தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, May 3, 2009

இராணுவ லாரியை உடைத்து நொறுக்கும் ,வீடியோ படம்

இலங்கை சிங்கள அரசுக்கு ஆயுதம் ஏற்றிப் போகும் இராணுவ லாரியை,கோவையில் உடைத்து நொறுக்கும் ,பெரியார் திராவிடர் கழகம் வீடியோ படம்

http://www.youtube.com/watch?v=4BhuX-SMSNw

http://www.meenagam.org/?p=2113


தயாநிதி மாறனின் ஊழல் சாதனைகள்!

தயாநிதி மாறனின் ஊழல் சாதனைகள்!

தயாநிதி மாறன் திமுகவின் திடீர் கதாநாயகனாய் அறிமுகமாகி அதே வேகத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்தியத் தொலைத் தொடர்புத் துணை அமைச்சராகி, உயர உயரச் சென்றவர்.

அதீத வளர்ச்சியின் ஓர் அங்கமாக திமுகவுக்குள் குடும்ப சண்டை. கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்று தினகரன் ஏட்டின் கருத்துக் கணிப்பு. அழகிரிக்கு 2 சதவீத ஆதரவு என முடிவு கூற, சிலப்பதிகாரத்தின் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப் போட்டியால் நிஜமாய் எரிந்தது. உயிர்கள் ப­லியாயின.

அழகிரியின் அராஜகங்கள் சன் டி.வி.யில் மெகா தொடர்களை மிஞ்சி ஒளிபரப்பாயின. கலைஞரின் சட்ட மன்றப் பொன்விழாவில் அழகிரி வளைய வந்தார். தயாநிதி மாறன் வரவே இல்லை. தாத்தா தந்த பதவியை வைத்து தொழிலதிபர் டாட்டாவையே மிரட்டினார் தயாநிதி என்று செய்திகள் வெளிவந்தன. பின்னாளில் அவர் தாத்தாவையும் (கலைஞரையும்) மிரட்டினார்.

சன் டி.வி., ஜெயல­லிதாவின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் ஜெயா டி.வி.யையும் மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி.யும், சன் நியூஸ் டி.வி.க்கு எதிராக கலைஞர் செய்திகள் டி.வி.யும் உதயமானது. தொடர்ந்து சிரிப்பொ­லி தொடங்கப்பட, அதற்குப் போட்டியாக ஆதித்யா தொடங்கப்பட்டது.

மாறன் குடும்பமும், கலைஞர் குடும்பமும் இனி சேருமா? என்ற ஐயம் எழுந்த வேளையில் அதிமுகவில் சேரப் போகிறார் தயாநிதி மாறன் என்றும் பத்திரிகைச் செய்திகள் வெளியாயின.
பிறகு எப்படி ஒன்று சேர்ந்தார்கள். கலைஞரின் மருமகனும், மாறன் சகோதரர்களின் சித்தப்பாவுமான செல்வம்தான் இதற்கு முயற்சி எடுத்தார் என்று கூறப்பட்டது. உண்மையில் குடும்பத்தை சேர்த்து வைத்தது 'செல்வம்'தான்.

'இதயம் இனித்தது, கண்கள் பனித்தன' என்றார் கலைஞர். அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தயாநிதி மாறனின் இடத்தை நிரப்பிய மத்திய அமைச்சர் பெரம்பலூர் ராஜா மீது 'மூன்றாம் தலைமுறை அலைவரிசை (3ஏ நல்ங்ஸ்ரீற்ழ்ன்ம்) ஊழல்' என்ற குற்றச்சாட்டை சன் டி.வி. குழுமம் முன்வைத்தது. அதில் 7 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்றும் ஊடகங்கள் அலறின. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஊழ­ல் தற்போதைய உச்சக்கட்ட எல்லை.

தயாநிதி மாறன் தரப்பி­ருந்து '3ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழ­ன் ஆதாரங்கள் அன்றாடம் ஒவ்வொரு படலமாய் வெளிவர, ஒற்றுமையின் அவசியத்தை கலைஞர், அழகிரி அன்னகோ உணர்ந் தது. அதன்பிறகுதான் கலைஞரின் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன. இதனைத் தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை மேற்கொண்டு அம்பலப்படுத்தாமல் சன் டி.வி. அமுக்கியது.

தற்போதைய நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளர் அ. ராசா, ஒரு லட்சம் கோடி ஊழல் செய்ததை அம்பலப்படுத் திய தயாநிதி மாறன், ஊழ­ல் தார்மீக எதிரியா? இல்லை என்கின்ற தயாநிதியின் தடாலடி ஊழல்கள்.

தன் இடத்தில் அமர்ந்து, ஊழ­ல் தன்னை மிஞ்சிவிட்டாரே ராசா என்பதுதான் தயாநிதியின் ஆதங்கம்.

