக படகுகளில் வெளியேற்றிக்கொண்டிருந்தனர்.

கேணல் ஜெயம் அவர்கள் அரைக் காற்சட்டையுடன் (ஜம்பர்) கடற்கரையில் நின்று பணிகளில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. தலைவர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக அவர்கள் படையணிகளை முன்னதாகவே வேறு பகுதிகளில் கடலால் கொண்டு சென்று தரையிறக்கி வழியமைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறியமுடிந்தபோதும், அவர்கள் எங்கே தரையிறக்கப்படுகின்றார்கள் என்பதை என்னால் அறியமுடியவில்லை. எனினும், கொக்குத்தொடுவாய் பக்கமே அவர்கள் சென்று தரையிறங்கியிருக்க வேண்டும். பின்னர் ஜெயமும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக என்னால் அறியமுடிந்தது.

கேணல் பானு அவர்களும் களமுனையில் நின்றிருந்தார். எனினும், அவர் கையில் காயமடைந்திருந்ததால் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார். (கேணல் பானு எனக்கூறி வெளியிடப்பட்டிருந்த படத்தில் அவரது கையில் எந்தக் காயமும் இருக்கவில்லை. அத்துடன், அவர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியிலும் காயமடைந்திருந்தார். வெளியிடப்பட்டிருந்த படத்தில் அந்தக் காயமும் இருக்கவில்லை.)

இறுதியாக, 15ம் திகதி முள்ளிவாய்க்காலில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து ஆவணங்களையும், கணினிகளையும் அழித்துவிடுமாறு எங்களுக்கு தகவல் வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொடர்பான ஆவணங்களை முற்றாக அழிக்குமாறு தலைவர் அந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார்.

இதனால், இராணுவத்தினர் எப்போதும் முள்ளிவாய்காலில் நுழையலாம் என்ற நிலையில், இருக்கின்ற அனைத்துப் பொருட்களையும் கொண்டுபோய் ஒரு இடத்தில் குவித்து வைத்து தீ வைத்தோம். பெரும் பிரதேசத்தில் அந்தத் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

அப்போது இராணுவத்தினர் எமக்கு மிக அருகில் நெருங்கியிருந்தனர். இந்நிலையில், வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த இன்னொரு ஆவணத் தொகுதியையும் அழிக்கவேண்டியிருந்தது. அந்த வாகனத்தில் ஏற்றப்பட்ட ஆவணங்களுக்கு தீ வைத்துவிட்டு திரும்பியபோது, இராணுவத்தினர் ஏற்கனவே தீ வைக்கப்பட்டு எரிந்த பகுதிக்குள் நுழைந்துவிட்டிருந்தனர். இறுதியாகவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.


http://eeladhesam.com/
நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!