பாவம் கடவுள்
நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சில கண்டுபிடிப்புகளை பற்றி கேள்விப்படும் போது நமக்கு தலையே சுற்றிக் கொண்டு வரும் போலிருக்கின்றது. அதிலும் நம்ம ஊர் பசங்க கலக்குகின்றார்கள் என அறியும் போது இன்னும் இரட்டிப்பு் சந்தோசம்.
ஒரு புத்தகக்கடைக்கு சென்றிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரே விஷ்யத்தை சொல்லிக்கொடுக்க மூன்று வேறு புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. இதில் எதை தெரிந்தெடுப்பது என நீங்கள் குழம்ப இணையமிருந்தால் பலரின் புத்தகவிமர்சனத்தையோ அல்லது ஸ்டார் ரேட்டிங்கையோ பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். கையடக்கமாயிருக்கும் பிளாக்பெர்ரியை தட்டித் தட்டி அந்த மூன்று புத்தகங்களைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்வதற்குள் விடிந்து விடும். அதற்கு பதிலாக நீங்கள் அந்த புத்தகத்தை கையில் எடுத்ததுமே உங்கள் உடம்பிலிருந்து புறப்படும் ஒரு ஒளிக்கற்றை (projector) அப்புத்தகத்தை பற்றிய விவரத்தை அப்புத்தத்திலேயே ஸ்கிரீனிட்டு காட்டினால் எப்படி இருக்கும்? அப்படியே அந்த ஸ்கிரீனை தட்டித் தட்டி வேறெங்காவது விலை குறைவாக இப்புத்தகம் கிடைக்குமாவெனவும் பார்க்கமுடிந்தால்..
பேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசை....பூம்....மீண்டும் உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை யூடியூபில் டிரயிலரை தேடி அந்த செய்திதாளிலேயே வீடியோவாக காட்டும்.டூ..மச்சாக இருக்கின்றதா?
கடிகாரம் கையில் இல்லை என வைத்துக்கொள்வோம்.டைம் சோன் மாறி சால்ட்லேக் சிட்டியில் வந்திறங்கியிருக்கின்றீர்கள். ...பூம்...கையில் கடிகாரம் போல் ஒரு வட்டம் வரைந்தால் போதும் கைக்கடிகாரம் உங்கள் கையில் ஒரு ஒளிவட்டமாகத் தோன்றும்.
இப்படி இணைய கம்ப்யூட்டிங்கை கீபோர்டு இன்றி ஒளித்திரையின்றி அன்றாட பொருட்களின் மேல் செய்ய முனைந்திருக்கின்றார்கள். அங்கு உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் ஆகும் ஒளிக்கற்றையே திரை. உங்கள் விரல் அசைவுகளே தகவல் உள்ளீடும் கருவி.
கேமராவெல்லாம் வேணாம். விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.
கைத்தொலைப்பேசியும் வேணாம். கையிலேயே எண்களை புரஜெக்ட் செய்து காட்டி எண்களை தட்டி கால் செய்யலாம்.
மேலே படங்களை பார்த்தாலே புரியும். ஒன்றும் புரியவில்லையா இந்த வீடியோவை ஓட விட்டுப்பாருங்கள். புரியலாம்.
http://www.youtube.com/watch?v=nZ-VjUKAsao
குஜராத்தில் BE-யும் மும்பை IIT யில் MDes -ம் முடித்து விட்டு மேற்கே பறந்த பிரனாவ் மிஸ்டிரி(Pranav Mistry) MIT யில் இப்போது செய்துவரும் இந்த புராஜெக்டின் பெயர் SixthSense.
அம்பதோ அறுவதோ வருடம் கழித்து மூச்சு நின்று சொர்க்கம் போனால் அங்கு இதெல்லாம் இருக்குமாப்பாவென கோபாலைக் கேட்டேன்.
"பாவம்டா கடவுள்" என்றான்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com