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது. ஊழலைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்தது சி.பி.ஐ. ரிலையன்ஸ் செய்த ஊழ­ன் மதிப்பு 4,500 கோடி ரூபாய் அரசாங்கத் திற்கு இது பெரிய இழப்பு. 500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் அபராதமாகக் கட்டி தப்பித்துவிட்டது.

ரிலையன்சின் தப்புகளை மறைத்து தப்பவைத்தவர் தயாள(?) குணம் படைத்தவர் தயாநிதி மாறன். ரிலையன்சின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரியபோது, தேவையில்லை என்று அம்பானிகள் மீது அன்பு மழைப் பொழிந்தவரும் தயாநிதி மாறன்தான்.
அண்மையில் தயாநிதி மாறனின் ஊழல்கள் குறித்து ஜெயல­லிதா வெளி யிட்ட அறிக்கையும் பேச்சும் நாட்டையே உலுக்கின.

தயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 323 இணைப்புகளைப் பெற்றுள்ளார். அவரது வீட்டிலேயே ஒரு எக்சேஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இவை அதிநவீன வசதிகளைக் கொண்டது. உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அனுப்புவதற்காக 'பேசிக் ரேட் அக்ஸஸ்' மற்றும் 'பிரைமரி ரேட் அக்ஸஸ்' ஆகிய வசதிகள் அவ்விணைப்புகளில் இருந்தன. அமைச்சர் என்ற முறையில் அமைக்கப் பட்ட இணைப்பகத்தை அதிகார வரம்பு மீறல் செய்து, சன் டி.வி.யோடு ரகசிய மாக இணைத்து, அரசுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை தயாநிதி மாறன் ஏற்படுத்தி யதை சி.பி.ஐ. கண்டுபிடித்ததாக ஜெயல­லிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

டை கட்டுவது எப்படி?

இதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 
For Latest And Cool Stuff Join XciteFun
 
 

 ரொம்ப முக்கியம் 

வீடியோ படம் :சிரி..சிரி கலைஞர் உண்ணாவிரத நாடகம்

http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU
 
கலைஞர்
 உண்ணவிரதம்......................
 சிரிக்க அல்ல..........சிந்திக்கவும்..........
 
 
 
 

cid:image001.jpg@01C9C8CF.B55323C0
 
 

 

 

 

 

 

 
 
 

 

கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய இராணுவ ஆயுதங்கள் ஏற்றிவந்த 5 லாரிகள் தமிழக தமிழர்களால் சேதம்

கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய இராணுவ ஆயுதங்கள் ஏற்றிவந்த 5 லாரிகள் தமிழக தமிழர்களால் சேதம்
 
[ சனிக்கிழமை, 02 மே 2009, 09:07.35 AM GMT +05:30 ]

ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.

ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.

அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

இதற்கிடையே மதுக்கரை இராணுவ முகாமில் இருந்து 30க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் போராட்டக்காரர்களை தாக்க வந்ததாகவும்> இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.

இந்த மோதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதாகவும்> அந்த இடமே ஒரு போர்க்களம் போல காட்சியளித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கோவை இராமகிருஷ்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்> அதன் பிறகு அங்கு சிதறிக் கிடந்த ஆயுதங்களை இராணுவத்தினர் அப்புறப்படுத்தி மதுக்கரை முகாமிற்கு கொண்டு சென்றுதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் மதிமுக வினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பார்த்திட்டு போயிராதிங்க....

odumnathi.jpgod.jpg


போஸ்டன் க்ளோப் இணையத்தின் லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட BIG PICTURE என்னும் பிரபல பகுதியில் ஈழத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டும் படங்கள பிரசுரித்திருக்கிறார்கள்.

பெரும் தொகையான வாசகர்களை கொண்ட இப்பகுதியில் சிங்களவர்கள் எமது போராட்டத்தையும் எமது மக்களின் வேதனையையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தயவு செய்து தயவு செய்து அங்கே போய் உங்கள கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

எம்மை எவருமே கண்டுகொள்ளவில்லையே என்று வீதி எங்கும் இறங்கி போராடி இப்போது எல்லோரும் எம்மைப் பற்றி பேசும் போது நாம் அதை அப்படியே பற்றிக் கொள்ள வேண்டாமா.
எமது போராட்டத்தில் சிங்களவன் இலாபம் அடைய நாம் வெறுமனே பார்த்திட்டிருக்கலாமா

தயவு செய்து தயவு செய்து இங்க போய் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

http://www.boston.com/bigpicture/2009/04/r..._sri_lanka.html


பார்த்திட்டு போயிராதிங்க... கருத்து போட்டுடு போங்கோ
இப்படி சந்தர்பம் இனி கிடைக்காது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இப்பகுதியின் நீண்டகால வாசகர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழா! நீ பேசுவது தமிழா? தமிழா!

தமிழா! நீ பேசுவது தமிழா?

தமிழா! 
நீ 
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ 
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ் 
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ 
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ 
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ 
பேசுவது தமிழா?நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!